பொன்சேகா அணிக்கு மாற 3 கோடி ரூபாவுக்கு பேரப் பேச்சு விலைபோகமாட்டேன் என்கிறார் முஸம்மில்

muzzammil.jpgஅரசாங் கத்திலிருந்து வெளியேறி ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளிப்பதற்காக தனக்கு 30 மில்லியன் ரூபா மயோன் முஸ்தபாவால் வழங்கப்பட்டதாகவும் ஆனால் தன்னை வாங்க முடியவில்லை என்றும் தான் கட்சி மாறப்போவதில்லை என்றும் தேசிய சுதந்திர முன்னணி எம்.பி. எம்.முஸம்மில் தெரிவித்துள்ளார்.

நேற்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் முஸம்மில் இதனை தெரிவித்ததாக “அததெரண’  இணையத்தளம் தெரிவித்தது.செய்தியாளர் மாநாட்டில் பேசிய பா.உ முசம்மில், ரணில் விக்கரமசிங்க மற்றும் ரவி கருணாநாயக்க ஆகியோர் என்னை அழைத்து சரம்பொன்சேகாவிற்கு ஆதரவு வழங்குமாறும், அவ்வாறு ஆதரவு வழங்கினால் 300 மில்லியன் பணமும் வெளிநாடு ஒன்றில் வாழ்வதற்குரிய சகல ஏற்பாடுகளும் செய்து தருவதாகவும்; கூறினர். அதன்பொருட்டு ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மலிக் சமரவிக்ரம அவர்களின் ராஜகிரியவில் உள்ள காரியாலயத்தில் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டோம் அங்கும் பா.உ ரவி கருணாநாயக்க இருந்தார். ஜெனரல் கலந்து கொள்ளும் விசேட ஊடகவியலாளர்கள் மாநாடொன்று உள்ளதாகவும் அதில் கலந்து கொண்டு ஜெனரலுக்கு ஆதரவு வழங்குவதாக தெரிவிகுமாறும் என்னை வேண்டினர். அத்துடன் பா.உ மயோன் முஸ்தபா தலைமையிலான குழுவொன்று என்னிடம் பணப்பெட்டி ஒன்றை தந்தனர். அந்தப்பணத்தை எண்ணுவதற்குக்கூட எனக்கு இதுவரை நேரம் கிடைக்கவில்லை. 

இது இவ்வாறிருக்க கவர்ச்சிகரமான நிதியை வழங்குவதன் மூலம் தேசிய சுதந்திர முன்னணி எம்.பி.யான முகமட் முஸம்மிலின் ஆதரவை பெறுவதற்கு எதிரணி முயற்சித்ததாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான விமல் வீரவன்ச நேற்று தெரிவித்துள்ளதுடன் இதற்கான ஆதாரம் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

ஆதரவை விலைக்கு வாங்குவதற்கு எதிரணி மேற்கொண்ட முயற்சிக்கான ஆதாரத்தை ஊடகங்களுக்கு விரைவில் வெளிப்படுத்த இருப்பதாக நிருபர்களிடம் நேற்று வீரவன்ச தெரிவித்ததாக டெய்லி மிரர் இணையத்தளம் தெரிவித்தது. இந்த செய்தியாளர் மாநாட்டின் போது பிரசன்னமாகியிருந்த முஸம்மில் தன்னை எதிரணிக்கு விற்கப்போவதில்லை என்று கூறியுள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 Comments

  • rohan
    rohan

    ஒவ்வொருவருக்கும் ஒரு விலை இருக்கிறது என்பார்கள். முஸம்மில் ஏலத்தில் சகோதரர்கள் நல்ல விலை கொடுத்திருப்பார்கள் போலும்!!முஸம்மில் சரத் பொன்சேக அலுவலகம் வரை தன் விருப்பத்தில் போனார் என்பது உறுதிப்படுத்தப் பட்டிருக்கிறது.

    Reply
  • மாயா
    மாயா

    ஈழத்து குருடர்கள் சிங்கள அரசியலை மாற்ற முயலும் போது, இப்படியொரு படத்தை சரத் பொண்சேகா தரப்பு வெளியிட்டுள்ளது. இதில் மகிந்தவின் மகன் நாமல் ராஜபக்ஸ , லண்டனில் புலிகளது சர்வதேச முக்கியஸ்தர்களில் ஒருவரான லக்ஸ்மி காந்தன் என்பவரோடு இணைந்திருப்பதாக தெரிவித்துள்ளதோடு , அவர்கள் ஒன்றிணைந்துள்ள புகைப்படத்தையும் பிரசுரித்துள்ளது.
    http://www.lankaenews.com/Sinhala/files/2058Namal_with_Emilkanthan_J.jpg

    செய்தி:http://www.lankaenews.com/Sinhala/news.php?id=11990

    Reply
  • Ajith
    Ajith

    Election drama’s are simple.As long as modaya’s there, Rajapakse brother’s will do this sort of things. It is unlawful to give bribe in Sri Lanka. This man said that Mayon Mustapa gave a box full of money. Did he surrenedred that money to the police? What he says is he has no time to count the money. So, he bought the money from them, So agreed for something in their meeting bought the money. He is real businessman? politician? He should be arrested and charged for buying bribe.Will Rajapakse do it? No, becuase he does the same.

    Reply
  • sivaji
    sivaji

    உங்களில் யாருக்கும் மக்களில் கவலையில்லை எனபது தெட்டத் தெளிவான விடயமே! இவ்வளவ காலமும் நம்பியிருந்த கொழும்பு பா/உ மனித உரிமைகள் பற்றி கண்டம் விட்டு கண்டம் பாயும் அளவிற்கு பேசியவர் சோசலிச முகாமுடன் இணைந்து நின்று செயற்ப்படுகிறார் என்றெல்லாம் பலர் கனவு கண்டனர் இன்று சரத் என்று நிற்கிறார் இவ்வளவு தர உங்களிடம் இருக்கிறதா? என்னு கம்யூனிஸ்டை பார்த்து கேட்கிறார்

    மக்கள் பாவம் இந்த குப்பைக்குள் மீண்டும் விழுந்து போகிறார்கள்!!

    அடிப்படையில் மக்கள் அரசியல் சமூகம் போன்ற கருத்துக்களில் பாரிய மாற்றங்களை மிக தீவிரமாக பரப்புதல் செய்ய வேண்டிய தருணம் இது.

    மக்கள் சமூக விஞ்ஞனமே ஒரேவழி என்பதை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    //முஸம்மில் சரத் பொன்சேக அலுவலகம் வரை தன் விருப்பத்தில் போனார் என்பது உறுதிப்படுத்தப் பட்டிருக்கிறது. – rohan//

    ஆம் அவர் சென்றதை அவரே உறுதிப்படுத்தியுமுள்ளார். அப்படிச் சென்று பேரம் பேசியவை அனைத்தையும் அவர் ஒளிப்பதிவு மற்றும் ஒலிப்பதிவு செய்து வந்து, அதனை ஆதாரபூர்வமாக வெளியிட்டுமுள்ளார். ஆனால் அது தங்களுக்குத் தெரியவில்லை??

    Reply