தமிழ் மக்களுடன் சம்பந்தமாகுமா சம்பந்தரின் சாணக்கியம்!- ரி சோதிலிங்கம்.

Sambanthan_Rஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கூட்டமைப்பு சம்பந்தரும், புலிகளின் ஆதரவாளர்களும் தமிழ் மக்களை மீண்டும் முள்ளிவாய்க்காலுக்கே அழைத்துச் செல்கின்றனர் போலுள்ளது. இந்தத் தேர்தலில் பங்கு பற்றுவதா? வேட்பாளரை நிறுத்துவதா? இந்த தேர்தலில் முன்னிற்கும் வேட்பாளர்களில் யாருக்கு தமிழர்களை வாக்களிக்கும்படி கேட்பது அல்லது தமிழர்களை ஆதரிக்க தூண்டுவது என்பதிலே இன்று வரையில் இவர்கள் ஒரு தீர்க்கமான முடிவு எடுக்கமுடியாமல் இருப்பதன் மர்மம் என்ன?

இந்த தேர்தலில் போட்டியிடும் பல்வேறுபட்ட சக்திகள் தாம் தமது தேர்தல் வேட்பு மனுவை தாக்கல் செய்யும் போதே தாம் ஜனாதிபதியாக வரமாட்டோம் என்பதில் உறுதியாக உள்ளபோதும், தாம் தமது அரசியலை – தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களின் அபிலாசைகளுக்கான அரசியலை – உலகுக்கும் பெரும்பான்மை சிங்கள மக்களுக்கும் பகிரங்கப்படுத்தவே போட்டியிடுகின்றனர். ஆனால் அன்று ‘இந்த தேர்தலைகளை எமது பிரச்சார மேடைகளாகவே பயன்படுத்துகிறோம் ஆனால் எமது இலட்சியம் தனித் தமிழீழம்’ என்று முழங்கிய கூட்டமைப்பு சம்பந்தர் இன்று இந்த தேர்தலை தமிழ் மக்களின் சுயநிர்ணயத்திற்கான பிரச்சார மேடையாகவும் பார்க்கவில்லை, தமிழர்களின் அரசியல் எதிர்பார்ப்பு என்ன என்பதை உலகுக்கு தெரிவிக்கக்கூட இந்த தேர்தலை பயன்படுத்த முன்வரவுமில்லை. இது ஏன்?

ரிஎன்ஏ என்ன உடன்பாடுகளை யாரிடம் ஏற்படுத்தியுள்ளது என்பதையோ; சரத் / மகிந்தா எந்த வேட்பாளர் தான் ஆட்சிக்கு வந்தபின்பு தமிழரின் அரசியல் உரிமைகளுக்கு என்ன வாக்குறுதிகளை கொடுத்துள்ளார்கள் என்பதையோ; அல்லது எந்த ஒரு உடன்பாடோ அல்லது வாக்குறுதிகளோ யாரிடமிருந்தும் பெறவில்லை என்பதையோ ரிஎன்ஏ ஏன் பகிரங்கமாக மக்களுக்கு வெளிப்படுத்தக் கூடாது?

ரிஎன்ஏ அல்லது மற்றைய தேர்தல் வேட்பாளர்கள் மக்களுக்கான அரசியல் தேர்வையும் ஒப்பந்தங்களையும் இரகசியமாக ஏற்படுத்துவது மக்களுக்கு ஏற்புடையதல்ல. கடந்த காலங்களில் இப்படியான இரகசிய ஒப்பந்தங்களால் ஏற்பட்ட பல விளைவுகளுக்கு புலிகளே எம்முன்னால் உள்ள நல்ல உதாரணங்களாகும். இதில் முக்கியமானது பிரேமதாஸா இரகசிய ஓப்பந்தமும் ஆயத உதவியும். இதன் பின்னணியில் புலிகள் இந்தியாவின் எதிரிகளாகினர்.

எதிர்வரும் தேர்தலில் ரிஎன்ஏ யின் முடிவு என்ன? ரிஎன்ஏயும் அதன் தலைவர் சம்பந்தனும் எப்போது தமது முடிவுகளை தமிழ் மக்களுக்கு தெரிவிப்பார்கள். ஜனாதிபதி தேர்தலுக்கு வேட்பாளரை நிறுத்தும் காலம் காலாவதியாகிவிட்டது. ஆனால் இன்னும் ரிஎன்ஏ தனது நிலைப்பாடு என்ன என்று இதுவரையில் முடிவு எடுக்கவில்லை. இதற்கிடையில் ரிஎன்ஏ உறுப்பினர் சிவாஜிலிங்கம் சுயேட்சையாக ஜனாதிபதி தேர்தலில் நிற்பதாக முடிவு எடுத்துள்ளார். ரிஎன்ஏயின் அங்கத்துவ கட்சி தமிழர் காங்கிரஸ் தனியாக, இரண்டு முக்கிய தேர்தல் வேட்பாளர்களையும் ஆதரிப்பதில்லை என்ற முடிவு எடுத்துள்ளனர். இப்படியாக ரிஎன்ஏயின் உறுப்பினர்கள் பிரிந்து நின்று செயற்படுவதன் காரணம் என்ன? ரிஎன்ஏ சம்பந்தர் காரணங்களை தமிழ் மக்கள் முன் வைப்பார்களா? ஏன் மக்களுடன் பேசுகிறார்கள் இல்லை?

சம்பந்தரின் குழம்பிய நிலையே ரிஎன்ஏயின் இழுபறி நிலை எனவும் பலரும் சந்தேகிக்கின்றனர். மக்களுக்காக எடுக்கும் முடிவுகளை மக்கள் முன் வைப்பதிலும் அதில் உள்ள குறை நிறைகளை ஆராய்வதிலும் எந்த கட்சியும் எந்த மக்கள் அமைப்பும் ஏன் ஒளிவு மறைவாக செயற்ப்பட வேண்டும். ஒளிவு மறைவாக செயற்ப்படுவதும் இழுத்தடிப்பதும் தாம் ஏற்கனவே தெரிவு செய்த வேட்பாளரை கடைசி நேரத்தில் தெரிவித்து அவருக்கு வாக்களிக்கும்படி கேட்கலாம் என்ற காலம் வாங்கும் தந்திரமா என்ற சந்தேகம் மக்களுக்கு எழுவது தவிர்க்க முடியாததாகிறது.

இன்று ரிஎன்ஏயில் எந்தவிதமான கூட்டு முடிவும் எடுக்கப்படுவதில்லை. சம்பந்தர் சுரேஸ் மாவை போன்றோரே ஏகபோகமாக தாமே முடிவு எடுத்துவிட்டு அதை ரிஎன்ஏ யின் முடிவாக திணிப்பதாக பல ரிஎன்ஏ உறுப்பினர்கள் சொல்லும் நிலையில், சம்பந்தர் எல்லா முடிவுகளுக்கும் நான் யோசிக்கிறேன், பொறுத்திருப்போம் என்ற இழுத்தடிப்பின் பின்னணியாக இருப்பது என்ன என்பது இன்றுவரையில் புதிராகவே உள்ளது. வெளிநாடுகளில் உள்ள புலி ஆதரவு குழுக்களின் வற்புறுத்தலாக இருக்குமென? என பலர் சந்தேகிக்கின்றனர்.

இதன் பின்னணியிலேயே சம்பந்தர் வெளிநாடுகளுக்கு அழைக்கப்பட்டார் என்றும் இதில் சுவிஸ் மாநாடு தோல்வியில் முடிவடைந்ததால் அடுத்து வியன்னாவில் சம்பந்தருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்கலாம் எனவும் பலரும் சந்தேகிக்கின்றனர் (இந்த மகாநாடுகள் இரகசியமாகவே ஒழுங்கு செய்யப்பட்டது.)

tna-last11.jpgஇந்த மாநாட்டில் ரிஎன்ஏ ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளரை நிறுத்துவதில்லை என்றும் ஏதோ ஒரு வேட்பாளரை ஆதரிப்பதற்கானது இரகசிய உடன்பாடு எட்டியுள்தாகவும் இதையே சம்பந்தர் ரிஎன்ஏயின் முடிவாக தெரிவிக்க வெளிநாட்டிலுள்ள புலி ஆதரவு அமைப்புக்களும் புலிகளும் சம்பந்தருக்கு அழுத்தம் கொடுத்துள்ளனர் என்றும்; அது சரத்தையே ஆதரிப்பது என்றும்; இதனாலேயே மகிந்தாவை வீழ்த்தலாம் என்ற கருத்து ரிஎன்ஏக்கு வெளியே எடுக்கப்பட்டுள்ளதாயும் இந்த உடன்பாட்டுக்கு லண்டனுக்கு விஜயம் மெற்கொண்ட ஜேவிபி யுஎன்பி பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏற்பாடுகளை செய்ததாகவும் பேசப்படுகிறது. ஆனால் இந்த முடிவை எப்படி ரிஎன்ஏயின் முடிவாக திணிப்பது என்பதே சம்பந்தரின் குழம்பிய நிலையென பலரும் சந்தேகிக்கின்றனர்.

புலிகளின் ஆதரவாளர்களும் அமைப்புகளும் இன்னும் தமிழ் போராட்டங்களை புலிகளின் பழிக்குப் பழிவாங்கும் அரசியல் போலவே பார்க்கிறார்கள். அதன் எதிரொலியே சம்பந்தரின் ‘பார்ப்போம்’ பாட்டு ஆகும் என பலரும் சந்தேகிக்கின்றனர்.

வெளிநாடுகளில் உள்ள புலிகளின் ஆதரவு அமைப்புகளும் ஏற்பாட்டாளர்களும் இன்று வரையில் தாம் யார்? தமது இயக்கத்தின் நிலை என்ன? பொறுப்பு என்ன? போன்ற விமர்சனங்களை முன்வைக்காமலே இன்றும் தமது ஆதரவாளர்க்கு ‘தலைவர் உயிருடன் உள்ளார். தருணம் வரும்போது வெளிவருவார்’ என்றெல்லாம் புலுடாவிடும் இவர்கள், புலிகளுக்காக மக்களிடம் இருந்து பெறப்பட்ட பெருந்தொகை சொத்துகளுக்கு நடந்தது என்ன? என்ற பேச்சுக்கே இடமில்லாமல் இன்று இந்த தேர்தலை சந்தர்ப்பமாகப் பயன்படுத்தி தமக்கு ஒரு அரசியல் சாயம் பூச ஆரம்பித்துள்ளனர்.

சரத் / மகிந்தா இந்த இரண்டு வேட்பாளர்களும் தமிழர்களின் கடந்த 30 வருட போராட்டங்களினால் தமிழ் மக்கள் அடைந்த வேதனைகள், துன்பங்களை பகிர்ந்து கொண்டவர்கள் அல்லர். மாறாக இவர்களே தமிழர்களின் துன்பியல்களுக்கு பிரபாகரன் – புலிகளுக்கு அடுத்தபடியாக காரணமானவர்களாகும். இந்த இரு வேட்பாளர்களுமே தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு வேண்டும் என்பதை கூட இன்று வரையில் பகிரங்கமாக தெரிவிக்காதவர்கள். இவ்விரு வேட்பாளர்களுமே தமிழர்களில் 30 ஆயிரம்பேர் வரையில் முள்ளிவாய்காலில் கொலை செய்தவர்கள். தமிழ் மக்களை பார்த்து இவர்களில் ஒருவருக்குத் தன்னும் வாக்களியுங்கள் என்று எந்த முகத்துடன் ரிஎன்ஏ அல்லது தமிழ் அரசியல்வாதிகள் கேட்க முடியும்

மரண சாசனம் கூட பெற முடியாத மக்கள் இன்று வரையில் தமது மரணித்த உறவுகளின் ஆண்டுத்திவசம் யாருக்கு எங்கே என்று அங்கலாய்த்துக் கொண்டு துன்பங்களில் இருப்பவர்களைப் பார்த்து உங்கள் உறவுகளை கொலை செய்தவர்களுக்கு வாக்களியுங்கள் என்று கேட்க முடியுமா? இதை தமிழ் மக்களின் தலைவர்களால் எந்த சுயமரியாதையுடன் கேட்க முடியும்?

சர்வதேசம் இவர்கள் மீது போர்க் குற்றம் சுமத்தும் நிலையில் உள்ள சூழ்நிலையில், எந்த மக்கள் மீது போர்க்குற்றம் செய்தார்களோ அந்த மக்களை பார்த்து இந்த போர்க்குற்றவாளிக்கு வாக்களியுங்கள் என்று ரிஎன்ஏ சம்பந்தர் கேட்பாரா? எப்படி கேட்க முடியும்.

இன்று புலிகளின் பல முன்னணியாளர்கள் மக்கள் என்பதை கனவிலும் கூட நினைப்பதில்லை. புலிகள் அழிக்கப்பட்டு 6 மாதங்களில் இம் முன்னணியாளர்கள் தாம் தமது சொத்துக்கள் தமது சமூக அந்தஸ்துக்கள் என்பவற்றிலே அதிக கவனம் செலுத்துவதை அவதானிக்க முடியும்.

காலத்திற்குக் காலம் தமிழர் போராட்டங்களை சுதந்திரக் கட்சியும் யுஎன்பியும் மாறி மாறி தாம் ஆட்சிக்கு வரும்போதெல்லாம் ஏதோ ஒருவகையில் ஒருபடியாவது கீழே இழுத்து விழுத்தியே வந்துள்ளனர். இதன் ஒட்டுமொத்த வீழ்த்தலே மே மாத கடைசி யுத்தமும் இதை மகிந்தா கெட்டித்தனமாக தனது வெற்றியாக்கியதுமாகும்.

புலிகளின் பழிக்குப்பழி அல்லது ஆயுதக் கவர்ச்சியால்தான் தமது போராட்டப் பாதையை தவற விட்டவர்கள் என்பதை இன்றும் புலி ஆதரவாளர்கள் புரிந்ததாகத் தெரியவில்லை. இதற்கு மிகச்சிறந்த உதாரணம் ரஜீவ் காந்தி கொலையும் இதனால் புலிகளுக்கு உண்டான அழிவுமாகும்.

இவ்விரு பிரதான வேட்பாளர்களும் மீண்டும் தமிழர்க்கு எதிரான செயற்பாட்டுக்காகவே இன்று புலி ஆதவாளர்களினதும் ரிஎன்ஏ தமிழர் ஆதரவினையும் பெற்றுவிட அங்கலாய்க்கின்றனர் என்பதை ரிஎன்ஏ சம்பந்தரும் புலி ஆதரவாளர்களும் மறந்து செயற்படக் கூடாது. ரிஎன்ஏ இன்றுவரை இத்தேர்தலில் தமிழர்கள் சார்பாக தமது நிலைப்பாடு என்ன என்று எதையும் ஏன் முன்வைக்கவில்லை? ரிஎன்ஏ யினர் ஏன் தமிழர்கள் சார்பாக தமது பிரதிநிதியை நிறுத்தி தமிழர்களின் அரசியல் எதிர்பார்ப்பு என்ன என்பதை சிங்கள மக்களுக்கும் உலகுக்கும் தெரிவிக்கவில்லை? தெரிவிக்க முயற்ச்சி செய்யவில்லை? இதன்மூலம் சிங்கள மக்களின் மிககுறைந்த அங்கீகாரத்தையாவது பெற்றிருக்க முடியாதா? இத்தேர்தல் காலத்தில் ரிஎன்ஏ ஏன் இந்த சந்தர்ப்பத்தை தமிழரின் சுயாட்சிப் போராட்டத்திற்கான பிரச்சாரமாக பயன்படுத்தவில்லை? மாறாக ரிஎன்ஏ யும் சம்பந்தரும் சரத் ஆதரவு நிலை எடுப்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருப்பதாக ரிஎன்ஏயின் அதிருப்தி உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர். ரிஎன்ஏ யில் கிட்டத்தட்ட அரைவாசிப்பேர் சரத் மகிந்தா இரண்டு பேரையும் ஆதரிக்கக்கூடாது என்பதில் அக்கறை காட்டுவதாகவும் அதன் காரணமாகவும் சம்பந்தர் குழம்பியுள்தாகவும் அவர்கள் எமக்கு தெரிவித்தனர். அத்துடன் ரிஎன்ஏயில் அங்கம் வகிக்கும் ரெலோவினர் ரிஎன்ஏ இரண்டு வேட்பாளர்களையம் ஆதரிக்க கூடாது என்ற கருத்துடனேயே தாம் இருப்பதாக தெரிவித்தனர்.

ரிஎன்ஏ யும் இதன் சாரதி சம்பந்தரும் வேறு வெளி அழுத்தங்களுக்கு உள்ளாகின்றார்கள் என்ற சந்தேகம் கொழும்பில் உள்ள பல ஊடகவியலாளர்கள், அரசியல்வாதிகளிடமும் உள்ளதை அறியமுடிகிறது.

இதைவிட ரிஎன்ஏயின் மும்மூர்த்திகள் என்றழைக்கப்படும் சம்பந்தர் சுரேஸ் மாவை ஆகியோர் முடிவை எடுத்துவிட்டு இம்முடிவுகளை இறுதி முடிவாக தெரிவிக்கும் இவர்களில் (இம்முறை) மாவை இந்த நிலைப்பாட்டிலிருந்து தன்னை அகற்றி தான் இந்தியாவில் சுகயீனம் காரணமாக தங்கியிருப்பதாவும் அறியப்படுகிறது. ரிஎன்ஏ யினரில் சம்பந்தர் இந்தியாவினால் கையாளப்படுகின்றார். ஆனால் கள நிலைமைகள் கட்டுக்கடங்காமல் இருப்பதனால் ஏற்படும் குழப்பமா? எனவும் பலரும் சந்தேகிக்கின்றனர்.

வெளிநாடுகளில் உள்ளவர்களில் பல முன்னாள் புலி ஆதரவு அமைப்பினர் யுஎன்பியின் கயிற்றை விழுங்கியவர்களாகவே தென்படுகின்றது. இது எதிர்காலத்தில் ரிஎன்ஏ யின் புலி ஆதரவாளர்களின் துரோகமாக பார்க்கப்படாதா? பிரபாகரன் ஆயுதப் போராட்டம் ஆரம்பித்ததின் காரணமே இந்த மிதவாத தலைவர்களின் துரோகங்கள் என்றுதானே?.

இன்று உள்ள நிலைமையில் ரிஎன்ஏ யும் இதன் சாரதி சம்பந்தரும் சரத்தையோ மகிந்தாவையோ ஆதரிக்க முடியாது. இவர்கள் இந்த இருவரையும் ஆதரிக்கும்படி தமிழ் மக்களை கேட்கவும் முடியாது என்பதே சாதாரண இலங்கைத் தமிழ் மக்களின் அபிப்பிராயமாகும்.

இந்த விடயத்தில் காங்கிரஸ் கட்சியினரின் முடிவு ஏற்கக் கூடியதே. தமிழ் வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை இரு பிரதான வேட்பாளர்களுக்கும் வழங்காமல், தங்கள் வாக்குகளை எதிர்ப்பைத் தெரிவிக்கப் பயன்படுத்துவதே பொருத்தமானதாக அமையும் எனவும் கருத்து நிலவுகிறது. இதற்காக தமிழர்கள் தமது வாக்குகளை வேறு யாருக்கும் போடலாம் என்பதேயாகும்.

கடந்த காலங்களில் மாறி மாறி ஆட்சிக்குவந்த சு.க,  யுஎன்பியின் ஆட்சிக் காலத்திலேயே பல திட்டமிட்ட சதிகள் தமிழருக்கு எதிராக நடைபெற்றுள்ளது. ஜனாதிபதி ஆட்சிமுறையை ஏற்படுத்தி பாரிய தமிழ் எதிர்ப்பு நடவடிக்கைகளை செய்தவர்கள் என்பதையும், மூன்றில் இரண்டு பெரும்பான்மை கொண்டு பாராளுமன்றில் புதிய யாப்பை உருவாக்கியவர்கள் என்பதையும், யுஎன்பி ஆட்சி காலத்திலேயே பல சாதாரண தமிழ்ர்க்கு எதிரான பல இராணுவ வெறியாட்டங்களை மேற்கொண்டவர்கள் என்பதையும் ரிஎன்ஏ மறந்துவிடக் கூடாது. யுஎன்பியினரால் கட்டியெழுப்பப்பட்ட தமிழர் எதிரப்பு கோபுரங்களையே மகிந்தா பயன்படுத்தி தனது வெற்றியாக்கினார் என்பதையும் ரிஎன்ஏ மறந்து விடக்கூடாது. (இதை பலதடவைகள் ரணில் தனது பாராளுமன்ற உரையில் குறிப்பிட்டுள்ளார்.)

மகிந்தாவை ஆதரித்து வெற்றி மகிந்தா பெற்றால் தமிழர்க்கு கிடைப்பது என்ன? சரத் வெற்றி பெற்றால் கிடைப்பது என்ன? என்பதே எம்முன்னால் உள்ள மிகப்பெரிய கேள்வியாகும் யாரைப் பழிவாங்குவது என்பதல்ல!

