இன்று பிரித்தானியாவில் சாதியப் பாகுபாடு விழிப்புணர்வு மாநாடு

Virendra Sharma MPபிரித்தானியாவில் காணப்படும் சாதியப் பாகுபாட்டை அடையாளப்படுத்தம் மாநாடு ஒன்று யூலை 15ல் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. Voice of Dalit International (VODI) என்ற அமைப்பும் Catholic Association for Racial Justice (CARJ) என்ற அமைப்பும் இணைந்து இந்த மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளன. இம்மாநாட்டில் ஆபிரிக்க ஆசிய சமூகங்கள் முகம்கொடுக்கும் இனப்பாகுபாடு பற்றியும் பேசப்பட இருக்கின்றது.

ஈலிங் சவுத்தோல் பா உ விரேந்திர சர்மா சிறப்புப் பேச்சாளராக உரையாற்றும் இம்மாநாட்டில் சகல சமயக் குழுக்கள், தேவாலயங்கள், பாதிக்கப்பட்ட சமூகங்கள், பொது அமைப்புகள், ஊடகங்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் என 70 பேர்வரை கலந்துகொள்கின்றனர்.

National Council of Dalit Christians (NCDC) என்ற இந்தியாவில் உள்ள அமைப்பில் இருந்து வி ஜே ஜோர்ச் சர்வதேசப் பேச்சாளராகக் இம்மாநாட்டில் உரைநிகழ்த்த உள்ளார்.

பிரித்தானியாவில் ஆசிய சமூகங்களின் பெருக்கத்துடன் சாதியப்பாகுபாடு சமுகங்களை சாதிய அடிப்படையில் பிளவுபடுத்துவதாக Catholic Association for Racial Justice (CARJ) அமைப்பு இம்மாநாடு பற்றிய தனது அழைப்பிதழில் தெரிவித்து உள்ளது. இச்சாதியப் பாகுபாடு ஒரு பரம்பரையில் இருந்து மற்றைய பரம்பரைக்கு கைமாற்றப்படுவதாகவும் அவ்வமைப்பு தெரிவிக்கின்றது.

சாதியப்பாகுபாடு பாதிக்கப்பட்டவர் மீது கீழான முத்திரையைக் குத்துவதாகவும் அவருடைய ஆளுமையை பாதிப்பதாகவும் சமூகத்தில் பெறுமதி அற்றவர் என்ற உணர்வைத் தோற்றுவிப்பதாகவும் Catholic Association for Racial Justice (CARJ)  தெரிவிக்கின்றது. பிரித்தானியா உறுதியாகக் கடைப்பிடிக்கும் சுதந்திர விதிகள் சமத்துவம் என்ற ஜனநாயக விழுமியங்கள் சாதியப் பாகுபாட்டினால் கீழ்நிலைப் படுத்தப்படுவதாக Catholic Association for Racial Justice (CARJ) அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவில் 3.5 மில்லியன் தெற்காசியர்கள் வாழ்கின்றனர். இவர்கள் பிரித்தானியாவின் மொத்த மக்கள் தொகையில் 5.7 வீதம். இவர்களில் 50 000 தொடக்கம் 200 000 பேர் வரையானவர்கள் ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்கள் என Voice of Dalit International (VODI) அமைப்பு தெரிவிக்கின்றது.

‘இதனைச் சிலர் இந்து சமயப் பிரச்சினையாகக் கூறுகிறார்கள். ஆனால் அப்படியல்ல’ என்று கூறும் ஈலிங் – சவுத்தொல் பா உ விரேந்திர சர்மா  ‘இஸ்லாம், சீக், கிறிஸ்தவம், பௌத்தம் எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர்கள் துணைக் கண்டத்தில் இருந்த வந்திருந்தால் அவர்களது சமூகப் பின்னலில் சாதியமும் பின்னப்பட்டு இருக்கும்’ என்கிறார். சர்மா IANSற்கு வழங்கிய நேர்காணலிலேயே இதனைத் தெரிவித்து இருந்தார்.

