கீ போட் மார்க்ஸிஸ்டுகளுக்கும் யதார்த்தத்திற்கும் உள்ள தூரம் : ரி கொன்ஸ்ரன்ரைன்

Conference_in_Jaffna_Univercityயாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பொருளாதார நிலைமைகள் மிகவும் மோசமானவை. யாழ்ப்பாண பல்கலைக் கழகத்திலிருந்து பட்டதாரியாகிய மாணவர்கள் பலர் புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்தாலும் அவர்களிடம் ஏதும் ஒழுங்கமைக்கப்பட்ட சங்கங்கள் இருப்பதாகத் தெரியவில்லை. அரசாங்க மாணியங்களால் ஒதுக்கப்படுகின்ற பணம் அடிப்படை வசதிகளைக்கூட பராமரிக்கக்கூடிய நிலமையில் இல்லை. உதாரணமாக இங்குள்ள வியாபார நிறுவனங்கள் அல்லது தனிப்பட்டவர்கள் தமது பெயரில் அல்லது தமது குடும்பப் பெயரில் தமது வசதிகளுக்கு ஏற்றாற்போல் உதவிகளைச் செய்யலாம்.

உதாரணமாக யாழ்ப்பாண பல்கலைக் கழகத்திற்கு 1987ம் ஆண்டு இந்திய அரசினால் நன்கொடையாக வழங்கப்பட்ட ஒரு பழைய வாகனம் மட்டுமே இன்றுவரை பாவனையில் உள்ளது. வேறு ஒன்றும் இல்லை. யாழ்ப்பாண கல்வி பாரம்பரியத்தை மார்தட்டிச் சொல்லும் சமூகத்திலுள்ள ஒரு பல்கலைக் கழகத்திற்கு இந்த நிலமை.

இன்று புலம்பெயர்ந்த நாடுகளில் இடம்பெறுகின்ற அரசியலுக்கும் அங்குள்ள யதார்த்த நிலமைக்கும் எவ்வித தொடர்புகளும் இல்லை. கடந்த 25 வருடங்களாக புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்து கொண்டு புலியின் அட்டூழியங்களை மட்டும் கதைத்து கொம்பியூட்டர் ஊடாக புரட்சிசெய்த keyboard மார்க்ஸிட் அனைவரும் இப்போது புலம் போய் உங்கள் மாபெரும் வேலைத்திட்டங்களை அமுல்படுத்த ஒரு தடையும் இல்லை.

சாமம் 2 மணிக்குக்கூட வட்டுக்கோட்டைச் சந்தியில் சைக்கிளில் போனால் அங்கு கடமையில் உள்ள ஆமிக்காரன் நிற்பாட்டி சேவை கேட்கும் நோக்கம் இல்லை. இந்த நிலமை வருங்காலங்கிலும் தொடருமோ தெரியாது. ஆனால் இன்றைய நிலமை இதுதான்.

Tilko_HotelTilko_Hotelஇன்று இலண்டனில் இயங்கிவந்த புலிகளின் பெரிய ஆதரவாளராகிய Tilko ஸ்தாபனம் பெரிய Hotel ஒன்றை யாழ்ப்பாணத்தில் நிர்ணயிக்கிறது. பழைய கதைகளைப் பேசி மக்களை இன்னும் துன்புறுத்தாமல் இவ்வாறான வேலைத் திட்டங்களை ஊக்குவிக்க வேண்டும். வெளிநாடுகளில் உள்ள தமிழ் நிறுவனங்கள் வடக்கு கிழக்கு மாகாணத்திற்குச் சென்று தமது நிறுவனங்களை நிறுவி வேலைத்திட்டங்களையும் பயிற்சிகளையும் மேற்கொள்ள உதவிகள் வழங்கப்பட வேண்டும்.

10 பவுண்களுக்கு பூ வாங்கி ஆயிரக்கணக்கானவர்களுக்குப் பின்னால் வரிசையில் சென்று 5 பவுண்களுக்கு விளக்கு வாங்கி அதை வரிசையாக கொழுத்தி வைத்து பின்னர் தமிழ் ஈழத்தின் தேசிய உணவான கொத்து ரொட்டியும், மட்டின் ரோலும் உண்டு வீடு திரும்பும் எமது புலம்பெயர்ந்த விழிப்புப் போராட்டங்கள் முடிவிற்குக் கொண்டு வரப்படல் வேண்டும்.

ஜந்து சதவிகித மக்கள் இருந்து கொண்ட 33 சதவிகித பகுதி நிலத்தை எமது பாரம்பரிய பிரதேசம் என்று கட்டிப்பிடித்து கதறியழும் யதார்த்தமற்ற முட்டாள்தனமான வரட்டு அரசியலுக்கு சாவு மணி அடிக்கப்படல் வேண்டும். தமிழ்பேசும் மக்களின் அரசியல் யதார்த்த நிலைமையை பிரதிபலிக்காவிட்டால் எமது சமுதாயமும் பாலஸ்தீனம் போல் Gaza Strip (ஈழத்து முள்ளிவாய்க்கால்) போன்ற ஒரு பிரதேசத்தில் முடுக்கி வைக்கப்பட்டு காலாகாலமாக மேற்கத்தைய நாடுகளை கையேந்தி வாழும் நிலைமைக்கு கொண்டு செல்லப்படும்.

இந்தியாவை மையப்படுத்தி “மோட்டு சிங்களவனுக்கு” பாடம் படிப்பிக்கும் காலம் எல்லாம் மலையேறிப் போய்விட்டது. இன்று இந்தியாவின் வெளிநாட்டு பாதுகாப்பு கொள்கைகள் எல்லாம் பொருளாதாரத்தையும் பிராந்திய செல்வாக்கையும் மையப்படுத்தி மேற்கொள்ளப்படுகின்றது. புலம்பெயர் தமிழ் மக்கள் வேண்டும் என்றால் பொய் கூறி புலமை பெற்று, கொழுத்துப்போய் இருக்கும் வெறும் புஸ்வாணங்களாகிய சீமான், வைகோவை அழைத்து மட்டின் ரோல் கொடுத்து விழா நடத்தலாம். இல்லாவிடில் இன்னும் நான்கு அப்பாவித் தமிழர்களை தீக்குளிக்க வைத்து இங்கு குளிர் காயலாம். இவை ஒன்றும் மண்ணில் வாழும் மக்களுக்கு எவ்வித சுபீட்சத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை.

யாழ்பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் சண்முகலிங்கம்இன்றைய அரசியல் பொருளாதாரத்தையும் வாக்குப் பலத்தையும் அடிப்படையாக கொண்டது. யதார்த்தத்திற்கு அப்பாற்ப்பட்ட அரசியல்கள் மக்களின் அவலங்களை அதிகரிக்கும். 1980 ம் ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது இன்றைய யாழ்  சனத்தொகை 50 விகிதம் குறைவாக இருக்கின்றது யாழ்ப்பாண வைத்தியசாலை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் ஏற்படுகின்ற வெற்றிடங்களுக்கு விளம்பரங்கள் பிரசுரிக்கப்படும்போது சிங்களவர்களின் விண்ணப்பங்களே தரமானவையாக இருப்பதாயும், இதனால் தாம் சிங்களவர்களை வேலைக்கு அமர்த்த வேண்டிய நிலைமையில் இருப்பதாக யாழ் வைத்திய அதிகாரி டாக்டர் தேவதாஸன் மற்றும் யாழ் பல்கலைக்கழக் துணை வேந்தர் பேராசிரியர் சண்முகலிங்கம் அவர்களும் தெரிவிக்கின்றார்கள். யதார்த்தம் இதுதான்.

வவுனியாவில் தனிமையில் வாடும் புத்தர்30 வருடங்களுக்கு முன்பு ரூட்டிங் வந்த நாங்கள் மூலைக்கு மூலை கோயில் வைத்து நடு சமர் காலங்களில் நடுரோட்டில் வெறுமனே நின்று தேங்காயை உடைத்து (Health and safety hazard) வீதியெல்லாம் குத்துக்கரணம் அடித்து எமது மதச்சடங்குகளை பின்பற்ற வேண்டும். நடு அநுராதபுரச் சந்தியில் பிள்ளையார் மிகவும் சந்தோசமாக இருக்கிறார். வடக்கு கிழக்கு மாகாணத்தில் கல்லாக உள்ள புத்தர் எங்களுக்கு என்ன கெடுதியை கொண்டுவரப் போகிறார்? Traffic Jam கொண்டு வருகிறாரா? அல்லது Health and safety issue …?

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆயுத எழுச்சிக்கும், பழைமையை மையப்படுத்தி நடாத்தப்படுகின்ற அரசியலுக்கும் சாவு மணி அடிக்கப்படும் வரை தமிழ்பேசும் மக்களுக்கு விடிவு கிடையாது. இன்று சிறுபான்மையான தமிழினம் இன்னும் சிறுபான்மையாகி விட்டது. பாரம்பரிய தமிழ்பிரதேசம் வடக்கு கிழக்கு மாகாண இணைப்பு போன்ற அரசியல்வாதங்கள் செயலற்றதாகப் போயுள்ளது. இன்று ஜக்கிய இலங்கைக்குள் அனைத்து மக்களும் பாதுகாப்பாகவும் செழுமையாகவும் வாழ்வது காலத்தின் ஒரு கட்டாயத் தேவை.

Show More
Leave a Reply to Supu Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

49 Comments

  • ஜீவகன்
    ஜீவகன்

    // உதாரணமாக யாழ்ப்பாண பல்கலைக் கழகத்திற்கு 1987ம் ஆண்டு இந்திய அரசினால் நன்கொடையாக வழங்கப்பட்ட ஒரு பழைய வாகனம் மட்டுமே இன்றுவரை பாவனையில் உள்ளது. வேறு ஒன்றும் இல்லை. யாழ்ப்பாண கல்வி பாரம்பரியத்தை மார்தட்டிச் சொல்லும் சமூகத்திலுள்ள ஒரு பல்கலைக் கழகத்திற்கு இந்த நிலமை.//

    இது ஒரு சரியான தகவல் அன்று, இன்று யாழ் பல்கலைக் கழகத்தில் இரண்டு பேரூந்துகள் பாவனை நிலையில் இருக்கிறது, ஒன்று யாழ் பல்கலைக் கழகத்தின் நிர்வாகப் பிரிவின் கீழுள்ளது மற்றது மருத்துவ பீடத்தின் கீழுள்ளது. இரண்டு பேரூந்துகளும் இரண்டாயிரமாம் ஆண்டுக்குப் பின்பே பல்கலைகழகத்துக்கு கிடைக்கப் பெற்றவை. நிர்வாகப் பிரிவின் கீழுள்ள 40 இருக்கை பேருந்து இந்திய உயர் ஸ்தானியர் அலுவலகத்தால் 2003 இல் கிடைக்கப்பெற்றது, மருத்துவ பீடத்தினதுவும் அதே காலப்பகுதியில் பல்கலைக் கழக உதவித் திட்டத்தின் மூலம் கிடைக்கப் பெற்றது. 1987 இல் இந்திய அரசு வழங்கிய பேருந்து அப்போதே எரிந்து விட்டது என்று நினைக்கிறேன். நன்றி.

