சரத் பொன்சேகாவை ஆதரிக்க ரணில் யாழ்ப்பாணத்தில் கோரிக்கை

srilanka_ranil.jpgஇலங்கை எதிர்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க சனிக்கிழமையன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு, ஐக்கிய தேசியக் முன்ணணியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் சரத் பொன்சேகாவை ஆதரிக்குமாறு கேட்டு கொண்டார். தான் ஆட்சிக்கு வந்தால் சரத் பொன்சேகா மூலமாக அரசியல் சாசனத்தை மாற்றியமைத்து, புதிய அரசியலமைப்பை உருவாக்கி அதன் மூலம் இனப்பிரச்சனையை தீர்ப்பேன் என்றும் ரணில் விக்ரமசிங்க அப்போது கூறினார்.

மேலும் கடந்த முறை ஜனாதிபதி தேர்தலை புறக்கணித்தது போன்ற தவறை இந்த முறையும் தமிழ்மக்கள் செய்து விட கூடாது என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 Comments

  • sinna
    sinna

    புலி உயிரோடை இருந்திருந்தால் எவராவது யாழ்ப்பாணம் போயிருந்திருப்பாங்களா?

    கொழும்பில் கோயில் உடைப்பு. யாழில் கோயில் தரிசனம்.

    Reply
  • பல்லி
    பல்லி

    //புலி உயிரோடை இருந்திருந்தால் எவராவது யாழ்ப்பாணம் போயிருந்திருப்பாங்களா//
    இந்த எவராவதில் தமிழரும் அடக்கம்தானே? இந்த பிழைப்புதானே வேண்டாம் என கத்தினோம் கேட்டியளே, இப்ப குப்பற நிலத்தில் நீச்சலா? கடலிலே தூக்கமா??

    Reply
  • sinna
    sinna

    பல்லி நான் படத்தில் உள்ளவர் போன்ற தமது தேவைகளுக்காக மட்டும் யாழ் செல்லும் சிங்கள அரசியல்வாதிகளையே குறிப்பிட்டேன்.

    Reply
  • kavin
    kavin

    ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு வோட்டுப் போடே வேணும் அல்லது என்ன செய்யவேணும் எண்டு கேட்டால் எல்லாப் பின்னூட்டக்காரரும் என்னமாய் ஓடிப்பிடிச்சு விளையாடுறாங்கள்! எங்களுக்கு ஆர் வந்தாலும் ஒண்டெனண்டா பிறகு என்ன…. அதைப்பத்தி கதைக்கிறியள். நான் ஏன் இதை திரும்பவும் திரும்பவும் கேக்கிறன் எண்டா இப்பிடி வெளிப்படையா கதைக்கிற புனைபெயரில எண்டாலும் துணிஞ்சுநிக்கிற பண்பு எங்களுக்கு மிகவும் அவசியம் எண்டதாலைதான்.

    Reply
  • பல்லி
    பல்லி

    எனது வோட்டு சேகராவுக்குதான், விளக்கம் பல இடத்தில் சொல்லி விட்டேன், யாரும் யாருக்கும் வோட்டு பொடலாம், அதுதானே வோட்டுக்குள்ள உரிமை; கவின் எனது நிலை இதுதான் ;

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    இப்ப எனக்கு வடிவேலுவின் காமெடியை விட சரத்பொன்சேகா செய்யும் காமெடி தான் பிடிச்சிருக்கு. அதுபோல ரணிலும் சரத்பொன்சேகாவை வைத்து நன்றாகக் காமெடி பண்ணுகின்றார். முனபு சரத்பொன்சேகா தமிழக அரசியல்வாதிகள் சிலரை கோமாளிகள் என்றார். இப்ப அந்த விருதை சரத்பொன்சேகா – ரணில் கூட்டணியே தட்டிப் பறிக்க முனைகின்றது.

    Reply
  • sinna
    sinna

    பல்லி உப்பிடித்தான் பிக் மக் பரமேஸ்வரனின் சாப்பிடும் உண்ணாவிரதத்துக்கு சப்போட் என்று சொல்லி அந்தாளுக்கு தர்மஅடி வாங்கிக் கொடுத்தது. இப்ப சேராவுக்கு.

