“ஆய்போவாங்…… யாழ்ப்பாணம் உங்களை வரவேற்கிறது” : ரி கொன்ஸ்ரன்ரைன்

யாழ்கோட்டைக்கு அருகாமையில் ஆழ்ந்த உறக்கத்திலுள்ள இராணுவம்30 வருட ஆயுதப் போராட்டமும் அதனுடன்கூடிய விடுதலைப் புலிகளின் ‘DisneyLand’ கனவும் ஒட்டுமொத்தமாக மண்கௌவிய நிலையில் வடக்கு கிழக்கு மாகாணங்கள் ஏதோ எஞ்சி இருந்தவற்றை சுதாகரித்துக்கொண்டு முன்னேறத் துடிக்கின்றது.

வடக்கு மாகாணத்துக்கு சிங்கள மக்கள் பஸ்வாரியாக படையெடுக்கின்றனர். பண்ணைப் பாலம் முழுவதும் சிங்களப் பகுதிகளில் இருந்துவரும் உல்லாசப் பயணிகளின் பஸ் வண்டிகள் ஆக்கிரமித்து நிக்கின்றன. மக்கள் வெட்டவெளிகளில் தாம் கொண்டுவந்த உணவை நிலத்தில் இருந்து புசிக்கின்றனர். இராணுவ காப்பரண்களில் துப்பாக்கிகளை வைத்துவிட்டு இராணுவத்தினர் நித்திரை கொள்கின்றனர். பாண் பேக்கரி வைத்திருக்கும் சிங்களக் குடும்பத்தைத் தவிர எதுவித சிங்கள குடிசன வாடையே இல்லாத பண்டத்தரிப்பு, சில்லாலை, சண்டிலிப்பாய்ப் பகுதிகளில் இரவில் பலர் சிங்களத்தில் கதைத்துக் கொண்டு திரிகின்றனர்.

ஊர்காவற்துறை, பண்டத்தரிப்பு மதுபானக் கடைகள் சிங்களவர்களால் நடாத்தப்படுகின்றது. வீதி வீதியாக சிங்கள வியாபாரிகள் பிளாஸ்ரிக் கதிரைகளையும் ஏனைய சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களையும் விற்பனை செய்கின்றனர். வீதிகளில் நிற்கும் இராணுவமும் பொலிசாரும் தங்களின்பாடு. ஏறக்குறைய நூற்றுக்கு நூறுவீதமான காவற்படையினர் சிங்கள அல்லது முஸ்லிம் இனத்தவர்.

Advertising_in_Jaffnaமுழத்திற்கு முழம் காவற்படையினரை வைத்துக்கொண்டு நாடு எப்படி முன்னேறப் போகின்றது என்பது ஒருபுறம் இருக்க இந்த “சிங்கள ஆக்கிரமிப்பை” யாழ்ப்பாண மக்கள் பொருட்படுத்துவதாக தெரியவில்லை. 1980களில் நான் கண்ட யாழ்ப்பாணத்தை இன்று துளிகூட காணமுடியவில்லை. ஆயுதப் போராட்டம் என்பது ஒட்டுமொத்தமாக ஒரு தூஷண வார்த்தைபோல் உணரப்படுகின்றது. 1980ம் ஆண்டுகளில் நாங்கள் தொடங்கியதுபோல், மடியில் கைக்குண்டுடன் திரிந்து கிராமங்களில் அரசியல் வகுப்புக்கள் நடாத்தினால் மக்களே எம்மைக் கௌவிப் பிடித்து அடியும் போட்டு இராணுவத்திடம் கையளிப்பார்கள் என்பதில் எனக்கு எதுவித சந்தேகமும் இல்லை. இதுதான் இன்றைய யாழ்ப்பாணத்தின் உண்மை நிலைமை. சுருக்கமாகக் கூறின் “பிச்சை வேண்டாம் நாயைப்பிடி” நிலைமை.

A9 பாதையூடாக யாழ் செல்லும் பஸ் வண்டிகள் பல இடங்களில் இருந்து புறப்படுகின்றன. ஒருவழிக் கட்டணமாக 1000 ரூபாய்கள் தொடக்கம் 2150 ரூபாய்வரை அறவிடப் படுகின்றது. ‘வடக்கின் நாதம்’ என பெயரிடப்பட்ட பஸ் வண்டிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் காரியாலயத்திற்கு முன்பாக புறப்படுகின்றது. ’வடக்கின் நாதம்’ பஸ்சேவை அமைச்சர் டக்ளஸ்சின் சகோதரனிற்கு உரித்தானது என பலராலும் பேசப் படுகின்றது. இவ் பஸ்சேவை ‘வடக்கின் நாதம்’ என்பதைத் தவிர்த்து ‘டக்ளஸ்சின் பஸ்’ என மக்களால் பெயர் சூட்டப் பட்டுள்ளது. ‘டக்ளஸ்சின் பஸ்’ஸில் போனால் ”செக்கிங்” குறைவு என்று பரவலான நம்பிக்கை இருக்கின்றது. ஆனால் நிலைமை அப்படியில்லை. நான் 2150 ரூபாய் கட்டி டக்ளஸ்சின் பஸ்சிலும் சென்றேன். மறுதடவை 800 ரூபாயோடு ஒரு சிறிய ‘தட்டி வான்’ ஒன்றிலும் சென்றேன். இராணுவத்தின் கெடுபிடி ஒன்றிலும் இருக்கவில்லை.

விளம்பரங்கள் தெரிவிப்பது போல் இந்த பஸ் வண்டிகள் சொகுசு வாகனங்கள் அல்ல. 30 வருடங்களுக்கு முன் யாழ்-கொழும்பு சேவையில் ஈடுபட்ட K G குணரத்தினத்தின் வாகனங்கள் நூறு மடங்கு உயர்த்தியானது. பஸ் உள்ளே A/C யும் ஒழுங்காக வேலை செய்யவில்லை. வெளிச்சமும் இல்லை. 2000 ரூபாய்க்கு யாழ்ப்பாணம் போகவும் வேண்டும் அதேநேரம் பஸ்சில் குமாரி பத்மினியின் ஆட்டமும் வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாதுதான். அதை விடுவோம்.

குறிப்பிட்டபடி இரவு 11 மணிக்கு கொழும்பிலிருந்து புறப்பட்ட பஸ் அதிகாலை 1.30 மணியளவில் புத்தளம் வந்தடைகிறது. ஓமந்தையில் சகலரும் பஸ்சிலிருந்து இறக்கப்பட்டு உடல்கள் முழுமையாக சோதிக்கப்படுகிறது. ஆண்களுக்கும் பெண்களுக்குமான தனித்தனியான அறைகளில் ஒவ்வொருவராக தனித்தனியாக உடற் பரிசோதனை செய்யப்படுகிறது. அவயவங்கள்கூட கைகளால் அமத்திப் பார்க்கப் படுகின்றது. இந்த சோதிப்பு எனக்கு மாத்திரம் விஷேடமாக தரப்பட்டது என்றுதான் முதலில் எண்ணி பெருமை கொண்டேன். பஸ்ஸில் ஏறிய போதுதான் அனைவருக்கும் அந்த அனுபவம் கிடைத்ததாக அறிந்தேன். கையில் கொண்டு சென்ற பைகள் மட்டும் சாதாரணமாக சோதனை செய்யப்பட்டது. ஒருவரினதும் உடமைகள் கொட்டியோ கிளறியோ சோதனை செய்யப் படவில்லை. கடமையில் இருந்த இராணுவத்தினர் மிகவும் பொறுப்புடனும் மரியாதையுடனும் தமது கடமையைப் புரிந்தனர்.

பாதுகாப்பு அமைச்சின் அனுமதி (MOD) இல்லாமல் பிறப்பிடம் இலங்கையாக இல்லாதவர் எவரும் வடமாகாணத்திற்குள் அனுமதிக்கப் படுவதில்லை. எனக்குத் தெரிந்த டென்மார்க்கைப் பிறப்பிடமாகக் கொண்ட தமிழ்பெண் ஓமந்தையில் வைத்து (25.01.10) அவரை திருப்பி கொழும்பிற்கு அனுப்பி விட்டார்கள்.

Jaffna_RoadA9 பாதை கடும் பள்ளம் திட்டியான ஒற்றைப் பாதையாக இருந்தது. பெருவாரியான மதகுகள் பாலங்கள் புனரமைக்கப்பட்டுக் கொண்டிருந்தன. சில இடங்களில் இராணுவத்தினர் சுத்திகரிப்பு வேலைகள் செய்து கொண்டிருப்பதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. பெருமளவில் இராணுவமும் பொலிசும் கடமையில் ஈடுபட்டிருந்தனர். ஏ9 பாதையில் புத்தர் அனாதரவாக தனிமையில் குந்திக் கொண்டிருந்தார்.

20 வருசத்திற்கு முதல் குடிபெயர்ந்த நாங்களே ஈஸ்ற்ஹாமிலும் ரூற்றிங்கிலும் அரை அம்மணத்துடன் நின்று தேங்காயும் உடைக்கலாம் நடுரோட்டில் நின்று கூத்தும் ஆடலாம் ஆனால் யாழ்ப்பாணத்திற்கு வேலைக்கு வந்த சிங்களவர்கள் ஒரு கல்லை வைத்து அதை புத்தர் என்றால் அது உங்களுக்கு ஒரு பிரச்சினையோ?

முன்னர்போல் முறிகண்டி கோவிலடியில் பலர் தரிசித்துக் கொண்டிருந்தார்கள்.

காலை 7.15 மணிக்கு பஸ் கிளிநொச்சியை அடைகிறது. சந்தி பொந்தெல்லாம் ராஜபக்ச சிரித்த முகத்துடன் வரவேற்றார். ஜெனரல் பொன்சேகாவின் போஸ்டர் ஒன்றுகூட எனக்குத் தென்படவில்லை. கிளிநொச்சிச் சந்தியில் பெரிய புத்த விகாரை ஒன்றிருந்தது. அருகே பல கோயில்களும் இருந்தது. ஆனையிறவு வாசலில் ‘ஆய்போவாங் யாழ்ப்பாணம் உங்களை வரவேற்கிறது’ என்ற பெரிய வாசகம் வரவேற்றது. முகமாலை பளை பகுதிகளில் மக்களைவிட இராணுவமே அதிகமாக வீதிகளில் நடமாடினர். சாவகச்சேரிப் பகுதியை அண்மித்ததும் மகிந்த ராஜபச்சேயின் போஸ்டர்களுடன் டக்ளஸ் தேவானந்தாவின் போஸ்டர்களும் தென்பட்டன. பொன்சேகாவின் போஸ்டர்கள் ஒன்றுகூட இருக்கவில்லை.

Jaffna_Clock_Towerஇரவு 11மணிக்கு கொழும்பிலிருந்து புறப்பட்ட பஸ் வண்டிகள் காலை 9.30 மணியளவில் யாழ்ப்பாணம் மணிக்கூட்டுக் கோபுர வீதியை சென்றடைந்தது. வீதிகள் மிக மோசமான நிலையில் இருப்பதால் வாகனங்கள் 20-30- MPH வேகத்திலேயே பிரயாணம் செய்கின்றது. பல இடங்களில் வீதிகள் திருத்தப்படுவதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. யாழ்ப்பாணம் ஒரே பாழடைந்த கட்டிடங்களுடன் காணப்படுகின்றது. 1980களுடன் ஒப்பிடும்போது சன நெருக்கடி கால்வாசிக்குக் குறைவாகவே உள்ளது.

யாழ் மாவட்டத்தில் கள்வரின் நடவடிக்கை அறவே இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது. முன்னைய காலங்களில் குறிப்பாக விடுதலைப் புலிகளின் உதவியாளர்களே பெருமளவில் களவில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. வீட்டிற்கு முன்னால் வைக்கப்படும் பூச்சாடிகள் உட்பட அனைத்தும் களவாடப்படுவது வழமையாக இருந்தது. ஆயுதக் குழுக்கள் அதிலும் குறிப்பாக விடுதலைப் புலிகளின் வெளியேற்றத்தின் பின் யாழ் மாவட்டத்தில் களவுகள் இல்லாமல் போய்விட்டதாக பலராலும் தெரிவிக்கப்பட்டது. – களவு, கப்பம், வரி – புலிகளின் இந்த சமூகவிரோத செயல்களினால் மக்கள் விடுதலைப் போராட்டத்தை அறவே வெறுத்து நிற்கின்றனர். முச்சக்கர வண்டி ஓட்டுனர் தொடக்கம் விவசாயி, வியாபாரி உட்பட சகலரினதும் பொதுவான அபிப்பிராயம் இதுவாகத்தான் இருந்தது.

குடாநாட்டில் விடுதலைப் புலிகளும் சக ஆயுத குழுக்களும் காலத்திற்குக் காலம் செய்த அடாவடித்தனங்களால் பெருவாரியான மக்கள் தமிழ் ஆயுதக் குழுக்களையும் அதனையே அடிப்படையாக வைத்து ஆரம்பிக்கப்பட்ட அரசியற் கட்சிகளையும் வெறுத்தே நிற்கின்றனர். 1977ல் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு இருந்ததைப் போல் “ஆகா..ஓகோ..” என்ற வரவேற்பு எந்த தமிழ் கட்சிகளுக்கும் இல்லை

ஊர்காவற்துறையில் ஒரு மீனவக் குடும்பத்துடன் 2 மணித்தியாலங்கள் உணர்ந்த அரசியலை பேப்பர் மற்றும் கீபோட் மார்க்ஸிஸ்ட்டுக்கள் மற்றும் TIC லண்டனில் 10 வருடங்களாக நடாத்தும் அரசியற் கூட்டங்களில் அறிந்ததைவிட செழுமையாக இருந்தது. யதார்த்தமாக இருந்தது. ஊர்காவற்துறை ஏன் டக்ளஸின் EPDP மையப்படுத்தியது. தாங்கள் என்ன காரணத்திற்காக ஈபிடிபியிற்கு வாக்களித்தோம் என்பதை மிகவும் யதார்த்தமாக மீனவ குடும்பத்தினர் விளக்கினர். ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் ஈபிடிபி யை ஆதரித்தால் தாங்கள் கொஞ்சம் பாதுகாப்பாக இருக்கலாம், றோட்டு போடுவார்கள் என்ற கருத்தே கேட்கக் கூடியதாக இருந்ததே தவிர ஈபிடிபிதான் மக்களின் சுபீட்சம் டக்ளஸ்தான் எமது தலைவர் என யாரும் தமது நெஞ்சை அடித்துச் சொல்லவில்லை.

Kayts_Boysமக்கள் மிகவும் நொந்துபோய் அடியுண்டு இருக்கிறார்கள். தமிழ் குழுக்களை ஒரு கட்டுப்பாட்டில் வைத்திருப்பது என்றால் சிங்கள இராணுவத்தின் பிரசன்னம் அவசியம் என்ற கருத்துத் தொனிக்கப் பெரும்பான்மையானவர்கள் பேசுகிறார்கள். “சிங்கள இராணுவம் இல்லாட்டி புலி வந்திடும், பிறகு ஈபிடிபியுடன் அடிபடும். அப்ப ஈபிடிபியுடன் ஆமிக்காரன் இருந்தால்த் தான் எமக்கு பாதுகாப்பு” என்ற கருத்து மேலோங்கி இருக்கின்றதே தவிர ஈபிடிபி கட்டாயம் இருக்க வேண்டும் என்று ஒருவர்கூட அடித்துச் சொல்லவில்லை.

வட மாகாணத்தில் அடிமட்டத்திலிருந்து சமூகரீதியாக வளர்ந்த அரசியல் தலைமை இல்லாத காரணத்தினாலும் மற்றும் சகல அரசியற் கட்சிகளும் முன்னைநாள் ஆயுதக் குழுக்களாக இருந்த காரணத்தினாலும் மக்கள் TNA பக்கம் சார்பதற்கு ஒரு காரணமாக இருக்கின்றது. TNA கட்சியை பிரேமச்சந்திரன் போன்ற முன்னைநாள் ஆயுதக் குழுக்களின் முக்கிய புள்ளிகள் தலைமை வகித்திருந்தால் அதுவும் அடிபட்டுப் போயிருக்கும்.

மீண்டும் இடித்துக்கட்டப்படும் மானிப்பாய் மருதடிப் பிள்ளையார்புலம்பெயர் பக்தர்களின் “நன்கொடையால்” வீதிக்கு வந்துள்ள மருதடிப் பிள்ளையார்.பல கிராமங்களில் ஆலயங்கள் மீள மீள புணரமைக்கப்பட்டு பெருப்பிக்கப படுகிறது. உதாரணமாக மருதடிப் பிள்ளையார் கோவில் அல்லப்பிட்டி முருகன் ஆலயம் இதுகள் ஏன்?? ஆலயம் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என எமது மூதாதையோர் கூறினார்களே தவிர ஆளில்லா ஊரில் ஆலயம் கட்டுங்கள் என்று கூறவில்லையே!!

ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரி1980 ஆண்டுடன் ஒப்பிடும்போது வடமாகாண மற்றும் தீவுப்பகுதிப் பாடசாலைகள் மிகவும் தரமாக இயங்குகின்றன. கணிசமான நேரத்தை மாதகல் புனித ஜோசப் மகாவித்தியாலயம் மானிப்பாய் இந்துக் கல்லூரி சண்டிலிப்பாய் இந்துக்கல்லூரி மற்றும் ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரிகளில் செலவிடும் சந்தர்ப்பம் கிடைத்தது. அனைத்துப் பாடசாலைகளிலும் வன்னியில் இருந்து புலம்பெயர்ந்த குடும்பங்களின் பாதிப்பு பெருமளவில் தாக்கி இருக்கின்றது.

மாதகல் புனித ஜோசப் மகாவித்தியாலயத்தில் 2009ம் ஆண்டுத் தொடக்கத்தில் 397 ஆக இருந்த மாணாக்கரின் எண்ணிக்கை இவ்வருட தொடக்கத்தில் 500ஜ எட்டியுள்ளது. 25வீதம் அதிகரிப்பு. இதனால் பாடசாலைக்கு பெரும் சங்கடம் ஏற்பட்டுள்ளது. அண்மையில் வன்னியில் இருந்து புலம் பெயர்ந்த பிள்ளைகள் 38. இவர்களுக்கு அடிப்படை வசதிகள் ஒன்றும் இல்லை.

IDP நிலையங்களில் உள்ளவர்களைவிட IDP நிலையங்களில் இருந்து வெளியேறி யாழ் மற்றும் வவுனியாப் பகுதிகளில் இருப்பவர்கள் மிகவும் கஷ்டப்படுவதைப் போலுள்ளது. இவ்வாறு புலம்பெயர்ந்த மக்கள் பலர் மாதகல் தோமையர் வீதி -மாதகலில் சிறு குடிசை போட்டு வாழ்கிறார்கள். இவர்களின் நிலை மிகவும் பரிதாபத்திற்குரியது.

தாய் தந்தை சகோதரங்களை இழந்து தவிக்கும் மதுசாஇங்கு மதுசா சிவராசா என்ற 9 வயதுச் சிறுமி இருக்கிறாள். தகப்பன் இருக்குமிடம் தெரியாது. சகோதரர்களை காணவில்லை. 25.09.2009 அன்று புதுமாத்தளன் பகுதியிலிருந்து கடலினூடாகப் புறப்பட்டு சாலைப் பகுதியில் கடற்படையினரால் மீட்கப்பட்டு கைதடி அகதிமுகாமில் கொண்டுபோய் விடப்பட்டுள்ளாள். மதுசா தற்போது தன்னுடைய தகப்பனின் தகப்பனோடு ஒரு குடிசையில் வாழ்கிறாள். மாதகல் புனித ஜோசப் கல்லூரியில் 5ம் வகுப்புப் படிக்கிறாள். அதேபோல 8 வயதுடைய இன்னொரு சிறுமி இருக்கிறாள். குடும்பத்தில் இவளைத் தவிர அனைவரும் இறந்துவிட்டனர். தற்போது இதே கல்லூரிக்குச் சொந்தமான மடத்தில் வைத்து பராமரிக்கப் படுகிறாள். வன்னியில் நடந்த மனித அவலம் நூறுக்கு அதிகமான மைல்களுக்கு அபபபாலுள்ள மாதகல் கிராமத்தை இவ்வளவு தூரம் தாக்கியுள்ளது.

12 பிள்ளைகளுக்கு உடனடியாக சைக்கிள் உதவி தேவைப்படுகிறது. ஒரு சைக்கிளின் விலை 11 000 ரூபாய் (60 பவுண்கள்). சைக்கிள் இருந்தால் பிள்ளைகளுக்கு மிகவும் உதவியாக இருப்பதுடன் பெற்றோர் வெளிக் கிராமத்திற்குச் சென்று வேலை வாய்ப்பு பெற உதவியாக இருக்கும்.

இவ்வாறு தேவைப்படும் உதவிகளோ எண்ணற்றது. இந்த மக்களை இன்று கைவிட்டுவிட்டு மக்கள் பற்றி காகித அரசியல் பேசுவது யதார்த்தமாகாது. புரட்சிகரக் கனவுகள் மட்டும் மக்களுக்கு சோறுபோடாது.

சீருடையுடன் மானிப்பாய் இந்துக் கல்லூரி மாணவர்கள்.Computer_Room_MHCமானிப்பாய் இந்துக் கல்லூரி, ஊர்காவற்துறை புனித அந்தோனியார் போன்ற கல்லூரிகளை எடுத்துக்கொண்டால் அவர்களின் நிலை வேறு கட்டத்தில் இருக்கின்றது. வெளிநாடுகளில் உள்ள பழைய மாணவ சங்கங்களின் உதவிகளினால் இக்கல்லூரிகள் தாக்குப் பிடித்துள்ளன. இங்குள்ள பழைய மாணவ சங்கங்கள் கணணி பயிற்சி /ITயில் உதவிகள் செய்ய வேண்டும்.

உதாரணமாக 1015 மாணவர்கள் படிக்கும் மானிப்பாய் இந்துக் கல்லூரியில் ஒரு ஆசிரியர் பயிற்றுகிறார். இவர் IT மட்டுமல்ல கல்லூரியின் நூலகத்திற்கும் பொறுப்பாக இருக்கிறார். ஆக மொத்தத்தில் இவர் ITயும் படிப்பித்த பாடில்லை நூலகமும் ஒழுங்காக நடத்தவில்லை.

மானிப்பாய் இந்துக் கல்லூரி2005ம் ஆண்டு 430 ஆக இருந்த மானிப்பாய் இந்துக்கல்லூரியின் மாணவர்களின் தொகை இவ்வருடம் 1015ஜ எட்டியுள்ளது. வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த 82 மாணவர்களுக்கு மானிப்பாய் இந்துக் கல்லூரியில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. 2004 சமாதானக் காலங்களில் வெளிநாடுகளில் தடல்புடலாக இயங்கிய பழைய மாணவர் சங்கங்கள் தற்போது படுத்து விட்டன. உதவிகள் தொடர்ச்சியாக கிடைப்பதில்லை உதவிகள் தொடர்ச்சியாக கிடைக்காத காரணத்தினால் இந்த பழைய மாணவ சங்கங்களை நம்பி ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் மந்தகதியில் இயங்குகின்றன.

இனி தமிழர்கள் ஏதாவது ஒரு அழுத்தத்தை பெரும்பான்மை இனத்திற்கு கொண்டுவர வேண்டுமாக இருந்தால் அதை பொருளாதார ரீதியாகத்தான் கொண்டுவர முடியும். தமிழ் இனம் பிரபாகரனை நம்பி தமது பாரம்பரிய மண்ணையும் அதன் அரைவாசி மக்களையும் நாட்டைவிட்டு துரத்தியதுடன் பலரை மாழ வைத்தது. பின்னர் சம்பந்தனின் கிழட்டு தீர்க்கதரிசனம் பொன்சேகா என்ற நொண்டிக் குதிரைக்குப் பின்னால் ஓட வைத்து சிங்கள பெரும்பான்மையினத்தின் கோபத்துக்கு தமிழினத்தை மேலும் உள்ளாக்கியது. இப்போது புலம் பெயர் வெங்காயங்களின் சிறீலங்காவை புறக்கணிப்போம் கோஷசத்தினால் எமது இனத்திற்கு இருக்கும் கடைசி சந்தர்ப்பத்தையும் பாழாக்க நினைக்கின்றது.

Show More
Leave a Reply to மாயா Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

170 Comments

  • leftist
    leftist

    மோட்டுத்தனமான கட்டுரை. மாக்சிய லெனினிச மாவோசிய கஸ்ரோசிய சிந்தனையின் அடிப்படையில் பார்த்தால் கொன்ஸ்ரன்ரைன் ஒரு முதலாளித்துவ வாதியகவே தெரிகிறார். நாம் லண்டனில் இருந்து புரட்சி செய்யத் துடிப்பது என்ன தவறு. ரொஸ்கி கட்டாயமா இது சரி என்று சொல்லியிருப்பார். இல்லை குறைந்தது நாவலன் ரஜாகரன் அசோக் ஆவது சொல்லியிருப்பார்கள். இப்போதைக்கு இவ்வளவுதான்

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    //1997ல் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு இருந்ததைப் போல் “ஆகா..ஓகோ..” என்ற வரவேற்பு எந்த தமிழ் கட்சிகளுக்கும் இல்லை//

    தொடர்ந்து சில நாட்களாக எனது கணனியில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால், தேசம்நெற் உட்பட பல இணையத்தளங்களை பார்க்க முடியாது போய்விட்டது. இன்றுதான் மீண்டும் கணனியைச் சரிசெய்து மீள முடிந்துள்ளது.

    முதலில் யாழின் தற்போதைய நிலைமைகளை எம் கண் முன்னே கொண்டுவந்த, கொன்ஸ்ரன்ரைன் ரி. அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துகளும். மேலே நான் இணைத்துள்ள தங்களின் கூட்டணி பற்றிய தகவலில் 1977 என்பதை தவறாக 1997 எனப் பதிந்து விட்டீர்களென நினைக்கின்றேன்.

    முன்பு சமாதான காலத்தில் நான் யாழ்ப்பாணம் சென்றிருந்த போது, கீரிமலை உட்பட சில இடங்களில் உணவு விடுதிகள் சிலவற்றை சிங்கள இராணுவத்தினரே நடாத்திக் கொண்டிருந்ததை அவதானிக்க முடிந்தது. தற்போது நீங்கள் குறிப்பிடும் மதுபானக்கடைகளை சிங்கள இராணுவத்தினரா அல்லது சிங்களப் பொதுமக்களா நடாத்துகின்றனர்??

    உண்மையில் முன்பு ஒரு காலத்தில் கல்வியில் மிகச்சிறந்து விளங்கிய யாழ்ச் சமூகம் இன்றுள்ள நிலை வேதனையளிக்கின்றது. இந்த நிலையை மட்டுமல்லாமல், இலங்கையின் எல்லாப் பகுதிகளிலும் வாழும் தமிழ் மக்களின் கல்வி மேம்பாட்டிற்காக உதவ வேண்டிய கடமை “புலம்” பெயர்ந்த, “புலன்” பெயராத ஒவ்வொரு தமிழருக்கும் உண்டு. முன்பு அழிவுகளுக்காக ஆயுதம் வாங்க அள்ளிக் கொடுத்தவர்கள், இன்று ஒரு ஆக்கபூர்வமான சமுதாயக் கட்டமைப்புகளுக்காக ஏன் கிள்ளிக் கொடுக்கக் கூடத் தயங்குகின்றார்கள் என்பது வேதனையானது. பழைய மாணவர் சங்கங்கள் கூட முன்பு உதவியதை விட அடிக்கடி இரவு விருந்துகளை நடாத்துவதிலேயே முன்னின்றனர். இப்போதுள்ள ஒரே வழி ஒவ்வொருவரும் தாம் சேர்ந்த கிராமங்களை முன்னேற்றும் நடவடிக்கைகளுக்கு உதவ முன்வருவதே. அதற்காக ஏற்கனவே சில கிராமம் சேர்ந்த அமைப்புகள் இப்படியான செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளது போல், ஏனைய கிராம மக்களும் இதனை முன்னெடுக்க முன்வர வேண்டும்.

    மற்றும் தாங்கள் எழுதிய அரசியல் நிலைப்பாடுகள் முற்றிலும் உண்மையானது என்பதை, ஏற்கனவே நான் தொலைபேசி உரையாடல்கள் மூலம் அறிந்துமுள்ளேன். அதனால்த் தான் பல மாதங்களுக்கு முன்னரே இதே தேசம்நெற்றில் தற்போதுள்ள அனைத்து தமிழ் அரசியல்க் கட்சிகளும் ஓரம் கட்டப்பட்டு புது அரசியல்த் தலைமைகள் அந்த மக்களாலேயே தெரிவு செய்யப்பட்டு, அந்தத் தலைமைகளின் பின்னால் தங்களை மேம்படுத்த அந்த மக்கள் தொடர வேண்டுமென எழுதியிருந்தேன். இது காலத்தின் கட்டாயமும் கூட……..

    ::::::::::::::::::::

    நன்றி பார்த்திபன் தவறைத் திருத்தியமைக்கு.
    தேசம்நெற்

    Reply
  • palli
    palli

    // மற்றும் தாங்கள் எழுதிய அரசியல் நிலைப்பாடுகள் முற்றிலும் உண்மையானது என்பதை, ஏற்கனவே நான் தொலைபேசி உரையாடல்கள் மூலம் அறிந்துமுள்ளேன். அதனால்த் தான் பல மாதங்களுக்கு முன்னரே இதே தேசம்நெற்றில் தற்போதுள்ள அனைத்து தமிழ் அரசியல்க் கட்சிகளும் ஓரம் கட்டப்பட்டு புது அரசியல்த் தலைமைகள் அந்த மக்களாலேயே தெரிவு செய்யப்பட்டு, அந்தத் தலைமைகளின் பின்னால் தங்களை மேம்படுத்த அந்த மக்கள் தொடர வேண்டுமென எழுதியிருந்தேன். இது காலத்தின் கட்டாயமும் கூட…//
    புலம் பெயர் சமூகம்(தமிழ்) செய்யவேண்டிய வேலை இதுவேதான்; அதை விட்டு அவருக்கு இவருக்கு என குத்திமுறிவதில் அந்த மக்கள் வாழ முடியாது; தேர்தலில் கூட இவர்களை விட்டு புதியவர்கள் வருவது மிக நல்லது; பாத்திபன் இதுக்காக எந்தவகையிலும் பல்லி உங்களுடன் ஒத்துழைக்க முன்வருவேன்,

    Reply
  • Suresh
    Suresh

    Constantine , நீங்கள் யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் நடந்த நிகழ்விலும் கலந்து கொள்ள சென்றிர்கள். யார் ஏற்பாடு செய்தார்கள்? அங்கு என்ன நடந்தது? நீங்கள் யார் யார் சென்றிர்கள்? என்ன கதைத்தீர்கள்? என்பதை எழுத முடியுமா? நாங்களும் தெரிந்து கொள்ள ஆவலாய் உள்ளோம். நன்றி

    Reply
  • Sri vaishnavi
    Sri vaishnavi

    வடமாகாணப் புணரமைப்பில் புலம் பெயர் தேசப் புத்திஜீவிகளை இணைக்க ஆலோசனை! 24 January 2010
    இலங்கையின் வட மாகாணத்தில் புனர்வாழ்வு புனரமைப்புப் பணிகளை மேம்படுத்துவதற்காக புலம் பெயர்ந்த தமிழ் புத்திஜீவிகளின் ஆலோசனைகளையும் செயற்றிட்டங்களையும் பசீலிப்பதற்காக அண்மையில் யாழ். பல்கலைக்கழகத்தில் கருத்தரங்கு ஒன்று நடைபெற்றது.

    இக் கருத்தரங்கை அவுஸ்திரேலியாவில் வதியும் டொக்டர் நொயல் நடேசன் சமூக சேவைகள் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அனுசரணையுடன் ஒழுங்கு செய்திருந்தார். யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசியர் என். சண்முகலிங்கன் தலைமையில் கடந்த 12ஆம் திகதி பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் நடந்த இக்கருத்தரங்கில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வட கிழக்கு ஆளுநர் சந்திரஸரஸ்ரீ மற்றும் அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, நோர்வே பிரதிநிதிகள், பல்கலைக்கழக விவுரையாளர்கள், யாழ். மேயர் திருமதி யோகேஸ்வரி பந்தணராஜா உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

    இக்கருத்தரங்கில் உரையாற்றியவர்கள் சக மேம்பாடு குறித்த சிந்தனைகளையே தமது கருத்துக்களில் வலியுறுத்தினர். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் சகவியல் பீடத்தை அபிவிருத்தி செய்வதற்காக நோர்வேயிலிருந்து வருகை தந்த திரு. அருள்நேசன் சில திட்டங்களை பந்துரை செய்தார்.

    முதற்கட்டமாக மூன்று மாத காலத்திற்காவது வெளிநாடுகளில் வதியும் சமூகவியல் தொடர்பான விவுரையாளர்களையும் யாழ். பல்கலைக்கழக நிருவாகத்துடன் தொடர்பு கொள்ளச் செய்து குறிப்பிட்ட பீடத்தை மேம்படுத்துவதென தீர்மானிக்கப்பட்டது.

    யாழ். அபிவிருத்தி வங்கி ஒன்றை ஸ்தாபிப்பதன் மூலம் வெளிநாட்டு உதவிகளுடன் பல புனர்வாழ்வு புனரமைப்புப் பணிகளை மேற்கொள்வது எனவும் ஆலோசிக்கப்பட்டது.

    வட, கிழக்கு ஆளுநர் சந்திரஸ்ரஸ்ரீ, அரசாங்கம் செயற்படுத்த திட்டமிட்டுள்ள அபிவிருத்திப் பணிகளை காட்சிப்படுத்தல் முறையில் விளக்கி உரையாற்றினார். யாழ். மாநகர நவீன நிர்மாணம் தொடர்பாக தமது கருத்துக்களை தெரிவித்த டாக்டர் நொயல் நடேசன், அவுஸ்திரேலியாவில் கன்பரா நகரம், இலங்கை புதிய நாடாளுமன்றம் ஆகியன உருவாக்கப்பட்ட வேளைகளில் அதனதன் வடிவமைப்பு தொடர்பாக சர்வதேச தியில் போட்டிகள் நடத்தப்பட்டதை நினைவு படுத்தினார்.

    சுமார் 280 கோடி ரூபா செலவில் மேற்கொள்ளப்படவுள்ள வட மாகாண புனரமைப்புப் பணிகளில் புலம் பெயர் நாடுகளில் வதியும் மருத்துவர்கள், பொறியியலாளர்கள், கட்டிடக் கலைஞர்கள், உளவியல் மனநல மருத்துவர்களையும் இணைத்துக் கொள்வது என இக்கருத்தரங்கில் ஆலோசிக்கப்பட்டது.-4tamilmedia.com

    Reply
  • Kusumpu
    Kusumpu

    ஐயோ பாவல்குளம் போகுது குடியேத்துறாங்கள்: அம்பாறை போகுது நாட்டைப் பிரியுகோ என்று கூயோ மாயோ என்று கத்திக்குளறிய அரசியல் தமிழ்பட்டாளத்தின் கூத்தணி வாரிசுகள் இதற்கு என்ன சொல்லப்போகினம். குறிச்சியள் போகுது என்று கூத்துப் போட்டு கூட்டணி சிங்களவர் நடுவீட்டுக்குள் குந்தியிருக்கிறார்கள் என்ன சொல்லப் போகிறார்களாம். சிலவிடயங்களைச் சொல்லாமல் செய்வதை விட்டுவிட்டு கத்திக் குளறியதால் வந்த வில்லங்கம் இது. அன்று பண்டா தொடக்கி வைத்ததை யாழ்பாணத்தைப் பிடித்ததனூடாக முடிக்கத் தொடங்கியவர் சந்திரிகா. மீதியை முழுமையாக முடித்தவர் மகிந்தர். கொழும்பில் எங்கடை சனம் எப்படியும் திரியலாம் சிங்களவன் மட்டும் யாழ்பாணத்தில் இருக்கக் கூடாது என்ற பெரு வெளிச்சங்கள் எமது அரசியல்வாதிகள். ஒரு கேள்வி கொன்ரன்ரையின்: இராணுவம் யாழ்பாணத்தில் நிற்பதனால்தான் சிங்களவரின் நடமாட்டம் சுமாராய் இருக்கிறதா? இராணுவம் அகற்றப்பட்டாலும் சிங்களவர்கள் யாழ்பாணத்தில் வாழக்கூடிய நிலை இருக்குமா? ஏன் இந்தக் கேள்வி என்றால் இரு சமூகமும் துவேசத் ஊட்டி வளர்கப்பட்டன ஓரிரு நாட்களில் மாறுவது என்பது அதிசயமே. இயலாத்தனமையில் இளசுகள் இருக்காலாம். குண்டு கொண்டு ஓடித்திருந்த சமூகம் சும்மா இருக்குமா என்பது கேள்விதான். அடிவேர் களுவாதவரை கொடி நஞ்சுகாய்தான் காய்க்கும்.

    Reply
  • thurai
    thurai

    தமிழரின் மனநிலை முதலில் மாறவேண்டும். தமிழர் பகுதிகளில் சிங்களவர் வாழ்வதையும் போய்வருவதையும் ஏற்ரேயாக வேண்டும். முன்பு ஒரு காலத்தில் பொலிஸ் தொழில் பார்க்கவிரும்பும் சிங்களவர்கள் யாழ்ப்பாண்த்தில் வேலை செய்யவே விரும்பினார்கள். அங்குதான் அமைதியும் மதிப்புமிருந்தது. பின்பு யாழ்ப்பாணமென்றால் வேலையே வேண்டாமென ஓடிய காலமாகியது. இன்று தமிழர்கள் இராணுவம் யாழ்ப்பாணத்தில் இருக்க வேண்டுமென விரும்புவது முற்ரிலும் உண்மை.

    வாழ்ந்தாலும், தாழ்ந்தாலும், இறந்தாலும் பிறந்த மண்ணிலேதான் என்ற மனநிலை மாற வேண்டும். லண்டன், பரிஸ், நீயூயோர்க் நகரஙகளில் வாழவேண்டும் வானொலிகளில் அரசியல் பேசவேண்டும், தமிழீழத்திற்காகப் போராட வேண்டும் இது நடக்கக்கூடிய காரியமா?

    துரை

    Reply
  • தாமிரா மீனாஷி
    தாமிரா மீனாஷி

    இவ்வளவு நாளும் கேட்ட செய்திகளில் இருந்து மாறுபட்ட உண்மை நிலவரத்தை அறியத் தந்தமைக்காக திரு. கொன்ஸ்ரன்ரைன் பாராட்டுக்குரியவர்..அரசியல் பற்றிய கருத்துக்களை எவரும் ஏற்க மறுத்தாலும்கூட மக்களது அவல நிலையை அவர் சரியாகவே வெளிப்படுத்தியுள்ளார் என்பதை மறுக்க முடியாது.. அவருடைய சேவை(லிற்றில் எய்ட்) தொடர வேண்டும்.. தமது மக்கள் மீது உண்மையான கரிசனை கொண்டவர்கள் தமது ஆதரவை தொடர்ந்து வழங்க வேண்டும்.. அத்துடன் இதுவரையில் போராட்டத்திற்கென பணம் சேர்த்து அதற்குப் பொறுப்பாக இருந்தவர்கள் தாமாக முன்வந்து அந்தப் பணத்தை எவ்வித பலனும் கிடைக்காத வாக்களிப்பு, அரசாங்கம் அமைத்தல் நடவடிக்கைகளில் வீணாக்காமல் மக்களுக்குப் பயன்படும்படி கொடுத்து உதவ வேண்டும்… அதைவிட முக்கியமானது.. மக்களுக்கென்று இனிமேல் பணம் சேர்க்க முற்படுபவர் அனைவரும் தமது கணக்குகளை அனைவரும் எப்போதும் அறியக் கூடிய விதத்தில் (லிற்றில் எய்ட் போன்று) பேண வேண்டும்..

    Reply
  • ஜெயராஜா
    ஜெயராஜா

    அனைத்து தமிழ் அரசியற் கட்சிகளும் ஓரங்கட்டப்பட்டு புது அரசியல் தலைமையில் அந்த மக்களாலேயே தெரிவு செய்யப்பட்டு அந்த தலைமைகளின் பின்னால் தங்களை மேம்படுத்த அந்த மக்கள் தொடர வேண்டும். இது ஆரோக்கியமான கருத்து. ஆனால் தேர்தலுக்கு குறிப்பிட்ட சில மாதங்களே உள்ள நிலையில் இது சாத்தியப்படாத ஒன்று. புலம்பெயர் நாடுகளில் இருந்தும் தேர்தலுக்கு களமிறங்க சிலர் தயாராம். இவர்கள் முன்பு தோழர் டக்ளஸ் மூலம் மகிந்தாவுக்கு அறிமுகமானவர்கள் சிலர் தேர்தலுக்குப்பின் நேரடியாக மகிந்தாமூலம் தேர்தலில் குதிக்க உள்ளார்கள்.

    யாழ் மாவட்டத்தில் கள்வரின் நடவடிக்கை அறவே இல்லை என்பது கொஞ்சம் ஜீரணிக்க முடியாமல் உள்ளது. கொழும்புத்துறை பகுதிகளில் வசிப்பவர்களுடன் கதைத்தபோது கள்வர் தொல்லைதான் தாங்க முடியாதுள்ளது என்ற தகவலும் கிடைத்தது.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    // ஆனால் தேர்தலுக்கு குறிப்பிட்ட சில மாதங்களே உள்ள நிலையில் இது சாத்தியப்படாத ஒன்று. – ஜெயராஜா //

    உங்கள் கூற்று நியாயமானதாக இருந்தாலும், இன்றைய நிலையில் முழுமையாக முடியாவிட்டாலும், இத்தேர்தலில் இந்நடவடிக்கையின் ஆரம்பமாக இருக்க வேண்டும். இப்போது தொடங்கினால்த் தான் அடுத்து வரும் தேர்தல்களில் முழுமையான மாற்றங்களை கொண்டு வர முடியும். இந்தப் பாராளுமன்றத் தேர்தலின் போது இதை ஆரம்பிக்காது விட்டால், இன்னும் 6 வருடங்கள் காத்திருக்க வேண்டிய நிலையே ஏற்படும். தற்போது புதியவர்கள் ஒரு கட்சி ஆரம்பித்துப் போட்டியிடுவதன் மூலம், சில ஆசனங்களைக் கைப்பற்றலாம். இந்த ஆசனங்கள் மூலம் தமது கட்சியையும் மக்கள் செல்வாக்கையும் வரும் 6 வருடங்களில் வளர்த்துக் கொள்ளவும் முடியும்……..

    Reply
  • NANTHA
    NANTHA

    இந்த கட்டுரை மூலம் “வெளிநாடு தமிழர்கள்” இலங்கை தமிழர்கள் பற்றி “கவலைப்பட்டு” காசு தெண்டி, அந்த பணம் “இலங்கை” போய் சேரவில்லை என்பது புலனாகிறது. அதே வேளையில் புலிகள் “தமிழர்களிடம் கொள்ளையடித்த பணத்துக்கும் என்ன நடந்தது என்று தெரியவில்லை.

    புலிகளின் கொள்ளையடிப்புக்கும் கத்தோலிக்க பாதிரிகளுக்கும் நிறைய தொடர்புகள் உண்டு. தற்போது “கத்தோலிக்க” கோவில்கள் கட்டப்படுகின்றன.

    தாமஸ் சவுந்தரநாயகம் அப்பட்டமான ‘பொய்களை” அவிழ்த்து விட்டுக்கொண்டிருக்கிறார். கீழ் வரும் செய்தியை படிக்கவும். தமிழரில் பத்து சதவீத கத்தோலிக்கர்கள் எப்படி அத்தனை “கோவில்களை” வைத்திருந்தார்கள் என்பது இப்போதும் மர்மமாக உள்ளது. தரை மட்டமாகியுள்ள “புலிகளின்” கட்டிடங்களையும் பாதிரி சவுந்தர நாயகம் உரிமை கொண்டாடுகிராரோ தெரியவில்லை. ஏனென்றால் அவரின் கத்தோலிக்க பாதிரிகள் “வன்னியில்” புலிகளோடு சேர்ந்து செய்த அட்டகாசங்களை மக்கள் மறக்கவில்லை.

    சவுந்தர நாயகம் “இப்போதுதான்” தெரிகிறது என்ற பாணியில் “பொய்களை” அவிழ்த்து விடுவது எதற்கு? மன்னார் பாதிரி மாடு மாதாவை தூக்கிக் கொண்டு “புலிகளின்” பகுதிக்குள்” ஓடியது எதற்கு?

    இப்போது “தலைவர்களில்லா” தமிழர்களுக்கு “தலைவர்” ஆகியுள்ள சவுந்தரநாயகம் போன்றவர்கள் “புலிகளோடு” கூடவிருந்து புலிகளின் அராஜகம் அனைத்துக்கும் துணை போனவர்கள். “தமிழ் தலைவர்கள்” அதிலும் இந்து தலைமைகள் எப்படி புலிகள் ஒழித்தார்கள் என்பது பாதிரிகளுக்கு தெரியும். அது மாத்திரமல்ல “அந்த” கொலைகளில்” கத்தோலிக்க பாதிரிகளின் “ஒரு கை” உள்ளது.

    தமிழர்களிடம் புலிகளால் கொள்ளையிடப்பட்ட பணம் கண்டிப்பாக பாதிரிகள் வசம் உண்டு. வெளிநாடுகளில் “புலிகளின்” பணம் ரம்பாவுக்கு மோதிரம், கார் என்று மாறிக் கொண்டிருக்கிறது.

    http://www.ucanews.com/2010/02/05/bishop-gets-first-glimpse-of-final-battlefield

    SRI LANKA – Bishop’s gets glimpse of Tamils’ final battlefield
    Published Date: February 5, 2010

    A church in Jaffna being renovated following the civil war
    JAFFNA, Sri Lanka (UCAN) – Tamil Bishop Thomas Savundaranayagam has visited the civil war’s final battlefield for the first time since the fighting ended, and said rebuilding lives and churches in the area was an “unbearable burden” on the people there.

    The bishop is the first to be allowed to visit the war zone after fighting ended last May. The government still prohibits civilians, UN agencies, NGOs and the media from visiting the area. At this week’s feast of the Presentation of Our Lord in Jaffna, he appealed to Tamils not to spend lavishly during church festivals but help displaced people instead.

    Bishop Savundaranayagam, visibly shaken by his unpublicized visit to the war zone on Jan. 29, described the chaos he found there, particularly in the Catholic fishing village of Mathalan on the east coast. “Devastation is everywhere” and threatens our people’s future, he said.

    Thousands of people were killed, injured or disabled in the final battle near Mathalan and some 300,000 were forced to flee the area. In Jaffna diocese alone, 110 churches belonging to 17 parishes and 15 Religious houses have been abandoned.

    The bishop said many had already been reclaimed by the jungle. “Villages and rice fields are covered with jungle and undergrowth,” the bishop said. People have lost their life savings. It is going to be an unbearable burden to our people to rebuild,” the bishop told UCA News.

    He said he saw the final battlefield where Tamil Tiger rebels had been cornered by government forces and also visited devastated villages nearby.

    He described a barren landscape:
    • Church buildings are demolished.
    • Religious statues are all damaged.
    • Rice fields are overgrown with shrubs.
    • Herds of cattle and goats have disappeared.
    • Homes have been reduced to rubble.
    • Heaps of burned vans, buses, cars and motor cycles clog the roads

    An emotional Bishop Savundaranayagam wondered whether civil life could be restored. The Tamil prelate also traveled with the army to the farming villages of Mankulam, Oddusuddan and Puthukudiyiruppu.

    The government announced recently that people would be resettled and places of worship reconstructed, work which had already begun, according to Pandu Bandaranayaka, the Deputy Minister of Religious Affairs and Moral Upliftment.

    But the scale of the task is enormous. Jaffna diocese and the nearby Mannar diocese have 148 abandoned churches. Apart from those hit by the fighting, some churches inundated by the 2004 tsunami have not yet been renovated.*

    *This paragraph has been corrected. The earlier version inadvertently suggested Mannar diocese alone has 148 abandoned churches.

    Reply
  • palli
    palli

    //புலம்பெயர் நாடுகளில் இருந்தும் தேர்தலுக்கு களமிறங்க சிலர் தயாராம். இவர்கள் முன்பு தோழர் டக்ளஸ் மூலம் மகிந்தாவுக்கு அறிமுகமானவர்கள் சிலர் தேர்தலுக்குப்பின் நேரடியாக மகிந்தாமூலம் தேர்தலில் குதிக்க உள்ளார்கள். //
    அதுக்குதான் வட்டுகோட்டையை பிடிக்க இங்கு தேர்தல் நடக்குதே, அதில் ஏதாவது பங்கு கேக்க வேண்டியதுதானே, தேர்தலில் நிற்ப்பவர் யாராக இருந்தாலும் அந்த மக்களுடன் இருப்பவராக இருக்க வேண்டும்; (அதுக்காக பாராளமன்றம் போகவேண்டாமா என நந்தா கேக்க கூடாது) அப்போதுதான் அவர்கள் இன்ப துன்பம் தேவைகள் புரியும், எத்தனையோ படித்த பொதுனலவாதிகள் அங்கு இருக்கிறார்கள். அவர்கள் முகம் அந்த மக்களுக்கு தெரியும் என்பதால் அவர்கள் வெற்றி பெறவாய்ப்புக்கள் அதிகம்; அங்கே ஒரு புதியவரை தெரிவு செய்யும் போது அவருடன் கடந்தகால அமைப்பை சேர்ந்தவர்கள் போட்டியிடுவது கடினம், காரனம் இவர்களில் பலர் கொழும்பிலும் புலத்திலும்தான் இருக்கிறார்கள்?ஆனால் வருபவர்களும் விலை போகாதவர்களாய் அந்த மக்களே தெரிவு செய்யலாம்; அத்துடன் இந்த புது வரவுகள் பலரை (பளய) மக்களை நோக்கி போக வைக்கும்; அப்போது இதுவரை அவர்கள் செய்த நல்ல காரியங்களுக்கு (குறிப்பாய் கூதமைப்புக்கு) ஒரு பாராட்டு நடத்தி வீட்டுக்கு வழி அனுப்பலாம்; அதுக்காக புதிதாக பல அமைப்புக்கள் ஆரம்பிக்க கூடாது;அது ரெம்பதப்பு;

    Reply
  • தமிழ்வாதம்
    தமிழ்வாதம்

    நந்தா!
    /தமிழர்களிடம் புலிகளால் கொள்ளையிடப்பட்ட பணம் கண்டிப்பாக பாதிரிகள் வசம் உண்டு. வெளிநாடுகளில் “புலிகளின்” பணம் ரம்பாவுக்கு மோதிரம், கார் என்று மாறிக் கொண்டிருக்கிறது./ NANTHA on February 12, 2010 5:13 am

    உங்கள் கூற்றுப்படி இந்துக்கள் முட்டாள்கள், காம கோடிகள். பாதிரிகள் பலமானவர்கள்,அறிவாளிகள் என்று பறைசாற்ற விரும்புகிறீர்களா?

