கண்டன கூட்டம் – உதயன் பத்திரிகை மீதான தாக்குதலுக்கு கண்டனம் : தேடகம்

Uthayan_Canada ._._._._._.

கண்டன கூட்டம்
உதயன் பத்திரிகை  அலுவலகம் தாக்கப்பட்டதை  கண்டித்தும் கருத்துசுதந்திரத்தை  வலியுறுத்தியும்  தேடகத்தினால்  கண்டன கூட்டம் ஒழுங்கு செய்யபட்டுள்ளது.

காலம் : 27-02-2010
இடம் : ஸ்காபுரோ சிவிக் சென்டர்
நேரம் : 3.00 pm – 6.00pm

அனைவரையும் தோழமையுடன் அழைக்கின்றோம்

தேடகம்

._._._._._.

கருத்துச் சுதந்திரத்திற்காய் தோள் கொடுப்போம்! – உதயன் பத்திரிகை மீதான தாக்குதலுக்கு எமது கண்டனம் : தேடகம்

Thedakam_Logo20.02.2010 அன்று உதயன் பத்திரிகை அலுவலகம் மீதான தாக்குதலும், அதன் பிரதம ஆசிரியர் லோகேந்திரலிங்கம் அவர்களுக்கான மிரட்டலும் மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிய கதையாய் உள்ளது. கனேடிய தமிழ் ஊடகத்துறையினர் மத்தியில் இது முதலாவது நிகழ்வல்ல. தாயகம் பத்திரிகைக்கான தடை, அதன் ஆசிரியர் ஜோர்ஜ் குருசேவ் மீதான மிரட்டல், தேடல் சஞ்சிகை விற்பனை நிலையங்கள் மீதான மிரட்டல், தேடக நூலக எரிப்பு, பத்திரிகையாளர் டி.பி.எஸ். ஜெயராஜ் மீதான தாக்குதல், வானொலி இயக்குனர் இளையபாரதி மீதான தாக்குதல், என ஊடகங்கள் மீதான வன்முறைகள் பல ஏற்கனவே நிகழ்ந்துள்ளன. சுதந்திரமாக கருத்தை முன்வைக்கும் தமிழ் ஊடகங்கள் அனைத்தும் கனடாவில் பல்வேறு தரப்பினரின் வன்முறைக்கு முகம்கொடுத்தே வந்துள்ளன. விடுதலைப் புலிகளின் வன்முறை அரசியலின் அங்கமாகவே புலம்பெயர்ந்த நாடுகளில் இடம்பெற்ற ஊடகங்கள் மற்றும் மாற்றுக் கருத்தாளர்கள் மீதான தாக்குதல்கள் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

சுதந்திரக் கருத்துக்களம் ஆரோக்கியமான சமூகத்திற்கு மிக முக்கியமான அடிப்படையாகும். கருத்தை கருத்தால் முகம் கொடுக்கும் ஓரு சமூகம் உருவாக்கப்படவேண்டிய காலகட்டமிது. எமது அடிப்படை மனிதவுரிமைகளை முன்னிறுத்தி வளமான எதிர்காலத்தை வென்றெடுக்க வேண்டிய காலத்தில் தமிழ் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நீண்ட காலத்திற்கு எம்மை பின்னோக்கித் தள்ளிய சுதந்திர மறுப்புகளை, அடக்குமுறைகளை அறவே அகற்றி நீதியும் சமத்துவமும் நிலவும் ஒரு சமூகத்தை உருவாக்குவது அனைவரதும் கடமை. இதை அடிப்படையாகக் கொண்டே 1989ல் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து இன்று வரை பன்முகத்தன்மைக்காயும் கருத்துத் சுதந்திரத்திற்காயும் தேடகம் குரல்கொடுத்து வருகிறது.

