கைதான பத்மநாதனின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த அனைத்துலக சமூகம் தலையிடவேண்டும்: வி. உருத்திரகுமாரன்

rudrakumaaran_v.jpgதமிழீழ விடுதலைப்புலிகளின் சர்வதேசப் பொறுப்பாளர் பத்மநாதன் மலேசியாவில் கடத்தப்பற்றமை தொடர்பாக நாடு கடந்த தமிழீழ அரசு அமைப்பதற்கான செயற்குழுவின் இணைப்பாளர் வி. உருத்திரகுமாரன் விடுத்துள்ள ஊடக அறிக்கையில், பத்மநாதனின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த அனைத்துலக சமூகம் தலையிடவேண்டும் என அறைகூவல் விடுத்துள்ளார்.  மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு வடிவம் வருமாறு:-

திரு.செல்வராசா பத்மநாதன் மலேசியாவிலிருந்து சட்டவிரோதமாக கடத்தப்பட்டமை

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புதிய அரசியல் இராஜதந்திரப் பாதையைத் தலைமைதாங்கி வழிநடத்தி  வந்த திரு.செல்வராசா பத்மநாதன் அவர்கள் ஓகஸ்ட் 5ம் நாள் தாய்லாந்தில் வைத்துக் கைது செய்யப்பட்டு  இலங்கைத் தலைநகர் கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டதாக அதிகாரிகளை ஆதாரம் காட்டி  இலங்கை மற்றும் அனைத்துலக ஊடகங்களில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்து நாட்டில் எல்லைக்குள் இவ்வாறான கைது நடைபெற்றதென்பதை தாய்லாந்து அரசு மறுத்துள்ளது. மேலும் திரு பத்மநாதன் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் வைத்துக் கடத்தப்பட்டதாக சில ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நெருக்கமானவர்கள் உட்பட, தமிழ்ச் சமூகத்தில் பல்வேறு தரப்புகளிடமிருந்து பெறாப்பட்ட தகவல்களின் அடிப்படையில், கோலாலம்பூரில் உள்ள ‘ரியூன்’ விடுதியில் இக்கடத்தல் நடத்தப்பட்டதாக நாம் அறிகின்றோம். இவ்வாறான சட்ட விரோத நடவடிக்கை, இலங்கையின் இராணுவப் புலனாய்வுத் துறையினரால், மலேசிய பாதுகாப்பு அல்லது புலனாய்வு நிறுவனத்தின் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்டதாக நாம் கருதுகின்றோம்.

திரு.செல்வராசா பத்மநாதன் அவர்களின் இயற்பெயர் இன்ரர்போலின் தேடப்படுவோர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாயின் அனைத்துலக அரசுகள் அவற்றின் துறைகளினால் மேற்கொள்ளப்படும் எவ்வகையான கைது நடவடிக்கைகளும் உள்நாட்டு சட்ட ஒழுங்கு நடைமுறைகளுக்கும் அனைத்துலக சட்ட ஒழுங்குகளுக்கும் அமைவாக மேற்கொள்ளப்பட வேண்டுமென்பதை நாம் தீர்க்கமாக நம்புகின்றோம்

திரு.செல்வராசா பத்மநாதன் சித்திரவதைகளுக்கெதிரான சட்டமுறையின் மூன்றாம் சரத்திற்கு அமைய பாதுகாப்பு உரிமை உடையவர். அதன்படி எந்தவொரு நாட்டிலும் ஒருவர் சித்திரவதைக்குட்படுத்தப்படும் சாத்தியமிருந்தால் அந்நாட்டுக்கு அவர் எடுத்துச் செல்லப்படுதல் தடைசெய்யப்படுகிறது.

இவ்விடத்தில், அனைத்துலக நடைமுறைகள் தமிழர் விடயத்தில் மீளவும் சட்ட நியமங்களை மீறியதையே காண்கின்றோம். திரு.பத்மநாதன் அவர்கள் சட்டங்கள் எதனையும் மீறியிருந்தால் சட்ட நியமங்களுக்கு அப்பாற்பட்டு சூறையாடும் கூட்டங்கள் காடையர் மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுக்கள் போலியங்கி அவரைச் சிறைபிடிப்பதற்கு பதிலாக நாடு கடத்தலுக்கான ஆணையைப் பெற்று அவரைக் கையேற்பதே சரியான முறையாக இருந்திருக்கும்.

