துப்பாக்கியில் இருந்து இசையை நோக்கி! – முன்னாள் குழந்தைப் போராளிகள் : ரி கொன்ஸ்ரன்ரைன்

Mohan_Rajயுத்தம் எப்போதுமே கொடுமையானது. இந்த யுத்தத்தில் தம்முயிரை இழந்தவர்கள் அங்கங்களை இழந்தவர்கள் என துயரங்கள் தாங்க முடியாதது. அதேசமயம் இந்த யுத்தத்தில் தம் குழந்தைப் பிராயத்தைப் பறிகொடுத்து குழந்தைப் படையினராக ஆயுதம் தரித்த இளையவர்களின் எதிர்காலத்தை மறந்துவிட முடியாது. இவர்களுடைய எதிர்காலம் கேள்விக்குறியாகி நின்ற போது இக்குழந்தைப் போராளிகள் விடயத்தில் உடனடியாக கவனமெடுத்த சில அமைப்புகில் லிற்றில் எய்ட் உம் ஒன்று. இக்குழந்தைப் போராளிகளின் புனர்வாழ்வு முகாம்களுக்குச் சென்று அவர்களுடைய தேவைகளையறிந்து லிற்றில் எய்ட் சிறு உதவிகளை மேற்கொண்டது.

அவ்வாறான ஒரு முயற்சியில் அங்கிருந்த  இளவயதினர் கேட்டுக்கொண்டபடி அவர்கள் தங்க வைக்கப்பட்டு இருந்த அம்பேபுச புனர்வாழ்வு மையத்திற்கு அவர்களுக்கு இசைக்கருவிகைள வழங்கி லிற்றில் எய்ட் அன்பளிப்புச் செய்திருந்தது. இதன் முதற் பகுதி இசைக் கருவிகள் யூலை 22ல் அவர்களுக்கு வழங்கப்பட்டது. அப்போது மேற்கொள்ளப்பட்ட பதிவுகளை அருகில் உள்ள இணைப்பில் காணலாம். http://www.youtube.com/user/LittleAidUK#p/a/u/2/JiIAZ8wqQwE

நவம்பர் 15ல் அவ்விளையவர்கள் சுமுகமாகத் தம் கல்வியைத் தொடர அவர்கள் இரத்மலானை இந்துக் கல்லூரிக்கு இடம் மாற்றப்பட்டனர். அங்கு இரண்டாவதும் இறுதியானதுமான இசைக் கருவிகளின் அன்பளிப்பு டிசம்பர் 22ல் வழங்கப்பட்டது. அப்போது அவ்விளயவர்களின் பங்குபற்றுதலை அருகில் உள்ள இணைப்பில் காணலாம். http://www.youtube.com/user/LittleAidUK#p/a/u/0/0UT-XfXcRHc

லிற்றில் எய்ட் உடைய உதவிகள் சிறியதாக அமைந்தாலும் அது குறித்த காலத்தில் அதன் தேவையை அறிந்து மேற்கொள்ளப்பட்டு இருந்தது. அவலத்திற்கு உள்ளான வன்னி மக்களுக்கு உதவுவதை ஒரு சிலர் கொச்சைப்படுத்திய போதும் இந்த இளயவர்களுக்கு உதவுவதை கொச்சைப்படுத்திய போதும் லிற்றில் எய்ட் தனது உதவி முயற்சியில் ஈடுபட்டு அவர்களுக்கு ஆறுதலாக இருந்தது.

தற்போது இலங்கையின் பிரபல பின்னணிப் பாடகர் மோகன் ராஜ் இந்த இளயவர்களுக்கு பயிற்சி கொடுத்து அவர்களில் இருந்து சிலரை தன்னுடன் பொது மேடைக்கு கொண்டு செல்வதற்கு லிற்றில் எய்ட் முயற்சி எடுத்து உள்ளது. அவர்களில் ஒரு சிலர் இசைக் கச்சேரி ஒன்றிற்காக ஐரோப்பா வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

லிற்றில் எய்ட் இன் ஏனைய உதவித்திட்டங்கள் விபரங்கள் கணக்குகளை அதன் இணையத்தில் காணலாம். http://littleaid.org.uk/

இசைக்கருவி அன்பளிப்புத் தொடர்பாக லிற்றில் எய்ட் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

LITTLE AID : Press Release 1st January 10

Little Aid is pleased to confirm that it has successfully completed the music project that it started with the ex combatants (child soldiers), who were the victims of war in Sri Lanka. Little Aid initially met these children when they were kept in Ambepusse Rehabilitation Centre, in between Colombo and Kandy in Sri Lanka. During this visit some of the children were specifically asking to provide them with facilities to learn modern music and also religious education. Little Aid promised them to provide these facilities at the earliest convenient time.