மேற்கு லண்டனில் உள்ள Voice of Dalit International (VODI) அமைப்பின் அலுவலகத்திற்கு சாதியப் பாகுபாடு பற்றிய 20 குற்றச்சாட்டுகள் ஒவ்வொரு வாரமும் வருவதாக அவ்வமைப்பின் இயக்குநர் Eugene Culas தெரிவிக்கின்றார். இக்குற்றச்சாட்டுக்கள் திருமணம், தொழில், சேவைகள், கல்வி அகியவை தொடர்பாக வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

பாதிக்கப்பட்டவர்களில் ராம் லஹாக் என்ற கொவன்ரியின் முன்னாள் மேயர் ஒருவரும் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக இந்தியர் இல்லாத பகுதியில் போட்டியிட நேர்ந்தது. பள்ளியில் இவரது பிள்ளைகளும் பாதிக்கப்பட்டனர். இவர் தனது கதையை ‘No Escape: Caste Discrimination in the UK. என்ற அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளார்.

Show More
Leave a Reply to jeya Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

10 Comments

  • Kumaran
    Kumaran

    சிறீலங்காவில், குறிப்பாக யாழ்ப்பாணத்தில் ஓவரு சாதிக்கும் தனிப்பட்ட கத்தோலிக்க ஆலயங்கள் உண்டு. அதிலும் சில ஆலயங்களில் குறைந்த சாதி என்ற போர்வையில் திருமணத்தின் போது சில நாட்களியில் முழங்கால் இட்டு உட்காரக்கூட அனுமதிப்பது இல்லை. இவை யாவும் கதோலிக்க மத குருக்களின் ஆசியுடனே நடைபெறுகிறது.

    சில இந்து கோவில்களில் குறைந்த சாதி என்ற போர்வையில் உள்ளே போகவே அனுமதிப்பது இல்லை.

    எல்லா மதங்களுமே மக்களை பாரபச்சப் படுத்துவதிலும் ஒடுக்குவதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

    Reply
  • DEMOCRACY
    DEMOCRACY

    /சாதியப்பாகுபாடு பாதிக்கப்பட்டவர் மீது கீழான முத்திரையைக் குத்துவதாகவும் அவருடைய ஆளுமையை பாதிப்பதாகவும் சமூகத்தில் பெறுமதி அற்றவர் என்ற உணர்வைத் தோற்றுவிப்பதாகவும் Catholic Association for Racial Justice (CARJ) தெரிவிக்கின்றது. பிரித்தானியா உறுதியாகக் கடைப்பிடிக்கும் சுதந்திர விதிகள் சமத்துவம் என்ற ஜனநாயக விழுமியங்கள் சாதியப் பாகுபாட்டினால் கீழ்நிலைப் படுத்தப்படுவதாக Catholic Association for Racial Justice (CARJ) அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது./—

    கத்தோலிக்கர்களின் தலித்திய கரிசனம் பச்சை விபச்சாரமாகும். ஐரோப்பாவில் இன பாகுபாட்டை விதைத்ததில் பெரும் பங்கு கத்தோலிக்கர்களுக்கு உண்டு. ஜெர்மனியின் “பவேரியா மானிலம்” இதற்கு உதாரணம். இரண்டாம் வில்லியமின் முதுகில் குத்தினார்கள். “குருப் ஸ்டால்” என்ற உலகிலேயே முதல் “தனியார் ஆயுத உற்பத்தி நிறுவனத்தை” தோற்றுவிக்க உதவினார்கள். கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக தொழிலாளர்களை கட்டுப் படுத்த, “உலகிலேயே முதல் மருத்துவ காப்புறுதி நிறுவனத்தை”, “ஆயுத உற்பத்திக்கு துணையாக நிறுவினார்கள்”. “பிரான்ஸ் பாப்பன்” என்ற கத்தோலிக்க “கான்ஸ்லர்” “இந்து-ஜெர்மன் பிளான்” க்கு ஆயுத உதவியை சுயநலன் கருதி செய்ததால் (இரண்டாம் வில்லியமின் சகோதரர் கருத்துக்கு எதிராக),அது தோல்வியைத் தழுவியது. இவரே,”ஜெய் ஹிந்த் செண்பகராமனுக்கு விஷம் வைக்க காரணமாக இருந்தவர்”(THEY HELPED ADOLF HITLER).இப்போது, கலாநிதி மாறனின், “லயோலா கல்லூரி அயிக் கஃப்”மூலமாக “பார்ஷியல்” ஜாதிய கரிசனம் காட்டுவது……..இன்னும் வரும்….

