நேரடி அனுபவம்: மீண்டும் ஒரு தரம் தாயகத்தில்… : வாசுதேவன்

Jaffna_to_Colombo_Bus_Servicesஎட்டு வருடங்களிற்கு பின் இந்த நத்தார் புதுவருட விடுமுறையில் மீண்டும் தாயகம் சென்று வர ஒரு வாய்ப்பு கிட்டியது. புலம்பெயர் ஊடகங்கள் பல குறிப்பாக தமிழ் தேசிய ஆதரவு ஊடகங்கள் இலங்கையில் இன்னும் போர்  முடியவில்லை! மக்கள் காணாமால் போகிறார்கள்! இராணுவம் ஆட்களை கடத்துகிறது. கட்டுநாயக்காவில் வெளிநாட்டவர்கள் மணிக்கணக்கில் விசாரிக்கப்படுகிறார்கள்! கொழும்பில் தமிழ் மக்கள் பயத்துடன் வாழ்கிறார்கள்! இதுபோல் பல மிரட்டல்கள் என் மனதில் பயங்கரமாக ஓடி விளையாடியது! போனால் உயிருடன் திரும்பி வருவேனா? கடத்தப்படுவேனா? காணாமல் போவேனா? என்ற அச்சசத்துடன் கட்டுநாயக்காவில் தரையிறங்கினேன். வானில் குடும்பத்துடன் ஏறி வெளியில் வருகையில் ஒரு சோதனைச்சாவடி. அதில் எமது பாஸ்போட்டுகளை பார்த்தது தான்! இலங்கை மீண்டும் தன் நிலைக்கு திரும்புகிறது என்பதை உணர முடிந்தது. தற்கொலை போராளிகள் தாக்குவார்கள் என்ற அச்சமின்றிய இராணுவ மற்றும் முப்படையினரும் மிகவும் மதிப்பாக அனைவரையும் நடாத்துவதை காண முடிந்தது! யாழ் குடாவில் இராணுவ பிரசன்னம் இருந்தாலும் அங்கு வீதி தடைகள் அகற்றப்பட்டு மக்கள் சுதந்திரமாக திரிய முடியும். ஆனால் கொழும்பில் சில இடங்களில் வீதி சோதனை சாவடிகள் இன்னமும் இயங்குகிறது!

இதை புரியாத சில புலம்பெயர் ஊடகங்கள் யாழ் குடா மக்கள் இன்னமும் திறந்தவெளி சிறைச்சாலையில் என்ற கருத்துப்பட எழுதுவது புலம்பெயர் மக்களை இன்னும் முட்டாள்களாக வைத்திருப்பதற்கே என்பதை என்னால் உணர முடிந்தது! இன்னுமொரு ஊடகமோ வன்னி முகாம்கள் இன்னமும் வதை முகாம்கள் என்ற தலைப்பில் செய்திகளை வெளியிடுகிறது. வன்னி முகாம் மக்கள் இன்று சுதந்திரமாக நடமாடுவது இவர்களுக்கு தெரியவில்லையா? அல்லது தெரியாதது போல் நடிக்கிறார்களா? முகாமில் வதியும் மக்கள் தமது தேவைக்கு அதிகமான கொடுப்பனவு பொருட்களை வெளிப்படையாக வவுனியாவில் வைத்து விற்கிறார்கள். வதை முகாம்களில் அப்படிச் செய்ய முடியுமா? வன்னி முகாமில் தற்போது எண்பதினாயிரம் மக்களே இருப்பதாக அங்கு பணிபுரியும் ஊழியர் ஒருவர் தெரிவித்தார். அவர்களில் பலர் தற்போதைக்கு மீளக் குடியேறும் நோக்கத்தில் இல்லை என்பதே உண்மை. இதனை தேசம்நெற்றில் சில மாதங்களுக்கு முன்னரேயே முகாம் மக்கள் தெரிவித்து இருந்தனர். அவர்கள் தங்கள் முன்னைய வாழ்விடங்கள் முற்றாக கண்ணி வெடியகற்றப்படுவதுடன் தங்கள் தொழில் வாய்ப்பிற்கான சகல ஏற்பாடுகளையும் செய்த பின்னரே மீளக்குடியேற விரும்புகின்றனர்.

எனது முன்னைய கட்டுரை ஒன்றில் கிளிநொச்சி தரை மட்டமாகியது என்ற கருத்துபட சில வரிகளை எழுதியிருந்தேன். இது சம்பந்தமாக பலர் பின்னோட்டத்தில் என்னை கடித்து குதறியும் இருந்தார்கள். உண்மை தான்! கிளிநொச்சியில் பல கட்டடங்கள் இன்னும் தரை மட்டமாகவில்லை! ஆனால் கட்டடங்களில் கூரைகளையோ கதவுகள் யன்னல்களையோ காணவில்லை. இராணுவம் வர முன்னரே மக்களும் புலிகளும் இவற்றை தம்முடன் எடுத்து சென்று விட்டனர். விமான தாக்குதலில் சில கட்டங்கள் சேதமாகியிருக்கிறது. இன்று புலம்பெயர் நாடுகளில் இருந்து ஆய்வுகளையும் கட்டுரைகளையும் எழுதும் பலர் தாம்  கேள்விப்படுபவைகளும் தாயக ஊடகங்களில் வருவதை மட்டும் கருத்தில் எடுத்து தமது கருத்தை அதற்குள் திணித்து ஒரு கட்டுரையை வெளியிடுவார்கள். அதை பார்க்கும் புலம்பெயர் வாசகர்கள் தமது பாணிக்கு கற்பனை பண்ணி ஒரு தவறான நிலைப்பாட்டில் பின்னோட்டம் விடுவார்கள். குறிப்பாக ஊடகங்களின் தற்போதைய நிலைமை இது தான்! இதற்கு நானும் விதிவிலக்கல்ல! கிளிநொச்சி கூரை விடயத்தை நான் ஆராயத் தவறிவிட்டேன். ஆக மொத்தத்தில் இரு தரப்புமே யுத்ததில் அழிவுகளை தவிர்க்க முன்வரவில்லை என்பதே உண்மை.

மக்களின் மீள் குடியேற்றங்கள் அரசு கூறுவது போல் சுமுகமாக இல்லை என்பதில் உண்மைகள் இருந்தாலும் இந்த மக்களின் மீள் குடியேற்றத்திற்கு உதவி செய்யும் அனைத்து வசததிகளையும் கொண்ட புலம்பெயர் மக்கள் அந்த மக்களிற்கு ஒரு குண்டுமணி கூட வழங்க தயாராக இல்லை! ”புலிகளிற்கு ஆயுதம் வாங்கி அள்ளிக்கொடுத்த இந்த வள்ளல்கள் இலங்கை பற்றியோ இலங்கை அரசியல் பற்றியோ கதைப்பதற்கே அருகதை அற்றவர்கள்.” இதை நான் கூறவில்லை. பாதிக்கப்பட்ட மக்கள் தம் வாயால் கூறுகிறார்கள். மீள் குடியேறும் மக்கள் கூரைகள் அற்ற வீடுகளிலும் தற்காலிக முகாம்களிலும் அல்லல் படுகிறார்கள். புலிகளால் கண்மூடி வன்னியெங்கும் விதைக்கப்பட்ட கண்ணி வெடிகள் தினமும் அகற்றப்பட்டுக் கொண்டே இருக்கிறது. வன்னியிலிருந்து பின் வாங்கிய புலிகள் தாறுமாறாக கண்ணி வெடிகள் விதைத்ததை புலம்பெயர் நாடுகளில் இருந்தவர்களுக்கு தெரியாமால் போனாலும் இவர்கள் வாங்கி கொடுத்த இந்த கண்ணி வெடிகளே மீள் குடியேற்றத்திற்கு மிகுந்த தடையாக உள்ளது.

