பிரபாகரன் அமெரிக்க அரசை உறுதியாக நம்பினார்.: ஈழத் தமிழ் எழுத்தாளர் திருநாவுக்கரசு விகடனுக்கு செவ்வி

thru.jpg”புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு, நிகழப்போகும் நிகழ்வுகளை முன்கூட்டியே அனுமானிக்கக்கூடிய சக்தி அதிகம். அதனால் போரின் இறுதி நிலை கொடூரமானதாகவும், தாங்க இயலாததாகவும் இருக்கும் என்று அவருக்குத் தெரிந்திருக்கும் என்று ஈழத் தமிழ் எழுத்தாளர் திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.

தற்போது மண்டபம் அகதிகள் முகாமுக்குக் கொண்டு வரப்பட்ட திருநாவுக்கரசை விகடன் நிறுவனத்தினார் சந்தித்துள்ளனர். திருநாவுக்கரசு விகடனுக்கு வழங்கிய செவ்வியின் முழுவடிவம் வருமாறு:-

”ஈழத்தின் கடைசிக்கட்ட நிலைமை எப்படி இருந்தது?”

”இராணுவம் அனைத்துப் புறமும் சூழ்ந்துவிட்டது. இனி தப்பிக்க முடியாது என்கிற எண்ணம் மக்களிடத்திலும் போராளிகளிடத்திலும் உருவாகி விட்டது. பங்கருக்குள் பதுங்கி இருந்த மக்கள், இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியை நோக்கிப் போகத் தொடங்கி விட்டார்கள். சரியான தகவல் பரிமாற்றங்கள் இல்லாததால், போராளிகளும் திக்கற்று நின்றார்கள். திரும்பிய பக்கமெல்லாம் கதறல்.பிணங்கள் சிதறிக் கிடந்த பாதைகளில் மக்கள் ஓடிக் கொண்டிருந்தார்கள். எல்லோருடைய மனதிலுமே இதுதான் இறுதி நிமிடம் என்கிற பதைபதைப்பு. இறப்பைக் காட்டிலும் இறக்கப் போகிறோமே என்கிற பதற்றம் ரொம்பக் கொடுமையானது. வார்த்தைகளால் சொன்னால் புரியாது, அனுபவித்தால்தான் தெரியும்…”

”இறுதி நெருக்கடிகளை புலிகள் எப்படி சமாளிக்கத் திட்டமிட்டிருந்தார்கள்?”

”புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு, நிகழப்போகும் நிகழ்வுகளை முன்கூட்டியே அனுமானிக்கக்கூடிய சக்தி அதிகம். அதனால் போரின் இறுதி நிலை கொடூரமானதாகவும், தாங்க இயலாததாகவும் இருக்கும் என்று அவருக்குத் தெரிந்திருக்கும். புலிப்படைத் தளபதிகளுக்கும் போராளிகளுக்கும் இருந்த அசாத்திய நம்பிக்கையும் ஒரு கட்டத்தில் தகர்ந்து போனது. ஆரம்பத்தில்… கிளிநொச்சியைத் தாண்டி இராணுவத்தால் முன்னேற முடியாது என்று புலிகள் உறுதியாக நம்பி இருந்தனர்.

ஆனால், இராணுவம் அசுர பலத்தால் அடுத்தடுத்த நிலப் பகுதிகளை வீழ்த்தத் தொடங்கி விட்டது. அதன்பிறகு மக்களுக்கும் ‘இனி ஜெயிக்க முடியுமா’ என்கிற தயக்கமும் பயமும் ஏற்பட்டது. ஆனாலும், பிரபாகரன் கொஞ்சமும் தளராமல் உறுதியோடு போரை முன்னெடுத்து நடத்துவதில் தீவிரமாக இருந்தார். எத்தகைய சூழலிலும் தோல்வி குறித்த அச்சம் அவரிடத்தில் இல்லை. ஆனால், இறுதி நேரம் முழு நம்பிக்கையும் தகர்ந்து போகிற அளவுக்குக் கொடூரமானதாக மாறி விட்டது.

பிரபாகரனை குறிவைத்துத் தாக்குதல் நடப்பது தெரிந்து, 600 புலிகள் அவரை ஆனந்தபுரம் பகுதிக்கு அழைத்துச் சென்றார்கள். அப்போது நான்கு புறமும் இராணுவம் சூழ்ந்துகொண்டு தாக்குதலை நடத்தியது. அப்போது பிரபாகரனுடன் அசாத்திய திறமை படைத்த கடாபி, தீபன், விதுஷா, துர்கா உள்ளிட்ட போராளிகளும் அடுத்தநிலை தளபதிகளும் பாதுகாத்து நின்றனர். அந்த இலக்கை குறிவைத்து இராணுவம் தாக்குதல் நடத்த, அதில் புலிகளுக்கு நினைத்துப்பார்க்க முடியாத பேரிழப்பு ஏற்பட்டது. பிரபாகரனின் அதிமுக்கிய தளபதிகள் அதில் கொல்லப்பட்டார்கள். ஆனாலும், பானு உள்ளிட்ட முக்கிய தளபதிகளால் அந்தத் தாக்குதலில் இருந்து நூலிழையில் காப்பாற்றப்பட்டார் பிரபாகரன்!”

”கடைசி நேரத்தில் புலிகள் சமாதானத்துக்குத் தயாரானதாகவும், அதனை சிங்கள இராணுவம் சட்டை செய்யவில்லை என்றும் சொல்லப்படுகிறதே?”

“இராணுவத்தின் அடுத்தடுத்த கொடும் தாக்குதல்களை சமாளிக்க முடியாது என்பதை, புலிகளின் முக்கியத் தளபதிகளே தெரிந்து வைத்திருந்தார்கள். இதையடுத்து, அரசியல் பிரிவின் பொறுப்பாளரான பா.நடேசன், சமாதானப் பிரிவு பொறுப்பாளரான புலித்தேவன் உள்ளிட்டவர்கள் பிரபாகரனிடம் பேசினார்கள். ஆனால், பிரபாகரன் அமெரிக்க அரசை உறுதியாக நம்பினார். ‘ஹிலாரி கிளின்டனிடம் நம்ம ஆட்கள் பேசி விட்டார்கள். அதனால் சீக்கிரமே அமெரிக்கா நம் விவகாரத்தில் தலையிடும். நாம் இன்னும் மூன்று நாட்கள் வரை தாக்குப்பிடிப்போம்’ என பிரபாகரன் நம்பிக்கையோடு சொன்னார்.

ஆனால், அமெரிக்காவின் உதவி கைகூடுவதில் சில சிக்கல்கள் உருவாகி விட்டன. இந்தியாவைக் கடந்து அமெரிக்காவால் உதவ முடியாது என்பதை புலித் தலைவர்கள் தாமதமாக… அதாவது காலம் கடந்த பிறகே புரிந்து கொண்டனர். இதற்கிடையில், இராணுவம் முற்றாக வளைத்து விட்டது. கடைசி நேரத்தில் சரணடைவது குறித்து நடேசன், பிரபாகரனிடம் பேசினார். ‘நீங்கள் சரணடையச் செல்லுங்கள்… நான் களத்திலேயே நிற்கிறேன்!’ என உறுதியாகச் சொல்லி விட்டார் பிரபாகரன். இந்தக் கணத்தில்தான் நாங்கள் மக்களோடு மக்களாகக் கலந்து இராணுவப் பகுதிக்கு போனோம். கடந்த மே 16-ம் தேதி வரை புலித் தலைவர்கள் பற்றிய நிலவரம் இதுதான். ஆனால், அடுத்தடுத்த நாளிலேயே புலித் தலைவர்கள் வீழ்த்தப்பட்டு விட்டதாக செய்திகள் வந்தன.”

