வடக்கு மக்களின் நீர்தட்டுப்பாட்டை நீக்க தெற்கிலிருந்து நதி திசை திருப்பும் திட்டம் – ஜனாதிபதி

president.jpgவட பகுதி மக்கள் முகம் கொடுத்துள்ள தண்ணீரிப் பிரச்சினையைத் தீர்த்து வைக்கும் வகையில் தெற்கிலிருந்து யாழ்ப்பாணம் வரையும் நதி திசை திருப்பும் திட்டம் முன்னெடுக்கப்படுமென்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முல்கிரிகலவில் தெரிவித்தார். அதேநேரம் அடுத்த வருடம் முதல் பாடசாலை பாடத்திட்டத்தில் இலங்கையின் வரலாறு உள்ளடக்கப்பட்டு, பாடசாலைகள் தோறும் போதிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினார்.

‘வேர்ல்ட் விஷன்’ நிறுவனத்தின் அனுசரணையில் இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத் தாபனம் ‘முத்துகா’ நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் முல்கிரிகல, பாலங்கட வெவயில் நிர்மாணித்துள்ள பொது நூலகத்தைத் திறந்து வைக்கும் வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரை யாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இவ் வைபவத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் உரையாற்றுகையில், எமக்கு 2500 வருட கால கெளரவமான வரலாறு உள்ளது. கடந்த மூன்று தசாப்தங்களாக துண்டாடப்பட்டிருந்த நாட்டை மீண்டும் ஒன்றுபடுத்தியுள்ளோம். இவ்வாறு சிறப்புமிக்க வரலாற்றை இந்நாடு கொண்டிருக்கின்றது.  இருந்தும் அதனைப் பாடசாலைகளில் போதிப்பது ஏற்கனவே சிறிது காலம் தடை செய்யப்பட்டிருந்தது. இருப்பினும் அடுத்த வருடம் முதல் இலங்கை வரலாறு பாடசாலைப் பாடத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டு போதிக்கப்படும்.

நில்வள கங்கை ஹம்பாந்தோட்டைக்குத் திசை திருப்பப்பட்டு இங்கு வாழும் விவசாயிகளின் தண்ணீர் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும். அதே நேரம் வட பகுதியிலுள்ள நீர் நிலைகளைப் பயன்படுத்தி யாழ்ப்பாணம் வரையும் புதிதாக கங்கை யொன்று அமைக்கப்படும்.

Show More
Leave a Reply to NANTHA Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

27 Comments

  • NANTHA
    NANTHA

    தமிழீழம் கிடைத்தால் “சகலதும்” கிடைக்கும் என்று நம்புபவர்களுக்கு “தண்ணீர்” பிரச்சனை தெரிய வாய்ப்பில்லை. மகாவலி நீரை இரணைமடு வரை கொண்டு செல்லும் திட்டத்தை ஜனாதிபதி கருத்தில் கொண்டு பேசியது வரவேற்கத்தக்க விஷயமே ஆகும்.

    Reply
  • nasrudeen
    nasrudeen

    நல்ல விசயம்

    Reply
  • Aras
    Aras

    இந்த நீர்திசை திருப்புத் திட்டத்தின் கரைப்பிரதேசமெங்கும் சிங்கள குடியேற்றங்கள் நடைபெறும்.

    Reply
  • Ajith
    Ajith

    வட பகுதி மக்கள் முகம் கொடுத்துள்ள தண்ணீரிப் பிரச்சினையைத் தீர்த்து வைக்கும் வகையில் தெற்கிலிருந்து யாழ்ப்பாணம் வரையும் நதி திசை திருப்பும் திட்டம் முன்னெடுக்கப்படுமென்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முல்கிரிகலவில் தெரிவித்தார்.

    Water is essential for colonisation. Sinhala colonisation in the East was started with Mahaoya diversion scheme and Mahaweli diversion scheme and so on.Why should he tell that in Mulgiriya. What he is telling Sinhala people that his next move is Sinhala colonisation of Jaffna.

