‘பிரபாகரன் ஆயுதங்களை மட்டுமே நம்பி அரசியலைத் தவறவிட்டதாலேயே வன்னிப் பேரவலம் இடம்பெற்றது’ புலி ஆதரவு அரங்கில் தமிழருவி மணியன் தொகுப்பு : த ஜெயபாலன்

Maniyan_thamilaruvi‘தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் ஆயுதங்களை மட்டுமே நம்பி அரசியலைத் தவவவிட்டதாலேயே வன்னிப் பேரவலம் இடம்பெற்றது’ என தமிழருவி மணியன் செப்ரம்பர் 24 மாலை லண்டன் ஈஸ்ற்ஹாமில் நடைபெற்ற கலந்துரையாடலில் தெரிவித்தார். இலங்கைப் பிரச்சினை தொடர்பாக ஏற்பாடு செய்யப்பட்ட இக்கலந்துரையாடலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களால் நிறைந்திருந்த அரங்கில் ‘இலங்கைத் தமிழ் மக்கள் எதிர்காலத்தில் ஆயுதப் போராட்டத்தால் எதனையும் சாதிக்க முடியும் என்று தான் நம்பவில்லை’ எனத் தெரிவித்தார் தமிழருவி மணியன். ‘தமிழீழ விடுதலைப் புலிகளினதும் அதன் தலைவரினதும் தியாகத்தை தான் மதிப்பதாகத் தெரிவித்த தமிழருவி மணியன் அவர் (வே பிரபாகரன்) ஆயுதங்களை மட்டும் நம்பியது மிகப்பெரிய தவறு என்றும் அது இவ்வளவு அழிவை ஏற்படுத்தி விட்டது’ என்றும் தெரிவித்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்ட வடிவத்தை எதிர்த்த போதும் இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையேயான யுத்தம் உச்ச கட்டத்தில் இருந்தபோது பெரும்தொகையான தமிழ் மக்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கையில் இலங்கை அரசை யுத்தத்தை நிறுத்தமாறு வற்புறுத்தி வந்தவர் தமிழருவி மணியன். ஆளும் காங்கிரஸ் கட்சியின் நீண்டகால உறுப்பினரான அவர் இலங்கை அரசை யுத்தத்தை நிறுத்துமாறு இந்தியா வற்புறுத்தாததையிட்டு தனது கட்சிப் பதிவியையும் உறுப்புரிமையையும் துறந்தவர். சாத்வீகப் போராட்டமே இன்றைய காலத்திற்குப் பொருத்தமானது என்று நம்புபவர்.

‘தமிழக அரசியல் வாதிகள் உணர்ச்சி பொங்களிக்க மேடைகளில் பேசிவிட்டு போய்த் தூங்கிவிடுவார்கள். அவர்களை நம்பி அரசியல் மோசம் போய்விடாதீர்கள்’ என்று எச்சரித்த தமிழருவி மணியன் அவ்வாறு ‘என்னாலும் பேச முடியும்’ ஆனால் ‘என் தமிழினம் அழிக்கப்படுவதை என்னால் தாங்க முடியாது’ என்றார். நெடுமாறன், வைக்கோ, திருமாவளவன் போன்றவர்களின் வாக்கு வங்கிகள் ஒரு சில வீதமே எனச் சுட்டிக்காட்டிய தமிழருவி மணியன் ‘பரந்து பட்ட தமிழக மக்களின் ஆதரவைப் பெறாமல் இந்திய அரசின் போக்கில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது’ என்றார். ‘இவர்களது அரசியல் பேச்சுக்கள் உணர்ச்சிபூர்வமாய் இருக்கும் கைதட்டுவார்கள், விசிலடிச்சான் குஞ்சுகள் விசிலும் அடிப்பார்கள் அவ்வளவுதான் அதற்கு மேல் என்ன?’ என்று கேள்வியும் எழுப்பினார்.

தமிழருவி மணியத்தின் சிறிய பேச்சைத் தொடர்ந்து அரங்கில் இருந்தவர்கள் தமது கருத்துக்களை வழங்கவும் கேள்வி எழுப்பவும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. புலி ஆதரவு அரங்கு ஒன்றில் மாறுபட்ட கருத்துடைய ஒருவர் பிரதான பேச்சாளராக வரவழைக்கப்பட்டது இதுவே முதற்தடவையாக இருந்தது. செல்வவிநாயகர் ஆலயத் தலைவர் செல்வராஜா ‘கலைஞர் கருணாநிதியைப் பலப்படுத்தி அவரைக் கொண்டு நீங்கள் எதையாவது சாதித்திருக்க முடியாதா?’ எனக் கேள்வி எழுப்பினார். ‘என்னதான் கூறினாலும் வைக்கோ, திருமாவளவன், ராமதாஸ் போன்றவர்கள் இலங்கைத் தமிழர்களுக்காக குரல் கொடுத்தவர்கள்’ என்றார் செல்வராஜா. ‘மகிந்த ராஜபக்ச நினைக்கின்ற மாதிரி அல்ல. தலைவர் பெரும் திட்டத்தோடு வருவார்’ என்றும் ‘போராட்டம் தொடரும்’ என்றும் ஒருவர் கருத்துத் தெரிவித்தார்.

‘ஆயுதப் போராட்டமே ஒரே வழி’ என்ற கூக்குரல் ஒலிக்கத் தவறவில்லை. அதற்கு ஒருபடி மேலேசென்று ‘சுறாவளி’ போல் சுழட்டி கருத்து வெளியிட்ட சிவபாதம் என்ற முன்னால் கூட்டணி (தமிழரசுக் கட்சி) உறுப்பினர் ‘நானும் எனது மகனும் புலி. இந்தியாவுக்கு ஒரு பாடம் படிப்பிக்கிறோம்’ என்றார். கூட்டத்தின் இடையிடையே இவரது ‘குளறி’ வித்தைகள் அரங்கைக் குழப்பியது. இன்னும் ஓரிருவரும் மதுபோதையில் நின்று குளறி வித்தை காட்டியதைத் தவிர கூட்டம் சுமூகமாகவே நடந்தது.

Maniyan_thamilaruvi‘நான் இங்கு உங்களை மாற்றுவதற்காக ரோவினால் அனுப்பப்ட்டவன் அல்ல. என் இன மக்கள் கொல்லப்படுவதை பார்த்துக் கொண்டிருக்க முடியாமல் யாதார்த்தமாக சில விடயங்களைப் பார்க்கும்படி சொல்கிறேன். இல்லை ஆயுதப் போராட்டம்தான் முடிவு என்று நீங்கள் நினைத்தால் அதற்கு நான் எதுவும் செய்ய முடியாது. ஆயுதம் எடுத்தால் அழிவு எதிரிக்கு மட்டுமல்ல எமக்கும் தான் என்பதனை மறந்தவிடக்கூடாது. நான் உங்களுக்கு ஏற்றமாதிரிப் பேசுவதற்காக இங்கு வரவில்லை. எனக்குச் சரியெனப்பட்டதை உங்களுக்கு சொல்கிறேன். உணர்ச்சி வசப்பட்டு முடிவுகளுக்குச் செல்லாமல் நிதானமாகச் சிந்தியுங்கள்’ எனத் தமிழருவி மணியன் அங்கிருந்தவர்களைக் கேட்டுக்கொண்டார்.

