முஸ்லிம் தமிழ் சிங்கள சமூகங்களின் உதவியுடன் சிறிலங்கா இஸ்லாமிக் போறம் மேற்கொள்ளும் கண் சிகிச்சை முகாமுக்கான நிதி திரட்டும் வைபவம்

Naja Mohamadஇலங்கையின் வடபகுதி மக்களுக்கு சிறிலங்கா இஸ்லாமிக் போறம் (யுகே) ஏற்பாடு செய்துள்ள கண் சிகிச்சை முகாமுக்கான நிதிசேகரிப்பு வைபவம் லண்டன் மொஸ்க்கில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. டிசம்பர் 12ல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்வில்  நியூஹாம் பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான ஸ்ரீபன் ரிம்ஸ் பிரதம விருந்தினராகக் கலந்துகொள்கிறார்.

சிறீலங்கா இஸ்லாமிய ஒன்றியம் (இலண்டன்) ஆரம்பித்துள்ள முதல் முயற்சி இலங்கையின் வடபகுதியில் உள்ள கண் நோயாளர்களின் தேவை கருதி முதற் தொகுதியாக 500 நோயாளிகளுக்கான சத்திர சிகிச்சை ஒழுங்குகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இவை இரண்டு கட்டங்களாக நடத்தப்பட உள்ளன. முதல் கட்டமாக 20 சிகிச்சை முகாம்கள் வட பகுதியின் 5 மாவட்டங்களில் ஆரம்பிக்கப்பட்டு சிகிச்சைக்கான நோயாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள். இரண்டாவது கட்டமாக தேர்வு செய்யப்பட்ட நோயாளிகளில் 500 நோயாளிகளுக்கான சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும். இச் சிகிச்சைக்கு நோயாளி ஒருவருக்கு தலா £50 ஸ்ரேர்லிங் பவுண்கள் செலவாகுமென மதிப்படப்பட்டுள்ளது.

வன்னி முகாம்களில் இருந்த மக்களுக்கான தேசம்நெற் நூல் திட்டத்திற்கு முக்கிய பங்களித்த அகிலன் பவுண்டேசன் வடபகுதியில் மேற்கொள்ளப்பட இருக்கின்ற கண் சிகிச்சை முகாமிலும் தங்கள் பங்களிப்பை மேற்கொள்ள முன் வந்துள்ளனர். அகிலன் பவுண்டேசன் 25 பேருக்ககான கண் சிகிச்சைக்கான செலவை வழங்க முன் வந்துள்ளது. மேலும் லண்டனில் உள்ள முக்கிய சைவ ஆலயம் ஒன்றும் இக் கண் சிகிச்சை முகாமுக்கு தங்கள் பங்களிப்பை வழங்க விருப்பம் தெரிவித்துள்ளது.

இவ்வைபவத்தில் இலங்கையைச் சேர்ந்த முஸ்லீம் தமிழ் சிங்கள சமூகங்களைச் சேர்ந்த அனைவரும் கலந்து கொண்டு இவ்வேலைத் திட்டத்திற்குப் பங்களிக்க முன்வந்துள்ளதாக சிறிலங்கா இஸ்லாமிக் போறத்தின் தலைவர் நஜா மொகமட் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் இந்நிகழ்வில் பெரும்பாலும் 500 பேருக்கு சிகிச்சை அளிப்பதற்கான நிதியைத் திரட்ட முடியும் எனத் தான் நம்புவதாகவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

இவ் வேலைத் திட்டம் இலங்கையிலுள்ள Serendib Foundation எனப்படும் மன்றத்தினால் அபிவிருத்தி மற்றும் உதவித் திட்டத்தின் கீழ் இடம்பெறுகிறது. இதற்கான சிகிச்சை வசதிகளை இலங்கையிலுள்ள குவைத் வைத்திய மன்றம் (Kuwait Hospital Foundation) மேற்கொள்கிறது. இம் மன்றம் ஏற்கெனவே சுமார் 4000 இற்கு மேற்பட்ட கண் நோயாளர்களுக்கான சிகிச்சைகளை கடந்த 3 வருடங்களில் மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இக்கண் சிகிச்சை மூகாம் கண் பார்வையை தெளிவாக்குவதற்கான முகாம் மட்டுமல்ல சமூகங்களிடையே பரந்த பார்வையை ஏற்படுத்துவதற்கும் உதவும் என நியூஹாம் கவுன்சிலர் போல் சத்தியநேசன் தெரிவித்தார். தமிழ் முஸ்லீம் சிங்கள சமூகங்கள் இணைந்து இவ்வாறான வேலைத்திட்டங்களில் ஈடுபடுவது இரட்டிப்பு நன்மையை ஏற்படுத்தம் எனவும் அவர் தெரிவித்தார். ஒவ்வொருவரும் பல வழிகளிலும் தாயக மக்களுக்கு தங்கள் உதவிக்கரங்களை வழங்கி வருகின்றனர் எனத் தெரிவித்த கவுன்சிலர் போல் இக்கண்சிகிச்சை முகாமை மேற்கொள்ளவும் தங்கள் உதவிகளை புலம்பெயர்ந்தவர்கள் வழங்குவது அவசியமானது எனத் தெரிவித்தார்.

