Wednesday, October 20, 2021

தமிழ் வேட்பாளரை நிறுத்தாவிடின் சுயேச்சையாக களமிறங்குவேன்- சென்னையில் சிவாஜிலிங்கம் எம்.பி. சூளுரை

telo mp jivajilingam
வீரகேசரி நாளேடு 12/5/2009 9:05:44 AM – இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தமிழ் வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒருவேளை தமிழ் வேட்பாளரை கூட்டமைப்பு தேர்தலில் நிறுத்தாவிட்டால் நானே சுயேற்சையாக களமிறங்கி போட்டியிடுவேன் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்(telo) யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே. ஜிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது:

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஜனாதிபதி ராஜபக்ஷவும், முன்னாள் தளபதி பொன்சேகாவும் எதிரெதிராக தேர்தல் களத்தில் நிற்கிறார்கள். இது தவிர தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்த சிங்கள தலைவர் ஒருவர் இடதுசாரிகள் முன்னணி சார்பில் போட்டியிடுகிறார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பொறுத்தவரை ராஜபக்ஷவையோ, பொன்சேகாவையோ நிச்சயமாக ஆதரிக்க முடியாது. இனப்படு கொலை செய்த இவர்களை ஆதரிக்கக் கூடாது என்பதே ஒட்டுமொத்த தமிழர்களின் விருப்பமாகும்.

ராஜபக்ஷவும், பொன்சேகாவும் தொடர்ந்து எங்களுக்கு தூது அனுப்பி வருகிறார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர்களை சந்தித்து ஆதரவு கேட்டு வருகிறார்கள். எந்த நிலையிலும் இவர்களை நாங்கள் ஆதரிக்க மாட்டோம்.

எங்கள் கூட்டமைப்பின் சார்பில் ஒரு தமிழ் வேட்பாளரை ஜனாதிபதி தேர்தலில் நிறுத்துவோம். தமிழர் வெற்றி பெற முடியாத நிலை இருந்தாலும் இலங்கை தமிழர்களின் உணர்வுகளை உலகம் அறிய செய்வதற்காக இந்த போட்டி அவசியமாகும்.

இதனால் எத்தகைய நெருக்கடி ஏற்பட்டாலும் எங்கள் உயிரே போனாலும் நாங்கள் எந்த சமரசத்துக்கும் உடன்பட மாட்டோம்.தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு நீதி கிடைக்க வேண்டும். இதனை எங்கள் கூட்டமைப்பின் தலைவர்களிடம் வலியுறுத்தியுள்ளேன்.

ஒருவேளை எங்கள் கூட்டமைப்பின் சார்பில் தமிழ் வேட்பாளரை ஜனாதிபதி தேர்தலில் நிறுத்தாவிட்டால் நானே சுயேட்சையாக தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளேன்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

 

15 Comments

 • Sethurupan
  Sethurupan

  சிவாஜிலிங்கம் மகிந்த அரசுடன் 70 கோடி பணம் பேரம் பேசியதாகவும் ஜ.தே.கட்சிக்கு வாக்கு கிடைக்காதபடி தடுப்பதற்காக தான் போராடுவதாகவும் அதற்கு தமிழரை ஏமாற்ற மகிந்த கூடாது பொன்சேகா கூடாது என்று கயறு விடுவதாக உத்தரவாதம் கொடுத்ததாகவும் தெரியவருகிறது.

  இத்துடன் சேந்து சிவாஜிலிங்கத்தை இலங்கைக்குள் அனுமதிக்க மகிந்த இணங்கியதாகவும் தெரியவருவதுடன் லண்டனில் உள்ள வல்வெட்டித்துறை கிராமிய சங்கம் ஒண்று இந்த பேரம்பேசலில் சிவாஜிலிங்கத்தை பயன்படுத்தியதாகவும் நம்பகரமாக தெரியவரகிறது.

  Reply
 • kamal
  kamal

  இவரின் சத்தத்தைக் காணவில்லையே என கவலைப்பட்ட பின்னூட்டக்காரர்களே! இதோ இடி முழக்கத்துடன் அண்ணல் சிவாஜிலிங்கம் மீண்டும் களத்தில்.(அரசு விசாரித்துவிட்டு உள்ளுக்குப் போடாமல் விட்டதில் தப்பியதால் தன்முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் போல் கர்ச்சிக்கிறார்.)