தன்னுடைய பேச்சுக்களில் இலங்கை அரசையும் அதன் இனவாதப் போக்கையும் மிகச் சரியாகவும் நேர்த்தியாவும் கண்டித்த தமிழருவி மணியன் அந்த இனவாதப் போக்கிற்கு எதிராக சாத்வீகமாகவும் ராஜதந்திர ரீதியாகவும் தொடர்ச்சியான போராட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினார். ஒரு திலீபனுடன் சாத்வீகப் போராட்டத்தை நிறுத்தாமல் தொடர்ந்து இருந்திருந்தால் இந்தப் பேரவலத்திற்குச் செல்ல வேண்டி இருந்திராது என்பதையும் அவர் தனது பேச்சில் சுட்டிக்காட்டினார்.

சட்டத்தரணியும் பல்வேறு அமைப்புகளின் தலைவருமான ப சிதம்பரப்பிள்ளை தனது கருத்தைத் தெரிவிக்கையில் ‘இந்தியா இலங்கையுடன் இணைந்து தமிழ் மக்களுக்கு துரோகம் இழைத்துவிட்டது. தேசியத் தலைவர் இந்தியாவை நம்பியதே அவர் விட்ட மிகப்பெரிய தவறு’ எனத் தெரிவித்தார். இதே கருத்தினை இன்னும் பலரும் வெளியிட்டனர். தமிழருவி மணியன் தான் கட்சியின் பதவியில் இருந்தும் உறுப்புரிமையில் இருந்தும் வெளியேறியவர் என்று கூறி இருந்தும் பலரும் மீண்டும் மீண்டும் அவரை ஒரு இந்தியப் பிரதிநிதியாக்கி கேள்விகளை தொடுத்தனர்.

இவற்றுக்கு பதிலளித்த தமிழருவி மணியன், ‘பிரபாகரன் ஒன்றும் இந்தியாவை நம்பி இருக்கவில்லை. அமெரிக்கா கப்பல் அனுப்பிக் காப்பாற்றும் என்று நம்பித்தான் கடைசிவரை இருந்தார். இந்தியா மட்டுமல்ல புரட்சியை வென்றெடுத்த நாடுகளே ஆயுதங்களை இலங்கைக்கு வழங்கி இருந்தன. இந்தியா இந்தியா என்று சொல்லிச் சொல்லியே நீங்கள் இந்திய மக்களை எதிரிகளாக்கி உள்ளீர்கள். இந்தியா வேறு இந்திய மக்கள் வேறு. எந்தவொரு சாதாரண இந்தியப் பிரஜையாவது எமது நாட்டு பிரதமரைக் கொலை செய்திருக்கலாம் என்று குற்றம்சாட்டும் இலங்கைத் தமிழ் மக்களுக்கு உதவக் கூடாது என்று சொல்லி இருக்கிறார்களா?’ எனக் கேள்வி எழுப்பினார். அவர் தொடர்ந்தும் கூறுகையில் ‘அமெரிக்காவில் டலஸ் பகுதியில் தமிழ் சங்கத்தில் காலை ஒரு சந்திப்பு மாலை ஒரு சந்திப்பு. ஒன்று இந்தியத் தமிழர்கள் சந்திப்பு மற்றையது புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள் சந்திப்பு. பாரிஸில் புதுச்சேரித் தமிழர்களும் இலங்கைத் தமிழர்களும் சேர்ந்து எதுவும் செய்வதில்லை’ இவ்வாறு தமிழருவி சொல்லிக் கொண்டிருக்கையில் ‘லண்டனிலும் அப்படித்தான். இலங்கைத் தமிழர்கள், மலேசியத் தமிழர்கள், சிங்கப்பூர்த் தமிழர்கள், இந்தியத் தமிழர்கள் என்று தனித்துத்தான் செயற்படுகிறார்கள்’ என்று ஒரு குரல் வந்தது. ‘ஏன் நாம் ஒற்றுமையாகப் போராட முடியாதவர்களாக இருக்கிறோம்’ என்றும் தமிழருவி மணியன் கேள்வி எழுப்பினார்.

‘புலம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கு எப்போதும் உண்மைகளை ஏற்றுக்கொள்வதில் ஒரு பிரச்சினை உள்ளது.’ என்று தனது கருத்தை வெளியிட்ட தேசம்நெற் த ஜெயபாலன் ‘புலம்பெயர்ந்த தமிழர்கள் இன்னமும் நிஜத்திற்கு வரவில்லை. வரவும் விரும்பவில்லை. இன்னமும் கனவுலகத்திலேயே உள்ளனர். நீங்கள் இன்று வெளியிட்ட இதே கருத்துக்களை நான்கு மாதங்களுக்கு முன் வெளியிட்டு இருந்தால் உங்களை ரோ உளவாளி என்றும், தேசியத் துரோகி என்றும் அழைத்திருப்பார்கள்’ எனத் தெரிவித்தார். கூட்டத்தின் முடிவுப் பகுதியில் வெளியிட்ட இக்கருத்து மீண்டும் சிறு சலசலப்பை ஏற்படுத்தியது.

Maniyan_thamilaruviஅதனைத் தொடர்ந்து பேசிய தமிழருவி மணியன் ‘புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் என்னால் பிளவுபட்டுக்கொள்ளத் தேவையில்லை. ஆனால் இன்று மூன்று லட்சம் மக்கள் முகாம்களில் பேரவலத்திற்கு உள்ளாகி உள்ளார்கள். அவர்களை விடுவிக்க வழிசெய்ய வேண்டும். நீங்கள் ஏதோ ஒரு வகையில் கல்வி வசதி வாய்ப்புகளைப் பயன்படுத்தி இங்குவந்து ஓரளவு வளமாக வாழ்கிறீர்கள். அப்படி வாழ்ந்துகொண்டு ஆயுதப் போராட்டம் என்றெல்லாம் பேச முடியும். ஆனால் அந்த முகாம்களில் வாழும் மக்களின் நிலையென்ன. இதுவரை ஆயுதப் போராட்டத்தில் ஒரு 10 வீதம் உரிமைகளைப் பெற்றிருந்தால் இவ்வளவு மக்களை இழந்து இந்த உரிமைகளைப் பெற்றிருக்கின்றோம் என்று சொல்லலாம். அப்படிச் சொல்வதற்கு என்ன இருக்கின்றது?’ என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

நாடுகடந்த தமிழீழ அரசு பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த தமிழருவி மணியன் ‘எமக்கு முன் உள்ள உதாரணம் தீபெத். எந்த நாடு அதனை அங்கிகரித்தது? அயர்லாந்துக்கு என்ன நடந்தது?’ என்று கேள்வி எழுப்பியதுடன் ‘தமிழ் நாட்டுக்கு இந்திய அரசமைப்பில் உள்ள உரிமைகள் போன்ற உரிமைகளைக் கோரி அதனை நோக்கிச் செல்வதே தற்போதுள்ள யதார்த்தம்’ எனத் தெரிவித்தார்.