”வெள்ளைக் கொடியுடன் வந்த நடேசன் உள்ளிட்டவர்களை இராணுவம் சுட்டுக் கொன்றதாக வந்த செய்திகள் குறித்து..?”

”நடேசன் சமாதானத்துக்கு முயன்றது எனக்கு உறுதியாகத் தெரியும். ஆனால், சமாதான விஷயத்தை சிங்களத் தரப்புக்கு சொன்னவர்கள், அதனை எப்படி முன்னெடுத்தார்கள் என்பது யாருக்கும் தெரியாத விஷயமாக இருக்கிறது. சிங்கள இராணுவத்தின் கட்டமைப்புப்படி சமாதானத் தகவல் பல கட்டங்களைத் தாண்டித்தான் சம்பந்தப்பட்ட பட்டாலியன் வீரர்களுக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கும். அந்த இடைவெளிக்குள் துயரங்கள் நடந்தேறி இருக்க வாய்ப்பிருக்கிறது. அந்தக் கணத்தில் நாங்கள் முகாம் பக்கம் வந்து விட்டோம்… அதனால், என்ன நடந்தது என்பது குறித்து உறுதியான தகவல் இல்லை!”

”பிரபாகரனின் நிலை என்ன ஆனது?”

”சரணடைவதில் கடைசி வரை பிரபாகரனுக்கு விருப்பம் இல்லை. ‘சரணடைவதைவிட சாவதே மேல்’ என்பதுதான் அவருடைய உறுதியான எண்ணம். ஆனால், கடைசி நேரத்திலும் வல்லமை மிக்க போராளிப்படை, பிரபாகரனைச் சுற்றி நின்றது. அவர் கடைசிக் கணத்தில் என்ன முடிவெடுத்தார் என்பதெல்லாம் அவரைச் சுற்றி நின்றவர்களுக்குக்கூட தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மற்றபடி, இந்தக் கேள்விக்கு யூகமான பதிலை சொல்வது சரியானதாக இருக்காது!”

”பிரபாகரனின் பிரேதம் என சிங்கள ராணுவம் காட்டிய படம்..?”

”அதற்கு முன்னர் நான் பிரபாகரனை பார்த்திருக்கிறேன். முக அமைப்புகள் எல்லாம் அவரைப் போலவேதான் இருந்தது. ஆனாலும், அதில் வேறேதும் ஜோடிப்பு செய்யப்பட்டிருக்கலாம் என மக்கள் மத்தியில் பேச்சிருந்தது. அடுத்தடுத்த தினங்களில் பிரபாகரன் கொல்லப்பட்ட தகவலை முக்கால்வாசி மக்கள் நம்பத் தொடங்கிவிட்டார்கள். பிரபாகரனைப் பிடிக்காதவர்கள்கூட, அவர் மரணித்ததாக வந்த செய்தியை நினைத்துக் கலங்கினார்கள். ஏனென்றால், தமிழீழப் போராட்டத்துக்கு அவரை விட்டால் வேறு ஆள் இல்லை என்பது தமிழ் மக்கள் மனதில் ஆணியாக அறையப்பட்டிருக்கும் உண்மை.”

”பிரபாகரனின் குடும்பத்தினர் தப்பி விட்டதாக சிலரும், அவர்களும் போரில் கொல்லப்பட்டு விட்டதாக சிலரும் முரணான கருத்துகளைச் சொல்கிறார்களே?”

”பிரபாகரன் தன்னுடைய குடும்பத்தினர் அனைவரையுமே ஈழத்து மண்ணில்தான் வைத்திருந்தார். போர் நெருக்கடியான நிலைக்கு வருவதற்கு முன்னரே, அவர்களைப் பாதுகாப்பான இடத்துக்கு அனுப்பி வைத்திருக்க முடியும். ஆனாலும், அதில் பிரபாகரனுக்கு கொஞ்சமும் விருப்பமில்லை. இரண்டு மகன்களையும், மகள் துவாரகாவையும் மக்கள் பார்க்கும் படியான நிலையில்தான் அவர் வைத்திருந்தார்.

தன்னுடைய குடும்பத்தினரை மட்டும் வெளியே அனுப்பினால், அது புலிகள் இயக்கத்தின் பிடிப்பை உடைத்து விடும் என்பதை அவர் உறுதியாகத் தெரிந்து வைத்திருந்தார். சார்ள்ஸ் அண்டனியை போர்க்களத்தில் நிறுத்தி இருந்தார். போர் மிகத் தீவிரமாக உருவெடுத்தபோது, பிரபாகரனின் மனைவி மதிவதனியை வெளியே அனுப்ப சிலர் முயற்சி எடுத்தார்கள். ஆனால் ‘மதிவதனி வெளியேறக் கூடாது…’ என உறுதியாக அறிவித்து விட்டார் பிரபாகரன். ‘மக்கள் வேறு… குடும்பத்தினர் வேறு…’ என்று அவர் ஒருநாளும் பிரித்துப் பார்த்ததில்லை.

உண்மையைச் சொல்வதானால், ‘போரின் முடிவு தன் குடும்பத்தினர் கூண்டோடு அழிவதாகக்கூட இருக்கும்’ என்பதையும் அவர் அனுமானித்து வைத்திருந்தார். அதற்காகவே பிரத்தியேகமாக ஒரு மருத்துவரைச் சந்தித்து தன்னுடைய மனைவிக்கும், பிள்ளைகளுக்கும் ஸ்பெஷலாக சயனைட்டுகளை தயாரிக்கச் சொல்லி வாங்கி வைத்திருந்தார். அதனைக் கொடுத்தனுப்பிய மருத்துவரே என்னிடம் சொன்ன விவரம் இது. சாவை பற்றிய அச்சமோ தயக்கமோ பிரபாகரனுக்கு ஒரு போதும் இருந்ததில்லை என்பதற்கு, இந்த ஒரு சம்பவமே போதும்!”

”பிரபாகரனின் குடும்பத்தினர் யாரும் தப்பித்திருக்க வாய்ப்பில்லையா?”

