ஈழத்தமிழின வரலாற்றில் கோரத்தாண்டவம் ஆடி (1983), இருண்ட பக்கங்களை எழுதி நிற்கும் இருபத்தியாறவது இருண்ட ஜூலை (1989) : புலம்பெயர்ந்து வாழும் TELO உறுப்பினர்கள்

Black_July_Anjaliசுதந்திரம் அடைந்த இலங்கைத்தீவில், சுதந்திரக் காற்றைக்கூட சுவாசிக்க முடியாமல், பெரும்பான்மைவாதம் வேரூன்றி, சிறுபான்மை மக்களின் உரிமைகள் படிப்படியாக பறிக்கப்பட்டு, தமிழினம் ஓரங்கப்பட்டதோடு, ஈழத்தமிழினத்தின் இருப்பையே இல்லாதொழிக்க மாறி மாறி வந்த இலங்கை அரசுகள் எடுத்த முயற்சிகள் ஏராளம் ஏராளம்.

ஈழத்துக்காந்தி தந்தை செல்வா போன்ற உன்னதமான அரசியல் தலைவர்களால் ஈழத்தமிழினத்தின் இருப்பைக் காக்க தொடுக்கப்பட்ட சாத்வீகப் போராட்டங்கள் அனைத்தும் சாகடிக்கப்பட்டபோது அகிம்சை முறைப்போராட்டங்கள் அனைத்தையும் அதிகாரவர்க்கம் ஆயதம் கொண்டு அழித்தொழித்தபோது, இல்லாது ஒழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஈழத்தமிழினத்தின் இருப்பைக் காப்பாற்ற இறுதி முயற்சியாய் கையிலே ஆயுதம் ஏந்த வேண்டிய கட்டாய நிலைக்கு தமிழினம் தள்ளப்பட்டபோது. தலைமை ஏற்றவர்தான் தங்கத்துரை என்ற தங்கண்ணா.

நடராஜா தங்கவேல் என்று அழைக்கப்படும் தங்கத்துரை என்ற தங்கண்ணா தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைலவர் மட்டுமல்ல. அவர் ஒரு தத்துவ ஞானியும் கூட. அமைதியும், அன்பும், அடக்கமும், கொண்ட கொள்கையிலே உறுதியும் அணிகலன்களாக அமையப் பெற்ற இந்த இலட்சியமறவன், வாதத்திறமையும், சிறந்த பேச்சாற்றலும் கொண்டவர். “நாம் வன்முறை மீது காதல் கொண்ட மனநோயாளிகள் அல்லர்.“ என்று நீதிமன்ற விசாரணையின்போது இவர் உதிர்த்த வார்த்தைகள் சரித்திரத்தில் சாகா வரம் பெற்றவை.

 தளபதி குட்டிமணி: செல்வராஜா யோகச்சந்திரன் என்ற குட்டிமணி, தலைவர் தங்கண்ணா கூறும் தத்துவங்களையெல்லாம் களத்திலே காரியமாக்கிக் காட்டிய கட்டளைத்தளபதி. கயமைத்தனங்களை கட்டவிழ்த்து விட்ட சிங்கள இராணுவத்தினருக்கு சிம்மசொப்பனமாய் திகழ்ந்தவன். களத்திலே இவன் இறங்கிவிட்டால், இவன் கைகளில் வீரம் விளையாடும். புடைத்து நிற்கும் இவன் தோள்களிலே வெற்றிகள் புன்னகை பூக்கும். இவன் வெறுங்கையோடு வீதியில் வந்தபோது, ஆயதங்களோடு நேருக்கு நேர் வந்த ஆயுதப்படைகள் ஆயுதங்களைப் போட்டுவிட்டு, அலறியடித்து ஓடிய  சம்பவங்கள் பல உண்டு.

இவன் தன் தலைவன் காட்டிய நெறி தவறியதில்லை. வைத்த குறியும் தப்பியதில்லை. சிங்கள நீதிமன்றம் மரணதண்டனை விதித்தபோதும் இவன் நீதிமன்றத்தில் “என்னைத் தூக்கிலிட்ட பின் என் கண்களை கண்ணில்லாத ஒரு தமிழனுக்கு கொடுங்கள். அதன் மூலம் மலரப்போகும் தமிழ்ஈழத்தை நான் பார்க்கவேண்டும்.“ என்றான். இதன் காரணத்தாலேயே சிறைச்சாலையில் வைத்தே சிங்கள வெறியரின் முழமையான இரையாகி, உயிரோடிருக்கும் போதே இவன் கண்கள் தோண்டப்பட்டு வீரஉரை நிகழ்த்திய இவன் நாவும் அறுக்கப்பட்டது. ஏ! அஞ்சா நெஞ்சமே! உன் மறுபெயர் தான் குட்டிமணியோ?

முன்னணிப் போராளிகள்:
ஜெகன் என்கின்ற ஜெகநாதன் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் இளைய மகன், தளபதி குட்டிமணியை விட்டு இணைபிரியாத் தோழன். இயந்திரத்துப்பாக்கியும் கையுமாக இந்த இளம்சிங்கம் கண்ட களங்கள் பல. வயதிலே சின்னவன்; வேட்டுக்களை குறி வைப்பதில் மன்னவன். இராணுவத்தின் பிடியிலிருந்து பல தடவை தப்பியவன். அழகிய புன்முறுவலும், அடங்காத புரட்சியுணர்வும் கொண்டவன்.

சிவசுப்பிரமணியம் என்கின்ற தேவன் தலைவர் தங்கண்ணாவின் மெய்ப்பாதுகாவலர். பட்டத்து யானை போன்று நெடிய, கம்பீரமான தோற்றம் ஜெகனைப் போலவே இராணுவத்தின் பிடியிலிருந்து பலமுறை தப்பி சாகசம் புரிந்தவர். பொலிசாரின் துப்பாக்கிக் குண்டுகள் வயிற்றைக் கிழித்தபோதும், சாரத்தைக் கிழித்து, வயிற்றில் கட்டிக் கொண்டே கடலை நீந்தித் தாண்டித் தப்பிய மனோதைரியம் கொண்டவர்.

இப்படி தொடர்ந்தது இளைஞர்படை. தொகை தொகையாய் தலைவர் பின்னால், சுதந்திரக் காற்றை சுவாசிக்கத் துடித்து நின்ற மறத்தமிழ் வீரர்களின் மரணத்துக்கு அஞ்சாநிலை கண்டு, அகிலமே முதல் முறையாய் அண்ணாந்து பார்த்தது. அடக்கி ஆண்டவர்களோ அச்சத்தால் மிரண்டனர். தலைகுனிந்த நம்மினமோ தலை நிமிர்ந்து நின்றது. அடலேறுகளின் ஆக்கிரோசத்தில் அகமகிழ்ந்த  அன்னை தமிழும் அரியணையில் ஏற ஆயத்தமானாள். தமிழினத்தின் விடிவுக்காய் தமிழர்படை தொடர்ந்த வேளை துரோகக்கரம் ஒன்று பின்னால் தொடர்ந்ததை யார் அறிவார். பதவி வெறியால் பாவி அவன் சதியாய் பாதியிலே (1981) கைதானார்கள் எங்கள் பைந்தமிழ் வீரர்கள்.

காட்டிக் கொடுத்தவர்களே கடைசிவரை நீங்கள் சிறை மீண்டுவிடக்கூடாது என்பதற்காக காங்கேசன்துறை சீமேந்துக் கூட்டுத்தாபனத்தின் சிங்கள ஊழியரோடு பேரம் பேசி சிறையில் வைத்தே உங்களை தீர்த்துக்கட்ட முயற்சி எடுத்தார்கள். கைதான உங்களைக் காக்கவென்று புறப்பட்டோம். ஆத்திரமுற்றிருந்த அதிகாரவர்க்கம் கோர்த்தது கை இந்தக் கோடாலிக்காம்புகளோடு. சாய்த்தது சிறையில் வைத்தே எங்கள் சரித்திர நாயகர்களை. “இலட்சியத்தை கை விடுங்கள். இன்னொரு நாட்டில் இல்லறத்தோடு இனிதே வாழ வசதிகளோடு வாய்ப்புக்கள் தரப்படும். நீங்கள் மகிழ்ச்சியாக வாழலாம்.“ என்று பேரம் பேசியது ஜெயவர்த்தனா அரசு. அன்று மாத்திரம் நீங்கள் ஆம் என்று சொல்லியிருந்தால், இன்றும் இருந்திருப்பீர்கள் இன்னொரு நாட்டில் வளமாக. ஈழத்தமிழினத்திற்காக நீங்கள் ஏற்றுக்கொண்ட துன்பங்கள் எண்ணில் அடங்காதவை; கல்நெஞ்சையும் கரைக்கக் கூடியவை.

உங்கள் உயிரிலும் மேலான இலட்சியத்தைக் கைவிட மறுத்ததினால், பூட்டிய சிறையினில் மாட்டிய விலங்கோடு தீட்டிய ஆயுதத்தினால் காடையரின் துணையோடு உங்கள் கண்கள் தோண்டப்பட்டு, கால்களில் போட்டு மிதிக்கப்பட்டன. கழுத்து அறுக்கப்பட்டு, உடல்கள் சிதைக்கப்பட்டன. உங்கள் உயிர்கள் பிரியும் முன்பே அங்கங்கள் அறுக்கப்பட்டன. இப்படி ஒவ்வொரு போராளிகளின் உறுப்புக்களும் தனித்தனியாக பிரிக்கப்பட்டு புத்தருக்கு காணிக்கையாக்கப்பட்டன.

