அவுஸ் திரேலிய சர்வமத குழுவுன் ஏற்பாட்டில் “விடியலிற்கான நம்பிக்கை” எனும் சர்வமத பிரார்த்தனைக்கூட்டம் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.
காலம்: யூலை மாதம் 25ம் திகதி மாலை 2 மணிதொடக்கம்
4 மணிவரை (25.07.2009 Saturday)
இடம்: ST.PATRICKS CATHEDRAL
Cnr of Gipson street and Cathedral Place
MELBOURNE.
(Near the parliament Railway station)
வரலாற்றின் இருண்டகால பகுதியின் ஊடாகப்பயணிக்கும் தமிழ் இனத்தின் ஒற்றுமைக்காகவும்,சுபீட்சத்துக்காகவும் இடம்பெறும் இந்த நிகழ்வில் இந்துசமய மற்றும் கிறிஸ்த்தவ சமய பிரார்த்தனைகள் இடம்பெறவுள்ளன.
இந்த நிகழ்வில் அவுஸ்திரேலிய மதத்தலைவர்களும் அரசியல்பிரமுகர்களும் மற்றும் அரசசார்பற்ற நிறுவன பிரதிநிதிகளும் கலந்துகொள்கின்றனர்.
எனவே அனைத்து தமிழ் உறவுகளையும் இந்த சர்வமத பிரார்த்தனையில் கலந்து கொள்ளும் வண்ணம் ஏற்பாட்டாளர்கள் அழைப்புவிடுக்கின்றனர்.
யூலை மாதம் என்பது ஈழத்தமிழர்களின் வரலாற்றில் ஒரு “துயரமான மாதம்”.எனவே இந்த மாதத்தில் நிகழும் இந்த நிகழ்வானது தமிழ் மக்களின் விடியலுக்கான நம்பிக்கையை துளிர்விடவைக்கும்.
ஆயிரம் ஆயிரம் மனங்களின் உணர்வுகளும் ஆத்மார்த்தமான வேண்டுதல்களும் ஒரே நேரத்தில் ஒன்றாய் குவியும் போது,அதன் ஆன்மீக ரீதியான சக்தி நிச்சயம் பலனைப்பெற்றுத்தரும் என்பது நம்பிக்கை.
– அவுஸ்திரேலிய சர்வமத குழு
BC
அவுஸ்திரேலிய சர்வமத குழுவின் ஏற்பாட்டில் சர்வமத பிரார்த்தனைக் கூட்டம் நடைபெற ஏற்பாடாகியுள்ளது என்ற செய்தியில் சர்வமதம் என்பது இந்து கிறிஸ்துவத்தையே குறிக்கிறது என்பதை அறியமுடிகிறது. அவுஸ்திரேலிய புலம் பெயர்தோருக்கு பிரார்த்தனை என்றால் நல்ல விருப்பம் போல.
chandran.raja
விடிந்தும் விடியலை காணாதவன் சூரியஉதயத்தை உணராதவன் குருடன் மட்டுமல்ல உணர்வே இல்லாதவன் என அர்த்தம் கொள்ளலாம். மிருகத்திற்கு கூட புலன் அறிவுயுள்ளது. இது எதுவோ? பணஆசை கொண்டவர்களுக்கு மட்டுமோ இத்தகையான உணர்வுகள் மறுக்கப்படும்.