ஐரோப்பிய எழுத்தாளர் சோபாசக்தி ராமேஸ்வரத்தில் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார்!!!

Sobasakthyதனது எழுத்துக்களால் ஊடகங்களில் அறியப்பட்ட ஐரோப்பிய எழுத்தாளர் சோபாசக்தி தற்போது முற்றிலும் வேறுபட்ட காரணத்திற்காக ஊடகங்களில் இடம்பிடித்துள்ளார். தனுஷ்கோடியில் ‘செங்கடல்’ ஆவணப் படம் எடுக்கும் குழுவினரிடையே நடந்த தகராறு தொடர்பாக கதாசிரியர் சோபாசக்தியை அப்பகுதிப் பொலீசாரினால் கைது செய்யப்பட்டார். ஐரோப்பிய எழுத்துலகில் நன்கு அறிமுகமான சோபா சக்தி தமிழக எழுத்துலகிலும் அறியப்பட்டவர். பிரான்ஸ் தலைநகர் பாரிஸை வாழ்விடமாகக் கொண்ட இவர் கமராமென் தீபக் என்பவரைத் தாக்கியதற்காகக் கைது செய்யப்பட்டார். விசாரணைகளைத் தொடர்ந்து இவர் விடுவிக்கப்பட்டதாகவும் தெரியவருகின்றது.

இது பற்றித் தெரியவருவதாவது, கடந்த 20 நாட்களாக இலங்கை அகதிகள் சம்பந்தபட்ட செங்கடல் என்ற ஆவணப்படத்தின் படப்பிடிப்பு ராமேஸ்வரத்தில் இடம்பெற்று வந்தது. ஜனவரி 2 இரவு செங்கடல் படத்தின் மானேஜர்கள் வெங்கட், தனுஷ் ஆகியோரிடம் உதவி கெமிராமேன்கள் தீபக், கனி, வெங்கட் உட்பட 3 கெமிராமேன்கள் ஊதியம் கேட்டதாகவும் ஊதியம் வழங்காமல் அவர்கள் ஏமாற்றப்பட்டதாகவும் தெரிய வருகின்றது. அதனால் ஆத்திரமடைந்த உதவி கெமராமன்கள் கனி, வெங்கட் ஆகியோர் படம் பதிவு செய்யப்பட்ட கேசட்டை எடுத்துக்கொண்டு சென்னை சென்றுவிட்டார்கள். இதையடுத்து மானேஜர்கள் வெங்கட், தனுஷ், கதாசிரியர் சோபாசக்தி ஆகியோர் தீபக்கை தாக்கி கேசட்டை கேட்டதாக கூறபடுகிறது.

இச்சம்பவம் குறித்து ஜனவரி 3 மதியம் ராமேசுவரம் கோவில் பொலீஸ் நிலையத்தில் தீபக் புகார் செய்தார். இப்புகார் தொடர்பான விசாரணையை மேற்கொண்ட பொலீசாரிடம் படத்தின் டைரக்டர் லீனா மணிமேகலை தகராறு செய்ததாகவும் அதை போலீஸ்காரர் நாகராஜ் என்பவர் செல்போன் மூலம் படம் பிடித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த அடைந்த லீனா மணிமேகலை போலீஸ்காரர் கையில் இருந்த செல்போனை பிடுங்கியதாக கூறபடுகிறது.

இறுதியில் பொலிசார் தீபக்கை தாக்கியது தொடர்பில் கதாசிரியர் ஷோபாசக்தியை கைது செய்து பொலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். கெமராமேனை தாக்கியதாக கூறபடும் மானேஜர்கள் வெங்கட், தனுஷ் ஆகிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

பொலிஸாரின் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அல்லது ஊடகங்களில் வெளியாகி உள்ள செய்திகள் தொடர்பாக கதாசிரியர் எழுத்தாளர் சோபாசக்தி எவ்வித கருத்தையும் தனது இணையத்தில் பதிவு செய்யவில்லை. அவருடன் தொடர்பு கொள்ளவும் முடியவில்லை.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

 

26 Comments

 • Seelan
  Seelan

  முன்னால் புலி இதனை விட வேறு என்ன செய்வார்?

  Reply
 • senthil
  senthil

  சோபாசக்தி எல்லாம் புலியின் எதேச்சாதிகாரப் போக்கை பற்றி எப்படி வாய் திறக்க முடியும். ஊருக்கு உபதேசம் எனக்கு இல்லையடி மணிமேகலை

  Reply
 • suganthy arumugam
  suganthy arumugam

  A self-proclaimed leftist writer backs the financier who has not paid their wages to the workers. when the workers protested and took action and the ilakkiya- thatha sabasakthi came to rescue the boss nice isn’t it?

  Reply
 • DEMOCRACY
  DEMOCRACY

  “சொகுசு போர்க்கப்பலின்” “பெண்ணியிம் & தலித்தியம் & கம்பெனிகளின்” (கவிஞர் கனிமொழி எம்.பி, தமிழச்சி தங்கப் பாண்டியன் போன்று) ,”அடியாளாக, பெண் ரவுடியாக” செயல்படுபவர், லீனா மணிமேகலை!.

  Reply
 • பல்லி
  பல்லி

  இவர் அறியபட்டவர் என்பது தவறு; இவர் ஒரு ரவுடி என்பதால் சில எழுதாளருக்கு மட்டுமே அறியபட்டவர், இவர் ஒரு கவர்ச்சி நடிகை போல்தான்; இடைக்கிடை நிர்வான ஆட்டம் போடுவதால் அவரது ஆதரவாளர்களாலேயே ஓகோ என பேசபடுவார், கூட்டுகலாவியின் நாயகனல்லவா? இவரது ரவுடிதனம் மிக மோசமானது, பாரிஸ்ல் தமிழிச்சியின் ஊடகத்தை தனது விருப்பதிணங்கவில்லையென உடைத்து அட்டகாசம் செய்தாராம்; ஆனால் தமிழிச்சி தனிஒரு பெண்ணாக இந்த ,,,,செயல அம்பலபடுத்தி பாரிஸ்சில் வாய் திறக்க முடியாமல் செய்துவிட்டார், அதன்பின் இந்திய பெண்ணியவாதி;;;;;; அம்மையாருடன் தமிழக எழுத்தாளர் ஆகி சில புத்தகங்களுக்கு பேட்டியும் கொடுத்தார், ஈழதமிழரின் பேரை கெடுப்பதில் முன்னனி மன்னர்களில் இவரும் ஒருவர், இதே தேசத்தில் பல தடவை இவரது படம் ஓடியது;

  Reply
 • rohan
  rohan

  //Seelan முன்னால் புலி இதனை விட வேறு என்ன செய்வார்?//

  உங்களால் முடிந்தது இவ்வளவு தானா? ஒரு வன்முறையாளனை வன்முறையாளன் என்று பாருங்கள். குற்றம் நிரூபிக்கப்படும் வரை இவர் நிரபராதி தான் என்பதையும் நாம் மறக்கலாகாது.