“ உனது கருத்தோடு எனக்கு உடன்பாடு இல்லை, ஆனாலும் அந்தக் கருத்தை
சொல்லுவதற்கான உனது உரிமைக்காய் நான் உயிரைக் கொடுத்தும் போராடத் தயார்”

என்று பிரஞ்சு அறிஞர் வால்ட்டயர் சொன்னது போன்று நீதிக்கும் சமத்துவத்திற்குமாக போராடும் மக்கள் குலாம், சுதந்திரத்திற்கு எதிராக விடுக்கப்படும் இத்தகையை அச்சுறுத்தல்களை நிச்சயம் எதிர்த்தே தீருவர்.

உதயன் பத்திரிகை மீதான இவ் வன்முறையை தமிழர் வகைதுறைவள நிலையம் (தேடகம்) வன்மையாகக் கண்டிப்பதோடு, கருத்துச் சுதந்திரத்திற்கு எதிராய் வன்முறையைத் தூண்டும் சக்திகளை இனங்கண்டு அவர்களை மறுதலிக்க தமிழ் மக்கள் முன்வரவேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறது.

22.02.2010
தேடகம்
கனடா

Show More
Leave a Reply to palli Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

13 Comments

  • param
    param

    கடந்த 30 வருடங்களாக போராட்டம் நடந்ததா? போராட்டம் என்பது என்ன? இன்றும் பண்டய மனிதர்கள் போன்று தமிழர்கள் நடப்பது? போராட்டம் மக்களுக்காக அல்லாது சில குறிப்பிட்ட மனிதர்களின் சுய நலத்தேவைகளுக்காகவே நடாத்தப்பட்டு தமிழ் சமூகத்தை பாழடித்தும் உள்ளதிற்கு சரியான உதாரணம் உதயன் பத்திரிகை மீதான தாக்குதல்களாகும்.

    Reply
  • தமிழ்வாதம்
    தமிழ்வாதம்

    உதயன் ஒரு அராஜகவாதி.
    மூலதனத்தை முதன்மைப்படுத்தியவன்.
    அது பத்திரிகையல்ல,வியாபாரக் குப்பை.
    அதற்காக தேடகம் ஏன் தேம்பி அழுகிறது?

    சுதந்திரக் கருத்துக்கெதிரான தாக்குதல் என்பதிற்கு ஆதாரம் உண்டா?

    இந்த தமிழர் வகைதொகைவள’ நிலையம்(தேடகம்)EPDP அரவணைப்பில் உறைநிலையில் இருந்து விட்டு, அறிக்கை மழையில் ஆனந்தசங்கரித்தனம் பண்ணுவது, நாடு கடந்த அரசில் நாற்காலி தேடியோ?

    Reply
  • palli
    palli

    //“ உனது கருத்தோடு எனக்கு உடன்பாடு இல்லை, ஆனாலும் அந்தக் கருத்தை சொல்லுவதற்கான உனது உரிமைக்காய் நான் உயிரைக் கொடுத்தும் போராடத் தயார்//
    உயிர் எல்லாம் கொடுத்து வன்முறையை ஆதரிக்க கூடாது (உயிர் போவது வன்முறைதானே) உடைத்தவர்களுக்கு புரியும்படி நாலு வார்த்தை நல்லாய்தான் கேளுங்க; ஒரு ஊடகம் தாக்கபட்டால் அந்த செய்தி பல ஊடகங்களில் வரவேண்டும், அத்துடன் எதுக்காக தாக்கினார்கள் என்னும் செய்தி (தவறோ சரியோ) சொல்லபட வேண்டும்; ஊடகத்தை தாக்குவது குழவிகூட்டுக்கு கல் எறிவது போல் என தாக்கியவர்கள் வருத்தபட வேண்டும்;

    Reply
  • NANTHA
    NANTHA

    தமிழ்வாதம்:
    தேடகம் ஈ பி டி பி சார்ந்தது அல்ல. அதன் பிரமாக்கள் முன்னாள் புலிகளே ஆவர். கிட்டு- பிரபாகரன் தகராறில் பிரபாகரனால் “நாடு கடத்தப்பட்ட” கிட்டு ஆதரவாளர்களே தேடகத்தை நடத்தினார்கள். இப்போது முகவரி இல்லாது “தொலை பேசி” அமைப்பாக மாறியுள்ளது.