கடந்த பல வருடங்களாக தமிழர்கள் படித்தபாடம் என்ன? ரிஎன்ஏ பெற்ற அரசியல் முதிர்ச்சி என்ன? சம்பந்தர் பெற்ற அனுபவம் தான் என்ன? தமிழர்களின் தலைவர்கள் என்ற ரிஎன்ஏ தவறான முடிவுகளால் தமிழர்களை மீண்டும் முள்ளிவாய்க்காலில் போட்டுவிடாதீர்கள்.

பழிவாங்கல்கள் அல்ல அரசியல் தீர்வே தேவை!!

தமிழர்களின் அரசியல் எதிர்பார்ப்பை அபிப்பிராயத்தை தமிழ் மக்களிடையேயான அபிப்பிராய வாக்கெடுப்பொன்றை நடாத்த தமிழ் அரசியல்வாதிகள் அரசை வலியுறுத்த வேண்டும்!!

பயங்கரவாதங்களையும் புலிகளின் அடக்குமுறைகளுக்குள்ளும் பட்டினிச் சாவுகளுக்குள்ளும் தமது வாழ்க்கைப் பாதையில் கவனமாக நடந்து வந்த மக்கள் இப்படியான சந்தர்ப்பங்களில் என்ன செய்ய வேண்டும் என்பதை சரியாகவே படித்துள்ளனர். இந்தப் படிப்பினையை தமிழ் மக்கள் இந்த தேர்தலிலும் தமிழ் தலைவர்கள் என்பவர்களுக்கும் அரசுக்கும் வன்முறையாளர்க்கும் நிரூபிப்பர்.

சம்பந்தர் ரிஎன்ஏ சாணக்கியம் தமிழ் மக்களின் சாணக்கியமா? வரலாறு பதில் சொல்லும்!!

Show More
Leave a Reply to Sampanthan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

50 Comments

  • nadaiyan
    nadaiyan

    ஒபாமாவா மகெயினா என்று நாம் ஏன் அடிபடவில்லை அது இன்னொரு நாட்டு தேர்தல் என்பதால் தானே. அமெரிக்கா தான் உலகை ஆட்டிப் படைக்கும் சக்தி என்பதை தெரிந்திருந்தும் நாம் அதில் அக்கறை கொண்டோமா??
    இப்போ ஏன் சரத்தா மகிந்தாவா எனக் குழப்பம்??

    Reply
  • nathan
    nathan

    retired Supreme Court Justice C.V. Wigneswaran’s opinion on whom the Tamils should vote for at Presidential elections. (Justice C. V Wigneswaran is a highly respected member of the Tamil intelligentsia and while on the Supreme Court was known to be extremely independent and forthright in his views. He was named by TNA as their nominee for membership in the Constitutional Council)
    “There is no point in voting for a Tamil candidate. Even if all Tamils vote for him we will achieve nothing. It is one of the two mainstream candidates who will win the elections. It will be the same if we boycott the elections. This will only display the desperate state of our politics or that we haven’t come to realize our democratic rights. So far, Tamils have either voted for a Tamil candidate or boycotted presidential elections. This was to display the distinctiveness of the Tamil people’s politics. But now after the armed struggle has fallen silent this trend has to change. We have to be strategic. We have to see what we can get out of these two mainstream candidates. I am happy that the TNA is doing this. The TNA engaging in discussions with both candidates is productive. Tamil people should listen to the TNA leadership on this issue. The 22 parliamentarians speaking in different voices is no good. The TNA leadership should let the Tamil people know of their decision soon. One thing is for sure if we vote for a Tamil candidate or boycott the election it would either mean alienating our democratic rights or supporting someone else [probably meaning voting for Shivajilingam being voting for MR]”.

    Reply
  • சண்முகம்
    சண்முகம்

    காலத்தின் தேவை கருதி வந்த நல்ல ஒரு அலசல்! சம்பந்தர் ஹக்கிமையும் மனோ கணேசனையும் பார்த்து அரசியல் படிக்க வேண்டும். குறைந்த பட்சம் ஒரு முதன்மை வேட்பாளரோடு ஒரு உடன்பாட்டுக்கு வந்து ஆதரிப்பதே இன்று செய்ய கூடிய அரசியல். பிரபாகரனை நம்பிய சம்பந்தர் ஒரு மாறுதலுக்காக மகிந்தாவையோ அல்லது சரத்தையோ ஒரு 5 வருடம் நம்புவதால் ஒன்றும் கெட்டுப்போவதில்லை!

    Reply
  • Ajith
    Ajith

    I read your very lengthy article and I couldn’t find any useful information or argument. It is simply says identify you are a pro- Rajapakse, Pro -Indian and anti-tamil. Recently you had an interview with Mr Sivagilingam who most tamils believe as an agent of Indian government (RAW) and Rajapakse regime. Tamils know well that we are not going to get any political gain by voting Sarath or Rajapakse. By voting to Sivagi, we are not going to tell anything new to Sinhala majority or international community. For Sinhala people, tamils are always “Kallthony”.Don’t worry too much about what LTTE do or What TNF do? Do you have an alternative?

    I would like to ask few clarifications from you?

    Who do you support in the presidential election and why?
    What is your aim of this article? Is it to bring to discredit TNF and LTTE?
    Do you ask tamil people to vote for Mr. Rajapkse and his family who brought our Sri Lanka as a war crime nation?
    Why do you still do your politics as an anti-tamil?
    Most people believe that you are a RAW agent.Tell us your real intentions?

    Reply
  • BC
    BC

    //இப்போ ஏன் சரத்தா மகிந்தாவா எனக் குழப்பம்?//

    அது தானே! கனவுலகத்தில் வாழ்ந்தால் இந்த பிரச்சனை எல்லாம் கிடையாது. தமிழீழத்தை பாருங்கள்.அங்கே தேர்தலே கிடையாது.அதிமேதகு தான் ஆயுட்கால தலைவர்.அவருக்கு பின் அவர் மகன். உலகத்துக்கே வழிகாட்டிகள்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    சோதிலிங்கம்,
    நல்லதொரு கட்டுரையைத் தந்துள்ளீர்கள். ஆனால் சம்மந்தரின் சாணக்கியம் என எழுதி சாணக்கியத்தைக் கேவலப்படுத்தி விட்டீர்கள். சம்மந்தர் எந்தக்காலத்திலாவது சாணக்கியத் தனமாக நடந்துள்ளாரா?? இன்று புலிகளை வைத்து புலத்தில் பிழைப்பு நடத்துவோரும், இந்தக் கூத்தமைப்புக் கோமாளிகளும் தமது இருப்பையையும் வருவாயையும் காப்பாற்றிக் கொள்ள சரத் வருவதையே விரும்புகின்றார்கள். சரத் வநதால்த் தான் தாயகத்தில் தொடர்ந்து ஒரு பதட்டமான சூழ்நிலை உருவாகும். இதை வைத்தே இவர்கள் தம் பிழைப்பை நடத்ததலாமென்று நம்புகின்றார்கள். முன்பு புலிகளும் இதே காரணத்தினால்த் தான் 2005 தேர்தலில் மகிந்த வென்று வர வேண்டுமென்று விரும்பினார்கள். இறுதியில் அவர்களுக்கு அதுவே ஆப்பாகவும் அமைந்தது.

    Reply
  • Sampanthan
    Sampanthan

    ஜனவரி 4ம் திகதிக்கு பின்பு கூட்டமைப்பு?
    குசனையல துயரெயசல 1ளவ 2010 யவ 23:56

    ஜனவரி 4ம் திகதி கூட்டமைப்பு கூட்டமைப்பாக 22 பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்டு பேரளவிற்காக இயங்குமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. ஜனாதிபதி தேர்தலில் இரா சம்பந்தன் குழு கூட்டமைப்பின் ஏனையோரின் பங்குபற்றல் அல்லது பெரும்பான்மை அங்கத்தவர்களின் தீர்மானங்களை ஏற்காது மக்கள் நலன் கருதி செயற்படப்போவதாக அறுதியாக கூறியுள்ளது.

    திரு.சம்பந்தனின் வாதம்

    மஹிந்த இராசபக்‌ஷவை அகற்றுவதே நோக்கம் என ஒன்று பட்டு நிற்கும் ஜே.வி.பி யூ.என்.பி முஸ்லிம் காங்கிரஸ் கட்சிகளின் கூட்டு முன்னணிக்கு ஆதரவு அளிப்பதே சரியான வழி என வாதிடுகின்றார். மஹிந்தவுடன் அடிக்கடி பேச்சளவில் சம்பந்தன் பேசி வந்தாலும் ரணில் தரப்புடன் ஒத்து போவது என்பதனை கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாகவே இரகசியமாக முஸ்லிம் காங்கிரஸ் மனோ கணேசன் ரணில் ஆகியோரை சந்தித்தபோது இணங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    எனினும் எந்த முடிவுகள் ஆயினும் மக்கள் மனம் அறிந்து அதற்கேற்ப நாசூக்காக வெளிவிடவேண்டும் இல்லையெனில் பாராளுமன்ற தேர்தலில் மக்கள் தன்னை வீட்டிற்கு அனுப்பி விடுவார்கள் என்பது சம்பந்தனின் திட்டம். சம்பந்தன் அவர்களின் கருத்துக்கு ஆதரவாக 07 பேரும் அதற்கு எதிராக 13 பேரும் உள்ளனர். ஏனைய இருவரும் எந்த அணியிலும் இல்லாமல் உள்ளனர்.இந்த நிலையிலேயே கூட்டமைப்பு கூடவுள்ளது.

    சம்பந்தன் அவர்கள் பலதடவை சரத்பொன்சேகா ரணில் ஆகியோரை சந்தித்து இருக்கின்றார். சந்தித்த பின்னர் ரணில் அணியுடன் பேச்சு சுமுகமாக இருந்ததாகவும் முன்னேற்றகரமானதாக இருந்ததாகவும் அறிக்கை விட்டுள்ளார். ஆனால் அவருடன் சென்ற முக்கிய பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பேசியபோது அவர்கள் கூறுவது என்னவெனில் 2002 இல் சொன்னது போலவே இப்பவும் சொல்கின்றார்கள் என கூறுகின்றனர்.

    அதாவது இதுவரை ரணில் பொன்சேகாவுடன் நடந்த பேச்சுக்களில் அவர்கள் கூறியவை என்னவெனில் பேச்சளவில் மக்கள் பாவம் அவர்களின் பிரச்சினை தீர்க்கவேண்டும் போராளிகளை சட்ட ரீதியாக நடவடிக்கை எடுத்து அதன்படி செய்யவேண்டும் இராணுவ வலயங்களை எடுப்பது படிப்படியாக யோசிக்கலாம் அரசியல் தீர்வு பற்றி கூடி கதைக்கலாம் என்றே கூறியுள்ளனர்.

    முடிவாக எதனையுமே இப்பொது வெளிப்படையாக சொல்ல முடியாது எழுத்து மூலமாக தரமுடியாது என்று கூறிவிட்டனர். இதே போன்று தான் கடந்த காலங்களிலும் ரணில் சளாப்பியது அனைவரும் அறிந்தவிடயம். அதாவது அடி மனதில் தாம் வெல்லவேண்டும் என்ற எண்ணமே ரணிலுக்கு உள்ளதேதவிர வேறெந்த எண்ணமும் இல்லை. இது சம்பந்தன் அவர்களுக்கும் நன்கு தெரியும். அவரே தனது வாயால் இதனை கூறி இருக்கின்றார்.

    மஹிந்த வெற்றி பெற்றால் எங்கள் நிலை கஸ்டம் நாம் பாராளுமன்ற தேர்தலில் நிற்கமுடியாது ஒழுங்காக நடமாடவே முடியாது தவிர மேலும் மஹிந்தவின் அட்டகாசம் அதிகரிக்கும் என்பதே சம்பந்தன் வாதம்.

    ஆனால் மஹிந்த வெற்றி பெறும் வாய்ப்பே அதிகம் உள்ளது. மஹிந்த வெற்றிபெற்றால் விடுதலைப்புலிகள் காலத்தில் செயற்படுவது போல செயற்படமுடியாது. வடக்கு கிழக்கு மக்களுக்கு எதனையாவது தெளிக்கவேண்டும். இல்லாவிடில் இந்தியாவின் அழுத்தம் அத்துடன் அடுத்த பாராளுமன்ற தேர்தல் ஆகியவற்றிற்கு முகம் கொடுப்பதில் சிக்கல் என்பது மஹிந்தவுக்கு தெரியும்.

    அதே வேளை மஹிந்த வெற்றிபெற்றால் மஹிந்தவுக்கு தொல்லை கொடுத்து மஹிந்தவை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர சர்வதேசம் அதற்கான திட்டங்களை நகர்த்துகின்றது. ( தமிழ் மக்கள் நன்மைக்காக அல்ல) . ஆனால் சம்பந்தன் அணி என்ன விதப்பட்டும் ரணிலுடன் சேர்ந்தால் தாங்கள் சுதந்திரமாக பேசி கதைக்கவாவது முடியும் என வாதிடுகின்றார். வாதிடுவது மட்டும் அல்ல செய்ற்பாட்டிலும் இறங்கியுள்ளார். குறிப்பாக வீரகேசரி உதயன் போன்ற பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களை அதற்கேற்ப தயார்படுத்தல் வெளி நாட்டு தமிழர்களில் ஒரு பகுதியினரை அழைத்து பிரச்சாரம் மட்டும் நிதி திரட்டலில் ஈடுபடுத்தல் ஆகியனவற்றில் ஈடுபடுகின்றார்.

    புலம்பெயர் மக்களும் திரு.சம்பந்தனும்

    கனடா இலண்டன் ஆகிய நாடுகளில் சம்பந்தனின் கருத்தை ஏந்தியவாறு சில விடுதலை செயற்பாட்டாளர்கள் தமது வேலைட்திட்டங்களை ஆரம்பித்துள்ளனர். இவர்கள் தமது கலந்துரையாடலில் மக்களுக்கு சில நம்பிக்கைகளையும் வழங்கிவருகின்றனர். அதாவது ரணில் சில எழுத்து மூலமான முடிவுகளை வழங்கியுள்ளதாகவும். அதே நேரம் ரணில் மூன்றாம் தரப்புடன் ஓப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தி கொள்ள முயல்வதாகவும் நம்பிக்கை துழிகளை மக்களிற்கு காட்டி சம்பந்தனுக்காக ஆதரவினை திரட்டுகின்றனர். நிதியும் வழங்கி வருகின்றனர்.

    இதற்கு ரணில் பொன்சேகா அணியினரின் வெளி நாட்டு தொடர்புகளும் காரணம். ரணிலின் தொடர்பாளர்கள் கனடா மற்றும் அவுஸ்ரேலியா இலண்டன் நோர்வே ஆகிய நாடுகளில் உள்ள சில செயற்பாட்டாளர்கள் ஊடகங்கள் ஆகியோரின் உதவியுடன் தாம் எதனையுமே செய்ய தயாராக இருக்கின்றோம் ஆனால் மஹிந்தவை வீழ்த்தும் வரை எதனையும் செய்ய முடியாது என குழைந்துள்ளனர். இதனால் குறிப்பிட்ட நாடுகளில் உள்ள இந்த செயற்பாட்டாளர்கள் ரணிலை கடவுளாக்கி சம்பந்தனை கருப்பொருளாக்கி பிரச்சாரம் செய்ய ஆரம்பித்துள்ளனர்.

    புலம்பெயர் மக்களிற்குள்ளும் இந்த கருத்து மோதல்கள் அதிகரித்து வருகின்றன. அதாவது மஹிந்தவை அகற்ற வேண்டும் என்றால் ஓரளவாவது ஏற்று கொள்ளலாம் ஆனால் தமிழ் மக்களுக்கு சரத் பொன்சேகா வந்தால் எதனையாவது செய்ய முடியும் என மக்களை ஏமாற்றுவதில் புலம்பெயர் மக்களில் கணிசமானோருக்கு உடன்பாடு கிடையாது. காரணம்

    1 சரத் பொன்சேகா தமிழ் மக்கள் வாக்கு போட்டாலும் வெல்வார் என்பதில் ஐய்யம் மிக கடினம்

    அதாவது சரத்பொன்சேகாவின் தேர்தல் விஞ்ஞாபனம் முக்கியமாக மஹிந்த எதிர்ப்பு பிரச்சாரம் இதனையே காலம் காலமாக இரு கட்சிகளும் சொல்வதால் வாக்கு வங்கிகளில் பெரிதாக ஒன்றும் மாற்றம் வரப்போவதில்லை. அத்துடன் சரத்பொன்சேகா ஜனனாயகம் ஊடக சுதந்திரம் ஊழல் ஒழிப்பு என கூறுகின்றார். ஆனால் 70 வீதம் கிராம புற வாக்குகளை கொண்ட மக்களுக்கு இதுபற்றி யோசிக்கவோ அல்லது சிந்தித்திக்கவோ சந்தர்ப்பம்இ அறிவு இல்லை.

    சிங்கள மக்களை கவரும் சில விடயங்களாக தான் புலிகளை அழித்த ஒரு வீரன் எனவும் அத்துடன் தான் வந்தால் சம்பள உயர்வு வழங்குவேன் எனவும் கூறியுள்ளதே.

    ஆனால் மஹிந்த அணி இதனை முறியடிக்க பல திட்டங்களை முன்வைத்துள்ளது. ஆகவே சிங்கள மக்களின் வாக்குகளில் மாற்றத்தினை ஏற்படுத்துவது மிக கடினம். இதே வேளை எதிரணிக்கு முக்கிய பலம் ஜே.வி.பி ஆனால் ஜே.வி.பி யும் முன்னைய தேர்தலில் சந்திரிக்காவுடன் சேர்ந்து இனவாதம் பேசியதால் ரணில் மீதுள்ள கோபத்தில் ஜே.வி.பி இனருக்கு வாக்களித்தனர். இதனால் 32 ஆசனங்களை பெற்றனர். ஆனால் அதன்பின்னர் வந்த இடைதேர்தல்களில் ஜே.வி.பி தனது 75 வீதமான வாக்குகளை இழந்திருந்தது.

    மேலும் இப்போ இனவாதம் பேசினாலும் அந்த கருத்து சிங்கள மக்கள் மத்தியில் எடுபடபோவதில்லை. காரணம் சிங்களவர்களை பொறுத்தவரை புலிகள் ஒழிந்துவிட்டார்கள் ஆகவே இனி ஒரு தாக்குதல் இடம்பெறும் வரை புலி எதிர்ப்பு பிரச்சாரம் பெரிதாக எடுபடாது. அடுத்ததாக முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் வாக்குகளும் பெரிதளவில் மாறுபடாது அதாவது கடந்த தேர்தலிலும் ரணிலுக்கு முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு அளித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே வாக்குவங்கிகளை கொள்ளையடிக்க கூடிய எந்த உருப்படியான திட்டங்களும் ரணில் அணியில் இல்லை. ஆகவே வெற்றிபெறுவதும் சந்தேகம்.

    2 சரத்பொன்சேகா வந்தால் எதனை செய்ய முடியும்?

    ஒன்றுமே செய்ய முடியாது காரணம் சரத் பொன்சேகா வந்தாலும் பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறப்போவதில்லை. இந்த நிலையில் தமிழ் மக்களுக்கு சார்பாக என்ன தீர்மானங்கள் எடுத்தாலும் அது எதிரணியினரை பாராளுமன்ற தேர்தலை பாதிப்பிற்குள்ளாக்கும் என்பதனால் சரத்பொன்சேகாவோ அல்லது ரணில் விக்கிரம சிங்கவோ அதனையும் துணிந்து செயற்படுத்த போவதில்லை.

    ஏனெனில் கடந்த தேர்தல்களில் சிங்கள மக்கள் ரணில் கூட்டணியினை தூக்கி எறிந்தமை இவர்களால் மறக்கமுடியாது. ஆகவே எதனை செய்யவேண்டுமாயினும் பாராளுமன்றத்தில் ஆக குறைந்த பெரும்பான்மை இருக்கவேண்டும். எடுத்துக்காட்டாகஇ அபிவிருத்திஇ அவசரகால சட்டம்இ ஆகியவற்றை குறிப்பிடலாம். அரசியல் திட்டம்பற்றி நிகழ்ச்சி நிரலில் கூட வராது என்பது வேறு விடையம்.

    ஆகவே பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாவிடில் அதனை கலைக்கவேண்டும் அதற்கும் 06 மாதங்கள் எடுக்கும். சரி பாராளுமன்றில் எதிரணியினர் வெற்றி பெறுவார்களா? ஜனாதிபதியாக வந்ததும் சரத்பொன்சேகா ஜே.வி.பி ஒரு அணியாக தம்மை பலப்படுத்தும் நடவடிகையில் ஈடுபடஇ யூ.என்.பி இன்னொரு பக்கமாக இழுபறி பட்டாலும் சில பொது விடயங்களில் ஒன்று படுவார்கள். ஒன்று பட்டு வெற்றி பெறுவார்கள் ஆனால் வெற்றி பெற்ற பின்னர். வடக்கு கிழக்கு இணைப்பு அல்லது அது தொடர்பான பிரச்சினைகள் வரும் போது பிரிந்து செல்வார்கள்.