தென்னிலங்கை வீதிகளில் தமிழர்களின் அவலக்குரல்கள், தெருவெங்கும் தமிழர் பிணங்கள். தமிழரின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன. கட்டிடங்கள் தீயிடப்பட்டன. இப்படி மனிதநாகரிகம் வெட்கித் தலைகுனிந்த நிலைமையில் நடத்தப்ட்ட கோழைத்தனமான தாக்குதலில் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கத் துடித்துநின்ற இளைஞர்கள் பின்தொடர ஆயதப்போராட்டத்தை ஆரம்பித்து வைத்த தமிழ்ஈழத் தேசபிதா திரு. தங்கத்துரை, தளபதி குட்டிமணி உட்பட புதுயுகத்தின் அத்தியாயங்களை எழுதத் துடித்துநின்ற தோழர்கள் ஜெகன், தேவன், நடேசுதாஸ், சிவபாதம், குமார், ஸ்ரீகுமார், மரியாம்பிள்ளை, குமரகுலசிங்கம் போன்ற முன்னணிப்போராளிகள் உட்பட ஐம்பத்திமூன்று உயிர்கள் வெலிக்கடைச்சிறையில் வெட்டிக் குதறப்பட, நலிவுற்ற நம்மினமோ இன்று நடுத்தெருவில், மரணித்துவிட்ட எங்கள் விடியல்களே! எங்கள் இனத்தின் இன்றைய இன்னல்கள் தீர்க்க இன்னும் ஒருமுறை எழுந்துவர மாட்டிரோ? உங்கள் அனைவருக்கும் எமது ஆத்மாந்தமான கண்ணீர் அஞ்சலிகள் காணிக்கையாகட்டும்.

புலம்பெயர்ந்து வாழும்
தமிழ் ஈழ விடுதலை இயக்க உறுப்பினர்கள்
TELO

Show More
Leave a Reply to people Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

 

39 Comments

 • thambi
  thambi

  உண்மைக்கு வெளிச்சமோ மேடையோ தேவையில்லை அதுதானாகவே வெளிவரும் – நீதி மன்றில் தோழர் குட்டிமணி

  நீர்வேலி வங்கிக் கொள்ளையில் ரெலோ ஈடுபட்டபோது ரெலோவின் உறுப்பினராக இருந்த முன்னாள் புலிகளின் தலைவர் பிரபாகரனும் புலிகளின் இன்றய தலைவர் செல்வராசா பத்மநாதன் என்றழைக்கப்படும் கேபி யும் ஈடுபட்டிருந்தனர் இந்தக் கொள்ளையில் ஈடுபட்ட பணத்தை பாகம் பாகமாக பிரித்து வைத்திருக்க புலிகள் பத்மநாதனும் பிரபாகரனும் ஒழுங்குகள் செய்திருந்தனர்.

  குட்டிமணியும் தங்கத்துரையும் இந்தப்பணத்துடன் இந்தியா செல்ல இருந்த விடயம் தெரிந்தவர்களில் பிரபாகரன் முக்கிமானவர். இவரின் காட்டிக்கொடுப்பினாலேயே தாம் பொலீசாரினால் கைது செய்யப்பட்டதாக குட்டிமணியும் தங்கத்துரையும் சிறையில் இருக்கும்போது சட்டத்தரணி கரிகாலன் சத்தியேந்திராவிடம் கூறியுள்ளார்கள்

  இவர்களில் ஒருவர் இந்த விடயத்தை இந்திய பத்திரிகை (ஆனந்த விகடன் அல்லது தேவி)ஒன்றில் தமது தொடர் கட்டரையில் எழுதியும் உள்ளனர்

  இந்த விடயம் பிரபாகரனுக்கு தெரியவந்ததும் இந்த தலைவர்கள் வெளியே வந்தால் தனக்கு ஆபத்து என்பதை பிரபாகரன் தெட்டத் தெளிவாக அறிந்திருந்தார். (பின்னர் பிரபாகரன் ரெலோவிற்கு திரும்ப வந்து சேர்ந்ததின் காரணம் பிரபாகரனக்கும் உமாமகேஸ்வரனக்கும் இருந்த மனக் கசப்பே).

  எப்படியும் குட்டிமணி தங்கத்துரை குழுவினரை அழிப்பதில் பிரபாகரன் தீவிரமாக செயற்ப்பட்டுவந்தவர் இதில் ஒன்றுதான் சீமெந்து தொழிற்சாலையில் உள்ள சில சிங்கள ஊழியர்களிடம் பேரம் பேசியது

  இந்த காலங்களின் பின்னர் 1983 மார்ச் மாதம் ரெலோ தனது இராணுவத்தினரை இலங்கையில் இறக்கி வைத்திருந்து வெலிக்கடைச் சிறைச்சாலையை தாக்கி அங்கிருந்து தமது தலைவர்களை மீட்கும் முயற்ச்சியில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர்.

  இதை அறிந்த பிரபாகரன் இந்த திட்டத்தை குழப்ப மிக மும்முரமாக முயற்ச்சியில் ஈடுபட்டிருந்தபோது இந்தக் காலகட்டத்தில் ரெலோவில் யாழ்ப்பாணத்தில் தீவிரமாக இயங்கி வந்த மீசோராம் மற்றும் சுதன்(லண்டனில் உள்ளார்) இந்த விடயம் காரணமாக புலிகளிடம் வேறு எந்த தாக்குதல்களும் செய்ய வேண்டாம் நாட்டை குழப்ப வேண்டாம் என்று கேட்டிருந்தனர் இப்படியாக இவர்கள் கண்ணன் (வெளிநாட்டில் உள்ளார்) என்ற புலி உறுப்பினரிடமே இந்த விடயத்தை பிரபாகரனிடம் சொல்லுமாறு கலட்டி அம்மன் கோவிலருகே உள்ள ஒரு வீட்டின் தட்டி வேலியில் பிடித்துக்கொண்டு சயிக்கிளில் நின்றவாரோ கதைத்தனர்.

  இதை அறிந்த பிரபாகரன் தின்னவேலி இராணுவத் தாக்குதலை தொடுத்தார்

  (செல்லக்கிளியின் அண்ணன் செட்டி தனபாலசிங்கத்துடன் சேர்ந்து புதிய புலிகள் அமைப்பை ஆரம்பித்து அவரிடமிருந்து பிரபாகரன் பிரிந்து வந்து புலிகள் இயக்கத்தை உமாமகேஸ்வரனுடன் சேர்ந்து ஆரம்பித்திருந்து பின்னர் உமா மகேஸ்வரனுடன் ஏற்ப்பட்ட தகராறு காரமாகவே மீண்டும் ரெலோவிற்கு வந்து நீர்வேலி வங்கிக் கொள்ளையில் பிரபாகரன் கேபி போன்றோர் சேர்ந்து செயற்ப்பட்டனர்.)

  குட்டிமணி தங்கத்துரை சிறையில் கொல்லப்பட்டனர். சிறை உடைப்புக்கு திட்டம் தீட்டப்பட்டிருந்தது அரச உளவாளிகளுக்கும் தெரியப்படுத்தியது தொடர்பாகவும் பலத்த சந்தேகங்கள் எழுந்துள்ளது இதனாலேயே தமிழ் அரசியல் கைதிகள் முழுப்பேரும் சிறையில் கொல்லப்பட யுஎன்பி அரசு திட்டம் கொடுத்திருந்தது என்பதும் உண்மை.

  இந்த உண்மைக்கு ஆதாரம் இன்றும் புலம்பெயர் நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் பல முன்னாள் ரெலோ போராளிகளும் தமிழக முதல்வர் கருணாநிதியுமே.

  Reply
 • vanthiyadevan
  vanthiyadevan

  அனைவருக்கும் என் ஆத்மாந்தமான கண்ணீர் அஞ்சலிகள் .
  உங்கள் உயிரிலும் மேலான இலட்சியத்தை எங்கள் இனத்தின் இன்றைய இன்னல்கள் தீர்க்க தமிழினத்தின் விடிவுக்காய் தமிழர்படை தொடரும்

  Reply
 • mano
  mano

  அன்று (1981) காட்டிக்கொடுப்பில் ஆரம்பித்து இன்று நந்திக்கடலில் மிதக்கும்வரை தமிழினத்திற்கு செய்த துரோகங்கள்> அதனைக் கொண்டாடிய எம் தமிழினம்> இன்றுவரை அதற்கு தூபம் காட்டும் சில ஊடகங்கள்> எம்மைத் தலைகுனிய வைக்கிறது. அதிகார வெறிகொண்டு அழிவுப் போராட்டத்திற்கு ஆதரவளித்தவர்கள் அப்பாவி மக்களை முள்ளு வேலிக்குள் அடைத்துவிட்டு ‘தமிழ் ஈழம்’ என்று> தமிழ் மக்களின் புண்ணிற்கு புளி பூசுகிறார்கள்.

  அன்று பொலிசார் வலைபோட்டுத் தேடிக் கொண்டிருந்தபோது குட்டிமணி> ஜெகன் போன்றவர்கள் மக்கள் மத்தியில் தான் இருந்தார்கள். அவர்கள் மக்களைத் தான் தமது பாதுகாப்பிற்கு நம்பினார்கள். ஆனால் தம்முடன் இருந்த துரோகி பற்றி அவர்கள் எச்சரிக்கையாக இருக்கவில்லை.

  ஒரு தடவை ஜெகனை பொலிஸ் தொண்டமானாறு வீதி ஒன்றில் துரத்தி வந்தது. இடை வழியில் ஜெகன் சேட்டை மாற்றிவிட்டு தப்பிவிட்டார். அதற்கு உதவியது ஒரு சாதாரண குடும்பம். குட்டிமணியின் நேர்மையான வீரம்> பிரபாகரனின் நயவஞ்சகத்திற்கு எப்போதும் இடைஞ்சலாக இருந்தது. பிரபாகரன் முதன் முதலாக சகோதரப்படுகொலையை மைக்கலைக் கொலை செய்து ஆரம்பித்தபோது குட்டிமணி பிரபாகரன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க முற்பட்டார். ஆனால் தங்கத்துரை தண்டனையைக் குறைத்துவிட்டார்.

