பேராசிரியர் திஸ்ஸ விதாரனவுடன் கேள்வி நேரம் : ரி கொன்ஸ்ரன்ரைன்

Tissa_Vitharanaஒக்ரோபர் 18ல் பேராசிரியர் திஸ்ஸ விதாரணவுடனான கேள்வி நேரம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மே 18 நிகழ்வுகளுக்குப் பின் இலங்கை அமைச்சர் ஒருவர் புலம்பெயர்ந்து வாழும் சாராதண தமிழர்களைச் ஒரு பொது இடத்தில் சந்திக்கின்ற ஒரு சந்திப்பாக இது அமைய உள்ளது.

இச்சந்திப்பு அமைச்சர் திஸ்ஸ விதாரண தனது கருத்துக்களைத் தெரிவித்துவிட்டுச் செல்லும் சந்திப்பாக அல்லாமல் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற அரசியல் நடவடிக்கைகள் தொடர்பாக புலம்பெயர்ந்த தமிழர்களின் கேள்விகளுக்கு அமைச்சர் முகம் கொடுக்கின்ற வகையிலேயே  ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கின்றது. மூடிய கதவுகளுக்குள் அரசியல் நடத்துவதும் சிலர் தங்களை அரசியல் முகவர்களாக புரட்சியின் முகவர்களாக காட்டி மேதாவித்தனம் செய்வதற்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். பத்திரிகையாளர்களும் தங்களை அரசியல் மேதாவிகளாகக் காட்டிக்கொள்வோரும் தான் அரசியல் பேசுகின்ற நிலையைக் கடந்து சாதாரண ஒரு புலம்பெயர்ந்த தமிழனும் இலங்கை அரசை நோக்கி கேள்விகளை எழுப்புவதற்கு இச்சந்திப்பு இடமளிக்கும்.

தேசம்நெற் வாசகர்கள் தங்கள் கேள்விகளைப் பதிவு செய்யும் பட்சத்தில் அக்கேள்விகளுக்கான பதிலைப் பெற்று தேசம்நெற்றில் பிரசுரிக்கவும் ஏற்பாடு செய்யப்படும். ஆகையால் தேசம்நெற் வாசகர்கள் தங்கள் கேள்விகளைப் பதிவிடவும்.

ஒக்ரோபர் 18ல் நடைபெறவுள்ள சந்திப்பில் கேள்வி நேரத்தில் பங்கேற்க விரும்புபவர்கள் என்னுடன் தொடர்பு கொண்டு உங்கள் வரவை உறுதிப்படுத்தவும். மட்டுப்படுத்தப்பட்ட இருக்கைகளே இருப்பதால் தங்கள் வரவை உறுதிப்படுத்தாதவர்களை அனுமதிக்க முடியாது என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

என்னுடைய தொடர்புகளுக்கு :
ரி கொன்ஸ்ரன்ரைன்
tarrin@desilugroup.com

Show More
Leave a Reply to Rohan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

17 Comments

  • சாந்தன்
    சாந்தன்

    நன்றி கொன்ஸ்ரன்ரைன்.
    கேட்கவேண்டிய கேள்விகள் ஒன்றும் புதிதாக இல்லை. கேள்வி கேட்டு களைத்து விட்டோம். திரு.விதாரன அவர்கள் பலமுறை ஐரோப்பா வந்துள்ளார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளில் ஒன்றுக்காவது அவரின் பதிலைப் பெற்றுத்தாருங்கள் போதும்!

    Reply
  • காண்டீபன்
    காண்டீபன்

    புலம்பெயர்ந்து வாழும் மக்களின் அரசியல் கருத்துக்களை அவர் ஏன் அறிய விரும்புகிறார்?
    அவ்வாறாயின் அது உத்தியோக பூர்வ அறிவிப்பா?
    எல்லோர் கருத்துகளும் கவனத்தில் எடுக்கப்படுமா அல்லது வெறும் ‘like minded’ ஆட்களின் கருத்துகளுக்கு மட்டுமா இடம்?
    ” 21 பேர் ” குழுவின் கருத்துகளுக்கு என்ன நடந்தது?

