‘ஆட்சி’ மாற்றமா? ‘ஆள்’ மாற்றமா? : ந சிறீகாந்தா (தமிழ் தேசியக் கூட்டமைப்பு பா உ)

Sivajilingam M K Presidential CandidateSivajilingam M K Presidential CandidateSivajilingam M K Presidential Candidateஅன்புக்குரிய சகோதர சகோதரிகளே!
எதிர்வரும் 26ந்திகதி சனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது இத் தேர்தலில் மொத்தம் 22 வேட்பாளர்கள் போட்டி இடுகின்றார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். இவர்களில் இரண்டு வேட்பாளர்களுக்கிடையே தான் சனாதிபதிப் பதவிக்கு கடும் போட்டி நிலவுகின்றது. இரண்டு வேட்பாளர்களில் ஒருவர் – மகிந்த ராஜபக்ச. மற்றவர் – ஜெனறல் சரத் பொன்சேகா. மகிந்த ராஜபக்ச – ஆளும் பொதுசன ஐக்கிய முன்னணியின் வேட்பாளர். சரத் பொன்சேகா – எதிர்க்கட்சிகளின் கூட்டணியின் வேட்பாளர். இந்த இருவரும், இப்பொழுது தமிழ் மக்களின் வாக்குகளையும் கோரி நிற்கின்றனர்.

இந்த இருவரைப் பற்றியும் நீங்கள் நன்றாக அறிவீர்கள்! நடந்து முடிந்த யுத்தத்ததை இவர்கள் இருவரும் மிகக் கொடூரமாக நடாத்தியவர்கள். விடுதலைப் புலிகளுடன் அரசாங்கத்தின் படைகள் நடாத்திய யுத்தத்துக்கு உத்தரவு இட்டவர் சனாதிபதி மகிந்த ராஜபக்ச! ‘விடுதலைப் புலிகளை அழித்து ஒழித்தே தீருவேன்’ என்ற வைராக்கியத்துடன், யுத்தத்திற்கு தலைமை தாங்கி படைகளை வழி நடாத்தியவர் ராணுவத்தளபதி சரத் பொன்சேகா! முடிந்து போன யுத்தத்தில் நிகழ்ந்த எமது மக்களின் கோர மரணங்களுக்கும் கொடிய அவலங்களுக்கும் இந்த இருவருமே கூட்டான பொறுப்பாளிகள்.

மூன்று லட்சம் தமிழ்ப் பொதுமக்கள் யுத்தத்தினால் இடம் பெயர்ந்து, அனுபவித்த சகல துன்ப துயரங்களுக்கும் இவர்களே பொறுப்பாளிகள். குண்டு வீச்சுக்களாலும், செல் தாக்குதல்களாலும் எமது மக்களின் வீடுகளும் குடியிருப்புக்களும் தகர்த்தெறியப்பட்டு, பல்லாயிரம் உயிர்கள் துடிதுடிக்க பலியாகிப் போன கோரக் கொடுமைகளுக்கு இந்த இருவருமே பொறுப்பாளிகள்.

விடுதலைப் புலிகளை யுத்தத்தில் வீழ்த்தி துவம்சம் செய்வதே, இவர்களின் ஒரே நோக்கமாக இருந்தது. அப்பாவி தமிழ் பொது மக்களின் உயிர்ளைப் பற்றி இந்த இருவரும் கொஞ்சங் கூட கவலைப்படவேயில்லை! எமது மக்களைக் கொன்றார்கள்! கொன்று குவித்தார்கள்! சொத்துக்களை நாசமாக்கினார்கள்! லட்சக்கணக்கில் எமது மக்களை அகதிகளாக்கி முட்கம்பி முகாம்களுக்குள் முடக்கினார்கள்!

இன்று………. தயக்கம் எதுவுமின்றி உங்கள் வாக்குகளை, இந்த இருவரும் போட்டி போட்டுக் கொண்டு, கேட்டு நிற்கின்றார்கள். உங்களின் வாக்குகளை கோருவதற்கு எந்த அருகதையும் இந்த இருவருக்கும் கிடையவே கிடையாது. யுத்தத்தில் வெற்றி பெற்ற பிறகு, ‘சிறுபான்மை மக்கள் என எவருமே இந்த நாட்டில் இல்லை’ என்று நாசூக்காக சொன்னவர் மகிந்த ராஜபக்ச. ‘இந்த இலங்கைத்தீவு சிங்களவர்களுக்கு மட்டுமே சொந்தமானது’ என, யுத்தத்தின் நடுவில், நாக்குக் கூசாது பேசியவர் சரத் பொன்சேகா. யுத்தத்தில் விடுதலைப் புலிகளை தோற்கடித்து வெற்றி வாகை சூடும் வரையில் ஒன்றாக இணைந்து நின்றவர்கள் – பிணைந்து செயற்பட்டவர்கள் இந்த இருவரும்! இப்பொழுது பிரிந்து போய், பதவிக்காகவும் அதிகாரத்திற்காகவும் இவர்கள் இருவரும் ஒருவரோடு ஒருவர் பயங்கரமாக முட்டி மோதுகின்றார்கள்.

விடுதலைப் புலிகளை முறியடித்த யுத்தத்தின் கதாநாயகன் யார்? என்ற கேள்வியை முன் வைத்தே இந்த இருவரும் மோதிக் கொண்டிருக்கின்றார்கள். அப்பாவித் தமிழ் மக்களின் ரத்தக் கறைகள் படிந்த கைகளுடன் அதிகாரத்திற்கான போராட்டத்தில் இந்த இரண்டு சிங்கள மாவீரர்களும் உக்கிரமாக மோதுகின்றன. இது பதவிப் போராட்டம்! அதிகாரச் சமர்! இந்த இருவரில் எவரையும், ஞாபக சக்தி கொண்ட எமது மக்கள் ஆதரிக்க முடியாது.

பல்லாயிரக்கணக்கில் எமது உடன் பிறப்புக்களை கொன்று முடித்தாகி விட்டது. குழந்தைகளை – சிறுவர்களை – பெண்களை – கர்ப்பிணிகளை – முதியோர்களை ஈவிரக்கமின்றி கொன்று போட்டாகி விட்டது. இப்போது எங்களிடமே வந்து வாக்குப் பிச்சை கேட்கிறார்கள்! இனியாவது, எஞ்சியுள்ள எமது மக்களுக்கு நீதி வழங்க இவர்களில் எவராவது தயாரா…….? ஆகக் குறைந்தது, எமது சொந்த மண்ணில், எமது இனத்திற்கு சுயாட்சி வழங்கிட இவர்களில் எவராவது தயாரா……?

இல்லை! – இல்லை! – இல்லவே இல்லை!!!

இந்த நிலையில் இவர்களில் எவருக்கும் எமது மக்களின் வாக்குகளை கோருவதற்கு என்ன துணிச்சல்….! எதிர்வரும் தேர்தல், ஒரு சிலர் கூறிக் கொண்டிருப்பதைப் போல, ‘ஆட்சி மாற்றம் எதையும் கொண்டு வரப் போவதில்லை. ஒருவேளை ‘ஆள் மாற்றம்’ ஏற்படலாம். இதனால் விமோசனம் எதுவும் கிட்டும் என்று நம்பினால், கடைசியில் மிஞ்சப்போவது ஏமாற்றமே!

ஏன் எனில், மகிந்த ராஜபக்சவும் சரத் பொன்சேகாவும் ஒரு நாணயக் குற்றியின் இரு வேறு பக்கங்களே! வேறு விதமாகச் சொல்வதானால், ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்!

அன்புக்குரிய சகோதர சகோதரிகளே!
தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது. ஆனால், சுதந்திர இலங்கைத் தீவில் அறுபது ஆண்டுகளாய் தொடரும் எமது அரசியல் போராட்டம் தோற்று விடவில்லை. எமது மக்களின் விடுதலை வேட்கை தணிந்து விடவில்லை. சுயமரியாதை கொண்ட ஒவ்வொரு தமிழ் மகனும், தமிழ் மகளும் சுதந்திர உணர்வுடனேயே வாழ்ந்து வருகின்றனர். நீதி கிடைக்கும் வரையில் எமது சுதந்திர தாகம் தணிய மாட்டாது. சுதந்திரம் – சமத்துவம் – சமநீதி என்ற உன்னத கோட்பாடுகளின் அடிப்படையில், எமது சொந்த மண்ணில், சுந்தர பூமியில் எம்மை நாமே ஆளும் வகையில், ஆகக் குறைந்தது “சுயாட்சி” ஆவது எமக்கு வழங்கப்படுமா?

இத்தனை காலமும், இப்பொழுதும், எமது மக்கள் அனுபவித்த – அனுபவித்துக் கொண்டிருக்கும் அத்தனை அவலங்களையும், துன்ப துயரங்களையும் ஒரளவுக்காவது ஈடு செய்யும் வகையில், எமது மக்களின் தாயகமான வட – கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய மாநிலத்திற்கு சுயாட்சி வழங்கப்படுமா?