    Reply
  • msri
    msri

    கொன்ஸ்ரன்ரைன் அவர்களின் கட்டுரையின் ஆதங்கம் புரிகின்றது! இதற்கான நிதிசேகரிப்பை தேசம்நெற்றிற்கு ஊடாக செய்தால் என்ன? செய்தால் எம்மாலான பங்களிப்பையும் செய்யலாம்! இதில் தாமிரா மீனாஷி சொல்லும் விடயத்தை கையாண்டால்> விமர்சனங்களுக்கு இடம் வராது.

    Reply
  • Gajan
    Gajan

    /இராணுவம் யாழ்பாணத்தில் நிற்பதனால்தான் சிங்களவரின் நடமாட்டம் சுமாராய் இருக்கிறதா? இராணுவம் அகற்றப்பட்டாலும் சிங்களவர்கள் யாழ்பாணத்தில் வாழக்கூடிய நிலை இருக்குமா? ஏன் இந்தக் கேள்வி என்றால் இரு சமூகமும் துவேசத் ஊட்டி வளர்கப்பட்டன //
    குசும்பு கொழும்பில் இருந்துகொண்டே மகிந்தாவுக்கு எதிராக 4 தொகுதிகளில் தமிழ்ச் சனம் வோட்டுப் போட்டுள்ளது. யார் பாதுகாப்பில் இருந்தார்கள் அவர்கள். நீங்கள் இன்னமும் வெளிநாட்டு உசுப்பேத்துற பாணியை விடேலை.

    /குண்டு கொண்டு ஓடித்திருந்த சமூகம் சும்மா இருக்குமா என்பது கேள்விதான்./குசும்பு
    பதில்
    /ஆயுதப் போராட்டம் என்பது ஒட்டுமொத்தமாக ஒரு தூஷண வார்த்தைபோல் உணரப்படுகின்றது./கட்டுரையாளர்

    /அடிவேர் களுவாதவரை கொடி நஞ்சுகாய்தான் காய்க்கும்.// அதாலைதான் தலையை ஆணிவேரோடு கோடரிகொண்டு கொத்தி எடுத்தது. உங்களுக்கு இன்னமும் ‘இருக்கிறார்’ சலனம் இருக்குப்போல

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    இந்தக்கட்டுரை(?) யின் அடிநாதம் கட்டுரையாளரால் அடுத்து எழுதப்பட்ட ஆங்கில அறிக்கையின் டிஸ்கிளெய்மரில் (Disclaimer) இல் இருக்கிறது!
    Conflict of interest !

    Reply
  • NANTHA
    NANTHA

    ஆளில்லா ஊரில் யாரும் ஆலயங்கள் கட்டமாட்டார்கள். இந்த கட்டுரை எழுதியவருக்கு “இந்து” ஆலய நிர்மாணங்கள் “தொல்லை’ கொடுக்கிறது. “கத்தோலிக்க” பாதிரிகள், அதாவது புலிகளின் கொலைகார, கொள்ளைக்கார பங்காளிகள், எப்படி வன்னியில் நூறு வீதம் இந்துக்கள் வாழும் பகுதிகளில் “கத்தோலிக்க” கோவில்களை “புலிகளின்” ஆட்சிக் காலத்தில் கட்டினார்கள் என்று தெரியாதோ? இப்போது அரசாங்கத்திடம் தங்கள் கோவில்களை புனருத்தாரணம்” செய்ய நிதி வேண்டும் என்று கத்தோலிக்க தோமா சவுந்தரநாயகம் கதறுவது எல்லோருக்கும் தெரியும்.

    யாழ்ப்பாணத்தில் தற்போது நடைபெறுவது என்ன என்று பலருக்கும் தெரியும். ஆனால் இந்த கட்டுரையில் “இந்துக்களுக்கும்”, அரச ஆதரவாளர்களுக்கும் எதிராக முடிச்சு போடும் தொனியே தெரிகிறது.

    Reply
  • NANTHA
    NANTHA

    தமிழ்வாதம்:
    இலங்கையில் காமகோடிகள் என்று யாரும் இல்லை. ஆனால் பாதிரிகள் இந்துக்களை” முட்டாள்கள்” என்றுதான் பிரச்சாரம் செய்து கொண்ருக்கிறார்கள்.

    அதனை மெய்யாக்குவது போல புலிக்கு ஆதரவான இந்துக்கள் சிலர் பாதிரிகளின் வாலாட்டிகளாக உள்ளனர்.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //…..யாழ்ப்பாணத்தில் தற்போது நடைபெறுவது என்ன என்று பலருக்கும் தெரியும். ஆனால் இந்த கட்டுரையில் “இந்துக்களுக்கும்”, அரச ஆதரவாளர்களுக்கும் எதிராக முடிச்சு போடும் தொனியே தெரிகிறது…// நந்தா

    கே.கே.எஸ் றோட் ‘விஸ்தரிப்பு’ என 27 சைவக்கோயில்கள் பாதிக்கப்படும் என இலங்கை இந்து மகா சம்மேளனம் தெரிவித்துள்ளது. இதையும் ‘கத்தோலிக்க’ பாதிரியளின் வேலை எண்டு சொல்லுங்கோவன்! இதில புகழ் பெற்ற யாழ் இந்துக்கல்லூரியின் முன்பக்க மண்டபம் (மகாத் மாகாந்தி, விவேகானந்தர் ஆகியோர் வந்து போன மண்டபம்) கூட இடிக்கப்படும் ஆபத்து உண்டு. மேலும் ‘இந்து சாதனம்’ என்ற சரித்திரப் புகழ் வாய்ந்த அச்சகம் காணாமல் போகும் நிலை கூட வரப்போகுது. நந்தா மகிந்தாவிட்ட ஒருக்கா சொல்லி ஏதாவது அலுவல் பாருங்கோ!

    Reply
  • nallurkanthan
    nallurkanthan

    Good presentation. However the writer says Singalavar and so on. I have never read any article by Snhlase writers that the presence of thousands of Tamils in Colombo and other places impacted negatively in those areas and it was an issue. But the Tamil writers try to show it in a different way. We have to admit Sihnlese are a much more advanced group than(Jaffna)tamils. We own houses, businesses temples and many. Not a sinhalese political party or any writers made an issue out of it. The presence of our south brothers is a boon for our day to day economic life in jaffna.

    Reply
  • Kathir
    Kathir

    Dear Friend and Comrade Constantine ,I highly appreciate your report because it tells the truth and speak in favour of the majority of the Tamil people who are betrayed by the Saiva,Vellala rulling class and its stooge and culprit Mafia LTTE or Tamil Tigers. Now our immeidate task is to totally defeate the TNA proxy or Tamil National Alliance just like we have already defeated and totally anihilated the Mafia Tamil Tigers with the help of the anti-imperialist, democratic and ordinary Sinhalease people. If it is possible please, give more informations to our diaspora to understand the real situation which is prevailing in the North and East. We have to expose the Old student organizations and Old village associations which are the real representatives of the Saiva, Vellala rulling Class.These are organized in foreign countries by the Mafia LTTE and the Tamil rulling class not for the benefit of the ordinary tamil people who are suffering a lot in the N-E but for their own benefit. Eventhough there have been existing a few pro -people elements within them ,but most of them are the sympathizers of Mafia LTTE ,Home selling brokers,Insurance agents and etc.

    Reply
  • Gajapal
    Gajapal

    சைவக்கோயில்கள் மட்டுமல்ல கத்தோலிக்க கோயில்களுக்கும் சேர்த்து தான். பாடசாலைப் பிள்ளைகள் காலையில் பள்ளிக்கூடம் சென்று இரவு படுத்திருந்த மாடுகள் ஆடுகளின் சாணங்களை கழுவிவிட்டுத்தான் பாடம் படிக்க தொடங்குவார்களாம் இது இப்படி இருக்க இந்த பள்ளிக்கூடத்திற்கு பக்கத்தில் உள்ள சைவக்கோயில் மிகப் பிரமாண்டமான இராஜகோபுரம் கட்டப்பட்டு 45 நாள் கும்பாபிசேகம் நடந்ததாம் இந்த கும்பாபிசேகம் மூலம்தானாம் பயங்கரவாதம் அழிந்ததாம்.

    இது இப்படி இருக்க இந்தப் பள்ளிக்கூடத்திற்கு வந்த கிறீஸ்த்தவ பாதிரியார் உந்த வெள்ளாளர்கள் கோயில் தான் கட்டுவார்கள் இந்த பள்ளிக்கூடத்தை திருத்த மாட்டார்கள் நீங்கள் கிறீஸ்தவர்களாக மாறினால் கிறீஸ்தவ சபை உங்கள் பள்ளிக் கூடத்தை திருத்த உதவி செய்யும் என்று சொல்லி பிராத்திப்போம் பரம பிதாவே….

    ஜந்து ஆறு தடவவைகள் வந்து பிராத்தனை செய்ய பாதிரியாரிடம் கேட்டபோது இந்த வருடம் கிறீஸ்தவ சபையிடம் காச இல்லையாம் அடுத்த வருடம்தானாம் என்று சொல்லியும் இப்ப நீங்கள் கிறீஸ்தவர்கள் என்பதை மறந்து போய்விடாதேங்கோ என்றும் மறைந்த விட்டனராம் இப்படித்தான் தேவ தூதர்கள் வருவார்களும் வந்தவர்கள் இனிமேலம் வருவார்கள் என இவர்களுக்கிடையே பாதிரியாகிவிட்டவர் சொன்னார்.

    30 வருடம் நடாத்தியது போராட்ட பித்தலாட்டம் இல்லாயா?

    வெளிநாட்டிலிருந்து காசை கொண்டுபோய் கோவில் இடித்து இடித்து கட்டப்படுகிறது. குழந்தைகள் பள்ளிக்கூடத்தில் மலசல கூடம் இல்லாமல் கஸ்டப்படுகிறது காலுக்கு செருப்பும் இல்லாமல் மலசல கூடத்திற்கும் பள்ளிக்கூடத்தில்ம் ஏறுகிறார்கள்.

    இந்த பகுத்தறிவு வளர்ச்சிக்கு 30 வருடம் போராடியுள்ளோம். எமக்கு ஒரு போராட்ட இயக்கம் தலைமை தாங்கியுள்ளது அதற்கு ஒரே ஒரு தலைவன் இருந்து பல தியாகங்களை செய்துள்ளனர் என்றும் இந்தப் போராட்டம் மீண்டும் வெடிக்கும் என்றெல்லாம்…..

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    ஆலயம் இடிக்கப்படுகின்றது என்று அடம்பிடிப்பவர்கள். அது பற்றிய முடிவுகள் ஒன்றும் இதுவரை எடுக்கப்படவில்லை என்பதனையும், இது பற்றி சகல தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடாத்தியே முடிவெடுக்கப்படுமென்று யாழ் மாவட்ட ஆளுனர் அவரைச் சந்திந்த இந்து அமைப்புகளிடம் உறுதி மொழியளித்ததை அவர்கள் ஊடகங்களில் தெரிவித்திருந்தும், அதை மறைப்பது ஏனோ??

    ஏழைக் குழந்தைக்கு குடிக்கப் பாலில்லாவிட்டாலும், சாமிக்கு லிற்றர் லிற்றர்களாக பாலாபிசேகம் செய்ய வேண்டுமென்று நினைப்பவர்கள் முதலில் மாற வேண்டும். எத்தனையோ கோவில்கள் பராமரிக்கப்படாமல் பாழடைந்து போய் உள்ளன. அப்போதெல்லாம் அந்தக் கோவில்களில் வராத பாசம் திடீரென அகலப்பாதை அமைக்க இடிபடும் நிலைமை என்றவுடன் மட்டும் பொத்துக் கொண்டு வந்துவிடுகின்றது.

    Reply
  • jo
    jo

    ஒட்டு மொத்தத்தில் தேசம் மதவாத போட்டிக் களமாக மாறிவிட்டது.

    Reply
  • NANTHA
    NANTHA

    சாந்தன்:
    கே கே எஸ் வீதி விஸ்தரிப்புக்கும் இந்த கட்டுரைக்கும் என்ன சம்பந்தம்?

    இந்துசாதனம் அச்சகம் 1987 இல் புலிகளால் பிடுங்கப்பட்டு, அந்தக் கட்டிடத்தில் “ஈழ முரசு” என்ற பிடுங்கிய பத்திரிகையை புலிகள் வெளியிட்டனர். அதன் அச்சு இயந்திரங்கள், எழுத்துக்கள் யாவும் “கிட்டு” கொள்ளையடித்து தனது குடும்ப பத்திரிகையான “முரசொலி”க்கு கொடுத்து வெகு காலமாகிவிட்டது. அதே ஆண்டு அந்த கட்டிடம் இந்திய படையினரால் குண்டு வைத்து சேதப்படுத்தபட்டுள்ளது.

    இந்த வீதி விஸ்தரிப்பு வரும் என்றும் இந்து ஆலயங்கள் உடைக்கப்படும் என்றும் கண்டுதான் பாதிரிகளும், புலிகளும் யாழ்ப்பாணத்தில் எட்டு இந்து ஐயர்களைக் கொலை செய்தார்களோ?

    Reply
  • NANTHA
    NANTHA

    கஜபால்:
    நானும் சிறுவயதில் வன்னியில் வளர்ந்த பொழுது எங்களிடம் முப்பது பசு மாடுகளும் கன்றுகளும் இருந்தன. காலையில் எழுந்தவுடன் நானும் எனது கூடபிறப்புகளும் சாணி அள்ளி பட்டியை துப்பரவாக்கி பின்னர் பால் கறந்து குளித்துவிட்டு அம்மா தரும் சாப்பாட்டை உண்டு விட்டு பள்ளிகூடத்துக்கு ஓடுவோம்.

    அது எப்படி “பாதிரிகளின்” இந்து மத எதிர்ப்பு பிரச்சாரத்துடன் ஒப்பிட முடியும்? பாதிரிகள் செய்வது சுத்த அயோக்கியத்தனம். ஆடு, மாடு தொளுவங்களை சுத்தம் செய்வது மத கடமையல்ல. பொருளாதாரப் பிரச்சனை.

    மாட்டுப்பட்டியை “சுத்தம்” செய்வதும் “இந்து மத கிரியை” என்றுதான் கணக்கு போடுகிறீர்களோ தெரியவில்லை.

    அடுத்தது இலங்கையில் “பாடசாலைகள்” அனைத்தும் அரசாங்கத்தின் உடமையாகி ஐம்பத்தி மூன்று வருடங்களாகி விட்டது. பாடசாலையின் பெயரால் பாதிரிகள் மோசடிப் பிரச்சாரம் செய்கிறார்கள். இலங்கையில் கல்வியும் சுகாதாரமும் அரச உடமைகளாகி பல தசாப்தங்கள் கழிந்து விட்டன. பாடசாலை அபிவிருத்திக்கு அரச உதவியை நாட வேண்டுமே தவிர பாதிரிகளை அல்ல.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    மதங்கங்கள் வேண்டுமா? வேண்டாமா?? என்பதற்கு இருபக்கத்தில் இருந்தும் கணிசமான ஆதரவுவரும். மதங்கள் கடவுள் நம்பிக்கை மனிதனுக்கு சாந்தி வழங்கிறதோ இல்லையோ அரசியலே பிழைப்பாகப் போன இந்த உலகத்தில் வயோதிபர்கள் ஊனமுற்றவர்கள் கபோதிகள் எந்த ஆதரவையும் பெறமுடியாதவர்களிடம் கேட்டுப்பார்த்தால் கடவுள் யார்? என்பதைச் சொல்வார்கள்.

    இது எந்தமதத்தை சேர்ந்தவர்களாலும் இருக்கக்கூடிய அபிப்பிராயம் மட்டுமல்ல நம்பிக்கையும் கூட. மதத்தைவிட மதவெறியே ஆபத்தானது. தமது சுயநல நோக்கற்காக மதத்தை பயன்படுத்தம்போது அதை ஈவிரக்கமில்லாமல் அதை வெறுத்தே ஆகவேண்டும். இரு உடைகள் இருந்தால் போதுமானது. ஒன்று உடுப்பதற்கு மற்றயது உலர்த்தி காயவிடுவதற்கு சொன்ன யேசுநாதர் வட்டிக்கு கொடுப்பவர்களை தேவாலயத்தில்லிருந்து
    விரட்டி துரத்திய யேசுநாதர்களின் உபதேசத்தை வழங்கிய சீடர்களே உலகத்தை கொள்ளையடிக்கவும் காரணமானார்கள். இந்தளவுக்கு இல்லாவிட்டாலும் இதேபோக்கை மற்றைய மதங்களிலும் காணமுடியும்.

    மதத்தில்பற்று வைத்துள்ளவர்கள். அதன் பின்ணணியை ஆய்வுக்கு உட்படுத்துவது அவசியமாகிறது. இது அரசியலை முழுமையாக புரிந்து கொள்வதற்கும் வழிவக்கிறது. அதேநேரத்தில் அதுமதவெறியாகவோ மோதலாகவோ வளர்த்துக் கொள்ளாதவரை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

    Reply
  • vavuniyan
    vavuniyan

    1990 க்குப் பின் வவுனியா நகருள் 65 க்கு மேற்பட்ட இந்துக்கோவில்கள் கட்டப்பட்டுள்ளதாக எனது நண்பர் வவுனியா சென்ற போது மிகக் கவலையோடு தெரிவித்தார்.

    Reply
  • rohan
    rohan

    “அடுத்தது இலங்கையில் “பாடசாலைகள்” அனைத்தும் அரசாங்கத்தின் உடமையாகி ஐம்பத்தி மூன்று வருடங்களாகி விட்டது. பாடசாலையின் பெயரால் பாதிரிகள் மோசடிப் பிரச்சாரம் செய்கிறார்கள். இலங்கையில் கல்வியும் சுகாதாரமும் அரச உடமைகளாகி பல தசாப்தங்கள் கழிந்து விட்டன. பாடசாலை அபிவிருத்திக்கு அரச உதவியை நாட வேண்டுமே தவிர பாதிரிகளை அல்ல.” என்று சொல்லும் நந்தா சுதந்திரக் கட்சி தான் ஆயிரம் பாடசாலைகளை வன்னியில் கட்டியது என்ற தனது கருத்துக்கு இன்னமும் ஆதாரம் தரவில்லை.

    Reply
  • தமிழ்வாதம்
    தமிழ்வாதம்

    நந்தா!
    நீங்கள் மீண்டும்,மீண்டும் மதம் பற்றிக் கதைப்பது ஆரோக்கியமானதாகப் படவில்லை. இனத்தின் எண்ணப்பாடுகள், கடிவாளம் கட்டிய குதிரைகளாக அந்தெந்த எசமானர்களுக்கு ஏற்றதாக பல்வேறு திசைகளில் பயணிப்பது ஈனமாகப் படவில்லையா? பழிகளை மற்றவர் மேல் போட்டு தப்பியோடப் பார்ப்பது மற்றொரு அழிவை நோக்கியதாகத்தான் இருக்கும். வீழ்ந்து போன மக்களை தூக்கி விடாவிட்டாலும், ஏறி மிதிக்காதீர். தீதும் நன்றும் பிறர் தர வாரா’ என்று எம்மினச் சிந்தனையை அறிந்தவன் சொல்லிப் போய் விட்டான். யோசித்துப் பாருங்கள்!என்றும் தமிழ் நட்புடன் தொடர்வோம்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    rohan,
    வன்னிப் பாடசாலைகள் சுதந்திரக் கட்சி அரசு நடந்த காலத்தில் கட்டுப்படவில்லையென்றால், யாரின் காலத்தில் கட்டப்பட்டதென்று தாங்கள் எடுத்து விடலாமே??

    Reply
  • palli
    palli

    // மதம் என்பது என்ன??
    இனத்துக்கும் மதத்துக்கும் என்ன உறவு,?? இனமும் மதமும் மனிதநேயத்துக்கு தேவையா?? கத்தோலிக்கர் எப்போது தமிழர் பிரதேசத்தில் கோவில் கட்டினார்கள் என்பது எனக்கு தெரியாது, அதில் அவர்கள் பட்ட சிரமமோ அல்லது அனுபவமோ யார் அறிவார்?? ஆனால் நான் இருக்கும் நாட்டில் தமிழர் 10000ம் பேர் இருப்பார்களென நினைக்கிறேன் (1988)இரு கோவில்கள் இலங்கை தமிழரால் தொடங்கப்பட்டது; (இன்று கதைவேறு) ஆக நாம் வாழும் நாட்டில் நமக்காக ஒரு இரு கோவில்கள் கட்டுவதோ அல்லது தொடங்குவதோ இயல்புதானே, அதுக்கேன் கத்தோலிக்கர்மீது மட்டும் கடுப்பு, இலங்கை அகதி தமிழர் செய்யும் அடாவடிதனத்தில் ஒரு வீதம் கூட அன்று கத்தோலிக்கர் (அவர்கள் ஆண்டபொழுது) செய்திருப்பார்கள் என நான் நினைக்கவில்லை,

    மனிதனேயம் வேண்டும்!! அது மதத்திடம் இல்லை; இனத்திடம் இல்லை; குலத்திடம் இல்லை; மனிதனிடம் இருக்க வேண்டும்; ஆனால் மேலே குறிப்பிட்ட மூன்றும் அதுக்கு தடையாயின் அதை குப்பையில் தூக்கிபோட சொல்ல பெரியார்தான் வரவேண்டுமா?? நம்மால் முடியாதா??

    Reply
  • thurai
    thurai

    புத்தசமயத்தவர்கள் புத்தரின் சிலையுடன் தமிழ் தெய்வங்களின் சிலைகளையும் வைத்து வணங்குகிறார்கள். தமிழர்கள் மட்டும் புத்தரின் சிலையை வெறுக்கின்றார்கள். இதுவும் புலிப்பால் குடித்து வளர்ந்தவர்களின் குணம்போல் இந்துப்பால் குடித்தவர்களின் குணம்தான். மனதிற்கு விரும்பிய உணவை யாரும் உண்ணபதுபோல விரும்பிய சம்யத்தில் யாரும் சேரலாம் விடலாம்.

    இதனை பெரிதுபடுத்துவதும் விவாதிப்பதும் ஈழத்தமிழர்களிற்கு அவசியமேயில்லை

    துரை

    Reply
  • NANTHA
    NANTHA

    ROHAN:
    ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியில் பாடசாலைகள் கட்டப்பட்டது இல்லை என்கிறீர்களா? அப்படியாயின். வடக்கு-கிழக்கில் பாடசாலைகளை கட்டியவர்களையும் விபரங்களையும் தந்தால் நல்லது.

    Reply
  • NANTHA
    NANTHA

    பல்லிக்கு வரலாறு தெரியவில்லை. போர்த்துகீசர்( கத்தோலிக்கர்கள்) ஆட்சிக் காலத்தில் சகல இந்துக் கோவில்களும் இடித்துத் தரைமட்டமாக்கப் பட்டன என்பதுதான் வரலாறு. இந்துக்கள் மத வழிபாடு செய்ய முடியாது என்றும் அப்படி செய்பவர்கள் தண்டனைக்குள்ளாவார்கள் என்றும் போர்த்துகீசர் சட்டம் போட்டிருந்த வரலாறு படித்துத்தான் அறிய வேண்டும். நல்ல காலம் “ஒல்லாந்தர்கள்” வந்து கத்தோலிக்கர்களின் கொட்டத்தை அடக்கினார்கள்!

    புலிகள் வந்தவுடன் அவர்களோடு சேர்ந்து பாதிரிகள் எப்படி அட்டகாசம் செய்தார்கள்? கொல்லப்பட்ட இராணுவத்தினரின் சடலங்களை “இந்து” கோவில்களுக்கு முன்னால் போட்டு காட்சி நடத்திய புலிகள் யாருடைய கூட்டாளிகள்?

    படிப்பறிவில்லாத புலிக் கிரிமினல்களும், கத்தோலிக்க பாதிரிகளும் வேறல்ல என்பது என் கருத்து. அப்படி இல்லை என்றால் புலிகளுடன் கத்தோலிக்க பாதிரிகள் சேர்ந்து கொட்டம் அடித்த காரணத்தை சொல்லுவீர்களா?

    Reply
  • NANTHA
    NANTHA

    தற்போது வத்திக்கானில் உள்ள போப் ஒரு நாசி பட்டாளக்காரன். அது மாத்திரமல்ல “இந்த நூற்றாண்டு முடிவதற்குள் இந்தியாவையும், இலங்கையையும் கத்தோலிக்க நாடாக்குவதாக” சபதம் வேறு செய்துள்ள நிலையில் கத்தோலிக்க கூட்டம் விஷப் பாம்புகளே. இந்துமதமும், பவுத்த மதமும் மதங்களே இல்லை என்று போப் சொன்னதன் அர்த்தம் என்ன?

    தவிர “கத்தோலிக்க” ஆட்சியில் நடந்த கொடுமைகளுக்கு மன்னிப்பு கோர முடியாது என்று போப் சொல்லியிருப்பது எதற்காக? ஆனால் கத்தோலிக்க ஹிட்லர் யூதர்களை கொன்றதற்காக இதே போப் மன்னிப்பு கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்துக்களையும், பவுத்தர்களையும் “அழிப்பது” என்பது போப்பின் தற்போதைய கொள்கை. அதனைச் செய்ய எந்த “கிரிமினல்களுடனும்” கத்தோலிக்க கோஷ்டிகள் சேருவார்கள். இலங்கையில் வடக்கு-கிழக்கை பிடித்து கிழக்கு திமோர் மாதிரி ஒரு கத்தோலிக்க ராஜ்யத்தை உருவாக்க முயன்று அது தோல்வியில் முடிந்துள்ளது. போப்பின் முடிவு அல்லது கருத்துக்கள் “பிழை” என்று எந்த கத்தொலிக்கனாவது இங்கு வந்து பதில் சொல்லட்டும்.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //…ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியில் பாடசாலைகள் கட்டப்பட்டது இல்லை என்கிறீர்களா? அப்படியாயின். வடக்கு-கிழக்கில் பாடசாலைகளை கட்டியவர்களையும் விபரங்களையும் தந்தால் நல்லது…..//
    நந்தா நன்றாக கதை விடுகிறீர்கள், பார்த்திபன் கதையின் ரக்கை மாற்றுகிறீர்கள். ரோஹன் கேட்டது நந்தா சொன்ன 1000 பாடசாலைகள் பற்றி. அவர் ஒன்றுமே கட்டப்படவில்லை எனச் சொல்லவில்லை என நினைக்கிறேன். நந்தா 1000 பாடசாலைகள் (ஆயிரக்கணக்கான என சொன்னதாக ஞாபகம்) லிஸ்றைக் கேட்கிறார்.

    மேலும் வடகிழக்குப்பாடசாலைகளில் தலைசிறந்த கல்லுரிகளில் அதிகம் ‘பாதிரிகள்’ கட்டியது. அப்பாடசாலைகள் மட்டுமல்ல தெற்கிலும் அதிகம் அவர்களே கட்டினர். உங்கள் லொஜிக்படி ஸ்ரீலங்கா இங்கிலாந்திடம் சுதந்திரமே கேட்டிருக்கக்கூடாது. ஏனென்றால் அவர்கள் ’ஆயிரக்கணக்கான’ பாடசாலைகள் கட்டினர்!!

    Reply
  • thurai
    thurai

    //படிப்பறிவில்லாத புலிக் கிரிமினல்களும், கத்தோலிக்க பாதிரிகளும் வேறல்ல என்பது என் கருத்து. அப்படி இல்லை என்றால் புலிகளுடன் கத்தோலிக்க பாதிரிகள் சேர்ந்து கொட்டம் அடித்த காரணத்தை சொல்லுவீர்களா?//

    இது தவறான கருத்து. எத்தனையோ கத்தோலிக்க பாதிரிகள் புலிகளிற்கு எதிராக் ரகசியமாக் செயற்பட்டுள்ளார்கள். இன்று உலகமுழுவதும் உள்ள இந்துக்கோவில்கள் அனேகம் புலிகளின் ஆதிகத்தின் கீழ்தான் அன்றும் இன்றும் உள்ளது. அங்கு பூசை செய்யும் பூசாரிகள் எல்லாம் புலியின் கொலைகாரர்களா?

    //இந்துக்களையும், பவுத்தர்களையும் “அழிப்பது” என்பது போப்பின் தற்போதைய கொள்கை. அதனைச் செய்ய எந்த “கிரிமினல்களுடனும்” கத்தோலிக்க கோஷ்டிகள் சேருவார்கள். இலங்கையில் வடக்கு-கிழக்கை பிடித்து கிழக்கு திமோர் மாதிரி ஒரு கத்தோலிக்க ராஜ்யத்தை உருவாக்க முயன்று அது தோல்வியில் முடிந்துள்ளது. போப்பின் முடிவு அல்லது கருத்துக்கள் “பிழை” என்று எந்த கத்தொலிக்கனாவது இங்கு வந்து பதில் சொல்லட்டும்.//

    சமயங்கள் சமாதானத்திற்கான் வழிகளிலேயே செல்லத் தொடங்கிவிட்டன. கத்தோலிக்க கோவில்களிற்குப் போவதற்கே ஆளில்லாமல் எத்தனையோ பூட்டப்படுகின்றன. போப் இந்து, புத்தசமயங்களிற்கு எதிராக விட்ட அறிகையின் தகவலை விபரத்துடனும், ஆதாரத்துடனும் வெளியிடுவீர்களா?

    துரை

    Reply
  • மாயா
    மாயா

    நந்தா , சொல்வதை நினைத்தால் தலையை பிய்துக் கொள்ளத் தோன்றும். இன்று இந்துக்கள் பற்றி பேசும் நந்தாவுக்கு , யுத்த காலத்தில் யார் உதவினார்கள் என்று தேடினால் பல உண்மைகளை ஏற்றுக் கொள்ள கூடியதாக இருக்கும். எந்தவொரு இந்து அமைப்பும் , இலங்கை தமிழருக்கு பெரிதாக உதவவில்லை. இந்தியாவின் பாஜக என்ன உதவி செய்தது? அவர்கள் இந்துக்கள் என பார்த்தார்களா? மதறாசி என பார்த்தானா? மதறாசி பொலத்தான் சிறீலங்கா தமிழனும் அவனுக்குத் தெரிந்தான்.

    வெளிநாடுகளில் இருந்து வந்த சிலர் , அரசியல் காரணங்களுக்காக புலிகளுக்கு உதவினர். ஆனால் , அனைவரும் என்று சொல்ல முடியாது? சுனாமி காலத்தில் கூட , யார் உதவி கிடைத்தது?

    புலத்தில் வெள்ளைகள் கோயிலுக்கு போவதெல்லாம், கலியாணம் கட்டவும் , ஞானஸ்நானம் பெறவும்தான். இளைஞர்கள் கோயில் பக்கமே செல்வதில்லை. வயது போனவர்கள் மட்டும் போகினம். மோட்சம் கிடைக்க வேண்டி… இந்த நிலையில் , இந்த மத வெறியெல்லாம் விரைவில் இல்லாமல் போகும். நந்தாவுக்கும் உண்மை விளங்கும்.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    ///….கே கே எஸ் வீதி விஸ்தரிப்புக்கும் இந்த கட்டுரைக்கும் என்ன சம்பந்தம்? …..//
    நீங்கள் எல்லாத் தலைப்புக்கும் ‘பாதிரிகளுக்கும்’ வலிந்து இழுக்கும் உள்ள ‘சம்பந்தம்’ தான் இதுக்கும்.

    சில நாட்களுக்கு முன்னர் சிவராத்திரிக்கு கோவிலுக்குப் போனேன். கோவிலின் சரித்திரம் அங்கே எழுதி வைக்கப்படிருந்தது. அதில் அவ்விடத்தில் ஒரு யூத கொங்கிரிகேசன் இருந்ததாகவும் அவ்விடத்தை வாங்கி கட்டப்பட்டதாகவும் இருந்தது. நீங்கள் சொன்ன ‘ஏடுதொடக்கல் பாதிரி’ விடயம் நினைவுக்கு வந்து தொலைத்தது.

    Reply
  • palli
    palli

    //பல்லிக்கு வரலாறு தெரியவில்லை. //
    வேண்டாம் தெரிய வேண்டாம், நந்தா எழுதுவதுதான் வரலாறு எனில் அந்த வரலாறு எனக்கு தெரிய வேண்டாம், நான் ஒரு யதார்த்தவாதியாகவே இருக்க விரும்புகிறேன்; உங்கள் ஆதங்கத்துக்காக ஒரு விடயம் சொல்லுகிறேன்; என்வீட்டில் அன்னை திரேசாவின் படமும் நான் தினசரி பார்க்கும் படத்தில் ஒன்று,

    Reply
  • NANTHA
    NANTHA

    சாந்தன்:
    1956 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பாதிரிகள் கட்டிய ஒரு பாடசாலையின் பெயரைத் தர முடியுமா?

    தவிர பாதிரிகளுக்கு பாடசாலைகள் கட்ட யார் பணம் கொடுத்தனர்? வத்திக்கானிலிருந்தும், இங்கிலாந்திலிருந்தும் பணம் கொண்டு வந்து பாடசாலைகள் கட்டியதாக வரலாறு இல்லை. இரண்டு இடத்துக்கும் “பணம்” போனதாகத்தான் வரலாறு உண்டு.

    இலங்கை சுதந்திரத்துக்கும், பாடசாலைகள் கட்டியதுக்கும் என்ன சம்பந்தம்?

    Reply
  • NANTHA
    NANTHA

    அப்படியான ஒரு பாதிரியின், அதாவது புலிக்கு எதிராக இருந்த, ஒரு பாதிரியின் பெயரைச் சொல்ல முடியுமா?/ துரை:

    ஆனால் “அமேரிக்கா வந்து ஹெலிகொப்டரில் கொண்டு போகும்” என்று நம்பிக்கையூட்டி முள்ளிவாய்க்காலில் கடைசி வரை நின்றவர்கள் பாதிரிகள்தான். அது மாத்திரமின்றி “மக்களை” புலிகளுக்கு மனித கேடயங்களாக பாவிக்க, துரத்திச் சென்றவர்களும் பாதிரிகள்தான்.

    முல்லைத்தீவில் புலிகளிடமிருந்து பிள்ளைகளை காப்பாற்றுகிறேன் என்று கூறி அந்த சிறுவர்களை புலிகளிடம் ‘தானம்” செய்து விட்டு தலை மறைவான பாதிரி ஜேம்ஸ் பத்திநாதன் பற்றி விசாரிப்பது நல்லது.

    புலிகளின் ஆதிக்கத்தில் இந்துக் கோவில்கள் உண்டு. ஆனால் அதற்குள் பாதிரிகளுக்கு என்ன வேலை? பாதிரிகள் ஏடு துவக்குவது, அதுவும் இந்துக் கோவிலில் எப்படி நியாயமாகும்? அதனால்த்தான் சொல்கிறேன் புலிகளும், பாதிரிகளும் ஒரே கும்பல்கள் என்று.

    நீங்கள் ஒரு கத்தோலிக்கன் என்பது புரிகிறது. போப்பின் கருத்துக்களை அல்லது அறிவித்தல்களை நீங்கள் உங்கள் பாதிரிகளிடமிருந்து அல்லது வத்திக்கானிலிருந்து பெற்றுக்கொள்ளுங்கள். நான் சொன்னது பிழை என்று எந்த பாதிரியாவது போப் சார்பாக ஒரு பகிரங்க அறிக்கையை விடச் சொல்லுங்கள்.

    Reply
  • NANTHA
    NANTHA

    மாயா:
    இந்து மதமும் பவுத்தமதமும் நம்பிக்கைகளை அடிப்படைகளாக கொண்டவைகளே. அவை “நிறுவன” ரீதியாக செயல்படுவதில்லை. “சுதந்திரம்” என்பது அந்த இரண்டு சமயங்களிலும் உண்டு. மற்ற சமயங்களில் அது கிடையாது. பா ஜ க இந்திய அரசியல் கட்சி. அதன் உபதலைவர் ஒரு முஸ்லிம். அது ஏன் உதவி செய்யவில்லை என்று நீங்கள் கேட்கிறீர்கள்? எங்கள் மத்தியில் உள்ள கொலைகாரர்களும், கிரிமினல்களும் செய்த அட்டகாசங்களுக்கு மற்றவர்கள் உதவ வேண்டும் என்று ஏன் கேட்கிறீர்கள்? நம் நாட்டில் சமாதானத்தை நாசமாக்கி “குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க” திரிந்தவர்களை அடையாளம் காணுங்கள்.

    சாந்தன்:
    மேற்கு நாடுகளின் பிரச்சனைகள் வேறு. நம் நாட்டு பிரச்சனைகள் வேறு.

    அந்த யூதர்கள் எங்கே? கத்தோலிகர்கள் அவர்களைக் கொன்று விட்டார்களா அல்லது துரத்தி விட்டார்களா? தவிர அந்த “இடத்தை” யார் விற்றார்கள்?
    அதற்கும் இந்து கோவிலில் பாதிரிகள் புலிகளின் உதவியோடு புகுந்து ஏடு தொடக்கியதட்கும் என்ன சம்பந்தம்?

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //..தவிர பாதிரிகளுக்கு பாடசாலைகள் கட்ட யார் பணம் கொடுத்தனர்? வத்திக்கானிலிருந்தும், இங்கிலாந்திலிருந்தும் பணம் கொண்டு வந்து பாடசாலைகள் கட்டியதாக வரலாறு இல்லை. இரண்டு இடத்துக்கும் “பணம்” போனதாகத்தான் வரலாறு உண்டு…..//

    அதேபோலத்தான் வன்னிப் பாட்சாலைகளும், தமிழ் மக்களின் வரிப்பணத்தில் கட்டியவைதான். அப்போது வன்னி உணவு உற்பத்தியில் சிறந்து விளங்கியது. யாழின் உணவு உற்பத்த்தித்திறன் ஸ்ரீல்ங்காவில் முதலிடம். அதனை ஸ்ரீலங்கா அரசு வெளியிட்ட பிரசுரத்தில் பார்த்தேன். அவ்வாறு உணவு உற்பத்தி செய்து ஸ்ரீலங்காவுகு வழங்கி இறக்குமதியைக் குறைத்து லாபம் ஈட்டிய காசில் கட்டப்பட்ட கல்விக்கூடங்க்களே வன்னியில் உணடு. நீங்கள் ஏதோ SLFP தங்கட காசில கட்டித்தந்த மாதிரி எழுதிறியள்.

    //…இலங்கை சுதந்திரத்துக்கும், பாடசாலைகள் கட்டியதுக்கும் என்ன சம்பந்தம்?….//
    வன்னியில் தமிழ்மக்களின் வரிப்பணத்தில் கட்டிய பாடசாலைகளுக்கு தமிழர் ஸ்ரீலங்காவுகும் SLFPக்கும் விசுவாசமாக இருக்க வேண்டும் என நீங்கள் கேட்பது சரி என்றால் அதற்கு முன்னரே இலங்கையில் தலைசிறந்த கல்லூரிகளைக்கட்டிய ஆங்கிலேயருக்கு நாம் விசுவாசமாக இருக்க வேண்டுமல்லவா? அந்த சம்பந்தம் தான் இங்கேயும்!!

    ///…..1956 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பாதிரிகள் கட்டிய ஒரு பாடசாலையின் பெயரைத் தர முடியுமா?….//
    சுதந்திரம் கொடு…வெள்ளையனே வெளியேறு….பாதிரியே பாய்ந்தோடு…..எனச் சொல்லி வெளியேற்றி விட்டீர்களே பின்னர் எங்கே பாடசாலை வரும்?
    அதுசரி 1956க்கு முன்னர் ‘பாதிரி’ கட்டிய பாடசாலைகளை இடித்து ’இந்து/பெளத்த உறவின்’ ஊற்றுகளன கல்லூரிகள் கட்டிவிட்டீர்களா?

    Reply
  • DEMOCRACY
    DEMOCRACY

    /என்வீட்டில் அன்னை திரேசாவின் படமும் நான் தினசரி பார்க்கும் படத்தில் ஒன்று,/–பல்லி!.– இது வேண்டுமானால் நியாயவாதிகள் என்ற அளவில் சரியாக இருக்கலாம்!.அன்னை தெரசா ஒரு “அல்பேனியன்”.அல்பேனியர்களைப் பற்றி தெரிந்தவர்களுக்கு தெரியும்,அவர்கள் ஒரு வட்டத்துக்குள் நியாயமானவர்கள் என்று!.ஆனால்,அவர்களைப் பயன்படுத்தும் பொம்மலாட்டக் காரர்கள்,வேறு சில சக்திகள் என்று!.”கல்கத்தாவின் வீதியில் கிடக்கும் ஒவ்வொரு அனாதைக் குழந்தையும்” “கத்தோலிக்க மதத்தின்” அடுத்த உறுப்பினர் என்ற அளவிளேயே,விஷயங்கள் நகர்த்தப் பட்டன என்பதுதான் உண்மை!.

    Reply
  • thurai
    thurai

    //அப்படியான ஒரு பாதிரியின், அதாவது புலிக்கு எதிராக இருந்த, ஒரு பாதிரியின் பெயரைச் சொல்ல முடியுமா?/
    புலிகளை இலங்கை அரசாங்கம் அழித்த பின்பும் இன்னமும் மறுபெயர்களில் தேசத்தில் எழுதும் நிலைமை எப்போது மாறுமென்று கூறினால், புலிக்கு எதிராக தேசத்திலேயே கத்தோலிக்க பாதிரிமார் வந்து எழுதுவார்கள்.

    //ஆனால் “அமேரிக்கா வந்து ஹெலிகொப்டரில் கொண்டு போகும்” என்று நம்பிக்கையூட்டி முள்ளிவாய்க்காலில் கடைசி வரை நின்றவர்கள் பாதிரிகள்தான். அது மாத்திரமின்றி “மக்களை” புலிகளுக்கு மனித கேடயங்களாக பாவிக்க, துரத்திச் சென்றவர்களும் பாதிரிகள்தான்.//

    உலகமுழுவதும் கடல் கடந்த தமிழ் அரசு அமைக்கும் ஏமாற்றுக் கூட்டத்திற்கு இந்துக் குருக்கழும் கோவில்கழும் வாக்கெடுப்பிற்கு உத்வி செய்யவில்லையா?

    சமயங்கள் யாவும் தமினத்தினால் வாழ்கிற்னவே தவிர சமயங்களினால் தமிழர் வாழவில்லை. இதில் இந்து,கத்தோலிக்கம் என்ற் வேறுபாடில்லை.

    துரை

    Reply
  • அல்லைப்பிட்டியான்
    அல்லைப்பிட்டியான்

    திரு. கொண்ஸ்ரான்ரின் அவர்களுக்கு!

    உங்கள் கட்டுரையில் வெளியிடப்பட்ட அல்லைப்பிட்டி முருகன் ஆலய மீள்(பிரமாண்டமான) புனரமைப்பு சம்பந்தமான தகவலுக்கு, அந்த மீள்புனரமைப்பில் நேரடியாக தொடர்புடையவன் என்றவகையில் சில உண்மைகளை உங்களுக்கு அறியத்தருகிறேன். அல்லைப்பிட்டி கிழக்குப்பகுதியை வதிவிடமாகக் கொண்ட மக்கள் கடந்த 1987 ம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாகப் பல இராணுவத்தாக்குதலுக்கு உள்ளானவர்கள். பலர் இராணுவத்தால் பலியெடுக்கப்பட்டிருந்தனர். மேற்படி இராணுவத்தாக்குதலில்லிருந்து தப்புவதற்கும், அடைக்கலம் தேடுவதற்கும் அவர்கள் மிகத்தூர இடங்களிலுல்ல ஆலயங்களை நோக்கியே செல்ல வேண்டியிருந்ததது. இதன் காரணமாகவே, அந்த மக்களை காப்பாற்றும் பொருட்டு, புலம்பெயர்ந்த ஊர்நலன்விரும்பிகள் சிலரால் 2004 ம் ஆண்டளவில் இவ்வாலயம் பிரமாண்டமாக மீளப்புனரமைக்கப்பட்டது. இதன் பின்னர் நடந்த இராணுவத்தாக்குதல்களுக்கு அல்லைப்பிட்டி கிழக்கு மக்கள் இவ்வாலயத்தையே தாங்கள் தஞ்சமடையும் ஒரு இடமாகப் பாவித்து தங்கள் உயிர்களை காப்பற்றியிருந்தனர். இந்த அளப்பரிய, தந்திரோபாயமான சேவைக்கு, அங்கு தஞ்சமடைந்திருந்த பலர் எமக்கு நேரடியகவே நன்றி தெரிவித்திருந்தனர். மாறாக தாங்கள் கருதுவதுபோல் எந்த விளம்பரங்களுக்காகவோ அல்லது விலாசங்களுக்ககவோ இவ்வாலயம் பிரமாண்டப்படுத்தப்படவில்லையென்பதை தங்கள் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன்.

    -அல்லைப்பிட்டியான்

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    //நந்தா நன்றாக கதை விடுகிறீர்கள், பார்த்திபன் கதையின் ரக்கை மாற்றுகிறீர்கள். ரோஹன் 1000 பாடசாலைகள் லிஸ்றைக் கேட்கிறார்.- சாந்தன் //

    //நந்தா சுதந்திரக் கட்சி தான் ஆயிரம் பாடசாலைகளை வன்னியில் கட்டியது என்ற தனது கருத்துக்கு இன்னமும் ஆதாரம் தரவில்லை. rohan //

    சாந்தன்,
    rohan எழுதியதை மீண்டும் தந்துள்ளேன். அதனைத் திரும்பவும் வாசித்துவிட்டு புரியாவிட்டால் நல்லதொரு தமிழ் ஆசிரியரை அணுகுங்கள்.

    /அதேபோலத்தான் வன்னிப் பாட்சாலைகளும், தமிழ் மக்களின் வரிப்பணத்தில் கட்டியவைதான்.- சாந்தன் //
    எப்படி உங்களாலை மட்டும் இப்படியெல்லாம் சிந்தி்க்க முடிகின்றது. இலங்கையில் கமம் செய்த மக்களெல்லாம் வரி கட்டியது, எனக்கு இப்பதான் உங்கடை கருத்தாலே புரிய முடிஞ்சுது. ஒருவேளை சோலை வரியையும் நீங்கள் வருமானவரியெண்டு நினைக்கிறியளோ??

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //….அவை “நிறுவன” ரீதியாக செயல்படுவதில்லை…../ அஸ்கிரிய, மல்வத்த பீடம் எல்லாம் என்ன ரீதி?

    //…. “சுதந்திரம்” என்பது அந்த இரண்டு சமயங்களிலும் உண்டு. மற்ற சமயங்களில் அது கிடையாது…../ அப்போ ஏன் ஸ்ரீலங்காவில் ‘பெளத்தம் முதன்மை மதம்’ ஏன் அரசியல் சாசன பாதுகாப்பு?

    Reply
  • BC
    BC

    //துரை – கத்தோலிக்க கோவில்களிற்குப் போவதற்கே ஆளில்லாமல் எத்தனையோ பூட்டப்படுகின்றன.//

    ஆனால் தமிழர்களில் மட்டும் கோவிலுக்கும் சேர்ச்சுக்கும் போவோர் தொகை அதிகரித்து வருகிறது.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //…..எப்படி உங்களாலை மட்டும் இப்படியெல்லாம் சிந்தி்க்க முடிகின்றது. இலங்கையில் கமம் செய்த மக்களெல்லாம் வரி கட்டியது……//

    இவ்வாறான கேள்விகளையே அன்று ‘அரச ஊழியர்கள்’ நாங்கள் மட்டும் ஏன் வரி கமக்காரர் ஏன் இல்லை என கேட்டார்கள். அதற்கு சிறீலங்கா அரசு சொன்ன பதில் என்ன தெரியுமா? உள்ளூர் உற்பத்தி இறக்குமதியைக் குறைப்பதனால் வெளிநாட்டி செலாவணி மிச்சம். மேலும் கடன் தீர்க்க வெளிநாட்டு செலாவணிக்காக ‘கையேந்தும்’ அவமானம் மிச்சம். வெளிநாட்டு செலாவணிக்காக ‘கரன்சி’ சந்தையில் கொடுக்கும் மேலதிக விலை மிச்சம்….இவ்வாறு பட்டியல் நீளும என இவர்களுக்கு’ அரசு பொருளாதார புள்ளி விபரங்களுடன் பதில் சொல்லியது! அத்துடன் இக்கமக்கரர்கள் கார் வாங்குவார்கள் அப்போது 300% வரி அடித்தோம், மெர்சி ஃபேகுசன் உழவு இயந்திரம், ரொபின் நீர் இரைக்கும் இயந்திரம், குபோட்டா , லாண்ட் மாஸ்ரர் போன்றன எல்லாம் வாங்கினர் அப்போது வரி அடித்தோம் என ‘கணக்கும்’ காட்டினார்கள்.