    ஆகவே சரத்பொன்சேகாவோ அல்லது ரணில் கூட்டணியோ எதனையும் செய்ய முடியாது ஆனால் இழுத்தடிப்பு செய்து இன்னும் இன்னும் எத்தனை தமிழர்களை உள்வாங்குவதன் மூலம் தமிழர்களது இருக்கின்ற வாழ்வாதாரத்தினையும் ஆசை காட்டி மோசம் செய்து இல்லாது செய்வதே ரணிலின் நோக்கமாக இருக்கும். இந்த விடயத்தில் ரணில் கைதேர்ந்தவர்.

    2002 இல் எழுத்து மூலமான ஒப்பந்தத்தில் இருக்கின்ற சில விடயங்களை கூட செய்யமுன்வராதவர் ரணில். அதாவது சிரான் எனும் அமைப்பினை உருவாக்கி அதன் மூலம் அபிவிருத்தி பணிகளை முன்னெடுப்பது என கூறி அதற்கென ஒரு குழுவினையும் விட்டு விட்டு மறு பக்கத்தில் நிதியாளர்களை அழைத்து தமக்கே முழு நிதியும் தரவேண்டும் என கூறியவர் ரணில். சிறான் திட்டத்திற்கு அரச தரப்பில் நியமிக்கவேண்டியவர்களை நியமிக்காமல் இழுத்தடிப்பு செய்தவர் ரணில் இதற்கு ஓர் அரசாங்க அதிபரின் அதிகாரமே போதுமானது.

    இதே வேளை நோர்வேயில் உதவி வழங்கும் நாடுகளின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட வாக்குறுதியின்படி வடக்கு கிழக்கிற்கு அரசாங்கமும் சர்வதேசமும் புலிகளும் சேர்ந்து திட்டத்தினை தயாரித்து அதன்படி அபிவிருத்தி பணிகளில் ஈடுபடுவது என முடிவு எடுக்கப்பட்டபோது அதற்கு ஓம் என்று கூறிவிட்டு பின்னர் அரசாங்க அதிபர்கள் ஊடாக (யேவழைn டிரடைனபைெஇ சுநபயபைெைெ ளுசi டுயமெய எனும் திட்டங்களை தீட்டி புலிகளுக்கு தெரியாமல் சர்வதேசத்திடம் கொடுத்து நிதியினை பெற்றவர்.

    ஆகவே தான் அந்த காலத்தில் செய்ய கூடிய ஆக குறைந்த அரச அதிபர் அதிகாரங்களையே செய்ய முடியாமல் போன ரணில் அந்த இயலாமைக்காக சந்திரிகாவை குற்றம் சாட்டி இறுதியில் தோல்வி கண்ட ரணில் இப்போதும் அதனையே செய்வார். சரத்பொன்சேகா வென்றதும் பின்னர் தமிழர்களுக்கு சொல்லுவார் பாராளுமன்றத்திலும் வென்றால்தான் நாம் எதனையும் செய்யலாம் என்பார்கள். அதன் பின்னர் பாராளுமன்றில் தமது ஏனைய ஆதரவு கட்சிகளின் ஒத்துழைப்புடனேயே எதனையும் செய்யமுடியும் என கூறுவார் ரணில். இவ்வாறு ஏமாற்றப்பட்டுகொண்டிருப்போர் நாங்களாக இருக்க சிங்களம் தனது வேலைகளை செய்யும். ஆகவே இவர்களை ஏன் நாம் மக்களுக்கு சிபார்சு செய்யவேண்டும் ? இவ்வாறு கூறுகின்றனர் சம்பந்தன் அவர்களுக்கு எதிரான அணியினர்

    விடுதலை ஆதரவு செயற்பாட்டாளர் அல்லது அமைப்புக்களும் ஜனாதிபதி வேட்பாளர்களும்

    இதே வேளை மே மாதத்திற்கு முன்பு புலிகளின் ஆதரவு அமைப்புக்களாக இருந்த சில அமைப்புக்கள் செயற்பாட்டாளர்களுடன் தொடர்பு கொண்ட ஐக்கிய தேசிய கட்சி மற்றும் மஹிந்தவின் கட்சியின் உறுப்பினர்களும் வெளி நாடுகளில் தமக்கு ஆதரவு தருமாறு புலம்பெயர் மக்களிடம் கூறுமாறு தொடர்புகளை ஏற்படுத்திய வண்ணம் உள்ளன. இதில் எதிரணி வேட்பாளர்களின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதாகவும் கூறப்படுகின்றது. சிலர் ரணில் குழுவினருக்கு வாக்குறுதியும் வழங்கியதாக தகவல்.

    4ம் திகதி கூட்டத்தில் கூட்டமைப்பினை உடைக்க கூடாது என்ற நோக்கில் சில விடுதலை ஆதரவாளர்கள் சமரசம் செய்யும் நோக்கில் கிளம்பி இருக்கின்றனர். சிங்கள ஏகாதிபத்தியம் எப்படியாவது இந்த ஜனாதிபதி தேர்தலை வைத்து கூட்டமைப்பை சின்னாபின்னப்படுத்தி அதனூடாக பாராளுமன்ற தேர்தலில் ஆளாளுக்கு ஏற்ப இரு சிங்கள பெரும் கட்சிகளும் கூட்டமைப்பினை விழுங்குவதே நோக்கம். ஆகவே இந்த ஜனாதிபதி தேர்தலிற்குள் சென்று சிக்குப்படாமல் மக்களிற்கு இரண்டு பேரினவாத கட்சிகளின் நோக்கம் செயற்பாடுகளை தெளிவாக எடுத்துக்கூறி மக்களையே முடிவெடுக்க விடுவதே சிறந்த வழி என கருதுகின்றனர். மாறாக இந்த ஜனாதிபதி தேர்தலில் யாரையாவது ஆதரிக்கபோனால் இருக்கின்ற ஒரேயொரு தமிழர் பிரதினித்துவம் என்ற நாமமே இல்லாமல் போய்விடும். என்பதே சமரசம் செய்ய புறப்பட்டவர்களின் கருத்து.

    தற்போதைய நிலையில் மக்கள் வாக்களிக்கும் நிலை என்ன?

    யாழ் குடா நாட்டை பொறுத்தவரை 50 விழுக்காடு மக்கள் விரும்பியும் வாக்களிக்கும் நிலையில் இல்லை (அடையாள அட்டை பிரச்சினை உள் நாட்டு வெளி நாட்டு இடம்பெயர்வு). இருக்கின்ற 50 விழுக்காட்டில் 20 விழுக்காடு டக்ளஸ் மஹிந்த கூட்டணியினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. மிகுதி 30 விழுக்காடு வீடு வீடாக அல்லது கடும் முயற்சிகளை மேற்கொண்டால் மாத்திரமே வாக்களிப்பார்கள்.

    வவுனியா மாவட்டத்தில்40 விழுக்காடு அக்கறை இன்மையாலும் இடம்பெயர்வு மற்றும் பல்வேறு பிரச்சினைகளால் வாக்களிக்க மாட்டார்கள் மிகுதி 60 விழுக்காட்டில் சித்தார்த்தன் மற்றும் அரச கூட்டணிகள் 25 விழுக்காடு. ஏனைய 35 வீத மக்கள் இயக்க ஆதரவு தமிழர் பிரதி நிதிகள் ஏதாவது சொன்னால் கேட்பார்கள். இதே வேளை வன்னியில் 20 000 குறைவான வாக்காளர்களே வாக்களிப்பார்கள் தரவுகளின் படி. மன்னார் மாவட்டத்தில் இதே நிலமை அதாவது நகரத்தில் இருக்கின்ற மக்களே வாக்களிக்கும் நிலையில் உள்ளனர். ஏனையோர் வாகன வசதி உணவு வசதிகள் செய்தால்தான் வந்து வாக்களிப்பார்கள் இது வரலாறு. இதே வேளை ஆயர் அவர்களின் கருத்தையும் ரெலோ இயக்கத்தின் கருத்தையும் கேட்கும் நிலையில் 40 விழுக்காடு மக்கள் இருக்கின்றனர். ஆனால் அவர்கள் எந்த வேட்பாளர்களையும் மக்களிற்கு சிபார்சு செய்யும் நிலையில் இல்லை.

    கிழக்கு மாகாணத்திலும்சிங்கள முஸ்லிம் மக்கள் தமது வாக்குகளில் 60 விழுக்காட்டினை ஆழும் கட்சிக்கே போடும் நிலை காணப்படுகின்றது. இதே வேளை தமிழ் பேசும் மக்களின் வாக்குகளை யார் பறிமுதல் செய்வது என்பதில் அங்கு தமிழர்களுக்கு இடையே போட்டி. இதனால் விரக்தியுற்ற 50 விழுக்காடு மக்கள் ஜனாதிபஹ்டி தேர்தலில் வாக்களிக்க மாட்டார்கள் என்பதே கணிப்பீடு.

    இதே வேளை இந்த நேரத்தில் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் கிழக்கு பகுதிக்கு சென்று ஊர் ஊராக வீடு வீடாக தமது முடிவுகளை தெளிவு படுத்தும் நிலையில் இல்லை. ஆகவே இந்த நிலையில் வடக்கு கிழக்கு மக்கள் நினைத்தால் சரத்பொன்சேகாவை வெல்ல வைக்க முடியும் என்பதில் அல்லது மஹிந்தவை வீட்டிற்கு அனுப்ப முடியும் என்பதில் நியாய பூர்வமான கருத்துக்கள் இல்லை.

    கத்தோலிக்க சமூகத்தின் கருத்துக்களை பார்க்கையில் யாழ்ப்பாணம் – மக்களே முடிவு எடுக்கட்டும் மன்னார்- ஆட்சி மாற்றம் மட்டகளப்பு திருகோணமலை – அமைதியினை கடைப்பிடிப்போம் ஆர் வந்தாலும் கதைச்சு பேசி செய்வோம்.

    ஆகவே இந்த குழப்பமான நிலையில் தேவை இல்லாமல் யாரையாவது ஒரு வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்க சொல்லி கூட்டமைப்பு முடிவு எடுப்பதோ அல்லது கூட்டமைப்பினை வலியுறுத்துவதோ தேவையற்ற தொன்று. முடிந்தால் இரு வேட்பாளரும் என்ன சொல்கின்றார்கள். அவர்கள் ஆட்சிக்கு வந்தால் எதனை செய்ய முடியும் அல்லது முடியாது என்பதனை மக்களுக்கு விளங்கப்படுத்தவேண்டும்.மக்களே முடிவு எடுக்கட்டும். பராளுமன்ற தேர்தலையும் ஜனாதிபதி தேர்தலையும் ஒன்றாக்கி குளப்பியடிக்க தேவை இல்லை. என்பதே பொதுவான கருத்து.

    ஆனால் கூட்டமைப்பு இந்த மாதம் 4ம் திகதி கூட்டப்படப்போகின்ற கூட்டத்தில் இருபெரும் அணிகளாக கருத்துக்கள் முன்வைக்கப்படவுள்ளன அதாவது சரத்பொன்சேகாவை ஆதரித்து ஆட்சி மாற்றத்தினை கொண்டுவருதல் என ஒரு அணியும். மஹிந்தவை அகற்ற சரத்பொன்சேகாவை ஆதரிக்கவேண்டிய அவசியம் இல்லை. மக்களுக்கு தெளிவு படுத்தினால் மக்கள் அதற்கேற்ப செயற்படுவார்கள் ஆகவே வெளிப்படையாக எதனையும் மக்களுக்கு திணிக்க தேவை இல்லை என இரண்டாவது அணியும் விவாதித்து முடிவு செய்யவுள்ளனர்.

    இந்த விவாதம் உடைவினை ஏற்படுத்த கூடாது என்பதில் புலம்பெயர் மக்கள் பெருமளவானோர் கருதுகின்றனர்.
    நன்றி ஈழநாதம்

    Reply
  • T Sothilingam
    T Sothilingam

    The Tamil vote will be the decider: A myth

    By Aachcharya writing from Jaffna

    Two Tamil Dailies Thinakkural and Uthayan (Jaffna) carried yesterday a headline report of retired Supreme Court Justice C.V. Wigneswaran’s opinion on whom the Tamils should vote for at Presidential elections. (Justice C. V Wigneswaran is a highly respected member of the Tamil intelligentsia and while on the Supreme Court was known to be extremely independent and forthright in his views. He was named by TNA as their nominee for membership in the Constitutional Council)
    In the interview, he has said that certain individuals’ self-centric actions have led to confusion among the Tamils. The following are translated excerpts from the ‘interview’:

    “There is no point in voting for a Tamil candidate. Even if all Tamils vote for him we will achieve nothing. It is one of the two mainstream candidates who will win the elections. It will be the same if we boycott the elections. This will only display the desperate state of our politics or that we haven’t come to realize our democratic rights. So far, Tamils have either voted for a Tamil candidate or boycotted presidential elections. This was to display the distinctiveness of the Tamil people’s politics. But now after the armed struggle has fallen silent this trend has to change. We have to be strategic. We have to see what we can get out of these two mainstream candidates. I am happy that the TNA is doing this. The TNA engaging in discussions with both candidates is productive. Tamil people should listen to the TNA leadership on this issue. The 22 parliamentarians speaking in different voices is no good. The TNA leadership should let the Tamil people know of their decision soon. One thing is for sure if we vote for a Tamil candidate or boycott the election it would either mean alienating our democratic rights or supporting someone else [probably meaning voting for Shivajilingam being voting for MR]”.

    He also refers in the interview to how the Upcountry Tamil leadership and the Muslims have used the ballot effectively in the past. Tamils have no option now but to take up this weapon he says. He also says that if the Tamils stand united we can decide which way the majority goes in the parliament at the next general election. He concludes: “Our differences will aid them. Our unity will aid us”

    The Jaffna Uthayan which has for now long supported a vote for SF has written an editorial overjoyed with Wigneswaran’s public stance on the issue and have insisted other community leaders also come out publicly with a similar stance.

    The All Ceylon Tamil Congress met in Jaffna yesterday to decide on whom to support and on Kajendrakumar Ponnambalam’s insistence, they have voted on a resolution to boycott the elections. Former MP Vinyagamoorthy who is the President of the ACTC is not happy with the decision but has gone with the resolution not wanting to challenge Ponnambalam. Four MPs attached to the TNA are supposedly favouring a boycott – Kajendrakumar, Pathmini Sithamaparanathan, Solaman Cyril, and Kajendran, all being Jaffna MPs. They all are in Jaffna these days. They met with the Jaffna Bishop yesterday.

    Earlier Shivajilingam also claimed support from seven TNA MPs for a Tamil candidate. One is not sure how many of these TNA MPs will support Shivajilingam as the Tamil candidate though. MP Shivashkthi Ananthan has alleged Shivajilingam of receiving money from the government to contest the elections.

    I suspect that the TNA leadership might come out and ask the Tamil people to vote for “regime change” without naming Sarath Fonseka. In short the call will be for Tamils to cast a silent vote in favour of SF. One will have to wait and see how many Tamils feel like voting. I suspect that the voting numbers in the North will be small – small that they will not be able to influence the national vote significantly. The way Eastern Tamils vote is also very unclear. Pillayan is unlikely to come out strongly for MR or to inspire people to vote for SF. Karuna’s influence is also not clear. For the Tamils to be the deciders in the election (like they could have been in the last) they have to vote as a whole to one candidate and the Sinhala votes to both candidates should be almost equal. I doubt whether the challenger to the incumbent can muster that many Sinhala votes to equal the incumbent’s or that the Tamils will vote significantly to one candidate despite their being a disguised call from the TNA to vote for Sarath Fonseka.

    And finally what can a vote for SF achieve at all for the Tamil people? Tamil people’s ‘active engagement in national politics’- what will it lead to? Will SF devolve powers, dismantle the High Security Zones, repeal the PTA, revoke Emergency, resettle IDPs in places of their choice? Has he promised any of these? Or has MR promised any of these concretely? Both candidates know well that making concrete promises on any of these will mean betraying the Sinhala nation. The TNA knows very well that none of them would even promise any of these or might just pay lip service to some of them. Hence, my prediction that they will call for a silent vote.

    Justice Wigneswaran is deeply anxious and nervous in his call for unity. It is going to be very difficult to bring TNA under one umbrella again. And that’s why, like the state of Muslims politics today, Tamils can never be King or Queen makers. The days of Ashroff and Thondaman are gone. And unless there is a change in the way South does politics even if you are a King maker, the Tamils will be disappointed once again as they were when their King maker Chelvanayakam was disappointed when the B-C and D-C pact were dishonoured.

    http://www.dailymirror.lk/DM_BLOG/Sections/frmNewsDetailView.aspx?ARTID=72182

    Reply
  • பல்லி
    பல்லி

    சில இடங்களில் மூடிவிட்டு இருப்பதே நல்லது என நினைக்கும் பல்லி; காரனம் சில கருத்து முரன்பாடு வந்துவிட்டாலோ அல்லது நாம் யார்மீது அசையா நம்பிக்கை வைத்து விட்டால் எதிரே நிப்பவர் ஆணாக இருந்தாலும் சிலருக்கு பெண்ணாகவே படுவார்கள், அதேபோல் நாம் நாம் ஆதரிப்பவர்களின் நன்மைகளை சொல்லுவதில் கவனம் செலுத்தும் போல் தீமைகளை சரி பார்ப்பத்தில்லை, எதிரியின் தீமைகளின் நோக்கம் புரிவது போல் எதிரியால் ஏற்படுத்த கூடிய காரியங்களை பார்ப்பதில்லை, ஆனால் வல்லரசுகளோ உலக அரசியல் அவதானிகளோ அதையே மோப்பம் பிடித்து தமது செயல்பாட்டை மிகசிறப்புடன் செய்கிறார்கள், இதுக்கு எமது சிறுதீவான இலங்கை மட்டுமல்ல இந்தியா கூட அவர்களிடம் சிக்கி சின்னாபின்னமான செய்திகள் உண்டு, அது எமக்கு தேவையில்லை,

    ஆனால் மகிந்தாவை ஆதரிப்போர் சொல்லும் காரனங்கள் மிக சரியானவையே, அதிலும் சந்திரா சொன்ன கருத்து மிக பொருத்தமானது,(30வருடம் புலியின் அட்டூழியங்களை பொறுத்த நாம் ஏன் ஒரு சில மாதமாவது மகிந்தாவை செயல்பட வைக்க பொறுக்க கூடாது; மிக யதார்த்தமான கருத்து) அதேபோல் பார்த்திபன் மாயா; பிசி என்னும் சிலர் மிக நிதானமான கருத்துக்களை மகிந்தா சார்பாக வைத்தார்கள், இந்த கருத்துக்கள் அனைத்திலும் எனக்கு ஒரு வீதம் கூட வேறுபாடில்லை, ஆனால் நாம் சொல்லும் கருத்துக்களை விட இலங்கை அரசை உருவாக்கும் சக்தி இந்தியாவிடமே உண்டு என்பதை யாரும் மறுக்க முடியாது;(அதுக்கான அதாட்ச்சிகள் கடந்தகால தேர்தல்களை கவனிக்கவும்) சம்பந்தர் இன்று மூன்று நாள் மகிந்தாவுடனும் நாலு நாள் ரணிலோடும் பேசுவது போல் இந்தியாவில்
    இரு தரப்பும் பேசியவண்ணமே இருக்கிறார்கள்; அதன் முடிவே சம்பந்தர் முடிவாக அமையும்; இந்தியா எதை விரும்புகிறதோ அதையே சம்பந்தர் விரும்புவார், காரனம் இந்தியா புலியை அழிக்க சிங்கள அரசுக்கு உதவ போய் இன்றுதான் மிக இக்கட்டான ஒரு சூழ்நிலையில் இருப்பது அனைவரும் அறிந்ததே, அதேபோல் இந்தியாவின் நட்ப்பை போருக்கு முன் பின்னாக மகிந்தா குடும்பம் பார்ப்பதையும் நாம் அறிவோம்;
    இதில் பசில் பட்ச்சாவின் சாதுரியத்தால் மட்டுமே இதுவரை இந்தியா மகிந்தாவிடம் தனது எதிர்ப்பை காட்டவில்லை, அதை இன்று மகிந்தா உணர்ந்து விட்டார், நாம் மட்டுமே பலசாலிகள் என்பது போல நடப்தால்(புலிபோல்) எதிரியின் பலத்தையும் எமது பலவீனத்தையும் மறந்து விடுகிறோம்; இன்று சம்பந்தர் இந்தியாவின் பச்சை கொடிக்காய் காத்திருக்கிறார்; சேகரா இந்தியாவால் மகிந்தாவுக்கு வைக்கபட்ட ஒரு செக் அதையும் தாண்டி பசில் அரசியல் செய்தால் மகிந்தா வரகூடும்; கோத்தய பட்ச்சாவின் அரசியல் இந்தியாவை கடுப்பேத்துவதில் இருப்பதால் மகிந்தா வெற்றி தோல்வியை நிர்னயிப்பது பசில் பட்ச்சாவின் வியூகமே; சரத் பொன் சேகராவுக்கும் ரணிலுக்கும் வரும் ஆதரவு கட்சிகள் யாவும் இவர்கள் இருவரது அன்பிலோ அல்லது அரசியல் மென்மையிலோ வரவில்லை; அரசியலில் வெற்றி தோல்வி சகசம்தான், ஆனால் இலங்கையில் மட்டும் ஒருவர் வெற்றி பெற்றாலும் எமக்கு அடிதான் ஒருவர் தோற்றாலும் நமக்கு இடிதான்;ஆனாலும் பல்லியின் வோட்டு ;;;;;;;;;

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    பல்லி,
    நீங்கள் சொல்வது போல் கூத்தமைப்புச் சம்மந்தர் இந்தியாவின் விருப்பப்படியே நடப்பவரென்பது உண்மை தான். ஆனால் தற்போது அவர் புலத்திலுள்ள புலிப்பினாமிகளின் ஆசைக்கேற்றபடி தாளம் போடவே விரும்புகின்றார். அதற்குரிய காரணங்களை நான் ஏற்கனவே எழுதியுள்ளேன். அதுபோல் இந்திய அரசு மகிந்தவிற்கு ஒரு செக் வைத்து மிரட்டுவதற்காகவே சரத் சார்பாக முடிவெடுபப்பது போல் நாடகமாடுகின்றது. ஆனால் இந்திய அரசு ஒருபோதும் சரத் வருவதை விரும்ப மாட்டாது. காரணம் சரத் எப்போதும் தனது சீன ஆதரவு முகத்தையே காட்டி வருபவர். இவர் இலங்கை அதிபராக வந்தால், இந்தியாவிற்கு பிரைச்சினைகளே அதிகமாகும். எனவே மகிந்தவை ஒரு வழிக்குக் கொண்டு அவர் மூலம் தமிழ் மக்களுக்கான ஒரு தீர்வைக் கொண்டு வரவே, இந்திய அரசும் விரும்புகின்றது. சம்மந்தர் தமது ஆதரவை சரத்திற்குத் தான் என இதுவரை கூறாது இழுத்தடிப்பதும் இதனால்த் தான். நீங்கள் வேண்டுமானால் பொறுத்திருந்து பாருங்கள் சம்மந்தர் சரத்திற்கான தமது ஆதரவைத் தெரிவித்தால், அதன் பின் இந்தியாவின் கூத்தமைப்பு சார்பான நடவடிக்கைகளில் பாரிய மாற்றங்களை நீங்கள் காணலாம்.

