TRO தலைவர் ரெஜிக்கு UK இல் இருந்து வெளியேறும்படி நிர்ப்பந்தம் : த ஜெயபாலன்

Reggie_TROபுலிகளின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ரெஜியை நாட்டைவிட்டு வெளியேறுமாறு பிரித்தானிய அரசு கேட்டுள்ளதாக உள்ளதாக தேசம்நெற்றுக்கு தெரியவருகிறது. சில ஆண்டுகளாக பிரித்தானியாவில் வாழும் ரெஜி இங்கு அரசியல் தஞ்சம் கோரி இருந்தார். ஆனால் அவருடைய அரசியல் தஞ்சம் விண்ணப்பத்திற்குப் பிறம்பாக உத்தியோகப்பற்றற்ற முறையில் அவரை நாட்டை விட்டு வெளியேறுமாறு கேட்டுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது. ”அரசியல் தஞ்சம் கோரிய ஒருவரை திருப்பி அவரது நாட்டுக்கு அனுப்புவதோ அல்லது அவரை நாட்டைவிட்டு வெளியேறும்படி கோருவதோ மனிதாபிமானமற்ற செயன்முறை” கவுன்சிலர் போல்சத்தியநேசன் இந்நடவடிக்கையைக் கண்டித்துள்ளார்.

பிரித்தானியாவில் அரசியல் தஞ்சம் மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து நேர்வேயில் அரசியல் தஞ்சம் கோருவதற்கு ரெஜி முயற்சிகள் மேற்கொள்வதாகவும் தேசம்நெற்க்கு செய்திகள் கிடைத்துள்ளது. நோர்வெயின் ஆளும்கட்சியில் உள்ள தமிழ் பிரமுகர் ஒருவருக்கு ஊடாக நோர்வே அமைச்சர் எரிக்சொல்ஹைமிடம் இந்த தஞ்சக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் துணை அமைப்பாக இயங்கிய தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் தலைவராக ரெஜி செயற்பட்டு வந்தார்.

இச்செய்தி தொடர்பாக உள்துறை அமைச்சுடன் தொடர்பு கொண்ட போதும் தனிப்பட்ட ஒருவருடைய அரசியல் தஞ்ச விண்ணப்பம் தொடர்பாக கருத்துத் தெரிவிக்க பிரித்தானிய உள்துறை அமைச்சு மறுத்துவிட்டது.

Raj_Rajaratnamஇதற்கிடையே ரீஆர்ஓ வின் ஸ்தாபகராகக் கருதப்படும் அமெரிக்க பில்லியனெயர் ராஜ் ராஜரட்ணம் முன்னாள் புலிகளுக்கு இலங்கை அரசு மேற்கொள்ள உள்ள மறுவாழ்வுத் திட்டத்திற்கு ஒரு மில்லியன் டொலரை வழங்க முன்வந்தள்ளதாக நீதி மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சர் மிலிந்த மொறகொட தெரிவித்துள்ளார். ”ராஜ் ராஜரட்ணம் ரீஆர்ஓ க்கு அளித்த நிதியை புலிகளுக்க வழங்கிய நிதியாகக் கொள்ள முடியாது” என மிலிந்த மொறக்கொட செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில் தெரிவித்து உள்ளார். சுனாமியின் போது இலங்கையில் தங்கியிருந்து உயிர் தப்பிய ராஜ் ராஜரட்ணம் சுனாமி மீள்கட்டுமானப் பணிகளுக்கு 5 மில்லியன் யுஎஸ் டொலர்களை வழங்கி இருந்தார். உலகிலேயே மிகச் செல்வந்தரான ஒரே இலங்கையர் ராஜ் ராஜரடணம் என்பது குறிப்பிடத்தக்கது. 7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் இவரது மேற்பார்வையில் உள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் பலருக்கும் பிரித்தானியாவில் அரசியல் தஞ்சம் வழங்கப்பட்ட போதும் பிரபலமான முக்கிய தலைவர்களுக்கு அரசியல் தஞ்சம் வழங்க பிரித்தானியா மறுத்திருந்தது. குறிப்பாக கேணல் கிட்டுவினுடைய அரசியல் தஞ்ச விண்ணப்பத்தை நிராகரித்திருந்த பிரித்தானிய உள்துறை அமைச்சு தாங்கள் கைது செய்து திருப்பி அனுப்புவதற்கு முன்னர் கேணல் கிட்டுவை நாட்டை விட்டு வெளியேறும்படி கேட்டிருந்தது. அவ்வாறு கிட்டு நாட்டைவிட்டு வெளியேறி இலங்கை சென்றபோதே சர்வதேச எல்லையில் வைத்து இந்தியக் கடற்படையால் தடுக்கப்பட்டனர். அதன் பின்னர் அவர்களை இந்தியக் கடற்படை கைது செய்ய முற்படுகையில் தங்களது கப்பலைத் தகர்த்து தாமும் தற்கொலை செய்து கொண்டனர்.

பிரித்தானிய உள்துறை அமைச்சு கேணல் கிட்டு தொடர்பாக எடுத்த அதே முடிவையே தற்போது ரெஜி தொடர்பாகவும் எடுத்துள்ளதாகத் தெரிகிறது.

ரெஜி தலைமையில் செயற்பட்ட தமிழர் புனர்வாழ்வுக் கழகத்திற்கு ஒஸ்லோ சமாதான உடன்படிக்கையின் பின் கணிசமான நிதி சர்வதேச நிறுவனங்களால் வழங்கப்பட்டு இருந்தது. அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச கண்காணிப்பு அமைப்பு 2005ல் வெளியிட்ட அறிக்கையில் சிறுவர் நலன்களுக்காக ரிஆர்ஓ க்கு வழங்கப்பட்ட 1.3 மில்லியன் டாலர்கள் சரியான முறையில் பயன்படுத்தப்படவில்லை என்று குற்றம்சாட்டி இருந்தது. பிரித்தானியாவில் ரீஆர்ஓ வின் நிதிக் கையாள்கை தொடர்பான பிரச்சினையால் அதன் செயற்பாடுகள் முடக்கப்பட்டு பிரித்தானிய பொது அமைப்புகளின் ஆணைக்குழு ரீஆர்ஓ வை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. அதனாலேயே ஏனைய நாடுகளில் ரிஆர்ஓ என்று இயங்கிய போதும் லண்டனில் வெண்புறா வை ரிஆர்ஓ க்கு பதிலாக முன்னிலைப்படுத்தினர்.

புலம்பெயர்ந்த நாடுகளில் தாயகத்தில் உள்ள மக்களின் நல வாழ்வுக்காக சேகரிக்கபட்ட நிதி அந்நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டு ரீஆர்ஓ மீது நீண்டகாலமாக உள்ளது. அண்மைய வன்னி யுத்தத்தின் போது 2008 மாவீரர் தினத்திற்கு முன்னர் கிளிநொச்சி பகுதியில் இருந்து தப்பி வந்த ஒருவர் தேசம்நெற்க்கு வழங்கிய செவ்வியில் ரீஆர்ஓ பாதிக்கப்பட்ட மக்களுக்கு எவ்வித உதவியையும் வழங்கவில்லை எனத் தெரிவித்திருந்தார். வன்னி யுத்தத்தில் தப்பி வந்தவர்கள் அல்ஜசீராவுக்கு வழங்கிய பேட்டியில் தாங்கள் பணம் கொடுத்தே உணவுப் பொருட்களைப் பெற்றுக் கொண்டதாகவும் தெரிவித்து இருந்தனர். அதன் படி சர்வதேச உணவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட உணவுப் பொருட்களும் கூட மக்களுக்கு விநியோகிக்கப்பட வில்லை. விற்கப்பட்டு இருந்தது.

மே 18ல் விடுதலைப் புலிகளின் தலைமை அழிக்கப்பட்டதன் பின்னர் தலைவரின் மரணச் செய்தியை வெளிவிடாமல் இருந்ததற்கு ரெஜியும் முக்கிய காரணமாக இருந்துள்ளார். ரெஜி மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேசப் பொறுப்பாளர் நெடியவன் ஆகியோர் உட்பட்ட கஸ்ரோ குழுமமே பிரபாவின் மறைவுக்குப் பின் புலிகளின் சர்வதேச அமைப்பை கட்டுப்படுத்தி வருகின்றனர். ( VVT E ஆக மாறும் LTTE : த ஜெயபாலன் ) இவர்களே கேபி யின் தலைமைக்கு சலாலாகவும் இருந்தனர். ரீஆர்ஒ உட்பட புலிகளின் சர்வதேச நிதிக்கட்டுப்பாடும் இக்குழுமத்திடமே உள்ளது. இவர்கள் 300 மில்லியன் டாலர்கள் வருமானமுள்ள 1 முதல் 5 பில்லியன் டொலர் அசையும் அசையாச் சொத்தக்களை நிர்வகிக்கின்றனர் என நம்பப்படுகிறது. ( இலங்கையில் உள்ள புலிப் போராளிகளை கைகழுவும் புலம்பெயர் புலிகள்!!! : த ஜெயபாலன் )

தற்போது பிரித்தானியாவில் தஞ்சம் நிராகரிக்கப்பட்டுள்ள ரெஜிக்கு நோர்வே தஞ்சம் வழங்குமா? என்ற சந்தேகமும் வலுவடைந்து உள்ளது. ஏனெனில் ஏற்கனவே கே பி க்கு அரசியல் தஞ்சம் தொடர்பாக நோர்வேயிடம் உதவி கேட்கப்பட்டதாகவும் அதற்கு நோர்வே மற்றும் அமெரிக்கா சாதகமாகப் பதிலளிக்கவில்லை என உறுதிப்படுத்தப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன.

