லங்கா பத்திரிகைக்கு சீல்

lankairida.jpgஜேவிபியின் உத்தியோகபூர்வ பத்திரிகையான ‘லங்கா” சிங்கள வாரப் பத்திரிகை காரியாலயம் சற்று முன் குற்றவியல் தடுப்பு பிரிவினரால் சீல் வைக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் நேற்று மாலை பத்திரிகையின் பிரதம ஆசிரியர் சந்தன சிறிமல்வத்த  குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இப்பத்திரிகையின் கடந்த வார இதழில் வெளியாகியிருந்த கட்டுரையொன்று தொடர்பில் விசாரணை நடத்தும் பொருட்டே அவர் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த செவ்வாய்க்கிழமை வெளியான லங்கா பத்திரிகையில் சத்மெத லங்கா (உண்மைக்கு மத்தியில் இலங்கை) என்ற தலைப்பில் வெளியான கட்டுரையில் அரசாங்கத்தின் உயரதிகாரி ஒருவர் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்கள் குறித்து விளக்கமளிக்குமாறு அதன் ஆசிரியர் சிறிமல்வத்தவை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நேற்றுக் காலை அறிவித்திருந்தனர்.

இந்நிலையிலேயே பத்திரிகை ஆசிரியர் நேற்று மாலை கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

Show More
Leave a Reply to NANTHA Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

3 Comments

  • Appu hammy
    Appu hammy

    The govt. will not listen to or tolerate criticism. Thuggery will continue unchallenged, as these are the qualities that brought victory at the election for President and all the cheats, humbugs,mafia, coyotes and scum are with govt. So, sadly for Sri Lanka the govt. will win the general election too with 60%.
    we have been hearing these promises which were never fullfilled by this Govt 4 5 years!!!

    Reply
  • மாயா
    மாயா

    அமெரிக்காவின் பணத்தில் , இடதுசாரிகளாக, சிங்கள இனவாதத்தை கக்கி நடிக்கும் இவர்களுக்கு நல்ல வினை இது.

    Reply
  • NANTHA
    NANTHA

    ஜனதா விமுக்தி பெரமுன என்ற ஜே வி பி தங்களை “இடதுசாரி” என்றும் “தொழிலாளர்” என்றும் பகர்ந்த போது 1971 இல் அவர்களிடம் நான் கேட்ட கேள்வி: மலையக மக்களை இந்திய உளவாளிகள் என்று எப்படி நீங்கள் கூறலாம் என்பதே.

    நாட்டின் முதுகெலும்பாக உள்ள ” தொழிலாளி” வர்க்கத்தை நாட்டின் “துரோகிகளாக” காட்டிய ஜே வி பி இன்று வெறும் முதலாளி வர்க்க நாறிகள் என்பது புலப்பட்டுள்ளது.

    வாழ்க தொண்டமான்!

    Reply