இறுதியாக கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்த வி போஸ் கருத்துத் தெரிவிக்கையில், ‘எமது போராட்டத்தில் பல தவறுகள் நடந்துள்ளது. அதனால் போராட்டம் முடிவுக்கு வந்தள்ளது. அதனை போஸ்மோட்டம் செய்து அதன் சரி பிழைகளை சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். மாற்றுக் கருத்துக்களைக் கேட்டு அதன் சரி பிழைகளை ஆராய்கின்ற பக்குவம் வரவேண்டும். எத்தனையோ ஆயிரம் மக்களை இழந்திருக்கிறோம் படிப்பினைகளை கற்றுக் கொள்ள வேண்டும். நாங்கள் ஒரு காலத்தில் துரோகிகள் என்று சொல்லியவர்களுடனெல்லாம் ஒரே மேசையில் உட்கார்ந்திருந்து கதைக்கின்றோம். சாத்வீகப் போராட்டம் தோற்றுவிட்டது. ஆயுதப் போராட்டமும் தோற்றுவிட்டது. இப்போது தமிழருவி மணியன் சொல்கின்ற அறிவு வழி சிந்திக்க வேண்டும். அவர் துரோகி. இவர் துரோகி. இந்தியா துரோகம் செய்துவிட்டது என்பதை விட்டுவிட்டு யதார்த்தமாகச் செயற்பட வேண்டும்’ எனத் தெரிவித்தார்.

மூன்று மணிநேரம் வரை நடைபெற்ற இக்கலந்துரையாடலில் பெரும்பான்மையானவர்கள் யதார்தத்தை நோக்கித் தள்ளப்படுவதைக் காணக் கூடியதாக இருந்தது. நான்கு மாதங்களுக்கு முன்பு இவ்வாறான கருத்துக்கள் புலி ஆதரவு அரங்கு ஒன்றில் நினைத்துப் பார்த்திருக்க முடியாது. அடுத்த இரு தினங்களில் செப்ரம்பர் 26ல் புங்குடுதீவு நலன்புரிச் சங்கம் தொல் திருமாவளவனையும் தமிழருவி மணியனையும் பிரதம பேச்சாளர்களாக அழைத்துள்ளது. புலி ஆதரவுத் தளத்தில் தற்போது ஒரு கருத்தியல் மாற்றத்தின் அவிசியத்திற்கான தேவை உருவாகி உள்ளதையே இது வெளிப்படுத்துகின்றது.

Show More
Leave a Reply to gunarajah Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

27 Comments

  • மாயா
    மாயா

    அடடா, ,இனியாவது ஞானக் கண் திறந்தால் மகிழலாம்.

    Reply
  • senthil
    senthil

    சில மாதங்களுக்கு முன்னர் தமிழருவியின் உரையை விழுந்தடித்து யூ டியூப்பிலும் தமிழ் தேசிய ஊடகங்களிலும் போட்டவர்கள் இந்த உரையை போடமாட்டார்கள்.

    இப்போது தமிழருவிக்கு பதிலாக ஈழநாடு பாலச்சந்தர் புதுமை படைக்கிறார் பிரான்சிலிருந்து அது தான் ரொப் ரென்னில் முதலாவது இடத்தில் இப்போது எல்லா தமிழ் தேசிய ஊடகங்களில் முதலிடம் பிடிக்கிறது. இனி தமிழருவி மணியன் தரவரிசையில் காணாமல் போய்விடுவார்.

    Reply
  • thurai
    thurai

    ஆயுதத்தை நம்பிய தம்பி,
    தம்பியை நம்பிய புலத்துப் புலிகள்,
    தமிழக அரசியல்வாதிகளின் பேச்சில் மயங்கும் தமிழர்

    இவர்களால் கம்பிவேலிக்குள் தவிக்கும் ஈழத்தமிழர்.
    எல்லோரையும் ஏமாற்றிப் பிழைக்கும் தமிழீழ கொள்ளையர்
    கூட்டமும் ஊடகங்களும்.

    சினிமாவை அரசியலாக்கிய தமிழகம்.
    அரசியலை சினிமாவாக்கியவர்கள் புலத்துத் தமிழர்கள்.

    துரை

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    அப்ப எனி அடுத்த கூட்டத்திற்கு, தமிழருவி மணியனுக்கு அழைப்பு இல்லை என்று சொல்லுங்கோ…..

    Reply
  • palli
    palli

    பார்த்திபன் அப்படி சொல்ல முடியாது; இது ஒரு (பிரிவு) புலியின் வெள்ளோட்டமேதான், சில புலிகளுக்கு தமிழக சில புலிகள் இடையூறு விளைவிப்பதால் அவர்களுக்கு போட்டியாக அருவி போன்றோரை களம் இறக்குமாபோல்தான் இருக்கு; அத்துடன் இவர்களது வரவு இங்குள்ள புலி பினாமிகள் மீது ஆதரவு புலிகளின் கோபத்தை தணிக்கவும் உதவும் என சிலர் நினைக்கிறார்கள் ; கருத்து முரன்பாட்டுக்கு அப்பால் அருவி மிக நல்ல சிந்தனையாளன், கவர்ச்சி பேச்சாளன், சொல்ல வந்த விடயத்தை உணர்வுடன் சொல்ல கூடியவர், எல்லாத்துக்கும் மேலாக தமிழ்மீது பற்று கொண்டவர்; அப்படியானவர் தொடர்ந்தும் சொல்லி கொடுத்ததை சொல்ல மாட்டார்தானே, ஆக அருவி அனை உடைத்துவிட்டது என நினைக்கிறேன், அல்லது அருவி வேறுதிசை நோக்கி செல்ல போகிறதா? பார்ப்போம் பொறுத்திருந்து;

    Reply
  • kutuvi
    kutuvi

    தெளிவான பார்வையை செலுத்தியிருக்கிறார் தமிழருவி. அதை விடவும் பிரபாகரன் இந்தியாவை நம்பியிருந்தவர் என்ற கேள்விக்கு தமிழருவி கொடுத்த பதில் போதுமானதாக இல்லை.
    ஆனாலும் அவர் அமெரிக்க கப்பல் வந்து தன்னை காப்பாற்றி செல்லும் என்று பிரபாகரன் எண்ணிக்கொண்டிருந்தார் என்ற கூற்றில் உண்மை இருக்கிறது. மொத்தத்தில் தமிழருவி போன்ற பேச்சாளர்களை அழத்து வந்து இங்கு பேச வைத்தால் புலம் பெயர் தமிழர் மத்தியில் ஞானம் பிறக்கும். அல்லது கலகம் பிறக்கும்….

    Reply
  • gunarajah
    gunarajah

    கலகம் பிரகட்டும் நாயம் பிரக்கும் இனியாவது புலிகலின் ஊடகங்களில் வீலைஙடும் life or deete (la vie or more ) dans la mond c’es ça proplem ok.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    பல்லி,
    அருவியார் பிழைக்கத் தெரிந்தவர். நேரத்திற்கேற்றவாறு எங்கு சாய வேண்டுமோ அங்கு சாய்ந்து விடுவார். பிரபாகரன் இறப்பிற்கு சில தினங்கள் முன்பு ஐரோப்பிய புலிப்பினாமி ஊடகமொன்றில் புலிகளின் வீரத்தைப் பற்றியும் அவர்கள் நிச்சயம் வெற்றி கொள்வார்கள் என்றும் வீராப்பாய் பேசி கருணாநிதி துரோகியென்றும் இன்னும் என்னென்னவோ எல்லாம் கூறினார். ஆனால் பிரபாகரன் இறந்ததன் பின் இன்னொரு ஐரோப்பிய புலிப்பினாமி ஊடகத்தில் புலிகளின் தவறையும் மேலோட்டமாகச் சுட்டிக்காட்டியும் கருணாநிதியின் செயற்பாடு சரியானதென்றும் அவரை விமர்சிப்பது தவறென்றும் அப்படியே மாற்றிப் போட்டார் பாருங்க ஒரு போடு. இவ்வளவும் ஒரு கிழமை வித்தியாசத்தில் நடந்தது. எனக்கோ தலை சுற்றியது. எனி அம்புட்டுத் தான்.

