தமிழ் ஈழம் மலருவதை யாராலும் தடுக்க முடியாது – வைகோ

vaico9999.jpgஇலங் கையில் தமிழ் ஈழம் மலரப் போவது நிச்சயம். அதைத் தடுக்க யாராலும் முடியாது என்று கூறியுள்ளார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ. அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம் சார்பில் மாமன்னன் பூலித்தேவனின் 294-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் சென்னையில் நடந்தது.

டாக்டர் சேதுராமன் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் வைகோ பேசுகையில்,

இந்தியாவில் முதல் சுதந்திர போர் 1857-ம் ஆண்டு நடைபெற்றதாக நம் வரலாறு கூறுகிறது. ஆனால் அதற்கும் 100 ஆண்டுகளுக்கு முன்பே 1750களில் தென் தமிழகத்தில் ஆங்கிலேயரை எதிர்த்து பல வீரம் மிகுந்த போராட்டங்களை நடத்தியவர் பூலித்தேவன்.  ஆங்கிலேயருக்கு மிகப்பெரிய சவாலாக திகழ்ந்தவர் பூலித்தேவன். பூலித்தேவன் வரலாறு புத்தகத்தில் இல்லை. இந்த இருட்டடிப்பை ஜெயலலிதா தலைமையில் நாங்கள் முறியடிப்போம்.

இலங்கையில் தமிழர்கள் படும் துயரங்கள் இன்னும் தொடருகிறது. மத்திய- மாநில அரசுகள் அங்கு நடப்பதை வேடிக்கைதான் பார்க்கிறார்கள். இலங்கையில் தமிழ்  ஈழம் மலர்வதை யாராலும் தடுக்க முடியாது என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

 

5 Comments

 • B J Mariar
  B J Mariar

  கே பி இன்னும் இந்தியாவில் வைகோ, நெடுமாறன் வைத்திருக்கும் புலிகளின் பணம் பற்றியும் முதலிடுகள் பற்றியும் விசாரணையில் தெரிவிக்கவில்லை என நினைக்கிறேன்.

  Reply
 • பார்த்திபன்
  பார்த்திபன்

  கே.பி தங்களை மாட்டி விட்டு விடுவாரென்ற உண்மை தெரிந்து தான் வைகோ, நெடுமாறன் போன்றோர் கே.பி அரசிற்கு விலை போய்விட்டதாக முன்பே அறிவித்து விட்டார்கள். இனி கே.பி இவர்களின் பினாமிச் சொத்துகள் பற்றி வெளியிட்டாலும், கே.பி வேண்டுமென்றே தங்களில் பழி போடுவதாக வைகோ, நெடுமாறன் போன்றவர்கள் மீண்டும் பீலா விடுவார்கள்.

  Reply
 • thurai
  thurai

  அரசியல் வேறு விடுதலைப் போராட்டமென்பது வேறு. தலவர்களின் தலைகளிற்கு ஆபத்து வந்து விட்டால் அரசியலும், விடுதலைப் போராட்டமுமொன்றுதான். (புலிகளின் கொள்கை)

  நேரமொரு கதை,நாளுக்கொரு கொள்கை. புலத்துத் தமிழர்களை ஏமாற்ரிப் பிழைப்போரின் விளம்பரதாரர்களே தமிழ்நாட்டில்ருக்கும் தமிழீழ
  அரசியல்வாதிகள்.

  துரை

  Reply
 • sekaran
  sekaran

  இவர்களின் பேச்சுகளை தேசம் நெட் பிரசுரிக்க வேண்டுமா? தமிழ்நாட்டு பிரபல பத்திரிகைளின் வயிற்றுப் பிழைப்பில் மண்ணைப் போடுவதா? தேசம்நெட் யோசிப்பது நல்லது.

  Reply
 • Stalinistmao
  Stalinistmao

  Prabaharan believed that VaiKo was his man in New Delhi.

  The truth of the matter is VaiKo was Delhi’s man in LTTE.

  We should not confuse issues that relate to Indian interest and those who preserve it.

  Reply