பேனா பிடிக்க வேண்டிய கரங்களில் ஆயுதங்கள் திணிக்கப்பட்டதால் புத்திஜீவிகளை இழந்தது குடாநாடு

sathosa-outlet.jpgபேனை பிடிக்க வேண்டிய கரங்களில் ஆயுதங்கள் திணிக்கப்பட்டதால் யாழ்.குடாநாட்டு மண் புத்திஜீவிகள், பேராசான்களை உருவாக்கும் சந்தர்ப்பத்தை கடந்த காலத்தில் இழந்துவிட்டதாக வர்த்தக, நுகர்வோர் விவகார அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.  யாழ். கஸ்தூரியார் வீதி வின்சர் தியேட்டர் சந்தியில் செவ்வாய்க்கிழமை 114ஆவது ச.தொ.ச.வை (கூட்டுறவு மொத்த விற்பனை நிலையம்.) திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் அங்கு கூறியதாவது; ஜனாதிபதி பயங்கரவாதத்தின் பிடியில் இருந்து இந்த மண்ணை மீட்டு அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழும் சூழலை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.  ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் அவரது சகோதரருமான பசில் ராஜபக்ஷ யாழ்.குடாநாட்டின் அபிவிருத்திக்காக வடக்கின் வசந்தம் வேலைத்திட்டத்தை முன்னெடுத்து வருகின்றார். அதன் ஒரு வேலைத்திட்டமாகவே இந்த ச.தொ.ச. திறந்து வைக்கப்பட்டுள்ளது.

நாம் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்கின்ற உணவுப் பொருட்களுக்கு வரி விதிப்பது உள்நாட்டு விவசாயிகளின் நலன்களை பாதுகாப்பதற்காகவேயாகும். வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கு, உருளைக்கிழங்கிற்கு 25 ரூபாவும் பால்மா வகைகளுக்கு 125 ரூபாவும் உள்ளூர் சிறிய வெங்காய உற்பத்தியாளர்களின் நலன்களைப் பாதுகாக்க பெரிய வெங்காயத்திற்கு 25 ரூபாவும் வரி அறவிடுகின்றோம். இதனை எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன. ஆர்ப்பாட்டங்களைச் செய்கின்றன. நாம் அதனைப் பொருட்படுத்தவில்லை. எமக்கு உள்நாட்டு விவசாயிகளின் நலன்களில் அதிக அக்கறை உண்டு.

எதிர்வரும் நாட்களில் குடாநாட்டு விவசாயிகள் தமது உற்பத்திப் பொருட்களை கொழும்பிற்குக் கொண்டு சென்று நாரஹேன்பிட்டியில் விற்பனை செய்யலாம். கடலுணவுகளின் விற்பனையும் அவ்வாறே செய்ய முடியும். தென்பகுதி மக்களிடம் இருந்து பெற்ற பணத்தைக் கொண்டு யாழ்கொழும்பு ரயில் சேவையை டலஸ் அழகப்பெரும துரிதகதியில் மேற்கொண்டு வருகிறார். இதனடிப்படையிலேயே புகையிரதப் பாதைகள், புகையிரத நிலையக் கட்டிடங்கள் புனரமைக்கப்படவுள்ளன. மின்சக்தி அமைச்சர் ஜோன் செனவிரத்ன இப்பகுதியில் இருக்கும் மின்பற்றாக்குறைக்குத் தீர்வுகாண முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். வடபகுதி மக்கள் சகல ஒலிபரப்புச் சேவைகளையும் துல்லியமாக கேட்பதற்கும் வசதி வாய்ப்புகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. எனவே உலகின் ஏனைய நாடுகளைப் போல் எமது இலங்கை நாட்டையும் வளர்த்தெடுக்க வேண்டிய தேவை இன்று எழுந்துள்ளது.

சில வாரங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் வந்து வர்த்தகப் பிரமுகர்கள், மக்களுடன் கலந்துரையாடிய போது மக்கள் தாம் பொருட்களைப் பெற்றுக் கொள்வதற்கு அதிகமான விலை கொடுப்பதாக தெரிவித்திருந்தனர். அதற்காக போக்குவரத்துச் செலவை மட்டும் எடுத்துக் கொண்டு யாழ்.மக்களுக்கு பொருட்களை வழங்கவுள்ளோம்.

