”ஜனாதிபதித் தேர்தல் போட்டியில் இருந்து விலகிக் கொள்ளும்படி சிவாஜிலிங்கத்தை கேட்போம்” தமிழ் தேசியக் கூட்டமைப்பு

Selvam Adaikalanathan TNA_TELOதமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையை நிலைநிறுத்த ஜனாதிபதித் தேர்தல் போட்டியில் இருந்து விலகிக் கொள்ளும்படி எம் கெ சிவாஜிலிங்கத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு கேட்க உள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இன்று (ஜனவரி 7) தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு சரத் பொன்சேகாவை ஆதரிக்கின்ற முடிவை முழுமையாக ஏற்றுக்கொள்கின்றீர்களா எனக் கேட்ட போது பெரும்பான்மையின் முடிவுடன் ஒத்துப் போவது மட்டுமல்ல தமிழ் மக்கள் ஒரு முகப்பட்டு அரசியலில் இயங்குவதே இன்று அவசியமானது எனத் தெரிவித்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்பு களத்தில் இறங்கி பொன்சேகாவுக்காக வாக்கு வேட்டை நடத்துமா? எனக் கேட்ட போது அது பற்றிய இறுதி முடிவுகள் இதுவரை எடுக்கப்படவில்லை எனத் தெரிவித்தார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முடிவு சுயாதீனமானது எனத் தெரிவித்து செல்வம் அடைக்கலநாதன் வெளிநாடுகளினதோ அல்லது புலம்பெயர் தமிழ் அமைப்புகளினதோ அழுத்தங்களினால் இம்முடிவு எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

இந்த ஜனாதிபதித் தேர்தல் முடிவானது ஜனாதிபதியைத் தெரிவு செய்வது மட்டுமல்ல தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் ஒரு பரிசோதணைக் களமாக அமைய உள்ளதாகத் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்கள் அனைவரையும் வாக்களிப்பில் கலந்துகொள்ளுமாறும் சரத் பொன்சேகாவிற்கு வாக்களிக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளது.

இந்நிலையில் தமிழ் மக்கள் வாக்களிப்பில் கலந்து கொள்ளாமல் இருப்பதோ அல்லது சரத்பொன்சேகாவிற்கு எதிராக வாக்களிப்பதோ தமிழ் தேசியக் கூட்டமைப்பை நிராகரிப்பதாகவே கொள்ள வேண்டும் என தமிழ் செல்வம் அடைக்கலநாதன் தேசம்நெற் க்குத் தெரிவித்தார். தமிழ் மக்கள் எடுக்கின்ற எந்த முடிவையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளும் என செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

இத்தேர்தலில் தற்போதைய ஜனாதிபதியே மீண்டும் தெரிவு செய்யப்பட்டாலும் அவருடன் தொடர்ந்தும் தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தைகளை நடாத்துவோம் எனக் குறிப்பிட்ட செல்வம் அடைக்கலநாதன் அதற்கு அரசு சம்மதிக்க மறுத்தால் தமிழ் மக்களை ஒன்றுபடுத்தி சாத்வீகப் போராட்டங்களை முன்னெடுப்போம் எனத் தெரிவித்தார்.

தன்னைப் போட்டியில் இருந்து விலகுமாறு யாரும் இதுவரை அணுகவில்லை எனத் தெரிவித்த எம் கெ சிவாஜிலிங்கம் தானும் மற்றைய ஜனாதிபதி வேட்பாளர் விக்கிரமபாகு கருணாரட்னாவும் தமிழ் பகுதிகளின் மூலைமுடுக்குகளுக்கெல்லாம் சென்று பிரச்சாரம் மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தார். சென்ற இடங்களில் எலலாம் மக்கள் நூற்றுக் கணக்கில் கூடி கைதட்டி ஆதரவு தருவது தங்களுக்கு நம்பிக்கை அளித்தள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினையைத் தீர்த்து வைப்பதற்கான உறுதியான முடிவுகளைத் தந்தாலேயொழிய இந்த சில்லறைத்தனமான உறுதி மொழிகளை தான் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை எனவும் இந்தப் போட்டியில் இருந்து விலகிக் கொள்ளப் போவதில்லை எனவும் எம் கெ சிவாஜிலிங்கம் தேசம்நெற்றுக்கு இன்று (ஜனவரி 7) தெரிவித்தார்.