    Reply
  • ramu
    ramu

    //கத்தோலிக்கர்களின் தலித்திய கரிசனம் பச்சை விபச்சாரமாகும். ஐரோப்பாவில் இன பாகுபாட்டை விதைத்ததில் பெரும் பங்கு கத்தோலிக்கர்களுக்கு உண்டு// DEMOCRACY

    நன்றி நண்பரே இந்த கத்தோலிக்கர்கள் கிறீஸ்தவ சேர்ச்சுக்கள் இலங்கையிலும் இந்தியாவிலும் இன்று வரையில் சாதிப்பாகுபாட்டை கூர்மைப்படுத்துவதில் மிகுந்த அக்கறையுடன் செயற்ப்படுபவர்கள் நாம் பல உதாரணங்களை முன்வைக்கலாம். யாழ்பாணத்தில் சாதிய பாகுபாட்டை நாவலர் கிறீஸ்தவர்களுக்கு எதிராக முன்வைக்கும் பொதும் இவர்களும் சளைக்காமல் தாமும் தமது பங்கிற்கு வைத்தே சமூகத்தை பிரித்தனர் (அப்படி வைக்காமல் சமூகத்தை பிரித்திருக்க முடியாது என்பது தெளிவும் கூட) இன்று ஜரோப்பிய நாடுகளில் சமயம் மாற்றுவதற்கும் இப்போது சாதிய முரண்பாடுகளை எடுத்துக் கூறியே செய்வதை பல இடங்களில் காணக் கூடியதாக உள்ளது. நானும் எனது பரம்பரையினரும் கீஸ்தவர்களாக உள்ளபோதும் நாம் சைவத்திலிருந்து மாறியவர்கள் எனவும் அதனாலேயே நாம் வெள்ளாளர்களால் ஒதுக்கப்பட்டு வேறு சாதியாகப் பட்டோம் என்று எனது பீட்டனார் பல தடவைகள் திரும்ப திரும்ப சொல்லுவார் இன்றும் எமக்கு துரத்து உறவினர்கள் வெள்ளாளர் சாதியில் உண்டு நிரூபிக்க முடியும் ஆனால் தொடர்பு இல்லை.

    Reply
  • kumarathasan
    kumarathasan

    in kayts st anthony church have no control of vellars and sinna madu have no control of vellars. i agree with kumaran comments which is very wright.in jaffna town priest chose to work there specialy kurunagar,pasaijoor where income is higher. cast is common in tamils but in india is worst.

    Reply
  • thurai
    thurai

    பிறப்பாலும், செய்யும் தொழிலாலும் மனிதரை தாழ்த்துவதும், உயர்த்துவதும் அநாகரியமாகும். உலகமுழுவதும் அகதிகளாய அலையும் தமிழர் மத்தியில் இன்னமும் இக்குணங்கள் இருப்பது கவலைக்குரிய விடயம். இந்தநிலமை மாறாமல் விடுதலை உருமை என்று பேசுவதெல்லாம் கிணற்றுத் தவளை போடும் சத்தத்திற்கு ஒப்பானதேயாகும்.

    துரை

    Reply
  • Kusumbo
    Kusumbo

    சாதி சாதி என்று கதைத்தே அதைச் சாகவிடாமல் பாத்துக்குங்கோ? எந்த நாட்டிலை சாதியில்லை. வெள்ளைக்காரனிட்டை இல்லையா? ஆனால் ஒரு நாட்டிலையும் மனித சாதியில்லாமல் போச்சு போ.

    Reply
  • Kusumbo
    Kusumbo

    புதிய சாதிகள் வரவிருந்தன. அதில் புலிச்சாதிதான் பெருச்சாளி. பெரியசாதி. ரெலோசாதி; புளட்சாதி; தலித்துச்சாதி;ஐயர் சாதி; பெண்சாதி… இன்னும் இன்னும் வரும் கட்டிப்பிடிச்சு அழுங்கோ

    Reply
  • மாயா
    மாயா

    புலத்திலாவது இப்படியான மொக்குத் தனமான மாநாடுகளை தவிர்க்கலாம். இவற்றை வைத்து அரசியல் செய்வோர் தலவைர்களாகலாம். சாதாரண மக்களுக்கு எந்த விமோசனமும் இல்லை.

    புலத்துக்கு வந்தவர்கள் அனைவரும் ஒன்றாக இருந்த போது சாதி தெரியவில்லை. பின்னர் வசதி வாய்ப்புகள் வந்த போது அவை மீண்டும் பூத்தன.