ரெஜியினுடைய குடும்பத்தினர் பிரித்தானியாவில் இல்லை. அவர்கள் இருந்திருந்தால் கேணல் கருணாவினுடைய குடும்பத்தினருக்கு அரசியல் தஞ்சம் வழங்கப்பட்டது போன்று அவர்களுக்கும் அரசியல் தஞ்சம் வழங்கப்பட்டு இருக்கும். ரெஜியினுடைய குடும்பத்தவர்கள் பெரும்பாலும் தென்னாபிரிக்காவில் வாழலாம் என சில செய்திகள் தெரிவிக்கின்றன. இருந்தாலும் இலங்கை இந்திய அரசுகளுக்கு மாறாக ரெஜிக்கு அரசியல் தஞ்சம் வழங்க தென்னாபிரிக்கா முன்வருமா என்பதும் சந்தேகமே. ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தென்னாபிரிக்கா இலங்கைக்கு சாதகமாக வாக்களித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.

ரெஜி எவ்வாறானவராக இருந்தாலும் ரெஜியை நாடுகடத்துவதற்கு எதிராக போராட வேண்டிய கடமைப்பாடு உரிமைகளுக்காகப் போராடுபவர்களுக்கு உண்டு. குறிப்பாக பிரித்தானிய உள்துறை அமைச்சின் இம்முடிவுக்கு எதிராக உரிமை அமைப்புகள் குரல் எழுப்பும் என்றே நம்பப்படுகிறது. ஆயினும் இது அரசியல் மயப்பட்டுப் போகுமாக இருந்தால் அது பிரித்தானியாவுக்கு அமையும் என்பதால் ரெஜி யை நாட்டைவிட்டு வெளியேறுமாறு பிரித்தானியா கேட்டுள்ளதாகத் தெரிகிறது. அதேநேரம் இதனை அரசியல் மயப்படுத்தி அதில் தோல்வி கண்டால் நிலைமை பாரது}ரமாகலாம் மேலும் மேற்கு நாடுகளின் உறவுகளும் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் காரணமாக ரெஜி நாட்டைவிட்டு வெளியேற முயற்சிக்கலாம் என்றே நம்பப்படுகிறது.

”பிரித்தானியாவில் அரசியல் தஞ்சம் நிராகரிக்கப்பட்டு சட்ட நடவடிக்கைகளைத் தொடர முடியாதவர்களின் எண்ணிக்கை குறைந்தது 5000 பேராவது இருப்பார்கள். இவர்களில் தங்கியுள்ளவர்களின் எண்ணிக்கையையும் சேர்த்துக் கொண்டால் சற்று கூடுதலாக இருக்கும். ” எனத் தெரிவிக்கிறார் சட்ட வல்லுனர் அருண் கனநாதன். இவர் இவ்வாண்டு மார்ச்சில் தேசம்நெற்க்கு வழங்கிய நேர்காணலில் இதனைத் தெரிவித்து இருந்தார்.

\Paul_Sathyanesan_Cllrஇது தொடர்பாக தேசம்நெற்றுக்கு கருத்துத் தெரிவித்த கவுன்சிலர் போல் சத்தியநேசன் ”அரசியல் தஞ்சம் கோரிய ஒருவரை திருப்பி அவரது நாட்டுக்கு அனுப்புவதோ அல்லது அவரை நாட்டைவிட்டு வெளியேறும்படி கோருவதோ மனிதாபிமானமற்ற செயன்முறை” எனத் தெரிவித்தார். அரசியல் தஞ்சம் மறுக்கப்பட்டவர்கள் தொடர்பாக நீண்ட காலமாகக் குரல்கொடுத்து வரும் கவுன்சிலர் போல் சத்தியநேசன் ”ரீஆர்ஓ தலைவர் ரெஜி க்கு தஞ்சம் நிராகரிக்கப்பட்டது பற்றியோ அல்லது அவரை வெளியேறும்படி கேட்டது பற்றியோ எனக்கு உறுதியாகத் தெரியவரவில்லை” என்றார். ஆனால் ”ரெஜி போன்ற முக்கிய புள்ளிகள் இலங்கைக்கு அனுப்பப்ட்டால் அவர்களது உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழல் ஒன்று அங்கு உள்ளது. மேலும் ரெஜியை திருப்பி அனுப்பும் முடிவு ஏனைய அரசில் தஞ்ச விண்ணப்பதாரிகளையும் திருப்பி அனுப்புவதற்கு வழிவகுக்கும்” என்றும் கவுன்சிலர் போல் தேசம்நெற்றுக்கு தெரிவித்தார்.

”பிரித்தானிய அரசு அரசியல் தஞ்சத்தை சட்டவியலின் நுணுக்கத்தில் பார்க்கின்றதேயல்லாமல் மனிதாபிமான அடிப்படையில் இப்பிரச்சினையை கையாள்வதில்லை” எனவும் ஆட்சியில் உள்ள தனது கட்சியின் அரசியல் தஞ்சம் தொடர்பான கொள்கையை விமர்சித்தார்.

Show More
Leave a Reply to Jeyabalan T Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

41 Comments

  • பார்த்திபன்
    பார்த்திபன்

    கிட்டுவை பிரித்தானிய அரசு வெளியேற நிர்ப்பந்திதற்குக் காரணம் கிட்டு பிரித்தானியாவில் அகதியாகத் தங்கியிருந்த காலத்தில் இயக்க வேலைகள் செய்து மிரட்டிப் பணப்பறிப்பையும் மேற்கொண்டதே. இது சம்பந்தமாக பிரித்தானியப் பொலிசார் பலதடவை அவரை எச்சரித்திருந்தும், அவர் தொடர்ந்ததால் இந்நடவடிக்கையை பிரித்தானிய அரசு எடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள்ளானது. ஆனால் பின்பு இவ்விடயத்தில் UNO தலையிட்டு கிட்டுவை பொறுப்பெடுக்குமாறு சுவிற்சர்லார்ந்தை கேட்டதையடுத்து, சுவிற்சர்லார்ந்தும் கிட்டுவை இயக்கச் செயற்பாடுகள் எதனையும் மேற்கொள்ளக் கூடததென்ற எச்சரிக்கையுடனேயே ஏற்றுக் கொண்டது. ஆனால் கிட்டு சுவிஸிலும் இயக்கச் செயற்பாடுகளை தொடர்ந்ததால் சுவிஸ் அரசும் விசனமுற்றிருந்தது. இந்த நிலையிலேயே கிட்டு தானாக நாட்டைவிட்டு வெளியேறி பின்பு கப்பலில் இலங்கை நோக்கி பயனித்த போதே இந்தியக் கடற்படையால் கப்பல் மறிக்கப்பட தற்கொலை செய்து கொண்டார்.

