டக்ளஸ் ராஜினாமா? : “வேண்டாம்…” – மக்கள் ஹர்த்தால்

douglas.jpgநடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் வடக்கில் பெரும்பான்மையான வாக்குகள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்குக் கிடைக்கவில்லை. அதனால் ஜனாதிபதிக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பதவி விலகுவதாக தீர்மானித்திருந்தார். இதனைக் கண்டிக்கும் முகமாக யாழ்ப்பாணத்தின் சமூக அமைப்புகள் இணைந்து இன்று காலை முதல் ஹர்த்தால் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தன.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா. ஜனாதிபதியிடம் 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்தே நாம் ஆதரவு வழங்கினோம். எனினும் மக்கள் தவறாக வழிநடத்தப்பட்டுள்ளனர். ஜெனரல் சரத் பொன்சேகா ஆட்சிக்கு வந்தால் பாரிய மாற்றம் எதனையும் தமிழ் மக்கள் காணப்போவதில்லை. இந்நிலையை சிந்தித்தே நான் ராஜிநாமா செய்வதற்குத் தீர்மானித்தேன். அரச துறையில் ஈடுபட்டுவந்த என் சார்ந்த ஏனையோரும் ராஜிநாமா செய்யத் தீர்மானித்தனர்.
 
இதனை ஜனாதிபதிக்குத் தெரியப்படுத்தியதும், அவசர முடிவு எடுக்க வேண்டாம் என்றும் தன்னை நேரில் வந்து சந்திக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்” ஜனாதிபதியின் வேண்டுகோளின் பேரில் அமைச்சர் பதவியிலிருந்து ராஜிநாமா செய்வது தொடர்பாக மீள்பரிசீலனை செய்யவுள்ளதாக சமூக சேவைகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply to palli Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

92 Comments

  • Ra.ruban
    Ra.ruban

    ஜனாதிபதியின் வேண்டுகோளின் பேரில் அமைச்சர் பதவியிலிருந்து ராஜிநாமா செய்வது தொடர்பாக மீள்பரிசீலனை செய்யவுள்ளதாக சமூக சேவைகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்துள்ளார்.//
    இதில் ஆலோசிப்பதற்கு எதுவுமில்லை. இராஜினாமா மட்டுமல்ல அரசியலிருந்தே ஒதுங்கவேண்டும். அப்போதுதான் தமிழரின் தவாறான தலைமைகூட்டமைப்பு அம்பலமாகும்.

    Reply
  • kanthan
    kanthan

    18 ஆண்டுகளின் பின் அதி மிகு அமைச்சர் டக்ளஸ் இராஜினமா! வரவேற்போம் வாழ்ததுவோம். நீங்கள் மக்களுக்கு என்ன செய்தீர்கள் என்பதை விட மக்கள் உங்களுக்கு என்ன செய்தார்கள் என்பதை நன்கு அறிந்துள்ளீர்கள். தமிழில் அமைச்சர் என்ற சொல்லின் அர்த்தமாக செயல்ப்ட்டுள்ள செயல் வீரர். சற்று ஓய்வெடுத்து மீண்டும் உங்கள் சேவையை தொடருங்கள். தமிழ் மக்கள் உங்கள் பிண்னனியில் உள்ளார்கள் என்பதை கடந்த தேர்தல் நிரூபித்துள்ளது. அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கு உங்களை தயார்படுத்துங்கள்.

    தமிழ் வாழ்க…டக்ளஸ் வளர்க….

    Reply
  • தீசன்
    தீசன்

    சத்தியமாய் எனக்கு தமிழரின் தலைமை என்று யாரைத்தான் சொல்கிறார்கள் என்று புரியவில்லை. ரிஎன்ஏ டக்ளஸ் கூட்டணி கருணாஅணி புலத்துப்புலி என்று எல்லாருக்கும் அவ்வப்போது அவர்களைப்பற்றி செய்திகள் வரும்போது எல்லாருக்கும் ஒரேமாதிரியான வார்த்தைப் பிரயோகமே நடைபெறுகிறது.

    தமிழரின் சரியான தலைமை யார்?

    Reply
  • padamman
    padamman

    இதுவும் ஒருவகை அரசியல் தான் அடுத்த தேர்தல்லுக்கான வெள்ளேட்டம்தான் இந்த இராஜினாமா நாடகம்

    Reply
  • Kumaran
    Kumaran

    வன்னி மக்களுக்கு ஏற்பட்ட நிலை யாழ் மக்களுக்கு வராமல் தடுத்து ஓரளவு சீரான நிலையை டக்ளஸ் ஏற்ட்படுத்தினர் என்பதை யாரும் மறுக்க முடியாது.

    கிட்டுவிக்கு Coco Cola கொடுத்து, ஆறு மாதத்தில் வன்னியை மறந்து SF இக்கு வாக்களித்த யாழ் மக்களிடம் எப்ப சுய நலம் இல்லாத அரசியல் சிந்தனை வருகுதோ அன்று தான் சரியான புதிய தமிழ் தலைமையும் உருவாக்க முடியும்.

    Reply
  • மாயா
    மாயா

    அட்டையை தூக்கி மெத்தையில வைத்தாலும் அது சருகுக்குள்ளதான் நுழையும். சாவோடு வாழ்ந்து பழகிய சமுதாயம், சாவோடு வாழவே ஆசைப்படும். இவர்களுக்காக உயிர் துறப்பதும் வேஸ்ட். இவர்களுக்காக அரசியல் செய்வதும் வேஸ்ட்.

    Reply
  • Appu hammy
    Appu hammy

    Kanthan
    “GOOD JOKE 2010”

    Reply
  • மேளம்
    மேளம்

    ஈடுவைச்ச வீணைய ஏதோ வட்டியயும் முதலயும் குடுத்து மீட்கிறதுக்கு காட்ற படம்….. பாவம் யாழ்ப்பாணத் தமிழர்கள்..

    Reply
  • தமிழ்வாதம்
    தமிழ்வாதம்

    கங்காணிகளாக வாழ்க்கைப்பட்ட எமக்கு,அடிமைகள் எம் சொல்லை கேட்கிறார்கள் இல்லை என்று எசமானிடம் நச்சரிக்கின்ற பரம்பரையாக,இந்த மேனாட்டுத் தமிழர்கள் வாழ்ந்து போகப் போகிறார்கள்.இவர்கள் எழுதுகின்ற கருத்துகளும் இதற்கு சான்று பகர்கின்றன.

    Reply
  • BC
    BC

    // Kumaran – வன்னி மக்களுக்கு ஏற்பட்ட நிலை யாழ் மக்களுக்கு வராமல் தடுத்து ஓரளவு சீரான நிலையை டக்ளஸ் ஏற்ட்படுத்தினர் என்பதை யாரும் மறுக்க முடியாது.//
    அது தான் பிரச்சனையே.மக்கள் வாழ்வு சீரடைவது வரலாற்றுக்கடமையான தமிழீழத்தை நிறைவேற்றுவதற்கு தடையாக போய்விடுமே என்ற கவலை.யாழ் மக்கள் இசை நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்று மிகவும் சந்தோசமாக இருந்துவிட்டனரே என்று கூட டிஸ்கோவுக்கு போகும் இங்குள்ள புலம் பெயர்ந்த புலிகள் கவலை கொண்டனர்.
    இவரை கொலை செய்ய புலிகள் எததனை தடவை முயற்சித்து தோற்றார்கள்.
    சென்ற வருடம் கல்மடு அணைக்கட்டை புலிகள் குண்டு ஆயிரகணக்கான படையினரை கொன்றுவிட்டார்கள் என்ற செய்தியோடு டக்ளஸ்சையும் கொன்றாச்சு என்று புலம் பெயர்ந்த புலிகள் ஒரு கொண்டாட்டமே நடத்தினர்.
    இப்போது இவர் ராஜிநாமா செய்யமாட்டாரா என்று ஆவலுடன் காத்துக்கிடக்கின்றனர்.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    ஒரு சமூகம் புதைகுளியில் தான் முடிவடைய வேண்டுமென்றால் அதை யாராலும் தடுக்கமுடியாது. வாழ்த்தி வழிவிடுவதில் எந்த பிரச்சனைமே இல்லை. தமிழ்சமூகத்தை வழிநடத்திய தலைமைகள் எல்லாவற்றையும் எப்படி தனியொரு மனிதன் பொறுப்பேற்க முடியும்?.
    தமிழ்சமூகம் நடந்து முடிந்த தேர்தலில் தமது மனவுணர்வுகளை காட்டி நிற்கிறார்கள் என்றால் இனி வரப்போகும் காலங்களை எப்படி முன்கூறமுடியும்?. யாழ்மக்கள் வன்னிபட்ட வேதனைகளை அனுபவிக்காமல் சுயவாழ்வை மேற்கொள்ளுகிறார்கள் என்றால் அது டக்கிளஸ் தேவானந்தா என்ற ஒரு மனிதனாலேயே!
    புலிகளோ புலிகளின்உறவுக்காரர்களோ புலிகலாச்சாரமோ அழிக்கப்பட்டால் தான் ஈழத்தில் தமிழ்மக்களும் வாழ்ந்தார்கள் என்ற பெயர் இருந்திடமுடியும்.
    டக்கிளஸ் தேவானந்தா இல்லை என்றால் வடக்கிலும் தமிழ்மக்கள் என்ற இனம் இல்லை என்றே முடிவுக்கு வரமுடியும்.( புலம்பெயர் பச்சோந்திகளின் கருத்தைத் தவிர்த்து)

    Reply
  • palli
    palli

    பல்லிக்கு தோழர் மீது கடுமையான விமர்சனங்கள் உண்டு; அது எம்மின மக்களுக்கு அவரது சேவை போதாது என்பதால் தான்; ஆனால் அவர் பதவி விலகுவது எமக்கு இருக்கும் இறுதி துருப்பு சீட்டும் தொலைந்து விடுவது போல் ஆகி விடும், இதுவரை பல தடவை புலி அனுப்பிய யமனுக்கு விருந்து கொடுத்து அனுப்பிய தோழர் இன்று மக்களின்(தமிழ்) முடிவுக்காய் தன் பதவியை இளப்பது தவறு; (இது கோழி மிரித்து ஏதோ சாவது போல்)
    கண்டிப்பாக தோழர் ஆட்ச்சியில் இருக்க வேண்டும், எதோ அவரால் முடிந்தவைகளை எம்மினத்துக்கு செய்ய வேண்டும் என நானும் தோழரும் வணங்காத கடவுளிடம் வேண்டுகிறேன் ;விமர்சனம் என்பது வளர்ச்சிக்கு என்பது தோழர் அறியாததா?? பல்லிக்கு தெரிந்ததை சொல்லுகிறேன்
    பல முக்கிய புலிகளை கூட தோழர் காபாற்றி இருக்கிறார்; ஏன் இன்று கூட்டமைப்பு பலர் சிறை செல்லாமல் இருக்ககூட இந்த தோழர் தான் காரணம் , இதை பிரேமசந்திரனுடன் தொடர்புள்ளவர்கள் கேட்டறியலாம்; தோழரை களட்டி விடுவதில் மகிந்தாகூட சம்மதபடலாம்;
    ஆனால் தமிழனாய் என்னால் முடியவில்லை, பல்லியை விட தோழரை விமர்ச்சித்தவர்கள் யாரும் இருக்க முடியாது; அது எனது சுய நலன் அல்ல, அவரது பொதுநலன் விரும்பியே, இது நாடகமோ அல்லது நையாண்டியோ பல்லிக்கு தெரியாது; ஆனால் தோழர் தன்னும் அரசுடன் இருக்க வேண்டியது தமிழருக்கு காலத்தின் கட்டாயம்; இதை தோழரும் புரிந்திருப்பார் என பல்லி நினைப்பதில் தப்பில்லை;

    Reply
  • Kathir
    Kathir

    It shows that you cant simply limit your service within the small group of people/ circle and then get frustrated .You have to widen your view and find a proper ideology which will sreve the ordinary masses.At least, you have to form a broad coalition with the progressive and democratic forces It is always wrokable.Now it is our immediate task is to totally defeat the worst reactionary tamil rulling class which is represented by the TNA .Therefore we have to unite as a strong force .Already, we have totally defeated the LTTE or Tamil Tigers which is ,only a stooge of the Tamil rulling class.Our immediate task is to defeat our archenemy TNA and totally remove them from the political scene.It is not only the enemy of the majority of the Tamil people but also it is the arch enemy
    of the Srilanka people.

    Reply
  • Ajith
    Ajith

    Best actors award nominations
    1. Karunanidhi
    2. Douglas
    3. Sonia

    Reply
  • suban
    suban

    தோழரின் நாடகமாக இருக்கலாம். இருக்கட்டும். தமிழர்களின் அரசியல் நீரோட்டம் வேறு. ஒரு கம்யூனிஸ்ட்கட்சி யாழ்மக்களிடம் எவ்வளவுதான யோக்கியமாக நடந்துகொண்டாலும் செல்வாக்கு செலுத்தமுடியாது. குறிப்பாய் யாழ்.மக்கள் நாங்கள் பரம்பரை தமிழரசுக்கட்சி என்று சொல்வதில் பெருமைப்படுபவர்கள். இதி சாதிரீதியான அணுகலும் அடக்கம்.
    டகள்ஸ் இயக்கங்களின் தொடர்ச்சி. அரச ஏவல். கூலிப்படை என்று சிறிய உண்மைகள் மிகப்பெரிய விம்பமாக தமிழர்கள் மத்தியில் விதைக்கப்ட்டிருக்கிறது. இந்த அளவுக்கு டக்ளஸ் என்ற தனிமனிதன் மோசமானவரல்ல என்றாலும் இந்த விம்பம் இலகுவாக உடைபடக்கூடிய அளவுக்கு தமிழ்மக்கள் ஒன்றும் பெரி பகுத்தறிவாளர்கள் அல்ல. தமிழ் மக்கள் முட்டாள்கூட்டமாக இருந்தாலும் அந்தக்கூட்டத்தின்மீது அக்கறை உள்ளவர்கள் வேறுவிதமாகத்தான் சிந்திக்கவேண்டும். டக்ளஸ் அரசியிலிருந்து தற்காலிகமாவேனும் ஒதுங்குவதே நல்லது. இந்த இடம் புதியவர் ஒருவாரால் நிரப்ப்படவேண்டும். இது ஒரு வகைதீக்குளிப்பு தான். தமிழ்மக்கள் நலனுக்காக இதையும் செய்வதில் தவறேதும் இல்லை. இதையும் வரலாறு கெளரவமாக பதிவுசெய்து கொள்ளும்.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    சிறந்த திரைப்படத்திற்கான பரிசு வட்டுக்கோட்டை தீர்மானத்தை தழுவி எடுக்கப்பட்ட “நாடுகடந்த தமிழீழம்” திற்கே வழங்கப் படுகிறது.

    Reply
  • indiani
    indiani

    கருணாநிதி, சோனியா இவர்கள் இருவரும் பிரபாகரனை நிபந்தனையின்றி தூக்கி தலையில் வைத்துக் கொண்டாடவில்லை. இவர்கள் இருவரும் அரசியலில் மண்கவ்வினால் பிரபா போராட்டம் என்ற ‘பெயரில்’ நடத்திக் கொண்டிருந்த ‘தமிழர் மீதான அடக்குமுறை’யைத் தொடரலாம் என்பதே புலிகளினதும் புலி பினாமிகளினதும் எதிர்பார்ப்பாக இருந்தது. புலி நாட்டில் உயிருடன் இருக்கும் வரைக்கும்தான் வெளிநாடுகளில் புலியின் பெயரில் நடக்கும் திருகுதாளங்கள் தங்குதடையின்றி தொடரும். இந்த எதிர்பார்ப்பில் மண்விழுந்துவிட்டது. கருணாநிதி சோனியா இவர்கள் இருவரையும், புலிகள் பாஷையில், அரசியலில் இருந்து ‘ஒதுக்க’ முடியவில்லை.

    அடுத்தது டக்ளஸ். இவர் அரசுடன் நிற்பதால் இவருக்கு வோட்டுக்கள் கிடைக்கவில்லை. தமிழர்கள் இவரை தூக்கி எறிந்துவிட்டார்கள். ராஜினாமா மட்டுமல்ல அரசியலிருந்தே ஒதுங்கவேண்டும். தமிழரின் தவாறான தலைமை என்றெல்லாம் கருத்துத் தெரிவித்துள்ளார்கள்.

    இவர் பதவியில் இருப்பதால் பிரயோசனம் எதுவுமில்லை என்போர் இவர் ஒதுங்குவதால் தமிழருக்கு என்ன பிரயோசனம் என்று சொன்னதில்லை. இவரை ‘சீன்’னில் இருந்து என்னத்தையாவது சொல்லி அகற்றிவிட வேண்டும் என்பதிலேயே குறியாக உள்ளார்கள். “இது புலிகள் கொலைகள் மூலம் தமிழ் அரசியல்வாதிகளை அழித்ததுக்குச் சமனானது.” அதாவது தமிழருக்கு இவர்தான் தலைமை என்று வெளிநாட்டு புலிப் பினாமிகள் யாரை நியமிக்கிறார்களோ அவர்களே “அவர்கள் மட்டுமே” இயங்க வேண்டும் என்பதே ஒரேயொரு நோக்கம். தமிழர், தமிழர் உரிமை என்பது தொட்டுக்கொள்ள ஊறுகாய் மாதிரித்தான் இவர்கள் பாவிப்பது வழக்கம்.

    இடைஞ்சல் பண்ணும் இவர்களை தமது கைக்குள்போட முதலில் எடுக்கப்பட்ட முயற்சியே ‘சூரிச்’ மாநாடு. இது புலிப்பினாமி வரதர் மூலம் முன்னெடுக்கப்பட்டது. அது தோல்வியில் முடிந்ததால் இப்போது இவர்களுக்கு அகப்பட்டது இந்த தேர்தல் முடிவுகள்.