    அதேநேரம் அடுத்த வருடம் முதல் பாடசாலை பாடத்திட்டத்தில் இலங்கையின் வரலாறு உள்ளடக்கப்பட்டு, பாடசாலைகள் தோறும் போதிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினார்.

    The next plan is changing the history of North East Sri Lanka and to teach every Sinhalase that North-East was inhabitated by Sinhala and Tamils only brought to Sri Lanka by British as slaves. He will further go an say that he has liberated North-East from Tamils who occupied their land.
    எமக்கு 2500 வருட கால கெளரவமான வரலாறு உள்ளது. What does it mean by We? Sinhala Does he include in the history? No.

    Tamils do not want water. They want peace and free of abductions and murders.He never utter a word that he will stop those abductions, murders and ransom seeking. Why? Because that is his way of ruling the tamils.

    Reply
  • மாயா
    மாயா

    //Aras on March 31, 2010 4:45 pm இந்த நீர்திசை திருப்புத் திட்டத்தின் கரைப்பிரதேசமெங்கும் சிங்கள குடியேற்றங்கள் நடைபெறும்.//

    இதே மாதிரி சொல்லிச் சொல்லியே தமிழ் பகுதிகளின் முன்னேற்றத்தை தமிழர்கள் தடுத்துக் கொண்டேயிருப்பார்கள். அதே நேரம் சிங்கள அரசு , தமிழருக்கு எதுவும் செய்யவில்லை என்று குறையும் சொல்லி வாக்கும் பெற்றுக் கொண்டேயிருப்பார்கள்.

    Reply
  • palli
    palli

    1982ல் சொன்னது 2010ல் ஆவது வந்தால் தமிழர் சார்பாய் (விவசாயிகள்) நன்றி சொல்லிக்கலாம்; எல்லாமே பேச்சுதான் என இருக்காவிட்டால் பல்லி சார்பாயும் நன்றி;

    Reply
  • Aras
    Aras

    இதே மாதிரி சொல்லிச் சொல்லியே தமிழ் பகுதிகளின் முன்னேற்றத்தை தமிழர்கள் தடுத்துக் கொண்டேயிருப்பார்கள்”

    சிங்கள மக்கள் தமது மதம் கலை கலாச்சாரங்களுடன் சிங்களவர்களாக வாழலாம். தமிழர் மட்டும் தாம் தமிழராக வாழ நினைக்கக் கூடாது என்பது என்ன நியாயம்?

    Reply
  • thurai
    thurai

    சிங்கள அரசியல் வாதியொருவர் தமிழரின் நீர் பற்ராக்குறை பற்ரிப் பேசுகிறார். தமிழ் அரசியல் வாதிகளோ உருமை பற்றிப் பேசுகின்றர்ர்கள். தமிழரை வாழவைப்பது சிங்களம், ஆழ மட்டும் நினைப்பது தமிழ்தேசியமா?

    துரை

    Reply
  • Rohan
    Rohan

    நந்தா //தமிழீழம் கிடைத்தால் “சகலதும்” கிடைக்கும் என்று நம்புபவர்களுக்கு “தண்ணீர்” பிரச்சனை தெரிய வாய்ப்பில்லை. மகாவலி நீரை இரணைமடு வரை கொண்டு செல்லும் திட்டத்தை ஜனாதிபதி கருத்தில் கொண்டு பேசியது வரவேற்கத்தக்க விஷயமே ஆகும்.//

    மருதானையையும் கொழும்பையும் சுத்தமாக வைத்திருக்கத் துப்பில்லாத அரசாங்கம் தமிழருக்குத் தண்ணீர் தரப் போகிறது. நாமெல்லாம் குனிந்து நின்று வாரி வாரிக் குடிக்கப் போகிறோம்!