திரு.செல்வராசா பத்மநாதன் அவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அரசியல் மீள் உருவாக்க முயற்சிகளின் மிகத் தீவிரமாக ஈடுபட்டிருந்தார் என்பதையும் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைகளுக்கான போராட்டத்தினை அரசியல் இராஜதந்திர அணுகுமுறைகளை நோக்கி வழிநடத்திக் கொண்டிருந்தார் என்பதையும் குறிப்பிட  விரும்புகின்றோம்.

இப்பணியில் அவர் பெரும் சவால்களை எதிர்கொண்டிருந்த போதும் இலங்கைத் தீவில் தமிழர்களுக்கான நீதியான அரசியல் எதிர்காலம் நோக்கிய நகர்வினை நம்பிக்கையுடனும் தீவிர மன உறுதியுடனும் முன்னெடுத்து வந்தார். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினை மக்கள் வாக்களிப்பின் மூலம் உறுப்பினர்களைத் தெரிவுசெய்வதற்கான அடிமட்டத்திலிருந்து உருவாகுமொரு சனநாயக நிறுவனமாக ஏற்றுக்கொள்வதன் மூலம் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு மக்களாட்சி வழியானதொரு தலைமைத்துவத்தை கட்டியெழுப்புவதை அவர் ஆதரித்தார்.

திரு.பத்மநாதனை வழிப்பறிக் கும்பலினரது பாணியில் கைப்பற்றியவர்கள் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட இந்த அரசியல் மீளுருவாக்க முயற்சியைத் தடுக்கவே விரும்புகின்றனர். ஆயினும் தமிழீழ மக்களின் சுயநிர்ணய உரிமையை வென்றெடுப்பதற்கான தமிழீழ தேசியச் செயற்றிட்டம் ஒரு தனிமனிதனின் ஆற்றல் அர்ப்பணிப்பில் மட்டும் தங்கியிருப்பதில்லை என்பதால் எண்ணிலடங்காத பற்றுறுதி மிக்க பலரது உழைப்பின் மூலம் இத்திட்டம் வெற்றி கிட்டும்வரை தொடரும் என்பது உறுதி.

திரு.பத்மநாதன் அவர்கள் மலேசிய அதிகாரிகளின் உதவியுடன் கடத்தப்பட்டிருப்பின் அக்கடத்தல் தொடர்பான விபரங்களை வெளியிடுமாறு மலேசிய அரசாங்கத்தினை உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் சார்பாக நாம் வேண்டுகின்றோம். மலேசிய அரசாங்கத்திடம் இது விடயத்தில் தகவலேதும் இல்லையெனில் நடந்தேறிய இச்சட்ட விரோத கடத்தல் தொடர்பான விசாரணைகளை மலேசிய அரசாங்கம் முன்னெடுக்க வேண்டுமென நாம் உறுதியாக வேண்டி நிற்கின்றோம்.

திரு.பத்மநாதன் அவர்கள் இலங்கை அரசாங்கம் கூறுவது போல் கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டிருந்தால் அனைத்துலக நியமங்களுக்கமைய அவரது பாதுகாப்பினை உறுதிப்படுத்தவும் அவருக்கு வேண்டிய சட்ட அறிவுரைகளைப் பெறுவதற்குரிய வாய்ப்பினை ஏற்படுத்தவும், அனைத்துலக சமூகம் இதில் தலையிட வேண்டுமெனவும் நாம் அறைகூவல் விடுக்கின்றோம்.

இலங்கை அரசு ஏலவே மூன்று இலட்சம் தமிழ் மக்களை நாசி முகாம் வகையிலான வதைமுகாம்களில் கால வரையறையின்றி தடுத்து வைத்திருப்பதையும் இது விடயத்தில் கவனத்தில் கொண்டுவர விரும்புகின்றோம். திரு.பத்மநாதன் அவர்களது உயிர்ப் பாதுகாப்பு தொடர்பாக அஞ்சுவது போலவே இந்த மக்களது பாதுகாப்பு தொடர்பாகவும் நாம் அஞ்சுகின்றோம்.