யாழ். குடாநாட்டின் கல்வி மேம்பாட்டிலும் இந்த அரசு அக்கறை கொண்டுள்ளது. கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த யாழ்.குடாநாட்டுப் பாடசாலைகளை மேம்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்.

தற்போது மக்களுக்கான பொருட்கள் கொழும்பு விலைக்குக் கிடைக்கும் நிலை எட்டப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் கூட வரவுசெலவுத்திட்ட நிதியில் ஒதுக்கி குடாநாட்டில் கோப்சிற்றி, மினி கோப்சிற்றி போன்றவற்றை திறந்து வைத்திருந்தோம். கடந்த காலங்களில் ஏற்பட்ட கஷ்டங்களை மறந்து சகல இனங்களும் மதங்களும் இணைந்து ஒற்றுமையான எதிர்கால சந்ததியை நம்பிக்கையோடு அமைப்போம் என்றார்.

Show More

Your email address will not be published. Required fields are marked *

14 Comments

  • பல்லி
    பல்லி

    சிலரது பேனாக்கள் கூட பலரை ஆயுதம் ஏந்த வைத்தது; அதே வேளை பலரது பேனாக்கள் சிலரது ஆயுதத்துக்கு பயந்து ஓய்வெடுத்து கொண்டது;
    இன்னும் சிலரது பேனாக்கள் ஆயுததாரிகளின் மூலக்கதைக்கு திரைகதை எழுதி அதனால் பலசில பட்டங்களையும் பெற்றன; எது எப்படியாயினும் கல்வியை வளர்க்க யார் பாடுபட்டாலும் கருத்து முரன்பாடு இன்றி வரவேற்க்க வேண்டும்; அந்த வகையில் அரசின் இந்த செயலையும் பாராட்டுவோம்;

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    தரப்படுத்தலை (இன ரீதியான) எதனால் எழுதினார்கள்? ஆயுதத்தாலா பேனாவாலா? இல்லை இரண்டும் இணைந்த ஆயுத பலம் கொண்ட ஜனநாயக பேனாவாலா?

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    சாந்தன்
    தரப்படுத்தலால் தமிழர்கள் மட்டும் தான் பாதிக்கப்பட்டார்கள் என்று சொல்ல வருகின்றீர்களா?? இதே தரப்படுத்தலினால்த் தான் வன்னி மக்களும் கிழக்கு மாகாண மக்களும் குறைந்த புள்ளிகள் பெற்றும் பல்கலைக்கழகத்திற்கு செல்ல முடிந்ததை தாங்கள் அறியவில்லையா?? தரப்படுத்தலைக் கொண்டு வந்த அது அரசு தான் முத்தையன்கட்டு விசுவமடு விவசாயத் திட்டத்தையும் கொண்டு வந்தது. அதனால் பலன் பெற்றவர்கள் யார்?? வெளிநாட்டு இறக்குமதிகளுக்கு தடை விதித்து உள்நாட்டு உற்பத்திகளுக்கு ஊக்கம் தந்ததால் சிங்கள மக்கள் மட்டுமா பயன்பெற்றார்களா??……..,

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    நல்லது பார்த்திபன். ஆனால் தரப்படுத்தலில் பின்தங்கிய மாவட்டங்களுக்கு 15% க்குப்பதிலாக 25% ஆகக் கூட்டும்படி கேட்டோமே? நாம் தரப்படுத்தலுக்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால் சனத்தொகை ரீதியான (55%) தரப்படுத்தலுக்கு எதிர்த்தோம். நீங்கள் சொன்ன விவசாயத்திட்டம் எல்லாம் நன்றாகத்தான் இருந்தது. ஆனால் இலக்சன் வரும்போது மைசூர்ப்பருப்பும் செத்தல் மிளகாயும் சின்ன வெங்காயமும் மாசிக்கருவாடும் இறக்குமதி செய்து தனது ‘விசுவாசத்தை’ காட்டினாரே ஸ்ரீமாவோ! அவ்வாறிருந்தும் அடுத்துவந்த ஜனாதிபதித்தேர்தலில் ஹெக்டர் கொப்பேக்கடுவவுக்கு யாழ்ப்பாணத்தில் அமோக ஆதரவழித்து தமது ‘விசுவாசத்தை’ காட்டினர் யாழ்மக்கள்! அறியவில்லை போலும்.