”போரின் இறுதி நேரம் நான் தங்கி இருந்த பங்கருக்கு அருகே ஒரு பெரிய பங்கர் இருந்தது. அங்கே நான் போன போது, அதில் பிரபாகரனின் பெற்றோர் தங்கி இருந்தார்கள். அவர்கள் இராணுவக் கட்டுப்பாட்டுக்கு வந்தபிறகு, கதிர்காமர் முகாமில் வைக்கப்பட்டிருந்ததை நான் பார்த்தேன். அவர்களை இராணுவம் சித்திரவதைகள் ஏதும் செய்யவில்லை. அதன்பிறகு, பாதுகாப்பு கருதி ஒரு ஸ்பெஷல் அறையில் வைத்து, அவர்களை இராணுவத் தரப்பு மரியாதையுடன் நடத்துவதாக எனக்குத் தகவல் வந்தது. பிரபாகரனின் மூத்த மகன் சார்ள்ஸ் அண்டனி போரில் மடிந்ததை நேரில் பார்த்தவர்களே உறுதி செய்திருக்கிறார்கள். அதே நேரம் துவாரகா, பாலச்சந்திரன், மதிவதனி ஆகியோர் என்ன ஆனார்கள் என்பது முகாமில் இருந்த எனக்கு சரிவரத் தெரியவில்லை!”

”பாலச்சந்திரன் கொல்லப்பட்டது போன்ற படம் இணைய தளங்களில் வெளியாகி இருக்கிறதே?”

”பாலச்சந்திரன் போரின் கடைசி வரை ஈழத்தில் இருந்தது உண்மை. மற்றபடி, அவர் எப்போது பிடிபட்டார் என்பது பற்றியெல்லாம் யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனாலும், அவர் கொல்லப்பட்டதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு என்பதுதான் என் சிந்தைக்கு எட்டிய விஷயம்.”

”புலிகள் தரப்பில் பலரும் காடுகளுக்குள் பதுங்கி இருப்பதாக சொல்லப்படுவது உண்மையா?”

”போரின் இறுதி நேரத்தில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட புலிகள் இராணுவத்திடம் சரணடைந்தார்கள்.மொத்தமாக புலிப்படையில் 24ஆயிரம் புலிகள் இருந்தார்கள். போரின்போது ஏழாயிரத்துக்கும் மேற்பட்ட புலிகள் வீரச்சாவு அடைந்தார்கள். இதுதவிர, இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட புலிகள் இப்போது காடுகளுக்குள் பதுங்கி இருக்கிறார்கள். அவர்கள் மேற்கொண்டு தாக்குதல்கள் நடத்துவதற்கு இப்போதைக்கு சாத்தியங்கள் ஏதுமில்லை. அவர்களை ஒருங்கிணைக்க இப்போதைக்கு வழியுமில்லை!”

”பொட்டு அம்மான் பற்றி எந்தத் தகவலும் இல்லையே..?”

”பொட்டு அம்மான், சூசை உள்ளிட்ட போராளித் தலைவர்களைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை. ஒரு விஷயத்தை மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும்… பிரபாகரன் கொல்லப்பட்டது உண்மையெனில், அது பொட்டு அம்மானைக் கொன்ற பிறகுதான் நடந்திருக்க முடியும். பொட்டு அம்மான் குறித்து இராணுவத்துக்கே சரியான தகவல்கள் கிடைக்கவில்லை என்பதுதான் சர்ச்சைகளுக்கு விதை போட்டிருக்கிறது. அதே நேரம், பொட்டு அம்மான் இராணுவத்தின் கஸ்ரடியில் இருப்பதாக சொல்வதில் நிஜமில்லை!”

”இந்தியத் தேர்தல், ஈழத்து நிலைமையை மாற்றும் என புலிகள் எதிர்பார்த்தார்களா?”

”இந்தியாவில் காங்கிரஸ் அரசுதான் மறுபடியும் அமையும் என்பதை ஈழத்தில் இருந்த அடித்தட்டு மக்கள்கூட நன்றாக அறிந்து வைத்திருந்தார்கள். மாற்று அணி வலிமையானதாக இல்லை என்பது எல்லோருக்குமே புரிந்தது. அதனால் இந்திய ஆட்சியில் மாற்றம் வரும் என்று புலிகள் எண்ணவே இல்லை. இருந்தாலும், தமிழகத்தில் ஈழத்துக்கு ஆதரவாக எழும்பிய ஒற்றுமை, ஈழ மக்களை நெகிழ வைத்தது!”

Show More
Leave a Reply to london boy Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

25 Comments

  • Kusumbo
    Kusumbo

    முற்பகல் செய்மின் பிற்பகல் விளையும் என்பது இதைத்தானாக்கும். கைகோர்த்து நின்று படம் எடுத்துவிட்டு கைகளை எழுத்ததும் போட்டுத்தள்ளிய மற்ற இயக்கத்தலைவர்களை நாம் இன்னும் மறக்கவில்லை. வளர்த்துவிட்ட த.வி.கூட்டணியினரை; அமிரை;புளொட்டில் பலரை; ஆயுதங்களையும் பணத்தையும் வாங்கிவிட்டு பிரேமாதாசாவை… இன்னும் இன்னும். எத்தனை எத்தனை. இந்தப்பழிகளின் முடிவுதான் புலிகளின் அழிவு. தமக்குச் சரியானவர்களைத்தான் பிரபா நம்பியிருக்கிறார். பிரபா எதிரியை நம்பித்தானே இயக்கம் நடத்தியவர். இவர் அமெரிக்காவை நம்பியதில் தவறே இல்லை. அமெரிக்காவும் நம்பவைத்துத்தானே அறுப்பது வழக்கம். இதனால்தான் நிரந்தரமான ஆட்சியமைப்பைப்கொண்ட சீனாவை ராஜபக்ச நம்பினான். புலிகளைப்பயங்கரவாதிகள் என்று முத்திரைகுத்திய அமெரிக்காவை; கடசிநேரத்திலும் புலிகள் மேலுள்ள தடையை நீக்கமுடியாத அமெரிக்காவை பிரபா நம்பினார் என்றால் தம்பி பிரவாவின் அரசியல் சாணக்கியத்துக்கு நோபாபரிசுதான் கொடுக்க வேண்டும். எதையும் முக்கூட்டியே அறியும் திறன் கொண்ட பிரபாவுக்கு ஏன் அமெரிக்கா கழுத்தறுக்கும் என்று புரியாமல் போனது. சும்மா விடாதையுங்கோ கதையை. விழுந்தாலும் மீசையிலை மண்படவில்லை என்று எங்களை நம்பச்சொல்லுறியள்.

    Reply
  • arul
    arul

    பாலகுமார் பாப்பா புதுவை போன்றவர்கள் தொடர்ந்தும் முகாமில் வைக்கப்பட்டிருக்கும் நிலையில் இவர் ஏன் இந்தியா போக விரும்பினார்? என்பதும் எப்படி இந்தியா போனார்? என்பதும் மர்மமாக இருப்பினும் தற்போது தமிழ்நாட்டில் இருக்கும் அவர் புலியின் முக்கிய பிரமுகராக விளங்கியபடியால் சிறப்புமுகாம் என்னும் சிறையில் அடைக்கப்படலாம் அல்லது திருப்பி அனுப்பப்படலாம். இதை இந்திய உளவுப்படைகளே தீர்மானிக்கும் நிலை இருப்பதால் அதில் இருந்து தன்னை காப்பதற்காவும் அதற்குரிய வகையில் சில கருத்துக்களை கூறவேண்டிய நிலையில் உள்ளார். அந்த ரீதியிலே அவரின் கருத்துக்கள் தற்போது பார்க்கப்படவேண்டும். எதிர்காலத்தில் நடக்க இருப்பவற்றை துல்லியமாக கணித்து எதிர்வுகூறும் திறன் படைத்தவர் தலைவர் பிரபாகரன் என்றும் கூறும் இவர் இந்தியாவை மீறி அமெரிக்கா உதவி செய்யும் என்று எப்படி பிரபாகரன் நம்பினார் என்பதற்கு விளக்கம் தரவில்லை என்பதுடன் தான் முன்னர் கூறியதற்கு முரணாகவே பின்னர் கூறுகிறார்.