    ரெஜி; அன்ரன் பாலசிங்கத்தின் மரணச்சடங்கில் கலந்து கொள்வதற்காகவே இலங்கையிலுள்ள பிரித்தானிய தூதுவராலயத்தில் விசாப் பெற்று பிரித்தானியா வந்தார். ஆனால் பின் தாயகம் திரும்பாமல் அகதியாக விண்ணப்பித்தார். அந்த வகையில் ரெஜியின் விண்ணப்பம் சாதாரண நடைமுறைகளுக்கமைந்ததல்ல. அதனால் அதை நிராகரிக்கக் கூடிய சாத்தியக் கூறுகள் பிரித்தானிய அரசுக்கு நிறையவேயுண்டு. முன்பு கிட்டுவை சுவிஸ் அரசு ஏற்றுக் கொண்டது போல், ரெஜியையும் சிலவேளை நோர்வே அரசு ஏற்றுக் கொள்ள முன் வரலாம். மேலும் ரெஜி கொழும்பை விட்டு வெளியேறிய சில தினங்களிலேயே TRO தலைமைப் பதவி புலிகளால் வேறொருவருக்கு வழங்கப்பட்டும் விட்டது. அந்த வகையில் ரெஜியை TRO தலைவரென்று கூறுவதே தவறானது.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    சுனாமி என்ற பெயரை பெரும் தொகையானமக்கள் 2004 மார்கழிக்கு பிறகே அறிவார்கள். இந்த சுனாமி வந்தநேரத்தில் உலகம் முழுவதுமாக தமிழ்மக்கள் பரவிவாழ்ந்து வந்தார்கள். ஏராளமான தமிழ்மாணவ மாணவிகள் உண்டியல் தூக்கி தெருதெருவாக வந்தார்கள். பாடசாலையிலிருந்து களியாட்டுவிழா வரை எவ்வளவு நிதி சேகரித்தார்கள் என்பதை அப்போதைய புலிசார் தொலைக்காட்சிகள் ஒலிபரப்பு செய்து கொண்டிருந்தது. எனது மகன்கூட 800 யூரோவை சேகரித்து ரி.ஆர்.ஓ வுக்கு அனுப்பி வைத்தார்.

    அதற்குரிய நன்றி கடிதம் கூட ரி.ஆர்.ஓவில்லிருந்து கிடைக்கவில்லை. புணர்வாழ்வு கழகத்திற்கு பொறுப்பாக இருந்த ரெஜியை தவிர பில்லியன் கணக்கான நிதிகளைப் பற்றிய செய்திகள் இன்றுவரை சூனியமாகவே இருக்கிறது. முல்லைத்தீவில் சுனாமியால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் பேட்டி கொடுக்கும் போது ரி.ஆர்.ஓ புட்டுக்குழல் தந்துவிட்டு போனார்கள் அதற்கு பிறகு அவர்களைக் காணவே இல்லை என்றார். ரெஜியும் அவர் குடும்பமும் எங்கிருந்தாலும் வாழ்ந்துவிட்டு போகட்டும். நொந்து போனமக்களுக்கு சேகரிக்கப்பட்ட பணம் எங்கோ முடங்கி போவது ஒரு சமூகத்திற்கு அழகல்ல.கேள்விக்குள்ளாக்கப் படவேண்டும்.

    Reply
  • kamalam
    kamalam

    Why doesn’t Reggie trade in his ” war fortune” LTTE money for his liberty. I suggest Reggie, Nediyawan and the rest to handover all the LTTE money and property to A Charity like Salvation Army or red cross and expect some decent justice from the world. Until they do this they are mafia like culprits.

    Reply
  • palli
    palli

    இவர் எங்காவது போகட்டும்; அதைபற்றி பெரிதாக அலட்டிக்க தேவையில்லை; ஆனால் சந்திரராஜா சொன்னதுபோல் சுனாமிக்கு சேர்த்த நிதி இவரது பாதுகாப்பிலேயே இருந்தது, அதை மட்டும் அந்த அப்பாவி மக்களிடம் கொடுத்துவிட்டு போய் ஒளித்து விளையாடட்டும். இறந்தவர்கள் பெயரை சொல்லி பிணம் பெற்றுதர (தேடிதர) நிதி கேட்டவர்தானே இவர்,

    Reply
  • jeeva
    jeeva

    // இதற்கிடையே ரீஆர்ஓ வின் ஸ்தாபகராகக் கருதப்படும் அமெரிக்க பில்லியனெயர் ராஜ் ராஜரட்ணம் முன்னாள் புலிகளுக்கு இலங்கை அரசு மேற்கொள்ள உள்ள மறுவாழ்வுத் திட்டத்திற்கு ஒரு மில்லியன் டொலரை வழங்க முன்வந்தள்ளதாக நீதி மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சர் மிலிந்த மொறகொட தெரிவித்துள்ளார். ”ராஜ் ராஜரட்ணம் ரீஆர்ஓ க்கு அளித்த நிதியை புலிகளுக்க வழங்கிய நிதியாகக் கொள்ள முடியாது” என மிலிந்த மொறக்கொட செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில் தெரிவித்து உள்ளார். //

    கடந்த வருடம் ரீ.ஆர்.ஓ நிதியை கையகப்படுத்தும் போது புலிகளுக்கு அளித்த நிதியாக கருதுவதாக கையகப்படுத்தினார் அமைச்சர். இப்போ ஒரு மில்லியன் வருகிறது என்றவுடன் தலைகீழாகப் பேசுகிறார்!

    ரெஜியை இங்கிலாந்து திருப்பி அனுப்புதல் தவறு என்பதே எனது கருத்தும். அத்துடன் ரி.ஆர்.ஓ நிதிக்கையாடல் நடை பெற்றிருப்பின் அங்கேயே ஒரு வழக்குத்தாக்குதல் செய்து …………………………….நீதிபெறவும் வழிவகுக்கும்.

    Reply
  • DEMOCRACY
    DEMOCRACY

    /இதற்கிடையே ரீஆர்ஓ வின் ஸ்தாபகராகக் கருதப்படும் அமெரிக்க பில்லியனெயர் ராஜ் ராஜரட்ணம் முன்னாள் புலிகளுக்கு இலங்கை அரசு மேற்கொள்ள உள்ள மறுவாழ்வுத் திட்டத்திற்கு ஒரு மில்லியன் டொலரை வழங்க முன்வந்தள்ளதாக நீதி மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சர் மிலிந்த மொறகொட தெரிவித்துள்ளார்/—

    குழப்பம் அதிகரிப்பதால் பேச வேண்டியுள்ளது!. “பணம் என்றால் என்ன?!”, தொழில் புரட்சியின் மூலம் உற்பத்திப் பொருள்களின் உற்ப்பத்தி இயந்திர மயமாகியதால், அதன் மதிப்பு “ஸ்டாக் எக்சேஞ்ச்” மூலம் “ஏலம் முறையில்”, உற்பத்தி நாடுகளின் பணமதிப்பு நிர்ணயக்க்கப்பட்டது. இதில் சலிப்புத்தட்டும் வேலைகளை செய்ய “காலனித்துவ நாடுகள்”, முதலில், காலனிய நாடுகளிலிருந்து, “அக்கெளண்ட்டன்டுகளை (கிளார்க்)”, தங்களுக்கு விசுவாசமானவர்களை? நியமித்தார்கள். தொழிலாளர்களும், தொழிற்சாலைகளும் இல்லாமலேயே கம்யூனிசம் பேசுகிறவர்களைப் போல, இந்த அக்கெளண்ட்கள், பெரிய விஷயங்களில் மூக்கை நுழைக்கும் கலாச்சாரத்தைக் கொண்டிருந்தார்கள்!.

    தற்போது ஏற்ப்பட்டிருக்கும் “பொருளாதர நெருக்கடியே” அநாவசியமாக பல “பில்லினேயர்கள் உருவானதால்தான்”. “பணத்தின் அர்த்தம்”, பொருள் உற்ப்பத்தியில் தங்கியிராமல், உற்ப்பத்தி மூலம் சேர்ந்த பணத்தை கையாளும் முறையில் “மாறத் துவங்கி விட்டதால்தான்” (வங்கி,ஹெட்ஜ் பஃண்ட்ஸ், முதலீட்டு நிறுவனங்கள்…போன்றவை). இது பொருளாதாரத்தை “ஒரு கெசினோ கிளப்” போன்று ஆக்கிவிட்டது!. நம் விஷயத்திற்கு வருவோம், பொருள்களின் விற்பனை, அதன் “குவாலிட்டியில் தங்கியிராமால்” விற்பனை எண்ணிக்கையில் தங்கி, இந்தியா- சீனா போன்ற நாடுகளின் மத்தியத்தர வர்க்கத்தின் வாங்கும் சக்தியில் உயிர்வாழ துவங்கியிருக்கிறது!. இதிலிருந்து தனிமைப் பட்டுவிடாமல் இருக்கவே, அமெரிக்கா, ஐரோப்பா போன்றவை, இந்த மத்தியதர வர்கத்தின் கைக்கெட்டும் வகையில் பொருள்களை, சீனா- இந்தியா போன்ற நாடுகளில் உற்பத்தி செய்யத் துவங்கின!. இதானால் ஏற்ப்பட்ட பல “பொருளாதார ஒப்பந்தங்களை” நிர்வகிக்க பல “காப்பீட்டு நிறுவனங்கள்” பொருப்பேற்றன. தொழில் நுட்ப ஆராய்ச்சிகளுக்காக, பெருமளவில் முதலீடு செய்திருக்கும் ஜெர்மனி, அமெரிக்கா போன்ற நாடுகள், “இத்தகைய ஒப்பந்தங்களை”, தங்களுக்கு சாதகமான முறையில் காக்க “பலப் பிரயோகமும் செய்யத் தயாராய்யிருக்கின்றன”. இத்தகைய உலக அணுகு முறை, வருங்கல உலக ஒழுங்கு முறையில் முக்கியத்துவம் பெருகின்றான. இந்தியாவை, சீனாவைவிட இத்தகைய ஒழுங்கு முறைக்குள் அடக்கிவிட சுலபமாக இருக்கிறது, ஆனால்,”நம்முடைய அக்கெண்டண்ட் மார்கள்” முந்திரிக்கொட்டை மாதிரி என்ன பங்கு வகிக்கிறார்கள் என்றால், என்னவோ இவர்களை “இந்த ஒப்பந்தங்களின் ஷரத்துக்களை பாதுகாக்க அனுப்பப்பட்ட தேவதைகள் என்பது மாதிரி”, ஒரு “சீன எதிர்ப்பை” தமிழர்களின் “இனப் பிரச்சனையாக” முன்வைக்க, தங்கள் கட்டுப்பாடுகளில் இயங்கும் தொ(ல்)லைக்காட்சிகளில், முயல்கிறார்கள்!.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    // கடந்த வருடம் ரீ.ஆர்.ஓ நிதியை கையகப்படுத்தும் போது புலிகளுக்கு அளித்த நிதியாக கருதுவதாக கையகப்படுத்தினார் அமைச்சர். இப்போ ஒரு மில்லியன் வருகிறது என்றவுடன் தலைகீழாகப் பேசுகிறார்!

