புளொட் நகரசபை உறுப்பினர்கள் பதவி சத்தியப்பிரமாணம்!

vavuniya-plote_MCMs ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)சார்பில் வவுனியா நகரசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டிய வேட்பாளர்கள் இன்று (10.09.2009) காலை நகரசபை உறுப்பினர்களாக பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டுள்ளனர்.

தமிழரசுக் கட்சியின் நீண்டகால உறுப்பினரும் தந்தை செல்வா நற்பணி மன்ற தலைவரும் சமாதான நீதவானும் பிரபல சமூக சேவையாளருமாகிய வை.தேவராஜா முன்னிலையில் திரு.ஜி.ரி.லிங்கநாதன், திரு.சு.குமாரசாமி, திரு.க.பார்த்தீபன் ஆகியோர் நகரசபை உறுப்பினர்களாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட வைபவத்தில் புளொட் அமைப்பின் வன்னி மாவட்ட பொறுப்பாளர் திரு.பவன், வவுனியா மாவட்ட பொறுப்பாளர் திரு.நிசாந்தன், வவுனியா மாவட்ட அரசியல் பொறுப்பாளர் திரு.சிவம் ஆகியோருடன் நகரசபை வேட்பாளர்கள், கட்சி உறுப்பினர்கள், பெரியோர்கள், ஆதரவாளர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

இதன் பின்னர் நகரசபை உறுப்பினர்களும், கட்சி முக்கியஸ்தர்களும், ஆதரவாளர்களும் கோவிற்குளத்தில் அமைந்துள்ள உமாமகேசுவரனின் நினைவு இல்லத்திற்கு சென்று மலரஞ்சலி செலுத்தினர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 Comments

  • Thaksan
    Thaksan

    உமாவின் சமாதிக்கு அஞ்சலி செலுத்தம் இவர்கள் உமாவின் கொள்கைகளையும் கடைப்பிடித்து மக்களின் நலன் நின்று செயற்பட்டால் அதுவே மறைந்த தோழர்களுக்கு தரும் உண்மையான மரியாதை. இனியாவது ஒரு விதி செய்வோம் என்ற இவர்களின் இவ்வருட கோசத்திற்கு அர்த்தம் உள்ளதா என மக்கள் அங்காலய்கின்றனர்.

    Reply
  • palli
    palli

    அண்ணாவோ தம்பியோ தெரியவில்லை;
    ஆனால் உமாவின் கொள்கை என்ன?
    கொலை என்ன என்பதே தெரியவில்லையே;?
    இருந்தாலும் தமிழரின் இந்தநிலைக்கு 70%நீங்க கூறிய உமாதான் என சொன்னால் நம்புவிர்களா???

    Reply
  • பரமேஸ்வரன்
    பரமேஸ்வரன்

    முதன்முதலாக போராட்ட இயக்கங்களின் மத்தியில் வதை முகாம் ஆரம்பித்த பெருமை உமா மகேஸ்வரனை சாரும்.

    தஞ்சாவூர் ஒரத்த நாட்டில் பீ கேம்ப் என்ற பெயரில் இருபத்தாறு வருடத்திற்கு முன் ஆரம்பித்து போராளிகளை வதை செய்தவர்கள் புளட் இயக்கத்தவர்கள். உமா மகேஸ்வரன் சுளிபுரத்திட்கு வந்த போது கொல்லப்பட்ட சிறுவர்களை நாம் மறக்க முடியுமா? புளட்டில் இருந்து புளட்டை நியாயப்படுத்தியவர்கள் புலியை விமர்சிக்க எந்த உரிமையும் கிடையாது.
    -முரசுமோட்டை பரமேஸ்வரன்

    Reply
  • santhanam
    santhanam

    நீங்கள் இப்பவும் கணக்கில்தான் நிற்கிறியல் மலைபோல கொலை கொஞ்சம் அல்ல 40000வரை அதை கணக்குபண்ணுவம் என்று இல்லை 26வருடத்தை திரும்பி பார்க்கிறியல் இது இப்பகண்முன் நடந்துள்ளது ஏன் சுழிபுரகொலையை தூண்டியவர் யார் விடைதெரியுமா ஏன் பொட்டரை கழகம் கடத்தியது விடைதெரியுமா?…….இவற்றிற்குதான்…..

    Reply