    Reply
  • Roman
    Roman

    சேனன், தமிழ் சொலிடாரிட்டி, சோஷலிச கட்சி மற்றும் ஏனைய கீ போட் மார்க்சிஸ்டுகளும் இந்தக் கட்டுரைக்குப் பின்னர் என்ன சொல்லப் போகின்றனர்.

    மகிந்தவை தோற்கடிப்பதற்காக ஐரோப்பிய பாராளுமன்றம் போகாமல் இனியாவது நடை முறைக்கு சாத்தியமான முன்னெடுப்புகள் தேவை

    Reply
  • Gajan
    Gajan

    கடந்த 25 வருடங்களாக புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்து கொண்டு புலியின் அட்டூழியங்களை மட்டும் கதைத்து கொம்பியூட்டர் ஊடாக புரட்சிசெய்த keyboard மார்க்ஸிட் அனைவரும் இப்போது புலம் போய் உங்கள் மாபெரும் வேலைத்திட்டங்களை அமுல்படுத்த ஒரு தடையும் இல்லை./
    முந்தி உங்களுக்குப் புலி பிரச்சினை எண்டீங்கள். ஒண்டையும் செயற்படுத்த புலி விடாது எண்டீங்கள். இப்ப அங்கை போறதுக்க என்ன பிரச்சினை. ஒரு லப்ரொப்பைத் தூக்கிக்கொண்டு போகலாம்தானே

    Reply
  • தமிழ்வாதம்
    தமிழ்வாதம்

    மொத்தத்தில் “புலிக்கிறைச்ச மாதிரி, இப்பவும் கண்ணை மூடிக் கொண்டு அங்கை காசைக் கொட்டுங்கோ” எண்டு சொல்ற மாதிரிப் படுகுது.

    Reply
  • Roman
    Roman

    கீ போட் மார்க்சிஸ்ட்கள் உடனடியாக யாழ்ப்பாணம் போவது மிகவும் முக்கியமானது. இவர்கள் சேவை முன்னேப்போளுதிலும் பார்க்க முக்கியமாக தேவைப்படுகின்றது.

    புலம் பெயர்ந்த கீ போட் முதலாளிகள், லண்டன் புலி முதலாளிகள், யாழ்ப்பாண வெள்ளைவான் முதலாளிகள் இன்னும் மிஞ்சி இருக்கும் புலி / சருகு புலி முதலாளிகள் அனைவரையும் சமாதானப்படுத்தி வடக்கின் வசந்தத்தை பூத்துக் குலுங்கும் நிகழவாக்கும் சித்தாந்தம் வைத்திருகின்றார்கள்.

    மாண்புமிகு மந்திரி தோழர் டக்லஸ் தேவானந்த பலாலி விமான நிலையத்தில் வரவேற்கும் ஒழுங்குகளை செய்தால் இவர்கள் தங்கள் மடிக் கணனியுடன் விமானம் ஏறுவார்கள்.

    Reply
  • leftist
    leftist

    திரு கொன்ஸ்ரன்ரைன்
    புரட்சி என்பது ஒரு இரவில் நடப்பதல்ல. அதற்க்கு நிறையக் கதைக்க வேணும். உதாரணத்திற்கு கொக்கோலா குடித்துக் கொண்டே அமெரிக்க ஏகாதிபத்தியம் பற்றி நாம் விரிவாக உரையாட வேண்டியிருக்கிறது. சாதியம் ஒரு மிக மோசமான அடக்குமுறை என்பதால் அதனை எதிப்பது தொடர்காவும் புரட்சி தொடர்பாகவும் லுசியம் சிவன் கோயில் மண்டபத்தில் நாம் உரையாட வேண்டியிருக்கிறது.

    நாசமறுந்த புலி இவ்வளவு கெதியா துலைந்து போகும் என்று யார் எதிர்பார்த்தது. உடனே போய் புரட்சிகர வேலைகளைப் பார்க்கச் சொன்னால் மனிசி பிள்ளைகள் லெவின் பிளஸ் எக்சாம் எண்டு வீட்டுப் புரட்சி வேலைகளை யார் கவனிக்கிறது.

    லெனின் சொல்லியிருக்கிறார். எவன் ஒருவன் கணனிக்கு முன் இருந்து கணக்கு விடுறானோ அவனே ஒரு மாபெரும் புரட்சியாளன் என்று.

    மாவோ சொல்லியிருக்கிறார். எவன் ஒருவன் புலி புலி என்று புலுடா விடுகிறானோ அவன் புலி அழிந்தபின் சிவன் கோயில்களிலும் அம்மன் கோயில்களிலும் கூட்டம் நடாத்துவான் என்று.

    Reply
  • NANTHA
    NANTHA

    மார்க்சிஸ்டுகள் “ஈழம்” கேட்கவுமில்லை. அந்த “கூத்தை” ஆதரிக்கவுமில்லை. மார்க்சிஸ்டுகள் மீது “பாயும்” இவர்கள் “மார்க்சிஸ்டுகளை” கொலை செய்த புலிகளோடு சேர்ந்து “ஈழம்” என்று புலம்பிய கத்தோலிக்க பாதிரிகள் பற்றியோ அவர்களின் “வங்கிக் கொள்ளைகள்” பற்றியோ மவுனம் சாதிக்காது, இந்த பாதிரிகளுக்கு “கோவில்கள்” கட்ட எப்படி பணம் கிடைக்கிறது என்று திருவாய் மலர்ந்தால் நன்றாக இருக்கும்.

    தவிர இந்த யாழ் பல்கலைக் கழகம் என்பது யாழ் இடது சாரிகளின் ஒத்துழைப்போடு ஸ்ரீ மாவோ அரசினால் நிர்மாணிக்கப்பட்டது என்ற உண்மையை இந்த “தமிழ்” பற்றாளர்கள் இதுவரை எங்கும் குறிப்பிடவோ அதற்கு ஒரு நன்றி (பெயரளவில் தானும்) சொல்லவோ தயாரில்லை. சிலவேளைகளில் “கிறிஸ்தவ” செல்வநாயகத்தின் கருணையினால்தான் இந்த பல்கலைக் கழகம் கொண்டு வரப்பட்டது என்று “கதை” விடவும் முயலக் கூடும்.

    கறையான் புற்றெடுக்க கஜேந்திரன் கோஷ்டி யாழ் பல்கலைக் கழகத்தில் “ஓசியில்” தின்று கொட்டமடித்த கதைகளை பற்றியும் சொன்னால் நல்லது.

    இந்த கட்டுரை எழுதியவர் “தேங்காய்” உடைப்பது முதல் “தீபம்” ஏற்றும் இந்துக்களின் பல வழிபாடுகளை நிறுத்த வேண்டும் என்று சொல்கிறார். புலிகளும், கத்தோலிக்க கூட்டமும் இந்த வழிபாடு முறைகளைக் கையில் எடுத்து நிறைய சம்பாதித்துள்ளனர்.

    அதே நேரத்தில் கனடாவில் கத்தோலிக்க பாதிரிகள் “புலி” என்று இந்து கோவில்களுக்குள் புகுந்து ஏடு தொடக்க புறப்பட்டது எப்படி என்றும் சொன்னால் நல்லது.

    பருத்தித் துறையிலும் வன்னியிலும் இந்துக்களின் மத்தியில் “கத்தோலிக்க” கோவில்கள்” கட்ட வேண்டாம் என்றும் சொன்னால் நல்லது.

    Reply
  • DEMOCRACY
    DEMOCRACY

    /புலம்பெயர் தமிழ் மக்கள் வேண்டும் என்றால் பொய் கூறி புலமை பெற்று, கொழுத்துப்போய் இருக்கும் வெறும் புஸ்வாணங்களாகிய சீமான், வைகோவை அழைத்து மட்டின் ரோல் கொடுத்து விழா நடத்தலாம். இல்லாவிடில் இன்னும் நான்கு அப்பாவித் தமிழர்களை தீக்குளிக்க வைத்து இங்கு குளிர் காயலாம். இவை ஒன்றும் மண்ணில் வாழும் மக்களுக்கு எவ்வித சுபீட்சத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை./—-

    இதில் ஏன் நீங்கள் தொல்.திருமாவளவனை சேர்க்கவில்லை!, கிருஸ்தவ என்.ஜி.ஓ. க்களின் பாதுகாவலராக இருக்கிறார் என்பதற்காகவா?. பட்டுக்கோட்டை அழகிரி, மறைந்த கா.காளிமுத்து தன் புத்தகத்தில் குறிப்பிட்ட, “வட்ட செயலாளர் செல்வம்” போன்றவர் காலத்தில், கைக்காசை போட்டு தி.மு.க.வுக்காக கொடிகட்டிய “மத்திய தர வர்கம்”, தற்போது, அரசியல் தலைவர்கள் “கம்பெனி முதலாளிகள்” போல் தொண்டர்களை, “சம்பளமில்லாத கம்பெனி ஊழியர்கள்” போல், ஆகிவிட்டதால், “வேலை வெட்டியை பார்க்கப் போய் விட்டனர்”!. ஆனால் கூலிக்கு ஆள் பிடித்து விடுகிற மாதிரி, கட்சி வேலை செய்ய வருகிறவர்கள் தற்போது, “தலித்துக்கள் என்ற போர்வையில் வரும்”, என்,ஜி.ஓ. களின் அடியாட்களே!.

    கண்டபடி கோடி, கோடியாக வீட்டுமனைகளின் விலை உயர்ந்துவிட்ட, சென்னை நகரில், “அதிஉயர் பகுதியாக” இருக்கும் “சென்னை போட்கிளப் ரோட்டில்”(கலாநிதி மாறன் வீடு உள்ள இடம்), பெரும்பாலான இடங்கள், “கத்தோலிக்க திருச்சபைக்கு” சொந்தமானதாகும் .கலாநிதி மாறன்கள் பயின்ற “லயோலா கல்லூரியும்”, ஒரு கத்தோலிக்க நிறுவனமே!. யாழ்ப்பாண முஸ்லீம்களுக்கு எதிராக 1993 ல் திரண்ட கருத்து மாதிரி, தற்போது கத்தோலிக்கருக்கு எதிராக கருத்தை திரட்டவில்லை!. கிரிஸ்தவ அமைப்புகளுக்குள், பலவிதமான திசைகளும், “இன்டரஸ்டுகளும்” உண்டு. ஆனால் தற்போது “குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க” சில அரசியல்வாதிகள், தான் மறைந்த பிறகு எக்கேடு கெட்டால் என்ன என்று தங்கள் அனுபவங்களை “கிரிமினலாக”, “நாசுக்கான விஷ விதைகளாக விதைக்கிறார்கள்”!.