    இன்னுமொரு விசயம். ஹொலண்டில இருந்து இறக்கின விதைகிழங்கு தெற்குக்கும் மஹாஇலுப்புலம விதைகிழங்கு வடக்கிற்கு…..இவ்வாறு விதைகிழங்கில் இருந்து பூச்சிநாசினி உரம் பெற்றா சந்தை வரை எப்படி அரசியல் விளையாடியது என்பது வரை எனக்குத்தெரியும்.

    விவசாயக்கிராமத்தில் பிறந்து, அக்கிராமத்தில் கல்விகற்று குண்டசாலை விவசாயக்கல்லூரி வரை சென்றுவந்தவன் நான்.

    Reply
  • shantha
    shantha

    கடந்த 29 புலிகளால் கொல்லப்பட்ட ஒரு அதி சிறந்த புத்திஜீவி நீலன் திருச்செல்வம் மறைந்த தினம்! அதை இந்த தேசம் மறந்தது புலிகள் நீலனை கொன்றதை ஆமோதிக்கும் செயல் போல் உள்ளது.

    Reply
  • பல்லி
    பல்லி

    சாந்தன் எமக்கு எது தேவை என்பதை விடமற்றவர்களுக்கு அது கிடைத்து விட்டது அது ஏன் எமக்கு இல்லை என்பதுதான் உமதுவாதம், ஆனால் பார்த்திபன் சொல்லுவது தரப்படுத்தலையும் பலர் தமக்கு சாதகமாக எடுத்து முன்னுக்கு வந்துள்ளனர்;அதுக்கு முத்தையன் கட்டு, விசுவமடு; ஒடயார் கட்டு போன்றவை உதாரனமே; பல்லியால் மறக்க முடியாட்க விடயம் தலித் மகாநாட்டில் ஜெயபாலன் சொன்னார், இட ஒதுக்கீடு வேண்டாம்; தரமான கல்வியை கொடுங்கள்; முட்டி மோதி நாமும் முன்னுக்கு வருவதற்க்கு; இந்த பிச்சை போல் இட ஒதுக்கீடு என்பது கூட ஒரு விதமான அடிமதனம்தானே; ஆக எமக்கு கல்வி வேண்டும்; அதை யார் கொடுத்தாலும் பாராட்டலாமே;

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    பல்லி,
    எமக்கு நியாயமாக கிடைக்கவேண்டியது கிடைக்கவில்லை என்பதுதான் எனது வாதம். எம்மில் பரிசோதனை செய்துபார்த்து சரிவந்தவுடன் எம்மை வெட்டி மற்ரவ்ர்களுக்கு வழங்குவது பற்றியே எனது ஆதங்கம். போராட்டம் என்பது நீதி வழங்காமையினாலே வருவது என்பதை கொமினிச புத்தகங்களில் கூட படிக்கலாம். ரஷ்யப்புரட்சி சம்பந்தமான நூல்களில் விவசாயப்பொருட்களை சார்மன்னன் நியாய விலை கொடுக்காமல் தடுத்து தனது சொந்த பந்தங்கள் வாழும் நாடுகளுக்கு ‘ஏற்றுமதி’ செய்ததைப் பற்றி வருகிறதே?
    எனக்கு கிடைக்காததை மற்றவனுக்கு கிடைத்துவிட்டதே என்ற வாதததின்படி பார்க்கலாமா?
    ஆம், ஜெயபாலன் என்ன சொன்னார்? முட்டி மோதி முன்னுக்கு வருவோம் என்றல்லவா? முட்டி மோதி முன்னுக்க வரவிடாமல் சுவர் கட்டியது யார்? கொஞ்சம் சிந்தியுங்கள்!