    Reply
  • Karen
    Karen

    கேள்வி 1: இனவாத சக்திகளின் கை ஓங்கியுள்ள ஒரு அரசில் இடதுசாரிப் பாரம்பரியத்தில் வந்த நீங்கள் எப்படி நம்பிக்கை வைக்க முடிந்தது?

    கேள்வி 2: கால காலம் வந்த இலங்கை அரசுகள் தமிழ் மக்களுடைய குறைந்தபட்ச அரசியல் அபிலாசைகளையும் நிறைவேற்றவில்லை. அப்படி இருக்கையில் உங்களுடைய ஏபிஆர்சி தீர்வில் எப்படி நம்பிக்கை வைக்க முடியும்

    Reply
  • பல்லி
    பல்லி

    ஜயா உங்கள் செயல்பாட்டுக்கு வாழ்த்துக்கள்;
    கேள்வி;(1)நீங்கள் இடைதங்கல் முகாமுக்கு போனீர்களா? அவர்கள் விருப்பு வெறுப்பு கேட்டு அறிந்தீர்களா? அப்படி போயிருந்தலோ அல்லது அவர்கள் கோரிக்கையை அறிந்திருந்தாலோ அதன் மீது என்ன நடவெடிக்கை எடுத்துள்ளீர்கள்? அல்லது தங்கள் மகிந்தா குடும்பத்திடம் பேசியுள்ளீர்களா??

    கேள்வி;(2) எதுக்காக புலம்பெயர் தமிழரின் ஆலோசனையையோ அல்லது நிலைப்பாட்டையோ தாங்கள் எதிர்பார்க்கிறியள்? இதில் ஏதும் அரசியல் உண்டா? சரி நாம் முன்வைக்கும் யோசனைகளையோ அல்லது கருத்துக்களையோ கொழும்புவரை கொண்டுசெல்லும் தகுதியோ அல்லது அதிகாரமோ தங்களுக்கு உண்டா?? அல்லது உங்கள் பொழுது போக்கிற்க்காக புலம்பெயர் ஜீவிகளை கேலிக்கு அழைக்கிறீர்களா??

    கேள்வி;(3) தாங்கள் கொழும்பை தலமை அலுவலகமாக செயல்படும் தமிழ் அமைப்புகளுடன் பேசினீர்களா?
    (பேசியிருந்தால்) அது உங்களுக்கு தமிழர் பிரச்சனையாக தெரியவில்லையா?அல்லது அவர்கள் தமிழர் பிரச்சனையை பேசவில்லையா??

    கேள்வி(4) இது அமைச்சருக்கான கேள்வியல்ல;
    பேராசிரியருக்கான கேள்வி; உங்கள் மனசுத்தியுடன் சொல்லுங்கள் புலியின் தலமைகளை மகிந்தா அரசு அழித்துவிட்டதா? அல்லது புலியின் தலமைகள் மறைந்து விட்டனவா??

    நன்றி, பல்லி

    Reply
  • Constantine
    Constantine

    Thank you for the questions. I will make sure these questions are raised and the answers will be published on thesam.net – Whether you will be satisfied or not with the answers is entirely a different issue.

    Thank you

    Reply
  • balu
    balu

    I heard his proposed solution is any province they can merge but exclude north and east why? please ask him

    Reply
  • Constantine
    Constantine

    • Following questions were raised on THESAM NET by its readers.

    • THESAM, actively campaign for a constructive dialogue with the Sri Lankan government over a decade now.

    1. Question From Karen :

    • You are a person who is always associated with the leftist thinking – How on earth you can expect a just solution with the prevailing racial sentiments in Sri Lanka??

    • All the successive governments in Sri Lankan couldn’t even satisfy the basic aspirations of the Tamils – Hence how we can trust on the recommendation of the APRC???

    2. Question from PALLI

    • Sir, have you been to the detention centres in Vanni? Did you listen to the concerns of the people who are held there? Have you conveyed this message to Mahinda Rajapaksa family?

    • Minister, what is your motivation to seek the Tamils Diasporas opinion? Is that politics or do you convert this message to Colombo?? Do you have the power to make any changes???

    • Do you talked to Tamil Parties who are functioning from Colombo? – If so, don’t you realise the problem of Tamils?

    • I am not asking this questing in your capacity as a minister. I am seeking an answer from you as a Professor – Do you sincerely believe President Mahinda has eliminated (Killed) all the Tigers leaders – OR are they in hiding????