  Reply
 • sivam
  sivam

  கோத்தபாய 71.8 கோடி பேரம் பேசினதாக இன்னும் நம்பகரமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சிவாஜிலிங்கம் 72.6 கோடி கேட்டதாகவும் கோத்தபாய புலன் பெயர்ந்த புலி எதிட்பு வீரர்களிடம் இந்த பணத்தை கேட்க விருப்பதாகவும் தெரிய வருகின்றது.

  Reply
 • பார்த்திபன்
  பார்த்திபன்

  அட என்னங்கப்பா கேட்கிறது தான் கேட்டார், ஒரு ரவுண்டாக 100 கோடியாகக் கேட்டிருக்கக் கூடாதா?? உவர் இங்கிருந்து போவதற்கு முதலில் என்னைத் தொடர்பு கொண்டிருந்தால், விபரமாக வகுப்பெடுத்து அனுப்பியிருப்பேன்.

  Reply
 • பல்லி
  பல்லி

  //சிவாஜிலிங்கம் மகிந்த அரசுடன் 70 கோடி பணம் பேரம் பேசியதாகவும்//
  இது பொய்யான தகவல் அவர் கேட்டது 70000 ஆயிரம்தான், எப்படியும் தன் தகுதி அவருக்கே தெரியதா? ஆனால் மகிந்தா குடும்பமோ 7000
  ஆயிரத்துக்கு மேல் ஒரு சதம்கூட தரமுடியாது என தேசிய தலைவர் மீது சத்தியம் பண்ணி விட்டார்களாம், இதை அறிந்த சம்பந்தர்தான் தனது
  கை செலவுக்கு வைத்திருந்த பணத்தில் மீனம்பாக்கத்துக்கு டிக்கெற் போட்டு அனுப்பிவிட்டாராம், நீ இங்கு இருந்து உன் திருவாயால் அனைத்து கூட்டமைப்பையும் கம்பி எண்ண வைத்து விடுவாய், அதனால் நீ அங்கு போய் வை கோ,வுடன் தடாவோ அல்லது பொடாவோ சட்டத்தில் உள்ளே வெளியே விளையாட்டை ஆறுதலாய் அரங்கேற்று என மாவையின் உதவியுடன் பேசி, ஏசி அனுப்பியதாகதான் பல்லியின் தொலை தொடர்பு சொல்லுகிறது; என்ன வாயப்பா இந்த சிவாஜியருக்கு;;;;;;;;;

  Reply
 • Thaksan
  Thaksan

  என்னதானிருந்தாலும் சிவாஜியரிடம் ஒரு நேர்மை இருக்கிறது. விடாப்பிடித்தனம் இருக்கிறது. ஆனால் சுரேஸ் பிரேமச்சந்திரன் (மண்டையன் குறூப் தலைவர்) தான் உண்மையான தரகர். 4 கட்சி கூட்டமைப்பின் (புலிகளின் கைங்கரியத்தில் உருவான) தலைமை தானேயென காட்டிக்கொண்டு எல்லாத் தரப்புக்கும் கயிறு குடுக்கிறார். காசுக்கு காசும் மதிப்புக்கு மதிப்பும் கிடைக்கிற மாதிரி காய்நகர்த்திக் கொண்டு கூட்டமைப்பை தன்ர கைக்குள் அடக்க முயற்சிக்கிறார். இவர் ஈ.பி.ஆர்.எல்.எவ். சொத்துக்களை எப்பிடி தன்ர கையில் எடுத்து தோழர்களை நடுத்தெருவில் விட்டார் என்பதற்கு ஆயிரம் சாட்சிகள் இருக்கு. பிரேமதாசா பீரியட்டில் பத்தரமுல்லை பகுதியில் கிடைத்த 5 ஏக்கர் நிலத்தையும் விற்ற காசு யாரிடம்? வடபழனியில்(சென்னை) தோழர் பத்மநாபாவின் மனைவியின் பெயரில் இருந்த வீட்டுக்கு என்ன நடந்தது? அதை விற்ற காசில் சென்னையில் வாங்கிய சொத்தை இப்ப பராமரிக்கிறது யார்? அதன் வருமானம் எவ்வளவு? பூனை கண்ணை மூடிக்கொண்டு பால் குடிச்ச கணக்கா இருக்கு.பெண்சாதி பிள்ளையளை கனடாவில குடியேத்திப்போட்டு மூத்த மகளுக்கு முன்னாள் அமைச்சர் ராமதாசின் மகன் அன்புமணி தயவில் டெல்லி மெடிகல் யூனிவசிற்றியில் சீட் எடுத்ததிலிருந்து எல்லாத்தையும் கவனிக்க யாருமில்லையெண்டு துணிவிலதான் இப்ப கடைசி கந்தாயமாக தமிழ் தேசிய தந்தையாக புலுடா விடுறார். கெட்டிக்காறன் புளுகும் எட்டு நாளைக்குத்தான் என்றொரு பழமொழி தமிழில இருக்கு கண்டியளோ!

