ஹஜ்ஜுப் பெருநாள் 28 ஆம் திகதி

macca.jpgபுனித ஹஜ்ஜுப் பெருநாள் எதிர்வரும் 28ம் திகதி சனிக் கிழமை கொண்டாடப்படும் என அகில இலங்கை ஜய்இய்யத்துல் உலமா அறிவித்துள்ளது.

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, கொழும்பு பெரிய பள்ளிவாசல் மற்றும் முஸ்லிம் சமய, கலாசார, பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் ஆகியவை ஏகமனதாக எடுத்துக் கொண்ட தீர்மானத்திற்கமைய ஹஜ்ஜுப் பெருநாள் 28ம் திகதி கொண்டாடப்படும் என சுட்டிக்காட்டியுள்ளது.

Show More
Leave a Reply to Muslim Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • Muslim
    Muslim

    சுவிசில் சிறுபான்மையினங்களான தமிழ். முஸ்லிம் மக்களுக்கிடையில் நல்லுறவை வளர்ப்பதோடு எதிர்வருகின்ற அரசியலில் நாம் எவ்வாறு ஒன்றுபட்டு எமது உரிமைகள் மற்றும் சலுகைகளை இந்தப் பெரும்பான்மையினரிடமிருந்து பெற்றுக் கொள்வது என வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கூட்டம் நடைபெறுகின்று.

    அதேநேரம் உலகலாவிய முஸ்லிம்கள் தங்களுடைய ஈகைத் திருநாளை எதிர்வரும் 28ம் திகதி கொண்டாடப் போகிறார்கள் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மற்றும் முஸ்லிம் சமய கலாச்சாரத் திணைக்களம் என்பன அறிவித்துள்ளது.

    இப்படியான காலகட்டத்தில் முஸ்லிம் சமூகத்தின் உணர்வுகள் நாடிபிடிப்பதற்காக “தினக்குரல்” பத்திரிகை செயற்பட்டுள்ளமையானது மிகவும் வேதனைக்குரிய விடயமாகும். அதாவது முஸ்லிம்களால் மதிக்கின்ற முஹம்மது (நபி) ஸல்லல்லாஹு அலைவஸல்லம் அவர்களின் உருவப்படத்தை பிரசூpத்து முஸ்லிம் சமூகத்தின் மனதை புன்படுத்தியமையை எவ்வாறு இந்த சமூகம் மறந்து செயற்படும்.

    இவ்வாறு சிறுபான்மையினருக்கு மத்தியில் ஒற்றுமையை ஏற்படுத்துவதற்காகவும் அரசியல் ரீதியாக ஒன்று சோ;ந்து உரிமைகளை வென்றெடுப்பதற்காகவும் செயற்படுகின்ற இக்கால கட்டத்தில் இவ்வாறு தங்களோடு தோழ்கொடுத்து செயற்படுவதற்கு இணையும் சிறுபான்மை சமூகத்தின் மனதை மேலும் மேலும் வேதனைப்படுத்தலாமா?.

    இவ்வாறாக மூல வேரில் தாக்குவதன் நோக்கம்தான் என்ன? இந்த இரு சிறுபான்மை இனமும் ஒன்று சேரக்கூடாது என்பதா? அல்லது ஒரு சில சிலாபங்களுக்காக?. இனி வரும் காலங்களிலாவது இந்த இரு சமூகமும் சிறந்த புரிந்துணர்வு> விட்டுக் கொடுத்து ஒருவர் மற்றவர்களின் மனதை புண்படுத்தாமலும் செயற்படுவார்களா? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்

    Reply