ஆளும் கட்சியைச் சேர்ந்த பிரதி அமைச்சர் ஒருவர் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயாதீனமாக போட்டியிடத் தீர்மானித்துள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன. உயர் கல்வி பிரதி அமைச்சர் எம்.எம். முஸ்தபா சுயாதீனமாக தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
எதிர்வரும் திங்கட்கிழமை இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இந்த மாதம் 17ம் திகதி வரையிலேயே ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ள நிலையில் விரைவில் அவர் தமது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
உயர்கல்வி பிரதி அமைச்சராக தாம் நியமிக்கப்பட்ட போதிலும் எவ்விதமாக சேவையும் தம்மால் மக்களுக்கு ஆற்ற முடியவில்லை என அவர் விசனம் வெளியிட்டுள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு மக்கள் வலியுறுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.