அரசு மீள்குடியேற்றத்திற்கு பெரிய அளவில் உதவி செய்யவில்லை என்பது உண்மை! ஆனால் புலம்பெயர் மக்கள் அந்த கடமையை செய்ய அனைத்து வசதிகளும் கொண்டுள்ளார்கள். ஆனால் செய்வார்களா? இது தான் வன்னி மக்களின் அங்கலாய்ப்பும்! வன்னி மக்கள் புலம்பெயர் மக்களிடம் இருந்து கேட்பது நாடு கடந்த தமிழீழம் அல்ல! குறைந்த பட்சம் பானை சட்டி அல்லது அவர்களின் வாழ்க்கையை கொண்டு செல்ல உதவும் ஒரு சிறு தொகையே! அவர்கள் பிச்சை கேட்கவில்லை. நாம் வாங்கி கொடுத்த அயுதங்களினால் அழிக்கப்பட்ட அவர்களின் வீடுகளையும் அவர்களின் தொழிலை கொண்டு செல்ல ஒரு சிறு தொகையையுமே அவர்கள் கேட்கிறார்கள். எம்மால் நடாத்தப்பட்ட யுத்தத்தில் இழந்தவற்றையே மீளக் கேட்கிறார்கள். இந்த மக்களை பொருளதார ரீதியாக உயர்த்துவதே புலம்பெயர் மக்கள் செய்ய கூடிய பேருதவியாக இருக்கும்.

வட்டுக்கோட்டை தீர்மானம் இந்த மக்களின் தலைவிதியை மாற்றப்போவதில்லை! வன்னி மக்களிற்கு வட்டுக்கோட்டை பிரகடணம் மரண சாசனம்! யாழ் மக்களிற்கு வட்டுக்கோட்டை தீர்மானம் வடிவேலு காமடி! தென் பகுதி தமிழர்களுக்கு வட்டுக்கோட்டையும் நாடு கடந்த தமிழீழமும் கவுண்டன் செந்தில் கலாட்டா!

யுத்ததின் பின் தமிழ் பேசும் மக்கள் அனைவரும் உணரும் ஒரு விடயம் இலங்கை என்ற நாட்டில் மூவினங்களும் ஒன்றாக வாழ முடியும் என்பதே! இலங்கையில் முஸ்லீம் மக்களின் வாழ்வியலை பார்த்து பல பாடங்களை தமிழர்கள் குறிப்பாக வடக்கு கிழக்கு தமிழர்கள் கற்க வேண்டும் என்ற கருத்து இன்று அந்த மக்களிடம் மேலோங்கியுள்ளது.

இலங்கை என்ற நாடு தற்போது புதிய ஒரு அத்தியாயதிற்குள் நுழைந்துள்ளது. சிங்கள மற்றும் தமிழ், முஸ்லீம்கள் தமது கடந்த கால காழ்ப்புணர்வுகளை மறந்து புதிய காலத்திற்குள் கால் பதிப்பதை பார்க்க முடிகிறது! மார்கழி 31ம் திகதி இரவு 9 மணிக்கு பெற்றா மெயின் வீதி கடைகளின் சிங்கள, தமிழ், முஸ்லீம் மக்கள் எந்த வித பாகுபாடுமின்றி சகஜமாக தமது புதுவருடப் பொருட்களை முண்டியடித்து வாங்குவதை பார்த்த போது நான் மீண்டும் 1983 முந்தைய இலங்கையில் இருக்கும் ஒரு உணர்வை பெறக் கூடியதாக இருந்தது.

யாழ் குடாவில் இராணுவத்தின் பிரசன்னம் காணப்பட்டாலும் சோதனைச் சாவடிகள் பெருமளவில் குறைந்துள்ளது. மக்கள் சுதந்திரமாக நடமாட அனைத்து வசதிகளும் உள்ளது. உயர் பாதுகாப்பு வலயங்கள் மெதுவாக சுருங்கிக்கொண்டு வருவதை அவதானிக்க முடிந்தது. ஏ9 மீள திறந்த பின் அனைத்துப் பொருட்களும் மிக இலகுவாக பெறகூடியதாக இருக்கிறது. ஆனால் இலங்கை முழுவதும் பண வீக்கத்தின் பாதிப்பை நன்கே உணர முடிந்தது. இருப்பினும் யாழ் நகரில் பல பொருட்கள் கொழும்பு விலையை விட குறைவாகவே உள்ளது. வெளிநாட்டு பணத்தில் வாழும் மக்களை தவிர ஏனையவர்கள் தமது அன்றாட வாழ்விற்கு மிகவும் அவதியுறுகின்றனர். மக்கள் இதைப்பற்றியே அதிகமாக குறைப்பட்டனர்.

என்னுடன் உரையாடிய தமிழ் சிங்கள் முஸ்லீம் மக்கள் அனைவரும் ஒரு கருத்தில் ஒன்று பட்டார்கள். இலங்கை என்ற தேசத்தை அனைவரும் கட்டியெளுப்ப இது ஒரு அரிய சந்தர்ப்பம். இலங்கை மக்கள் தமக்குள் அடிபடுவதை நிறுத்தி நாட்டின் நலனுக்காக ஒன்றுபட்டு உழைக்க தயாராக இருக்கிறார்கள். ஆனால் இதைப் புரியாத புலம்பெயர் மக்கள் நாடுகடந்த தமிழீழம், வட்டுக்கோட்டை என்ற பிரிவினை கோசங்களை வைப்பதை மீண்டும் பிரிவினையை தூண்டும் ஒரு ஆபத்தான சமிக்சையாகவே பார்க்கிறார்கள். தம்மை மீண்டும் பிரித்து விடுவார்களோ என்ற அச்சம் அவர்களிடம் இருப்பதை உணர முடிந்தது.

மத்தியில் குவிந்துள்ள அதிகாரங்கள் மாகாண ரீதியல் பரவலாக்கம் செய்வதுதான் ஒரே வழி என்பதை சிங்கள மக்களும் தற்போது உணர ஆரம்பித்துள்ளனர். யுத்த வெற்றியை சிங்கள மக்கள் கொண்டாடினாலும் தமிழ் மக்களின் மீது ஒரு பரிதாப உணர்வு வந்திருப்பதையும் மறுக்க முடியாது. கடந்த காலங்களில் சிறுபான்மை இனத்தவர்கள் அனைவரும் இந்த நாட்டில் சரி சமமாக நடத்தப்படவில்லை. மீளவும் ஒரு யுத்தம் மீண்டும் வராது தடுக்க வேண்டியது சிங்கள் தலைமைகளின் தற்போதைய கடமை என்ற கருத்தை பல சிங்கள நண்பர்களிடம் காண முடிந்தது. சிங்கள மக்கள் சுயாதீனமாக தமிழ் பகுதிகளில் குடியேறுவதை  தமிழர்கள் எதிர்க்கக் கூடாது என்ற கூறிய சிங்கள நண்பர் இதனை அரசு திட்டமிட்டு செய்வதை கண்டிக்கவும் தவறவில்லை. ஒரு தமிழனோ முஸ்லீமோ நாட்டின் எந்த பகுதியிலும் குடியேற உரிமையுள்ளது. அதே உரிமை சிங்கள் மக்களிற்கும் உள்ளது என்பதை தமிழர்கள் மதிக்க வேண்டும் என்ற அவரின் கூற்று எனக்கு நியாயமாகவே இருந்தது.