    3. Question From Balu

    • I understand your proposed solution is that any province can merge apart from North & East?? Please clarify…

    4. Opinion from Shanthan

    • We are tired of asking questions from you… Please answer the questions we have already asked you during your previous visits…..

    Now the time is 11.30 PM – Sorry, I am not taking any more questions. THANK YOU

    Reply
  • சோழன்
    சோழன்

    கொன்ஸன்ரைன், நீங்கள் ஒழுங்கு செய்த இக்கேள்வி நேரத்தில், உங்களால் அழைப்புகள் விடுக்கப்பட்டவர்கள் எவ்வாறான கேள்விகள் கேட்பார்கள் என்பதும் உங்களுக்குத் தெரியும். மற்றும் இக்கேள்விகளால் என்ன நிகழப்போகிறது.

    அறுபது வருடங்களாக கேள்வி கேட்கிறோம். என்ன முடிந்தது? இன்று வரை புலி எதிர்ப்பு அரசியல் நிகழ்த்தி வந்த தாங்கள், புலி அழிந்த நிலையில் தற்போது உங்கள் முகங்கள் வெளிக்க ஆரம்பித்து விட்டது.

    தாங்கள் இதுவரை பசில் ராஜபக்ஸவின் சிந்தனைகளை புலம்பெயர் மக்களிடம் விதைத்து வந்த நீங்கள் சொல்லியவைகள் … மே 18 இற்கு பின்னம் ….

    1. முட்கம்பி வேலிகளுக்குள் உள்ள எம்மக்கள், வெகுவிரைவில் குடியமர்த்தப்படுவார்கள்.
    2. வன்னியில் வீடுகள், குழங்கல், வீதிகள் விரைவாக புணரமைக்கப்பட்டு வருகிறது.
    3. தமிழ் மக்களும் இனி சிங்கக்ள பகுதியில் காணி நிலங்களை வாங்கி குடியேறலாம், அவ்வாறே சிங்களவர்களும் வடக்கே குடியேறுவார்கள்.
    4. யாரும் எதிர்பாராத தமிழ் மக்களுக்கான தீர்வை மகிந்த தரப்போகிறார்.
    … அதை விட ……………… ராஜேஸ்வரி பாலசுப்ரமணியமும், நீங்களும் அங்கு தமிழ் மக்களுக்கு பிரட்சனைகள் எதுவும் இல்லை என்று நப்புகிறவர்கள்.

    1. மே 18இற்குப் பின்னர் வவுனியா முக்காங்களுக்கு வந்த எம்மக்கள் புள்ளி விபரங்கள் இருக்கின்றனவா? அம்மக்கள் பதியப்பட்டுள்ளார்களா?
    2. மே 18இற்குப்பின்னம் குடியேற்றினோம், என இலங்கை அரசு கூறுபவர்களில் எத்தனை முகாம் மக்கள் குடியேற்றப்பட்டுள்ளனர்? மற்றும் அங்கு குடியேற்றப்பட்டவர்கள் தமிழர்களா?
    3. எம்மக்களின் வாழ்வாதாரங்கள் வன்னியில் அழிக்கப்பட்டிருக்கும் நிலையில், அவர்களை குடியேற்றியபின் அம்மக்களின் வாழ்வுக்கான வழி ஏது?
    4. இன்றும் தொடர்ந்தும் முகாங்களில் மக்கள் சித்திரவதைகள், பாலியல் துன்புறுத்தலுக்கு உட்பட்டிருக்கும் நிலையில், அவற்றை மறுக்கும் சிறிலங்கா அரசு, அவை பொய்யாயின் ஏன் இன்னும் ஒரு மனித உரிமைகள் அமைப்பை ஏதும் அம்முகாங்களுக்கு அனுமதிக்கவில்லை?
    5. அண்மையில் இலங்கை சென்ற இந்திய பாராளுமன்ற குழுவின் காங்கரஸ் அங்கத்தவர் ஒருவர் கூறுகையில், வன்னியில் மக்களை குடியமர்த்த சிறிலங்கா அதிபர் விரும்புகிறார். ஆனால் அதை இராணுவம் கடுமையாக எதிர்க்கிறது. அதை மீறி அவர்களை சிறிலங்கா அதிபர் குடியேற்றினால் அது அவரின் உயிருக்கே உலை வைக்கலாம், என கூறியிருக்கிறார். இதன் அர்த்தம் வன்னி மக்களை வாழ்நாளில் சிங்கள அரசு குடியேற்றப்போவதில்லை என்பதா??