    மகிந்தாவுடன் டக்ளஸ் நிற்பதால் இவர்கள் சரத் பின்னால் ஓடினார்கள். இப்போ சரத் மண்கெளவியதும் மீண்டும் டக்ளஸ் மீது கவனத்தைத் திருப்புகிறார்கள். தேர்தல் மூலம் தமிழர்கள் டக்ளசை நிராகரித்து விட்டார்கள். எனவே இவர் அரசியலைவிட்டு ‘ஒதுங்க’ வேண்டும்(இந்த ‘ஒதுங்கு’ என்பது முன்பு புலிகள் மற்றைய இயக்கங்களுக்கு இட்ட கட்டளை) என்று மீண்டும் டக்ளசை கவனத்தில் எடுக்கிறார்கள். இவர்கள் இக்கோரிக்கையை முன்வைக்க முதலேயே டக்ளஸ் தானே விலகுகிறேன் என நாடகம் போடத் தொடங்கிவிட்டார். தற்போது புலிப்பினாமிகள் ‘அது நடக்காதா’, ‘நடக்கக் கூடாதா’ என்று ளொள்ளுவிட்டுக் கொண்டு திரிகிறார்கள்.

    Reply
  • மாயா
    மாயா

    அரசு சார்ந்த ஒரு தமிழ் அமைச்சர் , மகிந்தவுக்கு எதிராக உட் சதி செய்து சரத்தை பலப்படுத்த வேலை செய்துள்ளார் என கருணா அம்மான் இன்று தெரிவித்துள்ளார். அதற்கும் , தோழரின் இந்த செய்திக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமோ என தலையை சொறிய வேண்டியுள்ளது?

    கடந்த தேர்தலில் வீணை , வெத்திலை ஆனதில் ஏற்பட்ட கலக்கமோ? அந்த கடவுளுக்கே வெளிச்சம்?

    Reply
  • palli
    palli

    கருனாவின் வருகைகு பின் தோழருக்கு மகிந்தாவிடம் மதிப்பு சிறிது குறைந்துள்ளது, அது இந்த தேர்தல் தோல்வி என்னும் சிறிது இடைவெளியை ஏற்படுத்தி இருக்கலாம்; அத்துடன் சில கூட்டமைப்புடன் கருனாவின் பேச்சுவார்த்தைகள் சுகமாக முடிந்து விட்டது, அதனால் பாரளமன்ற தேர்தலில் மகிந்தா வலம் வருவதுக்கு இந்த கூட்டமைப்பினரே துணை செல்வார்; அதனால் தோழர் மீது இருக்கும் நம்பிக்கையை விட கருனாமீதுதான் மகிந்தா குடும்பம ஆர்வம் உண்டு (வீட்டோடு மாப்பிள்ளைதானே) இருப்பினும் இந்தியாவுக்கு கருனாவின் வடகிழக்கு பிரிவு மந்திரம் ஏற்புடையதல்ல; அதனால் இந்தியா மீண்டும் ஒரு குழப்பத்தை மகிந்தாவுக்கு கொடுக்கும் ; அதில் தோழர்பங்கு என்ன என்பது தெரியவில்லை, இந்தியாவோ தனது ஆதிக்கத்தை ஆரம்பித்து விட்டது அதன் முதற்கட்டமாய் ;;;;; எதுக்கும் தோழர் பதவியில் இருப்பது இன்றய நிலையில் தமிழருக்கு அவசியமாகிறது;

    Reply
  • NADARAJAH SETHURUPAN
    NADARAJAH SETHURUPAN

    மதிப்புரிய டக்ளஸ் தேவாணந்தா ஈ.பி.டி.பி கட்சியை கலைத்துவிட்டு தேசிய நீரோட்டத்தில் தன்னையும் தனது ஆதரவாளர்களையும் இணைக்கவேண்டும். இனியும் மத்தியில் கூட்டாய்சி மானிலத்தல் சுயாட்சி என்றும் பணைக்கமடியாத வடக்கு கிழக்கு என்று கூறிக்கொண்டு இருக்க முடியாது. இவர் மகிந்தவுக்கு தீவகத்திலை பெற்றுகொடுத்த வாக்கு 3 ஆயிரம் மட்டும்தான். இவர் கோடி கோடியாக கொட்டினாலும் யாழ்மாவட்ட சனம் 7 இலட்சத்திற்கு பொது அறிவு இல்லாட்டிலும் அரசியல் அறிவு தெழிவாக இருக்கு. இனியும் ஈழம் என்டு கட்சிகளக்கு பேர்வைப்பதை நிறுத்த வேணும். ஈழம் என்ற பேரில் இருக்கும் கட்சிகளின் பெயர்கள் மாற்றபடல் வேண்டும். இதுவே தமிழருக்கு நிம்மதியை தரும். இதை மகிந்தா கவனத்தில் எடுக்க வேண்டும் இதற்காகவே வடக்கு கிழக்கு தமிழர் 1 மில்லியன் வரையானோர் தேசிய கட்சிகளாக ஆழும் கட்சிக்கும் எதிர் கட்சிக்கும் வாக்கு போட்டனர். வல்வெட்டித்துறை சிவாஜிலிங்கத்திற்கே அவருடைய உடுப்புட்டி தொகுதியல் கிடைத்த வாக்கு 300 மட்டுமே.

    Reply
  • msri
    msri

    சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்தானாம். என்ற பாங்கில் டக்கிளஸின் ராஜினாமாவும்> ஹர்த்தாலும்> பின்னூட்டங்களும் உள்ளன. ராஜினாமா செய் என்று சொல்லவேண்டிய மகிந்தாவே சொல்லவில்லை. பிறகு ஏன் இந்த வில்லங்கத்தனம். யாழ்-மாநகரசபைத் தேர்தலின் பின்பு தமிழ்மக்கள் நிலை> டக்கிளஸிற்கும் தெரியும். அதை அவர் மகிந்தாவிற்கும் பகிரங்மாகவே சொன்னார். இத்தேர்லிலும் மகிநதாவினதும் – மக்களினதும் நிலையிலும் மாற்றமில்லை. இதை புரியாத சில புத்திமான்கள் சிதம்பர சக்கரத்தை பேய் பார்த்த கணக்கில் கதை சொல்கின்றார்கள். மக்களுக்கு புத்திசொல்வதற்கு உங்களுக்கு எத்தகுதியும் இல்லை. இதற்கு கற்றுக்குட்டி அரசியல் தீர்வாகாது.

    Reply
  • rasaththi
    rasaththi

    ஈபிடிபி கட்சியைக்கலைப்பதென்பது வரலாற்று நிகழ்வு. அது இன்றைய தேவை. ஈபிடிபி கொள்ளையடித்ததோ கொலைசெய்ததோ அல்லது அரசாங்கத்திற்கு வால்பிடித்து வேறுஏதாவது துரோகம் இழைத்ததோ எனக்குத்தெரியாது. ஆனால் இவள்ளவற்றையும் செய்த மிகமோசமான அமைப்பாக ஈபிடிபியும் அதன் தலைவரும் தமிழ்மக்கள் மனதில் பதிந்துவிட்டனர். எனவே டக்ளஸ் என்னதான் தலையால் குத்திமுறிந்தாலும் தமிழ்மக்கள் கேட்கப்போவதில்லை. எனவே கட்சியைக்கலைப்பது சரியானதே. மக்கள் செல்வாக்கில்லா தலைவரையும் கட்சியையும் வைத்துக்கொண்டு மகிந்தாவோ ரணிலோ ஆட்சிநடத்தவும் முடியாது. புலிகள் இருக்கும் வரைக்கும்தான் டக்ளஸ் கருணா போன்றவர்கள் அவர்களுக்கும் தேவை. இந்த யதார்த்தங்களைப்புரிந்துகொண்டு கட்சியைக்கலைப்பது ஒன்றும் பிழையான காரியமில்லை.

    Reply
  • NANTHA
    NANTHA

    டக்லஸ் மீது எனக்கு மதிப்பு உண்டு. அவர் தன்னை” தமிழரின் ஏக பிரதிநிதி” என்று அறிவித்தது கிடையாது. டக்லஸ் தீவு பகுதி மக்களால் தெரிந்து எடுக்கப்பட்டவர். நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலிலும் “தீவு” பகுதியினர் “வெற்றிலைக்கு” தங்கள் வாக்குகளை அள்ளி வீசியுள்ளனர். புலிகளின் அராஜகத்தின் மத்தியிலும் நின்று போராடியவர். அவர் இராஜினாமா செய்வதால் எதுவித பயனும் அவருடைய வாக்காளர்களுக்கு கிடைக்காது.

    சரத் என்று கத்தினவர்கள் தமிழர்களை சரத் பொன்சேகாவுக்கு வாக்களிப்பித்ததன் மூலம் எதனையும் அள்ளிக் கொட்டப் போவதில்லை. யாழ் குடா நாட்டு மக்கள் மஹிந்தவிடம்தான் “எப்ப” யாழ் தேவி ஓடும் என்றுதான் கேட்கப் போகிறார்கள். சரத் அமரிக்காவுக்கு எப்ப ஓடுவேன் என்ற நிலையில், டக்ளசை விட “புலிப் பினாமிகளான” சம்பந்தன் கோஷ்டி இராஜினாமா செய்வது “யாழ் தேவி” மீண்டும் ஓட விரைவு படுத்தும். A-9 – கண்டி / யாழ் நெடுஞ்சாலை “விடுதலை” மார்க்கமாகவும் விளங்கும்.

    புலிகளின் பதினொரு கொலை முயற்சிகளில் இருந்தும் உயிர் தப்பியவர். தன்னுடைய ஒரு “காதில்” கேட்கும் சக்தியை புலிகளின் குண்டுகளால் இழந்தவர். ஒரு தொழில்சங்க வாதியினதும், பத்திரிகையாளனின் மகனாகவும், அமெரிக்க சி ஐ.ஏ உளவாளிகளான “அலன்” தம்பதிகளை இனம் கண்டு துரத்தியவருமான தேவானந்தா இராஜினாமா செய்வதாக அறிவித்தது அவருடைய அரசியல் நேர்மை.

    தேவானந்தா மீண்டும் யாழ் மக்களால் தெரிந்தேடுக்கப்படுவார் என்பதில் எதுவித ஐயமுமில்லை.

    Reply
  • NADARAJAH SETHURUPAN
    NADARAJAH SETHURUPAN

    டக்ளஸ் மீது எனக்கும் மதிப்பும் மரயாதையும் உண்டு ஆனால் என்மீது டக்ளஸ்க்கு வெறுப்பும் விரக்தியும் இருக்கத்தான் செய்யும். ஆனால் தனிபட்ட முறையில் உதவி மனபாண்மை உடையவராகவே நான் கேள்விப்பட்டிருக்கிறேன். தமிழ் தேசிய கூட்டமைப்புடன் ஒப்பிடும்போது அதிகம் மக்களுக்கு ஏதோ செய்திருக்கிறார் என்று சொல்லாம். ஆனால் தற்போது டக்ளஸ்சோ அல்லது எந்த ஒரு தமிழ் அரசியல் குழுவோ ஈழத்தின் பேரை சொல்லி தமிழ் மக்களை ஏமாற்றுவதை இனிமேலும் அனுமதிக்க முடியாது.

    ஈழத்தை டக்ளசாலையோ அல்லது தமிழ் தேசிய கூட்டமைப்பாலையோ அல்லது புலிகளாலையோ பெறமுடியாது. இதவே நிசம். ஆகவே தமிழ் மக்களை தொடர்ந்து தவறான பிரிவினைக்கு இட்டுச் செல்லாமல் தாம் தமது கட்சிகளை கலைத்துவிட்டு தேசியகட்சியில் இணைவதே சிறந்தது.

    Reply
  • nandu
    nandu

    Mr Suban. please note, Tamil people are very intelligent. This was shown in the recent past election. please do not try and under estimate tamils. Your comments appears be saying that Douglas is gentlemen but people of Jaffna misunderstood him. Mr Douglas is known criminal. In the past he said, as long as LTTE is there he would not leave the politics. LTTE is no more…. can he tell the people what he tries to achieve now. Tamil people rejected him in the last election he should pack up his bags Pls do not try to mislead Tamil. This is what LTTE did for the last 30 years.

    Reply
  • munivan
    munivan

    // அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பதவி விலகுவதாக தீர்மானித்திருந்தார். இதனைக் கண்டிக்கும் முகமாக யாழ்ப்பாணத்தின் சமூக அமைப்புகள் இணைந்து இன்று காலை முதல் ஹர்த்தால் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தன. //

    //ஜனாதிபதியின் வேண்டுகோளின் பேரில் அமைச்சர் பதவியிலிருந்து ராஜிநாமா செய்வது தொடர்பாக மீள்பரிசீலனை செய்யவுள்ளதாக சமூக சேவைகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்துள்ளார்.//

    Whole drame is to appease the master.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    டக்ளஸ் தானே முன்வந்து ராஜினாமா என்கிறார். ஆனால் இங்கே புலிகள் ஆவலுடன் காத்திருக்கின்றனர் என்கிறர் சிலர். சிலரோ யாழ்ப்பாணச்சனம் உருப்படாது ஏனென்றால் தமக்கு வாக்களிக்கவில்லை என்கின்றனர். தேர்தலில் வோட்டுப்போடாமல் விட்ட மக்கள் ஹர்த்தால்’ வைக்கிறார்கள் எனக்கதை விடுகிறார்கள். முன்னர் மக்கள் ‘மாக்கள்’ அல்ல எல்லாம் அறிந்தவர்கள் எனச்சொன்னவர்கள் சாம்பலை வீசி சாபம் இடுவது சிரிப்பை வரவழைக்கிறது. சன்டே ரைம்ஸ் காரன் இதெல்லாம் தோழரின் கட்சிக்காரரின் விளையாட்டு என்கின்றான். அமெரிக்க அலன்தம்பதிகளை இனம்கண்டு துரத்திய “மஹான்” அமெரிக்க அரசு கொடுத்த கப்பல்களை இனம்கண்டு வாங்கி இருப்பது ஆச்சரியம்தான். ஒருவேளை அதனால் தானோ என்னவோ அமெரிக்கா இவரை இனம்கண்டு விசாவை மறுத்துவிட்டது. இதெல்லாவற்றுக்கிம் மேலாக டக்ளஸ் சொல்கிறார் மஹிந்தா தோல்வி அடைந்தது தனக்கு வேதனை தருகிறதாம், ஆனால் வன்னியில் சனம் கொல்லப்பட்டபோது ‘மூக்கிருந்தால் சளியும் இருக்கத்தான் செய்யும்’ என பேட்டி குடுத்தவர். ஒரு இலக்சனில் வோட்டு விளவில்லை என இதய்க்குருதி வடிப்பது மக்கள் கவனித்தபடியே இருக்கிறார்கள் என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும். மேலும் அவர் சொல்கிறார் வெளிநாட்டில் இருப்போர் சொற்கேட்டே மக்கள் மஹிந்தாவை நிராகரித்தனர் என. காரணம் கஷ்டத்தில் இருந்தபோது வெளிநாட்டு தமிழர் உதவி செய்தனராம். ஆகவே அவரே சொல்கிறார் தாம் மக்களுக்கு செய்த உதவியை மக்கள் ‘பம்மாத்து’ என அறிந்து விட்டதை. வடக்குச்சனம் தாம் பெற்ற உதவிக்கு கைமாறாக வெளிநாட்டு தமிழரின் சொல்கேட்டு நடந்தனர் எனச்சொல்லும் டக்ளஸ் தான் யாரிடம் பெற்ற உதவிக்காக யாருடன் தொங்கிக்கொண்டிருக்கிறார் என சனத்துக்கு தெரியாதா? இதொன்றும் நான் சொல்லவில்லை அவர் ஐலன்ட் பத்திரிகைக்கு கொடுத்த பேட்டியில் சொல்லி இருக்கிறார். தமிழூடகங்கள் தமிழர்களை பிழையாக வழிநடத்திவிட்டனர் எனவேறு குழம்பி இருக்கிறார். தானே ஒரு பத்திரிகை நடத்தும் இவர் தனது தலையிலேயே ஆப்பு வைக்கும் அளவுக்கு குழம்ப்பி இருப்பது மஹிந்தாவிடம் இருந்து இவருக்கு ‘டோஸ்’ விழுந்திருக்குமோ என நினைக்க வைக்கிறது. சன் ரிவீ ஓடாத படங்களை மாபெரும் வெற்றி என கதைவிடுவதுபோல ஸ்ரீலங்காவின் மஹிந்தா சிந்தனை என்கின்ற குப்பைப்படங்களை சிறீதரில் “ வெற்றிகரமாக ஒட்டியபோது” இவர் கனவிலும் நினைத்திருக்கமாட்டார் கலக்சன் இவ்வளவு கையைக்கடிக்கும் என்று. தியேட்டர் வச்சு படங்காட்டிய டக்ளசின் நிலை இப்படி என்றால் திறந்தவெளி தியேட்டரில் படங்காட்டிய சித்தார்த்தன், சிறீதரன், புலம்பெயர் குழுக்களின் கலக்சன் நிலவரம் இன்னும் மோசம். பேசமல் பிலிம் கோப்பிறேசனிட்ட வங்குரோத்து கனக்கு காட்டவேண்டியது தான். இல்லாட்டி பிடிசாம்பல் சாபம் போட்டுவிட்டு மூட்டையைக்கட்டலாம்! போகிற போக்கில் மஹிந்தா சொன்னது போல ‘சிறுபான்மை இனம என ஒன்றும் கிடையாது” என மஹான் லெவலுக்கு கதை விடலாம். ஆனால் அதை நம்பி சிங்களவர்கள் கூட வோட்டுப்போட மாட்டார்கள்.