  Reply
 • பார்த்திபன்
  பார்த்திபன்

  1983 கலவரம் சிங்கள அரசினாலும் சிஙகளக் காடைகளாலும் மட்டும் திட்டமிடப்பட்டு நடத்தப்படவில்லை. பிரபாகரன் போன்ற துரோகிகளின் பேராசையினால் பிள்ளையார்சுழி போடப்பட்டுத் தொடக்கப்பட்டதென்பது முற்றிலும் உண்மை. அன்று கொள்ளையில் பிரபாகரனோடு தோள் கொடுத்த கே.பி, இன்றும் புலிகளின் சொத்தைக் கொள்ளையடிக்க தமிழ் மக்களையே பலி கொடுக்கத் துணியும் ஒரு துரோகி தான். இந்த துரோகிக்குக் தோள் கொடுக்க, இன்னும் கொஞ்சத் துரோகிகள் புலத்தில்.

  Reply
 • chandran.raja
  chandran.raja

  ரொலோவின் மூத்ததவைர்களின் கொலைகள் அரசியல்வாதிகளின் துணையுடன் சிங்கள காடையர்களால் நடத்தி முடிக்கப் பட்டது. மூன்று ஆண்டுகள் கழித்து ரொலோவின் அடுத்த தலைவர் போராளிகளின் கொலைகள் “தமிழ் காடையர்” களால் நடத்தி முடிக்கப் பட்டது. புலிகளின் அரைவேக்காட்டு அறிஞர் அன்ரன் பாலசிங்கம் இந்தியாவில்லிருந்த போது அவரை அணுகி இந்த தாக்குதலை நிறுத்தும்படி தோழமை இயக்கங்கள் கேட்கபட்ட பொழுது இந்த அறிஞர் சொன்ன பதில் என்ன தெரியுமா? “இராணுவ நடவடிக்கை முடிந்த பின்தான் மற்றதைப் பற்றிய கதைகள்”. செயலில் முட்டாள்ளாகவும் பெயரில் அறிஞர் ஆகவும் இருந்த இந்த சின்னமனுசன் சிறு புத்திசாலித்தனமாக நடந்திருந்தால் கூட இன்று கோவணத்துடனும் கோடாலிக் கொத்துடனும் தம்பியை பறிகொடுத்திருக் மாட்டார்.

  புலிகள் தோற்று போனது மகிந்த ராஜபக்சாவாலும் இராணுவத்தாலும் என்பதை கற்பனை பண்னாதீர்கள். மக்களை அலட்ஷியம் பண்ணியதும் மாற்று இயக்கங்களை பகைத்துக்கொண்ட பெரியஉண்மையை மறந்து விடாதீர்கள். அதற்காக யாரும் தவறாக புரிந்துகொண்டு ஆயுதத்தை நினைத்துப் போடாதீர்கள். அது காலம் கடந்ததொன்று. இலங்கை பொறுத்தவரை வரலாற்று பதிவுக்கு மட்டுமே.

  Reply
 • நண்பன்
  நண்பன்

  பிரபாகரனுக்கு கிடைத்த தண்டனை சரியானது.

  Reply
 • K.Kanthan
  K.Kanthan

  தொடர்ந்து கவனித்து வருகின்றேன் டெலோவில் இப்படி எழுதக்கூடிய திறமைசாலிகள் இருந்திருக்கிறார்கள் என்பது ஆச்சரியமளிக்கிறது

  Reply
 • Veera Kathi Pillai Udayar
  Veera Kathi Pillai Udayar

  LTTE To Regroup Under Padmanathan

  45-year-old Padmanathan is considered to be LTTE’s logistic mastermind in the assassination of former Prime Minister Rajiv Gandhi and is a fugitive wanted by the Interpol, Sri Lanka and India in several cases.

  He is LTTE’s chief overseas procurer of arms, ammunition and electronic equipment and is accused of gun-running and money laundering. He is supposed to have helped raise finances abroad in the initial years of the LTTE and set up its many offices in foreign countries. More importantly, he is the brain behind the clandestine LTTE shipping network that became the Tigers’ virtual lifeline.

  The LTTE is banned in over 30 countries, including the U.S., U.K. and India.

  How KP brought death to his leader

  Even if he is recognized as the leader of the LTTE by the Tamil Diaspora, the ex-Tiger cadres who fought along with Prabhakaran till the last moment of the battle and the Tamils who lived till the last moment of the LTTE’s existence in the No Fire Zone expecting a silver line in dark clouds, will undoubtedly reject his leadership as they now aware that it was the KP who put their lives in jeopardy even at the last moment of the battle.

  Tiger Leader Velupillai Parabhakaran and other Tamil leaders were not aware of the fact that they were clinging onto a dead rope given to them by KP during the last phases of the battle.

  The first strong hope was that there would be an European Union involvement in the Sri Lankan conflict to salvage them from the humiliating defeat they were heading for. The Tiger leader also had a strong belief that a ship would arrive to evacuate them even at the last moment. Lastly he also had the hope that there would be a Government change in India following the Indian general election that was announced by that time, resulting in the arrival of an Indian Peace Keeping Force to Sri Lanka to bail them out.

  According to revelations by the Tiger cadres, although Prabhakaran had his chances to flee the country at the last stages of the battles, did not leave the country keeping faith in the words of KP.

  When the entire world was in suspense about the death of Tiger leader Velupillai Prabhakaran, it was KP who had given oxygen to the troops to launch their search operation with new vigor.

  In the final analysis it was the KP who brought death to his leader through his narrow minded and inefficient accomplishment of duties as the international negotiator and had virtually staged a coup against the Tiger leadership whilst enjoying an extravagant life with Tamil Diaspora money.

  There is no doubt that Tiger activists like KP are giving those signals to the Tamil community to obtain their support of the Tamil people once they are peacefully resettled in their villages.

  Reply
 • chandran.raja
  chandran.raja

  துப்பாக்கிய ஏந்திய புலிப்பொம்மைகளால் ரெலோ இயக்கம் முற்றுமுழுதாக அழிக்கப்பட்டு இருபத்திமூன்று ஆண்டுகாலம் ஆகிறது. எரிகிற நினைவோடு இத்தனை ஆண்டு காலம் வாழ்தது என்பது புலம்பெயர்ந்த போராளிக்குழுக்கு மகத்தானது. தங்கண்னா குட்டிமணி ஜகன் போராளிகள் மரணத்தின் வேதனைகளை தாங்கி அதை வலிமையான ஆயுதமாக்கி தன் போராளிகளுக்கும் மனவலிமை ஏற்றி முன் நடந்த சிறீ சபாரத்தினத்தினமும் வீழ்தப்பட்ட போது நாமும் இன்னும் உயிருவாழ்வது தான்இன்னும் ஆச்சரியமானது.

  புலம்பெயர்ந்த ரெலோ போராளிகளே சுகந்திரவும் சுகந்திரவேட்கையும் யாராலும் நீர் ஊற்றி அணைதிடமுடியாதது. காலம் மாறும் போது நாமும் மாறித்தான் தீரவேண்டும். வாழ்வே அரசியலாக கொண்டவர்கள் எமது மண்ணில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். விரல்விட்டு எண்ணக்கூடிய மண்ணின் மைந்தர்கள்- அறிவாளிகளில் அபுயூசுப்பும் ஒருவர் அவர் ஒருவரால் மட்டுமே இழந்த எமது தலைவர்களின் நினைவையும் கனவையும் மீட்டெடுக்க முடியும். உங்கள் ஆதரவை அவர்களுக்கே வழங்கிடுவீர் ரெலோவின் பெயரால்.

  Reply
 • Kusumbo
  Kusumbo

  தம்பியிடம் ஒரு கேள்வி! தின்னவேலி வங்கிக் கொள்ளை முதல் நடந்ததா? அன்றேல் உமா பிரபா பிரிவு முதல் நடந்ததா? இதில் என்குச் சந்தேகம் உள்ளது.

  Reply
 • Kusumbo
  Kusumbo

  நண்பா! இது பிரபாகரனுக்குக் கிடைத்த சரியான தண்டனை அல்ல. என் கருத்துப்படி இது போதாது. மக்களால் அடிபட்டோ இல்லது கல்லடிபட்டோ சித்திரவதைப்பட்டு செத்திருக்க வேண்டும். உங்களுக்குத் தெரியுமா எதிரியை நம்பித்தான் பிரபாகரன் இந்த மாவியாப் போரை நடத்தினார். இது ரெலோவில் ஆரம்பித்தது தான். காந்தன்! ஏன் ரெலோவில் இருப்பவர்கள் இப்படி எழுதினால் என்னவாம்.

  Reply
 • kamal
  kamal

  இன்றுள்ள கேபி கூட தங்கத்துரை குட்டிமணியை காட்டிக்கொடுத்ததிற்க மன்னிப்பு கோர வேண்டும் அதைவிட சிறீசபா. நாபா சுந்தரம் போன்றோரது கொகைகளுக்கும் கேபி மன்னிப்பு கோர வேண்டும் காரணம் இப்போதும் அந்த அமைப்பு பொறுப்புடன் உள்ளதே- அதே கொடி- இயக்கப்பெயர் பாவிக்கப்படுவதால் கே பி மன்னிப்பு கேட்க வேண்டும். அல்லது இயக்கப் பெயர் கொடி மாற்றப்பட வேண்டும்.

  பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம்.

  Reply
 • kamal
  kamal

  தங்கத்தரையின் நீதி மன்ற உரையினை யாராவது இங்கே பதிவிடலாமே.

  Reply
 • indiran.raja
  indiran.raja

  உங்கள் ஆதரவு அபுயூசுப்பிற்கு இல்லையா? மற்றவர்களை கொடுக்கச் சொல்கிறீர்கள் சந்திரன் ராஜா!