  Reply
 • DEMOCRACY
  DEMOCRACY

  இலவசமாக சில பொருட்கள் தருகிறோம் வேண்டுபவர்கள் கையைத் தூக்குங்கள் என்றால் அனைவரும் கையத் தூக்குவது போல்தான் “யாழ்ப்பாண வெள்ளாலார்” என்ற சொல்லாடல்!. கலைஞர் கருணாநிதி, க.அன்பழகன், ரணில் விக்கரமசிங்கே, சரத் பொன்சேகா போன்றோர்களும் தங்களை “யாழ்ப்பாண வெள்ளாளர்கலாக” அடையாளம் கட்ட முனைவது என்பது தெரிவிக்கும் அரசியல், முள்ளியவாய்க்கால் போன்று மிச்சமுள்ள தமிழரையும், “இன்னொரு முள்ளியவாய்க்காலை நோக்கி செலுத்துவது ஆகும்” – இதுதான் “சொகுசு போர்க்கப்பல்”. ஜே.ஆர். ஜெயவர்த்தனே வழி வந்த ரணில், இதன் சூத்திரதாரியா? (புரிந்துணர்வு ஒப்பந்தம் போல்), இவர் கலைஞரைவிட தந்திரசாலியா என்பது வரும் காலங்களில் தெரிய வரும். முரசொலி மாறனுக்கு பிறகு உலக அரசியல் கலைஞருக்கு குழப்பமானது. சிங்களவர்களின் புத்தவாத தேசிய, மேற்குலக எதிர்ப்பும், “காலனித்துவத்திற்கு எதிரான இந்துத்துவமும்” ஒன்று அல்ல!. இவைகள் ஒன்றிணைவது “யாழ்ப்பாண வெள்ளாலர் எதிர்ப்பு அல்ல”!.இலங்கை இனப்பிரச்சனை,தரப்படுதலில் துவங்கி, பரிதாபத்திற்குறிய “யாழ்ப்பண வெள்ளாளருக்கு எதிராக”, மேற்குலக எதிர்ப்பாக உள்ளது என்ற “கயிற்றை” பிரிட்டனின் உள்ள “இத்துபோன பிரிட்டிஷ் எம்.பி. க்கள்” வேண்டுமானால் நம்பி, ஒரு கருத்தியலை உருவாக்கலாம். ஆனால் எங்கள் பிரச்சனை அங்கு மையம் கொண்டிருக்கவில்லை!. காலனித்துவத்திற்கு எதிராக முதலில் போராடியது அமெரிக்கா, அது முதலாலித்துவமாக பரிணமித்து, “ஐடியலிசமாக” மாறி (கம்யூனிச எதிர்ப்பு, டெமகரசி), செப்டம்பர் 11, 2001 தாக்குதலுக்குப் பின்பு, ஒருவித “கிருஸ்துவ மதம்” சார்ந்த “இம்பீரியலிசமாக” உலகம் முழுவதும் விரிந்து வருகிறது. இதற்கிடையில், “கிளாசிக்கல் முதலாலித்துவமும்” ஆட்டம் கண்டு வருகிறது. நமக்கருகில் இது “அப்கனிஸ்தானில் ஆழ வேறூன்றி வருகிறது”!. அமெரிக்காவினது “ஐடியலிஸமாக” இருப்பதால், தங்கள் உள்நாட்டு வேலைவாய்ப்பு, பொருளாதார தேவை, ஆயுத விற்பனை, அழியும் நாடுகளில் மீள்கட்டுமானம் போன்ற நடைமுறை பிரச்சனைகளை உடனடியாக தொடர்பு படுத்துவதில்லை. ஆனால், ஐரோப்பாவின் கொள்கை நடைமுறையான “இன்டரஸ்ட் பாலிட்டிக்ஸாக” இருப்பதால், நடவைக்கைகள் “இராட்சஷ இயந்திரம் போல்” நகருகிறது. மீள் கட்டுமானத்தில் “ஆப்கானிஸ்தானில்” இந்தப் போக்கை இந்திய நிறுவனங்கள் “சீமென்ஸ்” போன்றவற்றுடன் ஆதரிக்கிறது!. இவர்களுக்கு தீனிப் போட முள்ளியவாய்க்கலின் வழிமுறையை, “திராவிட தவளைக் கத்தலாக” இவர்களுக்கு “கற்றுக் கொடுத்தோம் என்றால்” இப்பகுதியில் பல “மீள்கட்டுமான பணிகள்” நடைபெறும் என்பது நிச்சயம். அட நமக்கு என்ன கவலை நாம்தான் புலன் பெயர்ந்து விட்டோமே!.

  Reply
 • Kusumpu
  Kusumpu

  //குற்றம் நிரூபிக்கப்படும் வரை இவர் நிரபராதி தான் என்பதையும் நாம் மறக்கலாகாது.// ரொகான்- அது சட்டத்தில் சமூகத்தில் அல்ல. சிலவேளைகளில் சட்டம் காணமுடியாத குற்றங்களை நீதிமன்றம் ஏறாத ஏற்ற முடியாத குற்றங்களை சமூகம் காண்கிறது முறையாகவும் தண்டிக்கிறது. ஐரொப்பாவில் சிலவேளைகளில் சட்டம் சரியாகச் செயல்பட்டாலும் சமூகம் செத்துத்தான் கிடக்கிறது.

  Reply
 • Rama
  Rama

  இந்தப் படம் குறித்து விசாரித்தபோது….செங்கடல் என்கிற படம் மீனவர் தொடர்பான படம் என்றும், “புலிகளால் மட்டுமே தமிழக மீனவர்களுக்கு பிரச்சனை, தமிழக மீனவர்களின் வாழ்க்கை ஆதாரம் விழவும், கடலின் மீதான உரிமை பறி போகவும் காரணமாக இருந்தவர்கள் அவர்கள்தான் என்றும் சித்தரித்தும் உண்மையான பிரச்சனையை மடைமாற்றுவதுதான் கதை” என்றும் சொல்கிறார்கள். ஷோபா சக்தி இந்தக் குழுவில் இருப்பதால் ஓரளவு நம்பும் படியாகவும் இருக்கிறது. மேலும் இப்படம் இந்தியாவில் வெளியிடப்படாதாம். முழுக்க முழுக்க வெளி நாடுகளில் மட்டுமே காண்பிக்கப்படுமாம். நேர்மையான நோக்கத்துக்காக புலிகளைப் பற்றி விமரிசிப்பது என்பது வேறு, இலங்கை அரசையும் இந்திய அரசையும் வைத்துப்பிழைக்கும் வாய்ப்புக்காக புலிகளை விமரிசிப்பது என்பது வேறு. செங்கடலின் ‘ஆழத்தை’ பார்க்கும் போது படத்தில் நிச்சயமாக வில்லங்கம் இருக்கும் என்றுதான் தோன்றுகிறது.