    Reply
  • Jeyarajah
    Jeyarajah

    நந்தா சொல்வதை ஒட்டுமொத்தமாக நிராகரிக்க முடியாது. ஆரம்பகால இயக்கங்களில் சோசலிசம் பேசி ஆரம்பித்தவர்கள் ஈபிஆர்எல்எவ் ஈரோஸ் புளொட் என்று சொல்லலாம்.புலியும் ரெலோவும் அதைப்பற்றி அதிகம் கதைத்தவர்கள் அல்ல. ஆனால் பெருமாள் கோவிலிலும் துர்க்கை அம்மன் கோவிலிலும் கைவைத்தவர்கள் சோசலிசம் பேசாதவர்களே. இது கொஞ்சம் உதைக்குதுதான்.

    மற்றும் கஸ்பார் அடிகள் புலிக்காக வாங்காத வக்காலத்து இல்லை. கடைசிக் காலங்களில் புலிகளையும் பிரபாகரனையும் காப்பாற்ற இந்தியாவில் இருந்து பல முயற்சிகளும் செய்தவர். அது முடியாமல் போக இப்போ வேறு விதமாக பல்டி அடிக்கிறார். இவருக்கு என்ன அப்படி ஒரு பற்று எங்கள் இனத்தின்மீது என்று புலிகள் கொஞ்சம் யோசித்திருக்கலாம். இப்போது தனது வருமானத்தை எப்படிப் பெருக்கலாமென்று பல வழிகளிலும் முயற்சி செய்துகொண்டிருக்கிறார். ஆனால் நந்தா அவர்களுக்கு குறிப்பிட்ட சிலர் செய்யும் தப்புக்கு ஒட்டுமொத்த கத்தோலிக்கரையும் சாடுவது சரியாகப் படவில்லை.

    Reply
  • palli
    palli

    //ஈபிஆரெலெவ் ஈரோஸ் புளொட் என்று சொல்லலாம்.புலியும் ரெலோவும் அதைப்பற்றி அதிகம் கதைத்தவர்கள் அல்ல. ஆனால் பெருமாள் கோவிலிலும் துர்க்கை அம்மன் கோவிலிலும் கைவைத்தவர்கள் சோசலிசம் பேசாதவர்களே. இது கொஞ்சம் உதைக்குதுதான்.//
    ஜெயராஜ் உங்கள் பின்னோட்டம் குளப்பமாக உள்ளது, சோசலிசம் என்றால் என்ன என்பது என்ன?? அதுக்கான விளக்கம் தாருங்கள், கோவிலுக்கும் சோசலிஸத்துக்கும் என்ன தொடர்பு??

    Reply
  • BC
    BC

    //எப்படி உங்களாலை மட்டும் இப்படியெல்லாம் சிந்தி்க்க முடிகின்றது. // அவர் புலிகளின் கப்பம் வாங்கிய காலத்து நினைவிலேயே சிந்தித்துவிட்டார் போல்.

    //அல்லைப்பிட்டியான் – அந்த மக்களை காப்பாற்றும் பொருட்டு புலம்பெயர்ந்த ஊர்நலன்விரும்பிகள் சிலரால் 2004 ம் ஆண்டளவில் இவ்வாலயம் பிரமாண்டமாக மீளப்புனரமைக்கப்பட்டது.// மக்களை காப்பாற்றுவற்காக ஆலயம் பிரமாண்டமாக மீளப்புனரமைக்கப்பட்டதா!!? கட்டுரையாளரின் கேள்வி நியாயமானதே.

    Reply
  • NANTHA
    NANTHA

    சாந்தன்:
    நீங்கள் “வரிப்பணம்” என்கிறீர்கள். அப்படி கணக்குப் பார்த்தால், தமிழர்கள் வரிப்பணத்தில் ஒரு பாடசாலை கூடக் கட்ட முடியாது.

    வன்னி மாவட்டம் விவசாயத்துக்கு பெயர்போனது. நான் பிறந்த மாவட்டம் அல்லவா! ஆனால் வன்னியில் பாடசாலைகள் “பறங்கிகளின்” காலத்தில் எத்தனை கட்டப்பட்டன? வன்னியின் வளங்களை “சுரண்டியவர்கள்” வன்னி மக்களுக்கு கொடுத்தது என்ன? வன்னியை விவசாய பூமியாக மாற்றியவர்கள் இலங்கை மக்களே தவிர பாதிரிகள் அல்ல. அந்த வளர்ச்சியையும் புலிகளும், பாதிரிகளும் சேர்ந்து இப்போது நாசமாக்கி உள்ளனர். வன்னி மக்களை “கையேந்த” வைத்த பெருமை பாதிரிகளையும் புலிகளையும் சேரும். இப்போது வன்னி மக்களுக்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அரசுதான் உதவுகிறது. பாதிரிகளும், வெள்ளையர்களும் அல்ல.

    பறங்கிகள் யாழ்பாணத்தில் கட்டிய பாடசாலைகள் யாருக்காக? பாதிரிகளின் கட்டுப்பாட்டில் பாடசாலைகள் இருந்த கதைகள் தெரியாதோ? பத்து வீத கிறிஸ்தவர்கள் 95 சதவீத பாடசாலைகளை வைத்திருந்தது எப்படி ஜனநாயகம் ஆகும்?

    உங்களுடைய “விசுவாசப் பிரச்சனை” புரிகிறது. வெள்ளையர்கள் எங்கள் சொத்தை கொள்ளையடித்து தங்களின் ஏவல்படைகளான கிறிஸ்தவர்களுக்கும் கொஞ்சம் பங்கு கொடுத்து விட்டார்கள். அது பெரிய தியாகமோ? அதுக்கு “மற்றவர்கள்” அவர்களுக்கு விசுவாசம் வேறு காட்ட வேண்டுமோ? 90 சதவீதமான கிறிஸ்தவர்கள் அல்லாத மக்களின் வரிப்பணத்தில் எப்படி 95 சதவீத கிறிஸ்தவ கட்டுப்பாட்டில் பாடசாலைகள் வந்தன? 1956 ஆம் ஆண்டில் பாடசாலைகளை அரசு தேசியமயப்படுத்திய பொழுது “மகாராணிக்கு” தந்தியடித்த செல்வநாயகம் – பாதிரிகள் கூட்டணி இன்றும் இலங்கை மக்களின் “வரிப்பணத்தை” ஏப்பமிட அலைகிறார்கள். அதற்கு “தமிழ்” ஒரு சாட்டு.

    பாதிரிகள் வெள்ளையர்களின் ” படை”. அதனால்த்தான் பாதிரிகள் வெள்ளையர்கள் போன பின் பாடசாலை எதுவும் கட்டவில்லை. இப்போது கொள்ளையடிக்க யாருமில்லை. பங்கு கொடுக்கவும் யாருமில்லை. புலிகளோடு பாதிரிகள் சேர்ந்து கும்மியடித்தது புலிகளின் “கொள்ளையில்” பங்கு பெறவே ஒழிய தமிழர்களின் நல்வாழ்வுக்காக அல்ல!

    வன்னியில் கிராமங்களில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியில்த்தான் பாடசாலைகள் கட்டப்பட்டன. வரிப்பணம் என்று பார்த்தால், அது வெள்ளையர்களின் காலத்தில் ஏன் வன்னி மக்களுக்கு பாடசாலைகள் கட்டப்படவில்லை? வெள்ளையர்கள் தங்களுடைய ஏஜண்டுகளுக்கும், குளுக்களுக்குமே மற்றவர்களின் வரிப்பணத்தில் “பங்கு” கொடுத்தனர்.

    யாழ் பல்கலைக் கழகம் ஸ்ரீ மாவோ அரசின் காலத்தில்தான் கொண்டு வரப்பட்டது. சிலவேளைகளில் அதுவும் இல்லை. பாதிரிகள்தான் கொண்டு வந்தார்கள் என்று நீங்கள் சொல்லலாம்

    Reply
  • NANTHA
    NANTHA

    அஸ்கிரிய, மல்வத்த என்பன காஞ்சி காமகோடி பீடம் போன்றவை. அவை பவுத்தர்களை கட்டுப்படுத்த முடியாது. ஆனால் கத்தோலிக்கர்கள் ‘ வத்திக்கானின்” நாசி போப்புக்கு பணிந்தே ஆக வேண்டும். வித்தியாசம் புரிந்தால் சரி.

    பவுத்த மதத்துக்கு அரசியல் சாசனத்தில் இடம் கொடுத்துள்ளதால் “யாருக்காவது” பாதிப்புக்கள் வந்தனவா? அதற்கும் அந்த மதங்களில் உள்ள “சுதந்திரத்துக்கும்” என்ன சம்பந்தம்?

    Reply
  • NANTHA
    NANTHA

    DEMOCRACY on February 13, 2010 6:34 pm
    அல்லைப்பிட்டியான் on February 13, 2010 7:27 pm
    பார்த்திபன் on February 13, 2010 8:05 pm
    Jeyarajah on February 13, 2010 11:11 pm

    உங்கள் அனைவரினதும் கருத்துக்களுக்கும் நன்றி.

    அல்லைபிட்டியில் “இந்துக்கள்” என்பது அங்குள்ள “கத்தோலிக்கர்களுக்கு” பெரும் தொல்லை. அதனால்த்தான் ஜிம் பிரவுன் பாதிரி புலிகளோடு சேர்ந்து அல்லைப்பிட்டி மக்களை வன்னிக்கு துரத்த முயன்றனர்.

    ஜெயராஜா சொல்வது உண்மை. புலிகளைத்தவிர வேறு எந்த இயக்கமும் “இந்துக்” கோவில்களின் சொத்துக்களில் கை வைக்கவில்லை. அதற்கு “கத்தோலிக்க” பாதிரிகளின் போர்த்துகீசர் காலத்து அனுபவங்கள், அதாவது இந்து கோவில்களை தரை மட்டமாக்கி விக்கிரங்கங்களை உருக்கி லிஸ்பனுக்கு கொண்டு போன வரலாறு என்றே நம்புகிறேன். அப்படி புலிகளால் கொள்ளையடிக்கபட்ட தங்கம், பணம் என்பன இன்றும் கத்தோலிக்க பாதிரிகளின் கையில் உள்ளது என்றே நம்புகிறேன்.

    Reply
  • தாமிரா மீனாஷி
    தாமிரா மீனாஷி

    யாழ் மாவட்டத்திஉல் இருந்த சைவக் கோயில்கள் பல புது வண்ணமும் புதுப் பொலிவும் பெற புலம்பெயர் மக்களது அள்ளிக் கொடுக்கும் மனப்பாங்கும் ஒரு முக்கிய காரணம்.. வெம்பிளி பகுதியில் மட்டை போட்டு முதலாளியானவரின் தாய் ஊருக்குச் சென்று கிராமக் கோயிலுக்கு புதிய மணிக் கோபுரம் ஒன்றை கட்டுவித்து பெரிய மணியையும் தூக்கி விட்டு வந்தார்.. போவதற்கு முன்னர் ஒரு கலெக்சனையும் செய்து கொண்டுதான் போனார். பழமை பேணுவது எமது கலாசாரத்தின் அடையாளங்களைப் பேணுவதாகும் என்று நாம் என்றும் நினத்ததில்லை.. கோயில்களின் புராதனச் சின்னங்களாகக் கருதப்படக் கூடிய அனேகமான விஷயங்கள் தூக்கி வீசப்பட்டு அந்த இடத்தை புதிய விஷயங்கள் பிடித்துக் கொள்ள வெளிநாட்டுப் பணமும் முக்கிய காரணம்..நவீன தெய்வங்கள் யாவும் இப்போது மின்சார விளக்குகளையே வேண்டிநிற்பதால் கோவில்களில் எரிந்த தூண்டாமணி விளக்குகள் கொழும்பில் உள்ள “அன்டீக்”கடைகளில் வெளிநாட்டுப் பயணிகளை எதிர் பார்துத் தூங்குகின்றன..

    ஈழப் போராட்டத்தின் ஆரம்பக் கட்டத்தில் கிறிஸ்தவர்களின் பங்களிப்பு மிகவும் பெரியது என்பதை மறுக்க முடியாது..ஆனால் போராட்டம் வளர்ந்த பின்பு போராளிகளின் தலைமைமீது அவர்கள் அளவுக்கு மிஞ்சிய ஆதிக்கம் செலுத்தியதாக பலர் என்னிடம் சொன்னார்கள்.. போராட்டத்தின் இறுதிக் காலத்தில் தலைமையைக் காப்பாற்றுவதற்கான புலம் பெயர் ஆர்ப்பாட்டம் சிட்னியிலும் நடந்தது.. சிட்னியிலுள்ள வயதானவர் அனைவரும் திடீரென பிரியாணிப் பார்சல்களுடன் தலைனகர் கன்பராவுக்கு ஓசிப் பயணம் செய்ய அழைக்கப் பட்டனர்…பிரதமர் அலுவலகம் முன்னால் நின்று தலைவர் வாழ்க என்று பச்சைத் தமிழில் கோஷம் போட்டு உடனடியாகப் பிரதமர் வெளியே வந்து தஙளைச் சந்திக்க வேண்டும் என்று கேட்டதன் பயனாக பிரதமரும் அல்லாமல் அமைச்சரவை உறுப்பினர்களும் அல்லாமல் இரண்டு இடைநிலை அதிகாரிகள் சந்திக்க வெளியே வந்த போது ஆர்ப்பாட்டம் செய்ய வந்த அனைவரையும் அதிகாரிகளின் முன்னால் மண்டியிட்டு முழங்காலில் நிற்குமாறு உத்தரவிட்டனர்.. ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கு செய்தவர்கள் என்று முன் வரிசையில் நின்றவர்கள் முழங்காலில் நின்று மகஜர் சமர்ப்பித்து பபூன் விளையாட்டு காட்டினார்கள்…
    முழங்காலில் நிற்கும் உத்தியை கண்டுபிடித்தவர் அவுஸ்திரேலிய தமிழ் வானொலியில் தினமும் காலையில் கிறிஸ்தவ இறைவணக்கம் செய்யும் ஒரு பாதிரியார்..அவர் ஞாயிற்றுக் கிழமைகளில் சர்ச்சில் பரிசுத்த ஆவியுடன் இரண்டறக் கலந்துவிட்டு மற்றைய.நாட்களில் தேவன் உத்தரவுப்படி அப்பாவி மக்களைக் கொன்றாவது விடுதலை வாங்கிவிட வேண்டும் என்று துடியாய் துடிப்பவர் என்றும் கஸ்பரின் நெருங்கிய கூட்டாளி என்றும் அங்கே பேசிக் கொண்டனர்

    தலவரின் வாரிசு அவுஸ்திரேலியாவுக்கு களவாகச் சென்று அங்கே பைலட் ட்ரெயினிங் எடுப்பதற்கும் சிDனியிலுள்ள கத்தோலிக்கப் பணக்காரர்கள் தான் உதவி செய்யதார்களாம்..

    Reply
  • NANTHA
    NANTHA

    தாமிரா மீனாஷி:
    நன்றி. இந்த கஸ்பார் பாதிரி ஒருமுறை கனடாவுக்கு வந்து world vision பாணியில் “வன்னியிலுள்ள” அனாதைக் குழந்தைகளைத் தத்து எடுத்து உதவுங்கள் என்று புலி அமைப்பான உலகத்தமிழர் இயக்கத்தினருடன் சேர்ந்து ஒரு விழா நடத்தி “காசு” கொடுத்தவர்களுக்கு “ஒரு மட்டை” கொடுத்துவிட்டு காசோடு ஒடிய ஆள். அந்த மட்டையை இப்போது பல “புலி” ஆதரவாளர்கள் வைத்திருக்கிறார்களா அல்லது கிழித்து போட்டுவிட்டார்களா என்பது தெரியவில்லை. அந்த கூத்தில் சொல்லப்பட்ட குழந்தைகளுக்கு என்ன நடந்தது என்பது பற்றியும் தெரியவில்லை.

    Reply
  • thurai
    thurai

    சாதி, மத, இன பேதங்களை வளர்க்கும் கருத்துக்களை வளர்ப்போர் மனித இனத்தின் முதல் துரோகிகள். குறிப்பாக இலங்கைத் தமிழர் இதில் மிகவும் அவதானமாக இருக்கவேண்டும். மக்களிற்காக சமயங்களே தவிர மக்கள் சமயங்களிற்காக் வல்ல.

    ஒரு சில தமிழ் கத்தோலிக்க பாதிரிமாரும், சிங்கள கத்தோலிக்க பாதிரிமாரும் செய்யும் தவறுகளை வைத்து உலக கத்தோலிக்க சபையையும் கத்தோலிகாரையும் குறை சொல்லவும், புத்தி புகட்டுவதற்கும் முன், கத்தோலிக்கர் வாழும் மேலை நாடுகளிலிருந்து வெளியேறி இந்துக்கள் வாழும் நாடுகளில் புகலிடம் தேடுவதே நல்லது.

    துரை

    Reply
  • palli
    palli

    துரையின் கருத்து மிகநல்ல உதாரனம்; என்னால் கத்தோலிக்கர் மீது சுமத்தும் குற்றத்துக்கு ஊர்பேர் விபரங்களுடன் இந்துக்களை சுட்டிகாட்டி எழுத முடியும், ஆனால் தொலைந்து போன மதஇன பிரச்சனிகளை புதிதாய் விட விருப்பம் இல்லை, ஆனாலும் புலிக்கு என்றாலும் சரி மற்றய அமைப்புக்களுக்கானாலும் சரி உதவியதோ அல்லது வளர்த்தது என்றால் கத்தோலிக்கர் வெறும் ஜந்து வீதம்தான், ஆனால் மற்றவர்கள்??

    Reply
  • BC
    BC

    இலங்கையில் கத்தோலிக்க பாதிரிமார் புலிகளுடன் சேர்ந்து தவறுகள் செய்தனர். ஆனால் வெளிநாடுகளில் கத்தோலிக்கர் அப்படியல்ல. மெதடிஸ் என்ற கிறிஸ்தவ பிரிவில் உள்ள தமிழர்கள் தான் தமிழர்களை மதம் மாற்றும் முயற்ச்சியில் ஈடுபடுகின்றனர். கத்தோலிக்க பிரிவு அப்படி செய்யவில்லை.
    அவுஸ்திரேலியாவில் தான் அதிக தமிழர்கள் மதம் மாற்றப்பட்டது. தமிழ் கத்தோலிக்கர்கள் சிலரை கூட மெதடிஸ் பிரிவுக்கு மாற்றிவிட்டனராம். இந்துக்கள், பவுத்தர், கத்தோலிக்கர்கள் எல்லாம் உருவ வழிபாடு செய்பவர்கள். அது நல்லதில்லையாம்.

    Reply
  • palli
    palli

    உமா மகேஸ்வரன்? பிரபாகரன்? சிறிசபாரத்தினம்? பாலகுமார்? பத்மநாபா? செந்தில்& காந்தன்? அமிர்தலிங்கம்? செல்வநாயகம்? சிவசிதம்பரம்? லோகேஸ்வரன்? சம்பந்தர்? அனந்த சங்கரி? சேனாதி? சிறி காந்தா? சித்தாத்தர்? டக்கிளஸ்? பிள்ளையான்? கருனா? என்னும் தொடரவா??
    இதில் யார் கத்தோலிக்கர், இவர்களை மீறி கடந்த 30 வருடத்தில் ஒரு மிளகாய்செடி கூட வளர முடியாது என்பதுதானே உன்மை; அப்படியிருக்க ஒரு தளத்தை நடத்தும் தாமிராகூட வந்து தண்டவாளம் மரத்தால் செய்யபட்டது என வாதிடுவது வேடிக்கை; இந்து கோவிலுக்குள் அனைவரையும் சமமாக விட்டிருந்தால் ஈழத்தில் ஒரு கத்தோலிக்க கோவில் ஏன் வரவேண்டும்; ஜயர் மனிதனாய் அனைத்து சமூகத்தையும் பார்த்திருந்தால் பாதிரியாருக்கு ஈழத்தில் வேலை இருந்திருக்காது, நாமும் விட மாட்டோம் (இந்து) விடுபவர்களையும் குற்றம் காண்போம், டேவிட் ஜயா; சிங்கராயர், டாக்டர் ராயசுந்தரத்தின் அருமை பெருமை வன்னியில் பிறந்த நந்தாவுக்கு தெரியாமல் இருக்கலாம் ஆனால் காந்தியத்தால் உதவி பெற்ற அனைவருக்கும் தெரியும்; காந்தியம் சமூக இயக்கம்தான்; அதை புளொட்டில் கொண்டுபோய் சேர்த்த பெருமை சந்ததியாரையே சேரும்?? (சந்ததியார் யார்??) புலிக்கு உதவி செய்யும் பாதிரியார்மாரைதான் நந்தா போன்றோருக்கு தெரியும், ஆனால் எத்தனையோ அனாதை இல்லங்களை நடத்தி வரும் கத்தோலிக்க பெரியவர்களை யாருக்கும் தெரியாது;

    நான் வாழும் நாட்டில் என்னை யாராவது எனது பெயரை சொல்லாமல் ஏய் சிறிலங்கன் என அழைத்தால் எனக்கு மிகவும் கோபம் வரும்; (இது பல இடங்களில் நடக்கிறது); ஆனால் அன்று எனது கிராமத்தில் வேலைக்காய் வந்த மலையக தமிழரை எமது இனம் தோட்டகாட்டார் என அழைத்ததை எண்ணி இன்று என் தலை குனிகிறது; அன்று றோட்டில் நடந்த கத்தோலிக்கரை வெட்டியது எனது இனம்(இந்து) ஆனால் இன்று அதே கத்தோலிக்க நாட்டில் நடுறோட்டில் அன்றாட போக்குவரத்தை தடைசெய்து பல மணிநேரம் தேர் இழுப்பதும் நம் இனம்தான், கத்தோலிக்கர் ஊர்வலம் நடத்தினாலே கல்லால் எறிந்த இனம் இன்று கத்தோலிக்க நாட்டில் தமக்கான தனி சுய உரிமைக்காக எத்தனை வழக்குகள்,?? இப்படி பக்கம் பல புரட்ட பல்லியால் முடியும், அது எனது நோக்கமல்ல வேணாம், சாதி? மதம்? இனம்? மனிதராய் மனிதர் வாழ எது வேண்டுமோ அதை பற்றி முரன்படுவோம் வாதிடிவோம்,

    Reply
  • NANTHA
    NANTHA

    //கத்தோலிகாரையும் குறை சொல்லவும், புத்தி புகட்டுவதற்கும் முன், கத்தோலிக்கர் வாழும் மேலை நாடுகளிலிருந்து வெளியேறி இந்துக்கள் வாழும் நாடுகளில் புகலிடம் தேடுவதே நல்லது.//துரை:

    இலங்கைக்கு கத்தோலிக்கம் ‘வந்தான் வரத்தான்” சமயம். நீங்கள் ஏன் இலங்கையிலுள்ள அந்த “கத்தோலிக்க”கர்களை கத்தோலிக்கரின் நாடுகளுக்கு கூட்டிச் செல்லக் கூடாது? இலங்கையிலுள்ள இந்துக்களுக்கும், பவுத்தர்களுக்கும் பரம நிம்மதியாக இருக்கும்!

    உண்மைகளை ஜீரணிக்க கஷ்டமாக உள்ளவர்கள் சமூகத்தில் மிகவும் கேவலமானவர்கள். “உலக கத்தோலிக்க சபை” அல்லது வத்திக்கான் ஒன்றும் மகாத்மாகாந்தியின் கொள்கைகளை பிரசங்கம் செய்யவில்லை. கொலைகாரர்களோடு கூட்டணி வைத்திருக்கும் கத்தோலிக்கர்கள் “தமிழர்களுக்கு” எப்போதும் ஆபத்தானவர்கள்.

    Reply
  • Appu hammy
    Appu hammy

    ALL COMENTERS, PLEASE THINK TWICE BEFORE YOU COMMENT!! THANKS
    /நீங்கள் மீண்டும்,மீண்டும் மதம் பற்றிக் கதைப்பது ஆரோக்கியமானதாகப் படவில்லை. இனத்தின் எண்ணப்பாடுகள், கடிவாளம் கட்டிய குதிரைகளாக அந்தெந்த எசமானர்களுக்கு ஏற்றதாக பல்வேறு திசைகளில் பயணிப்பது ஈனமாகப் படவில்லையா? பழிகளை மற்றவர் மேல் போட்டு தப்பியோடப் பார்ப்பது மற்றொரு அழிவை நோக்கியதாகத்தான் இருக்கும். வீழ்ந்து போன மக்களை தூக்கி விடாவிட்டாலும், ஏறி மிதிக்காதீர். தீதும் நன்றும் பிறர் தர வாரா’ என்று எம்மினச் சிந்தனையை அறிந்தவன் சொல்லிப் போய் விட்டான். யோசித்துப் பாருங்கள்!என்றும் தமிழ் நட்புடன் தொடர்வோம்.//

    Reply
  • NANTHA
    NANTHA

    பல்லியின் கருத்துப்படி “இந்துக்களின்” சாதி பிரச்சனையால்தான் “தாழ்ந்த சாதிகள்” மதம் மாறினார்கள் என்று சொல்வது பெரிய தமாஷ்.

    சாதியை எதிர்த்து மதம் மாறியவர்கள் என்றால் இந்த தமிழர்கள் அனைவரும் எப்போதோ புத்த சமயத்துக்கு மாறியிருக்க வேண்டும். புத்த மதத்தில் “சாதி” கிடையாது.

    ஆனால் போர்த்துகீச பறங்கிகள், அவர்களின் கூலிப்படையான பாதிரிகள் “மத மாற்றம்” செய்ய வேண்டும் அல்லது அவர்களைக் கொல்ல வேண்டும் என்ற கொள்கை உள்ளவர்கள் என்பது தெரியாமல் எழுதுகிறீர்கள்.

    மதம் மாறாதவர்களை “தண்டிக்கவேண்டும்” என்று பாதிரிகளின் “INQUISITION” என்ற முறை உள்ளதை பற்றி பல்லிக்கு தெரியாமல் இருக்கிறது. மதம் மாறியவர்களுக்கு சலுகைகள் என்பன வழங்கப்பட்டன. மற்றவர்களுக்கு கல்வி கூட மறுக்கப்பட்டது. மதம் மாறாதவர்களின் சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டன. லிஸ்பனுக்கு பக்கத்தில் இருந்தால் ஒரு முறை அங்கு சென்று இலங்கை பற்றிய அறிக்கைகளையும், மதமாற்ற விபரங்களையும் படிக்கவும். போர்த்துகீச அறிக்கைகளில் யாழப்பாண மக்கள் அனைவரும் மதமாற்றம் பெற்றுள்ளதாக் கூறப்பட்டிருப்பதை இன்றும் பார்க்கலாம். எனவே “வரலாறும்”, கத்தோலிக்கரின் சுய ரூபமும் தெரியாமல் மற்றவர்களை முட்டாளாக்க முயல வேண்டாம்!

    அநாதை விடுதிகள் ஒன்றும் கத்தோலிக்கரின் பணத்தில் நடக்கவில்லை. அரசு உதவிகளை கொழும்பிலுள்ள சிங்கள பாதிரிகளின் உதவியோடு பெற்று தங்கள் மதமாற்ற கைங்கரியத்துக்காக நடத்துகிறார்கள். இந்துக்கள் நடத்திய அநாதை விடுதிகள் புலிகளின் ஆட்சியில் காணாமல் போன கதைகள் எங்களுக்கு நன்கு தெரியும்.

    காந்தீயத்துக்கு எதிராக “பெட்டிசம்” போட்டவர்களே கத்தோலிக்க பாதிரிகள் என்பது எனக்கு தெரியும். பெட்டீசத்தின் போட்டோ பிரதியை காட்டியவரும் அதே ராஜசுந்தரம்தான். அந்த ராஜசுந்தரத்தை பயங்கரவாதி என்று எழுதிய கத்தோலிக்க பாதிரிகள், பின்னர் புலிகளோடு சேர்ந்து கூத்தடித்தார்கள்.

    காந்தீயத்துக்கும், கத்தோலிக்கர்களுக்கும் என்ன பிரச்சனை? வெளிநாடு நிறுவனங்கள் 1977 கலவரத்தின் பின்னர் நிதியுதவிகளை “கத்தோலிக்க” பாதிரிகளுக்கே கொடுத்து வந்தனர். பாதிரிகளோ பாதிக்கப்பட்ட மக்களை விட்டு விட்டு தங்கள் “கத்தோலிக்க” கர்களுக்கு மாத்திரம் உதவி செய்தனர். அதனை நிறுத்தி காந்தியத்துக்கு அந்த நிதிகளை வழங்கச் செய்தவர்கள் ராஜசுந்தரமும், டேவிட் ஐயாவும் என்பது பல்லிக்கு தெரியாது. அதன் விளைவாகவே ராஜசுந்தரம் கொல்லப்பட்டார் என்றும் நம்புகிறேன்.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //….நீங்கள் “வரிப்பணம்” என்கிறீர்கள். அப்படி கணக்குப் பார்த்தால், தமிழர்கள் வரிப்பணத்தில் ஒரு பாடசாலை கூடக் கட்ட முடியாது…..//
    நியாயம் தான். எல்லாப் பாடசாலைகளும் சிங்களவரின் காசில் தான் கட்டினார்கள்!

    //….வன்னியை விவசாய பூமியாக மாற்றியவர்கள் இலங்கை மக்களே தவிர பாதிரிகள் அல்ல….//
    வசதியாக இலங்கை மக்கள் எனப்போட்டு ‘தமிழரை’ விட்டுவிட்டீர்கள்! ஆனால் இவர்களின் வரிப்பணத்தைக் கணக்குப்பார்க்கும் போது மட்டும் தமிழர்கள்!

    //….பறங்கிகள் யாழ்பாணத்தில் கட்டிய பாடசாலைகள் யாருக்காக? பாதிரிகளின் கட்டுப்பாட்டில் பாடசாலைகள் இருந்த கதைகள் தெரியாதோ? பத்து வீத கிறிஸ்தவர்கள் 95 சதவீத பாடசாலைகளை வைத்திருந்தது எப்படி ஜனநாயகம் ஆகும்?….//
    அவன் பள்ளிக்கூடம் அவன் கட்டுபாட்டில் தான் இருக்கும். விரும்பினால் நீங்களும் ஒன்று கட்டவேண்டியது தானே? நான் கற்ற பள்ளிக்கூடம் அவ்வகையாகக் கட்டப்பட்டதே! கட்டியவர் ஆறுமுகநாவலர். அவர் கிறிஸ்தவ மிசன் அமைப்புமுறையைப் பின்பற்றியே அதையும் கட்டினார் என நினைவில் கொள்க!

    //….யாழ் பல்கலைக் கழகம் ஸ்ரீ மாவோ அரசின் காலத்தில்தான் கொண்டு வரப்பட்டது. சிலவேளைகளில் அதுவும் இல்லை. பாதிரிகள்தான் கொண்டு வந்தார்கள் என்று நீங்கள் சொல்லலாம்// …உண்மைதான்!!
    யாழ் பல்கலைக்கழகத்தின் ஒரு வளாகமாக இருந்தது யாழ்ப்பாணக்கல்லூரி ! அக்கல்லூரியில் அந்நாட்களிலேயே கல்கத்தா பல்கலைக்கழக பரீட்சை எடுப்போருக்கு கல்விகற்பித்தனர். அத்துடன் தலைசிறந்த நூலகமும் தொழில் நுட்பப்பிரிவும் இயங்கி வந்தது. அப்பிரிவினை ‘சுவீகரித்து’ யாழ்ப்ல்கலைக்கழகத்தின் நூலகமாக் மாற்றினர். இவ்வாறான யாழ்ப்பாணக் கல்லூரியை கொண்டு வந்தது வேறுயாருமல்ல நீங்கள் சொல்லும் ‘பாதிரிகள்’தான்!

    ஸ்ரீலங்காவின் தலைசிறந்த கல்லூரிகளில ஒன்றும் முதன்முதலாக பல்கலைக்கழக மட்டத்தில் கற்பிக்கக்கூடிய தகுதியுள்ள ஒரு கல்லூரி என கருதப்பட்டு ஸ்ரீலங்காவில் முதன்முதலான பல்கலைக்கழகமாக அதை மாற்றும் நடவடிக்கைகள் கூட சுதந்திரத்துக்கு முன்னரே ஆரம்பிக்கப்பட்டிருந்தன! மேலும் பல சரித்திர முக்கியத்துவம் உள்ள விடயங்கள் உண்டு, முக்கியமானது பண்டத்தரிப்பு மருத்துவ நிலையம், உடுவில் மகளிர் கல்லூரி. அவை பற்றி பின்னர்!

    மேலும் சேர்.பொன்.ராமநாதன் கட்டிய ’இந்து’ பரமேஸ்வராக் கல்லூரியைச் சுவீகரித்து பல்கலைக்கழகமாக மாற்ற்றாமல் மாறாக புதிதாக ஒரு பல்கலைக்கழகம் கட்டவேண்டும் என ‘இந்து’ மக்கள் கேட்டபோது அதனைக்காதில் வாங்காமல் இலங்கையின் இரண்டு தலைசிறந்த கல்லூரிகளைச் சுவீகரித்து ‘பல்கலைக்கழகமாக’ மாற்றிய பெருமை சொலமன் றிட்ஜ்வே டயஸ் ’பாதிரி’ சிறீமாவுக்குத்தான் சேரவேண்டும்!
    (ராமநாதன் ஆறுமுகநாவலரின் வழியைப் பின்பற்றியே இந்துக்கல்லூரிகளை ஸ்தாபித்தார். பரமேஸ்வரா/இணுவில் ராமநாதன் கல்லூரி, கொழும்பு இந்து/சைவ மங்கையர் கழகம்)
    இவரின் ‘சேர்’ பட்டம் ‘பாதிரி’ கட்டுப்பாட்டில் உள்ள இங்கிலாந்து ராணியினால் வழங்கப்பட்டது என்பதனையும் கருத்தில் கொள்ளவும்.

    /..அஸ்கிரிய, மல்வத்த என்பன காஞ்சி காமகோடி பீடம் போன்றவை. அவை பவுத்தர்களை கட்டுப்படுத்த முடியாது. ஆனால் கத்தோலிக்கர்கள் ‘ வத்திக்கானின்” நாசி போப்புக்கு பணிந்தே ஆக வேண்டும். வித்தியாசம் புரிந்தால் சரி….//
    கத்தோலிக்கர்கள் இப்போதெல்லாம் எமக்க்கு கட்டுப்படுகிறார்களில்லை, சேர்ச்சின் வருமானம் குறைந்து விட்டது, Gay, Lesbian எல்லாம் பாதிரிகளாக வருகிறார்கள் என வத்திக்கான் அழுவது தெரியாமல் ‘பணிந்தே ஆகவேண்டும்’ எனச் சொல்கிறீர்கள்! அந்த வத்திக்கான் நாசி போப்பிடம் வெறும் ஜீ.பீ.எஸ் பிளஸ் (வரி!) சலுகைக்கு பெளத்த/இந்து/இஸ்லாமிய /பாதிரி களை அனுப்பி கெஞ்சினார்களே ஸ்ரீலங்கா அரசினர்!!!

    //….பவுத்த மதத்துக்கு அரசியல் சாசனத்தில் இடம் கொடுத்துள்ளதால் “யாருக்காவது” பாதிப்புக்கள் வந்தனவா?….//
    ஆம், இந்துக்களுக்கு! எவ்வாறு?
    யாழ் கே.கே.எஸ் வீதியில் போக்குவரத்து இடையூறு அல்லது அபிவிருத்தி எனக்கூறி ஆறுமுக நாவலர் தோற்றுவித்த கல்லூரி முகப்பை இடிக்கலாம், வண்ணை வைத்தீஸ்வரன் கோயிலை இடிக்கலாம். ஆனால் எங்காவது ஒரு அரசமரத்தைத் தறிக்க ‘பெளத்த சாசன’ அமைச்சிடம் அனுமதி வேண்டும் ஏனெனில் ஸ்ரீலங்காவில் பெளத்த சாசனத்தைப் பாதுகாக்க அரசியலமைப்பு கடமைப்பட்டிருக்கிறது!

    //…அதற்கும் அந்த மதங்களில் உள்ள “சுதந்திரத்துக்கும்” என்ன சம்பந்தம்?..//
    பெளத்த மத சுதந்திரம் எவ்வாறு மற்ற மத சுதந்திரத்தில் தலையிடுகிறது என்பதனை ஸ்ரீலங்காவில் சேர்ச்சுகள் எரிக்கப்படும் உடைக்கப்படும் வீடியோக்களைப் பார்த்து அறிந்து கொள்ளுங்கள். ஆனால் அதே ‘பாதிரி’ செய்த ராணுவ தளவாடங்கலை வாங்குங்கள்.

    Reply
  • தாமிரா மீனாஷி
    தாமிரா மீனாஷி

    ஈழப் போராட்டத்தின் இறுதியில் திருச்சபையின் ஆதிக்கம் எவ்வளவுக்கு நன்மை தரக்கூஉடியதாக இருந்தது என்பது இன்று பலருடைய மனத்தில் எழும் கேள்வி.. ஈழத்தின் சாதாரண கத்தோலிக்க மதத்தினரை வேதனைப் படுத்தும் நோக்கமில்லை இதற்கு… தமிழ் மக்களின் மனித உரிமைகளுக்காகக் குரல் கொடுத்த வண.பிதா. திஸ்ஸ பாலசூரிய திருச்சபையிலிருந்து வெளியேற்றப் பட்டார்.. ஆனால் ஆயுதப் போராட்டத்தையும் அதன் பெயரில் நிகழ்த்தப் பட்ட உயிர்க்கொலைகளையும் பகிரங்கமாக ஆதரித்த பாதிரியார் பலர் திருச்சபையில் இருந்து சிறு கண்டிப்பு கூட இல்லாமல் உலவிவந்தனர் .இது எதை உணர்த்துகிறது..? உலகின் முதல் பல்தேசிய நிறுவனம் கத்தோலிக்க திருச்சபையே! திருச்சபையின் நோக்கங்களும் முகத்தோற்றங்களும் பல்வேறு வடிவங்கள் கொண்டவை என்பது எல்லோருக்கும் தெரியும்..ஈழப் போராட்டத்தில் திருச்சபையின் பங்கும் நோக்கங்களும் பாரபட்சம் இல்லாமல் ஆய்வு செய்யப் படவேண்டும். இது எதிர்கால சந்ததிக்கு உதவக் கூடியதாக அமையும்…

    எனது குறிப்பு மதத்தின் பெயரால் அதிகாரத்தைக் கைப்பற்ற முயற்சிக்கும் அல்லது அதிகாரத்தில் இருக்கக்கூடியவர்களை கைக்குள் போட்டுக் கொள்ள முனையும் தந்திரசாலிகளுக்கு எதிரானதேயன்றி மதத்தைத் தனது ஆன்மீக விடுதலைக்கான பாதையாக எண்ணி மதத்தின் நற்போதனைகளை வாழ்க்கை நெறியாக வகுத்து வாழும் சாதாரண மனிதருக்கு எதிரானதல்ல.. மத வாதத்தைத் தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கும் மனநிலையிலும் நான் இல்லை.. போராட்டத்தில் மதம் வகித்த பங்கு பற்றி நான் காதால் கேட்டவற்றை மற்றவர்களுக்கும் தெரியப் படுத்தினேன்.. எனது குறிப்பு சாதாரண கத்தோலிக்கர் எவரையாவது புண்படுத்தியிருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன்..

    Reply
  • thurai
    thurai

    //இலங்கைக்கு கத்தோலிக்கம் ‘வந்தான் வரத்தான்” சமயம். நீங்கள் ஏன் இலங்கையிலுள்ள அந்த “கத்தோலிக்க”கர்களை கத்தோலிக்கரின் நாடுகளுக்கு கூட்டிச் செல்லக் கூடாது? இலங்கையிலுள்ள இந்துக்களுக்கும், பவுத்தர்களுக்கும் பரம நிம்மதியாக இருக்கும்!//

    30 வருடத்திற்குப் பின், 2 லட்சம் பேரை பலிகொடுத்த பின்புதான் இலங்கையிலுள்ள இந்துக்களுக்கும், பவுத்தர்களுக்கும் பரம நிம்மதியாக இருக்கலாம் என்ற உண்மை விளங்கிய்து. அதற்கு முன் பட்டபாடு உலகமறியும்.

    இந்து சமயம் இந்தோசினீயா வரை பரந்துள்ளது அங்கு இப்போது முஸ்லிம்கள் பெரும்பான்மையாகவுள்ளது. அவர்கள் யாவரும் இந்தோனீசியர்கள் என்றே வாழ்கின்றார்கள்.

    இலங்கையில் இந்து சமயம் தமிழர்களிற்கும், புத்தமதம் சிங்களவர்களிர்குமுரியதென்பது இன,மத வாதிகளின் அடித்தள்ம். அடுத்தாக வரப்போவது இந்துக்களில் உய்ர்ந்தவன் யார், தாழ்ந்தவன் யார் என்பதேயாகும். மதங்கள் யாவுமே தமிழர்களிடம் வாழவந்தனவே தவிர தமிழரை வாழவைக்க தமிழரிடம் வரவில்லை.

    அன்னியரின் வருகையாலும், கிறிஸ்தவ சமயங்களாலும் ஈழத்தமிழர்களிற்கு ந்ன்மைகழும், தீமைகழும் கிடைத்திருக்கின்றன. அது எப்போ நடந்த கதையாகினும் அதன் பலா பலன்களை நாம் அனுபவிக்கின்றோம், ஆனால் அன்னியரின்,வருகையையும், கிறிஸ்தவ மதங்கழும் கெடுதலே தமிழர்களிற்கு செய்ததாக மார்தட்டுவோர், இன்றிலிருந்து நீட்டுக் காற்சட்டைகளை களற்ரி விட்டு முருகன் போல் கோமணத்துடன் திரியாவிட்டாலும் உலகமெங்கும் வேட்டியுடனும் தலைப்பாகையுடனும் வலம் வந்து தமிழர் பெருமையை வளர்ப்பார்களென நம்புகிறேன்.

    துரை

    Reply
  • chandran.raja
    chandran.raja

    உலகரீதியாக கட்டமைக்கபட்ட கத்தோலிக்க நிறுவனமும் பாதிரிமார்களும் (இதில் கத்தோலிக்கர்கள் ஆன அப்பாவிமக்கள் இணைத்துக் கொள்ளமுடியாது) இலங்கையில் முப்பது வருடங்களாக நடந்த உள்நாட்டுயுத்தம் (புலிப்பயங்கரவாதம்) மூன்று வருடங்களாகவே அல்லது பதின்மூன்று வருடங்களாகவோ குறுக்கியிருக்க முடியுமா? நிச்சியமாக இல்லை.
    நீண்டகால புலம்பெயர்ந்த புலிஆதரவாளர்கள் இருவர் தம்மிடையே இறுதியில் தம்மை சமாதானப் படுத்திக் கொண்டார்கள்..” எப்படியாக இருந்த புலிகள் இப்படியாகிப் போனார்கள்” என்று இன்று உள்ள பிரச்சனையே எதிரி யார்? என்று அறிந்து கொள்ளமுடியாது இருப்பதே! சமயத்திற்கு எதிராக சமயத்தை எதிரியாக நிறுத்துவது எந்தவிதத்திலும் அரசியல் ஆகாது. இதற்கு தெளிவான விளக்கத்தை பின்னோட்டத்தை நந்தாவே வழங்க வேண்டும்.

    Reply
  • DEMOCRACY
    DEMOCRACY

    என்ன குழப்பமய்யா இது!, கத்தோலிக்க குழப்பம். கிரிஸ்தவ மதத்திற்கும், “ஐரோப்பியரின் கால் சட்டைக்கும்” சம்பந்தம் கிடையாது. யேசுவின் 12 சீடர்களே கத்தோலிக்கத்தை ஆரம்பித்தாலும், அவர்களின் தொடர்பேயில்லாமல், அந்த காலத்தில் பெரிய சாம்ரஜ்ஜியமாக இருந்த ரோம சாம்ராஜியத்தின் பீட்டர் இதை “ஹைஜாக்” செய்துவிட்டார்!. இதிலிருந்தே ஒரு “ஐரோப்பிய மக்களை கட்டுப்படுத்தும் (அபின்)” அரசாங்கங்களின் கருவியாகவே, கத்தோலிக்க மதம் இருந்து வந்துள்ளது!. ஒவ்வொரு ஐரோப்பிய நாட்டு அரசாங்கங்களுக்கு தகுந்த மாதிரி, கத்தோலிக்க மதம் தன் முக மூடியை மாற்றிக் கொள்ளும்!. இது “பிரான்ஸின் இன்குஷிஷனுக்கு (கிலட்டின்)” உதவியுள்ளது, நாஸிஸத்துக்கு உதவியுள்ளது, காலனித்துவத்திற்கு உதவியுள்ளது. ஆசியாவில், முதலில் வந்தது ஐரோப்பிய அரசாங்க படைகள் அல்ல, “கிழக்கிந்திய வியாபார கம்பெனியே!”. இதுதான் காலனித்துவத்தை நிறுவியது. இந்த வியாபாரத்திற்கு தூணைப் போல் உதவி செய்த்தது கத்தோலிக்க மதமே. இவர்கள்தான் தங்கள் நிர்வாகத்திற்கு ஆள் எடுத்தார்கள். இவர்களிடம் வியாபாரத்தை தவிர அரசியலை எதிர்பார்க்க முடியுமா?. திராவிட இயக்கங்களின் அடிப்படையான “நீதிக்கட்சியை” அமைத்தவர்கள், நிலச்சுவாந்தார்களான ஜமீந்தார்கள், அதில் சில வியபாரிகளும் இருந்தார்கள், அவர்கள்தான் பிறகு வெற்றியடைந்தார்கள். இவர்களைப்போல் வருவதுதான் தற்போதைய திராவிட தலைவர்களின் கனவு. இதை எம்.ஏ.எம்.இராமசாமியிடம் கேட்டால் தெளிவாக சொல்லுவார்!. இதில் உதித்த செல்வநாயகம் அவர்கள், ஜி.ஜி.பொன்னம்பலம், கலைஞர் அவர்கள், ஆகியோர் “தமிழ், தமிழ், என்று புளுகுமூட்டையால் கட்டிய கப்பலைதான், “மூழ்காத டைடானிக் கப்பல்” என்று நினைத்து, அமிர்தலிங்கம், வே.பிரபாகரன் போன்றவர்கள் ஏறி அமர்ந்துதான் இப்படி ஆகிவிட்டார்கள்!.

    Reply
  • palli
    palli

    //இன்றிலிருந்து நீட்டுக் காற்சட்டைகளை களற்ரி விட்டு முருகன் போல் கோமணத்துடன் திரியாவிட்டாலும் உலகமெங்கும் வேட்டியுடனும் தலைப்பாகையுடனும் வலம் வந்து தமிழர் பெருமையை வளர்ப்பார்களென நம்புகிறேன். துரை//

    துரை உங்கள் ஆதங்கம் எனக்கும் இருக்கு, ஆனால் ஒருசிலர் வாதத்துக்காய் நாமும் அந்த தமிழ் மக்களை கீழ்நிலையில் தள்ளி விவாதிப்பது சரியல்ல, அவர்களது கருத்துக்கு சரியான விளக்கம் உங்களிடம் இருக்கும் போது தரகுறைவாய் பதில் வேண்டாம் என்பது பல்லியின் தாழ்மையான கருத்து; எமது வாதபோரில் அந்தமக்கள் (கருத்தால் தன்னும்) பலியாக வேண்டாம்,

    Reply
  • Jeyarajah
    Jeyarajah

    /கோவிலுக்கும் சோசலிஸத்துக்கும் என்ன தொடர்பு??/ பல்லி

    ஆரம்ப காலங்களில் மூத்த உறுப்பினர்கள் ஏதும் கதைத்தால் அதுதான் தத்துவம் என்றொரு நிலை இருந்தது. இவர்கள் எல்லோரும் மார்க்சிசம் கரைத்துக் குடித்தவர்கள் இல்லை. எமது அன்றைய இளைஞர்களும் அப்படியே. உதாரணத்திற்கு பாலில்லாமல் ஒரு குழந்தை அழும்போது இல்லாத பால் ஒரு கல்லுக்குத் தேவையா என மூத்த உறுப்பினர்கள் சொல்ல அதை தத்துவமாகக் கொண்டவர்கள் தான் அன்றைய இளைஞர்கள். இவர்களை சிவப்புக் கோஷ்டிக்காரர் என்றும் மக்கள் கதைத்ததுண்டு.

    பெருமாள் கோவிலிலும் துர்க்கை அம்மன் கோவிலிலும் கைவைத்த போது மக்கள் நினைத்தது இந்த சிவப்புக் கோஷ்டிகள்தான் செய்ததென்று. ஆனால் நடந்ததோ வேறு.

    பல்லி நீங்கள்தான் சொன்னீர்கள் குப்பையைக் கிளறினால் பொக்கிசமும் வருமென்று. இப்போ குப்பையைக் கிளறுகிறார்கள். வருவது குப்பையா? பொக்கிசமா?

    Reply
  • NANTHA
    NANTHA

    சாந்தன்:
    மக்களின் வரிப்பணம் என்பது :உங்களின்” வெறும் புரளி. கடந்த 30 வருடங்களாக “புலிகளுக்கு” வரி கொடுத்தவர்கள் தமிழர்கள். அதில் “பங்கு” போட்டுக்கொண்டு போனவர்கள் பாதிரிகள்.

    இலங்கையில் “சிங்களவர்” ஒருவர்தான் ஜனாதிபதியாகவோ, பிரதமராகவோ இருக்க முடியும். அதனை மாற்ற முடியாது. சிங்களவர்களின் அரசு என்று கூச்சல்” போடுவதில் பயன் கிடையாது!