CATARACT SURGERY CAMPS IN NORTHERN SRI LANKA INTIATED BY
SRI LANKA ISLAMIC FORUM UK TRUST

FUND RAISING EVENT

On Saturday 12th December 2009
From 3.00 p.m. to 7.00 p.m

at the
London Muslim Centre
Main Conference Hall
46-92  Whitechapel Road, London E1 1JX 

CHIEF GUEST:
Rt. Hon. Stephen Timms, M.P.

GUEST OF HONOUR:
H.E. Mr. Nihal Jayasinghe,
High Commissioner for Sri Lanka in the UK

SPECIAL GUESTS
Religious Dignitaries of all Faiths
Local Councillors
Representatives of Community Organizations

Sri Lanka Islamic Forum UK Trust has initiated a project to conduct cataract operations for 500 people in the North of Sri Lanka which will be done in two stages. The first stage will be to conduct 20 screening camps in the five districts of the Northern Province to identify patients needing surgery. 500 patients will be selected in the second stage for treatment.

The project is the brain-child of Serendib Foundation for Relief & Development, Sri Lanka. It will be implemented by Kuwait Hospital Foundation, Sri Lanka, which has a special unit dedicated for cataract surgeries. Kuwait Hospital Foundation, Sri Lanka, has already treated free of charge more than 4000 cataract patients in other parts of Sri Lanka within the last three years.

The cost for treatment and post surgery care is estimated to be around £50 per patient.

SLIF UK Trust has organized a fund raising event on Saturday, 12th December 2009, from 3.00 to 7.00 pm at the London Muslim Centre, Whitechapel, and London, to collect the fund needed for the project.

Representatives of the three communities, Sinhalese; Tamils & Muslims,  local Councilors, Professionals, Community Leaders, Religious Dignitaries of all faiths, officials from UK Department of International Development, UK Foreign & Commonwealth Office,  Sri Lanka High Commission, and representatives of INGOs and Media personnel are expected to participate in the event.

Organizations and individuals willing to support this humanitarian effort and also for invitations to participate in the Fund Raising event may contact:

தொடர்பு கொள்ளவேண்டிய முகவரியும் தொலைபேசி இலக்கமும்:

SLIF UK Trust by E-mail: slif.uk@gmail.com
Najah Mohamed (0044 79 833 41181 0r 0044 79 833 41181)
Marzook (0044 79 405 76701 or 0044 79 405 76701)

Sri Lanka Islamic Forum UK Trust

3rd Floor LMC Business Wing,
38-48, Whitechapel Road
London E1 1JX
United Kingdom

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 Comments

  • accu
    accu

    மிகவும் சந்தோசமாக உள்ளது. உலகில் மனிதம் இன்னும் மரிக்கவில்லை என்பதற்க்கு இப்படியான நல்லவர்களின் செயல்களே சான்று. 500 பேருக்கல்ல இன்னும் அதிகமானவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்க்கு எல்லோரும் இணைந்து உதவ வேண்டும்.

    Reply
  • Rasatharshini
    Rasatharshini

    யாழில் இருந்து முஸ்லிம்கள் விரட்டியடிக்கப்பட்ட போது வாய்பொத்தியிருந்த நம் சமூகத்தின் கண்களை திறந்து விட முயற்சிக்கும் இவர்களது முயற்ச்சி வெற்றியளிக்க மனம்திறந்து வாழ்த்துகின்றேன்.

    “இன்னாச்செய்தாரை ஒருத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்” என்ற வள்ளுவ வாக்கு ஞாபகத்தில் வருகின்றது. வளரட்டும் இன ஐக்கியம். மலரட்டும் சமாதானம்.

    Reply
  • Kusumpu
    Kusumpu

    இராசதர்சின்- புலிகள் தான் தமிழ்துரோகிளாயிற்றே பெயரிலேயே இல்லையே மனிதர்கள் என்று தயவு செய்து நல்லகாரியங்கள் நடக்கும்போது சகுனப்பிழையாக எதையாவது புலிகள் என்று கதைத்துவிடாதீர்கள்

    Reply