    ரெஜியை இங்கிலாந்து திருப்பி அனுப்புதல் தவறு என்பதே எனது கருத்தும். அத்துடன் ரி.ஆர்.ஓ நிதிக்கையாடல் நடை பெற்றிருப்பின் அங்கேயே ஒரு வழக்குத்தாக்குதல் செய்து …………………………….நீதிபெறவும் வழிவகுக்கும்.- jeeva //

    உங்களுக்கு புரிதல் எல்லாம் தலைகீழாகவே இருக்கின்றது. ராஜ் ராஜரட்ணம் TRO க்கு கொடுத்த நிதியை, TRO புலிகளுக்கு கொடுத்தது நிரூபிக்கப்பட்டதாலேயே அது முடக்கப்பட்டது. இதில் ராஜ் ராஜரட்ணத்தின் தவறென்ன?? இதைத்தான் அமைச்சரும் கூறியுள்ளார்.

    அத்துடன் எந்த அடிப்படையில் ரெஜி இலங்கையில் செய்த தவறை பிரித்தானியாவில் விசாரிக்க முடியுமென்று விளக்குவீர்களா?? இப்போது சர்வதேச நீதிமன்றம் பிரித்தானியாவிற்கு மாற்றப்பட்டுள்ளதா??

    Reply
  • Jeyabalan T
    Jeyabalan T

    இங்கு நண்பர் டெமொகிரசியின் கருத்து முக்கியமானது. ஆனால் கட்டுரை செய்திக்கு வெளியே சென்றுவிடும் என்பதால் அது பற்றி ஆழமாகச் செல்லவில்லை. டெமொகிரசி குறிப்பிட்டது போல் ஹெச் பண்ட் பில்லியனரே ராஜ் ராஜரட்ணம். இன்று ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு இவ்வகையான ஹெச் பண்ட் நிதிமுகாமைத்துவமே முக்கிய காரணம். இவற்றை அரசுகள் கூடுதலாகக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை தற்போது வலுப்பெற்றுள்ளது.

    பேர்னாட் மேடொப் இன் 150 பில்லியன் டொலர் ஹெட்ச பண்ட் மோசடி அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சிக்கான காரணங்களில் ஒன்று. 71 வயதான மேடொப் க்கு 150 வருடத் தண்டனை பொருளாதார வீழ்ச்சியின் கீழ் அந்தத்தில் உள்ள மக்களுக்கு எவ்வித நன்மையையும் வழங்கப்போவதில்லை. மேடொப்பின் பெருமளவிலான சொத்துக்கள் அவருடைய பெயரில் இல்லை. தகவலுக்காக.

    த ஜெயபாலன்.

    Reply
  • jeeva
    jeeva

    உங்களுக்கு புரிதல் எல்லாம் தலைகீழாகவே இருக்கின்றது…/ பார்த்திபன்,…
    தயவு செய்து அவசரப்படாமல் மிலிந்த மோரகொடவின் கருத்தை வாசித்துப் பார்க்கவும். செய்தியில் அது மேற்கோள் குறிக்குள் இருப்பதையும் கவனிக்கவும். அந்த ஸ்ரேற்மன்ற் நானோ அன்றி தேசமோ சொல்லவில்லை மாறாக அமைச்சரால் சொல்லப்பட்டது! நீங்கள் நிரூபிக்கப்பட்டது என்கிறீர்கள் அமைச்சரோ இல்லை என்கிறார்!

    ‘…அத்துடன் எந்த அடிப்படையில் ரெஜி இலங்கையில் செய்த தவறை பிரித்தானியாவில் விசாரிக்க முடியுமென்று விளக்குவீர்களா?? ’’’

    இங்கே இங்கிலாந்தில் ரீ.ஆர்.ஓ வுக்கு கொடுத்த பணம் கையாடல் செய்யப்பட்டது என்பதில் இருந்து புலிகளுக்கு ஆயுதம் வாங்க சட்டவிரோதமாக உபயோகிக்கப்பட்டது வரை குற்றம் சாட்டுகிறார்கள். எனவே இங்கிலாந்து வாசி ஒருவர் இங்கிலாந்தில் இருக்கும் அமைப்பொன்று இங்கிலாந்து சட்டத்துக்கு புறம்பாக குற்றம் இழைத்து இருப்பின் இங்கிலாந்தில் வழக்குத்தாக்கல் செய்ய முடியுமல்லவா? இதற்கு சர்வதேச நீதிமன்றம் எல்லாம் செல்லத்தேவை இல்லை!

    அத்துடன் ராஜரட்ணத்தை இன்று $1 மில்லியன் டொலருக்காகத் தூக்கிப்பிடிப்போர் 2000 ஆண்டளவில் அவர் ஹேமாஸ் லிமிடெட், வர்த்தகவங்கி போன்றனவற்றில் பங்குகளை வாங்கியபோது ஸ்ரீலங்காவில் அவரை எவ்வாறு நடாத்தினர் என்பதனையும் அறிந்திருப்பீர்களே? இறுதியில் அவர் தனது பங்கு வீதத்தினை குறைத்தது மட்டுமல்லாது ஸ்ரீலங்கா பத்திரிகைகளிலும் பக்கம் பக்கமாக சொந்தச் செலவில் விளக்கம் கூறி விளம்பரம் கொடுக்க வேண்டி வந்தது! இவை மட்டுமல்ல இன்னும் இருக்கிறது.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    //”ராஜ் ராஜரட்ணம் ரீஆர்ஓ க்கு அளித்த நிதியை புலிகளுக்க வழங்கிய நிதியாகக் கொள்ள முடியாது” என மிலிந்த மொறக்கொட செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில் தெரிவித்து உள்ளார்.//

    jeeva,
    இது தான் மிலிந்த மோரகொட சொன்ன கருத்து. தமிழில் எழுதப்பட்டதன் அர்த்தம் கூட தங்களுக்கு விளங்கவில்லையா?? TRO தான் சேர்த்த நிதியை புலிகளுக்கு கொடுத்ததற்கு ராஜ் ராஜரட்ணம் என்ன செய்ய முடியும்?? இங்கே ராஜ் ராஜரட்ணம் TRO க்கு கொடுத்த நிதியுட்பட ஏனைய மக்களிடமும் சேர்த்த நிதியையும் TRO புலிகளுக்கு வழங்கியது.

    மேலும் பிரித்தானியாவில் TRO சேர்த்த நிதி மோசடி செய்யப்பட்டிருந்தால் அதனை பிரித்தானியாவில் சேர்த்தவர்கள் மீதல்லவா நடவடிக்கை எடுக்க முடியும். ஏற்கனவே இது சம்மந்தமாக பிரித்தானிய அரசு சில நடவடிக்கைகள் எடுத்ததை தாங்கள் அறியவில்லையா??