    Reply
  • jeevendra
    jeevendra

    ரோமன் நீங்கள் கட்டாயம் திரு சேனனின் ஜரோப்பிய பாராளுமன்ற உரையை முழுமையாக கேட்க வேண்டும். அதன் பின்னரே தான் கருத்து எழுதுவது சரியாகும்.

    Reply
  • john
    john

    //தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆயுத எழுச்சிக்கும், பழைமையை மையப்படுத்தி நடாத்தப்படுகின்ற அரசியலுக்கும் சாவு மணி அடிக்கப்படும் வரை தமிழ்பேசும் மக்களுக்கு விடிவு கிடையாது//

    இப்பதான் சங்கரியாரும் சம்பந்தரும் இலங்கை பாராளுமன்றத்தில் நேற்று கூடி கதைத்துள்ளனர். அடுத்து இந்த சனங்களை எப்படி ஏமாற்றுவது அடுத்த 30 வருடங்களுக்கு என்று இவர்களது ஜடியாக்கள் இம்முறை கீரிமலையில் சாம்பல் கரைக்கப்பட வேண்டும் இல்லையேல் திரும்பவும் தொல்லைதான்

    Reply
  • msri
    msri

    கொன்ரன்ரைன்> எல்லோரும் கீபோட்டின் முன்னால் (நீங்கள் ஜெயபாலன் நாவலன் அசோக் ரயாகரன் ஜமுனா காதர் முதல் சிவத்தம்பி சிவசேகரம் செந்தில் டொமினிக்ஜீவா சோமவன்ச வரை) இருந்துதான் மார்க்கசிஸ கட்டுரை கவிதை முதல கட்டுடைப்பும் செயகின்கின்றார்கள். தயவு செய்து இவர்களை “கீபோட்” “யதார்த்தத்திற்கு” ஊடாக பிரியுங்கள் பார்ப்போம். இப்பிரிவினைக்கு ஊடான> உங்கள் வகையறாவிற்கு ஊடாக> நாம பலதை கற்கமுடியும்!

    Reply
  • NANTHA
    NANTHA

    இங்கு சிலர் “மார்க்சிஸ்டுகள்” தான் ஈழம் கேட்டவர்கள் என்றும், அதனால்தான் தமிழர்கள் இப்போது கஷ்டப்படுகிறார்கள் என்ற பாணியில் எழுதியிருப்பது மிகவும் கேவலமானதாகும். இடதுசாரிகள் எப்போதும் “ஈழம்” என்ற அல்லது “தமிழ்” என்ற கூத்துகள் ஆடியது கிடையாது.

    கட்டுரையாளரின் “பிரச்சார” நோக்கம் திசை திருப்பலே ஆகும். இவர்கள் போன்றவர்கள் பின்னர் மார்க்சிச்டுகளினால்தான் “ஈழம்” கிடைக்கவில்லை என்றும் அவர்களைப் போட்டுத்தள்ள வேண்டும என்றும் எழுதுவார்கள்.

    ‘தமிழ்’ என்று சத்தமிட்டு தமிழர்களை கள்ளகடத்தல் கிரிமினல்களின் பின்னாலும், கத்தோலிக்க பாதிரிகளின் பின்னாலும் போகச் செய்த “தமிழ்” சூரர்கள் முதலில் கடந்த முப்பது ஆண்டுகளிலும் சாதித்ததை சொல்ல வேண்டும். அதனைச் சொல்லாமல் “மார்க்சிஸ்டுகள்” என்று சொல்வது தங்களின் போக்கிரித்தனங்களை மறைத்து “பழியை” யார் மீதாவது சுமத்தவேண்டும் என்பதாகும்.

    கட்டுரை எழுதியவர் புலிகளின் அராஜகங்கள், அவற்றால் பாதிக்கப்பட்ட மக்கள் என்று எவரையும் சந்திக்காமல் வந்தது எப்படி?

    ஆனால் தற்போது கத்தோலிக்க/ கிறிஸ்தவ பாதிரிகள் “இந்த ஈழம்” இந்துக்களின் விளையாட்டு என்று சிங்களவர்களிடையே ஓர் கதையை எடுத்து விட்டுள்ளனர். கத்தோலிக்க பாதிரிகள் புலிகளின் பங்காளிகளாக ஏன் இருந்தனர் என்று கட்டுரையாளர் கண்டிப்பாக எழுத வேண்டும். இவர் போன இடத்தில் “அந்தோனிகளை” அதிகம் சந்தித்துவிட்டு வந்து இங்கு எழுதியுள்ளார்.

    புலி பற்றியும், அவர்களின் கொலைகார பங்காளிகளான கத்தோலிக்க பாதிரிகள் பற்றியும் “மூச்சு” காட்டாத இந்த கட்டுரையாளர் தனது மதபீடத்தின் (கத்தோலிக்க) பிரச்சாரமாக வந்து கதைகள் சொல்லுகிறாரே ஒழிய வேறொன்றும் இல்லை!

    Reply
  • roman
    roman

    மில்லியன் டொலர் கேள்வி:
    கீ போட் மார்க்சிஸ்ட்குகளுக்கும் யதார்ததிட்கும் உள்ள தூரம், கீ போட் முதலாளிகளுக்கும் டக்ளசின் வெள்ளை வானுக்கும் உள்ள தூரத்திலும் கூடவா, குறைவா அல்லது சமமா? விடை கட்டாயம் ஒன்றாக இருக்க வேண்டும் என்றில்லை. அறிஞர்களே, நண்பர்களே நிதானமாக சிந்தித்து விடை சொல்லுங்கள். யாழ்ப்பாணத்தின் பொருளாதார வெற்றி இந்த விடையில் தான் தங்கியிருக்கின்றது. சிங்கப்பூரா அல்லது சில்லாலை சுடலையா? என்பதை தீர்மானியுங்கள்.

    கீ போட் மார்க்சிஸ்ட்களின் அச்சுறுத்தலுக்கு இனி இடம் கொடுக்காதீர்கள். இவர்கள் சொல்லவதை நம்பி சனங்கள் உண்மையிலேயே யாழ்ப்பாணத்தில் இன்னும் இராணுவமுகாம் இருக்கு என்று பயப்படப் போகிறார்கள்.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    ரோமன் ரி.கொன்சான்ராயின் போன்றவர்கள் “கீபோட் மாக்ஸிசிஸ்டுகள்” என்று சொல்லும்போது கீபோட் மாக்கிஸம் இல்லாதவர்கள் எப்படியிருப்பார்கள் என்பதைசொல்ல வேண்டிய தேவையிருக்கிறது. ரோமனின் கருத்தை விட்டு கொண்டாலும் ரி.கொண்சான்ரையின் அடுத்த கட்டுரையை எப்படி புனைவது என்பதைவிட்டு இந்த “கீபோட்” விட்டு அசல் மாக்ஸிட்டுக்கள் எப்படியிருப்பார்கள் என்பதற்கு விளக்கம் தருவார் என நாம் நம்புகிறோம்.
    சரியோ பிழையோ கடந்தகாலத்தில் மாக்ஸிடுகளுக்கு எதிராகவே தனது வாழ்நாளை செலவழித்து வந்தார் என்பதே நான் காணக்கூடியதாக இருக்கிறது ரி.கொன்சான்ராயின். இதுவொரு பிராமணப்பூணை என்பதே எனது அபிப்பிராயம். மாற்று அபிப்பிராயம் யாராவது தேசம்நெற்றில் கொண்டிருந்தால் அவர்களின் அபிப்பிராயத்தையும் கேட்க காத்திருக்கிறேன்.

    Reply
  • NANTHA
    NANTHA

    ரோமன்:
    டக்ளசின் வெள்ளை வான் கதை புலிகளின் கதை முடிந்தவுடன் நின்றது எப்படி? கீபோர்ட் “புலிகளின்” பிரச்சாரம் தோல்வி என்பதின் அறிகுறிதான் அது. டக்லஸ் இப்போதும் இருக்கிறார். புலிகளின் “கூவலில்” இருந்த” அந்த வெள்ளை வான் என்ன ஆச்சு? புலிகள் தொலைந்தவுடன் “வெள்ளை வான்” கடத்தலும் நின்று போனது எப்படி?

    யாழ் மக்களின் பொருளாதாரத்தை சீரழித்தவர்கள் புலிகளும் அவர்களுடைய வால்களுமே தவிர வேறு யாருமில்லை. புலிகளின் பங்காளிகளான உழைப்பில்லாத கத்தோலிக்க பாதிரிகளும் இதில் அடக்கம். புலிவால்கள் “பொருளாதாரம்” பற்றி இப்போது கதைப்பதும், பொருளாதாரத்தையே அடிப்படையாக கொண்டு இயங்கும் மார்க்சிஸ்டுகளின் மேல் “கல்” எறிவதும்” மிகவும் கேவலம்.

    மார்க்சிஸ்டுகளுக்கு எதிராக கதைப்பவர்கள், யாழ்ப்பாணத்துப் பொருளாதாரப் பிரச்னைக்கு “மார்க்சிஸ்டுகள்”தான் காரணமென்று ஒரு துரும்பளவு காரணத்தையாவது காட்ட முடியுமா?

    யாழ்ப்பாணத்துப் பொருளாதார பிரச்சனை அல்லது எந்தப் பிரச்சனையாவது தோமா சவுந்தரனாயகத்தின் முன்னால் முட்டுக்காலில் நின்று “ஏசுவே எனக்கெல்லாம் சாமியே” என்று பாடியவுடன் தீர்ந்துவிடும் என்று கூறுகிறீர்களா அல்லது மார்க்சிஸ்டுகளைப் போட்டுத்தள்ளினால் தீர்ந்துவிடும் என்று சொல்லுகிறீர்களா?