  Reply
 • பல்லி
  பல்லி

  :://நிரபராதி தான் என்பதையும் நாம் மறக்கலாகாது.:://
  பிரபாகரன் கூட நிரபராதி என சொல்வோரும் உண்டு, மக்களே குற்றவாளிகள் என்னும் புண்ணாக்குகளும் உண்டு;
  சோபா மனிதஇன அடிபடை நாகரிகமோ அல்லது பண்போ தெரியாத ஒருவர் என்பது எத்தனை பேருக்கு தெரியும்; அவரது வண்டவாளங்கள் தெரிய வேண்டுமாயின் தமிழிச்சி தளத்தை கவனியுங்கள், சோபாவுக்கு பயம் இல்லாமல் மிக நிதானமாக சோபாவை பக்கம் பக்கமாய் பதம் பாத்திருப்பார்; அனைத்தும் ஊகங்கள் அல்ல உன்மைகள்;

  Reply
 • thiru
  thiru

  அண்ணன் சோபாசக்தி பசுத்தோல் போத்தின ஜனநாயகப் புலி என்று பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவர் பாரிசில் ஒரு உணவு விடுதியில் புகுந்து கண்ணாடி உடைத்து தனது ஜனநாயக விழுமியங்களை வெளிக்காட்டியவர். அவர் கூட்டுக் கலவிக்கு இறுதியாகச் தேர்ந்தெடுத்திருக்கும் அம்மணி ஒரு ஜகஜாலக் கில்லாடி. அவருடன் சேர்ந்த லண்டன் கும்பம் குழு அமைப்பாளரிட்டை கிடந்ததெல்லாம் உருவிப்போட்டு கீற்றர் போடேல்லை மனுசன் என்று அறிக்கை விட்டவா.

  சுவிசிலை இருக்கும் துப்பல் போர்வை குறும்பட இயக்குனரோடை கூட்டடிச்சு சுமார் 15லட்சம் இந்திய ரூபாய்களை சுருட்டிக்கொண்டு முடிஞ்சா பண்ணிப் பார் என்று சவால் விட்டவாவாம். இப்ப அண்ணன் சோபாசக்தி அம்மணிக்கு விளையாட்டுக்காட்ட பாய்ந்து விளையாடியதாகவும் இதனாலேயே பொலிஸ் பிடிக்க வேண்டி வந்ததாயும் நிழல் புத்தக ஆசிரியர் திருநாவுக்கரசு பிரஸ்தாபித்ததாகத் தகவல் கிடைத்திருக்கிறது.

  அம்மணியைக் கண்ணடவடன் அண்ணன் சோபாக்கு ஆம்பிளைக் குணம் வந்து ரத்தம் கொதிக்க புலியிலை விட்ட விளையாட்டை அப்பாவிக் கமரா தொழிலாழியிடம் காட்டியிருக்கிறாரே! கார்ல் மாக்ஸ் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கொடுக்காதவருக்குத் தானே அடிக்கச் சொன்னவர். ஒரு வேளை சோபா அண்ணை அதைப் பிழையாக விளங்கித் தொழிலாழியை போட்டுத் தாக்கி விட்டாரோ.

  உழைத்தவன் ஊதியம் கேட்பது மாக்சிச நடைமுறையில் தப்போ தெரியாது. மாக்சிசம் தெரிஞ்ச ஆரும் எனக்கு கொஞ்சம் விளக்கமாச் சொல்லுங்கோ பிளீஸ்

  Reply
 • thava
  thava

  பல்லியின் விமர்சனங்கள் எல்லாம் இந்த லட்சணத்தில்தான் இருக்கின்றனவா? சோபாசக்தியையும் தமிழச்சியையும் இன்னும் சிலரையும் உங்களைவிட தெரிந்தவர் என்பதால் குறிப்பிடுகிறேன். நீங்களும் கேள்விச்செவியன் ஆகிப்போனதில் மிகவும் வருந்துகிறேன் பல்லி.

  Reply
 • Naane
  Naane

  உண்மை தவா,
  யார் என்னதான் சொன்னாலும் புலம் பெயர்ந்ததமிழ் எழுத்தாளர்களில் இவர்தான் இப்போது முதன்மையானவர். தனிப்பட்ட பிரச்சனைகள் காரணமாக சந்தர்ப்பம் கிடைத்தவுடன் சமா வைப்பது தமிழரின் பண்பாடு. இது சம்பந்தர் தொட்டு சோபா சக்தி வரை பொருந்தும். உலகம் முழுவதும் இணையத்தில் தமிழன் இதுதான் செய்கின்றான். கச்சேரியும் பின் ஒத்தூதலும்.

  Reply
 • சாந்தன்
  சாந்தன்

  மேலே சொன்ன நிகழ்வு உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் சோபா ஒரு போலி என்பது இன்னும் ஒரு சுற்று இறுகும். தற்போது மாக்சியம், சோசலிசம், மாற்றுக்கருத்து பேசுவோர் உண்மையான கொள்கைவாதிகள் அல்ல வெறும் புலிஎதிர்ப்பு உத்திக்காக அவற்றைக்கையில் எடுத்தவர்கள் என சொல்லிவந்தவர்களும் தாம் சரி என கூறுவர். புலம்பெயர் புத்திஜீவிகள் ஸ்ரீலங்கா சென்று வந்தபோது இவற்றை ஓரளவு அறிந்துகொண்டோம்.

  சோபாசக்தியைக் குற்றவாளி என நாமே தீர்ப்புவழங்கி ”போகிறபோக்கில்”, ”குத்துமதிப்பாக” தாக்கி ”இழுத்துவைத்து” அவர் ”தலையில் தொப்பியை” மாட்டுவோர் அவர் கருத்தையும் கேட்டபின் தீர்ப்புச் சொல்வது நல்லது.