    Reply
  • palli
    palli

    சில வியாபாரிகள்கூட தம்மையும் அறியாது சமூகத்துக்கு நல்லது செய்வார்கள், அருவியையும் அப்படியே எடுத்து கொள்வோமே;

    Reply
  • jeeva
    jeeva

    தமிழருவியிடம் மாற்றுத்திட்டம் உண்டு. அவர் அதனை நடைமுறைப்படுத்த எடுத்த எடுக்கும் முயற்சிகள் உண்மைத்தன்மை கொண்டவை. ஈழப்போரின் கடுமையான கட்டமான முள்ளிவாய்க்கால் நிகழ்வுக்கும் முன்னதாகவே தனது பதவியைத் தூக்கி எறிந்தவர். அவர் சார்ந்திருந்த கட்சியில் ஒரு நாற்காலிக்கு போடும் சண்டை உலகறிந்தது. ஆனாலும் பதவியை தூக்கி எறிந்து முன்னுதாரனமாக திகழ்ந்து எல்லா தமிழக அரசியல் வாதிகளையும் பின்பற்றி நடக்கக் கேட்டவர். இந்த பதவி விலகலால் அதிகம் பாதிக்கப்பட்டவர் கருணாநிதி. இதனை கருணாநிதி வாயாலேயே சொல்லி கேட்டவர் எனது தமிழக சமூக உணர்வாள நண்பர்.

    மேலும் அவர் புலம்பெயர் தமிழர்களுக்கு எதையும் ஒழிவுமறைவில்லாமல் சொல்பவர் மட்டுமன்றி மறுத்துக் கேட்கும் கேள்விகளுக்கு அமைதியாகப் பதிலை ஆதாரங்களுடன் சொல்வார். அத்துடன் கனடாவில் ஒரு கதையும், இங்கிலாந்தில் ஒருகதையும், தமிழ்நாட்டில் இன்னொரு கதையும் சொல்லி கொழும்புசென்று ”திரும்பிவந்து” இன்னொரு கதையும் சொல்ல மாட்டார். தமிழ்நாட்டில் ஈழப்போரை முன்னெடுக்க இப்போது பல சக்திகளுடன் இணைந்து ஆக்கபூர்வமான வேலைகளைச் செய்து வருகிறார். வெறும் புத்தகப்புரட்சி வாக்கியங்கள் பேசும் மாற்றுக்கருத்தாளர் அல்ல அவர் என்பதே அவரை புலம்பெயர் சமூகம் விரும்புவதற்கு காரணம் என நான் நினைக்கிறேன். அவரை நான் தனிப்பட்ட முறையில் சந்தித்திருக்கிறேன். அவர் கருத்துகள் மிகவும் மாறுபட்டவை, ஆனால் ஈழத்தமிழருக்கு எப்போதும் ஆதரவானவை!

    Reply
  • T Sothilingam
    T Sothilingam

    தமிழருவி மணியன் இன்று பேசுவது சரியாக உள்ளது. அவர் கடந்த காலங்களில் என்ன பேசினார் என்பதைவிட இன்று என்ன எங்கள் முன்பேசினார் என்பது முக்கியமாக விமர்சிக்கப்படக் கூடியது. மணியன் நேரடியாகவே பல கேள்விகளை புலிகளின் ஆதவாளர்களைப் பாரத்து கேட்டுள்ளார். அதில் முக்கியமானது இவ்வளவு காலமும் ஆயுதம் தூக்கிப் போராடினீர்களே கண்டது என்ன? இழந்த இழப்புக்கள் எத்தனை? இவற்றுக்கு என்ன பதில்?

    இன்று வரையில் முன்ணணி புலி உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் இதற்கான பதில்களை முன்வைக்க.

    மணியனது கூட்டத்தை ஏற்பாடு செய்த போஸ் (முன்னாள் புலி ஆதரவாளர்) இன்று புலிகளின் கடந்தகாலத் தவறுகள் என்ன என்ற ஆய்வு முக்கியம்; இது செய்யாது இதற்கு மேல் நகர முடியாது எனவும் பேசினார். அவர் தன்னை விமர்சித்து அடுத்து என்ன செய்யலாம் என்பதையும் தமிழர்களை ஜக்கியப்படுத்த பலர் எடுக்கும் முடிவுகளையும் எடுத்துப் பேசினார். இதை நான் வரவேற்கிறேன். காரணம் போஸ் அவர்கள் பல கூட்டங்களிள் மாற்று இயக்கத்தவர்கள் பற்றிய பல காரசாரமான கருத்துக்களை விட்டிருந்தார். ஆனால் இன்று அதில் மாற்றம் பெற்றுள்ளார். நடைமுறை சாத்தியமான விடயத்தை பற்றி சிந்திக்கும் இவரின் முன்மாதிரியை மற்றைய புலிகள் ஆதவாளர்களும் ஆரம்பிக்க வேண்டும்.

    மணியன் பேசும்போது புலம்பெயர் மக்களின் பிரதிநிதிகள் எல்லா தரப்பினரும் தமிழகம் வந்து தமிழகதிடமும் இந்திய அரசிடமும் பேசும்படி கேட்கிறார் இதில் கவனிக்கவேண்டிய அம்சம் என்னவெனில் இந்தியா இன்னும் தமிழர் அரசியல் தீர்வில் தனது அக்கறையை வைத்திருப்பதை மணியன் உணர்கிறார். இந்த விடயத்தை இந்திய உயர் ஸ்தானிகர் அலுவலகம் சென்றவர்களிடமும் இந்திய அதிகாரிகள் கேட்டுள்ளனர் என்பதை கவனிக்க.

    மணியன் போராட்டத்தை ஆரம்பித்தகாலத்தையும், புலிகளுக்கு பல சந்தர்ப்பங்கள் கொடுக்கப்பட்ட காலத்தை புலிகள் கைகழுவி விட்டதையும் கோடிட்டு பேசுகிறார். புலிகள் இந்தியாவை அல்ல, அமெரிக்கா வந்து தம்மை மீட்கும் என நம்பி இருந்தாக, அந்தக் கப்பலை இந்தியாவே தடுத்ததையும் – ‘எமது தலைவர் இந்தியாவை நம்பியல்லவா தன்னை இழந்துள்ளார்’ என்ற சட்டவல்லுனர் சிதம்பரப்பிள்ளையின் கருத்துக்கு பதில் அளித்தாக எனக்கு பட்டது.

