அமெரிக் காவில் ‘பொப்’ இசை உலகில் வழங்கப்படும் ‘கிராமி’ விருது, மிகவும் பிரபலமானது. மறைந்த பொப் இசை சக்கரவர்த்தி மைக்கேல் ஜாக்சன், இவ்விருதை 13 தடவை பெற்றுள்ளார். இந்நிலையில், இசை உலகில் அவரது பங்கை பாராட்டும் வகையில், அவருக்கு வாழ்நாள் சாதனைக்கான கிராமி விருது வழங்கப்படுவதாக, அமெரிக்க ரெக்கோர்டிங் அகடமி தலைவர் நீல் போர்ட்நோ அறிவித்துள்ளார்.
கிராமி விருது வழங்கும் விழா லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஜனவரி 31ந் திகதி நடைபெறுகிறது. அதற்கு முந்தைய நாள், மைக்கேல் ஜாக்சனுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.