  இந்தியாவில் முக்கியமாக இரண்டு விடயங்களில் ஈழத்தவர் ஈடுபடக்கூடாது என்பது இந்தியாவில் வாழும் எனது நண்பனின் கருத்து. ஒன்று சினிமா மற்றையது பொலிஸ் சம்பந்தமான விடயங்கள். சினிமாவில் உச்சமட்டத்தில் இருந்து அடிமட்டம் வரை ஏமாற்றுக்காரர்கள் (சில மனிதாபிமான மனிதர்கள் விதிவிலக்குகளாக இருப்பதை மறுக்கவில்லை)அதுவும் வெளிநாட்டில் இருக்கும் ஈழத்தவன் மாட்டிக்கொண்டால் அதோகதிதான். அவர்களின் ‘ஐஸ் வைத்து மிளகாய் அரைக்கும் கதைகளுக்கு’ நீங்கள் வளைந்து கொடுக்காவிடில் அடாவடித்தனத்தை கொஞ்சம் காண்பிப்பார்கள், அதுவும் சரிவரவில்லை என்றால் கொஞ்சம் புலி/ராஜிவ் கொலை கதையை இழுத்து விடுவார்கள். அதற்கும் மசியவில்லை என்றால் பொலிஸ் வரும்.இந்த பொலிஸ் சிலவேளை சினிமா பொலிசாகவும் இருக்கும். அவர்கள் வந்து மறுபடி உங்கள் ஐரோப்பிய பணத்தில் கண்வைத்து ஆரம்பித்து சரிவராத பட்சத்தில் எல்.ரி.ரி.ஈ என உள்ளே போட்டால் வசதி எப்படி என முடிப்பார்கள். எனவே தயவு செய்து சோபாசக்திக்கு அவர் தனது எழுத்துகளில் கோரி நிற்கும் ’Benefit of the doubt’ ஐ வழங்குங்கள்.

  சோபாசக்தி பாட்டாளி வர்க்கம், அதிகாரத்தை நோக்கி உண்மையைப் பேசுவோம், மாற்றுக்கருத்து அது இது என்பதெல்லாம் வெறும் பம்மாத்து என்று முன்பிருந்தே கூறிவருபவர்களில் ரயாகரன் முக்கியமானவர். இன்று நடந்த நிகழ்வு உண்மை என்றால் ரயாகரனின் கருத்துகள் உண்மை எனவாகிப்போகும். சோபாவின் ‘நம்பிக்கை’ முகத்திரையை ஓரளவு கிழித்தவர்களில் முக்கியமானவர் தமிழச்சி. இந்த தமிழச்சி பெண்கள்சந்திப்பு அல்லது இலக்கியச்சந்திப்பிலும் இச்சந்திப்புக்காரரை நம்பி நம்பி ஏமாந்த கதையையும் எழுதி இருந்தார். சோபாவின் முகத்திரையுடன் சுகனின் மூடியும் கிழிந்தது தனிக்கதை. மேலும் சோபாசக்தி வேறுவழி இல்லாமல் ‘பிறழ்சாட்சியம்’ என கவிதை பாடி ஒளித்துக்கொண்ட பரிதாபமும் நாம் அறிந்தவைதான்.

  சோபாசக்தியின் எழுத்துக்களை இணையத்திலும் அச்சிலும் விரும்பிப்படிக்கும் ஒருவன் நான். ஆனால் அவரின் தனிப்பட்ட கொள்கைகளில் எனக்கு கொஞ்சமும் உடன்பாடில்ல்லை. அவர் எப்போதும் புலிகளை குற்றம்சொல்வதில் முன்னிற்பவர். புலி இல்லாத பட்சத்தில் யாழ்ப்பாணம், வெள்ளாளர் என போவார் கேட்டால் கருத்துமயக்கம் கொண்ட சொல்லாடல்களால் சமாளிப்பார். உதாரணமாக புலிகளை 100% பிடிக்காது அரசை 110% பிடிக்காது என்பார்! 100%க்கும் 100%க்கும் என்ன வித்தியாசம் என நீங்கள் முழிக்கவேண்டி இருக்கும்.

  இந்தியாவில் இருக்கும் பிராமண எதிர்ப்பு சக்திகளின் நல்லபெயரெடுக்க யாழ்ப்பாண மையவாதம், வெள்ளாளர் அடக்குமுறை என்பார். ஆனால் இந்திய நூலகவட்டத்தில் செல்வாக்குள்ள வெள்ளாள அடக்குமுறைக்கு எதிராக ஒன்றும் சொல்லாத யாழ்ப்பாணத்தாருடன் நல்ல நட்புவைத்திருப்பார். அவ்நட்பு அவர் இந்தியா செல்லும்போது பொங்கிப்பிரவாகிக்கும்.

  இப்போ ஆவணப்படம் எடுக்கப்போய் இப்படி மாட்டி இருக்கிறார். பொறுத்திருந்து பார்ப்போம்.

  Reply
 • பல்லி
  பல்லி

  ::// இதுக்கான விடை உங்கள் பின்னோட்டத்துக்கு பின் வந்தவர்கள் எழுதியதால் நான் எழுதவில்லை;
  //சோபாசக்தியையும் தமிழச்சியையும் இன்னும் சிலரையும் உங்களைவிட தெரிந்தவர் //thava
  மிக்க மகிழ்ச்சி எங்கிருந்து வாதத்தை தொடங்கலாம்?
  தீவு பகுதியில் மண் லாரியில் இருந்தா? அல்லது பாடசாலை மாணவிகளை…. என (புலி பலத்தால்) விமர்சித்ததையா? சரி அதை விடுவோம். புளொட் உரித்திராவுடன் கூடி செய்த கலாபம் பற்றி பேசுவோமா? தமிழக பெண்மணியுடன் நடத்திய பெண்ணியம் பற்றி பேசுவோமா? பல்லி தமிழிச்சியின் பிரச்சனையில் தமிழிச்சிக்கு அவரது துணிவை பாராட்டி பெரியாரின் பேத்தி என ஒரு கவிதை எழுதினேன்; முடிந்தால் உங்கள் நண்பி தமிழிச்சியிடம் கேட்டு படியுங்கோ; இன்று வந்த பல்லியல்ல அன்றே பல்லி சோபாவுக்கு எனது கடுப்பை தெரிவித்து விட்டேன. உயிருடன் உள்ள ஒருவருக்கு உங்கள் மாண்புமிகு எழுதிய கல்வெட்டு படிக்கவில்லையா?
  இது புலி குணம் இல்லாமல் வேறு என்னவாம். இறுதியாக ஒருவிடயம் உங்கள் நண்பனிடம் கேளுங்கள் பாரிஸ்சில் நடந்த தலித்திய மக்கனாட்டு அன்று சோபாவுக்கும் தமிழிச்சிக்கும் என்ன பிரச்சனை என்று; அவர் சொல்லாவிட்டால் நாடுங்கள் உங்கள் நன்பி தமிழிச்சியை அனைத்தையும் பல்லி போல் இல்லாமல் பட்டா போட்டே சொல்லுவார்.

  Reply
 • பல்லி
  பல்லி

  சாந்தன் தமிழகத்தில் இன்றுவரை சினிமாவிலும் சில வியாபாரத்திலும் ஈழதமிழர் இருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது; சோபாவை வைத்து கொண்டு ஈழ தமிழர் தமிழக உறவுகளை மதிப்பீடு செய்யலாமா??