Little Aid is one of the few charities who have access to most of the locations where the surrendered soldiers and the civilians were kept. Initial sets of musical instruments were handed over to the children on 22nd July 2009 in Ambepusse. On 15th November 09 this centre was moved to Ratmalana Hindu College in order for the children to commence their formal education. Due to their special needs, these children are kept in a separate location within Ratmalana Hindu College and looked after. Little Aid have been given full access to these children and we can confirm that they are happy and well looked after.

With the help of Commissioner of Rehabilitation, Major General Daya Rathnayaka, we supplied the second and final set of musical instruments on 22nd December 2009. Commissioner General Daya Rathnayaka was the guest of honour on that Little Aid event. Little Aid was represented by Mr. Mark Fernando and Dr. Nimal Kariyawasam. From the attached YouTube clip, you can see the progress of the children who are capable of playing the modern instruments to the reasonable standards within a very short period of time.

We are also in touch with the very well known Sri Lankan cinema musician, Mr. Mohan Raj. Mr. Mohan Raj has agreed to guide these children and select some of them and provide them with an opportunity to perform to a larger public. As you may know, Mr. Mohan Raj is the leading classical singer in Sri Lankan who is capable in singing in both Singhalese and Tamil languages.

We herewith attached the video clip of the event held on 22nd December 2009 at Ratmalana Hindu College. Total cost of this project is £3196. You can inspect the full up-to-date income and expenditure accounts on www.littleaid.org.uk. We sincerely thank all the people who have contributed to this project. We would be very grateful if you could give exposure in your publication for the Little Aid work in Sri Lanka.

We wish you all happy & Prosperous New Year

Thank you.

Tarrin Constantine
Chairman

http://www.youtube.com/user/LittleAidUK#p/a/u/0/0UT-XfXcRHc

Show More
Leave a Reply to ranjan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  • ranjan
    ranjan

    தற்போது இலங்கையின் பிரபல பின்னணிப் பாடகர் மோகன் ராஜ் இந்த இளயவர்களுக்கு பயிற்சி கொடுத்து அவர்களில் இருந்து சிலரை தன்னுடன் பொது மேடைக்கு கொண்டு செல்வதற்கு லிற்றில் எய்ட் முயற்சி எடுத்து உள்ளது. அவர்களில் ஒரு சிலர் இசைக் கச்சேரி ஒன்றிற்காக ஐரோப்பா வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை//

    ஜரோப்பாவிலை இருக்கிற கத்துக்குட்டிகளை விட இவர்கள் இசை ரசிக்கக் கூடியதாக இருக்குமென்கதில் ஜயமில்லை.

    அவலப்பட்ட சனத்துக்கு உதவிய லிற்றில் எய்ட்டுக்கும் பாடகர் மோகன் ராஜ்ற்கும் எனது மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    Reply
  • thenaale
    thenaale

    தப்பிப் பிழைத்த குழந்தைப் போராளிகளின் விபரங்களை அவர்களது குடும்பத்தினருக்கு அரசு அறிவித்துள்ளதா? ஏனெனில் அவர்கள் பற்றிய தகவல்கள் ஏதுமின்றி பெற்றோர்கள் கண்ணீருடன் தவிப்பதாக கேள்விப்படுகின்றேன். அரசுக்கும் குழந்தைப் போராளிகளின் குடும்பத்தினருக்கும் இடையே லிற்றில் எய்ட் பாலமாக இருக்காதா?

    மேற்கு நாடுகளில் இவ்வளவு காலம் இருக்கும் உங்களுக்கு இப்படிப்பட்ட விடயங்களை எவ்வளவு நாசூக்காக கையாள வேண்டும் என்பது தெரியாதா? தயவு செய்து குழந்தைப் போராளிகளின் முகத்தை உங்கள் பெருமைக்காக யுரியூப்பில் காட்டாதீர்கள்.( உங்களை குறை சொல்வது எனது நோக்கமில்லை)

    இக் குழந்தைப் போராளிகள் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிகளில் மற்றைய சிறுவர்களுடன் சீர்திருத்தப்பட வேண்டியவர்களே அன்றி இவர்கள் தனியாக ராணுவ ரீதியான நிர்வாகத்தால் சீர்திருத்தபடுவது அவர்களுக்கு உளவியல் தாக்கத்தைக் கொடுக்கும் என வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

    Reply