    Reply
  • matharasy
    matharasy

    ஜனாதிபதித் தேர்தலை பகிஷ்கரிப்பதன் வாயிலாக தமிழ் மகன் ஒருவரை நிறுத்துவதன் மூலமாகவோ எந்தப் பயனும் ஏற்படாது
    by வீரகேசரி நளேடு

    எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை தமிழ் மக்கள் பகிஷ்கரிப்பதாலோ அல்லது தமிழ் மகன் ஒருவரை நிறுத்துவதாலோ எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை. மாறாக அவ்வாறு செய்வதன் மூலம் தமிழ் மக்கள் தங்கள் ஜனநாயக உரிமையை விட்டுக் கொடுத்ததாக அமைந்து விடும் என்று முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

    தமிழ் மக்கள் இன்று அரசியல் தலைமைத்துவத்தை இழந்து நிற்கின்றார்களோ என்று எண்ண வேண்டியிருக்கிறது. இந்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமை ப்பு ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அதன் நிலைப்பாட்டை விரைவில் அறிவிக்கவேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

    முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர் அண்மையில் இந்தியாவில் இருந்த சமயம் வெளிநாடுகளிலிருந்த புலம்பெயர் இலங்கைத் தமிழர்கள் அவரை அணுகி ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு கேட்டுக்கொண்டதாக வெளியான தகவல் குறித்து அவரிடம் வினவியபோது அவர் தனது நிலைப்பாட்டை விளக்கி பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

    நீதியரசர் மேலும் கூறியதாவது:

    “தனிப்பட்ட மனிதர்களின் சுயநலம் மேலோங்கி அவர்களின் பொறுப்பற்ற வார்த்தைகளால் தமிழ் மக்களின் மனங்கள் கலக்கத்திலும் குழப்பத்திலும் நீந்திக் கொண்டிருக்கின்றன.

    நான் அண்மையில் இந்தியாவில் இருந்தபோது வெளிநாட்டிலிருந்து சில அன்பர்கள் என்னைத் தொடர்பு கொண்டு தமிழர் சார்பில் ஜனாதிபதித் தேர்தலில் நான் நிற்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். அதற்கு நான் கூறிய பதில் இதுதான். ஒரு தமிழன் தனித்துவமாய் ஜனாதிபதித் தேர்தலில் நின்று எல்லாத் தமிழ் பேசும் மக்களும் அவருக்கு வாக்களித்தாலும் கூட எந்த நன்மையும் எமக்குப் வரப்போவதில்லை. முக்கியமான இருவரில் ஒருவர்தான் பதவிக்கு வரப்போகின்றார். பதவிக்கு வரும் அவர் தனக்கு வேண்டியதைத்தான் செய்யப்போகிறார்.

    நாங்கள் தேர்தலைப் பகிஷ்கரித்தாலும் அதேநிலை தான்.இவ்வாறான நடவடிக்கைகள் இலங்கைத் தமிழ் பேசும் மக்களின் கையாலாகாத தன்மையையே வெளிக்காட்டும். மேலும், தங்களின் ஜனநாயக உரித்தை அவர்களும் உணர்ந்து கொள்ளவில்லை என்பதையும் எடுத்துக்காட்டும்.

    இதுவரை காலமும் தேர்தல்களில் தமிழ் மகன் ஒருவரை நிறுத்துவது, தேர்தலைப் பகிஷ்கரிப்பது என்பன போன்ற காரியங்கள் தமிழ் மக்களின் பின்னணியில் ஆயுதம் தாங்கியவர்கள் உறுதுணையாய் இருக்கின்றார்கள் என்ற எண்ணத்தில் தமது தனித்துவத்தைக் காட்டும் விதத்தில் நடைபெற்றிருக்கலாம்.

    ஆனால், ஆயுதப்போராட்டம் மௌனித்த நிலையில், இப்போதைக்கு அதேபோன்ற சிந்தனைக்கு இடமில்லை என்றே கொள்ளவேண்யுள்ளது. புதிய இராஜதந்திர அரசியல் நடைமுறைகளை நாங்கள் கையாள்வது இன்றைய பின்னணியில் அவசியமாகின்றது. இந்த நிலையில், பதவிக்கு வர எத்தனிக்கும் இருவரையும் சந்தித்து தமிழ் மக்களுக்கு அவர்கள் ஒவ்வொருவரிடமும் இருந்து பெற்றுக்கொடுக்கக்கூடிய ஆகக்கூடிய நன்மைகள் எவை என்பதை ஆராய்ந்து பார்ப்பதே சிறந்தது என்று கூறினேன். நான் கூறியவாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செய்வதையிட்டு மிக்க மகிழ்ச்சியுறுகிறேன். இருவரிடமும் பேசிப் பார்த்து எவ்வாறு தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்பதை இந்தக் கூட்டமைப்பு எடுத்தியம்ப வேண்டும். இது சம்பந்தமாகக் கூட்டமைப்பின் தலைமைத்துவம் கூறுவதைத் தமிழ் மக்கள் ஏற்க வேண்டும்.

    கூட்டமைப்பின் பாராளுமன்ற அங்கத்தவர்கள் ஆளுக்கொரு அறிக்கை விடுவதை தவிர்க்க வேண்டும். 22 பேர் தங்கள் வாய்க்கு வந்ததை வெளியிடத் தொடங்கினார்களானால், தமிழ் மக்கள் மனங்கள் குழம்பிவிடும். அதைத் தவிர்க்க வேண்டும். கூட்டமைப்பின் தலைமைத்துவம் தமது முடிவை விரைவில் அறிவிக்க வேண்டும். மக்கள் கலவரமுற்ற நிலையில் இருப்பதை தலைமைத்துவம் உணர்ந்துகொள்ள வேண்டும். ஒன்று மட்டும் நிச்சயம். நாங்கள் தமிழ் மகன் ஒருவரை நிறுத்தினாலோ தேர்தலைப் பகிஷ்கரித்தாலோ அது எங்கள் ஜனநாயக உரித்தை நாங்கள் விட்டுக் கொடுத்ததாகவே அமையும். அல்லது மறைமுகமாக எவரையோ ஆதரித்ததாக முடியும்.

    எங்கள் கையில் வாக்கு என்ற பலத்த ஆயுதம் ஒன்றிருப்பதை நாங்கள் மறத்தலாகாது. காலஞ்சென்ற சௌமியமூர்த்தி தொண்டமான் எங்கள் சகோதர மலைநாட்டுத் தமிழர்களை வழிநடத்தியபோது வேலை நிறுத்தம் என்ற பாரிய ஆயுதத்தைப் பாவித்தார்.

    ஆனால், வட, கிழக்கு இலங்கைத் தமிழ் மக்கள் போர் ஆயுதங்கள் மேல் நம்பிக்கை வைத்து இன்று செய்வதறியாது நிற்கின்றார்கள். எனினும், அவர்கள் சகல ஆயுதங்களையும் இழந்த நிலையில் உள்ளார்கள் என்று தப்புக் கணக்குப் போட்டு விடக்கூடாது. ஜனநாயக ரீதியாகப் பார்த்தால் தமிழ் பேசும் மக்களின் ஒற்றுமையானது ஒரு பாரிய ஆயுதம்.

    உதாரணத்திற்கு எடுத்துக் கொண்டால் வரும் பொதுத் தேர்தலில் இரு பாரிய கட்சிகளும் கிட்டத்தட்ட சமபலம் பெற்றிருந்தால் அவர்களுள் யாரைத் தமிழ் மக்கள் ஆதரிக்கின்றார்களோ அவர்களே அரசாங்கம் அமைக்க முடியும். சென்ற தடவை 22 பேர் பாராளுமன்றத்தில் இருந்தனர். இம்முறை அந்த ஒற்றுமையை நாங்கள் இழந்துவிட்டோமானால் எங்கள் ஒரேயொரு ஆயுதத்தை நாங்களே விட்டெறிந்த நிலைக்கு வந்துவிடுவோம். தமிழரின் ஒற்றுமை நாட்டின் ஜாதகத்தை கணிக்க உதவும். பதவியில் இருக்கும் ஒரு வரை கீழ் இறக்கவும் இன்னொருவரை மேல் ஏற்றவும் தமிழ் பேசும் மக்களால் முடியும் என்பதைச் சிலர் அறிந்து வைத்துள்ளதால்தான் தமிழ் பேசும் மக்களிøடயே வேற்றுமைகளை விதைக்க அவர்கள் பாடுபடுகின்றார்கள்.

    எங்கள் வேற்றுமைகள் அவர்களுக்கு உதவும். எங்கள் ஒற்றுமை எங்களுக்கு உதவும். இவ்வளவுதான் என்னால் கூற முடியும்.” எனத் தெரிவித்தார்.

    Reply
  • matharasy
    matharasy

    SLMC leader Rauf Hakeem charged that President Mahinda Rajapaksa’s government was systematically destroying the political power of minorities.
    Addressing a recent press conference in Kalmunai, he alleged that the local government election amendment bill and the attempt to de-register ethnicity based political parties were parts of such attempts.
    He thanked Eastern Province Chief Minister Srinivasan Chandrakanthan for his support to defeat the bill at his council and the judiciary for its ruling that the bill should be implemented in consultation with provincial councils.
    Hakeem said his party’s decision to support the Opposition presidential candidate Sarath Fonseka was not a move made overnight. He said his party had carefully studied developments in neighbouring countries and also the treatment of minorities following the end of the war

    Reply
  • Sampanthan
    Sampanthan

    இரு பிரதான வேட்பாளர்களையும் தமிழ்மக்கள் நிராகரிக்க வேண்டும்: யாழில் சிவாஜிலிங்கம் – விக்கிரமபாகு

    எதிர்வரும் ஐனாபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ன ஆகியோர் தேர்தல் பரப்புரைப்காக யாழ்ப்பாணம் சென்றுள்ளனர்.

    இன்று யாழ்ப்பாணம் சென்ற இவர்கள் செய்தியாளர்களைச் சந்தித்து தமது நிலைப்பாட்டை விளக்கியுள்ளனர்.

    ஐனாபதித் தேர்தலில் போட்டியிடும் இரு பிரதான வேட்பாளர்களையும் தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டும். தற்போதைய காலம் தேர்தலுக்குப் பொருத்தமான காலகட்டம் அல்ல. தமிழ் மக்களுக்கு உள்ள பயம் இன்னும் நீங்கவில்லை. பிரதான வேட்பாகளர்கள் அரசியல் அமைப்பைத் திருத்துவது குறித்து பேசுவதற்கு இருவருமே தயார் இல்லை. 13-வது திருத்தச் சட்டம் குறித்து இருவருமே அதற்கு சற்று மேலாக எனக் கூறுகின்றனர்.

    இருவேட்களின் கைகளும் இரத்தக் கறைகள் படிந்த கைக்கள் தான். இவர்கள் இருவரும்தான் புலிகளைத் தோற்கடித்ததாகக் கூறுகிறார்கள். இவர்கள் இருவரும் தான் ஆயிரக்கண்கான தமிழ்மக்களைக் கொன்றழித்தார்கள். எனவேதான் இரு பிரதான வேட்பாளர்களும் பலம் பெறாதவாற தமிழ்மக்கள் வாக்களிக்க வேண்டும் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

    நாளை இவர்கள் தங்களது பரப்புரைகளை மக்கள் மத்தியில் முன்னெடுக்கவுள்ளதாக யாழ்ச் செய்திகள் தெரிவிக்கின்றன.

    Reply
  • Sampanthan
    Sampanthan

    புலிகளை விற்றுப் பிழைப்பு நடத்த துணிந்து விட்டாரா சம்பந்தன்?
    ஜ வியாழக்கிழமைஇ 31 டிசெம்பர் 2009இ 10:24.30 பி.ப | இன்போ தமிழ் ஸ

    தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்காக உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சும் போக்கும் இப்போது தமிழ் மக்களிடையே சந்தேகங்களைத் தோற்றுவித்துள்ளது.

    ஜனாதிபதித் தேர்தலை முன்னிறுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடத்தும் அரசியல் சித்து விளையாட்டுகள் தமிழ் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தத் தவறவில்லை.

    குறிப்பாக கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் வெளியிடுகின்ற தகவல்களும்- அவர் நடத்தும் பேச்சுக்கள் பற்றி வெளியாகும் தகவல்களும் தமிழ் மக்களை வெறுப்புடன் நோக்க வைக்கின்றன என்பதே உண்மை.

    2005ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் குறித்து அவர் வெளியிட்டிருக்கி;ன்ற கருத்து மிகவும் முக்கியமானது. இந்தத் தேர்தலைப் புறக்கணிக்க தமிழ்மக்களின் சார்பில் புலிகள் எடுத்த முடிவு தவறானது என்றும்-; அதனால் தான் இத்தனை அழிவுகள் ஏற்பட்டதாகவும் புலம்பியிருக்கிறார். 2005ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்கப் புலிகளே முடிவு எடுத்தது உண்மை.

    புலிகளின் முடிவை அனைத்து தமிழ் மக்களும் ஏற்றுக் கொண்டதும் உண்மை. அப்போது அதுபற்றி வாய் திறக்காமல் இருந்த சம்பந்தன் இப்போது அதுபற்றிக் கதைக்க ஆரம்பித்திருப்பது வேடிக்கை. குறிப்பாக புலிகள் பலமோடு இருக்கும் வரைக்கும் அவர்களின் மூலம் அரசியல் நலன்களை அனுபவித்த அவர்- இப்போது புலிகள் இயக்கம் அழிவுகளைச் சந்தித்துள்ள நிலையில் எல்லாப் பழியையும் அவர்கள் மீது போட்டுத் தப்பிக்க முனைகிறார் என்பது வெளிப்படை.
    புலிகளின் முடிவு தவறாகவே இருந்து விட்டுப் போகட்டும். புலிகளின் முடிவுக்கு எதிராக வாதாடியதாக இப்போது கூறும் சம்பந்தன்இ அந்த முடிவு பேரழிவை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்திருந்தால்- ஆனந்தசங்கரி போலத் தனிவழி போயிருக்கலாம். அதை ஏன் அவர் செய்யவில்லை? புலிகள் இருக்கும் வரை அதுபற்றி வாய்திறக்காமல் இருந்து விட்டு- இப்போது அவர்கள் மீது பழியைப் போட்டுத் தப்பிக்க நினைப்பது சுத்த அயோக்கித்தனம்.

    அரசியல் லாபத்துக்காகப் பேசும் பேச்சு. இந்தக் கட்டத்தில் ஆனந்தசங்கரி சம்பந்தனை விட ஒரு படி உயர்வான நிலையில் இருக்கிறார் என்பதை ஏற்றேயாக வேண்டும். 2005 ஜனாதிபதித் தேர்தல் இன்றைய அழிவுகளுக்கு ஒரு காரணம் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. 2005ம் ஆண்டு புலிகள் ஏன் அப்படி ஒரு முடிவை எடுக்க நேர்ந்தது என்பதை சம்பந்தனே நன்கு அறிவார். அப்போது மகிந்த ராஜபக்ஸ அல்லது ரணில் விக்கிரமசிங்க என்ற இரண்டு பேய்களுக்கு நடுவே தமிழ் மக்கள் சிக்கிப் போயிருந்தனர். இப்போதும் அதே நிலை தான். மகிந்த ராஜபக்ஸ கடும் போக்குவாதி. எதையும் விட்டுக் கொடுக்க நினைக்காதவர். அவர் பதவிக்கு வந்தால் போர் மூளும் என்பது புலிகளுக்கும் தெரிந்திருந்தது. போரை அடிப்படையாக வைத்தே அவர் காய்களை நகர்த்தினார். அதாவது அவரது நிலைப்பாடு போரை நோக்கிய – வெளிப்படையான நகர்வுகளைக் கொண்டதாகவே இருந்தது

    போரைச் சமாளித்துப் பழக்கப்பட்டுப் போன புலிகளுக்கு அவரைச் சமாளிக்கலாம் என்ற கருத்து இருந்தது. அதேவேளைஇ ரணில் விக்கிரமசிங்க தன்னை ஒரு மென் போக்காளராகக் காட்டிக் கொண்டு நரித்தனமான காரியங்களில் ஈடுபட்டவர். ஜே.ஆரின் வழிவந்த அவர் வெளியே பெரிதாக எதையும் பேசாமல் புலிகள் இயக்கத்தை சிதைப்பதிலேயே குறியாக இருந்தவர்.

    போரில் அரசாங்கம் வென்ற பின்னர் அதற்கு ஐதேக உரிமை கோரியதை எவரும் மறந்து விடமுடியாது. புலிகளிடம் இருந்து கருணாவைப் பிளவுபடுத்தி அவர்களைப் பலவீனப்படுத்தியதாகவும் – எனவே போரின் வெற்றியில தமக்கும் பங்குண்டு என்று ஐதேக உரிமை கோரியதை யாரும் இலகுவில் மறந்திருக்க மாட்டார்கள். அதைவிட சர்வதேச ரீதியாகப் புலிகள் மீது தடைகளை ஏற்படுத்தி அவர்களைப் பலவீனப்படுத்துவதி சமாதானப் பேச்சுகளுக்கு முட்டுக்கட்டை போட்டுஇ தாமதப்படுத்துவதிலேயே குறியாக இருந்தவர் ரணில். இந்தக் கட்டத்தில் ரணில் விக்கிரமசிங்க பதவிக்கு வருவது புலிகள் இயக்கத்தை சமாதானத்தின் பேரால் பலவீனப்பமுடுத்தி விடும் என்று புலிகள் கருதியிருந்தனர். இதனால் தான் புலிகள் தேர்தலின் போது அப்படியான முடிவை எடுக்க நேர்ந்தது. இதை சம்பந்தன் மட்டுமன்றி பலரும் அறிவர்.

    மூன்று தசாப்தங்களாகப் புலிகள் போரை எதிர்கொண்டு பழகிப் போனதால் – மகிந்த என்ற சண்டைக்காரன் பதவிக்கு வருவதே பரவாயில்லை என்று அவர்களை முடிவெடுக்க வைத்தது. ஆனால் மகிந்தவுடன் சர்வதேச சக்திகள் கைகோர்த்துக் கொண்டு இப்படியொரு நெருக்கடிக்குள் தமிழ் மக்களின் போராட்டத்தைத் தள்ளிவிடும் என்ற முற்கணிப்பு சம்பந்தனுக்கோ -வேறெவருக்கமோ ஏற்பட்டிருக்கவில்லை.