    Reply
  • NANTHA
    NANTHA

    விவசாயம் பற்றி துளியும் தெரியாதவர்களுக்கு ‘தண்ணீர்” என்பது குடிக்கவும், கழுவவும் மாத்திரமே என்று எண்ணுகிறார்கள். அது அவர்களின் பிரச்சனை. ஆனால் விவசாயிகளுக்கு நீர் வேண்டும். பண்டித பராகிரமபாஹுவினால் அமைக்கப்பட்ட உலர் வலைய நீர்ப்பாசனத் திட்டங்கள் புனருத்தாரணம் பெறுவது காலத்தின் தேவை. பள்ளிக்கூடம் போகாமலே “தமிழ்” என்று சத்தமிட்டு தமிழர்களையே ஆயிரக் கணக்கில் கொலை செய்து அவர்களின் வாழ்வாதாரங்களை நாசமாக்கிய படிப்பறிவில்லாத கள்ளகடத்தல் கோஷ்டிகளை தலைவா என்று வெளிநாடுகளில் கும்பிடும் ஆட்களுக்கு மருதானையும் கொழும்பும்தான் கண்ணில் தெரியும். வன்னியின் விவசாயப் பெருங்குடி மக்களின் “உயிர்நாடிகளான” குளங்கள் பற்றி தெரிய நியாயமில்லை!

    வன்னி மக்கள் யாழ்ப்பாணத்தவர்களுக்கு சோறு கொடுத்தார்கள். யாழ்ப்பாணிகள் வன்னி மக்களுக்கு “இரும்பு” கொடுத்தார்கள்.

    Reply
  • BC
    BC

    சிங்கள குடியேற்றங்கள் என்று சொல்லி தமிழ் பிரதேசங்களின் முன்னேற்றத்தை தடுப்பதனால் பின்பு சிங்கள அரசு தமிழர்களுக்கு எதுவும் செய்யாது என்று சொல்லி அரசியல் லாபம் அடைய வசதியாக இருக்கும்.

    //சிங்கள மக்கள் தமது மதம் கலை கலாச்சாரங்களுடன் சிங்களவர்களாக வாழலாம்.//
    தமிழர்கள் தங்கள் பிரதேசங்களில் மட்டுமல்ல சிங்களவர்களின் பிரதேசங்களிலேயே தமது மதம் கலை கலாச்சாரங்களுடன் கலகலப்பாக வாழ்கிறார்கள்.

    Reply
  • Aras
    Aras

    தமிழர்கள் தங்கள் பிரதேசங்களில் மட்டுமல்ல சிங்களவர்களின் பிரதேசங்களிலேயே தமது மதம் கலை கலாச்சாரங்களுடன் கலகலப்பாக வாழ்கிறார்கள்.”

    பெரும்பான்மைக்குள் சிறுபான்மை போய் வாழ்வது பெரும்பான்மையிடம் பண்பு நிலைகளை மாற்றாது. சிறுபான்மைக்குள் பெரும்பான்மை திட்டமிட்டு நிதியுதவி அளித்து குடியேற்றப்படும் போது காலக்கிரமத்தில் படிப்படியாக சிறுபான்மை இனம் அழிந்து விடும். மேலும் தமிழ் மக்கள் சிங்கள மக்கள் மத்தியில் அரசினால் குடியேற்றப்படவில்லை. தங்கள் சொந்த முயற்சியில் குடியேறியவர்களே. இனவாத அரசுகள் இந்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வராமையால் அங்கு சென்று குடியேறியோர் அதிகம். அதற்கு அரசே காரணம்.

    மேட்டுக் குடிகளுக்கு சிங்கள குடியேற்றங்கள் ஒரு பிரச்சனையல்ல. அவர்களால் எங்கும் பிழைத்துக் கொள்ள முடியும்.