  Reply
 • சாந்தன்
  சாந்தன்

  //..சோபாவை வைத்து கொண்டு ஈழ தமிழர் தமிழக உறவுகளை மதிப்பீடு செய்யலாமா?…//

  பல்லி அதற்காகத்தான் அடைப்புக்குறிக்குள் விதிவிலக்குகள் பற்றிப் போட்டிருக்கிறேன். ஈழத்தமிழருக்காக குரல்கொடுப்போர் பற்றி இங்கு பலவிதச் சொல்லாடல்களினாலும் அவர் புலி , அவர் பினாமி, சினிமாக்காரர் என்போர்க்கிடையே உறவுகள் பற்றி அனுதாபத்துடன் நோக்கும் உங்களுக்கு நன்றிகள். தமிழ்நாட்டு சினிமத்துறைக்குள் எனக்குத் தெரிந்த இருவர் இருக்கிறார்கள் ஒருவர் தயாரிப்பாளர் மற்றவர் இயக்குனர். அவர்களின் வேதனையான கருத்தே நான் மேலே சொன்னது.

  Reply
 • சாந்தன்
  சாந்தன்

  நான் சோபாவை வைத்து மதிப்பிடச் சொல்லவில்லை. பொறுத்திருங்கள் என்கிறேன். அவர் பிரான்ஸ் வந்து நிச்சயமாக ‘கல்வெட்டு’ அடிப்பார் அல்லது ‘சத்தியக்கடதாசி’ முடிப்பார் தானே?
  அண்மையில் சென்னையின் புகழ்பெற்ற கடையில் (சரவணாஸ் என நினைக்கிறேன்) ‘திருட்டு’ குற்றம் சாட்டி ஈழத்தமிழர் ஒருவரை அடித்து நொறுக்கிய கதை வெளிவந்தது. நல்லகாலம் அவர் வழக்குத்தாக்கல் செய்து நீதி கிடைத்தது. சோபா இந்திய வெகுஜனப் பத்திரிகைகளை கிண்டல் செய்துகொண்டே அப்பத்திரிகைகளுக்கு பேட்டியும் கொடுப்பார். அதேபோல இம்முறையும் அங்கிருந்தபடியே பேட்டி கொடுக்கிறாரா பார்ப்போம்?

  Reply
 • BC
  BC

  இந்த செய்தியே தவறானது என்கிறார் ஆவணப் படத்தின் இயக்குனர்.
  http://ulaginazhagiyamuthalpenn.blogspot.com/2010/01/blog-post_07.html

  Reply
 • பல்லி
  பல்லி

  சாந்தன் பல்லி தவறாய் எழுதியிருந்தால் மன்னிக்கவும்; சிலரது பெயரையோ அல்லது அவர்களது நடவடிக்கைகளையோ கேட்டாலே பல்லிக்கு கடுப்புதான் வருகிறது; இவர்கள் என்ன நாக்கு முக்கா தன்னும் ஆடட்டும்; சமூகத்தை இழுக்காமல்;

  Reply
 • munivan
  munivan

  “இரண்டு நாள் படச் சுருளை எடுத்துக் கொண்டு ஓடிய குற்றத்தை விசாரிக்க நடந்த தகராறில் ஏற்பட்டது தான் போலீஸ் விசாரணை குழப்பம் எல்லாம். யாரும் கைது செய்யப்படவில்லை. தவறான செய்தி வெளியிட்ட தினத்தந்தி தினமலர் விஷமிகளிடம் ஆதாரங்களை கேட்டுப் பார்த்தால் உண்மை புரியும்.”

  லீனா தினத்தந்தி தினமலருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கலாமே? உண்மை எது என்று புரியும். வேலை செய்தவாவுக்கு சம்பளம் கொடுக்காதது மிகப் பெரிய தவறு. இதற்கு தோழர் சோபாவும் உடந்தை என்பது …….

  Reply
 • Nesan
  Nesan

  ஈழத் தமிழர்களிடம் பணம் வாங்கவில்லை என்று கூறும் லீனா அஜீவனிடம் கறந்ததைக் கூடவா மறுக்கிறார். ஆதாரத்திற்க்கு நடிகர் நாசரைக் கேளுங்கள். நாசரிடம் இருந்த படத் தொகுப்புக் கருவிகளைக் கொண்ட நிறுவனத்தை பங்காளிகள் அடிப்படையில் வியாபாரம் செய்யலாம் என்று அஜீவனுக்கு கூறி அஜீவனும் தனது சேமிப்பெல்லாம் கொடுத்த பின் தரமுடியாது பண்ணுவதைப் பண்ணிப்பார் எனறு கூறியவர் என்று அஜீவன் ஒருமுறை என்னிடம் கூறியிருக்கிறார்.

  Reply
 • அஜீவன்
  அஜீவன்

  //Nesan on January 8, 2010 8:31 am ஈழத் தமிழர்களிடம் பணம் வாங்கவில்லை என்று கூறும் லீனா அஜீவனிடம் கறந்ததைக் கூடவா மறுக்கிறார். ஆதாரத்திற்க்கு நடிகர் நாசரைக் கேளுங்கள். நாசரிடம் இருந்த படத் தொகுப்புக் கருவிகளைக் கொண்ட நிறுவனத்தை பங்காளிகள் அடிப்படையில் வியாபாரம் செய்யலாம் என்று அஜீவனுக்கு கூறி அஜீவனும் தனது சேமிப்பெல்லாம் கொடுத்த பின் தரமுடியாது பண்ணுவதைப் பண்ணிப்பார் எனறு கூறியவர் என்று அஜீவன் ஒருமுறை என்னிடம் கூறியிருக்கிறார்.//

  இங்கே சில திருத்தங்களை சேர்க்கலாம் என நினைக்கிறேன். லீனா சுவிஸில் இடம் பெற்ற குறும்பட விழாவுக்கு மாத்தம்மா எனும் ஆவண குறும்படத்தை நிழல் பத்திரிகை ஆசியர் திருநாவுக்கரசு மூலம் அனுப்பியிருந்தார். அதன் பின்னர் நிழல் திருநாவுக்கரசுவிடம் தொடர்பு கொண்டு, திரைப்பட விழாவுக்கு வர உதவுமாறு கேட்டதோடு, தனது ஆவணப்படத்தை சிறந்த ஆவணப்படமாக தேர்வு செய்யுமாறு பல முறை தொலைபேசியில் பேசினார். அதே போல திருநாவுக்கரசு ஒரு குறும்படத்தை சிறந்த குறும்படமாக தேர்வு செய்யுங்கள் என்று அழுத்தம் கொடுத்துக் கொண்டேயிருந்தார். அவை தேர்வுக் குழுவின் விடயம் என கடுமையாக சொன்னேன். இருந்தாலும் சுவிஸில் நடைபெற்ற குறும்பட விழாவுக்கான குறும்படங்களை அனுப்ப செலவாகும் பணத்தை திருநாவுக்கரசுவுக்கு அனுப்பினேன். இவை பொதுவான நடைமுறையல்ல. இலங்கை தமிழரது குறும்படங்கள் சில அரசியல் வட்டத்துக்குள் சிக்கியிருந்ததால் அவற்றை முதன்மைப்படுத்த முடியாத நிலை எமக்கு இருந்தது.