இந்த இலங்கைத் தீவில் நாம் வந்தேறு குடிகள் அல்ல வாழையடி வாழையாக – வரலாற்று ரீதியாக, எமது சொந்தப் பிரதேசத்தில் வாழ்ந்து வரும் ஒரு தேசிய இனம் என்ற வகையில் எமது தாயகத்திற்கு சுயாட்சி கோர எமக்கு சகல உரிமைகளும் உண்டு. பல மொழிகள் பேசப்படும் பல்வேறு நாடுகளில் இனப்பிரச்சினை என்பது அரசியல் ரீதியாக – சமாதான வழியில் – சுயாட்சிக் கோட்பாட்டின் அடிப்படையில் தீர்த்து வைக்கப்பட்டிருக்கின்றது.

அங்கு எல்லாம் இது முடியும் என்றால், இங்கு – இந்த இலங்கைத் தீவில் இது ஏன் முடியாது? இது தான் இலங்கைத் தீவு எதிர்நோக்கும் கேள்வி! இந்தத் தேர்தலில், இந்தக் கேள்வியை நாம் அனைவரும் ஒன்றுபட்டு ஓங்கி எழுப்ப வேண்டும்.

அடிபட்டோம், அல்லல் பல பட்டோம் அகதிகளானோம்…….., துயரங்கள் தொடர்ந்தாலும் – நாம் துவண்டு விடமாட்டோம்! இந்த மன உறுதியை – திடசங்கற்பத்தை உலகம் அறிய நாம் பிரகடனப்படுத்த வேண்டும்.

எதிர்வரும் சனாதிபதித் தேர்தல் இதற்கான ஒரு நல்ல சந்தர்ப்பம். இந்தத் தேர்தல் எமது மக்களின் இலட்சிய உறுதியை பரீட்சித்துப் பார்க்க சிங்கள அதிகார வர்க்கத்தால் எம்முன் வைக்கப்பட்டிருக்கும் ஒர் அரசியற் சவால்!

முடிந்து போன யுத்தத்தில், சனாதிபதி மகிந்த ராஜபக்சவும் அவரின் படைத்தளபதி சரத் பொன்சேகாவும் அயல் நாடுகளின் உதவியுடன் சாதித்த வெற்றி என்பது, தமிழ் இனத்தின் அரசியல் அபிலாசைகளின் புதைகுழி அல்ல! அது – எமது எதிர்கால எழுச்சிக்கும், இறுதி மகிழ்ச்சிக்குமான அரசியல் அத்திவாரக் கற்களின் நடுகுழி என்பதை நாம் அனைவரும் நிலை நாட்ட வேண்டும்.

இந்த நிலையில், சுதந்திரம், சமத்துவம், சமாதானம் என்ற கோட்பாடுகளை முன் நிறுத்தி தேர்தல் களத்தில் துணிந்து நிற்கும் ஒரே ஒரு தமிழ் வேட்பாளர் திரு.சிவாஜிலிங்கம். இலங்கைத்தீவின் சனாதிபதி ஆவதற்காக அல்ல எம்மினத்தின் அடிமை நிலை சாவதற்காக அவர் களத்தில் நிற்கின்றார்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் எந்த ஒரு கட்சியினதும் வேட்பாளர் அல்ல. சுயேச்சையாக போட்டியிடும் அவர் எம்மினத்தின் வேட்பாளர். சுயமரியாதை கொண்டு, சுதந்திரத்தை நேசிக்கும் ஒவ்வொரு தமிழ் உயிரினதும் வேட்பாளர். உங்கள் ஒவ்வொருவரினதும் வேட்பாளர். சிங்கள ஆதிபத்திய சக்திகளின் ஏவல் நாய்களாக ஓடித் திரியும் சில தமிழ்ப் பத்திரிகைப் பிரகிருதிகள் ‘உதய’ வேளைகளில் ஊளையிட்டு பச்சைப் பொய்களைக் கக்கலாம்….. இந்திய ஏகாதிபத்தியத்தின் ஏஜென்டுகள், சந்தர்ப்பவாத – சுயநல – சதிமதியாளர்கள் சலுகைச் சுகங்களுக்காக எமது மக்களின் முதுகில் துரோகத்தனமாகக் ஓங்கிக் குத்தலாம்……. நேர்மை இருந்தும் நெஞ்சுரம் இல்லாத கோழைகள் கடமையை மறந்து – கை கொடுக்க மறுத்து ஓடி ஒதுங்கலாம்…….

ஆனால், எமது மக்களின் சத்திய எழுச்சியை எந்த சதியும் அடக்கி விட முடியாது!! எந்த விதியும் ஒடுக்கி விட முடியாது. கொடியோரின் கொடுமை கண்டு குமுறிக் கொண்டிருக்கும் நாம் அனைவரும் ஒரணி திரண்டு நேர்வழி நின்றால்… எமது மண்ணில் அநீதி சாயும்! அடிவானம் வெளுக்கும்! நமக்கு நாமே! நாம் மட்டுமே!! நமது ஆதரவு நம்மவனுக்கே!!!

உலகம் அறிய உரத்துச் சொல்வோம். தென்னிலங்கை எங்கும் எதிரொலிக்கச் செய்வோம். இது ஓர் புதிய அரசியல் வரலாற்றின் முதல் வரி! எம்மினத்தின் எழுச்சி அலைகளின் முகவரி! நம்பிக்கையுடன் செயற்படுவோம் – துணிவுடன் வாக்களிப்போம்.

‘சுதந்திரம் எமது பிறப்புரிமை.’
நாளை நமதே!

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

31 Comments

  • குரங்குபாஞ்சான்
    குரங்குபாஞ்சான்

    ஐயா,
    சுதந்திரம் எமது பிறப்புபுரிமைதான் அதனால்தானோ நீங்கள் வருடம் இரு தடவை அவஸ்ரேலியா சென்று உங்கள் பிரஜா உரிமையை புதுப்பித்து வருகிறீகள்? பேஸ் புக்கில் பார்த்தேன் உங்கள் பிள்ளைகள் நால்வரும் அவுஸ்ரேலியாவில் டாக்டராக, என்சினியராக இன்னும் நல்ல வேலையில், கலியாணம் செய்து சுகவாழ்வு வாழ்கிறார்கள்.

    பாவப்பட்ட எமது ஈழச்சிறார்கள் அப்படி சுகவாழ்வை கேட்கவில்லை அவர்கள் கேட்ப்பதெல்லாம் அடிப்படை தேவைகளையே. தயவு செய்து சுயாட்ச்சி, மானிலம் என்று பேசி அவர்கள் எதிர்காலத்தில் மண் அள்ளிப் போடாதீர்கள். ஒரு பிரளயத்துக்கு தப்பிப் பிழைத்த அவர்களை இனியாவது வாழவிடுங்கள்.

    நீங்களும் கிசோரும் யுத்தம் முடிந்தவுடன் செயல்பட்ட விதம் எமக்கு நன்கு தெரியும். இப்போது உங்களது நோக்கம் தமிழரை உசுப்பேத்தி சிவாஜிக்கு வோட்டு போட வைத்து அதன் மூலம் மகிந்தவை வெல்ல வைப்பதே.

    2005ல் எப்படி புலியை முட்டாளாக்கி பகிஷரிக்க வைத்தார்களோ அதே போல 2010ல் சிவாஜியை முட்டாளக்கி தனியே நிற்க்க வைத்துள்ளனர். 2005ல் புலிக்கு பகிஸ்கரிக்கும்படி (பாலசிங்கத்துக்கும் மாறாக) சொன்னவர்கள் இப்போது அரசு ஆதரவுடன் கொழும்பு நட்ச்ச்த்திர விடுதியில் வசிக்கிறார்கள்.

    இதே போல 2010ல் சிவாஜியை முட்டாளாக்கிய நீங்களும் தேர்தலுக்கு பின்பு உபசரிக்கப் படுவீர்கள். சரியோ பிழையோ தமிழர்ர் இந்த இருவரில் ஒருவருக்கு வாக்களித்தே ஆகவேண்டும். அப்படி பார்க்கும் போது ரணில், மனோ, கக்கீம், சிவகீதா போன்றோர் இருக்கும் பக்கம் போவதே எமக்கு நல்லது. இப்படி செய்வதனால் நாம் பொன்சேக்கவின் அனுதாபிகள் என்றோ அல்லது அவர் தமிழரின் ஆபத்தாண்டவர் என்றோ சொல்வதாக அர்த்தமில்லை.

    சரத் கேவலமானவன், மகிந்த மிககேவலமானவன். சிவாஜி நல்லவர், விக்ரமபாகு ரொம்ப நல்லவர். ஆனால் இதில் மகிந்த அல்லது சரத்திற்க்கு போடதா வாக்குகள், 2005 முட்டாள்தனத்துக்கு நிகரானவை. எனவேதான் தமிழரின் இப்போதைய தெரிவு சரத். மனம் வருந்திய படி தான் வக்களிப்போம் இருந்தாலும் வேறு வழியில்லை.

