வன்னி முகாம் மக்களுக்கு உதவ முன்வருபவர்களுக்கு ஆப்படிக்கும் காரைநகர் நலன்புரிச் சங்கம்!!! : த ஜெயபாலன்

kws-logo.jpg
கண்ட கண்ட ஆட்களையும் எங்களின் வீடுகளில் இருத்தவோ?’
வன்னியில் இடம்பெற்ற அவலத்தை கற்பனையிலோ எழுத்திலோ கொண்டுவர முடியாது. அந்த அவலம் அவ்வளவு கொடியது. அதிலிருந்து தப்பிய மக்கள் இன்று இலங்கை அரசு நலன்புரி முகாம்கள் என்று சொல்லும் முட்கம்பி வேலிக்குள் தடுத்து வைக்கப்பட்டு உள்ளனர். இம்முகாம்களின் நிலை பற்றி மிக விரிவாக சர்வதேச ஊடகங்களே தொடர்ச்சியாக எழுதி இலங்கை அரசின் முகத்திரையைக் கிழித்து வருகின்றன. ஆனால் மறுமுனையில் இந்த முகாம்களில் உள்ள மக்களுக்கு உதவும் நடவடிக்கைகளுக்கு லண்டனில் உள்ள சில அமைப்புகள் முட்டுக்கட்டையாகவும் உள்ளன.

குறிப்பாக காரைநகர் நலன்புரிச் சங்கம், லண்டன் அம்மன் ஆலய நிர்வாகிகள் சிலர் முகாம்களில் உள்ள மக்களுக்கு உதவ முன் வருபவர்களுக்கு எதிராக அவர்களின் நடவடிக்கைகளுக்கு எதிராக கையெழுத்து வேட்டையில் இறங்கி உள்ளனர்.

பொதுவாக உரிமை மீறல்களுக்கு எதிராக அடிப்படை உரிமைகளைக் கோரி கையெழுத்துப் போராட்டங்கள் நடத்தப்படுவது வழமை. ஆனால் மாறாக தங்கள் சுயநல நோக்குகளுக்காக இந்த ஜனநாயக நடைமுறையை கையெழுத்து வேட்டையை சிலர் நடாத்த முயல்கின்றனர். நுனிநாக்கில் ஜனநாயகம் பேசும் இவர்கள் தமிழ் மக்களின் நலன்தொடர்பில் ஆபத்தானவர்களாக உள்ளனர். ஒரு சிலரின் தூண்டுதலால் முழுமையான புரிதல் இன்றி கையெழுத்து இடுவோர் ஒரு சிலரின் சுயநலன்களுக்கு துணை போய்விடுகின்றனர்.

காரைநகர் நலன்புரிச் சங்கம் ஏற்கனவே சாதியச் சங்கம் என்று பெயரெடுத்துக் கொண்டது. லண்டன் குரல் 19 (ஒக்ரோபர் 2007 – நவம்பர் 2007) இதழிலும் அதற்கு முன்னர் வெளியான இதழ்களிலும் காரைநகர் நலன்புரிச் சங்கத்தின் சாதியப் போக்குத் தொடர்பாக விரிவாக எழுதப்பட்டு இருந்தது. ( காரைநகரும் சாதிய முரண்பாடும் :காரை முகுந்தன் ) சங்கத்தின் பொதுக் கூட்டத்தில் அதன் உறுப்பினர் ஒருவரை சாதிப் பெயரைச் சொல்லி விழித்ததைத் தொடர்ந்து இச்சர்ச்சை உருவாகியது. தற்போது காரைநகர் நலன்புரிச் சங்கம் தனது சாதியச் சிந்தனைக்காக மற்றுமொரு தடவை சர்ச்சைக்குள் சென்றுள்ளது. ( காரை மக்களைத் தலைகுனிய வைத்த காரை நலன்புரிச் சங்கம் :காரை முகுந்தன் )

வன்னி முகாம்களில் உள்ள மக்களை மீளக் குடியமர்த்துவது தொடர்பாக கிழக்கு லண்டனில் நடைபெற்ற கலந்துரையாடலில் யுத்தத்தில் சம்பந்தப்படாத பகுதிகளைச் சேர்ந்தவர்களை அந்தக் கிராமத்தவர்கள் பொறுப்பெடுத்து பார்க்க முடியும் என்ற யோசனையை பி சோமசுந்தரம் முன்வைத்தார். காரைநகர் நலன்புரிச் சங்க உறுப்பினரான இவர் காரைநகரில் பல கல்வீடுகள் கைவிடப்பட்ட நிலையில் உள்ளது. வன்னி முகாம்களில் உள்ள காரைநகர் மக்களைப் பொறுப்பேற்று அவர்களை காரைநகரில் மீளவும் குடியமர்த்தலாம் என்ற யோசனையை பி சோமசுந்தரம் முன் வைத்தார். அதனைப் பலரும் அன்று வரவேற்றனர். சோமசுந்தரம் தனது யோசனையை பேச்சுடன் நிறுத்திக் கொள்ளவில்லை. உத்தியோகபூர்வமாக செயற்பாட்டிலும் இறங்கினார்.