    அப்படியான சிந்தனை அவர்களுக்கு ஏற்பட்டிருந்தால் அதுபற்றி அவர்கள் முன்கூட்டியே எச்சரித்திருக்கலாம். அப்படி யாரும் புலிகளுக்கு எச்சரித்தாகவும் தெரியவில்லை. சரி புலிகள் தான் கேட்கவில்லை என்று வைத்துக் கொண்டாலும் – தேர்தல் புறக்கணிப்புக்கு எதிராக – அதன் பாதகங்கள் பற்றி தமிழ் மக்களுக்கு எடுத்துச் சொல்லியிருகலாம். அதுதான் மக்கள் நலனில் அக்கறை கொண்ட உண்மையான அரசியல்வாதியின் பண்பு. இதுதான் நடக்கப் போகிறது என்று தெரிந்திருந்தும் சொல்லாமல் இருந்திருந்தால்- அதைவிட இவர்கள் தமிழினத்துக்குச் செய்திருக்கக் கூடிய பாரிய துரோகம் வேறேதும் இருக்க முடியாது. இப்போது எல்லாம் முடிந்து விட்டது. இன்னொரு வரலாற்றுக் கட்டத்தில் நின்று கொண்டு கடந்த காலம் பற்றிப் பேசுவதால் பயனில்லை. புலிகளின் முடிவு மீது முழுப்பழியையும் சுமத்தி விட்டுத் தமிழ் மக்களின் தலைவராகவோ- ஒரு தீர்க்கதரிசி போலவோ வலம் வர எண்ணுவது தமிழினத்தின் மூத்த அரசியல்வாதியான சம்பந்தனுக்கு அழகில்லை. புலிகளை ஏகபிரதிநிதிகளாக ஏற்றுக் கொண்டதால் தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மக்கள் வாக்களித்திருந்தனர்.

    கடும் நெருக்கடி ஏற்பட்ட போது தம்மை விட்டு ஓடிப் போன கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிலையைப் புரிந்து கொண்டு யாழ்.மாநகரசபைத் தேர்தலிலும்இ வவுனியா நகரசபைத் தேர்தலிலும் மக்கள் கூட்டமைப்பை ஆதரித்தார்கள். ஆனால் இப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் போக்கிலும் பேச்சிலும் தமிழ் மக்கள் நம்பிக்கையிழந்து வருவது உண்மை. இந்தக் கட்டத்தில் ஒரு விடயத்தை சம்பந்தன் உணர்ந்து கொள்வது நல்லது.

    ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேகாவுக்காகவோ மகிந்தவுக்காகவோ ஆதரவு கொடுப்பதற்காகப் புலிகளை விற்று பிழைப்பு நடத்த முற்படுவது பச்சைத் துரோகம். இவர்களில் எவருக்காவது ஆதரவு கொடுப்பதன் மூலம் தமிழ் மக்களின் வாழ்வில் எத்தகைய மாற்றத்தையும் ஏற்படுத்தி விட முடியாது என்பதையும் உணர வேண்டும். இவர்களுக்கு ஆதரவு கொடுப்பதற்காக அணிசேர்ந்து வீணாக கூட்டமைப்புக்கு உள்ள மதிப்பையும்- ஆதரவையும் கெடுத்துக் கொள்ளக் கூடாது. வடக்கிலும்இ கிழக்கிலும் அதிக தமிழ் வாக்காளர்களைக் கொண்டது யாழ்ப்பாண மாவட்டம். யாழ்ப்பாண மாவட்ட மக்களைப் பொறுத்தவரையில் சிங்கள வேட்பாளர்களின் மீது அவர்கள் என்றுமே நம்பிக்கை வைத்ததில்லை.

    இது நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தல்கள் அனைத்திலும் உணர்ந்து கொண்ட உண்மை. இந்தத் தேர்தலில் வாக்களிக்கும் தமிழர்களின் எண்ணிக்கை குறைந்து போனால் அது கூட்டமைப்பின் பலவீனமாகப் பார்க்கப்படுமேயன்றி குறித்த வேட்பாளரின் பலவீனமாகப் பார்க்கப்படாது. இந்த நிலை அடுத்த பொதுத்தேர்தலில் தமிழ்த் தேசிய சார்புடைய நாடாளுமன்ற உறுப்பினர்களின் தெரிவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும் கவனத்தில் கொள்வது நல்லது. சிங்களத் தலைமைகளுக்காக நாம் மோதிக் கொண்டு எமது மண்டைகளை எதற்காக உடைத்துக் கொள்ள வேண்டும் என்று ஒரு கணம் யோசிப்பது நல்லது.

    தொல்காப்பியன்

    வியாழக்கிழமைஇ 31 டிசெம்பர் 2009

    Reply
  • Sampanthan
    Sampanthan

    அரசியல் விமர்சனம்:
    காட்டிக் கொடுக்கப் போகிறதா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு?
    ஜ வெள்ளிக்கிழமை 01 சனவரி 2010 06:16.08 பி.ப | இன்போ தமிழ் ஸ

    “ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உரிய நேரத்தில் சரியான முடிவை எடுக்கும். அந்த முடிவு தமிழ்மக்களின் நலன் கருதியதாகவே இருக்கும்- அதற்கு முரணாக இருக்காது. எனவேஇ இந்த விடயம் குறித்துத் தமிழ்மக்கள் வீணாகக் குழப்பமடையவோ சஞ்சலப்படவோ தேவையில்லை” என்று அறிக்கை வெளியிடும் அளவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தன்னிலை தாழ்ந்து போயிருக்கிறது.

    இப்படியொரு அறிக்கையை கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவரான இரா.சம்பந்தன் வெளியிட வேண்டிய நிலை ஏன் ஏற்பட்டது என்று ஆராய்ந்து பார்த்தல் அவசியம். தமிழ்மக்கள் மத்தியில் கூட்டமைப்பின் மீதிருந்த நம்பிக்கைகள் தளர்ந்து வந்த நிலையிலேயே இப்படியொரு அறிக்கையை வெளியிட்டு சமாளிக்க வேண்டிய நிலைக்குள்ளாகியிருக்கிறார் சம்பந்தன். முன்னதாக சம்பந்தன் அலரி மாளிகைப் பக்கம் சாய்வதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பான பேச்சு இருந்தது. ஆனால் பின்னர் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் அவர் நகர்வுகளை மெற்கொள்வதாக செய்திகள் வெளியாகின. இப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனனா பேச்சுகள் வெற்றிகரமாக நடந்திருப்பதாகவும் அவர்களின் ஆதரவைப் பெறமுடியும் என்றும் நம்பிக்கை வெளியிட்டிருக்கிறார் ரணில் விக்கிரமசிங்க.

    நத்தார் தினத்தன்று சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சரத் பொன்சேகாவுடன் நடத்திய பேச்சுகளின் போது- பல இணக்கப்பாடுகள் எட்டப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. கூட்டமைப்பு இதுவரை அந்தச் செய்திகள் உண்மை என்று ஏற்கவோ- பொய் என்று மறுக்கவோ இல்லை. இந்தப் பேச்சுக்களின் போது சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளிக்கும் அளவுக்கு சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பு முடிவெடுத்து விட்டதாகவும் கூடக் கதைகள் உள்ளன.

    அதற்குப் பிறகும் இருதரப்பையும் இன்னொரு முறை சந்தித்துப் பேசப் போவதாகவும் கூறினர்- சந்திப்புகளும் நடந்தன. ஒரு கட்டத்தில்- “ஜனாதிபதித் தேர்தலில் கூட்டமைப்பு பேரம் பேசும் முயற்சியில் இறங்கவில்லை- அதற்கான வாய்ப்புகளை வீணடித்து விட்டதாக எழுந்த குற்றசாட்டுகளுக்காகவே இந்தப் பேச்சுக்கள் நடப்பது போலவே தெரிகிறது.

    ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட போது அதில் தனித்துப் போட்டியிட்டுத் தமிழரின் அபிலாஷைகளை சர்வதேசத்துக்கு வெளிப்படுத்தும் வாய்ப்பு என ஒன்று இருந்தது. அதை கூட்டமைப்பு உள்ளிட்ட அனைத்துத் தமிழ்க் கட்சிகளுமே தவறவிட்டன. அப்படியொரு வாய்ப்புக்குள் கூட்டமைப்பு செல்லத் துணியாதது அல்லது முடிவு செய்யாதது ஏன் என்ற கேள்வி இருக்கவே செய்கிறது. இந்த வாய்ப்பை மறுப்பதற்காகவே கடைசி வரை இழுத்தடித்து ஒரு முடிவுக்கு வந்தது. தனியாக வேட்பாளரை நிறுத்துவதில்லை என்பதே அது. அத்துடன் தேர்தல் புறக்கணிப்பும் இல்லை என்ற முடிவும் எடுக்கப்பட்டது.

    2005இல் எடுத்த முடிவு தவறென்று இப்போது கூறுவது போல- இதுவும் புத்திசாதுரியமற்ற முடிவு என்பதை கூட்டமைப்பினர் வருங்காலத்தில் உணரக் கூடும். வேட்புமனுத் தாக்கலுக்கு முன்பாகவே பேரப் பேச்சுக்களை வைத்திருக்க வேண்டும். அப்படிச் செய்திருப்பின் இரு பிரதான வேட்பாளர்களுக்கும் ஒரு அச்சஉணர்வு நிச்சயமாக ஏற்பட்டிருக்கும். பேரப் பேச்சுக்கள் வேட்புமனுக் காலத்துக்குள் முடிவு பெறவில்லையாயின் ஒரு வேட்புமனுவை தாக்கல் செய்து வைத்துக் கொண்டு பேசியிருக்கலாம். எந்த வேட்பாளராவது பொருத்தமான -இணக்கப்பாட்டுக்கு வந்தால் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவிப்போம் என்று பேரம் பேசியிருக்கலாம். இதைச் செய்யாமல் போனதால் தான் சுயேட்சையாக சிவாஜிங்கம் இறங்க நேரிட்டது. (சிவாஜிலிங்கத்தின் நிலைப்பாட்டை நியாயப்படுத்துவது இந்தக் கட்டுரையின் நோக்கமல்ல.)

    கூட்டமைப்பில் ஏற்பட்ட முதல் பிளவு அது என்பதும்- அதற்கு சரியான சமயத்தில் சரியான முடிவை எடுக்கத் தவறியதே காரணம் என்பதையும் ஏற்றேயாக வேண்டும். கூட்டமைப்புக்குள் பிளவு இருப்பது வேட்புமனுத் தாக்கலின் போதே உறுதியானது. அந்தக் கட்டத்திலேயே பிரதான வேட்பாளர்கள் இருவருடனான பேரம் பேசுதலில்- கூட்டமைப்பின் தரம் தாழ்ந்து போனது உண்மை. இப்போது கூட்டமைப்பு சிவாஜிலிங்கத்தை ஆதரிக்கப் போவதில்லை பொது வேட்பாளரையும் நிறுத்த முடியாது- தேர்தல் புறக்கணிப்பையும் மேற்கொள்ளாது என்பது இரு பிரதான வேட்பாளர்களுக்கும் நன்றாகத் தெரிந்து விட்டது. ஏதாவது ஒரு அணிக்குத் தான் அவர்கள் எப்படியும் வரவேண்டும் என்ற அலட்சிய மனோபாவம் இரு வேட்பாளர்களுக்கும் ஏற்பட்டிருப்பதை ஏற்றேயாக வேண்டும். ஆனாலும் அவர்கள் இருவரும் கூட்டமைப்பின் ஆதரவைப் பெற அதிகபட்சமாக முனைவார்கள். ஆனால் அது அவர்களின் நலன் சார்ந்த வகையிலேயே அணுகப்படுமே தவிர தமிழரின் நலன்சார்ந்த அளவுக்குப் பலம் வாய்ந்தாக இருக்க முடியாது.

    இதை இப்போது பேரம் பேசச் செல்லும் இரா.சம்பந்தனுக்கும் கூட்டமைப்பின் ஏனைய தலைவர்களுக்கும் நன்றாக விளங்கியிருக்கும். சரத் பொன்சேகாவுடனான பேச்சுக்களின் போது உள்நாட்டில் தயாராகும் தீர்வுக்கு இணங்கியிருப்பது போல பேச்சுக்கள் அடிபடுகின்றன. இதுபற்றி வெளியான பத்திரிகைச் செய்திகளை கூட்டமைப்பு இன்னமும் மறுக்கவில்லை என்பதால் அது உறுதியாகவே இருக்கலாம்.

    உள்நாட்டுக்குள் தயாராகும் தீர்வு என்பது தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை குழி தோண்டிப் புதைக்கும் சதி என்பதை கூட்டமைப்பு உணராது போனதேன் என்று தான் புரியவில்லை..

    சர்வதேசத் தலையீடுகள் இல்லாமல் உள்நாட்டுக்குள் அதாவது எமக்குள் பேசித் தீர்த்துக் கொள்வோம் என்ற இந்த முடிவு தமிழ் மக்களின் தலைவிதியையே தலைகீழாகப் புரட்டி விடப் போகிறது. தமிழ் மக்களின் போராட்டத்தை சர்வதேச மயப்படுத்தி- சர்வதேச ஆதரவுடன் உரிமைகளை வென்றெடுப்பதற்காக நடத்தப்பட்ட போராட்டங்கள்- உயிர்க்கொடைகள் எல்லாதவற்றையும் ஒரே கணத்தில் கேவலப்படுத்தப் போகும் வரலாற்றுத் துரோகம் இது.

    எமக்கு நியாயமான உரிமைகள் கிடைக்க சர்வதேசம் வழி செய்யவில்லை- ஆனால் எமது நியாயமான உரிமைகளை சர்வதேசம் புரிந்து கொண்டிருக்கிறது. அதற்காக தமிழினம் கொடுத்த விலை- செய்த தியாகங்கள் கொஞ்சநஞ்சமல்ல. சர்வதேசத்தின் பார்வை எம் மீது திரும்பியிருப்பதால் தான் சிங்கள அரசு கொஞ்சமேனும் பயப்படுகிறது. இதைப் புரிந்து கொள்ளாமல் சர்வதேசத்தைத் தூக்கியெறிந்து விட்டு- உள்நாட்டுக்குள் எமது பிரச்சினையைத் தீர்ப்போம் என்ற ஒரு முடிவை கூட்டமைப்பு எடுக்குமேயானால் அதற்குப் பிறகு எமக்காகக் குரல் கொடுக்க எந்த நாடும் வராது.
    அப்படியொரு நிலையை ஏற்படுத்துவதே சிங்களப் பேரினவாதிகளின் நீண்டகாலக் கனவு. தம்பர அமிலதேரர் சரத் பொன்சேகாவுக்கு மிகவும் நெருக்கமான ஒருவர். அவர் கைது செய்யப்படுவதற்கு முன்னர் ஒரு பேட்டியில்- சரத்பொன்சேகா ஆட்சிக்கு வந்ததும் சர்வதேச தலையீடுகள் முற்றாக தடுக்கப்பட்டு விடும் என்று கூறியிருந்தார்.

    அவர் இந்த விவகாரத்தை மனதில் வைத்துக் கொண்டே அப்படிக் கூறியிருந்தார். வெளிநாடுகள் தமிழருக்காக குரல் கொடுப்பதை- அவர்களின் உரிமைகளை உறுதிப்படுத்தக் கோருவதை சரத் பொன்சேகா போன்ற சிங்களத் தேசியவாதிகளும் சரி- ஜேவிபி போன்ற சக்திகளும் சரி விரும்பவில்லை. அதற்காகவே தமக்கு வசதியான ஒருவரை ஆட்சியில் ஏற்ற முனைகின்றன.

    இப்படியான சூழ்ச்சிக்குள் தமிழினத்தைக் கொண்டு போய் நிறுத்துவதற்கு கூட்டமைப்பு முடிவு செய்தால் அது மிகப் பெரிய பேரழிவுகளுக்குள்ளேயே கொண்டு செல்லும். சில வாரங்களுக்கும் முன்னர் சர்வதேசத்தின் உறுதிப்பாட்டைப் பெற்றுக் கொண்டு ஏதாவது ஒரு வேட்பாளரை ஆதரிக்கலாம் என்பது போல கூட்டமைப்பினர் கூறி வந்தனர். ஆனால் இப்போது அந்த முடிவைக் கைவிட்டு- எமக்குள்ளேயே பேசித் தீர்க்கலாம் என்று முடிவுக்கு வரும் நிலையில் இருக்கிறது.

    இதற்காக அந்தக் காலத்தில் இருந்து இந்தக்காலம் வரைக்கும் சிங்க அரசுகள் குப்பையில் போட்ட திட்டங்களையெல்லாம் கிளறி எடுத்து பத்திரப்படுத்த ஆரம்பித்துள்ளது கூட்டமைப்பு. கூட்டமைப்பு தனக்கென ஒரு தீர்வுத்திட்டத்தைத் தயாரித்திருப்பதாகக் கூறியதே அதை ஏன் முன்னிறுத்திப் பேரம் பேசமுனையவில்லை?

    அந்தத் தீர்வுத்திட்டம் தயாரிக்கப்பட்ட போது இருந்த கூட்டமைப்பின் நிலைப்பாட்டுக்கும் இப்போதைய நிலைப்பாடுக்கும் இடையில் மாற்றங்கள் வந்து விட்டது தான் அதற்குக் காரணமா?

    உள்நாட்டுக்குள் தீர்வு காண்பதற்காக மேற்கொள்ளப்பட்ட எத்தனை சமாதான முயற்சிகளைச் சிங்களப் பேரினவாதிகள் சிதைத்து விட்டார்கள்?

    இதையும் அப்படிச் செய்யமாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம். சமாதானத்தின் பெயராலும்- உடன்பாடுகளின் பெயராலும் தமிழினம் பலவீனப்படுத்தப்பட்டது தானே வரலாறு. இது கூட்டமைப்புக்கு மறந்து விட்டதா?

    சரத் பொன்சேகாவுக்கும் ஒரு சந்தர்ப்பம் கொடுத்துப் பார்க்கலாம் என்ற கோதாவில் இப்படி முடிவெடுப்பதானால்- மகிந்தவுக்கு இன்னொரு சந்தர்ப்பம் கொடுங்கள் என்று கெஞ்சும் டக்ளஸுக்கும் கூட்டமைப்புக்கும் என்ன வேறுபாடு?

    சரத் பொன்சேகா பதவிக்கு வந்த பிறகு எதையும செய்ய முடியாது என்று கைவிரித்த பிறகு இந்தியாவிடமும் அமெரிக்காவிடமும் ஓடியோடிப் புலம்பப் போகிறதா கூட்டமைப்பு?
    எமது தலைவிதியை நாமே நிர்ணயிப்போம் என்று தொடங்கிய ஆயுதப்போராட்டம் சர்வதேச அரசியல் சூழலுக்கேற்ப அதன் மாற்றங்களைச் சந்தித்தது உண்மை. ஆனால் இப்போது நாம் விரும்பியோ விரும்பாமலோ சர்வதேசத் தலையீடு தான் எமது பலமாக மாறியுள்ளது.

    காரணம் நாம் தங்கியிருந்த ஆயுதபலம் இப்போது எம்மிடத்தில் இல்லை. இந்தநிலையில் சர்வதேசத் தலையீட்டைப் புறக்கணித்து ஒரு தீர்வுத் திட்டத்;துக்குள் செல்ல முனைவது- பேச முனைவது போன்ற முட்டாள்தனம் வேறேதும் இருக்க முடியாது. சர்வதேசத் தலையீடுகளில்; உருவான போர்நிறுத்தங்கள்- சமாதான உடன்பாடுகளையே சிங்களப் பேரினவாதம் எப்படிக் கையாண்டது எப்படி என்பதை கூட்டமைப்புக்குத் தெரியாமல் போனதேன்?

    சரத் பொன்சேகாவுக்கோ மகிந்தவுக்கோ ஆதரவு வழங்குவது பற்றிய எந்த முடிவையும் எடு;ப்பதற்கு முன்னதாக- தனது பேரம் பேசும் திறனை கூட்டமைப்பு வெளிப்படுதியிருந்தால் அது புத்திசாலித்தனமானது. பேரம் பேசுவதற்கான பாதைகளை அடைத்து வைத்துக் கொண்டு இப்போது அவர்கள் நடத்திக் கொண்டிருப்பது வெறும் கேலிக்கூத்துத் தான்.

    கூட்டமைப்பு தன்னிலை தாழ்ந்து எந்தவொரு சிங்களப் பேரினவாத சக்திக்காவது ஆதரவு வழங்குவதற்கு எடுக்கக் கூடிய முடிவும்- தமிழரின் அரசியல் அபிலாஷைகளைக் குழிதோண்டிப் புதைக்கவே உதவப் போகிறது. ஆட்சி மாற்றத்துக்காக சரத் பொன்சேகாவை ஆதரிப்பதற்குத் தமிழருக்கு என்ன தேவை?