புதுவருட தினம் தொடர்ந்த பட்டாசு வான வெடியுடன் பிறந்த போது தமிழ் பேசும் கிறீஸ்தவர்கள் புத்தாண்டு பிரார்தனைகளை முடித்து விட்டு எந்தவித பயமுமின்றி அதிகாலை 1 மணிக்கு வீடு சென்றார்கள். இந்த நிலை தேர்தலுக்கு பின்னும் நீடிக்குமா என்ற சந்தேகம் தமிழர்கள் மனதில் இல்லாமல் இல்லை. நான் தாயகத்தில் தங்கி நின்ற காலப்பகுதியல் இரண்டு தமிழர்கள் கொழும்பில் கடத்தப்பட்டதாக ஒரு செய்தி வந்தது. ஆனால் பின்னர் அதைப் பற்றிய செய்திகள் வரவில்லை.

ஆனால் கொழும்பில் தற்போது தேர்தல் வன்முறைகள் ஆரம்பமாகியுள்ளது. ஆளும் கட்சி பழிவாங்கலாக பலரை கைது செய்கின்றார்கள். கடத்துகிறார்கள். மருதானையில் ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளரரான கித்ஜஸிரி ராஜபக்ஷ கடத்தப்பட்ட போது அந்த பகுதி மக்கள் இன பேதமின்றி தெருவில் இறங்கி போராடியதை காண முடிந்தது. இந்த போராட்டத்தின் விளைவோ என்னவோ முகமூடி அணிந்தவர்களால் கடத்தப்பட்ட அந்த அமைப்பாளர் பின்னர் பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். இந்த நபர் ஏற்கனவே பொலீசாரால் சமூக விரோத செயற்பாடுகளிற்காக எச்சரிக்கப்பட்டவர். கடந்த மே மாதத்திற்கு பின்னர் பாதாள உலக அமைப்பை சேர்ந்த பலர் இவ்வாறு முகமூடி அணிந்தவர்களால் கடத்தி செல்லப்பட்டு பின்னர் தெருக்களில் பிணமாக மீட்கப்பட்ட செய்திகளை பலர் இந்த நேரத்ததில் நினைவு கூர்ந்தனர். இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை.

அதனால் இலங்கையில் ஜனநாயகம் தளைக்க மக்கள் அனைவரும் இன மத பாகுபாடின்றி போராட வேண்டிய தேவை இன்று மிகவும் அவசியமாக உள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஒரு புதிய மாற்றம் ஒன்றை  சகல இனத்தவர்களும் விரும்பினாலும் அதை நிறைவேற்றும் ஒருவர் இந்த தேர்தலில் நிற்கவில்லை என்ற கருத்தே பெரும்பான்மையாக உள்ளது. வடக்கில் உள்ள மக்கள் இந்த தேர்தல் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. ஆனால் இந்த தேர்தலை பாவித்து குறைந்தபட்சம் சில சலுகைகளையாவது தமிழ் கட்சிகள் தமக்கு பெற்று தர வேண்டும் என்ற கருத்தில் தமிழ் மக்கள் பலர் உடன்பட்டார்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பினர் யாருக்கு ஆதரவளிப்பது என்ற முடிவுக்கு வர இழுத்தடித்தை குறையாக கூறிய மக்கள் தேர்தல் காலங்களில் என்னென்ன சலுகைகளை பெற முடியேமோ அவற்றை பெற வேண்டியதுதான் ஒரேவழி என்று கூறினர். முஸ்லீம்களை பொறுத்தவரை அவர்களின் வாக்குகள் பிரியும் நிலைப்பாடே உள்ளது. ஜேவீபியின் பிரசன்னம் சரத் பொன்சேகாவிற்கு போகும் முஸ்லீம் வாக்குகளை மகிந்த ராஜபக்சவிற்கு திருப்பியுள்ளது. மேலும் ஒரு இராணுவ தளபதியை நாட்டின் ஜனாதிபதியாக்குவது ஆபத்தானது என்ற கருத்தில் சிங்கள தமிழ் முஸ்லீம் மக்கள் அச்சம் தெரிவிப்பதும் மகிந்த மீதான ஆதரவை கூட்டியுள்ளது.

திரும்பும் பக்கமெல்லாம் கண்ணில்படும் மகிந்த ராஜபக்ஷவின் படங்கள் விளம்பரங்கள் சிலவேளை எதிர்மறையான விளம்பரமாக மாறலாம். இந்தியாவில் நான் பார்த்த கட்அவுட்டுகளை மிஞ்சும் அரசின் பிரச்சாரங்கள் நேர்மறையான தேர்தல் முடிவை கொண்டு வந்தாலும் ஆச்சரியப்பட முடியாது.

யார் குத்தி என்றாலும் அரிசி வரட்டும் மக்கள் கஞ்சியாவது குடிக்க முடிகிறதா என்று பார்க்கலாம். இன்று பெரும்பான்மையான சிங்கள தமிழ் முஸ்லீம் மலையக மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் ஒன்றாகவே எனக்குப்படுகிறது. ஆனால் இந்தத் தேர்தல் அவர்களின் பிரச்சினைக்கு தீர்வு கொண்டுவரப் போவதில்லை. இந்தப் பிரச்சினைகளுக்கு நிரத்தரத் தீர்வைக்கொண்டு வருவதற்கு இன மத பேதங்களுக்கு அப்பால் மக்கள் ஒன்றுபட்டு செயற்படுவதன் மூலமே தீர்வு கிட்டும்.

அந்த வகையில் தெருவில் காவல் கடைமையில் நின்ற ஒரு இராணுவ சிப்பாயின் “இந்த கிழட்டு அரசியல்வாதிகளை வீட்டுக்கனுப்பி விட்டு இளையவர்கள் பாராளுமன்றம் சென்று இந்த நாட்டை வளம்படுத்த வேண்டும்” என்ற அங்கலாய்ப்பு நியாயமானதாகவே இருந்தது.

