பிரபாகரனின் தாயார் பார்வதி வேலுப்பிள்ளை வெளிநாடு பயணமானார்.

mrs-veluppillai.jpgவிடு தலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் தாயார் பார்வதி வேலுப்பிள்ளை வெளிநாட்டுக் நேற்று பயணமானார். பனாகொடை இராணுவ முகாமில் அவரது கணவனுடன் இவர் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். கணவர் வேலுப்பிள்ளை மரணமானதை அடுத்து அவர் இறுதிக்கிரியைகளுக்காக வல்வெட்டித்துறைக்க வந்திருந்தார். சுகவீனமுற்றிருந்த பார்வதி அம்மையார் சிறிது காலம் அங்கு தங்கி யிருந்தார். யாழ்.மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கத்தால் அவர் கொழும்புக்கு அழைத்துவரப்பட்டு பம்பலப்பிட்டியில் உள்ள விடுதி ஒன்றில் தங்க வைக்கப்பட்டிருந்தார். சிவாஜிலிங்கம் செய்த பயண ஒழுங்குகளை அடுத்து நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து அவர் வெளிநாடு ஒன்றுக்கு புறப்பட்டுச் சென்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  • கிருபா
    கிருபா

    ஒரு முடிந்து போன கதையில் கிழிந்து போன பக்கம்.
    சுவாரஷ்யம் இழந்த ராஜ்ஜியதின் மணிமகுடம்.
    பிரபாகரனின் முற்றுபுள்ளி முழுமை பெறுகிறது.

    தாயே, உன் வலி புரிகிறது.
    எம் வலியை புரியும் மனநிலையில் நீ இல்லை.

    சென்று (வா)ழ் !!
    வலியை வென்று (வா)ழ்.

    > கிருபா

    Reply
  • DEMOCRACY
    DEMOCRACY

    மனிதகுலத்தின் மீது ஏற்பட்ட பாசத்தால்,இயேசு சிலுவை சுமக்க வைக்கப்பட்டார்!.”தருமம் காக்க கருமம் செய்ய கடமைப் பட்டவன் மனிதன்” என்கிறது கீதை!.மற்றவர் கருமத்தை(வலியை) தான் சுமக்கிறேன் என்ற இயேசுவை,உலகம் இன்றளவும் நினைவில் வைத்து நன்றி செலுத்துகிறது!.கருமம் செய்கிறவர்களை கடவுளின் குழந்தைகள்(ஹரிஜனங்கள்)என்றார் மகாத்மா காந்தி.
    இங்கு வந்துள்ள பின்னோட்டங்களைப்? பார்க்கும் போது,”தமிழினத்திற்காக? உங்கள் மகன் சிலுவை சுமக்கவில்லை(வலிதாங்குதல்) என்று தெரிகிறது!.பிறகு யாருக்காக சிலுவை சுமந்தார்.சிலுவை சுமக்க வைத்தவன் பரமாத்மா,ஆகையால் அவன் மன்னிப்பு கேட்க முடியாது.ஆறுதல்?,அது நந்திக்கடலில் மறைக்கப்பட்ட முழுபூசணிக்காயில் அடங்கியிருக்கிறது!.”போற்றுவார் போற்றலும்,தூற்றுவார் தூற்றலும்,போகட்டும் கண்ணனுக்கே”!.

    Reply