    தேடகமும் “புலிப்பாணியிலேயே” பணம் மாத்திரம் தமிழர்களிடம் எதிர்பார்த்தது.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    இவற்றைப் புலிப்பயங்கரவாதமென்பதை விட, புலிகளுக்கிடையேயான பயங்கரவாதமெனச் சொல்வதே சரி. முன்பும் கனடாவில் இளையபாரதியை வெளியேற்றி இளையபாரதியின் வானொலியை, இளையபாரதியுடன் பணியாற்றியவரை வைத்தே புலிகள் வானொலியை அபகரித்தனர். அதன் பின் சில மாதங்கள் முன்பு அவரை வெளியேற்ற பிரித்தானிய ஒரு பேப்பர் குழுவொன்று கனடா சென்று வானொலியின் கதவுகளின் பூட்டை உடைத்து புதிதாக வேறு பூட்டைப் போட்டு வானொலியைக் கைப்பற்றியது. இப்படியான செயல்கள் இன்றுவரை தொடர்கதையாவது தான் கேவலம். இதற்கு கனடாவிலுள்ள “புலன்” பெயர்ந்தவையும் காரணம் என்பதை மறக்கக் கூடாது. மக்கள் மாக்களாக இருக்கும் வரை இவை தொடரத் தான் செய்யும்.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    இங்கு எல்லோரும் ‘புலி’ மீதே பழி சுமத்துகின்றனர். இவ்வாறே முன்னர் லண்டன் வானொலிக்கூடம் ‘உடைப்பில்’ புலிமீது பழிசுமத்திப் பின்னர் அப்பழி ‘ஜனநாயக’ காரர்மீது வந்து நின்றது எல்லோரும் அறிந்ததே. எனவே இங்கு கருத்தெழுதுவோர் தயவு செய்து செய்யவேண்டியது ரொரொன்ரோ பொலிசாருக்கு மின்னஞ்சலோ அன்றி கடித்மோ எழுதி நடவடிக்கை எடுக்க வேண்டி அழுத்தம் கொடுப்பதே! கீழே தொடர்புகளுக்கான இணைப்பு….

    http://www.torontopolice.on.ca/contact.php

    Reply
  • தமிழ்வாதம்
    தமிழ்வாதம்

    நந்தா!
    ‘தேடகம்’என்ற நூலகம் நடத்திக்கொண்டிருந்தவர்கள் EPDP இனரின் அரவணைப்பில்(உட்புகுதலின் பின்) உறைநிலைக்குப்(முகவரி இழந்து)போனார்கள் என்பதே என் கருத்து.

    Reply
  • மாயா
    மாயா

    நாட்டில் பயப்பட்டதற்கு காரணம் உண்டு. புலத்தில் பயப்பட எந்தக் காரணமும் இல்லை. வெளிநாட்டில் வாழ்வோர் ஏதாவது பிரச்சனைகள் வரும் போது , அந்த நாட்டுக் காவல் துறைக்கு சரியான தகவல்களோடு சம்பந்தப் பட்டவர்களை இனம் காட்டினால் அத்தோடு பிரச்சனைக்கு முற்றுப் புள்ளி வைக்கப்படும். பயத்தில் அதை செய்யாமல் இருந்தால் , எவருடையதாவது உயிர் போன பின்தான் அதைப் பற்றி யோசிக்கத் தோன்றும். அப்போது காலம் கடந்த ஞானமாகவே இருக்கும். புலத்தில் உள்ள மக்கள் ஏதாவது அச்சுறுத்தல்கள் ஏற்பட்டால் , தாம் வாழும் நாட்டு காவல் துறையில் தெரிவிப்பதே மேலான பாதுகாப்பாகும்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    //இங்கு எல்லோரும் ‘புலி’ மீதே பழி சுமத்துகின்றனர். – சாந்தன் //