  Reply
 • people
  people

  புலம் பெயர்ந்து வாழும் ரெலோ உறுப்பினர்களின் பெயரால் இந்த கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் இதில் எழுதப்பட்டுள்ள விடயங்களுடன் எத்தனை ரெலோ உறுப்பினர்கள் ஒத்துப்போவார்கள் என்று தெரியவில்லை. குட்டிமணி தங்கண்ணா போன்றவர்கள் ஆரம்பகால போராளிகள். அந்தவகையில் அவர்கள் மதிக்கப்படவேண்டியவர்களே. ஆனால் புலி ஆதரவாளர்களால் பிரபாகரன் எப்படி “ஆகா ஓகோ” என்று புகழப்படுவதை ஏற்கமுடியாதோ அதேபோல் இந்த கட்டுரையில் ரெலோ தலைவர்களை புகழப்படுவதையும் ஏற்கமுடியாது .உதாரணத்திற்கு தங்கண்ணாவை மாபெரும் தத்துவஞானி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அது உண்மையானால் அவர் உதிர்த்த ஒரு தத்துவத்தை இந்த கட்டுரை எழுதியவரால் சுட்டிக்காட்டமுடியாமல் இருப்பது ஏன்?மேலும் நீதிமன்றத்தில் இந்த தலைவரால் படிக்கப்பட்ட வாசகங்கள்கூட இவர்களால் சொந்தமாக தயாரிக்கப்பட்டது அல்ல என்பதும் ஒரு வழக்கறிஞர் எழுதிக்கொடுத்து இவர்களால் வாசிக்கப்பட்டது என்பதும் பல தமிழர்களுக்கு அன்று தெரிந்தே இருந்தது. இப்பொழுது இந்த கட்டுரையை படிப்பவர்கள் “எதோ ரெலோ இயக்கம் மிகச்சிறந்த இயக்கம் என்பது போலவும் அநியாயமாக அவர்களை புலிகள் அழித்துவிட்டனர் “என்பதுபோல உணரக்கூடும். ஆனால் அது உண்மை அல்ல என்பதை அந்தகால சம்பவங்களை மறக்காதவர்களால் அறுதியிட்டு கூறமுடியும். குட்டிமணி தங்கத்துரை பற்றி பல சம்பவங்களை இங்கு சுட்டிக்காட்டமுடியும். ஆனால் இறந்தவர்கள் பற்றி விமர்சிப்பது அழகல்ல என்பதால் தவிர்க்கிறேன். ஆனால் இந்த புலம்பெயர் ரெலோவினர் தொடர்ந்தும் அடம்பிடிப்பார்கள் எனில் பகிரங்க விமர்சனத்திற்கு நாம் தயாராகவே இருக்கிறோம்.

  (1)இந்திய உளவுப்படையின் பேச்சை நம்பி பொங்கலுக்கு தமிழீழம் மலரும் என்றும் இந்தியா வந்து அதனை பெற்றுத்தரும் என்று முட்டாள்தனமாக மக்களுக்கு கூறியமை
  (2)இயக்கத்திற்குள் தாஸ் போன்ற பல போராளிகளை படுகொலை செய்தமை
  (3)இந்த படுகொலைகள் குறித்து நீதி கேட்டு ஊர்வலம் வந்த வடமராட்சி மக்களை சுட்டுக்கொன்றமை.
  (4)என்.எல.எவ்.ரி இயக்க போராளிகளை சுட்டுக்கொன்றமை.மேலும் பல சிறிய இயக்கங்களை அழித்தமை.
  (5)மண்டானில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது தாக்குதல் நடத்தியமை.
  (6)தம்பாபிள்ளை மகேஸ்வரனின் இயக்கப்பணம் ஒன்ரரைக்கோடி ருபாவை பறித்தமை.
  (7)த.வி.கூ உறுப்பினர்களான தர்மலிங்கம் ஆலாலசுந்தரம் போன்றோரை இந்திய உளவுப்படையின் வேண்டுகோளுக்கு இனங்க படுகொலை செய்தமை

  இவ்வாறு பல விடயங்களை சுட்டிக்காட்டமுடியும். புலிகள் போன்று ரொலோ இயக்கமும் பல தவறுகளை விட்டுள்ளது. எனவே அந்த நிலையில் இருந்து தவறுகளை ஏற்றுக்கொண்டு சுயவிமர்சனம் செய்வதே இந்த முன்னால் ரெலோபேராளிகளுக்கு அழகாகும். அதுவே ஆக்கபூர்வமாக இருக்கும். அதைவிடுத்து புலி ஆதரவாளர் போன்று தயவுசெய்து தவறுகளுக்கு தங்கமுலாம் பூச முற்படாதீர்கள்.

  Reply
 • thambi
  thambi

  நண்பர் குசும்போ
  தின்னவேலி என்று எழுதப்படவில்லை அது நீர்வேலி என்பதே சரியானது

  எமது போராட்டத்தில் முக்கியமாக பேசப்படும் புலிகள் உமா பிரிவு பிரபா பிரிவு பிரபாகரன் உமா மனக் கசப்புக்கள் எல்லாமே இந்த நீர்வேலி வங்கிக் கொள்ளைக்கும் தங்கத்தரை – குட்டிமணி கைது செய்யப்பட்ட பின்னரே தான். இந்தக்காலத்தில் இந்த சம்பவங்களில் ஈடுபட்டவர்களில் ரெலோ செல்வம் கேபியும் உள்ளனர். இந்த ஈழப்போராட்டத்தின் முக்கிய குரோத நிகழ்வுகளக்கான காரணங்கள் எல்லாம் 1981 தொடக்கம் 1983 ஆடி காலப்பகுதியிலேயே கருக்கட்டியது.

  ஒபரெய் தேவன் ரெலோவை விட்டுவெளியேறியதும் பிரபாகரன் அவரை கொல்ல திட்டமிட்டுள்ளான் என்று ரெலோ சுதன் (லண்டனில் உள்ளார்) ஒபரேய் தேவனுக்கு சொன்னபோது (ரெலோவை விட்டு வெளியேறினாலும் ரெலோவுடன் தொடர்பில் இருந்தவர் சிறீசபாவுடன் எப்பவுமே பேசும் தொடர்புடன் இருந்தவர்)தன்னை தம்பி(பிரபாகரன்)தொடமாட்டான் என்று ஒபரேய் தேவன் கூறினார் பின்னர் சுடப்பட்டார்.

  ஒபரேய் தேவனை சுடுவதற்கு ஒரே ஒரு காரணம் பிரபாகரன் ரெலோவில் இருந்தபோது உனக்கு புத்தியில்லை அரசியல் என்றால் என்ன என்று தெரியாது என்று பேசிய ஒரே காரணத்திற்காக. இன்று அதுவும் பிரபாகரனுக்கு அரசியலுக்கும் வெகு தூரம் என்பது உறுதியாயிற்று.

  இந்த நீர்வேலி வங்கிக் கொள்ளை காலத்தில் ஒபரேய் தேவனும் ரெலோவில் இருந்தவர் இந்த சம்பவங்களுடன் தொடர்பில் இருந்தவர்.

  தங்கத்தரை – குட்டிமணி கைது செய்யப்படாமல் இருந்திருந்தால் நிலைமைகள் வேறாகவே இருந்திருக்கும்.

  நண்பர் குசும்போ இந்த ஒபரேய் தேவனின் கொலையை சுந்தரத்தின் கொலையுடனும் ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.

  பின்னர் மனோ மாஸ்டரின் கொலையுடனும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும் இவரும் ரெலோவை விட்டு வெளியேறிய உடனேயே கொல்லப்பட்டார்.

  கொலைகளின் நாயகன் பிரபாகரனே! மக்களின் தலைவர்களை அழித்தவரலாறு! தொகையான மக்களை அழித்த வரலாறும் பிரபாகரனுக்கே! பேராடிய மக்களின் முதுகில் சுட்டுக்கொன்ற வரலாறும் பிரபாகரனுக்கே! மக்களின் ஜக்கியத்திற்கு ஆப்பு வைத்து மக்களுக்கான எந்தவித அரசியல்த் தீர்வையம் ஏற்படாமல் யாரோ ஒரு ஏகாதிபத்தியத்திற்கு துணைபோனது போல் ஒரு இனத்தை காட்டிக்கொடுத்த வரலாறும் பிரபாகரனுக்கே!

  பிரபாகரன் இறந்தாலும் அவரது ஈனச்செயல்கள் இனத்தை அழித்துக் கொண்டிருக்கிறது.

  Reply
 • tamilan
  tamilan

  குட்டிமணி தங்கத்துரை போன்றவர்களை பிரபாகரனே காட்டிக்கொடுத்ததாக எழுதப்பட்டுள்ளது.காலம் காலமாக இவ்வாறு சிலர் பேசிக்கொண்டாலும் இதற்கு ஆதாரமாக அவர்களால் இதுவரை எதனையும் முன்வைக்கவில்லை.உண்மையில் இவர்களை கைதுசெய்தது கடத்தல்காரரை கைது செய்யும் பிரிவினரே.இவர்கள் கைதுசெய்யப்பட்டபோது யாரோ கடத்தல்காரர்களை கைது செய்திருப்பதாகவே அவர்கள் நினைத்தனர்.அவ்வாறு நினைத்தே இவர்கள் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.அங்குவைத்துதான் இவர்கள் அடையாளம் காணப்பட்டனர்.அதன்பின்பே இவர்களுக்கு காவல் அதிகரிக்கப்பட்டு ஆனையிறவு முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.தகவல் சொல்லப்பட்டு பிடிக்கப்பட்டிருந்தால் அதிக பொலிசார் சென்று பிடித்திருப்பார்கள்.மேலும் உடனடியாக பலாலி முகாமுக்கோ அல்லது அனையிறவு முகாமுக்கோ கொண்டு செல்லப்பட்டிருப்பார்கள்.ஆனால் அவ்வாறு நடக்கவில்லை என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மையாகும்.எனவே பிரபாகரன்தான் சொல்லி பிடிபட்டனர் என்று கூறுவோர் அதற்குரிய ஆதாரங்களை முன்வைக்கவேண்டியுள்ளனர்.