    தமிழ்மக்களின் அழிவுக்கு இந்தியஅரசே காரணம் என்ற பெரும்கோபம் தமிழ்நாட்டுமக்கள் மத்தியில் இருப்பதால் அமெரிக்காவை நம்பியே அழிந்தார்கள் என்று கூறுவதன் மூலம் மறைமுகமாக இந்தியஅரசுக்கு துணைபோக இந்த நபர் முயன்றுள்ளார். இது அவர் தன் நலனை கருத்தில் கொண்டு தானாக முன்வைத்த கருத்தாகவும் இருக்கலாம் அல்லது இந்திய உளவுப்படைகளின் வேண்டுகோளுக்காகவும் இருக்கலாம். ஆக மொத்தத்தில் இவர் தன் திறமைமூலம் நாட்டில் இருக்கும்வரை புலிகளின் தவறுகளுக்கு தத்துவ விளக்கம் கொடுத்தார். இப்போது இந்தியாவில் தன் நலனுக்காக தமிழ்மக்களுக்கு எதிராக கருத்துக்களை உதிர்க்கிறார்.இதனையே நாம் மக்கள் மத்தியில் அம்பலப்படுத்த வேண்டும்.

    Reply
  • mutthan
    mutthan

    ////புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு, நிகழப்போகும் நிகழ்வுகளை முன்கூட்டியே அனுமானிக்கக்கூடிய சக்தி அதிகம்///

    இது பிரபகாரனின் தனி சிறப்பு அம்சமல்ல. முதலாளித்துவ அரசியலின் முது எலும்பு. எனினும் ராஜீவ் காந்தியின் கொலை செய்யும் பொழுது முன்னறிவு இருக்கவில்லை முழு முட்டாள் தனம் தான் இருந்தது.

    புது டெல்லிக்கும், கொழும்புக்கும் எதராக வாசிங்க்டன், லண்டன், பாரிஸ், பெர்லினை ஒஸ்லோவின் உதவியுடன் அணி திரட்ட முயன்றது உலக அரசியலில் அரிவரி தெரியாத முன்னறிவை தான் காட்டியது.

    ஏகாதிபத்திய குத்து வேட்டுக்குள் வெட்டி ஓடி வெல்ல நினைத்த முதலாவது தலைவரல்ல பிரபாகரன். பின்தங்கிய நாடுகளின் தலைவர்களின் அரசியல் நீண்ட காலமாக இதில் தான் தங்கியிருந்தது. எதிப்தின் சதாத், இந்தியாவின் இந்திரா காந்தி, யாசிர் அரபாத் இன்னும் பலர் இந்த வித்தையில் நிபுணர்களாக இருந்தனர். எனினும் இறுதியில் ஓரளவு கௌரவமாக முடிவுக்கு வந்தனர். இது இவர்கள் வாழ்ந்த கால கட்டதினையும், உலக அரசியலையும் நிபந்தனையாக கொண்டிருந்தது.

    பிரபாகரனுக்கு இருந்த நம்பிக்கை தான் சதாம் குசெயன் இற்கும் இருந்தது. அமெரிக்க, ஐரோப்பிய முரண்பாடுகள் ஈராக் மீதான் போரினை தடை செய்யும் என்ற முன்னறிவு தான் கயிறை கழுத்தில் போட்டது.

    பிரபாகரன் விடயத்தில் இந்த அரசியல் கோவணத்துடன் காட்சிக்கு வைக்கும முடிவை தந்தது. எதிர் காலத்தில் கோவணம் இல்லாமல் காட்சிக்கு வைக்கும் முடிவை தரும். பத்மநாதனும், உருதிரமூர்தியும் இந்த அரசியலை தொடர்கின்றனர்.

    பிரபகாரன் அமெரிகாவில் வைத்த நம்பிக்கையில் ஒன்றும் குறைந்த தல்ல ஸ்ரீலங்கா அரசின் மீது கருணா, பிள்ளையான், சங்கரி, சித்தர் இன்னும் பலவிதமான தரகர்கள் வைக்கும நம்பிக்கை .

    இவர்களும், புதிய புலியும் எதிர்காலத்தில் உயிர் தப்பலாம். ஆனால் இந்த அரசியலை எதிர்க்காவிடில் இலங்கை தீவில் இரத்தம் பாய்வது நிறுத்த முடியாதது.

    Reply
  • ravi
    ravi

    /அதே நேரம், பொட்டு அம்மான் இராணுவத்தின் கஸ்ரடியில் இருப்பதாக சொல்வதில் நிஜமில்லை!/

    தலைவர் மற்றும் தளபதிகள் இறுதியாக என்ன முடிவு எடுத்தார்கள் என்பது பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்றும் கூறும் அதேவேளை பொட்டுஅம்மான் இரானுவத்தின் கஸ்ரடியில் இல்லை என்பதை மட்டும் எப்படி உறுதியாக தெரிந்து வைத்துள்ளார்?

    யுத்தத்தின் பின் புலிகளுக்கு உதவிய முக்கிய பலர் கைது செய்யப்படுவதற்கு பொட்டுஅம்மான் உயிருடன் வைக்கப்பட்டுள்ளார் என்று பலர் நம்புவதற்கு காரணமாக இருக்கும் நிலையில் அப்படி உயிருடன் வைக்கப்படவில்லை என்று இவர் உறுதியாக மறுப்பதன் மர்மம் என்ன்?

    Reply
  • indiani
    indiani

    சாதம் குசைன் சோமாலிய ஜெனரல் ஜடி கொங்கோ கபிலா இவர்கள் பாதையிலேயே பிரபாகரனும் போய்யுள்ளார் இவர்கள் பேராட்டம் என்பதை தமது மூளையிவலயே திட்டம் அமைத்து அததான் சரி என்று முடிவெடுத்து செய்தவர்கள் – இவர்களுக்கு மக்கள் போராட்டம் மக்களிடமிருந்து கருத்துப் பெறுவது என்ற எண்ணமே இல்லாதவர்கள் இவர்களின் பொதுவாழ்வியல் அழிவை வரவேற்க வேண்டும் காரணம் இவர்களால் ஏதும் உருப்படியாக செய்து விடமுடியாது இவர்கள் போன்றவர்களால் சீரழிந்த இனங்கள் பல – இவர்கள் எல்லோருமே ஏகாதிபத்தியத்திற்க்கு வால்பிடித்தும் அவர்களது ஏவலாக இருந்தும் பின்னர் ஏகாதிபத்தியம் பாவித்து முடிந்த பின்னர் அழிய வழிவகுக்கும். அதற்கு இந்த உலகில் மீண்டும் ஒரு உதாரணம் பிரபாகரனும் புலிகளும்.