    Devananda on Jaffna defeat

    Social Services and Social Welfare Minister Douglas Devananda said his party, the EPDP, was sorry for the UPFA’s defeat in Jaffna for two reasons.He claimed that the Tamil media and a section of Tamil Diaspora had misguided the Tamil community and as a result of that Tamil votes had gone for Sarath Fonseka. The Tamil Diaspora had been remitting money for the Tamil community displaced by the war and some sections of the community their toed its line, the Minister said.Some Tamils were dependent on foreign remittances and willing to do what the diaspora wanted.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    நடராஜா சேதுரூபனின் கருத்து உதாசீனம் செய்யக்கூடியதல்ல. ஆனால் அதை ஈ.பி.டி.க்கு மட்டும் பிரயோகிப்பது தான் தவறானது. இது மற்றைய அரசியல் குழுக்களும் பொருந்தும். தமிழினம் காட்டுமிராண்டி நிலைக்கு தள்ளுப்படுவதற்கும்இரு இனத்தில் இருக்கும் மத்தியதர வர்க்கம் அரசியல் பிழைப்பு நடத்துவதற்கும் இனக்கலவரங்களை தூண்டிவிடுவதற்கும் இப்படியான பிரிவினைவாதங்களே காரணம்.
    தமிழ்மக்களின் இன்றைய நம்பகரமான சக்திகள் டக்கிளஸ் தேவானந்தா சித்தாத்தன் சிறீதரன் பிள்ளையான் அபுயூசுப் போன்றவர்களே. இவர்கள் தமது பிரத்தியோக அடையாளங்களை களைந்து தேசியகட்சியில் இணையவேண்டும். இணையும் போது மொழிப்பிரச்சனை இனப்பிரச்சனை தம்மையறியாமலே அகன்று போகும். மிகுதியாக இருக்கபோவது வறுமையே. இந்த வறுமை தமிழ்பகுதியை விட கூடுதலாக சிங்களப் பகுதியை ஆட்டுவிக்கிறது என்பதை தமிழ்அரசியல்- பிற்போக்குவாதிகள் கண்டு கொள்வார்கள்.
    இந்தமுடிவுக்கு வருவதே அமைதியான ஐக்கியஇலங்கையை தோற்றிவிப்பதற்கான வழி. இலங்கையில் கடந்துபோன வரலாறும் எமக்கு இதைத்தான் எடுத்துரைக்கிறது இதை இருக்கிற முற்போக்கான தமிழ்தலைமைகள் இனம் காணுமா? காரியத்தில் இறங்குமா??. பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும். அப்படி நடந்தேறுமானால் வர்க்கப் போராட்டம் அதாவது வறுமைக்கெதிரான போராட்டம் தொடங்கி விடும்.மொழியை வைத்து பிழைப்பு நடத்துபவர்களின் அரசியல் வாழ்வும் இல்லாது ஒழிக்கப்படும்.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //… பிரத்தியோக அடையாளங்களை களைந்து தேசியகட்சியில் இணையவேண்டும். இணையும் போது மொழிப்பிரச்சனை இனப்பிரச்சனை தம்மையறியாமலே அகன்று போகும்….//
    இனப்பிரச்சினை மொழிப்பிரச்சினையின் ஆணி வேர் அரசியலமைப்பு சரத்துகள் அன்றி தமிழரின் பிரத்தியேக அடையாளங்கள் அல்ல. சிங்களம் மட்டும் சட்டம், பெளத்த சமயம் அரச மதம் இதெல்லாம் மொழிப்பிரச்சினைக்கு முன்னரே வந்த அடையாளங்கள். அவை முதலில் களையப்பட வேண்டும். டக்ளஸ் முன்மாதிரியாக இருந்து ”ராஜினாமா” செய்தது போலவும் ஆனால் ‘ஜனாதிபதி’ பொறுத்திரு மகனே என அபயக்கை காட்டியது போலவும் தனது கட்சியிலுள்ள ‘ஈழம்’ ‘புரட்சி’ போன்ற வாக்கியங்களை (அடையாளங்களை) நீக்கி முன்னுதாரணமாக திகழலாம்.

    ஜனநாயகம், மாற்றுக்கருத்து, ‘புலன்பெயர்’ கிண்டல்கள், மக்கள் /மாக்கள் வடகிழக்கு மக்கள் தம் தலவிதியைத் தாமே தீர்மானிப்பர் போன்ற மஹா வாக்கியங்கள் பேசியோர் இப்போ எல்லாம் அம்பலத்துக்கு வந்தவுடன் வர்க்கப்போராட்டம் பேசுகின்றனர். ஆனால் ஜே.வீ.பியினரின் ‘வர்க்கப் போராட்டம்’ எவ்வாறு இனவாதமானது ஜே.வீ.பியின் தூண்களில் ஒருவரான டயான் ஜயதிலக்கா எவ்வாறு ‘வர்க்க விசுவாசி’ ஆகினார் என மக்கள் ஏலவே அறிந்து விட்டனர் என்பதை அறியாமல் இருக்கிறீர்கள்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    //டக்ளஸ் தானே முன்வந்து ராஜினாமா என்கிறார். ஆனால் இங்கே புலிகள் ஆவலுடன் காத்திருக்கின்றனர் என்கிறர் சிலர். – சாந்தன் //

    இதை நிரூபிக்கின்ற வகையில் தானே உங்கள் கருத்தும் அமைத்துள்ளதே???

    Reply
  • NANTHA
    NANTHA

    சாந்தன்:
    மண்ணெண்ணெய் மகேஸ்வரன் என்ற யு என் பி ஆள் “கப்பல்’ வாங்கி புலிகளோடு சேர்ந்து “கொள்ளை” லாபத்துக்கு யாழ்ப்பாணத்தில் பொருட்களை விற்று ‘பங்கு” பிரச்சனையில் புலிகளால் கொல்லப்பட்டது எங்களுக்கு தெரியும்.

    தயவு செய்து டக்லஸ் தேவானந்தா “வாங்கிய” கப்பல்கள், அதுவும் அமெரிக்க உதவியோடு வாங்கிய கப்பல்களை பற்றி சொன்னால் நன்றி உள்ள ஆத்மாகவே இருப்பேன்!

    Reply
  • NANTHA
    NANTHA

    இந்த “சிங்களம் மட்டும்” என்ற பிரச்சனை மலையாளி வம்சத்து ‘ஜெயவர்த்தனாவால்’ 1944 ஆம் ஆண்டு ,முதல் முறையாக ‘இலங்கை அரசியலில்” கொண்டு வரப்பட்டது. இதற்கு முன்னர் யாராவது அப்படி மொழிந்திருந்தால் சாந்தன் போன்றவர்கள் நிரூபிக்கட்டும்.

    கேரளாவில் இன்றும் “நாடு விட்ட மலையாளிகள்” என்ற பதம் உபயோகத்திலுண்டு. அவர்களை கேரளியர்கள் தங்கள் “ஆட்கள்” என்று” உரிமை” பாராட்டுவதில்லை. ஏனென்றால் அவர்கள் “கேரளத்து” மகிமைகளை கைவிட்டு போன இடத்தில் “எது” வசதியோ” அதை கைக் கொண்டவர்கள். இது பிரபாகரனின் பரம்பரைக்கும் பொருந்தும். ஏனென்றால் “திருவேங்கடம் வேலுப்பிள்ளையும்” அதே மலையாளத்து வம்சம்தான். வேலுப்பிள்ளை சிறுவனாக தனது தந்தை திருவெங்கடத்தோடு வல்வெட்டித்துறைக்கு வந்தததாக மாத்திரம் தகவல் உண்டு.

    கருத்துக்கள் ஏன் சொல்லப்படுகின்றன்றன என்றால் நாடு விட்டவர்களின் பிரச்சனை. வேலுப்பிள்ளை எப்படி “இலங்கை” பிரசையாக மாறினார் என்பது இன்றும் ஆராயப்பட வேண்டியதே.

    தமிழ் என்றும் சிங்களம் என்றும் இலங்கையில் “பெரிது” படுத்தியவர்களின் பரம்பரை பிரச்சனைகள் அதிகாரம் பற்றியதாகவே இருந்ததே ஒழிய தேசிய நலன்கள் பற்றியதாக இருக்கவில்லை. செல்வநாயகம் பரம்பரைகள் கூட அதே “அம்சத்தையே’ கொண்டிருந்தன.

    பிரிட்டிஷ் அரசின் கீழ் நடந்த பிரச்சனைகள் பற்றி சரியாக ஆராயாமல் நாங்கள் “தமிழ்” சிங்களம்” என்று போரிடுவதில் என்ன பயன் என்பதை சிறிது சிந்திக்க வேண்டும். .

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //…இதை நிரூபிக்கின்ற வகையில் தானே உங்கள் கருத்தும் அமைத்துள்ளதே??…//
    தானே முன்வந்து செய்யும்போது மற்றவன் ஆவலுடன் இருப்பதைப்பற்றி கதைக்க வேண்டிய அவசியமில்லையே?

    //.. ஜெனரல் சரத் பொன்சேகா ஆட்சிக்கு வந்தால் பாரிய மாற்றம் எதனையும் தமிழ் மக்கள் காணப்போவதில்லை. இந்நிலையை சிந்தித்தே நான் ராஜிநாமா செய்வதற்குத் தீர்மானித்தேன்….//

    பொன்சேகாதான் ஆட்சிக்கு வரவில்லையே? அதுமட்டுமல்ல இலெக்சன் முடிவடை யமுதலே மஹிந்தாவும் ஆதரவாளர்களும் தாமே ஆட்சிக்கு வரப்போவது உறுதி எனவும் எதிர்வு கூறி இருந்தனரே? பின்னர் ராஜினாம செய்யவேண்டிய நிலை (கதை) எங்கே வந்தது? எல்லாம் 10 அம்சக் கோரிக்கை கோவிந்தா நிலைதான் காரணம் எனசொல்லித் தெரிய வேண்டியதில்லை! மஹிந்தாவே சொல்லிவிட்டார் தமிழருக்கு என்ன கொடுக்கவேண்டும் என எனக்கு யாரும் சொல்லத் தேவையில்லை ஏனென்றால் எனக்கு தமிழ் தெரியும் அதனால் தமிழருக்கு எனி ஒரு பிரச்சனையும் இல்லை என! நான் கிண்டலுக்குச் சொல்லவில்லை உண்மையாகவே பேட்டி கொடுத்திருக்கிறார்!

    Reply
  • palli
    palli

    ஜெயவர்த்தனா மலையாளி; பிரபாகரன் மலையாளி; சிலரோ தொலுக்கானா, சிலவேளை சரத் இந்தியாக இருக்கலாம்; அப்போ நந்தா மட்டும் என்ன? தமிழா? அல்லது சிங்களமா? மகிந்தா குடும்பம் என்ன பீகாரா.. ,, ? ஆராட்ச்சியை தொடருங்கோ; நாமளும் தெரியலாம்,

    Reply
  • msri
    msri

    ஈழம் என்ற சொற்றொடரை வைத்திருக்கும் கட்சிகள்> அவற்றை கலைத்து விடுவதில் தவறில்லை. பின்பு தேசியக்கட்சிகளில் இணைவது என்ற கோட்பாடு> கைகட்டி வாய் பொத்தும்> அரசியலை தொடராதோ? ஏன் இவர்களுக்கு சுயமாக> சுயநிர்னயத்தில் அரசியல் செய்ய வராதோ? “செய்நன்றி கொண்ட மகர்க்கு” உய்வில்லை என்ற (தமிழ்மக்களை நிந்திப்போர்) பாங்கில் கதையளப்போர் ஒன்றை சிந்திக்கவேண்டும்.> சுயமின்றி பேரினவாதத்தின் காலடியில் வீழ்ந்ததால்தான்> தமிழ்மக்கள் டக்கிளஸ் போன்ற ஜனநாயக நீரோட்டக்காரர்களை நிராகரித்தார்கள்;

    Reply
  • kanthan
    kanthan

    மகேஸ்வரனையும் ரவிராஜையும் கொன்றது டக்ளஸ். மகேசன் பங்கு போட்டி ரவிராஜை எதிர்க்க முடியாமல் கொலை.
    நந்தா இலங்கை தமிழர் யார் எங்கிருந்து வந்தார்கள் ஆய்வை தொடருங்கள் அறிய ஆவலாக உள்ளோம்

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    //தானே முன்வந்து செய்யும்போது மற்றவன் ஆவலுடன் இருப்பதைப்பற்றி கதைக்க வேண்டிய அவசியமில்லையே? //

    டக்லஸ் தேவானந்தா தனது பதவியை இராஜினாமாச் செய்திருந்தால், சாந்தனின் கருத்துக் கூட இங்கு வந்திருக்காது தானே. இன்றுவரை அது நடைபெறாததாலேயே சாந்தனின் அதிருப்தி தொடருகின்றது.

    சாந்தனுக்கு இன்னொன்று தெரியுமோ றேந்றிரவு(31.01.10)பிரான்சிலுள்ள புலிப்பினாமி ஊடகமொன்றில் வட்டுக்கோட்டை வாக்கெடுப்பு என்ற போர்வையில், பணச்சடங்கு நடாத்துகின்றார்கள் துரோகிகள் என்று ஒருவர் வந்து குழம்பி விட்டார். ஏற்கனவே சுருட்டிய பணத்தையும் வைத்துக் கொண்டு, மேலும் மேலும் பணம் சுருட்டுவதே குறியாக இவர்கள் செயற்படுகின்றார்கள் என்றும் வந்தவர் குறிப்பிட்டார். அப்போது நிழ்ச்சி நடாத்திக் கொண்டிருந்தவர்களும் இந்த நிலையை மாற்ற வேண்டும் என ஒப்புக் கொண்டனர். பின்பு பிரான்சில் புலிகளமைப்பிலுள்ள ஒருவர் அதே வானொலியில் வந்து தம்மிடமிருந்த பெருமளவு பணம் இலங்கை அதிபர் தேர்தலில் செலவழிந்து விட்டதாக போட்டாரே ஒரு போடு. அவர் தன்னையுமறியமல் புலிகள் சுருட்டிய பணம் சரத் பொன்சேகாவிடம் கைமாறியதை ஒப்புக் கொண்டுள்ளார். அங்கு மக்கள் பட்டினி, வாழ்விடமில்லாமல் அவதிப்படுகின்றார்கள் என்று படம் காட்டி இன்றும் சுருட்டலை மேற்கொள்ளும், இவர்கள் சேர்த்த பணத்தில் 5 சதவீதத்தை அந்த மக்களுக்கு கொடுத்திருந்தாலே அவர்கள் வாழ்க்கை மேம்பட்டிருக்கும். ஆனால் இன்றும் தமது அரசியல் பிழைப்பை மேம்படுத்தவே இவர்கள் பாடுபடுகின்றார்கள். இப்படியானவர்களுக்கே தொடர்ந்து தாங்கள் வக்காலத்து வாங்கி வருவது அதைவிட வேடிக்கை…..

    Reply
  • santhanam
    santhanam

    பல்லி, பிறேமதாஷாவை வைத்து 4ம் குறுக்கு தெரு வியாபாரிகள், பல இயக்க உறுப்பினர்களை சிறைசெல்லாது 1987 ம் ஆண்டு கொழும்பில் காப்பாற்றினார்கள்
    இப்ப அதே வேலையை டக்ளஷ் செய்யிறார் ஆள்தான் மாற்றம் இவரையும் மாற்ற சொல்லி அன்னியசக்திகள் மகிந்தாவிற்கு அழுத்தம் மிதவாதிகளின் கையில் வடக்குகிழக்கு வெகு விரைவில் ஒப்படைப்பு ஆயுதகலாச்சாரம் கப்பம் அத்தனைக்கும் ஆப்பு

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //…தயவு செய்து டக்லஸ் தேவானந்தா “வாங்கிய” கப்பல்கள், அதுவும் அமெரிக்க உதவியோடு வாங்கிய கப்பல்களை பற்றி சொன்னால் நன்றி உள்ள ஆத்மாகவே இருப்பேன்!….//
    நான் சொன்னது அமெரிக்கா கொடுத்த போர்க்கப்பலை! அதனை வழங்கிய அமெரிக்க அரசுடனும் வாங்கிய அரசுடனும் என்ன ‘இனம்கண்டு’ இணைந்திருந்தார்?

    //…இன்றுவரை அது நடைபெறாததாலேயே சாந்தனின் அதிருப்தி தொடருகின்றது….//
    அப்போ எமது ஆவலை தணிக்கும் முகமாகவும் அதிருப்தியை தொடரும் முகமாகவும் இந்த ராஜினாமா நாடகமா? நல்லது! ஹர்த்தாலுக்கு கடைகளை பலவந்தமாக பூட்டி (ஆமிக்காரன் திறக்கச்சொன்னது வேற கதை) வியாபாரிகளுக்கும் மக்களுக்கும் உழைச்சலைக் கொடுத்தது எல்லாம் சாந்தன் போன்றவர்களின் ஆவலைத்தணிக்க!அதிருப்தியைக் கூட்ட! அப்பப்பா டக்ளசின் புரட்சி மக்கள் ஜனநாயக உணர்வு புல்லரிக்க வைக்கிறது!

    ’புலிப்பினாமி’ ஊடகம் பற்றி சாந்தனுக்குத் தெரியாது. தெரிந்தால் பதில் சொல்கிறேன்.

    இதோ டக்ளசின் அடுத்த அறிவிப்பு. தான் வரும் தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாகவும் காரணம் யாழ் மக்கள் தன்னை ஈ.பி.டி.பி தலைவராகவே அறிந்திருந்தனர் எனவும் ஸ்ரீலங்கா அரசுடன் இணந்து போட்டியிட்டதால் தனது அடையாளம் தொலந்து விட்டதாகவும் சொல்லி இருக்கிறார். இங்கு என்னடா என்றால் ‘அடையாளம்’ களைந்து நீரோட்டத்தில் ‘இணைய’ச் சொல்கிறார்கள். ஆனால் நீந்திச்சிக்கல் பட்டவனுக்குத்தானே தெரியும் மூச்சடைப்பு! ஆனால் வழமையான ஜோக் என்னவென்றால் வென்றவுடன் அரசுடன் இணைந்துவிடுவாராம். நேற்றுத்தான் சொல்கிறார் தமிழ் ஊடகங்களும் புலம்பெயர் தமிழ் அமைப்புகள் சிலவும் யாழ் தமிழரை தவறாக வழிநடத்தி தன்னை தோற்கப்பண்ணி விட்டன என்று!

    Reply
  • thaya
    thaya

    சும்மா இங்கிருந்து கதையளப்பது சுலபம். என்னை பொறுத்தவரையில் மகிந்தா வேறு டக்ளஸ் வேறு. ஐனாதிபதித்தேர்தல் வேறு..
    > பாராளுமன்றத்தேர்தல் வேறு இப்படித்தான் மக்கள் சிந்திக்கிறார்கள். தோழர் நினைத்தது போல் தோழரை நம்பினாலும் அவருக்காக மகிந்தவிற்கு வாக்களிக்க விரும்பியிருக்கவில்லை. யாழ் மாநகரசபை தேர்தலில் 10500 வாக்குகளை பெற்ற ஈ.பி.டி.பி ஐனாததிபதி தேர்தலில் எவ்வளவு பெற்றிருக்கிறது என்பதை வைத்து இதை அவதானிக்லாம். சரி மாநகர தேர்தலில் புத்தளம் முஸ்லிம் வாக்குகளும் என்று சொன்னால் அது 1500 மட்டும்தான் அப்படிப்பார்த்ததாலும் அன்று எடுத்த ஆதரவை இன்று ஏன் ஈ.பி.டி.பி எடுக்கவில்லை. காரணம் மேலே சொன்ன காரணம்.