    மணியன் இந்திய தமிழ்நாடு அரசின் ஆட்சியுரிமை பற்றியும் குறிப்பிட்டு அது போன்ற ஒன்றை ஏன் சர்வதேசத்திடம் கேட்டிருக்கக் கூடாது என்று கேட்டார். அது சாத்தியமாகியிருக்கும் என்றார். காரணம் தனிநாடு என்பதே இந்த அழிவிற்கு காரணம் என்பதை தெளிவுபடுத்தினார். இவ்விடத்தில் இந்தியாவிற்கு ஆயுதப் பயிற்ச்சிக்கு போயிருந்த தமிழ் இளைஞர்களிடம் இந்திய அதிகாரிகள் திரும்ப திரும்ப “தனிநாடு அல்ல சுயாட்ச்சி” என்ற கருத்து கூறியிருந்ததை நினைவுகூரலாம்.

    புலிகள் மற்றய இயக்கங்களையும் முக்கியமாக தலைவர் அமிர்தலிங்கத்தையும் கொலை செய்து விட்டு தமிழீழம் என்ற சாத்தியமற்ற இந்தியா உடன்படாத ஒரு நடவடிக்கைகளை அந்த பிராந்தியத்தில் செயற்ப்பட விளைந்ததின் விளைவே இந்த முள்ளி வாய்க்கால் என்பதையும் – இந்தியா இன்னும் அந்த பிராந்தியத்தில் பல பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் விடயத்தில் தனது பிடியை தொடர்ந்து வைத்திருக்கும் என்பதை எனக்கு மணியனின் பேச்சு தெரிவு படுத்துவதாகவே விளங்கியது.

    மேலும் அரசியல் என்பது கிடைக்கும் சந்தர்ப்பங்களை பயன்படுத்திக் கொள்வதே எனவும் கூறினார்.

    Reply
  • palli
    palli

    ஜீவா அருவிபற்றி எமக்கும் சற்றேனும் தெரியும்; ஒருசில வருடங்களே அவருடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது (அது இங்கு தேவையற்றது) ஆனால் அவரது திறமை கடமை பெருமை அனைத்தையும் எனது முதல் பின்னோட்டத்தில் குறிப்பிட்டேன்; இங்கு பிரச்சனை என்னவெனில் புலி தவறு செய்து விட்டது என புலி கூட்டத்தில் புலியால் அழைத்து வரபட்டவர் சொன்னதுதான், இது புலிகளின் மாற்றமா? அல்லது அருவியின் மாற்றமா? திரு கூட ஒரு மார்க்கமாகதான் இன்று GTV பேசினார், ஆக புதிதாக ஒரு தலமையுடன் ஒரு காவடி எடுக்க ஒரு கூட்டம் தயாரா? அல்லது நாடுகடந்த ஈழத்துக்கு இது ஒரு சவாலா? இதில் வேடிகை என்னவெனில் ஈழப்போரை பிரபாகரனுக்கு பின் அருவியோ அல்லது திருவோதான் முடிவு செய்ய வேண்டுமோ?

    இவர்கள் இந்த புலம்பெயர் தேசத்தில் வந்து சிலரது இரத்தத்தை சூடாக்குவதை விட(உணர்வு) ஒரு நடை பக்கத்தில் உள்ள ஈழத்துக்கு போய் அந்த வன்னி மக்களை பார்த்து ஆறுதலாய் நாலுவார்த்தை பேசலாமே; திருவை பற்றி ஒரு செய்தி. இவர் தலித்துக்களின் இதயம்; (அப்படிதான் அவர் உட்பட சொல்லுகிறார்கள்) ஆனால் புலிகளால் ஒரு தலித் பேராசிரியர் கொலப்பட்டபோது ஒரு சிறு கண்டனம் கூட தெரிவிக்கவில்லை, அதுகூட பரவாயில்லை, அவரின் இறுதிகிரிகையில் அன்று திரு ஜேர்மனியில் புலிகொடி ஏற்றி சிறப்பு ஏச்சு நடத்தினார், இரண்டையும் கூட்டி பெருக்கி பாருங்கள் பல்லியின் கணிப்பு சரியாக இருக்கும்; ஆக பணம் பத்தும் அல்ல அரசியலும் செய்யும்; ஏன் நாட்டில் இருந்து இரண்டு நாட்டு பற்றாளரையோ அல்லது ஈழத்தின் சிறப்பு மனிதர்கள் என காணாமல்போன தலைவரால் தெரியபடுத்திய சிலரையோ கூட்டி வந்திருக்கலாமே, சரி அவர்களைதான் விடுங்கள் எங்கள் ரத்த திலகம் உணர்ச்சி அண்ணன் இந்தியாவில் தனியாக வாடுகிறாரே, அவரை அழைத்திருக்கலாமே? இப்போதெல்லாம் கூட்டங்கள்கூட திருவிழா போல் போட்டியாக நடக்கிறது; கனடாவுக்கு போட்டியாக புங்குடுதீவு அமைப்பினரால் திருவும்
    அருவியும் புலம்பெயர் தேசத்தில்; இனி போட்டி கூட்டம் நடத்த இருப்பவர்களுக்கு இந்திய புகழ் நாயகர்கள் சிலரை பல்லி இலவசமாக தருகிறேன்;
    ஜயா நெடுமாறன்,
    தேனிசை செல்லப்பா,
    இயக்குனர் பாரதிராஜா;
    இயக்குனர் செல்வமணி,
    இயக்குனர் சீமான்;
    எழுத்தாளர் அறிவுமதி;
    பேச்சாளர் பாவாணன்;
    நடிகர் மணிவண்னன்;
    பேச்சாளர் வேல்முருகன்;
    இவர்களுடன் அண்ணன் வை கோ ,
    நடிகர் சேரனும் ,பாடகர் குப்புசாமியும் கூட புலம்பெயர் தேசம்காண பிரியபடுவதாக தமிழக செய்தி;

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    //தமிழ்நாட்டில் ஈழப்போரை முன்னெடுக்க இப்போது பல சக்திகளுடன் இணைந்து ஆக்கபூர்வமான வேலைகளைச் செய்து வருகிறார்.- jeeva //

    ஆரம்பிச்சுட்டாங்கையா. அருவியார் ஆயுதப்போராட்டம் எனிச் சரிவராதென்று மேடைக்கு மேடை முழங்குகின்றார். இங்கே ஒருவர் இப்படி பீலா விடுறார்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    பல்லி,
    என்ன அநியாயம் இது?? பெண் என்பதால் ஓரம் கட்டலாமா?? புரட்சிக்கவி தாமரையை விட்டு விட்டடீர்கள்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    // தமிழருவி மணியன் இன்று பேசுவது சரியாக உள்ளது.- T Sothilingam //

    நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. ஆனால் அருவியார் எனியும் பல்டி அடிக்காமல் இருக்க வேண்டும் என்பதுவே என் அவாவும். இவர் இதனை வெளிநாடுகளிலும் ஊடகங்களிலும் வெறும் பேட்டியாகக் கொடுக்காமல் தமிழக மக்கள் முன் முறையாக எடுத்து வைக்க முன் வர வேண்டும். சீமான், வை.கோ போன்ற பிழைப்புவாதிகளிடமிருந்து அவர்களைக் காப்பாற்ற இவர் உதவ வேண்டும்.