    சுதந்திர இலங்கையில்தான் “வன்னி” செழித்ததும் விவசாய பூமியாக மாறியதும் என்பது உண்மை. பாதிரிகளின் காலத்தில் வன்னி காடாகவே இருந்தது. வன்னியின் செழிப்பையும், வளத்தையும் கண்டவுடன் பாதிரிகள் அங்கு போய் முகாமிட்டு புலிகளுடன் சேர்ந்து இன்று வன்னியை மீண்டும் சுடு காடாக்கியுள்ளனர். கொள்ளையடிப்பதும் கொலை செய்வதும் “மத” கடமையாக கருதும் பாதிரிகள் “தமிழ்” என்பதும் அதை சில கபோதி தமிழர்கள் நம்புவதும் கேவலமான சிந்தனை.

    பாதிரிகள் பள்ளிக்கூடம் கட்டினார்கள். யாருடைய பணத்தில் என்று சொன்னால் நல்லது. மேலும் ஆறுமுக நாவலர் “கிறிஸ்தவ” முறையை பின்பற்றி கட்டினார் என்கிறீர்களே. அப்போது “திருவள்ளுவர், இளங்கோ அடிகள், கம்பர்” ஆகியோர் ‘கான்வென்ட்’ போய் படித்துதான் நூல்களை எழுதினார்களோ?

    இந்து போர்ட் பாடசாலைகள் கட்ட அனுமதிக்கப்பட்டது 1850 ஆம் ஆண்டின் பின்னரே என்பதை உணரவேண்டும். ஆனால் அந்த இந்து பாடசாலைகளில் “இந்து மதம்” போதிக்கப்படக் கூடாது என்ற கட்டுப்பாடுக்கு கீழ் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். இந்து மத போதனைக்கு பறங்கிகள் அரச பணத்தை கொடுக்கவில்லை. ஆனால் கிறிஸ்தவ போதனைக்கு பணம் வழங்கினார்கள்.

    எஸ் டப்ளிவ் ஆர் டி பண்டாரனாயக்காதான் இந்துக்கள், இந்துமத போதனைகளை அரச செலவில் படிக்கலாம் என்று சட்டம் கொண்டு வந்தவர். அதனை பாதிரிகள் “தமிழ்” என்று புகுந்து எதிர்த்தார்கள். அரசாங்கத்தின் கட்டளைகளை உதாசீனம் செய்து பல “முன்னாள்” கிறிஸ்தவ பாடசாலைகள் “இந்து மத கல்வியை” அந்த பாடசாலைகளில் அமுல் படுத்தாமல் இருந்தனர். அரசிடம் பணம் பெற்றுக்கொண்டே அரசுக்கு எதிராக தங்கள் “மத வெறியை” காட்டிய” பாதிரிகள் “இந்து மாணவர்களை” புறக்கணித்தனர். அந்த விளையாட்டு அதிக காலம் நீடிக்கவில்லை.

    நாங்கள் திருவாசகம், திருவருட்பயன், தேவாரங்கள் என்பனவற்றை பாடசாலைகளில் இன்று படிக்கிறோம். அரச வரிப்பணம் செலவிடப்படுகிறது. பறங்கிகள் காலத்தில் அது ஏன் இல்லை என்றும் “பாதிரிகளின்” சமயங்கள் மட்டும் படிக்கலாம் என்றும் ஏன் இருந்தது ? பாதிரிகள் எங்கும் “இந்துக்களும்” , மனிதர்கள் அவர்களுக்கும் எங்களைப்போல “சம உரிமை” கொடுக்க வேண்டும் என்று பரங்கிகளைக் கேட்டதாக வரலாறே கிடையாது.

    உலகத்து பல்கலைக் கழக வரலாறுகளில் “புகழ்” பெற்ற பாடசாலைகள்தான் “பல்கலைக் கழகங்களாக மாற்றப்பட்டன. ” புதிய” கட்டிடம் கட்டி பல்கலைக் கழகம் தொடங்கியதாக வரலாறுகள் இல்லை.

    பரமேஸ்வரா கல்லூரியை பல்கலைக் கழகமாக மாற்ற வேண்டாம் என்று “இந்துக்கள்” கேட்கவில்லை. கிறிஸ்தவ செல்வநாயகம் கோஷ்டிதான் கேட்டது ஏனென்றால் அப்படி கேட்பதன் மூலம் “பல்கலை கழக “வரவை” தடுக்கலாம் என்று கனவு கண்டவர்கள் அவர்களே.

    தவிர அரசு “சொத்துக்கள்” மீது அரசைத் தவிர அரசியல்வாதிகள் ஆதிக்கம் செலுத்த முடியாது. பின்னர் அந்த பல்கலைக் கழகம் ” படிப்பறிவில்லாத” புலிக் கும்பல்களால் சூறையாடப்படதுடன் கொலைக்களமாக மாறியதும் வரலாறு.

    யாழ்ப்பாணக் கல்லூரியை யு ஏன் பி ஆட்சியில் மீள எடுத்த கிறிஸ்தவர்கள் புலிகளின்” இளம்பரிதி” என்பவரை அழைத்து கவுரவித்தனர். இந்த இளம் பரிதி கீரிமலையில் கள்ளச்சாராயம், கள்ளக்கடத்தல் போன்றவற்றில் ஈடுபட்ட கிரிமினல் “வியாளியின்” பேரன் என்பது இன்னொரு சிறப்பு.

    //இவரின் ‘சேர்’ பட்டம் ‘பாதிரி’ கட்டுப்பாட்டில் உள்ள இங்கிலாந்து ராணியினால் வழங்கப்பட்டது// இங்கிலாந்து கத்தோலிக்க பாதிரிகளின் கட்டுப்பாட்டில் இல்லை. தவிர இந்த “சேர்” பட்டம் தங்களுக்கு உபயோகமானவர்களுக்கே இங்கிலாந்து வழங்கியது.

    //பெளத்த/இந்து/இஸ்லாமிய /பாதிரிகளை அனுப்பி கெஞ்சினார்களே ஸ்ரீலங்கா அரசினர்!!!//
    அவர்கள் யாரென்று கூற முடியுமா?

    அரச மரம் மாத்திரமல்ல எந்த மரத்தையும் வெட்ட அரச அனுமதி பெற வேண்டும். தவிர அரச மரம் இந்துக்களுக்கும் “புனிதமானது” என்ற உண்மை தெரியாதோ?

    கத்தோலிக்கர்கள் பவுத்த கோவில்களை தாக்கினால் பதிலடி கிடைக்கும். ஆனால் இந்து கோவிலுக்குள் பாதிரிகள் புகுந்து “ஏடு” தொடக்கினால் இந்துக்கள் மவுனம் காக்க வேண்டும். அது உங்கள் எதிர்பார்ப்பு.

    வத்திக்கான் “இராணுவ” தளபாடங்கள் உற்பத்தி செய்கிறதா?

    Reply
  • NANTHA
    NANTHA

    துரை:
    உடைகளின் பரிணாமம் அந்த நாடுகளின் “சுவாத்தியங்களின்” அடிப்படையிலேயே உருவாகியது. இலங்கையில் வெள்ளையர்களை மகிழ்விக்க பயங்கர வெயிலில் கோட்டு, சூட்டு போட்ட ஆசாமிகள் பரிதாபமானவர்கள். தவிர மதம் மாறியவர்கள் “தாங்கள்” அரசின் ஆட்கள் என்று பறை சாற்ற வெள்ளையர்களின் உடைகளுக்குள் புகுந்து கொண்டனர்.

    ஆனால் இந்த “பாண்ட்” என்பது சீனாவில்த்தன் முதலில் தொடங்கியது.

    அது சரி ” பாதிரிகள்”, தமிழ் சூரர்கள் ஏன் வந்த நாடுகளில் “தமிழுரிமை” பற்றி மூச்சு காட்டுவதில்லை? தமிழையும் அரச மொழியாக்கு என்று ஜெர்மனியிலும், கனடாவிலும், இங்கிலாந்திலும் கூச்சல் போடலாமே!

    Reply
  • NANTHA
    NANTHA

    DEMOCRACY:
    நீங்கள் குறிப்பிட்ட வரலாற்று சான்றுகள் எப்படி மதம் மக்களை “கட்டுப்படுத்த” உபயோகப்பட்டது என்பதற்கான சான்றுகள். அப்கானிஸ்தானிலும், இராக்கிலும் அமெரிக்கர்கள் புகுந்தவுடன் கொரியன், பிலிப்பினோ பாதிரிகள் உட்பட பலபாதிரி கூட்டங்களும் அங்கு புகுந்தன. இவர்களை அடையாளம் கண்டு முஸ்லிம்கள் அவர்களைத் துரத்தியுள்ளனர். இது தற்போதைய வரலாறு!

    இலங்கையிலும் யு என் பி அரசு 1977 இல் வந்தவுடன் ஏராளமான ” என் ஜி ஓ” க்கள் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் இருந்து வந்திறங்கினார்கள். அவர்கள் “புலிகளை” தாங்கு தாங்கென்று தாங்கி புலிகளின் சகல அராஜகங்களுக்கும் துணை போனார்கள். இந்த அமைப்புக்கள் ஒன்றும் சுதந்திரமான அமைப்புக்கள் அல்ல. அவை கிறிஸ்தவ அமைப்புக்களின் கட்டுப்பாட்டில் இயங்குபவை. அதனால்தானோ என்னவோ வன்னி போரின் பொது அரசு இந்த அமைப்புக்களை துரத்தியது.

    Reply
  • thurai
    thurai

    சாதி,மத,இன பேதத்தை மக்களிடையே வளர்க்கும் கருத்துக்கள் நம்மிடையே அகற்ரப்பட வேண்டுமென்பதே என் கருத்து. இதனை மீறுவோர் யாவரும் புலிக்குணம் கொண்டவர்களேயாகும்.

    துரை

    Reply
  • DEMOCRACY
    DEMOCRACY

    தொல்.திருமவளவனுக்கும் புத்தமதத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால்,தற்போது “புத்த மத இலங்கை அரசாங்கங்கள்”, திருமாவளவனுக்கு முட்டு கொடுப்பது, சென்னை அடையாற்றில், அன்னிபெசண்ட் அம்மையார் காலத்தில் “கத்தோலிக்க மத ஆதரவுடன்(இவர் ஐரிஸ்காரர், ஐயர்லாந்து கத்தோலிக்க அரசியல் உடையது), “மதராஸ் தியோபிசிக்கல் சொசைட்டியில்”, “ஐரோப்பியர்களால் மட்டுமே உருவாக்கி வளர்க்கப்பட்ட” “ஒரு புத்தமதத்திற்கே” அயோதிதாஸ் மதம் மாற்றப்பட்டார். இது இலங்கையில் வேலை செய்வதற்காக அமைக்கப் பட்டது!. இதன் விவரம் பிறகு…

    Iyothee Thass or Pandit C. Ayodhya Dasa (Tamil: அயோதயதாஸ்) (May 20, 1845–1914) was a practitioner of Siddha medicine who is regarded as a pioneer of the Dravidian Movement.Iyothee Thass was born Kathavarayan on May 20, 1845 in a Dalit(Paraiyar) family from Coimbatore district. His grandfather worked for Lord Arlington[1] and little Kathavarayan profitted immensely from this association. Soon, he became an expert on Tamil literature, philosophy and indigenous medicine and could speak Tamil, English, Sanskrit and Pali.In the 1870s, Iyothee Thass organized the Todas and other tribes of the Nilgiri Hills into a formidable force. In 1876, Thass established the Advaidananda Sabha and launched a magazine called Dravida Pandian in collaboration with Rev. John Rathinam.

    In 1886, Thass issued a revolutionary declaration that untouchables were not Hindus. Following this declaration, he established the Dravida Mahajana Sabha in 1891. During the 1891 census, he urged Dalits to register themselves as “casteless Dravidians” instead of identifying themselves as Hindus.Iyothee Thass met Colonel H. S. Olcott with his followers and expressed a sincere desire to convert to Buddhism. According to Thass, the Paraiyars of Tamilakam were originally Buddhists and owned the land which had later been robbed from them by aryan invaders. With Olcott’s help, Thass was able to visit Ceylon and obtain diksha from the Sinhalese Buddhist monk Bikkhu Sumangala Nayake. On returning, Thass established the Sakya Buddhist Society in Madras with branches all over South India. The Sakya Buddhist Society was also known as the Indian Buddhist Association. and was established in the year 1898.Iyothee Thass remains the first recognized anti-Brahmin leader of the Madras Presidency. In many ways, Periyar, Dravidar Kazhagam, Dr. Ambedkar, Udit Raj and Thirumavalavan are inheritors of his legacy. He was also the first notable Dalit leader to embrace Buddhism.

    The Sakya Buddhist Society was also known as the Indian Buddhist Association. and was established in the year 1898.Iyothee Thass remains the first recognized anti-Brahmin leader of the Madras Presidency. In many ways, Periyar, Dravidar Kazhagam, Dr. Ambedkar, Udit Raj and Thirumavalavan(தொல்.திருமாவளவன்)are inheritors of his legacy. He was also the first notable Dalit leader to embrace Buddhism.

    ANNIE BESANT:
    Annie Besant (pronounced /ˈbɛsənt/; née Wood; Clapham, London 1 October 1847 – 20 September 1933 in Adyar, India) was a prominent Theosophist, women’s rights activist, writer and orator and supporter of Irish and Indian self rule.Annie Besant became President of the Society and in 1908 he was taken back into the fold on her insistence. Leadbeater went on to face many more accusations of improper relations with boys, but Besant never deserted him.
    Up until Besant’s presidency, the society had as one of its foci Theravada Buddhism and the island of Ceylon, where Henry Olcott did the majority of his useful work. Under Besant’s leadership there was a decisive turn away from this and a refocusing of their activities on “The Aryavarta”, as she called central India. Besant actively courted Hindu opinion more than former Theosophical leaders. This was a clear reversal of policy from Blavatsky and Olcott’s very public conversion to Buddhism in Ceylon, and their promotion of Buddhist revival activities on the subcontinent (see also: Maha Bodhi Society).

    Reply
  • thurai
    thurai

    //அது சரி ” பாதிரிகள்”, தமிழ் சூரர்கள் ஏன் வந்த நாடுகளில் “தமிழுரிமை” பற்றி மூச்சு காட்டுவதில்லை? தமிழையும் அரச மொழியாக்கு என்று ஜெர்மனியிலும், கனடாவிலும், இங்கிலாந்திலும் கூச்சல் போடலாமே!//

    பாதிரிகள் புலத்திலும் தமிழில்தான் பூசை செய்கின்றார்கள். ஆனால் இந்துக் கோவில்களில் சம்ஸ்கிரிதத்தில் தான் அங்கும், இங்கும் எங்கும் பூசை. புலமெங்கும் தமிழ் பாட்டுகழும் பூசைகழும் தமிழ் பாதிரிமாரே ஒலிக்க வைக்கின்றனர்.

    இந்துக்கள் தான் தமிழர் என்று கூச்சல்போடுவோர், தங்கள் கோவில்களிலேயே தமிழிற்கு உருமை கேட்க தய்ங்கும்போது பாதிரிமார் எவ்வளவோ மேல்.
    //தவிர மதம் மாறியவர்கள் “தாங்கள்” அரசின் ஆட்கள் என்று பறை சாற்ற வெள்ளையர்களின் உடைகளுக்குள் புகுந்து கொண்டனர்// தயவு செய்து இனியாவது யாழ்ப்பானத்தில் இந்துக்கல்லூரியில் பயிலும் மாணவ்ர்களையாவது வேஸ்டி கட்டி வர சட்டம் போடுவீர்களா.

    துரை

    Reply
  • palli
    palli

    புலத்தில் 500 மேற்பட்ட கடைகள் உண்டு; (பிழையாயின் திருத்திக்கவும் ஆய்வு வேண்டாம்) அதில் 30கடைகள் கூட தேறாது புலிக்கு பணம் கொடுக்காதது; மிகுதி யாவும் புலிக்கு பணம் கொடுக்க தயங்கவில்லை; புலியின் தேவைக்குமேல் பணம் கடைகள் கொடுக்கின்றனர்; அத்துடன் புலத்தில் எனக்குதெரிய 7சைவகோவில், பல பல்பொருள் அங்காடி, வீடியோ கடை; கலியாண மண்டபம்; வாகனசேவை, கொடுக்கல் வாங்கல் நாட்டாண்மை இப்படி பலவழியால் புலிக்கு பணம் வரும்போது கத்தோலிக்கர் மீது மட்டும் நந்தா கல்எறிவது சரியான நோக்கமல்ல; நந்தாவின் வாதபடி கடைகாரர் எல்லாம் என்ன கத்தோலிக்கரா?? ஒருகாலத்தில் அமைப்புகளுக்கு பணம் தேவைபட்டது, அதுக்காக பலரிடம் கைஏந்தினர், அதில் பாரிதியர்களும் அடங்கும்; ஆனால் கால போக்கில் அமைப்புகளை தேடி பணம் வர தொடங்கி விட்டது இதில் பாரதியர்களின் வரவு புலிகளை பொறுத்த மட்டில் சில்லறயாக போய்விட்டது, நந்தாவின் கருத்தை பார்க்கும் பலர் மீண்டும் புலியைதான் ஆதரிப்பார்கள், புலி முஸ்லீம்களை யாழ் விட்டு அனுப்பிய வடு அடங்கவில்லை, அதுக்கிடையில் நந்தா கத்தோலிக்கர் மீதுஅம்பு தொடுக்கிறார், இது சர்வதேசம் தமிழர்மீது காட்டும் அக்கறை கூட இல்லாமல் போய்விடும்; இவர் தவறு செய்தார் என பெயரை சொல்லி விமர்சனம் செய்யலாம்; ஆனால் ஒரு மதத்ததை விமர்சிக்க தொடங்குவது கண்ணாடி வீட்டில் இருந்துகொண்டு கல் எறிவதுக்கு சமன், இப்படிதான் சிலர் இனபுரட்ச்சி செய்ய புறப்பட்டு வெட்டு புள்ளி குத்துபுள்ளி என வீரவசனம் பேசி லட்ச்சகணக்கான மனிதர் உயிரை காவு கொண்டனர்; திரும்ப மதவிளையாட்டில் தொடங்குவதால் பல குடும்பங்களில் கூட பிரிவினைவாதம் வரலாம் என்பதை கவனத்தில் கொள்ளவும்;

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //….மக்களின் வரிப்பணம் என்பது :உங்களின்” வெறும் புரளி. கடந்த 30 வருடங்களாக “புலிகளுக்கு” வரி கொடுத்தவர்கள் தமிழர்கள். அதில் “பங்கு” போட்டுக்கொண்டு போனவர்கள் பாதிரிகள்….//
    சிறிமா அரசில் வரிப்பணம் தமிழர் கட்டவில்லை என ஆரம்பித்து ‘புலிக்கு’ கட்டினர் என 30 வருடக்கணக்கில் முடிக்கிறீர்கள். நான் தமிழரிடம் வரிப்பணம் எவ்வாறு அறவிடப்பட்டது என்பது பற்றியும் ‘சிங்களவர்களின் வரிப்பணத்தில்’ தமிழர் வாழ்வாங்கு வாழ்ந்தனர் என்பது பற்றிய உங்களின் கதைகளையும் பொருளாதார ரீதியாக விளக்கிவிட்டேன். ஆனால் நீங்கள் ‘வன்னியில் ஆயிரக்கணக்கான பாடசாலைகள்‘ கட்டிய ஆதாரங்கள் இன்னுமே தராமல் சுத்திச் சுத்தி வருகிறீர்கள்.

    //….இலங்கையில் “சிங்களவர்” ஒருவர்தான் ஜனாதிபதியாகவோ, பிரதமராகவோ இருக்க முடியும். அதனை மாற்ற முடியாது. …//
    இதையே நாமும் சொல்கிறோம். ஆனால் ஒவ்வொரு சிங்களத்தலைவரின் கதையும் தான் இதற்கு நேர்மாறாக இருக்கிறது. இலங்கையில் யாவரும் சமம், யார் வேண்டுமென்றாலும் பிரதமராக வரலாம், கதிர்காமரைப் பாருங்கள், கந்தசாமியைப் பாருங்கள் என கதை விடுவோர் யார்?

    //…பாதிரிகள் பள்ளிக்கூடம் கட்டினார்கள். யாருடைய பணத்தில் என்று சொன்னால் நல்லது….// நிச்சயமாக ‘வரி கட்டாத’ தமிழரின் பணத்தில் இல்லை என நம்பலாம்.

    //….மேலும் ஆறுமுக நாவலர் “கிறிஸ்தவ” முறையை பின்பற்றி கட்டினார் என்கிறீர்களே. அப்போது “திருவள்ளுவர், இளங்கோ அடிகள், கம்பர்” ஆகியோர் ‘கான்வென்ட்’ போய் படித்துதான் நூல்களை எழுதினார்களோ?.// உங்களின் ஆறுமுகநாவலர் பற்றிய அறிவும் இந்து போட் (Hindu Board) பற்றிய அறிவும் அவ்வளவுதான் எனத்தெரிகிறது. தயவு செய்து அவற்றை அறிந்து விட்டு ‘இந்து மறுமலர்ச்சி’ பற்றிப் பேசுங்கள்.

    //….இந்து போர்ட் பாடசாலைகள் கட்ட அனுமதிக்கப்பட்டது 1850 ஆம் ஆண்டின் பின்னரே என்பதை உணரவேண்டும். ஆனால் அந்த இந்து பாடசாலைகளில் “இந்து மதம்” போதிக்கப்படக் கூடாது என்ற கட்டுப்பாடுக்கு கீழ் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். இந்து மத போதனைக்கு பறங்கிகள் அரச பணத்தை கொடுக்கவில்லை. ஆனால் கிறிஸ்தவ போதனைக்கு பணம் வழங்கினார்கள். …//

    என்ன ‘இந்து மதம்’ போதிக்கப்படவில்லையா? நான் கற்ற யாழ் இந்துக்கல்லூரி கட்டிய நாளில் இருந்தே ஒவ்வொரு நாளும் தேவாரம் பாடி ஆரம்பம் நிகழ்ந்ததாகவும் சைவசமயம் முக்கிய பாடமாக இருந்த்து எனவும் எனக்கு படிப்பித்தனர்.

    //….எஸ் டப்ளிவ் ஆர் டி பண்டாரனாயக்காதான் இந்துக்கள், இந்துமத போதனைகளை அரச செலவில் படிக்கலாம் என்று சட்டம் கொண்டு வந்தவர்.// அரச செலவோ? என்ன அரசாங்கம் காசு உழைச்சதோ? வரிப்பணம் நந்தா வரிப்பணம்!

    ///……நாங்கள் திருவாசகம், திருவருட்பயன், தேவாரங்கள் என்பனவற்றை பாடசாலைகளில் இன்று படிக்கிறோம். அரச வரிப்பணம் செலவிடப்படுகிறது. பறங்கிகள் காலத்தில் அது ஏன் இல்லை என்றும் “பாதிரிகளின்” சமயங்கள் மட்டும் படிக்கலாம் என்றும் ஏன் இருந்தது ? பாதிரிகள் எங்கும் “இந்துக்களும்” , மனிதர்கள் அவர்களுக்கும் எங்களைப்போல “சம உரிமை” கொடுக்க வேண்டும் என்று பரங்கிகளைக் கேட்டதாக வரலாறே கிடையாது…..///
    மேலே யாழ் இந்துக்கல்லூரி பற்றி நான் எழுதியதை மீண்டும் படியுங்கள். யாழ் இந்துக்கல்லூரியில் சைவ உணவை அருந்துவதன் முக்கியத்துவம் பற்றி ஆரம்பநாட்களிலேயே எடுத்துக்கூறப்பட்டு வந்த்தாம். மேலும் ‘பாதிரி’கள் ஆட்சிக்காலத்தில் இருந்து இன்றுவரை யாழ் இந்துக்கல்லூரி விடுதி மண்டபத்துக்குள் அசைவ உணவு கொண்டு செல்ல முடியாது !

    //….உலகத்து பல்கலைக் கழக வரலாறுகளில் “புகழ்” பெற்ற பாடசாலைகள்தான் “பல்கலைக் கழகங்களாக மாற்றப்பட்டன. ” புதிய” கட்டிடம் கட்டி பல்கலைக் கழகம் தொடங்கியதாக வரலாறுகள் இல்லை. …///
    எந்த ‘உலகத்து’ வரலாற்ரை வசதியாக துணைக்கழைக்கிறீர்கள். பாதிரி உலகமா? இல்லை பரிசுத்த உலகமா? பாதிரி செய்யும் எல்லாம் ‘கபோதி’ தமிழன் கேட்கிறான் எனக்குற்றம் சாட்டுங்கள். ஆனால் சப்போட் வேண்டுமென்றால் அதே ‘பாதிரி’ களின் பல்கலைக்கழக வராறு தேவை. நல்லது!

    //…பரமேஸ்வரா கல்லூரியை பல்கலைக் கழகமாக மாற்ற வேண்டாம் என்று “இந்துக்கள்” கேட்கவில்லை. கிறிஸ்தவ செல்வநாயகம் கோஷ்டிதான் கேட்டது ஏனென்றால் அப்படி கேட்பதன் மூலம் “பல்கலை கழக “வரவை” தடுக்கலாம் என்று கனவு கண்டவர்கள் அவர்களே….//
    நான் ‘இந்து’ இல்லையா? பரமேஸ்வராக் கல்லூரியில் கல்வி கற்றவர்களும் அக்க்லூரியின் உள்ளே அமைந்திருக்கும் ”பரமேஸ்வரன் ஆலயம்” என அழைக்கப்படும் சிவாலயத்தில் வழிபாடு தடைப்பட்டுவிடும் என போராடிய திருநெல்வேலி மக்களும் ‘இந்துக்கள்’ இல்லையா? நல்ல வேடிக்கை!

    //….தவிர அரசு “சொத்துக்கள்” மீது அரசைத் தவிர அரசியல்வாதிகள் ஆதிக்கம் செலுத்த முடியாது. …// அதே போலவே ‘பாதிரி’ அரசுகள் தம்மைத்தவிர தமது மொழி, மதம் தவிர வேறு எதையும் கற்பிக்க முடியாது , ஆதிக்கம் செலுத்த முடியாது எனச் சொன்னார்களோ?

    //….யாழ்ப்பாணக் கல்லூரியை யு ஏன் பி ஆட்சியில் மீள எடுத்த கிறிஸ்தவர்கள் புலிகளின்” இளம்பரிதி” என்பவரை அழைத்து கவுரவித்தனர். இந்த இளம் பரிதி கீரிமலையில் கள்ளச்சாராயம், கள்ளக்கடத்தல் போன்றவற்றில் ஈடுபட்ட கிரிமினல் “வியாளியின்” பேரன் என்பது இன்னொரு சிறப்பு….///
    ’பாதிரி’ ப் பள்ளிக்கூட்த்தை மீழ் எடுத்துவிட்டனரா ? அருமையான வேலை! பாதிரிகளுக்கு நல்ல பதிலடி. கள்லச்சாராயம் காச்சியவனின் பேரன் கவுரவிக்கப்படக்கூடாது என்பது போன்ற ‘புனித’ விளையாட்டுகளால் தான் ‘பாதிரி’ ஊடுருவக்கூடியதாய் இருந்த்து. அதேபோல சிங்கள ‘கொலைகார்ர்’ நல்லூரில் காளாஞ்சி கொடுக்கப்பட்டு இந்து நல்லூர் புனிதப்படுத்தப்பட்டு விட்ட்து!

    //…. இங்கிலாந்து கத்தோலிக்க பாதிரிகளின் கட்டுப்பாட்டில் இல்லை. தவிர இந்த “சேர்” பட்டம் தங்களுக்கு உபயோகமானவர்களுக்கே இங்கிலாந்து வழங்கியது…../// என்னப்பா நீங்கள் தானே கத்தோலிக்கர் எல்லாம் ‘நாசி போப்புக்கு கட்டுப்பட்டவர்கள்’ என கதை விட்ட்து. ஒரு வேளை இங்கிலாந்து கத்தோலிக்கமில்லை மாறாக ‘புரொட்டஸ்தாந்து’ என ரெக்னிக்கல் பொயின்றைப் பிடிச்சிட்டியளோ? அதே சேர் பட்டம் பெற்ர ராமநாதன், அருணாச்சலம் போன்றவர்கள் தான் கண்டி பேராதனைப் பல்கலைக்கழகம் அமைய முன்னோடியாக நின்று உழைத்தவர்கள்!

    //பெளத்த/இந்து/இஸ்லாமிய /பாதிரிகளை அனுப்பி கெஞ்சினார்களே ஸ்ரீலங்கா அரசினர்!!! அவர்கள் யாரென்று கூற முடியுமா?/
    ஸ்ரீலங்கா அரசின் உத்தியோக பூர்வ இணையத்தில் கீழே இருக்கிறது.
    http://www.priu.gov.lk/news_update/Current_Affairs/ca200911/20091118inter_religious_leaders_hand_over_report_to_the_president.htm
    இந்து கலாச்ச்சார அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் இணையத்தில் படங்களும் இருக்கிறது.

    //…..கத்தோலிக்கர்கள் பவுத்த கோவில்களை தாக்கினால் பதிலடி கிடைக்கும். ஆனால் இந்து கோவிலுக்குள் பாதிரிகள் புகுந்து “ஏடு” தொடக்கினால் இந்துக்கள் மவுனம் காக்க வேண்டும். அது உங்கள் எதிர்பார்ப்பு…..// ஆனால் மேற்குலகத்தில் கோவில் கட்டவும், அக்கோவிலுக்கு ’வரி’ விலக்கும் ரோட்டில் தேரிழுக்கவும் பொலிஸ்பாதுகாப்புடன் கூடிய வீதி ஒழுங்குகள் செய்யப்படவேண்டும். அது உங்கள் எதிர்பார்ப்பில்லையா?

    //…..வத்திக்கான் “இராணுவ” தளபாடங்கள் உற்பத்தி செய்கிறதா?….// வத்திக்கானின் வால் அரசுகள் என நீங்கள் சொல்லும் ‘பாதிரி’ அரசுகள் செய்கின்றது அறியவில்லையா? இல்லை ’பெளத்த’ சீனா செய்வது அறியவில்லையா? இல்லை நீங்கள் சொல்லும் வத்திக்கானுக்கு கட்டுப்பட்ட ‘கத்தோலிக்கர்’ கள் செய்யவில்லையா?

    //.சாதி,மத,இன பேதத்தை மக்களிடையே வளர்க்கும் கருத்துக்கள் நம்மிடையே அகற்ரப்பட வேண்டுமென்பதே என் கருத்து. …/துரை,
    நம் கருத்தும் அதுதான்.

    Reply
  • thurai
    thurai

    பல்லியின் விளக்கத்தினை ஏற்பவனில் நானும் ஒருவன். ஈழததமிழரைப் பொறுத்தவரையில் பகைமைகளை மறந்து ஒற்றுமையாக இனியாவது வாழவேண்டுமென்ற எண்ணம் தோன்ற வேண்டும்.

    ஒற்றுமையை பாதிக்கும் சிந்தனைகளையும், கருத்துக்களையும் தவிர்த்து, ஒற்றுமையை வளர்க்கக்கூடிய விடயங்களை பேசுவதும், எழுதுவதுமே தமிழர்கள் யாவருக்கும் நன்மை தரும்.

    துரை

    Reply
  • palli
    palli

    // இந்த இளம் பரிதி கீரிமலையில் கள்ளச்சாராயம், கள்ளக்கடத்தல் போன்றவற்றில் ஈடுபட்ட கிரிமினல் “வியாளியின்” பேரன் என்பது இன்னொரு சிறப்பு….///
    மிக தவறான கருத்து; அவரது அவரது சகோதரி எனது வீட்டுக்கு அருகாமையில்தான் இருக்கிறார்; மிக ஏழ்மையான விவசாய குடும்பத்தை சேர்ந்தவர் மட்டுமல்ல ஓர்அளவு படித்தவருமாம்;

    இதில் பின்பும் நந்தா ஆய்வுகள் வேண்டுமா?? பல்லிக்கு பழி வாங்கல் பிடிப்பதில்லை, ஆனால் தாங்கள் மற்றவர்கள் பற்றி எழுதும் கடுப்புகள் (கருத்தல்ல) எல்லாம் உங்களுக்கு சொந்தமானவை என்பது சாராய வியாபாரியின் பேரனில் விடிந்திருக்கு; உங்களுக்கு சமனாய் நாமும் எழுதினால் என்னும் ஒரு பிரிவினை எம்சமூகத்தில் வரவாய்ப்புகள் அதிகம், நாம் பிரிந்த சமூகம் ஒன்றாய் சேர வேண்டும் என்பதில் கவனம் செலுத்துகிறோம், நீங்களோ என்னும் ஒரு நாலு பிரிவினை ஆரம்பிக்க ஆய்வுகள் செய்யிறியள்;
    உங்கள் ஆய்வு
    (1) புலி
    (2) மலையாளி
    (3) வந்தான் வரத்தான்
    (4) கத்தோலிக்கர்
    (5)சாரயவியாபாரி
    இது தொடரும் மீன்காரன், கல்லூடைப்பவன்; கள்ளு இறக்குபவன்; பிணம் தூக்குபவன், மாடு மேய்ப்பவன்; இப்படியே தொடரும்; இவை அனைத்தும் புலி மீண்டும் வளரவும் எம்மை கேலி செய்யவுமே உதவும்; ஆகவே இத்துடன் இந்த விளாட்டை முடித்துகொண்டு வேறு விளையாட்டு(கட்டுரை) பக்கம் போவோமே; நீங்கள் கருத்து சொல்லுவதை விட பல்லியை வம்புக்கு இளுக்கிறதில் மிக அவதானமாக இருக்கிறியள், சாராய வியாபாரியின் பேரன் என்பதை நிருபித்தால் பல்லி தேசத்தை விட்டு அல்ல அரசியல் பேசுவதையே நிறுத்துகிறேன் என்பதை உங்கள் ஆய்வில் மீது சத்தியம் செய்கிறேன்,

    Reply
  • மாயா
    மாயா

    பல்லி, சிலரது எழுத்துகள் , சில அரசியல்வாதிகளது பிடிவாதம் போல. அன்னை தெரேசாவை நிந்தித்து எழுதும் போது , அன்னை தெரேசா , இந்து – முஸ்லீம் சண்டையின் போது காயமுற்ற ஒருவரை காப்பாற்ற போய் , ககத்தோலிக்க மேலிடத்தால் தண்டிக்ககப்பட்டார். அந்த தண்டனையை தவறு என வெளியேறித்தான் சமூக சேவைக்கு இறங்கி மதத்தை மறந்து அன்பே தெய்வம் என மக்களுக்கு சேவை செய்தார். அவர் இறந்த போது கத்தோலிக்கர்களை விட அழுதவர்கள், இந்துக்களும் , முஸ்லீம்களுமேயாகும். மகாத்மா காந்திக்கு பின்னர் , இந்திய தேசம் கெளரவித்த அரசியல் அல்லாத ஒருவர் அன்னை தெரேசாதான். அல்பானியா கெட்ட தேசமாக இருக்கலாம். அங்கே அனைவரும் கெட்டவர்களில்லை. சிலர் சொல்வது , தமிழர் என்றால் , புலிகள் என சிலர் சொல்வதை ஏற்பதாகி விடும்.

    அருட் தந்தை ஜேம்ஸ் பத்திநாதரை தாக்கி விட்டு , அவர் பராமரித்த குழந்தைகளை புலிகள் இழுத்துச் சென்றனர் என்பது உண்மை. சிலர் சொல்வது அபத்தம். ஜேம்ஸ் பத்திநாதர் பராமரித்த குழந்தைகளுக்கு உதவி , சுவிஸிலிருந்தே சென்றது. அதை ஏற்பாடு செய்தவன் நான். சுனாமி காலத்தில் , காலிப் பகுதிக்கு உதவிகள் சென்றபோது , இலங்கைக்கு வந்த உதவிகளில் , ஒரு தொகை தமிழ் பகுதிகளுக்கு செல்ல வேண்டும் என கருத்தை முன் வைத்தவர் ஒரு சிங்கள கத்தோலிக்க மதகுரு. அவர்தான் ஜேம்ஸ் பத்திநாதரின் நேர்மைக்கு சாட்சியாக இருந்தார். போரின் போது ஓடி வரலாமே என ஒரு பாதிரியாரை நான் கேட்டபோது, இவர்களை விட்டு வருவதை விட , இவர்களோடு சாவது மேல் என செத்தவர்கள் தமிழ் பாதிரிகள். ஐயர்கள் அல்ல. பீஜேபீயில் ஒரு இஸ்லாமியர் இருக்கலாம், பாபர் மசூதியை எந்த நோக்கத்தில் தகர்த்தார்கள்? எத்தனை பேரைக் கொன்றார்கள்?

    பெளத்தம் இந்துத்துவத்தில் இருந்து வந்திருக்கலாம். ஆனால் இந்து சமயம் சரியல்ல என்பதால்தான் பெளத்தம் தோன்றியது. பெளத்தம் , சரியென்றால் , எதற்காக பெளத்த பேரினவாதம் என கத்துகிறீர்கள்? இது நம் மதம்தான் என ஏற்றுக் கொள்ள வேண்டியதுதானே?

    இலங்கை வாழ் தமிழருக்குத்தான் உதவ இந்தியாவின் இந்துக்களால் அல்லது இந்து அமைப்புகளால் முடியவில்லை. மண்டபத்தில் அகதிகளாக அல்லல்படும் இந்துக்களுக்கு மட்டுமாவது உதவலாமே? இந்து தேசத்தில் இருந்து எழுதுவதாக சொல்வதால் அது இந்து தேசமாகாது. அப்படிப் பார்த்தால் அந்த மண்ணில் பிறந்த நானும் இந்தியன்தான்.

    Reply
  • DEMOCRACY
    DEMOCRACY

    /பெளத்தம் இந்துத்துவத்தில் இருந்து வந்திருக்கலாம். ஆனால் இந்து சமயம் சரியல்ல என்பதால்தான் பெளத்தம் தோன்றியது. பெளத்தம் , சரியென்றால் , எதற்காக பெளத்த பேரினவாதம் என கத்துகிறீர்கள்? இது நம் மதம்தான் என ஏற்றுக் கொள்ள வேண்டியதுதானே?.இந்து தேசத்தில் இருந்து எழுதுவதாக சொல்வதால் அது இந்து தேசமாகாது. அப்படிப் பார்த்தால் அந்த மண்ணில் பிறந்த நானும் இந்தியன்தான்./– மாயா.
    மாயா!, பிரச்சனையின் அடிப்படையை நாம் மறக்கக் கூடாது! “இந்திய,இந்து மதம்” என்ற ஒன்று இல்லை!. இந்தியனாக, இந்துவாக இருப்பதற்கு எந்த வரைமுறையும் கட்டுப்பாடும் இல்லை. அதனால்தான் இந்துத்துவத்தை, இந்தியாவை கண்டபடி தாக்குவதற்கும், அசிங்கப்படுத்துவதற்கும் சுலபமாக இருக்கிறது!. இதில் முக்கியம் என்னவென்றால், இந்த போக்கிலேயேதான் 300,400 ஆண்டுகளாக போய்க் கொண்டிருக்கிறது, சுதேசிகள் அழிக்கப்படுகிறார்கள்!. சுதெசிகளை அழிப்பவர்கள்தான் (இந்திய, இலங்கை), தற்போது, தங்களுக்கு அந்தப் பிரச்சனை, இந்தப் பிரச்சனை என்று, கதறிக் கொண்டிருக்கிறார்கள்!. அவர்களுடைய பிரச்சனையின் “நோய் முதல் நாடி” என்ன? என்பதை ஆராயும் வழியில்தான் பல விளக்கங்கள் எழுந்து கொண்டிருக்கின்றன!. இப்படி பிரச்சனையால் கதறியவர்களே, தற்போது நியாயவாதிகள் போன்று “பேக் அடிப்பது”, அவர்களின் “ஊமை அழுகையே தவிர”, “அது(நோய்) தணிக்கும் வாய் நாடி வாய்ப்ப செயல் அல்ல”!.

    “சுதேசிகள்”, ஆயுத உற்பத்தியில், குறிப்பாக “அணு ஆயுத உற்பத்தியில்” தன்னிறைவைக் காணாமல், ஆயுத போராட்டத்தில் ஈடுபடக் கூடாது என்பது “முள்ளிய வாய்க்காலின் படிப்பினை”. ”சுதேசிக்கும், விதேசிக்கும்” இடையில், அல்லல் பட்டுக்கொண்டிருந்த வே.பிரபாகரனை, விதேசிகள் காட்டிக் கொடுத்தனரா?, அல்லது சுதேசிகளால்? அழிக்கபட்டாரா?! என்பதை ஆராய்ச்சிதான் முடிவு செய்ய வேண்டும்!.

    Reply
  • NANTHA
    NANTHA

    துரை:
    பாதிரிகள் தமிழில் பூசை செய்ய எப்போது ஆரம்பித்தார்கள்?

    தமிழ் வளர்க்கத்தானோ பாதிரிகள் இந்து கோவிலுனுள் புலி கிரிமினல்களோடு புகுந்து “இந்து குருமார் , இந்து மத பாரம்பரியங்கள் செய்ய முடியாது. கத்தொலிக்கர்தான் ஏடுதுவக்க வேண்டும், அதுவும் இந்து பிள்ளைகளுக்கு, என்று புறப்பட்டர்களோ? ஏடு துவக்கலும் வத்திக்கானில் இருந்துதான் வந்ததோ?” பாதிரிகளின் போகிரித்தனங்களை ஏன் மூடி மறைக்கிறீர்கள்? அல்லது “தமிழ்” உரிமை “போராட்டம்” நடத்த வந்தார்களோ.?

    உங்களால் பாதிரிகளிடம் கேள்விகள் கேட்க முடியாது. கேட்டால் உங்களை அவர்கள் “inquisition” என்ற தண்டனை முறை பிரயோகித்து சர்ச்சிலிருந்து துரத்திவிடுவார்கள் அல்லது போட்டுத்தள்ளி விடுவார்கள்.

    கொலைகாரர்களான புலிகளோடு கூட்டுச் சேர்ந்த பாதிரிகள் இதுவும் செய்வார்கள் இதற்கப்புறமும் செய்வார்கள்.

    இந்துக்கள் லோங்க்ஸ் போட வேண்டும் அல்லது கோவணம் கட்ட வேண்டும் என்று எது வித கட்டுப்பாடும் கிடையாது.

    இந்துக்கள் கோவிலுக்கு போவது “கடவுளைக்” கும்பிடவே தவிர தமிழ் வளர்க்கவோ அல்லது தமிழ் உரிமை போராட்டம் நடத்தவோ அல்ல. இந்துக்களை உலகம் முழுவதும் ஒன்று படுத்துவது “சமஸ்கிருதம்” ஆகும். தமிழல்ல.

    புலிகளும் அவர்களுடைய கொலைகார பாதிரிகளும் இந்துக் கோவில்களுக்குள் புகுந்தது “உண்டியல்” பணத்தை திருடவே ஒழிய ‘தமிழ்” வளர்க்க அல்ல.

    Reply
  • NANTHA
    NANTHA

    //சிறிமா அரசில் வரிப்பணம் தமிழர் கட்டவில்லை என ஆரம்பித்து ‘புலிக்கு’ கட்டினர் என 30 வருடக்கணக்கில் முடிக்கிறீர்கள். நான் தமிழரிடம் வரிப்பணம் எவ்வாறு அறவிடப்பட்டது என்பது பற்றியும் ‘சிங்களவர்களின் வரிப்பணத்தில்’ தமிழர் வாழ்வாங்கு வாழ்ந்தனர் என்பது பற்றிய உங்களின் கதைகளையும் பொருளாதார ரீதியாக விளக்கிவிட்டேன். ஆனால் நீங்கள் வன்னியில் ஆயிரக்கணக்கான பாடசாலைகள்‘ கட்டிய ஆதாரங்கள் இன்னுமே தராமல் சுத்திச் சுத்தி வருகிறீர்கள். //

    வெள்ளையர்கள் வரிப்பணத்தில் ஏன் இந்துக்களுக்கு பாடசாலைகள் கட்டவில்லை என்ற கேள்விக்கு உங்கள் பதிலைக் காணோம். 10 சதவீத கத்தோலிக்க/ கிறிஸ்தவர்களுக்கு வெள்ளையர்கள் வரிப்பணத்தில் பாடசாலைகளை , அதுவும் தொண்ணூற்றி ஐந்து சதவீத பாடசாளைகளைகட்டிக் கொடுத்தது ஏன் என்று நீங்கள் சொன்னது கிடையாது. இந்துக்களின் வரிப்பணத்தை, அதாவது தொண்ணூறு சதவீதமான தமிழர்களின் வரிப்பணத்தை கிறிஸ்தவர்களின் கட்டுப்பாட்டு பாடசாலைகளிடம் வெள்ளையர்கள் கொடுத்தது நியாயம் என்று கூற வருகிறீர்களோ? அல்லது வெள்ளையர்கள் இந்துக்களிடம் கொள்ளையடித்து லோகல் கிறிஸ்தவர்களிடம் கொடுப்பது நியாயமானது என்று நீங்கள் நம்பினால் தயவு செய்து நீங்கள் “இந்து” என்று கூறுவதை நிறுத்தவும்.

    புலிகளுக்கு வரி கொடுத்தார்கள் என்பது பிழை. ஆனால் “கப்பம்” செலுத்தினார்கள் என்று வாசிக்கவும். அந்த பணத்திலும் “கத்தோலிக்க” பாதிரிகளுக்கு பங்கு கொடுக்கப்பட்டது. அதனால்த்தான் வன்னி மக்கள் தங்கள் பிள்ளைகளை பொங்கு தமிழ் கணேசலிங்கம் வீட்டுக்கு “வேலைகாரர்களாக” அனுப்ப வேண்டி வத்து. அது மாத்திரமல்ல அந்த பொங்கு தமிழ் கணேசலிங்கம் அந்த வேலைக்கார சிறுமியை கற்பழித்த கதைகள் பிரபலமானவை.

    வடகிழக்கில் 1956 ஆம் ஆண்டு தொடக்கம் 1965 ஆம் ஆண்டு வரை அரசாங்கம் கட்டிய பாடசாலை விபரங்கள் உங்களிடம் இருக்கும் என்றே எண்ணுகிறேன். தயவு செய்து பிரசுரிக்கவும். எனது கணக்கு தவறு என்றால் சுட்டிக் காட்டவும்.

    //ஒவ்வொரு சிங்களத்தலைவரின் கதையும் தான் இதற்கு நேர்மாறாக இருக்கிறது. இலங்கையில் யாவரும் சமம், யார் வேண்டுமென்றாலும் பிரதமராக வரலாம், கதிர்காமரைப் பாருங்கள், கந்தசாமியைப் பாருங்கள் என கதை விடுவோர் யார்?//
    கதிர்காமரை போட்டுத்தள்ளி “தமிழ் ஈழம்” பெற்றவர்களுக்கு யார் சமன் என்பது தெரியாமல் இருக்கும். “ஜனநாயகம்” பற்றி கதைக்கும் தமிழர்கள் ‘தமிழ்” என்ற வட்டத்தில் நின்றால் ஒரு காலமும் எந்த உயர் பதவிக்கும் வர முடியாது.

    //…பாதிரிகள் பள்ளிக்கூடம் கட்டினார்கள். யாருடைய பணத்தில் என்று சொன்னால் நல்லது….// நிச்சயமாக ‘வரி கட்டாத’ தமிழரின் பணத்தில் இல்லை என நம்பலாம்.// அப்போ வரி கட்டிய இந்து தமிழனின் பணத்திலா?

    // உங்களின் ஆறுமுகநாவலர் பற்றிய அறிவும் இந்து போட் (Hindu Board) பற்றிய அறிவும் அவ்வளவுதான் எனத்தெரிகிறது. தயவு செய்து அவற்றை அறிந்து விட்டு ‘இந்து மறுமலர்ச்சி’ பற்றிப் பேசுங்கள்.//
    இந்து மறுமலர்ச்சி என்று குறிப்பிட்டுள்ள நீங்கள் அது ஏன் தேவைப்படுகிறது என்பதை உணரவில்லைய? மேலும் ஆறுமுக நாவலருக்கு 1968 ஆம் ஆண்டு நடந்த சென்னை உலகத்தமிழ் ஆராய்ச்சி மகா நாட்டின் போது சிலை வைக்க முடியாது என்று அப்போதைய தமிழக முதல்வர் அண்ணாதுரை அறிவித்தது ஏன் என்று தெரியுமா?

    //என்ன ‘இந்து மதம்’ போதிக்கப்படவில்லையா? நான் கற்ற யாழ் இந்துக்கல்லூரி கட்டிய நாளில் இருந்தே ஒவ்வொரு நாளும் தேவாரம் பாடி ஆரம்பம் நிகழ்ந்ததாகவும் சைவசமயம் முக்கிய பாடமாக இருந்த்து எனவும் எனக்கு படிப்பித்தனர். //
    இந்து போர்ட் பாடசாலைகளில் “காலையில்” இறைவணக்கம் செய்ய தேவாரம் பாட அனுமதி இருந்தது. வகுப்பறைக்குள் இந்து மத போதனைக்கு இடமிருக்கவில்லை. வகுப்பறைகளில் இந்து மத பாடம் போதிக்கப்பட்டது 1957 ஆம் ஆண்டின் பின்னரே என்பது உங்களுக்கு தெரியாத விடயம். சமயமும், மொழியும் கட்டாய பாடங்கள் ஆக்கியது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான பண்டாரநாயக்கா காலத்தில்த்தான் என்பது கல்வித் திணைகளத்தில் வேலை செய்தவர்களுக்கு நன்றாக தெரியும். கேட்டுப் பார்க்கவும்.