  அதே நேரம் நல்ல குறும்படங்களை தேர்வு செய்து மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். அவற்றை பார்த்தாவது புலத்து படைப்பாளிகள் வித்தியாசமான படைப்புகளை கொண்டு வர வேண்டும் எனும் எண்ணம் காரணமாக உலக தமிழர் படைப்புகளை விழாக்கள் வழி பார்க்க வழி செய்தல் நல்லது என நினைத்தேன். இக் காலத்தில் இலவச குறும்பட பயிற்சிப் பட்டறைகளையும் நான் சில நாடுகளில் செய்யத் தொடங்கியிருந்தேன். இதன் முதல் முயற்சிக்கு கரம் கொடுத்தவர் தேசம் ஜெயபாலன். ஐரோப்பிய திரைப்பட விழா எனும் குறும் – ஆவண பட விழாவை சுவிஸிலும், லண்டனிலும் நடத்துவது என முடிவெடுத்து தொடங்கினாலும், இறுதியில் சுவிஸில் மட்டுமே நடைபெற்றது. அது முதலும் கடைசியுமானது.

  தேசம் ஜெயபாலன், லண்டனில் ஈழத்து படைப்பாளிகளின் படைப்புகளை மட்டும் லண்டன் விழாவில் காட்ட வேண்டும் என தெரிவித்ததால், நான் லண்டன் விழாவை ரத்துச் செய்தேன். அதற்கு காரணம் படைப்புகளை, படைப்பாளிகளிடம் கோரும் போது சுவிஸ் – லண்டன் நாடுகளில் விழா நடைபெறும் என தெரிவித்திருந்தேன். சுவிஸில் அனைத்து குறும்படங்களும், திரையிடப்பட்டு சுவிஸ் திரைப்படத் துறையினரால் தேர்வுகளும் நடந்து முடிந்து பரிசுகளும் சான்றிதழ்களும் கொடுக்கப்பட்டன. இந் நிலையில் ஈழத்து படைப்பாளிகளின் (புலம்பெயர் ஈழத்தவர் படைப்புகள் உட்பட) படைப்புகளை மட்டும் லண்டனில் திரையிடுவது முறையல்ல எனும் காரணத்தால் அதை ரத்து செய்தேன். அது பல மனவேதனைகளை உண்டாக்கினாலும், இதில் நான் எடுத்த முடிவு சரியானதாக கருதினேன். எனக்கு சுமார் 6,000 சுவிஸ் பிராங் அளவு இழப்பு ஏற்பட்டது.

  இதனிடையே பரிசு கேடயங்களையும், சான்றிதழ்களையும், சென்னையில் விழா நடத்துவதற்குரிய பணத்தையும் நிழல் திருநாவுக்கரசுக்கு அனுப்பினேன். ஆனால் திருநாவுக்கரசு தமது விழாவாக நடத்தி கேடயங்களை மட்டும் சில பிரமுகர்களை வரவழைத்து சென்னை சோவித் திரைப்பட அரங்கொன்றில் கொடுத்து, நான் சுவிஸ் குறும்பட விழாவில் பணம் சம்பாதித்ததாக அவரது நிழல் திரைப்பட சஞ்சிகையில், வந்தவர்களது எண்ணிக்கையை வைத்து மோசமான கட்டுரை ஒன்றை அண்ணாதுரை எழுதியதாக வெளியிட்டிருந்தார். அக் கட்டுரையில் சிறப்பாக நடந்ததாக விழாவையும், வந்தவர்கள் தொகையோடு அனுமதிக் கட்டணத்தை போட்டு எமது குறும்படங்கள் வழி, புலத்தவர் பணம் சம்பாதிக்கிறார்கள் எனும் தொணியில் இருந்தது அக் கட்டுரை.

  திரைப்பட ஒழுங்கு, திரையரங்கு, காலை முதல் மாலை வரையான உணவு, இணைய தள உருவாக்கம், கேடயங்கள், சான்றிதழ்கள் என செலவானதை திருநாவுக்கரசு கணக்கெடுக்காமல் பணத்தை குறியாக கட்டுரை வரைந்திருந்தார். சென்னையில் நடந்த விழாவின் படங்களை திருநாவுக்கரசின் “நிழல்” சஞ்சிகையிலும், “சொல்லப்படாத சினிமா” ( http://www.viruba.com/final.aspx?id=VB0000466) எனும் புத்தகத்திலும் பிரசுரித்தாலும், அதற்கும் எமது அமைப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லாததாக காட்டி தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். எமது விழா குறித்து ஒரு பக்க குறிப்போடு திருநாவுக்கரசு நிறுத்திக் கொண்டார்.

  இக் கால கட்டத்தில் ஜெர்மன் நாடு இந்தியாவில் உள்ள கல்வியையையும், ஜொமன் கல்வியையும் இணைத்து ஒரு ஜேர்மன் தொலைக் காட்சி உருவாக்கிய ஆவணப்படத்தில் பணிபுரிய வந்த லீனா, படப்பிடிப்பு முடிந்தும் ஜேர்மனியில் இருக்க விரும்பி, ஏதோ தில்லு முல்லு செய்யப் போக, அவரை இருந்த விடுதியில் இருந்து உடனடியாக வெளியேற சொன்ன நிலையில், என்னைத் தொடர்பு கொண்டார். கவிஞர் அறிவுமதி யாருக்கோ உதவ சொல்ல, அவர்களும் உதவவில்லை என்று தத்தளித்து இருப்பதாக சொன்னார். நான் உடனடியாக அங்கு சென்று, அவரை பார்த்த போது, அவர் ஜெர்மனிக்கு வரும் போதே, ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் உத்தேசத்துடன் வந்திருப்பதாகவும், தமிழர்களை சந்திக்கும் நோக்கில் வந்திருப்பதாக சொன்னார். அதற்காக அவர் பலரோடு பேசியிருந்தார். இவர்களில் முக்கியமானவர்கள் சுவிஸ் ரஞ்சி, லண்டன் கலைஞர் ராஜா மற்றும் பிரான்ஸ் சோபா சக்தியாகும். ஆனால் இவரது கையில் பணம் மட்டும் இருக்கவில்லை.

  ஏதோ ஒரு வகையில் இவர்களை சந்திக்கவும், சந்திப்புகளை நடத்தவும் உதவினேன். ஆனால் இவர் போன இடமெல்லாம் நாத்தியிருந்தார் என்பதை காலம் தாழ்த்தியே அறிந்தேன். இவற்றை இத்தோடு விடுகிறேன்.