    ஆகவே டக்ளஸ் தோழர் அவர்களே!…

    அடுத்த தேர்தலில் நீங்கள் வீணையில் போட்டியிட்டால் யாழ் மாநகரசபை தேர்தலிலும் பார்க்க உங்களுக்கு அமோக வெற்றி காத்திருக்கிறது. குறிப்பாக கிராமப்புறங்கள். உங்கள் பக்கம். யாழ் பல்கலைக்கழகமும் உங்கள் பக்கம்.

    இராஜினாமா எண்ணம் வேண்டாம். தனித்துவமாக நீங்கள் போட்டியிடும் பட்சத்தில் அனைத்து தரப்பினரும் உங்கள் பக்கமே நிற்பார்கள்.

    ஆனர்லும்> ஒன்று யாருடைய தவறான விமர்சனங்களை கேட்டும் சரி அரசாங்கத்துடனனான உறவை துண்டித்து விடாதீர்கள். காரணம் எதிர்ப்பு அரசியல் எதையம் பெற்றுத்தராது.

    இணக்க அரசியலை அடிப்படையாக வைத்து எதிர்க்க வேண்டியதை எதிர்க்கவும். கூட்டமைப்பினர் குத்துக்கரணம் அடித்து வந்திருக்கிறார்கள். இப்ப ஐனாதிபதியடன் பேச தயார் என்கிறார்கள். அவர்களைப்போல் சந்தர்ப்பவாத அரசியல் செய்யாமல் நேரடியாகவே எதையும் சொல்லி வரும் உங்களுக்கு வாழ்த்துக்கள்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    //’புலிப்பினாமி’ ஊடகம் பற்றி சாந்தனுக்குத் தெரியாது. தெரிந்தால் பதில் சொல்கிறேன்.//

    சாந்தனிடம் நான் புலிப்பினாமி ஊடகம் பற்றிக் கேட்கவில்லை. வட்டுக்கோட்டை வாக்கெடுப்பு என்ற போர்வையில் பணச்சடங்கு நடப்பது பற்றியும், புலிப்பினாமிகள் வசமுள்ள பில்லியன் கணக்கான பணத்தில் வன்னிமக்களுக்கு எதுவும் செலவளிக்காமல், சரத் பொன்சேகாவின் தேர்தல் செலவுகளுக்கு வழங்கப்பட்டுள்ள விடயங்கள் பற்றியே நான் வினாவினேன். எனி இதையும் தெரியாது என்று கதையளப்பீர்கள் போல?? உங்களுக்கு புலிகளின் அடாவடிகள பற்றியோ, புலிப்பினாமிகளின் தொடர் சுருட்டடல்களைத் தவிர மற்றவையெல்லாம் மட்டுமே தெரியும்…….

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //….எனி இதையும் தெரியாது என்று கதையளப்பீர்கள் போல?? …//

    அளக்கமாட்டேன். ஆனால் நீங்கள் சொல்லும் ‘புலிப்பினாமி’ ஊடகங்கள் எதுவும் நான் இருக்கும் நாட்டில் இருந்து செயற்படுவதுமில்லை, இங்கே ’பணச்சடங்கு’ நடப்பதுமில்லை. எனவே எனக்கு தெரியாது.
    நியாயமாகப்பார்த்தால் நீங்கள் கேட்ட புலிப்பினாமி ஊடகத்திடம் அல்லது ச்ரத்துக்கு ‘பணம் கொடுத்தேன்’ என சத்தியம் பண்ணியவரிடமுமல்லவா கேட்டவேண்டும். டக்ளஸ் ராஜினாமா செய்வதைப்பற்றி ஏன் சொன்னார் அதன் நோக்கம் என்ன அவரின் ராஜினாமா தொடர்ந்த ’மக்கள்’ ஹர்த்தால்‘நாடகமா’ இல்லையா உங்களுக்கு டக்ளஸ் ஏன் இந்த நாடகத்தை ஆடினார் எனத்தெரிந்தால் சொல்லுங்கள் நான் உங்களை டக்ளஸ் சொன்ன கருத்துக்கு பதில் சொல்லி ஆகவேண்டும் என மல்லுக்கு நிற்கமாட்டேன்.

    Reply
  • BC
    BC

    ஹர்த்தாலுக்கு கடைகளை பூட்டி வியாபாரிகளுக்கும் மக்களுக்கும் உழைச்சலைக் கொடுத்ததிற்க்கு கவலைபடுபவர்களே! புலிகள் 30 வருடமாக வியாபாரிகள், மக்களிடம் கப்பம் பெற்று அவர்களை சீரழித்ததிற்கும் கவலைபடுங்கோ.

    நந்தா, தன்னை ஏற்காதவர்களை தமிழ் துரோகிகள் என்று போட்டுதள்ளியவர் ஒரு மலையாளியா?!

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    சாந்தன்,
    அடடா உங்கள் நாட்டில் நடப்பவற்றிற்கு மட்டுமே தங்களால் பதிலளிக்க முடியுமென்றால், டக்ளஸ் இலங்கையில் கூறியதாக வந்த செய்தியையிட்டு தாங்கள் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. அப்படி அந்தச் செய்தி பற்றி அறிய வேண்டுமாயினும் தாங்கள் இங்கு கேட்பதை விட, டக்ளஸிடம் கேட்டால்த் தான் சரியான பதிலை பெற முடியும் தங்களின் கூற்றுபடி.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    //நந்தா, தன்னை ஏற்காதவர்களை தமிழ் துரோகிகள் என்று போட்டுதள்ளியவர் ஒரு மலையாளியா?! – BC //

    பிரபாகரனின் தகப்பனார் மலையாளி என்பது உண்மையே. பல மலையாளிகள் உடுப்பிட்டி, வதுரி, நெல்லியடி, வல்வெட்டி போன்ற இடங்களில் பல ஆண்டுகளுக்கு முன்னர் வந்து குடியேறி அங்கு வாழ்வது அப்பகுதி மக்களிடமே கேட்டால்ச் சொல்வார்கள். சில மாதங்களுக்கு முன் கேராளாவைச் சேர்ந்த பெண்மணியொருவர் ஆனந்த விகடன் பத்திரிகையில் பிரபாகரனின் தந்தையான வேலுப்பிள்ளை தனது நெருங்கிய உறவினரென்றும் அவர் இலங்கையில் சென்று குடியேறிய விபரங்கள் போன்றவற்றையும் எழுதியிருந்தார்.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //….ஆனந்த விகடன் பத்திரிகையில் பிரபாகரனின் தந்தையான வேலுப்பிள்ளை தனது நெருங்கிய உறவினரென்றும் ….//
    அதே ஆனந்த விகடனில் பிரபாகரன் உயிருடன் உள்ளார் எனவும் வந்திருக்கிறது. சரத் பொன்சேகாவின் மருமகன் அமெரிகாவில் கைது என்றும் வந்திருக்கிறது!! அமெரிக்க பொருளாதாரச் சிக்கலால் அமெரிக்க மக்கள் இப்போடு வீடில்லாமல் கார்களுக்குள் படுத்துறங்குகிறார்கள் எனவும் வந்திருக்கிறது. இன்னும் எத்தனையோ வரும்.

    Reply
  • kanthan
    kanthan

    கரவெட்டிக் பாடசாலையொன்றில் ஈப்பன் என்ற மலையாளி அதிபராக இருந்ததாக தெரிகிறது. சங்குனி என்ற தேநீர்க் கடை உரிமையாளார் இயக்கத்தால் கொலை செய்யப்பட்டுள்ளார்

    Reply
  • NANTHA
    NANTHA

    எனக்கு “மலையாளிகள்” என்று எதுவித குரோதமும் கிடையாது. ஆனால் எல்லோரும் உத்தமர்கள் அல்ல. இலங்கை அந்த நாட்களில், நான் சிறுவனாக இருந்த காலத்தில், ஆயிரக்ககணக்கான மலையாளிகள், தமிழர்கள் கள்ளத்தோணி வழியாக இலங்கை வந்துள்ளனர் . வடமராட்ச்சியில் சூசியம், வடை போன்ற நொறுக்கு தீனிகள் அவர்களின் அறிமுகம். நெல்லியடி சந்தியில் இருந்த “சங்குண்ணி” கடை அதற்கு ஒரு அத்தாட்சி. ஆனால் சங்குண்ணி சகோதரர்கள் “தமிழ்” என்ற வட்டத்துக்குள் நிற்காது “தொழிலாளி வர்க்கம்” என்ற புரட்சி சித்தாந்தம் சார்ந்த ஒரு போராளியாகவே நான் கண்டிருக்கிறேன். அதன் விளைவாக அந்த சங்குண்ணி புலிகளால் கொல்லபட்டது பின்னைய செய்தி.

    உலகத்தில் முதன் முதலாக “வாக்குகள் ” மூலம் கொம்யூனிஸ்ட் ஆட்சியை நிறுவியவர்கள் மலையாளிகளே. அந்த புரட்சியின் மூல கர்த்தா “ஒரு பிராமணன்” என்பது இன்று தமிழ் என்று கூறும் “திராவிடர்களுக்கு” தெரியாத விஷயம். இ எம் எஸ் நம்பூதிரிப்பாடு என்ற பிரமாணன் பூணூலும் கழட்டி வீசி கம்யூனிஸ்ட் ஆக மாறிய விஷயம் எங்கள் “சமத்துவம்” கேட்ட செல்வநாயகதுக்கு தெரிய முடியாது.

    கத்தோலிக்க/ கிறிஸ்தவர்களின் அடிமைகளாக “தமிழ்” வீரர்கள் மாறி தமிழர்களிடையே இருந்த சோசலிஷ சிந்தனாவாதிகளை கொன்று குவித்தனர். இன்று அதன் பலாபலன்களை அனுபவிக்கின்றனர்.

    ஆனால் பிரபாகரன் என்பவன் ஒரு மலையாளியின் மகன் என்பது உண்மை. அந்தவகையில் “வல்வெட்டித்துறை” கள்ளகடத்தல் கேடிகளின் பல விளையாட்டுக்கள் “தமிழ்” என்ற போர்வையில் நடந்தேறின.

    வெளிநாட்டு ஏஜன்டுகளாக எப்போதும் லோக்கல் ஆசாமிகளே இருந்துள்ளனர். புலிகளும், ஈழம் என்று கூப்பாடு போட்டவர்களும் அப்படி “வெளிநாட்டு” கூலிகளாக மாறியவர்களே.

    சிறுவயதில் “தமிழ்” என்று பிரச்சனை உள்ளவர்களிடம் நான் கேட்டது: நீங்கள் தமிழ் என்றால் சிங்களவர்கள் சிங்களம் என்பதில் என்ன தவறு என்பதுதான். ஜனநாயகம் என்பது “பெரும்பான்மை” சம்பந்தப்பட்டது என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை.

    நான் அரச சேவையில் புகுந்த பொழுது “தேடிய” சில உண்மைகள். மலையாளி எம் ஜி ராமச்சந்திரனின் அந்த “பிறப்பு சாட்சிப் பத்திரம்” இன்றும் கிடையாது.

    பல சிங்கள ” வீரர்களின்” வரலாறுகளைத் தோண்டி பார்த்த போது அவர்களில் பலருக்கு “சிங்கள” மூதாதையர்கள் இல்லை என்பது தெரிய வந்தது. இது பற்றி நான் எனது சிங்கள நண்பர்களிடம் கூறியுள்ளேன்.

    பிரபாகனின் மாமியாரின் மகள் “கேரளாவில்” உள்ள கண்ணூரில் இருக்கிறார். விருப்பமானவர்கள் சந்திக்கலாம்.

    Reply
  • nallurkantha
    nallurkantha

    Mr.Douglas has done huge service to the jaffn population.Lot of youths were provoded employment.People could meet him directly without agents.Money not involved.Speically when A9 road was closed the services the Jaffna people got was due to the efforts of Mr.D.Politically we dont need parties going by the name Ealam is suicidal we need honest politicians like him.He is one of the few survived the LTTE assasinations efforts.The elction result does not necessarily conclude jaffna people are still guided by TNA.But one thing is sure Section of TNA.Tamil media such as Veerakesari,Thinakural,Uthayan,Sudaroli,Sakti TV are really damaging the Tamil community.Additionally Tamil diaspora fuels the situation.The communal politics propagted by GG,Thanthai selva and Amior and co have influenced the Tamils in negative way.We are aware how our people,thousands are in western countries enjoying the asylum.To seek asylum you have to tell many many lies about yr own country.These are very complicated things.
    However I feel Mr.D should continue politics.

    Reply
  • BC
    BC

    பார்த்திபன், நந்தா, தகவலுக்கு நன்றி.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    சாந்தன்,
    ஆனந்தவிகடன் புலிகளின் இணையத்தளங்களில் இப்படிச் செய்திகள் வந்துள்ளன என்று தான் அதனை வெளியிட்டனவே தவிர, பிரபாகரன் உயிரோடுள்ளார் என ஆனந்தவிகடன் செய்தி போடவில்லை. பிரபாகரன் உயிரோடுள்ளதாக அடித்துக் கூறிய திருமாவளவன் போன்றவர்கள் கூட, இலங்கை சென்ற போது புலி ஆதவாளர்களிடம் பிரபாகரன் விடயமாகக் கேட்டுள்ளார். அடித்துக் கூறியவருக்கே தான் சொல்வது சொதப்பல் என்று புரிந்திருக்கின்றது.

    ஆனந்தவிகடனில் பிரபாகரனின் தந்தையார் தனக்கு என்ன உறவுமுறை என்பதையும், அவர்கள் இலங்கை சென்ற விபரங்களையும் சம்மந்தப்பட்ட கேரளப் பெண்ணே நேரடியாக சொன்ன கட்டுரை அது. அப்படியிருக்க ஊகங்களையும், உண்மைகளையும் எப்படி உங்களால் ஒப்பிட முடிந்தது.

    Reply
  • msri
    msri

    பிரபாகரன் மலையாளி என்பதற்கூடாக>இந்த சமூக ஆய்வாளர்கள> விஞ்ஞானிகள் என்ன சொல்ல வருகின்றார்கள். மலையாளி தலைமை தாங்கியதால்தான்> ஈழமும் இல்லை அவரும் இல்லாமல் போயுள்ளார். என்கின்றீர்களோ? அல்லது ஐயர் எழுதும் தொடர் கட்டுரைபோல் பிரபாகரனுக்கு கொலைதான் கலை என்று சொல்ல வருகின்றீர்களோ? அல்லது கலைஞரும் தன் அரசியல் கையாலாகாத்தனத்தால் எம்.ஜி.ஆரையும் மலையாளி என்றார். இப்பாணியா? அல்லது யாழ் மேலாதிக்க குறுகிய சாதிக் கண்ணோட்டமோ?

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    msri,
    இங்கு பிரபாகரனின் தகப்பன் எங்கிருந்து இலங்கை வந்தார் என்று கூறவேண்டியதன் நோக்கம், நீங்கள் கூறுவது போலல்ல. சமீப காலமாக பிரபாகரனின் தந்தையின் மரணத்தின் பின் சில பிழைப்புவாதிகள் பல புனைக்கதைகளை புனைந்து (ஏதோ வேலுப்பிள்ளை சோழ மன்னனின் படையெடுப்பில் வந்த மந்திரிகளின் வாரிசுகள் என்பது போல்) காசாக்க முனைகின்றர்கள். அதனை தெளிவுபடுத்த வேண்டியது உண்மைகள் தெரிந்த ஒவ்வொருவரின் கடமைகளாகும். மற்றும்படி பிரபாகரன் இலங்கைத் தமிழர்களின் சாபக்கேடு என்பதே தீர்க்கமான உண்மை.

    Reply
  • msri
    msri

    “எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு” இலங்கையில் தமிழ்மக்கள் பற்றிய முழுமையான வரலாறு எம்மிடம் இல்லை> பல விடயங்களைச் எழுந்தமானத்தில் சொல்லாம்.கல் தோன்றி மண் தோன்றா காலத்தது முன்குடி என்பது> அர்த்தமற்ற உணர்ச்சிவசப்படுத்தும் கோசமே. விஞ்ஞானபூர்வமாக பார்த்ததால் கல் மண் தோன்றாக்காலம் > உயிரினம் தோன்றாக் காலம். சிலபேர் தமிழினம் அவ்வளவு தொன்மையானது என்பதற்காகவே என்கின்றனர். இது கூட விஞ்ஞானபூர்வமாதல்ல. இந்நோக்கில் சமகால புலிகள்கூட பல புனைவுகள் செய்கின்றார்கள். இது தமிழ்மக்கள் மத்தியில் எடுபடாது. தமிழ் மக்கள பேரினவாத – புலி பயங்கரவாதத்தின் பலவற்றை பட்டறிந்துள்ளனர். இதில் நாடுகடந்த அரசு ஈழம் என்பவையும் >பல புனைவுகளும் நடைமுறைச் சாத்தியமற்ற ஓன்றே. இவற்றால் எம்மில் பலர் உணர்ச்சி வசப்படுகின்றோம். அதை பிரபாகரன் -பிரபாகரன் தந்தை நோக்கிய(மலையாளி) இப்பார்வைகள் குறுகிய சாதிக் கண்ணோட்டத்தையே நோக்கிச் செல்வதாகவே அமையும். புலிகளின் தவறுகளுக்காக> இத்தேர்வுகள் அவசியமற்றவையே!