    Reply
  • Rajmohan
    Rajmohan

    புலி உயிரோடை இருந்திருந்தால் எவராவது யாழ்ப்பாணம் போயிருந்திருப்பாங்களா?/sinna on December 13, 2009 1:01 pm

    புலி உயிருடன் இருந்திருந்தால் தமிழ் மக்கள் சுதந்திரமாக பேச முடிந்திருக்குமா அல்லது எதாவது ஒரு தீர்வை நோக்கி நம்பிக்கை வைக்கத்தான் முடியுமா? புலித் தலைமையை கோதபாய or பொன்சேக யார் கொன்று இருந்தாலும் அது நாகரிகமான தமிழனுக்கு கிடைத்த நன்மையே!!!

    Reply
  • மாயா
    மாயா

    //sinna on December 13, 2009 1:01 pm புலி உயிரோடை இருந்திருந்தால் எவராவது யாழ்ப்பாணம் போயிருந்திருப்பாங்களா?//

    குணத்தை காட்டிட்டீங்களே சின்னா? கொழும்பில் தமிழன் எதுவும் செய்யலாம். யாழ்பாணத்துக்கு தமிழன் கூட போக ஏலாது. பேச ஏலாது? இனி இனவாதம் கதைக்கிறது தமிழனா? சிங்களவனா?

    Reply
  • பல்லி
    பல்லி

    // சரத்பொன்சேகா செய்யும் காமெடி தான் பிடிச்சிருக்கு//
    உன்மைதான்; ஆனால் அதைவிட அவர் காமெடியும் ஒரு மார்க்கமாக இருப்பதால் நமது கீரோக்களைவிட காமடியனையே எனக்கும் பிடிக்கிறதோ இல்லையோ ரசிக்க முடிகிறது

    Reply
  • பல்லி
    பல்லி

    :://சாப்பிடும் உண்ணாவிரதத்துக்கு சப்போட் என்று சொல்லி அந்தாளுக்கு தர்மாடி//
    சின்னா தர்ம அடிக்கு அர்த்தம் என்ன? புரியாமல் ஒருவர் அடிக்கிறார் நாமும் அடித்து விட்டு போவோமே என்பது தானே, ஆக பல்லி புரிந்து சொல்லுவதை சின்னா புரியாமல் குழப்புவது ஏனோ??

    Reply
  • chandran.raja
    chandran.raja

    பல்லியின் வாக்கின் ஊடாக ஜனாதிபதி தேர்தலின் வெற்றி தோல்விகள் நிர்ணயிக்கப் படுவதில்லை. ஆனால் இப்படிப்பட்ட அப்பாவிகளை தமிழ்இனத்தில் தோன்றிய சுயநலமிகள் வசதிக்கேற்படி பாவிக்ககப் படும்போது கைபொம்மைகளாக ஆகும் போது உண்மையில் நாம் யாரில் நொந்து கொள்வது?.
    இரண்டு லட்சமாக இருக்கிற இராணுவத்தை மூன்று லட்சமாக மாற்றவேண்டு மென்று கோருகிற ஒரு இராணுவத்தளபதி இந்த இராணுவத்தை கொண்டு யாருடன் போரிட என்று கேள்வி எழுப்பாதவன்? ஒரு பைத்தியக்காரனின் நிலைக்கு ஒப்பானவனே!

    தமிழர் இநத நாட்டின் விருந்தாளிகளே! அவர்கள் இந்த நாட்டில் விசேஷாக எதாவது உரிமைகோர முடியாது.சிங்களமக்களின் சமநிலையைப் பேணமுடியாது என்று சொல்லுகிற இராணுவத் தளபதி ஜனாதிபதியாகும் போது அப்படியாகவிட்டாலும் தெரிந்து அவருக்கு தான் வாக்களிப்பேன் என்று அடம்பிடிக்கும் போது….. இவர்களை என்ன என்பது? போடுவது எல்லாம் மாய்ஜாலமே என்பது புரியவில்லையா?.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    அதற்கென்ன மகிந்த புதுமாத்தளனில் இராணுவத்தினருக்கு நினைவுச் சின்னம் வைத்தது போல், சரத்திற்கு ஒரு நினைவுச் சின்னத்தை தமிழர்கள் செம்மணியில் வைத்தால் போயிற்று.