    இதுவரை காலமும் புலி எதிர்ப்பு அரசியலில் காலத்தை ஓட்டிய தாங்கள் போன்றோர், தமிழ் மக்களின் சிறிலங்கா அரசின் இனப்படுகொலைக்கு நியாயப்படுத்தி கூறும் காரணங்களில் முக்கியமானவை, அவன் ஜேவிபி காலங்களி ஒரு லட்சம் சிங்கள மக்களையே கொண்றவன். இதுவும் அதே போன்றதே!! அவன் ஜேவிபி இற்கு முந்திய காலங்களில் அல்லது ஜேவிபியின் ஆயுதப்போராட்டம் முடுந்த பின் சிங்கள மக்களை கொண்றனா?? ஆனால் எம்மை சுதந்திரம் கிடைத்ததில் இருந்து அல்லவா கொண்று வருகிறான். புலியோ பூணைகளும் ஆயுதம் தூக்கிய 80களின் ஆரம்பங்களில் அல்லாவா!! அப்போ அதன் முன்னான தமிழர்களின் படுகொலைகளை எவ்வாறு நியாயப்படுத்தப் போகிறீர்கள்??

    சிறிலங்கா அரசின் சிங்கள குடியேற்றங்களை நியாயப்படுத்தும் தாங்கள் போன்றோர், வெள்ளவத்தையில் 75% தமிழர்கள் என்று அடிக்கடி கூறும் தாங்களுக்கு தெரியாததா, வெள்ளவத்தையில் தமிழர்கள் குடியேறினார்களா?? அல்லது குடியேற்றப்பட்டார்களா?? என்று.!! வடகிழக்கில் சிங்களவர்கள் குடியேறுகிறார்களா?? அல்லது குடியேற்றப்படுகிறார்களா?? குடியேறுதல், குடியேற்றப்படுதலுக்கான வித்தியாசம் உங்கள் அறிவுக்கு புரியாததா??

    மற்றும் பேராசிரியர் திஸ்ஸ விதாரன நல்ல மனிதர். மறுக்கவில்லை!! ஆனால் அவருக்கு உள்ள அதிகாரம் உங்களுக்கு தெரியாததா?? இவரின் இச்சந்திப்புகளை தமிழ் மக்களுக்கான தீர்வுக்கான நீண்ட பயணத்தில் ஒருபடி என கூறும் உங்களுக்கு, இதே திஸ்ஸ விதாரன, சர்வதேச மத்தியஸ்தகத்துடன் நடைபெற்ற புலிகளின் உடனான கலந்துரையாடல்கள் எதிலும் பங்கு பற்றியவரா??இல்லை இவர் எமக்காக மாயாயாலம் செய்ர்து தீர்வை தரப்போகிறார் என்றால் ஏன் இன்னும் இதற்கான நகல்களே அறிவிக்கப்படவில்லை?? எமக்கு தரப்படும் தீர்வு எமக்குத்தான் கூறப்படவில்லை, ஏன் இன்னும் சிங்கள மக்களுக்கு கூறப்படவில்லை?? இதனை தேர்தலின் பின் மகிந்த தருவார் என கூறும் உங்களுக்கு தெரியாததா, அதனை சிங்கள மக்கள் எவ்வாறு வரவேற்பார்கள் என்று??

    இன்று அரசியலற்ற புலிகளின் பிழைகளால் அழிந்தோம் எனபது உண்மை!! ஆனால் எங்கள் மீது நடத்தப்பட்ட அவலங்கள் இன்றோ, நேற்றோ தொடங்கியவையல்ல!! புலிகளின் ஆயுதப் போராட்டம் தொடங்கியது 80களில்!! எம்மை சிங்களவன் 48ல் இருந்து அழித்து வருகிறான். எம்மக்களுக்கு நடத்தப்பட்ட மனித உரிமைகள் மீறல்களின் சர்வதேசத்தின் பார்வைகளை திசை திருப்ப உங்கள் போன்றோரும் சிறிலங்கா அரசுக்கு துணை புரிகிறீர்கள் என்பது மறுக்க முடியாதது.சிறிலங்கா அரசின் இது போன்ற சந்திப்புகல் 60 வருடகால ஆயிரக்கணக்கான ஏமாற்று நிகழ்வுகளில் இன்னொன்றே!!