    Reply
  • jeeva
    jeeva

    ‘…பேர்னாட் மேடொப் இன் 150 பில்லியன் டொலர் ஹெட்ச பண்ட் மோசடி…’

    ஒரு சிறிய திருத்தம். மோசடி 150 பில்லியன் அல்ல மாறாக 50 பில்லியன் அளவிலேயே இருக்கும். இது அவரால் மிகைப்படுத்திக்காட்டப்பட்ட இலாபமும் சேர்த்தே.
    அவ்வாறான இலாபம் கழிக்கப்படுமிடத்து மோசடி 30 பில்லியன்கள் வரையே இருக்கும் என்கிறார்கள். நியூயோர்க் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட எந்த குற்றப்பத்திரிகையிலோ அன்றி வர்த்தக செய்தி ஊடக விமர்சகர்களோ 150 பில்லியன்கள் எனச்சொல்லப்படவில்லை.
    ஆனாலும் ஹெச் பண்டுகளின் ஆதிக்கம் அளவுக்கதிகமானது என்ற உங்கள் கருத்து ஏற்றுக்கொள்ளப்படத்தான் வேண்டும்!

    Reply
  • முன்னாள் பொரளி
    முன்னாள் பொரளி

    பணம் பணம் பணமென்றால் பேயும் வாய்திறக்கும் என்பது சரியாப்போச்சு.

    Reply
  • Jeyabalan T
    Jeyabalan T

    ஜீவா தகவல் திருத்தத்திற்கு நன்றி.

    த ஜெயபாலன்.

    Reply
  • Jayarajasingam
    Jayarajasingam

    அண்ணைமார் நீங்கள் பொயின்றை விட்டு எச்சி பாண்டையும் சுச்சி போனது பற்றி கதைக்கிறயள்! நான் ஒரு 8ம் வகுப்புவரை படிச்சுப்போட்டு இயக்கத்திலை ஒரு 4 வரியம் குப்பை கொட்டியவன்! எனக்கு இந்த புண்ணாக்கு விசயம் ஒண்டும் விளங்காது! ஆனால் இந்த ரீஆர் ஓ பற்றி பல விடயங்கள் தெரியும். அதுவும் நம்ம ரீஆர் ஓ ரெஜி பற்றி நல்லாவே தெரிந்தவன் என்ற வகையில் சில உண்மைகளை இங்கே புலம்ப கடமைப்பட்டுளேன்!

    ரெஜி இலண்டனுக்கு வந்தது ஒரு விபத்து! இந்த ரீஆர் ஓ பதவியை கடைசி வரை நம்மட தலை ரெஜிக்கு கொடுக்கும் எண்ணத்துடன் ஆளை இங்கு அனுப்பவில்லை. ஆனால் விலாங்க்கு பிடியாக நின்று இந்த பதவியை புடுங்கியது ரெஜிதான். இந்த பதவி உண்மையில் கிழக்கு மாகணத்தை சேர்நத ஒருவருக்கு சென்றிருக்க வேண்டும். ரெஜி மிகவும் ஊழல் பேர்வழி என ரெஜியை தெரிந்தவர்களுக்கு தெரியும். இன்று லண்டனில் ரெஜி> தனம் மற்றும் நேர்வே நெடியவன் இவர்கள் கைகளிலேயே புலிகளின் பினாமி பணம் அவ்வளவும் முடங்கியுள்ளது. ரெஜியின் நேரடி கண்காணிப்பில் 3 மில்லியன் பவுண்கள் இருப்பதுடன் இவரால் நியமிக்கப்பட்ட பினாமிகள் 4 சுப்பர் மார்க்கட்டுகளை இங்கு வெற்றிகரமாக நடாத்தி வருகிறார்கள். இதை விட ரெஜியின் சொதந்தக்காரர்கள் மூலமும் சில வியாபரங்கள் தற்போது இலண்டனில் வெற்றிகரமாக நடை பெற்று வருகிறது. இது ஓரு புறம் இருக்க ஐரோப்பாவில் நெடியவன் கூட்டில் உள்ள வியாபாரங்கள் கொடி கட்டி பறக்கின்றன.

    ரெஜியின் குடும்பத்தை இலங்கையில் இருந்து முதலீட்டு விசாவிலேயே தென் அமரிக்காவிற்கு ரெஜி வரவளைத்துள்ளார். தென் ஆபிரிக்காவில் ஒரு வசதியான வீட்டை வாங்கி அங்கு அவர்களை குடியமர்தியுமுள்ளார். தென் ஆபிரிக்காவில் பல வியாபரங்களை ரெஜியின் மனைவியன் பெயரில் ஆரம்பிதுள்ளதுடன் அதை அவரின் மனைவியும் உறவினர்களும் வெற்றிகரமாக நடாத்தி வருகிறார்கள்.

    விடுதலைப் புலிகளின் தலை இறந்ததை அறிவிக்க வேண்டும் என கேபி முனைந்த போது அதை தடுத்து நிறுத்தியது ரெஜியே. ஒரு 2 கிழமைக்கு பிறகு சொல்லுவோம் என்று கூறிய ரெஜி அதை ஒருவாறு இழுத்து இழுத்து இப்ப பிரபாகரனின் இரண்டாவது வருகைக்கு மக்களை தயார்படுத்தி வருகிறார். இதற்கு வசதியாக தற்போது கேபி சிறீ லங்காவில் கம்பி எண்ணுகிறார்.

    பிரபாகரனின் இரண்டாவது வருகைக்கு துணை போக இன்று இவரின் கூட்டில் தனம்> நெடியவன்> ஜெயா என்று பல முக்கிய புலி பிரமுகர்கள் இணைத்துள்ளனர். இதன் ஆரம்ப கட்ட வேலைகளுக்காக பிரித்தானிய தமிழர் பேரவைக்கு ரெஜி கிட்டத்தட்ட 1.5 மில்லியன் பவுண்களை ஒதுக்கியுள்ளார். நெடியவன் தமிழ் நெற் ஜெயாவிற்கு ஒரு மில்லியன் பவுண்களை கொடுத்துள்ளதாகவும் இந்த பணத்துடன் ஐபீசி போன்ற வானெலிகளை தொடர்ந்து இயக்கும் பணிகளுக்கும் நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இது தவிர தற்போது ஜீரீவி தொலைக்காட்சி இவர்களின் பிடியில் இல்லாததால் இன்னுமொரு தொலைக்கட்சி சேவை ஒன்றை ஆரம்பிப்பதற்கும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. எதிர் வரும் நவம்பர் மாதம் கோலாகாலமாக மாவீரர் தினத்தை ஏற்பாடு செய்வதற்கு ரெஜி பிரித்தானிய தமிழர் பேரவைக்கு மேலும் ஒரு மில்லியனை வழங்கியுள்ளதுடன் அதை முதலீட்டாக வைத்து குறைந்த பட்சம் 2 மில்லியன்களாவது இந்த மாவீரர் தினத்தில் சேர்க்க வேண்டும் என பிரித்தானிய தமிழர் பேரவைக்கு உத்தரவிட்டுளார். இதற்கான முதல் கட்ட வேலைகள் நடைபெற்று வருவதுடன் முரசம் விளம்பர புத்தக வேலைகளும் மிக மும்மரமாக நடைபெற்று வருகிறது. பிரபாகரனின் இரண்டாவது வருகை நடைபெறுகிறதோ இல்லையோ ரெஜி நெடியவன் கூட்டுக்கு பணம் கொட்டோ கொட்டு என்று கொட்டுவது மட்டும் நிஜம்!

    Reply
  • Anonymous
    Anonymous

    பிரபாகரனின் இரண்டாவது வருகைக்காக பெருமளவு நிதி ஒதுக்கப் பட்டிருக்கிறது என்கிறீர்கள்(கையாடல்)!. எது எப்படியிருந்தாலும், கடைசியாக “தமிழர்களின் பிரச்சனையாக”, பெரும்பாலான தமிழர்கள் ஏற்றுக் கொள்ளும்(தவறான விளக்கங்களால்)ஒரு, “செய்தியை” வைத்தால், இதுவரை நடைப் பெற்றதைவிட,பெரிய “ஆபத்து வந்து சேரும்”.கலைஞர் கருணாநிதியால் கூட்டப்படும், எதிர்வரும் “உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு”, இத்தகைய “பில்லினேயர்களின்” கருத்தையே முன் வைக்கப் போகிறது. மெலிந்த மொரக்கொடைக்கு ஆதரவாகவும், ரணிலையும்,யூ.என்.பி. யையும், ஆட்சியில் அமர வைத்துவிட்டால, “தமிழர்களின் வெற்றி” என்று கொக்கரிக்கும்!.