    Reply
  • Archana
    Archana

    தேசம்நெற் ஆசிரியருக்கு
    தேசபக்தன் போன்றவர்களின் தரமான கட்டுரைகள்தான் நான் தேசம்நெற்றை வாசிக்கக் காரணமாக அமைந்தது. ஆனால் யதார்த்தம் என்பதற்கு விளக்கம் தெரியாதவர்களின் எழுத்துக்களைப் பிரசுரித்து உங்கள் பக்கங்களை வீணாக்குகிறீர்கள்.
    யதார்த்தம் என்பது றியலிசம். நிலைமைகளை உள்ளபடி பார்ப்பது இயற்பண்பு (நச்சுரலிசம்) என்பது பேராசிரியர் கைலாசபதியின் ஆய்வு. இதன் பிரகாரம் யதார்த்தம் என்பது உள்ள நிலைமைகளை ஊடறுத்துப் பார்த்தலே. கார்ல் மாக்ஸ் உலகை ஊடறுத்துப் பார்த்ததனால்தான் மூலதனம் பிறந்தது.
    இதை பேனையிலும் செய்யலாம்… கீபோர்ட் முறையிலும் முனையலாம். தவறேதும் இல்லை. இணக்க அரசியல் என்று கூறி இனத்தின் இருப்புக்கு வேட்டுவைப்பவர்கள் சார்பாக எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக்கொளகிறேன். நன்றி

    Reply
  • SURESH
    SURESH

    /Krupp was an indirect participant in the German genocide, and according to one of his own employees, ironically called by his defense, even when it was clear that the war was lost,
    “Krupp considered it a duty to make 520 Jewish girls, some of them little more than children, work under the most brutal conditions in the heart of the concern, in Essen.” Where he surprised many by supporting the Indian nationalist, Subhash Chandra Bose./- Friedrich Krupp (1787–1826),Otto Eduard Leopold von Bismarck (1 April 1815 – 30 July 1898)-Frederick William Victor Albert) (27 January 1859 – 4 June 1941) was the last German Emperor and King of Prussia, Franz Joseph Hermann Michael Maria von Papen zu Köningen(29 October 1879 – 2 May 1969) was a German nobleman, Roman Catholic monarchist politician(Papen also served as intermediary between the Irish Volunteers and the German government regarding the purchase and delivery of arms to be used against the British during the Easter Rising of 1916, as well as serving as an intermediary with the Indian nationalists in the Hindu German Conspiracy.);,ChempakaramanSeptember 15, 1891–May 26, 1934.had the privilege of being the Foreign Minister of the Provisional Government of India set up in Afghanistan in December 1915, with Raja Mahendra Pratap of Kabul as President.,The economic downturn in India during the early nineteenth century witnessed a high level of emigration. Some of these emigrants settled in North America. These included Punjabis as well as people from other parts of India. The Canadian government decided to curtail this influx with a series of laws, which were aimed at limiting the entry of South Asians into the country and restricting the political rights of those already in the country. The Punjabi community had hitherto been an important loyal force for the British Empire and the community had expected, equal welcome and rights from the British and Commonwealth governments as extended to British and white immigrants. These laws fed growing discontent, protests and anti-colonial sentiments within the community.The Ghadar Party, initially the Pacific Coast Hindustan Association, was formed in 1913 in the United States under the leadership of Har Dayal, with Sohan Singh Bhakna as its president. The members of the party were Indian immigrants, largely from Punjab.

    Reply
  • Roman
    Roman

    ///jeevendra on February 12, 2010 9:43 pm
    ரோமன் நீங்கள் கட்டாயம் திரு சேனனின் ஜரோப்பிய பாராளுமன்ற உரையை முழுமையாக கேட்க வேண்டும். அதன் பின்னரே தான் கருத்து எழுதுவது சரியாகும்/////

    முழுமையாக கேட்டேன். எனது கருத்தில் ஒரு திருத்தம். இவர் ஒரு அரை கீ போட் மார்க்சிஸ்ட். மகிந்த ராசபக்சவின் அரசாங்கம் பற்றி கடும் விமர்சனம் வைக்கின்றார். GSP + ரத்து செய்யப்படவேண்டும் என்றும் கூறுகின்றார். இதுதான் பிரித்தானிய பத்திரிகைகளினதும், அரசாங்கத்தினதும், எதிர்கட்சியினதும் கோரிக்கை. ஐரோப்பிய அரசாங்கங்கள் ராசபக்ச ஆட்சிக்கு கொடுத்த இராணுவ, நிதி, அரசியல் உதவி தொடர்பாக இவர் வாய் திறக்கவில்லை.

    இந்த அடித்தளத்தில் பார்த்தால் இவர் முழுமையான கீ போட் மார்க்சிஸ்ட் என்று கூட சொல்ல முடியாது. ஜெயபாலன், சோதிலிங்கம், கொன்ஸ்ரன்ரைன் என்ற முன்னணி பத்திரிகை நிபுணர்களுக்கும் இவருக்கும் என்ன அரசியல் உறவு இருக்கின்றது என்பது தெரிய வேண்டும்.

    அதன் பின்னர் இவர் முழுமையான கீ போட் மார்க்சிஸ்ட் பக்கம் செல்கின்றார அல்லது கீ போட் முதலாளிகள் பக்கம் செல்கின்றார என்பதை கண்டு பிடிக்கலாம். அத்துடன் என்ன வேகத்தில், எவ்வளவு தூரம் எந்த யதார்த்தத்தை நோக்கிய பயணம் என்பதையும் அறிந்து கொள்ளலாம்

    Reply
  • அல்லைப்பிட்டியான்
    அல்லைப்பிட்டியான்

    திரு. கொண்ஸ்ரான்ரின் அவர்களுக்கு!

    உங்கள் கட்டுரையில் வெளியிடப்பட்ட அல்லைப்பிட்டி முருகன் ஆலய மீள்(பிரமாண்டமான) புனரமைப்பு சம்பந்தமான தகவலுக்கு, அந்த மீள்புனரமைப்பில் நேரடியாக தொடர்புடையவன் என்றவகையில் சில உண்மைகளை உங்களுக்கு அறியத்தருகிறேன். அல்லைப்பிட்டி கிழக்குப்பகுதியை வதிவிடமாகக் கொண்ட மக்கள் கடந்த 1987 ம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாகப் பல இராணுவத்தாக்குதலுக்கு உள்ளானவர்கள். பலர் இராணுவத்தால் பலியெடுக்கப்பட்டிருந்தனர். மேற்படி இராணுவத்தாக்குதலில்லிருந்து தப்புவதற்கும், அடைக்கலம் தேடுவதற்கும் அவர்கள் மிகத்தூர இடங்களிலுல்ல ஆலயங்களை நோக்கியே செல்ல வேண்டியிருந்ததது. இதன் காரணமாகவே, அந்த மக்களை காப்பாற்றும் பொருட்டு, புலம்பெயர்ந்த ஊர்நலன்விரும்பிகள் சிலரால் 2004 ம் ஆண்டளவில் இவ்வாலயம் பிரமாண்டமாக மீளப்புனரமைக்கப்பட்டது. இதன் பின்னர் நடந்த இராணுவத்தாக்குதல்களுக்கு அல்லைப்பிட்டி கிழக்கு மக்கள் இவ்வாலயத்தையே தாங்கள் தஞ்சமடையும் ஒரு இடமாகப் பாவித்து தங்கள் உயிர்களை காப்பற்றியிருந்தனர். இந்த அளப்பரிய, தந்திரோபாயமான சேவைக்கு, அங்கு தஞ்சமடைந்திருந்த பலர் எமக்கு நேரடியகவே நன்றி தெரிவித்திருந்தனர். மாறாக தாங்கள் கருதுவதுபோல் எந்த விளம்பரங்களுக்காகவோ அல்லது விலாசங்களுக்ககவோ இவ்வாலயம் பிரமாண்டப்படுத்தப்படவில்லையென்பதை தங்கள் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன்.

    -அல்லைப்பிட்டியான்

    Reply
  • Velan
    Velan

    பிச்சை வேண்டியவன் பிச்சை எடுத்தே திரிவான் முன்னேற வழி பார்க்கான்! 1995 ல் இருந்து சிங்கள அரசாங்கம் என்ன செய்தது யாழ் குடாநாட்டுக்கு?? வெளிநாட்டில் இருப்பவர் யாழ் குடாநாட்டுக்கு உதவவந்தால் சிங்களத்துக்கும் கப்பம் கொடுக்க வேண்டும் இறுதியில் அவர்களையும் புலி ஆக்கி பிடித்து உள்ளுக்கு போட்டு அவர் அவர் சொத்துகளையும் அபகரிப்பர். டக்லஸ் என்ன செய்தவர் இவ்வளவு காலமும்? வெளி நாட்டு நன்கொடைகள் எல்லாம் சிங்கள நாட்டு அபிவிருத்திக்கு குடாநாட்டு அபிவிருத்திக்கு வெளி நாட்டு தமிழர் உதவ வேண்டுமா ?/
    சுனாமி நன்கொடைகள் எல்லாம் எங்கே? இங்கு இருந்து அனுப்பும் உபகரணங்களுக்கு சிங்கள அரசாங்கம் வரி அறவிடும் (THIS IS CALL DOUBLE DIPPING) புலி முடிந்தது இப்ப நீங்கள் நாடகம் ஆடத் தொடக்கி விட்டீர்கள்
    SRI LANKA IS A SOVERIGN STATE LET THA GOV DEVELOPE THE COUNTRY THAT IS THE GOV RESPONSIBLE NO TO CORRUPT THE COUNTRY

    Reply
  • BC
    BC

    சந்திரன், நான் நினைக்கிறேன் புலி, அரசாங்கம், எல்லா கட்சிகளும் மக்கள் விரோதிகள் என்றும் தாங்களே மக்கள் மீது அக்கறை கொண்டவர்கள் என்று சொல்லி கொண்டு வெளிநாட்டின்(முதலாளித்துவத்தின்)சுகத்தை அனுபவித்தபடி
    கீபோட்டில் மார்க்சிய புரட்சி எழுதுவோரை தான் கீ போட் மார்க்சிஸ்ட் என்று கொன்சான்ராயின் குறிப்பிடுகிறார். கீபோட் மார்க்சிஸ்ட்டுகளுக்கு இலங்கையில் தமிழர் வாழ்வு படிப்படியாக சீரடைய தொடங்குகிறது என்ற யதார்த்தம் பிடிக்காது.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //…SRI LANKA IS A SOVERIGN STATE LET THA GOV DEVELOPE THE COUNTRY THAT IS THE GOV RESPONSIBLE NO TO CORRUPT THE COUNTRY….//வேலன்,

    நீங்கள் சொல்வது மிகச்சரி. தன்னைப்பற்றி SOVERIGN STATE எனச் சொல்லும் ஸ்ரீலங்கா அரசு தமிழருக்கு உதவி செய்யச்சொல்லி ‘புலம்பெயர் தமிழரிடம் காசு கேட்பது நல்ல வேடிக்கை! ஆனால் இவர்கள் இதற்கெல்லாமா வெட்கப்படுவார்கள்? புலிகலை எதிர்க்க ‘ஏகாதிபத்திய’ அமெரிக்காவின் காலில் மண்டியிடும் சோசலிசவாதிகள் கொண்டதல்லவா இக்கூட்டம்!

    //…இங்கு இருந்து அனுப்பும் உபகரணங்களுக்கு சிங்கள அரசாங்கம் வரி அறவிடும் ….// இதில் எனக்கு நேரடி அனுபவம் உண்டு!
    இப்போது யாழ்ப்பாணத்தில் ‘வெளிநாட்டு அமைச்சின் கிளை’ ஒன்றை அமைக்கப்போகிறதாம்! உலகத்திலேயே சொந்த நாடுஒன்றில் வெளிநாட்டு அமைச்சு ஒன்றுக்கு கிளை அமைப்பது ஸ்ரீலங்காவாகத்தான் இருக்கும்! ஒருவேளை வடக்கை வேறு நாடாக அவர்களே நினைக்கும் ‘அதிசயம்’ நிகழ்ந்து விட்டதோ?