இலங்கை சென்ற மற்றவர்களின் அனுபவம்:

புலம்பெயர் புனைகதைக்குள் புகுந்துவந்த பயணம். : வவுனியன்

புலம்பெயர்ந்த தமிழர் குழு – இலங்கை அரசு – கொழும்பு மாநாடு : ரி கொன்ஸ்ரன்ரைன்

Show More
Leave a Reply to soorya Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

42 Comments

  • Thevan
    Thevan

    வாசு நீங்கள் குறிப்பிடுவது அன்றொருநாள் உங்கள் முன்னாள் அமைப்பின் யாழ் மாவட்ட உறுப்பினர் ஒருவர் பத்திரிகைக்கு பேட்டி கொடுக்கும் போது எங்கள் பள்ளிக்கூடங்களில் உள்ள கழிவறைகளில் மாபிள் இல்லை.கொழும்பு பாடசாலைகளில் மாபிள் உள்ளதென்றும் அதுவே தாமட போராடக் காரணம் என்று சொன்னார். அந்த அமைப்பு கொடுத்த அரசியல் அறிவோ என்னவோ தெரியாது- விடுமறையில் ஊருக்குச. சென்று உறவினர்களுடன் கழியாடிவிட்டு தமிழர்களுக்கு பிரச்சனையே இல்லை. பாலும் தேனும் பாயுது. வன்னி மக்களுக்கு அள்ளிக் கொண்டுபோய் வவனியாச் சந்தியில் வைத்து விற்கத் தெலியவில்லை என்றும் கடந்த வாரம் கூட கிணற்றிலும் கடற் கரையோரமாயும் மிதந்த தமிழர்களின் பிணங்கள் எல்லாம் அவர்னாகவே விரும்பி கிணத்துக்குள் விழுந்து செத்தார்கள் என்றும் பயணக் கட்டுரை எழுதுவது ஆச்சரியமில்லை.

    ஆமிக்காரன் முழுசிப் பார்த்த்ததால் தான் போராட்டம் தொடங்கியது போலவும் தற்போது சிரித்துப் பேசுவதால் எல்லாப் பிரச்சனையும் தீர்ந்து விட்டது போலவும் பேசும் வாசுதேவனுக்கு பதில் அம்மாறையில் தரித கதியில் ஏற்படும் குடியேற்றமும் யாழ்ப்பாணத்தில் இருநத குறைந்த பட்டச விளைநிலங்க்ள பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் முற்றுகையில் இருப்பதும் இத்தனை அழிவுக்குப் பின்னும் தமிழ் மக்களின் பிரச்சனைக்கு குறைந்த பட்ச தீhவைக் கூட பிரதான வேட்பாளர்கள் இருவருமே கூறத் தயங்கும் அல்லது கூற விரும்பாத சூழலைப் புரிந்து கொள்ளாது ரொயிற் கதவுகள் எல்லாம் தேக்கு மரத்தில் போட்டிருக்கிறர்கள் எனவே பிரச்சனை இனி ஒன்றுமே கிடையாது என்று பயணக் கட்டுரை ஒன்று மட்டுமே இல்லாத குறை.

    Reply
  • BC
    BC

    //புலம்பெயர் ஊடகங்கள் யாழ் குடா மக்கள் இன்னமும் திறந்தவெளி சிறைச்சாலையில் என்ற கருத்துப்பட எழுதுவது புலம்பெயர் மக்களை இன்னும் முட்டாள்களாக வைத்திருப்பதற்கே என்பதை என்னால் உணர முடிந்தது!//

    புலம்பெயர் மக்களை முட்டாள்களாக வைத்திருந்தால் தான் பண வசூல் நடத்த முடியும். புலி ஆதரவு ஊடககத்தில் ஒரு செய்தி. வேலுப்பிள்ளையின் மரணத்திற்காக தமிழக சட்டவாளர் சந்திரசேகர் என்று ஒருவர் யாழ்ப்பாணம் போனாராம்.அவர் பேட்டி கொடுக்கிறார்.20 மீற்றருக்கு 30 மீற்றருக்கு ஒரு தடவை இராணுவ சோதனை நிலையங்கள் காணப்படுகின்றனவாம். 200மீற்றருக்குகோ 300மீற்றருக்குகோ அல்ல 20- 30 மீற்றருக்கு.

    Reply
  • senthil
    senthil

    ஒரு நியூஸ் வாசு நல்ல தேர்தல் தருணம் பார்த்து லங்காபுரிக்கு போய் வந்துவிட்டு தேவானந்தாவின் மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி தத்துவ புலுடா விடுகிறார். ஜனவரி 26 க்கு பின்னரும் அதில் யார் வெற்றி பெறுகிறார் என்பதை வைத்துக்கொண்டு நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு வந்து அந்த தேர்தலும் வந்த பின்னர் யாழ்ப்பாணத்துக்கு போய் வந்து கட்டுரை எழுதவும் வாசு. நேற்றைய தினம் ஒலிபரப்பான பிபிசி தமிழோசையை கேட்டுப்பார்க்கவும் வாசு முகாமில் உள்ள ஒரு பெண்மணியின் வாக்குமூலத்தை தைப்பொங்கலை அவர் எப்படி கொண்டாடுகிறார் என்று. எழுந்தமானமாக வாசு தான் சந்தித்தவர்களை மட்டும் ஆதாரமாக வைத்துக்கொண்டு எழுதப்பார்க்கிறார்.

    Reply
  • itam
    itam

    உண்மைகள், புலத்தில் உள்ளவர்களால் உணர காலம் எடுக்கும். இருந்தாலும் இப்படியான தகவல்கள் உண்மைகளை ஓரளவாவது மக்களுக்கு கொண்டு செல்லும். இன்னும் லஞ்சம் பல இடங்களில், தலை விரித்தாடுகிறது. அதுதான், புலிகளின் ஊடுருவல்களுக்கு இடமளித்தது. இவற்றை எழுதுங்கள். முடிந்ததை கொண்டு செல்ல வேண்டியவர்களிடம் கொண்டு செல்ல முனைகிறோம். முழுத் தேசமும் வழமைக்கு திரும்ப வேண்டும். அதுவே நமது பிராத்தனையாகும்

    Reply
  • nallurkantha
    nallurkantha

    Very unbiased analysis.Well done.

    Reply
  • Vasu
    Vasu

    தேவன் – கட்டுரையை மீள ஒரு தரம் படித்து விட்டு கருத்தெழுதவும்!

    இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை.

    அதனால் இலங்கையில் ஜனநாயகம் தளைக்க மக்கள் அனைவரும் இன மத பாகுபாடின்றி போராட வேண்டிய தேவை இன்று மிகவும் அவசியமாக உள்ளது.

    இது உங்கள் கண்ணுக்கு தெரியாது போனது விந்தையே! நீங்கள் விரும்பியோ விரும்பவில்லையோ நிலைமைகள் அங்கு சுமுகமாவது உண்மையே!

    நான் சந்தித்தவர்கனை வைத்து தான் எழுத முடியும் கற்பனையில் எழுதி நாசமாக்கியது போதும்! பாலும் தேனும் பாயுது என்று நான் எங்கும் எழுதவில்லை! தயவு செய்து நீங்கள் கற்பனை பண்ணுவதற்கு என்னை இழுக்கவேண்டாம்!