    டக்ளஸ் தேவானந்தாவையும் பிள்ளையானையும் கருணாவையும் ஓரம் கட்டுவதற்கு இதுவே ஒரே வழியென்கிறது ஒரு நியாயம். அவர்கள் எப்போதும் ஆட்சி செய்யும் பக்கமே இருப்பார்கள். சரத் பொன்சேகா வந்து விட்டால்; அவருடன் ஒட்டிக் கொள்வார்கள். கருணாவைக் காப்பாற்றியதே ஐதேக தான். இப்போது அவர் மகிந்தவுடன்- நாளை அவர் சரத் பொன்சேகாவுடன் இருப்பார். டக்ளஸ் இரு பக்கத்திலும் அமைச்சராக இருந்தை யாரும் மறந்து விடக் கூடாது.

    ஒட்டுண்ணி அரசியல் நடத்துபவர்களுக்குத் தன்மானம் இருக்காது காற்றடிக்கும் திசைக்கு அவர்கள் சாய்வார்கள். இவர்களைத் தோற்படிப்பது தான் தமிழ்த் தேசிய அரசியல் போராட்டமா? தமிழரின் அரசியல் போராட்டத்தில் நாம் எமது அபிலாசைகளைப் பெறுவதே எமது குறி. அதைக் கூட்டமைப்பு நினைவில் வைக்க வேண்டும்.

    அவர்கள் அந்தப் பக்கம் இருப்பதால் நாம் இந்தப் பக்கம் எனறு முடிவு செய்தால் அதுபோல முட்டாள்தனம் வேறேதும் இருக்க முடியாது. முப்பதாயிரம் மாவீரர்களின் உயிர்களினாலும் இலட்சக்கணக்கான தமிழரின் குருதியினாலும் தான் எமது போராட்டம் இன்று சர்வதேச மயப்பட்டு நிற்கிறது.

    ஒப்பற்ற விலைகளைக் கொடுத்த எமது உரிமைப் போராட்டத்தை ஒரு சிங்களப் பேரினவாதியை ஆட்சியில் ஏற்றுவதற்காக கூட்டமைப்பு காட்டிக் கொடுக்கப் போகிறதா?

    Reply
  • kasi
    kasi

    பல்லியின் வோட்டுமட்டுமல்ல யாழப்பாண்தில் பலரின் வோட்டுகள் சரத்துக்குத்தான் விழஇருக்கின்றன. இன்று காலை தொலைபேசியில் பலருடன் உரையாடக்கிடைத்த செய்தியில் அதிர்ந்துபோனேன். டகளசிடம் சனம் உதவிக்கு அடிபடுவதும் உண்மைதான். ஆனால் வாக்கு சரத்துக்கே! அடிபட்ட புலியாய் சனம் தங்கள் எதிர்ப்பைக் காட்டத் துடிக்கிறார்கள். அலசிப்பார்ப்பதற்கு யாரும் தயாராய் இல்லை. பல்லி நீங்கள் பயப்படத் தெவையில்லை. குறைந்த வித்தியாசத்திலல்ல. மகிந்த வெல்லவே மாட்டார்.

    Reply
  • DEMOCRACY
    DEMOCRACY

    /2005ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் குறித்து அவர்(இரா.சம்பந்தன்) வெளியிட்டிருக்கின்ற கருத்து மிகவும் முக்கியமானது. இந்தத் தேர்தலைப் புறக்கணிக்க தமிழ்மக்களின் சார்பில் புலிகள் எடுத்த முடிவு தவறானது என்றும்-; அதனால் தான் இத்தனை அழிவுகள் ஏற்பட்டதாகவும் புலம்பியிருக்கிறார். /—நவம்பர் 2009ல், இதே வார்த்தையை தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதியும் கூறியுள்ளார்!. சிங்களவர்கள் யாரும் தமிழர்களின் கருத்தை பற்றி கண்டு கொள்வதில்லை. அவர்கள் தங்கள் பாட்டுக்கு,தங்கள் வேட்பாளர்களை கவனித்துக் கொண்டிருக்கின்றனர்!. தமிழர்கள்தான், கலைஞரைப் போன்ற செந்தமிழரையும் சேர்த்து, விணாக அந்த ஹீரோக்க்களைப்? பற்றி “பொறாமையால்” அரற்றிக் கொண்டிருக்கிறார்கள்!./

    மூன்று தசாப்தங்களாகப் புலிகள் போரை எதிர்கொண்டு பழகிப் போனதால் – மகிந்த என்ற சண்டைக்காரன் பதவிக்கு வருவதே பரவாயில்லை என்று அவர்களை முடிவெடுக்க வைத்தது. ஆனால் மகிந்தவுடன் சர்வதேச சக்திகள் கைகோர்த்துக் கொண்டு இப்படியொரு நெருக்கடிக்குள் தமிழ் மக்களின் போராட்டத்தைத் தள்ளிவிடும் என்ற முற்கணிப்பு சம்பந்தனுக்கோ -வேறெவருக்கமோ ஏற்பட்டிருக்கவில்லை. அப்படியான சிந்தனை அவர்களுக்கு ஏற்பட்டிருந்தால் அதுபற்றி அவர்கள் முன்கூட்டியே எச்சரித்திருக்கலாம். அப்படி யாரும் புலிகளுக்கு எச்சரித்தாகவும் தெரியவில்லை./-

    — இதற்கு என்ன காரணம்?. ஏற்கனவே “தலித்தியம் & பெண்ணியம்” பற்றி அரசு சாரா நிறுவனங்களுடன் சிலர்(நிர்மலா,ராகவன்)ஒரு கருத்தியலை கொண்டுவந்ததற்கு (புலிகளுக்கு கூட இருந்தே குழி பறித்தபடி- சம்பந்தர் போல்), எதிராக எச்சரிக்கை செய்தோம்!, அந்த கருத்தியல்தான் இப்போது கார்த்திகேசு சிவத்தம்பி மூலம், “ஜூன்2010, உலக செந்தமிழ் மாநாட்டில்”, “சொகுசு போர்க்கப்பலின்” இஞ்சினாக (இயந்திரமாக)முன் கொணரப்படுகிறது. தமிழர்களின் தியாகத்தால் சர்வதேச அங்கீகாரம் கிடைத்திருக்கிறது என்பதை நான் நம்பமாட்டேன். இதன் மையம் ஆப்கானிஸ்தானில் கால்பதித்திருக்கும் “வல்லரசுகளின் இயந்திரங்களின்” காலில்மாட்டி நசிந்திருப்பது,முதலில்,”குசும்புத்தனமான” தமிழ்த் தலைமைகளின் அரசியல் வியாபாரங்கள்!.இதுவரை வரலாற்று நாயகர்களாக இல்லாமல் “இயங்கியலின் நாயகர்களாக” மிதந்து வாழ்க்கையை அனுபவித்தவர்களுக்கு சாதகமாக,”இயங்கியலின் வருங்காலம்” இருக்கப் போவதில்லை என்பதையே இது சுட்டிக்காட்டுகிறது!.

    Reply
  • மாயா
    மாயா

    இதை படித்து விட்டு சரத் பொண்சேகாவை தமிழர் அதிபராக்கி மகிழட்டும்
    ——————————————————————-
    வடபகுதி மக்களை மிருகங்களைப் போல் வைப்பதே பொன்சேகாவின் விருப்பம் – எஸ்.பி.திஸாநாயக்க

    வட பகுதி தமிழ் மக்களை மிருகங்களைப் போன்று வைத்திருப்பதற்கு விரும்பும் மனப்பான்மை கொண்டவரே சரத் பொன்சேகா என்று எஸ். பி. திஸாநாயக்க நேற்றுத் தெரிவித்தார்.கொழும்பு 7 யிலுள்ள மகாவலி நிலையத்தில் நேற்று பிற்பகல் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஜனாதிபதித் தேர்தல் பிரசார செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

    இச்செய்தியாளர் மாநாட்டில் அவர் மேலும் கூறியதாவது, சரத் பொன்சேகா தனது பதவியிலிருந்து ஓய்வு பெறுவது தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்குக் கடிதமொன்றை எழுதி இருந்தார். அக்கடிதத்தில், வட பகுதியில் மக்களை மீளக்குடியமர்த்தும் போது ஒவ்வொரு கிராமத்திலும் இராணுவ முகாம்களை அமைத்து அப்பிரதேசங்களின் பாதுகாப்பைப் பலப்படுத்த வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

    இது தொடர்பாக நான் ஒரு நாள் சரத் பொன்சேகாவிடம் வினவினேன். அப்போது பொன்சேகா “இல்லாவிட்டால் காட்டில் தலைமறைவாகியுள்ள புலிகள் மீண்டும் ஒன்றாகி பயங்கரவாத செயற்பாடு களில் ஈடுபடலாம். அவ்வாறான நிலைமையைத் தடுக்க வேண்டும்” என்றார். இது அவரது மனப்பான்மையை வெளிப்படுத்துகின்றது. இராணுவ முகாம்களை அமைத்து வட பகுதி தமிழ் மக்களை மிருகங்களைப் போன்று நடத்தவே அவர் விரும்புகின்றார். அவர் ஒரு குரூரமான இராணுவத் தளபதி. அவருக்கு ஜனநாயகம் குறித்த அறிவு கிடையாது.

    புலிப் பயங்கரவாதம் ஒழித்துக் கட்டப்ப ட்டதால் பெரிதும் நன்மை பெற்றிருப்பது வடபகுதி தமிழ் மக்கள்தான். அவர்களைப் புலிகள் மிகவும் துன்புறுத்தினார்கள். கொடுமைப்படுத்தினார்கள்.

    இப்போதுதான் தமிழ் மக்கள் நிம்மதியாக சுதந்திரமாக மூச்சுவிடும் நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. இது மறைக்க முடியாத உண்மையாகும். தமிழ் மக்களுக்கு அரசியல் ரீதியான பிரச்சினை இருப்பதை கூட சரத் பொன்சேகா அறியமாட்டார். ஆனால் எமது ஜனாதிபதி தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதில் உறுதியாக உள்ளார். அவருடன் எவரும் அளவலாவலாம். அவர் மக்களின் தேவை களையும், உணர்வுகளையும் நன்கறிந்தவர். அவர் விவசாயி ஒருவரின் மகனே.

    இந்த ஜனாதிபதித் தேர்தலில் எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆறு லட்சம் மேலதிக வாக்குகளால் வெற்றி பெறுவார். நான் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தி நிபந்தனைகள் விதித்து மீண்டும் கட்சியில் இணையவில்லை. மாறாக நான் வளர்ந்த, எனக்கு நன்கு பரீட்சயமான இடத்திற்கு திரும்பி வந்திருக்கின்றேன் அவ்வளவுதான்.

    ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சிறந்த தலைமைத்துவத்தின் ஊடாக பயங்கரவாதம் ஒழித்துக் கட்டப்பட்டதுடன் கடந்த நான்கு வருட காலப்பகுதியில் இந்நாட்டின் தனிநபர் வருமானம் 2240 அமெரிக்க டொலர்கள் வரை அதிகரித்திருக்கின்றது. ஆனால் 2005 ஆம் ஆண்டில் தலா வருமானம் ஆயிரம் டொலர்களாகவே இருந்தது என்றார். இச்செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர்கள் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, இந்திக பண்டாரநாயக்க ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.

    Reply
  • BC
    BC

    இடைக்கிடை கொஞ்சம் நகச்சுவையும் ரசியுங்கோ.

    கடவுளால்தான் எம்மைக் காப்பாற்ற முடியும் என்று கூறினார் செல்வநாயகம். அந்தக் கடவுளாக வந்தவர்தான் நமது தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள்.
    -நாடுகடந்த தமிழீழ அரசின் கனடிய பிரிவின் தலைவர் ராம் சிவலிங்கம்

    Reply
  • Ajith
    Ajith

    President Mr. Rajapakse’s some achievements:

    1. killed Lasantha (Sunday leader editer, a close friend)
    2. Sent Tissnayagam for 20 years of hard prison (his human right partner)
    3. Killed MP Raviraj a human rights activist.
    4. Killed MP G.G. Ponnampalam
    5. Attacked Rupakvahini using Mervin Silva.

    Reply
  • பல்லி
    பல்லி

    //இந்திய அரசு ஒருபோதும் சரத் வருவதை விரும்ப மாட்டாது. காரணம் சரத் எப்போதும் தனது சீன ஆதரவு முகத்தையே காட்டி வருபவர். //

    பார்த்திபன் இதையே நான் எனது பின்னோட்டத்தில் எழுத நினைத்தேன்; ஆனால் நீங்கள் எல்லாம் அரை கிறுக்கனாய் பார்க்கும் பல்லியை முழு கிறுக்கனாய் பார்த்துவிட கூடாது என்பதால் தவிர்த்தேன், சீனாவின் தொடர்பை இலங்கையுடன் நிறுத்த வேண்டுமாயின் சரத் இந்தியாவுக்கு தேவை, இது ஓர் அளவு இயக்கத்தில் இருந்த நபர்களுக்கு புரியும்; இந்தியா இலங்கையுடன் வைத்திருப்பது நட்பு, ஆனால் சீனா இலங்கயுடன் வைத்திருப்பது ராணுவ நட்பு; எந்த காலத்திலும் சரத்துக்கும் சீன தளபதிகளுக்கும் உள்ள நட்பு தொடராமல் இருக்க சரத்தின் கடிவாளம் இந்த்கியாவிடம் இருக்கவே இந்தியா விரும்பும்; இதுக்கு சரத் ஜனாதிபதியாகத்தான் வேண்டும் என்பது பொருள் அல்ல, ஆனால் மிக உயர்ந்த பதவிக்கு சரத்தை தனது பாதுக்காப்புக்காய் நியமிக்க இந்தியா தாயர் என்னும் மாயையை சரத்துக்கு காட்டவே இந்தியா முற்படுகிறது; அதோடு இந்தியாவின் சொல் கேட்டு சரத் நடப்பார் என்பதுதான் இந்திய உளவு துறையின் நிலையும், ஆனால் மகிந்தா அப்படி இல்லை ஓபாமாவுக்கே ஓ போடகூடியவர் என்பது இன்று உலகம் அறிந்த உன்மை; எது எப்படியோ எமது நாட்டு அரசியல் எமது நாட்டு சாணக்கியர்களிடம் இல்லை என்பது மட்டும் நிதர்சன உன்மை;

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    அஜித் அவர்களே முதலில் வரலாற்றை சரியாகத் தெரிந்து கொண்டு எழுதலாமே. ஜி.ஜி. பொன்னம்பலம் நோய்வாய்ப்பட்டே இறந்தார். அவரது மகன் குமார் பொன்னம்பலம் தான் கொலை செய்யப்பட்டார். அதுகூட சந்திரிகாவின் ஆட்சியில் தான் நடந்தது.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    அஜித்,
    ஜீ.ஜீ.பொன்னம்பலத்தைக் கொன்றவர் சந்திரிக்கா. அதை அம்பலப்படுத்தியவர் லசந்தா விக்கிரமதுங்கா. அன்று அக்கொலைச்செயலை வைத்து தனக்குச் சாதகமாக காய்நகர்த்தி ஆட்சிபீடம் ஏறியவர் மஹிந்தா.

    மாயா,
    எஸ்.பி.திசநாயகா மட்டுமல்ல தமிழர் எல்லோர்க்கும் தெரியும் யார் சரத், யார் மஹிந்தா என்று. இந்த எஸ்.பி.திசநாயக்க்கா நேரத்துக்கு ஏற்றவாறு கதை விட்டு கட்சிதாவி அலுவல் பார்ப்பவர் என்று எல்லோர்க்கும் தெரியும்.
    சரத் மிருகம் எண்டால் அந்த மிருக்கக்குணத்தை ஆதரிச்சு உலக அரங்கில் ஆத்ரவு திரட்டி விளையாடினது யார்? ஒரு ராணுவத்தளபதியால் முடியுமா? இதில் மோசம் என்ன என்றால் ஜீ.எஸ்.பி வாபசுக்கு எதிராக ஜி.எல்.பீரீஸ் ஐரோப்பிய யூனினுக்கு எதிராக வழக்கு போடப்போகிறாராம்!

    நான் இங்கு ஒருபோதும் சரத்தை ஆதரிக்கச் சொல்ல்லி நேரடியாகவோ மறைமுகமாகவோ எழுதுபவனல்ல. எம்மைப் பொறுத்தவரை இரண்டுமே ஒரே குட்டை மட்டைகள்தான்.

    நானும் காசிபோல யாழ்ப்பாணத்துக்கு கோல் அடிச்சன். பலர் டக்ளசை கவிழ்க்க ரெடிபண்ணுகினம். டக்ளஸ் மட்டுமல்ல புளொட், பிள்ளையான், சிறிரெலோ (??) ஈ.பி.ஆர்.எல் எஃப் எல்லாம் சரத் வந்தால் காலி என கதை அடிபடுகுது. அதுதான் புலம்பெயர் இயக்கக்காரர், மாற்றுக்கருத்து கோஷ்டி மஹிந்தாவுக்கு ஆதரவு போல கிடக்கு.

    Reply
  • பல்லி
    பல்லி

    //பல்லி நீங்கள் பயப்படத் தெவையில்லை//
    திரும்பவும் சொல்லுகிறேன் எனது வோட்டு சரத்துக்குதான்; ஆனால் அவர் வெற்றி பெற வேண்டும் எனவோ அல்லது அவரை யாரும் ஆதரியுங்கள் எனவோ பல்லி எங்கேயும் சொல்லவில்லை, அரிசந்திரன் என்பவர் பலகாலத்துக்கு முன்பு ஒரு பின்னோட்டத்தில் சொன்னார், இந்தியாவின் சாணக்கியதனமே இயக்க பிளவுகள் என; அது இப்போது எனது சிந்தனையில் உன்மையாக இருக்குமோ என நினைக்கிறேன், இதை ஏன் இங்கே சொல்லுகிறேன் எனில் எந்த ஒரு அரசியலாக இருந்தாலும் சரி அமைப்புகளானாலும் சரி சரியான ஒரு எதிர் கட்சி இல்லாவிட்டால் அயல் நாடோ அல்லது வேறு ஒரு சத்தியே அவைகளை ஆட்டுவிக்கும்: அன்று இயக்கங்கள், இன்று அரச தலைவர்கள்? அதனால் மிக சரியான எதிர் கட்சியாய் இருக்கவே எனது வோட்டு சரத்துக்கு; சிலவேளை (சாத்தியம் குறைவு) ஜனாதிபதியாகிவிட்டால் மகிந்தா சரியானா எதிர்கட்ச்சியாய் இருப்பார் என்பது நிஜம்தானே, புலி வளர்ப்பதில் விட்ட தவறை சிங்கம் வளர்ப்பதில் பல்லி விட தயாரில்லை; எனது குடும்பத்தாரை கூட இவருக்குதான் வோட்டு போடுங்கள் என சொல்ல மாட்டேன்; வோட்டு என்பது தனிமனித உரிமை;

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    //கடவுளால்தான் எம்மைக் காப்பாற்ற முடியும் என்று கூறினார் செல்வநாயகம். அந்தக் கடவுளாக வந்தவர்தான் நமது தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள். -நாடுகடந்த தமிழீழ அரசின் கனடிய பிரிவின் தலைவர் ராம் சிவலிங்கம் //

    BC, பொதுவாகவே நமது பண்பாட்டில் இறந்தவர்களை கடவுளாக நினைப்பது இயல்பு தானே?? ஒரு வேளை ராம் சிவலிங்கமும் அதே நினைப்பில் சொன்னாரோ??

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    // அன்று அக்கொலைச்செயலை வைத்து தனக்குச் சாதகமாக காய் நகர்த்தி ஆட்சிபீடம் ஏறியவர் மஹிந்தா.- சாந்தன் //

    நல்லாய் காமெடி எல்லாம் பண்ணுவீங்க போல?? அப்ப மகிந்தவுக்கு வாக்களித்த சிங்கள மக்களெல்லாம், குமார் பொன்னம்பலத்தின் கொலையால் ஆத்திரமுற்றுத் தான் வாக்களித்திருக்கினம் போல…..

    Reply
  • santhanam
    santhanam

    மகிதநதாவின் கூட்டு அமெரிக்காவிற்கோ இந்தியாவிற்கோ சரிப்பட்டு வரப்போவதில்லை ஒன்றை பல்லி விளங்கவேண்டும் இந்த யுத்தம் இந்தியாவின் தலைமையில் உலக ஒழுங்கில் நடத்தபட்ட யுத்தம் இதில் சரத் ஓரு கீறோவாக யுத்தம் முடியும் வரை சர்வதேசத்தாலும் இலங்கை அரசாலும் காட்டபட்ட நபர் இலங்கையில் முகலாவது நபர் இராணுவத்தில்59வயது வரை தளபதியாக இருந்தது இவரை மகிந்தாவிடம் இருந்து பிரித்ததும் சர்வதேசம் போட்டியிடவைத்ததும் சர்வதேசம் தான் 30 வருடம் பிரபாகரனுடன் போரடியதளபதியும் சகல அரசியல் சூழ்ச்சி தெரிந்த தளபதியும் இவரால் மட்டுதான் தமிழனின் தலைவிதியை தீர்மானிக்கமுடியும்?