    Reply
  • பல்லி
    பல்லி

    சாந்தன் பல்லி சிந்திக்க முயற்ச்சிக்கிறேன்; அதுக்கு முன் ரஸ்யாவில் உதாரனம் சொல்லும் அளவுக்கு என்ன இருக்கு; மாவியாவின் மிக பலமான நாடே ரஸ்யாதான் என்பது தெரிந்து கொண்டதல்ல எம்மவரின் அனுபவம்; பல்லி அடிக்கடி சொல்வேன்; உதாரனத்துக்கு வேறு நாட்டுக்கு விமானம் ஏறாதீர்கள்; பலநாடுகளுக்கு உதாரனம் சொல்லும் அளவுக்கு எம்நாட்டில் சரக்கு இருக்கு;

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    பல்லி,
    ஆம் மிகச்சரியாகச் சொன்னீர்கள். கோடி நன்றிகள். நான் சொன்னதை சரியாகப் புரிந்து கொள்லாமல் விளக்கம் கேட்போருக்கு சொன்னதே ரஷ்ய உதாரனம். 1970களின் யாழ்ப்பாண விவசாயிகளைக் கேளுங்கள். நல்ல உதாரனம் சொல்வார்கள். அதில் ஹொலண்ட் நாட்டின் வூல்ஃப் & வூல்ஃப்ம் மஹாஇலுப்புலமவும் (MI) சொற்பதங்களாக அடிக்கடி வந்து போகும். அவற்றை எல்லாம் எமக்கு கிடைக்கவில்லை என்ற வயித்தெரிச்சலில் சொல்கிறீர்கள் என அவர்களின் முகத்துக்கு முன்னர் சொல்லிப்பாருங்கள். இல்லாவிட்டால் இரவிரவாக பொயிலைக் கன்றுக்கும் சின்ன வெங்காயத்துக்கும் இறைத்து இறைத்து பிள்ளைகளை கல்விகற்க (முட்டி மோதி)வைத்து இறுதியில் ‘தரப்படுத்தலாமே அது என்ன’ என விளக்கம் கேட்ட விவசாயியிடம் சொல்லிப்பாருங்கள். வேதனையுடன் ஐ.சி.எம்.ஏ படித்து (முட்டி மோதி) சவூதி அரேபியா சென்று பணம் சம்பாதித்து மீண்டும் வந்த போது கஸ்ரம்ஸில் ‘கணக்கு வெட்டிய’ கதை சொன்னவருக்கு சொல்லிப்பாருங்கள்!……….

    Reply
  • sarana
    sarana

    மக்களைத் திருப்திப்படுத்த முடியாத வளங்கள் பற்றாக் குறைகளோடு உள்ள நாடு இந்த நாட்டில் போட்டி முறையில் தேர்ந்தெடுக்கும் அரசாங்க நிர்வாகம். இதுதான் அரசியந்திரத்தை இயக்கும் சாரதி காலத்துக்குக் காலம் மாறி மாறி இரண்டு சாரதிகளிட்ம் நாடு ஒப்படைக்கப் பட்ட தடவைகளில் கணிக்கப்பட்ட அனுபவம் மக்களோடுள்ளது. தேசத்திலும் தேசிய உற்பத்திகளிலும் யூ.என்.பி யை விட பாரிய அளவு அக்கறை காட்டியது சிறீலங்கா சுதந்திரக் கட்சி! யாரும் மறுப்பதற்கில்லை. எதிலுமே தழிழ் மக்களுக்குதவாத விதேசியப் போக்குள்ள யூ.என்.பி யை நேசிக்கும் மனப்பாங்கு தமிழாpடம் வளர்க்கப்பட்டது.
    தேர்தலின் வெற்றிக்காக இறக்குமதிக் கொள்கையின் இறுக்கம் எஸ்.எல்.பி யிடம் தளர்தப்பட்டிருக்கலாம். பாராளுமன்ற ஆட்சிக் கட்சிகளில் இந்தப் போக்குகள் அதிசயமொன்றுமில்லை. தரப்படுத்தல் பற்றிய குசும்பு பேசும் போதும் இதிலே தான் போர் ஆரம்பித்தது என்ற போதும். இனத் தரப்படுத்தல் என்ற போதும் நாம் அனைவருமே அடிப்படையை இருட்டில் மறைத்ததைக் கண்டுகொள்ளத் தவறியவர்கள். தரப்படுத்தல் ஆரம்பித்த ஆண்டில் மட்டும் தகுதி பெற்றவர்களில் 7400 மாணவ்கள் நுழைய இடமின்றி வெளியே விடப்பட்டவர்கள் இது அரசின் பற்றாக்குறை இது பற்றிப் பேசவேண்டிய என்ணிக்கை கூட இருந்தும் இன்று வரை யாரும் பேசவில்லை.