    திருநாவக்கரசின் கதைகள் தெட்டத்தெளிவாக விளக்குகிறது பிரபாகரனே ரஜுவ் காந்தி கொலைக்கு முக்கிய ஏவலாளியும் இவர் இந்த கொலையை அமெரிக்காவிற்காகவே செய்தார்.

    புலிகளின் அழிவு தமிழர்களை மேலும் மொசமான சீரழிவிலிருந்து விலத்தியுள்ளது.

    Reply
  • kalawathi
    kalawathi

    திருநாவுக்கரசு போன்றவர்களிடமிருந்து பல விடயங்களை அறிய வேண்டும். முக்கியமாக தமிழ் தலைவர்கள், மாற்று இயக்கத்தவர்கள் கொலைகள் என்பன.

    இனிமேல் வெளியே தம்மை புலிகளின் முக்கிய உறுப்பினர்கன் என சொல்லிக்கொண்டு வருபவர்களிடம் இந்த விடயங்களை முதலில் அறிய வேண்டும். பதில் வரும் அல்லது தம்மை புலி என்று சொல்லாமலே வாழ்ந்து விட்டுப் போகட்டும்.

    Reply
  • BC
    BC

    //புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு நிகழப்போகும் நிகழ்வுகளை முன்கூட்டியே அனுமானிக்கக்கூடிய சக்தி அதிகம்.//

    இது புலம்பெயர்ந்த புலி ஆதரவாளர்களுக்கு எப்பவோ தெரிந்த விடயம்.புலிகள் என்ன செய்தாலும் தலைவர் எவ்வளவு திறமையாக காய் நகர்த்துகிறார் என்று கூறி தலைவரை பாராட்டி மகிழ்ந்தனர்.

    Reply
  • DEMOCRACY
    DEMOCRACY

    /தமிழ்மக்களின் அழிவுக்கு இந்தியஅரசே காரணம் என்ற பெரும்கோபம் தமிழ்நாட்டுமக்கள் மத்தியில் இருப்பதால் அமெரிக்காவை நம்பியே அழிந்தார்கள் என்று கூறுவதன் மூலம் மறைமுகமாக இந்தியஅரசுக்கு துணைபோக இந்த நபர் முயன்றுள்ளார். இது அவர் தன் நலனை கருத்தில் கொண்டு தானாக முன்வைத்த கருத்தாகவும் இருக்கலாம் அல்லது இந்திய உளவுப்படைகளின் வேண்டுகோளுக்காகவும் இருக்கலாம். ஆக மொத்தத்தில் இவர் தன் திறமைமூலம் நாட்டில் இருக்கும்வரை புலிகளின் தவறுகளுக்கு தத்துவ விளக்கம் கொடுத்தார். இப்போது இந்தியாவில் தன் நலனுக்காக தமிழ்மக்களுக்கு எதிராக கருத்துக்களை உதிர்க்கிறார்.இதனையே நாம் மக்கள் மத்தியில் அம்பலப்படுத்த வேண்டும்/
    —சரியான கருத்து மிஸ்டர் அருள்!.

    இந்திய வரலாற்றில் “பெரிய புராணம் என்று ஒன்று உண்டு”, கலிங்கத்துப் பரணி, கலிங்கத்துப் போர் என்று உண்டு!. “இவர்” “நகல் போலிகள்” இதை, மீண்டும் அந்த நாடகத்தை நடத்தி காட்டியதாக “யாருக்காகவோ” “சரடு” விட்டு, எதற்காகவோ “அடிபோடுகிறார்”. “கோழிப் பிடிக்கிறவர்கள்”, “ஈர சாக்கை” போட்டு முக்கல் முனகல் இல்லாமல் பிடித்த மாதிரி, “விஷயம் நடந்தேறியது” எப்படி?. இருபத்தியோராம் நூற்றாண்டில், வருங்காலத்தில் அந்தப் பகுதியை நடக்கவிருக்கும் சம்பவங்களுக்கு, “ஆரம்பம்” இது!. இவர் தமிழ் நாட்டில் புகுந்துக் கொண்டு அதன் ஊதுகுழலாக, தனக்கே தெரியாமல் செயல்படுகிறார்!!. சிங்களவர்களும்கூட இதற்குள் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள். நான் ஏற்கனவே கூறியிருக்கிறேன், தமிழர்கள் என்கிற போர்வையில் திராவிட இயக்கங்கள் (குறிப்பாக சினிமா கலைஞர்கள் என்ற கூத்தாடிகள்) போட்ட “போலி டமாரமும்”, அதைத் தொடர்ந்து, இலங்கைத் தமிழர்கள் போட்ட “தமிழ் தேசிய டமாரமும்” “பெஷாவரிலிருந்து காலி வரையிலான” “அரசியல் ஹயரார்க்கிகளுக்கு” நமட்டுச் சிரிப்புடனான புகலிடமாக அமைந்து விட்டது. தமிழர்களுக்கு “தங்கள் தலையிலேயே தாங்களாக மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டதாகவும்”, ஆப்பிரிக்கர்களைப் போன்று தங்கள் “கையறு நிலையை ஒத்துக் கொள்ளும் சாசனமாகவும்” அமைந்து விட்டது….

    Reply
  • Kumaran
    Kumaran

    பிரபாகரன் அமெரிக்காவை நம்பியது தமிழ் மக்களின் போராடத்தை முன் எடுக்க அல்ல.

    அமெரிக்கா தெட்கசியாவில் குழப்பத்தை ஏற்படுத்த தன்னை ஒரு கைம்பொம்மையாக வைத்துஇருக்கும், தானும் தொடர்ந்து அரயகங்களை செய்து மக்களையும் எமற்றிகொண்டு பாதுகாப்பாக இருக்கலாம் என்று.

    திருநாவக்கரசு உண்மையை விட்டு தன்னையும், வைகோ, நெடுமாறனையும் பாதுகர்துக்கொள்ளும் விதமாகவே பேட்டி அளித்துள்ளார்.

    எல்லாம் தெரிந்த திருனவக்கரசுக்கு, புலிகள் தப்பி ஓடிய மக்களை கொன்றதும் மனித கேடயங்களாக வைத்திருந்ததும் விபரமாக தெரிந்திருக்க வேணுமே.

    Reply
  • kumar
    kumar

    பல நாடுகளில் நடைபெற்ற போராட்டங்களை பல்கலைக்கழக மாணவர்கள் தலைமை ஏற்று நடத்தினார்கள்அல்லது முக்கிய பங்கு வகித்தார்கள்.ஆனால் துரதிருஸ்டவசமாக தமிழ்மக்களின் போராட்டத்தில் யாழ் பல்கலைக்கழகத்தின் பங்கு எப்போதும் எதிர்மறையானதாகவே இருந்து வந்துள்ளது.சுயநலம் மிக்க விரிவுரையாளர்களான சிவதம்பி முதல் பத்மினி சிதம்பரநாதன் திருநாவுக்கரசு என பலரும் புலிகளின் தவறுகளுக்கு தங்கள் திறமைகள் மூலம் தத்துவவிளக்கம் கொடுத்து வந்துள்ளதை நாம் காணலாம்.புலிகளை மன்னித்தாலும் இந்த சுயநலமிக்க புத்தி ஜீவிகளை ஒருபோதும் மன்னிக்க முடியாது.