    Reply
  • ப்பிரசன்னா
    ப்பிரசன்னா

    தேசம் நெற்றுக்கு,
    தங்களது இணையத்தில் வெளியாகும் கருத்துக்கும் அதற்கு கீழே வரும் ‘பின்னூட்டங்களுக்கும்’ நிறைய வித்தியாசம் இருக்கிறது. பின்னூட்டங்களுக்கு கட்டுரையின் ஆசிரியர் அதிக விளக்கங்களைத் தெரிவிப்பதில்லை! பின்னூட்டங்கள் மக்கள் கருத்துப் போல ஒரு ‘மாயையை’ உருவாக்குகிறார்கள்.

    இவர்கள்: ”கீ போட் மார்க்சிஸ்ட்கள் ” மீது ஏன் ஏறி விழுகிறார்கள்? ”கீ போட் மார்க்சிஸ்ட்கள் ” புலிகள் இல்லைத்தானே ஏன் இன்னும் இலங்கைக்குப் போகவில்லை? என்பது போன்ற தோரணையில் எழுதுகிறார்கள். இவர்களிடம் கேட்கக் கூடாத கேள்வி ஒன்றைக் கேட்கவேண்டிய நிற்பந்தத்துக்கு இவர்களே உட்படுத்துகிறா்கள்!

    புலிகளே வாழ முடியாத இலங்கையில் ‘மார்க்சிஸ்ட்கள்’ வாழ முடியுமா? சும்மா கதைக்காதிர்கள். இலங்கையிலுள்ள ஜனாதிபதி சர்வாதிகார நிறைவேற்று அதிகாரம், மற்றும் அதன் அரசியல் அமைப்பு முறை! வேறு ஒரு (உலகிலுள்ள தெளிவாகவேறு ஒரு நாட்டுடன் ஒப்பிட்டு) உலகநாட்டு நடைமுறையுடன் பெருந்தாத ‘ ஜனநாயக விழுமியங்களே’ அற்ற இலங்கையில்:

    ”சாமம் 2 மணிக்குக்கூட வட்டுக்கோட்டைச் சந்தியில் சைக்கிளில் போனால் அங்கு கடமையில் உள்ள ஆமிக்காரன் நிற்பாட்டி சேவை கேட்கும் நோக்கம் இல்லை. இந்த நிலமை வருங்காலங்கிலும் தொடருமோ தெரியாது. ஆனால் இன்றைய நிலமை இதுதான்.”

    ஆனால் யாழின் இன்றைய யதார்த்த நிலைமை இப்படியல்ல. இரவு 8 மனிக்கு முன்னராகவே ஏல்லோரும் தமது படலைகளையும் வீட்டுக் கதவுகளையும் இறுக மூடிவிடுவார்கள். இந்நிலையில் தட்டப்படும் கதவுகள் அனைத்தும், அன்று வங்கிகளில் பெரும் தொகை பணத்தை வெளியெடுத்த பாவனையாளர்களின் வீடுகள் என்பது இந்த ‘யதார்த்த வாதிகளுக்கப் புரியாது’

    கட்டுரையாளர், பின்னூட்டங்கள் தொடர்பாகத் கருத்துக்களைத் தொடர்ந்தால்… விமர்சனங்களைத் தொடரத் தயார்!

    Reply
  • Supu
    Supu

    “யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பொருளாதார நிலைமைகள் மிகவும் மோசமானவை.” First of all we should consider the Academic standard of the Jaffna University, that is, Professors are being appointed without any strong academic background. In particular, they are known as International Secret Professors, since their publications are not published in International level, i.e., not even a single publication is published in an International Journal. Rather their publications were appeared in “KUMPA APPISHEHA MALAR” etc., This is a kind of social and academic destruction.

    Some of them were awarded with Ph.D by the University of Jaffna without the approval of the Supervisors and Examiners… All these irregularities are because of the political interest of the Vice-Chancellors.

    Reply
  • NANTHA
    NANTHA

    supu:
    I agree with your points. only a FREE atmosphere will give the chances to the growth of intelectuals or academics. But that was not available since the beigining of the Jaffna university.

    LTTE used the university as their propaganda center by employing uneducated, gun carrying criminals within the university. Many faculties are maintained without any qualified educators.

    Murder of Dr.Rajani Tiranagama is haunting all the people there. Those who have knowledge are unable to provide any serious thoughts in any subject. In future, I hope the situation will change for good!

    Reply
  • msri
    msri

    கொன்ஸ்ரன்ரன்ரைன்> உங்களை நோக்கிய> என்போன்ற பின்னூட்ட வாசகர்களின் கேள்விகளுக்ககு பதில்களை தாருங்கள்!

    Reply
  • NANTHA
    NANTHA

    இந்த கட்டுரையாளர் முதலிலேயே “பல்டி” அடித்துள்ளார். பல்கலைக் கழக “பஸ்” விவகாரத்தில் பொய் எழுதி அரசுக்கெதிரான பிரச்சாரத்தை அவிழ்த்துவிட்டுள்ளார். அவரின் பதிலை “தேசம் நெட்” பெற்று பிரசுரிக்குமா?

    Reply
  • msri
    msri

    கொன்ஸ்ரனரைன்> தாங்கள் இலங்கைபோய் வந்து கையில் எடுத்து எழுதப் புறப்பட்ட விடயம்> யாழ் குடாநாட்டு மக்களின் அவல நிலை> அபிவிருத்தி வேலைகள் என்பதை விட> “கீபோட்”என்று சிலருக்கு முத்திரை குத்தப் புறப்பட்டதே! அது பற்றிய தேசம்நெற் வாசகர்களின் கேள்விகளுக்கே பதில் சொல்லாநிலைக்கும் போயுள்ளீர்! இப்பிரச்சினை இதற்கு முன்பும் இப்பிரச்சினை தேசம் நெற்றில் வந்தபொழுது> என நிலையையும்> இலங்கையிலுள்ள பலரின் மனத்தாங்கல்களையும் தெரிவித்தேன்! நீங்கள் கையில் எடுத்த் அஸ்த்திரம் உங்களுக்கு எதிராகவே திரும்பியுள்ளது! “கீபோட்” என்பதற்கு நீஙகள் கொடுக்க முற்படும் வரைவிலக்கணங்கள் வியாக்கியானங்கள் கண்டுபிடப்புக்கள்> மிகப் பாமரத்தனமானவை> சமூக விஞ்ஞான அரசியலுக்கு அப்பாற்பட்டவை> அதைவிட பாமரத்தனம்> உங்களுக்காக வக்காலத்து வாங்கி யானை பார்த்த குருடர்கள்போல்> கீபோட்டிற்கும்> மார்க்சிசத்திற்கும் விளக்கம் கொடுக்கப் புறப்பட்டுள்ள பின்னோட்டக்காரரின்” நிலை! உங்கள் கண்டுபிடிப்பின் சாராம்சம் “வடித்தன்மையே”. நல்லது எல்லாவற்றையும விட்டுவிட்டு> சக்கையை வைத்திருப்பதே! கீபோட்டில் புலிக்கு எதிராக எழுதியவன் போகலாம் என்றால்> புலிக்கும் அரசிற்கும் எதிராக எழுதியவன் நிலைபற்றியும்> உங்கள் மகிந்த மன்னனின் ஆட்சிபற்றியும்> வடகிழக்கு மக்களின் யதார்த்த நிலை பற்றியும் பலர் யதார்த்தமாக எழுதியுள்ளார்கள்! நீங்கள் போகலாம் ஆங்கே பெரிய வேலைத்திட்டமே உண்டு என்கின்றீர்கள்! நீங்கள் சொல்ல வருவது> டக்கிளஸ் -பிள்ளையான் கருணாவின் தொட்டுவிட்ட குறையோ? அல்லது உண்மையாகவே செய்யப்படவேணடியவைகளோ? உண்மையாக செய்யவேண்டிய வேலைகள்> அதற்கு புலம்பெயர் மக்களின் பங்களிப்பு > உங்களைப் போன்றவர்களின் முன்முயற்சி பற்றி நான் கிண்டல் செய்யவில்லை! உங்களின் முயற்சிகளுக்கு எம் பங்களிப்பு பற்றியும் சொல்லியுள்ளேன்! இதற்கு அப்பால் அரசின் திட்டமிட்ட பொறுப்பற்ற தன்மையையும் காணத் தவறுகின்றோம்! நான் ஓர் றபர் ஸடாம் முதலமைச்சர் அரசு நாங்கள் செய்யக்கூடியதை கூட செய்ய விடுகின்றதில்லை! என அண்மையில் சுவிஸில் பின்னையான் சந்திப்பின் போது கேட்கக்கூடியதாக இருந்தது! இது நிற்க உஙகள் கட்டுரைக்கான> வாசகர்கள் சுட்டிநிற்கும் கேள்விகளுக்கான பதிலை் சொன்னாலும் விட்டாலும் ஒன்றதான்! நீங்கள் எந்த யதார்த்தவாதி எனபதை கண்டறிந்துள்ளனர்! உங்களின் வடபகுதிக்கான கட்டரையும் > உங்கள் செயற்பாடும்> அணிலும் புலினியும் கிணறு வெட்டிய கதையாகத்தான் முடியும!

    Reply
  • london boy
    london boy

    தொப்பி அளவானவர்களுக்குத்தான் கட்டுரை பிரச்சினை. உங்கட பிரச்சினைக்கு ஒத்தூதாதற்காக எல்லாப் பின்னூட்டக்காரரையும் தாக்க வாறியள்

    Reply
  • msri
    msri

    நான் எல்லா பின்னூட்டக்காரர்களையும் விமர்சிக்க வில்லையே! “கீபோட்டிற்கும் – மார்க்சிசத்திற்கும்” விள்க்கம் கொடுக்க முறபட்டவர்களுக்கே! இங்கு பிரச்சினை ஒத்தூதல் அல்ல புரிதல் பற்றியதே! தொப்பி அளவானவர்களுக்குத்தான்!> சிலர் அளவில்லாததை அணிய முற்படும்போதுதான்> தொப்பிக்கும் தலைக்கும் பிரச்சினையாகின்றது!

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //….இடதுசாரிகள் எப்போதும் “ஈழம்” என்ற அல்லது “தமிழ்” என்ற கூத்துகள் ஆடியது கிடையாது….//

    அதே போல ‘பாதிரி’ ‘இந்து’ ‘ஏடுதொடக்கல்’’கோவில்’ எனவும் கூத்துகள் ஆடியது கிடையாது!

    Reply
  • S Nadarajah
    S Nadarajah

    This article reflects some other reality. When the University dons come to the UK on tour, I always persuaded them to organise an old student association. It happened in Australia. They undertook 250 students and helping them. In the UK no one is care. Within a commercial minded Tamil communty will never accept this for various reason.

    When the japan surrendered to the West- the commander told the they lost the war- but will win the world by different way. It has attained its mission through Technology and concoured the world.