    விவசாயப் பட்டதாரி சாந்தனுக்கு தொpந்திருக்க வாய்புண்டு 1976 ஆண்டில் சீதாஎலிய ஆராச்சி நிலையத்திலிருந்த உ.கிழங்கு ஆய்வுக் குழு(ஜேர்மன்) திருப்பி அனுப்பப்பட்டது இலங்கையில் கிழங்குற்பத்தி இயலாது என்பது அக்குழுவின் அறிக்கை! பொறுப்பைப் பின்டோ அவர்கள் கையிலெடுத்தார் இளைய எம்நாட்டு விவசாய விஞ்ஞானிகளால் இண்டாண்டில் ஆயிரக்கணக்கான ஏக்காpல் அறுவடை. ஜேர்மனியின் இறக்குமதி நிறுத்தப்பட்டது. வெலிமடை மாத்திரமல்ல வடக்கிலும் செய்யலாம் என்பதற்கு ஆய்வு மையமாகக் பாவித்தது மகாஇலுப்பள்ளம. விதை கிழங்குகளும் வடக்கிற்கு அங்கிருந்து தான் வழங்கப்பட்டன. காலநிலை சமன் பாட்டுச் செயலும் அதுதான். இதை கருத்திலெடுக்காமல் கொலண்ட் விதைகிழங்கை வேண்டுமென்றே அரசு வெலிமடைக்கனுப்பாpயதாக எழுதுவது…..?

    இவைகள் மேற்படி கட்டுரையில் எந்த அளவு பொருந்தும் பின்னூட்டம் என்பது கேள்வி என்ற போதும் பின்னூட்டங்களைவிடும் அன்புக்கினியவர்களே உங்கள் இழுபறிகளை அல்லது கருத்துக்களை வாசிப்பவர்களிட் கொடுக்க எத்தனிக்காதீர்கள்.
    அடிப்படை என்ன என்று ஒவ்வொரு பிரச்சனைக்கும் பார்ப்பதும் தெளிவாக ஒன்றைத் தொpந்தபின் எழுதுவதும் சமூக ஆரோக்கியத்துக்கு எழுதும் யோக்கியவான்களாக்கும்
    நாய்கு எங்கு கல்லெறி பட்டாலும் காலைத்தான் து}க்கும் என்பது போல எதுக்கெடுத்தாலும் சிங்களப் போpனவாதம் சிங்கள அரசு என்று முடிச்போட்டாவது பழி சொல்லும் பாங்கை இனியாவது வைவிடுங்கள் நூர்க்க உதவவேண்டிய பொறுப்பு ஒவ்வொருவருக்கும் உள்ள போது இன நெருப்பை ஊதிப் பெருப்பிக்காதீர். எந்தப் பக்கம் ஊதினாலும் எரியும் இடைவெளி கூடும்! இது சில கட்டுரையாசிரியாpடமும் காண்பதை அவதானிக்கமுடிகிறது.
    இதை ஒரு சராசாp மனிதனாகச் சொன்னேன் ஏற்பதோ இனத் துரோகியாக்கிப் பார்ப்பதோ அவரவர்க்கமைந்த அறிவு.

    Reply
  • பல்லி
    பல்லி

    //நாய்கு எங்கு கல்லெறி பட்டாலும் காலைத்தான் து}க்கும் என்பது போல எதுக்கெடுத்தாலும் சிங்களப் போப்னவாதம் சிங்கள அரசு என்று முடிச்போட்டாவது பழி சொல்லும் பாங்கை இனியாவது வைவிடுங்கள் //

    சரன் உங்கள் கருத்தில் எனக்கும் உடன் பாடுதான் அது யார்த்தம் கூட ஆனால் அரசை மட்டுமல்ல எதுக்கெடுத்தாலும் புழிகரைப்பது தவிர்க்கபட வேண்டியதுதான்; காரனம் நாம் எதை பேச முற்படுகிறோமே அதில் புலி சிங்கத்தை உள்வாங்குவதால் (எல்லா இடத்திலும் அல்ல)நாம் பேச முனையும் விடயம் கோவிந்தா ஆகி விடுவதை பல கட்டுரையிலும் பின்னோட்டத்திலும் பார்க்கலாம்;