    Reply
  • senthil
    senthil

    மானிப்பாய் மெமோறியலில் களியாட்டம் நடத்த சுதந்திரம் கொடுத்துள்ளார்கள். கல்லுண்டாய் கடலில் மீன் பிடிக்க சுதந்திரம் கொடுத்துள்ளார்கள். கூளாடி சந்தையில் சூசை இல்லாததால் மீன் மலிவாக கிடைக்கிறது இதைவிட என்ன சுதந்திரம் வேண்டிக்கிடக்கிறது என்று மட்டும் வாசு எழுதாமல் விட்டுவிட்டார். மே18 க்கு முதல் நெற்றிக்கண் வாசுவுக்கும் ஒருநியூஸ்க்கு கிளிநொச்சியில் இருந்து நியூஸ் தேவைப்பட்ட போது வாசு மட்டும் தமிழ் சமூகத்தை நாசமாக்க முற்படவில்லை போலும்.

    Reply
  • Kumaran
    Kumaran

    தமிழர்களுக்கு எப்பவுமே குறைகளை மட்டும் கதைபதிலேயே ஒரு ஆனந்தம்.

    வாசு சொல்லுவதில் உண்மை உண்டு.

    இங்கு பார்ட்டிகளில் பிராண்டி, வோட்கா என்று குடித்து விட்டு இன்னும் பொட்டு அம்மான் வருவர் என்று பேசும் சனங்களுக்கு எப்படி இன்றைய தேவையை உணர்த்த முடியும்.

    மே 19 இல் இருந்து பல மாற்றங்கள் நடை பெற்று விட்டன, இன்னும் முற்றாக மாற்றம் அடைய சகல இன மக்களும் ஓன்று பட்டுத் தான் உழைக்க வேண்டும்.

    புலிகளின் இராணுவ ஆட்சிக்கு ஒத்துளைத்தவர்களே இன்று பொன்சேகாவின் இராணுவ ஆட்சியை கொண்டு வர விரும்புகிறார்கள்.

    இன்று மக்கள் தங்கள் விருப்பு வெறுப்புகளை சொல்லகூடிய நிலைமை உண்டு, இதை மே 19 முன் நினைத்து பார்த்திருக்க முடியுமா?

    Reply
  • Vasu
    Vasu

    கிளிநொச்சியில் செய்தி வந்தால் கிளி நொச்சிக்கு போவது தான் ஒரு ஊடகவியலாளனின் கடமை! செந்தில் உங்கள் ஆதங்கம் புலி இருந்த இடத்தில் புல்லு முளைத்தது தான்! என்ன செய்வது என் போன்றவர்களை தாக்கி உங்கள் ஆதங்ககளை தீர்க்க முடிந்தால் அதற்கு நான் உங்களை கோவிக்க போவதில்லை! கவனம் இது ஒரு மனோவியாதியாக மாறாது பார்த்துக்கொள்ளவும்!

    Reply
  • Thevan
    Thevan

    சயனைற் சாப்பிட்டால் செத்தவிடுவோம் என்பதை சாப்பிட்டுத்தான் உணரவேண்டிய தேவை இல்லை வாசு. நீங்கள் நாட்டுக்குப் பொய் வந்திருக்கிறீர்னள் எனபது மட்டும் ஒன்று இரண்டு சம்பவங்களை வைத்து பொதுமைப்படுத்துதற்குரிய அனுபவத்தை;த தந்ததாகாது. இன்றும் ஒரு பிணம் நீங்கள் தேனாறு பாய்வாத சொன்ன முகாமுக்கருகில் உள்ள குளத்தில் கண்டெடுக்கப் பட்டிருக்கிறது என்பது மட்டுமல்ல தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறை மிக கனசித்தமாக திரைமறைவில் நடந்தேறிக்கொண்டிருக்கிறத என்பதை நான் சொல்லி அறியவேண்டிய கட்டாயத்தில் நீங்கள் இல்லை.

    உங்களுக்கு இலங்கையில் ஏற்பட்டிருக்கும் நிலைமாயனது தற்காலிகமாது என்பதும் வாளை தூக்கிக் கொண்டு நிற்கும் சிங்கக் கொடியின் கீழ் ஒரு தீர்வில்லாமல் வாழ முடியாது என்பதையும் உணர்ந்து கொள்ளும் சக்கி உள்ளது என்பது எனக்குத் தெரியும். இருந்தும் வக்காலத்து வாங்ககிறீர்கள் என்றால் அது ஏன் என்று எனக்குத் தெரியும்.

    Reply
  • senthil
    senthil

    வாசு யாருக்கும் மனோவியாதி பிடிக்கவில்லை. உங்களை போன்ற காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ளும் பக்கவியாதி பிடித்து உங்களது தக்க வைத்துக்கொள்ளும் சந்தர்ப்பவாத அரசியல் பீடித்துக்கொண்ட அறப்படித்த அறிவாளியல்ல.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    //வாளைத்தூக்கி கொண்டு நிற்கும் சிங்கக்கொடிக்குக் கீழ் ஒரு தீர்வில்லாமல் வாழமுடியாது என்பதை//
    இந்த தேவன் எந்த நாட்டில்லிருந்து கருத்தெழுகிறார் என்பதை அறியமுடியாமல் இருக்கிறது. தேவா இலங்கைக்கு வந்து உங்கள் சமூகத்திடன்
    என்றோ ஒருநாளாவது இரண்டறக் கலக்க விரும்புவது இல்லையா?அங்கிருக்கும் தமிழர்கள் எல்லாம் தற்கொலையா செய்ய முயற்சிக்கிறார்கள்?
    நீங்கள் புளியம்கொப்பை பிடித்திருப்பதாக நினைப்பதும் உபதேசம் சொல்வதும் தவறு. நீங்கள் வாழும் நாட்டில்லிருந்து உங்கள் உடமைகள் அனைத்தையும் பக்பண்ணி கட்டுநாயக்க விமானத்தளத்தில் இறக்கி விட்டால் உங்கள் வேதாந்தம் எல்லாம் “அம்போ”. அனாதைப் பிள்ளைகளுக்கு சயினட் கட்டிவிட்டு தனக்கு வரும் போது வெள்ளைக் கொடியோடு நின்ற காட்சியை தமிழரின் இலக்கியத்தில் எந்த பக்கத்தில் சேர்ப்பது. ஆகவே… கட்டப்பொம்மன் வசனங்களையெல்லாம் விட்டுங்க.

    Reply
  • Vasu
    Vasu

    பாலாறும் தேனாறும் ஓடுவதாக எங்கு வாசித்தீர்கள் தேவன்? முகாமுக்கருகாமையில் பிணம் இன்று மிததந்தாக நான் இன்னும் படிக்கவில்லை ஆனால் அப்படி நடக்காது என்றும் நான் மறுக்கவில்லை! மாறாக நீங்கள் ஒரு சிங்கள பெண் ஒருவர் தேர்தல் வன்முறையால் தெற்கில் கொல்லப்பட்டதை அறிந்திருப்பீரோ என்னவோ? சிலவேளை அதையிட்டு மகிழ்வும் அடைந்திருப்பீர்கள். காரணம் அவர் சிங்களவர் என்பதால்! இலங்கையில் தமிழர்கள் மட்டுமல்ல சிங்கள முஸ்லீம் மக்களும் தமது ஜனநாயக கடமைகளை செய்ய முடியாது தடுக்கப்பட்டுள்ளனர். நேற்று கூட ஒரு சிங்கள பத்திரிகையாளர் தாக்கப்பட்டுள்ளார். லசந்த என்ற சிங்கள பத்திரிகையாளர் கொல்லப்பட்டு ஒரு வருடமாகியும் அவரது கொலையாளிகள் கண்டுபிடிக்ககப் படவில்லை.