இலங்கை அரசுக்கு தனது யோசனையை எழுதிய சோமசுந்தரம் காரைநகர் மக்களை மீளவும் காரைநகரில் குடியமர்த்த நடவடிக்கை எடுக்கும்படி கேட்டார். சோமசுந்தரம் இலங்கை அரசைக் கேட்டுக் கொண்டதில் எந்தத் தவறும் இல்லை. ஏனென்றால் சர்வதேசமே இன்று இலங்கை அரசிடம் மக்களை மீளக் குடியமர்த்த நடவடிக்கை எடுக்கும் படியே கேட்கின்றது. அதற்கு பதிலளித்த இலங்கை அரசு இதுதொடர்பாக பிரித்தானியாவில் உள்ள இலங்கைத் தூதரகத்துடன் தொடர்பு கொண்டு மேற்கொண்டு நடவடிக்கைகளை எடுக்கும்படி கேட்டிருந்தது.

இதனை காரைநகர் நலன்புரிச் சங்கத்திற்கு சோமசுந்தரம் தெரியப்படுத்தினார். இது தொடர்பாக காரைநகர் நலன்புரிச் சங்கம் மே 31 2009ல் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. அதனைத் தொடர்ந்து காரை மக்களை மீளக்குடியமர்த்துவது தொடர்பாகவும் பிரித்தானியாவில் உள்ள இலங்கைத் தூதரகத்தடன் பேசுவதற்கும் ஒரு உபகுழுமைக்கப்பட்டது. அதில் சோமசுந்தரம் பிரபல வானொலி அறிவிப்பாளர் தயானந்தா ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர். ஆனால் உப குழுவோ அல்லது காரைநகர் நலன்புரிச் சங்கமோ மேற்கொண்டு நடவடிக்கையில் இறங்க மறுத்தனர். இலங்கைத் தூதரகத்துடன் வன்னி முகாம்களில் உள்ள மக்கள் பற்றி பேசுவதற்கு ஏற்பாடு செய்யுமாறு கோரும் கடிதம் ஒன்று தயாரிக்கப்பட்டு ( Letter_Prepared_for_SLHC )அனுப்பப்பட முடிவெடுக்கப்பட்ட போதும் அதனை காரைநகர் நலன்புரிச் சங்கம் அனுப்பி வைக்கவில்லை.

சோமசுந்தரம் தானே நேரடியாக மின் அஞ்சலில் அக்கடிதத்தை அனுப்பி வைத்தார். அதற்கு யூன் 16 2009ல் பதிலளித்த இலங்கைத் தூதரகம் யூன் 26 2009ல் சந்திப்பதற்கு நேரத்தை ஏற்பாடு செய்து வழங்கியது.

இதற்கிடையே இந்த உப குழு அமைக்கப்பட்ட பின் காரைநகர் நலன்புரிச் சங்கத்தை சேர்ந்த சிலர் இந்த மீளக் குடியமர்த்த எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு எதிராக செயற்பட ஆரம்பித்தனர். ‘தூதரகத்துடனோ துரோகக் கும்பல்களுடனோ சங்கம் தொடர்புகொள்வதை நிறுத்துமாறு தயவாகக் கேட்டுக்கொள்கிறோம்.’ என்று லண்டன் வாழ் காரைநகர் மக்கள் என்ற பெயரில் பிரசுரம் ஒன்றை வெளியிட்டு பலரிடம் கையெழுத்தும் பெறப்பட்டு உள்ளது. ( Karai_Diasporas_Petition ) இந்தப் பிரசுரத்தை காரைநகர் நலன்புரிச் சங்கத்தின் செயலாளர் சிவா ரி மகேசன் சோமசுந்தரத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். ஆனால் கையழுத்து இட்டவர்களின் பட்டியலை செயலாளர் சிவா ரி மகேசன் வெளியிடவில்லை. கையெழுத்து இட்டவர்களின் பட்டியலை சோமசுந்தரம் கேட்டிருந்த போதும் இதுவரை அப்பட்டியல் வழங்கப்படவில்லை.

