பிந்திய செய்தி – அமைச்சர் சந்திரசேகரன் காலமானார்.

canthira.jpgமலையக மக்கள் முன்னணியின் தலைவரும், அமைச்சருமான பீ.சந்திரசேகரன் இன்று அதிகாலை காலமானார். கொழும்பில் தனியார் வைத்திய நிலையம் ஒன்றில் அவசர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இவர் இன்று அதிகாலை காலமடைந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள தேசம் நெட்டுக்குத் தெரிவித்தன.

இவர் 1952 ஏப்ரல் 16 ஆம் திகதி பிறந்தவர். 1994 ஆம் ஆண்டு முதல் நுவரெலியப் பாரளுமன்ற உறுப்பினராக பணியாற்றி வந்தார். மேலதிக தகவல்கள் பின்பு வெளியிடப்படும். 

Show More
Leave a Reply to Najimilahi Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

10 Comments

  • மாயா
    மாயா

    அன்னாருக்கு எமது அஞ்சலிகள்.

    ஜனாதிபதி தேர்தலுக்காக யாரை ஆதரிப்பது என முடிவெடுக்காத நிலையில் அவர் இன்று அதிகாலை காலமானார்.

    அத்தோடு, தமிழ் மனநோயாளியான இளைஞரை கடலில் கொலை செய்த குற்றத்திற்காக , கைதாகி இருந்த போலீஸ் அதிகாரி திமுத்து என்பவர், இன்று சிறையில் வைத்து இறந்துள்ளார். இவரோடு இன்னும் மூவர் கைதாகி சிறையில் உள்ளமை குறிப்பிடத் தக்கது. “பாவத்துக்கான தண்டனை” என சிங்கள பத்திரிகையான லங்கா ஈ நீயூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

    Reply
  • BC
    BC

    சந்திரசேகரன் குடும்பத்தாருக்கு எனது அனுதாபங்கள்.

    அருட்சல்வன் , சந்திரசேகரன் 1957 ஏப்ரல் 16 ஆம் திகதி பிறந்தவர்.

    Reply
  • Ajith
    Ajith

    Heartfelt Condolencess to the family. No politics in the death of a man.

    Reply
  • பல்லி
    பல்லி

    அன்னாருக்கு எமது அஞ்சலிகள்.

    Reply
  • Najimilahi
    Najimilahi

    அமைச்சர் சந்திரசேகரன் மலையக அரசியலில் தவிர்க்கப்பட முடியாத ஒரு பாத்திரம் மலையக அரசியலில் மலையக மக்கள் முன்னணி மூலம் பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்தவர் அவரின் இழப்பு மலையகத்தில் ஒரு அதிர்வை ஏற்படுத்தும் என்பது யதார்த்தம்

    அவரின் இழப்பால் துயறிற்றிருக்கும் குடும்பத்துக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரித்துகொள்கிறேன்

    Reply
  • majees
    majees

    அமைச்சர் சந்திரசேகரன்
    அன்னாருக்கு எமது அஞ்சலிகள்.
    majees

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    சந்திரசேகரன் அவர்களுக்கு எனது குடும்ப சார்பான அஞ்சலிகளும் அன்னாரது குடுமபத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களும்.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    மாயா,
    நீங்கள் சொல்வதுபோல ஜனாதிபதி தேர்தலுக்காக யாரை ஆதரிப்பது என முடிவெடுக்காத நிலையில் அவர் மரணிக்கவில்லை மாறாக மஹிந்தாவை ஆதரிப்பதாக முடிவெடுத்திருந்தார்.

    Minister Chandrasekeran commenting on his party’s decision on extending its support to President Mahinda Rajapaksa told the Sunday Observer that the decision was taken after several rounds of talks they held with President Mahinda Rajapaksa and his senior advisor and Parliamentarian Basil Rajapaksa on the key issues of upcountry people and the minorities of the country.

    Reply
  • அருட்சல்வன்
    அருட்சல்வன்

    சந்திரசேகரனின் பூதவூடல் – நான்காம் திகதி தலவாக்கலையில் தகனம்

    மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் அமைச்சருமான பெரியசாமி சந்திரசேகரனின் பூதவுடல் நாளை 11.00 மணிமுதல் 12.30 மணிவரை பாராளுமன்றக் கட்டடத்தில் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள், ஊழியர்களின் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இன்று மாலை 5.00 மணி முதல் இலக்கம் 40, மெதவெலிகட, ராஜகிரிய என்ற விலாசத்திலுள்ள அமைச்சரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.

    அதன் பின்னர் கடுவளை வீதிவழியாக அமைச்சரின் சொந்த இடமான தலவாக்கலைக்குப் பூதவுடல் எடுத்துச்செல்லப்படும். கிதுல்கலையிலிருந்து மலையக மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் பூதவுடலைப் பொறுப்பேற்று அவரது இல்லத்துக்குக் கொண்டு செல்வர்.

    எதிர்வரும் நான்காம் திகதி மாலை 6.00 மணியளவில் தலவாக்கலை நகரசபை பொது மயானத்தில் அமைச்சரின் பூதவுடல் அரச மரியாதைகளுடன் தகனம் செய்யப்படவுள்ளது.

    Reply
  • மாயா
    மாயா

    சந்திரசேககரனது இடத்துகக்கு அவரது மனைவி சாந்தி சந்திரசேகரன் (48 வயது) கட்சி பொதுக் குழுவால் கொழும்பில் வைத்து தேர்வாகியுள்ளார்.

    Reply