    Reply
  • பல்லி
    பல்லி

    //பல்லியின் வாக்கின் ஊடாக ஜனாதிபதி தேர்தலின் வெற்றி தோல்விகள் நிர்ணயிக்கப் படுவதில்லை. //
    இதை எழுதுமுன் ஒரு நிமிடமாவது யோசிக்க வேண்டாமா? சந்திராவின் பின்னோட்டம்தான் வெற்றி தோல்வியை நிர்ணயிக்க போவதில்லை என்பதை, சந்திரா யார் வெற்றி பெறுகிறார்கள் என்பது பல்லிக்கு பிரச்சனையில்லை புலி எப்படி தனி முகம் காட்டி வல்லரசாய் தமிழரை ஆழநினைத்ததோ;அதே போல் தனிகாட்டு ராசாவாக, மகிந்தகுடும்ப தலைவனாக ,மாண்புமிகு மன்னனாக எந்த ஒருவர் ஆட்ச்சிக்கு வந்தாலும் சிறுபாண்மை இனம் பாதிக்கபடும் என்பதை பல்லி நினைப்பதில் என்ன தப்பு,சந்திரா உங்களை பொறுத்த மட்டில் மகிந்தா இலங்கயில் ஒரு தமிழனும் ஒட்டு துணியில்லாமல்தான் இருக்க வேண்டும் என சொன்னாலும் ஆகா மகிந்தாவுக்கு மாலை போடுங்க எனதான் எழுதுவீர்கள்;

    பல்லி எங்கேயும் சரத்த ஜனாதிபதியாக வர வேண்டும் என சொல்லவில்லை, மகிந்தா வெற்றி பெறட்டும்(உங்களை போன்ற சிலரையாவது மகிழ்விப்பார்) ஆனால் அதுக்கு மிக சிரமபட்டு குறைந்த வாக்கு எண்ணிக்கையில் வெற்றி பெறட்டும்; ஏன் என கேட்டு உங்கள் நேரத்தை வீணடிக்காதீர்கள், அதுவே அவர் செய்ய போகும் ஆட்ச்சிக்கு அத்திவாரமாக அமையும்; ஆக நான் யார் ஆட்ச்சிக்கு வந்தாலும்
    விமர்சகனாகதான் இருப்பேன்; விருந்தாளியாக மாட்டேன், சேகரா ஜெனாதிபதவிக்கு நிக்கும் போதே அவர் மீது உன்மைகள் சிதறுகிறது(பராட்டலாம்) ஆனால் அவரை விட பல மடங்கு ;;;;;;;;;; கருனா அமைச்சர் ஆன போது என்ன செய்தீர்கள்; இதே போல்
    போட்டுதாக்கியிருந்தால் கருனா என்னும் மிருகத்தையும் ஏதாவது ஒரு நாட்டில் அகதி ஆக்கியிருக்கலாமே: (கவனிகவும் அன்று பல்லியின் பின்னோட்டஙளை)ஆனால் அதுக்கு மகிந்தா கோபிக்க கூடாது அல்லவா அதனால் மாண்புமிகு அமைச்சர் ஆக்கி வலம் வர விட்டு விட்டு இன்று பல்லிக்கு சுழுக்கு பார்ப்பது நியாயமா?
    எனது வோட்டு சேகராவுக்குதான் என சொன்னேன்; சந்திராவின் வோட்டு சேகராவுக்கு என சொன்னது போல் கோவிப்பது உங்கள் மகிந்த விசுவாசத்தை காட்டுகிறது,
    //வாக்களிப்பேன் என்று அடம்பிடிக்கும் போது//
    இதை நான் 2010 திருக்குறளகா எடுத்து எடுத்து;;;

    Reply
  • பல்லி
    பல்லி

    பார்த்திபன் தற்போதெல்லாம் உயிருடன் இருப்பவர்களுக்குதான் விசேடமான கோவில்கள் நினைவு தூண்கள் கட்டபடுகிறது, ஆனால் விரைவில் சேகராவுக்கு நினைவு தூண் கட்டுவார்கள்பல்லி மேல் சொன்னதுபோல் அல்ல, பார்த்திபன் நீங்கள் ஆசைபடுவது போலவே,,,,?