    தயாநிதி, கலாநிதி,மாறன்களும், கலைஞரும், ரணிலும், யுஎன்பி யும், சி.ஐ.ஏ, மற்றும் எஸ்.ஐ.எஸ்(எம்16),போன்றவற்றின் ஏஜெண்டுகள், முதலாளிகளின்? பக்கம் இருப்பவர்கள் என்ற கேலிகூத்தான பரப்புரைகள் இத்தகைய கோமாளிக்கூத்திலிருந்தே உருவாகிறது!. உண்மையில்,இவர்களின் “கிரிமினல் நடவடிக்கையுடன்” ஒப்பிடும் போது, அமெரிக்க, பிரிட்டிஷ் உளவு நிறுவனங்கள் பரிதாபத்துக்கு உரியன!. பெரிய நாடுகளின் பலப்பரிட்சைகள், விடுதலைப் புலிகள்- இலங்கை அரசாங்கம் சண்டைப் போல் பரபரப்பாக இருக்காது. இதில் இலங்கையினது ஒரு சிறு பங்கே!. சோனியா காந்தி, பிரியங்கா, காங்கிரஸ் அரசாங்கம், உலகத் தமிழாராய்ச்சியின் கருத்தை ஆதரிக்கலாம், ஆதனால் இந்த “பில்லினேயர்களுக்கு”, சில முதலீட்டு வாய்ப்புகள் கிடைக்கலாம்!, பலரை சரிக்கட்டிய மகிழ்ச்சி கலைஞர் குடும்பத்திற்கு ஏற்ப்படலாம், வருகிற தேர்தலிலும் பயனலிக்கலாம்!. ஆனால் பிரபாகரன் மாட்டிய மாதிரி “கிடுக்கிப் பிடியில்” முழுத் தமிழினமும் மாட்டக் கூடிய வாய்ப்புகளும் உள்ளன!. குட்டை குழப்பப் படுகிறது, மீன்பிடிக்கத் தயாராகுங்கள்!.

    Reply
  • Kusumbo
    Kusumbo

    ஊரார் காசுகளை சுருட்டினால் ராஜ் ராஜரட்ணம் என்ன நீங்களும் நானும் பில்லியன் எயராக அல்ல பல பல பில்லியன்களுக்கு தலைவனாகலாம். போரைச்சாட்டி அகதிகளைச்சாட்டி கொள்ளையடித்த காசை என்ன செய்வது என்று தெரியாமல் அரசைத் தாஜாபண்ணப்பணம் கொடுக்கிறார். விலாங்குக்குப் பிறந்தவர்கள் போலும்.

    Reply
  • Kusumbo
    Kusumbo

    ரி ஆர் ஓவில் இருந்து அல்லது சேர்த்த கோடி கோடியான டொலர்கள் எங்கே? இப்பணம் ஒன்றில் பல்லி சொன்னதுபோல் மக்களுக்குப் போக வேண்டும் அல்லது உடல் வருந்தி உழைத்த பணம் கொடுத்து மக்களைப் போய் சேரவேண்டும். எல்லோரும் ஏன் மெளனம் காக்கிறார்கள். கொடுத்தவர்களும் ஏன் மெளனம்?

    Reply
  • jeeva
    jeeva

    கொடுத்தவர்கள் எப்போதுமே மெளனம் காத்தார்கள். ஆனால் கொடுக்காதவர்கள் தான் ஏதேதோ குற்றமெல்லாம் சொல்வார்கள் ………………..

    Reply
  • மாயா
    மாயா

    //Kusumbo on September 22, 2009 6:22 pm ஊரார் காசுகளை சுருட்டினால் ராஜ் ராஜரட்ணம் என்ன நீங்களும் நானும் பில்லியன் எயராக அல்ல பல பல பில்லியன்களுக்கு தலைவனாகலாம். போரைச்சாட்டி அகதிகளைச்சாட்டி கொள்ளையடித்த காசை என்ன செய்வது என்று தெரியாமல் அரசைத் தாஜாபண்ணப்பணம் கொடுக்கிறார். விலாங்குக்குப் பிறந்தவர்கள் போலும்.//

    இவர்களின் சொத்துக்களும் , பிஸ்னஸ்களும் சிறீலங்காவில் இருக்கின்றன. அதைக் காப்பாற்ற இப்போது சிறீலங்கா அரசுக்கு உதவுவது போல லஞ்சம்தான் கொடுக்கிறார்கள். தமிழீழம் கிடைத்தால் அங்கு பிஸ்னஸ் செய்ய பல பண முதலைகள் புலிகளுக்கு பணம் கொடுத்தனர். அது இல்லையென்ற போது அரசுக்கு கொடுக்கின்றனர். இங்கே பொது நலமேயில்லை. சுயநலமே நிறைந்துள்ளது. பல கோடிகளை காக்க சில கோடிகளைக் கொடுப்பது நட்டமேயில்லை. புலிப் பினாமிகள் ஏதோ ஒரு விதத்தில் அரசுக்கு பணம் கொடுத்து அங்குள்ள தமது சொத்துகளை காப்பாற்ற இழிக்கின்றனர். புலிகளது பெரும்பாலான பிஸ்னஸ்கள் பினாமிகள் பெயரில் கொழும்பு மற்றும் சிங்கள பகுதிகளில் உள்ளன. இவை பலரது கண்களில் புலப்படாது. உள் குத்து வெட்டுகள் வந்தாலும் ஒன்று இரண்டே அகப்படும். அதிகமானவை புலித்தலைமையின் நேரடி அணுசரனையோடு மட்டுமே நடைபெற்றவை. இந்தியாவிலும் இதே நிலையே.

    இவைகளில் 10 வீதத்தையாவது அந்த வன்னி மக்களுக்கு கொடுக்க இவர்கள் முற்பட்டால், வன்னியை சொர்க்கமாக்கலாம். இவர்கள் தாம் சொர்க்கத்தில் வாழ நினைப்பார்களா? அல்லது தாம் சொர்க்கத்தில் வாழ , அடுத்தவர்கள் நரகத்தில் வாழ வேண்டும் என நினைப்பார்களா? சுயநலம் கொண்ட இவர்கள் தம்மைத்தான் நினைப்பார்கள்.

    Reply
  • nada
    nada

    ஜீவாவின் மேலுள்ள கருத்து குழந்தைப்பிள்ளைத்தனமாக உள்ளது.

    Reply
  • vetilaikerni
    vetilaikerni

    ரெஜி வெற்றிலைக்கேணியை சேர்ந்தவர். இவரின் குடும்பத்தில் மாவீரர்களும் உண்டு. எனினும் தன்னை அடையாளப்படுத்தும் போது வெற்றிலைக் கேணியிலிருந்து தமது குடும்பமே முதலில் இயக்கத்துக்கு போனது.தனது தாய் தான் வீரத்திலகமிட்டு அனுப்பிவைத்ததாக விபரம் தெரியாதவர்களுக்கு சொல்லிக்கொள்வார். ஆனால் வெற்றிலைக்கேணியிலிருந்து முதன் முதல் புலிகள் இயக்கத்துக்கு சென்றவர் குதிரைவீரன் அல்லது ஜீவன் என்று அழைக்கப்பட்ட மாவீரன்.

    அடுத்து ரெஜி 1995இல் யாழ் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்த போது யாழ் இடம்பெயர்வுடன் இயக்கத்தில் இணைந்து கொண்டவர். இயக்கத்தில் இணைந்து கொண்ட இவர் தமிழ்செல்வனின் அரசியல் பணிக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் படித்தபடியால் சில அலுவலக எழுத்துப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டார். பின்னர் படிப்படியாக தமிழ்செல்வனின் கையை இறுகப்பற்றிக்கொண்டு ஏனைய போராளிகளுக்கு தகடு கொடுத்து தமிழ்செல்வனின் நம்பிக்கைக்குரியவனாக மாறினார்.

    இந்தநேரத்தில் ரிஆர்.ஓ அமைப்புக்கு பொறுப்பாக இருந்தவரும் திருமலை ரவிக்கும் தமிழ்செல்வனுக்குமிடையிலான கருத்து முரண்பாடு ரவியின் நிர்வாகத்தில் ஊழல்மோசடி நிலவுவதாக பிரபாகரனுக்கு தமிழ்செல்வனால் தகடு கொடுக்கப்பட்டது. இதனை பிரபாகரனும் எந்தவித கேள்விக்கும் இடமின்றி ரவியை மாற்றி வேறு ஒருவ்ரை நியமிக்க உத்தரவிட்டார். இதன்போது தமிழ்செல்வனுக்கு கண்ணில்பட்ட விசுவாசிதான் ரெஜி. ரெஜி தலைவரான கதை இதுதான்.