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    ஆனந்த விகடனை அதன் ஆசிரியரே இவ்வளவு நம்புவாரோ தெரியாது! ஆனந்த விகடனில் பிரபாகரன் தமது உறவு என ஒருவர் அடித்துச் சொன்னால் அது உண்மையாகிவிடாது. அதேபோல ஆனந்த விகடனில் ….இப்படி இன்னோரன்ன கதைகளை பலர் ‘நேரடியாக’ வந்து சொல்லி உள்ளனர். அந்தவகையில் பார்த்தால் பார்த்திபன் சொல்வது உண்மை என நான் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

    சோசலிச சமத்துவக் கட்சி ஈ.பி.டி.பி யினர் ஊர்காவற்துறையில் தேர்தலின் பின்னர் மக்களைத் தாக்கியதாக சொல்லி இருக்கிறது. இவர்கள் வெளியிட்ட அறிக்கையில் மக்கள் மஹிந்தாவுக்கு வாக்களிக்காத கோபத்தினால் தாக்குதல் நடத்தியதாகவும் தாக்குதலின் பின்னர் மக்களின் கொந்தளிப்பைப்போக்க உள்ளூர் ஈ.பி.டி.பியினர் தாமது தாக்குதலுக்கு நகைப்புக்கிடமான ஒரு காரனத்தைச் சொன்னதாகவும் கூறி இருக்கின்றனர். அதாவது தாம் அவ்வாறு தாக்குதல் நடத்தாவிடில் கடற்படையினர் உங்களைச் சுட்டுக்கொல்ல திட்டமிட்டிருந்தனர். ஆனால் நான் முந்திக்கொண்டு உங்களைத்தாக்கி அவர்களைத்திசை திருப்பி விட்டோம் என!!

    கீழ்வரும் சுட்டியில் டி.பி.எஸ் ஜெயராஜின் வலையில் முழு அறிக்கையும்…transcurrents.com/tc/2010/02/sri_lankan_sep_condemns_epdp_t.html#more

    Reply
  • NANTHA
    NANTHA

    எம் ஜி இராமச்சந்திரன் தான் கண்டியில் பிறந்தவர் என்றே கூறியுள்ளார். கண்டி கச்சேரியில் அவருடைய பெயரில் பிறப்புச் சாட்சிப் பத்திரம் கிடையாது. அவருடைய முழுப்பெயர் ” மாத்தூர் கோபால மேனன் இராமச்சந்தர் ” என்பதாகும். தியாக ராஜ பாகவதரின் படங்களில் “இராமசந்தர்” என்றே அவர் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இலங்கை மண்ணில் நூற்றுக்கணக்கான வருடங்கள் “வாழ்ந்த” பரம்பரைகளை துரோகிகள் என்று கொன்று தள்ளிய “மலையாளி” பிரபாகரன் என்பதுதான் ஆதங்கப்பட வைக்கும் உண்மை. சிங்களம் என்று குதித்த பண்டாரநாயக்கா ஒரு தமிழ் “நீலப்பெருமாள்” பரம்பரை. ஜே ஆர் ஜெயவர்த்தனாவும் போர்த்துகீசரோடு வந்த மலையாள கூலிப்படை(LASCARINES) பரம்பரை.

    அரசியலில் திடீரென்று ” உணர்ச்சி” பொங்கும் சமாச்சாரங்களான “மொழி”, மதம்” என்பனவற்றை பற்றி பேசுபவர்களின் நோக்கங்கள் பற்றி எச்சரிக்கை தேவை. அவர்களில் பெரும்பாலானவர்கள் “தங்களின்” குடும்ப வாழ்வில் “சிறுபான்மை” என்ற மன வருத்தத்தில் இருந்து விடுபட “பெரும்பான்மை” மக்களின் மதம், மொழி என்பனவற்றை தங்கள் “ஆயுதங்களாக” உபயோகித்து “பெரியவர்கள்” ஆக முயற்சிப்பவர்கள் என்றே எண்ணுகிறேன்.

    Reply
  • BC
    BC

    மலையாளி எனபது குறுகிய சாதிக் கண்ணோட்டம் அல்ல. தமிழர்களை தமிழ் துரோகிகள் என்று கொன்று தள்ளியவர் ஒரு மலையாளி என்பதே கவனிக்க வேண்டியது.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    சாந்தன்,
    ஆனந்தவிகடனில் நேரடியாக ஒருவர் கொடுத்த கட்டுரை தங்களுக்கு சந்தேகத்திற்கிடமானது. ஆனால் கனடாவிலிருந்து ஊர்காவற்துறையில் நடந்தது பற்றி டி.பி.எஸ் ஜெயராஜ் எழுதினால், அது மட்டும் நம்பகமானது.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    வருகிற பின்னோட்டங்கள்- கருத்துக்கள் சிக்கலான பரினாமத்துக்குள் நுழைந்து கொண்டிருக்கிறது. இப்படியே போகுமானால் பொருள்செலவு அர்ப்பணிப்பு தியாகங்கள் இருந்தும் புலிகள் சென்றடைந்த இடத்தையே அடையமுடியும். இதை முற்போக்காக இனங்கண்ட தேசம்நெற் வாசகர்கள் விரும்பமாட்டார்கள் என நினைக்கிறேன். இந்த நவீனகாலத்தில் தேசம்நெற் வழிதிறந்து விட்டது சாதியை இல்லாது ஒழிப்பதற்கு. வளர்ப்பதற்கல்ல.
    பிரதேசவாதத்தை ஆய்வுசெய்வது முற்போக்கான சந்ததியிடம் இல்லாது ஒழிப்பதற்காக. திசை திரும்பி கருத்துக்கள் போகுமானால் இதில் பயன்
    பெறப்போகிறவர்கள் யாராக இருப்பார்கள்? நஷ்டம் நிச்சயம் தேசம்நெற் வாசகர்களுக்கே!.

    ஒரு பின்னோட்டம் வந்தது. குலத்தளவே ஆகுமாம் குணம் என்று. இந்த பழைமைவாதி எந்த குலத்தின் பெருமை கொண்டு புலம்பெயர் தேசத்தில் அகதி அந்தஸ்து எடுத்தாரோ? தெரியவில்லை. ஒருநாள் ஒருவாரம் ஒருமாதம் அல்ல முப்பது வருடங்கள் ஒன்றிக்கும் அதாவது ஒரு மக்களுக்கும் உதவாதவர்களாக வாழ்ந்து விட்டோம். இதுவே கவலைகளில் பெரும் கவலை. ஏனெனில் முப்பதுவருடங்கள் ஒருமனிதனின் அரைவாழ் காலங்கள் அல்லவா?. என்னிடம் எஞ்சியுள்ள கேள்வி இது தான். தமிழ்மக்களாகிய நாம் மற்றவர்களுக்கு பயன்யுள்ளவராக வாழப் போகிறோமா?. புலம்பெயர்தமிழர்கள் ஈழத்திற்கு-தமிழருக்கு ஏதாவது செய்யாது விட்டிருப்பார்களேயானால் அவர்கள் துன்பங்கள் வெகுவாக இல்லாதிருந்திருக்கும். நடந்தபிரச்சனைகள் எல்லாம் வங்கிக்கொள்ளை கொலைகாராக் கூட்டம் என்பதிலே முடிவடைந்திருக்கும். சில வேளைகளில் ஒருசில வருடங்கள். அவ்வளவோ தான்.

    பலஇனங்கள் பலமதங்களுடன் வாழப் பழகிய புலம்பெயர் தமிழ்மக்கள் எந்த காரணமும் கொண்டு சிங்களமக்களுடன் சேர்ந்துவாழ முடியாது எனகருத்துச் சொல்வது பச்சோந்தி கருத்தாகவே எனக்கு படுகிறது. “ஈழத்தில வாழ்பவர்களுக்கே ஈழத்து அரசியலையும் முடிவெடுக்கும் உரிமை வேண்டும். புலம்பெயர் தமிழர்கள் அல்ல”. இந்த உரிமைமையாவது அவர்களிடம் விட்டு விடுங்கள் எமதருமைத் தமிழர்களே!.. விரும்பினால் சேர்ந்துவாழ்வது பிரிந்த வாழ்வதைப்பற்றி சொல்லுங்கள். பிரிந்து வாழ்வதைப் பற்றி உங்களுக்கு சொல்வதற்கு எந்த அருகதையும் இல்லையென்பதையே கடந்தகாலங்கள் சொல்லி நிற்கிறது.

    Reply
  • msri
    msri

    பிரபாகரனது>புலிகளது> அரசியலை -கொலைகளை- மக்கள் விரோத பாசிச சர்வாதிகாரத்தை> அரசியல் தளத்தில் வைத்து விவாதியுங்கள். இதேபாங்கில் பார்த்தால் ஈழப்போராட்டத்திற்கு புறப்பட்ட சகல இயக்கங்களையும்> அதன் தலைவர்களையும்> குறுந்தேசிய இனவெறி- சாதியவெறிக் கண்ணோட்டத்திற்குள் உள்வாங்கி பற்பல முத்திரைகள் குத்தலாம். நாம் இப்போது அர்த்தமற்ற அவசியமற்ற விவாதங்களைச் செய்கின்றோம்.என்றே நான் நினைக்கின்றேன். அர்த்தமுள்ள ஆரோக்கியமான விமர்சனங்களுக்கு ஊடாக > பலதை இழந்து அரசியல் அநாதைகியுள்ள> எம்மக்களை- இழந்ததைப் பெற-அநாதைகள் அற்றவர்கள் ஆக்க ஆக்கபூர்வமானதை செய்வோம்.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    /…ஆனால் கனடாவிலிருந்து ஊர்காவற்துறையில் நடந்தது பற்றி டி.பி.எஸ் ஜெயராஜ் எழுதினால், அது மட்டும் நம்பகமானது…//

    பார்த்திபன்,
    நான் டி.பி.எஸ் எழுதியதாக ஒருபோதும் சொல்லவில்லை. மாறாக ஸ்ரீலங்காவில் இருந்து செயற்படும் சிறீலங்கா சமத்துவ கட்சி வெளியிட்ட அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கிறதாகவும் அதனை நீங்கள் டி.பி.எஸ் வெளியிடும் இணையத்திலும் பார்க்கலாம் எனவே குறிப்பிட்டிருந்தேன்.

    Reply
  • NANTHA
    NANTHA

    நான் பிரபாகரனை “மலையாளி” என்று குறிப்பிட்டது சில வாசகர்களுக்குப் பிடிக்காமல் இருக்கலாம். இலங்கை தமிழர்கள் கார்ல் மார்க்சின் “தொழிலாளர் சர்வதேசியம்” என்ற இன மத மொழி வேறுபாடற்ற சமுதாயத்தை படைக்க ஆசை கொண்டவர்கள் அல்ல. “தமிழ்” என்ற வட்டத்துக்குள்தான் நிற்கிறார்கள். எனவேதான் “தமிழரா இல்லையா” என்ற ஆராச்சியும் தேவைப்படுகிறது.

    “தமிழ்” என்று தொடங்கி தமிழர்களையே கொடுமைப்படுத்தி இன்று இலங்கையில் தமிழர்களை “தலையில்லா /தலைமை இல்லா” என ஆக்கிய பெருமை இந்த “தமிழ்” போராட்டக்காரர்களையே சேரும். இப்போது “தமிழ் பிரச்சனை” என்பது என்ன என்பது எவராலும் வரைவு செய்ய முடியாதுள்ளது. “தனி நாடு” என்பது நடக்க முடியாத ஒன்றாகிவிட்டது.

    அந்நியர்களோடு சேர்ந்து எங்கள் பிறந்த நாட்டை நாசமாக்க துணை போன “வந்தான் வரத்தான்” ஆசாமிகளின் தமிழ் பற்றிய வீரப் பிரதாபங்கள் சலிப்பானவை. இவர்கள் அந்த “அந்நிய இலாப நோக்கிகளை” வெளிநாடுகள் என்றுதான் குறிப்பிடுவார்கள். வெளிநாட்டானுக்கு “தமிழ் மொழி” மேல் என்ன கடும் காதலா அல்லது குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பதா என்பதை நாங்கள் உணர வேண்டும்.

    Reply
  • thaya
    thaya

    ஈ.பி.டி.பி யை நியாயப்படுத்த வேண்டிய தேவை இல்லை. தீவகத்தில் மக்கள் தாக்கப்பட்டது என்ற செய்தியில் உண்மை இல்லை. நானும் விசாரித்துப்பாரத்தேன். கனடா டி.பி.எஸ் Nஐயராஸ் அவிட்டு விட்டிருக்கும் சுத்தப்பொய் அது.

    Reply
  • விக்கி
    விக்கி

    ஊர்காவற்துறையில் EPDP இன் குண்டர் தாக்குதலை இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி கண்டனம் செய்கின்றது
    சோசலிச சமத்துவக் கட்சி 1 பெப்பிரவரி 2010

    கட்டுரை முழுமையாக வாசிப்பதற்கு:
    http://www.socialequality.com/srilanka/epdp-f01-ta.shtml

    Reply
  • NANTHA
    NANTHA

    தயா:
    நீங்கள் டி பி எஸ் ஜெயராஜ் பற்றி குறிப்பிட்டது உண்மை என்றே நம்புகிறேன். அந்த செய்தியை வெளியிட்ட டி பீ எஸ் ஜெயராஜின் இணையத்தளத்துக்கு நீங்கள் “விமர்சனங்கள்” அனுப்பினால் அவை பிரசுரமாகாது என்பதை உணர வேண்டும். கேட்டையில் பிறந்த பிரபாகரன் கோட்டையை பிடிப்பார் என்று முன்னர் எழுதி “புலிகளுக்கு” வக்காலத்து வாங்கியவர். புலிக் கோஷ்டிகள் அவரின் காலை உடைத்த சேதியை கூட தனது மஞ்சரியில் பிரசுரிக்காது விட்டவர்.

    டி பி எஸ்ஸின் எழுத்துக்கள் பற்றி அதிகம் “மண்டையை” உடைக்க தேவையில்லை.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //…..கனடா டி.பி.எஸ் Nஐயராஸ் அவிட்டு விட்டிருக்கும் சுத்தப்பொய் அது…./thaya

    சோசலிச சமத்துவக் கட்சியின் இணையத்தளத்தில் சென்று பாருங்கள்.
    http://wsws.org/articles/2000/may2000/epdp-m05.shtml

    அவர்களுக்கு நீங்கள் விசாரித்ததையும் உங்கள் மறுப்பையும் அனுப்பி வையுங்கள். அத்துடன் டி.பி.எஸ் இணையத்தளத்துக்கும் பின்னூட்டம் இடுங்கள். மக்கள் அறிந்து கொள்ளட்டும்

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //….கேட்டையில் பிறந்த பிரபாகரன் கோட்டையை பிடிப்பார் என்று முன்னர் எழுதி “புலிகளுக்கு” வக்காலத்து வாங்கியவர்.புலிக் கோஷ்டிகள் அவரின் காலை உடைத்த சேதியை கூட தனது மஞ்சரியில் பிரசுரிக்காது விட்டவர்..//

    என்ன சொல்லுறியள்? டி.பி.எஸ் புலி தனது காலை அடிச்சு உடைச்சது, தன்ர பேப்பரை தடைசெய்து தன்னை வெல்ஃபெயர் லைனில நிக்க வச்சது எண்டெல்லே லோக்கல் பேப்பர் தொடங்கி பி.பி.சி வரை அழுகிறார். உண்ணான தெரிஞ்சுதான் எழுதுறியளோ இல்லாட்டி நீங்கள் வேற யாரோ டி.பி.எஸ் பற்றிப்பேசுறியள் போலகிடக்கு!

    Reply
  • NANTHA
    NANTHA

    சாந்தன்:
    கால் போன டி பி எஸ் ஒருதரமும் தனது பத்திரிகையில் தனக்கு கால் உடைத்தவர்கள் பற்றி எழுதியது கிடையாது. சிங்களவர்களின் பத்திரிகையில் இவரின் கால் உடைப்பு பற்றி வந்த செய்தியை ஆதாரம் காட்டி மொழி பெயர்த்த செய்தியை பிரசுரித்தார்.

    அப்படி தனக்கு கால் உடைத்தவர்கள் புலிகள் என்று பிரசுரித்து இருந்தால், அதாவது தனது பத்திரிகையில், தயவு செய்து எந்த இதழ் என்று கூற முடியுமா?

    இவர் வெல்பெயர் லைனில் நிற்க முடியாது. ஏனென்றால் இவரின் மனைவி இவரைவிட அதிகம் சம்பாதிக்கிறார்

    Reply
  • thaya
    thaya

    டி.பி.எஸ் என்பவர் இன்றள்ள ஊடகவியலாளர்களில் சிறந்த கற்பனாவாதியும்> மிக மோசமான திரிபுவாதியும் ஆவார். ஈ.பி.டி.பி மற்றும் அது போன்ற அமைப்புக்களை திட்டுவதன் மூலம் புலித்தரப்பிடம் இருந்து மறுபடியும் தனக்கு ஆபத்து வந்து விடக்கூடாது என்று கருதுபவர். இதன் முலம் தன்னை நடுநிலை வாதியாக காட்டலும் முயற்சிப்பவர். இது தவிர சோசலிச சமத்துவக்கட்சி என்ற ஒன்று நாட்டில் இல்லை. நான்காம் அகிலக்காரர் என்று சில தோழர்கள் புலம்பெயர் நாடுகளில் உள்ளார்கள். குறிப்பாக பரிஸில் உள்ளார்கள். இவர்களின் நோக்கு ஈ.பி.டி.பி போன்ற அமைபபுகளை திட்டுவதன் மூலம் புலித்தரப்பு ஆதரவை தாம் பெற்றுக்கொள்ளலாம் என்பது தான். இதை தவிர எதை சொல்ல முடியும். தீவகத்தில் கேட்டுப் பார்த்ததில் அப்படி ஈ.பி.டி.பி செய்ததாக சொல்லப்பட்டது பொய்யான தகவல் என்றே சொல்ல்பட்டது.

