இடம்பெயர்ந்த சகல வாக்காளர்களும் வாக்களிக்க விசேட நடவடிக்கை – தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த அறிவிப்பு

Commissioner of Elections Dayananda Dissanayakeஇடம் பெயர்ந்த சகல வாக்காளர்களும் வாக்களிப்பதற்கு வசதியாக தேர்தல்கள் தலைமையகம் விசேட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.  இடம்பெயர்ந்தவர்கள் வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக வெளியாகும் செய்திகளில் உண்மை இல்லையென்றும் தலைமையகம் தெரிவித்தது. யுத்தத்தினால் உள்ளக இடம்பெயர்வுகளுக்கு உள்ளானவர்களும், தேர்தல் தொகுதிக்கு வெளியில் இடம்பெயர்ந் தவர்களும் வாக்களிக்கவென வெவ்வேறான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணையாளர் தயானந்த திஷாநாயக்க தெரிவித்தார்.

நலன்புரி முகாம்களிலிருந்து சொந்தக் கிராமங்களில் மீளக் குடியமர்ந்தவர்கள் தாம் வாழும் பகுதியில் வாக்களிப்பதற்கு வசதியாக வாக்குச் சாவடி அமைக்கப் படுவதுடன், ஏனையவர்களுக்குக் கொத்தணி வாக்குச் சாவடிகள் அமைக்கப் படுமென்றும் ஆணையாளர் கூறினார்.

தேர்தல் தொகுதிகளுக்கு வெளியில் கொழும்பு, புத்தளம், அனுராதபுரம், களுத்துறை உள்ளிட்ட இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ள வாக்காளர்கள், வாக்களிக்கவும் நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. எனினும் அவர்கள் தமது பெயர்களைப் பதிவு செய்திருக்க வேண்டுமென்று ஆணையாளர் குறிப்பிட்டார்.

வன்னிப் பிரதேசத்தின் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மாவட்ட வாக்காளர்களுக்குத் தனியாகவும், யாழ். குடாநாட்டில் இடம்பெயர்ந்தவ ர்களுக்குத் தனியாகவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சியில் மீளக் குடியமர்ந்தவர்கள் அங்கேயே வாக்களிக்க முடியும்.

Show More
Leave a Reply to மாயா Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

4 Comments

  • rohan
    rohan

    அருமை அருமை
    இப்போட்கல்லவா தெரிகிறது மகிந்த தமிழ் சனத்தைத் திறந்துவிட்டதன் தாத்பரியம்! அவர்கள் உள்ளே இருந்திருந்தால் சாரி சாரியாகப் போய் மகிந்தவ் உக்கு எதிராகப் புள்ளடி போட்டிருப்பர்! இப்போது அவர்களைத் தெருவெல்லாம் சிந்தியாயிற்று. அவர்கள் முகவரி இல்லாத பராரிகள் – ஏது கவலை எமக்கு?

    Reply
  • மாயா
    மாயா

    //rohan on January 3, 2010 3:02 am அருமை அருமை இப்போட்கல்லவா தெரிகிறது மகிந்த தமிழ் சனத்தைத் திறந்துவிட்டதன் தாத்பரியம்! //

    என்னதான் இருந்தாலும் நாய் வாலை நிமிர்த்தவே முடியாது. மக்கள் வெளியே வந்ததை , எதிர்ப்போர் உங்களைப் போன்ற புலி வாலுகளாகத்தான் இருக்க முடியும். வேறு எவராகவும் இருக்க முடியாது. பிச்சையெடுத்து பிழைப்பு நடத்திற சிலர் , குழந்தைகளை ஊனமாக்கி பிழைப்பு நடத்துவதை இந்தியாவில் இருப்பதாக அதிகம் படித்திருப்போம். அதைவிட மோசமான ஒரு இனம் என்றால் தமிழீழ தமிழினம்தான். அதுவும் புலிகள்தான். சே……..