    எனினும் ரவி தன்மிதான குற்றச்சாட்டுக்களை நிரூபிக்கும்படியும் தனது சீரான கணக்கு வழக்குகளை பிரபாகரனுக்கு எழுத்து மூலமாக சமர்ப்பித்தார். இதன் உண்மைநிலையை அறிந்து தருமாறு பிரபாகரன் ஒரு விசாரணை கமிட்டியை நியமித்தார். இதில் கேணல்சங்கர், தமிழேந்தி, பொட்டு, பதுமன், பரா ஆகியோரை கொண்டகுழு சம்பந்தப்பட்டவர்களை விசாரணை செய்து ரவியில் எதுவித குற்றமுமில்லை என தமிழ்செல்வனுக்கு எதிராக தீர்ப்பாயம் அமைந்தது. எனினும் மீளவும் அந்தப்பொறுப்பில் செயற்படமுடியாதென ரவி கூறியதால் ரெஜி தொடர்ந்தும் ரிஆரோ பொறுப்பை தக்கவைக்க முடிந்தது. இங்கு முக்கியமான ஒன்று ரவி பொறுப்பாக இருந்தபோது இருந்த ரிஆரோவின் கட்டமைப்பே இப்பொது வரை இருக்கிறது. ரவிக்கு முன்னர் மாத்தையாவின் விசுவாசியான விசுவமடு நாதன் ரிஆரோவுக்கு பொறுப்பாக இருந்தார்.

    இங்கு ரெஜிக்கு பின்னாலிருந்து இயக்கிய தமிழ்செல்வனின் அதிகாரமே இவரை தலைவராக்கியதே தவிர இவர் தலைமை தாங்ககூடிய பண்புசார் நிலை இவரிடம் கிடையாது. இவருடைய பொறுப்பில் ரிஆரோ நிர்வாகம் பெரும் ஊழல் மோசடி நிர்வாகச்சீர்கேடு இருந்தபோதும் தமிழ்செல்வன் கண்டும் காணாமல் விட்டார்.

    உதாரணத்துக்கு, சமதானகாலத்தில் ரீஆர் ஓ எடுத்த கட்டிடம் கட்டும் ரென்டர் ஒனறுக்காக கொழும்பிலிருந்து வந்து தனது சொந்தபணமாக வட்டிக்கும் வங்கியிலும் எடுத்துவந்து வன்னியில் முதலிட்டு(50இலட்சம்)கட்டிய சிவில் எஞ்சினியர் கட்டிடம் கட்டி முடிந்ததும் பணம் தருவதாக ரெஜி வழங்கிய உறுதிமொழியில் தனது கட்டிட பணியை முடித்தார்.ஆனால் பின்னர் அந்தப்பணம் குறித்த தமிழ் சிவில் எஞ்சினியருக்கு இன்றுவரை கொடுக்கப்படவில்லை. புலிகளின் எல்லாத்தலைமைக்கும் கடிதம் எழுதியும் பணம் கொடுக்கவில்லை. இதனால் அந்த இளைஞன் பணக்கஸ்டத்தால் கொழும்பில் சப்பிடாமலே இருந்ததாக அழுதுசொன்னார். படித்துபட்டம் பெற்றும் அவர் இன்று அவர் தனது கடனை அடைப்பதறகாக லண்டனில் வந்து பெற்றொல் செற்றிலும் சிக்கன் கடையிலும் பட்டையடிக்க்கிறார். லண்டனில் ரெஜி நிற்கிறார் என அறிந்து ரெஜியை சந்தித்து காசு கேட்க பல முயற்சி மேற்கொண்டும் ரெஜி சந்திப்பதை தவிர்த்து கொண்டார். இந்த காசு எந்தக்கணக்கில்? இப்படி வணங்கா மண் வரை மோசடி நடந்துள்ளது. ஆனால் ரெஜிக்கு லண்டனில் இரு கடை இருப்பதாக உறுதியாக அவரது லண்டன் தரப்பினர் உறுதிப்படுத்துகின்றனர். சரி இது இயக்க முதலீடு என வைத்துக்கொண்டால் கடந்த 4 மாத லாபநட்டம் யாரது கையில் உள்ளது ரெஜி சொல்ல முடியுமா? கடந்த 4மாதத்தில் புலிகள் இயக்கத்தின் முதலீட்டு வருமானங்கள் மட்டும் போதும் பல கடஙளை அடைப்பதற்கு.

    Reply
  • Visuvan
    Visuvan

    //கொடுத்தவர்கள் எப்போதுமே மெளனம் காத்தார்கள். ஆனால் கொடுக்காதவர்கள் தான் ஏதேதோ குற்றமெல்லாம் சொல்வார்கள் ………………..//

    மக்கள் மெளனமாக இருக்க புலிகள் யுத்தம் செய்தது போல? மக்கள் பேசாது இருக்க மக்களிற்காக புலிகள் பேச்சுக்களில் ஈடுபட்டு அனைத்தையும் நாசமாக்கியது போல! மக்கள் எப்பவும் மெளனமாகத்தான் இருப்பார்கள்! அவர்களுக்காக புலிகள் மட்டும் தான் குரல் கொடுக்கவேண்டும்?!?

    Reply
  • palli
    palli

    ஜீவா தீர்வு திட்டம் படித்து முடிந்து. கணக்கு வழக்குகள் பார்க்க வந்தாச்சா? இங்கேயும் பல்லி வருமெல்ல;
    இதுவும் எமது மக்கள் சம்பந்தபட்ட பிரச்சனைதானே?
    யார் கொடுத்தவர்கள்,??
    யார் கெடுத்தவர்கள்?
    நீங்கள் கொடுத்தவர்களின் பெருமை பற்றி அங்கலாய்பது தெரிகிறது, நாமோ கெடுத்தவர்களின் மோசடியை எண்ணி ஆத்திரபடுகிறோம்; இதில் என்ன தவறு?? ஜீவா. அது சரி நீங்கள் கொடுத்தீர்களா இலையா??

    Reply
  • jeeva
    jeeva

    பல்லி,
    நான் கொடுத்தேன். ஆனால் ஒருபோதும் கேள்விகேட்டவனல்ல. மேலும் அள்ளிக் கொடுத்தவர்களையும் அறிவேன். இன்றுவரை கேள்வி கேட்கவில்லை அவர்கள் என்பதையும் அறிவேன்.

    Reply
  • Visuvan
    Visuvan

    //நான் கொடுத்தேன். ஆனால் ஒருபோதும் கேள்விகேட்டவனல்ல. மேலும் அள்ளிக் கொடுத்தவர்களையும் அறிவேன். இன்றுவரை கேள்வி கேட்கவில்லை அவர்கள் என்பதையும் அறிவேன்.//

    ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றூவர்களும் இருப்பார்கள்! அதை விட பணம் கொடுத்து எதையும் செய்யலாம் பணம் கொடுப்பது மட்டும் தான் விடுதலைப் போராட்டத்தின் அதியுயர் பங்களிப்பு என்று நீங்கள் நினைத்ததால் தான் இன்று முள்ளி வாய்காலில் அனைந்தும் எரிந்து சாம்பலாகி உள்ளது! நீங்கள் கொடுத்தது உட்பட.

    Reply
  • jeeva
    jeeva

    நாங்கள் ரீ.ஆர்.ஓ வைப்பற்றிச் சொன்னால் நீங்கள் ஏன் புலியை இழுக்கிறீர்கள்?

    Reply
  • accu
    accu

    தலைவர் தமிழீழம் பெற்றுத்தருவார் அதில் தமக்கும் ஒரு பங்கு உண்டு என்ற நப்பாசையில் கொடுத்தவர்கள், அள்ளிக்கொடுத்தவர்கள் எல்லோருக்கும் நல்ல வளிக்ஸ்!! என்றாலும் விடாதயுங்கோ நாடுகடந்த தமிழீழத்தில் பங்கு கிடைக்கலாம் முயற்ச்சி செய்யுங்கோ!

    Reply
  • Visuvan
    Visuvan

    சும்மா அம்புலிமாமா கதை பறைய வேணாம்! ரீஆர் ஒ வும் புலியும் ஒன்று என்று பால்குடியும் சொல்லும்!

    Reply
  • KP
    KP

    //jeeva on September 23, 2009 7:08 pm நாங்கள் ரீ.ஆர்.ஓ வைப்பற்றிச் சொன்னால் நீங்கள் ஏன் புலியை இழுக்கிறீர்கள்?//
    TRO என்பது புலிகள் என்பது கூட தங்களுக்கு தெரியாதோ?

    Reply
  • BC
    BC

    கேள்வி கேட்காமல் கொடுப்பவர்கள், அள்ளி கொடுப்பவர்கள் இருப்பதினால் தான் வறுகுபவர்கள் நல்ல நம்பிக்கையுடன் நாடுகடந்த தமிழீழம் என்று வறுகுவார்கள்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    jeeva
    நல்லாச் சொன்னியள் போங்கோ.. அதானே ரீ.ஆர்.ஓக்கும் புலிக்கும் என்ன சம்பந்தம்?? ரீ.ஆர.ஓவை தேவானந்தாவும், சித்தார்த்தனும் தானே நடத்துகினம்.