    Reply
  • மாயா
    மாயா

    saranaவின் கருத்துகள் உண்மையிலேயே பலரும் சிந்திக்க வேண்டியது. சிங்கள அரசுகள் தவறு செய்யவில்லை என்று சொல்ல நான் வரவில்லை. சிங்கள அரசுகளுக்கு அத் தவறுகளை செய்ய அறிவுரை வழங்கியது யார் என்று தேடினால் அது ஒரு தமிழனாகவே இருக்கும். அதை புலத்திலும் நம்மால் அவதானிக்க முடியும் அல்லது நமக்கு அப்படியான வேதனை தரும் நிகழ்வுகள் நடந்திருக்கும் அல்லது நாம் அப்படியான வேதனை நிகழ்வுகளை அடுத்தவருக்கு கொடுத்திருப்போம். இதை யாரும் இல்லை என்று நிராகரிக்க முடியாது.

    புலத்தில் இந்நாட்டு மக்களுக்கு எம்மை பற்றி அதிகம் தெரியாது. இருந்த போதும் நாம் உதவியொன்றுக்காக போகும் போது நமக்கு இடைத் தரகர் போல் மொழி பெயர்ப்பாளராகவோ அல்லது நமது பிரச்சனைகளுக்கு உதவுவது போலவோ இருப்பவர்கள் , அவர்களது உணர்வுகளை அந்த நாட்டு மக்களிடம் திணிக்கின்றனர். அதுவே உதவி கேட்டுச் செல்வோருக்கு வினையாகி விடுகிறது. அங்கே அந்த இடைத்தரகரான தமிழர்தான் பிரச்சனையானவருக்கு பிரச்சனை கொடுக்கிறார். இவற்றை நாம் வேலை செய்யும் இடங்களிலும் காணமுடியும். இது தமிழரது ஜீன்களில் உள்ள பிரச்சனையென்றே நினைக்கிறேன்.

    இது போன்ற தமிழர்களே சிங்கள தலைவர்களுக்கு பெரும்பாலும் ஆலோசகர்களாக அல்லது இடைத் தரகர்களாக இருந்து தமிழர் சீரழிவுக்கு காரணமாகி உள்ளனர். உங்கள் பிரச்சனையை நேரடியாக சிங்களவரோடு தீர்த்துக் கொள்வதற்கும் ஒரு தமிழர் ஊடாக தீர்த்துக் கொள்வதற்கும் வேறுபாடு உண்டு. சிங்களவன் பாவம் பார்த்து ஒரு காரியத்துக்கு உதவுவான் என்றால் தமிழன் அவன் மகளுக்கு சீதனம் கொடுப்பதை கருத்தில் கொண்டே பணிக்கு வருகிறான். லஞ்சம் என்பது கூட தமிழனிடம் இருந்து சிங்களவன் கற்றுக் கொண்டதுதான். ஆரம்ப காலங்களில் சிங்கள போலீஸாரை விட தமிழ் போலீஸாரே மோசமானவர்கள். தமிழர்களுக்குள் அந்த எரிச்சல் குணம் அதிகம். அதை சுயநலம் கலந்த ஒரு இனமாக எடுத்துக் கொள்கிறேன். அது அடிப்படை வேலி அமைப்பதிலிருந்து அரசியல் வரை தொடர்கிறது.

    இயக்கங்கள் கூட தமிழருக்காக போராட இறங்கின. ஆனால் அதற்குள்ளும் நாங்கள்தான் இருக்க வேண்டும் எனும் சுயநலம். தமிழ் அரசியல் கட்சிகள் தமிழருக்காக போராடுவதாக சொல்கின்றன. அவர்களும் தாங்கள் மட்டுமே வாழ வேண்டும் எனும் சுயநலம். இதனால் நடந்த அழிவுகள் விபரிக்க முடியாதவை. அதை யாவரும் அறிவர்.