இதனால் இம்மூன்று இலட்சம் மக்களின் பரிதாப நிலைக்கு விரைவில் தீர்வுகாண்பதிலும் திரு.பத்மநாதன் அவர்கள் எல்லாவித அனைத்துலக  விழுமியங்களுக்கமைய பாதுகாப்பினை பெறுவதையும் உறுதிப்படுத்துமாறு அனைத்துலக சமூகத்தை வேண்டி நிற்கின்றோம்.

இவண்

விசுவநாதன் உருத்திரகுமாரன்
இணைப்பாளர்
நாடு கடந்த தமிழீழ அரசு அமைப்பதற்கான செயற்குழு

Show More
Leave a Reply to thurai Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

11 Comments

  • மெனிக் தாசன்
    மெனிக் தாசன்

    ஒரு பூச்சியைக் கூட இவ்வளவு ஈஸியாக யாராலும் பிடித்திருக்க முடியாது. பைவ் ஸ்டார் கொட்டல் வாழ்க்கை பழகிப் போனதால் ஒரு போராளிக்கு இருக்க வேண்டிய கவனமும் இல்லாமல் போயிட்டுது… விடுதலை பற்றிய சிந்தனை மறந்து போய் இன்டர்னஷல் பிஸினெஸ் பார்த்ததால் வந்த வினை.. சமுக விரோதக் கும்பலுக்கு எல்லாம் குரல் கொடுக்க அவுங்களும் உங்களை மாதிரி வேலை வெட்டியில்லாமல் அலையுறாங்களா?

    Reply
  • mike
    mike

    நிரபராதிகள் தண்டிக்கப்படலாகாது, ஆனால் குற்றவாளிகள் தப்பிவிடலாகாது.
    for every action there is reaction and for every reaction there is rereaction.

    Reply
  • thurai
    thurai

    கள்வர்களையும்,கொலைகாரர்களையும் காப்பாற்ரிய வக்கீல்பரம்பரை. இப்போது தமிழீழ அரசொன்றினை புலத்தில் அமைத்து உலகத்தமிழரை ஏமாற்ரி வாழ்வோரை காக்கப் புறப்படுகின்றனர்.

    துரை

    Reply
  • Tamil
    Tamil

    எங்கேயோ இடிக்கிறதே! இதுதான் பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டுவதென்பதோ!!

    Reply
  • ANITHA PRATHAP
    ANITHA PRATHAP

    /The oath of affirmation I took with my leader and other military leaders after the heroic death of our senior leaders including Kumarappa and Pulendran still lives in me as an unflickering flame. In fact, I too should have been on the boat “Kadal Pura” that had carried Kumarappa, Pulendran and other cadres. On that fateful day, my leader had called me to travel with him and I had obliged. If not, I too would have attained martyrdom on that occasion-SELVARAJA PADMANATHAN–http://ltteir.org/?p=101/
    —WHY Mr.PADMANATHAN(KP),DIDN’t OBLIGED HIS OATH WITH HIS LEADER WHEN HE WAS GET CAUGHT AT A HOTEL IN MALAYSIA?.

    Reply
  • மாயா
    மாயா

    தன்னையே காப்பாற்றிக் கொள்ள முடியாத தலைவர்கள், தன் மக்களை எப்படிக் காப்பாற்றப் போகிறார்கள்? இது அனைவராலும் எழுப்பப்படும் கேள்வியானால் , தற்போதைய நிலையை உணரலாம்.

    இருக்கும் தமிழரையாவது நிம்மதியாக இருக்க தேவையற்ற போராட்டங்களை தற்காலீகமாகவாவது நிறுத்துங்கள். யுத்தம்தான் ஓய்ந்துள்ளதே தவிர களையெடுப்புகள் தொடர்கின்றன. இவை உக்கிரமடைய புலம் பெயர் நாட்டிலுள்ளவர்களது பேச்சுக்களே காரணமாகியுள்ளன. புலத்தில் உள்ளவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள். நாட்டில் பலரது நிலை உயிர் உத்தரவாதமற்று இருக்கிறது.

    அவர்களை நிம்மதியாக வாழவைப்பது புலம் பெயர்ந்தோர் கைகளிலேயேதான் இருக்கிறது.