    If Sri Lankan Tamils play an economically powerful role in Sri Lanka, then there would not be a problem. See Chinese in Malaysia. They are economically powerful there. That is why the Malay majority Government do not want to mess around with them. But Tamils there are still Koolis. That is why they are still suffering.

    Will a single mind of Tamil will be able to think about this? They will see allways in the negative ways.

    Forget the past- Learn lesson from it. Plan a economically powerful Tamil’s involvement in the Country. Expatriates can do a lot of things. Thesam like media are their to subbotage these ides by fueling anti Tiger visions- that will help its part in isolating Tiger sympathisers. This must stop.

    S Nadarajah

    Reply
  • Kusumpu
    Kusumpu

    நந்தா//மார்க்சிஸ்டுகள் “ஈழம்” கேட்கவுமில்லை. அந்த “கூத்தை” ஆதரிக்கவுமில்லை//
    நந்தா! இடதுசாரித்துவம் என்றும் பிரிவினையை ஆதரிக்காது ஆதரிக்க வேண்டிய அவசியமும் இல்லை. அங்கு மையப்படுத்தப்பட்டிருப்பது தொழிலாளமக்களின் நலனும். சமத்துவப் பொருளாதாரமுமே. கூடுதலாக சமயவாதிகள் இடதுசாரியாக இருப்பது கடினம். ஒரு பொதுவுடமைச் சமூகத்தில் சமயவாதிகள் சாதாரணமானவர்களே. புலிகள் ஆரம்பகாலங்களில் ஏன் அனேகமான இயக்கங்கள் இடதுசாரிப்பாட்டைப் பாடித்திருந்தவர்கள் தான். ஆனால் செய்பாடுகள் முழவதும் வலதுசாரிகளை விட மோசமாகவே இருந்து. இடதுசாரித்துவத்தை நீங்கள் கிறீஸ்தவத்திலும் காணலாம். யேசு பணங்காரவர்க்கத்துக்கும் அரசுக்கும் பணியமறுத்து பாமரமக்களை ஒன்று திரட்டியவர். நம்பிக்கை என்ற மூலதனத்தில் ஒரு அரசபயங்கரவாதத்துக்கு எதிராகப் போராடியவர். யேசுவை சமயவாதி என்பதை விட ஒரு புரட்சிவாதி என்பதே சரியானது.

    நந்தா என்று ஆரம்பிக்கும் கடசிப் பின்னோட்டத்தை விடவும் நந்தாவிடம் இருந்து இன்னும் எதிர்பாக்கிறேன்

    Reply
  • NANTHA
    NANTHA

    மார்க்சியத்தின் கோட்பாடுகள் உழைப்பு, தொழிலாளர்கள், உற்பத்தி, மூலதனம் இவற்றை அடிப்படையாகக் கொண்டது. மேற்கு நாடுகளின் கடவுள் சித்தாந்தம் மார்க்சிசத்துக்கு எப்போதும் எதிராக உள்ளதும் “பொதுவுடைமை” என்பது கடவுளுக்கு எதிரான கருத்து என்றும் பிரச்சாரம் செய்கிறது.

    கடவுளின் பெயரால் சுரண்டல் என்பது நியாயமாக்கப்படுகிறது. மேற்கு நாடுகளின் ஆக்கிரமிப்புக்கு இந்த மதம் துணை போகிறது. எந்த மதமாகினாலும் இந்த நிலைப்பாடுதான்.

    இந்து.பவுத்த மதங்களில் இருக்கும் “சுதந்திரமான” முடிவெடுக்கும் ஆற்றலை மத மாற்றத்தின் மூலம் இல்லாதொழிப்பது அவர்களுக்கு “அமெரிக்கா” கடவுள் என்று காட்டும் முயற்சியே ஆகும். அமெரிக்காவில் உள்ள நகரங்களில் “தெரு” வீதி சமுதாயம் ஒன்று உள்ளது பற்றி இந்த மத மாற்றம் செய்ய முனைவோர் எப்போதும் மறைத்தே வருகின்றனர்.

    சுனாமி எங்கள் நாடுகளைத் தாக்கியதை அமெரிக்கா டெலிவிசன் பாதிரிகள் “கடவுள்” கொடுத்த தண்டனை என்று பகிரங்கமாக குரலெழுப்பினார்கள். பின்னர் நியூ ஒர்லியன்சை “கத்ரீன” புயல் தாக்கி ஆயிரக்கணக்கானவர்களைக் கொன்று லட்சக் கணக்கானவர்களை இன்றும் வீடு வாசல் இல்லாமல் வைத்துள்ளது. புஷ் அவர்களை ஆறு மாத்தத்தில் மீள் குடியேற்றம் செய்யவில்லை. பாதிரிகள் அது கடவுள் “கொடுத்த” தண்டனை என்று முழங்கவில்லை. பின்னர் அங்கு பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பான்மையினர் “கருப்பர்கள்” என்றும் அதனால்த்தான் அந்த நிலைமை என்றும் கருத்துக்கள் வெளிவந்தன. அரை கறுப்பர் ஜனாதிபதியாகிய பின்னரும் “மீள் குடியேற்றம்” பற்றிய பேச்சைக் காணோம்.

    இந்த அமெரிக்கர்கள் இலங்கையில் புலிப்பயங்கரவாதிகளால் இடம்ப பெயர்ந்தவர்களை “உடனடியாக” மீள் குடியேற்றம் செய் என்றனர். அவர்களின் ஏஜண்டுகளான பாதிரிகளும் ஒத்தூதினார்கள்.

    சுனாமி கடவுளின் செயல் என்று எந்த இந்து, பவுத்தர்களும் ஆவேசம் கொள்ளவில்லை.

    அமெரிக்கர்களுக்கு “புத்த” மத நாடுகள் கம்யூனிச நாடுகளாக மாறியது எப்போதும் ஒரு உறுத்தல். இந்தியா இலங்கை போன்ற நாடுகளை “கிறிஸ்தவ” நாடுகளாக்குவதன் மூலம் கம்யூனிசத்தை தடுக்க முடியும் என்று கிறிஸ்தவ வேதாந்திகள் நம்புகிறார்கள். அதனால்த்தான் “மத மாற்றம்” செய்யும் வேலையை தீவிரமாக்க உள்ளூர் பாதிரிகள் ஊக்குவிக்கப்படுகின்றனர்.

    புலிகளுடன் பாதிரிகள் சேர்ந்து ஓர் கிழக்கு திமோர் உருவாக்க நடந்த முயற்சியே “தமிழ் ஈழம்”. தமிழ் என்பது ஒரு முக்காடு என்பதும் பாதிரிகளின் “புலி” தொடர்புகளும், வெளிநாட்டு “தொண்டர்” களின் வருகையும் எனது கருத்தை வலுவாக்கி உள்ளன.

    Reply
  • palli
    palli

    //அமெரிக்கர்களுக்கு “புத்த” மத நாடுகள் கம்யூனிச நாடுகளாக மாறியது எப்போதும் ஒரு உறுத்தல்.// அது வேறா?? சரி சரி விடுங்க உங்க றீலை பார்ப்போம்;

    // இலங்கை போன்ற நாடுகளை “கிறிஸ்தவ” நாடுகளாக்குவதன் மூலம் கம்யூனிசத்தை தடுக்க முடியும் என்று கிறிஸ்தவ வேதாந்திகள் நம்புகிறார்கள்// இதை ஒரு பேப்பரில் சின்னதாய் எழுதி ஊர் ஊராய் விளம்பர படுத்துங்கோ; வருங்கால சந்ததிகள் பார்த்து பயன்பெறட்டும்;

    //அதனால்த்தான் “மத மாற்றம்” செய்யும் வேலையை தீவிரமாக்க உள்ளூர் பாதிரிகள் ஊக்குவிக்கப்படுகின்றனர். // இதுவும் முள்ளிவாய்க்காலில்தான் நடக்குதோ அல்லது?

    //இந்த அமெரிக்கர்கள் இலங்கையில் புலிப்பயங்கரவாதிகளால் இடம்ப பெயர்ந்தவர்களை “உடனடியாக” மீள் குடியேற்றம் செய் என்றனர். அவர்களின் ஏஜண்டுகளான பாதிரிகளும் ஒத்தூதினார்கள்// இது எப்போ; சொல்லவே இல்லை;

    30வருடமாய் அமைப்புக்களும் ராமனாதன் காலத்தில் இருந்து அரசின் காலடியில் குப்பை பொறுக்குபவர்களும் ஏதேதோ வித்தை எல்லாம் காட்டுவது இந்த பாழாய்போன எம்சமூகத்தின் மீதுதான்;

    நந்தாவுக்கு பிடிக்காதது, தமிழ்; மலையாளம்; அமெரிக்கா; கத்தோலிக்கர்; பாதிரிமார்; இன்னும் சொல்லுவார்; அவருக்கு பிடித்தது; அரசு அரசு அரசு, இன்றும், அன்றும், என்றும்;

    Reply
  • BC
    BC

    நந்தா கூறிய பல கருத்துக்கள் சிந்திக்க வைக்கிறது.

    //கடவுளின் பெயரால் சுரண்டல் என்பது நியாயமாக்கப்படுகிறது.
    எந்த மதமாகினாலும் இந்த நிலைப்பாடுதான்.//மறுக்க முடியாத உண்மைகள்.

    Reply
  • அரஸ்
    அரஸ்

    திருமலை மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்னால் மீண்டும் ஒரு புத்தர்சிலை விவகாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த வருடம் நத்தார் தினத்தன்று இங்கு காவல் கடமையிலிருந்து கடற்படை வீரர் ஒருவரால் சிறிய புத்தர்சிலை சுமார் 8அங்குல உயரம் ஒன்று வைக்கப்பட்டது. புதுவருட பிறப்பின்போது இதற்கு மின்ஒளி வழங்கப்பட்டது. தமிழர் திருநாளாம் தைப்பொங்கலின்போது மற்றொரு சிலை இங்கு வைக்கப்பட்டது. பின்னர் இது சுதந்தர தினத்தின்போது மூன்றாவது சிலையும் சற்று பெரிதாக வைக்கப்பட்டது. கடந்த 25.02.2010 காலை இச்சிலைகளுக்கு சுமார் 3அடி உயரமான கூடு ஒன்று வைக்கப்பட்டு மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. கடந்த 2005ம் வருடம் மேமாதம் 15ம்திகதி இதற்கு அருகைாமையில் புத்தசிலை வைக்கப்ட்ட விவகாரம் விஸ்வரூபம் எடுத்தமை காரணமாக பல விளைவுகளை திருமலை நகரம் கண்டுகொண்டது. நீதிமன்றத்தில் வழக்குகளும் தொடரப்பட்டது. இவ்வியடததில் உரியவர்க்ள ஏற்ற நடவடிக்கைகள் எடுக்கத்தவறும் பட்சத்தில் திருமலை நகரமெங்கும் புத்தர்சிலைகள் ஆக்கிரமிப்பு செய்யப்படும் என்பதில் ஐயமில்லை.