  இவர் சென்னை சென்ற பின், இவரது கணவரான இயக்குனர் ஜெரால்ட் மற்றும் குறும்பட இயக்குனர் சிவா ஆகியோரது நட்பு கிடைத்த போது, அவர்களோடு ஒரு எடிட்டிங் கலையகத்தை உருவாக்கலாம் எனும் எண்ணத்தை முன் வைத்தார்கள். நல்லா ஐஸ் வைத்தார்கள் என்றால் தவறில்லை. லீனா, ஜெரால்ட் மற்றும் சிவாவோடு ( இவர் ஒரு வழக்கறிஞரின் மகன்) இணைப்பை உருவாக்கி விட்டு, விலகி நின்றார். நானும் லீனா இருப்பதை விரும்பவில்லை. நான், பத்திரங்களில் கையெழுத்து வாங்கிக் கொண்டு பணம் கொடுத்தேன். மீடியா கிராப்ட் எனும் பெயரில் நடிகர் நாசரது எடிடிங் சூட்டை வாங்கி, இடம் எடுத்து ஆரம்பமானது. நான் விமானம் ஏறினேன். எனது நண்பர்களை, இவர்கள் சந்திக்க விடவில்லை. தொடர்பு கொண்ட போது பலரிடம், நான் வெளியே சென்றிருப்பதாகவே சொல்லியிருக்கிறார்கள். இருந்தும் என பழைய நண்பர்கள் சிலரை, அவர்களை விட்டு, தனியே சென்று சந்தித்தேன். அவர்களால் அதை தடுக்க முடியவில்லை. அவர்களிடம் என் பிஸ்னஸ் குறித்த தகவல்களை சொல்லி, கண்ணோட்டம் விடுமாறு சொல்லி விட்டு வந்தேன். நான் விமானம் ஏறிய அடுத்த நாள், மீடியா கிராப்ட், கனவுப் பட்டறையாக மாறியது.

  இரு வாரங்களுக்குள், என்ன செய்யாலாம் என ஆராய்ந்தேன். என் பாட்டனர்கள் எனக்கு பசப்பு வார்த்தைகளால் பொய் கதை விட்டுக் கொண்டிருந்தனர். நான் எதுவும் சொல்லாமல், சென்னைக்கு சென்று இறங்கி, நண்பர்களோடு காரியாலயத்துக்கு சென்ற போது அவர்கள் முகத்தில் ஈயாடவில்லை. என்னோடு சென்றவர்களை பார்த்த போது அவர்களால், துள்ளவும் முடியவில்லை. காரியாலயத்தில் இருந்த லீனாவிடம், என்ன நடக்கிறது எனக் கேட்டேன். “என்னோடு என்ன பேச்சு வேண்டிக் கிடக்கு, ஜெரால்டோடு பேசக் கொள்ளுங்க” என்று கத்தினார். என்னோடு வந்தவர்கள் “வாங்க, ஜெரால்டை தேடுவோம்” என்றார்கள். ஆந்திரா போயிருப்பதாக லீனா பொய் சொன்னார். ஆனால் ஜெரால்டை கோடம்பாக்கத்தில் வைத்து பிடித்தோம். ” அஜீவன், மோசமான ஆக்களோடு சேர்ந்திருக்கீங்க, நாம பேசலாமே” என்றார். பணத்தை திருப்பி தரணும் என்றேன். “காரியாலத்தை எடுத்துக்கிட்டு விட்டுடுங்க” என்றார். காரியாலத்தில் கொடுத்த பணத்துக்கு பொருட்கள் இல்லை. லீனா, தனது தாய்க்கு வீடு கட்ட அதில் பணம் கொடுத்திருப்பது தெரிய வந்தது. வக்கீலிடம் அழைத்துச் சென்று பணத்தை திருப்பி தர எழுதி தருமாறும் செக் தருமாறும் சொன்னோம். இழுத்தடித்தார். பிரச்சனை கடினமாக, லீனா, “அஜீவன், நான் பொறுப்பா, வாங்கித் தர்ரேன். பிரச்சனை பண்ணாதீங்க” என அழுது சந்திக்க விரும்புவதாக சொன்னார். ” உன்னோடு இனி பேச்சு கிடையாது. நான், ஜெரால்டோடு பார்த்துக் கொள்கிறேன்” என்றேன். பெண்களை இழுத்தால், அது வேறு மாதிரியாகி விடும் என்பதால் ஆரம்பத்திலேயே லீனாவை ஒதுக்க நான் எடுத்த முடிவு, இப்போது கை கொடுத்தது. லீனா, ஒரு பெண் ஐபீஎஸ் போலீஸ் அதிகாரி வரை சென்றும் சரியாகவில்லை. அவரது உறவினரான எனது நண்பர், என் பிரச்சனையில் ஈடுபட்டிருந்தார். அடுத்த நக்கீரனிடம் சென்றார். அங்கும், அஜீவனது உறவுகளும், நண்பர்களும் எதுவும் செய்வாங்க என்று சொன்னதால், இறுதியில் எனது பணம் கறுப்பு பணம் என்றும். நான் விடுதலைப் புலி என்றும், கதையை மாற்ற திட்டம் போட்டு, என்னோடு சண்டைக்கு தயாரானார்கள்.

  நிலை உணர்ந்த நண்பர்கள் பவர் ஒப் அட்டார்னியை எழுதிக் கொடுத்து விட்டு வெளியேறுங்கள். உங்கள் பணம் வரும். உங்களுக்கு ஆபத்து வரக் கூடாது என்றார்கள். அது சரியாக பட்டது. மிரட்டியும்,……….. எல்லாம் நடந்த பின்னர் 3 செக்கில் வங்கி மூலம் பணம் போட எழுதிக் கொடுத்தார்கள். கடைசியில் பணத்தையும் திருப்பி கொடுக்க வேண்டி வந்தது. இருந்தாலும் நான் மனதளவில் தேவையற்ற பிரச்சனைகளை எதிர் நோக்கினேன். அதன் பின்னர் அமெரிக்காவில் இருந்து ஒரு பெண் தொடர்பு கொண்டார். லீனா, காவேரி சம்பந்தமான ஆவணப்படுத்துகாக என 10ஆயிரம் அமெரிக்க டாலர்களை வாங்கி, படத்தையும் செய்யாமல் பணத்தையும் தராமல் இருப்பதாக சொன்னார். ஒளிப்பதிவாளர்களுக்கோ அல்லது வேலை செய்வோருக்கும் பணம் கொடுப்போர் அல்ல ஏமாற்றுவோரே? அவதானம்.