    ஏன் புலிப்பினாமிகள் அதைச் செய்யவில்லையென்று முடிந்தால் சம்மந்தப்பட்ட புலிப்பினாமிகள் வந்து இங்கே எழுதட்டுமே. தாங்கள் விழுந்து விழுந்து எந்த நாட்டிலிருந்து எழுதுகின்றேனென்பதைக் கூட மறைத்து புலிகளுக்கும், புலிப்பினாமிகளுக்கும் வக்காலத்து வாங்குவது போல், நாம் மறைந்திருந்து அடுத்தவருக்கு வக்காலத்து வாங்க முடியாது. பிரித்தானியாவில் ஐபிசி வானொலி, பிரான்சில் தமிழ்ஒளி தொலைக்காட்சி உட்பட புலிகள் அபகரிக்கவில்லையென்று தங்களால் பகிரங்கமாக விவாதிக்க முடிந்தால் என்னுடன் பகிரங்கமாக விவாதிக்கத் தயாரா??

    Reply
  • palli
    palli

    //பிரான்சில் தமிழொளி தொலைக்காட்சி உட்பட புலிகள் அபகரிக்கவில்லையென்று தங்களால் பகிரங்கமாக விவாதிக்க முடிந்தால் என்னுடன் பகிரங்கமாக விவாதிக்கத் தயாரா??//
    உன்மையாக இருக்கலாம்; ஆனால் தேசத்துக்கு தடா? ரி பி சி உடைப்பு; இன்னும் சிலருக்கு அடி, தமிழிச்சி இனையம் உடைப்பு(கனனிகள்) இப்படி பலதுக்கு மாற்றுகருத்தாளர் எழுதவில்லையே; எது எப்படியோ ஊடகம் ஒன்று தாக்கபட்டால் அது புலியோ அல்லது புண்ணாக்கோ அதுக்கெதிராக எழுதவேண்டியது எழுத முற்படும் அனைவரதும் கடமை; தேசத்தால் மட்டுமே குற்றவாழிகளை இனம்காட்ட முடியும்; அதுக்கான காரனம் புலியோ புலி இல்லையோ அனைவர்க்கும் தேசம் எம்கருத்துக்களுக்கு இடம் தருகிறது; அதனால் விவாதிக்கிறபோது பல உன்மைகள் வெளிவரும்; கடந்த காலம் எமக்கு அனுபவம்;

    Reply
  • NANTHA
    NANTHA

    //‘தேடகம்’என்ற நூலகம் நடத்திக்கொண்டிருந்தவர்கள் EPDP இனரின் அரவணைப்பில்(உட்புகுதலின் பின்) உறைநிலைக்குப்(முகவரி இழந்து)போனார்கள் என்பதே என் கருத்து.//

    உங்கள் கருத்தை விட “தேடகம்” அப்போதும் இப்போதும் புலிகளின் “முன்னாள்” அல்லது “இந்நாள் ” ஆதரவாளர்களிடம்தான் உள்ளது. அவர்களுடைய “புலித்தனம்” அதனை காணாமல் போகப் பண்ணியுள்ளது. EPDP என்று சொல்வது எந்த அடிப்படையில் என்பது தெரியவில்லை. பெயர்களை குறிப்பிட்டால் நல்லது. வெறுமனே “வெள்ளை வான் கடத்தல்” கதை போல வேண்டாம்!

    Reply
  • தமிழ்வாதம்
    தமிழ்வாதம்

    /புலிகளின் “முன்னாள்” அல்லது “இந்நாள் ” ஆதரவாளர்களிடம்தான் உள்ளது/
    /பெயர்களை குறிப்பிட்டால் நல்லது. வெறுமனே “வெள்ளை வான் கடத்தல்” கதை போல வேண்டாம்!/

    அதென்னமோ உங்கிட புலிப்பிராந்திக்கு மட்டும் பேரைக் காணோம்.ஆதாரம் காணோம்.உங்கிட எழுத்துத்தான் விவிலிய’ வேதமோ?மற்றயவையெல்லாம் நாயன்மார் பாசுரங்களோ?

    Reply
  • mathan
    mathan

    EPDP முதல் எதிரி தேடகம் போல் தான் உள்ளது!.

    தேடகத்தில் முன்னால் புலி ஒருவரே உள்ளதாக தெரகிறது. மிகுதி முன்னால் புளொட் EPRLF EROS TELO NLFT

    Reply