    //….எஸ் டப்ளிவ் ஆர் டி பண்டாரனாயக்காதான் இந்துக்கள், இந்துமத போதனைகளை அரச செலவில் படிக்கலாம் என்று சட்டம் கொண்டு வந்தவர்.// அரச செலவோ? என்ன அரசாங்கம் காசு உழைச்சதோ? வரிப்பணம் நந்தா வரிப்பணம்! //
    இந்துக்களின் வரிப்பணத்தை இந்துக்களுக்கு செலவு செய்தவர் பண்டாரநாயக்க என்று ஒத்துக்கொண்டதட்கு நன்றி! ஆனால் வெள்ளையர்களும் , பாதிரிகளும் இதனைச் செய்யாது விட்ட காரணம் இந்துக்களின் வரிப்பணத்தையும் கொள்ளையடித்தார்கள் என்பது புரிந்திருக்கும்.

    //மேலே யாழ் இந்துக்கல்லூரி பற்றி நான் எழுதியதை மீண்டும் படியுங்கள். யாழ் இந்துக்கல்லூரியில் சைவ உணவை அருந்துவதன் முக்கியத்துவம் பற்றி ஆரம்பநாட்களிலேயே எடுத்துக்கூறப்பட்டு வந்த்தாம். மேலும் ‘பாதிரி’கள் ஆட்சிக்காலத்தில் இருந்து இன்றுவரை யாழ் இந்துக்கல்லூரி விடுதி மண்டபத்துக்குள் அசைவ உணவு கொண்டு செல்ல முடியாது !//
    அதிலென்ன புதுமை? ஏராளமான இந்துக்கள் சைவ உணவை இன்றும் அன்றும் சாப்பிடுகிறார்கள். பாதிரிகள் கட்டளைப்படிதான் சைவ மக்கள் சைவ உணவை உண்ணுகிறார்கள் என்று சொல்லுகிறீர்களோ தெரியவில்லை.

    //எந்த ‘உலகத்து’ வரலாற்ரை வசதியாக துணைக்கழைக்கிறீர்கள். பாதிரி உலகமா? இல்லை பரிசுத்த உலகமா? பாதிரி செய்யும் எல்லாம் ‘கபோதி’ தமிழன் கேட்கிறான் எனக்குற்றம் சாட்டுங்கள். ஆனால் சப்போட் வேண்டுமென்றால் அதே ‘பாதிரி’ களின் பல்கலைக்கழக வராறு தேவை. நல்லது!//
    பாதிரி உலகம் என்று ஒன்று கிடையாது. பாதிரிகளின் வால்கள் பல்கலைக் கழக வரலாறுகளை ஏன் மறைத்து கோஷம், கருப்புக்கொடி என்று அலைந்தார்கள்?

    //நான் ‘இந்து’ இல்லையா? பரமேஸ்வராக் கல்லூரியில் கல்வி கற்றவர்களும் அக்க்லூரியின் உள்ளே அமைந்திருக்கும் ”பரமேஸ்வரன் ஆலயம்” என அழைக்கப்படும் சிவாலயத்தில் வழிபாடு தடைப்பட்டுவிடும் என போராடிய திருநெல்வேலி மக்களும் ‘இந்துக்கள்’ இல்லையா? நல்ல வேடிக்கை!//
    எப்படித் தடைபட்டுவிடும்? இன்றும் பூசை நடக்கிறதே!

    //நல்லூரில் காளாஞ்சி கொடுக்கப்பட்டு இந்து நல்லூர் புனிதப்படுத்தப்பட்டு விட்ட்து!//
    அது உண்மை. பொன்சேகாவுக்கு காளாஞ்சி கொடுத்தது மாத்திரமின்றி அவருக்கு வாக்களியுங்கள் என்று கேட்டவர்களும் பொன்சேகாவுக்கு வாக்களித்தவர்களும் இதற்கு பொறுப்பேற்க வேண்டும்!

    //என்னப்பா நீங்கள் தானே கத்தோலிக்கர் எல்லாம் ‘நாசி போப்புக்கு கட்டுப்பட்டவர்கள்’ என கதை விட்ட்து. ஒரு வேளை இங்கிலாந்து கத்தோலிக்கமில்லை மாறாக ‘புரொட்டஸ்தாந்து’ என ரெக்னிக்கல் பொயின்றைப் பிடிச்சிட்டியளோ? அதே சேர் பட்டம் பெற்ர ராமநாதன், அருணாச்சலம் போன்றவர்கள் தான் கண்டி பேராதனைப் பல்கலைக்கழகம் அமைய முன்னோடியாக நின்று உழைத்தவர்கள்!//
    அது டெக்னிக்கல் பொயின்ட் அல்ல. கத்தோலிக்கர்களும், புரோடச்தாந்து மதத்தவர்களும் எத்தனை யுத்தம் செய்தார்கள் என்று படித்தால் நல்லது. சேர் பட்டம் கொடுப்பது வத்திக்கன் அல்ல.

    //ஆனால் மேற்குலகத்தில் கோவில் கட்டவும், அக்கோவிலுக்கு ’வரி’ விலக்கும் ரோட்டில் தேரிழுக்கவும் பொலிஸ்பாதுகாப்புடன் கூடிய வீதி ஒழுங்குகள் செய்யப்படவேண்டும். அது உங்கள் எதிர்பார்ப்பில்லையா?//
    மத சமத்துவம் பற்றி பேசும் மேற்குலகம் அனுமதி கொடுக்க வேண்டும் கொடுக்கிறது, வரி விலக்கு இலங்கையிலும் எல்லா மத கோவில்களுக்கும் உண்டு. அதற்கும் பாதிரிகள் புலியோடு சேர்ந்ததற்கும் என்ன சம்பந்தம்? பாதிரிகள் இந்து கோவிலுக்குள் புகுந்து நாட்டியமாடியது சரியா பிழையா என்று பதில் சொல்லுங்கள்!

    //வத்திக்கானின் வால் அரசுகள் என நீங்கள் சொல்லும் ‘பாதிரி’ அரசுகள் செய்கின்றது அறியவில்லையா? இல்லை ’பெளத்த’ சீனா செய்வது அறியவில்லையா? இல்லை நீங்கள் சொல்லும் வத்திக்கானுக்கு கட்டுப்பட்ட ‘கத்தோலிக்கர்’ கள் செய்யவில்லையா//
    வெள்ளையர்கள் என்றால் எல்லோரும் வத்திக்கானின் வால்களா? பவுத்த சீனாவா? அங்கு கம்யூனிஸ்ட் ஆட்சி என்பது தெரியாதோ?

    //.சாதி,மத,இன பேதத்தை மக்களிடையே வளர்க்கும் கருத்துக்கள் நம்மிடையே அகற்ரப்பட வேண்டுமென்பதே என் கருத்து. …/துரை,
    நம் கருத்தும் அதுதான்.//
    ஆனால் கத்தோலிக்க பாதிரிகள் மாத்திரம் மத பேதம் பார்த்து மதம் மாற்றி வியாபாரம் செய்யலாம்! சபாஷ்!

    Reply
  • NANTHA
    NANTHA

    //மகாத்மா காந்திக்கு பின்னர் , இந்திய தேசம் கெளரவித்த அரசியல் அல்லாத ஒருவர் அன்னை தெரேசாதான்/ /மாயா
    அப்போது மஹாத்மா காந்தி அரசியல் வாதி இல்லையா அல்லது இந்தியரே இல்லையா?

    //மதத்தை மறந்து அன்பே தெய்வம் என மக்களுக்கு சேவை செய்தார்.//
    மதத்தை மறந்தாரா? புதுக்கதையாக இருக்கிறதே? அப்படிஎன்றால் வத்திக்கான் பெரிய பாதிரி போப் அவரை ” செயின்ட்” ஆகியது எப்படி? கத்தோலிக்கர் அல்லாதவர்களை வத்திகான் செயின்ட் ஆக்க முடியாதே!

    //அருட் தந்தை ஜேம்ஸ் பத்திநாதரை தாக்கி விட்டு , அவர் பராமரித்த குழந்தைகளை புலிகள் இழுத்துச் சென்றனர் என்பது உண்மை. சிலர் சொல்வது அபத்தம்//
    இந்த பத்திநாதன் “பாதுகாப்பு தேடிய சிறுவர்களை” புலிகளிடம் கொடுத்துவிட்டு பின்னர் இலங்கை அரசினால் உண்டாக்கப்பட்ட யுத்த சூனிய வலையத்தினுள் தலை காட்டி அங்கு நின்ற அப்பாவி மக்கள் பலரினதும் பிள்ளைகளை பிடித்துக் கொடுப்பதில் முன்னின்ற ஆசாமி. சாட்சிகள் இன்றும் உண்டு. அவர்களின் தகவல் அடிப்படயில்த்தான் பத்தினாதனை இன்றும் இராணுவம் விசாரிக்கிறது. தடுத்தும் வைத்துள்ளது.

    சுனாமி நிதியை புலிகளும் பாதிரிகளும் எப்படி சூறையாடினார்கள் என்பது வன்னி மக்களுக்கு நன்கு தெரியம்.

    எந்த பாதிரி உயிரை விட்டது என்று சொல்லுவீர்களா?

    பவுத்த பேரினவாதம் என்று கரைபவர்கள் பாதிரிகளும், புலிகளுமே ஒழிய வேறு ஒருவரும் இல்லை.

    மண்டபத்தில் இருக்கும் இலங்கை தமிழர்களுக்கு, இலங்கைத்தமிளர்களே உதவ மறுக்கிறார்கள். இந்திய அரசு எதோ உதவுகிறது.

    Reply
  • NANTHA
    NANTHA

    //palli on February 15, 2010 10:07 pm
    // இந்த இளம் பரிதி கீரிமலையில் கள்ளச்சாராயம், கள்ளக்கடத்தல் போன்றவற்றில் ஈடுபட்ட கிரிமினல் “வியாளியின்” பேரன் என்பது இன்னொரு சிறப்பு….///
    மிக தவறான கருத்து; அவரது அவரது சகோதரி எனது வீட்டுக்கு அருகாமையில்தான் இருக்கிறார்; மிக ஏழ்மையான விவசாய குடும்பத்தை சேர்ந்தவர் மட்டுமல்ல ஓர்அளவு படித்தவருமாம்//
    அப்போது உங்களுக்கு ஆளை சரியாக தெரியாது. பிரபாகரனின் அக்காவும் உங்களைப் போலத்தான் “தம்பி ஒரு பாவம்’ என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

    இளம்பரிதியின் தந்தை கீரிமலையில் இருந்த வியாழி என்ற பேர் பெற்ற கிரிமினலின் மகனும், பெரிய சண்டியனும் என்பதும் இயக்கமொன்று அவரை சமூக விரோதி என்று போட்டுத்தள்ளியதும் எப்படி அந்த அக்கா சொல்லாமல் விட்டார்? கேட்டுப் பார்க்கவும்.

    Reply
  • விசுவன்
    விசுவன்

    கொன்ஸ்ரன்ரைன் நீங்கள் முருகானந்தன் என்ற புனைபெயரிலை எழுதியிருந்தா ஒரு பிரச்சனையும் வந்திருக்காது. ஆறுமுகநாவலர் என்ற பெயரில் எழுதியிருந்தால் யாழ் இந்து வேளாளர்கள் வரவேற்றிருப்பார்கள். நீங்கள் உந்த கிறீஸ்தவ பெயரை பாவிச்சது தான் இந்த வினை!

    Reply
  • rohan
    rohan

    சென்ற வாரம்,
    “ROHAN ” “ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியில் பாடசாலைகள் கட்டப்பட்டது இல்லை என்கிறீர்களா? அப்படியாயின். வடக்கு-கிழக்கில் பாடசாலைகளை கட்டியவர்களையும் விபரங்களையும் தந்தால் நல்லது” என்று என்னை விழித்து நந்தா கேள்வி எழுப்பியிருக்கிறார்.

    ஜனவரி 22 அன்று தமிழ்க் கூட்டமைப்பின் அன்னக்காவடி என்று தலைப்பிட்டு எஸ் ஜெயராஜா எழுதிய ஒரு பத்தி எழுதியிருந்தார். அதன் பின்னூட்டத்தில் நந்தா “அன்று வன்னி என்பது வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களை உள்ளடக்கிய பிரதேசம். இந்த நான்கு மாவட்டங்களிலும் 200 க்கும் குறைவான பாடசாலைகளே 1960 ஆம் ஆண்டு இருந்தன. 1965 இல் இந்த எண்ணிக்கை 1500 ஐ எட்டியது” என்று புள்ளிவிபரம் தந்திருந்தார்.

    அதற்கு, “நான் படித்த ஒரு புள்ளிவிபரப்படி 2002இல் யாழ் மாவட்டம் கொண்டிருந்த பாடசாலைகள் 412. கிளிநொச்சி மன்னார் வவுனியா முல்லைதீவு மாவட்டங்கள் முறையே 93, 90, 178, 100 பாடசாலைகளைக் கொண்டிருந்தனவாம்! 2002இல் இலங்கையின் மொத்தப் பாடசாலைகளே 10,500 என்று தான் இத் தகவல் சொல்கிறது. முழு வட மாகாணமே 1000 பாடசாலைகளைக் கூடக் கொண்டிருக்கவில்லை என்று நினைவு.” என்று பதில் தந்திருந்தேன்.

    மேலும், “எனது தகவலுக்கு ஆதாரம் கீழே இணைக்கப்பட்டுள்ளது. நந்தாவின் 200க்கும் 1500க்கும் ஆதாரத்துக்காகக் காத்திருக்கிறேன். 1960இலிருந்து 1965 வரை ஐந்து வருடங்களில் 1300 பாடசாலைகளை வன்னியில் கட்டினார்களா?” என்றும் கேட்டிருந்தேன்.

    இவற்றையெல்லாம் அந்தத் தலைப்பின் கீழ் புறக்கணித்து விட்டு நந்தா “வடக்கு-கிழக்கில் பாடசாலைகளை கட்டியவர்களையும் விபரங்களையும் தந்தால் நல்லது” என்பதும் பார்த்திபன், “வன்னிப் பாடசாலைகள் சுதந்திரக் கட்சி அரசு நடந்த காலத்தில் கட்டுப்படவில்லையென்றால், யாரின் காலத்தில் கட்டப்பட்டதென்று தாங்கள் எடுத்து விடலாமே??” என்பதும் ஏதோ குற்றவாளி நான் தான் என்று காட்ட முற்படுவதாகவே தெரிகிறது.

    நந்தாவிடம் ஒரு பணிவான வேண்டுகோள். சுதந்திரக்கட்சி 5 வருடங்களில் 1300 பாடசாலைகளைக் கட்டியது என்ற உங்கள் கருத்துக்கு இருக்கும் ஆதாரத்தைத் தர முடியுமா? “இது தெரியாமல் குமாரசூரியரின் காலத்தை கனவு காண்பது வெறும் “எதிர்ப்பு” கோஷமும்” உண்மையை மறைக்கும் கபட நோக்கமுமே ஆகும்” என்றும் “வெறும் புலி பிரச்சாரங்களை படித்து மூளை சலவை செய்து கொண்டவர்களுக்கு வரலாறு எங்கே புரியப் போகிறது” என்று எழுதியிருக்கிறீர்கள் இந்த இணைப்புக்குப் போய்ப் பாருங்கள்.– http://thesamnet.co.uk/?p=18623

    Reply
  • thurai
    thurai

    புலிகள் தமிழர் உருமை பேசி தமிழரை அழித்த்து போல், இந்துக்களின் பெருமை பேசி இந்துக்களையும் பலி கொடுப்பதற்கே நந்தா முனைகின்றார். இவரின் வாதம் தமிழர்களிற்கோ இந்துக்களிற்கோ ஒருபோதும் நன்மை கொடுக்காது. பகைமையையே வளர்க்கும்.

    இவர் மக்கள் கூட்டத்துக்குள் நுழைந்த பாம்பு படும்பாடெ இங்கு படுகின்றார். தன்னை ஓர் இந்துக்களின் காப்பாளனாக்வே இங்கு காட்டுகின்றார். சாதரண மனித் குல்மோ, தமிழரோ இவர் பின் போகப்போவதுமில்லை இவர் சொல்வதை கேட்கவும் மாட்டார்கள். இவரின் அடித்தளம் இந்து மேலாதிகமே. தமிழர் வழிபாட்டிற்கு தமிழனாகப் பிறந்த எவனும் வழிநடத்தக் கூடியது கிறிஸ்தவமேயாகும். இந்துக்களே தொழில் முறை சாதியமைப்பை கட்டிக்காத்து தமிழரிடம் ஒற்றுமையின்மையையும் பகைமையையும் வளர்க்கின்றார்கள்.

    துரை

    Reply
  • palli
    palli

    அன்னை திரேசா மீதே குறை சொல்லும் நபருடன் நாம் மல்லுக்கட்டலாமா?? உலகத்தில் அன்னை திரேசா மீது குறை சொன்ன நபர் என்னும் சாதனையை நந்தா போட்டியின்றி செய்துள்ளார்,

    /சுனாமி நிதியை புலிகளும் பாதிரிகளும் எப்படி சூறையாடினார்கள் என்பது வன்னி மக்களுக்கு நன்கு தெரியம்// எமக்கும் தெரியும் பெயர் ஊருடன் ஏற்க்கனவே தேசத்தில் எழுதிவிட்டோம்;

    எப்போது மாயாவிடம் ஒரு குணம் எந்த ஒரு விடயத்திலும் தான் சம்பந்தபட்டால் மட்டுமே அல்லது தனக்கு தெரிந்தால் வந்து எழுதுவார், அதுக்கான ஆதாரங்கள் அவர் வைக்கும்போது யாராலும் மறுக்க முடியாது, ஆகவே நந்தா மாயாவின் பின்னோட்டத்தை பார்த்தாவது திருந்தவும்,

    இந்த இளம் பளுதிதானே யாழ்மாவட்ட அரசியல் பொறுப்பாளர்?? இன்று சிறையில் இருப்பதாக சொல்லுகிறார்கள், அவரயின் அவரது தங்கை எனது வீட்டுக்கு அருகாமையில்தான் இருக்கிறார், விபரம் ஏதும் வேண்டுமாயின் நந்தாவுக்கு கேட்டு சொல்கிறேன், யாழியின் பிள்ளைகள் தனி சண்டியர்கள், அதனால் அவர்கள் அப்போதே பல கொலை வழக்குகளை சந்தித்தவர்;

    நந்தா நீங்கள் மற்றய மதங்களில் உள்ள குறைபாடுகளை சொல்லுவதை விட உங்கள் மதத்தில் உள்ள நன்மைகளை ஆய்வு செய்து எழுதுங்கோ; நல்லாய் இருந்தால் உங்களை நாடியும் சிலர் வரலாம்;

    //அப்போது மஹாத்மா காந்தி அரசியல் வாதி இல்லையா அல்லது இந்தியரே இல்லையா?//
    எனது பார்வையில் மகாத்மா ஓர் அரசியல்வாதி என சொல்லமுடியாது அவர் ஒரு சமூக பற்றாளர், அவர் அரசியலில் இருந்திருந்தால் அவர் என்ன பதவியில் இருந்தார் என்பதை யாராவது தெளிவுபடுத்துங்கள். (உன்மையில் பல்லிக்கு தெரியாது) மகாத்மா இந்தியர் எனதான் நாம் இதுவரை நினைக்கிறோம்;

    //ஆனால் கத்தோலிக்க பாதிரிகள் மாத்திரம் மத பேதம் பார்த்து மதம் மாற்றி வியாபாரம் செய்யலாம்! சபாஷ்!//
    மிகவும் பண்புடன் அந்த மக்கள் வாழ்கிறபோது உங்களுக்கேன் இரத்தழுத்தம்; ஜேர்மனியில் ஒரு கத்தோலிக்க கோயில், பிரான்ஸ்சில் ஒரு கத்தோலிக்க கோயில் இது இரண்டுக்கும் புலத்தில் வாழும் இந்துக்களே அதிகம் போகிறார்கள், அவர்களை பாதிரியார் போன் செய்தா அழைத்தார், அவர்களுக்கு மனதுக்கு நிறைவு தருவதால் அவர்கள் போகிறார்கள்;
    யாழில்(பெயர் தவிர்த்துள்ளேன்) சில பாடசாலைகளில் படிக்க மாணவர்கள்; தவம் கிடப்பார்கள், அது எந்த பாடாசாலைகள்? ஆகவே சிலரது விருப்பு வெறுப்புகளை நாம் விமர்சிப்பது அழகல்ல; ஆகவே மாயா சொன்னது போல் புலிக்கு உதவிய பாதிரியாரை சுட்டிகாட்டுங்கள்:

    Reply
  • மாயா
    மாயா

    //மண்டபத்தில் இருக்கும் இலங்கை தமிழர்களுக்கு, இலங்கைத்தமிளர்களே உதவ மறுக்கிறார்கள். இந்திய அரசு எதோ உதவுகிறது.//
    இந்திய அரசு எதோ உதவுகிறது. Good Joke

    Reply
  • BC
    BC

    //தமிழர் வழிபாட்டிற்கு தமிழனாகப் பிறந்த எவனும் வழிநடத்தக் கூடியது கிறிஸ்தவமேயாகும்.//
    துரை கூறியதின் சரியான கருத்து விளங்கவில்லை. தமிழர்களை வழிநடத்தக் கூடியது கிறிஸ்தவமே என்றால் அது தவறு.

    Reply
  • மாயா
    மாயா

    அன்னை தெரேசா இறந்த பின் அவர் வாழ்ந்த பகுதிக்கு செல்ல வேண்டும் என , இந்தியாவுக்கு போன போது சென்றேன். கல்கத்தாவில் உள்ள மக்கள் பலரோடு பேசும் வாய்ப்பு கிடைத்த போது அந்த மக்களில் ஒருவரும் அன்னை தெரேசா குறித்து தவறாக பேசவில்லை. ஒரு இந்து சொன்னார் : அவரைப் போல் ஒருவர் மீண்டும் எமக்கு கிடைக்க மாட்டார். அதனாலேயே ” அவரை வத்திக்கான் புனிதர் என ஏற்றுக் கொள்கிறதோ இல்லையோ கல்கத்தா மக்கள் அவரை புனிதராகவே ஏற்றுக் கொண்டு விட்டார்கள். அவர் மதம் மாறுவது குறித்து ஒரு போதும் பேசியவரில்லை. அவரவர் மதங்களை அனுசரித்தால் அதுவே அன்பின் அடையாளம் என்பார் “என்றார்.

    உண்மைதான். நான் ஒரு இந்து என சொல்வதை விட , நான் ஒரு தமிழன் என சொல்வதை விட, நம் நடவடிக்கைகளைப் பார்த்து அவன் யார் எனக் கேட்க வேண்டும். அதுவே முக்கியம். மகாத்மா காந்தியை உலகமே போற்றுகிறது. அவரை உலகம் ஒரு இந்தியனாகவோ அல்லது ஒரு இந்துவாகவோ பார்க்கவில்லை. அவரை ஒரு மாகானாகவேதான் பார்க்கிறார்கள். அதுவே நம் நம் நடைமுறையாக வேண்டும். அதை விட்டு நாமம் போட்டுக் கொள்வதால் அது அரிதாரமாக மட்டுமே தெரியும். அது அடிப்படையாக இருக்காது.

    அரச படைகளால் Thiruchelvam Nihal Jim Brown என்ற கத்தோலிக்க மதகுரு அல்லைப்பிட்டியில் வைத்துக் கொல்லப்பட்டார். விபரம் :
    http://en.wikipedia.org/wiki/Thiruchelvam_Nihal_Jim_Brown

    Reply
  • chandran.raja
    chandran.raja

    நந்தா சொல்வதை அறிவுபூர்மானவன் யாரும் முழுமையாக ஒதிக்கிவிட முடியாது. மதங்கள் நாளாந்த வாழ்வில் ஏதாவது பரிகாராம் தேடிமுடியதாக இருந்தால் அது தற்கொலையை தாமதப் படுத்தி வைதிருக்கிற என்றே கூறுவேன். எந்த மதவாதியாக இருந்தாலும் ஆன்மீகத்திற்கு-கற்பனைக்கு-நம்பிக்கைக்யுட்பட்டது.
    யேசுநாதர் மரியாதிரேசா காந்தி அல்லது வேறு கோணங்களில் பயணித்த கால்மாக்ஸ் லெனினின் மாசேதுங் என்னால் மட்டும் மாபெரும் புரட்சிவாதியாக கருதப்படுகிற ரொட்ஸ்கி போன்றவர்கள் மானிடகுலத்திற்கு தமது சான்றிதழ்களை வழங்கிவிட்டே சென்றுள்ளார்கள். வரும் தலைமுறைகள் இந்த அட்டவணையை பார்த்து முன்னேற வேண்டியது தான். மனிதனில் தங்கியிருந்து கொண்டு அந்த மனிதனையே ஆட்டிப்படைத்து ஆளுமை செய்கிறது தான் முதலாளிவர்கம். இதற்கு எதிரான கருத்தே பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம். இதிலெல்லாம் மிக சிக்கலான காரியமாக தென்பட்டாலும் இதன் உண்மை தன்மையை புரிந்து தான் ஆகவேண்டும். மதங்கள் எந்தவிதத்திலும் அரசியலில் உரிமைகொண்டாட தகுதி இல்லை என்பதே! இந்தவிதத்தில் கருத்து பகரும் போது அன்னை திராசாவும் நந்தாவும் தனிமைப்பட்டுப் போவதில்லை.

    Reply
  • NANTHA
    NANTHA

    ரோஹானும் சாந்தனும் கேட்பது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஆட்சி தொடக்கமான 1956 இலிருந்து 1964 வரை வன்னியில் கட்டிய பாடசாலைகள் பற்றியது.

    எனது பதிலில் 1500 பாடசாலைகள் என்பது வடகிழக்கில் இருந்த “தமிழ்” பாடசாலைகள் என்பதாகும். அந்த வரியில் தவறிப்போன வாசகம் “வடகிழக்கு” என்பதே. சுட்டிக் காட்டியமைக்கு நன்றி.

    எந்த “கணக்கெடுப்பு” விபரங்களையும் நோக்காது அறிந்த கருத்துக்களையே எழுதியுள்ளேன். ஆயினும் வன்னி மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியின் போதே அதிகமான பாடசாலைகள் கட்டப்பட்டன என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன்!

    Reply
  • NANTHA
    NANTHA

    //புலிகள் தமிழர் உருமை பேசி தமிழரை அழித்த்து போல்//
    ஆனால் அந்த புலிப் பயங்கரவாதிகளோடு அல்லும் பகலும் கொஞ்சிக் குலாவிய “பாதிரிகள்” அப்படியே இருப்பதன் காரணத்தையும் சொன்னால் நல்லது. “தமிழர்களைக்” காட்டிக் கொடுத்துவிட்டு சுருட்டிய பணத்தோடு ஓட்டம் பிடித்து விட்டார்களா?

    நான் யாருக்கும் காவலனும் அல்ல, கோவலனும் அல்ல. ஆனால் கடவுளின் பெயரால் கொலை செய்யலாம் என்று நம்பும் கத்தோலிக்க கூட்டம் “தமிழ்” என்று சத்தமிட்டு தமிழர்களை அழித்துள்ளனர். அதுதான் உண்மை. அதை இல்லை என்று கூறி பாதிரிகளின் “போக்கிரித்தனங்களை” மறைத்து “தமிழர் நாகரீகம்” சிங்களவனால் கெட்டு விட்டது என்று கூற இது ஒன்றும் பாதிரிகளின் கோவில் அல்ல.

    பாதிரிகள் இந்து கோவிலுக்குள் புகுந்து ஏடு தொடக்கல் செய்வது எந்த வகை என்று முடிந்தால் துரை சொல்லட்டும்.

    கேள்விகளுக்கு பதிலை கொடுக்க முடியாதவர்கள் வழக்கம் போல “இந்து மேலாதிக்கம்’ என்று சத்தமிட்டு பயன் இல்லை.

    கத்தோலிக்க மேலாதிக்கம் புலிகளின் காலத்தில் ஓங்கி நின்றது. கத்தோலிக்க பாதிரிகளும் அவர்களுடைய தொண்டரடிப்பொடிகளும் “தமிழ்” காக்க புறப்பட்டார்கள் என்று நம்ப என்கருத்துக்களைப் படிப்பவர்கள் ஒன்றும் கபோதிகள் அல்ல.

    //தமிழ் வளர்க்கத்தானோ பாதிரிகள் இந்து கோவிலுனுள் புலி கிரிமினல்களோடு புகுந்து “இந்து குருமார் , இந்து மத பாரம்பரியங்கள் செய்ய முடியாது. கத்தொலிக்கர்தான் ஏடுதுவக்க வேண்டும், அதுவும் இந்து பிள்ளைகளுக்கு, என்று புறப்பட்டர்களோ? ஏடு துவக்கலும் வத்திக்கானில் இருந்துதான் வந்ததோ?” பாதிரிகளின் போகிரித்தனங்களை ஏன் மூடி மறைக்கிறீர்கள்? அல்லது “தமிழ்” உரிமை “போராட்டம்” நடத்த வந்தார்களோ.?//

    மீண்டும் ஒரு முறை படித்து விட்டு பதில் எழுதவும்.

    ஆனால் பேச்சு வாக்கில் “உண்மை வெளி வந்து விட்டது.
    //தமிழர் வழிபாட்டிற்கு தமிழனாகப் பிறந்த எவனும் வழிநடத்தக் கூடியது கிறிஸ்தவமேயாகும். //
    அதாவது இந்துக்கள் என்ற தமிழர்கள் எல்லோரும் மதம் மாறவேண்டும் என்பதுதான் பாதிரிகளின் கூச்சல் என்று முன்னரே குறிப்பிட்டிருக்கிறேன். வத்திக்கன் நாசி போப்பும் “இந்த நூற்றாண்டுக்குள் இலங்கை”, இந்தியா நாடுகளை “கத்தோலிக்க நாடாக்கப் போவதாகவும் “இந்து மதமும், பவுத்த மதமும் மதங்களே அல்ல” என்று சொன்னதன் பொருள் இப்போது பகிரங்கமாகியுள்ளது.

    புலிகள் ஐயர்மாரை கொன்றதையும், இந்து தலைவர்கள் அனைவரையும் போட்டுத்தள்ளியதையும் சேர்த்தப் பார்த்தால் நான் முன் வைத்த கருத்துக்களின் உண்மை எல்லோருக்கும் புரியும்!

    Reply
  • மாயா
    மாயா

    //ஆயினும் வன்னி மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியின் போதே அதிகமான பாடசாலைகள் கட்டப்பட்டன என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன்!- நந்தா //

    அதாவது தமிழ் கட்சிகள் வன்னி மக்கள் படிப்பறிவு கொண்ட மக்களாக முன்னேற வேண்டும் எனும் தேவை இருந்ததில்லை எனத் தெரிகிறது. எனவே இப்படியான தமிழ் கட்சிகள் இனித் தேவையே இல்லை.

    Reply
  • sekaran
    sekaran

    கொன்ஸ்ரான்ரைன், கட்டுரையில் கோயில்கள் கட்டுவதைவிட, பள்ளிக்கூடங்கள் கட்டுவது நல்லது என்று சொல்லப்போக, பின்னூட்டங்களோ, இந்து கிறிஸ்தவ மத பேதங்களில் கீழிறங்கிப்போய்… மிகவும் கவலையாய் இருக்கிறது. இவற்றை வாசிப்பவர்கள் தயவு செய்து கோபப்படாதீர்கள். தெரியாமல் உணர்ச்சி வசப்பட்டுவிட்டார்கள். ஆனாலும் அவர்கள் நம் சகோதரர்கள். கொன்ஸ்ரான்ரைன் அவர்களே, என் பின்னூட்டம் 102 ஆவதாய் வருகிறது. போதும் இனி. நன்றி, வணக்கம் என்று சொல்லிவிடுங்கள்.

    Reply
  • thurai
    thurai

    //தமிழர் வழிபாட்டிற்கு தமிழனாகப் பிறந்த எவனும் வழிநடத்தக் கூடியது கிறிஸ்தவமேயாகும்.//
    துரை கூறியதின் சரியான கருத்து விளங்கவில்லை. தமிழர்களை வழிநடத்தக் கூடியது கிறிஸ்தவமே என்றால் அது தவறு.

    இந்துமதத்தைப்போல் பிராமணர் மட்டும் கோவிலில் பூசை செய்ய உருமையுடையவர்கள் என்ற கட்டுப்பாடு கிறிஸ்தவத்தில் இல்லை. இதனையே கூற் வந்தேன். கிறிஸ்தவம் மட்டும் உலகில் மேலானதென்று கூற் முடியாது. அதே போல் இந்து சமயமும் உலகினில் மேலானதென்று வாதாட முடியாது.

    இங்கு நந்தா குற்ரம்சாட்டும் கத்தோலிக்க பாதிரிகள் தமிழர் மட்டுமா அல்லது உலகிலுள்ள கத்தோலிக்க பாதிரிகள் எல்லோருமா?

    துரை

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //…பாதிரிகள் இந்து கோவிலுக்குள் புகுந்து நாட்டியமாடியது சரியா பிழையா என்று பதில் சொல்லுங்கள்!…//
    மிகச்சரி. ஏனெனில் நீதியானதும் நியாயமானதுமாகும்.
    அதை நீங்களே ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’, ‘எம்மதமும் சம்மதம்’ எனச் சொல்லியது இந்து மதம் என முன்னர் சொல்லி இருக்கிறீர்கள். தேவை எனில் கீழே நீங்கள் எழுதியது…

    NANTHA on February 7, 2010 1:47 pm /“யாதும் ஊரே, யாவரும் கேளீர்” என்றும் “எம்மதமும் சம்மதம்” என்று இந்துக்களால் மட்டுமே சொல்ல முடியும். மற்றவர்களால் அல்ல./

    //….வெள்ளையர்கள் வரிப்பணத்தில் ஏன் இந்துக்களுக்கு பாடசாலைகள் கட்டவில்லை என்ற கேள்விக்கு உங்கள் பதிலைக் காணோம்…..//
    அவன் காசில் அவனுக்கு பள்ளிக்கூடம் கட்டினான் (நீங்கள் சொன்னது போல் வரி என்பது ‘புரளி’ என வைத்துக்கொண்டால்). நீங்கள் தான் ‘ஆயிரக்கணக்கான பாடசாலைகளை வன்னியில்” கட்டிய கதை ஆரம்பித்து ஒரு மாதம் கழித்து வசதியாக ‘வடகிழக்கு’ என இல்லாத மாகானம் ஒன்றி வந்து முடித்திருக்கிறீர்கள். இந்த சொற்பிழையைக் கண்டு பிடிக்க இவ்வளவு நாள்!

    //…. இந்துக்களின் வரிப்பணத்தை, அதாவது தொண்ணூறு சதவீதமான தமிழர்களின் வரிப்பணத்தை கிறிஸ்தவர்களின் கட்டுப்பாட்டு பாடசாலைகளிடம் வெள்ளையர்கள் கொடுத்தது நியாயம் என்று கூற வருகிறீர்களோ? அல்லது வெள்ளையர்கள் இந்துக்களிடம் கொள்ளையடித்து லோகல் கிறிஸ்தவர்களிடம் கொடுப்பது நியாயமானது என்று நீங்கள் நம்பினால் தயவு செய்து நீங்கள் “இந்து” என்று கூறுவதை நிறுத்தவும்….//
    நீங்கள் என்ன சொன்னாலும் நான் ‘இந்து’ தான் நான் கல்விகற்றது சைவப்பாடசாலைக்ளிலும் ‘சைவ/இந்து’ கல்வியை உருவாக்கப் பாடுபட்ட ஆறுமுக நாவலர் ஸ்தாபித்த யாழ் இந்துக்கல்லூரியிலுமே. என்னை ‘இந்து’ இல்லை எனச்சொல்ல உங்களுக்கு உரிமை இல்லை.

    //…வடகிழக்கில் 1956 ஆம் ஆண்டு தொடக்கம் 1965 ஆம் ஆண்டு வரை அரசாங்கம் கட்டிய பாடசாலை விபரங்கள் உங்களிடம் இருக்கும் என்றே எண்ணுகிறேன். தயவு செய்து பிரசுரிக்கவும். எனது கணக்கு தவறு என்றால் சுட்டிக் காட்டவும்….//
    நீங்கள் தான் ஆயிரக்கணக்கான பாடசாலைகளை கட்டியது என்ச் சொன்னது. எனவே நீங்கள் தான் நிரூபிக்க வேண்டும். நானல்ல!

    //….கதிர்காமரை போட்டுத்தள்ளி “தமிழ் ஈழம்” பெற்றவர்களுக்கு யார் சமன் என்பது தெரியாமல் இருக்கும்….//
    கதிர்காமர் ஒரு கிறிஸ்தவர் என்கின்ற விடயம் உங்களுக்குத் தெரியுமா? கதிர்காமரின் குடும்பத்தினரே வட்டுக்கோட்டை செமினரியை ஸ்தாபித்தவர்கள்.

    உங்கள் ஆசைப்படி புலிகள் ‘பாதிரி’ கோஷ்டியை யாழில் கால் பதிக்க விட்ட குடும்ப ஆள் சாமுவேல் ஜெபரட்னம் கிறிஸ்ரியன் கதிர்காமரின் மகனைப் போட்டுத்தள்ளி விட்டனர். இதில் ஏன் உங்களுக்கு கோபம்?

    //…. “ஜனநாயகம்” பற்றி கதைக்கும் தமிழர்கள் ‘தமிழ்” என்ற வட்டத்தில் நின்றால் ஒரு காலமும் எந்த உயர் பதவிக்கும் வர முடியாது….//
    கதிர்காமர் தன்னை முதலில் ஒரு ஸ்ரீலங்கனாகவும் பின்னரே ஒரு தமிழராகவும் பார்ப்பதாக தொண்டைகிழியக் கத்தியும் மஹாசங்கத்தினர் ‘விளையாட்டைக்’ காட்டி வெட்டிய வரலாறு அறியவில்லையா?

    ///….மேலும் ஆறுமுக நாவலருக்கு 1968 ஆம் ஆண்டு நடந்த சென்னை உலகத்தமிழ் ஆராய்ச்சி மகா நாட்டின் போது சிலை வைக்க முடியாது என்று அப்போதைய தமிழக முதல்வர் அண்ணாதுரை அறிவித்தது ஏன் என்று தெரியுமா?….//
    நீங்கள் சொன்னால் அறிந்து கொள்வேன். ஒருவேளை நடைபெற்றது ‘தமிழ்’ ஆராச்சி மாநாடு என்பதாலும் ‘இந்து’ ஆராச்சி மாநாடில்லை என்ற காரணத்தினாலுமாக இருக்கலாம். மேலும் ஆனானப்பட்ட நாவலரின் சமாதியையே ‘கடவுளின் சந்நிதியில் சமாதியா’ எனச் சொல்லி நல்லூர்க் கோவிலின் வீதியில் இருந்து ‘விலத்தி’ மீழமைத்தது யாழ் ‘இந்து’ சமூகம். இதில் அண்ணாத்துரை சிலை வைக்கவில்லை என்கிறீர்கள். .
    இந்த தமிழாராய்ச்சி மாநாட்டுக்கு அடிகோலியவர் கரம்பனில் பிறந்த தவத்திரு பிரான்சிஸ் ஸ்ரனிஸ்லோஸ் தனிநாயகம் அடிகளார்!

    //…வகுப்பறைகளில் இந்து மத பாடம் போதிக்கப்பட்டது 1957 ஆம் ஆண்டின் பின்னரே என்பது உங்களுக்கு தெரியாத விடயம்….// திரு. வில்லியம்ஸ் நெவின் முத்துக்குமாரு சிதம்பரப்பிள்ளை என்கின்ற கிறிஸ்தவர் எந்த மிசனரியின் தொடர்புகளும் இல்லாது ஆரம்பித்த யாழ் பாடசாலையே யாழ் இந்துக்கல்லூரியாக மாறியது.

    /….. சமயமும், மொழியும் கட்டாய பாடங்கள் ஆக்கியது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான பண்டாரநாயக்கா காலத்தில்த்தான் என்பது கல்வித் திணைகளத்தில் வேலை செய்தவர்களுக்கு நன்றாக தெரியும். கேட்டுப் பார்க்கவும்….// அன்று ஆரம்பித்த்துதான் ‘மொழி/சமயச்’ சிக்கல்! இன்றுவரை தீரவில்லை!
    //…அதிலென்ன புதுமை? ஏராளமான இந்துக்கள் சைவ உணவை இன்றும் அன்றும் சாப்பிடுகிறார்கள். பாதிரிகள் கட்டளைப்படிதான் சைவ மக்கள் சைவ உணவை உண்ணுகிறார்கள் என்று சொல்லுகிறீர்களோ தெரியவில்லை….//
    சொல்லப்போனால் நீங்கள் சொல்வதும் ஒருவகையில் சரிதான். ஏனென்றால் யாழ் இந்துக்கல்லூரி அதிபர்களாய் இருந்தவர்களில் பலர் கிறிஸ்தவர்கள். ஏடுதொடக்கியது பிழை எனச் சொல்லும் நீங்கள் நெவின்ஸ் செல்லத்துரை, டபிள்யூ.ஏ.ரோப், கோட்மன் அப்பாப்பிள்ளை, திரு.ஆசைப்பிள்ளை போன்ற அதிபர்கள் சைவ உணவு அல்லாத ஒன்றை உள்லே அனுமதிக்க மறுத்து ‘இந்து’ பாரம்பரியத்தைக் காப்பாற்றினர் என ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.
    //…..பாதிரி உலகம் என்று ஒன்று கிடையாது. பாதிரிகளின் வால்கள் பல்கலைக் கழக வரலாறுகளை ஏன் மறைத்து கோஷம், கருப்புக்கொடி என்று அலைந்தார்கள்?…// உலக ப்ல்கலைக்கழகங்கள் ‘பாதிரிகள்’ ஆரம்பித்தவையே!

    //…எப்படித் தடைபட்டுவிடும்? இன்றும் பூசை நடக்கிறதே!…// பூசை நடக்கிறது. ஆனால் நினைத்தபடி ஊர்மக்கள் போய்வர முடியாது! முன்னர் பரமேஸ்வராக்கல்லூரி இருந்தபோது போய்வர முடிந்த்து. யாரும் தடுப்பதில்லை!
    //..அது உண்மை. பொன்சேகாவுக்கு காளாஞ்சி கொடுத்தது மாத்திரமின்றி அவருக்கு வாக்களியுங்கள் என்று கேட்டவர்களும் பொன்சேகாவுக்கு வாக்களித்தவர்களும் இதற்கு பொறுப்பேற்க வேண்டும்!…// மகிந்தாவுக்கும் காளாஞ்சி கொடுக்கப்பட்டதுக்கு யார் பொறுப்பேற்க வேண்டும்?

    //….. கத்தோலிக்கர்களும், புரோடச்தாந்து மதத்தவர்களும் எத்தனை யுத்தம் செய்தார்கள் என்று படித்தால் நல்லது….//
    வீதியில் நடக்கும்போது மயிற்பீலியால் நிலத்தைத் தடவி, ஏதும் ஊர்வன சாகக் கூடாது என்று திரிந்த சமணர்களுடன் அனல் வாதம் , புனல் வாதம் செய்து திருஞானசம்பந்தரால் கழுவேற்றிக் கொல்லப்பட்ட்து பற்றியும் அறிந்தால் நல்லது!
    கீழே ஒரூ சாம்பிள்…
    ‘கழுவிலேறாத சமணர்களை எல்லாம், சைவாச்சாரத்தைக் கொண்டவர்கள் ஒவ்வொருத்தராகப் பிடித்து அந்த முத்தலைக் கழுமரங்களிலே ஏற்றியிருத்திக் கொன்றார்கள். அந்த சமணர்களுக்குப் பாரம்பரியாக அடியார்களானவர்கள் சாவப்பயந்து மனங்குலைந்து விபூதி பூசிக் கொண்டார்கள். அந்த விபூதி கிடையாமல் பசுவின் கோமயத்தை எடுத்திட்டுக் கொண்டார்கள். அதுவும் கிடைக்காத சிலர் பசுவின் கன்றைத் தோள் மேலே தூக்கிப் போட்டுக் கொண்டார்கள்.’
    ‘விபூதி, கோமயம், பசுவின் கன்று இந்த மூன்றுங் கிடையாத சிலர் விபூதி பூசின நெற்றியுடனே நெற்றியை மோதிப் பூசிக் கொள்ள கோமயத்திலுமப்படியே மோதியிட்டுக் கொண்டும் இப்படியாகத் தங்கள் பாசங்களை வென்று பிழைக்க எண்ணினவர்களைக் கொல்லாமல் விட்டு விட்டனர்.’
    -பூவை கலயாண சுந்தர முதலியார் பொழிப்புரை, திருவிளையாடற் புராணம்,சென்னை,

    //… சேர் பட்டம் கொடுப்பது வத்திக்கன் அல்ல. …// வத்திகானுக்கு ‘கட்டுப்பட்டு நடக்கும்’ கத்தோலிக்க அரசு!
    //..,..மத சமத்துவம் பற்றி பேசும் மேற்குலகம் அனுமதி கொடுக்க வேண்டும் கொடுக்கிறது,…// மேற்குலக உரிமைகளை அனுபவித்து அவர்களுக்கு மறுப்பது ரிப்பிக்கல் ஸ்ரீலங்கன் மென்ராலிற்றி! இதிலென்ன ஆச்சரியம்?

    //…வெள்ளையர்கள் என்றால் எல்லோரும் வத்திக்கானின் வால்களா? பவுத்த சீனாவா? அங்கு கம்யூனிஸ்ட் ஆட்சி என்பது தெரியாதோ?..///
    நீங்கள் தானே கத்தோலிக்கர் எல்லோரும் வத்திக்கானுக்கு கட்டுப்படவேண்டும். இந்து என்றால் அப்படியெல்லாம் இல்லை எனச் சொல்லியது. அனேக வெள்ளையர்கள் ‘கத்தோலிக்கர்கள்’ தானே? இல்லையா?

    Reply
  • மாயா
    மாயா

    புலிகளது பயங்கரவாதத்தை விட , இந்த மத வாத பயங்கரவாதம் தமிழ் பேசும் மக்களிடையே ஆரம்பித்தால், அரச மற்றும் புலிப் பயங்கரவாதத்தால் செத்துப் போன நிலையில் , மிகுதியாக இருக்கும் தமிழ் பேசும் மக்கள் மட்டுமல்ல , சிங்கள மக்களும் செத்து நாடு சுடுகாட்டு பாலைவனமாகிவிடும். நானும் ஒரு இந்துதான். ஆனால் அதற்கு மேல் எனக்கு மனிதர்களுடையது மட்டுமல்ல அனைத்து ஜீவராசிகளதும் வாழ்வு முக்கியம். இந்துக்குகள் இறைச்சி உண்ணாத சைவம். இந்துத்துவ கருத்துகள் அசைவமாக எனக்குள் அச்சத்தை ஏற்படுத்துகிறது.

    புலிகள் தமிழருக்காக போராடினார்கள். ஆனால் , அவர்களது வழி தவறாக இருந்தது. அதை நாம் எதிர்த்து பேசாததால் இத்தனை அவலங்களும் , மனித அழிவுகளும் இடம் பெற்றது. இன்று ஊமைகள் வாய் திறக்கிறார்கள். இன்று விரல் விட்டு எண்ணக் கூடியவர்கள் புலிகளாக தம்மை அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள். அதைவிட மோசமான விளைவுகளை இந்துத்துவ வெறி ஏற்படுத்தும். இப்போதே அதை நாம் விமர்சிக்காவிட்டால் , மிகுதியாக இருக்கும் மிச்ச சொச்ச மக்களையும் மதவாதம் காவு கொண்டுவிடும். நாம் ஏதோ நாகரீக வளர்ச்சி பெற்ற சமுதாயமாக இன்னும் மாற வெகு காலம் எடுக்கும் போல தோன்றுகிறது?

    Reply
  • NANTHA
    NANTHA

    சேகரன்:
    கட்டுரையாளர் கொன்ஸ்ரான்ரைன் கோவில்கள் வேண்டாம் என்று மாத்திரம் சொல்லுகிறார். அதே நேரத்தில் பருத்தித்துறையில் லட்சங்கள் செலவுபண்ணி கத்தோலிக்கர்கள் ஆலயப் புனருத்தாரணம் செய்வதைப் பற்றி மூச்சு விடவில்லை.

    இவர் போன பாடசாலைகளில் ஒன்றைத்தவிர மற்றைய அனைத்தும் முன்னாள் “கத்தோலிக்க” பாடசாலைகள் அல்லது கத்தோலிக்கர் அதிகம் இருக்கும் இடங்கள். அந்த இடங்களில் இவர் ஒரு பாதிரியையும் சந்திக்கவில்லை என்றால் எவரும் நம்ப போவதில்லை.

    பாதிரிகளைச் சந்தித்த விளைவே “மார்க்சிஸ்டுகளுக்கெதிரான” எழுத்தும், டக்ளசுக்கெதிரான வழக்கமான எழுத்துகளும். தீவுப்பகுதிகளில் பாடசாலைகள் “நன்றாக உள்ளன” என்று சொல்லும் கொன்ஸ்ரான்ரைன் அதற்கு மூல காரணம் டக்லஸ் என்று கூற முடியாது தவித்துள்ளார். தீவுப்பகுதி மக்கள் டக்ளசுக்கு வாக்குகள் அளிப்பது டக்லஸ் “சும்மா” ஒரு பாதுகாப்புக்குத்தானே ஒழிய வேறொன்றுமில்லை என்றும் ஒரு சுத்து சுத்தியிருக்கிறார்.

    இவர் போன பாடசாலைகளில் இரண்டைத் தவிர மற்றயவை அனைத்தும் கத்தோலிக்க பாடசாலைகள் அல்லது கத்தோலிக்கர்கள் அதிகம் வாழும் பகுதிகள். அங்கு பாதிரியை சந்திக்காமல் வந்தார் என்று நம்ப முடியாது. ஏனென்றால் பாதிரிகள் “வழமையாக’ கூறும் ‘மார்க்சிஸ்ட்’ பிரச்சினையையே இவரும் எடுத்துள்ளார்.