  மேலும் இந்த ரொலோ தலைவர்களை சிறையுடைத்து காப்பாற்ற இருப்பதால் அதுவரை தாக்குதல் செய்ய வேண்டாம் என பிரபாகரனிடம் கேட்டதாகவும் ஆனால் பிரபாகரன் வேண்டுமென்றே திருநெல்வேலி தாக்குதல் செய்து குழப்பியடித்துவிட்டதாகவும் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.இதுவும் காலம் காலமாக சிலரால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டாகும்.புளொட் இயக்கம் பல தாக்குதல்களை செய்து வேகமாக வளர்ந்து கொண்டிருந்தது.எனவே ஒரு சிறந்த தாக்குதலை நடத்தி தன்னை நிருபிக்க வேண்டிய நிர்ப்பந்தம் புலிகளுக்கு அப்போது இருந்தது.இந்த அடிப்படையில் அவர்கள் முதலில் காரைநகர் கடற்படையினருக்கு கன்னிவெடி வைத்தனர்.ஆனால் அது வெற்றியளிக்கவில்லை.அதன்பின்பே திருநெல்வேலியில் இராணுவத்திற்கு கண்ணிவெடி வைத்தனர்.இந்த காலகட்டங்களில் புலிகள் மட்டுமல்ல புளொட் ரெலா என பலரும் தாக்குதல்களில் ஈடுபட்டனர்.எனவே திருநெல்வேலியில் தாக்குதல் நடத்தினால் அது ஒரு இனக்கலவரத்தை தோற்றுவிக்கும் என்றோ அதன்மூலம் வெலிக்கடைசிறையில் இருக்கும் தலைவர்கள் கொல்லப்படுவார்கள் என்றோ யாருமே கருதவில்லை.எனவே இந்நிலையில் பிரபாகரன் இதைக் கணித்தார் என்பது நம்பமுடியாமல் உள்ளது.ஏனெனில் பிரபாகரனின் முட்டாள்தனமான அறிவை நாம் முள்ளிவாயக்காலில் மண்டைபிளந்து இறந்து கிடந்ததில் இருந்து நன்கு தெரிந்துகொண்டோம் அல்லவா!எனவே தயவு செய்து தவறான தகவல்களை எதோ அருகில் இருந்து பார்த்த உண்மைபோல் சித்தரித்து கட்டுரை எழுதி எதிர்கால சந்ததிக்கு தவறான முன்னுதாரணம் வழங்கவேண்டாம் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

  Reply
 • மாயா
  மாயா

  people எழுதிய கருத்து உண்மை. டெலோவின் விதையில் விருட்சமானதே பிரபாவின் புலிகள். டெலோவில் பகிரப்பட்ட கருத்துகள் புலிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டன.

  people, கொழும்பிலிருந்து காங்கேசன்துறை சீமேந்து தொழில்சாலைக்கு சென்று கொண்டிருந்த புகையிரதத்தை தாக்கி அதில் சென்று கொண்டிருந்த முகாமையாளர் ஜயமான்னவையும் சிங்கள தொழிலாளர்களையும் கடத்திக் கொலை செய்தமை போன்ற பிற்போக்குத் தனமான செயல்களையும் டெலோதான் செய்தது. ஜயமான்ன தமிழர்கள் மேல் அளவு கடந்த பற்று கொண்ட ஒருவர். அவரோடு சென்றவர்களில் பெரும்பாலான சிங்களவர்கள் இடதுசாரி கருத்துகளைக் கொண்ட அடிமட்ட தோழர்கள்.

  தமிழர்கள் மேல் பற்று கொண்டமையால் தமக்கு தீங்கு வராது என்று நம்பியவர்கள். 1977 இனக் கலவரத்தின் போது புத்தளம் சீமேந்து தொழிற்சாலையில் பணிபுரிந்த யாழ்பாணத் தமிழ் ஊழியர்களை பாதுகாக்க இபோச பஸ்களை வாடைக்கு அமர்த்தி கொண்டு சென்று மதவாச்சி வரை கொண்டு சென்று விட்டவர்கள் பலரும் கொல்லப்பட்டனர். போலீஸ் துணையோடு இந்த சிங்களவர்களும் தமிழர்களது பாதுகாப்புக்காக மதவாச்சி வரை சென்று திரும்பினர். அவர்கள் டெலோவினால் கொல்லப்பட்டனர்.

  1977 கலவரத்தின் பின்னர் யாழ் தமிழ் ஊழியர்களை பாதுகாக்க, அவர்களை காங்கேசன்துறையில் பணியாற்ற வைக்கும் முடிவுக்கு வந்து 3rd stage யை தொடங்கினார். அந்த பொறுப்பை ஜயமான்னவே செய்தார். டெலோவும் ஒன்றும் தீர்க்க தரிசனமான இயக்கமல்ல. இவர்களது பல தாக்குதல்கள் மற்றும் இந்திய அரசின் தலையாட்டி பொம்மைகளாக நடந்து கொண்டமை ஆகியவை ஈழப் போராட்டம் சறுக்கவே உதவியது. டெலோ , புலி ,இவர்களுக்குள் கருத்தில் பெரிய வித்தியாசமில்லை. ஆயுத பலம் – பலவீனம் இதுதான் வித்தியாசம்.

  Reply
 • manithan
  manithan

  பிரபாகரன் மாத்தையாவை சுட்டது தவறு என்றால் சிறீஅண்ணா தாசை சுட்டது தவறு இல்லையா?

  புலிகள் அமிர்தலிங்கத்தை சுட்டது தவறு என்றால் ரெலோ இயக்கம் தர்மர் ஆலாலசுந்தரம் போன்றவர்களை சுட்டது தவறு இல்லையா?

  புலிகள் மற்றைய இயக்கங்களை தடைசெய்தது தவறு என்றால் ரெலோ இயக்கம் மற்றைய இயக்கங்களை தடை செய்தது தவறு இல்லையா?( என்.எவ.ரி இயக்கம் மற்றும் ரி.என.ஏ வின் பணத்தைப்பறித்தது போன்றன)

  புலிகள் மக்களை சுட்டது தவறு என்றால் ரெலோவும் மக்களை சுட்டது தவறு இல்லையா?(வடமராட்சி மக்களை சுட்டது.மண்டான் தாழ்த்தப்பட்ட மக்களை தாக்கியது என பல உதாரணங்கள் உண்டு.)

  இவ்வாறு புலிகள் போல் ரெலோ இயக்கமும் பல தவறுகள் செய்துள்ளது என்பதே உண்மையாகும் உண்மை இப்படி இருக்க புலிகள்தான் பல தவறுகள் செய்திருப்பதாகவும் ரெலோ இயக்கம் ஏதோ தவறு செய்யாத நல்ல ஒரு இயக்கம் போலவும் கட்டுரையாளர் சித்தரித்திருப்பது மாபெரும் வரலாற்று மோசடியாகும்.

  Reply
 • murugan
  murugan

  /தங்கத்துரை என்ற தங்கண்ணா தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைலவர் மட்டுமல்ல. அவர் ஒரு தத்துவ ஞானியும் கூட. அமைதியும், அன்பும், அடக்கமும், கொண்ட கொள்கையிலே உறுதியும் அணிகலன்களாக அமையப் பெற்ற இந்த இலட்சியமறவன், வாதத்திறமையும், சிறந்த பேச்சாற்றலும் கொண்டவர்/

  /களத்திலே இவன் இறங்கிவிட்டால், இவன் கைகளில் வீரம் விளையாடும். புடைத்து நிற்கும் இவன் தோள்களிலே வெற்றிகள் புன்னகை பூக்கும். இவன் வெறுங்கையோடு வீதியில் வந்தபோது, ஆயதங்களோடு நேருக்கு நேர் வந்த ஆயுதப்படைகள் ஆயுதங்களைப் போட்டுவிட்டு, அலறியடித்து ஓடிய சம்பவங்கள் பல உண்டு./

  /இயந்திரத்துப்பாக்கியும் கையுமாக இந்த இளம்சிங்கம் கண்ட களங்கள் பல. வயதிலே சின்னவன்; வேட்டுக்களை குறி வைப்பதில் மன்னவன். இராணுவத்தின் பிடியிலிருந்து பல தடவை தப்பியவன். அழகிய புன்முறுவலும், அடங்காத புரட்சியுணர்வும் கொண்டவன்./

  /பட்டத்து யானை போன்று நெடிய, கம்பீரமான தோற்றம் ஜெகனைப் போலவே இராணுவத்தின் பிடியிலிருந்து பலமுறை தப்பி சாகசம் புரிந்தவர். பொலிசாரின் துப்பாக்கிக் குண்டுகள் வயிற்றைக் கிழித்தபோதும், சாரத்தைக் கிழித்து, வயிற்றில் கட்டிக் கொண்டே கடலை நீந்தித் தாண்டித் தப்பிய மனோதைரியம் கொண்டவர்./

  மேற்கண்ட வரிகளை படிக்கும்போது அந்தகால அரச கதைகளை படிக்கும் உணர்வே ஏற்படுகிறது.அந்தக்காலத்தில் மன்னனிடம் பொற்காசு பெறுவதற்காக புலவர்கள் அவனை இந்திரன் சந்திரன் என்று புகழ்ந்து பாடுவார்கள்.ஆனால் இந்தக்காலத்தில் எதற்காக இந்த வரிகளை இந்த கட்டுரையாளர் எழுதிள்ளார் என்று புரியவில்லை.ஆனால் ஒன்று மட்டும் உண்மை என்னவெனில் இந்தக்கட்டுரை “தேசம் நெற்”க்கு உரியது அல்ல.மாறாக நக்கீரன் ஜீனியர்விகடன் போன்றவற்றுக்கு அனுப்பவேண்டி கட்டுரை தவறுதலாக தேசம்நெற்றுக்கு அனுப்பிவிட்டார் போல் உள்ளது.ஆனால் தமிழ்நாட்டு வாசகர்கள் போல் தேசம் வாசகர்களையும் முட்டாள்கள் என்று கட்டுரையாளர் கருதுவாரேயானால் அவர் ஏமாற்றம் அடைவது தவிர்க்கமுடியாததாகும்.