    Reply
  • Jeyabalan T
    Jeyabalan T

    தமிழருவி மணியன் பற்றி நான் பெரிதாக அறிந்திருக்கவில்லை. அன்றைய கூட்டத்திற்குப் பின்னர் அறிய எடுத்த முயற்சியில் அவர் ஏன் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் பிரபல்யம் அடையவில்லை என்ற காரணத்தையும் அறிய முடிந்தது. அதனால் தமிழருவி மணியன் பற்றிய ஜீவாவினுடைய கருத்துக்களுடன் நான் உடன்படக் கூடியதாக உள்ளது. ஆனால் ஜீவா குறிப்பிடுவது போல் //அவரை புலம்பெயர் சமூகம் விரும்புவதற்கு காரணம் என நான் நினைக்கிறேன்.// தமிழருவி மணியனை புலம்பெயர் சமூகத்தில் பெரும்பாலானவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அதனை அன்றைய கூட்டத்தில் தெளிவாகக் காணக் கூடியதாக இருந்தது.

    ஆனால் தமிழருவி மணியனின் உரையில் தெறித்த இனஉணர்வு சற்று ஆபத்தானது. இன உணர்வுக்கும் இனவாதத்திற்குமான மெல்லிய இழை அறுந்துவிடுமோ என்கின்ற அச்சம் எனக்கிருக்கின்றது.

    மேலும் எம்மில் பலர் தெரிந்தோ தெரியாமலோ எப்போதும் யூத அதிகாரப் பிரிவினருடன் தங்களை ஒப்பிடுகின்ற போக்கு ஒன்று உள்ளது. தமிழருவி மணியனும் அந்த ஒப்பீட்டைச் செய்திருந்தார். இவ்வாறான சிந்தனை முறையிலும் மாற்றம் ஏற்பட வேண்டும்.

    த ஜெயபாலன்.

    Reply
  • Thaksan
    Thaksan

    எங்கோ தமிழ் நாட்டில் தனது அரசியலை நடாத்தும் தமிழருவியின் ஈழத் தமிழர் பிரச்சனை தொடர்பான தெளிவும் நேர்சீர் பார்வையும் எங்கள் புலம்பெயர் சட்டாம்பிள்ளைகளுக்கு இல்லையே. குருவியின் தலைமேல் பனங்காய் வைத்ததுபோல் வைத்தே கெடுத்தார்கள். புலன்பெயர்ந்து நின்று தளத்து பிஞ்சுகளையெல்லாம் தாரைவார்க்க புத்தி சொன்ன பழி விடுமா வாழ? இன்னும் பலி கொடுக்க தலைவர் வருவாராம்….. காத்திருங்கள் காத்திருங்கள் புலத்தில் அகதிபிச்சை வாங்கிக் கொண்டு காத்திருங்கள். பாழாய்ப் போன எம்மினம் எங்கள் தேசத்தில் இல்லாமல் போகும் வரை காத்திருங்கள்.

    Reply
  • santhanam
    santhanam

    யதார்த்தமான சிந்தனையுடன் காக்கபிடிப்பு இல்லாத கருத்துருவாக்கம் மணியனிற்கு எனது தமிழ்மக்கள் சார்பாக கரவோசம் இப்படியான சிந்தனையாளர்களை எமது சமூகம் ஏற்பதற்கு முன்னிற்கவேண்டும் தனிமனித தூதிபாடிகளை ஓரம்கட்டி உலகநீரோட்டத்தில் எம்மை ஓன்றுனைத்து மனிதத்தை பற்றிய சிந்தனையாளர்களை முன்நிறுத்தி கழுத்தறுப்புப்புக்களிற்கு இடம்கொடாது நீதியான போரட்டத்தை நாம் முன்னைடுப்போம்.

    Reply
  • palli
    palli

    அருவியின் வரவில் புலியுடன்(துனை) இன்னும் சில சக்த்திகள் இருப்பதாக சில செய்திகள்; அது பல்லி சொல்வதை விட அவைகளாகவே சந்தைக்கு வரும் அப்போது அதை பார்ப்போம்; இருப்பினும் அருவியின் வரவு வேண்டதகாததல்ல என்பது பல்லியின் கருத்து;

    Reply
  • palli
    palli

    தக்ச்சன் உங்கள் ஆதங்கம் சரியானதுதான் ஆனால் யதார்த்தத்தை சொன்னாலோ அல்லது எழுதினாலோ பல்லியை போல் பாவியாகி விடுவோமென பயபிடுவதால் பலர் பார்வையாளராகவே இருக்கிறார்கள், இது வேதனையானது மட்டுமல்ல தவறானவர்கள் தலமை வகிக்க வழிவகுக்கவும் உதவும்;

    Reply
  • jeeva
    jeeva

    ஜெயபாலனின் இரண்டு கருத்துகளில் எனது விளக்கத்தை சொல்ல நினைக்கிறேன்.

    1. புலம்பெயர் சமூகத்தினரிடையில் தமிழருவி மணியனுக்கான அங்கீகாரம் பலமானதாக இல்லை என்பதில் ஓரளவு உண்மை இருப்பினும் இவர் ஒருவரே புலிகளுக்கு எதிரான பல கருத்துகளை முன்வைத்த போதும் விரைவாக புலம்பெயர் மக்களிடம் அங்கீகாரம் பெற்ரவராகிறார். அதாவது மிகமிக குறுகிய காலத்தில் கணிசமான ஆதரவு கிடைத்துள்ளமை. காரணம் இவர் பதவியைத்தூக்கி எறிந்து முன்னுதாரனமாகத் திகழ்ந்தது மாத்திரமல்லாது ஈழத்தமிழர் உரிமைப்போரினை முன்னெடுத்துச் செல்ல மாற்றுத்திட்டங்களையும் சொல்லியது.

    2. ஈழத்தமிழரின் யூத ‘அதிகார’ பிரிவினருடனான இணக்கம் என்கின்ற கருத்து இன்று நேற்று ஏற்பட்டதல்ல. ஏன் ஈழம் சாத்தியமாகாது என்ச் சொலப்பட்ட காரனங்களில் ஒன்று சிறிய நிலப்பரப்பு என்கின்ற ‘நொண்டிச்சாட்டு’ பலமடைந்த போது கூட்டணியினர் இஸ்ரேலை உதாரணம் காட்டியது மட்டுமல்லாது ஈழத்தமிழினம் இஸ்ரேலியர்கள்போல இன அழிப்புக்குளாவதும் பாலஸ்தீனியர்போல் உரிமை இழந்து வாழ்வதும் ஆன இனம் என கூறினர். மறைந்த அமைச்சர் அஷ்ரஃப் கூட்டணியிம் மேடைகளில் எண்ணெய்வள நாடுகளை ஈழத்தமிழர் பக்கம் திருப்புவோம் என ‘கதை’ விட்டதை நம்பினோம். ஆனால் ஜே.ஆர் அமைச்சரவையில் ஏ.சி.எஸ் ஹமீட் ஐ போட்டு எல்லோரினது ‘கதை’களையும் தவிடு பொடி ஆக்கியபோது அஷ்ரஃப் கப் சிப்!
    ஆனால் பின்னர் ஆயுத இயக்கங்களின் வளர்ச்சியில் பி.எல்.ஓ/பி.எஃப்.எல் இன் பங்களிப்பு இயக்கங்களை பாலஸ்தீனம் பக்கம் சேர்த்தது. ஆனால் பாலஸ்தீனம் ஸ்ரீலங்காவின் ஆதரவுக்காக தமிழரின் உரிமைப்போரை கண்டும்காணாமலும் ஸ்ரீலங்கா அரசு நோகாமலும் நடந்து கொண்டது. அதேபோலவே அரசுசார்பாக மாறிய இயக்கங்களும் இஸ்ரேலின் மொசாட் ‘ஐடியா’க்ளை அரசுடன் சேர்ந்து உள்வாங்கினர். ஸ்ரீலங்கா ஜனாதிபதி பாலஸ்தீன நட்புறவுத்தலைவர் ஆனார்!