    இலங்கையில் இன்று இனரீதியான ஒடுக்குமுறையை விட வர்க்க ரீதியான ஒடுக்குமுறையே மேலோங்கி உள்ளது என்ற விவாதம் வலுப்பெற்றுள்ளது. இலங்கையில் ஜனநாயகம் தளைப்பதற்கு சகல இனத்தவரும போராடவேண்டிய தேவையுள்ளது. ஆயதக்கலாச்சரம் இலங்கையில் ஒழிக்கப்பட்டு அதிகாரங்கள் பரவலாக்குவதன் மூலம் இலங்கையில் சகல இனத்தவர்களும் நிம்மதியாக வாழமுடியும் என்பதே இன்று தாயகத்தில் அனைவரும் உணர்ந்துள்ள விடயம்!

    Reply
  • Vasu
    Vasu

    செந்தில் காற்றுள்ளபோது தூற்ற நான் வியாபாரம் செய்யவில்லை. அடக்கப்பட்ட மக்களிற்காக அன்றும் இன்றும் போராட எனது சக்திக்குட்பட்டு எனக்கு சரியானதை நான் செய்து வருகிறேன்.

    Reply
  • பல்லி
    பல்லி

    வாசு நீங்கள் என்னும் விடயத்துக்கு வரவில்லை; பின்னோட்ட நபர்களை வெள்ளோட்டம் பாக்கிறியள்; எதுக்கும் உங்கள் அவாவை எழுதுங்கோவன்; அப்போதுதான் நாமும் ஏதாவது கிறுக்க முடியும்; ஆனாலும் தாங்கள் செவ்வாய் கிரகத்துக்கு போட்டுவந்தது மாதிரி கதை சொல்லுவது சிறிது அதிகம்தான்; காரணம் எங்கள் உறவுகள் நீங்கள் சுற்றுலாவாய் போன பிரதேசங்களில் தான் வாழ்கின்றனர்,

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    தாயகத்தில் நிலைமைகள் சீரடைந்து வருகின்றன என்பது உண்மையே. அது உடனடியாக நடந்து முடிந்து விடுமென எதிர்பார்ப்பதும் முட்டாள்த் தனமானது. புலிகளின் 33 வருடச் சீரழிவை 3 மாதங்களிலோ 3 வருடங்களிலோ சீர் செய்து விட முடியாது. பிபிசி தமிழோசையில் அகதி முகாம் பெண்ணின் அழுகை மட்டுமல்ல, பலரின் சாதகமான நிலைமைகள் பற்றிய செவ்வியும் இடம் பெற்றனவே அது செவிகளில் விழவில்லையோ?? 30 வருடங்களுக்குப் பின் இலங்கை மக்கள் தமது திருநாள்க் கொண்டாட்டங்களை வெடி கொழுத்தி மகிழ்ச்சியாகக் கொண்டாட முடிவதை, பலரால் சகித்துக் கொள்ள முடியவில்லை. மீண்டும் நாட்டில் குளப்ப நிலைகளே தொடர்வது போலவும் அதைக் காட்டியே மீண்டும் பணப் புலிகள் தம்மை வளர்த்துக் கொள்ளவுமே முயல்கின்றார்கள். இவர்களைப் பொறுத்தவரை நாட்டில் குளப்பநிலை தொடர்ந்து கொண்டேயிருக்க வேணடும். அது தானே அவரகளின் இருப்பைத் தக்க வைக்கவும், மீண்டும் மக்களைச் சுரண்டி வாழவும் உதவும். அதற்கு சரத் பொன்சேகா தான் சரியான ஆளென்பதையும் புரிந்து வைத்துள்ளார்கள்.

    Reply
  • BC
    BC

    //பார்த்திபன்- பிபிசி தமிழோசையில் அகதி முகாம் பெண்ணின் அழுகை மட்டுமல்ல, பலரின் சாதகமான நிலைமைகள் பற்றிய செவ்வியும் இடம் பெற்றனவே அது செவிகளில் விழவில்லையோ?//
    அதுவெல்லாம் சிங்களத்திற்க்கு ஆதரவான பிபிசியின் பொய் பரப்புரைகள். ஆனால் பெண்ணின் அழுகை மட்டும்தான் உண்மை என்பார்கள். புலிகளின் அழிவினால் இலங்கையில் தமிழ் மக்களின் நிலைமைகள் சீரடைவது புலம்பெயர்ந்த பலரை பதறவைக்கிறது.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    ஆனந்த விகடனில் மணியன் முன்னர் எழுதிய அமெரிக்க, ஐரோப்பிய , ஆபிரிக்க …பயணக்கட்டுரைகள் போல் உள்ளது!

    அவ்வாறே அவர் யாழ்ப்பாணத்துக்கும் வந்து செல்வநாயகத்தின் படத்துக்கும் மாலைபோட்டுவிட்டு செல்வநாயகம் தமிழர்களின் மதிப்புக்குரிய சிங்களத்தலைவர் என எழுதினார். கேட்டால் தனது சிங்கள ட்ரைவர் சொன்னார் என்றார்!

    அண்மையில் கொழும்பு சென்ற எனது நண்பர் தனக்கு கட்டுநாயக்காவில் நடந்த அனுபவத்தைச் சொன்னார். இத்தனைக்கும் அவர் பலகாலம் கொழும்பில் இடம்பெயர்ந்து வாழ்ந்தவர், புலம்பெயர் போராட்டங்களில் பட்டும் படாமலும் இருப்பவர். வாசு கொடுத்து வைத்தவர்!

    Reply
  • jeeva
    jeeva

    அண்மையில் ஸ்ரீலங்கா சென்ற முன்னைநாள் ராணுவ அதிகாரி அங்கு சென்று அரசுக்கு ஆதரவாகவும் யூ.என்.பிக்கு எதிராகவும் அறிக்கை விட்டார். அந்த அறிக்கை விடுவதற்கான பயணச் செலவு (~ $2800.00)அமெரிகாவில் இருக்கும் ஸ்ரீலங்கா தூதரகம் ஏற்றுக்கொண்டது !
    அதற்காக வாசு காசு வாங்கிக்கொண்டு எழுதுகிறார் எனச் சொல்ல வரவில்லை! அமெரிக்காவில் அசைலம் அடித்த அமைச்சர் (கருணா புகழ்) அமெரிக்க எம்பசியில் வேலைஎடுத்த கதை அவர் தனது அசைலம் கேசை கைவிட்டு பழையபடி ஸ்ரீலங்கா சென்று மகிந்தாவுக்கு தூபம் காட்டும் கதை எல்லாம் வாசித்தோம். வாசுவின் புனிதப்பயணம் ஒன்றும் புதிதல்ல!