    Reply
  • ஊடக அறிக்கை
    ஊடக அறிக்கை

    ஊடக அறிக்கை
    தலைமைச் செயலகம்
    தமிழீழ விடுதலைப் புலிகள்

    தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு.வே.வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களால் அனைத்துலக உறவுகளுக்கான செயலகத்தின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டவரும், எமது விடுதலைப் போராட்டத்திற்கான அடுத்த கட்ட அரசியல் இராஜதந்திர நகர்வுகளுக்குப் பொறுப்பாக இருந்தவருமான செல்வராசா பத்மநாதன் அவர்களை சிறீலங்கா அரசாங்கம் கடந்த 05-08-09 அன்று மலேசியாவிலிருந்து பலவந்தமாக கடத்திச் செல்லுள்ளமையானது உலகத் தமிழ் மக்கள் அனைவரையும் பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

    இறுதிப்போர் என்ற பெயரில் ஈழத் தமிழ் மக்கள் மேல் சிறீலங்கா அரசாங்கம் கட்டவிழ்த்துவிட்ட இனப்படுகொலையின் உச்சக்கட்டமாக இவ்வருடம் மேமாதப் பகுதியில் வன்னியில் இருந்த ஒட்டுமொத்தத் தமிழர்களையும் கொன்றழிக்கும் நோக்கோடு தாக்குதலைத் தீவிரப்படுத்தியபோது, அம்மக்களைப் காக்கும் பெருட்டு எமது ஆயுதங்களை மெளனிப்பதாக அறிவித்திருந்தோம். இதனை நாம் சரிவரக் கடைப்பிடித்து வருகின்றோம் என்பதனை சர்வதேசம் சமூகம் நன்கறியும். தமிழ் பேசும் மக்களின் அடிப்படையான – நியாமான – அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்கான அடுத்த கட்டப் போராட்டத்தை அரசியல் – இராஜதந்திர வழிகள் ஊடாக முன்னகர்த்துவதற்கு பல நாடுகளிடமிருந்து வரவேற்பும் சாதகமான சமிக்கைகளும் கிடைத்துக் கொண்டிருக்கின்றன.

    இந்த நிலையில் திரு.செல்வராசா பத்மநாதன் அவர்கள் நயவஞ்சகமான முறையில் கடத்தப்பட்டுக் கைது செய்யப்பட்டிருப்பதும் எம்மையும் எமது மக்களையும் ஆழ்ந்த துயரத்திற்குள் உள்ளாகியுள்ளது. ஏறக்குறைய மூன்றரை இலட்சத்திற்குக்கும் மேலான மக்களும் போராளிகளும் உலக நியதிகளுக்கு மாறாக சிறையிலடைக்கப்பட்டு சொல்லொணாத் துயரங்களை தினமும் அனுபவித்துக் கொண்டிருப்பதை உலகம் நன்கு அறியும்.

    அவர்களை மீட்டெடுப்பதையே முதன்மை நோக்கமாகக் கொண்டு அதற்குரிய பேச்சுவார்த்தைகளில் பலதரப்புடனும் திரு.செல்வராசா பத்மநாதன் ஈடுபட்டுக்கொண்டிருந்த நிலையில் இந்தக் கைது அரங்கேறியுள்ளது. இதனை நாம் வன்மையாக் கண்டிக்கின்றோம்.

    நாம் அரசியல் அரசியல் இராஜதந்திர ரீதியில் விடுதலைக்கான அடுத்தகட்ட நகர்வுகளை மேற்கொள்ளும் தீர்மானத்திற்கு வந்த பின்னரும் எமது போராட்டத்தை நசுக்கி ஒடுக்கிவிடும் நோக்கில் மேற்கொள்ளும் இத்தகைய நடவடிக்கைகள் தமிழீழ விடுதலைப் புலிகளாகிய எமக்கு தமிழ் மக்களுக்கும் கவலையையும் விசனத்தையும் தருகின்றன. இதுவரை காலமும் ” பயங்கரவாதிகள் ” என்ற சாயத்தை பூசி எமது மக்களின் அரசியல் விடுதலைக்கான போராட்டத்தை மிகப் பாரிய பின்னடைவுக்கு உள்ளாகியிருந்தது சிறீலங்கா அரசு. ஆனால், தற்போது – நாம் எமது ஆயுதப் போராட்டத்தை இடைநிறுத்தி வைத்திருக்கும் புதிய சூழலில் நாம் எடுத்துவரும் அரசியல் முன்னகர்வுகளுக்கு உலகம் உறுதுணையாக இருக்கும் என்று எமது மக்களும் நாமும் நம்பியிருந்தோம்.