    புலத்தில் கூட புலிகளைத் தவிர வேறு எந்த ஒரு அமைப்பும் அல்லது ஒரு சிறு சங்கம் கூட அமைக்க முடியாதபடி சுயநலம் தலைக்கேறித் திரிந்தார்கள். கல்வி குறித்து பேசுகிறீர்களே , புலத்து தமிழ் பாடசாலைகளில் பெரும்பாலானவை புலிகளது. ஒன்று யாரோ செய்ததை பறித்தது அல்லது அவர்கள் ஆரம்பித்தது. அங்கே யாரால் கல்வி கற்க முடியும்? புலி ஆதரவாளர்களுக்கு மட்டுமே?

    இவர்கள் பரீட்சைகளை நடத்துகின்றனர். இவை அங்கீகரிக்கப்படாத பரீட்சைகள். புலிகளையே அங்கீகரிக்காத உலகம் புலிகளது சான்றிதழ்களை அங்கீகரிக்குமா? அவர்களது புத்தகங்களிலும் புலி புராணம் எப்படியோ திணிக்கப்பட்டுள்ளது. இங்கும் பொது கல்வி தகமைகளை வளர்ப்பதை விட இவர்களது சுயநலத் தேவைகளுக்காகவே இவற்றை நடத்துகின்றனர். இவை எதிர்கால சமுதாயத்தை முட்டாள் ஆக்கும் செயல். இங்கு பிறந்த குழந்தைகள் எதையும் உண்மை என நம்பும் மனப்பான்மை கொண்டவர்கள். அவர்களிடம் திணிக்கும் கருத்துகள் அவர்களை அறியாமல் அவர்கள் உள்ளத்திலேயே விஷத்தை உருவாக்குகிறது.

    கூட்டமைப்பு அரசியல்வாதிகளைப் பாருங்கள். இவர்களிடம் எங்கே நேர்மை? சாகப் போகும் போது கூட தனது பென்சன் பணத்துக்காக கதிரைகளை கெட்டியாக பிடிக்கும் சுயநலக் கருத்துகளே உணர்ச்சிவசப்படுத்தல் ஊடாக கக்கப்படுகின்றன. இப் பேச்சுகள் கூட அவர்களது வாக்கு கவரும் பேச்சுகளேயன்றி, உண்மையான பேச்சுகளேயல்ல.

    பிரபாகரனதும் வன்னி புலிகளதும் அழிவுக்கு பின் புலத்தில் நிலை அனைவரும் அறிந்தது. இன்றைய புலத்து புலிகள் கூட தமது வருவாயை நோக்காகவும் , தமது இருப்பை நோக்காகவும் கொண்டு நடந்து கொள்கிறார்களே தவிர மக்கள் குறித்து எந்த உண்மையான கரிசனையும் இல்லை.

    தமிழ் ஊடகங்கள் கூட , மக்களிடம் உண்மையான நிலவரத்தை கொண்டு செல்வதை விட்டு , மக்கள் எதை விரும்புகிறார்களோ , அதற்கு தேவையான நிகழ்வுகளைக் கொண்டு வந்து தம்மை செழுமைப்படுத்திக் கொள்ளவே கருத்துகளையும் நிகழ்வுகளையும் கொண்டு வருகின்றனர். இவர்களால் தமிழரை சிந்திக்க வைப்பதை விட தமிழரை உணர்ச்சி வசப்படுத்துவது இலகுவாக இருக்கிறது. அதனூடாகத்தான் இவர்களால் லாபம் சம்பாதிக்க அல்லது பணம் பார்க்க முடிகிறது.

    நமது பிரச்சனைகளுக்கு நாம்தான் பிரச்சனையாக இருக்கிறோம், வேறு எவருமில்லை. அதற்கு நாம் முதலில் பரிகாரம் தேட வேண்டும். நமது பிரச்சனையை தீர்த்துக் கொண்டு அடுத்தவரிடம் போக வேண்டும். அதுவரை நமது பிரச்சனைகள் தொடரவே செய்யும்.

    மணமுடிக்கும் இருவர் மனங்களில் உள்ள பிரச்சனையை சரிசெய்வதை விடுத்து மணமுடித்து வைத்தவர் ராசி சரியில்லை என்பது போன்றது நம்மவர் பிரச்சனைகள்.