    Reply
  • nadesh
    nadesh

    /உங்கள் பிள்ளைகள் நால்வரும் அவுஸ்ரேலியாவில் டாக்டராக என்சினியராக இன்னும் நல்ல வேலையில் கலியாணம் செய்து சுகவாழ்வு வாழ்கிறார்கள். /

    —தானும் சரத் பொன்சேகா குடும்பத்தினர்களும் கடந்த 35 ஆண்டுகளாக நெருக்கமான நண்பர்கள் என்று தெரிவித்த தனுன திலகரத்ன பொன்சேகா குறித்து தன்னைவிட நன்கு அறிந்தவர்கள் எவரும் இருக்க முடியாது என்றார்.

    2000 ஆம் ஆண்டில் சரத் பொன்சேகாவும் குடும்பத்தவர்களும் அமெரிக்க ஒக்லஹோ மாவில் வதிவிட வசதிகளை பெறுவதற்குத் தான் உதவி புரிந்ததாக தெரிவித்த அவர், தான் வழங்கிய பங்களிப்பு காரணமாக சரத் பொன்சேகாவின் இரு மகள்மாரும் அமெரிக்காவில் தொடர்ந்து கல்வி பயிலும் வாய்ப்பு கிட்டியதாகவும் அவர் குறிப்பிட்டார்.—

    இந்த வகையில் ஜனாதிபதி வேட்பாளர் சரத்தும் பா உ சிறீகாந்தாவும் ஒரே போக்குத்தான்.
    பிரபாகரன் பிள்ளைகளை வெளிநாடு அனுப்பிப் படிப்பித்தார். பிரபா சகோதரங்கள் வெளிநாட்டு சொகுசு வாழ்வுதான். இந்த வகையில் எல்லாரும் ஒரே போக்குத்தான்.

    கூத்தமைப்பு புலிகளால் துப்பாக்கி முனையில் கட்டப்பட்ட வலிந்து கட்டப்பட்ட அமைப்பு. புலியின் பிழைகளை சரியென நியாயப்படுத்த என புலிகளால் நியமிக்கப்பட்ட பிரச்சாரப் பீரங்கிக் குழு. இப்ப புலி அழிக்கப்பட்டபின் தத்தம் விருப்பத்திற்கேற்ப கூத்தாடுகிறார்கள். ரிஎன்ஏ உருவாக்கப்படாமல் இருந்திருந்தாலும் இப்பபோலத்தான் நடந்திருப்பாங்கள்.

    /2005ல் எப்படி புலியை முட்டாளாக்கி பகிஷரிக்க வைத்தார்களோ அதே போல 2010ல் சிவாஜியை முட்டாளக்கி தனியே நிற்க்க வைத்துள்ளனர். 2005ல் புலிக்கு பகிஸ்கரிக்கும்படி (பாலசிங்கத்துக்கும் மாறாக) சொன்னவர்கள் இப்போது அரசு ஆதரவுடன் கொழும்பு நட்ச்ச்த்திர விடுதியில் வசிக்கிறார்கள்./
    புலிகள் அமைப்பு சிறீகாந்தா கதை கேட்ட(பாலசிங்கத்துக்கும் மாறாக) முட்டாள்கள் என்கிறீர்கள்.
    இவர்கள் புலி சாகும்வரை புலியிடம் காசுவாங்கிக் கொண்டு புலிக்காக பாட்டுப்பாடின ரெலோக்காரர் என்றுதான் குற்றச்சாட்டு உண்டு

    Reply
  • BC
    BC

    நடேஸ் கூறியது சரியே. பொன்சேகா, சிறீகாந்தா, பிரபாகரன், பிரபாகரனின் சகோதரங்கள் ஒரே போக்குத்தான்.

    Reply
  • குரங்குபாஞ்சான்
    குரங்குபாஞ்சான்

    அப்போ தமிழர் யாருக்கு வோட்டு போடலாம் நடேஸ்? தமிழர் முன்பு இப்போதுள்ள்து “கோஸ்பன்ஸ் சாயிஸ்”, இரண்டு கடினமான தெரிவுகளில் ஒரள்விற்க்கேனும் கடினமில்லாத தெரிவை தெரிதல்.

    Reply
  • Sampanthan
    Sampanthan

    Patten: Sri Lanka to choose between two alleged war criminals
    [TamilNet, Wednesday, 13 January 2010, 02:31 GMT]
    Chris Patten, currently the co-chairman of the International Crisis Group, notes in a New York Times article that public in Sri Lanka is “faced with a choice between two candidates who openly accuse each other of war crimes,” and adds, “[w]hoever wins, the outside world should use all its tools to convince the government to deal properly with those underlying issues to avoid a resurgence of mass violence….In short, this means not giving Colombo any money for reconstruction and development until we know how it will be spent. And if we see funds not being used as promised, it means not being afraid to cut them off until.” Patten is a senior international figure and is the last British governor of Hong Kong.

    Full text of NYT op-ed follows:

    Sri Lanka’s Choice, and the World’s Responsibility

    Chris PattenPity the poor Sri Lankan voter. As presidential elections loom on Jan. 26, the public is faced with a choice between two candidates who openly accuse each other of war crimes.

    The current exchange of charges and counter-charges between retired Gen. Sarath Fonseka and President Mahinda Rajapaksa must be particularly confusing to those Sri Lankans who consider both to be war heroes rather than war criminals. Many from the ethnic Sinhalese majority feel that, regardless of the human costs in the last months of the long-running civil war that ended last year, both leaders deserve credit for finally finishing off the terrorist Tamil Tiger rebels.

    With the Sinhalese nationalist vote thus split, the two candidates are focusing their energies on winning the votes of the country’s minority ethnic Tamils — which is surely one of the stranger political ironies of early 2010. After all, both General Fonseka and Mr. Rajapaksa executed the 30-year conflict to its bloody conclusion at the expense of huge numbers of Tamil civilian casualties.

    By early May, when the war was ending, the United Nations estimated that some 7,000 civilians had died and more than 10,000 had been wounded in 2009 as the army’s noose was being drawn tight around the remaining rebels and hundreds of thousands of noncombatants, who could not escape government shelling. The final two weeks likely saw thousands more civilians killed, at the hands of both the army and the rebels.

    After the war, the Tamils’ plight continued. The government interned more than a quarter million displaced Tamils, some for more than six months, in violation of both Sri Lankan and international humanitarian law. Conditions in the camps were appalling, access by international agencies was severely restricted, and independent journalists could not even visit. Barbed wire and military guards insured people could not leave or tell their stories to anyone.

    By the end of 2009, most of the displaced had been moved, and the nearly 100,000 remaining in military-run camps were enjoying some freedom of movement — important steps brought about mostly as a result of international pressure and the authorities’ desire to win Tamil votes. However, a large portion of the more than 150,000 people recently sent out of the camps have not actually returned to their homes nor been resettled. They’ve been sent to and remain in “transit centers” in their home districts.

    Now, put yourself in a Tamil’s shoes, and decide whom to vote for in the presidential election: Choose either the head of the government that ordered the attacks against you and your family, or the head of the army that carried it all out.

    On Jan. 4, the Tamil National Alliance, the most important Tamil political party, made its choice and endorsed General Fonseka after he pledged a 10-point program of reconciliation, demilitarization and “normalization” of the largely Tamil north. There is some hope his plan might be a sign that top leaders realize that, after decades of brutal ethnic conflict, peace will only be consolidated when Sinhalese-dominated political parties make strong moves toward a more inclusive and democratic state.

    What counts more than campaign promises, though, is what the winner actually does in office, and based on past performance, it is hard to imagine either candidate making the necessary constitutional reforms to end the marginalization of Tamils and other minorities — the roots of the decades-long conflict. Left unaddressed, Tamil humiliation and frustration could well lead to militancy again.

    While Sri Lankan voters face a difficult decision, for the international community, the choice is clear. Whoever wins, the outside world should use all its tools to convince the government to deal properly with those underlying issues to avoid a resurgence of mass violence. In the interest of lasting peace and stability, donor governments and international institutions — India, Japan, Western donors, the World Bank and the Asian Development Bank — should use their assistance to support reforms designed to protect democratic rights, tie aid to proper resettlement of the displaced, and a consultative planning process for the reconstruction of the war-ravaged, overly militarized north. U.N. agencies and nongovernment organizations should have full access to monitor the programs to ensure international money is spent properly and people receiving aid are not denied their fundamental freedoms.

    In short, this means not giving Colombo any money for reconstruction and development until we know how it will be spent. And if we see funds not being used as promised, it means not being afraid to cut them off until.

    While there may not be much to choose between the candidates, the rift between General Fonseka and Mr. Rajapaksa — and the consequent divisions among Sinhalese nationalist parties and the renewed vigor of opposition parties — has at least put the possibility of reforms on the agenda. International leverage, correctly applied, could help expand this small window for change, leading to the democratization and demilitarization the country desperately needs to move finally beyond its horrific war and its bitter peace.