    Reply
  • london boy
    london boy

    சதாம் குசைன் அமெரிக்காவால் ஈரானுக்கு எதிராக உருவாக்கப்பட்டு ஆயுதம் வழங்கப்பட்டு வளர்த்தெடுக்கப்பட்டதும் பின்னர் தமது நலனுக்கு எதிராக போகும் போது கழுத்தில் போட்டதும் எப்படி பிரபாகரனுக்கு தெரியாமல் போனது.

    Reply
  • kuna
    kuna

    “புலிகள் ராஜிவ்காந்தியை கொன்றது தவறு. அதனால்தான் இந்தியா உதவி செய்யவில்லை” என சிலர் கூற முற்படுகின்றனர். இந்திய ராணுவம் செய்த கொடுமைகளுக்காக …………………………………………………..

    இங்கு இந்தியாவுக்கு வக்காலத்து வாங்குபவர்களுக்கு ஒன்று கூறிக்கொள்ள விரும்புகிறேன். ராஜிவ்காந்தி கொல்லப்படுவதற்கு முன்பே இந்தியா இலங்கைத் தமிழர்களுக்கு எதிராகவே செயற்பட்டது. எனவே ராஜிவ்காந்தி கொல்லப்படவில்லையாயினும் இந்தியா இலங்கைத் தமிழ்மக்களுக்கு எதிராகவே செயற்படும். இந்தியா எப்போதும் தன் நலன்களுக்காகவே இலங்கை இனப்பிரச்சனையை கையாண்டதேயொழிய ஒருபோதும் தமிழ்மக்களின் நலனை கருத்தில் கொள்ளவில்லை. எனவே தயவு செய்து புலிகளின் மேல் உள்ள கோபத்திற்காகவோ அல்லது இந்திய உளவுப்படைகள் தரும் ஒரு சில சலுகைகளுக்காகவோ தவறான கருத்துக்களை நியாயப்படுத்தாதீர்கள். வரலாற்றுத் தவறுகளுக்கு துணை போகாதீர்கள்.

    Reply
  • jalpani
    jalpani

    செத்துப் போனவர்களின் மீதான குற்றச்சாட்டுக்கள் ஒருபுறம் இருக்க இப்போது உயிரோடு இருந்து கொண்டு “சரடு” விட முயல்கிறவர்கள் பக்கம் மக்கள் கவனம் செலுத்த வேண்டும்.

    Reply
  • kuru
    kuru

    புலிகளின் புதிய தலைவர் கே.பி இந்தியாவுடன் பேசுவேன் என்கிறார். புலிகளின் தத்துவ ஆசிரியர்களில் ஒருவரான திருநாவுக்கரசு இந்தியாவுக்கு சென்றது மட்டுமல்லாமல் பிரபாகரன் அமெரிக்காவையே நம்பி அழிந்தார் என்று பேட்டிகொடுக்கிறார். காலம் சென்ற அரசியல் ஆலோசகர் பாலசிங்கம் இறக்கும் வரையில் இந்திய உளவுப்படையுடன் தொடர்பில் இருந்துள்ளார். அதுமட்டுமன்றி அவருக்கு இந்தியாவில் இருந்து மருந்துகள் வாங்கி பிரத்தியேகமாக அனுப்பும் அளவிற்கு நாராயணனுடன் உறவு இருந்துள்ளது. மேலும் புலிகள் கடைசி நிமிடம் வரை இந்திய அரசுடன் உறவில் இருந்து வந்துள்ளதும் இந்திய அரசிடமே சரணடைந்துள்ளனர் என்பதும் கனிமொழி கஸ்பார் போன்றவர்களின் பேட்டிகள் உறுதிப்படுத்துகின்றன். தேர்தல் வரை இழுத்தடிக்கப்பட்டு தேர்தல் முடிந்தவுடன் புலிகளின் தலைவர்கள் சரணடையவைத்து படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அதுமட்டுமல்ல இன்னொரு போராட்டத்தை தற்போதைக்கு முன்னெடுக்க முயலக்கூடாது என்பதற்காகவே ஜம்பதாயிரத்திற்கு மேற்பட்ட மக்களும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

    இவையாவும் அமெரிக்க லண்டன் அரசுகளின் ஆதரவோடு இந்தியா முன்னின்று நடத்திய படுகொலைகளாகும். இதற்கெல்லாம் இந்தியா ஒரு பதில் சொல்லியே ஆகவேண்டும். ஆனால் அதற்கு முன்பாக தான் நல்ல பிள்ளை என்ற வேடம் மக்கள் முன் கலையக்கூடாது என்பதற்காக தன்னுடைய சீடர்கள் முலம் பல்வேறு கதைகளை இந்தியா எடுத்து விடுகிறது. அதில் ஒன்றுதான் இந்த திருநாவுக்கரசின் பேட்டியாகும். ஆனால் இனி என்னதான் இந்தியா தலைகீழாக நின்றாலும் தமிழ்மக்களின் மனதில் ஒருபோதும் இடம்பிடிக்கமுடியாது. குறிப்பாக தமிழ்நாட்டு இளைஞர்கள் மத்தியில் முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்திய மத்திய அரசுக்கு எதிரான எண்ணம் தோன்றியுள்ளது. இதன் விளைவை விரைவில் இந்தியா அறுவடை செய்யும்.

    Reply
  • sami
    sami

    இந்த நீண்ட கொடிய யுத்தத்தில் இருந்து பெற்றுக்கொண்ட பெறுமதி மிக்க விளைவுகள் தமிழீழம் தவறான தீர்வு என்பதும் இந்தியா மற்றும் அமெரிக்க லண்டன் அரசுகள் நண்பன் அல்ல என்பதுமே. ஆனால் இந்த உண்மைகளை மறைப்பதற்காக பிரபாகரனும் புலிகளுமே தோல்விக்கு காரணம் என்றும் இல்லையேல் இந்தியா தமிழீழம் பெற்றுக்கொடுத்திருக்கும் என்ற ரீதியில் சிலர் பேச முற்படுகின்றனர். இவர்கள் மீண்டும் “இலுப்பம்பழம் பழுத்தால் வெளவால் வரும்” என்ற 1983ம் ஆண்டு நிலைக்கு மீண்டும் மக்களை இழுத்துச் செல்ல முற்படுகின்றனர். ஆனால் ஈம்முறை இவர்களின் கனவு ஒருபோதும் நிறைவேறப் போவதில்லை. ஏனெனில் இந்தியா எமது நண்பன் அல்ல என்பதும் அது எமது எதிரி என்பதும் அனுபத்தின் மூலம் மக்கள் நன்கு படித்துவிட்டனர்.