    Reply
  • Thevan
    Thevan

    நான் எந்த நாட்டில் இருக்கிறேன் என்ற புலனாய்வு ஒரு பக்கம் இருக்கட்டும். புலிகளின் வாரிசுகள் தானே உடனே புலனாய்வு வேலைகள் ஆரம்பிப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. ஒரு பாரிய அடக்குமுறைக்குள் 30 வருடம் கட்டுண்டு கிடந்த மக்கள் திடீரென வெளிச்சத்தைக் காணும் போது ஆறதல் கொள்வது ஒன்றும் ஆச்சரியமில்லை. வாசு போன்றவர்கள் திருவிழா நேர்முக வருணனனை போன்று புகழ்ந்து தள்ளும் அளவுக்கு அங்கு பிரச்சனைகள் மாற்றமடைந்து விடவில்லை என்பதசை; சொல்வதற்கு நான் நாட்டில் தான் இருக்க வேண்டும் எ;னற கட்டாயம் இல்லை. ஒன்றரை வருடங்களுக்கு மேல் ஒருவரை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கக் கூடாது என்று சொல்கிறது. ஆண்டுகளாகியும் 600 மேற்பட்டவர்கள் விசாரணையின்றித் தடுத்து வைக்கப்பட்டிருபபது அவர்களிடம் தமிழ் பேருடனான அடையாள அட்டை இருந்தமையே என்பதை வாசுவுக்கு புரியாமல் போச்சு.

    யாழ்ப்பாணத்துக்கு போன கையோடை மகசின் சிறைக்கும ஒருமுறை போய் வந்திருந்தால் பாலாறு எங்கெல்லாம் பாயுது என்பதைக் கண்டிருக்கலாம்.

    Reply
  • mayavan
    mayavan

    சபாஸ் வாசு புலம் பெயர் ஊடகங்களுக்கு அவர்கள் பாணியிலேயே கொடுத்திருக்கிறீர்கள். ஆனாலும் இதற்கெல்லாம் நீங்கள் இலங்கை போயிருக்க வேண்டிய அவசியமேயில்லை.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    வாசுவின் கட்டுரை அலுப்பு தருபவர்களுக்கு ஒரு செய்தி. அதை தவிர்த்து விட்டு கீழுக்கு போனால் 2009 ஜனவரியில் மற்றைய கட்டுரைகளையும் பார்வையிட முடியும். வாசுவிடம் தேவையில்லாத மோதலையும் தவிர்க்க முடியும். நாடு சீர்பெற்று வருகிறது என்றுதானே! சொன்னார். தப்பா? தேவன் உங்களின் இந்தப் பின்னோட்டம் தரமாக இருக்கிறது.

    Reply
  • seayoan
    seayoan

    //புலிகளின் அழிவினால் இலங்கையில் தமிழ் மக்களின் நிலைமைகள் சீரடைவது புலம்பெயர்ந்த பலரை பதறவைக்கிறது.//
    ஏன் என்று யோசித்து பாருங்கள். உங்களில் பலருக்கு விடையும் கிடைக்கும். புலிகளிடம் இல்லை என்று சொல்கின்ற ‘ராஜதந்திரத்திற்கும்’, ‘தந்திரத்திற்கும்’ உள்ள ஒற்றுமை/வித்தியாசம் தான் இவை எல்லாம். எது நீண்ட காலத்திற்கு நல்லது என்றும் முடிவெடுங்கள்…

    Reply
  • gobi
    gobi

    மகசீன் சிறைபற்றிய கட்டுரை ஏலவே தேசத்தில் வந்துள்ளது பார்க்க;
    http://thesamnet.co.uk/?p=15447 Aug 27 2009
    நீதி விசாரணைகள் அற்ற தமிழ்பேசும் அரசியற் கைதிகள்

    Reply
  • chandran.raja
    chandran.raja

    செந்தில் சொன்னது போல கூளாடிச் சந்தையில் சூசையில்லாதது மீன் மலிவாகக் கிடைக்கிறது. முகமாலையில் மாவீரர்கள் காவல் புரியாதது. வடக்குக்கும் தெற்கிற்கும் வரியில்லாது போக மக்களின் சந்தோஷத்திற்கு சொல்லவும் வேண்டுமா?. யார் வந்துபோனால் என்ன? இந்த நிலை நிலைப்படவேண்டும். எல்லாம் புலம்பெயர் தமிழரும் ஒருமித்து மகிழ்ச்சி கொள்வோம்.

    Reply
  • Ajith
    Ajith

    Mr. Vasu,
    I don’t blame you for your support to Rajapakse and your boss Ducklus. We understand that you are an obedient servant to your masters. Do you think none of us have relatives, friends and families in tamil-eelam (Thayagam). I just spoke to my mum. She lived through in that land for 75 years. What she said was is the real. We don’t have peace in our minds. Ladies can’t go freely in the streets in day light. You can’t sleep because you don’t know when your boss’s thugs will come Rajapakse’s guard to rob everything. She said until these monsters live people have to live with fear and without safety.

    Reply
  • BC
    BC

    //கோபி- மகசீன் சிறைபற்றிய கட்டுரை ஏலவே தேசத்தில் வந்துள்ளது பார்க்க //
    இந்த கட்டுரை நானும் முன்பு படித்தேன். சந்தேகிக்கப்படும் அரசியற் கைதிகள் நிலை வருந்ததக்கது, வருந்தமானது. அதற்க்கும் வெளியேயுள்ள இலங்கை தமிழர்கள் வாழ்வு சீரடைந்து வருவதை சொன்னால், அவர்கள் முகத்தில் மகிழ்ச்சி வருவதை சென்னால் ஏன் சிலருக்கு பிடிக்கவில்லை?

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //…அதற்க்கும் வெளியேயுள்ள இலங்கை தமிழர்கள் வாழ்வு சீரடைந்து வருவதை சொன்னால், அவர்கள் முகத்தில் மகிழ்ச்சி வருவதை சென்னால் ஏன் சிலருக்கு பிடிக்கவில்லை…./

    இதே போலத்தான் இராக் மனித உரிமை அமைப்புகளின் கேள்விக்கு அமெரிக்காவும் பதில் சொன்னது. இன்றும் தலிபான்களைத் தொலைத்து ஆப்கானிஸ்தானிய பெண்களை விடுவித்து குதூகலிக்க வைத்திருப்பது பற்றியும் சொல்லிக் கொண்டிருக்கின்றது! இராக் யுத்தம் முடிந்த(?) கையோடு இங்கிலாந்து அமெரிக்க வாழ் இராக்கிய ‘புத்திஜீவிகள்’ இராக் சென்று கட்டுரை வடித்தனர்.

    Reply
  • vasu
    vasu

    Ajith,
    I don’t know which planet you are living now. Do not worry about my boss but look after you 75 years old mum as she may be living next to MR’s house. Well I think as a beloved son you should get her out of Sri Lanka if you are really worried about your mum.

    Reply
  • Ajith
    Ajith

    Vasu,
    I live in the same planet as you live. I am not worried about my mum or you or your boss. Who asked you to represent tamils of our motherland.If you were pleased with the freedom in your motherland why did u return. You should have stayed there and served to the nation. Just read few examples of your writing.