    பின்னர் அறிவுஜீவிகள் என தம்மைக்குறிப்பிடும் சிலருடன் உரையாடியபோது அவர்கள் நாம் புலம் பெயர்ந்துள்ள தேசங்கள் யூத ஆதரவானவை மட்டுமல்ல நம்மில் பலர் யூத மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களிலும் அவர்கள் ஈடுபட்டிருக்கும் தொழில்களிலும் ஈடுபடுகிறோம் எனவே நாம் எம்மை அவர்களுடனேயே அடையாளப்படுத்த வேண்டும் என கூறினர். ஆனால் அவர்கள் புலிஎதிர்பாளர்களாக மாறியவுடன் கதையைத் திருப்பிப்போட்ட விதம் அவர்களின் மீதான நல்லெண்னத்தைத் தவிடுபொடியாக்கியத்து. அவர்களில் பலர் இன்றும் ‘மனித உரிமைப் புத்திஜீவிகளாக’ வலம் வருவது உண்மை.

    மேலும் அண்மைகால வரலாறு எம்மை யூத ‘அதிகார’ வர்க்கம் என்போரின் பக்கமே எம்மை தள்ளுகிறது. சில உதாரணங்களை இங்கு தரலாம் என நினைக்கிறேன்.

    ஸ்ரீலங்காவில் போர்க்குற்றங்கள் நடைபெற்றன என ஐ.நா மனிதவுரிமை ஆனையம் விசாரனை செய்த போது மாறாக அவ்வாறு நடக்கவில்லை என்றும் ஸ்ரீலங்காவினை பாராட்டி பிரேரணையை மாற்றிய ’கடமை’யில் பாலஸ்தீன ஆதரவு நாடுகளின் பங்களிப்பு மிகப்பெரியது. கியூபா, ஈரான், லிபியா , பாகிஸ்தான் உட்பட! ஆனால் இதில் இஸ்ரேல் எடுத்த முடிவு தமிழர் சார்பானது.
    அத்துடன் ஸ்ரீலங்காவுக்கு ஆதரவளிக்க அனைத்து இஸ்லாமிய நாடுகளையும் அண்மையில் கேட்டுக்கொண்டது பாலஸ்தீன ‘அரசு’!
    ஈழத்தமிழர்கள் அறிவுபூர்வமாக சிந்திக்கவேண்டும் என நாம் ஆசைப்பட்டாலும் உணர்வுபூர்வமாகமும் சிந்திக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம் என்பது மிக உண்மை!

    Reply
  • narasimhan
    narasimhan

    If there is no single country in the world that is not accusing srilanka govt, then there must be something wrong with the government. If there’s nothing that the government wants to hide from the world, why not let full access to the international journalists? Btw, i am indian in the US and i am 100% against ltte after what they did to Rajiv Gandhi. BUT, if you continue to treat the tamils there in ur land as 2nd class citizens, you are just sowing the seeds for the next war.

    Reply
  • eraja
    eraja

    மணியனின் எழுத்துக்களை தொடர்ந்து படிப்பவர் எவரும் அவரை ரா உளவாளியாக பார்ப்பது.. வருத்தத்துக்குரிய செயல், இனி நாம் முதலில் செய்யவேண்டியது சிங்கள முகாம்களில் செத்துமடியும் நம் மக்களை மீட்க படவேண்டியது, போராட்ட விஷயங்கள் நீண்ட
    கால திட்டங்கள் அவற்றிக்கு மதிநுட்பம், தொலைதூர பார்வை கொண்ட அரசியல் மற்றும் உலக அரசியல் தெரிந்த ஒரு மாபெரும் சுயநலமில்லாத தலைவர்கள் (நிச்சியம் தமிழ் நாட்டு தலைவர்கள் இல்லை) உ.ம. எழுத்தாளர் ஆ.முத்துலிங்கம், போன்றோர்… (இவர் ஐக்கிய நாட்டு சபை தொடர்புடைய பணியில் இருந்திருக்கிறார் ). உலக அரங்கில் கருத்தியல் ரீதியாக நம் உரிமைகளை பேசி எடுத்து உரைப்பது .. இதை திபெத்தியர்கள் செய்ததால் மார்ட்டின் ச்கோர்செசே வரை படம் எடுக்கும் அளவில் வந்தது திபெத் உரிமைகள்…
    அவ்வண்ணமே அயர்லாந்து உரிமைகளும் அப்படிதான் வெளிப்பட்டது…நாம் கொஞ்சம் இன மற்றும் மொழி உணர்வுகளை பேசி பீற்றி நம் உரிமைகளின் அடிப்படையை விட்டு விட்டோம் சுதந்திர நிலம் இருந்தால் இனம் மற்றும் மொழிகளை காப்பாற்றுவது மிக எளிது. இனி நாம் உலக அரங்கில் நம் குரலை ஓங்கி பதிவு செய்ய வேண்டும். முக்யமாக அறிவுசார் குழுக்களின் நம்பிக்கையை பெறுவது.. அருந்ததி ராய், அமெரிக்க எழுத்தாளர்கள்,ஐரோப்பிய எழுத்தாளர்கள் மற்றும் இன்ன பிற அறிவுசார் குழுக்களின் ஆதரவை பெறுவது நம் உரிமைகளின் சிதைவுகளை அவர்களிடம் எடுத்து உரைப்பது.. எல்லாவற்றையும் விட உலக மீடியாக்களின் கவனத்தில் நாம் குரலை ஓங்கி பதிவு செய்வது. ( நிச்சியம் தமிழ் மீடியாக்கள் இல்லை ) தயவு செய்து என் பதிவை நீங்கள் புரிந்து கொள்விர்கள் என்று நினைக்கிறேன் . இராஜா சென்னையிலிருந்து,,,,

    Reply
  • Kusumbo
    Kusumbo

    அருவி மணியன் என்னத்தையும் சொல்லலாம். பிரபாகரன் ஆயுதத்தை நம்பி அரசியலைக் கைவிடவில்லை. அரசியலைக் கைவிடுவது என்றால் அரசியல் என்ற ஒன்று இருக்கிறது. அது சாணக்கியமானது. தம்பியின் பாஷையில் சொன்னால் இறால் போட்டுச் சுறாப்பிடிப்பது போன்றது என்பதை பிரபாகரன் அறிந்திருக்க வேண்டும். போராட்டமே மக்கள், அரசியல் என்பதை மையப்படுத்தாமல் ஆயுதத்தையும் புலிக்குழுவையுமே மையப்படுத்தியதாக இருந்தது. ஆகவே இது குழுச்சண்டித்தனமே வளர்ந்து ஆயுதம் தாங்கிய மாவியாக்களாய் மாறியதே தவிர அரசியல், மக்கள் என்பது புலிகளின் வாழ்வில் என்று இருந்தது? பிரபாகரன் ஆயுதத்தை நம்பி அரசியலைக் கைவிடவில்லை மூளையைக் கைவிட்டார் என்பது தான் உண்மை.