    Reply
  • thaya
    thaya

    ஈ.பி.டி.பி கட்சிக்காரர் தொடர்ந்து தங்கள் மத்தியில் கூட்டங்களை நடத்தி வருவதாகவும்> தேர்தல் முடிந்தவுடன் நடந்த கூட்டத்திலும் வைத்து தங்களிடம் கேள்வி கேட்டதாகவும்> தாம் எதிர்பார்த்த அளவிற்கு மக்கள் வாக்களிக்வில்லை என்றும்> இதனால் உங்களுக்கு என்ன இலாபம் என்று தம்மிடம் கேள்வி மட்டும் கேட்டதாகவும் ஊர்காவற்றுறை அம்பிகை நகர் மக்கள் கூறுகின்றார்கள். தாம் ஈ.பி.டி.பி யால் தாக்கப்பட்ட செய்தியில் உண்மை இல்லை என்றும். இன்றைய தினமும் அம்பிகை நகரில் ஈ.பி.டி.பி பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தியிருப்பதாகவும்> அந்த கிராமத்து சன சமூக நிலைய செயலாளர் கூறியதை இங்கு பதிவு செய்ய விரும்புகின்றேன். அது தவிர இந்த பின்னூட்டங்கள் திசை மாறி எங்கோ செல்கின்றன. இருந்தாலும் இது போன்ற விமர்சனங்களும் வருவது நல்ல அம்சமாகும்.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    நந்தா, டி.பி.எஸ் ஸ்ரீலங்கா சமத்துவக்கட்சியின் அறிக்கையை தனது இணையத்தில் வெளியிட்டிருந்தார். அவரின் இணையம் சென்று பர்ப்பீர்களாயின் கடைந்தெடுத்த சிங்கள் இனவாதிகள், இந்திய ஆய்வாளர்கள். ரோ உளவாளிகள், போன்றவர்களின் அறிக்கைகளைக்கூட பிரசுரம் செய்திருப்பதைக் காண்பீர்கள். அவற்றில் உள்ள பின்னூட்டங்களில் கூட இனவாதம் கொப்பளிக்கும் கருத்துகள் இருப்பதையும் காண்பீர்கள்.

    ஆனாலும் உங்கள் கேள்விக்கு பதிலளிக்க கடமைப்பட்டிருக்கிறேன். டி.பி.எஸ் மஞசரியில் என்ன எழுதினார் என்ன எழுதவில்லை என எனக்குத் தெரியாது. ஏனெனில் மஞ்சரி இணையத்தில் வரவில்லை. நான் மஞ்சரி வெளிவந்த நாட்டில் வாழ்பவனுமல்ல. ஆனால் டி.பி.எஸ் இன் மஞ்சரி புலிகளால் ‘தடை’ செய்யப்பட்டதாகவும் தனது காலை அடித்து முறித்தவர்கள் புலிகள் எனவும் பல் இடங்களில் புலிகளுக்கெதிரான பிரச்சாரங்களில் முன்னின்று சொன்னவர் டி.பி.எஸ். இதனை கனடிய ஊடகங்கள், மனித உரிமை அமைப்புகள் பதிவு செய்துள்ளனர். அண்மையில் கனடாவில் புலிகள் மீதான தடை/த்டர்ந்த விவாதங்களில் டி.பி.எஸ் நிகழ்வு பிரதானமாக்கப்பட்டது. மேலும் கனடிய வானொலி/தொலைக்காட்சி நிலையத்தில் இணைப்பில் புலிகள் ‘அரியண்டம் பிடித்தவர்கள்’ எனக் கூறி இருப்பதையும் காணலாம். கீழே சுட்டி இருக்கிறது.
    http://www.cbc.ca/toronto/features/whose_truth/never.html

    டி.பி.எஸ் தன்னை வெல்ஃபெயர் லைனில் நிக்கவைத்து விடார்கள் என மஞ்சரி மூடப்பட்ட போது தனது நண்பர்களுக்கு வேதனையின் வெளிப்பாடாக சொல்லபட்ட கருத்தே அன்றி உண்மை நிலை அல்ல. இதனை நானும் அதே கருத்திலேயே குறிப்பிட்டிருந்தேன். நீங்கள் ‘லிற்றரல் மீனிங்’ ஆக எடுத்து விட்டீர்கள் போல் இருக்கிறது.

    நீங்கள் இங்கே எழுதிய எதிர்ப்புகளை டி.பி.எஸ் இன் தளத்தில் ஏன் பதிவு செய்யவில்லை. ஏன் ஒரிஜினல் அறிக்கை விட்ட சோசலிச இணையத்தில் பதியவில்லை? அதற்காகவே சுட்டி கொடுத்திருந்தேனே?

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //..இது தவிர சோசலிச சமத்துவக்கட்சி என்ற ஒன்று நாட்டில் இல்லை….//

    1968 ஆம் ஆண்டு லங்கா சமசமாஜக்கட்சியின் இளஞர் அணியில் இருந்து பிரிந்த கட்சி கீர்த்தி பாலசூரியாவினால் தோற்றுவிக்கப்பட்டது. அவரின் இறப்பின் பின்னர் விஜய் டயஸ் தலைமயேற்றார். அண்மையில் 2005 இல்கூட அவர் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக நின்றார்.
    மேலும் இவர்கள் எல்.ரி.ரி.யின் தமிழீழக்கொள்கையை நேரடியாக விமர்சிப்பவர்கள். ‘சமாதான காலத்தில்’ எல்.ரி.ரி.யை கடுமையாக விமர்சித்து பல அறிக்கைகலை விட்டவர்கள். போலி ‘புரட்சி, ஜனநாயகம்’ காரருக்கு இவர்களால் சிக்கல் தான் என்பது உண்மை!

    Reply
  • chandran.raja
    chandran.raja

    // எல்.ரி.ரி.யை கடுமையாக விமர்சித்து பல அறிக்கைகளை விட்டவர்கள்// சாந்தன்.
    அறிக்கைகள் யாராலும் விடக்கூடியதே!. யதார்தத்திற்கு இலங்கைவாழ் மக்களின் வாழ்வுக்கல்லவா? அவர்கள் அறிக்கை ஒத்துப்போக வேண்டும் டக்கிளஸ் தேவானந்தா சித்தார்தன் சிறீதரன் ஆனந்தசங்கரி கருணா விட்ட அறிக்கைகளை விடவா? சமத்துவக் கட்சியின் அறிக்கை செய்துவிட்டது??. நாண்காம் அகிலத்தின் சர்வதேசிய ரொக்சியவாதிகளின் ஒருகிளையே இலங்கையில்லுள்ள சமத்துவக்கட்சி. இன்று எத்தனைவிதமான ரொக்சியகட்சி இருக்கிறது என்பதை முதல் சாந்தன் புரிந்துகொள்ள வேண்டும்.

    விஜயடயஸ் ஜனாதிபதி தேர்தலிலும் நின்றிருக்கிறார். அவர் எத்தனை வாக்குகளை எடுத்தார் என்பது இன்னும் அவர்கள் இணையத்தளத்தில் வெளியிடவில்லை. முடிந்தால் சிவாஜிலிங்கம் விக்கிரபாகு கருணரட்னா எடுத்தவாக்குகளை விட குறைவானதே என்பது எனது அபிப்பிராயம். இதுவே நிலை. உலகயுத்தத்தில் இருந்து மக்களை பாதுகாத்து மானிடத்திற்கு ஒருவேலைத் திட்டத்தை ஒருவேலைத் திட்டத்தை வைத்திருக்கிறதென்றால் அது நான்காம்அகிலம் மட்டுமே! இத்துடன் அதை நிறுத்திக் கொள்ளுவோம்.

    ஐரோப்பா அமெரிக்கா கனடா போன்ற நாடுகளில்லிருந்து புலிக்குபணம் சேர்க்க கொப்பியோட திரிந்தவர்கள் ஆதரவு வழங்கியவர்கள் பெரும்பாலனவர்கள் ஈழத்தில் வாழும் சொந்த இனத்திற்கு அழிவைத்தேடிக் கொடுத்தவர்கள் இன்று தாங்கள் புலிகள் என்று சொல்வதில்லை. தமிழன் என்ற “வக்கிரபுத்தி”யையும் விடுவதில்லை. அதில் ஒருவரே சாந்தன் என்பவரும்.இவர் தேசம்நெற்றுக்கு நேற்றே இன்றோ புதிதாக வந்தவர் அல்ல. இவர் இன்று வர்க்கப் போரராட்டத்திற்கு வக்காளத்து வாங்கிறார் என்றால் இதற்குள் உள்நோக்கம் ஒன்று இருக்கிறது. இவரின் நோக்கம் டக்கிளஸ் தேவானந்தா மகிந்தா ராஜபக்சா போன்றவர்களுக்கு மட்டுமல்லாமல் தேசம்நெற்றின் சிறந்த கருத்தாளர் ஆகிய மாயா நந்தா பார்த்திபன் போன்றவர்களுக்கு சேறடித்து திசைதிருப்பி போவதே வேறுவார்த்தைகளில் சென்னால் மேற்குலகத்திற்கு வால்பிடித்து தமிழ்மக்களை மேலும் மடமைத்தனத்தில் விழ்த்துவதே!. சாந்தன் அவர்களே! புலிகளுக்கெதிராக புலி அரசியல்கெதிராக எத்தனை பின்னோட்டங்களை இந்த “தேசம்நெற்றில்” விட்டிருக்கிறீர்கள்?. உங்களால் ஒன்றையாவது உதாரணம் காட்டமுடியுமா? அதில்லிருந்து பின் தொடருவோம்.

    Reply
  • NANTHA
    NANTHA

    சாந்தன்:
    டி பி எஸ் நடத்தும் இணையத்தளத்தில் அவரின் “தாளத்துக்கு துள்ளாதவர்களின்” எழுத்துக்கள் பிரசுரிக்கப்படுவதில்லை. “பத்திரிக்கை சுதந்திரம், கருத்து சுதந்திரம்” என்று ஒரு இன்டர் நாஷனல் புலுடாவினூடு ஜெயராஜா நிறைவேற்றும் “பிரச்சார” நாடகம் எப்போதும் யாழ்ப்பணத்தில் உள்ள ஒரு சிறு குழுவின் நன்மைகளை மனதில் கொண்டதே ஆகும்.

    “மஞ்சரி” மாத்திரமல்ல கனடாவில் வெளிவரும் சகல பத்திரிக்கை என்ற பெயர் பெற்ற குப்பைகள் அனைத்தையும் வாசிக்கும் ஒருவன் என்ற வகையில் ஜெயராஜா “ஒரு போதும்” தனது மஞ்சரியில் தனது கால் உடைப்பு பற்றி செய்தியோ விமர்சனமோ செய்தது கிடையாது.

    அது அவருக்கு புலிகள் மீது இப்போதுமுள்ள அச்சம் அல்லது அவருடைய “கத்தோலிக்க” மதவாதிகளின் “புலிக் கூட்டணி” காரணமாக இருக்கலாம். அவர் சில வேளைகளில் “புலிகளின்” உள்வீட்டு இரகசியங்கள்” என்று பெரும் கட்டுரைகளை பிரசுரம் செய்து பல “உண்மைகளை” மறைக்க முற்பட்டுள்ளார்.

    “கே.பி. என்ற பத்மநாதன் ஒரு மறவர் குலம், பிரபாகரனின் திருமேனியார் கதைகள்” என்பன குறிப்பிடத்தக்கவை மாத்திரமல்ல மற்றவர்களுக்கு “எதுவும் தெரியாது” என்ற நினைப்பில் எழுதப்பட்டவை.

    “நந்தா”வுக்கு ஜெயராஜின் எந்த இணையத்தளத்துக்கும் “அனுமதி” இல்லை என்பது இன்னொரு முக்கியமான விஷயம்.

    முடிந்தால் ஜெயராஜ் “தேசம் நெட்”இல் பதிலளிக்கட்டும்.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //…சாந்தன் அவர்களே! புலிகளுக்கெதிராக புலி அரசியல்கெதிராக எத்தனை பின்னோட்டங்களை இந்த “தேசம்நெற்றில்” விட்டிருக்கிறீர்கள்?. உங்களால் ஒன்றையாவது உதாரணம் காட்டமுடியுமா? …// இல்லைக் காட்ட மாட்டேன். காட்டவும் என்னால் முடியாது. ஏனெனில் எனது மக்களுக்காகப் போராடிய ஒருவனை எனது நலன்களுக்காக நான் காட்டிக்கொடுப்பதில்லை. அதுவே நேற்று நடந்த தேர்தல் முடிவுகளிலு தமிழ் மக்கள் காட்டினர். ஆனானப்பட்ட சம்பந்தனின் சொல்லையே அவர்கள் கேட்கவில்லை!

    நந்தாவுக்கு மட்டுமல்ல சாந்தனுக்கும் டி.பி.எஸ் இணைய்த்தளத்தில் அனுமதி இல்லை என்பதை தாழ்மையுடன் தெரிவிக்கிறேன். ஆனாலும் அவர் தனது கருத்துகளைச் சொல்லுவதற்கும், மற்ரையோர் கருத்துகளைச் சொல்லுவதற்கும் கொடுக்கும் இடம் தேசம்நெற் போன்றதே என்பது எனது கருத்து!

    Reply
  • விக்கி
    விக்கி

    சோசலிச சமத்துவக் கட்சியின் வேட்பாளர் விஜே டயசுக்கு ஒரு சிறிய ஆனால் முக்கியத்துவம் வாய்ந்த வாக்குகள் கிடைத்துள்ளன. 2005 ஜனாதிபதி தேர்தலில் கிடைத்ததை விட இம்முறை கூடுதலாக 4,195 வாக்குகள் கிடைத்துள்ளன. கட்சி நாட்டின் 22 தேர்தல் மாவட்டங்களிலும் மற்றும் தேர்தல் தொகுதிகளில் அனைத்திலும் வாக்குகளைப் பெற்றுள்ளது.

    குறிப்பிடத்தக்க வகையில், பிரதானமாக தமிழ் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் முக்கியமான தட்டினரிடம் இருந்து வடக்கில் யாழ்ப்பாண மாவட்டத்தில் சோசலிச சமத்துவக் கட்சி 657 வாக்குகளை பெற்றுள்ளது. தொழிற்சங்கங்களின் காட்டிக்கொடுப்பு மீதான சோசலிச சமத்துவக் கட்சியின் இடையராத எதிர்ப்பின் காரணமாக பெருமளவான பெருந்தோட்ட தொழிலாளர்கள் வாழும் நுவரெலியா மாவட்டத்தில் 310 வாக்குகளைப் பெற்றுள்ளது.
    socialequality.com/srilanka/slel-j28-ta.shtml

    Reply
  • chandran.raja
    chandran.raja

    சாந்தன்! டி.பி.எஸ் இணையத்தளத்தைப் பற்றி எனக்கு தெரியாது. இதைப்பற்றி கருத்துச் சொல்வதற்கு எனக்கு எந்த அருகதையும் இல்லை. ஆனால் மற்றவர்களின் கருத்தை சொல்வதற்கு இடம் கொடுக்கும் தேசம்நெற் போன்றதே என்ற கருத்து தவறானது. தேசம்நெற் யாருடைய கருத்தை தடுத்தி நிறுத்தியிருக்கிறது? சொன்னால் நானும் விழிப்படைவேன்.அப்படியிருக்கும் போது டி.பி.எஸ் இணையத்தளத்தை எப்படி தேசம்நெற்றுடன் ஒப்பிடமுடியும்?. சுகந்திரமாக செயல்படுவதால் மட்டும் தானே! வித்தியாசமான கருத்துக்களை கொண்டவர்களாக நாம் இருந்தும் உண்மையை தேடி எம்மால் பயணிக்க முடிகிறது.

    //சம்பந்தன் சொல்லையே அவர்கள் கேட்கவில்லை//
    சம்பந்தன் சொல்லுகிறார் தமிழ்மக்கள் தமது சொல்லுக்கு மதிப்புப்பளித்து வாக்குவழங்கியது நன்றி. நீங்கள் எதிர்மறையாக அல்லவா? சொல்லுகிறீர்கள்.
    //எனதுமக்களுக்காக போராடிய ஒருவனை எனது நலன்களுக்காக நான் காட்டிக் கொடுப்பதில்லை// இங்குதான் முழுச்சுயரூபமும் புலப்படுகிறது. இங்கு கருத்துச்சொல்ல வருபவர்கள் எல்லோரும் தங்கள் நலனுக்காகவா கருத்துச் சொல்லுகிறார்கள்?. தமது நாட்டு நலனுக்காகவோ அங்கு வாழும் மக்களின் நலனுக்காகவோ இல்லை என்பது உங்கள் கருத்தா? இங்குதான் முரண்பாடே ஆரம்பமாகிறது

    புலிகள் எப்பவும் தமிழ்மக்களின் நலனுக்காகப் போராடவில்லை. பதினாறு வயதில் (பஸ்)பொதுச்சொத்தை கொளுத்தியதும் பதின்ஏழுவயதில் கொலைசெய்யப் புறப்பட்டதும் கடந்தகால எமது தமிழ் தலைமைகள் செய்த தவறுகளாலும் கொலைகார கும்பலின் பழக்க தோஷத்தாலுமே! .பிரபாகரனைப் போல் பல கிறிமினல் காடையர்கள் சிங்களப் பிரதேசத்திலும் தோன்றி மறைந்திருக்கிறார்கள். பிரபாகரனுக்கு அரசியல் அந்தஸ்துகொடுத்து தேசியத்தலைவர்ராக்கியதும் தமிழ்மக்கள் முஸ்லீம்மக்கள் கிராமப்புறத்து ஏழைகள் நீண்டகால துன்பங்களை
    சந்திக்க வேண்டி வந்ததிற்கும் முழுப்பொறுப்பு ஏற்கவேண்டியவர்கள் புலம்பெயர் புலிப்பினாமிகளும் அதன் ஆதரவாளர்களுமே!. இதுவே எமக்கு கிடைககும் விடை. உங்கள் பதிவுக்கு நன்றி.நேற்றை கருத்தையே இன்றும் நீங்கள் வைத்திருப்பீர்களேயானல் தமிழ்மக்கள் மேலும் துன்பத்திற்கே ஆழ்ளாகுவார்கள். அது உங்களுக்கு நலன்னாகவோ இன்பமாகவோ இருக்கலாம்.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    விக்கி! உங்கள் பதிவுக்கு நன்றி. முக்கியத்துவம் வாய்ந்த வாக்குகள் என்பதிலும் எனக்கு முழு உடன்பாடே!. சர்வதேச தொழிலாளிவர்க்கம் பலம் பெறட்டும். வாழ்த்துக்கள்!!.