    மதுசா சிவராசாவின் கதையில் இவர் அந்த சிறுமியின் குடும்பம் மாதகலைச் சேர்ந்ததா அல்லது புது மாத்தளனைச் சேர்ந்ததா என்று குறிப்பிடவில்லை. ஆனால் “மடத்தில்” இருக்கிறாள் என்று மாத்திரம் குறிப்பிட்டுள்ளார். தற்போது அந்த சிறுமி “மரியா”வாக மாற்றம் பெற்றிருப்பாள். புலிகளால்த்தான் அந்த சிறுமிக்கு இந்த கதி வந்தது என்று சொல்லக் காணோம்.

    இந்து விவகார அமைச்சிடமிருந்து (டக்லஸ் தேவானந்தாவின் அமைச்சு) பணஉதவி பெற்று இந்து ஆலயங்களை புனருத்தாரணம் செய்த எழு இந்து குருமாரைப் புலிகள் கொன்றுள்ளனர். அதேவேளையில் அதே அரசிடம் இருந்து பணம் பெற்ற பாதிரிகளை புலிகள் கட்டியனைத்துள்ளனர்.

    இந்து ஆலயங்கள் கட்டுவதைப்பற்றி கூறியுள்ள இவர் பருத்தித்துறையில் லட்சங்கள் செலவு செய்து கட்டிய கத்தோலிக்க கோவில் பற்றி மூச்சு விடவில்லை. சில வேளைகளில் பாதிரிகளும் புலிகளும் ஐயர்களை போட்டுத்தள்ளியதைப்போல இப்போது ஆலயங்கள் அல்லைப்பிட்டியிலும் , மானிப்பாயிலும் கட்டுபவர்களை கொல்வதற்கு டக்லஸ் போன்றவர்கள் தடையாக உள்ளனர் என்றே அனுமானிக்க முடிகிறது.

    Reply
  • NANTHA
    NANTHA

    //இந்துமதத்தைப்போல் பிராமணர் மட்டும் கோவிலில் பூசை செய்ய உருமையுடையவர்கள் என்ற கட்டுப்பாடு கிறிஸ்தவத்தில் இல்லை. இதனையே கூற் வந்தேன். கிறிஸ்தவம் மட்டும் உலகில் மேலானதென்று கூற் முடியாது. அதே போல் இந்து சமயமும் உலகினில் மேலானதென்று வாதாட முடியாது.//

    பிராமணர்கள்தான் கோவிலில் பூசை செய்ய உரிமை உள்ளவர்கள் என்று எங்கு கண்டு பிடித்தீர்கள்? இந்துக்கள் யாவரும் கோவிலில் பூசை செய்ய உரிமை உண்டு. இந்துக்களுக்கு வழிபாடும் வழிகள் “கோவில்” மாத்திரமல்ல. இந்துக்கள் விரும்பியபடி கோவில் கட்டலாம். பூசையும் செய்யலாம். கத்தோலிக்கர் கோவில் கட்டலாமே ஒழிய பூசை புனஸ்காரங்களுக்கு “வத்திக்கானின்” அனுமதி பெற வேண்டும்.

    ஆனால் பிராமணர்களுடைய தொழில்” கோவிலில்” பூசை செய்வதே ஆகும். இன்று அந்த நிலை இல்லை. பிராமணர்கள் சகல தொழில்களும் செய்கிறார்கள்.

    இந்து மதத்தை விட்டு விலகுபவர்களுக்கு ‘தண்டனை” என்று ஒன்றும் கிடையாது. ஆனால் கத்தோலிக்க, இஸ்லாம் மதங்களில் இருந்து வேறு மதங்களுக்கு மாறினால் தண்டனை உண்டு. அது மரண தண்டனை வரை செல்லும்.

    INQUISITION என்ற தண்டனை வழங்கும் முறை இன்றும் கத்தோலிக்க பாதிரிகளால் பின்பற்றப்படுகிறது. பலமுறை இங்கு அது பற்றி குறிப்பிட்டுள்ளேன். அதைப்பற்றி நீங்கள் மவுனம் சாதிப்பதன் மர்மம் என்ன? தவிர இந்த தண்டனைகள் கத்தோலிக்கர் அல்லாதவர்களின் மீதும் பாவிக்கப்படலாம் என்றும் “வத்திக்கானின்” சரித்திரம் பகல்கிறது.

    அதனால்தான் பாதிரிகள் கொலைகாரர்களான புலிகளோடு கூட்டணி சேர்ந்தார்கள். தமிழ் இந்து தலைவர்கள் அனைவரையும் புலிகள் சமாதியாக்கியதட்குப் பின்னால் கத்தோலிக்க சாமிகள்தான் தெரிகிறார்கள்.

    Reply
  • thurai
    thurai

    //அதனால்தான் பாதிரிகள் கொலைகாரர்களான புலிகளோடு கூட்டணி சேர்ந்தார்கள். தமிழ் இந்து தலைவர்கள் அனைவரையும் புலிகள் சமாதியாக்கியதட்குப் பின்னால் கத்தோலிக்க சாமிகள்தான் தெரிகிறார்கள்//நந்தா

    புலிக்குப் பின்னால் எல்லா பாதிரிமார்கழும் போகவில்லை, அதேபோல் புலிக்குப் பின்னால் சில இந்துக் குருக்கள் போகாமலுமில்லை. புலத்தில் புலிகளின் வசம் இருக்கும் கோவில்களை விரும்பினால் பட்டியலிடலாம்.

    எந்தப் பாதிரியோ அல்லது இந்துக்குருக்களோ புலியுடன் சேர்ந்து கொலைகளிற்கு உதவினார்களென்றால் அவர்களை மட்டும் க்ண்டு பிடிக்க வேண்டுமே தவிர பாதிரிமார்களெல்லோரையும், இந்துக்குருக்கள் எல்லோரையும் குற்ரம் சுமத்துவது, உலகமுமேற்கக் கூடியதல்ல.

    நந்தாவின் விவாதம், புலிகள் மற்ர இயக்கங்களின் தலைமைகள் செய்த தவறிற்காக அதன் உறுபினர்கள் அனைவரையும் கொன்றதற்கும். அரசாங்கம் வன்னியில் இருந்து வந்தோரெல்லோரையும் புலிகள் என்பதிற்கும் ஒப்பானதேயாகும்.

    துரை

    Reply
  • NANTHA
    NANTHA

    //யாதும் ஊரே யாவரும் கேளிர்’, ‘எம்மதமும் சம்மதம்’ // என்பதன் அர்த்தம் இந்துக்கள் எந்த மதத்துக்கும் மாறலாம் என்பதுதான். பலாத்காரமாக நுழையும் வேற்று மதத்தவர்களை இந்து கோவிலுள் வைத்து இந்து மத பாரம்பரியங்களை செய்ய விட வேண்டும் என்பதல்ல.

    யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதன் அர்த்தம் ஊர்கள் யாவருக்கும் சொந்தமானவை என்பதுதான். அது இப்போது சாத்தியமற்றுப்போன விஷயம்.

    ஆறுமுக நாவலர் தொடங்கிய பள்ளியில் படித்தாலும் சரி, வேறு எங்கும் படித்தாலும் சரி பாதிரிகள் ஏடு துவக்குவது, அதுவும் இந்துக் கோவிலுனுள் இந்துக் குழந்தைகளுக்கு, நியாயம் என்று கூறும் உங்களுக்கு மீண்டும் கூறுகிறேன் “இந்து” என்று உங்களை அழைக்க வேண்டாம். இந்து என்ற வகையில் அந்த உரிமை எனக்கு உண்டு!

    பாடசாலைகளின் எண்ணிக்கை பற்றி பதில் எழுதியுள்ளேன். திரும்பவும் படிக்கவும்.

    வட்டுக்கோட்டை செமினரி அமெரிக்க மிசனரிகளால் தொடங்கப்பட்டது. கதிகாமரின் குடும்பத்தவர்களால் அல்ல. வட்டுக்கோட்டை செமினரி வரலாற்றை மீண்டும் படிக்கவும்.

    கதிர்காமர் கத்தோலிக்க ஆள் இல்லை. ஆனால் பல முறை புலிகளால் எச்சரிக்கப்பட்டவர். ஆனால் “கொலை” செய்யப்பட்ட இந்துக்களுக்கு அப்படி எச்சரிக்கைகள் விடுக்கப்படுவதில்லை.

    C.X. MARTIN என்ற கத்தோலிக்க யாழ்ப்பாணத்து தமிழரசுக் கட்சி எம்.பி எந்த வித அச்சுறுத்தலுக்கும் ஆளாகவில்லை. 1971 ஆண்டு கொண்டு வரப்பட்ட புதிய அரசியல் சாசனத்துக்கு ஒப்புதல் வழங்கிய பா ஊ க்களில் ஒருவர். ஆனால் வட்டுக்கோட்டை பா ஊ தியாகராஜா “தமிழ் துரோகி” என்று கொல்லப்பட்டார். காரணம் மாட்டின் செய்த அதே காரியம். இது கத்தோலிக்க ” தமிழ் துரோகிகளுக்கும்”, “இந்து தமிழ் துரோகிகளுக்கும்” உள்ள வித்தியாசம்.

    லக்ஸ்மன் கதிர்காமர் புலிகளைப் பல நாடுகள் தடை செய்ய காரணமாக இருந்தவர். அதற்காக அவர் பரம்பரைகள், உறவினர்கள் எல்லோரும் “தேசபக்தி” உள்ளவர்கள் என்று கூறிவிட முடியாது.

    நீங்கள் சொல்லும் மதம் மாறிய நெவின் செல்வதுரை போன்றவர்கள் “இந்து மத” முறைகளை பின்பற்றியவர்கள். கிறிஸ்தவர் என்றால் மாடு தின்ன வேண்டும் என்று கட்டாயம் இல்லை. தவிர இந்துக்களிடையே “படித்தவர்கள்” அன்று இல்லை. மதம் மாறியவர்களுக்குத்தான் படிக்கும் சலுகையும் வழங்கப்பட்டது.

    என்னுடைய பாலிய கால நண்பன் “ராயப்பு” குடும்பம் மாட்டிறைச்சி சாப்பிடுவதில்லை. மாட்டுப்பொங்கல் கொண்டாடுவார்கள். ஒருமுறை ஒரு யாழ்ப்பாணத்து பாதிரி ” மாட்டுப்பொங்கல்” கொண்டாட வேண்டாம் என்று சொல்லப் போய் அந்த ஊரவர்கள் (அனைவரும் உறவினர்கள்) அந்த பாதிரியை ஓட ஓட விரட்டினார்கள். பல காலமாக பாதிரிகள் இல்லாமலே அவர்கள் “ஜேசுவை” கும்பிட்டார்கள்.

    சமணர்கள் என்பவர்கள் இன்றைய ஜெயின் என்பவர்கள். அவர்கள் தென்புலம் நோக்கி வந்து காடுகளிலும் குகைகளிலும் வாழ்ந்தார்கள். இரவு நேரங்களில் ஊர்களுக்குள் புகுந்து “பெண்களைப்”பிடித்துக் கொண்டு போன கதைகளும் உண்டு. சிலவேளைகளில் அவர்களின் உபத்திரவம் தாங்காமல்தான் கழுவேற்றிக் கொல்லப்பட்டார்கள் என்று எண்ணுகிறேன்.

    இங்கிலாந்தில் ஒருமுறை அங்குள்ளவர்களுக்கு “நீங்கள் வத்திக்கானுக்கு கட்டுப்பட்டவர்கள்” என்று சொல்லிப்பாருங்கள்!

    கத்தோலிக்கர் எல்லோரும் வத்திக்கானுக்குக் கட்டுப்பட வேண்டும் அதை இப்போதும் சொல்லுகிறேன். ரஷ்ஷியர்கள், கிரீக்கர்கள் போல பல “வெள்ளையர்கள்” வத்திக்கானுக்கு கட்டுப்பட்டவர்கள் அல்ல.

    //..,..மத சமத்துவம் பற்றி பேசும் மேற்குலகம் அனுமதி கொடுக்க வேண்டும் கொடுக்கிறது,…// மேற்குலக உரிமைகளை அனுபவித்து அவர்களுக்கு மறுப்பது ரிப்பிக்கல் ஸ்ரீலங்கன் மென்ராலிற்றி! இதிலென்ன ஆச்சரியம்//
    இதிலென்ன மென்டாலிட்டி பிரச்சனை?

    Reply
  • thurai
    thurai

    அந்தோனியார் கோவில்களிற்குப் போகும் இந்துக்கள் எத்தனைபேர் தெரியுமா? நல்லூரிற்குப் போகும் கிறிஸ்தவர்கள் எத்தனை பேர் தெரியுமா? அதற்கும் நான் தான் சுத்த இந்து மற்ரவர்களெல்லாம் மாமிசம் சாப்பிட்டவர்கள் என்று கூறவேண்டாம்.

    மத பேதம் காட்டுவதும், வளர்ப்பதும் மேலத்தேயநாகரீக உலகில் அற்ருப் போகின்றன. ஆனால் தமிழர்கள் மட்டும் சாதி,சமய, இன துவேசம் பேசி இலங்கையில் அழிவை ஏற்படுத்தி விட்டு புலத்திலும் அதனையே தொடர்கின்றார்கள்.

    காரணம் இவர்களிற்கு மனிதனேயத்தை விட சாதி, சம்ய, உண்ர்வுகளே அதிகம். உலக்த்திற்கு அணு ஆயுதத்தை விட தினமும் பயமுறுத்தல் மதவாதிகளாலேயாகும்.

    துரை

    Reply
  • palli
    palli

    உலகத்தில் இந்து கோவிலில் மற்றய மதகாரர் போககூடாது என எழுதபடாத சட்டம் நேபாலில் உள்ள ஒரு கோவிலில் மட்டும்தான் உண்டு.

    மதம் மாறியதால் இலங்கயில் உள்ள தமிழருக்கு எந்த பிரச்சனையும் இல்லை, (நந்தா குழுவினர் தவிர) ஆனால் இன்று புலத்தில் இலங்கை குடியுரிமை இல்லாமல் தாம் வாழும் நாட்டில் (கத்தோலிக்க ஆதிக்கம் உள்ள நாடுகள்தான்,) குடியுரிமை எடுக்கிறார்கள்; யாரும் கேக்க முடியுமா?? அதனால் தமிழர் தொகையில் இலங்கயில் விழுக்காடு இருக்கென்பது மறுக்க முடியுமா?? அதை பற்றி பேச நந்தாவால் முடியாது; காரனம் மகிந்தாவின் மகிழ்ச்சியில் நந்தா குறுக்கிடமாட்டார், மதம் மாறுவதோ அல்லது குடியுரிமை பெறுவதோ, ஏடு தொடக்குவதோ தனிமனித செயல்பாடு, எது அவர்களுக்கு வாய்ப்பாக இருக்கோ அதில் அவர்கள் கவனம் போகிறது,; நாகரிகம் மாற மாற மாற்றங்களும் நடக்கிறது; இதில் பச்சை சிவப்பு என எதுக்கு திண்டாட்டம்; நந்தா தமிழர் மதம் பற்றி அலட்டிப்பதில்லை, அப்படி இருந்திருந்தால் துரையப்பாவின் கொலையுடன் மதபிரச்சனை தான் வெடித்திருக்குமே தவிர இன பிரச்சனையில்லை, நான் இந்துதான் எனது வீட்டு எந்த நல்லது கெட்டதுக்கும் ஜயர் வரமாட்டார், (வந்தால் தீட்டாம்) ஆனால் எனது அயல்வீட்டில் இருக்கும் கத்தோலிக்க குடும்ப அனைத்து நிகழ்விலும் பாதிரியார் கலந்து கொள்வது மட்டுமல்ல அவர்களுடன் அன்பாய் சாப்பிட்டு பேசி மகிழ்ந்துதான் போகிறார், இதில் வேடிக்கை என்ன தெரியுமா?? நாங்களும் அயல்வீடும் உறவுக்கார என்பதுதான், இப்படி ஆயிர கணக்கான காரனங்களை என்னால் மத மாற்றத்துக்கு சாதகமாய் சொல்ல முடியும்; வேண்டாமே வீண்வாதம் :

    மாயா சொன்னது போல் அன்று தறுதலைகள் இனவாதம் பேசிய போது அமைகாத்ததன் விளைவே இன்று முள்ளிவாய்க்கால்; அதையும் விட அன்று நாம் கிணத்து தவளைகள்தான்; இன்று சர்வதேச நடைமுறை படித்தவர்கள் அல்ல அனுபவபட்டவர்கள் என்பதை கருத்தில் எடுக்கவும்;

    துரை சொன்னது போல் தவறுவிட்ட பாதிரியோ அல்லது ஜயரையோ விமர்சிப்போம் அதுகாய் அனைவரையும் கேலி பேசுவது நாகரிகமான செயலல்ல;

    கட்டுரையாளர் தனக்கு தெரிந்த்வைகளைதானே எழுதமுடியும்; அதுக்கு சரியான விளக்கம் கொடுக்க நூற்றுகணக்கான பின்னோட்டகாரர் உள்ளனர், ஆனால் உங்கள் தவறான எழுத்தால் கட்டுரையாளர் வந்த நோக்கம் மாறி வீண்வாதத்தில் நிற்க்கிறோம்; ஒரு நண்பர் கூட சொன்னார் நன்றி வணக்கம் சொல்லுங்கப்பா என; காரனம் இதன் விளைவு புரிகிறது, உங்கள் நோக்கம் எதுவோ எனக்கு தெரியவில்லை, ஆனால் எனது நோக்கம் உங்கள் மீது குறை கண்டுபிடிப்பதல்ல; உங்கள் தவறை சுட்டி காட்டினேன்;

    Reply
  • rohan
    rohan

    “எனது பதிலில் 1500 பாடசாலைகள் என்பது வடகிழக்கில் இருந்த “தமிழ்” பாடசாலைகள் என்பதாகும். அந்த வரியில் தவறிப்போன வாசகம் “வடகிழக்கு” என்பதே. சுட்டிக் காட்டியமைக்கு நன்றி.” என்று தொடர்கிறார் நந்தா.

    தரம் 1ஏ-பி; தரம் 1C, தரம் 2; தரம் 3, மொத்தம் என்ற அடிப்படையில் பார்க்குமிடத்து, 2006இல் வடக்கும் கிழக்கும் பாடசாலைகள் எண்ணிக்கையில் அதிக வேறுபாட்டில் இருக்கவில்லை.
    வடக்கு 62 118 313 399 892
    கிழக்கு 55 160 362 394 971
    கிழக்கில் கூடிய பாடசாலைகள் இருந்துள்ளன. அங்கு இந்து, முஸ்லிம், சிங்களப் பாடசாலைகள் தனித் தனியாகவும் சிறிய அளவிலும் இருந்தமை அதற்கான காரணங்களாக இருக்கலாம்.

    1948இல் சுதந்திரம் பெற முன்னரே 1931இலிருந்து டொனமூர் ஆணைக்குழுவின் பரிந்துரையைப் பின்பற்றி சி டபிள்யு டபிள்யு கன்னங்கரவின் முன்னெடுப்பில் நடாத்தப்பட்ட கல்விப் புரட்சி தான் இலங்கையில் பாடசாலைகள் பரவலாக முளைத்தமைக்குக் காரணம். 1935இலேயே பாடசாலையில் மதிய உணவு தரப்பட வழி செய்த மகான் அவர். பல மத்திய மகா வித்தியாலயங்களும் கன்னங்கரவின் உபயம் தான். இலவசக் கல்வித் திட்டம் கூட அவரது கொடை தான். அந்தத் தீர்மானம் டட்லி செனநாயக்க, ஜே ஆர் ஜெயவர்த்தன, ஒலிவர் குணதிலக்க, என் எம் பெரேரா போன்றோர் ஆதரவில் தான் நிறைவேறியது! 1947இல் இவர் தேர்தலில் தோற்றாலும், இவர் வைத்த பொறி, மத்திய தர மற்றும் கீழ்தட்டு மக்களின் கல்வி ஆர்வமும் சேரக் கனலாகப் படர்ந்தது.

    சைவக் கல்விமான்களும் கிராமத்து வள்ளல்களும் ஆரம்பித்த நூற்றுக்கணக்கான தமிழ் – சைவப் பாடசாலைகளையும் மறக்க முடியாது.
    ஒரு முக்கியமான புள்ளிவிபரத்தையும் தர விரும்புகிறேன். அரச பாடசாலைகள் எண்ணிக்கை என்று பார்த்தால், அவை இலங்கை முழுவதும் பின்வருமாறு இருந்திருக்கின்றன:
    1950 – 3,188;
    1960 – 4,394;
    1971 – 8,585;
    1981 – 9,521;
    1991 – 9,998;
    2002 – 9,826;
    2006 – 9,714
    http://www.cecomm.org.uk/attachments/Aturupane%20paper%20final%20Jan%2011%2009%202009.pdf

    1950 இலிருந்து 1960க்குள் நாடு முழுவதும் 1200 பாடசாலைகளே கூடியிருந்திருக்கின்றன.அடுத்த 11 வருடங்களில் கூடிய 4200 பாடசாலைகள் பற்றியும் பெருமைப்பட ஏதுமில்லை.

    1960கள் பற்றிக் குறிப்பிடும் ஓர் ஆய்வாளர் அந்தத் தசாப்தத்தில் கல்வி சார்ந்த துறைகளில் வளங்கள் அதிகம் செறிவாகப்படாமைக்கு ஒரு கொளகை அடிப்படையே காரணம் என்று வாதிடுகிறார். கிட்டத்தட்ட எல்லாத் தனியார் கல்விக் கூடங்களும் அரச சுவீகாரம் செய்யப்பட்டமையும் ஒரு புதிய தனியார் கல்விக் கூடமும் அனுமதிக்கப்படாமையையும் அவர் சுட்டிக் காட்டுகிறார். மேற்சொன்ன 4200 பாடசாலைகளில் பல சுவீகாரம் செய்யப்பட்டவையேயாகும்.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    இவ்வாறான சந்தர்ப்பத்தில் நீங்கள் செய்திருக்க வேண்டியது..
    1) நீங்கள் இருக்கும் நாட்டில் ‘மதச் சுதந்திர’ சட்டத்தின் கீழ் அல்லது ரெஸ்பாசிங் (அத்துமீறி பிரவேசித்தலுக்கெதிரான) வழக்குத்
    தொடர்ந்திருக்கலாம்.
    2) ‘பலாத்காரமாக’ ஏடுதொடக்கப்பட்ட குழந்தையின் தாய்/தந்தையரை அழைத்துச் சென்று உள்ளுர் பொலிசில் புகார் கொடுத்திருக்கலாம்.
    3) அவ்வாறு நடந்த கோவிலின் முன்னால் ஒரு போராட்டம் நடத்தி இருக்கலாம்.
    இதில் எதனைச் செய்தீர்கள்?

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    எல்லாம் சரி நந்தா,
    புலி ‘பாதிரி’ சேவியரை போட்டுத்தள்லவில்லை, மாட்டினை போட்டுத்தள்ளவில்லை ஆனால் ’பனி’ தியாகராசாவை போட்டுத்தள்ளியது என ‘பாதிரி/புலி’ லொஜிக் சொல்லும் நீங்கள் ஏன் அல்பிரட் துரையப்பா பற்றி வாய்திரக்கிறீர்களில்லை? இவ்வளவும் கதைக்கும் நீங்கள் இந்த ‘பாதிரி’க்கு எதிராக எத்தனை போராட்டம் நடத்தி இருப்பீர்கள்?

    //…வட்டுக்கோட்டை செமினரி அமெரிக்க மிசனரிகளால் தொடங்கப்பட்டது. கதிகாமரின் குடும்பத்தவர்களால் அல்ல. //
    தவறு என்னுடையது. நான் சொல்ல விழைந்தது கதிர்காமர் குடும்பத்தினரே அந்த மிசனரி யாழில் காலூன்ற எல்லா வசதிகளையும் கொடுத்து தமது குடும்பத்தினரையும் மதம் மாற்றினர். யாழ்ப்பானத்தில் முதன்முதலாக கிறஸ்தவர்களாக மாறிய குடும்பங்களில் ஒன்று இவர்களது. மேலும் இன்றும் யாழ் அதிமேற்ரிராணியர் (பிஷப்) அணியும் கிரீடம் இவர்களின் காலத்தில் செய்ய்யப்பட்டது எனவும் முதலாவது ‘பாதிரி’ அமர்ந்த கதிரைக்கு போடப்பட்ட பட்டு துணி கதிர்காமர் குடும்ப ‘திருமண’ கூறைச்சேலை எனவும் அறிந்தேன்.

    //…கதிர்காமர் கத்தோலிக்க ஆள் இல்லை. ஆனால் பல முறை புலிகளால் எச்சரிக்கப்பட்டவர். ஆனால் “கொலை” செய்யப்பட்ட இந்துக்களுக்கு அப்படி எச்சரிக்கைகள் விடுக்கப்படுவதில்லை…// உங்கள் பிரச்சினை என்ன என இப்போது தான் விளங்குகிறது!

    Reply
  • NANTHA
    NANTHA

    சாந்தன்:
    நீங்கள் கூறிய விடயங்கள் செய்யப்பட்டன. அதன் பின்னரே பாதிரிகள் தற்போது “இந்து கோவில் பக்கம்” தலை காட்டுவதில்லை!

    அல்பிரட் துரையப்பா கொலை பற்றி சிலவாரங்களுக்கு முன்னர் எழுதியதாக ஞாபகம். ஆயினும் மீண்டும் குறிப்பிட விரும்பிகிறேன். துரையப்பாவின் கொலைக்குப் பின்னாலும் இந்த கத்தோலிக்க பாதிரிகள் இருந்துள்ளனர் என்று தற்போது புரிகிறது. கத்தோலிக்க துரையப்பா இந்து கோவிலுக்கு போனது “பாதிரிகளின்” அகராதியில் மன்னிக்க முடியாத “தெய்வக் குற்றம்”. கத்தோலிக்கர்களின் “INQUISITION” பற்றி படித்தால் புரியும்.

    கல்வி கடவுளான சரஸ்வதி சிலையை யாழ் நூலகத்துக்கு முன்னர் வைக்க துரையப்பா முயன்ற போது அதற்கு “எதிர்ப்பு” கத்தோலிக்க பாதிரிகளிடமிருந்துதான் வந்தது. சரஸ்வதியின் நாலு கைகளில் இரண்டை உடைத்து தற்போதுள்ள சிலையை வைக்க துரையப்பா நிர்பந்திக்கப்பட்டார். இது துரையப்பா அவர்கள் எனக்கும் நண்பர்களுக்கும் சொன்ன கதை.

    Reply
  • NANTHA
    NANTHA

    பல்லி:
    இந்துக் கோவில்களுக்குள் மற்றவர்கள் வரக் கூடாது என்று சட்டங்கள் எதுவும் கிடையாது. ஆனால் இந்து குருக்களின் ” வேலைகளை” கத்தோலிக்க பாதிரிகள் எப்படிச் செய்யலாம் என்று கூறினால் நல்லது.

    பாதிரிகளின் கோவிலுக்குள் இந்து ஐயர்மார் போய் “பூசை” பண்ணலாம் என்று சொல்ல வருகிறீர்களா?

    நேபாளத்தில் மாத்திரமல்ல. கேரளாவிலும் பிரபலமான சில இந்துக் கோவில்களுக்குள் வேற்று மதத்தவர்கள் போக முடியாது.

    ஏடு தொடக்குவது இந்துக்கள் மாத்திரம் செய்யும் ஒரு காரியம். தனிப்பட்ட மனிதர்களின் செயல்பாடு அல்ல.

    Reply
  • palli
    palli

    //ஏடு தொடக்குவது இந்துக்கள் மாத்திரம் செய்யும் ஒரு காரியம். தனிப்பட்ட மனிதர்களின் செயல்பாடு அல்ல.// அப்படி நந்தாவுக்கு யார் சொன்னது,

    //ஆனால் இந்து குருக்களின் ” வேலைகளை” கத்தோலிக்க பாதிரிகள் எப்படிச் செய்யலாம் என்று கூறினால் நல்லது.
    இதுக்கான முடிவை எடுப்பது குழந்தைகளின் பெற்றோர் வாத்தி செய்ய வேண்டியதை குருக்கள் செய்யும் போது பாதிரியார் செய்தால் என்ன தப்பு,

    //பாதிரிகளின் கோவிலுக்குள் இந்து ஐயர்மார் போய் “பூசை” பண்ணலாம் என்று சொல்ல வருகிறீர்களா?
    தப்பில்லை; ஆனால் பாதிரியார் ஆவதுக்கு படிக்கவேண்டும் என சொல்லுகிறார்கள், அதுக்கு எமது ஜயர் சம்மதம் சொல்லுவார்களா?? முயற்ச்சிக்கலாம் தப்பில்லை;

    //கேரளாவிலும் பிரபலமான சில இந்துக் கோவில்களுக்குள் வேற்று மதத்தவர்கள் போக முடியாது.// தகவலுக்கு நன்றி; ஆனால் கத்தோலிக்க கோவிலுக்குள் யாரும் போகலாம் என நினைக்கிறேன்;

    //கத்தோலிக்க துரையப்பா இந்து கோவிலுக்கு போனது “பாதிரிகளின்” அகராதியில் மன்னிக்க முடியாத “தெய்வக் குற்றம்”. //
    அப்போ துரையப்பாவை போட்டுதள்ளியது பாதிரிகள்தானா?? இந்த புலிகள் தலைவர்தான் போட்டதாய் பொய் சொல்லுகினம்; கவனிக்கவும்;

    //கல்வி கடவுளான சரஸ்வதி சிலையை யாழ் நூலகத்துக்கு முன்னர் வைக்க துரையப்பா முயன்ற போது //
    கல்வி கடவுளை துரையப்பா வைப்பது நந்தாவுக்கு மகிழ்ச்சி, ஆனால் கல்விக்கான ஆரம்பத்தை ஒரு பாதிரி சொன்னது அதே நந்தாவுக்கு கடுப்பு,

    எது எப்படியோ இந்த வாதத்துக்கு பல்லி நன்றி வணக்கம் சொல்லுகிறேன், அதையே தேசமும் விரும்புகிறது??

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //…கல்வி கடவுளான சரஸ்வதி சிலையை யாழ் நூலகத்துக்கு முன்னர் வைக்க துரையப்பா முயன்ற போது //

    உங்கள் வாதப்படி ‘வந்தான் வரத்தான் நாசி வத்திக்கான் கதோலிக்க பாதிரி’ அங்கத்தினன் ’அல்பிரட்’ எப்படி ‘இந்து’ சரஸ்வதி சிலையை வைக்க முடியும்?
    கல்வித்தெய்வமாம் கலைவாணி இந்து குழந்தையின் நாவில் எழுதுவதாக சொல்லப்படும் ஏடுதொடக்கலையே ஒரு பாதிரி செய்வது அடாத்து எனச் சொல்லும் நீங்கள் எவ்வாறு அக்கலைவாணியின் சிலையை வைக்க ஒரு ‘அல்பிரட்’ முன்னின்று முயல முடியும்?
    அந்த நூலகம் அமைத்து முடிக்க முன்னின்று உழைத்தவர் ஐரிஷ் ’பாதிரி’ வணக்கத்துக்குரிய லோங் அடிகளார் என்பது உங்களுக்குத் தெரியுமா? நூலக வளாகத்தில் ஒரு ‘பாதிரி’ சிலை இருப்பது தெரியுமா? அவர் வேறுயாருமல்ல பாதிரி லோங் அவர்களின் சிலையே! இவர் யாழ் புனித பத்திரிசியர் கல்லூரி தலைவர் ஆக இருந்தார். நூலகம் எரிந்த செய்தி கேட்டு அவுஸ்திரேலியாவில் மாரடைப்பு வந்து காலமானார்!

    //….ஏடு தொடக்குவது இந்துக்கள் மாத்திரம் செய்யும் ஒரு காரியம். தனிப்பட்ட மனிதர்களின் செயல்பாடு அல்ல…..//

    பாபர் மசூதி இடிப்பதில் முன்னின்று ’உழைத்த’ குஜராத்தி அமைப்பொன்றின் சரஸ்வதி பூசைக்கு (நவ்ராத்ரி என சொல்லப்படும்) சென்றிருந்தேன். சென்ற காரியம் திருப்திகரமாக அமைந்தது. கோலாட்டம் நன்றாக ஆடினர். ராமர் கோவில் கட்ட பணத்தை அள்ளி இறைத்தனர். அட்டகாச உணவு வழங்கினர். ஆனால் ‘ஏடுதொடக்கல்’ இல்லவே இல்லை. அதுபற்றிக் கேட்டபோது முழித்தனர்! தமக்கு இது புதிய விடயம் என்றனர்.

    Reply
  • Vengai
    Vengai

    நந்தா;பல்லி!
    கிறீஸ்தவர்கள் என்றும் இந்துக்களை இலகுவாக மதம் மாற்ற முயல்பவர்கள். காங்கேசன்துரையில் உள்ள தேவாலயத்தில் ஒருமுறை பாதிரி இந்துக்கள்களையும் அவர்களின் திருப்பலிபூசைக்கு அழைத்து யேசுவுக்கு தீபம்காட்டி பூப்போட்டுப் பூசை செய்தார். இது என்னத்தைச் சொல்கிறது? இந்துக்களை தமது தேவாலயத்துக்கும் தமதுமதத்துக்கும் இழுத்துச் செல்கிறது அல்லவா? இது அழைப்பில்லை வெறும் சதியே. நேபாளம் மன்னராட்சி முடிந்து திறந்து விடப்பட்டபோது 81 கிறீஸ்தவ மிசன்கள் அங்கு பணத்துடன் போய் நின்றார்கள் தவித்த முயல் அடிப்பதற்கு. உலகில் இறுதியாக இருந்த ஒரு இந்து மன்னராட்சி நேபாளத்திலேயே இருந்தது. இதை அழிப்பதற்காகக் கிறீஸ்தவ மேற்கு மாவேயிஸ்டுக்களுடன் கைபோர்த்து நேபாளத்தை ஜனநாயகம் என்று உடைத்துச் சுக்கு நூறாக்கியது. உலகிலோ ஆபத்தானவர்கள் அதாவது உயிரிருக்க உதிரம் உறிஞ்சுபவர்கள் கிறீஸ்தவர்களே. நந்தா தொடர்ந்தெழுதுங்கள் உங்களது கிறீஸ்தவம் பற்றிய கருந்துக்களை நான் என்றும் ஆதரிக்கிறேன்.

    Reply
  • DEMOCRACY
    DEMOCRACY

    //…கதிர்காமர் கத்தோலிக்க ஆள் இல்லை. ஆனால் பல முறை புலிகளால் எச்சரிக்கப்பட்டவர். ஆனால் “கொலை” செய்யப்பட்ட இந்துக்களுக்கு அப்படி எச்சரிக்கைகள் விடுக்கப்படுவதில்லை…// உங்கள் பிரச்சினை என்ன என இப்போது தான் விளங்குகிறது!/-சாந்தன்.
    இங்கு “கத்தோலிக்க தீவிரவாதம்”, “இந்து தீவிரவாதம்” என்று வீங்குகிறது. இந்த “வீக்கம்”, இலங்கைத்தமிழரின் விரலுக்கு தகுந்ததல்ல!. இந்தியா என்பது, பல கோணங்களில் செயல்படும் ஒரு “யானை”. அதை எப்படி சமாளிப்பது என்று இந்தியர்களே குழம்பிப் போய் உள்ளனர். இதில் நீங்கள் எலி விளையாட்டு விளையாடி, கடந்த காலங்களில் மதம் பிடிக்க வைத்ததன் விளைவுகளை நான் சொல்ல தேவையில்லை!. மதர் தெரஸா, மகாத்மா காந்தி, மன்மோகன் சிங், போன்ற “பால் குடிக்காத பாப்பா” முகமூடிகளைப் போட்டு, கிள்ளி விளையாடுவது, “இந்தியாவின் விரலுக்கு தகுந்த வீக்கம்” தேவை என்பதை புலப்படுத்துகிறது!.

    பொருளாதர “பிரஸ்பெக்டிவில்” பார்த்தோமென்றால், தற்போதைய “உலகநெருக்கடி” வருங்காலத்தில் பல மாற்றங்களை நிகழ்த்த உள்ளது!. “இந்துத்துவம்” என்பது மதம் அல்ல!. “ஓபாமா” என்ற முகமூடியை போட்டு அமெரிக்கா சில காய்களை தன்னுடைய “கிருஸ்தவ கன்சர்வேட்டிஸத்துக்கு” ஆதரவாக நகர்த்துகிறது. இதில் முன்பு முரண்பட்ட, “ஐரோப்பிய யூனியன்” தோளில் கைப்போட்டு தன் பிரச்சனையை சாதிக்கிறது. “ஆப்கானிஸ்தானத்திலிருந்து” அமெரிக்கா வெளியேறுகிறது. ஆனால் “சீனாவுக்கு எதிராக” செக் வைக்கப்படுகிறது. ஜெர்மானிய – பிரஞ்சு அரசாங்க தொலைக்காட்சிகளின் இயக்குனராக இருந்த 89 வயதான….காஷ்மீர்.. அஜர்பெய்ஜான், துருக்மேனிஸ்தான்… இதுவே, “லக்ஸர் இ தாய்பாவின்” கொள்கையாகவும் இருக்கிறது. இதில் ஆந்திராவின் “ஹைதராபாத் நிஜாமும்” அடங்கும்!. மலேஷியாவில் சீனாவுக்கு அடுத்தபடியாக பொருளாதார முதலீடு செய்திருப்பது ஜெர்மனிதான். இந்தோனேஷிவாவில் இறக்குமதி செய்யப்படும் ஒவ்வொரு “மெஷினும்” ஜெர்மனியிலிருந்தே ஏற்றுமதி செய்யப்படுகிறது. “அமெரிக்கா” மெது, மெதுவாக தன் பிடியை இப் பகுதிகளில் இழந்து வருகிறது. “கனடாவும்” அமெரிக்க பொருளாதாரத்தை நம்பியே இருக்கிறது. இதைத்தான்,”புஷ்ஷின்” அமைச்சில் இருந்த “டொனால்ட் ராம்ஸ்ஃபெல்ட்” “பழைய ஐரோப்பா” என்று கூறினார்!. இது என்னுடைய விளக்கத்தைவிட சிக்கலானது!.

    “தமிழீழம்” என்று கேட்டது, 25,000 ச.கிலோமீட்டர்தான், இலங்கை முழுக்க 72,000 ச.கி.மீ. என்று நினைக்கிறேன், ஆனால், இந்திய உளவுத்துறைப் படி, “மாவோயிஸ்டுகள்” என்று அறியப்படும் நக்ஸல் பாரிகள் தங்கள் கட்டுப் பாட்டுக்குள் வைத்திருப்பது, 90,000 சதுர கிலோமீட்டர்!. இந்திய மார்க்ஸிட் கம்யூனிஸ்ட் கட்சியின் இவர்களுடனான ஒருங்கிணைப்பு, யாவரும் அறிந்ததே!. தமிழகத்தில் தற்போது நடைபெற்ற, கல்லூரி தேர்தல்களில், எப்போதுமில்லாத அளவுக்கு, இவர்களின் மாணவர் அமைப்பு (எஸ்.எஃப்.ஐ)அனைத்திலும் வெற்றிபெற்று உள்ளது. அதனால்தான் “திராவிடம்” என்று தவளைப் போல் கத்தினால், மேற்குலகை உசுப்பேத்தும், சீன உலகு பக்கமும் நகர முடியாது. “தமிழர் என்ற அரசியல்” சரியான அரசியல் கையாள்கை இல்லததால்,தர்ம அடி வாங்கியதுதான் முள்ளிய வாய்க்கால்!. தற்போது இப்பகுதியில் ஏற்ப்பட்டிருக்கும் “அதிகபட்ச குழப்பங்களினால்”, “இந்திய போக்குகளை” “இந்துத்துவம்” என்பதாக பற்றிப் பிடிக்கப் பார்க்கிறார்கள்!. மற்றப்படி இந்தியாவின் பிரதான போக்குகளில் தமிழர்களின் நிலை கவலைக் கிடமாகவே இருக்கிறது. முள்ளின் மீது போட்ட சேலை போலவே செயல்பட வேண்டியுள்ளது.

    Reply
  • NANTHA
    NANTHA

    //ஏடு தொடக்குவது இந்துக்கள் மாத்திரம் செய்யும் ஒரு காரியம். தனிப்பட்ட மனிதர்களின் செயல்பாடு அல்ல.// அப்படி நந்தாவுக்கு யார் சொன்னது//
    இது நல்ல கூத்து. யார் சொல்ல வேண்டும்? ஏடு தொடக்குவது என்ன என்பதையும் அதனை மற்ற மதத்தவர்கள் செய்கிறார்களா என்றும் பல்லி விசாரித்துவிட்டு எழுதினால் நல்லது!

    //ஆனால் இந்து குருக்களின் ” வேலைகளை” கத்தோலிக்க பாதிரிகள் எப்படிச் செய்யலாம் என்று கூறினால் நல்லது இதுக்கான முடிவை எடுப்பது குழந்தைகளின் பெற்றோர் வாத்தி செய்ய வேண்டியதை குருக்கள் செய்யும் போது பாதிரியார் செய்தால் என்ன தப்பு//
    பாதிரி தன்னுடைய கோவிலில் செய்தால் பிரச்சனை கிடையாது. பாதிரிகள் அதனை தங்கள் கோவிலில் செய்வார்களா? இந்துக் கோவிலுள் பாதிரி அதனைச் செய்ய முடியாது. அவ்வளவுதான்!

    //ஆனால் பாதிரியார் ஆவதுக்கு படிக்கவேண்டும் என சொல்லுகிறார்கள், / பாதிரிகள் இந்துக்களின் வழிமுறைகளைப் படித்துவிட்டு இந்துக்களாக மாறி ஏடு துவக்கினார்களோ? இந்து மதம் பற்றி “துவேசம்” கிளப்பும் பாதிரிகள் இந்து கோவிலுனுள் புலி கிரிமினல்களோடு புகுந்து “இந்து” குருமார்” செய்வதை செய்ய புறப்பட்டவர்கள்! இனி நல்லூர் கந்தசாமி கோவிலுனுள் “தோமா சவுந்தர நாயகம்” பூசை பண்ண வேண்டும் என்றும் சொல்லுங்கள். அதனை பாதிரிகள் அங்கு செய்து பார்க்கட்டும்!

    பாதிரிகளின் கூலியான பிரபாகரன்தான் துரையப்பாவை கொன்றவன்.

    //கல்வி கடவுளை துரையப்பா வைப்பது நந்தாவுக்கு மகிழ்ச்சி, ஆனால் கல்விக்கான ஆரம்பத்தை ஒரு பாதிரி சொன்னது அதே நந்தாவுக்கு கடுப்பு//
    கல்விக்கான ஆரம்பத்தை பாதிரி தன்னுடைய கோவிலில் செய்ய என் முயற்சிக்கவில்லை? இனிமேலாவது அப்படி ஒரு” பாரம்பரியத்தை பாதிரிகள் தங்கள் கோவில்களில் செய்தால் நல்லது. புலி, தமிழ் என்று பாதிரிகள் இந்து கோவில்களுள் புகுந்தால் இனி “உதை” விழும் என்பதை தெரிந்து கொண்டால் நல்லது.

    இந்து கோவில் என்பது இந்துக்களுக்கே உரியது என்பதையும், இந்து மத வழிபாடுகளுக்கும் உரியது என்ற சாதாரண உண்மை தெரியாமல் கதைப்பது மகா கேவலம். பாதிரிகளுக்கு சிலர் கூலியாட்ளாக இருந்து சேவகம் செய்ய ஆசைப்படலாம். வருமானமும் கிடைக்கும். ஆனால் பாதிரிகளின் இந்த இந்துக்களை அவமதிக்கும் கூத்துக்கள் இனிமேல் எங்கும் நடக்காது என்று இந்துக்களுக்கு தெரியும். அப்படி மீண்டும் முயற்சித்தால் அதன் விளைவுகள் பயங்கரமாகவும் இருக்கும்!

    Reply
  • thurai
    thurai

    இந்து மதத்திற்காக உயிரைவிடும் நந்தாவிடம் ஓர் கேள்வி. புலத்தில் வாழும் தமிழர்கள் வாழும் நல்வாழ்வு இந்து மதத்தினாலா அல்லது இந்துக்களின் திறமையினாலா?

    புலத்தில் தலைமுறை தலைமுறையாக வாழும் கிறிஸ்தவர்களே இவ்ர்களின் நல்வாழ்விற்கு வழிவகுத்தவர்கள் என்பதை ஏற்கமாட்டீரா?

    துரை

    Reply
  • மாயா
    மாயா

    இங்கே சிலர் , சில குழப்ப நிலையில் இருப்பதை உணர முடிகிறது. அது சரியோ , தவறோ எனக்குத் தெரியாது. ஒரு விளக்கத்துக்காக நான் எழுத முனைகிறேன்.

    இங்கே பலர் கிறிஸ்தவராக மத மாற்றம் எனும் பதத்தை பாவிக்கிறார்கள். கிறிஸ்தவ மதத்தில் பல பிரிவுகள் , அதாவது செக்ட்கள் உண்டு. பெரும்பான்மையாக இருப்பது கத்தோலிக்க மற்றும் புரொட்டஸ்தாந்துகள். ஏனையவர்கள் எண்ணிலடங்கா பிரிவுகளாக இருக்கிறார்கள். அதில் குறிப்பாக அவெங்கிலிஸ் , லண்டன் சேர்ச், யெகோவா, செல்வேசன் ஆமி,ஓர்த்தடொக்ஸ், பெந்தகோஸ்த் ………………( ஆலேலூயா) என ஏகப்பட்டவர்கள்.

    இங்கே ஒரு தெளிவு வரலாம்:
    http://www.askmehelpdesk.com/christianity/what-type-christian-you-59865.html

    கத்தோலிக்க – புரொட்டஸ்தாந்துகள் பெரும்பாலும் மத மாற்றம் செய்ய முயல்வது குறைவு. வேற்று ஒரு மதத்தவரை திருமணம் செய்யும் போது , அவர் தமது மதத்துக்கு மாற வேண்டும் என கட்பாடுகளை கொண்டிருந்தார்கள். இப்போது அது இல்லாமல் போய் , அடுத்தவர் , அவரது மத்திலேயே இருக்கலாம் என மாற்றம் பெற்றுள்ளது.

    குறிப்பாக அல்லேலுயா , செவண்டே அட்வென்டிஸ் மற்றும் யெகோவா போன்ற பிரிவுகளில் உள்ளோரே, மத மாற்ற முயற்சிகளில் பெரும்பாலும் ஈடுபடுகிறார்கள். இவர்களுக்கும் ரோமிலுள்ள பாப்பரசருக்கும் (போப்) எதுவித உடன்பாடுகளும் இல்லை. இவை குறித்த தெளிவில்லாமல் போப்பை நாசி என குறிப்பிடுகிறார்கள். நாசி என்போர் ஆரியர்கள். கிட்டலிரின் சின்னமே இந்துத்துவ நாசி சின்னமே. இந்துக்களும் ஆரிய வம்சத்தவராகவே இந்தியாவில் முதன்மை பெறுகிறார்கள். அடுத்தே ஏனையவர்கள்.

    இலங்கையில் மட்டுமல்ல புலம் பெயர் நாடுகளில் தமிழரை மதம் மாற்றுவோர் பெரும் பாலும் அல்லேலுயா , செவண்டே அட்வென்டிஸ் மற்றும் யெகோவா போன்ற பிரிவுகளில் உள்ளோராகவே காணப்படுகின்றனர். இவர்களது தொல்லை தாங்க முடியாதது. இவர்கள் கத்தோலிக்க மற்றும் ஏனையவர்களையே மத மாற்றம் செய்ய முயல்பவர்கள். இதில் இந்து சமயத்திலிருந்து மதம் மாறியவர்களோடு பேசித் தப்பவே முடியாது. ஒரு வரியை வைத்துக் கொண்டு ஒருநாள் முழுவதும் பேசுபவர்கள்.

    நான் ஒரு இந்துவாக இருந்தும், கல்வி கற்றது, கத்தோலிக்க பாடசாலையில் , தங்கியிருந்ததும் , கத்தோலிக்க விடுதியில். 6 வருடங்கள் கத்தோலிக்க விடுதியில் இருந்ததால் எனக்கு கிறிஸ்தவ சமயம் அத்துப்படி. என்னை எவரும் மதம் மாற்ற முயலவில்லை. நான் , இலங்கையில் வாழும் போது , பெளத்த நண்பர்களோடு , விகாரைகளுக்கு போவதுண்டு. அவர்களும் மதம் மாற சொன்னதில்லை. இஸ்லாமிய நண்பர்களோடு வாழ்ந்த போது , அவர்களோடு மதறசாக்களுக்கும், பள்ளி வாசலுக்கும் கூட சென்றதுண்டு. இவர்களும் , நீ ஒரு இஸ்லாமியரை புரிந்தவனாக வாழ்கிறாய் என்ற போதும் , என்னை மதம் மாறச் சொன்னதில்லை. அந்த தேவை எனக்கிருக்கவில்லை. சிலர் , தனது சுயநலங்களுக்காகவும், சாதித்துவ அடிமைத்தனத்திலிருந்து மேன்மை நிலை அடையவும் மதம் மாறியதை கண்ணுற்றுள்ளேன். யாரும், யாரையும் கழுத்தில் கத்தியை வைத்து மதம் மாறு என சொல்ல மாட்டார்கள். ( அப்படியான காலம் முன்னர் இருந்தது) இப்போது யாரும் அதை போலீசில் புகார் செய்யலாம். அல்லது வழக்குத் தொடுக்கலாம். இதை விட்டு தமது சுயநலனுக்காக மதம் மாறுவோரை வைத்துக் கொண்டு , மதம் மாற்றுகிறார்கள் என சொல்வது நம் பலவீனமே.