  Reply
 • thambi
  thambi

  //மேலும் நீதிமன்றத்தில் இந்த தலைவரால் படிக்கப்பட்ட வாசகங்கள்கூட இவர்களால் சொந்தமாக தயாரிக்கப்பட்டது அல்ல என்பதும் ஒரு வழக்கறிஞர் எழுதிக் கொடுத்து இவர்களால் வாசிக்கப்பட்டது என்பதும் பல தமிழர்களுக்கு அன்று தெரிந்தே இருந்தது//people

  ஒரு ஒழுங்கான இயக்கம் என்று எப்படி சொல்வது இயக்கங்கள் உருவாகும் அது தனது தவறுகளிலிருந்து தம்மை விமர்சித்து மாற்றம் பெற்றுச் செல்லும் விருப்பத்தை கொண்டிருந்தாலே போதும் அது இயக்கத்தை உருவாக்கும் அந்த இயக்கம் மாற்றங்கள் பெற்று மக்கள் மயப்பட்டு மக்களால் தலைமை தாங்கப்படும் -ஒழுங்கா இயக்கத்தை பட்டை திட்டிய பின்பு தான் இயக்கம் இயங்க வேயண்டும் இயக்கத்தை அறிவிக்க வேண்டும் என்பது போல் சொல்லுகிறீர்கள்.

  சண்முகதாஸனின் இயக்கத்தில் கூட பல தவறகள் நடைபெற்றுத்தான் மாற்றம் பெற்று ஒரு சமூக இயக்கமாக உருப்பெற்றது அதில் அங்கத்துவம் பெற்றிருந்தேன் உள்ளே நடந்த பல தவறுகள் கூட விமர்சிக்கப்பட்டே திருத்தப்பட்டது.

  என் மாக்ஸீயம் கூட பெரும்பான்மையான விடயங்களை ஏங்கல்ஸ் தான் தொகுத்திருந்தார் பின்னர் மாக்ஸ் இறந்த பிறகு அவரின் பெயரால் உச்சரிக்கப்பட்டது.

  ரெலோவின் ஒரு தோழர் அவரும் தங்கதுரையின் தோழர் ரெலோவுடன் தன்னை இணைத்து வேலை செய்தவர் தங்கதுரை எழுதிக் கொடுத்த நீதிமன்ற பேச்சுக்கான சுருக்கமான கருத்துக்களை நீதிமன்றில் பேசும் கட்டுரையாக வரைந்தவர் தான் அந்த சட்டத்தரணி இந்தச் சட்டத்தரணி பின்னர் ரெலோவின் பேச்சாளராக இருந்தது உமக்கு தெரியாதா? (திம்பு)

  ரெலோ தங்கத்துரையின் பேச்சு தங்கத்துரையாலும் ரெலோ தோழர்களாலும் எழுதப்பட்டது இயக்கம் இப்படித்தானே இயங்கியிருக்க முடியும்.

  ரெலோ மட்டுமல்ல சண்முகதாஸனின் இயக்கம் மட்டுமல்ல புலிகளும் கூடத்தான் தவறுகள் விட்டுள்ளார்கள் அது எப்படி திருத்தப்பட்டது அது எப்படி மக்களின் வாழ்வியலில் மாற்றத்தை உண்டுபண்ணியது அல்லது மக்களை கொலைக்களத்தில் நிறுத்தியது என்பது தான் பார்க்க வேண்டியுள்ளது.

  //இந்த புலம்பெயர் ரெலோவினர் தொடர்ந்தும் அடம்பிடிப்பார்கள் எனில் பகிரங்க விமர்சனத்திற்கு நாம் தயாராகவே இருக்கிறோம்.//people

  தேசம் நெற்றூடாக அல்லது ரெலோ இணையத்தளம் ஊடாக எம்மிடம் தொடர்பு கொள்ளவும் நாம் விமர்சனத்திற்கு தயாராக உள்ளோம். அல்லது எமது தோழர் செல்வத்துடன் தொடர்பு கொள்ளவும் நாமும் உங்களுடன் பேச தயாராக உள்ளோம். அல்லது நீங்கள் ஒரு ஊடகத்துறை சார்ந்தவர் என்றால் உங்கள் ஊடகத்தில் தொடர்ந்து விவாதிக்கவும் தயாராக உள்ளோம். கடந்த காலங்களில் நடந்த பல சம்பவங்களை நாம் ரெலோவினர் எமது தவறுகளை ஒத்துக்கொண்டுள்ளோம் தேசம் நெற்றில் செல்வம் எமது பல தவறுகளை ஒத்துக்கொண்டு மன்னிப்பும் கேட்டும் உள்ளார் அதற்கு நீங்கள் பொது தொலைக்காட்சி/ ரேடியோவில் எம்மை அழைத்தாலும் நேராக வந்து விமர்சிக்கத் தயாராக உள்ளோம்.

  அந்தக்காலங்களில் ரெலோவில் இருந்து வேலை செய்தவர்கள் இன்று ஒதுங்கியிருப்பவர்களும் பொது விமர்சனத்திற்கு முன்வரத்தயாராகவே உள்ளனர்

  நாம் ஏற்கனவே விமர்சித்தவற்றை மீண்டும் விமர்சனங்கள் செய்யவும் தயாராகவும் உள்ளோம். உண்மையில் நீங்கள் ஆயத்தம் என்றால் தேசம் நெற்றுடன் தொடர்பு கொள்ளவும் எமது தொடர்புகளை அவர்களடமிருந்து அல்லது ரெலோ டெட் கொம் மூலம் பெறலாம்.

  தயவு செய்து எமது நேரத்தை தவறாக வீணடிக்க வேண்டாம்.

  (Thambi is my real name.)

  Reply
 • chandran.raja
  chandran.raja

  அன்புடன் இந்திரன்.ராஜா!
  இப்படியான அசட்டுத்தனமான கேள்விகள் தான் எம்இனம் இவ்வளவுவிபரீதங்களையும் சந்திக்க நேர்ந்தது. இனியும் இப்படியான முட்டாள்
  தனமான கேள்விகளை கேளாதிருப்பீர்களா. என் பின்னோட்டங்களை நீங்கள் அவதானித்து வந்தீர்களாக இருந்தால் புலிகளைதவிர எந்த இயக்கத்தையும் சாடியது கிடையாது.என்னை பொறுத்தவரை புலிகளும் புலிசிந்தனைகளுக்கும் வாழ்நாள் முழுவதும் போராடிக்கொண்டிருப்பேன்.
  திரும்ப வருகிறேன்- இயக்கங்களில் எந்த இயக்கம் தவறுவிடாத இயக்கம் ? இந்த இயக்கத் தலைவர் ஒரு குட்டையில் ஊறிய மட்டைகள் தான். இந்த மட்டைகள் தான் நாளைய தமிழ் இனத்தின் தலைவர்கள்.
  இந்த ஊறிய மட்டையில் இருந்து தான் நம்இனத்தை இழுத்து செல்லும் “வடம்” தயாரிக்கப் படபோகிறது. பிரிந்து நின்றாலும் சேர்ந்து வாழவேண்டும் என்பது தான் நியதி.

  Reply
 • மகுடி
  மகுடி

  முருகன், நக்கீரன் ஜீனியர்விகடன் போன்றவற்றுக்கு அனுப்பவேண்டி கட்டுரை தவறுதலாக தேசம்நெற்றுக்கு அனுப்பிவிட்டார் போல் உள்ளது என சொல்றது நக்கலாக இல்லை. நல்லா இருக்கு.

  Reply
 • kumarathasan
  kumarathasan

  maya comments is diamond.

  Reply
 • people
  people

  தம்பி அவர்களுக்கு !
  நான் கட்டுரையை எழுதியவருக்கே என் கருத்துக்களை குறிப்பிட்டீருந்தேன். ஆனால் நீங்கள் பதில் அளித்துள்ளீர்கள்.!

  முதலில் எனது கருத்துக்களுக்கு பதில் எழுதியது மட்டுமல்ல ரெலோ தொடர்பாக பகிரங்க விமர்சனத்திற்கும் தயாராக இருப்பதாக நீங்கள் குறிப்பிட்டுள்ளமைக்கு என் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.ஏனெனில் நான் அறிந்தவரையில் விமர்சனத்தை அங்கீகரித்து பதில் அளிக்கவும் தயாராக இருக்கும் நபர் ரெலோவில் நீங்கள் ஒருவர் மட்டுமே. பக்கத்தில் இருக்கும் என் நண்பர் ஒருவர் கேட்கிறார்” அது சரி உவர் எந்த ரெலோ சார்பாக கதைக்கிறார்” என்று. அவருடைய கேள்வி நியாயமாகத்தான் எனக்கும் தோன்றுகிறது. ஏனெனில் நான் அறிந்த வரையில் பல ரெலோ உள்ளது.

  நீங்கள் “தோழர் செல்வத்”திடம் கேளுங்கள் என்று குறிப்பிட்டுள்ளீர்கள். செல்வம் அடைக்கலநாதனையா குறிப்பிடுகிறீர்கள்?அவர் எப்போது தோழர் செல்வம் ஆனார்? என்ன பகிடிக்கு ஒரு அளவு இல்லையா? நான் அறிந்தவரையில் மார்க்சிய தத்துவத்தின் அடிப்படையில் புரட்சிக்காக உழைக்கும் நபர்களையே தோழர் எனக்குறிப்பிடபடுவதுண்டு.அப்படியாயின் செல்வத்திற்கும் மார்க்சியத்திற்கும் என்ன சம்பந்தம்? செல்வத்திற்கும் புரட்சிக்கும் என்ன சம்பந்தம்?ஜே.ஆர் ஜெயவர்த்தனாவை தோழர் என்று அழைத்தால் எந்தளவு பொருத்தமற்றதோ அதைவிட ஆச்சரியமானது செல்வத்தை “தோழர்” என்று அழைப்பது.