    வடக்கு கிழக்குப் பகுதிகளிலுள்ள பௌத்த விகாரைகளைப் புதுப்பிப்பதற்காக ஐரோப்பிய நாடுகளில் பணம் திரட்டும் முயற்சியொன்றை இத்தாலி ஒன்றுபட்ட சிங்கள ஒன்றியம் என்ற அமைப்பு ஆரம்பித்துள்ளது. இதன் ஒரு அங்கமாக யாழ்ப்பாணத்தில் சிங்களவரின் உரிமைகள் என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள புத்தகத்தை விற்பனை செய்ய ஆரம்பித்துள்ளதாகக் குறிப்பிடும் ஒன்றியம் எதிர்வரும் 28ம் திகதி ஜெர்மனியின் பெர்லினிலுள்ள பௌத்த மத்திய நிலையத்தில் குறித்த புத்தகம் விற்பனை செய்யப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளது. இந்தப் புத்தக விற்பனைமூலம் கிடைக்கும் முழுப்பணமும் வடக்கிலுள்ள பௌத்த விகாரைகளைப் புனரமைக்கப் பயன்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளது. தமிழ் பகுதிகளில் பௌத்த பிரசன்னத்தை அதிகரிக்கும் வகையில் அரசாங்கமும் இராணுவத்தினரும் புதிது புதிதாக பௌத்த விகாரைகளை அமைத்துவரும் நிலையில் ஐரோப்பிய நாடுகளில் உள்ள சிங்கள சங்கங்களும் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.”

    புத்த மதத்தை தாங்கள் வழிபட வேண்டும் என தமிழ் மக்கள் நினைத்தால் அவர்கள் தாமாகவோ அல்லது சிங்கள மக்களுடன் சேர்ந்தோ மனம் விரும்பி புத்தருக்குரிய ஆலயங்களை அமைப்பார்கள். இது இயல்பாக நடைபெறும். மாறாக அடாத்தாக செயற்படுவது தொடர்ந்தும் இலங்கைக்கு சீரழிவையே தரும்.

    Reply
  • மாயா
    மாயா

    //palli on February 27, 2010 11:27 am //அமெரிக்கர்களுக்கு “புத்த” மத நாடுகள் கம்யூனிச நாடுகளாக மாறியது எப்போதும் ஒரு உறுத்தல்.// அது வேறா?? சரி சரி விடுங்க உங்க றீலை பார்ப்போம்;

    // இலங்கை போன்ற நாடுகளை “கிறிஸ்தவ” நாடுகளாக்குவதன் மூலம் கம்யூனிசத்தை தடுக்க முடியும் என்று கிறிஸ்தவ வேதாந்திகள் நம்புகிறார்கள்// இதை ஒரு பேப்பரில் சின்னதாய் எழுதி ஊர் ஊராய் விளம்பர படுத்துங்கோ; வருங்கால சந்ததிகள் பார்த்து பயன்பெறட்டும்;//

    இங்கே நந்தா சரி. பெளத்தம் மதம் அல்ல பெளத்தம் என்பது சித்தாந்தம். தத்துவம். பெளத்தம் , எதையும் இப்படிச் செய் எனச் சொல்வதில்லை. அது ஒரு கேள்விக்கு , பல விடைகளை சொல்கிறது. விரும்பியதை தேர்தெடுத்து பயன்படுத்து என அறிவுறுத்துகிறது. எனவே பெளத்தத்துக்குள் கம்யூனிசம் போன்ற ஒரு தன்மை நூல் போல , இழையோடுகிறது. அதை நன்கு கற்றறால்தான் புரியும். மூடக் கொள்கைகளுக்கு எதிர்ப்பானவர்கள் பெளத்த சித்தாந்தந்தை பின்பற்றுவோராக பெரும்பாலும் காணப்படுகிறார்கள்.

    மேற்கத்தைய நாடுகள் , மதங்களை பரப்பும் முயற்சியில் ஈடுபடுவதற்கு மிக முக்கிய காரணம் கம்யூனிசம் பரவக் கூடாது என்பதே. தனது நியாயமான உரிமைக்காக ஒரு மனிதன் போராடுவதைத் தடுத்து, அவனைக் கடவுளின் முன் மண்டியிட வைக்கச் செய்யவே , இந்த மதங்கள் வழி காட்டுகின்றன. கடவுளிடம் முறையிடு என்கிறார்கள். வைத்தியரிடம் போகாதே , பிராத்தி என சித்த பிரமைக்கு மனிதனை கொண்டு சென்று பைத்தியமாக்குகிறார்கள். இவை மதம் பரப்புவோர் செய்யும் செயல்களாகும். இவர்களுக்கு எங்கிருந்து பணம் வருகிறது எனத் தேடுங்கள். உண்மை புரியும். பெரும்பாலும் அமெரிக்காவிலிருந்துதான்.

    மேற்கத்தைய நாடுகள் புலிகளை மறைமுகமாக ஆதரித்ததற்கு மிக முக்கிய காரணங்கள் என்ன தெரியுமா? புலிகள் , கம்யூனிஸ்டுகளும் அல்ல. இஸ்லாமியரும் அல்ல. மேலத்தேசங்களுக்கு எதிரானவர்களும் அல்ல. இவை , இவர்களது பயங்கரவாதப் போக்கை தமக்கு பிரச்சனையற்றவர்கள் என வளர்க்க உதவியது. எனவே , இன்றும் புலிகள் பயங்கரவாதிகளாக இருந்தாலும் , அவர்களை புலத்தில் இருந்து வளர்க்க மேற்குலகம் தொடர்ந்தும் பிசின் பூசுகிறது. இதில் மாற்றம் ஒன்று வரும். அது மகிந்த , அமெரிக்க நிறுவனங்களையும் இலங்கையில் தொழில் தொடங்க விடும் போது…… அதுவரை மகிந்தவுக்கு அமெரிக்காவும் , அதன் சார்பான நாடுகள் அலுப்புக் கொடுத்துக் கொண்டேயிருக்கும்.

    இந்தியாவின் ஆதரவே மகிந்தவின் பலம். அதற்கு தமிழ்நாட்டு அரசியல் கோமாளிகளது (சரத் பொண்சேகா சொன்னது) அறிக்கைகளும், போராட்டங்களும், தனித் தமிழ்நாடு அச்சுறுத்தல்களும் உதவிகளை வழங்கிக் கொண்டேயிருக்கும்.

    Reply
  • NANTHA
    NANTHA

    பல்லிக்கு பல விஷயங்களை திரிபு படுத்துவதில் அதிக ஞானம் இருக்கிறது. கேள்விகளுக்குப் பதிலளிக்காவிட்டாலும் வக்கணையாக “பெட்டிசம்” போடும் யாழ்ப்பாணத்துத் திறமை இருக்கிறது.

    என்றாலும் எனக்கு எனென்ன பிடிக்கும், பிடிக்காது என்று ஆராயும் பல்லிக்கு சில தகவல்கள்.
    மலையாள சினிமா எனக்கு தமிழ் சினிமாவை விட பிடிக்கும். தமிழ் சினிமாவை பார்ப்பதை நிறுத்தி பதினைந்து வருடங்களாகிறது. கேரளத்து கம்யூநிச்டுக்களை, ஈ.எம்.எஸ். நம்பூதிரிப்பாடை, ஸ்ரீ நாராயண குருவை மிகவும் பிடிக்கும். எண்பத்தேழு வயதான கேரளா முதல்வர் வீ.எஸ். அச்சுதானந்தன் என்ற “சகா” மீது எப்போதும் மதிப்பு உண்டு. மனசிலாயோ பல்லி சேட்டா? பட்ஷே ஏழாம் கிளாஸ் படிச்ச பிராபாகரன் என்ன மலையாளி நாறியை பிடிச்சில்ல!

    கத்தோலிக்க பாதிரிகளைப் பிடிக்காது. ஆனால் சில கத்தோலிக்கர்கள் எனது நல்ல நண்பர்களாக இப்போதும் உள்ளனர். இந்த பாதிரிகளின் தவறுகளைப் பற்றி அதிக தகவல்கள் தருபவர்களும் அவர்களே என்பது இன்னொரு சிறப்பு!

    தற்போதைய அரசை எனக்கு எப்போதும் பிடிக்கும். தமிழ் பேசும் சிங்கள ஜனாதிபதியை மிகவும் பிடிக்கும்.

    தமிழ் எனது தாய்மொழி. அதன் வரலாறு, சீர், சிறப்பு எல்லாமே எனக்கு பிடிக்கும். ஆனால் தமிழையே ஒழுங்காக படிக்காத தமிழை விற்று, தமிழின் பெயரால் கொலை, கொள்ளை நடத்தி தமிழரை கேவலமாக்கும் தமிழன்களைப் பிடிக்காது.

    Reply
  • santhanam
    santhanam

    நந்தா, ஒரு கருத்துவவாதியின் இறப்பின் பின்பும் அவன் மக்கள் மனதில் வாழவேண்டும் அவன் இறந்தால் அவன் சொந்தம் தவிர்ந்த சுற்றம் சூழல் அவனிற்காக கதறிஅழவேண்டும் அப்பதான் அவன் தான் சார்ந்த சமுகத்திற்கு எதையோ செய்துவிட்டுபோகிறான் ஆனால் நாம் பிணங்களை வைத்து அரசியல் செய்தார்கள் எனி அது போதும் போதும்……

    Reply
  • palli
    palli

    //மலையாள சினிமா எனக்கு தமிழ் சினிமாவை விட பிடிக்கும்.//
    உங்களை போன்ற சிலருக்கு லயாள படம் பிடிக்கும்; ஆனால் மலையாளியள் பிடிக்காது; (படத்தில் பலதும் இருக்கும் என்பார்கள்)
    கத்தோலிக்கர் பாவக்காய், கத்தோலிக்க குடியுரிமை சொல்லவும் வேண்டுமா?? நீங்க என்ன கோமாளிதனம் வேண்டுமானாலும் செய்யுங்கோ(செய்வியள்) ஆனால் பிரிவினைவாதம் செய்யாதையுங்கோ; அது அரசின் அனுசரையுடன் இருந்த உங்களுக்கு தெரியாது, அழித்துவிடும் சமூகத்தை;

    //தமிழ் பேசும் சிங்கள ஜனாதிபதியை மிகவும் பிடிக்கும்.//
    இருக்காதா; அவரும் தென்னைமதம் பனைமதம் என பேசுவதால் உங்களுக்கு பிடிக்கும் எனலாமோ;

    //தமிழ் எனது தாய்மொழி. // நமக்கு எல்லாமே அதுதானே;

    //வக்கணையாக “பெட்டிசம்” போடும் யாழ்ப்பாணத்துத் திறமை இருக்கிறது.// அனுபவசாலி சொல்லும் போது நான் மறுக்கவா முடியும்; பல்லி துரையப்பாவுக்கு அமிர் பற்றி எழுதிய பெட்டிஸத்தை நான் படித்தவன் என சொல்லாதது வருத்தம் அளிக்கிறது;

    //கத்தோலிக்க பாதிரிகளைப் பிடிக்காது. ஆனால் சில கத்தோலிக்கர்கள் எனது நல்ல நண்பர்களாக இப்போதும் உள்ளனர். இந்த பாதிரிகளின் தவறுகளைப் பற்றி அதிக தகவல்கள் தருபவர்களும் அவர்களே என்பது இன்னொரு சிறப்பு!/ உயர்ந்த மனிதர்கள்! அதை நீங்களும் பின்பற்றலாம் ;உங்கசமூக தில்லுமுல்லையும் எழுதலாம்;!