    Reply
  • மாயா
    மாயா

    இவர்களைப் போல் பச்சோந்திகளை சிறீலங்காவுக்கு, இந்தியா உடனே நாடு கடத்த வேண்டும். இவருக்கு அங்குதான் சரியான விளக்கம் கொடுப்பார்கள். இவர் யாழ் பல்கலைக் கழகத்தையே கிளிநொச்சிக்கு மாற்றி அதன் தலைமையை ஏற்க முயன்ற சுயநலவாதி.

    சீஐஏ ஏஜன்ட்டான அன்டன் பாலசிங்கம் மூலம் , அமெரிக்காவோடு புலிகள் தொடர்புகளை வைத்திருந்தனர். ராஜீவ் கொலை அதன் ஒரு பக்கம். புலத்திலும் கேபீ வழியில் அந்த நோக்கத்தை நிறைவேற்ற அமெரிக்கா முயல்கிறது. எனவேதான் புலிகளை தடை செய்துள்ள நாட்டிலிருந்து கொண்டே நாடு கடந்த தமிழீழத்தை உருத்திரமூர்த்தியால் பேச முடிகிறது. ஆயுத கொள்வனவு செய்பவனை விட அரசியல் பேசி மக்களை நடுத் தெருவில் வீழ்த்தும் இவர்கள் மிக ஆபத்தானவர்கள்.

    பலர் வுவுனியா முகாமிலிருந்து தப்பி வந்துள்ளனர் என்பதை திருநாவுக்கரசு காட்டிக் கொடுத்து இனி எவரும் முகாமிலிருந்து வெளியேறாதவாறு ஆக்கியுள்ளார். ஏஜன்சி வழி வரும் சாதாரண மக்களிடம் கூட தாம் வந்த வழியை தெரிவிக்காத மன நிலை உண்டு. அதற்கு காரணம் அடுத்தவர்களும் வரட்டும் என்ற நல்லெண்ணமே. இந்த மனிதனிடம் அது கூட இல்லாதது புலிகளோடு இருந்த அனைவரும் இப்படித்தான் என்பதை சொல்லாமல் சொல்கிறது.

    இவர் நிகழ்வுகள் நடக்கும் போது பக்கத்தில் இருந்தது போல் சொல்வதை இந்தியர்கள் நம்பலாம். இலங்கையர்கள் நம்ப மாட்டார்கள்? மேற்படி பேட்டியில் ஒன்றுக்கு ஒன்று முரணான கருத்துகள் நிறையவே உள்ளன. இவர்களையெல்லாம் புலிகள் பண்டிதர்களாக வைத்திருந்தது என்றால் தலைவருக்கு எல்லாம் தெரியும் என்று புலத்து புண்ணாக்குகள் சொல்வதின் அர்த்தமும், புலத்து புண்ணாக்குகளின் மண்டையில் என்ன உள்ளது என்பதும் நல்லா விளங்கும்?

    Reply
  • Anonymous
    Anonymous

    எழுது,பேசு.கருத்திடு.
    உன் நிலை சுதந்திரமானது என நினைப்பில் நாற்காலி விமர்சனங்கள் நல்லதில்லை. ஒவ்வொரு தனி மனிதனின் கருத்துகள் இன்று அறிய முடியாதவை. காலம் பதில் சொல்லும். முப்பது வருட தலைமை வெறும் முட்டாள்தனத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டதல்ல. தோல்விக் குழந்தைகள் பழி போடுகிறார்கள்,வழி சொல்கிறார்கள். ஆராவது கேட்கிறார்களா?

    புலியின் பிறப்பு சிங்கள பேரினவாதம். அதன் வளர்ப்பு தொட்டில் தமிழ் தேசியவாதம். இதை நண்பரர்களே புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.

    Reply
  • mutthan
    mutthan

    ராஜீவ் காந்தியின் கொலயை புலிகள் செய்யாவிட்டால் இந்தியா தமிழ் மக்களுக்கு சாதகமாக இருக்கும் என்றதை இந்திய அரசாங்கம் TNA தலைவர்களுக்கு சொல்லியிருக்கலாம் அல்லது ENDLF இன் நிலைப்பாடாக இருக்கலாம். மற்ற பக்கத்தில் இந்திய, ஏகதிபத்திய எதிர்ப்பு வாதிகள் மகிந்தவின் மடிக்குள் மறைந்திருக்கலாம்.

    தமிழ் மக்களின் உறவு சக்திகள் பலருக்கு கசப்பாக இருந்தாலும் தொழிலாள, ஒடுக்கப்பட மக்கள் மட்டும் தான்.

    இங்கே விவாதத்திற்கு இருப்பது பிரபாகரனின் முதலாளித்துவ அரசியலில் முன்னறியும் மஹா திறமை என்ற வித்தையை பற்றியது.
    பின்தங்கிய நாடுகளின் தலைவர்கள் காலம் காலமாக செய்த வித்தையை தான் பிரபாகரன் செயதார். ஆனால் மிகவும் முட்டாள் தனமாக.
    பிரபாகரனின் வித்தையின் படி இந்திய பிரதமரை கொன்றதின் பின்னர் ஏகதிபத்திய நாடுகளிடம் மண்டி இடுவதன் மூலம் வெட்டி ஓட முயற்சித்தார். மேற்கு நாடுகளுக்கும், இந்தியாவிற்கும் இருக்கும் வர்த்தக, பிரதேச முரண்பாடுகள் இந்த வெட்டி ஓடலை செய்யும் அளவிற்கு இருக்கவில்லை. உலக முரண்பாடுகளின் பிரதானமான மையமாக இந்துசமுத்திரம் இல்லை. இந்தியாவை இந்த பிரதேசத்தின் போலீஸ் என அங்கீகரிப்பதில் மேற்கு நாடுகளில் வித்தியாசம் இல்லை. சீனாவின் தலையீடு இந்த நிலைபாட்டை வலுப்படுத்தலாம்.

    இந்த நிகழ்வுகள ஒன்றும் பெரிய இரகசியமல்ல. இதனை கூட்டி கழிக்க தெரியாமல் பிரபாகரன் மேற்கு நாடுகளிடம் மண்டியிட்டது என்றும் சொல்ல முடியாது. புலிகள் இறுதி வரை இந்தியாவுடன் உறவை ஏற்ப்படுத்த முய்த்சிதனர். ஒரு பக்கத்தில் வைகோ, நெடுமாறன் போன்ற கோமர்லிகள் மறு பக்கத்தில் இந்திய அரசுக்கு தாங்கள் இயற்கையான நண்பர்கள் என்று பல முயற்சி செய்தனர்.

    இந்திய முதலாளித்துவம் தனிய ராஜிவின் கொலைக்காக கண்ணிர் விட்டு புலி அழிந்தொழிய தலையட்டவிலை. புலி இருந்த வடிவத்தில் புலியினை தனது தேவைகளுக்காக பாவிக்க முடியாது என்பதை அறிந்திருந்தது.

    பிரபாகரன் தனது வெட்டி ஓடும் வித்தையில் நம்பி இருந்து கோவணத்துடன் முடிவுக்கு வந்தார். ராஜீவ் கொல்லப்பட்டது இந்திய இலங்கை ஒப்பந்தத்தை தமிழ் மக்கள்மேல் திணித்தால் செய்யப்பட்டது என்பதை இந்திய மக்களிடம் கூறி அதரவு தேட முன்வரவில்லை. இது புலிகள் மட்டுமல்ல அணைத்து தேசிய வாதிகளின் வர்க்க நிலைபாட்டின் அடித்தளம்.