    Reply
  • Ajith
    Ajith

    Dear Sri Kantha,
    I appreciate your stand about independence for tamils. However, do you think will win the election to declare independence for tamils. I agree both Rajapakse and Fonseka are together are the culprits for the death of thousands of our community and destruction our homeland. Our first enemy is Rajapkase who declared war against tamils. Rajapakse was the president and he is the one who ordered war. by electing 22 MPs in last election tamils have clearly expressed their view for freedom of tamils. If you were really meant that you asked all tamils to reject the poll because it is not the presidential election that is going to be used as a referundam to freedom. It is the sinhala nation as whole aginst to tamil freedom and participation in that election is something we should avoide completey.As you have already seen Sinhalese are fighting each other and we should do whatever we can to encourage a bloodshed in the south that enjoyed killing of tamils. The decesion by TNF to vote for Fonseka has already incresed the pressure on Rajapakse and now sinhalese have become traitors and he has ordered violence against sinhalese. I would advice Sivaji to withdraw from the election should announce support to Fonseka in order to see the effect in the south. Please do not fall into the hands of Sonia Gandhi and Rajapakse.

    Reply
  • bala
    bala

    By voting to sarath you say to the world thereis no probelems with sarath fonseka and he has not done anything to tamils basically you sarath mahida supporters damaging the tamil autonomy cause.

    by supporting the mahinda and sarath – next election many mp’s from tamils area for slfp and unp and they will against tamil autonomy – you all doing wrong now.

    As you said the LTTe would have surrender their weapons to the third party or UN we would have benefited in many ways – madness of LTTE.

    Reply
  • karuna
    karuna

    ராஜபக்ச கட்டளையிட்டார். பொன்சேகா சுட்டுத்தள்ளினார். எனவே ராஜபக்சதான் குற்றவாளி; கொலையாளி; தமிழரின் எதிரி.

    அடுத்த பக்கத்தில் பிரபாகரன் கட்டளையிட்டார். புலிப் போராளிகள் சுட்டுத்தள்ளினார்கள்.(உட்படுகொலை; சகோதரப் படுகொலைகள்: முள்ளிவாய்க்கால் போரில் தப்பியோடியவர்கள் கொலை)எனவே பிரபாகரன்தான் குற்றவாளி; கொலையாளி; தமிழரின் எதிரி.எனக் கொள்ளலாம்தானே.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    கருணா,
    உந்த அதிபுத்திசாலி விளக்கத்தை முன்பு யாராவது பிரபாகரனுக்கும் சொல்லிக் கொடுத்திருந்தால்(சரத் பொன்சேகா வெறும் அம்பு என்பதால்)சரத் பொன்சேகா மீது தற்கொலைத் தாக்குதலை பிரபாகரன் நடாத்தச் சொல்லலியிருக்க மாட்டாரோ??

    உப்பிடியான அருமையான கருத்துகள் மூலம் பிரபாகரனை முழு முட்டாளென்று இவர்களே காட்டிக் கொடுத்தது விடுவார்கள் போல…….

    Reply
  • lamba
    lamba

    பிரபாகரன் தன்இனத்தையே கொன்ற ஒரு கொலைகாரன், தமிழருக்குத் துரோகம் செய்தவர் என்பதை கூட்டமைப்பு வெளிப்படையாகச் சொல்லிப்போட்டு, தமிழரிடம் பொன்சேகாவுக்கு வாக்குப் போடச் சொல்லிக் கேட்டால் சனமும் போடும்.

    Reply
  • sam
    sam

    2010-01-13 Sivajilingam in Eastern Province Campaignsam on January 14,

    http://www.youtube.com/watch?v=c2nttKjgcSk&feature=email

    Reply
  • தோழர்
    தோழர்

    http://www.socialequality.com/srilanka/unp-d21-ta.shtml

    இலங்கையின் வலதுசாரி தலைவர் முன்னாள் இடதுகள் வழங்கிய சேவைக்காக அவர்களுக்கு நன்றி கூறுகிறார் -விஜே டயஸ்

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    இன்று ஒரு சிங்களத் தொலைக்காட்சியில் கூத்தமைப்பின் தங்கேசுவரி உட்பட 3 கூத்தமைப்பினரை, ஏன் கூத்தமைப்பு சரத்தை ஆதரிக்கின்றதென பேட்டி கண்டுள்ளனர். அதற்கு அவர்கள் தமது தலைவர் சம்மந்தன் சரத்துடனும், ரனிலுடனும் பேரம் பேசி அவர்களுடன் வெற்றிகரமாக ஒப்பந்தம் செய்து விட்டாரென்றும், அந்த ஒப்பந்தத்தின் பிரதி முறைப்படி மேற்குலக நாடுகளுக்கும் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் பிளந்து கட்டியுள்ளனர். இவர்கள் தமிழில் பிளந்து கட்டியதை அப்படியே சிங்களத்தில் அந்தத் தொலைக்காட்சி சிங்கள மக்களிற்கு ஒளிபரப்பியுள்ளது. இதன் மூலம் இந்த கூத்தமைப்பின் மூவர் வாக்குமூலமும் சரத்திற்கு ஆப்பு வைக்கவே பயன்பட்டிருக்கின்றது என்பது புரியாமலே பிளந்து கட்டிவிட்டு வந்துள்ளனர்.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    நன்றி சாம். யாருக்கும் எந்த கருத்திருந்தாலும் தமது கருத்துக்களை சுகந்திரமாக தெருவில் நின்று பிரச்சாரம் செய்வதைத்தான் எதிர்பார்தோம். பல வருடக்கனவுகள் இன்று நனைவாகிறது. “ஆயிரம் பூக்கள் மலரட்டும்”.

    Reply
  • பல்லி
    பல்லி

    //ஆயிரம் பூக்கள் மலரட்டும்”.//
    அதில் பல்லியின் மொட்டும் மலரட்டும்; சந்திரா;

    Reply
  • rohan
    rohan

    இதன் மூலம் இந்த கூத்தமைப்பின் மூவர் வாக்குமூலமும் சரத்திற்கு ஆப்பு வைக்கவே பயன்பட்டிருக்கின்றது என்பது புரியாமலே பிளந்து கட்டிவிட்டு வந்துள்ளனர், என்று சொல்கிறார் பார்த்திபன்.

    மகிந்த ஆட்சிக்கு வருவதற்காகச் செய்யும் தகிடுதத்தங்கள் சொல்லி முடியாது. எந்தெந்தா விதமாக ஊழல் செய்ய முடியுமோ அப்படியெல்லாம் செய்த மகிந்த அரசு இப்போது எல்லாவிதமான் மோசடிகளிலும் இறங்கியுள்ளது.

    கூட்டமைப்புடன் செய்யபட்டதாக ஒரு பொய் ஒப்பந்த்தம் ஏற்கெனவே தயாரிக்கப் பட்டுள்ளது. சரத்தின் மருமகனின் பெயரில் இருப்பதாக சொல்லப்படும் ஆயுத விநியோக நிறுவனம் இலங்கைக்கு ஆய்தம் தருவிக்க அதிகாடரம் அற்ற ஒன்று என்பதால் சரத் அந்த விடயத்தில் ஊழல் செய்ய வாய்ப்பில்லை என்ற செய்தி வந்திருக்கிறது. சரத் தனது தேர்தல் பிரசாரத்துக்குச் செய்ட்க செலவை விட மிகப் பல மடங்கில் மகிந்தவின் மகனின் பெயரிலான ‘இளையோர்க்கே நாளை’ என்ற அமைப்பு செலவு செய்திருக்கிறது. கோடி கோடியாக (ரூபாயில் அல்ல – டொலர்களில்) மகிந்த குடும்பம் சுருட்டியதற்கான ஆதாரங்கள் வெளி வந்து கொண்டிருக்கின்றன.

    மத்திய வங்கியின் பண மாற்றீட்டுக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருக்கின்றன. முக்கிய அரச மற்றும் தொழில் பிரமுகர்கள் வெளிநாடுகளுக்கு விசா பெற்று வைத்திருக்கும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

    இப்போது எல்ல அரச சொத்துக்களையும் பயன்படுத்கி, முடிந்த பொய் எல்லாம் சொல்லி ஆட்சி பிடிப்புக்கான முயர்சிகள் முழு வேகத்தில் நடக்கின்றன. இப்போது கொலைகளும் (முக்கிய பிரமுகர்கள் அல்ல – வெறும் ஆதரவாளர்கள் கூட) ஆரம்பித்துள்ளன!

    கூட்டமைப்புடன் செய்த ஒப்பந்ததைக் காட்டி வெல்லும் தேவை மகிந்தவுக்கு இல்லை.

    கூட்டமைப்பு சொல்வதற்காக வேண்டாம். மகிந்த ஆட்சி போன்ற ஒன்று இலங்கை போன்ற ஒரு நாட்டிற்கு எப்படித் தகும்?