    //பல்லிக்கு பல விஷயங்களை திரிபு படுத்துவதில் அதிக ஞானம் இருக்கிறது// பல்லிக்கு எதுவும் தெரியாது என நந்தா என்பவர் சொன்னார்,
    இருப்பினும் உங்கள் ஆய்வுக்கு நன்றி;

    ://எண்பத்தேழு வயதான கேரளா முதல்வர் வீ.எஸ். அச்சுதானந்தன் என்ற “சகா” மீது எப்போதும் மதிப்பு உண்டு.//
    போனவாரமும் வந்து சந்தித்து இந்த சமாதான புறாக்களை எங்கே பறக்க விடலாம் என பேசியதாக என்னுடன் பேசும்போது சொன்னார் என நானும் சொல்லவா?? (எதுக்கு இது)

    //மலையாளி// மலையாளி ஒரு தனிமனிதன் பெயர் அல்ல; அது ஒரு சமூகத்தை குறிக்கும் சொல்பதம் என்பது கூட தெரியாத
    நீங்கள் பிராபாகரன் ஏழாம் கிளாஸ் படித்தவன் என சொல்லுவது வேடிக்கை; தொடரலாம் உங்கள் ஆய்வை;

    //பிணங்களை வைத்து அரசியல் செய்தார்கள் எனி அது போதும் போதும்……//santhanam
    உன்மை;உன்மை

    Reply
  • ஜெயராஜா
    ஜெயராஜா

    பல்லி, நந்தா எழுதுகிற விடயங்களில் பாதிரியார் என்ற இடத்திற்கு பதிலாக தவறான பாதிரியார் என்று அந்த இடத்தை நிரப்பி பாருங்கள் பல உண்மைகள் புரியும்.

    உமாமகேஸ்வரன் சந்ததியார் இந்திராகாந்தி போன்றது இவர்களுக்கு தெரியாத மாக்ஸிசமா?
    இது எங்கள் அறியாமை இவர்கள் செய்தது யாவருக்கும் தெரியும். இவர்கள் எல்லோருக்கும் செய்த ஒட்டுமொத்த பலனைத்தான் இன்று எல்லோரும் அனுபவித்துக் கொண்டிருப்பது தமிழ் என்று கதைத்து மாக்ஸிசம் நடத்திய அத்தனை பேருமே தப்பு. சத்தியாக்கிரகத்திலிருந்து கட்டுநாயக்கா வரை அடித்து பார்த்தாயிற்று நடந்தது என்ன? தெளிவில்லாத தலைமை, அப்பாவி இளைஞர்கள் பலி, இது இனியும் தொடர வேண்டாம்.

    Reply
  • palli
    palli

    // பல்லி, நந்தா எழுதுகிற விடயங்களில் பாதிரியார் என்ற இடத்திற்கு பதிலாக தவறான பாதிரியார் என்று அந்த இடத்தை நிரப்பி பாருங்கள் பல உண்மைகள் புரியும்:://
    நிரப்பும் அழவுக்கு எழுத வேண்டுமா; ? ஜெயராஜ் சொல்லி பல்லி நிரப்புகிறேன்; ஆனால் இதை வாசிப்பவர் அனைவரும் நிரப்புவார்களா?? (இது நாம் 1983ல் விட்ட தவறு இதை சொல்லியது பல்லியல்ல மாயா) தவறுவிட்ட பாதிரியை நந்தா இனம் காட்டட்டும் (பலர் இருக்கின்றனர்) அவர்களை எவரது மனமும் புண்படாமல் பல்லி விமர்சிக்கிறேன்,

    பல்லிக்கு எழுத இடம் தந்த ஒரே தளம் தேசம், அதையே விமர்சிக்கும் நான் தவறுவிட்டவர்களை விடுவேனா?? எனது கவலை எல்லாம் தவறான எழுத்துக்களால் புலிக்கு ஆள் சேர்க்கிறார்கள் என்பதுதான்; சத்தியமாக எனக்கு நந்தாவை தெரியாது, அவர் மீது எனக்கு பகையும் இல்லை (பல்லி அரசியல்வாதியல்ல) பல்லியைபோல் புலியால் பாதிக்கபட்டவர்கவர்கள் யாரும் இருக்க முடியாது, எனது கருத்துக்கள் புலி ஆதரவானதல்ல, புலிக்கு ஆதரவு சேர்க்காதீர்கள் என்பதுதான்,

    // உமாமகேஸ்வரன் சந்ததியார் இந்திராகாந்தி போன்றது இவர்களுக்கு தெரியாத மாக்ஸிசமா?
    இது எங்கள் அறியாமை இவர்கள் செய்தது யாவருக்கும் தெரியும்.//
    இதை ஏன் பல்லி சொன்னேன் என்பதை தயவுசெய்து படியுங்கள் உங்கள் கருத்தே எனதும் என்பது புரியும்;

    //இது இனியும் தொடர வேண்டாம்.//
    கண்டிப்பாக எனது மன நிலையும் அதுதான்; அதுக்காக நான் என்னசெய்ய வேண்டும், இந்த கட்டுரையில் இருந்து விலகவேண்டுமா? அல்லது தேசத்தில் இருந்தே விலக வேண்டுமா?? எதுவாயினும் அதுவே எம் சமூகத்த்குக்கு நல்லதாயின் இந்த நொடியே அதுக்கும் பல்லி சரிதான்;

    Reply
  • chandran.raja
    chandran.raja

    உமாமகேஸ்வரன் சந்ததியார் இந்திராகாந்தி போன்றவர்களுக்கு தெரியாத மாக்ஸியமா?
    இதுவே பகிடிகளில் பெரியபகிடி.மாக்ஸியத்தை சேறடிப்பதற்கு இதைவிட வேறு வழி தேடவேண்டியதில்லை. தொடரட்டும்…. உங்கள் ஆய்வுகள்.

    Reply
  • NANTHA
    NANTHA

    //கத்தோலிக்க குடியுரிமை // வத்திக்கான் எந்த தமிழனுக்கும் குடியுரிமை கொடுக்கவில்லை!

    //போனவாரமும் வந்து சந்தித்து இந்த சமாதான புறாக்களை எங்கே பறக்க விடலாம் என பேசியதாக என்னுடன் பேசும்போது சொன்னார் என நானும் சொல்லவா?? (எதுக்கு இது)// பல்லிக்கு நான் குறிப்பிட்ட மனிதன் பற்றி தெரியவில்லை. வழக்கம் போல பல்லியின் எழுத்துக்கள்.

    //நீங்கள் பிராபாகரன் ஏழாம் கிளாஸ் படித்தவன் என சொல்லுவது வேடிக்கை.// அதில் என்ன வேடிக்கை இருக்கிறது?

    //தவறுவிட்ட பாதிரியை நந்தா இனம் காட்டட்டும் (பலர் இருக்கின்றனர்) அவர்களை எவரது மனமும் புண்படாமல் பல்லி விமர்சிக்கிறேன்// அதென்ன புண்படாமல்? திருடனை திருடர் என்று மரியாதையாக சொல்லப் போகிறீர்களா?

    Reply
  • பல்லி
    பல்லி

    //இதுவே பகிடிகளில் பெரியபகிடி.மாக்ஸியத்தை சேறடிப்பதற்கு இதைவிட வேறு வழி தேடவேண்டியதில்லை. தொடரட்டும்…. உங்கள் ஆய்வுகள்.//
    இது ஆய்வு அல்ல நான் சொன்ன அனைவரும் எம்முடன் வாழ்ந்தவர்கள்தான்; அதுவும் அவர்களை மட்டும் ஏன் இனம் காட்டினேன் எனில் அவர்கள் அதிகம் அறியபட்டவர்கள், இருப்பினும் இப்போ அந்த பட்டியலில் சந்திராவையும் சேர்த்து விடுகிறேன். சந்திரா உங்களுக்கு விரும்பியவர்களை இனைத்து கொள்ளுங்கள் பல்லி தப்பாய் நினைக்கமாட்டேன்;

    Reply
  • பல்லி
    பல்லி

    சந்திரா நான் மார்க்ச்சியத்துக்கு எதிராளியல்ல; ஆனால் அங்கும் பல தவறுகள் நடக்கிறது என்பதைதான் சுட்டி காட்டினேன், உங்களோடு மார்க்ச்சியம் பற்றி பல்லி தர்க்கபடுவதை விட அண்மையில் தமிழகத்தில் காலமான உரா,வரதராசனின் மரண்த்தின் காரணங்கள் படிக்கும்போது எனது வாதம் சரியெனவே படுகிறது, அவரை பற்றி ஒரு நாலு வரியாவது நீங்கள் (மார்க்ச்சியத்தின் காவலர்) எழுதியிருக்கலாம்; எல்லாமே பேச்சு மட்டும்தான், (தேசத்தில் எழுதியிருக்கலாம்) அவர் தற்கொலை செய்யவில்லை, கொலையாக இருக்கலாம் என சந்தேகமாம்; இது கூட அமெரிக்காவின் சதியாக இருக்கும் என யாராவது சொல்லகூடும்; வரதராஜனின் மகன் அமெரிக்காவில் வாழ்கிறார் எனவும் செய்திகள் உண்டு;

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //… இது கூட அமெரிக்காவின் சதியாக இருக்கும் என யாராவது சொல்லகூடும்; வரதராஜனின் மகன் அமெரிக்காவில் வாழ்கிறார் எனவும் செய்திகள் உண்டு…//

    இது செய்தி மட்டுமல்ல உண்மையும் ஆகும். அத்துடன் அவர் அமெரிகாவுக்கு கடந்தவருடன் சென்றுவந்தவர். அப்போது எடுக்கப்பட்ட கைவிரல் அடையாளம் அமெரிக்க எம்பசியில் இருந்து பெறப்பட்டே அவரின் உடல் அடையாளம் காணப்பட்டது.

    Reply
  • பல்லி
    பல்லி

    காணாமல் போன மார்க்ச்சியத்தை கண்டுபிடித்த அமெரிக்கா என ஒரு கட்டுரை எழுதலாம் போல் இருக்கு, மார்க்ச்சியம் எழுத வாசிக்க மட்டுமா? செயலுக்கு இல்லையா?? அப்படியாயின் இந்த தோழருக்கான வருத்த செய்திகூடவா உங்களால் தர முடியாது;

    Reply