    Reply
  • matharasy
    matharasy

    http://www.island.lk/2010/01/02/news11.html
    Jaffna students against Presidential poll boycott

    COLOMBO: The Jaffna University Students’ Union has appealed to the Tamil voters in north-east Sri Lanka not to boycott the Presidential election but to vote for either of the two main candidates.

    In a statement published in Tamil media, union presiddent S. Srirangan, also said that it would not be wise to support any Tamil candidate who had no chance of winning.

    Srirangan mentioned no names, but he was referring to incumbent President Mahinda Rajapaksa, the Opposition candidate Sarath Fonseka and the dissident Tamil National Alliance MP, M. K. Sivajilingam, who is contesting as an independent.

    The student leader said that in the post-LTTEperiod, it was important to take practical decisions.

    Referring to the Tamil diaspora’s wish that the Tamils boycott the election as they had done in 2005 (at the insistence of the LTTE), he said that the Diaspora did not know the conditions existing in Sri Lanka.

    Tamils would have to be self reliant, he said, without counting on outsiders like the world powers (the Western countries) or the regional power (India), Srirangan said.

    Those powers had only paid lip service to the Tamils’ cause. They had ultimately gone by their economic and strategic interests and sided with one or the other of the Sri Lankan mainstream political parties.

    The Tamils should stand united and use their united strength to bargain for a better deal, Srirangan was quoted as saying. (expressbuzz.com)

    Reply
  • matharasy
    matharasy

    Referring to the Tamil diaspora’s wish that the Tamils boycott the election as they had done in 2005 (at the insistence of the LTTE), he said that the Diaspora did not know the conditions existing in Sri Lanka.

    Reply
  • Suban
    Suban

    இன்னம் சில ஆண்டுகளுக்குள் புலம்பெயர்நாடுகளில் பிராபாகரனுக்கு கோயில் கட்டப்படலாம். அது சரணாலயம் என்றோ அல்ல புனித ஆச்சிரமம் என்றோ அமையலாம். புலம்பெயர் புலி வர்த்தகர்களை யாரும் குறைத்து மதிப்பிடமுடியாது.

    Reply
  • kasi
    kasi

    ‘/திரும்பவும் சொல்லுகிறேன் எனது வோட்டு சரத்துக்குதான்;/பல்லி

    அட கிறுக்குச்சிறுக்கி கிறுக்குச்சிறுக்கி. அடம்ப்பிடிக்கிறாரே ஒருவேள சும்மா உசுப்பேத்துறாரோ!.

    Reply
  • மாயா
    மாயா

    //புலம்பெயர் இயக்கக்காரர், மாற்றுக்கருத்து கோஷ்டி மஹிந்தாவுக்கு ஆதரவு போல கிடக்கு.- சாந்தன்//

    ஐயோ சாந்தன் , இப்ப புலிகள்தான் புலத்தில் மாற்றுக் கருத்துக்காரர்கள். எங்கள் கருத்துகள் இப்பவும் அதே கருத்துதான். மஹிந்தாவை யதார்த்தவாதி என தன் வாயாலேயே புகழ்ந்தவர் பிரபாகரன். அதுவும் தனது மாவீரர் நாள் உரையில். மஹிந்தாவை ஜனாதிபதியாக்கியதும் பிரபாகரன்தான். பிரபாகரனது விருப்பத்தை நாங்கள் தொடர்ந்து காப்பாற்றி தமிழர்களை இத்தோடாவது வாழ வழிசெய்ய முயல்கிறோம். மகிந்தவை விட ஏதாவது செய்ய யாராவது வந்தால் அவரை ஆதரிப்போம். அம்புட்டுதான்.

    புலிகள் எப்போதுமே சரியான முடிவுகளை எடுத்தவர்கள் இல்லை. அவர்களது வால்களும் அதையேதான் செய்கின்றன. புலிகளுக்கும் , கூட்டணி அரசியல்வாதிகளுக்கும் தமது இருப்பும் உழைப்பும்தான் முக்கியமே தவிர , மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் எனும் எண்ணமே இல்லை.

    எங்களுக்கு சீனா வந்தாலேன்ன , இந்தியா வந்தாலென்ன , ஐநா வந்தாலென்ன , அமெரிக்கா வந்தாலென்ன , சிறீலங்காவில் வாழும் மக்கள் அமைதியாக உறங்க கிடைத்தால் அதுவே இப்போதைக்கு போதும். உயிர்..உயிர்…உயிர். அதுக்கு மேல ஒன்றும் வாணாம்.

    Reply
  • பல்லி
    பல்லி

    சந்தானம் உங்கள் கருத்து உன்மைதான், ஆனால் அவரால்தான் தமிழரின் தலைவிதியை தீர்மானிக்க முடியும் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை, ஆனால் பேசலாம் மகிந்தாவை விட அவருடன் பேசலாம் என நினைக்கிறேன், இவருக்கு ராணுவ சூழ்ச்சி தெரியுமே தவிர அரசியல் சூழ்ச்சி வராது ஆக இவர் விரைவில் மகிந்தாபோல் சர்வதேசத்தை பகைக்க மாட்டார் என நினைக்கிறேன்;

    பிரபாகரனிடம் இருந்து கருனா வெளியேற்றம்தான் இன்று அரசின் வெற்றிக்கும் புலியில்லா தமிழர்க்கும் கிடைத்த சந்தர்ப்பம், அதுபோல் அடுத்த கட்ட அரசிடம் இருந்து தமிழர் வெற்றி பெறவோ அல்லது தமது பூர்த்திகளை நிவர்த்தி செய்ய மகிந்தா சரத் பிரிவு ஒரு பலமே(தமிழர்க்கு) எது எப்படியோ நாம் இந்த இடத்தை கவனமாக சர்வதேச உதவிகளுடன் நகர்த்துவோமேயானால் கண்டிப்பாக எமக்கு ஒரு தீர்வு சரத்தாலோ அல்லது மகிந்தா குடும்பத்தாலோ கிடைக்கும் என்பது காலத்தின் தீர்வே,

    //அட கிறுக்குச்சிறுக்கி கிறுக்குச்சிறுக்கி. அடம்ப்பிடிக்கிறாரே ஒருவேள சும்மா உசுப்பேத்துறாரோ//காசி;
    காசி அண்ணை நீங்கள் கருவாட்டு கடையில் வந்து மீன் கேக்கிறியள்; நாமோ மீன் கடையில் கருவாடு கேக்கிறோம்; கிறுக்குச்சிறுக்கி ஆச்சே ஆகையால் அதே பாணியில் எழுதியுள்ளேன், ஆனாலும் யதார்த்தம்தான் எழுதியுள்ளேன், சிந்தியுங்க தொட்டுக்க ஏதும் வேண்டுமா??

    Reply
  • chandran.raja
    chandran.raja

    ஏன்? இன்னும் சில காலங்களில்.. இது நடந்தேறிக் கொண்டிருக்கிறதே!.
    பிரேம் போட்ட படத்திற்கு கேக் தீத்துகிற காட்சிகளை காணவில்லையா?.
    இதற்கு முதல் தட்டிவான் விமானத்திற்கும் கேக் செய்து வெட்டியிருந்தார்கள். அடுத்தது சிலை கோவில் கட்டுவது பழம் பாக்கு வெற்றிலை அருட்சனை காணிக்கை திருவிழா உபபாரம் அன்பளிப்பு என்று நீண்டுகொண்டே போகும். நீண்டபடிகளை கொண்ட வீடுகளை வாடகைக்கு எடுத்து முடிச்சுகளை தலையில் வைத்து ஐயப்பதரினம் பெறுகிற மாதிரி பிழைப்புக்கு வழிதேடவில்லையா? தமிழன் அதுவும் புலம்பெயர் தமிழனாக இருந்தால் பிழைப்பதற்கு வழி சொல்ல வேண்டுமா? நாளுக்கு பத்து இராணுவமாவது வீழ்ந்து கொண்டிருக்க வேண்டும். அதை தேடித்தந்த தேசியத்தலைவர் இல்லாமல் போய்விட்டார். இல்லாவிட்டால் இவர்களுக்கு பணமுடக்கு வந்திருக்காது. கடைசி நம்பிக்கை சரத்பொன்சேகராவே!. வேலுப்புள்ளை மகன் செய்ததை இவர் சட்டத்தோடை செய்துமுடிப்பார். அப்புறம் என்ன? பத்து கப்பலை சமுத்திரத்திலை ஓடவிட்ட ஈழத்தமிழன் இருபது கப்பலை ஓடவிடுவான். அத்துடன் ஈழத் தமிழரும் காலி. பிறகு தொழிலை மாற்றவேண்டியது தான். புரிந்து கொள்ளக்கூடியதே.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    // இன்னம் சில ஆண்டுகளுக்குள் புலம்பெயர்நாடுகளில் பிராபாகரனுக்கு கோயில் கட்டப்படலாம். – சுபன்//

    நீங்கள் தப்புக் கணக்கு போடுகின்றீர்கள். புலிகளை வைத்து பிழைப்பு நடத்துவோர்களுக்கு பிரபாகரனின் இருப்புத் தான் முக்கியம். அதனால் அவர் வருவார் வருவார் என்று மக்களை ஏமாற்றியே பணம் பண்ண முயற்சிப்பார்கள். அவர் இறப்பை ஒத்துக் கொண்டு கோயில் கட்டினால் அன்றே வருமானத்திற்கு ஆப்பு என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும்……….

    Reply
  • Ajith
    Ajith

    Dear Parhipan, Shanthan,
    Thanks for correcting the fact.

    The matter of the fact is that SLFP which is the party where President Rajapakse has a history of 40 years responsible for the killings. Whether it is Chandrika or Rajapakse they are part of the organisation that was responsible for killings. All the Sinhala parties and leadership including SLFP,UNP,JVP,LSSP,Communist Party are always acted against to rights of the people. In every election they used tamils rights as drum card and played games with tamils. Some of us are very loyal to these sinhala leadership and carry out not only propaganda for them but also carry out assasinations and murders for them. In fact, most of the killings were carried out by loyal tamil groups or indiduals working for them but not by sinhala members of the party. we never realise or understand that sinhala politicians and public are united in one thing that is: they are superior to other communities and they will never work against to their superiority. For example, the so called Marxist and Leninist parties (LSSP,CP,JVP) all turned back their faces when it came to devolving the power to tamil regions or never asked for an impartial inquiry into killings of tamils. There is no national party that is lead by tamil leaders.The weakness of the tamils is that they are not united in anything. A good example is that since the youth movements started in 1972, it divided into 135 groups and fighting each other and fallen into the hands of RAW which manipulated our weakness and took us whichever way they wanted. This still continues and this is what we see in this web forum. I can see how some of us defend Sinhala party’s out of the way because we are anti-LTTE, anti-TNF,ant-TULF. This anti-tamil stand by some of us are personal, and political differences. For a democracy it is important to have a constructive criticism and diversity of opinions but that does not warrant you to join the wrong side of the humanity. For example, you have the right to criticise the wrongs of the LTTE or TNF for you as a tamil but it is not acceptable criticising LTTE for the benefit of sinhala oppression. Did any of the sinhalese ever joined EPDP,TELO,PLOTE,LSSP or CP to demand for an inquiry into the killing of 53 political prisoners by Sinhala rulers. It is simple to balme LTTE for everything because they lost the war. I ask those critise LTTE only, who won the war?

    Reply
  • Sampanthan
    Sampanthan

    The struggle of Tamils will be continued – Sivaji and Bahu in Jaffna

    Addressing voters in Jaffna the Common Left Candidate said that the the Tamil struggle is not over although the LTTE leadership was decimated with the help of India and other foreign forces.Dr. Vickramabahu Karunaratne was touring Jaffna after twenty years. He was accompanied by Tamil Presidential Candidate MK Shivajilingam.Dr. Vickramabahu and MP Shivajilingam were addressing people in Jaffna in Nallur, Achchuveli, Nelliady, Chunnakam and Uduppiddy.
    “We will continue with the Tamil national struggle in the political arena for autonomy and slelf determination,” said Dr. Vickramabahu.He further said that even after the Tamil militancy was defeated in an ocean of blood and tears, the rulers who had a song and dance about it could not live happily.He said that those who crushed the Tamils will have to pay for the blood and tears shed by the Tamils.”The workers struggles that sprang up in the south saying that they cannot bear the burden of the war, forced the government to call an election before time,” said Dr. Vickramabahu.Tamil Presidential Candidate MK Shivajilingam called upon Tamil not to give a single vote for either of the two main candidates who are trying to claim the spoils of the war.He said that they should vote for either him or Dr. Vickramabahu in order to stop getting either the present president or the former army commander getting 50% of votes in the presidential elections.

    Reply
  • DEMOCRACY
    DEMOCRACY

    /கொங்குநாடு தனி மாநிலக் கோரிக்கை வலுக்கும்- பெஸ்ட் ராமசாமி
    ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 3, 2010, 12:48.– கோவை: மத்திய, மாநில அரசுகள் கொங்கு மண்டலத்தைத் தொடர்ந்து புறக்கணித்து வந்தால் தனி மாநிலக் கோரிக்கை மேலும் வலுக்கும் என்று கொங்கு நாடு முன்னேற்றக் கழகத் தலைவர் பெஸ்ட் ராமசாமி கூறியுள்ளார்./– “சொகுசு போர்க்கப்பலுக்கு”,சப்ளை மற்றும் “லாஜிஸ்டிக்” தளமாகவும்,பொருளாதர தளமாகவும் தயார் படுத்துவதற்கான ஏற்ப்பாடுதான்,ஜூன்2010 “உலக செந்தமிழ் மநாடு” கொங்கு நாட்டவர்களால் ஏற்ப்பாடு செய்யப் படுகிறதா?.தமிழ்நாட்டில், நடுத்தர வர்கம்,வட இந்தியாவை விட அதிகம்,வட இந்தியாவில் கடுமையான ஏழைகள் உள்ளனர்,ஆனால் வட இந்தியாவில் உள்ள பணக்காரர்கள் மாதிரி ராஜ போக வாழ்க்கை உள்ளவர்கள் தமிழகத்தில் கிடையாது- கலைஞர் கருணாநிதி குடும்பத்தை தவிர- அதுவும் மக்களின் அப்பாவிதனத்தால்(தமிழ்ப்பற்று?).தமிழகத்தை சேர்ந்தவர்கள் இந்த வட இந்தியர்களை விட,குறைந்த சம்பளத்தில் வேலை செய்ய விருப்பம் இல்லாததால்,வட இந்திய மாநிலங்களிலிருந்து ஏழைகள் இங்கு வருகை தருகிறார்கள்.கொங்கு நாட்டில் நிலவும் “சாயப்(டை)பிரச்சனைகளுக்கு” உள்நாடு காரணம் அல்ல.உலக மயமாக்கலினால்,சீனா,தாய்லாந்து,இந்தோனேஷியா போன்ற நாடுகளிலிருந்து உற்ப்பத்தியாகும் துணிகளுக்கு இணையாக தரத்திலும்,விலையிலும் போட்டியிடுவதற்குறிய அடிப்படை வசதி(தொழில்நுட்ப ஆராய்ச்சி),இந்தியாவில் இல்லை.கொங்குநாட்டு “பருத்தித் துணி” உற்ப்பத்தியும்(ஐரோப்பாவில் பருத்தி இல்லை)ஒரு காலனியாதிக்க சுயநல “கட்டமைப்புதான்”.இதற்கு “செயற்கை இழையை” கலக்க வேண்டும்.செயற்கை இழை “அதி தொழில் நுட்பம்” “ஜெர்மனியிடமே” இருக்கிறது.தற்போது ஜெர்மனியில் உற்பத்தி செலவுகளை குறைக்க,தொழில் நுட்பத்தை,”ஏனோ தெரியவில்லை”,- டி.சி.எம்.,அம்பானி, போன்ற வட இந்திய கம்பெனிக்கே தாரை வார்க்கிறார்கள்- இதைப் போய் “ஆரியப் பற்று” என்று நாம் கணக்குப் போடலாமா?,செந்தமிழ் மாநாட்டில் “டமாரம்” தட்டலாமா?.கவிஞர் கனிமொழியும்,தமிழச்சி தங்கப்பாண்டியனும்,”பெண்ணியம் என்ற தூண்டில் புழுவால்” “சொகுசு போர்க்கப்பலின் காப்டனுக்கு” “நிலாவது வானத்து மேலே பாடுகிறார்கள்”.கொங்குநாடும் – நடுகடந்த தமிழீழமும் எதிலிணைகிற்து என்றால்,”இலங்கைக்கு ஐரோப்பிய நாடுகள் தடை விதித்த ஆடை ஏற்றுமதியை”,சந்தையை தாங்கள் கைப் பற்றுவதிலேயே!.இதில் எங்கேய்யா,வன்னிமக்களின் வாழ்விருக்கிறது!,இனப்பிரச்சனை தீர்விருக்கிறது…

    Reply
  • soosai
    soosai

    அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டு பாதுகாப்பு வலயங்கள் அகற்றப்படும் காணாமற் போனோர் குறித்தும் நடவடிக்கை 2010-01-03 06:22:23

    . எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நான் வெற்றிபெற்றவுடன் அவசரகாலச்சட்டம் உடன் நீக்கப்படும்.

    . யாழ்ப்பாணத்தில் உள்ள உயர் பாதுகாப்பு வலயங்கள் அனைத்தும் முற்றாக அகற்றப்படும்.

    . காணாமற்போனோர் மற்றும் கைது செய்யப்பட்டோர் தொடர்பாக உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

    . பலாலி விமான நிலையம் விஸ்தரிக்கப்பட்டு சர்வதேச விமானநிலையமாக மாற்றப்படும்.

    ஜனாதிபதி பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா இவற்றை நேற்று யாழ்ப்பாணத்தில் வைத்துத் தெரிவித்தார். நேற்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்ட சரத் பொன்சேகா பல்வேறு நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் நேற்று மாலை 7 மணியளவில் யாழ்.பாடி ஹோட்டலில் ஊடகவியலாளர் மாநாடு ஒன்றை நடத்தினார்.

    அந்த மாநாட்டில் ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஜே.வி.பி. தலைவர் சோமவன்ச அமரசிங்க, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப்ஹக்கீம், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன், எம்.பி.க்களான ஜயலத் ஜயவர்த்தன, ரவிகருணா நாயக்க,அனுரகுமார திஸநாயக்க, அர்ஜீண ரணதுங்க, அகிலவிராஜ் காரியவாசம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
    அந்த ஊடகவியலாளர் மாநாட்டில் சரத் பொன்சேகா மேலும் விவரித்தவை வருமாறு:
    இன்று எமது நாட்டுக்குப் பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லை. யுத்தம் முடிவடைந்து விட்டது. எனவே உயர்பாதுகாப்பு வலயங்கள் தேவையில்லை. யுத்தம் முடிவடைந்தவுடனேயே அவை அகற்றப்பட்டிருக்க வேண்டும். எனினும் இதுவரை அது நடைபெறவில்லை. அது ஏன் என்பது தான் எனக்கு விளங்க வில்லை. நான் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டதும் முதலில் முகமாலை தனங்கிளப்பு, அரியாலை, யாழ்.நகர், பலாலி, நாகர் கோயில் பகுதிகளில் அமைந்துள்ள இராணுவத்தினரின் பாதுகாப்பு வலயங்கள் அனைத்தும் உடனடியாக அகற்றப்படும். பலாலி விமான நிலையம் விஸ்தரிக்கப் பட்டு சர்வதேச விமான நிலையமாக மாற்றப்படும்.
    தற்போது நடைமுறையில் இருக்கும் அவசரகாலச்சட்டம் இனிமேல் தேவையற்றது. அது உடனடியாக நீக்கப்படும். அத்துடன் காணாமற்போனோர் மற்றும் கைது செய்யப்பட்டோர் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும். இவர்களில் சிறையில் உள்ளவர்களின் விவரங்கள் உடனடியாகப் பகிரங்கப்படுத்தப்படும். முன்னர் யுத்தகாலத்தில் கைது செய்யப்பட்டோரினதும் இப்போது முகாமில் வைக்கப்பட்டுள்ள 10 ஆயிரத்துக்கும் அதிகமான இளைஞர்களினதும் விவரங் கள் இதில் அடங்கும். சிறையில் அடைக் கப்பட்டுள்ளவர்களை உடனடியாக விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அத்துடன் காணாமற்போனோரில் உயிருடன் இல்லாதவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    மீளக்குடியமர்த்தல் தேர்தல் நாடகம்
    இப்போது இடம்பெயர்ந்த மக்களுக்கான அடிப்படைக் கட்டமைப்புகள் எதுவும் ஏற்படுத்தப்படாமல் மக்கள் மீளக்குடியேற்றப்பட்டுள்ளார்கள். இது ஒரு தேர்தல் நாடகம். மீளக்குடியேற்றப்பட்ட இடங்களில் கள்ள வாக்குகளைப் போடுவதற்கும் அங்கு ஏற்பாடுகள் நடைபெறுவதாக எமக்கு தகவல் கிடைத்துள்ளது. மீளக்குடியேற்றத்துக்கு வழங்கப்பட்ட சர்வதேச நிவாரண நிதியை “ராஜபக்ஷ கம்பனி” களவாடிவிட்டது. உயர் பாதுகாப்பு வலயம் தொடர்பாக இராணுவ ரீதியிலும் அரசியல் ரீதியிலும் நான் நன்கு அறிந்தவன். இங்கு நான் இராணுவ தளபதியாக பணியாற்றியவன். எனவே இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான தகுதி என்னிடம் உள்ளது. ஆனால் பாதுகாப்புச் செயலருக்கு இது தொடர்பாக போதிய அறிவு இல்லை. அவர் 20 வருடங்களின் பின்னர் ஒரு வெளிநாட்டுத்தூதுவர் போல இங்கு வந்துள்ளார்.