    Reply
  • siva
    siva

    பிரபாகரன் ஆயுதத்தை மட்டும் நம்பினவர் அரசியல் எண்டால் என்னவென்றே தெரியாதவர்/ ஆயுதத்தை நம்பி அரசியலைக் கைவிடவில்லை மூளையைக் கைவிட்டார் என்பது/கூட தப்பு குசும்பு.அது கடுகளவேனும் இருக்குதா எண்டு பார்க்கத்தான் ஆமிக்காரன் நோண்டிப் பார்த்தான் போலும்

    Reply
  • DEMOCRACY
    DEMOCRACY

    /நான் உங்களுக்கு ஏற்றமாதிரிப் பேசுவதற்காக இங்கு வரவில்லை. எனக்குச் சரியெனப்பட்டதை உங்களுக்கு சொல்கிறேன்/—தமிழருவி மணியன்.

    இவரிடம் ஒரு தூய்மை இருக்கிறது. என்னைக் கவர்ந்தவர். இன்று ஜி டிவியில் அவருடைய பேட்டியை பார்க்க முடிந்தது. தர்க்க ரீதியாக ஒரு நியாயத்தை முன்வைக்க முயற்சி செய்திருக்கிறார். பழ நெடுமாறனைப் போல ஒரு நீண்ட கால காங்கிரஸ் உருப்பினரிடமிருந்து இத்தகைய கருத்து “மதிப்பு மிக்கது”. ஆனால் இலங்கைத் தமிழர்களைப் பற்றி குறிப்பாக புலன் பெயர்ந்த இலங்கைத் தமிழர்களைப்பற்றி அவர் புரிதல் அற்றவர் என்ற கோணம் புலப்படலாம். டெலோ அடிபாட்டில் சோடா உடைத்துக் கொடுத்தது போல, (கருணாவைப் பற்றி சொல்லும் போதும் சரி), ஈழப்? பெண்கள்தான் தமிழீழத்துக்கு உயிர் பலி கொடுப்பதற்கு, அனாவசியமாக! ஆதரிக்கிறார்கள்!. இதிலிருந்து “அந்த சமூக அமைப்பில்” தமிழீழம் என்ற சொல்லாடல்,”அரசியல்” என்பதைவிட,”ஆசை அபிலாசைகளின்” “வெளிப்பாடல் உருவாக்கம்”, என்பதாகவே கொள்ளல் வேண்டும்.

    தமிழருவி மணியன் ஒரு “அரசியல் விளக்கத்தை” கொடுக்க முனைந்தது கேலிப் பொருளாகவே கொள்ளப்படும், கேணயணாகவே மதிக்கப்படுவார். எல்லோரும் இந்தியாவை தற்போது கட்டியிழுப்பது (புலம்பெயர்), அவர்களின் தனிப்பட்ட நலன்களுக்காகவேயன்றி, ஒரு அரசியலுக்கு “உருவம் கொடுக்க அல்ல” என்பதை மணியன் விளங்காமல், பத்தாண்டுகள் மகாத்மா காந்தி, பிரிட்டிஷ் காலனிய வாதிகளிடம், பத்தாண்டுகள் வெறும் “டொமைன்” மட்டுமே கேட்டார், என்றும் தற்போது இலங்கைத் தமிழர் பிரச்சனை?, நல்லதுக்கோ, கெட்டதுக்கோ,” சர்வதேச சிக்கலில்” மாட்டியுள்ளது, அந்த சிக்கலை சரியான முறையை எடுக்க கவனம் செலுத்துங்கள் என்று கூறியதை, ஏற்கனவே பல வழிகளில் இதை வியாபாரமாக்கி விட்டவர்களின் காதில் நுழையுமா!!??.

    Reply
  • DEMOCRACY
    DEMOCRACY

    இலங்கை வடக்குப் பகுதி வரலாற்றில், “கேப்டன்” என்ற ஒருவர், அரியாலையில், “டச்சு காரனுக்கோ, ஆங்கிலேயனுக்கோ” அடியாளாக செயல்பட்டு வந்தார் (கேப்டன் பிரபாகரன்?). தடியெடுத்ததால் தண்டல்காரனாக இருந்தார் (ஆரியகுளம் மணியன் மாதிரி). அந்த காலகட்டத்தில் இந்தியாவில் சென்னை மாநகரத்திலும் இப்படிதான் குப்பங்கள் உருவாகின (கடற்கரையை ஒட்டி), இதிலுள்ள அடியாட்கள் ஆங்கிலேயருக்கு சார்பாக லோக்கல் மக்களுக்கு எதிராக ரவுடிசத்தைப் பயன்படுத்தினார்கள், இவர்களுக்கு தரகர்களாக ஆங்கிலோ இந்தியர்கள் செயல்பட்டு வந்தார்கள், இவர்களுக்கு பெரும்பாலும் “துரை” என்ற பெயர்கள் உண்டு. உதாரணத்திற்கு, எங்கள் பகுதியில் பிரபலமாக இருந்தவர் “ரவுடி சுருட்டுக்கார துரை”. மன்னிக்கவும், திரு.பிரபாகரன் அவர்களை, இந்திய அரசாங்கம் இந்த “லெவலிலேயே” கையாண்டிருந்தது. குறிப்பாக மலையாளிகளின் அறிவுரைப்படி.

    இந்தத் தரவுகளை மாற்ற இலங்கைத் தமிழர்கள் ஏதாவது வழியில் செயல்பட்டிருக்கிறார்கள் என்றால், “இல்லை” என்பதே என்னுடைய பதில். புறநானூற்றுப் புடுங்கிகள் என்று, “தமிழை” வைத்து “மேளம் அடித்து” கலத்தையும், கதாகாலஷேபத்தையும் ஓட்டிக் கொண்டிருந்தவர்களை ஏமாற்றவே நேரத்தை செலவிட்டார்கள். புறநானூற்றுக் கலக் கட்டம் வேறு, விடுதலைப் புலிகள் துவங்கிய மேற்குலக செல்வாக்கு மிகுந்த காலக்கட்டம் வேறு,தற்போதைய காலக் கட்டம் வேறு. “ஃகார்ல் மார்ஃஸின்” இறுதிக்கட்ட வார்த்தைகள் செயல்படும் காலமிது. கிட்டதெட்ட “டார்க்கியிஸம்”(பினவலண்ட் டெஸ்போட்டிஸம்). உற்பத்திப்பொருள்கள் மற்றும் சந்தைப் படுத்துதலால் விளைந்த “ஏகாதிப்பத்தியம்” தனக்குள்ளான, “உள் போட்டிகளால்”, பொருதலின் விலைகள் மிக மலினப்படுத்தப்பட்டு, அதனால் ஏற்படும் நஷ்டங்களினாலேயே அழிவார்கள் என்பது. இந்த நிகழ்வுகளினால் ஏற்படும் தளம்பு நிலைகளில் உள்ள வரவு செலவு கணக்குகளை நிர்வகிக்கும் அமைப்புகளில் ஏற்படும் குளறுபடிகளின் “கிரிமினல் குழந்தைகளே(குற்றவாளிகளே) இந்த திடீர் “பில்லினேயர்கள்”.

    Reply