    Reply
  • DEMOCRACY
    DEMOCRACY

    /“கே.பி. என்ற பத்மநாதன் ஒரு மறவர் குலம், பிரபாகரனின் திருமேனியார் கதைகள்” என்பன குறிப்பிடத்தக்கவை மாத்திரமல்ல மற்றவர்களுக்கு “எதுவும் தெரியாது” என்ற நினைப்பில் எழுதப்பட்டவை./-நந்தா!, இததகைய குழப்பத்திலும் நீங்கள், சரியாக சிந்திக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்!. கனடாவில், சீக்கியர்கள் 70 களில் குடியேறுவதற்கு முன்பாகவே, என்னுடைய சித்தப்பா போன்றவர்கள், பொறியியலாளர்களாக சென்று, அவர் மூலம் நிறைய பேர் தற்போது, பெரும்பாலும் பொறியியலாளர்களாக (மருத்துவர்கள் குறைவு) குடியேறியுள்ள்னர். அவர்கள் கருத்துப்படி, அங்குள்ள இலங்கைத் தமிழர்கள் சிங்களவ்ர்களுக்கு எதிரான எதிர்ப்புக்களை ஒருவித “இந்திய எதிர்ப்பு கோணத்தில்” கையாள விரும்புகிறார்கள்!. இது ஒரு “சீக்கியர் பிரஸ்பெக்டிவ்”. இதற்கு காரணம், இலங்கைத் தமிழர்களின் “அக்கெளண்டண்ட்” பிண்ணனி சில “முதலீட்டுமுறை தகவல்களை”, சில அஜெண்டாவுகளுக்காக தமிழரிடையே பரப்பி வருவதுதான். நீங்கள் கூறிய “நடிகை ரம்பாவுக்கு ஒரு கோடி ரூபாய் மோதிரம்” என்பதும் இத்தகையதே!.

    இந்திய தாதா தாவுப் இப்ராஹிமும் நடிகைகள் பூஜாபட், மந்தாகிணி போன்றவர்களை இப்படிதான் செய்தார்கள். பல பிரச்சனைகளுக்கு ஆப்கானிஸ்தான் மூலம் உள்ளது என்று சிலர் சந்தேகம் கொள்கின்றனர். மலேஷியாவில் சீக்கியர் (இந்திய அடையாளம் என்ற போர்வையில்)செல்வாக்கு மிகுந்த?, மலேஷிய இந்திய காங்கிரஸ் தலைவர் டத்தோ சாமிவேலுவின் தறுதலை மகன் வால்பாரியின் “மைக்கா ஹோல்டிங்கும்” இத்தகைய “முதலீட்டு அறிவுரைக்கு” ஆட்ப்பட்டதே!. “ஹோல்டின் கம்பெனி” என்பது எத்தகைய முட்டாளும், உற்ப்பத்தி பொருள்களின் மீது தொழில்நுட்ப அறிவோ தொடர்போ இல்லாமல் அந்த கம்பெனியின் முதலாளியாகலாம் என்ற “முதலீட்டு வழிமுறை”. இது பணம் என்ற சொல்லாடலின் அர்த்தத்தை இல்லாமல் செய்துவிடும். பல விளக்கங்களை கொடுப்பதை பின்னூட்ட நோக்கம் கருதி குறைத்துக் கொள்கிறேன்!. ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான எல்லையை தளமாக கொண்ட லக்ஷர் இ தாய்பா என்ற அமைப்பு, முஸ்லீம் மதத்தைவிட, “இந்திய எதிர்ப்பு மற்றும் பஞ்சாப்”பை தளமாக கொண்டது. “மறவர், திப்புசுல்தான், புலி, பாகாஜெட்டின்” போன்றவற்றைப் பற்றியும், கார்த்திகேசு சிவத்தம்பியின் ஆராய்ச்சிப் பற்றியும், உலக செம்மொழி மாநாடு பற்றியும், நான் ஏற்கனவே எழுதிவிட்டேன்!. இவைகள் ஒரு “இந்திய பேரோனோயா” என்பதைக் காட்டிலும், இன்னும் சிறிது கலத்தில், விஷயங்கள் சரியாக “அன்போல்ட்” ஆகும் போது, யாருடைய நலன்களை இவைகள் காக்கும், யாருடைய வாழ்க்கைகளை இவைகள் பாதிக்கும் என்பது பலருக்கு தெளிவாகவே தெரிய வரும்!.

    Reply
  • BC
    BC

    //நேற்று நடந்த தேர்தல் முடிவுகளிலு தமிழ் மக்கள் காட்டினர். ஆனானப்பட்ட சம்பந்தனின் சொல்லையே அவர்கள் கேட்கவில்லை!//

    அப்போ யாழில் தமிழ் மக்களை தலைவர் சரத்திற்கு வாக்களிக்காமல் செய்வதற்காக குண்டு வெடிப்புகள் நிகழ்த்தி அரசு பயமுறுத்தியதாக புலிகள் சொன்னது வழமைபோல் உண்மையல்ல.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    //இல்லைக் காட்ட மாட்டேன். காட்டவும் என்னால் முடியாது. ஏனெனில் எனது மக்களுக்காகப் போராடிய ஒருவனை எனது நலன்களுக்காக நான் காட்டிக்கொடுப்பதில்லை. – சாந்தன் //

    இங்கே தான் உங்கள் சுயரூபம் தெரிகின்றது. புலிகள் மக்களுக்காகவா போராடினார்கள், என்பதை அந்த வன்னி மக்களிடம் கேளுங்கள். கதைகதையாக அவர்கள் பட்ட துன்பங்களை அடுக்கிக் கொண்டே போகின்றார்கள். புலிகளின் தவறுகளை ஒத்துக் கொண்டால், வெளிநாடுகளில் பணம் சுருட்ட முடியாதென்று வேண்டுமானால் உண்மையைச் சொல்லுங்கள். அதைவிடுத்து அனுதாபி வேடம் போடாதீர்கள்.

    Reply
  • NANTHA
    NANTHA

    // அப்படியிருக்கும் போது டி.பி.எஸ் இணையத்தளத்தை எப்படி தேசம்நெற்றுடன் ஒப்பிடமுடியும்?. சுதந்திரமாக செயல்படுவதால் மட்டும் தானே! வித்தியாசமான கருத்துக்களை கொண்டவர்களாக நாம் இருந்தும் உண்மையை தேடி எம்மால் பயணிக்க முடிகிறது.//

    நன்றி சந்திரன்.ராஜா. எனக்கும் உள்ளது அதே கருத்துத்தான் என்பதை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

    பத்திரிகைகள் மேற்கு நாட்டின் “ஜனநாயக” பாரம்பரியங்கள்”. இலங்கையர்களுக்கு பத்திரிகைகள் “வெறும்” பிரச்சார ஊடகங்கள். அதன் விளைவுகள் எப்போதும் நாம் பின்பற்றும் “மேற்குநாட்டு ஜனநாயக” முறைமைகளை எப்போதும் பாதிக்கும் என்பதே. “வாக்குரிமை, பேச்சு சுதந்திரம்” என்பன எங்களுக்கு 1948 இன் பின்னர் கிடைத்தவை. அவற்றின் “பலத்தை” நாம் பல தடவைகளில் உபயோகிக்க தவறியுள்ளோம். இன்றும் அது தொடர் கதையாகவே உள்ளது.

    புலிகள் தமிழ் மக்களுக்காக போராடினார்கள் என்று சொல்வது பொருத்தமில்லாத ஒன்று. புலிகள் “தமிழர்களை” முகம் தெரியாத “அன்னியர்களுக்காக” உபயோகித்தார்கள் என்றே நம்புகிறேன். கடைசி நேரத்தில் “அமெரிக்க” ஹெலிகொப்டர் அனுப்பும் என்று புலிகள் எதிர்பார்த்தது எப்படி “தமிழர்களின்” நலன் பற்றியதாக இருக்கும்? அமெரிக்க வால்களான யு என் பி யுடன் காதலி, வைப்பாட்டி சிநேகங்களை பேணிய புலிகள் “எப்படி” தமிழ் மக்களுக்காக போராட முடியும்? இறுதியில் “புலிகள் எவரையும் கொலை செய்யலாம், கொள்ளை அடிக்கலாம், கப்பம் கேட்கலாம், ” என்று ரணில் விக்ரமசிங்க “புலிகளுக்கு” அளித்த” சமாதானம் தமிழர்களின் நலன்கள் பற்றியதா? A-9 நெடுஞ்சாலையில் பயணித்த தமிழர்களிடம் “கோடிக்” கணக்கில் “கப்பம் வசூலித்தது அந்த “சமாதான” ஒப்பந்தத்தில் இல்லாத ஒன்று. எதோ ஒரு இணையத் தளத்தில் அப்போது A-9 HIWAY IS “KAPPANG HIWAY” என்று எழுதப்பட்டது. இந்த கப்பம் வசூலிப்பை எந்த தமிழர் போராட்டத்தில் சேர்ப்பது?

    தமிழர்களிடையே இருந்த “மனிதம்”, “சுதந்திரம்” என்பவற்றை முற்று முழுதாக குழி தோண்டி புதைத்தவர்கள் புலிகள் என்பதில் சந்தேகம் இல்லை.

    DEMOCRACY:
    சீக்கியர்களும் சீனர்களும் கனடாவில் நூறு வருடங்களுக்கு முன்னரே வந்துவிட்டனர். ஆண்கள் மாத்திரமே அப்போது வந்தனர். 1947 ஆம் ஆண்டுக்குப் பின்னரே அவர்கள் தங்கள் “மனைவிகளை” கொண்டு வர அனுமதிக்கப்பட்டனர்.

    இந்த இந்திய எதிர்ப்பு, காலிஸ்தான், ஈழம் என்பன “ரீகநோமிக்ஸ்” என்று ரொனால்ட் ரீகன் காலத்தில் தொடங்கியவை என்றே நம்புகிறேன். பின்னர் விரிவாக அதனை எழுதலாம் என்றிருக்கிறேன்.

    Reply
  • DEMOCRACY
    DEMOCRACY

    இங்கிலாந்து கிரிஸ்தவ பாதிரியார் போப் கால்டுவெல் இந்தியாவுக்குள் வந்து “திராவிடம்” என்ற வார்த்தையை உருவாக்கி தமிழர்களை அதற்குள் புகுத்தி, ஆரியர்களை தன் இரத்த உறவு என்று “உல்டா” விட்டு,தன் நிர்வாகத்தில் வைத்துக்கொண்டு, நிர்வாகத்தின் அடக்குமுறையை பிராமணர்கள் மீது போட்டு பிராமணர்களுக்கு (இந்துமதம்) எதிராக கிளர்ந்த தமிழர்களுக்கு மதப்பிரச்சாரம் செய்தார்!. அதற்கு முன் தமிழ்தேசியம் என்ற ஒன்று இல்லை. இருந்திருந்தால், தென்னிந்திய அரசியல் – சமூக இயக்கங்கள் “தமிழ்நாடுதான்” கேட்டிருப்பார்களே தவிர “திராவிடநாடு” அல்ல!. சிதம்பரம் நடராஜர் கோயிலில், திருசிற்றம்பலத்தில், தமிழில் தேவாரம் பாடக்க்கூடாது என்பது, “ஒரு இந்துத்துவ விளக்கமே தவிர”, தமிழுக்கோ தமிழ்தேசியத்துக்கோ எதிரானது அல்ல!.

    இலங்கையில் பிராமணர்கள் இல்லை என்பதால், தன் நிர்வாகத்துக்கு வசதியாக வளைந்து? கொடுத்த “வட இலங்கை மனிதர்களை” ஆரியர்களுடன் எப்படி தொடர்பு படுத்துவது என்று யோசித்து, அவர்களை கேரளாவிலிருந்து வந்தவர்கள், சமஸ்கிருத அடியுடைய “ஆரிய சக்கரவர்த்திகள்” என்று உல்டா விட்டாலும், ஆறுமுகநாவலர் போன்றவர்களின் ஜாதிவெறியால், எடுபடவில்லை. சுதந்திரத்திற்கு? பிறகு, இந்திய நிர்வாகத்திர்கு வந்துவிட்ட ஆரியர்கள்!? மக்களுக்கு சேவை செய்யும் கடமை மற்றும் மக்களிடம் ஒட்டமுடியாத “நிர்வாக தங்கக் கூண்டு” கிடையில் தத்தளிக்கின்றனர். இவைகளுக்கு பாலமாக அமையும் அரசியல்வாதிகள், சேவை செய்கிறர்களா!, இவைகளை பயன்படுத்தி “சுருட்டுகிறார்களா” என்பது கலைஞரை பார்த்தால் புரியும். ஆனால் இலங்கையின் நிர்வாகத்தில் மாட்டிக்கொள்ளாமல் (சேவை), புலன்பெயர்ந்துவிட்ட இந்த ஆரியசக்கரவர்த்திகள்!?, திராவிட சக்கரவர்த்திகளாக!?, மறவர்குல மாணிக்கங்களாக, இந்திரன் – ரம்பா,ஊர்வசிகளாக (இந்து முறைப்படி?) உலாவர நினைக்கிறார்கள்!. இதற்கு இவர்கள் கெட்டியாக பிடித்து கொள்வது வரலாற்றில் எங்குமே இல்லாத, தமிழ்(தமிதேசியம்)!. தன்னை போலீஸ் தேடுகிறது என்று பிரபாகரன் என்ற ஒருவன் முழித்துக் கொண்டு திரிந்ததால், மாவை, அமீர் போன்றவர்கள் “தமிழ்” என்ற போர்வையை (ஈரசாக்கு) அவன்மீது போர்த்தி உருட்டுகட்டையால்(கோடரி) அடித்து உதைக்கவிட்டு தற்போது போர்வைக்குள் செத்துகிடந்தவனை விடுங்கள் போர்வை எங்கள் கையில் இருக்கிறது யாராவது போர்த்திகொள்ள வாருங்கள் என்கிறார்கள். கலைனஜ்ர் கருணாநிதியும் நம்மிடம் சில ஆசாமிகள் வசமாக மாட்டியிருக்கிறார்கள் அவர்களுக்கு போர்த்தி விடுவோம் (தமிழகம் பஞ்சாபாக மாறும்!?)ஆனால் நமக்கு சில “கட்டிங்” வெட்டிவிடுங்கள் என்கிறார்!.

    திரு.எம்.ஜி.ஆர்.அவர்கள் அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த திரு.எஸ்.டி.சோமசுந்தரம் அவர்கள் சில எதிர்வுகளை அப்போது கூறியிருந்ததன் அடிப்படையிலேயே சிலவற்றை எழுதுகிறேன்!. அவர் ஒரு பொறியியலாளர். அவருடைய ஊரான பட்டுக்கோட்டையில் பிறந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் படல்வரிகள்.. பாடல் ஒலிதொகுப்பு 3,படம் மகாதேவி 1957 -www.pattukkottaiyar.com/site/?p=257 — “குறுக்கு வழியினில் வழ்வு தேடிடும் குருட்டு உலகமடா…..
    அன்பு படர்ந்த கொம்பினிலே ஒரு அகந்தை குரங்கு தாவும்
    அதன் அழகை குலைக்க மேவும்
    கொம்பு ஒடிந்து கொடியும் குலைந்து
    குரங்கு விழுந்து சாகும்,சிலர்
    குணமும் இதுபோல் குறுகிப் போகும்
    கிறுக்கு உலகமடா!,தம்பி
    தெரிந்து நடந்துக் கொள்ளடா!
    இதயம் திருந்த மருந்து சொல்லடா!…

    Reply
  • msri
    msri

    டக்கிளஸ் தேவானாந்தா இவ்வளவு பின்னூட்டங்களையும் பார்த்தானாரால்> அவருக்கே மெய்சிலிர்க்கும். புராண இதிகாசம் பக்தி-அரசியல் இலக்கியம்> வரலாற்றுப் பொருள்முதல்வாதம் ஏன் பின்நவீனத்துவத்திலும் பின்னிவிட்டுள்ளார்கள் என பிரமிப்பார்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    DEMOCRACY,
    உங்களிடம் சில நல்ல கருத்துகளிருந்தும், தனிப்பட்ட முறையில் கலைஞரில் நீங்கள் வைத்திருக்கும் காழ்ப்புணர்வு காரணமாக, சம்மந்த சம்மந்தமில்லாமலும், எந்தவித ஆதாரங்களும் இல்லாமல் நீங்கள் கலைஞரை இகழ்ந்து எழுதும் கருத்துகள் முகம் சுழிக்க வைக்கின்றது. அதுவும் எடுத்துக் காட்டிற்கு எஸ்.டி.சோமசுந்தரத்தின் எதிர்வுகூறலென்று பட்டுக்கோட்டையின் பாடல் வரிகளை எடுத்து விட்டிருப்பது நல்ல நகைச்சுவை. எனக்கு எஸ்.டி.சோமசுந்தரம் என்றவுடன் நினைவில் வருவது, ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் அவர் அமைச்சராகவிருந்தும், ஜெயலலிதா பிரயாணம் செய்யும் வானின் கரியரில் துண்டு போட்டு அதில் குரங்கு போல் தொங்கிச் செல்லும் காட்சியே. நீங்கள் இணைத்த பாடலின் முதல் வரியான “அன்பு படர்ந்த கொம்பினிலே ஒரு அகந்தை குரங்கு தாவும்” என்பதுவும் அவருக்கு நன்கு பொருந்துகின்றது. இப்படிப்பட்டவரை நீங்கள் பெரிய மனிதராக்கப் பார்ப்பது வேடிக்கையிலும் வேடிக்கை.

    Reply
  • palli
    palli

    எல்லா அமைப்புகளும்(இரும்பு தூக்கிய) மக்களை துரத்தின என்பது யாராலும் மறுக்க முடியாது; ஆனால் மற்றய அமைப்புகள் மக்களை துரத்தியபோது அல்லது துன்புறுத்திய போது மக்கள் தெரு சண்டியனான புலிகளிடம் ஓடின ஆனால் அதே புலிதான் வில்லன் என தெரிந்த பின் ஓட இடம் இல்லை; அதனால் இதுவரை அந்த புலிகளை நம்பியே மக்கள் வாழ்ந்து விட்டனர்; அந்த புலிக்கும் ஏழரை வந்து கூட்டி சென்றதால் மக்கள் இன்று தாமாகவே இருக்கிறார்கள்; அதை புரிந்துகொண்டு அரசு செயல்பட வேண்டும், இல்லையேல் ஏதோ ஒரு மிருகம் மக்கள் முன் கடை போட கூடும்; ஒரு நாட்டில் பயங்கரவாதமோ அல்லது போராட்டமோ தொடங்குவதுக்கு காரனம் அரசு மக்கள் மீது காட்டும் அலட்ச்சியமே; அதை இந்த அரசு செய்யாதிருக்க வேண்டுமே;

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    /…தேசம்நெற் யாருடைய கருத்தை தடுத்தி நிறுத்தியிருக்கிறது? சொன்னால் நானும் விழிப்படைவேன்…..//Chandran raja
    இந்த விவாதத்தில் மட்டும் எனது கருத்துக்கள் பல வெட்டப்பட்டுள்ளன. இதில் பலர் என்னைக் கேள்விகேட்க வைக்கும் அலவுக்கு வெட்டப்பட்டுள்லன.