    வன்னி முகாமில் தற்போது எண்பதினாயிரம் மக்களே இருப்பதாக அங்கு பணிபுரியும் ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.அவர்களில் பலர் தற்போதைக்கு மீளக் குடியேறும் நோக்கத்தில் இல்லை என்பதே உண்மை.
    How did you find the this truth? Did you do a survey? What right you have to tell this statement on half of 100,000 people?
    வன்னி முகாம் மக்கள் இன்று சுதந்திரமாக நடமாடுவது இவர்களுக்கு தெரியவில்லையா?
    Do you accept the fact that there was no freedom for last 7 months.What u mean by freedom? Having food and selling food to buy other needs are the freedom. Do you what is the basic rights of people guranteed under constitution.

    எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஒரு புதிய மாற்றம் ஒன்றை சகல இனத்தவர்களும் விரும்பினாலும் அதை நிறைவேற்றும் ஒருவர் இந்த தேர்தலில் நிற்கவில்லை என்ற கருத்தே பெரும்பான்மையாக உள்ளது.ஆனால் இந்த தேர்தலை பாவித்து குறைந்தபட்சம் சில சலுகைகளையாவது தமிழ் கட்சிகள் தமக்கு பெற்று தர வேண்டும் என்ற கருத்தில் தமிழ் மக்கள் பலர் உடன்பட்டார்கள்,

    so, you are the spokesperson for the tamils?
    Once agian,you all have started all you games?

    Reply
  • london boy
    london boy

    கொழும்பில் பிறந்து வளர்ந்த பிள்ளைகளும், கொழும்புக்கு இடம்பெயர்ந்த பிள்ளைகளும் குடும்பமாக பயமின்றி இப்போதுதான் யாழ்ப்பாணம் ரூர் போகிறார்கள். யாழ்ப்பாணத்தில் உள்ள பிள்ளைகளும் பீச்சுக்குப் போகிறோம் ரூர் என்று சந்தோசமாகப் போகிறார்கள். இந்த சந்தோசங்கள் எல்லாம் தற்காலிகமானது, நிரந்தரமானது, தேர்தல் கால அமைதி, மற்றும் இன்னோரன்ன அரசியல் காரணங்களை நீங்கள் எல்லாரும், நீங்கள் சார்ந்த கட்சிகளுக்கேற்ற மாதிரி சொல்லிக் கொண்டிருங்கள். இந்நிலை மாறலாம், மாறாமல் விடலாம். ஆனால் தற்சமயம் நான் போன நேரம் நான் கண்டது இவற்றை என்று வாசு எழுதியவைகள் உண்மை. உண்மை என்பதும் இங்கு எழுதுபவர்களுக்கும் தெரியும். ஆனால் வாசுவின் கடந்தகால அரசியலை மனதில் வைத்துக் கொண்டு அதை எற்றுக்கொள்ளாது மறுதலிக்கிறீர்கள். அவ்வளவேதான். இந்தநேரம் சம்மர் கொலிடேயாய் இருந்தால் இங்கு கருத்தெழுதுபவர்களும் பிள்ளை குட்டிகளுடன் அங்குதான் நின்றிருப்பீங்கள் (நான் உட்பட).

    Reply
  • soorya
    soorya

    சிங்களவர்க்காக அழுகிறீர்களே ஆனால் எந்த ஒரு இணையதளத்திலும் சிங்களவர் தமிழர்களுக்காக துக்கப்படவுமில்லை அல்லது நல்லதா எதுவும் எழுதுவதுமில்லை. இவர்களுடனா தமிழன் ஒற்றுமையாக வாழ முடியும்?

    Reply
  • BC
    BC

    London boy, வாசுவின் கடந்தகால அரசியல், பின்ணணி பற்றி எனக்கு உண்மையில் எதுவும் தெரியாது. இலங்கையில் தமிழர்கள் வாழ்வு சீரடைந்து வருகிறது என்ற உண்மை மட்டும் தான் எனக்கு தெரியும்.

    Soorya , புலிகளால் சீரழிந்த இலங்கை தமிழர்களுக்காக தான் ஆட்கள் இங்கே தேசத்தில் அழுகிறார்கள்.

    Reply
  • vasu
    vasu

    Mr Ajith, Well if you are really scared that some thing will happen to the people then you should get your mum out now. My dad is 90 years old and they are all living there peacefully now. YOU don’t have a right to tell me where to live and its my choice. Please go and learn Tamil again as you are misrepresenting my quotes.

    Reply
  • vasu
    vasu

    சூர்யா கீழ்வரும் இணையத்தில் பல சிங்கள நண்பர்கள் எழுதுகிறார்கள்.

    http://transcurrents.com/

    Reply
  • Ajith
    Ajith

    Mr Vasu,
    I didn’t say you to go and live in Sri Lanka. I agree that it is your choice but you are the one who told me to bring my mum out of the country if I am scared.
    I am confident in my tamil and you don’t need to teach me tamil. I learnt tamil very well. You should remember when you write in the public domain you should support your statements with evidence and you should defend your statements with facts, figures and sources. There is a difference between telling your opinion and you telling others opinion. Read the following sentence carefully.
    ஆனால் இந்த தேர்தலை பாவித்து குறைந்தபட்சம் சில சலுகைகளையாவது தமிழ் கட்சிகள் தமக்கு பெற்று தர வேண்டும் என்ற கருத்தில் தமிழ் மக்கள் பலர் உடன்பட்டார்கள்.

    In this statement you are telling that most of the tamils agreed that tamil parties should use this election to get at least few concessions for them.

    If you would have said that most of the tamil people you met said this then that is fine (say 6 out of 10 people you met). But you are generalising your statement here. I am sure you can understand the difference and correct yourself next time.

    Reply
  • ANWAR
    ANWAR

    இந்த பயணக்கட்டுரையை ஆங்கிலத்திலும், சிங்களத்திலும் மொழிபெயர்த்தால் , மகிந்தரின் தேர்தல் பிரச்சாரத்திட்கு உதவியாக இருக்கும். அடுத்தமுறை, அனேகமாக சரத் வென்றபின், ஒருதடவை இலங்கை சென்றால், வட-கிழக்கில் நடைபெறும் சிங்கள குடியேற்றங்களையும், வாசுதேவன் பார்த்து வந்து கட்டுரை எழுத வேண்டும்.

    Reply
  • பல்லி
    பல்லி

    அஜித் உங்கள் பின்னோட்டங்களை தமிழிலில் விட்டால் நிங்கள் எழுதும் பின்னோட்டத்துக்கு சொந்தகாரரும் படிப்பார்கள், பல்லி உட்பட:

    Reply
  • Vasu
    Vasu

    Jaffna via the A9: news and views!

    http://www.youtube.com/watch?v=UBs-8OFnXOc&feature=player_embedded#

    Reply
  • nallurkantha
    nallurkantha

    My dear friends,
    I appreciate thesamnet for accomodating differing views.But I am sad about our Tamils, mainly Jaffna tamils who refuse to see the real world.Communalism is very foreign to majority of Sinhalese people.They have been living with Tamils and muslims for a long time.Pl think about you?

    Reply
  • lio
    lio

    இதுபோன்ற பதிவுகள் தொதர்ச்சியாக வெளிவருதல் நன்று

    Reply
  • perera
    perera

    How do you know??
    ஒரு நியூஸ் வாசு நல்ல தேர்தல் தருணம் பார்த்து லங்காபுரிக்கு போய் வந்துவிட்டு தேவானந்தாவின் மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி தத்துவ புலுடா விடுகிறார்

    Reply