    Reply
  • palli
    palli

    //வன்னி மக்கள் யாழ்ப்பாணத்தவர்களுக்கு சோறு கொடுத்தார்கள். யாழ்ப்பாணிகள் வன்னி மக்களுக்கு “இரும்பு” கொடுத்தார்கள்.//
    nantha வேண்டாம் இந்த பிரிவினை வேலை, எல்லாம் முடிந்து இப்போ வன்னி யாழ் வந்தாச்சா??

    Reply
  • NANTHA
    NANTHA

    குடியேற்றங்கள் என்பன அபிவிருத்தியின் ஒரு பகுதி. வவுனியாவில் கிளிநொச்சியில் நடைபெற்ற குடியேற்றங்கள் அரச உதவியுடன் செய்யப்பட்டவையே.

    பதவியா குடியேற்றம் முதலில் தமிழர்களைக் குடியமர்த்தவே முயற்சிக்கப்பட்டது. தமிழர்கள் பலர் கொடுத்த உதவிகளைப் பெற்றுக்கொண்டு காணிகளையும் விட்டு விட்டு போனது யாருடைய குற்றம்?

    சனத்தொகை கூடிய இடங்களில் இருந்தே குடியேற்ற வாசிகள் தெரிவு செய்யப்பட்டு குடியமர்த்தப்பட்டனர். சிங்களவர் தமிழர் என்பதை விட குடியேற ஆர்வம் உள்ளவர்கள் யார் என்பதே பிரச்சனை.

    பல இடங்களில் யாழ்ப்பாணத்தவர்கள் “செல்வாக்கு” மூலம் காணிகளைப் பெற்று விட்டு அந்தக் காணிகளில் “தோட்டக்காட்டு” தமிழர்களை வேலகாரர்களாக வைத்து விவசாயம் செய்தனர். அப்படியான தோட்டக் காட்டு தமிழர்கள் சிலர் “பிரஜா உரிமை” பெற்று அந்தக் காணிகளை விட்டு வெளியேற முடியாது என்று கோர்ட் வரை சென்றுள்ளனர். அதில் வெற்றியும் பெற்றுள்ளனர். அவர்களுக்கு இலங்கைத் தமிழர்கள் கொடுத்த உபத்திரவங்கள் கொஞ்சமல்ல!

    நிலத்தை நம்பி வாழ்பவர்களுக்கே நிலம் வழங்கப்படும். அரச உதவியும் கிடைக்கும்.

    Reply
  • BC
    BC

    சிங்கள குடியேற்றங்கள் என்ற பூச்சாண்டி தான் நம்பிக்கையானது போல் உள்ளது.
    புலிகளின் யுத்த கொடுமையில் இருந்து தப்புவதற்காகவும் புலிகளின் கப்பம், பிள்ளை பிடித்தல் போன்றவற்றிக்காகவும் வசதியுள்ள தமிழர்கள் சிங்கள பிரதேசங்களில் குடியேறினர். அதில் வெளிநாடுகளில் உள்ள தமிழீழம் கேட்ட புலியாதரவாளர்களின் உறவினர்கள் தான் அதிகம். வெளி நாடுகளில் எங்களுக்கு காதில் பூ வைக்க முயற்ச்சித்தார்கள் சிங்களப் பகுதிகளில் தமிழர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்றால் சிங்களவனுக்கு புலி மேல் உள்ள பயம் தான் காரணம். புலிகள் தான் தமிழர்களின் ஒரே ஒரு பாதுகாப்பு. ஆகவே கப்பம் தர வேண்டியது உங்கள் வரலாற்றுக் கடமை என்றார்கள். இன கலவரங்களையும் தங்களுக்கு சாதகமாக பாவித்து லாபம் சம்பாதித்தார்கள். இவர்களிடம் இருந்து தப்பி சிங்களப் பகுதிகளில் தமிழர்கள் பாதுகாப்பாக இருப்பதையும் பாவித்தும் தங்களுக்கு லாபம் சம்பாதிக்க முயன்றார்கள்.