    எனவே கிறிஸ்தவ பிரிவுகள் குறித்த தெளிவோடு கருத்துகளை வைப்பது நம்மவரிடையே முரண்பாடுகள் ஏற்படுவதை தவிர்க்கும் என நினைக்கிறேன். தமிழ் பேசும் மக்கள் என பேசும் நாம் , நம்ககுள்ளும் மீண்டும் ஒரு சுனாமியை உருவாக்க வேண்டாமே?

    Reply
  • rohan
    rohan

    “உலகத்தில் இந்து கோவிலில் மற்றய மதகாரர் போககூடாது என எழுதபடாத சட்டம் நேபாலில் உள்ள ஒரு கோவிலில் மட்டும்தான் உண்டு”, என்று பல்லி எழுதியதைப் பார்த்தேன்.

    இத்தனை குருவாயூரப்பன் பாடல்களைப் பாடிய கே ஜே ஜேசுதாஸ் அக்கோயிலுக்குள் போய் வழிபட முடியவில்லை என்று எங்கோ படித்த நினைவு. பிரபலமாக இருந்ததால் வந்த தடை அது. இதுவே பக்கத்து வீட்டு ஜோசேப்பாக இருந்திருந்தால் யார் தடுத்திருப்பர்?

    Reply
  • thurai
    thurai

    //நந்தா தொடர்ந்தெழுதுங்கள் உங்களது கிறீஸ்தவம் பற்றிய கருந்துக்களை நான் என்றும் ஆதரிக்கிறேன்//வேங்கை
    //இந்துக்களை அவமதிக்கும் கூத்துக்கள் இனிமேல் எங்கும் நடக்காது என்று இந்துக்களுக்கு தெரியும். அப்படி மீண்டும் முயற்சித்தால் அதன் விளைவுகள் பயங்கரமாகவும் இருக்கும்//நந்தா

    இருவரும் உங்கள் கிறிஸ்தவத்திற்கு எதிரான கருத்துக்களை தமிழிலும் வேறு மொழிகளிலும் அச்சிட்டு, தனியாக வீதியில் நின்று பிரச்சாரம் செய்வீர்களா? பிரபாகரனின் ஆதரவாளர்கள் இணய்த்தளதில் கண்ட தமிழீழம் போல் தான் உங்கள் சிந்தனைகள். உசுப்பேத்தி உயிர்களைப் பலி கொடுப்பீர்களேயன்றி உருப்படியான செயல்கள் எதுவுமே நடக்காது. முடிவில் அழிவிற்கே வழி வகுப்பீர்கள்.

    மறக்கவேண்டாம் கிறிஸ்தவ அமைப்புகளிடமிருந்து பெற்ர உதவிப் பணத்திலேதான் புலத்தில் சில இந்துக் குடும்பங்கள் நன்மை பெற்ரன. தமிழ் பாடசாலைகளிற்கு இடம் இலவசமாகக் கொடுத்தவர்கழும் கிறிஸ்தவர்கல் தான்.

    இவர்கள் சமயம் என்னவென்று கேட்டு உதவி செய்யவில்லை. வாங்கும்போது வாய்மூடியும், வாங்கிமுடிந்து நல்லாக வந்ததும் நான் இந்து என்று சொல்லி, கொடுத்தவர்களை அவமதிப்பதும்தான் இந்துக்களின் பண்பா? இத்தகைய பண்புள்ளோர்கள் தாங்கள் தமிழ்ரென்று தங்களை உலகினிற்கு அடையாளம் காட்டலாமா?

    துரை

    Reply
  • palli
    palli

    // புலி, தமிழ் என்று பாதிரிகள் இந்து கோவில்களுள் புகுந்தால் இனி “உதை” விழும் //
    இதேபோல் துரை இந்துக்கள் யாரும் கத்தோலிக்க கோவிலுக்குள் வரகூடாது என சொன்னால் (சொல்லமாட்டார் அது வேறுவிடயம்)
    நந்தாவுக்கு இந்துக்களே தவனை முறையில் கல்லால் அடிப்பார்கள், இத்தனை தகுதி உடைய ஒருவர்தான் துரையப்பாவுடன் கலந்து பேசினாராம்; அப்படியாயின் இவரது வயது தெரிகிறது, அந்த வயதுக்கேற்ற எழுத்தா இந்த மதம்பிடித்த சொல்லாடல்;

    //இது நல்ல கூத்து. யார் சொல்ல வேண்டும்?//நானும் இந்துதான் எனக்கு தெரிய இந்து மதத்தில் நாம் மட்டும்தான் ஏடு சொல்ல வேண்டுமென (புலிகள் போராடியது) சொல்லியதாய் இல்லை; ஏடு என்பது கல்வியின் ஆரம்பம் அது யார் சொன்னால் என்ன பார்ராட்டலாம்; அதுவும் இந்து
    மதத்தின் (உங்க வாதபடி) கொள்கைகளை பின்பற்றுவதால் பெருமைபடலாம்; அதுக்கேன் அடிதடி உதயெல்லாம் இப்போ சொல்லுங்கள் நீங்களா? பாதிரிகளா?? புலிகள்.

    //பாதிரி தன்னுடைய கோவிலில்// கோவில் என்பது பொதுவுடமை; இதில் என்ன பாதிரியின் கோவில் ஜயரின் கோவில்;?? அதுசரி இந்து கோவிலில்
    இந்துக்கள் யாவருக்கும் ஏடு சொல்லி கொடுப்பார்களா?? அல்லது இந்துக்கள் அனைவரும் கோவிலுக்குள் போகலாமா?? உடம்பு முழுக்க சேற்றை வைத்து கொண்டு பக்கத்தில் நிற்ப்பவன் சேட்டில் மை இருக்கென வாதிடலாமா? இது இந்துக்கள் மீது இருக்கும் கடுப்பல்ல; இதுக்கு வக்காலத்து வாங்குவதாக அவர்களை திரும்பவும் படுகுழியில் தள்ள நினைப்பவர்களுக்கு புரிய வேண்டும்; நந்தா உதைப்பாராம் அதுக்கு வேங்கை உதவுவாராம்;

    மாயாவின் பின்னோட்டத்தை கவனிக்கவும் ,அவரைபோல் மதம் மாறாமல் கத்தோலிக்க கோவிலுக்கும் பாடசாலை, கல்லூரிக்கும் போய் வந்துள்ளனர், பலஆண்டு பளகியவர்கள் கூட இந்த மதம் பற்றி சிந்திக்காமல் நட்பாயும் அன்பாயும் சகோதரத்துடன் வாழும் போது; பாதிரி ஏடு சொல்லி போட்டார் இந்து பைபிளை தூக்கி போட்டாரென சொல்லாதேங்கோ; அப்படி தொடர்ந்தால் மக்கள் அழிவில்தான் முடியும் என மாயாபோல் ஒரு எச்செரிக்கையாக நட்புடன் சொல்லுகிறேன்;

    எமது சமூகத்துக்காக நாம்செய்ய வேண்டிய கடமைகள் பல உண்டு, அதுக்காக இந்த இனம் மதம் சாதி ஏழை என அடம்பிடிக்காமல் நல்லதை நினைப்போம் செயல்படுவோம்; இந்த மத பிரச்சனையால் பாதிக்கபட்ட குடும்பம் பலதை நான் அறிவேன்; மத பிரச்சனை தோன்றுமாயின் பல குடும்பங்கள்கூட சீர்க்ர்ட்டுவிடும் அபாயம் இருக்கு; எந்த ஒரு பயங்கரவாதத்துக்கும் ஒருவர் சிந்தனையில்தான் புள்ளி தோன்றும்; அந்த
    விடயத்தை கவனத்தில் நந்தா எடுப்பார் என நம்புவோமே;

    Reply
  • thurai
    thurai

    உலகில் சமாதனத்தை எவ்வளியில் நிலை நாட்டலாம் என்பதைப் பற்றியே உலகினில் அறிவில் சிறந்தோர் சிந்திக்கின்றனர். ஒவ்வொரு சமயமும் உலக சமாதானத்திற்கு எவ்வகையில் பங்கேற்கின்றதென்பதே உலகின் முன் நிற்கும் கேள்வியாகும்.

    இங்கு நடக்கும் விவாதத்தை உலகமறிந்தால் நாமெல்லோரும் தலை குனிய வேண்டியத்துதான்.

    துரை

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    //…பாதிரிகள் இந்து கோவிலுக்குள் புகுந்து நாட்டியமாடியது சரியா பிழையா என்று பதில் சொல்லுங்கள்!…//

    //மிகச்சரி. ஏனெனில் நீதியானதும் நியாயமானதுமாகும்.-சாந்தன்//

    சாந்தன்
    தயவுசெய்து இப்படியான பதில்களை இங்கே எழுதாதீர்கள். ஒரு இந்துக் குருக்கள் இந்துக் கோவிலில் செய்வதை ஒரு பாதிரி இந்துக் கோவிலில் செய்ய முடியுமென்று கூறும் உங்களால் ஒரு பாதிரியார் தேவாலயத்தில் செய்யும் பூசையை இந்துக் குருக்கள் சென்று செய்யலாம் என்று கூற முடியுமா??

    நீங்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர் என்பது எனக்குத் தெரியாது?? ஆனால் ஒரு இந்துவாக இருந்து, இந்துமதத்தைப் பற்றி அறியாமல் கருத்துக் கூறியிருந்தால், உங்களைப் பார்த்து பரிதாபப்படுகின்றேன். ஏடு தொடக்குதல் என்பது, சரஸ்வதி பூசை நிகழ்ச்சியை பலர் நவராத்திரியின் போது, வெவ்வேறு தினங்களில் கொண்டாடுவார்கள். ஆனால் அப்படி நடாத்தும் போது அன்று விஜயதசமியும் சேர்ந்து வந்தால்த் தான் ஏடு தொடக்குதல் மற்றும் ஏனைய கலை (நடனம், சங்கீதம், மிருதங்கம் போன்றன) வகுப்புகளிலும் புது மாணவர்களைச் சேர்த்து வகுப்புகளை ஆரம்பிப்பார்கள். இது தெரியாமல் ஏதோ வடஇந்தியர்கள் நடாத்திய நிகழ்வுக்குச் சென்றேன். அங்கு ஏடு தொடக்குதல் நடைபெறவில்லையென்று அடிப்படையே தெரியாமல் எழுதுகின்றீர்கள்.

    //உங்கள் வாதப்படி ‘வந்தான் வரத்தான் நாசி வத்திக்கான் கதோலிக்க பாதிரி’ அங்கத்தினன் ’அல்பிரட்’ எப்படி ‘இந்து’ சரஸ்வதி சிலையை வைக்க முடியும்? கல்வித்தெய்வமாம் கலைவாணி இந்து குழந்தையின் நாவில் எழுதுவதாக சொல்லப்படும் ஏடுதொடக்கலையே ஒரு பாதிரி செய்வது அடாத்து எனச் சொல்லும் நீங்கள் எவ்வாறு அக்கலைவாணியின் சிலையை வைக்க ஒரு ‘அல்பிரட்’ முன்னின்று முயல முடியும்?
    அந்த நூலகம் அமைத்து முடிக்க முன்னின்று உழைத்தவர் ஐரிஷ் ’பாதிரி’ வணக்கத்துக்குரிய லோங் அடிகளார் என்பது உங்களுக்குத் தெரியுமா? நூலக வளாகத்தில் ஒரு ‘பாதிரி’ சிலை இருப்பது தெரியுமா? அவர் வேறுயாருமல்ல பாதிரி லோங் அவர்களின் சிலையே! இவர் யாழ் புனித பத்திரிசியர் கல்லூரி தலைவர் ஆக இருந்தார். – சாந்தன்//

    இங்கே தனிப்பட்ட கத்தோலிக்க அல்பிரட் துரையப்பா அதுபற்றிச் சிந்திக்கவில்லை. யாழ் மேயராகவிருந்த அல்பிரட் துரையப்பா தான் அதனைச் சிந்தித்தார். அந்தப் பதவியிலிருப்பவர் ஒரு சமயத்தை அல்லது ஒரு இனத்தை மட்டும் அடையாளப்படுத்துபவரல்ல என்பது கூடவா தங்களுக்குத் தெரியாது. அங்கே அல்பிரட் துரையப்பா சிலை செய்யவோ அல்லது கொத்தனார் வேலையோ செய்யவில்லை. மாறாக மாநகரசபைக் கூட்டத்தில் அது பற்றிய தீர்மானம் மற்றும் நிதியொதுக்குதல் போன்றவற்றையே முன்னெடுத்தார்.

    மேலும் யாழ் நூலக உருவாக்கத்திற்கு அடிகோலியவர் நீங்கள் கூறியது போல் லோங் அடிகளார் தான். பின்பு அவருடன் ஏனையோரும் சேர்ந்து கூட்டாகச் செயற்பட்டுத் தான் தென்கிழக்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாக யாழ் நூலகம் உருவானது. லோங் அடிகளாரின் சிந்தனையையும் தமிழ்ப்பற்றையும் நினைவுகூரும் வகையையிலேயே அவரது திருவுருவச் சிலையும் நூலக வளாகத்தில் நிறுவப்பட்டது. அடிகளாரைப் போலவே தமிழ்ப்பற்றுக் கொண்ட இன்னொரு வெள்ளையர், தமிழின்பால் கொண்ட பற்றினால் தனது பெயரையே “தணிநாயகம் அடிகளார்” என மாற்றி இறுதிவரை தமிழ்த்தொண்டாற்றினார் என்பதும் உலகறிந்தது.

    Reply
  • Raj
    Raj

    நான் ஓர் கத்தோலிக்கன் என்பதனால் தான் நந்தாவுக்கெதிராக கருத்துச்சொல்ல முற்படவில்லை. மாயா/துரை/பல்லி போன்ரோரே உண்மையறிந்து எழுதியிருப்பது பாராட்டத்தக்கது. ஓங்குக உண்மை ஒற்றுமை. நன்றி.

    Reply
  • தமிழ்வாதம்
    தமிழ்வாதம்

    /அடிகளாரைப் போலவே தமிழ்ப்பற்றுக் கொண்ட இன்னொரு வெள்ளையர், தமிழின்பால் கொண்ட பற்றினால் தனது பெயரையே “தணிநாயகம் அடிகளார்” என மாற்றி இறுதிவரை தமிழ்த்தொண்டாற்றினார் என்பதும் உலகறிந்தது./ இதற்கு ஆதாரம் உண்டா?

    துரையப்பா கத்தோலிக்கர் இல்லை,
    தனிநாயகம் அடிகளார் வெள்ளையர் அல்ல.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //…ஒரு பாதிரியார் தேவாலயத்தில் செய்யும் பூசையை இந்துக் குருக்கள் சென்று செய்யலாம் என்று கூற முடியுமா??…//
    ஏன் முடியாது. அங்கே பூசை செய்வது பற்றி கற்பிக்க பள்ளிக்கூடங்கள் உண்டு. யாரும் அப்பள்ளிக்கூடங்களில் சேரலாம். சேர்ந்து ‘தியோலஜி’ சேட்டிபிக்கேற் வாங்கி சேர்ச்சில் பூசை செய்யலாம்! எனது நண்பன் ஒருவன் அறிவுக்கு கல்லூரியில் ‘தியோலஜி’ ஒரு பாடமாகப் படித்தான், அப்பப்போ சேர்ச்சில் எழுந்து பிரசங்கம் செய்வான். இத்தனைக்கும் அவன் ஒரு இந்து!
    ஆனால் இந்து சமயத்தில் தான் நீங்கள் படிக்கத்தேவையில்லை ‘பிராமணர்’ குடும்பத்தில் பிறத்தல் மட்டுமே குவாலிபிக்கேசன்!

    //…நீங்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர் என்பது எனக்குத் தெரியாது?? ஆனால் ஒரு இந்துவாக இருந்து, இந்துமதத்தைப் பற்றி அறியாமல் கருத்துக் கூறியிருந்தால், உங்களைப் பார்த்து பரிதாபப்படுகின்றேன்….//
    நான் ஒரு இந்து.
    அடுத்ததாக பரிதாபப்பட வேண்டியது உங்கள் கருத்தான “..ஆனால் அப்படி நடாத்தும் போது அன்று விஜயதசமியும் சேர்ந்து வந்தால்த் தான் ஏடு தொடக்குதல் மற்றும்…” என்பது.

    ஏடுதொடக்குதல்/வித்யாரம்பம் என்பது விஜதசமியில் மட்டுமே நடக்கும்!

    //….இது தெரியாமல் ஏதோ வடஇந்தியர்கள் நடாத்திய நிகழ்வுக்குச் சென்றேன். அங்கு ஏடு தொடக்குதல் நடைபெறவில்லையென்று அடிப்படையே தெரியாமல் எழுதுகின்றீர்கள்….// இவர்கள் ஏதோ வடஇந்தியர்கள் அல்ல ’இந்து’ குஜராத்தியினர். நந்தா சொல்வதுபோல ஏடுதொடக்குதல் எல்ல்லா இந்துக்களாலும் செய்யப்படுவதில்லை எனவே சொல்ல வந்தேன். அதுபோல மற்றைய மதத்தினரும் இப்போது இதனைச் செய்கின்றனர். அண்மையில் (இரு வருடங்களின் முன்னர் என நினைக்கிறேன்) இந்தியாவின் முதல் பள்ளிவசல் எனக்கருதப்படும் ஒரு பள்ளிவாசலில் விஜயதசமி அன்று ஏடுதொடக்கல் நிகழ்ந்தது. ஆதாரம் தேவை எனின் சொல்லுங்கள் இரு நாட்களில் தருகிறேன்!

    //…இங்கே தனிப்பட்ட கத்தோலிக்க அல்பிரட் துரையப்பா அதுபற்றிச் சிந்திக்கவில்லை. யாழ் மேயராகவிருந்த அல்பிரட் துரையப்பா தான் அதனைச் சிந்தித்தார். அந்தப் பதவியிலிருப்பவர் ஒரு சமயத்தை அல்லது ஒரு இனத்தை மட்டும் அடையாளப்படுத்துபவரல்ல என்பது கூடவா தங்களுக்குத் தெரியாது….//
    இதனை நீங்கள் சொல்ல வேண்டியது எனக்கல்ல. நந்தாவுக்கு.
    எல்லாக் கத்தோலிக்கரையும் தன்வசதிக்கேற்ப ‘பாதிரி’ ,’புலி’ பட்டம் கொடுத்தவர் அவரே. அவரின் லொஜிக் படியே எனது விவாதங்கள் அமைந்துள்ளன. மற்றையபடி எனக்கு யார் சரஸ்வதி சிலையை வைத்தால் யார் ஏடுதொடக்கினால் ெனக்கு எந்த் ஆட்சேபமுமில்லை!

    //..அடிகளாரைப் போலவே தமிழ்ப்பற்றுக் கொண்ட இன்னொரு வெள்ளையர், தமிழின்பால் கொண்ட பற்றினால் தனது பெயரையே “தணிநாயகம் அடிகளார்” என மாற்றி இறுதிவரை தமிழ்த்தொண்டாற்றினார் என்பதும் உலகறிந்தது..//
    என்ன வெள்ளையரா?’ அடிப்படை தெரியாமல் எழுதும் உங்களை நினைத்தால் பரிதாபம்தான் வருகிறது. தவத்திரு தனிநாயகம் அடிகளார் யாழ்ப்பானத்தில் உள்ல கரம்பொன் கிராமத்தில் நாகநாதன் என்ற இயற்பெயருடன் பிறந்து கிறிஸ்தவத்தை தழுவி சேவியர் ஸ்ரனிஸ்லாஸ் தனிநாயகம் என பெயர் மாற்றி ஊர்காவற்துறை சென்.அன்ரனிசிலும் யாழ் சென்.பற்றிக்சிலும் கல்விகற்றவர். பின்னர் கொழும்பில் உள்ல செமினரியில் தியோலஜி பயின்று இந்தியாவில் முதுமாணிப்பட்டமும் இங்கிலாந்தில் கலாநிதிப்பட்டமும் பெற்ரவர். இவரே ‘உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டின் உருவாக்கத்துக்கு வழிகோலினார். இதேபோன்ற பல விடயங்கள் உண்டு. எனக்கு இவை எவ்வாறு தெரியும்? 4ம் உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டில் ஸ்ரீலங்கா அரசு துப்பாக்கிச்சூடு நடத்தி 12 பேர் கொல்லப்பட்டபோது இவர் பற்றி அறிந்தேன்.

    பார்த்திபன் ஒரு தகவல்….
    கத்தோலிக்க வெள்ளையராக பிறந்து மிசனரி வேலைக்காக இந்தியா வந்து தமிழின்பால் கவரப்பட்டு தனது பெயரை தமிழில் மாற்றி தமிழ்த் தொண்டாற்றியவர் வீரமாமுனிவர் என்றழைக்கப்பட்ட இத்தாலிய ‘பாதிரி’ கொன்ஸ்ரன்ரைன் ஜோசப் பெஷி என்பவர். இவரே திருக்குறளை லத்தீனில் மொழிபெயர்த்தவரும் தமிழில் இலக்கணத்தை தொகுத்து ’தொன்னூல் விளக்கம்’ என வெளியிட்டவரும் ஆவர்.

    Reply
  • NANTHA
    NANTHA

    அல்பிரட் துரையப்பாவை கொலை செய்தவன் பிரபாகரன். கத்தோலிக்க பாதிரிகளின் கையாள். அதில் இன்றும் எனக்கு சந்தேகம் இல்லை.

    இங்கு பாதிரிகளுக்கு சார்பாக கதைப்பவர்கள் கத்தோலிக்கரின் “INQUISITION” பற்றி இன்னமும் மூச்சுக் காட்டாத மர்மம் புரிகிறது. அந்த முறையின்படி “கொலை செய்யலாம்” என்பதுதான் உண்மை. அல்பிரட் துரையப்பா இந்து கோவிலுக்கு போனது அவரின் உயிருக்கு கொள்ளி வைத்துள்ளது.

    இந்துக்கள் இன்னமும் அப்படி ஒரு கொள்ளி வைப்பை செய்ய முயலவில்லை. அது இந்துக்களின் நாகரீகம்.

    கத்தோலிக்கர்களால் “கத்தோலிக்க பாதிரி” இந்து கோவிலுக்குள் புலிக் கிரிமினல்களின் தைரியத்தில் புகுந்ததை “தப்பு” என்று” வாதிட முடியவில்லை. அதேநேரத்தில் தங்களை ” இந்து” என்று கூறுபவர்கள் ” கத்தோலிக்க பாதிரியின்” அடாவடித்தனம் சரியானது என்றும் வாதிட்டுள்ளனர். எனவே தமிழர்களுக்கு “போர்த்துகீசர்களின்” காலம் முடியவில்லை.

    Reply
  • NANTHA
    NANTHA

    VENGAI:
    இந்த இந்து மத துவேஷிகள் பிராமணர்களுக்கெதிராக கொடி தூக்குகிறார்கள். அடுத்ததாக இந்து மத பாரம்பரியங்கள் தெரியாது புரட்டல்களை அள்ளி விடுகிறார்கள். இந்து கோவில்களில் பிராமணர்கள் மட்டும்தான் பூசை பண்ணலாம் என்று சட்டம் என்கிறார்கள். மொத்தத்தில் கத்தோலிக்க/கிறிஸ்தவ பிரச்சாரத்தை அப்படியே திருப்பிச் சொல்கிறார்கள்.

    ஆயிரக்கணக்கான கோவில்களில் பிராமணர்கள் பூசைகள் பண்ணுவதில்லை என்ற விவகாரம் இவர்களுக்குத் தெரியாது.

    பிரபலமான கதிர்காமம், செல்வச்சந்நிதி முருகன் கோவில்களில் பிராமணர்கள் பூசை பண்ணுவது கிடையாது. இது ஆயிரக் கணக்கான வருடங்களாக நடை பெறுகிறது. வல்வெட்டித்துறை முத்துமாரியம்மன் கோவிலில் அதே நிலைதான். கிழக்கு மாகாணத்திலும் பல கோவில்களில் அதே முறைகள் பின்பற்றப்படுகின்றன.

    பிராமணர்கள் என்ற ஒரு இந்து மக்கள் பிரிவினரோடு “பாதிரிகள்” போர்க்கொடி தூக்குவது அவர்களை இல்லாமல் செய்தால் “இந்து மதத்தை” இலகுவாக அழித்துவிடலாம் என்ற எண்ணத்தினால் தானே ஒழிய வேறொன்றும் இல்லை!

    Reply
  • NANTHA
    NANTHA

    பாதிரி தனிநாயகத்தின் கதை வரும்போது ஒன்று மட்டும் புரிகிறது, தமிழுக்குள் புகுந்து “தமிழர்களை” மதமாற்றம் செய்வது இலகுவான காரியம் என்று வத்திக்கான் அப்போதே திட்டமிட்டுள்ளது என்ற தகவல் இப்போது தெளிவாகியுள்ளது. புலிகளோடு தமிழீழம் காண கத்தோலிக்க பாதிரிகள் புறப்பட்டது அந்த தகவலை ஊர்ஜிதம் செய்கிறது. வத்திக்கானுக்கு தெரியாமல் தனிநாயகம் “தமிழ்’ வளர்க்கப் புறப்பட்டார் என்று நம்ப முடியாது.

    வெள்ளையர்கள் காலத்தில் மத மாற்றம் என்ற ஒரு காரணத்துக்காகவே வந்து தமிழை பாதிரிகள் படித்தார்கள். அதன்மூலம் ஆட்சியிலிருந்த வெள்ளையர்களுக்கு “விசுவாசமான” ஒரு கூட்டத்தை உற்பத்தி செய்வதில் அந்த வெளிநாட்டுப் பாதிரிகள் வெள்ளையர்கள் கொடுத்த சம்பளத்தில் வேலை செய்தார்கள்.

    இந்திய இலங்கை சுதந்திரங்களின் பின்னர் ஒரு பரங்கி “முனியும்” இலங்கையிலும் இந்தியாவிலும் தமிழ் வளர்க்க வந்ததாகத் தெரியவில்லை.

    Reply
  • மாயா
    மாயா

    //இந்துக்கள் இன்னமும் அப்படி ஒரு கொள்ளி வைப்பை செய்ய முயலவில்லை. அது இந்துக்களின் நாகரீகம்.//

    மட்டக்களப்பில் தொழுது கொண்டிருந்த அப்பாவி இஸ்லாமியர்களை கொன்றது மற்றும் நத்தார் தினத்தில் ஜோசப் பராராஜசிங்கத்தை ஆலயத்துக்குள்ளேயே வைத்து படு கொலை செய்தது எந்த நாகரீகம்?

    Reply
  • Vengai
    Vengai

    மாயா:- அதே மட்டக்களப்பில்தான் இந்துக்களைக் கோவிலுக்குள் கொன்றார்கள். மட்டுமல்லாமல் மாட்டை வெட்டி அதன் இரத்தத்தை மூலஸ்தானத்தில் ஊற்றியவர்கள் முஸ்லீங்கள் என்பதையும் மறக்கக் கூடாது. மட்டக்களப்புக் காரைதீவில் என்ன நடந்தது என்பதை கொஞ்சம் விபரமாக விசாரியுங்கள். ஜோசப் என்பது தமிழ்பெயரல்ல தமிழிலும் சரியாக எழுதமுடியாது. இந்த ஜோசப்புவைச் சுட்டது ஒரு இந்து என்று எப்படி மாயவால் கூறமுடியும். ஏவியவன் இருக்க அம்பை நோவது பிழை. பிரபாகரன் சாகும் போது ஒரு கிறிஸ்தவனாகத்தான் செத்தான்.

    Reply
  • aras
    aras

    “மட்டக்களப்பில் தொழுது கொண்டிருந்த அப்பாவி இஸ்லாமியர்களை கொன்றது மற்றும் நத்தார் தினத்தில் ஜோசப் பராராஜசிங்கத்தை ஆலயத்துக்குள்ளேயே வைத்து படு கொலை செய்தது எந்த நாகரீகம்”

    எட்டு இந்து மத குருமாரை சுட்டு கொன்றவர் யார்?

    Reply
  • Vengai
    Vengai

    நந்தா;- ஒருவிசயததை சொல்ல மறந்து விட்டீர்கள்//மாட்டுப்பட்டியை “சுத்தம்” செய்வதும் “இந்து மத கிரியை” என்றுதான் கணக்கு போடுகிறீர்களோ தெரியவில்லை. // சரியை; கிரியை; யோகம்; ஞானம் எனும் வழிகளிலும் இறைவனை அடையலாம் என்பதை உலகத்துக்கு முதலில் கூறியவர்கள் மட்டுமல்ல செய்து காட்டியவர்களும் இந்துக்கள்தான். சரியைத் தொண்டால் உளவாரத்தொண்டு செய்து முத்தி பெற்றவர் அப்பர். மாட்டுத்தொழுவம் சுத்தமாக இருக்க வேண்டும் என்பது மட்டுமல்ல சூரியனுக்கு பொங்கிப்படைக்கும் தைப்பொங்கலுக்கு அடுத்தநாள் எமக்காக உழைத்த மாடுகளைக்கழுவி போதிய உணவிட்டு மாட்டுப் பொங்கல் பொங்குபவர்களும் இந்துக்கள் தான். மரத்தைக் கூட தெய்வமாக்கியவர்கள் இந்துக்கள் தான். உங்களுக்குத் தெரியுமாக ஏன் இந்துக்கள் மாட்டு இறைச்சி தின்னக் கூடாது என்று? முதலில் நாம் தாயிடம் பால் குடிக்கிறோம் மீதியான காலத்தை நிறை உணவான பாலையே அருந்துகிறோம் அப்படியானால் இந்தப்பசு இரண்டாவது தாய் அல்லவா. மனச்சாட்சியின் மதமாக நிற்பது இந்துமதம் என்பதை யாரும் மறக்கக் கூடாது. ஊரில் பால்கொடுத்தமாடு சாகும் வரை எம்மிடம் நின்றே சாகும். இந்தமத்தை அழிக்க வந்ததுதான் கிறீஸ்தவம். புத்தமத்துடன் ஒப்பிடும் போது கிறீஸ்தவம் தவிர்கப்பட வேண்டியதே. உலகில் இந்தக் கிறீஸ்தவர்கள்தான் உலகம் எங்கும் கொடிய ஆயுதங்களைக் கொண்டு ஓடித்திரிபவர்கள்

    Reply
  • Suman
    Suman

    சரி சாதியை மாற்றத்தான் தாழ்ந்த சாதியினர் கிறிஸ்தவத்துக்கு மாறினார்கள் என்றால் தமிழ்கிறிஸ்தவத்தில் சாதி இல்லையா. சாதி அடிபாட்டால் பல சேச்சுகள் மூடிக்கிடக்கிறது தெரியாதா? ஒரு இந்து கிறிஸ்தவப்பெண்ணையே ஆணையோ விரும்பினால் இந்து கிறிஸ்தவனாய் மாறினால் மட்டுமோ திருமணம் செய்து வைக்கப்படுகிறது; ஆனால் இந்துக் கோவில்களில் மதமாற்றத்தைப் பற்றியே கதைப்பதில்லை. எத்தனையோ வேற்றுமதத்தவர்களுக்கு இந்துக்கோவில்களில் திருமணம் இந்து முறைப்படி நடத்தி வைக்கப்படுகிறது. இதிலிருந்து கிறிஸ்தவத்தின் மதவெறி தெரியவில்லையா. காதலுக்கே மதவெறி பிடித்து நிற்கிறது கிறிஸ்தவம். இந்துமதம் மதமாக இருக்கிறதே தவிர மார்க்கமாக இல்லை.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //….இங்கு பாதிரிகளுக்கு சார்பாக கதைப்பவர்கள் கத்தோலிக்கரின் “INQUISITION” பற்றி இன்னமும் மூச்சுக் காட்டாத மர்மம் புரிகிறது…//
    கிறிஸ்தவத்தில் inqusition நடைபெற்றகாலம் 1184 – 1860 அதாவது 12ம் நூற்றாண்டில் இருந்து 19ம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை.
    ஆனால் தமிழ்நாட்டில் கி.பி 6ம் நூற்றாண்டில் இருந்து 8ம் நூற்றாண்டு வரையான காலத்தில் தோன்றி வளர்ந்ததே இன்று பக்தி இலக்கியமாக போற்ரப்படும் தேவார/திருவாசகம் இயற்றிய சம்பந்தர், அப்பர் போன்றோர் வாழ்ந்த காலம். இக்காலத்தில் அனல்வாதம், புனல்வாதம் புரிந்து கழுவேற்றி சமணரைக்கொன்ற முறை Inqusition போன்றதே.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    //…ஒரு பாதிரியார் தேவாலயத்தில் செய்யும் பூசையை இந்துக் குருக்கள் சென்று செய்யலாம் என்று கூற முடியுமா??…//
    //ஏன் முடியாது. அங்கே பூசை செய்வது பற்றி கற்பிக்க பள்ளிக்கூடங்கள் உண்டு. யாரும் அப்பள்ளிக்கூடங்களில் சேரலாம். சேர்ந்து ‘தியோலஜி’ சேட்டிபிக்கேற் வாங்கி சேர்ச்சில் பூசை செய்யலாம்! எனது நண்பன் ஒருவன் அறிவுக்கு கல்லூரியில் ‘தியோலஜி’ ஒரு பாடமாகப் படித்தான், அப்பப்போ சேர்ச்சில் எழுந்து பிரசங்கம் செய்வான். இத்தனைக்கும் அவன் ஒரு இந்து! ஆனால் இந்து சமயத்தில் தான் நீங்கள் படிக்கத்தேவையில்லை ‘பிராமணர்’ குடும்பத்தில் பிறத்தல் மட்டுமே குவாலிபிக்கேசன்! – சாந்தன் //

    நீங்கள் மீண்டும் தவறாகவே இந்து சமயத் தகவல்களைத் தருகின்றீர்கள். உண்மையில் பிராமணராகப் பிறந்தவர்களெல்லாம் குருக்களாக வர முடியாதென்பது தங்களுக்குத் தெரியாதா?? அவர்களும் முறைப்படி குருகுலவாசம் செய்து வேதங்களைக் கற்றுப் பாண்டித்தியம் பெற்றே குருக்களாக வர முடியும். பிராமணர் என்பதற்காக வேண்டுமாயின் இன்னொரு குருக்களுக்கு உதவியாக வந்து உதவிகளைச் செய்யலாமேயொழிய விசேடமாக திருவிழா உற்சவம் கும்பாபிசேகம் போன்றவற்றை முன்னின்று நடாத்த முடியாது. அதுபோல் பிராமணர் அல்லாதவர்கள் இலங்கையிலும் பூசைகளை தொண்டமானாறு செல்வச்சந்திதி மற்றும் கதிர்காமம் போன்றவற்றில் மந்திரம் சொல்லாது வாய் கட்டிப் பூசை செய்கின்றனர். அதுபற்றித் தாங்கள் அறியவில்லையோ??

    அடுத்தது விஜயதசமியும் போது தான் ஏடு தொடக்கப்படுவதாகவே தானே நானும் குறிப்பிட்டுள்ளேன். நவராத்திரியை அண்டித்தான் விஜயதசமி வருவதாவது தங்களுக்குத் தெரியுமா?? பலர் விஜயதசமியன்றே சரஸ்வதி பூசையை நடாத்தி அன்று ஏடு தொடக்குதலைச் செய்வார்கள். இதனையே நான் குறிப்பிட்டிருந்தேன். அது தங்களுக்குப் புரியவில்லையாயின் எனி தங்களுக்குத் தமிழ் வகுப்பா எடுக்க முடியும்??

    அதுபோல் ஏடு தொடக்குதலை இந்துக்கள் மட்டம் தான் செய்ய முடியுமென்று நான் எங்காவது எழுதியுள்ளேனா?? ஒரு இந்துக் கோவிலில் அதன் குருக்கள் மட்டுமே ஏடு தொடக்கலைச் செய்ய முடியுமென்று கூறினேன். பள்ளிவாசலில் ஏடு தொடக்க ஒரு குருக்களையோ அல்லது ஒரு பாதிரியாரையோ அனுமதிப்பார்களா?? பாதிரிகள் விரும்பினால் தேவாலயங்களில் ஏடு தொடக்குதலைச் செய்யட்டுமே, அதை யார் தடுக்கப் போகின்றார்கள்:::::::

    வீரமாமுனிவரைத் தான் மாறித் தவறாக தணிநாயகம் அடிகளார் என்று குறிப்பிட்டு விட்டேன். அது எனது தவறு தான்.

    Reply
  • ஜெயராஜா
    ஜெயராஜா

    நந்தா அவர்களே, உங்கள் வயதின் முதிர்ச்சியும் அறிவின் முதிர்ச்சியும் பல பேருக்கு பிரயோசனமாக இருக்கும் அதேநேரம் உங்கள் எழுத்தை ஒரு எல்லை மீறி நாடாமல் இருந்தால் அது ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.

    Reply
  • ஜெயராஜா
    ஜெயராஜா

    கொன்ஸ்ரன்ரைன் அவர்களே!
    இவ்வளவு நேயர்களும் கேட்டும் ஏன் பதில் தராமல் வேறு கட்டுரைகள் எழுத தொடங்கிவிட்டீர்கள் இது தேசம் நெற்றின் நிர்வாகமும் கவனத்தில் எடுக்கும் என நாங்கள் நம்புகிறோம்.

    Reply
  • palli
    palli

    நன்றி மாயா பல தகவல்களுக்கு; பல்லி எப்போதும் எந்த கட்டுரைக்கும் பின்னோட்டம் எழுதும்போதும் முடிவிம்: தொடரும் பல்லி; என எழுதுவேன், காரனம் விவாதம் எனக்கு பிடிக்கும் என்பதால்; ஆனால் இதில் எனக்கு அப்ப்டி எழுத தோன்றவில்லை, இது முடிந்து விட வேண்டும் எனவே ஒவ்வொரு பின்னோட்டத்திலும் நினைப்பேன், சரி நாமாவது எழுதாமல் விடலாம் என்றால் நந்தா தனது விபரம்தான் சரி ஆக்கி விடுவாரோ என்னும் பயத்தில் அடுத்தடுத்து எழுத வேண்டியதாய் போச்சு; இது தவறாயின் அனைவரிடமும் பல்லி மன்னிப்பு கேக்கிறேன்,

    //மாட்டை வெட்டி அதன் இரத்தத்தை மூலஸ்தானத்தில் ஊற்றியவர்கள் முஸ்லீங்கள் என்பதையும் மறக்கக் கூடாது. //
    இந்துக்களின் வழிமுறையில் மாடு (அதுவும் பசுமாடு) சாப்பிடுவது மகாபாவம்; ஆனால் இன்று புலத்தில் பல்லி உட்பட மாடுதான் உனவே!! இது தவிர்க்க முடியாது; நாம் வாழும் சூழலுக்கேற்ப்ப எம்மை மாத்திக்க வேண்டிய சூழலில் நாம் இருக்கிறோம்; இது இந்துக்களுக்கு மட்டுமல்ல கத்தோலிக்கருக்கும் பொருந்தும்;

    //பிராமணர்கள் என்ற ஒரு இந்து மக்கள் பிரிவினரோடு “பாதிரிகள்” போர்க்கொடி தூக்குவது அவர்களை இல்லாமல் செய்தால் “இந்து மதத்தை” இலகுவாக அழித்துவிடலாம் என்ற எண்ணத்தினால் தானே ஒழிய வேறொன்றும் இல்லை!//
    இந்துக்கள் சரியாக இருந்தால் எந்தமதமும் எம்மை அனுக முடியாது, ஆக நாம் விடும் தவறை புரியாமல் அவன் சேர்க்கிறான் என்பது வீண்வாதம், இதே நீங்கள் ஒரு சட்டம் போடுங்கள் எந்த இந்துவும் லூர்த்மாதாவுக்கு போககூடாது என; அது சாத்தியபடுமா? காலத்துக்கு தகுந்தாபோல் நாமும் மாறதான் வேண்டும்; (மதம் அல்ல) இந்துகோவிலுக்கு போகாத இந்துகள் கூட லூர்த்மாதாவுக்கு கனடா, அமெரிக்கா லண்டன், அவுஸ்ரேலியா; இந்தியா இப்படி பல நாடுகளில் இருந்து வருவது மதம் மாற அல்ல; எந்த கடவுளானாலும் ஒன்றுதான் என்பதை நிருபிக்கவே,

    //அல்பிரட் துரையப்பாவை கொலை செய்தவன் பிரபாகரன்.// இதே தவறான தகவல் பார்க்கவும் குலனின் உலகமயமாக்குதல் கட்டுரையையும் பின்னோட்டங்களையும்;

    //ஜோசப் பராராஜசிங்கத்தை ஆலயத்துக்குள்ளேயே வைத்து படுகொலை செய்தது எந்த நாகரீகம்?// மாயா
    இதைவிடவா விளக்கம் தரமுடியும்; கொன்றவன் ஒரு இந்துதான், கொல்ல சொன்னவன் ஒரு மாற்று கருத்தாளன்; இதே தேசத்தில் வந்த கருத்துதான்;

    Reply
  • ஜெயராஜா
    ஜெயராஜா

    //பாதிரிகள் ஆட்சிக்காலத்திலிருந்து இன்று வரை யாழ் இந்துக்கல்லூரி விடுதி மண்டபத்திற்குள் அசைவ உணவு கொண்டு செல்ல மடியாது//சாந்தன்

    முட்டைமா முதல் மான் மரை வரை வத்தல் வரை அத்துப்படி தூர இடங்களில் இருந்து வரும் குறிப்பாக வவுனியா மன்னார் மட்டக்களப்பு தீவுப்பகுதி மாணவர்கள் விடுமுறைக்கு போய் வரும்போது கொண்டுவருபவை.

    மொக்கன் கடை ஆணமும் குருமாவும் நல்ல பிரசித்தம் இது தவறு என்று சொல்லவரவில்லை இந்துக் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் ஆசிரியர்கள் எல்லோரும் சைவம் தான் சாப்பிட்டவர்கள் அல்ல.

    //இந்து மதத்தைப்போல் பிராமணர்கள் மட்டும் கோவிலில் பூசை செய்ய உரிமை உடையவர்கள் என்ற கட்டுப்பாட கிறீஸ்தவத்தில் இல்லை// துரை
    அப்ப புத்தமதத்திற்க்கு பிக்குமார் தேவை கிறீஸ்தவத்திற்கு பாதிரியார் தேவை. இஸ்லாத்திற்க்கு இமாம் தேவை இந்தக்களுக்கு பிராமணர்கள் தேலையில்லை

    //புலிகள் மற்ற இயக்கங்களின் தலைமைகள் செய்த தவறிக்காக அதன் உறுப்பினர்கள் அனைவரையும் கொன்றது//துரை
    எந்த தலைவரை தவறு செய்தவர் என்று புலிகள் போட்டுத்தள்ளியது சரி என்று சொல்லுகிறீர்கள்

    //பாதிரியார் ஆவதற்கு படிக்க வேண்டும் என சொல்லுவார்கள் அதற்கு எமது ஜயர் சம்மதம் சொல்லுவார்களா?// பல்லி
    சர்மா, ஜயர், குருக்கள் என்று தான் பிராமணர்களும் படித்து தான் குருக்கள் ஸ்தானத்தை அடைகிறார்கள். பிராமணர்கள் என்பதற்காக எல்லோரும் ஏறி மிதிக்கக் கூடாது.

    //பெளத்தம் இந்து மதத்திலிருந்து தான் வந்திருக்கலாம் ஆனால் இந்த மதம் சரியல்ல என்பததால்த்தான் பெளத்தம் தோன்றியது//மாயா

    அர்த்தமுள்ள இந்து மதத்திலில்லாத தத்துவத்தையா வேறு புத்தகத்தில் படிக்க போகின்றோம். சாதி மதங்கள் எல்லோரும் டீபிரீசர்க்குள்ளே பூட்டி பழுதடையாமல் பக்குவப்படுத்தி வைத்துள்ளோம். தேவைப்படும்போது எடுத்து சமைப்பார்கள். “சாதி ஒழிக்கப்பட வேண்டியது. மதம் அவரவர் விருப்பப்படி வழிபட வேண்டியது.” விவாதங்கள் கொச்சைப்படுத்தாமலும் எல்லை மீறாமலும் இருந்தால் வரவேற்கப்பட வேண்டியது

    Reply
  • palli
    palli

    //ஒரு இந்துக் கோவிலில் அதன் குருக்கள் மட்டுமே ஏடு தொடக்கலைச் செய்ய முடியுமென்று கூறினேன்.//
    ஏடு தொடக்க வேண்டியது குருதானே தவிர குருக்கள் ஆரம்பகாலத்தில் குருக்கள்தான் வாத்தியும் என்பது பார்த்திபன் அறியாததா?? ஆக குரு வேறு குருக்கள் வேறு ஏடு சொல்லும் தகுதி குருவுக்கு மட்டுமே தவிர குருக்களுக்கோ அல்லது பாதிரியாருக்கோ இல்லை, ஆனாலும் குழந்தையின் பெற்றோர் விரும்பினால் பல்லியை கூட ஏடு சொல்ல அழைக்கலாம் தப்பில்லை;(உதாரனத்துக்கு பல்லி)

    Reply
  • ஜோன்
    ஜோன்

    இந்து மத்தின் வரலாற்றைப்பற்றி சிந்திக்காமல் இந்து மத்திற்கு எதிராக எழுத பலர் முனைவதை அவதானிக்ப்பட கூடியதாக உள்ளது கால வரலாற்றோடு இணைத்து பேசாமல் இந்துக்களுக்க எதிராக பேச முனைவது தவறு இதிலும் பலர் தமக்கு தெரியாமலே இந்துக்களை கொச்சைப்படுத்துகிறார்கள் இதில் நன்மை அடைபவர்கள் மதமாற்றம் செய்துகொண்டு திரிபவர்களே!

    மதங்கள் சமயங்கள் தவறு என்றால் அதை முழுவதுமாக தவறு என்று விமர்சியுங்கள். அதை விடுத்து பெரியார் சொன்னார் இந்து மதம் அப்படி என்று எழுதுவதின் மூலம் கிறீஸ்தவத்தை கத்தோலிக்கத்தை முன்னிலைப்படுத்தவே உங்களில் பலர் கீபோட் மாக்ஸிஸ்டுக்கள் மாக்ஸிஸ்ட்டுக்கள் முனைப்படுகிறீர்கள் என்பதை உணரத் தவற வேண்டாம்.

    கிறீஸ்தவனுக்கு பெளத்தனுக்கு இஸ்லாத்தவனுக்கு எப்படி தனது மதம் பற்றி அதில் உள்ள அத்தனையும் நடைமுறையில் செயற்ப்படுத்த உரிமை உண்டு என்று சொல்லும் நீங்கள் இந்து சைவர்கள் அசைவம் சாப்பிடாமல் இருப்பதற்கும் உரிமையுண்டு தான் தெரிவு செய்து திருமணம் செய்யும் உரிமையும் உண்டு அதை நீங்களும் அங்கீகரிக்க வேண்டும்.

    சரி இந்துக்கள் சாதி வெறியர் என்று மதம் மாறியவர்களின் சாதிப்பிரச்சிசை போய்விட்டதா? தமிழ் லண்டன் வானொலிகளில் எத்தனை கிறிஸ்தவர்கள் தாம் சாதி பார்ப்பவர்கள் என நேரிடையாக பேசியுள்ளார்கள் பெளத்தர்களில் கரவா இணையத்தளத்தை பார்கலாம் என்ன சொல்லுகிறார்கள் என்று?

    பல கீபோட் மாக்சிசவாதிகள் மாதாவே என்றும் நெஞசில் குருசு கீறுவதையும் பார்க்வில்லையா? பல கீபோட் மாக்சிஸ்ட்டுக்கள் தங்கள் இணையத்தளத்தில் இந்துக்களுக்கு எதிராக வசனங்களை இட்டுள்ளதையும் அவதானிக்கவில்லையா? இவர்கள் எல்லாம் புலிகளின் பாணியில் ஜயரைக்கொன்று பாதிரியாரிடம் கொடுக்கும் நிலைதான்.

    Reply
  • samy
    samy

    இன்று வெளிநாடுகளில் கோயிலுக்கு போக யாருக்காவது எந்த சாதி என்று பாத்தா போக அனுமதிக்கப்படுகிறார்கள். இதில் உள்ள மாற்றத்தை அங்கீகரிப்போம். இது போன்ற பல மாற்றங்களை உருவாக்கி எம்மிடையே உள்ள சாதிப்பிரச்னையையும் ஒழித்து இந்து தத்துவத்தையும் பாதுகாப்போம்.

    Reply
  • NANTHA
    NANTHA

    // மற்றையபடி எனக்கு யார் சரஸ்வதி சிலையை வைத்தால் யார் ஏடுதொடக்கினால் ெனக்கு எந்த் ஆட்சேபமுமில்லை!//
    அப்படியா? அப்பொழுது எதற்காக இவ்வளவு எழுத்துக்கள்? முதலே பேசாமல் போக வேண்டியதுதானே?

    இந்துக் கல்லூரி, ஆறுமுக நாவலர் என்று எழுதி கடைசியில், ஏடு தொடக்கல் பற்றி தனக்கு “அக்கறை” இல்லை என்று முடித்திருக்கிறார். இவர் ஒரு “முன்னாள்” இந்து என்பது தெரிகிறது. அதனால்தான் “பாதிரிகளின்” அராஜகம் பற்றி நான் எழுதியவுடன் இவ்வளவு கூப்பாடு போட்டு பாதிரிகளின் அராஜகங்களை காப்பாற்ற இந்துக்களின் வழிபாட்டு முறைகள், வரலாறுகள் பற்றி பொய்களை அவிழ்த்து விட்டுள்ளார். இவர் எழுதிய பொய்களும் புரட்டுக்களும் நான் ஏற்கனவே பாதிரிகளின் இந்து மத எதிர்ப்பு பிரச்சாரங்களில் பார்த்த தகவல்கள்தான்.

