வட கொரியாவில் இருந்து வந்த சரக்கு விமானத்தில் இருந்து ஆயிரக்கணக்கான கிலோ எடையுள்ள ஆயுதங்களை பறிமுதல் செய்து 5 பேரை கைது செய்துள்ளதாக தாய்லாந்து பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த ஆயுதங்களில் பெருமளவான ஏவுகணைகளும், கிறனைட் லோஞ்சர்களும் இருப்பதாக தாய்லாந்து தகவல்கள் தெரிவித்துள்ளன. ஆர்.பி.ஜி உந்துகணைகள், உந்துகணை செலுத்திகள், விமான எதிர்ப்பு சாம் ஏவுகணைகள், வெடிபொருட்கள் பெருமளவில் விமானத்தில் உள்ளதாக அவை மேலும் தெரிவித்துள்ளன.
பியோங்யாங்கில் புறப்பட்ட சிறீலங்கா நோக்கி பயணித்து கொண்டிருந்த இந்த விமானம் பாங்காக் உள்நாட்டு முனையத்தில் எரிப்பொருள் நிரப்ப தரையிறங்கியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில் கிழக்கு ஐரோப்பாவை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று விவரித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் பெலராஸை சேர்ந்தவர்கள் ஒரு செய்தி கூறுகிறது. இதற்கிடையே, மாட்ரிட் ரயில் குண்டுவெடிப்புகளுடன் தொடர்புடைய போலி கடவுச் சீட்டு விபரம் தொடர்பில் பலரை தாய்லாந்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.