இலங்கை அரசு வன்னி மக்களைத் தடுத்த வைத்துள்ள நிலையில் அவர்களிடம் பேசுவதற்கு என்ன உள்ளது என்பது நியாயமானதாக இருந்தாலும் கடிதத்தின் உள்நோக்கம் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது. மேலும் காரைநகர்ச் சங்கத்தின் கடந்தகால வரலாறும் சந்தேகத்திற்குக் காரணமாக இருக்கின்றது.

இந்தச் சூழ்நிலையில் தொடர்ந்தும் இந்த உபகுழுவில் இருப்பது அர்த்தமற்றது என்று கூறி பி சோமசுந்தரம் யூன் 21 2009ல் உப குழுவில் இருந்து வெளியேறினார். தான் மக்களுக்குச் செய்ய வேண்டியதை சுயாதீனமாக சிறிய அளவில் செய்வேன் என்றும் அவர் தனது ராஜினாமாக் கடிதத்தில் தெரியப்படுத்தி இருந்தார்.

யூன் 22 2009ல் இலங்கைத் தூதரகத்திற்கு காரைநகர் நலன்புரிச் சங்கத்தின் செயலாளர் சிவா ரி மகேசன் அச்சந்திப்பில் தவிர்க்க முடியாத காரணங்களால் தங்கள் உறுப்பினர்கள் கலந்தகொள்ள முடியாது எனத் தெரிவித்து பதில் எழுதினார். ( KWS_Letter_to_SLHC )

இச்சம்பவங்கள் பற்றி சிவா ரி மகேசனுடன் யூலை 4ல் தொடர்பு கொண்ட போது காரைநகர் நலன்புரிச் சங்கத்தின் கீழ்மட்ட உறுப்பினர்கள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தமையால் தாங்கள் மேற்கொண்டு செயற்பட முடியவில்லை என சிவா மகேசன் லண்டன் குரலுக்குத் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில் ‘அந்த மக்கள் முகாம்களுக்கு வெளியே வந்தபின் அவர்கள் உதவிகளை வழங்க விரும்புகிறார்கள்’ என்றார். உதவி தேவைப்படும் போது தானே செய்ய வேண்டும். இப்போது தானே அவர்களுக்கு உதவி தேவை என்ற திருப்பிக் கேட்ட போது ‘அவர்களுடைய ஆதரவு இன்றி தாங்கள் செயற்பட முடியாது’ என்றும் சிவா மகேசன் தெரிவித்தார். 

வன்னி முகாம்களில் உள்ள காரை மக்களை காரைநகரில் உள்ள கைவிடப்பட்ட வீடுகளில் மீளக்குடியமர்த்துவது பற்றிய யோசனையை சோமசுந்தரம் முன்வைத்த போது உடனேயே எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. ‘கண்ட கண்ட ஆட்களையும் எங்களின் வீடுகளில் இருத்தவோ?’ எனச் சிலர் முறுகியதாக லண்டன் குரலுக்கு செய்திகள் எட்டின. அதுபற்றி சிவா மகேசனிடம் காரைநகரில் கைவிடப்பட்டுள்ள லண்டனில் வாழும் ‘உயர் சாதி’ இனரின் வீடுகளில் ஏனைய சாதிக்காரர்கள் குடியிருப்பதை தடுப்பதற்காகவா இந்த முயற்சி கைவிடப்பட்டதா? என்று கேட்ட போது, சிவா மகேசன் முற்றாக அதனை மறுத்தார். ‘சாதிப் பிரச்சினை அங்கு ஒரு விடயமாகப் பார்க்கவில்லை’ என்றார் சிவா மகேசன்.