    நான் ஆட்சிக்கு வந்தால் இங்கு இராணுவ ஆட்சி நடைபெறும் என்று கூறப்படுகிறது. நான் இராணுவ ஆட்சியை விரும்பியிருந்தால் இப்போதுள்ள அரச தலைமையை எப்போதோ சிறையில் அடைத்து ஆட்சிக்கு வந்திருப்பேன். ஆனால் நான் அதை விரும்பவில்லை. இந்த நாடு அனைத்துப் பிரஜைகளுக்கும் சொந்தம். இந்த நாட்டில் உள்ள தமிழ் மக்களை இரண்டாம் தரப் பிரஜைகள் என நான் கூறியதாக முன்னர் ஊடகம் ஒன்றில் செய்தி வெளியாகியிருந்தது. அந்தச் செய்தி முற்றிலும் தவறானது. நான் அதனை முற்றாக மறுக்கின்றேன். சிங்கள மக்கள் அனைத்து இனங்களுடனும் சகோதரத்துவத்துடன் வாழ வேண்டும் என்பதையே நான் கூறினேன். அது திரிவு படுத்தப்பட்டு வெளியிடப்பட்டு விட்டது. இந்த நாடு தனியே சிங்களவருக்கோ, தமிழருக்கோ சொந்தமான தல்ல. அது இந்த நாட்டின் அனைத்துப் பிரஜைகளுக்கும் உரியது என்றார்

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    பார்த்திபன்,
    //….காய் நகர்த்தி ஆட்சிபீடம் ஏறியவர் மஹிந்தா…//
    //..அப்ப மகிந்தவுக்கு வாக்களித்த சிங்கள மக்களெல்லாம், குமார் பொன்னம்பலத்தின் கொலையால் ஆத்திரமுற்றுத் தான் வாக்களித்திருக்கினம் போல..//

    காய்நகர்த்துவது என்று சொல்லும்போது அது சாதகமாக சில வேலைகளைச் செய்தல் எனப்பொருள்படும். மற்றவர்கள் வாக்குபோடுவது எல்லாம் காய் நகர்த்தலில் வருமா?
    உதாரணமாக முன்னைய ஆட்சிக்காலம் ஒன்றில் யூ.என்.பிக்கு எதிராக திசைநாயகம் எழுதிய கட்டுரைகளை மஹிந்தா எடுத்துச் சென்று உலக நாடுகளில் ‘காய்நகர்த்தியவர்’. இதை நான் சொல்லவில்லை திசைநாயகத்தின் தந்தை சொல்லி இருக்கிறார்.

    அதேபோல கட்சிக்குள் தனது தலைமைக்கு சந்திரிகா தரப்பு ஆதரவு தெரிவிக்காதபோது குமார் பொன்னம்பலத்தின் கொலையில் சந்திரிகாவின் ”கை” வெளியில் தெரியவந்தபோது லசந்தாவிடம் இருந்து முழுஆவணங்கள்/தொலைபேசி உரையாடல்பதிவுகள் அனைத்தையும் கையில் எடுத்து தனது கட்சிக்குள் வந்த போட்டியைச் சமாளித்தவர் .காய்நகர்த்தியவர் எனவும் சொல்லலாம் இதை. மகிந்தாவை கட்சியின் வேட்பாளராக நியமித்தலில் சந்திரிகா மஹிந்தா புடுங்குப்பாடுகள், சந்திரிகாவின் இழுத்தடிப்புகள் எல்லாம் அன்றைய நாட்களில் வெளிவந்தவைதானே. அதைச் சமாளிக்க மஹிந்தா கையில் எடுத்த ஆயுதங்களில் ஒன்று இந்த கொலை விடயம்.

    Ajith,
    I totally agree with your point of view. Thanks for your comments.

    Reply
  • soosai
    soosai

    Hedging deal by the Ceylon Petroleum Corporation. Losses to Sri Lanka Rs 230 billion.
    Losses to Sri Lankan Airlines from 2007 to 2008 – Rs 10 billion.
    Losses to Mihin Air for 2007-2008 Rs 4 billion.
    Initial cost for feasibility study for the abandoned Wirawila Airport – Rs 500 million.
    The purchase of MiG 27 fighter jets from Ukraine – Rs 400 million more than the published price.
    VAT scam – Loss to the country Rs 35 billion
    Hambantota man made safari park Rs 1.6 billlion when the Yala National Park is closeby.
    Uma Oya project – Enhanced cost Rs 28 billion. Two reservoirs built have an extent of only 50 acres. The Victoria project has an extent of 7,500 acres.

    Reply
  • T Sothilingam
    T Sothilingam

    அஜித் உங்களுக்கு எனது புத்தாண்டு வாழ்த்துக்கள். உடன் பதில் போட முடிவில்லை மன்னிக்கவும். உங்களுடைய கருத்துக்களுக்கும் கேள்விகளுக்கும் எனது பதில்கள்.

    //I read your very lengthy article and I couldn’t find any useful information or argument. It is simply says identify you (Sothylingam) are a pro- Rajapakse, Pro -Indian and anti-tamil.// Ajithh

    //சோதிலிங்கம், நல்லதொரு கட்டுரையைத் தந்துள்ளீர்கள்.// பார்த்திபன்

    ஒரு கட்டுரை பற்றி பல்வேறு கருத்துக்கள் மாறுபட்ட அபிப்பிராயங்கள் வருவது தவிர்க்க முடியாதது. எல்லோரும் இப்படித்தான் சிந்திக்க வேண்டும். இப்படித்தான் கருத்தக் கொண்டிருக்க வேண்டும் என்ற எந்தக் கட்டுப்பாட்டையும் நான் விதிக்கவில்லை. இது கட்டுரை. வாசகர்களின் கருத்தை நான் மதிக்கின்றேன். ஆனால் அவர்களின் எடுகோள்களுக்கு ஊகங்களுக்கு முடிவுகளுக்கு நான் பொறுப்பேற்க வேண்டிய அவசியமில்லை.

    //Pro -Indian and anti-tamil. Recently you had an interview with Mr Sivagilingam who most tamils believe as an agent of Indian government (RAW) and Rajapakse regime. //
    உங்கள் எடுகோள்களுக்கு ஊகங்களுக்கு முடிவுகளுக்கு நான் பதிலளிக்க முடியாது.

    //Tamils know well that we are not going to get any political gain by voting Sarath or Rajapakse.//
    இது உங்களுடைய கருத்து. அந்தக் கருத்தை நீங்கள் கொண்டிருக்கவும் அதற்காகப் பிரச்சாரம் செய்யவும் உங்களுக்கு முழுமையான சுதந்திரம் உண்டு. ஆனால் நீங்கள் தமிழ் சார்பில் கருத்துத் தெரிவிக்கமுடியாது. ஏனென்றால் நீங்கள் தமிழ் மக்களின் பிரதிநிதியல்ல.

    //By voting to Sivagi, we are not going to tell anything new to Sinhala majority or international community.//
    அது உங்களுடைய அபிப்பிராயம். அதனை மதிக்கின்றேன்.

    //For Sinhala people, tamils are always “Kallthony”.//
    எனக்குத் தெரிந்த எந்தவொரு சிங்கள நண்பர்களும் அப்படிச் சொன்னதாக நான் அறியவில்லை. ஆனால் சரத் பொன்சேகா அண்மையில் அவ்வாறு தெரிவித்ததாக சில மாதங்களுக்கு முன் பல செய்திகள் வெளிவந்தது. அதனை சரத்தின் தற்போதைய நண்பர் ஹக்கீம் உடனடியாகக் கண்டித்தும் இருந்தார்.

    //Don’t worry too much about what LTTE do or What TNF do? Do you have an alternative?//
    இது தான் அடிப்படைத் தவறு. அங்குள்ள மக்களுக்கு இங்கிருந்து கொண்டு ஓல்ரனேரிவ் கொடுக்கின்ற புத்திஜீவித அரசியலை விட்டுவிட்டு அங்குள்ள மக்களைப் பலப்படுத்துவோம். அவர்கள் மிகுதியைத் தீர்மானிப்பார்கள்.

    //Who do you support in the presidential election and why?//
    நான் இலங்கையில் இருந்திருந்தால் நான் சிறீதுங்க ஜெயசூரியா விற்கே வாக்களித்து இருப்பேன். அவர் எனது கட்சிக்காரன் அவருக்கே எனது வாக்குகள்.

    //What is your aim of this article? Is it to bring to discredit TNF and LTTE?//
    நான் அறிந்து கொண்ட தகவல்களையும் உண்மைகளையும் தேசம்நெற் வாசகர்களோடு பகிர்ந்துகொள்வது. அது விடுதலைப் புலிகளினதும் தமிழ் கூட்டமைப்பினதும் மதிப்பைப் பாதிக்கும் என்பதற்காக உண்மைகளையும் எனது கருத்தையும் இருட்டடிப்புச் செய்ய வேண்டியதில்லையே.

    Do you ask tamil people to vote for Mr. Rajapkse and his family who brought our Sri Lanka as a war crime nation?

    சரத் / மகிந்தா இந்த இரண்டு வேட்பாளர்களும் தமிழர்களின் கடந்த 30 வருட போராட்டங்களினால் தமிழ் மக்கள் அடைந்த வேதனைகள், துன்பங்களை பகிர்ந்து கொண்டவர்கள் அல்லர். மாறாக இவர்களே தமிழர்களின் துன்பியல்களுக்கு பிரபாகரன் – புலிகளுக்கு அடுத்தபடியாக காரணமானவர்களாகும். இந்த இரு வேட்பாளர்களுமே தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு வேண்டும் என்பதை கூட இன்று வரையில் பகிரங்கமாக தெரிவிக்காதவர்கள். இவ்விரு வேட்பாளர்களுமே தமிழர்களில் 30 ஆயிரம்பேர் வரையில் முள்ளிவாய்காலில் கொலை செய்தவர்கள். தமிழ் மக்களை பார்த்து இவர்களில் ஒருவருக்குத் தன்னும் வாக்களியுங்கள் என்று எந்த முகத்துடன் ரிஎன்ஏ அல்லது தமிழ் அரசியல்வாதிகள் கேட்க முடியும். – இந்தப் பந்தியின் விளக்கம் மகிந்தவுக்கு வாக்களியுங்கள் என்று எந்தத் தமிழனாவது புரிந்துகொண்டால் நான் என்ன செய்ய முடியும். ‘மெல்லத் தமிழினிச் சாகும்’ என்றது உண்மையாகிவிடுமோ?

    எனக்கு இலங்கையில் வாக்குரிமை இல்லை. நான் இலங்கையிலும் இல்லை. இருந்திருந்தால் என் இன சனங்களையெல்லாம் சிறீதுங்க ஜெயசூரியாவிற்கே வாக்களிக்கும்படி கேட்பேன். அவர் என் கட்சிக்காரன்.

    //Why do you still do your politics as an anti-tamil?//
    மகிந்தவுக்கும் சரத்துக்கும் வாக்குப் போடாதீர்கள் என்று சொன்னால் அன்ரி தமிழ் என்று ஆரும் எனக்கு சொல்லவே இல்லை. மே 18க்குப் பிறகு தமிழ் டிக்சனறியை அப்டேட் பண்ணீட்டாங்களா? சொல்லவே இல்ல.

    சோதிலிங்கம் ரி

    Reply
  • kasi
    kasi

    தமிழ்மக்களுக்கு சரியான தலைமை ஒன்று இல்லையென்று பலராலும் சொல்லப்பட்டாலும் தமிழ் கூட்டமைப்புதான் தலைமை தாங்கிக் கொண்டிருக்கிறது. புலி அழிந்த பின் தமிழ் கூட்டமைப்பின் நிலை இன்னும் அழுத்தமபெறுகிறது. சம்பந்தரின் ஒரு வாய்உதிர்வுக்காக தமிழினமே காத்திருப்பது ஒன்றும் மிகையல்ல. 60வருட ஈழப்போரட்டத்தில் தொடர்ச்சியான தமிழ்தலைமை சாதித்தது ஒன்றுமில்லை. புலம் பெயர் தேசமும் இந்தத் தலைமையின் தொடர்ச்சிதான். யார் வந்தாலும் ஒன்றுதான் ஆனால் பலமான எதிர்க்கட்சி வேண்டும் நியாமாக நினைக்கிற பல்லி போன்றவர்கள் தமிழ்த் தலைமைக்கு பலமான எதிர்த்தலைமை வரவேண்டும் என்று நினைக்கத் தவறுகிறார்கள். அது டக்ளஸ் கருணா என்றும் ஆகமுடியாது. இவர்கள் சிறுசிறு மக்கள் கூட்டத்தை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்த முடியும். ஆக கூட்டமைப்பை இல்லாமல் செய்வது அல்லது அதை ஈடாடச் செய்வது இன்றைய கடமை. அப்போதுதான் அந்த வெற்றிடம் நிரப்பப்படும். அல்லது சரியான எதிர்த்தலைமையாவது உருவாகும். அதற்கும் இந்தத்தேர்தல் பயன்படுத்தப்பட வேண்டும்

    Reply
  • Ajith
    Ajith

    On the surface it appears that Sivagi and Bahu are working together for autonomy of tamils and self-determination. They ask tamils not to vote for either candidates, so none of them will get 50%. So what is next? Is that going to give Sivagi and Bahu hope for the presidency? No, the second round of votes to be counted? Then who will win? Either Rajapakse or Sarath Fonseka. Can their contest stop either of them coming as President. The answer is no.
    Now we will look into the reality. The war is ended now, What a normal citizen needs. He should be able to express his view without any fear and pressures, normal law and justice system should operate, people should be move around freely, the democratic values of all citizens should be appreciated. For this to happen emergency rules should be revoked, law and order should be maintained without any political influence and pressures, military establishments should be removed, press freedom and journalists should be given the opportunity work without any fear. People should get back to normal. These are the essential features for thetrue democracy and people to express their view. Do anyone feel that this presidential election is going to be free and fair. The answer is NO.
    The recent elections showed that tamils are not interested in any of the election. The displaced tamils should be resettled properly in their homes and they should have given opportunity to come to a normal life. Tamils in the North-East have suffered to their maximum during the past three years due to economic sanctions, continued war, and detention camps life and even that continues. The whole tamil land is occupied by sinhala military and armed groups and their is a high probability that votes will be rigged. Then if Sivagi and Bahu gets less than 50%, then what is that going to tell to the world and Sinhala people? Tamils are not interested in autonomy. Are we going to fall into the trap? NO
    So, whats wrong with an experiment by voting Sarath Fonseka who may or may not bring some sort of relief from some of the draconian system that is harmful for both Sinhala and tamil.

    Reply
  • sugu
    sugu

    I applaud Mr Sambathan politics. He has been showing good leadership and ALL Tamils should encourage him. This discredited article will not bring anything to Tamils cause and suffering. The writer did not state how and which drection should TNA should take on this upcoming election. It is seemed to me that the writer just wants to bash TNA and it leader without any good reason. If TNA’s decision in wrong in supporting SF then what would be the best approach. The writer is blabbering without saying any facts. This type of articles is no longer welcomed by Tamils as TAMILS are taking informed decisions nowadays.

    Reply
  • Ajith
    Ajith

    Mr. T. Sothilingam,
    Thanks for your response and clarifications. I appreciate your honesty and agree each individual have the right to express his or her view freely. However, I do not agree on few things.

    Tamils know well that we are not going to get any political gain by voting Sarath or Rajapakse./
    இது உங்களுடைய கருத்து. அந்தக் கருத்தை நீங்கள் கொண்டிருக்கவும் அதற்காகப் பிரச்சாரம் செய்யவும் உங்களுக்கு முழுமையான சுதந்திரம் உண்டு. ஆனால் நீங்கள் தமிழ் சார்பில் கருத்துத் தெரிவிக்கமுடியாது. ஏனென்றால் நீங்கள் தமிழ் மக்களின் பிரதிநிதியல்ல.
    I donot understand the last sentence. I have the same right as you to sgive my opinio. Can you please let me know who represent tamil people?

    /What is your aim of this article? Is it to bring to discredit TNF and LTTE?//
    நான் அறிந்து கொண்ட தகவல்களையும் உண்மைகளையும் தேசம்நெற் வாசகர்களோடு பகிர்ந்துகொள்வது. அது விடுதலைப் புலிகளினதும் தமிழ் கூட்டமைப்பினதும் மதிப்பைப் பாதிக்கும் என்பதற்காக உண்மைகளையும் எனது கருத்தையும் இருட்டடிப்புச் செய்ய வேண்டியதில்லையே.

    Secondly in several instances you are trying to express your assumptions or preceptions as peoples suspicions. For example, see below:
    வெளிநாடுகளில் உள்ள புலி ஆதரவு குழுக்களின் வற்புறுத்தலாக இருக்குமென? என பலர் சந்தேகிக்கின்றனர்.

    இதன் பின்னணியிலேயே சம்பந்தர் வெளிநாடுகளுக்கு அழைக்கப்பட்டார் என்றும் இதில் சுவிஸ் மாநாடு தோல்வியில் முடிவடைந்ததால் அடுத்து வியன்னாவில் சம்பந்தருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்கலாம் எனவும் பலரும் சந்தேகிக்கின்றனர் (இந்த மகாநாடுகள் இரகசியமாகவே ஒழுங்கு செய்யப்பட்டது.)

    This is misleading and you are telling the truth. When you say Most people suspect, you should understand you are talking about numbers. Do you have any survey evidence or any research finding to substantiate your statement. This clearly illustrates that you are trying to mislead readers and public.

    Further, there are number of para military turned political parties (tamil) parties have made a decision to support Rajapakse. I did not see any justification for blaming just TNF and LTTE and ignoring others.

    Do you ask tamil people to vote for Mr. Rajapkse and his family who brought our Sri Lanka as a war crime nation?

    சரத் / மகிந்தா இந்த இரண்டு வேட்பாளர்களும் தமிழர்களின் கடந்த 30 வருட போராட்டங்களினால் தமிழ் மக்கள் அடைந்த வேதனைகள், துன்பங்களை பகிர்ந்து கொண்டவர்கள் அல்லர். மாறாக இவர்களே தமிழர்களின் துன்பியல்களுக்கு பிரபாகரன் – புலிகளுக்கு அடுத்தபடியாக காரணமானவர்களாகும்.

    I respect you opinion. you have the right to express your opinion. Unfortunately, I have a different opinion. It is true every one of us is responsible for the sufferings of the tamils over the 60 years of violence aggainst tamils. In my opinion, the brutal indian governments are the main cause of the suffering of tamils, sinhalese and other citizens of Ceylon. Secondly, war mongering extreme Buddhists priests and racist Sinhala leadership and thirdly all political and para military camps that fallen into the trap of RAW should take their resonsiblitiy.

    Reply
  • casino online

    casino online

    T Sothilingam: தமிழ் மக்களுடன் சம்பந்தமாகுமா சம்பந்தரின் சாணக்கியம்!- ரி சோதிலிங்கம்.

    Reply
  • cartucho de tinta

    cartucho de tinta

    T Sothilingam: தமிழ் மக்களுடன் சம்பந்தமாகுமா சம்பந்தரின் சாணக்கியம்!- ரி சோதிலிங்கம்.

    Reply
  • datadora automatica

    datadora automatica

    T Sothilingam: தமிழ் மக்களுடன் சம்பந்தமாகுமா சம்பந்தரின் சாணக்கியம்!- ரி சோதிலிங்கம்.

    Reply
  • datador automatico de embalagens

    datador automatico de embalagens

    T Sothilingam: தமிழ் மக்களுடன் சம்பந்தமாகுமா சம்பந்தரின் சாணக்கியம்!- ரி சோதிலிங்கம்.

    Reply