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    றோகன்,
    அகதி முகாம்களில் அவர்கள் இருந்திருந்தாலும், வாக்களிக்க வாக்காளர் அடையாள அட்டை தேவை என்பது தெரியாமலா இவ்வளவு நாளும் கருத்தெழுதுகின்றீர்கள்.

    Reply
  • rohan
    rohan

    என்னில் பிழை பிடிப்பது நன்றாக இருக்கிறது.

    மக்களை வெளியே விட்ட திருவிழா பற்றித் தெரியாமல் என்னில் சொட்டை சொல்ல வருகிறீர்கள்! இவர்கள் தெருவில் வீசி விடப்பட்டார்கள். விடப் பட்டவர்களில் சில ஆண்கள் மீளப் பிடிக்கப்பட்டார்கள். அவர்கள் விடப் பட்ட போது 15நாட்களில் மீள வர வேண்டும் என்ற கட்டளையுடன் விடப் பட்டவர்கள் பலர். எனக்குக் கண் போனாலும் பரவாயில்லை செத்த புலிக்கு வசை பாடினால் போதும் என்று கங்கணம் கட்டிய சிலர் தத்துவம் பேச வருவது ஒன்றும் ஆச்சரியப் பட வேண்டிய விடயம் அல்ல என்பதும் எனக்குத் தெரியும்.

    அதி உத்தம ஜனாதிபதி 180நாட்களில் 80% தமிழர்களை வெளியில் விட முடியும் என்று சொன்னதை செய்ய முடியாது என்று அரசாங்கம் சொன்னதை இரண்டு கண்களும் கொண்டோர் அறிவர். திடீர் என்று விடுவிப்பு அறிவிப்பு வெளிவந்து, அவர்கள் வண்டிகளில் கமெராக்களுக்காக ஏற்றப்பட்டு, அரை மணிநேரத்தில் மறு வழியால் முகாமுக்குள் கொண்டு வரப்பட்டதை ஆங்கிலப் பத்திரிகைகள் வெளிக் கொணர்ந்தன.

    நடேசன் – கொன்ஸ்ரன்ரைன் குழுவுடன் முன்னர் கொழும்பு போன கலாநிதி நரேந்திரன் எழுதிய கட்டுரையை சிலர் படித்திருப்பீர்கள். தெருவில் அவர்கள் படும் பாடு யாரை உருக்கியதோ என்னை உருக்கியது. சொல்லப் பட்ட கருத்தை மறுதலிக்க முடியாது கருத்து சொன்னவனை தாக்க வருவது எனக்கு ஒன்றும் வியப்பைத் தரவில்லை.

    வெளியில் விடப்படுவது அவர்களது உரிமை.நான் அதில் கருத்துச் சொல்ல ஒன்றும் இல்லை. எப்படி – ஏன் – விடப்பட்டனர் என்பதே கேள்விகள்.

    அகதி முகாம்களில் அவர்கள் இருந்திருந்தாலும், வாக்களிக்க வாக்காளர் அடையாள அட்டை தேவை என்பது தெரியாமல் நான் இல்லை. ஆனால், உள்ளே இருப்பவர்களுக்கு வாக்காளர் அட்டை கொடு – அல்லது அட்டை இல்லாது வாக்களிக்க அனுமதி கொடு என்று கோரிக்கை (அல்லது தேர்தல் ஆணையாளர் / நீதிமன்றக் கட்டளை) விடப்பட்டால் முழி பிதுங்குவதைத் தவிர்க்க அரசு நினைத்திருக்கிறது. வெளியில் அலைவோருக்கு இப்படி ஏதும் செய்ய முடியாதே!

    நானாக இருந்திருந்தால் என்ன செய்திருப்பேன் என்று கொஞ்சம் மூளையைப் பாவித்தேன். அப்படி மூளை பாவிப்பதில் தவறு ஏதும் இல்லையே?

    Reply