ஆனால் ‘கையெழுத்து வைத்து இதனை எதிர்த்தவர்கள் பெரும்பாலும் காரையில் உள்ள தங்கள் வீடு வளவுகளில் ஏனைய சாதியினர் வந்துவிடுவார்கள் என்பதாலேயே எதிர்த்தனர். அதற்கு அவர்கள் வைக்கும் காரணங்கள் நொண்டிக் காரணங்களைக் கூறுகின்றனர்’ என இத்திட்டத்தை ஆதரித்தவர்கள் லண்டன் குரலுக்குத் தெரிவித்தனர். ‘கையெழுத்து இட்டவர்கள் யார் என்ற பட்டியலை வெளியிட்டால் இந்த உண்மை வெளியே வந்துவிடும்’ என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். புது றோட்டு – களபூமி என்று பிரிந்து நிற்கும் உயர் சாதி உப பிரிவுகள் இரண்டும் இந்த காரையில் உள்ள கல்வீடுகளில் வன்னி முகாம்களில் உள்ளவர்கள் குடியமர்த்தப்படுவதை கடுமையாக எதிர்ப்பதில் ஒன்றாகவே செயற்படுவதாகவும் குடியேற்றத் திட்டத்தை ஆதரிப்பவர்கள் தெரிவிக்கின்றனர்.

Show More
Leave a Reply to மகுடி Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

12 Comments

  • Kusumbo
    Kusumbo

    தொடங்கிட்டாங்களய்யா தொடங்கிட்டாங்கள் சாதியைச் சாகவிடமாட்டீங்களாடா?

    Reply
  • Kirupa
    Kirupa

    இது மிக பெரிய அனியாயம்.
    “எங்களயும் திருப்பி அனுப்ப உதவிவிடும்”
    என்பதால் அவர்களுக்கு உதவ கூடாது….

    எல்லாம் காரை சிவனுக்கெ வெளிச்சம் !!!!

    Reply
  • மகுடி
    மகுடி

    உங்களுக்கெல்லாம் ஒரு தனி நாடு தேவையா? சீ……..

    Reply
  • thurai
    thurai

    தமிழனை அழிப்பது தமிழரிலுள்ள சிலரா? அல்லது சிங்களவர்களா? உலகமிதனை அறியும்போது தமிழனின் தலைதானாகவே கவிழும்.

    துரை

    Reply
  • kumarathasan
    kumarathasan

    i think karai welfare society made a wrong decision, they have no wright to own other people property its an wrong example.

    Reply
  • Theevaan
    Theevaan

    Dear Comrades,We have almost defeated the Mafia LTTE but it is very difficult to defeat the Saiva,Vellala and Jaffna hegemonic Tamil rulling class.Its so-called organizations ,like Old student Unions and Old village uninons which are representing and serving the particular rulling class.Therefore it is our immediate duty to dissolve and smash all these undemocratic and pro (Cast)Saiva,Vellala oroganizations ,all over the world.Eventhough it has done a little to the people in our land but its ideology and background is anti-people.

    In the past our people have to face two immediate enemies in their life and death struggle, one is Mafia LTTE and the other one is Saiva, Vellala Tamil rulling class .Before it has been rulling the majority of the poor tamil people from the Karuwakkadu -Colombo, about 300 miles away from Jaffna and now they are continuing to control our people ,by living more than ten thousands of miles away from Srilanka( In USA,UK ,Canada,EU and etc.).

    Really our arch-enemy is not the LTTE but this pro Imperealist Tamil rulling class .LTTE is used by these group as a stooges to capture the power and rule the people.Almost these culprits are weakened in Srilanka with the help of the people but they are trying their best to re-capture the power and serve the imperialism .

    Reply
  • Kirupa
    Kirupa

    Theevaan,
    Take it easy and let it go with the flow. it is very hard to turn the clock. But only thing we can concentrate and productively act on is to teach our kids locally to avoid and practicing all those cast garbage. I am sure, it will be the case for the future.
    Part of Tamils are lucky enough to esacpe from SL and living and experiencing the cvil stauts in other countries long, learend enough of those crap. Having said this, identity is one of the key element and important for all of us. Different groups, preserving their own way. Let it be, as long as it does not dissolve others identity. I am sure, our kids will be taking care of this smooth transition.

    Reply
  • thurai
    thurai

    //Almost these culprits are weakened in Srilanka with the help of the people but they are trying their best to re-capture the power and serve the imperialism .//Theevaan

    100 percent truth, and main reason for the war in Sri Lanka.

    thurai

    Reply
  • rupan
    rupan

    Dear riends these karainagar welfare society members are the forfront activist in front of the Parliment for defending the LTTE

    how our liberation strgules went on and this karai welfare group members still active with LTTE and speaking about liberation of tamils.