  Reply
 • Sethurupan
  Sethurupan

  நேர்மையோ. விடாபிடிதனமோ. ஏன் சிவாஜி யாழ்பாணத்திலை சிங்கள மகாவித்தியாலத்திற்கு அருகிலை 9 மில்லியனுக்கு 2003ல் வாங்கின 03 மாடி வீடு எங்கை ஆற்றை காசிலை வாங்கினவர். வேர்வை சிந்தி தனது சொந்த உழைப்பிலை வாங்கின வீடோ……….

  தொடரும்……

  Reply
 • sivam
  sivam

  சிவாஜி சிங்கள மகாவித்தியாலயம் அருகில் வாங்கிய வீட்டின் விலை காணியோடு சேர்த்து உறுதியின்படி மிகவும் நம்பகரமான தகவல்களின்படி 10.2 மில்லியன் என்று அறியக்குடியதாக இருக்கின்றது. உறுதியினை முடித்துக்கொடுத்த பெயர் சொல்ல விரும்பாத ஒருவர் மூலம் அறியக்குடியதாக இருக்கின்றது.

  தரகர் செலவுகள் ஏனைய சின்ன சின்ன செலவுகள் தொடர்பாக சரியான தகவல்கள் இல்லை. ஒரு பகுதி சொல்கின்றது ரூபா 28,346.47 சதம் என்று. அதில் ரூபா 8643.32 சதம் தான் சிவாஜி கொடுத்தவராம். இது என்னால் உறுதி செய்யப்பட முடியாத தகவல்

  Reply
 • chandran.raja
  chandran.raja

  பங்கர்-ராஜா வின் அரசியல் வயலில் உழுதமாடுகள். இந்த இராசாவின் இறப்புக்கு பிறகு கட்டாகாலியாய் ஓடித்திரிகிகுதுகள். யார் வேண்டுமானாலும் கட்டி உழலாம். இந்த கூட்டுக்கோ அதில்லிருக்கும் ஒருவருகோ தமிழ்மக்களைப் பற்றியோ இலங்கையைப் பற்றியோ அக்கறையோ எள்ளளவு தீர்கதரிசப் பார்வையோ இருந்ததில்லை. இனியும் இருக்கப் போவதில்லை.
  ஒண்று மகிந்தா ராஜயபக்காவுக்கு கொஞ்சினால் இன்னொன்று சரத்பொன்சேகராவுக்கு கொஞ்சும். அடுத்தது பின்கதவால் ரகசியமாகக் கொஞ்சிப் போட்டு யாருக்கும் தெரியாதமாதிரி வந்து நிற்கும். இவர்கள் எண்ணிக்கை அளவில் சேர்த்து வைத்திருக்கலாம் படம் எடுக்கலாமே ஒழிய வேறு ஒரு சுகமும் வரபோவதில்லை. இவர்கள் மேற்குப் பக்கமாக இருக்கிற இலங்கைதமிழர் என்ற பெயரில்லிருக்கிற மலஇலையான்களுடன் யம்பண்ணி பறக்கக்கூடிய சக்தியை படைத்தவர்கள் என்பதையும் சொல்லித்தெரிய வேண்டியதில்லை யாராவது இவர்களில் தனித்துவம் அரசியல் போக்குகளை காணமுற்பட்டால் அதைவிட முட்டாள்தனம் வேறுஒன்றுமில்லை.

  Reply
 • sumithra
  sumithra

  கேக்கிறவன் கேணயன் என்றால் எருமைமாடும் ஏறோப்பிளேன் ஓட்டுமாம்.
  வல்வெட்டியான் பேச்சு வெட்டி பேச்சுதான் என்பது என்றோ புரிந்த விஷயம்தானே.
  அதில் சிவாஜிலிங்கம் என்ன விதிவிலக்கா?

  Reply
 • sumithra
  sumithra

  சிவாஜிலிங்கம் ஜனாதிபதியென்றால் அடைக்கலநாதன் பிரதமரா??