    அனல் வாதம், புனல் வாதம் பற்றி மற்றொரு கப்சா. விவாதத்தில் தோற்றால் “கழுமரம் ஏறி” மரணிப்போம் என்று கூறியவர்கள் தற்கொலை செய்துகொண்டதை இவர் இந்துக்கள் கொலை செய்தார்கள் என்று ஒரு புரட்டு கதை கூறுகிறார். திருஞான சம்பந்தரின் வரலாற்றில் எங்கும் காணாத ஒரு தகவல். இந்த புளுகை மேடையேற்ற முனைவதின் நோக்கம் “கத்தோலிக்கர்கள்” இந்த நூற்றாண்டிலும் “கொலை செய்யும்” கொள்கையை வைத்திருப்பது நியாயம் என்று சாதிக்கவே ஆகும்.

    நெடுந்தீவு தனிநாயகம் எப்போது “கரம்பன்” தனிநாயகம் ஆகினார் என்று தெரியவில்லை. மேலும் தியோலோஜி என்பது படித்து என்று தொடங்கும் இவர் அது என்ன ரொக்கட் சயன்ஸ் என்று சொல்லுகிறாரா? பாதிரிகள் எப்படி மற்றவர்களை ஏமாற்றுவது என்பது அதில் படிப்பிக்கப்படும் முக்கியமான பாடம் என்பது எப்படி இந்தாளுக்கு தெரியாமல் போனது?

    //கிறிஸ்தவத்தில் inqusition நடைபெற்றகாலம் 1184 – 1860 அதாவது 12ம் நூற்றாண்டில் இருந்து 19ம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை.//

    வாஸ் கோடா காமா 1502 இல் கேரளாவின் ஒருபகுதியை கைப்பற்றியவுடன் முதலில் கொலை செய்தது கொச்சியில் இருந்த யூதர்களையும். பிராமணர்களையும் ஆகும். பின்னர் கோவாவை பிடித்து அங்கு இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேலாக ஆயிரக்கணக்கான “இந்துக்களை” பாதிரிகளின் கோவில்களில் வைத்து “INQUISITION” இல் கொன்று தள்ளினர்.

    யாழ்ப்பாணத்து இந்து மன்னர்களும் நெருங்கிய உறவுகளும் அதே வழியில் கத்தோலிக்க கும்பல்களினால் கோவாவில் வைத்துக் கொலை செய்யப்பட்டனர். இன்றும் வத்திக்கான் அந்த கொலை செய்யும் முறையை கைவிடவில்லை. அல்பிரட் துரையப்பாவின் கொலை, பின்னர் புலிகள் செய்த கொலைகள், ஐயர்மாரின் கொலைகள், இந்து தமிழ் தலைவர்களின் கொலைகள் என்பனவற்றை நோக்கும் போது “கத்தோலிக்க” பாதிரிகளின் கைகள் அந்த கொடூரங்களில் சம்பந்தப்பட்டுள்ளது என்றே நம்புகிறேன்!

    Reply
  • NANTHA
    NANTHA

    VENGAI:
    உங்கள் எழுத்து நல்ல தகவல்களைக் கொண்டுள்ளது. பசுவை கோமாதா என்று இந்துக்கள் நம்புவதற்கு நீங்கள் குறிப்பிட்ட காரணங்கள்தான் உண்மையான காரணங்கள் என்று நம்புகிறேன்!

    தவிர கடவுள் ஒரு முகவரியில் குடியிருக்கும் அபார்ட்மென்ட் வாசியல்ல. தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார். இதுதான் இந்துக்களின் கடவுள் பற்றிய சிந்தனை. அதனால்தான் இந்துக்கள் எதனையும் கடவுளாக மதிக்க தயாராக உள்ளனர்.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    பிராமணர்களே கோவில் பூசாரிகளாக இருக்கவும் கோவிலின் கருவறைக்குச் செல்லவும் முடியும் என்பது தென்னிந்தியா மற்றும் ஈழத்தின் வழமை.சில ‘விதிவிலக்குகள்’ விதியாக முடியாது. இதற்குமேலும் நான் உங்களுடன் விவாதிக்க விரும்பவில்லை!

    //…அதுபோல் பிராமணர் அல்லாதவர்கள் இலங்கையிலும் பூசைகளை தொண்டமானாறு செல்வச்சந்திதி மற்றும் கதிர்காமம் போன்றவற்றில் மந்திரம் சொல்லாது வாய் கட்டிப் பூசை செய்கின்றனர். அதுபற்றித் தாங்கள் அறியவில்லையோ??…//
    என்ன இப்படிச்சொல்லி விட்டீர்கள். இவை நான் மூன்றாம் வகுப்பில் கற்ரவை. கதிர்காமத்தில் இவர்களை ‘கப்புறாளை’ என அழைப்பர் எனவும் படித்தேன். ஆனால் இவை விதிவிலக்குகளாகும் எனத்தான் படித்தேன். நாம் விவாதிப்பது ‘இந்து’ விதி விலக்குகள் அல்ல!

    //… நவராத்திரியை அண்டித்தான் விஜயதசமி வருவதாவது தங்களுக்குத் தெரியுமா?? பலர் விஜயதசமியன்றே சரஸ்வதி பூசையை நடாத்தி அன்று ஏடு தொடக்குதலைச் செய்வார்கள்….//
    அப்போ நான் உங்களுக்கு என்ன சொன்னேன்? குஜராத்திக்காரரின் நவராத்திரிக்கு சென்றேன் ஆனால் ஒருநாளும் ஏடுதொடக்கவில்லை எனத்தானே. நீங்கள் தான் எனது அறியாமை என்றது. மேலும் விஜயதசமி நவராத்திரியை ‘அண்டி’ய நாளில் வராது அடுத்த நாளே வரும் (10வது நாள்) சிலர் அல்ல எல்லோரும் அன்றுதான் ஏடு தொடக்குவார்கள்!

    நந்தா ஏடுதொடக்கல் ஒரு இந்துப்பண்டிகை எனச் சொன்னதாலேயே நான் முஸ்லிம் ஏடுதொடக்கியதைப் பற்றிச்சொன்னேன். இது பொதுவாக ஒரு தமிழ்/மலையாளப் பண்டிகையாகவே கொண்டாடப்படுகிறது. வட இந்தியாவில் இல்லை என நினைக்கிறேன். மேலும் கொல்கத்தாவில் விஜயதசமி அன்று ‘இந்து’க்கள் கடாவெட்டி சாப்பிடிவார்கள். விஜயதசமி உணவில் மீன்பொரியல் சர்வசாதாரணம். கேட்டால் ‘கடல் புஷ்பம்’ என்பார்கள். இவற்றுக்கு பாதிரி ஏடுதொடக்குவது எவ்வளவோ மேல்!

    //…ஒரு இந்துக் கோவிலில் அதன் குருக்கள் மட்டுமே ஏடு தொடக்கலைச் செய்ய முடியுமென்று கூறினேன்….// எமது ஊரில் குருக்கள் செய்யமாட்டார். மாறாக அவ்வூரில் உள்ள மக்கள் மதிப்புக்கொண்ட ஆசிரியர் ஒருவர் செய்வார். மேலும் பள்ளிக்கூடங்களிலும் அப்படியே! சில பெற்றோர் குறிப்பிட்ட ஆசிரியரே தமது பிள்ளைகளுக்கு ஏடுதொடக்க வேண்டும் என விரும்பி அழைப்பார்கள். இதெல்லாம் எனது ‘இந்து’ வாழ்க்கையில் நான் பார்த்தவை!

    Reply
  • NANTHA
    NANTHA

    ஜெயராஜா:
    நன்றி. ஆயினும் சில உண்மைகளை எழுதும்போது சிலருக்குச் சுடத்தான் செய்யும். அதற்காக என் அனுபவங்களை, கண்டவற்றை, படிப்பின் மூலம் பெற்றவற்றை மறந்து “வெறும்” மட்டையடி எழுத்துக்களை எழுதி யாருக்கும் பயன் உண்டாகாது.

    பொய்யை திருப்பித் திருப்பிச் சொன்னால் உண்மையாகிவிடும் என்று பொய்யர்கள் நம்பி ஊரையும் உலகத்தையும் ஏமாற்றும் இந்தக் காலத்தில் “உண்மைகளை” மூளியாக்குவது நியாயமாகப் படவில்லை.

    இந்த நேரத்தில் எனது கருத்துக்களை பிரசுரிக்கும் தேசம்நெட்டுக்கும் நன்றிகள் கூற விரும்புகிறேன்!

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    பல்லி, Vengai ன் கேள்வி ஒன்றுக்கு நீங்கள் மழுப்பலான பதிலைக் கொடுத்திருப்பதாகவே நான் நினைக்கிறேன்.

    //மாட்டை வெட்டி அதன் இரத்தத்தை மூலஸ்தானத்தில் ஊற்றியவர்கள் முஸ்லீங்கள் என்பதையும் மறக்கக் கூடாது. // Vengai
    இந்துக்களின் வழிமுறையில் மாடு (அதுவும் பசுமாடு) சாப்பிடுவது மகாபாவம்; ஆனால் இன்று புலத்தில் பல்லி உட்பட மாடுதான் உனவே!! இது தவிர்க்க முடியாது; நாம் வாழும் சூழலுக்கேற்ப்ப எம்மை மாத்திக்க வேண்டிய சூழலில் நாம் இருக்கிறோம்; இது இந்துக்களுக்கு மட்டுமல்ல கத்தோலிக்கருக்கும் பொருந்தும்; எனப்பதில் இறுத்திருக்கிறீர்கள்.

    இதேபோலவே பள்ளிவாசலில் புகுந்து சுட்டவர்களும் சொல்லலாமில்லையா?
    நாம் கொலை செய்வதில்லை. அது மஹா பாவம். ஆனால் ஸ்ரீலங்கா பல கொலைகளைச் செய்வதில்லையா. ஆகவே கொலை தவிர்க்கமுடியாது. சூழலுக்கேற்ர வகையில்கொலை செய்யவேண்டும் என.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    //மதம் அவரவர் விருப்பப்படி வழிபட வேண்டியது.” விவாதங்கள் கொச்சைப்படுத்தாமலும் எல்லை மீறாமலும் இருந்தால் வரவேற்கப்பட வேண்டியது. – ஜெயராஜா //

    மிகச் சரியான கருத்து. வரவேற்று வழி மொழிகின்றேன்.

    //ஏடு தொடக்க வேண்டியது குருதானே தவிர குருக்கள் ஆரம்பகாலத்தில் குருக்கள்தான் வாத்தியும் என்பது பார்த்திபன் அறியாததா?? ஆக குரு வேறு குருக்கள் வேறு ஏடு சொல்லும் தகுதி குருவுக்கு மட்டுமே தவிர குருக்களுக்கோ அல்லது பாதிரியாருக்கோ இல்லை. – பல்லி //

    நான் இந்துக் கோவிலில் ஏடு தொடக்குவதையே குறிப்பிட்டுள்ளேன். இந்துக் கோவில்களில் குருக்கள் தவிர்ந்து வேறு யாராவது ஏடு தொடக்கியதைப் பல்லி தாயகத்தில் அறிந்துள்ளீர்களா?? மற்றும்படி பல பெற்றோர்கள் தமக்கு விருப்பமான ஆசிரியர்களிடமோ வேறு பெரியவர்களிடமோ அல்லது தாமே தான் ஏடு தொடக்குகின்றார்கள். எனது பெற்றோர் உத்தியோக நிமித்தமாக மன்னாரில் இருந்ததால் எனக்கு திருக்கேதீஸ்வர ஆலய பிரதம குருக்கள் ஏடு தொடக்கி வைத்தார். ஆனால் சுவிசில் எனது பிள்ளைகளுக்கு வீட்டில் வைத்து நானே ஏடு தொடக்கி வைத்தேன். எல்லாம் அவரவர் நம்பிக்கையைப் பொறுத்தது.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    //… நவராத்திரியை அண்டித்தான் விஜயதசமி வருவதாவது தங்களுக்குத் தெரியுமா?? பலர் விஜயதசமியன்றே சரஸ்வதி பூசையை நடாத்தி அன்று ஏடு தொடக்குதலைச் செய்வார்கள்….//
    //மேலும் விஜயதசமி நவராத்திரியை ‘அண்டி’ய நாளில் வராது அடுத்த நாளே வரும் (10வது நாள்) சிலர் அல்ல எல்லோரும் அன்றுதான் ஏடு தொடக்குவார்கள்! – சாந்தன் //

    அண்டித்தான் என்று நான் குறிப்பிட்டதன் அர்த்தம் அருகில் என்பதே. ஒருவர் உங்களைத் தனது நண்பருக்கு தனது அண்டை வீட்டுக்காரர் என அறிமுகப்படுத்தினால், அவர் சாந்தனின் வீட்டில் குடியிருப்பவரென்று அர்த்தமில்லை. சாந்தனின் அடுத்த வீட்டுக்காரர் என்றே அர்த்தம். அதுபோல் நவராத்திரியை அண்டித்தான் விஜயதசமி வருமென நான் குறிப்பிட்டதும் நவராத்திரிக்குள் விஜயதசமி வருமென்று அர்த்தமல்ல, நவராத்திரியின் பின் விஜயதசமி வருமென்பதே அர்த்தம்.

    மேலே நான் பலர் விஜயதசமியன்றே சரஸ்வதி பூசையை நடாத்தி அன்று ஏடு தொடக்குதலைச் செய்வார்கள் என்றே குறிப்பிட்டுள்ளேன். ஏடு தொடக்குதலைச் செய்ய விரும்பாதவர்கள் சரஸ்வதி பூசையை விஜயதசமிக்கு முதலோ பிறகோ கூடச் செய்வார்கள்.

    Reply
  • mera
    mera

    நான் இந்துக் கோவிலில் ஏடு தொடக்குவதையே குறிப்பிட்டுள்ளேன். இந்துக் கோவில்களில் குருக்கள் தவிர்ந்து வேறு யாராவது ஏடு தொடக்கியதைப் பல்லி தாயகத்தில் அறிந்துள்ளீர்களா//

    நான் நினைக்கிறேன் இதில்தான் இந்த ஏடு தொடக்கம் விவாதம் ஆரம்பமானதென… நந்தா -கோவிலில் குருக்கள் ஏடு தொடக்க வேண்டிய இடத்தில் பாதிரிக்கு என்ன வேலை எனக் கேட்டிருந்தார்- அவர் கேட்டது சரி. மற்றும்படி யாரும் விருப்பமானவர்களைக் கொண்டு வீடுகளில் பாடசாலைகளில் ஏடு தொடக்கலாம்.

    நவராத்திரி என்பது நம்மைப் போலல்லாது சில இந்தியர்கள் வருடத்தில் இருமுறை கொண்டாடுவார்கள். ஒன்று மாசி அல்லது பங்குனியில் வருவது என நினைக்கிறேன். அதில் ஏடு தொடங்குபவர்களா இல்லையா என்பது எனக்கு சரியாகத் தெரியவில்லை. அறிந்தால் எழுதுகிறேன்.

    Reply
  • NANTHA
    NANTHA

    //பிராமணர்களே கோவில் பூசாரிகளாக இருக்கவும் கோவிலின் கருவறைக்குச் செல்லவும் முடியும் என்பது தென்னிந்தியா மற்றும் ஈழத்தின் வழமை.சில ‘விதிவிலக்குகள்’ விதியாக முடியாது. இதற்குமேலும் நான் உங்களுடன் விவாதிக்க விரும்பவில்லை! //

    இந்துக்களின் வழக்கங்கள் ஒன்றும் ‘அரசியல் சாசனம்” போல் எழுதி வைக்கப்பட்டது அல்ல. அதில் “பொயிண்டுகள்” பிடித்து வாதாடவும் அது தப்பு இது தப்பு எனறு சொல்லவும் இந்துக்கள் முனைவதில்லை. காரணம் என்னவென்றால் “கடவுளை” மனிதன் எங்கும் காணலாம் எதிலும் காணலாம் என்று இந்துக்கள் நம்புகிறார்கள். விஸ்வநாதன், அகிலாண்டேஸ்வரி என்ற பெயர்கள் அந்த நம்பிக்கை அடிப்படையில் எழுந்தவையே. தமிழ் நாட்டில் பல கோவில்களில் பிராமணர்களே கிடையாது. அது விதி விலக்கல்ல. அது இந்துக்களின் வழக்கம்.

    இந்துக்களின் வேதங்களை ஆகமங்களை முழுமையாகப் படித்துள்ளவர்களும் உண்டு. கோவில் கிரியைகள் தொடர்பான சமஸ்க்ருத சுலோகங்களை படித்தவர்களும் உண்டு. அது பிராமணர்கள்தான். அதனால்த்தான் இந்துக்கள் பிராமணர்களை தங்கள் கோவில்களில் பார்க்கவும் கேட்கவும் விரும்புகின்றனர்.

    இந்து சமயத்தின் ஆணி வேர் என்பது “பிராமணர்கள்” என்பது இந்துக்களுக்கும் புரியும் பாதிரிகளுக்கும் தெரியும். ஆணி வேரை அசைத்து அழிக்க அந்நிய மதக்காரன்கள் முயன்றால் அது கலகத்தையே தரும்.

    Reply
  • thurai
    thurai

    தமிழீழம் கிடைக்காமலே, வந்து வாழும் நாடுகளிலுமிருந்து இந்துக்களே உயர்வானவ்ர்களென்று வாதிடுவோர், தமிழீழம் கிடைத்திருந்தால் மற்ர சமயத்தவர்களை இவர்கள் என்னபாடு படுத்தியிருப்பார்கள்.

    தமிழரின் ஆதிக்க பலம் இந்துக்கள் கைகளிலிருந்ததாலேயே தமிழர்கள் பல பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பலமிழந்து வாழ்ந்தார்கள். இன்று சமயப் பாகுபாடு காட்டாத புலத்து வாழ்வினில் தான் தமிழர்களெல்லோரும் சமனாக வாழ்கிறார்கள். இதுவே நாடுகளிற்குத் தேவை.

    துரை

    Reply
  • palli
    palli

    //எல்லாம் அவரவர் நம்பிக்கையைப் பொறுத்தது.//
    பார்த்திபன் இதுவே உன்மை, இதை புரியவைக்கதான் எனது பல பின்னோட்டம்; நான் யாரையும் தீண்டவில்லை யாரும் யாரையும் பிரிக்க முயலாதீர்கள் எனதான் வாதிடுகிறேன்; இதில் நந்தா கவனத்துக்கு உரியவர், இவர் ஆரம்பத்தில் மலையாளி; தமிழன்; பின்பு தமிழன் சிங்களவன், இப்போது இந்து கத்தோலிக்; அடுத்து ஏதோ ஒன்றில் நிற்ப்பார், இவரது நோக்கம் புலி பினாமிகள் போல் ஏதாவது ஒரு பிரச்சனை இந்த மக்களுக்கு வேண்டும்; இவரது நோக்கம் பாதிரிமீது குற்றம் சொல்வதல்ல கத்தோலிக்கரை வம்புக்கு இழுப்பதுதான்; இதைதான் அன்றய போராளிகள் செய்து இன்று நாடு நாடாய் நாம் பிச்சை எடுக்கிறோம்; அங்குள்ளவர்கள் அடுத்த நேர வாழ்வுக்காய் அவதிபடுகின்றனர்;

    இன்று ஒரு நிகழ்வு பார்த்தேன், தமிழகத்தில் ஒரு இந்துகோவிலில் திருவிழா? !ஊத்துகாட்டு எல்லையம்மன்! இதில் என்ன சிறப்பு எனில் இந்தகோவில் திருவிழாவில் இந்துக்களைவிட கத்தோலிக்க ஸ்லாமிய மக்கள்தான் கூட உள்ளனர் என கோவில் நிர்வாகி நேரடி பேட்டி கொடுக்கிறார்; இதுதான் யதார்த்தம், எங்கோ ஒரு பாதிரி தவறு விட்டதுக்கு ஒரு மதம்மீது பகைகொள்வது சரியானதா??

    இதே இந்து நாடான இந்தியாவில் உயிரோடு பாதிரி எரிக்கபட்டது வரலாறு அல்ல நிகழ்கால சம்பவம்; அதுக்காக அனைந்து இந்துக்கள் மீதும் கலவரம் செய்தார்களா?? கத்தோலிக்கர் கூடவாழும் கிராமத்தில் மன்னாரில் பல கிராமங்களை சொல்லலாம்; அங்கு போய் பாருங்கள் மனிதனேயம் என்ன என்பதை, இந்துயார் கத்தோலிக் யார் எனகேட்டுகூட தெரிந்து கொள்ள முடியாத அளவுக்கு நேசிப்பார்கள்.

    இருக்கும் வரை மனிதர்தான் அனைவரும் எனவாழ முடியாவிட்டாலும் இறந்தபின் அனைவரும் பிணம்தான்; இந்து மத பெருமைகள் பற்றி தொடர்ந்து பலமணி நேரம் என்னால் சொற்பொழிவு ஆற்றமுடியும்; அது இந்துமதத்தின் பெருமையை சேர்ப்பதானால்; ஆனால் என்னொரு மதத்தை வம்புக்கு இழுக்கும் போது இந்துவின் பெருமை பேச முடியாது;

    //பல்லி, Vஎன்கை ன் கேள்வி ஒன்றுக்கு நீங்கள் மழுப்பலான பதிலைக் கொடுத்திருப்பதாகவே நான் நினைக்கிறேன்.
    நீங்கள் எதிர்பார்க்கும் பதிலை நான் எழுதினாலும் தேசம் தணிக்கை செய்து விடும்;

    இனமும் இனமும் சேர்ந்து வாழ்வதே சுகம் என சொல்லும் புத்திஜீவிகள் மதம் மதம் என மல்லுக்கு நிற்ப்பது மிக வேடிக்கை;

    //நான் நினைக்கிறேன் இதில்தான் இந்த ஏடு தொடக்கம் விவாதம் ஆரம்பமானதென… நந்தா -கோவிலில் குருக்கள் ஏடு தொடக்க வேண்டிய இடத்தில் பாதிரிக்கு என்ன வேலை எனக் கேட்டிருந்தார்- அவர் கேட்டது சரி. மற்றும்படி யாரும் விருப்பமானவர்களைக் கொண்டு வீடுகளில் பாடசாலைகளில் ஏடு தொடக்கலாம்.

    மீரா மிக நிதானமாய் புரிந்து கொண்டீர்கள் இதுதான் பிரச்சனை; இதுக்கு ஆரம்பத்தில் பல்லியின் பின்னோட்டத்தை கவனிக்கவும்; நந்தா அந்த பாதிரியிடமோ அல்லது அந்த குழந்தயின் பெற்றோரிடமோ இதை கேட்டிருந்தால் அதுக்கான விளக்கம் சரியோ தவறோ கிடைத்திருக்கும்; ஆனால் நந்தா சண்டைக்கு நின்றால் எப்படி பதில் சொல்ல முடியும்;

    செல்வசன்னிதி பூசை பற்றி பேச்சு வந்தபோது அது விதிவிலக்காம், தமிழர் பகுதியில் உள்ள திருதலங்களில் சன்னதிகோவில் முதனமை வாய்ந்தது என்பதுமா நந்தாவுக்கு தெரியாது, அதே சன்னிதியில் சூரன் போர் நடக்கிற போது சாமிகளான சூரனையும் முருகனையும் (போருக்காக) ஆட்டுபவர்கள் மிக பளக்க பட்டவர்களும் அனுபவசாலிகளும்: மிக அருமையான நிகழ்வு, அதுக்கென்ன இப்போ இது நந்தாவின் ஆதங்கம், ஆமா நந்தா அந்த சூரனில் மேலே நின்று (1984 வரை) அந்தரத்தில் ஆட்டுபவர் ஒரு கத்தோலிக்க நண்பர் தேவையேற்படில் அந்த ஊர் மக்களிடம் போடுங்கள் ஒரு போணை; அடுத்து துன்னாலை கிரிஸ்னர் கோவில்(வல்லிபுரகோவில்) இதில் தீர்த்த தினத்தன்று கடலில் கடல் தொளிலாளர் படகில் பல விளையாட்டுக்கள் காட்டுவார்கள் (அதை ஒரு சம்பிரதாயமாகவே வைத்திருந்தனர் இது வரலாறு அல்ல நான் பார்த்தை) அந்த படகுகள் பல கத்தோலிக்க நண்பர்களின் கைகளிதான் இருக்கும்; இது ஒரு இந்து கோவில் நிகழ்வு என பார்க்கமாட்டார்கள், எல்லாவற்றுக்கும் மேலாக கடலில் சிலர் அலையுடன் போகலாம் என்பதுக்காய் பாதுகாப்புக்கு வெறும் உடம்புடன் இருபார்கள் அவர்கள் மார்பில் சிலுவை தொங்கும்; இதன் அர்த்தம் ஒற்றுமை எனக்கு அன்று தெரியவில்லை, சிலர் சிலதை தொடங்கும் போதுதான் அதன் வலிமை புரிகிறது; தொடரும் பல்லி;;;

    Reply
  • palli
    palli

    //இந்துக்களின் வழக்கங்கள் ஒன்றும் ‘அரசியல் சாசனம்” போல் எழுதி வைக்கப்பட்டது அல்ல. அதில் “பொயிண்டுகள்” பிடித்து வாதாடவும் அது தப்பு இது தப்பு எனறு சொல்லவும் இந்துக்கள் முனைவதில்லை. காரணம் என்னவென்றால் “கடவுளை” மனிதன் எங்கும் காணலாம் எதிலும் காணலாம் என்று இந்துக்கள் நம்புகிறார்கள்.//
    எனதான் நானும் நினைத்தேன், ஆனால் அத்வானி பள்ளிவாசலை இடித்து ராமர் கோவில் கட்ட துடிக்கும் வரை, ஆனால் அதன்பின் அந்த நம்பிக்கை
    எனக்கு இல்லை; ஒரு கோவிலை இடித்துதான் ஒரு கோவில் கட்ட வேண்டுமா??

    // பல கோவில்களில் பிராமணர்களே கிடையாது. அது விதி விலக்கல்ல. அது இந்துக்களின் வழக்கம்.//
    ஆம் பிராமணர் இல்லாத கோவில்கள் உண்டுதான்; காளி அம்மன், வைரவர், மாரியப்பன்; காட்டுபிள்ளையார்; கல்லடி ஆத்தா, இன்னும் பல தேவையாயின் தருகிறேன்; கூட்டி கழித்து பாருங்கள் ஓர் உன்மை புரியும்;

    //இன்று வெளிநாடுகளில் கோயிலுக்கு போக யாருக்காவது எந்த சாதி என்று பாத்தா போக அனுமதிக்கப்படுகிறார்கள். இதில் உள்ள மாற்றத்தை அங்கீகரிப்போம். இது போன்ற பல மாற்றங்களை உருவாக்கி எம்மிடையே உள்ள சாதிப்பிரச்னையையும் ஒழித்து இந்து தத்துவத்தையும் பாதுகாப்போம்.// samy
    சராசரி ஒரு மனிதனின் கண்ணீர் இதுதான்; தொடர்வேன் பல்லி;;;;

    Reply
  • chandran.raja
    chandran.raja

    மதம் ஒரு அபினா? என்று யாரும் கேள்வி கேட்டால் என்னால் சொல்லக்கூடிய பதில் இல்லை என்பதே. அபின் இல்லை. யாரும் கால்மாக்ஸின் ஆய்வில் குறை கண்டுபிடிப்பதாக நினைத்தால் அதற்காக என்னை மன்னியுங்கள்.
    அந்தந்த மதகங்கள் தமது சமூகத்தை ஒரு வழிப்படுத்து ஓட்டிச்செல்ல ஒழுங்குபாடுகளை வழிவகுத்ததே ( பலத்காரமாக கூட) மதம். இன்றும் கேள்விக்குறியாக இருக்கிறது மூத்தமதம் எது? யகோவா? பிரமம்மா?? அல்லது யேசுவா???. இதில் யேசுவை மிகவும் இளையவராகவே காண்கிறோம். யகோவாவின் விசுவாசிகளும் அடியார்களுமே யேசுநாதரை சித்திரவதை செய்து அவமதித்து கொலைசெய்தார்கள் இதை யாரும் மறுக்க முடியாது.
    இந்துமதம் தோன்றியது சாக்கியமுனிவரால் என்றுசொல்லப்படுகிறது. அவர் இன்றும் நாம் ஆளுமைக்குட்பட்டிருக்கிற பஞ்சபூதத்தையே இறைவனாகக் கொண்டார். அதில்லிருந்து உருவகப்படுத்தப்பட்டு இன்று பல்வேறுவகைப் படுத்தப்பட்ட கடவுள் அதையொட்டிய இந்துமதம்.

    சேர்ந்து வேட்டையாடினால் மட்டுமே தமக்கும் உணவு கிடைக்கும் என்று நினைத்த தனிமனிதன் ஒருகூடிய பகுதியை தனக்கு சொந்தமாக நினைத்தான். இங்கிருந்துதான் வர்கப்போராட்டம் தொடங்கி விஞ்யாணமயப்பட்ட தொழில் துறையிலும் வந்தடைந்து வந்திருக்கிறது. இங்கே குறிப்பிடவேண்டியது என்னவென்றால் சகலமதங்களும் தமது வர்கவேறுபாட்டால் பிரிவினைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறது என்பதே! இந்த சுயநலத்தில் அசைக்கமுடியாத சக்தியாக இருக்கிறது முதலாளித்துவமும் அதன் உச்சவடிவமாக இருக்கிற ஏகாதிபத்தியமுமே!.

    இப்பொழுது நாம் மதங்களுக்கு எதிராகப் போராடுவதா?ஏகாதிபத்தியத்திற் கெதிராக போராடுவதா? மதங்களின் தூய்மை புனிதத்தைப் பற்றி நீங்கள் விவாதிக்கும் பொழுது ஏகாதிபத்தியத்தின் சார்பாகவே இருக்கிறீர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்.

    Reply
  • thurai
    thurai

    //இப்பொழுது நாம் மதங்களுக்கு எதிராகப் போராடுவதா?ஏகாதிபத்தியத்திற் கெதிராக போராடுவதா? மதங்களின் தூய்மை புனிதத்தைப் பற்றி நீங்கள் விவாதிக்கும் பொழுது ஏகாதிபத்தியத்தின் சார்பாகவே இருக்கிறீர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்//

    சந்திரன் ராஜா ஏன் இவ்வளவு தூரம் காத்திருந்தீர்கள் இதனைச் சொல்வதற்கு. மனதின் அமைதிக்கு மதங்களைப் பின்பற்றுபவர்கள், மதப்பற்ரினால் மக்களிடையே அமைதியின்மை வராமல் காப்பாற்ரவும் வேண்டும்.

    தமிழரிடையே எந்தமதம் உயர்ந்ததென்ற விவாதமும் தவிர்க்கப்பட வேண்டிய்தொன்று.

    துரை

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    /..அண்டித்தான் என்று நான் குறிப்பிட்டதன் அர்த்தம் அருகில் என்பதே. ஒருவர் உங்களைத் தனது நண்பருக்கு தனது அண்டை வீட்டுக்காரர் என அறிமுகப்படுத்தினால், அவர் சாந்தனின் வீட்டில் குடியிருப்பவரென்று அர்த்தமில்லை. ….//
    ஆம் அருகில் என்றால் முன்னர்/பின்னர் எனப்பொருள்படும்.உங்கள் விவாதப்படி ‘அண்டி’ என்றல் அடுத்தது என மட்டும் எடுக்கமுடியாது. முன்னர் எனவும் பொருள் கொள்லலாம். மேலும் ‘விஜயதசமி’ என்றால்..
    விஜய – வெற்றி
    தசமி – 10வது
    அதாவது அண்டி அல்ல அறுத்துறுத்து/தெளிவாக 10வது நாள் எனப்பொருள்படும்!!இங்கே ‘அண்டி’ என்கின்ற சொற்பதததினை உபயோகப்படுத்த வேண்டிய தேவை இல்லை!
    //…ஏடு தொடக்குதலைச் செய்ய விரும்பாதவர்கள் சரஸ்வதி பூசையை விஜயதசமிக்கு முதலோ பிறகோ கூடச் செய்வார்கள்…./ இல்லை!
    9ம்நாள் வீட்டில் ‘சரஸ்வதிபூசை’ செய்வார்கள். அத்துடன் ‘ஏடுதொடக்க விரும்பாதவர்கள்’ தான் 9ம் நாள் செய்வார்கள் என்பதில்லை! ஏடு தொடக்குதல் விஜயதசமி அன்று பொதுவாக பள்ளிக்கூடங்களில் அது நடக்கும்.

    //…அப்படியா? அப்பொழுது எதற்காக இவ்வளவு எழுத்துக்கள்? முதலே பேசாமல் போக வேண்டியதுதானே?…//
    எனக்கு சரஸ்வதி சிலை வைப்பவன் யார் என அக்கறை இல்லாததுபோல ஏடுதொடக்குபவன் யார் என்கின்ற அக்கரையும் இல்லை என்பதுவே காரனம்.

    Reply
  • palli
    palli

    சந்திரா இதில் உங்களுடன் என்னால் கூடிபோகதான் முடிகிறது; நான் கூட நந்தாவின் வம்புக்கு சமமாக பல பின்னோட்டம் விட்டேன், ஆனால் அதை தேசம் தணிக்கை செய்துவிட்டது, அது பல்லி இப்படி எழுதபடாது என என் எழுத்தின் மீது கொண்ட அக்கறையாகவே நான் எடுத்து கொண்டேன், அதை உறுதி செய்கிறது உங்கள் பின்னோட்டம்; பத்து பின்னோட்டம் கூட போக கூடாத ஒரு சம்பவத்துக்கு 162 பின்னோட்டம் உன்மையில் பல்லி வெக்கபடுகிறேன்; காரனம் இதில் என் பங்கும் உண்டு, தவறான வாதங்களுக்கு நண்பர்கள் மன்னிக்கவும்; இது ஒரு தவறான நிலை என்பதால் இந்த கட்டுரையில் இருந்து பல்லி விலகி கொள்கிறேன்; அதை பல்லியின் ஏலாதனம் என யாராவது கேலி செய்தாலும் மகிச்சியுடன் ஏற்றுகொள்கிறேன், தயவுசெய்து நண்பர்களே மதம், இனம், மொழி, சாதி என யாரும் கூறுபோடாதீர்கள்; இது அனைத்தும் எமக்கல்ல தீங்கு அவலபடும் மக்களுக்கே;
    நட்புடன் பல்லி,

    Reply
  • NANTHA
    NANTHA

    தமிழீழம் கிடைக்க முதலே பாதிரிகள் இந்துக் கோவிலுள் “புலி” என்று கூப்பாடு போட்டு ஏடு துவக்க “இந்து ஐயர்” தேவையில்லை என்று போன பாதிரி சந்திரகாந்தன், அங்கிலிக்கன் பாதிரி பிரான்சிஸ் சேவியர் (இவருடைய மனைவி சிங்களம்) பற்றி மூச்சுவிடாது அதனை மவுனமாக ஆமோதிக்கும் துரை போன்ற “மதம்” மாறினோர் புலிகளோடு தன்னுடைய மதத்து பாதிரிகளுக்கு என்ன முறையில் தொடர்பு என்று சொல்லக் காணோம் ? கொலை அல்லது கொள்ளை ? அல்லது இரண்டுமா?

    சமாதானம் என்று சொல்லி சமாதானத்துக்கு கொள்ளி வைக்க புறப்பட்ட பாதிரிகளைக் கண்டிக்காமல் கதைகளை திசைதிருப்பும் நோக்கில் ஏராளமான சம்பந்தமில்லாத விஷயங்களை இங்கு பிரசுரித்து படிப்பவர்களை “ஏமாளிகளாக்க” முனைய வேண்டாம்! நல்ல காலம். மஹிந்த புலிகளை விரட்டியதுடன் “பாதிரிகளும்” காற்றுப்போன பலூன் மாதிரி ஆகிவிட்டனர்.!

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    சாந்தன்,
    ஒன்றில் விதிமுறையை வைத்து விவாதிக்கலாம் அல்லது நடைமுறையை வைத்து விவாதிக்கலாம். நான் நடைமுறையை எழுதினால், நீங்கள் விதிமுறையை வைப்பீர்கள். நான் விதிமுறையை எழுதினால், நீங்கள் நடைமுறையை வைப்பீர்கள். வாதம் செய்பவர்களுடன் விவாதிக்கலாம். ஆனால் விதண்டாவாதம் செய்பவர்களுடன் நேரத்தை இழப்பது தான் மிச்சம். நவராத்திரி முடிந்து பல நாட்கள் கழித்துக் கூட தமது விருப்பப்படி பல தனியார் கல்வி நிலையங்கள் “வாணிவிழா” என்ற பெயரில் “சரஸ்வதிபூசையை”ச் செய்வதை தாங்கள் அறியாதது ஆச்சரியம். நன்றி வணக்கம்…..

    Reply
  • NANTHA
    NANTHA

    //இப்பொழுது நாம் மதங்களுக்கு எதிராகப் போராடுவதா?ஏகாதிபத்தியத்திற் கெதிராக போராடுவதா? மதங்களின் தூய்மை புனிதத்தைப் பற்றி நீங்கள் விவாதிக்கும் பொழுது ஏகாதிபத்தியத்தின் சார்பாகவே இருக்கிறீர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்.//chandranraja

    இந்துக்கள்/பவுத்தர்கள் தங்கள் மத நம்பிக்கைகளைத் துறந்து கொம்யூநிச்டுக்களாக மாறியதற்கு சான்றுகள் ஏராளம் உண்டு. பூணூலைக் கழற்றி வீசிய கேரளத்து நம்பூதிரிபாடு போன்ற பிராமணர்கள் இன்றும் ஆதாரங்கள்.

    ஆனால் இலங்கையில் இதுவரையில் கத்தோலிக்க/ கிறிஸ்தவ பீடங்கள் அமெரிக்க / பிரிட்டிஷ் அராஜகங்களுக்கு எதிராக வாய் திறந்தது கிடையாது. ஆனால் அவற்றை எதிர்க்கும் கட்சிகளுக்கும் அரசுகளுக்கும் எதிராக அறிக்கைகள் விட்டுக் கொண்டிருக்கிறார்கள். புலிகள் போன்ற கொலைகாரர்களை வளர்ப்பதில் மட்டும் அக்கறை காட்டினார்கள். அப்படியான இவர்கள் எப்படி முதலாளித்துவத்தை எதிர்த்து உழைக்கும் மக்களுக்காக போராட்டம் நடத்துவார்கள்?

    பல்லி சந்நிதி கோவிலில் சூரன் ஆடுபவர் கத்தோலிக்கர் என்றும் வல்லிபுர ஆழ்வார் கோவில் படகு திருவிழாவில் கத்தோலிக்கரின் வள்ளங்கள்தான் என்றும் ஒரு” கதை” விட்டுள்ளார். செல்வச் சந்நிதியின் பூசகர் அல்லது “கப்புறாள” இன்று கனடாவில்தான் இருக்கிறார். அவர் பல்லியின் கதை கேட்டு சிரிக்கிறார்.

    வல்லிபுரக்கோவில் கப்பல் திருவிழாவிற்கு கத்தோலிக்கர்கள் வள்ளம் கொடுத்துவிட்டு ‘பாதிரி” முன்னால் போக முடியுமா? பாதிரிகள் அப்படி தங்கள் ஆட்களை விட்டதாக சரித்திரமே இல்லை. கல்கோவளத்து இந்து மீனவ சமூகம்தான் வள்ளங்களைக் கொண்டு வருவது வழக்கம்!

    பிரபாகரன் பாதிரிகளோடு சேர்ந்தவுடன் எல்லா “மீனவ” சமூகங்களும் கத்தோலிக்கர்கள் என்று பல்லி நினைத்து விட்டதாக தெரிகிறது.

    //எனக்கு சரஸ்வதி சிலை வைப்பவன் யார் என அக்கறை இல்லாததுபோல ஏடுதொடக்குபவன் யார் என்கின்ற அக்கரையும் இல்லை என்பதுவே காரனம்// சாந்தன்
    அக்கறை இல்லாத ஒரு விஷயத்துக்காக “அக்கறையோடு” எழுதி பொருத்திய காரணம் நீங்கள் ஒரு முன்னாள் “இந்து” என்பதுதான் என்பது என் கணிப்பு!

    Reply
  • thurai
    thurai

    //தமிழீழம் கிடைக்க முதலே பாதிரிகள் இந்துக் கோவிலுள் “புலி” என்று கூப்பாடு போட்டு ஏடு துவக்க “இந்து ஐயர்” தேவையில்லை என்று போன பாதிரி சந்திரகாந்தன், அங்கிலிக்கன் பாதிரி பிரான்சிஸ் சேவியர் (இவருடைய மனைவி சிங்களம்) பற்றி மூச்சுவிடாது அதனை மவுனமாக ஆமோதிக்கும் துரை போன்ற “மதம்” மாறினோர் புலிகளோடு தன்னுடைய மதத்து பாதிரிகளுக்கு என்ன முறையில் தொடர்பு என்று சொல்லக் காணோம் ? கொலை அல்லது கொள்ளை ? அல்லது இரண்டுமா?//

    ஏடு தொடக்குவது தமிழர்களிற்கு சொந்தமானதா? இந்துக்களிற்கு மட்டும் சொந்தமானதா? இந்துக்கள் வேறு சைவர்கள் வேறு. தமிழர்களிற்கு உரியது இந்த் சமயமா? அல்லது சைவசமயமா? இதற்கு முதலில் நந்தா பதில் தரட்டும்.

    தமிழர்களின் பண்பாடுகளிலும் பழக்கவழக்கங்களிலும் எல்லா சமயத்தவரும் பங்கு கொள்வதையிட்டு நாம் பெருமைப்பட வேண்டுமே தவிர துவேசத்தை வள்ர்க்கப்படாது. ஏடு தொடக்கும்போது சகல சமயத்திலுள்ள தமிழர்கள் ப்ங்கு கொள்ழும்போது பிற மதக்குருக்கள் பங்கேற்பதில் தவறில்லை.

    இந்துக்கோவில்களின் முன் வேள்விக்கு கடாக்கள் வெட்டுவதற்கும் அதனைப் புசிப்பதற்கும் உடன்பட்டவர்கள் பாதிரிமார் கோவிலுக்குள் செல்வதை மறுப்பதேனோ?

    புலிகளோடு தொடர்புடைய பிராமணர்களோ, பாதிரிகளோ புலிகளென்றே ழைக்கப்படுகின்றார்கள். இதனையும் நந்தா விளங்கிக்கொள்ள வேண்டும்.

    துரை

    Reply
  • Suman
    Suman

    துரை/இருவரும் உங்கள் கிறிஸ்தவத்திற்கு எதிரான கருத்துக்களை தமிழிலும் வேறு மொழிகளிலும் அச்சிட்டு, தனியாக வீதியில் நின்று பிரச்சாரம் செய்வீர்களா// தெருவளியை நின்று அச்சடித்துக் கொடுக்கிறது கிறிஸ்தவர்களே தவிர இந்துக்கள் அல்ல. அது கிறிஸ்தவர்களுக்குச் சரியாக இருக்கலாம். எங்கே ஒரு இந்து மிசன் வைத்து வீடுவீடாய் சென்று கதவுதட்டி இருக்கிற சனத்தைக் குழப்பி குடும்பங்களைக் குலைத்து மதம் வளர்க்கிறார்கள் ஊரிலும் சரி வெளிநாட்டிலும் சரி கணவன் மனைவியைரைப் பிரித்து மதத்துக்கும் கொண்டு போய் குடும்பங்களை சின்னாபின்னப் படுத்துவது கிறிஸ்தவமே தவிர இந்துக்கள் அல்ல.

    / இந்துக்கள் வேறு சைவர்கள் வேறு. தமிழர்களிற்கு உரியது இந்து சமயமா? அல்லது சைவசமயமா? இதற்கு முதலில் நந்தா பதில் தரட்டும்./ துரை உமது கேள்விக்கு நான் பதில் தருகிறேன். இந்துக்கள் வேறு சைவர்கள் வேறு என்பதை எங்கே படித்தீர் துரை? சிவனை வணங்குபவர்கள் சைவர்கள். பல்லாயிரக்கணக்கான மதங்களையும் நம்பிக்கைகளையும் தன்னகத்தே கொண்ட மதங்களை இணைத்து ஒரு மதமானது இந்துமதம். சைவம் என்றும் சமயத்துக் ஏற்றவாறு இருந்ததால் அது சமயமாக இருந்தது. அது சமயமாக இருந்ததால்தான் கிறிஸ்தவம் பெளத்தம் எறியிருந்து கும்மியடித்தது. பல மதங்களைகளைக் கூட தன்னகத்தே உள்வாங்கியதால் தான் இந்து மதமானது, வைவம்; சமணம்; வைணவனம்; சாப்த்தம் கெளமாரம்; என ஆறாக அமைத்தவர் சங்கரர். இதுதான் இன்றைய இந்து மதம். துரை இதுக்கேல்லாம் நந்தா தேவையில்லை சின்னவன் நானே பதில் சொல்வேன்.

    நான் வாழும் நாட்டில் பலகிறிஸ்தவச் சிறார்கள் கோவில் வந்த ஏடு தொடக்குகிறார்கள் ஏன் சாத்திரம் பார்த்தே பல கிறிஸ்தவர்கள் கல்யாணமே செய்யத் தொடங்கியிருக்கிறார்கள். இந்து மதநம்பிக்கை வளரத் தொடங்கியுள்ளதை யாரும் மறுக்க இயலாது. முக்கியமாக வெள்ளையரிடையே வேகமாகப் பரவுகிறது. இருப்பினும் இந்துக்களாக இருப்பவர்கள் தம்மத்திலுள்ள காலத்துக் கொவ்வாத விசயங்களைக் கைவிடுவது முக்கியம். இதற்கு நொண்டிச் சாட்டுகள் வேண்டாம். கிறிஸ்தவம் மறுமதத்வர்கள் திருமணம் செய்வதை மறுக்கிறது. கிறிஸ்தவனாக மாறினால்தான் செய்து வைக்கிறது. இந்துமதம் அப்படியல்ல. பலமதங்கள் ஒன்றாகியது இந்துமதம் ஆனால் ஒன்றாயிருந்த மதம் பலவாக மாறி மனிதரை பிடிப்பதில் தெருத்தெருவாக வீடுவீடாக திரிகிறது கிறிஸ்தவம்.

    எந்தமதம் சிறந்தது என்று வாதாடவேண்டிய அவசியம் இந்துமதத்துக்கு இல்லை. கிறீஸ்துவைக்கூட எம்நாயன்மார்களில் ஒருவராக ஏற்கும் மனநிலையில்தான் இந்துமதத்தவர்கள் உள்ளார்கள் அதை துர்பிரயோகம் செய்து மதம்மாற்ற முயலும் கிறிஸ்தவத்துக்கு எதிராகத்தான் எழுதுகிறோமே தவிர அவரவர்களை அவரவர்களின் நம்பிக்கையுடன் இருக்க விடுங்கள். எனது மனைவியுடன் சிறுவயதில் இருந்தே நட்பாக இருந்த சிநேகிதி வேண்டிய போது உதவிகளும் செய்துவந்தாள் எம்மை கிறிஸ்தவத்துக்கு மாறும்படி அழுத்தம் கொடுத்தபோது நாம் மறுக்க நட்பையே முடித்துக் கொண்டார்கள் அக்குடும்பத்தவர்கள். இருப்பினும் நாம் தொடர்பு கொண்டபோது பைபிளின் ஒரு வசனத்தைக் காட்டினார்கள் கிறிஸ்தவனல்லாத எவனும் உன்வாசலுக்கு வரக்கூடாது என்று இருந்தது. தமிழிலல்ல வேற்று மொழியில். இப்படிப்பட்ட மதம்பிடித்த மதங்களைத்தான் எதிர்கிறோம்.

    Reply
  • Suman
    Suman

    Very Interesting facts!

    Christianity ….One Christ, One Bible Religion…

    But the Latin Catholic will not enter Syrian Catholic Church.
    These two will not enter Marthoma Church .
    These three will not enter Pentecost Church .
    These four will not enter Salvation Army Church.
    These five will not enter Seventh Day Adventist Church .
    These six will not enter Orthodox Church.
    These seven will not enter Jacobite church.
    Like this there are 146 castes in Kerala alone for Christianity,
    each will never share their churches for fellow Christians!
    How shameful..! One Christ, One Bible, One Jehova…..AND YET UTTERLY LACKING IN UNITY, so much so that in N. Ireland they even kill one another.
    Now Muslims..! One Allah, One Quran, One Nebi….! Great unity!
    Among Muslims, Shia and Sunni kill each other in all the Muslim countries.
    The religious riot in most Muslim countries is always between these two sects.
    The Shia will not go to Sunni Mosque.
    These two will not go to Ahamadiya Mosque.
    These three will not go to Sufi Mosque.
    These four will not go to Mujahiddin mosque.
    Like this it appears there are 13 castes in Muslims. Killing / bombing/conquering/ massacring/. .. each other ! The American attack on Iraq was fully supported by all the Muslim countries surrounding Iraq !

    One Allah, One Quran, One Nebi….! Great unity !
    All Muslims are not Terrorists, but all Terrorists are Muslims. Worse of all, almost all victims of Muslim terrorism are Muslims.
    Hindus – They have 1,280 Religious Books, 10,000 Commentaries, more than one lakh sub-commentaries for these foundation books, innumerable presentations of one God, variety of Aacharyas, thousands of Rishies, hundreds of languages.

    Still they all go to All other TEMPLES and they are peaceful and tolerant and seek unity with others by inviting them to worship with them whatever God they wish to pray for!
    Hindus never quarreled one another for the last ten thousand years in the name of religion. Only Politicians had tried to divide and rule… Keep Religion out of Politics and India will be the most peaceful place on earth.

    Reply