    தேனீ போன்ற வலை அமைப்புகள் மகிந்தவுக்காக பகிரங்கப் பிரசாரம் செய்கின்றன. தேசம் அந்த மட்டத்துக்குப் போகாதது பெரிய ஆறுதல்

    Reply
  • Sayi
    Sayi

    //மகிந்த ஆட்சிக்கு வருவதற்காகச் செய்யும் தகிடுதத்தங்கள் சொல்லி முடியாது. //
    நீங்கள் சொல்லிமுடிக்கவேண்டாம் றோகன் . இந்த தகிடுத்த்தங்களுக்க எடுபடுபவர்களாத்தானே கூத்தமைப்பு எம்பிக்கள் இருக்கிறார்கள். இவர்கள்தானே எங்களின் தலைவர்கள்.

    மகிந்த யாழ்ப்பாணம் சென்றபோது மருத்துக்கல்லூரி மாணவர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறார்கள். நடத்தமுடிந்திருக்கிறது. இந்தச்சூழல் தற்காலிகமாகவேனும் ஒரு வெற்றிதான்.

    Reply
  • Sampanthan
    Sampanthan

    காரைதீவில் விக்ரமபாகு-சிவாஜிலிங்கம் பிரசாரக் கூட்டத்தில் ஸ்ரீலசுக ஆதரவாளர்கள் இடையூறு
    by வீரகேசரி இணையம்

    ஜனாதிபதி வேட்பாளர்களான விக்ரமபாகு கருணாரத்ன மற்றும் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோரின் பிரசாரக் கூட்டத்துக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவாளர்கள் சிலர் இடையூறு விளைவித்து தாக்குதல் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

    அம்பாறை மாவட்டம் காரைதீவு பிரசாரக் கூட்டத்தில் நேற்றிரவு 8.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

    வேட்பாளர் சிவாஜிலிங்கம் உரையாற்றிக் கொண்டிருந்த வேளை அங்கு வந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவாளர்கள், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் துண்டுப் பிரசுரங்களைப் பலாத்காரமாக பகிர்ந்தளித்துள்ளனர். அதன் பின்னர் அதே இடத்திலிருந்து முச்சக்கர வண்டியில் ஒலிபெருக்கி மூலம் பிரசாரம் செய்து கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தோரை தாக்க முயற்சித்துள்ளனர்.

    இச்சம்பவம் தொடர்பில் அம்பாறை மாவட்ட தேர்தல் அத்தியட்சகருக்கும் பொலிஸ் மா அதிபருக்கும் அறிவித்துள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் எமது இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்.

    மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் பிரசார நடவடிக்கைகளை நேற்று மேற்கொண்டதாகவும் சில இடங்களில் இவ்வாறான இடையூறுகள் ஏற்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

    Reply
  • பல்லி
    பல்லி

    தயவு செய்து கூட்டமைப்பு சமீபத்தில் இந்தியா சென்ற காரனத்தையும் ;அங்கு நடந்த விடயங்களையும் பிரச்சாரத்தில் இலவசமாய் சொன்னால் நல்லது; இல்லையேல் பல்லி போல் பலர் உன்மையோ பொய்யோ ஏதாவது ஒன்றை சொல்லி விடுவார்கள்; அது உங்கள் எதிர்கால அரசியலுக்கு
    சங்கடத்தை ஏற்படுத்தும் என்பது பல்லியின் கணிப்பு;

    Reply
  • பல்லி
    பல்லி

    // பிரசாரக் கூட்டத்துக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவாளர்கள் சிலர் இடையூறு விளைவித்து தாக்குதல் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது//
    இப்படி மொட்டையாய் சொன்னால் எப்படி? கருனா அமைப்பா.?
    அல்லது பிள்ளையான் அமைப்பா ? என சொன்னால் பின்னாளில் விசாரனை கமிஸனுக்கு உதவுமே;

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    றோகன்,
    உங்கள் சரத் விசுவாசம் கூட புல்லரிக்க வைக்கின்றது. எனது கருத்தை வைத்து மகிந்த அரசு தகிடுதத்தங்கள் சொல்லி முடியாது எனத் தாங்களும் கதையளக்கின்றீர்கள். ஆனால் நான் குறிப்பிட்ட அந்தச் சிங்களத் தொலைக்காட்சி தனியாருடையது. கூத்தமைப்பும் சரத்தும் மக்களை ஏமாற்ற நாடகமாடுகின்றார்கள். சரத் கூத்தமைப்பிற்கு உறுதியளித்து கையெழுத்திட்ட ஒப்பந்தத்தை இணையத்தில் வெளியிட்டவர்களே புலியாதரவு ஊடகங்களே. அப்படியாயின் அந்தப் பிரதிகளை அவர்கள் தகிடுதத்தங்கள் செய்து வெவளியிட்டிருக்கின்றார்கள் என்று கூற வருகின்றீர்களா?? அப்படியாயின் கூத்தமைப்பின் மூவரும் பொய்யான தகவல்களை அந்தச் சிங்களத் தொலைக்காட்சிக்கு பணம் வாங்கிக் கொண்டு சொல்வதாக எடுத்துக் கொள்ளலாமா??

    கூத்தமைப்புபு மகிந்த என்ன சொன்னார், சரத் என்ன சொன்னார் என்பதை மறைத்து, மக்களை ஏமாற்ற நினைப்பதன் நோக்கம் தான் என்ன என்பதை விளக்க முடியுமா??

    Reply
  • rohan
    rohan

    பார்த்திபனுக்கான இந்த நேரடி விளக்கத்தை தேசம் அனுமதிக்கும் என்றுநம்புகிறேன்.
    //உங்கள் சரத் விசுவாசம் கூட புல்லரிக்க வைக்கின்றது. எனது கருத்தை வைத்து மகிந்த அரசு தகிடுதத்தங்கள் சொல்லி முடியாது எனத் தாங்களும் கதையளக்கின்றீர்கள். //

    ஆங்கிலத்திலும் தமிழிலுமாக நான் நிறைய வாசிக்கிறேன். ஆதாரம் இல்லாது நான் ஏதும் பேச வரவில்லை. பார்த்திபனின் நாலு வரிகளில் எனது கெளரவத்தைநான் பணயம் வைக்கப் போகிறேனா? வன்முறைகளைப் பாருங்கள். பொய்ப் பிரசாரங்களைப் பாருங்கள். சனத் ஜயசூரிய போன்றோரையும் மகிந்தவின் மகனின் பெயரிலான ‘நாளை இளையோர்க்கே’ போன்ற அமைப்புகளையும் பயன்படுத்திச் செய்யப்படும் பல கோடி செலவிலான விளம்பரங்களைப் பாருங்கள். அரச ஊடகங்கள் என்ன செய்கின்றன என்று பாருங்கள். தேர்தல் தொடர்பான ஒரு நேர்முக ஒளிபரப்புகளும் செய்யக் கூடாது என்ற உத்தரவை ரூபவாகினி கணக்கிலேயே எடுப்பதில்லை. அரச இயந்திரத்தின் எல்லா அமைப்புகளும் தேர்தல் பிரசாரம் செய்கின்றன. மகிந்தவுக்கே வாக்களிக்குமாறு அரச கட்டளைகள் போகின்றன. இவை தகிடுதத்தங்கள் ஆகாவா?

    சரத்துக்கு நான் ஏன் விசுவாசம் காட்ட வேண்டும்? யாரோ செய்த தவறுக்காக முள்ளிவாய்க்காலில் உயிர் விட்ட 20,000க்கு மேற்பட்டோருக்காக முதலில் மகிந்த சகோதரர்கள் தண்டிக்கப்படட்டும். போர்க் குற்ற விசாரணைகள் எந்த அளவுக்குக் கொண்டு செல்லப்படும் என்று தெரியாவிட்டாலும் ஒரு உறுதியான அத்திவாரம் இல்லாமல் சரத்தும் திணறவேண்டும் என்று தான் சாமானியத் தமிழன் நினைக்கிறான் என்று நான் கருதுகிறேன். மகிந்த தோற்க வேண்டும் என்பது தான் பிரார்த்தனை. அதை சரத்தின் வெற்றி மட்டுமே இதற்கு வழி செய்யும். மகிந்தவுக்குக் குடை கொடி ஆலவட்டம் பிடிக்க நிற்போரிடம் நான் எப்படி வாதாட முடியும்?

    //கூத்தமைப்பும் சரத்தும் மக்களை ஏமாற்ற நாடகமாடுகின்றார்கள். சரத் கூத்தமைப்பிற்கு உறுதியளித்து கையெழுத்திட்ட ஒப்பந்தத்தை இணையத்தில் வெளியிட்டவர்களே புலியாதரவு ஊடகங்களே. அப்படியாயின் அந்தப் பிரதிகளை அவர்கள் தகிடுதத்தங்கள் செய்து வெவளியிட்டிருக்கின்றார்கள் என்று கூற வருகின்றீர்களா?? //

    கொஞ்சம் நிதானமாக சிந்திப்பது உதவும். ‘கூட்டமைப்பும் சரத்தும் மக்களை ஏமாற்ற நாடகமாடுகின்றார்கள்’ என்று சொல்கிற நீங்கள் அதற்கான எந்த ஆதாரத்தையும் எடுத்து வைக்கவில்லை. சரத்தும் சம்பந்தனும் கையொப்பம் இட்டுத் தனித் தனியாக வெளியிட்ட அறிக்கைகள் உள்ளன.