    இதில் தலித் சங்கங்களும் ,தலித்தியம் பேசும் சஞ்சிகைகளும் , பத்திரகைகளும் முதலில் கொழுத்தப்பட வேண்டியவை. இவற்றை நடத்துவோர் வாழ இது தேவை. இவர்கள் வாயை பொத்திக் கொண்டிருந்தாலே போதும் சாதித் தீ இல்லாமல் போகும். அதற்குள் மாநாடு வேறு? கொடுமைதான்?

    இவர்கள் திருந்தப் போவதில்லை.

    Reply
  • kumarathasan
    kumarathasan

    Thank you maya.

    Reply
  • jeya
    jeya

    கி.பி. 9ஆம் நூற்றாண்டைய ஆய் மன்னனின் பார்த்திவசேகரபுரம் செப்பேட்டில் (வரி. 60-61) “வெள்ளாட்டி” என்ற சொல் இடம்பெற்றுள்ளது.4 வேலைக்காரி என்பது இதன் பொருள். இச்சொல் வேளாட்டி என்பதன் திரிபாகும். வேளம் என்ற சொல், சிறைச்சாலை, சிறைப்பிடிக்கப்பட்ட உயர்குடிப் பெண்டிர் வாழ்விடம் என்ற பொருள்களில் கி.பி. 12ஆம் நூற்றாண்டுச் சோழர் சாசனங்களிலும், இலக்கியங்களிலும் பயன்படுத்தப்படுகிறது.5 இவ்வாறு அரச குடியினர் வேளத்தில் ஏற்றப்படும் வழக்கம் பிற்காலச் சோழர் ஆட்சியில் புதிதாகப் புகுந்திருக்க வாய்ப்பில்லை. சங்க காலத்திலேயே இருந்திருக்க வேண்டும் என்பதற்கு ஒரு மறைமுகச் சான்று உள்ளது. சேர மன்னன் கணைக்கால் இரும்பொறை, சோழன் கோச்செங்கணானுடன் போரிட்டுத் தோற்றுக் குடவாயிற் கோட்டத்தில் சிறை வைக்கப்பட்டான். அப்போது அவன் ஒரு பாடல் இயற்றிவிட்டு உயிர்துறந்தான். அப்பாடலில், சிறையில் அவனுக்கு வழங்கப்பட்ட உணவு ”வேளாண் சிறுபதம்” என குறிப்பிடப்படுகிறது.6 வேளத்தில் வழங்கப்படுகிற அல்லது வேளாண் பெண்டிரால் சமைக்கப்படுகிற சிறுமைப்பட்ட உணவு என்பது இதன் பொருள் எனத் தோன்றுகிறது. இத்தகைய வேளத்துப் பணிப் பெண்டிரான வேளாட்டியர்க்கு – வேலைக்காரிகளுக்குப் பிறந்தோர் ‘வேள ஆளர்’ எனக் குறிப்பிடப்பட்டனர் எனப் பொருள்கொள்வது பொருத்தமாக உள்ளது. தாசி (வேலைக்காரி, அடிமைப்பெண்) மகன் என்று பொருள்படும் தஸ்யூ என்ற சொல்லின் நேர்ப் பொருளில் வேள ஆளர் என்பது அமைந்துள்ளது என்பதால்தான் வேளாண் மாந்தர் என்ற சொல் சூத்திரர் என்ற கருத்தோட்டத்தைக் குறிக்கும் தமிழ்ச் சொல்லாகத் தொல்காப்பியத்தால் பயன்படுத்தப்பட்டுள்ளதென நாம் முடிவு செய்யலாம். கி.பி. 12ஆம் நூற்றாண்டில் பெரியபுராணம் எழுதிய சேக்கிழார் (இவரே தொண்டை மண்டல வேளாளர் சமூகத்தவர் ஆவார்) சூத்திரத்தொல்குலம், நாலாங்குலம், வேளாண்குடி ஆகியவற்றை ஒரே பொருளில் பயன்படுத்துவது இது தொடர்பாக அறியத்தக்கது. ஆனால் ஒரு முதன்மையான பிரச்சினை என்னவென்றால், சூத்திரர் என்பது வருணப் பிரிவினை. அப்படியானால் வேளாளர் என்பதும் வருணப் பிரிவினையாகத்தானே இருக்க முடியும்?

    Reply