    Reply
  • நண்பன்
    நண்பன்

    Anonymous
    அல்காய்தா , தலிபான் போன்ற இயக்கங்கள் உருவாகவும் அமெரிக்காவே காரணம். இறுதியில் அமெரிக்காவே அழிக்கவும் முன் வந்தது. புலிகளுக்கும் அதுவே நடந்தது. அநியாயமாக ஏகப்பட்ட அப்பாவிகளை அந்த நம்பிக்கை சவக்குழி அரசியலுக்குள் புதைத்தது. அது இன்னும் தணியாது, புலத்து இளையோரையும் அழிக்க நாடு கடந்த அரசாக துளிர் விட்டுள்ளது.

    அன்றைய தமிழ் தலைவர்கள் நாட்டில் இருந்த இளைஞரை தூண்டி விட்டனர். இன்றைய புலத்து தலைவர்கள் புலத்து இளைஞரை தூண்டி விடுகின்றனர். பாவம் ஒன்றுமறியாத அப்பாவிகள். அவர்கள் சமாதியை காட்சிப் பொருளாக்கி பலர் வாழ்ந்தனர். வாழப் போகிறார்கள். உலகம் சுற்றிச் சுழல்கிறது. புலிகளும் புலி கடும் போக்காளரும் இனவாதம் பேசிக் கொண்டு அப்படியே நிற்கின்றனர்.

    காற்றின் வீச்சோடு ஓடியவன் ஜெயித்தான். காற்றாக புகுவேன் என்றவன் காற்றோடு அடிபட்டுப் போனான். தமிழன் வேடர் காலத்துக்கு தள்ளப்பட்டது புலிகளால்தான். இன்னமும் தமிழீழம் என்பது திருத்தவே முடியாத வடி கட்டிய முட்டாள்தனம்.

    Reply
  • thurai
    thurai

    ஈழவிடுதலைப்போர், தமிழீழமென்பதெல்லாமோர் காதிற்கினிய வசங்களேயாகும். தமிழர்களிற்கு விடுதலையோ, அன்றி தமிழினத்திற்கு பெருமையையோ தேடித்தரவல்ல.

    தமிழ் அரசியல் வாதிகழும், விடுதலைக்கெனக் கூறி ஆயுதமேந்தியவர்கழும் தங்களைக் காப்பாற்ர இறுதிவரை கைபிடியில் வைத்திருந்த மாயையே தமிழரின் உருமையென்பது.

    யாருக்கு தமிழரில் உருமை வேண்டுமோ அவனின் வாய் இன்னமும் தமிழரினால் கட்டப்பட்டேயுள்ளது. ஈழ்த்தமிழரின் உலகை ஏமாற்ரிய விடுதலை நாடகம் முடிந்துவிட்டது. இனியாவது ஒருவரை ஒருவர் குறை சொல்வதை விட்டு திருந்தி நடப்பதே நல்லது. இந்தியாவை, சீனாவை, அமெரிகாவை குறை கூறுவதும் திருத்த முயல்வதும் இராவணன் மலையைத் தூக்க் முயன்று பட்ட துன்பம் போலேயாகும்.

    துரை

    Reply
  • Kusumbo
    Kusumbo

    /இந்தியா இலங்கைத் தமிழ்மக்களுக்கு எதிராகவே செயற்படும். இந்தியா எப்போதும் தன் நலன்களுக்காகவே இலங்கை இனப்பிரச்சனையை கையாண்டதேயொழிய ஒருபோதும் தமிழ்மக்களின் நலனை கருத்தில் கொள்ளவில்லை/

    குணா உங்களுடைய கருத்து முழு அப்பட்டமான உண்மை. ராஜீவ் கொலை வெறும் சாட்டே. வங்காளம் பாக்கிஸ்தானுடன் இருப்பது இந்தியாவுக்குத் தலையிடியாகவே இருந்தது. பாக்கிஸ்தானைத் துண்டாடி இரு முஸ்லீம் நாடுகளாக்கி பிரித்தாளும் தந்திரத்தையே இந்தியா கையாண்டது. மேலும் வங்காளத்தைப் பிரித்து உதவுவது போல் நடித்து இந்தியா அள்ளிவந்த வளங்களை உங்களுக்குத் தெரியுமா? ஒரு சிறிய றேடியோ நிலையத்தைக் கூட விடவில்லை; பிடுங்கிவந்தார்கள். இந்தியாவின் நீலிக்கண்ணீர் தன்நலத்தில் மட்டுமே.

    அமெரிக்கா சுத்தியது என்றால் மீண்டும் கேபி போய் அமெரிக்கனான உருத்திரகுமாரிடமே விழுந்திருக்கிறார். என்?

    Reply
  • Kumaran
    Kumaran

    மாற்று கருத்து உடையோர் எல்லாரையும் கொலை செய்யச் சொல்லியும் இந்தியாதான் சொன்னதோ

    கள்ளக் கடத்தல் காரர்களையும் கொலைகாரர்களையும் தலைவர்கள் ஆகிவிட்டு சும்மா இந்தியாவை எல்லாத்துக்கும் குறை சொல்லுங்கோ

    Reply
  • மகுடி
    மகுடி

    உதவியவன் கையைக் கடித்தே பழக்கப்பட்ட புலிகள், உலகத்துக்கே பாடம் படிப்பிப்போம் என்று சொன்னதெல்லாம் கொழுப்புத்தானே? கடைசியில அனைவரது உதவியை இழந்தது. இந்தியா புலிகளைத்தான் கூப்பிட்டு கதைச்சவை. அந்தக் கொழுப்பிலதான் எல்லா இயகத்தையும் போட்டுத் தள்ளினவை. புலத்திலயும் தலைக் கணம் தாங்க முடியல்ல. அடுத்தவர்களை தலை தூக்கவே விடயில்லை. எல்லாத்துக்குமான அனுபவிப்புதான் இப்ப?

    Reply
  • thurai
    thurai

    மழைக்குக் செட்டை முழைத்தவுடன் பறக்கத்தொடங்கிய ஈசல் பூச்சி, றோட்டில் இரவில் எரியும் விளக்கில் போய் இருந்து செட்டை இழப்பது வழக்கம். காலையில் ரோட்டில் ஊர்ந்துதான் திரியும். இதே போல் தான் தமது நிலமை அறியாது புலத்துத் தமிழரின் கண்மூடித்தனமான் ஈழவிடுதலைப் போராட்டம் நடந்து முடிந்தது.

    இவர்களைப் பற்றிப் பேசுவதே தமிழர்களிற்கு அவமானம்.

    துரை

    Reply
  • நண்பன்
    நண்பன்

    //தமது நிலமை அறியாது புலத்துத் தமிழரின் கண்மூடித்தனமான் ஈழவிடுதலைப் போராட்டம் நடந்து முடிந்தது. – துரை//
    நிதர்சனமான உண்மை துரை.

    Reply