    திரு.செல்வராசா பத்மநாதன் அவர்களின் கைது தொடர்பில் அனைத்துலக சமூகம் மனிதாபிமான அணுகு முறையும், பக்கச்சார்பற்ற விசாரணைகளும் கடைப்பிடிக்க வேண்டுமென தொடர்புடையோதை வேண்டிக்கொள்கின்றோம். திரு.செல்வராசா பத்மநாதன் அவர்களின் பாதுகாப்பிற்கான முழுப் பொறுப்பையும் உத்தரவாதத்தையும் கவனத்தில் கொள்ளுமாறு அனைத்துலக சமூகத்திடம் கேட்டுக்கொள்கின்றோம்.

    தமிழீழ விடுதலைப் புலிகளாகிய நாம் இழப்புக்களையும் பின்னடைவுகளையும் கண்டு துவண்டு போய்விடப் போவதில்லை. எவ்வித அச்சுறுத்தல்களுக்கும் அடிபணியாது எமது மக்களின் பேராதரவுடன் எமது இலட்சியப் பாதையில் தொடர்ந்து பயணிப்போம்.

    நன்றி
    ”புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

    ராம்
    செயற்குழு சார்பாக
    தலைமைச் செயலகம்
    தமிழீழ விடுதலைப் புலிகள்

    Reply
  • BC
    BC

    //செல்வராசா பத்மநாதன் அவர்களை சிறீலங்கா அரசாங்கம் கடந்த 05-08-09 அன்று மலேசியாவிலிருந்து பலவந்தமாக கடத்திச் செல்லுள்ளமையானது//

    அது என்ன பலவந்தமாக கடத்தல்? தாங்கள் ஊர் பிள்ளைகளை பலவந்தமாக கடத்திச் சென்று பலி கொடுத்த மாதிரி என்று நினைத்து விட்டார்கள் போல்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    என்ன செல்வராசா பத்மநாதனின் கைதைக் கேள்விப்பட்டு உருத்திரகுமார் மயங்கி விழுந்து, 3 நாட்களின் பின் தான் மயக்கம் தெளிந்து அறிக்கை விட்டிருக்கிறார் போல. இன்று செல்வராசா பத்மநாதனுக்காக குரல் கொடுத்தால்த் தான், நாளை தனக்கேதாவது நடந்தால் கூட யாராவது தனக்கும் குரல் கொடுப்பினம் என்று ஊகிக்கிறார் போல. மொத்தத்தில் இப்ப நாடு கடந்த தமிழீழம் என்னென்ன எல்லாம் செய்விக்கும் என்பது உருத்திரகுமாருக்கு புரிந்திருக்கும்.

    Reply
  • மாயா
    மாயா

    நாடு கடந்த தமிழீழம் , நாடுகளை விட்டும் கடந்து போய்க் கொண்டிருக்கிறது போல இருக்கு.

    Reply
  • thurai
    thurai

    //தமிழீழ விடுதலைப் புலிகளாகிய நாம் இழப்புக்களையும் பின்னடைவுகளையும் கண்டு துவண்டு போய்விடப் போவதில்லை//
    உலகில் கள்வர்கள், கொலைகாரர்கள், ஒழிக்கப்பட முடியாதவர்கள். தமிழினத்தை புலிகளின் விடுதலைப் போரே அழித்தது. அது மட்டுமல்ல புலத்தில் கோடிக்கணக்கில் பணத்தினைச் சுருட்டி தனிப்பட்டவர்கள் பெரும் முதலீட்டினைச் செய்து சுகபோக வாழ்வு வாழ்கின்றார்கள். எனவே புலிகளின் தமிழீழ தாகம் ஓர் தொடர் கதைதான்.

    துரை

    Reply