    Reply
  • மாயா
    மாயா

    jeeva, TRO மகிந்த ராஜபக்ஸவுடையதாக நினைத்தீர்களோ தெரியாது? சுவிஸ் புலிகளின் TRO சண் (பொறுப்பாளர்) , TRO பணத்தை , தமது கணக்கில் வைப்பிட்டு , தமது குடும்பத்தினருக்கு பகிர்ந்து கொடுத்துள்ளார். இப்போது அவரிடமிருந்த பணம் அவர் பூதலாகிவிட்டது.

    Reply
  • jeeva
    jeeva

    ‘…சும்மா அம்புலிமாமா கதை பறைய வேணாம்! ரீஆர் ஒ வும் புலியும் ஒன்று என்று பால்குடியும் சொல்லும்!….

    ஆனால் ” ரீஆர்ஓ வின் ஸ்தாபகராகக் கருதப்படும் அமெரிக்க பில்லியனெயர் ராஜ் ராஜரட்ணம் ’ என தேசத்தால் வர்ணிக்கப்படும் ஆளிடம் பணம் வாங்கும் போது மட்டும் அமைச்சர் மிலிந்தவுக்கு தெரியாதாம்!
    எல்லோரும் இங்கே வாதம் எவ்வாறு ஆரம்பிக்கப்பட்டது என்பதைத்தான் பார்க்க வேண்டும். கொழும்பில் ரீ.ஆர்.ஓ வின் பனத்தைக் கையகப்படுத்தும் போது சொல்லப்பட்டவை என்ன? இது புலியின் பணம், இவை ஆயுதம் வாங்க என்றே வைத்திருக்கிறார்கள் (கொழும்பு வங்கியில் இருந்தது) என்பன எல்லாம்! ஆனால் ரீ.ஆர்.ஓ வின் ஸ்தாபகராக கருதப்படும் ராஜரட்ணத்தின் பணம் 1மில்லியனுக்கே பல்லை இளிப்பானேன்?

    Reply
  • nada
    nada

    jeeva//ஊரார் காசுகளை சுருட்டினால் ராஜ் ராஜரட்ணம் என்ன நீங்களும் நானும் பில்லியன் எயராக அல்ல பல பல பில்லியன்களுக்கு தலைவனாகலாம். போரைச்சாட்டி அகதிகளைச்சாட்டி கொள்ளையடித்த காசை என்ன செய்வது என்று தெரியாமல் அரசைத் தாஜாபண்ணப்பணம் கொடுக்கிறார்.//Kusumbo

    Reply
  • jeeva
    jeeva

    ‘..போரைச்சாட்டி அகதிகளைச்சாட்டி கொள்ளையடித்த காசை என்ன செய்வது என்று தெரியாமல் அரசைத் தாஜாபண்ணப்பணம் கொடுக்கிறார்….

    உலகிலேயே மிகச் செல்வந்தரான ஒரே இலங்கையர் என்கின்றார் கட்டுரையாளர் , நீங்கள் என்னவோ அகதியைக் காட்டி காசு புடுங்கினவர் என்கிறியள். சரியென்றே வைத்துக்கொண்டாலும் முன்னர் ஐயையோ என கத்தியவர்கள் இப்போது ஒப்பசிற் ஸ்ரேற்மன்ற் விடுவது ஏன்?

    Reply
  • Thaksan
    Thaksan

    புலி ஒண்டும் காசு புடுங்கேல்லை. நீங்கள் தான் ஒவ்வொருத்தரும் உங்கட உங்கட நன்மைகருதி நன்மையின் அளவுக்கேற்ப கொடுத்தனீங்கள். யாரும் புலி விடுதலை அல்லது தமிழீழம் பெற்று தரும் எண்டு நம்பி காசு குடுத்தனிங்கள் எண்டு மனச்சாட்சியில் கை வைத்து சொல்லுவீங்களா? உங்கட காசு தமிழ்ச் சனத்தை அழிக்க மட்டும்தான் பிரயோசனபட்டிருக்கு எண்டதை இப்பவாகிலும் யோசிப்பீங்களா? மனச்சாட்சியிருந்தால் இனித்தான் நீங்கள் அள்ளிக் கொடுக்க வேணும் அந்த அகதிச் சனங்களுக்கு. உங்கட காசால் நடந்த அழிச்சாட்டியத்தில் தான் அவர்கள் தங்கட உறவுகளையும் உடைமைகளையும் இழந்து இண்டைக்கு கால் வயிறுநிரப்ப கையேந்தி நிக்கிறாங்கள். மனச்சாட்சியிருந்தால் அந்த சனத்திற்கு நேரடியாக கிடைக்ககூடிய வகையில் ஏதேனும் உதவிகளைச் செய்யப்பாருங்கள். நீங்க செய்த பாவம் உங்களை நிம்மதியாக வாழ விடாது ஆனால் நீங்கள் இனி செய்யப்போற புண்ணியமாவது உங்கட பிள்ளைகுட்டியள் கடைசிக்காலத்தில உங்களை மதிக்க வைக்கட்டும்.

    Reply
  • palli
    palli

    அருமை தக்ச்சன் அருமை;

    Reply
  • மாயா
    மாயா

    Thaksan உங்கள் கருத்துகள் சொக்கத் தங்க கட்டிகள்.

    Reply
  • Kusumbo
    Kusumbo

    அன்று கிட்டுவை சுவீஸ் ஏற்றது காரணம் அன்று ஐரோப்பாவில் சட்டம் அப்படி. இனி ரெஜி ஐரோப்பாவில் எங்கும் அரசியல் தஞ்சம் கோரினாலும் அவர் மீண்டும் லண்டனுக்கே அனுப்பப்படுவார். இது ஐரோப்பிய நாடுகள் எல்லாம் இணைந்த டபிளினில் செய்த ஒப்பந்தமாகும். ஒருபாதுகாப்பான ஐரோப்பிய நாட்டில் அகதி அந்தஸ்துக்கோரியவர் மீண்டும் வேறு ஒரு ஐரோப்பிய நாட்டில் அகதி அந்தஸ்துக் கோரினால் அவர் முதலில் அகதி அந்தஸ்துக் கோரிய நாட்டுக்கே திருப்பி அனுப்பப்படுவார். அந்த நாடுதான் அவரின் விண்ணப்பத்தைப் பரிசீலிக்கும் உரிமையுடையது. சிலவேளை கோட்டா சிஸ்டத்தில் எடுக்கலாம் என்றாலும் அதுகடினமானதே. கோட்டா எடுப்பது போர்நடந்த இடங்களில் இருந்தே.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    Kusumbo,
    தங்கள் தகவல் தவறானது. காரணம் ஒரு ஐரோப்பிய நாட்டில் அரசியல் தஞ்சம் நிராகரிக்கப்பட்டிருந்தால், அந்தக் கடிதத்துடன் ஐரோப்பாவில் இன்னொரு நாட்டிலும் அகதி விண்ணப்பம் கொடுக்கலாம். ஏற்கனவே ஒரு ஐரோப்பிய நாடு நிராகரித்ததாலே மற்யை ஐரோப்பிய நாடும் அதை வைத்து நிராகரிக்க முடியாது. அவர்களும் அந்த விண்ணப்பத்தை பரிசீலித்தே தமது முடிவைக் கூற வேண்டும்.

    Reply
  • Thaksan
    Thaksan

    எமனுக்கே இடியப்பம் தீத்தின எங்கட சனத்தோட முட்டிப் பார்க்குது முட்டாள் படை(அகதி முகாமில் முகாம் விட்டு முகாம் போய் உறவுகளை சந்தித்தது குற்றமாம். வெறும் கல்லெறிக்கே ஏ.கே தூக்கி சுட்டிருக்கு) உவையளை உடைச்சு வெளியில் வாறது ஒண்டும் அந்த சனங்களுக்கு ஒரு பெரிய வேலையில்லை. அவைக்கு ஏ.கே. பயிற்சி கொடுத்தவைக்கே ஓ.கே. சொன்னவை அவை. நல்ல காலம் இப்போதைக்கு கிட்டயில்லை போல கிடக்கு. சனி இடம்பெயர்ந்திட்டாராம். பாவம் அவர் எந்த முகாமில் இருக்கிறாரோ தெரியேல்லை…. சனியும் இடம்பெயர்ந்திட்டார் எண்டு எல்லா பத்திரிகையிலும் இருக்கு. எந்த முகாமில்? எத்தனையாம் வலயத்தில் இருக்கிறார் எண்டு யாருக்கும் தெரியுமோ? கடைசியாக அருணாசலம் முகாமில் முந்தநாள் பின்னேரம் நின்டவராம். 5 பேருக்கு தரிசனம் கொடுத்தவராம். எங்கையோ ஆகாயத்தால போனவரை ஏணி வைச்சு இறக்கி எடுத்திருக்கினம்.

    Reply