த.தே.கூட்டமைப்பு நா. உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் தவறுதலாக துப்பாக்கி வெடித்ததில் காயம்

chandrakanth-chandranehru.jpgதமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன், இன்று தமது துப்பாக்கி தவறுதலாக வெடித்ததன் காரணமாக காயமடைந்து அக்கரைப்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் திருக்கோவிலில் உள்ள அவரது வீட்டில் இடம்பெற்றுள்ளது.
 
பாதுகாப்புக்காக அவர் தம்வசம் வைத்திருந்த கைத்துப்பாக்கி வெடித்தமையால் அவரது தொடையில் காயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Show More
Leave a Reply to Rohan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

4 Comments

  • பார்த்திபன்
    பார்த்திபன்

    பொதுவாக புலிப்பினாமி ஊடகங்கள் செய்தியில் கருணா, பிள்ளையான் போன்றோரை குறிப்பிடும் போது துப்பாக்கிதாரி என்ற அடைமொழியுடன் தான் வாசிக்கின்றார்கள். எனி சந்திரநேருவையும் துப்பாக்கிதாரி சந்திரநேரு என்று தான் வாசிப்பினமோ??

    Reply
  • danu
    danu

    முள்ளிவாய்க்காலுக்குப் பின்னும் துப்பாக்கி ஆசைசாகாதவர் என்று சொல்லலாம். உங்களுக்கு இன்னும் துப்பாக்கி வைத்திருக்க ஆசை என்றால் யார் தந்தது? சந்திரநேரு ஏன் துப்பாக்கி வைத்திருக்கிறீர்கள்? பதில் வருமா?
    வெளிநாடுகளில் பல கூட்டங்களில் கலந்து கொள்ளும் சந்திரநேருவின் கருத்துக்கு எதிர்க்கருத்து வைப்பதில் கவனம் எடுக்க வேண்டும் போல் தெரிகிறது. சந்திரநேரு புதிய ஆயுததாரியாக திரிவதில் உள்ள மர்மம் என்ன?

    Reply
  • tharmu
    tharmu

    Hi Mr Nehru can yuo let s know why you carring a gun don’t you beleive in democracy and the countr’s police or security forces??

    Reply
  • Rohan
    Rohan

    ‘முள்ளிவாய்க்காலுக்குப் பின்னும் துப்பாக்கி ஆசைசாகாதவர் என்று சொல்லலாம். உங்களுக்கு இன்னும் துப்பாக்கி வைத்திருக்க ஆசை என்றால் யார் தந்தது? சந்திரநேரு ஏன் துப்பாக்கி வைத்திருக்கிறீர்கள்? பதில் வருமா?’
    என்று தனு கேட்கிறார்.

    புலி அழிந்த பின்னும் கருணாவும் பிள்ளையானும் ஆயுதபாணிகளாகவே இருக்கிறார்கள்.

    சந்திரநேருவுக்கு உள்ள ஆபத்தை அறிந்தே அவருக்கு உத்தியோகபூர்வமாக ஆயுதம் தரப்பட்டிருந்த்தது.

    ‘வெளிநாடுகளில் பல கூட்டங்களில் கலந்து கொள்ளும் சந்திரநேருவின் கருத்துக்கு எதிர்க்கருத்து வைப்பதில் கவனம் எடுக்க வேண்டும் போல் தெரிகிறது’ என்று சொல்வதெல்லாம் என்ன நோக்கத்துடன் சொல்லப்படுகிறது என்று அறியவும் ஆவலுடையேன்.

    Reply