    சம்பந்தன் கையொப்பத்துடனான அறிக்கை:
    http://www.tamilnet.com/art.html?catid=13&artid=30947

    சரத் கையொப்பத்துடனான அறிக்கை:
    http://transcurrents.com/tc/2010/01/programme_of_immediate_relief.html

    ஆனால், இவர்களுக்கிடையில் இரகசிய ஒப்பந்தம் ஒன்று இருக்கிறது என்றும் இரண்டு இருக்கின்றன என்றும் ஏஷியன் ட்றிபியூன் போன்ற வலைப் பத்திரிகைகளும் லக்ஷ்மண் யாப்பா போன்ற அமைச்சர்களும்
    வீரவன்சவும் எங்களை நம்ப வைக்க முயல்கின்றனர். இவர்கள் வடக்கு – கிழக்கு இணைப்பு சரத்தினால் ஏற்கப் பட்டிருப்பதாகவே கண்டுபிடித்திருக்கின்றனர்.
    சம்பந்தன் போன்ற கூட்டமைப்புப் புலிவால்களுக்கு எந்த ஆதரவும் இல்லை என்று பார்த்திபன்களுக்கே தெரிகின்ற போது கையொப்பம் வைக்க சரத் தரப்பு முட்டாள்களா?

    ஏஷியன் ட்றிபியூன்:
    http://www.asiantribune.com/news/2010/01/07/sampanthan-entered-north-east-merger-agreement-sarath-fonseka-blessings-indian-high-

    லக்ஷ்மண் யாப்பா:
    http://www.lankaenews.com/English/news.php?id=8905

    சம்பந்தப்பட்டோர் வெளியிட்ட பகிரங்க அறிக்களையும் இருக்கின்ற ஒன்றாக அல்லது இரண்டாக இருப்பதாகச் சொல்லப்படும் ஒப்பந்தங்களைப் பற்றியுமே நான் பேசுகிறேன். இப்படி ஒரு பம்மாத்து ஒப்பந்தம் அரச தரப்பினால் தயாரிக்கப் பட்டுக் கொண்டிருப்பதாகப் பெயர்களுடன் வந்திருக்கும் செய்தி இது:
    http://www.lankanewsweb.com/news/EN_2010_01_14_001.html

    இதேவேளை, மகிந்தவுக்கும் சம்பந்தனுக்கும் ஒரு முழு உடன்பாடு இருந்ததாகவும் மகிந்த எல்லாவற்றையும் எழுத்தில் கொடுக்கத் தயாராக இருந்ததாகவும் பசில் ராஜபக்ச சொல்லியிருந்தார்!
    http://www.asiantribune.com/news/2010/01/03/distortion-coupled-duplicity-sampanthan-prelude-arbitrary-announcement

    //”கூத்தமைப்புபு மகிந்த என்ன சொன்னார், சரத் என்ன சொன்னார் என்பதை மறைத்து, மக்களை ஏமாற்ற நினைப்பதன் நோக்கம் தான் என்ன என்பதை விளக்க முடியுமா??”//

    மன்னிக்க வேண்டும் – உங்கள் அளவுக்கு எனக்கு அரசியலைப் புரிந்து கொள்ளும் அல்லது புரிய வைக்கும் புலமை எனக்குக் கிடையாது. மக்கள் ஆதரவே இல்லாத சம்பந்தன் கேட்ட எல்லா விடயங்களுக்கும் முழுச் சம்மதம் தர மகிந்த என்ன முட்டாளா என்று கண்டு கொள்ளும் பக்குவம் இல்லாதவன் நான். விளக்கம் தரும் வேலையை உங்களிடம் விட்டுவிடவா?

    Reply
  • DEMOCRACY
    DEMOCRACY

    சென்னை, ஜன. 15: தமிழத்தில் அரசு நிர்வாகம் சீர்குலைந்துள்ளது. எனவே, ஆட்சி மாற்றம் வரவேண்டும் என்றார் பத்திரிகையாளர் சோ.

    “துக்ளக்’ வார இதழின் 40வது ஆண்டு நிறைவு விழா சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் வாசகர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு சோ அளித்த பதில்கள்:

    தமிழகத்தில் இப்போது நிர்வாகம் சீர்குலைந்துள்ளது. தேர்தலில் வெற்றிபெற வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பது வாடிக்கையாகிவிட்டது. இதனால் ஓட்டு போட பணத்தை எதிர்பார்க்கும் நிலைக்கு மக்களும் தள்ளப்பட்டுவிட்டனர்.

    சிறு, குறுந் தொழில்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதைத் தமிழக அரசு தவிர்க்கிறது. மத்திய அரசின் ஆதரவு இருக்கும் வரைதான் தமிழகத்தின் நிதி நிலை சீராக இருக்கும். திமுக ஆட்சி தொடர்ந்தால் அரசு கஜானா திவாலாகிவிடும். இதில் மாற்றம் வரவேண்டும் என்றால் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரவேண்டும். திமுக வுக்கு மாற்றுக் கட்சி அதிமுக தான்.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    // முள்ளிவாய்காலில் உயிர்விட்ட 20 000 மேற்பட்டோருக்காக முதலில் மகிந்த சகோதரர்கள் தண்டிக்கப் படவேண்டும்.// ரோகன்.
    உங்கள் பார்வையும் ஆய்வும் விசித்திரமாகவே இருக்கிறது. இதைத் தான் புலி ஆய்வு.புலம்பெயர் புலியாய்வு என்று சொல்வார்கள். ஒன்றை மட்டும் நீங்கள் கவத்தில் எடுக்கவேண்டும் புலத்திலும் சரி. பிறந்தபூயிலும் சரி. புலிவாரிகளும் சரி மக்களின் வாழ்வில் அக்கறை கொண்டவர்களோ அவர்களுக்காக விட்டு கொடுப்பை கொண்டவர்களாகவே அவர்கள் வாழ்ந்தகாலத்தில் எங்கும் நடந்து கொண்டதாக தெரியவில்லலை. தெரிந்தால் அதுபற்றி இங்கு எழுதுங்கள். உண்மையிருந்தால் உங்கள் அடுத்த தேசியத்தலைவரை தெரிவுசெய்வதற்கு நாம் உதவிசெய்கிறோம்.

    தமது பாதுகாப்பிற்காக இலங்கையரசால் கொடுக்கப்படும் உணவுமருந்து எரிபொருள்களை பறித்தும் கடத்தியும் வைத்திருந்தது தான் அவர்கள் செய்த வேலை. இதுவுமஅல்லாமல் அதைமக்களுக்கு அறாவிலைக்கு மக்களுக்கு திருப்பி விற்றார்கள் என்பதே வரலாறு. இதை மறுக்கப்போகிறீர்களா? இவர்கள் வன்னிமக்களை மட்டும் கொள்ளையடிக்கவில்லை. ஒதுங்கிய அரிசிக்கப்பலையும் கொள்ளையடித்தார்கள். இலங்கையை கொள்ளையடித்தார்கள். உலகத்தையே கொள்ளையடித்தார்கள். இதை உங்களால் மறுக்கத்தான் முடியுமா? அது போராட்டம் என்று கதைவிடுவீர்களால் அந்தப்போராட்டம் யாருக்கு?.

    83 ல் திருநெல்வேலியில் தொடங்கிய கொலைகளால் முள்ளிவாய்கால் வரை மக்கள் அல்லோலப்பட்டதும் அவர்களுக்கு இழப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்துதுமே புலிப்போராட்டம். இதையும் விளங்கிக் கொள்ளுங்கள். புலிகள் பாரிய மண்மேடுகளை ஏற்படுத்தி வைத்திருந்தார்கள் என்றால் இராணுவம் உட்புகமால் செய்த தந்திரம் எனநினைத்தீர்கள் என்றால் அது தவறு. தாம் பிடித்து வைத்திருந்த மூன்றுலட்சம் மக்களும் தம்மை விட்டு தாண்டி போகாமல் இருப்பதற்காகவே!.

    நீங்கள் எத்தனை பாஷையில் படித்து புரிந்துகொண்டால் என்ன? உங்கள் புரிதல்களை மக்களிடம் இருந்து தொடங்குங்கள்.அதுவே சரியான நேயமிக்க புரிதலாக இருக்கும். இவ்வளவு ஈடையூறுகளை கடந்து ஆயிரக்கணக்கான இராணுவத்தின் உயிர்தியாகத்தின் மத்தியிலும் மேற்குலகத்தின் கூச்சல் போல போர்குற்றங்களுக்காக ராஜபக்சாவை தண்டிக்வேண்டுமென்றால் புலிகளையும் உங்களையும் யார் தண்டிப்பது? உண்மையில் நீங்கள் யாருக்கு விசுவாசமாக செயல்படுகிறீர்கள் ரோகன்?.