  மேலே எழுதப்பட்டிருக்கும் கட்டுரையில் எந்தவித சுயவிமர்சனமும் இல்லை.மாறாக தலைவர்களை ஆகா ஓகோ என புகழப்பட்டிருக்கிறது. எனவேதான் அவர்கள் பற்றிய விமர்சனத்திற்கு தயார் என்று குறிப்பிட்டேன். ஆனால் நீங்கள் ரெலோ தன் தவறுகளை சுயவிமர்சனம் செய்துள்ளது என்றும் மீண்டும் சுயவிமர்சனம் செய்ய தயார் என்று குறிப்பிட்டுள்ளீர்கள். இதுவரை நீங்களோ அல்லது உங்கள் ரெலோ இயக்கமோ என்னென்ன விடயங்களை ஒத்துக்கொண்டு சுயவிமர்சனம் செய்தது என்று எனக்கு தெரியவில்லை. இருப்பினும் நான் சுட்டிக்காட்டிய விடயங்களை நீங்கள் ஒத்துக்கொண்டு ஏற்கனவே சுயவிமர்சனம் செய்திருப்பின் அது உண்மையாயின் நல்லது. வரவேற்கிறேன்.

  தலைவர்கள் நீதிமன்றத்தில் வாசித்த வாக்கியங்கள் அவர்களுடையது அல்ல என்பதையும் அது ஒரு சட்டத்தரனியால் எழுதிக்கொடுத்து படிக்கப்பட்டது என்பதையும் ஏற்றுக்கொண்டமைக்கு நன்றிகள். நான் அறிந்தவரையில் அதை எழுதிக்கொடுத்தது கூட்டனி தலைவர் சிவசிதம்பரம் என்றும் அவர் ஒருபோதும் ரெலோவில் அங்கத்தவராக இருக்கவில்லை என்றும்.ஆனால் நீங்கள் அவர் ரெலோ உறுப்பினராக இருந்தார் என்று எழுதியுள்ளது ஆச்சரியமாக இருக்கிறது.

  நான் ரெலோவின் தவறுகளை சுட்டிக்காட்ட நீங்களோ சண்முகதாசனையும் அவரின் கட்சியையும் வம்புக்கு இழுக்கிறீர்கள். நான் எங்கேயாவது என் கருத்தில் சண்முகதாசன் தவறு செய்தாவர் என்றோ அல்லது அவரின் கட்சி பிழை விடவில்லை என்றோ குறிப்பிட்டுள்ளேனா? சரி இருந்தாலும் நீங்கள் அவரை குறிப்பிட்டுள்ள படியால் அது தொடர்பாக சில கருத்துக்களை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.

  முதலாவது சண்முகதாசனின் கட்சி ஒரு கம்யுனிஸ் கட்சியாகும்.ஆனால் ரெலோ அப்படியான கட்சி அல்ல. இரண்டாவது கம்யுனிஸ்ட் கட்சியில் பல கமிட்டிகள் உண்டு. அவற்றின் மூலமே சண்முகதாசன் பொதுச்செயலாளராக தெரிவு செய்யப்பட்டார். ஆனால் ரெலோவில் சிறீசபாரட்ணம் அவ்வாறு தெரிவு செய்யப்படவில்லை. முன்றாவதாக கம்யுனிஸ் கட்சியில் விமர்சனம் சுயவிமர்சனம் செய்ய முடியும். ஆனால் ரெலோவில் விமர்சனம் செய்தால் என்ன நடக்கும் என்பதை நான் சொல்லி நீங்கள் தெரியவேண்டியதில்லை. நான்காவதாக சண்முகதாசனின் கட்சியில் பல உடைவுகள் ஏற்பட்டன. ஆனால் அவர்கள் யாரையும் படுகொலை செய்யவில்லை. ஆனால் ரெலோவின் உட் படுகொலைகள் மிகவும் பிரசித்தமானவை. ஜந்தாவதாக சண்முகதாசனின் கட்சியினர் மற்ற கட்சிகளை தடைசெய்யவில்லை. ஆனால் ரெலோ மற்ற இயக்கங்களை தடை செய்தது. மற்ற இயக்கங்களின் சொத்துக்களை பறிமுதல் செய்தது. எல்லாவற்றுக்கும் மேலாக ரெலோ இயக்கம் போல் மக்களை சண்முகதாசனின் கட்சி சுடவில்லை. மாறாக தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தலைமை கொடுத்து போராடியது. மேலும் உங்களின் தலைவர்கள் போல் எழுதிக் கொடுத்ததை படிக்கும் தலைவராக சண்முகதாசன் இருக்கவில்லை. அவர் இலங்கைப்பிரச்சனைகள் தொடர்பாக எழுதிய கணக்கற்ற கட்டுரைகள் நுhல்கள் மேலும் திரிபுவாதத்திற்கு எதிராக சர்வதேசிய அளவில் அவர் நடத்திய தத்துரீதியான போராட்டம் அவரை உண்மையிலே திறமை மிக்க தலைவராக மாபேரும் மார்க்சிய ஆசானான அவரை உலகிற்கு இனங்காட்டியது. மேலும் அவர் இந்தியாவிற்கு சோரம் போகவில்லை. இந்திய உளவுப்படைகளுடன் கூடிககுலாவவில்லை. இலங்கையில் இனி யாராவது புரட்சியை மேற்கோள்வார்களேயானால் அவர் விட்ட இடத்திலிருந்தே தொடரமுடியும். அந்த அளவிற்கு இலங்கைப்புரட்சியுடன் பிரிக்க முடியாதவராக தவிர்க்கமுடியாதவராக இலங்கை வரலாற்றில் சன்முகதாசன் இருக்கிறார்.
  சண்முகதாசன் கட்சியில் இருந்ததாக குறிப்பிடுகிறீர்கள். என்னால் நம்பமுடியவில்லை.

  Reply
 • BC
  BC

  People , Manithan , தங்கள் கருத்தினூடாக பல தகவல்களை அறியமுடிந்தது. நன்றி. தேசம்நெற்றுக்கும் நன்றி.

  Reply
 • kunam
  kunam

  அப்பு மைக்கல் ஆகியோரை கொலை செய்தமை அறிந்து பிரபாகரன் மீது கடும் நடவடிக்கை எடுக்க குட்டிமணி முனைந்ததாகவும் ஆனால் தங்கத்துரை தடுத்துவிட்டதால் பிரபாகரன் தப்பிவிட்டதாகவும் கூறுகின்றனர்.அப்படி இன்னொரு போராளியை சுடுவது குட்டிமணிக்கு பிடிக்கவில்லை என்றால் செட்டியை ஏன் குட்டிமணி கொலை செய்தார் என்பதை யாராவது விளக்குவீர்களா?

  கண்ணாடி பத்மநாதன் என்றொரு போராளி இருந்தார்.அவர் ஏன் கொலை செய்யப்பட்டார் என்று ரெலோ thambi கூறுவாரா?

  Reply
 • BC
  BC

  //செட்டியை ஏன் குட்டிமணி கொலை செய்தார் //
  செட்டி உண்மையான கள்ளர் (களவு எடுத்து திரிபவர்)என்றும் அதைவிட லாபம் என்பதற்காக இயக்கத்தில் சோந்ததாகவும் அறிந்தேன்.

  Reply
 • senthil
  senthil

  ஒபரோய் தேவன், மனோ மாஸ்டர் ஆகியோரின் கொலைகளில்நேரடியாக கிட்டுவே ஈடுபட்டதுடன் பிரபாகரனுக்கு இந்த கொலைகளுக்கு தொடர்போ அல்லது கட்டளையோ இடவில்லையென பின்னய காலங்களில் தெரியவந்தது. கிட்டு நாட்டில் தன்னிச்சையாக இவ்வாறாக செய்த தலைமை ஒழிப்புகள் பிரபாகரனால் கண்டிக்கப்பட்டாலும் கிட்டு மீது ஒழுக்காற்றுநடவடிக்கை எடுக்க கூடியதாக இருக்கவில்லை. கிட்டுவை விட்டால் அந்தநேரத்தில் பிரபாகரனுக்கு வேறு ஒருவரும் கிடைக்கவில்லை. இதனால் கிட்டுவின் செயற்பாடுகளை கடைக்கண்ணால் அனுமதித்தார். இதேபோல் டெலோ அழிப்பின் போது ஒபரோய் தேவனின் தம்பி பர்வா மோகன் கிட்டுவால் சுடவைக்கப்பட்டிருந்த போது பிரபாகரனே நேரடியாக தலையிட்டு விடுவித்ததாகவும் கதையுள்ளது. ஒபரோய் தேவனின் குடும்பத்தினர் பிரபாவை ஆரம்பகாலத்தில் தலைமறைவாக இருக்க உதவியவர்கள் என்பதே அடிப்படை.

  Reply
 • indiran.raja
  indiran.raja

  இயக்கங்களில் எந்த இயக்கம் தவறுவிடாத இயக்கம்? இந்த இயக்கத் தலைவர் ஒரு குட்டையில் ஊறிய மட்டைகள் தான். இந்த மட்டைகள் தான் நாளைய தமிழ் இனத்தின் தலைவர்கள். இந்த ஊறிய மட்டையில் இருந்து தான் நம்இனத்தை இழுத்து செல்லும் “வடம்” தயாரிக்கப்பட போகிறது. பிரிந்து நின்றாலும் சேர்ந்து வாழவேண்டும் என்பது தான் நியதி”

  ஒன்றுமே புரியவில்லை. மட்டை என்கிறீர்கள். குட்டை என்கிறீர்கள். மற்ற இயக்கங்களை திட்டுகிறீர்களா பாராட்டுகிறீர்களா ஏதொ பயத்தில் குழம்பி உளறுகிறீர்களா?

  அந்த திரிக்கிற கயிறு நாற்றம் எடுக்காதா?

  Reply
 • சாந்தன்
  சாந்தன்

  ‘…அப்பு மைக்கல் ஆகியோரை கொலை செய்தமை அறிந்து பிரபாகரன் மீது கடும் நடவடிக்கை எடுக்க குட்டிமணி முனைந்ததாகவும்….