    Reply
  • Karainagaran
    Karainagaran

    இந்த வெள்ளாளர் சங்கம் புலிகளின் ஆதரவுச் சங்கம். பாராளுமன்றத்திற்கு முன்னாள் நடாத்திய உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஒரு நாள் உபநயம் செய்தவர்கள். கடந்தகாலங்களில் பொதுப்பணத்தை புலிகளுக்கு கொடுத்தவர்கள் பல முக்கிய உறுப்பினர்கள் புலிகளின் பணத்தில் தமது முதலீடுகளை செய்துள்ளவர்கள் – இவர்களில் கரோ எட்ஜ்வெஜர் பகுதிகளில் உள்ளவர்கள் பல கிரடிற்காட் களவுகளில் சம்பந்தப்பட்டு சிறைபோனவர்கள் பெற்றோல் நிரப்பும் நிலையத்தில் களவுகளுக்காக சிறைசென்றவர்கள் – புலிகளின் அகதிகள் வீட்டுத்திட்டத்தில் களவுகள் செய்தவர்கள் என் பலர் உள்ளனர்.

    இந்த சங்கத்தின் முன்னாள் செயலாளர்(புதுறோட்) , தன்னிடமிருந்து பதவியை பறித்து எடுத்தால்- இப்போதுள்ள செயலாளருக்கு (களபூமி) பலதொல்லைகள் கொடுப்பதன் நோக்கமே- இவ்வாறு அனோமேதேய கடிதம் எழுதி அவமானப்படுத்தியுள்ளார். இருந்து பாருங்கள் மீண்டும் இந்த செயலாளர் பதவி, புதுறோட் செயலாளரிடம் போகும் அதன் பின்பு வேறு கதைகள் வெளிவரும்.

    இந்த இரண்டு தரப்பினருமே வெள்ளாளர் அல்லாத சாதியினருடன் பழகுவது இல்லை முன்னாள் செயலாளரின் உறவுப்பிள்ளை வேறுசாதியினரை திருமணம் செய்தால் அந்தப் பிள்ளையை ஒதுக்கிவிட்டவர் என்றும் காரைநலன்புரி வட்டாரங்கள் பேசப்படுகிற விடயம்.

    Reply
  • thurai
    thurai

    இவர்களின் சாதி வெறி தமிழனில் தமது சாதிக்காரரைவிட தாழ்த்தப்பட்டவர்கள் தலையெடுக்கபடா என்பதேயாகும். இவர்களிற்கு முக்கியமானது தமது பணமும் சாதியுமேயாகும். சைவத்தையும், தமது ஊர்பெயரையும் வைத்தே பிழைப்பு நடத்துபவர்கள். சொல்லப்போனால் இப்படியான மானங்கெட்ட சமூகங்கள் தமிழரிற்கு தலைமை தாங்க முயல்வதாலேயே தமிழினம் இன்று இலங்கையிலும், உலகமெங்கிலும் அகதிகளாகவும், அடிமைகளாகவும் வாழ்கின்றார்கள்.

    இந்த நிலைமையைக் கூட தமக்கு சாதகமாகப் பயன்படுத்தி தமிழிற்காக, தாமே முன்நின்று செயற்படுவதாக உலகிற்குக் காட்டி தமது பண வருமானத்தையும் உயர்த்தி உலகையும் ஏமாற்ரி வருகின்றார்கள்.

    துரை

    Reply
  • guru
    guru

    /பொதுவாக உரிமை மீறல்களுக்கு எதிராக அடிப்படை உரிமைகளைக் கோரி கையெழுத்துப் போராட்டங்கள் நடத்தப்படுவது வழமை. ஆனால் மாறாக தங்கள் சுயநல நோக்குகளுக்காக இந்த ஜனநாயக நடைமுறையை கையெழுத்து வேட்டையை சிலர் நடாத்த முயல்கின்றனர். நுனிநாக்கில் ஜனநாயகம் பேசும் இவர்கள் தமிழ் மக்களின் நலன்தொடர்பில் ஆபத்தானவர்களாக உள்ளனர். ஒரு சிலரின் தூண்டுதலால் முழுமையான புரிதல் இன்றி கையெழுத்து இடுவோர் ஒரு சிலரின் சுயநலன்களுக்கு துணை போய்விடுகின்றனர்./

    இது ஒன்றல்ல இரண்டல்ல பலதடவைகள் பலர் தமது தவறுகளை மறைக்கவும் விமர்சனம் செய்யும் துணிவில்லாமலும் இப்படியான கேவலமான வேலைகளால் முற்போக்கு சக்திகள் மீதும் சமூகத்தில் பல நல்ல வேலைகளை செய்யக் கூடியவர்களையும் சேறு பூசி ஓரம்கட்ட முனைந்து தோல்வி கண்டுள்ளனர்

    Reply