    Reply
  • Swamy
    Swamy

    Dr. Swamy slams TNA, wants Tamils to support Mahinda

    President of the Janata Party Dr. Subramanian Swamy has urged Sri Lankan Tamils to vote for President Mahinda Rajapaksa though the LTTE proxy the Tamil National Alliance was campaigning for Opposition presidential candidate Sarath Fonseka.

    The following is the full text of a statement issued by the Janata Party: It is surprising that some representatives of the defunct LTTE terrorist floated Tamil National Alliance (TNA) are in India canvassing support of Tamils of India for Opposition candidate General Fonseka in the Presidential elections in Sri Lanka . Polling date is January 26th.

    No Indian concerned for the welfare of Tamils of Sri Lanka and their future can support any candidate who has on, his side the LTTE stooge outfit the TNA which seeks a separate Eelam.

    Moreover, Gen Fonseka is also at the same time supported by the hardliner anti-Tamil party, the JVP, which wants no concessions given for the Tamils.

    Hence, as President if elected, General Fonseka will be in constant dilemma on what to do. He will also have to legitimize the rump LTTE that is hiding a billion dollars of ill-gotten money for a come back. Tamils of Sri Lanka today need humane stability in governance after years of killing and dictatorship of the LTTE.

    Hence, I urge all Tamils of Sri Lanka that if they want Indian opinion on their side in the future, they must vote for the Tamil speaking Sinhala leader, Mahinda Rajapaksa, for President of Sri Lanka.

    Reply
  • DEMOCRACY
    DEMOCRACY

    /இந்திய இராஜ தந்திர அரசியலில் முக்கிய பாத்திரம் வகிப்பவரும், தமிழ் நாட்டில் பார்ப்பன சாதி வெறி சுலோகங்களை முன்வைப்பவரும், சிதம்பரம் கோவிலில் தமிழ் இசை பாடக்கூடாது என்று நீதிமன்றம் சென்றவரும், இலங்கையின் இனப்படுகொலையை ஆதரரித்தவருமான சுப்பிரமணியம் சுவாமி தமிழ் மக்கள் மகிந்தவிற்கு ஆதரவு வழங்க வேண்டும் என்று கோரியுள்ளார். தவிர இந்தியாவின் ஆதரவு தமிழர்களுக்குக்க் கிடைக்க வேண்டுமானால் மகிந்த ராஜபக்சவை ஆதரிக்க வேண்டும் என்ற மிரட்டல் பாணியிலான பத்திரிகை அறிக்கை ஒன்றை சுப்பிரமணியம் சுவாமி வெளியிட்டுள்ளார். ஜனதாக் கட்சியின் தலைவரான இவர் ஜெயலலிதாவின் ஆலோசகர் என்பது குறிப்பிடத் தக்கது./— பதிவு.காம்

    Reply
  • rohan
    rohan

    //நீங்கள் எத்தனை பாஷையில் படித்து புரிந்துகொண்டால் என்ன? உங்கள் புரிதல்களை மக்களிடம் இருந்து தொடங்குங்கள்.அதுவே சரியான நேயமிக்க புரிதலாக இருக்கும். இவ்வளவு ஈடையூறுகளை கடந்து ஆயிரக்கணக்கான இராணுவத்தின் உயிர்தியாகத்தின் மத்தியிலும் மேற்குலகத்தின் கூச்சல் போல போர்குற்றங்களுக்காக ராஜபக்சாவை தண்டிக்வேண்டுமென்றால் புலிகளையும் உங்களையும் யார் தண்டிப்பது? உண்மையில் நீங்கள் யாருக்கு விசுவாசமாக செயல்படுகிறீர்கள் ரோகன்?.// என்று கேள்வி எழுப்பியுள்ளார் சந்திரன் ராஜா.

    இறந்து போன போர் வீரர்களை இராணுவத்தின் உயிர்த் தியாகம் என்று பார்க்காது, உயிர் விட்ட இளையோர் (கிராமத்துப் பங்களிப்பு பெரிது) என்றே நான் பார்க்கிறேன். அதுவே எனது நேயமிக்க புரிதல்.

    உயிர் விட்ட இந்த சிங்கள இளையோர் குடும்பங்கள் இந்த இராணுவ வெற்றியின் பயன்களை அனுபவிக்கப் போவதில்லை. ஊனமுற்றோர் ஊனமுற்றுப் போயிருக்கும் இளையோர் குப்பைக்குள் தான் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

    வெளிநாட்டுக்குப் போன பணம் மற்றும் ஆடம்பரத்தில் செலவானது தவிர அடித்த காசெல்லாம் அரசியல் வாதிகளுக்குள் தான் சங்கீதக்கதிரை விளையாடுகிறது.

    மேற்குலகத்தின் கூச்சலை விட்டு விடலாம். முள்ளிவாய்க்கால் முடிவின் போது உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடிவந்த சிலரை எனக்குத் தெரியும். சிதைந்து போன உடல்கள் முதல் காயமுற்று அசைய முடியாது கிடந்தவர்கள் மற்றும் பலத்த காயங்களுடன் உருண்டும் தவழ்ந்தும் வர முற்பட்டவர்கள் வரையான பலரைத் தாண்டி அவர்கள் வந்தனர். தூக்கிவிட ஒரு கை கொடுக்க முடியாத நிலையில் அவர்கள் ஓடி வந்தனர். இந்த traumaவிற்கு வெளியே வர முடியாது இன்னும் திணறும் சிலரையும் எனக்குத் தெரியும். சரி – இம் முகாம்களுக்கு இத்தனை பேர் வந்தார்களே – இவர்களில் எத்தனை காயமுற்றோர் வந்தனர் என்று நினைத்துப் பார்த்தோமா? இந்த வகையில் காயமுற்றோர் வந்தால் சிக்கல என்று தான் அவர்கள் சாட்சியங்கள் இல்லாது துடைத்தெறியப் பட்டிருக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன். உங்கள் சரியான நேயமிக்க புரிதல் என்ன சொல்கிறது? தியாக சிந்தையுள்ள இரராணுவம் நாட்டின் நற் பெயர்களுக்காக இந்தப் பரிதாபத்துக்குரிய பிறவிகளையும் தியாகம் செய்துவிட்டிருக்குமோ என்னவோ.

    எப் பாவமும் அறியாது அன்றாடம் காய்ச்சிகளாக புலிகளுக்கும் இராணுவத்துக்கும் இடையில் சிக்கித் தவித்தவர்களுக்காக (இவர்கள் புலி வால்கள் – தண்டிக்கப் பட வேண்டியவர்கள் என்று நினைக்கிறீர்களோ என்னவோ) நான் நியாயம் கேட்கிறேன். அவர்கள் பால்தான் என் விசுவாசம் இருக்கிறது. மக்களை வாட்டியதற்கும் இலங்கையைக் கொள்ளையடித்ததற்கும் புலி தண்டிக்கப்பட்டிருக்கிறது. தொகை தொகையாய் அப்பாவிகளைக் கொன்றதற்கு உங்கள் பார்வையில் மதிப்புக்குரியதும் தியாக சிந்தை உள்ளதுமான மகிந்த கூட்டம் தண்டிக்கப்பட வேண்டாமா? சரத் தண்டிக்கப்பட வேண்டாமா? உண்மையில் நீங்கள் யாருக்கு விசுவாசமாக செயல்படுகிறீர்கள் என்று என்னைக் கேட்டீர்களே – நான் பதில் சொல்லியாயிற்று. உங்கள் கேள்விக்குப் பதில் சொல்லும் நிலைமையில் நீங்கள் உள்ளீர்களா?

    புலியுடன் என்னை கொண்டு போய்க் கட்ட எடுக்கும் முயற்சி பரிதாபத்துக்குரியது. நான் எப்போது புலியை ஆதரித்தேன்? . மக்களுக்காக நியாயம் கேட்கும் என்னைத் தண்டிக்க வேண்டும் என்கிறீர்கள். சரி – என்ன தண்டனை என்று நீங்களே சொல்லலாம்

    ஆனால், இத்தனை மக்களைக் கொன்ற, நூற்றுக் கணக்கான இளையோரைக் கப்பத்துக்காகக் கடத்திச் செல்வதற்கும் காணாமற் போக வைப்பதற்கும் காரணமாக இருந்த, அபிவிருத்திக்கும் சுனாமிக்கும் என்று வந்த பணத்தைக் கோடி கோடி டொலர்களில் சுருட்டிய, ஆயுதக் கொள்வனவில் தலைமுறைகளுக்குப் போதுமான பணம் சேர்த்த, ஊடகவியலாளர்களை அடித்தும் கொன்றும் பழி தீர்த்த, என்று நீளமான ஒரு பட்டியல் போட வைக்கும் நிலைமையில் உள்ள ஒரு அரசாங்கத்தைத் தலைமை தாங்கும் மகிந்தவை மீண்டும் அரச கட்டில் ஏற்ற விரும்பும் சிலருக்கு என்ன தண்டனை தகும்? கோத்தபாயவின் hotelஇல் நல்ல சாப்பாடு கிடைக்க வேண்டும் என்ற பிரார்த்தனைகள்.