    Reply
  • rajah
    rajah

    yes i am meet him yesterday so not want the questions for the faste 30 years so now how we are meking the next stpe oure peple our contry we are all srilankan peple or peples in the world now what can we do?

    thanks
    rajah in paris

    Reply
  • முன்னாள் பொரளி
    முன்னாள் பொரளி

    //அறுபது வருடங்களாக கேள்வி கேட்கிறோம். என்ன முடிந்தது? இன்று வரை புலி எதிர்ப்பு அரசியல் நிகழ்த்தி வந்த தாங்கள், புலி அழிந்த நிலையில் தற்போது உங்கள் முகங்கள் வெளிக்க ஆரம்பித்து விட்டது//இன்று அரசியலற்ற புலிகளின் பிழைகளால் அழிந்தோம் எனபது உண்மை!! ஆனால் எங்கள் மீது நடத்தப்பட்ட அவலங்கள் இன்றோ, நேற்றோ தொடங்கியவையல்ல!! புலிகளின் ஆயுதப் போராட்டம் தொடங்கியது 80களில்!! எம்மை சிங்களவன் 48ல் இருந்து அழித்து வருகிறான். எம்மக்களுக்கு நடத்தப்பட்ட மனித உரிமைகள் மீறல்களின் சர்வதேசத்தின் பார்வைகளை திசை திருப்ப உங்கள் போன்றோரும் சிறிலங்கா அரசுக்கு துணை புரிகிறீர்கள் என்பது மறுக்க முடியாதது.சிறிலங்கா அரசின் இது போன்ற சந்திப்புகல் 60 வருடகால ஆயிரக்கணக்கான ஏமாற்று நிகழ்வுகளில் இன்னொன்றே!//சோழன் நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே.

    Reply
  • பல்லி
    பல்லி

    //48ல் இருந்து அழித்து வருகிறான்//
    இது உன்மைதான்;(பலர் சொலவதால்) ஆனால் அதைவிட கூட 83ல் தொடங்கிய தறுதலைகள் நாட்டையும் தமிழின கல்வி; பொருளாதாரம் ; புரிந்துனர்வு; வேலை, எல்லாதுக்கும் மேலாக இருப்பிடம், பலரை அகதியாக்கி, சிலரை, கல்லறையில் தூங்கவிட்டு, இறுதியில் மழைகாலத்தில் வரும் நிலாபோல் மாயமாக மறைந்த சம்பவங்களை விட்டு யாரோ சொன்னதை கேட்டு வட்டுகோட்டை அல்லது 48 இது தவிர தமிழருக்கு பிரச்சனை வேறு ஏது என சோழனாய் இருந்து கேப்பது பாண்டிய குலத்தில் இருந்த வந்த பல்லிக்கு சரியாக படவில்லை, தயவுசெய்து சிங்கள மக்களை வம்புக்கு இழுக்காதீர், இலங்கையில் என்னும் 1500000 தமிழர் இருப்பதாக உங்க GTV சொல்லுகிறது, அவர்கள் வாழ புலம்பெயர் தமிழரைவிட சிங்கள மக்களின் நட்ப்பு வேண்டும்; அனைத்து சிங்கள மக்களும் மகிந்தாவும் அல்ல, அங்கு வாழும் தமிழரும் பொட்டரோ பிரபாவோ அல்ல என்பதை சோழன் புரியமாட்டீர்களா??

    Reply
  • Kandaswamy
    Kandaswamy

    சோழன், சரியாக சொன்னீங்கள்…. கொன்ஷ்றன்ரைன் ஆல் மட்டும் அல்ல, விதாரணையாலும் பதில் கிடைக்காது உங்கள் கேள்விகளுக்கு… இது தான் எனது கேள்வியும், தமிழ் மக்களின் கேள்வியும் கூட…

    கொன்ஷ்றன்ரைன் கேட்டு பதில் சொல்வாரென்ரால் உண்மையில் அவர் தமிழ் மக்களுக்கு, அவர்களின் விடிவுகளுக்கு உதவுவார்…..