    இவை தீரும். அதற்கு இன்னும் 20 முதல் 30 வருடங்களாவது ஆகும். இப்போதுள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியினரும் , கூட்டமைப்பினரும் , புலிகளின் மீதியுள்ள தலைமைகளும் , ஏனைய கட்சி தலைமைகளும் , தற்போதைய சிங்கள தலைமைகளும் அழிய வேண்டும். அதற்கு அடுத்த காலத்தில் வரும் தலைமுறை நிச்சயம் சிந்தித்து செயலாற்றும். அவர்கள் இவர்களை நம்மை விட மோசமாக விமர்சிப்பார்கள். அவர்கள் இவற்றை நிச்சயம் சரி செய்வார்கள். உலக மாற்றத்தை பாருங்கள். அது போன்ற மாற்றம் ஒன்று நம் நாட்டிலும் உருவாகும். காலம் எடுக்கும். புலத்து தமிழர் கருத்துகளை அங்கு வாழும் சமூகம் பெரிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. அவர்களை விட இவர்களுக்கு எதுவுமே தெரியாது. இவர்கள் வந்த காலத்துப் பிரச்சனை மட்டுமே தெரியும். அடுத்ததெல்லாம் ஊடகத்தில் எந்த இணையத்தில் செய்திகளை படிக்கிறார்கள் என்பதைப் பொறுத்தே அவர்களது அறிவு உள்ளது.

    யதார்த்தத்தை அந்த மக்களே உணர்ந்து தமது பாதையை வகுக்க வேண்டும். அதற்காக புரட்சிகள் என்று சாவுகள் இனி தேவையற்றது. இதுவரை செத்தவர்களும் இப்போது சாவோரும் சாகட்டும். அதை தடுக்க எவராலும் முடியாது. அடுத்து மிஞ்சும் மக்கள் நலமாக வாழும். அது இயற்கையின் நியதி.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    சாரணா,
    நீங்கள் சொல்வது போல் நான் விவசாயப்பட்டதாரி அல்ல. குண்டசாலை சென்று 1983 ஜூலையில் திரும்பி வந்தவன்.

    நீங்கள் கூறுவது போல் வெலிமடை, மஹா இலுப்புலம ‘காலநிலை சமச்சீர்’ காரணமாக யாழுக்கு வழங்கப்பட்டதாயின் ஏன் இரண்டு பெட்டி மஹாஇலுப்புலம விதை கிழங்கு வாங்கினால் தான் ஒரு பெட்டி ஹொலண்ட் கிழங்கு கிடைக்கும் என்று சொன்னார்கள். எம்மிடம் உண்மை சொல்லி இருக்கலாம் தானே?

    மற்றும் அக்காலத்து விவசாயிகளிடம் (விவசாயப் பட்டதாரிகளிடம் அல்ல) கேளுங்கள் எது சிறந்த விதை கிழங்கு என்று? மஹா இலுப்புலம கிழங்கின் தோல் மெல்லியது எனவே கூடிய நாட்கள் சேமிப்பில் வைக்க முடியாது. ஒரேயடியாக அறுவடை செய்யும் கிழங்கு விலைச் சரிவு ஏற்படும். இறக்குமதி செய்யப்பட்ட கிழங்கின் தோல் கடினமானது அதிக நாட்கள் சேமிப்பில் இருக்கும் எனவே வினியோகம் கட்டுப்பாட்டில் இருப்பதால் விலை குறையாது! கோண்டாவில், இணுவில், உரும்பராய், போன்ற ஊர்களின் விவசாயிகள் புலம்பெயர்ந்து இருக்கிறார்கள், கேட்டுப்பாருங்கள்

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    பல்லி,
    ‘…நாம் பேச முனையும் விடயம் கோவிந்தா ஆகி விடுவதை பல கட்டுரையிலும் …’
    இதே கருத்து எனக்கும் உண்டு. தேசத்தில் உள்ள குறைபாடுகளில் இதுவே மிகப் பெரியது. இதுபற்றி நான் ஜெயபாலனிடம் கேட்டிருந்தேன்.
    மட்டுமல்ல சிலர் இங்கே கருத்தெழுதும்போது ஆதாரமில்லாமல் எழுதுவார்கள்………….

    Reply