  Reply
 • பல்லி
  பல்லி

  நன்றி அஜீவன். உங்களை போல் சம்பந்த பட்டவர்களே முன்வந்து சிலரது முகங்களை அடையாளபடுத்துவது மிக நல்லது, அந்த வகையில் இக்குழுவின் உன்மையின் நிதர்சனம் உங்கள் மூலம் வெளிவந்து விட்டது,

  Reply
 • நண்பன்
  நண்பன்

  அஜீவன் , அனைத்தையும் எழுதவில்லை என நினைக்கிறேன். நேரில் இவர்கள் குறித்து அதிகம் நண்பர்களோடு பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் ஒரு துளியை முன்னர் படிக்கக் கிடைத்தது.
  //லீலா மணிமேகலையின் ‘கனவுப்பட்டறை’க்கும் தனக்கும் நிகழ்ந்த பிரச்சனைகள் எந்தவொரு அப்பாவிக்கும் நேரக்கூடாது என்கிறார். அது பெரிய பிரச்சனையாக உருவெடுத்தது என்பது பற்றியும் தான் எப்படி அங்கே புறக்கணிக்கப்பட்டேன் என்பதையும் வருத்தமாகச் சொல்கிறார். இலக்கியத்தில் ‘ஒற்றையிலை(யென)’, வியாபாரத்தில் இவ்வளவு படுத்துமா என்று யோசிக்க நேருகிறது….

  முழுமையாக…. yemkaykumar.blogspot.com/2005/05/blog-post.html//
  கொடுத்த பணம் தனக்கு வராவிட்டாலும் அவர்களை விடக் கூடாது என முயன்றதில், கலைஞரரது அறிவாலயம் தாதா ஜான் பாண்டியன் போன்ற இடங்களில் உள்ளவர்கள், சிலரை தூக்கியே கொடுத்ததை எடுத்துள்ளார்கள். லீனா தனது குறும்படங்கள் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவது போல படம் பண்ணி, வெளிநாட்டில் வாழும் மக்களிடம் பண்ம் கறப்பதில் பலே பேர்வழி. காவேரி எனும் படத்துக்கு பணம் வாங்கி, ஏமாற்றியதில் அந்த அமெரிக்க இந்திய பெண்ணுக்கு இவரே வழி காட்டியுள்ளார். லீனா போன்றவர்கள் நன்றாக கதைத்தே பணம் கறப்பதில் திறமையானவர்கள். அவரால் இன்று அமெரிக்காவுக்கோ, கனடாவுக்கோ அல்லது ஐரோப்பாவுக்கோ வர முடியாததற்கும், தமிழ் நாட்டில் மேடையேற முடியாததற்கும் அஜீவனே காரணம். இந்தியாவில், இவரை யாருக்கும் தெரியாது என பணத்தை கொள்ளையடிக்க, அதன் பின்னர் செய்ததது மடத்தனம் என பலரிடம் சொல்லியிருக்கிறார். அது முன்னரே தெரிந்திருந்தால் பத்திரத்தில் கையெழுத்தே போட விட்டிருக்க மாட்டேன் என லீனா சொல்லியதை கனடா நண்பர் ஒருவர் சொன்னார். உலக சினிமா என்ற புத்தகத்தை எழுதியவருக்கும் லீனா பணம் கொடுக்கவில்லை. அதற்கு பணம் கொடுத்த அஜீவனது பெயரையும் லீனா போடவில்லை. இப்படி எத்தனை திருகு தாளங்கள்? சுவிஸில் லீனாவுக்கு கொடுத்த நினைவு பரிசை, ஐரோப்பா தந்த அவார்ட் என சினிமா விகடன் பகுதீயில் பேட்டி கொடுத்திருந்தார். “பாரீனுக்கு கூப்பிட்டிருக்காங்க.” என்று ஏகப்பட்ட தீருகுதாளம் விடும் லீனா குறித்து தமிழ்நாட்டுக்கே சரியாக தெரியாது. இயக்குனர் சிவக்குமார் லீனாவை கதாநாயகியாக வைத்து ஒரு படம் செய்து, அது பத்திரிகை காட்சியோடு அடங்கிப் போனது. ஜெரால்டு, லீனாவை சில காரியங்களுக்காக பயன்படுத்துகிறார். அவ்வளவுதான். அதனாலேயே கணவர் என்று சொல்லாது துணைவர் என, அடுத்த இடங்களில் கறக்கப் போகிறார். போகும் வெளிநாடுகளில், குடும்பங்களை பிரித்து வைத்து, தனது காரியங்களை செய்தும், பணம் கறந்தும் தன்னை வளப்படுத்திக் கொண்டு வந்தார். இப்போது அது தடையாகி விட்டது. அமெரீக்காவில் இவரது படத்தை போட விடாமல், தமிழ் கழகம் ஒன்று துரத்தியதில் கோபமடைந்து சிதறிய வார்த்தைகளால் அமெரிக்க கதவுகளும் மூடப்பட்டன. திரை ஏன்று ஒரு சினிமா இதழ் வந்து, அதுவும் கிழிந்து போனது. போன இடத்தில் கறப்பதும் , பின்னர் சினப்பதும் லீனாவின் நடைமுறை. கடந்த பிரச்சனையில் இருந்து தப்பவும், வெளிநாட்டு ஈழத்து தமிழர்களை கவரவும், டில்லி போய் போராட்டத்தில் கலந்து கொண்டார். அதுவும் போணியாவில்லை. புலிகள், புளியாகக் கூட பாவிக்க முன்வரவில்லை. இப்போது அடிதடி….. இது லீனாவின் லீலைகளின் பில்டர் தகவல்கள்.

  Reply
 • மாயா
  மாயா

  இன்று கிடைத்த தகவல் சென்னையிலிருந்து :

  லீனாவும், சோபா சக்தியும் இணைந்து எடுத்த ஆவணப்படம் புலிகளுக்கு எதிராக எடுக்கப்பட்டுக் கொண்டிருந்ததாம். அதை உணர்ந்த ஒளிப்பதிவாளர் முகம் சுளித்து வேலை செய்துள்ளார். அதை நேரடியாக அணுக முடியாமல் சுற்றி வளைத்து பேசியுள்ளார். இறுதியில் தான் இலவசமாக வேலை செய்ய விரும்பவில்லை என, வேலைக்கு பணம் கேட்டுள்ளார். பணம் கொடுக்க மேற்சொன்ன இருவரும் மறுக்கவே கெசட்டை தரப் போவதில்லை என சொல்லியுள்ளார். அதனால் ஆத்திரமடைந்த லீனாவும் சக்தியும், தமது சத்திலீலைகளை காட்டப் போய் விவகாரத்தில் சிக்கி காவல் துறைவரை போயுள்ளர்.

  அமெரிக்காவில் புலி ஆதரவாளர்களது கருணையோடு படம் காட்டியவர் லீனா. அத்தோடு டில்லியில் புலிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்தவர். இப்போது புலிகள் அழிந்ததும் தன் வியாபாரத்துக்கு, சிறீலங்கா மற்றும் புலி எதிர்ப்பாளர்களை வசியப்படுத்த இ(வ)லை விரத்துள்ளார்.

  Reply