    Reply
  • BC
    BC

    //புலிகளின் ஆயுதப் போராட்டம் தொடங்கியது 80களில்!! எம்மை சிங்களவன் 48ல் இருந்து அழித்து வருகிறான். //

    இது வரை கேட்டு அனுபவித்த கொண்டிருந்த தமிழீழ தனியரசுக்கான குரல் தான் இது.

    Reply
  • Rohan
    Rohan

    //புலிகளின் ஆயுதப் போராட்டம் தொடங்கியது 80களில்!! எம்மை சிங்களவன் 48ல் இருந்து அழித்து வருகிறான். // என்று கேட்ட ஒரு பின்னுட்டக்காரரை, “இது வரை கேட்டு அனுபவித்த கொண்டிருந்த தமிழீழ தனியரசுக்கான குரல் தான் இது.” என்று பிசி நையாண்டி செய்கிறார்.

    பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு வழிசெய்ய வழிதேடாமல் செத்த புலி அடிப்பதே சுகம் என்று பலர் திரியும் நாட்கள் இவை.
    என்கள் நாட்டுக்குள் நாம் உலவி வருவதை யார் தடுக்க முடியும்? ஆனால் ஆனையிறவு முகாம் ஒரு ட்கடை முகாமாக எப்போதிருந்து இயங்கி வருகிறது தெரியுமா?

    Reply
  • அகதி
    அகதி

    /தமிழரைவிட சிங்கள மக்களின் நட்ப்பு வேண்டும்; அனைத்து சிங்கள மக்களும் மகிந்தாவும் அல்ல அங்கு வாழும் தமிழரும் பொட்டரோ பிரபாவோ அல்ல என்பதை சோழன் புரியமாட்டீர்களா??//………..அனைத்து தமிழரும் பிரபாவோ புலிகளோ அல்ல எனநீங்கள் புரியமாட்டீர்களா இதுவரை வந்த அரசுகள் எல்லாம் சிங்கள மக்கள் தெரிவன சிங்களவர்களே 60வருடமாக மாறி மாறி அவர்களால் நடத்தப்பட்ட மனித உரிமைமீறலுக்கோ கோழைகளுக்கோ சொத்தழிவுக்கோ பழியல்சேட்டைகளுக்கோ எந்த நீதிவிசாரனையோ தண்டனயோ கிடைக்கபோவது இல்லை எல்லாமே புலியால்தான் எனமுடிக்கலாம்……. //இதுவரை கேட்டு அனுபவித்த கொண்டிருந்த தமிழீழ தனியரசுக்கான குரல் தான் இது.//உண்மைதான் BC வடக்கு கிழக்கு தழிழர் அந்தநேரம் அவசரபட்டினம் தலைநகர் தழிழரை துரத்தியடிக்கும்போது உணர்ச்சிவசப்படக்ககூடாது சும்மா இருக்கமாட்டாமல் ஆர்ப்பாட்டம் கடையடைப்பு ஊர்வலம் சத்தியாக்கிரகம் என வெளிகிட்டு இன்று நாமும் அகதியாய் அலையுறம்.–நாடு இருந்தும் அகதி

    Reply
  • BC
    BC

    Rohan, முள்ளிவாய்க்காலில் முடிவுக்கு வந்த கொடூரம் இன்னும் தொடர வேண்டும் என்று விரும்புகிறீர்களா!!

    Reply
  • மாயா
    மாயா

    அப்பாவி மனிதரை மிருகமாக்கி விட்டார்கள். இது சுலபம். ஆனால் அந்த மிருகங்களை மனிதராக்குவதுதான் கடினம். அது மிக மிகக் கடினம். ஒன்று அதுவாக சாக வேண்டும். அல்லது கிழடு தட்டி மனம் மாற வேண்டும். அதுவரை இப்படியான உறுமல்கள் தொடரும். அது நமக்கு மியா…மியா. அவர்களுக்கு கொர்.. கொர். இந்த மிருகங்கள் தன் தவறை ஒரு போதும் உணராது. நம் தலை எழுத்து.

    Reply