    மேற்குலகின் கூச்சல் என்று சொல்கின்ற நீங்கள் உயிர் விட்ட பல ஆயிரங்களுக்கு என்ன பதில் சொல்கிறீர்கள்?

    Reply
  • Sampanthan
    Sampanthan

    சிவாஜிலிங்கம் மாலைதீவு சென்று திரும்பினார்;புலம் பெயர் நாடுகளின் பிரதிநிதிகளுடனும் சந்திப்பு
    by வீரகேசரி இணையம்

    மாலைதீவில் இடம்பெற்ற புலம்பெயர் நாடுகளின் பிரதிநிதிகளுடனான சந்திப்பில் எதிர்வரும் ஜானாதிபதித் தேர்தல் குறித்தும் தமது நிலைப்பாடு குறித்தும் கலந்துரையாடியதாக ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

    நேற்று மாலை மாலைதீவுக்கு சென்றிருந்த ஜனாதிபதி வேட்பாளர் சிவாஜிலிங்கம் இன்று காலை நாடு திரும்பியுள்ளதுடன், தற்போது மலையகத்தில் நடைபெறவுள்ள தேர்தல் பிரசாரக் கூட்டங்களுக்கு செல்லவுள்ளதாகவும் தெரிவித்தார்.

    இதன்போது தமது நிலைப்பாட்டிற்கு புலம்பெயர் நாடுகளில் உள்ள பிரதிநிதிகள் ஆதரவு வழங்கியுள்ளதாகவும் , இது குறித்து விரைவில் சாதகமான அறிக்கை விடுவதாகவும் அவர்கள் நம்பிக்கை வெளியிட்டதாக அவர் எமது செய்திச்சேவைக்குத் தெரிவித்தார்.

    அதேவேளை மாலைதீவில் வைத்து விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் மனைவி மதிவதனியின் தாயார் ஏரம்பு சின்னம்மாவை அவரது உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளதாகவும், அவர் தற்போது சிங்கப்பூர் சென்று அங்கிருந்து அவது பிள்ளைகளுடன் இணைவார் என சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    புலிகளையும் உங்களையும் யார் தண்டிப்பது? என்றுதான் நான் கேட்டேன். இல்லையா? ரோகன். நீங்களோ! எனக்கு என்னதண்டனை தரபோகிறீர்கள் எனகேட்கிறீர்கள். மகிந்தாவை அரசையும் அவருக்கு முன்னால் இருந்தவர்களையும் தண்டிக்க வேண்டும் என இலங்கை மக்களிடம் நீங்கள் கேட்டிருந்தால் உண்மையில் என்னால் அதற்கு பதில் சொல்ல முடியாது. அமைதியாக இருந்திருப்பேன்.

    அமெரிக்காவுக்கும் பிரித்தானியாவுக்கம் ஐக்கியநாடுகள் சபைக்கும் ஏன் ஓடியலைகிறீர்கள்?. இந்தக் கேள்விகளை ரஷ்யா இந்தியா சீனாவுடன் கேட்கமுடியாதா?. அதற்கு பதில் சொல்லமாட்டார்களா? மனிதநேய பார்வைகள் எல்லாம் இவர்களிடமா கொட்டிக் கிடக்கிறது?

    அடுத்து நீங்கள் புலியும் இல்லை. புலிஆதரவாளரும் இல்லை வன்னிமக்கள் துன்பத்திற்காக கைகால் இழந்து ஊனமுற்று காணமல் விலாசம் இல்லாமல் போனவர்களுக்காக.. குரல் கொடுக்கிறேன் மகிந்தாவையும் அவர் சகோதரர்களையும் தண்டிக்கவேண்டும் என்கிறீர்கள்.
    ரோகன்! 1995ம் ஆண்டில் யாழ்மக்களுக்கு எவ்வளவோ அழிவுகளை புலிகள் ஏற்படுத்திவிட்டு சிங்கள இராணுவத்திற்கு காவுகொடுத்து வன்னிக்காட்டில் ஒளிந்து கொண்டு வன்னிமக்களுக்கு எவ்வளவு துன்பத்தை கொடுத்தார்கள் என்பதை நீங்கள் சிந்தித்துப் பார்த்தது உண்டா?
    இயற்கையோடு ஒட்டிவாழ்ந்த மக்கள் வன்னிமக்கள். எதையும் யாரிடமும் இரந்து நின்று கேட்காத மக்கள். புலிகள் வரமுன்பு அவர்களுக்கு காடுகள் சொந்தமாக இருந்தது. வயல்கள் ஏரிகள் கடல்கள் எல்லாமே அவர்கள் உடையது. புலிகள் வரவால் இவர்களுக்கு நடந்தது என்ன?

    காட்டிற்கு விறகு பொறுக்க போகமுடியாது. வேட்டையாட முடியாது. தேனோ தொலைந்து போன மாட்டையோ தேடிப்போனால் முண்டமில்லாத ஆளாகத்தான் கிடப்பார். கடலில் சுகந்திரமாக மீன்பிடிக்க முடியாது. ஏரியில் உப்பள்ள முடியாது வண்டில் வைத்திருக்க முடியாது. உழவு யந்திரம் வாகனம் மீன்பிடிவள்ளங்கள் எல்லாம் புலிகள் சொத்து போராட்டதிற்காம். இறுதியில் அவர்கள் பிள்ளைகளையும் களவாடினார்கள். இவ்வளவு அராஜகங்களும் அத்துமீறல்களும் இருக்கையில்..இதற்காக இந்த “தேசம்நெற்றில்” ஆவது குரல் கொடுத்திருக்கிறீர்களா? அப்படி குரல் கொடுத்தால்
    புலிகளால்..புலிகளின் வன்முறையால் வாய்யில்லா ஜீவன்களாக ஆக்கப்பட்ட மக்களுக்காகவும் அகதியாக அல்லறும் மிகுதினாவருக்கும் குரல் கொடுப்பதில் நியாயம் உண்டு. நீங்களோ இவ்வளவு நாற்றத்தையும் மறைத்தது வைத்துக் கொண்டு தமிழ்மக்களுக்காக அகதிமக்களுக்காக நியாயம் கேட்க சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு துடியாய் துடிக்கிறீர்கள். மகிந்தா ராஜாபக்சா தமிழ் மக்களுக்கு இருந்த பெரும்தடையை நீக்கி மக்களை சுகந்திரமாக செயல்பட அனுமதித்திருக்கிறார். இதை உணரமறுப்பவர்களே நீங்கள். இல்லையென்றால் தமிழ்மக்களின் இந்த ஏழுமாத சுகந்திரத்தையும் உங்களால் உணர்ந்து கொள்ள முடிந்திருக்கும். திரும்பவும் கேட்க்கிறேன். யாருக்கு விசுவாசமாக செயல்படுகிறீர்கள்?. மேற்குலகத்திற்கா?இலங்கை மக்களுக்கா??.

    Reply
  • Sampanthan
    Sampanthan

    Sivajilingam brings his campaign south

    Sole Tamil presidential candidate M.K. Sivajilingam, backed by a rebellious section of the Tamil National Alliance (TNA) has not thrown in the towel as some candidates have done and has now even brought his campaign to the South.Asked what support he was getting from his own alliance, he said MP and senior lawyer, N. Srikantha was openly managing his campaign, but five to six other TNA parliamentarians were supporting him from behind the scene for fear of not getting nominations from the alliance at the next general election.Sivajilingam told The Nation that he had already covered areas in Colombo like Kotahena, Wellawatte Bambalapitiya, Kirulapone and Mattakkuliya, where there are large numbers of Tamils and yesterday he was canvassing Tamil votes in places like Kalutara, Matugama and Galle.Since he is campaigning with New Left Front candidate Dr Wickramabahu Karunaratne, the arrangement seems to be working well for both candidates. They have together already completed campaigning in the Batticaloa and Ampara Districts.He said except in Karaitivu, where Karuna’s people disrupted his meeting and he had to be protected by his police bodyguards, there had been no problems for him so far.The sole Tamil candidate said he hoped to go to the East once again to campaign in the Trincomalee District from January 19. Prior to Trincomalee he will also campaign in the hill country and Vavuniya. The last three days of campaigning from January 21 to 23 he would campaign throughout the Jaffna District addressing more than 100 meetings.According to Srikantha their volunteers have already canvassed for Sivajilingam in more than 90 per cent of the villages in Jaffna distributing handbills going from door to door.
    “The issue we are taking before the people is that instead of taking sides we shall play straight. Our prime objective is to achieve a political solution. Let the Sinhalese decide whom they want to elect as the President,” Srikantha said.Asked as to how many Tamil votes his candidate hoped garner, the campaign manager said “he should do remarkably well.”

    Reply
  • rohan
    rohan

    வடக்கு கிழக்கை மூண்டாய்ப் பிரிச்சு தமிழருக்கு ஒரு பகுதியை சரத் குடுக்கப் போறார் எண்டு சொல்லுற சிவாஜிலிங்கம் ராஜபக்செவின்ரை ஆள் இல்லாமல் வேறை என்ன?

    Reply