  நீங்கள் ‘மட்டக்களப்பு’ மைக்கலை குறிப்பிடுவதாயிருந்தால் மைக்கலின் கொலைக்கு முக்கிய காரணம் புலிகளின் மத்திய குழுவே. உமா முன்னிலையில் கூடிய மத்தியகுழு எடுத்த முடிவே மைக்கலின் கொலை.இதில் குட்டிமணி எங்கே வந்தார்?

  பின்னர் இயக்கம் பிளவடைந்தபோது மைக்கலுக்கு ‘மட்டக்களப்பு’ பிரதேச அடைமொழி சேர்த்து தமது நன்மைக்காக புளொட் பிரச்சாரம் செய்தனர் என்பது உண்மை. ஆனால் புலிகளோ இம்முடிவு மத்திய குழுவில் எடுக்கப்பட்டது என்கின்ற உண்மையை சொல்லவில்லை. ஏன் எனக்கேட்டபோது மத்தியகுழு ராணுவ முடிவுகள் இரகசியமானது என்றும் அதற்குக்கட்டுப்பட வேண்டிய கடமையை இயக்கத்தினை விட்டு விலகினாலும் கடைப்பிடிப்போம் என புலிகள் தீர்மானித்திருந்ததாகவும் 2000ம் ஆண்டளவில் கூறினர்!

  Reply
 • Skay
  Skay

  //people, கொழும்பிலிருந்து காங்கேசன்துறை சீமேந்து தொழில்சாலைக்கு சென்று கொண்டிருந்த புகையிரதத்தை தாக்கி அதில் சென்று கொண்டிருந்த முகாமையாளர் ஜயமான்னவையும் சிங்கள தொழிலாளர்களையும் கடத்திக் கொலை செய்தமை போன்ற பிற்போக்குத் தனமான செயல்களையும் டெலோதான் செய்தது. // Maya, This operation done by TELA (Tamil Eelam Liberation Army)
  And also one of the robbery (Puttur -1985), most of the people think its done by TELO, but in really it’s done by LTTE members (Ranjith & Thurai) & some local boys. They used LTTE arms for this robbery.

  Reply
 • மாயா
  மாயா

  திருத்தத்துக்கு நன்றி Skay.

  Reply
 • Skay
  Skay

  //ஒபரோய் தேவன், மனோ மாஸ்டர் ஆகியோரின் கொலைகளில்நேரடியாக கிட்டுவே ஈடுபட்டதுடன் பிரபாகரனுக்கு இந்த கொலைகளுக்கு தொடர்போ அல்லது கட்டளையோ இடவில்லையென பின்னய காலங்களில் தெரியவந்தது. கிட்டு நாட்டில் தன்னிச்சையாக இவ்வாறாக செய்த தலைமை ஒழிப்புகள் பிரபாகரனால் கண்டிக்கப்பட்டாலும் கிட்டு மீது ஒழுக்காற்றுநடவடிக்கை எடுக்க கூடியதாக இருக்கவில்லை. // Oprai Devan was killed before end of September 1983. On that period Pirapa was in Jaffna. Mano master was killed late 1984, I think Pandithar was in-charge for LTTE in Jaffna not Kittu. Even when TELO was attacked Piraba put pressure on Kittu to kill Sri-Saba as soon as possible because of Tamil Nadu politics – specially Karunanithy wants not to kill Sri-Saba.

  In my opinion Sri-Saba was not a good leader. When Rasupillai left the Organization (late 1983), he fully took over the leadership and did not have any clue how to run it. That’s why RAW easily influenced him via Chandrahasan (Selva’s son). Sri-Saba made lot of mistakes – worse one was ordered to kill Das and others.

  Reply
 • BC
  BC

  பிரபாகரன் நன்றாகவும், பாதுகாப்பாகவும் உள்ளார் என்ற உறுதியான செய்தி கிடைத்து இருக்கிறது” என்று நேற்று பெங்களூர் கருத்தரங்கில் பங்குகொண்ட நெடுமாறன் தெரிவித்தார்.
  Kathees – புலி உயிர்த்தால் என்ன செய்யிறது எண்ட சிம்ம சொப்பனத்திலையே இவையள் பாடிக் கொண்டிருக்கப் போகினம்.

  இப்போ என்ன செய்யலாம் Kathees?

  Reply
 • பல்லி
  பல்லி

  மேலே குறிப்பிட்ட பலர் இன்று கே பீ எப்படி புலியானாரோ அது போல் விடுதலை வேங்கைகள் ஆனார்கள்; ஆனால் அதன் பின் சிலரே விடுதலையை நேசித்தனர் எனலாம்; அதில் தங்கரை குறிப்பிட்டு சொல்லலாம்; மற்றவர்கள் யார் என்பதை தேசத்தை தொடர்ந்து வாசிப்பவர்கள் புரிந்து கொள்ளலாம்;

  Reply
 • பல்லி
  பல்லி

  பலரது பின்னோட்டங்களையோ அல்லது கருத்துக்களையோ படிக்கின்ற போது பல்லிக்கு இப்படிதான் தோன்றுகிறது;
  பிரபாகரன் சென்ற வாரம் உமாவை சந்தித்து ஏதோ பேசியதாகவும்(அதில் மாத்தையாவுக்கும் கிட்டுவுக்கும் உடன்பாடு இல்லையாம் என்பது வேறு பிரச்சனை) உமா சொன்னாராம் தம்பி நீ காலம் கடந்து சிலதவறை உண்ர்ந்து பேசுகிறாய் அதனால் இதுக்கு என்னால் உடன் பதில் சொல்ல முடியாது; அதனால் நான் பத்மநாபாவுடன் பேசி அவரையும் கூட்டி சென்று சிறி சபாரத்தினத்துடன் பேசிவிட்டு சரிவந்தால் அமிர் லோகேஸ்வரனுடன் உன்னை சந்திக்க சுந்தரத்துடன் வருவதாக சொன்னாராம்; இது பல்லியின் கற்பனைதான்; ஆனால் பலரது கற்பனைக்கு பல்லியால் இதைவிட என்னதான் எழுத முடியும்;

  Reply
 • மாயா
  மாயா

  பல்லியை கன காலமாக காணயில்லை. சொர்க்க வாசலுக்கு சென்று வந்திருக்கிறார் போல. அது சரி மாவீரர் நாள் வரை காத்திருக்கும் புண்ணாக்குகளுக்கு பிரபா ஏதாவது சொல்லி அனுப்பினவரோ? உலக முடிவில எல்லோரும் எழுவார்கள் என்பார்களே, உலகம் எப்ப முடியும் என்றாவது தலைவர் சொல்லியனுப்பினவரோ?

  தினமும் புலி புண்ணாக்குகள் நெட்டில ஏதாவது தாக்குதல் நடக்காதா என்று பார்க்கிறாங்கள். கஸ்பார் போன்ற மத மந்தைகளின் கதைகள்தான் வருகுதே ஒழிய , சத்தங்கள் ஒன்றையும் காணவில்லை. புலி ரசிகர்கள் இறுகிப் போய் நிக்கிறாங்கள். யாராவது சாகிற செய்தி வந்தால்தான் இவர்கள் சநதோஷப்படலாம்.

  மாவீரர் கொண்டாட்டம் நடத்தியே , அனைவரையும் மாவீரர்களாக்கிட்டார்கள். ஒருவரது எண்ணங்கள்தான் அவன் வாழ்வு என்பார்கள். சாவையே சாதனையாக்கி சாவடைந்து போனது தமிழர் சமூகம். இருப்போராவது இந்த சாவீட்டு நிகழ்வுகளை தொடராமல் , வாழப் போராட வேண்டும். அதற்காக ஆயுதம் தாங்க வேண்டியதில்லை. அன்பு – நட்பு – புரிந்துணர்வு – ஒற்றுமை ஆகியவற்றினூடாக எதிரியோடு பேசுவதால் பிரச்சனை தீர்க்கலாம். பாகிஸ்தான் பிரதமரோடு இந்திய பிரதமர் ஏற்படுத்தியுள்ள உறவு போல.

  Reply
 • பல்லி
  பல்லி

  //பல்லியை கன காலமாக காணயில்லை. சொர்க்க வாசலுக்கு சென்று வந்திருக்கிறார் போல. //
  தேடிய மாயாவுக்கு நன்றி. அனால் பல்லி தேசத்தை விட்டு எங்கும் போவதில்லை (எழுத) சில காலமாக பல்லியின் கணனியில் பூச்சியை விட்டு யாரோ வேடிக்கை பார்க்கின்றனர்; அதுக்கு மருத்துவம் செய்யும் திறன் பல்லியிடம் இல்லை, அதனால் அடிக்கடி முதல் உதவி தேடி நண்பர்களை அணுகவேண்டி இருக்கு; மற்றபடி பல்லியின் முகம் காட்டிய தேசத்தை விட்டு பல்லி எங்குமே போகாது; சொர்க்கம் என்பது ஒவ்வொருவரது நிலைபாடு; இதில் பல்லிக்கு சொர்க்கம் என்பது வர வாய்ப்பே இல்லை; காரனம் பல்லி மக்களுக்கு எப்போது சொர்க்கம் கிடைக்கும் என்பதை சிந்திப்பதில்லை; அவர்கள் இந்தநரகத்தில் இருந்து அகல ஏதும் வழி உண்டா என ஆதங்க படும் ஒரு ஜீவன்; ஆனாலும் மாயாவை பாராட்டியே எழுத வேண்டும்; மாயாவின் சுய விமர்சனம் இன்று சில டெலோ உறுப்பினர்களும் சுய விமர்சனம் செய்ய தூண்டி இருக்கு; எனவே பலரது பல பக்க புத்தகங்களை விட சிலரது சின்ன சின்ன வாக்கு மூலங்களே கடந்த கால விடுதலையோ அல்லது தறுதலையோ என மக்கள் புரிந்து கொள்ள உதவும்: அந்த மக்களில் பல்லியும் அடங்கும்;

  Reply