    Reply
  • kavin
    kavin

    கேள்வி யாருக்கு வாக்கு? அதாவது இன்றைய சூழலில் இலங்கைமக்களுக்கு மகிந்தாவா? சரத்தா? என்பதுதான். இரண்டு பேரும் உதவாது என்பதால் இன்னொருவர் புதிதாக வந்துவிடப் போவதில்லை. இந்த தலை தமிழ்மக்களின் நன்மைகருதி மட்டும் பார்க்காமல் சிங்கள மக்களின் நன்மை கருதியும் தமிழ்புத்திஜீவிகள் யோசிக்கவேண்டும்.

    தமிழ்மக்களைப் பொறுத்தவரையில் பலமான எதிரியைவிட பலவீனமான எதிரிக்கு வாக்களிக்க விரும்புபவா;களின் தெரிவு சரத். தலமையை கூண்டோடு அழித்த மகிந்த அரசை பழிவாங்க விரும்புபவா;களின் தெரிவு சரத்.

    அரசோடு நிற்கும் கட்சிகள் குழுக்கள் மேலும் மேலும் தலையெடுக்காமல் தடுக்கவும் புலிகளின் மீள்வருகையை விரும்புவா;களதும் தெரிவு சரத்.

    இதோடு குறைஞ்ச வாக்கு வித்தியாசத்திலதான் மகிந்த வெல்லவேணும் என்று விரும்புவா;களின் தெரிவும் சரத்.

    Reply
  • பல்லி
    பல்லி

    //இதோடு குறைஞ்ச வாக்கு வித்தியாசத்திலதான் மகிந்த வெல்லவேணும் என்று விரும்புவா;களின் தெரிவும் சரத்.//
    கவின் உங்கள் கணிப்பு சரியோ தவறோ எனக்கு தெரியாது; ஆனால் மகிந்தாவின் பலம் குறைய வேண்டும் என்பதுதான் என் கருத்தும்; புலிகள் போல் தான் என்ற ஆணவபோக்கு இல்லாது போனால்தான் மக்கள் பற்றி சிந்திக்க தோன்றும்; மகிந்தாவிடம் ஆணவபோக்கு இருக்கா? என நீங்கள் கேக்கலாம்; இந்தியாவுக்கே அந்த சந்தேகம் வந்துவிட்டதே, இந்த பல்லிக்கு வரகூடாதா? அதெல்லாம் அவரிடம் நிறையவே இருக்கு, ஆனால் சிலரை மகிழ்விப்பதால் அந்த சிலருக்காக பலருக்கு தெரிவதில்லை; இந்தியாவில் ஒரு பேச்சுவார்த்த்கை மத்திய அரசுக்கு தெரியாமல் நடக்குமா? ரணில்; கூட்டமைப்பு! மலயக அமைப்புகள் சில தமிழகத்திலும் டெல்லியிலும் பேசுகின்றன, அவை என்ன பேசினார்கள் என்பது யாருக்கு தெரியும்; ஆக மகிந்தாவை ஆதரித்த இந்திய அரசு ஏன் இன்று சேகராவை கூப்பிட்டு பேசுகிறது; பல அரசியல் ஆய்வாளர்கள் கலந்து பேசியபின் மதிய அரசே சேகராவுடன் பேசும்போது இந்த பல்லி போன்ற சாதாரனமானவர்கள் சேகராவுக்கு வோட்டு போடுவது குற்றம் என சொல்லும் சிலர் ஏன் சேகராவை புறம்தள்ள வேண்டும் எனவும் சொல்லலாமே;

    Reply