Show More

Your email address will not be published. Required fields are marked *

5 Comments

  • raj
    raj

    well done jivajilingam keep it up then only the mahida would say somthing about our political solution please keep it up : you are doing the right approch- thank you

    Reply
  • பல்லி
    பல்லி

    நீங்கள் கேப்பீர்கள் சரி;
    அவர் அதை கேப்பாரா??

    Reply
  • வன்னி மக்கள்
    வன்னி மக்கள்

    இந்த ஜனாதிபதித் தேர்தல் முடிவானது ஜனாதிபதியைத் தெரிவு செய்வது மட்டுமல்ல தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் ஒரு பரிசோதணைக் களமாக அமைய உள்ளதாகத் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்./

    கூத்தமைப்புக்கு பரிசோதனைக்களம். பரிசோதனைக்கூட எலிகள் நாங்கள்தான் விளைவுகளை அனுபவிக்கப் போகிறவர்கள்.

    Reply
  • rohan
    rohan

    இந்த ஜனாதிபதித் தேர்தல் முடிவானது ஜனாதிபதியைத் தெரிவு செய்வது மட்டுமல்ல தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் ஒரு பரிசோதணைக் களமாக அமைய உள்ளதாகத் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். என்ற செய்திக்கு கூத்தமைப்புக்கு பரிசோதனைக்களம். பரிசோதனைக்கூட எலிகள் நாங்கள்தான் விளைவுகளை அனுபவிக்கப் போகிறவர்கள், என வன்னி மக்கள் என்ற பெயரில் ஒரு கருத்து வந்திருக்கிறது.

    கூட்டமைப்பு தனது கருத்துக்கு இருக்கும் ஆதரவை அளவு கோலிடத் தயாராக இருக்கிறது. அந்த முடிவு தமக்குக் கரி பூசும் என்றால் அவர்கள் அதற்கும் தயார் தான். கள்ள வாக்கு போன்ற சமாதானங்களுடன் அவர்கள் வரக் கூடும்.

    அது வேறு, ஜனாதிபதியைத் தெரிவு செய்யும் அதே வேளை, தமது குரலுக்கு மக்கள் செவி சாய்க்கிறார்களா என்று அவர்கள் பார்கக் கிடைத்திருக்கும் வாய்ப்பு பற்றியே அடைக்கலநாதன் பேசியுள்ளார். இந்நிலையில் தமிழ் மக்கள் வாக்களிப்பில் கலந்து கொள்ளாமல் இருப்பதைக் கூட தமிழ் தேசியக் கூட்டமைப்பை நிராகரிப்பதாகவே கொள்ள வேண்டும் என்று அவர் சொல்கிறார்! மக்கள் தாம் நினைத்ததைச் செய்யலாம் – அந்தத் தரவைக் கூட்டமைப்பு அளவுகோலாகப் பயன்படுத்தும். எனது அறிவுக்கு அடைக்கலநாதன் கருத்து சரியாகத் தான் படுகிறது. பேசாமல் உங்கள் வாக்கைநீங்கள் போடுங்கள். அது போதும். அவர்கள் தைரியமாக இந்தப் பந்தயத்தில் இறங்கியுள்ளார்கள்.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    வன்னி மக்கள்,
    பரிசோதனைகூடத்துக்கு உங்களை தூக்கிக்கொண்டு போகவில்லையே? தமிழ்சகோதரர்களை புலிகளின் கோரப்பிடியில் இருந்து விடுவித்து சிறுபான்மை இனமென்ற ஒன்று இல்லாத அமைதி தவழும் ஸ்ரீலங்காவில் புலம்பெயர்ந்த புத்தி ஜீவிகள் இணைந்து பிரச்சாரம் செய்யும் வகை செய்துள்ளது அரசு. ’கூத்தமைப்பின்’ அலம்பல்களை காதுக்குள் எடுக்காமல் உங்கள் விருப்பப்படி வாக்களியுங்கள்!

    Reply