  Reply
 • பார்த்திபன்
  பார்த்திபன்

  //மிகவும் நம்பகரமான தகவல்களின்படி….. இது என்னால் உறுதி செய்யப்பட முடியாத தகவல் – சிவம் //

  நல்லாய் கணக்குக் காட்டுறியள். உங்களை நம்பி ஏதாவது அமைப்பில் கணக்காளராய்ப் போடலாம்.

  Reply
 • பல்லி
  பல்லி

  இறுதியாக கிடைத்த தகவலின்படி ஜயா சீமானுடன் இருப்பதாக தமிழக செய்தி. இதனால் இவர் நாடு கடத்தபடலாம், இருந்தாலும் இவர் தமிழகத்தில் மிக தலைமறைவு வாழ்வுதான் வாழ்கிறார், சீமானை பாராட்டி தமிழிச்சி.காமில் மிக அருமையாக எழுதியிருக்காரு; அதேபோல் நம்ம சீமானுக்கும்(சிவாஜி ) யாராவது அரசியல் முடிவுரை எழுத நேரிடலாம்;அதுகான அறிகுறி தெரிகிறது இவரது ஏச்சில்;

  Reply
 • sivam
  sivam

  அவசரப் படக்கூடாது. ஒருக்கா இல்லை இரண்டு தரம் வாசித்தால் நல்லம்.

  முதலாவது பந்தியில் உள்ள தகல்வல்களுக்கு நம்பகரமான அதாரங்கள் என்னிடம் இருக்கின்றது. அத்துடன் முதலாவது பந்தி முடிகின்றது.
  பின்னர் இரண்டாவது பந்தி தொடங்குகின்றது. இரண்டாவது பந்தியில் இருக்கும் தகவல்களுக்கு என்னிடம் ஆதாரம் இல்லை. இத்துடன் இரண்டாவது பந்தி முடிகின்றது.

  முதலாவது பந்தி வீட்டின் விலை தொடர்பானது, இரண்டாவது பந்தி தரகர் கூலி தொடர்பானது இரண்டு வித்தியாசமான கணக்குகள், இரண்டு வித்தியாசமான விடைகள். .

  அரசு சார்ந்த அமைப்பு, அரசு எதிற்பு அமைப்பு, புலி அதரவாளர்கள் அமைப்பு, புலி எதிற்பு அமைப்பு அல்லது இவைகள் கலந்த சாம்பாரு அமைப்பு ஒன்றிலும் ஆதரவாளர் ஆகவோ அல்லது பொறுப்பாளர் ஆகவோ இருக்க நான் இங்கே ஒரு விண்ணப்பமும் போடவில்லை. அத்துடன் ஒருவருடனும் போட்டியும் போடவில்லை.

  Reply
 • nathan
  nathan

  புலிகளின் சனீஸ்வர ஆட்டத்திற்கு சாட்சியங்கள்

  ரெலே உறுப்பினர் அதுவும் மட்டகிளப்பு திகோணமலை பிள்ளைகளை புலிகள் ரயரபோட்டு கெளுத்த காட்டிக் கொடுத்ததனால்தான் அவரிற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் சீற்றுக் கொடுத்தார்களாம்
  பதமினிக்கு ரசஜனி திகணமவை காட்டிக் கொடுத்ததனால்தான் சீற்றுக் கொடுத்தார்களாம்
  அடைக்கலம் செல்வத்திற்கு சிறிசபாரத்தினத்தை காட்டிக் கொடுத்ததனால்தான் சீற்றுக் கொடுத்தார்களாம்
  சம்மந்தரிற்கு எமது தேசியத்தலைவன் அமிர்தலிங்கம் ஜயாவை காட்டிக் கொடுத்ததனால்தான் சீற்றுக் கொடுத்தார்களாம்
  மாவை சேனாதிக்கு தானத்தளபதி யோகேஸ்வரனை காட்டிக் கொடுத்ததனால்தான் சீற்றுக் கொடுத்தார்களாம்
  சுரேஸ்சிற்கு தோழர் பத்மனாபாவை காட்டிக் கொடுத்ததனால்தான் சீற்றுக் கொடுத்தார்களாம்
  கயஜந்திரனிற்கு தந்தையா குமார் பொன்னம்பலத்தை சுட்டதிற்காக தான் சீற்றுக் கொடுத்தார்களாம
  இவர்களை உளவுபார்க்க களுத்து வெட்டி கயஜந்திரனிற்கு சீற்றுக் கொடுத்தார்களாம்

  Reply