    //…சாந்தன்! டி.பி.எஸ் இணையத்தளத்தைப் பற்றி எனக்கு தெரியாது. இதைப்பற்றி கருத்துச் சொல்வதற்கு எனக்கு எந்த அருகதையும் இல்லை. ஆனால் மற்றவர்களின் கருத்தை சொல்வதற்கு இடம் கொடுக்கும் தேசம்நெற் போன்றதே என்ற கருத்து தவறானது. ….//
    தெரியவில்லை என்கிறீர்கல். பின்னர் ‘தவறானது’ என்கிறீர்கள். தெரிந்த இரண்டு விடயங்களை ஒப்பிட்டே ஒன்று மற்ரது போல் இல்லை எனச் சொல்ல முடியும். என்னைப் பொறுத்தவரை டி.பி.எஸ் தேசம்நெற் இரண்டும் ஒரேமாதிரியானவை ஒன்று தமிழ் மற்றையது ஆங்கிலம். இரண்டிலும் எனது கருத்துகள் வெட்டப்பட்டன.

    //…சம்பந்தன் சொல்லுகிறார் தமிழ்மக்கள் தமது சொல்லுக்கு மதிப்புப்பளித்து வாக்குவழங்கியது நன்றி….//
    ஆனால் வாக்குகளின் எண்ணிக்கையைப் பார்த்தால் தெரியுமல்லவா?

    //..கனடாவில், சீக்கியர்கள் 70 களில் குடியேறுவதற்கு முன்பாகவே என்னுடைய சித்தப்பா போன்றவர்கள்,….//DEMOCRACY
    என்ன சொல்கிறீர்கள்? சீக்கியர்கள் கனடா வந்து 100 வருடங்கள் பூர்த்தியை இரண்டு வருடங்களுக்கு முன்னர் கனடிய அரசு உத்தியோகபூர்வமாக கொண்டாடியது. அத்துடன் பிரிட்டிஷ் கொலம்பியா மானில முக்கிய அரசியல் தலைவர் ஒருவர் சீக்கியர்.

    Reply
  • DEMOCRACY
    DEMOCRACY

    பார்த்திபன், சாந்தன் இங்கே நான் எதிர்பார்த்த குழப்பங்கள்? தலை தூக்குவதற்கு நன்றிகள்!. தலைவர் டாக்டர் கலைஞர் அவர்களின் மேல் நீங்கள் வைத்திருக்கும் அன்பிற்கு நன்றிகள்!. இந்த இணைய தளத்தை அமைதிகாலத்தில் தமிழர்கள் மட்டும் பார்த்தால், பல விளக்கங்கள் அளிக்கலாம்!. ஆனால் நவீன ஆயுதங்களுடன் பல படுகொலைகள் நடந்து முடிந்திருப்பதால், அதில் உபயோகித்த தோட்டாக்களை என் நெஞ்சுக்கு எதிர்ப்பாக்கிறேன்!.

    பார்த்திபன் நீங்கள் கூறிய கருத்துக்கள் சரி!, ஆனால், தூங்காமல் கடுமையாக சுறுசுறுப்பாக கஷ்டப்பட்டால், பணத்தை கையில் பார்த்துவிடலாம் என்பது இலங்கைத் தமிழர் மற்றும் டாக்டர் கலைஞர் ஆகியோரது அசைக்க முடியாத நம்பிக்கை!. மூட்டை தூக்குகிறவன் சுறுசுறுப்பாக கஷ்டப்பட்டால், மூட்டைதான் முன்னேறும் என்பது இந்த ஹெட்ச் பண்ட், பில்லினேயர்கள் உலகில் இலங்கைத் தமிழரது குறுகுறுப்பு என்று எண்ணுகிறேன் உண்மையா என்று நீங்கள்தான் கூறவேண்டும்!. சுறுசுறுப்பாக இருப்பதற்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என்பதுதான் தமிழகத்தின் அரசியல் மற்றும் சினிமா உலகத்தின் எதார்த்தம். மானாட மயிலாட வைத்து சோம்பேறியாக்க நிர்பந்திப்பதே “குடும்ப உறுப்பினர்களின்” கொள்கை. அ.தி.மு.க என்பது டக்ளஸ் தேவாநந்தா போல, கீரை கடைக்கு எதிர் கடைதான் என்றாலும், கீரைக்கடைக்குள் சுற்றிச் சுழன்று அதிர்ந்துப் போனவன் நான்!. நீங்கள் கூறுவது போல் அல்லாமல், திரு.எஸ்.டி.எஸ்.அவர்கள், இந்த “யதார்த்த குழப்பங்களுக்கு” ஈடு கொடுத்து, பல நல்ல விஷயங்களை கரை சேர்க்க முயன்றவர் என்பது உண்மை!.

    சாந்தன்!, 1905 லேயே கோபலகிருஷ்ண கோகலே, பாலகங்காதர திலகர், போன்ற இந்திய சுதந்திர போராட்ட வீரர்கள் அமெரிக்க கண்டத்திற்கும், ஜெய்ஹிந்த் செண்பகராமன் போன்ற தமிழர்கள், ராஷ்பிகாரி கோஷ் போன்ற மேற்கு வங்க புலிகள், ஜெர்மனிக்கும் வந்து இயக்கம் நடத்தியிருக்கிறார்கள்!. அபோதே பல “சீக்கியர்கள்” பிரிட்டிஷுக்கு ஆதரவாகவும், எதிராகவும் உலகம் முழுவதும் பரவியிருக்கிறர்கள்!. நான் கூற வந்தது, “இந்திய எதிர்ப்பு” என்ற பாகிஸ்தானை -ஆப்கானிஸ்தானை தளமாக கொண்ட, ஆப்பரேஷன் புளுஸ்டரில் இந்திராகாந்திக்கு எதிராக வெடித்த, பிந்தரன்வாலே குழுமத்தின் பிண்ணனியில் எழுந்த நிகழ்ச்சிகளால் பெரும்பாலும் கனடாவுக்கு இடம் பெயர்ந்த “சீக்கியர்களை” குறிப்பிட்டே 1970 கள் கூறியிருந்தேன்!. இதை “ரெஃபரென்ஸ்” செய்ததற்கு காரணம், தற்போது உள்ள பிரச்சனைகளுடன் “தொடர்பாடல்” காரணமாகத்தான்!.

    Reply
  • thaya
    thaya

    நல்லதொரு ஆரோக்கியமான தளம் இது. பதியப்பட்ட விடயம் குறித்து ஆராய்வதோடு மட்டும் நின்று விடாமல் விரிவான தேடலை இந்த பின்னூட்டங்கள் நடத்தியிருக்கின்றன.

    அது!…. சரி… பல்லி சொன்னது போல் ஒரு நாட்டில் போராட்டம் தொடங்குவதற்கு காரணம் அந்த நாட்டு அரசு மக்களிடம் காட்டி வரும் அலட்சியமே ஆகும்…

    உண்மைதான்…. ஆனாலும் இவ்வாறு மக்கள் மீது அரசு அலட்சியம் காட்ட வேண்டும் என்பதுதான் புலிகளின் விருப்மாக இருந்து வந்துள்ளது. இப்போது புலிகளின் இந்த தொடரை தமிழ் தேசிய கூட்டமைப்பு எழுத ஆரம்பித்துள்ளது. சரத் பொன்சேகா ஆட்சிக்கு வந்தால் இருப்பதை விடவும் ஒரு மோசமான சூழல் உருவாகும். அதை வைத்துக்கொண்டு தாம் தமது அரசியலை முன்னெடுக்கலாம் என்பதே அவர்களது திட்டமாக இருந்தது.

    மகிந்தா வந்தால் போரை தொடங்குவார்> கடும்போக்கை கடைப்பிடிப்பார் என்று கருதித்தானே மகிந்தாவை ஆட்சி அதிகாரத்தில் புலிகள் இருத்தினார்கள். இதை புலிகளே ஒப்புக்கொண்டதை மறுக்க முடியுமோ?…. அது போலவே தந்தை செல்வாவின் முதிசம் என்று தன்னை கூறி வரும் சம்பந்தரும்> ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பின் கரும்புள்ளி சுரேஸ் பிரேமச்சந்திரனும் போன்சேகாவை ஆதரிக்க எண்ணினார்கள்.

    ஆனாலும்> மக்கள் இயல்பாகவே கொண்டிருந்த அரசு மீதான ஏதோ ஒரு வகை வெறுப்பு சரத்பொன்சேகாவை முன்னிறுத்தியது.

    மகிந்தா விற்கு வாக்களியுங்கள். அதற்கு தானே பொறுப்பு என்று கூறி வந்த தோழரின் கருத்துக்களை மக்கள் முழுமையாக ஏற்கவில்லை. ஏன்?… நேரடியாகவே தேழருக்கு தாம் சொல்லியதாக பலர் கூறியிருக்கிறார்கள். நாங்கள் உங்களுக்கு வாக்களிக்க தயார்./ ஆனால் வெற்றிலைக்கு வாக்களிக்க தயாரில்லை. ஏன் தயாரில்லை என்பதை அறிந்து தோழர் மகிந்தாவிடம் அதை தெரிவிக்க வேண்டிய பொறுப்பில் உள்ளார். தேர்தல் முடிந்ததும் யாழ் வலம்புரி பத்திரிகை வெளியிட்ட கட்டுரை ஒன்றை இதில் இணைக்கின்றேன்.

    ஜனாதிபதித் தேர்தல் முடிபுகள் வெளியாகிய பின்னர் எழக்கூடிய வழமையான விமர்சனங்க ளுக்குப் பஞ்சமில்லை. எனினும் இவ் விமர்சனங்கள் தவறானவையாக முன்வைக்கப்படும் போது அதன் விளைவுகள் பாதகமாகவே அமையும். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தேர்தலில் அமோக வெற்றி பெற்றிருந்தாலும் வடக்குக் கிழக்கில் அவர் பின்னடைவு கண்டுள்ளார். இப் பின்னடைவுக்கான காரணம் என்ன என்பதை ஆராய்ந்தால் அதற்கான முடிபுகள் வேறுவிதமாக அமையும்.

    இருந்தும் வடக்குக் கிழக்கு மாகாணங்களில் ஜனாதிபதி மகிந்தராஜபக்ச அடைந்த பின்னடைவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரசாரமே காரணம் என அமைச்சர் லக்மன் யாப்பா அபேவர்த்தன கூறியுள்ளார். உண்மையில் வடக்குக் கிழக்கு மாகாணத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை மக்கள் ஆதரிக்காமைக்குக் காரணம் வன்னிப் பேரழிவுகளும்> தடுப்பு முகாம்களுமே ஆகும். இங்கு தமிழ் மக்களின் வாக்களிப்பானது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரசாரத்தாலோ அன்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரிக்குமாறு கூறிய தாலோ அல்ல.

    தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சரத்பொன் சேகாவை ஆதரிப்பதா? இல்லையா? என்ற முடிபை எடுப்பதற்கு முன்னதாகவே தமிழ் மக்கள் தங்கள் முடிபை ‘‘பொது நீதி’’ என்ற அடிப்படையில் எடுத்துவிட்டனர். அதேநேரம் வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு ஏற்பட்ட பின்னடைவென்பது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு ஏற்பட்ட பின்னடைவாக மாட்டாது. ஏனெனில் யாழ்ப்பாண மாநகரசபைத் தேர்தலில் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கட்சியை ஆதரித்த தமிழ் மக்கள் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிலைச் சின்னத்தை ஆதரிக்க மறுத்து விட்டனர்.

    ஆக> ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் அளித்த வாக்குகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப் பினருக்கு வெற் றியாகவோ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழமக்கள் ஜன நாயகக் கட்சிக்குத் தோல்வியாகவே பார்க்கப்படுமாயின் அது தவறான முடிபாகவே அமையும். அதேசமயம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சரத் பொன்சேகாவுக்கு வழங்கிய ஆதரவு தென் பகுதியில் உருமாறி-பொருள்மாறி உரைக்கப்பட்டதால் ஜெனரல் சரத் பொன்சேகா படுதோல்வி காண்பதற்கு காரணமாயிற்று.

    சரத்பொன்சேகாவை ஆதரித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தங்களின் ஆதரவு எத்தன்மையது என்பதை தென்பகுதி மக்களுக்கு எடுத்தியம்பவில்லை. இது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வழமையான அசமந்தத்தில்-தவறில் மிகவும் மோசமானதாகும். வெறுமனே சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு என்று அறிவித்துவிட்டு வாளாவிருந்ததால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் வெற்றி உறுதியானது. எதற்கும் பொதுத் தேர்தல் என்று வரும் போது யாழ்ப்பாண மக்கள் மீண்டும் பொது நீதியை நிச்சயம் கடைப்பிடிப்பர். அப்போது எங்களுக்கு துன்பம் ஏற்பட்ட போது எங்களுடன் இருந்து உதவியது யார் என்ற கேள்வியை நிச்சயம் மக்கள் எழுப்புவர். அதற்கான உண்மையான பதில் எங்கிருந்து வருகின்றதோ அங்குதான் புள்ளடிகள் போய்ச் சேரும்.

    இது யாழ் வலம்புரியின் ஆசிரியர் தலையங்கம்.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //…அபோதே பல “சீக்கியர்கள்” பிரிட்டிஷுக்கு ஆதரவாகவும், எதிராகவும் உலகம் முழுவதும் பரவியிருக்கிறர்கள்….//DEMOCRACY

    இல்லை அதற்கு முன்னரே அமெரிகாவுக்கும் கனடாவுக்கும் ரயில் பாதைகல் போடவும், நிலக்கரிச் சுரங்க வேலைகளுகாகவும் சீக்கியர்கள் வந்து விட்டனர். அப்படிப்பார்த்தால் ஸ்ரீலங்காவுக்கு இந்திய தோட்டத்தொழிலாலர் வந்தது பிரிட்டிசாரை எதிர்த்தா ஆதரித்தா? அவ்வாறு ஆதரித்து வந்தவர்களாயின் அவர்கள் ஏன் அடிமை ஆக்கப்பட்டார்கள்? ஆனால் சீக்கியர்கள் அடிமை ஆக்கப்படவில்லையே? இன்றும் கூட இங்கிலாந்து ராணியே கனடவின் அரச தலைவர் ஆவார்.

    உங்களின் சித்தபா ஏன் கனடா 1970இல் கனடா வந்தார். தரப்படுத்தலை எதிர்த்தா? இல்லை பொறியியல் ‘மூட்டை’ தூக்கிப் பிழைக்கவா? இதே போல எனது மச்சானும் கனடா பொறியியல் மூட்டை தூக வந்தார். ஆனால் அவர்கள் ஒரு குரூப். அகதியாக வந்தவர்கள் மூலம் தங்கள் பொறியியல் ‘மூட்டை தூக்கல்’ விலாசம் கந்தலாக கிழிந்தபோது நாங்கள் ”ரெஃபியூஜி”அல்ல ”புரொபெசனலாக ”வந்தவர்கள் என விலாச்ம் விட்டு தங்களுக்குள்ளேயே ”குரூப்” வைத்திருக்கிறார்கள். இப்ப வந்தவன் எல்லாம் இவையளை மீறியிட்டான் எண்ட குடைச்சல். அந்த ‘ஃபிரீக்குவென்சி’ புதிய ”புரொபெசனல” சீக்கியர்களுடன் ”சிங்கிரொனைஸ் ”ஆவதால் இருவரும் சேர்ந்து கண்டுபிடிச்ச தியரிதான் ‘சீக்கிய மென்ராலிற்றி’ அதைத்தான் உங்களுக்கு உங்கள் சித்தப்பா சொல்லி இருக்கிறார். இதே மென்ராலிற்று ”லண்டன் ரிட்டேன்” கோஷ்டிக்கும் இருக்கிறது. ஆனால் உங்கள் மந்தாக்கினி/இப்ராகிம் ராவுத்தர் ‘ரெலேசன்சிப்’ ஐ எப்படி ‘டக்ளஸ் ராஜினாமா’ வுடன் “ரை-அப்” பண்னல் ‘அவுட்ஸ்ராண்டிங்”.

    Reply
  • BC
    BC

    //பொதுத் தேர்தல் என்று வரும் போது யாழ்ப்பாண மக்கள் மீண்டும் பொது நீதியை நிச்சயம் கடைப்பிடிப்பர். அப்போது எங்களுக்கு துன்பம் ஏற்பட்ட போது எங்களுடன் இருந்து உதவியது யார் என்ற கேள்வியை நிச்சயம் மக்கள் எழுப்புவர்.//
    பொது நீதியை கடைபிடித்தல், எங்களுக்கு துன்பம் செய்தவர் யார்? துன்பம் வந்தபோது உதவியது யார்? என்று சிந்தித்து செயல்படுபவர்கள் மாதிரி யாழ் மக்களின் செயல்கள் தெரியவில்லை. பொதுவாக தமிழர்களுக்கும் பகுத்தறிவுக்கும் வொகுதூரம்.

    Reply
  • மாயா
    மாயா

    அரசுக்கு சார்பான ஒரு அமைச்சர் சரத் தரப்புக்கு அடிமட்டத்தில் வேலை செய்ததார் என கருணா சொன்னதாக அண்மையில் எழுதியிருந்தேன். அது டக்ளஸ் தொடர்பாக இல்லை. அது பிள்ளையான் தொடர்பாக என தெரிய வருகிறது. அடுத்த பொதுத் தேர்தலில் பிள்ளையான் கட்சி தனியாக , அதுவும் படகு சின்னத்தில் போட்டியிட இருப்பதாக லக்பிம செய்தி வெளியிட்டு, கருணா – பிள்ளையான் பிணக்கு உச்சம் அடைகிறது என எழுதியுள்ளது.
    http://lakbima.lk/articles/news1.htm

    Reply