    Reply
  • Aras
    Aras

    புலிகளின் யுத்த கொடுமையில் இருந்து தப்புவதற்காகவும் புலிகளின் கப்பம்இ பிள்ளை பிடித்தல் போன்றவற்றிக்காகவும் வசதியுள்ள தமிழர்கள் சிங்கள பிரதேசங்களில் குடியேறினர்”

    புலிகளின் இந்த கொடுமையை முளையிலேயே கிள்ளி எறிந்து தமிழரை ஏன் இந்த அரசுகள் காப்பாற்றவில்லை.

    சனத்தொகை கூடிய இடங்களில் இருந்தே குடியேற்ற வாசிகள் தெரிவு செய்யப்பட்டு குடியமர்த்தப்பட்டனர்”

    அப்படிப்பார்த்தால் யாழ்ப்பாணத்தில்தான் நிலமற்ற விவசாயிகள் அதிகம்.அவர்களுக்கே முன்னுரிமையுண்டு.

    தமிழர்கள் பலர் கொடுத்த உதவிகளைப் பெற்றுக்கொண்டு காணிகளையும் விட்டு விட்டு போனது யாருடைய குற்றம்?
    இந்தா காணி என கையைக்காட்டி விட்டு போனால் சரியா? விவசாயி விதை நெல்லில் இருந்து தனது சமையல் பொருட்கள் வரை தலையில் சுமந்துதான் தனது இருப்பிடத்திற்கு சேர்க்க வேண்டியிருந்தது. போக்குவரத்து கடைகண்ணி ஆஸ்பத்தரி போன்ற அடிப்படை வசதிகளை இந்த அரசகள் “பிரமாதமாக” செய்து கொடுத்திருந்தன. அதனால்தான் விட்டு விட்டு ஓடிவிட்டார்கள்.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //….nantha வேண்டாம் இந்த பிரிவினை வேலை, எல்லாம் முடிந்து இப்போ வன்னி யாழ் வந்தாச்சா??….//

    வன்னிப்புலிகள் எனப் பெயரிட்டு குதூகலித்தவர்கள் இப்போது இப்படி வந்து அட்வைஸ் பண்ணி ஆதங்கப்படுகிறார்கள். ஒன்றும் ஆச்சரியமில்லை! எதிரிக்கு எதிரி நண்பன் என தெரியாமலா சொன்னார்கள் பல்லி?
    அதேபோல ‘புலன்பெயர்’ நாமகரணம் சூட்டியோர் புலத்தில் மாநாடு நடத்தப்போகிறார்கள் எனவும் அறிந்தேன்.

    Reply
  • மாயா
    மாயா

    //இந்தா காணி என கையைக்காட்டி விட்டு போனால் சரியா? விவசாயி விதை நெல்லில் இருந்து தனது சமையல் பொருட்கள் வரை தலையில் சுமந்துதான் தனது இருப்பிடத்திற்கு சேர்க்க வேண்டியிருந்தது. போக்குவரத்து கடைகண்ணி ஆஸ்பத்தரி போன்ற அடிப்படை வசதிகளை இந்த அரசகள் “பிரமாதமாக” செய்து கொடுத்திருந்தன. அதனால்தான் விட்டு விட்டு ஓடிவிட்டார்கள்.- Aras//

    வெளிநாடு வந்த தமிழர் எல்லாருக்கும் , வீடு , நிலம் , உத்தியோகம் தருகிறோம் என்றுதானே அழைத்தார்கள்? அதனால்தான் அகதியாக வந்தோர், அமோகமாக இருக்கிறார்கள்? நல்ல பேச்சா இருக்கே?

    இந்தா காணி என்று கையைக் காட்டினதாக Aras, நினைத்திருக்கிறார் போல இருக்கு. அதற்கான உரிமையையும் எழுத்து மூலம் கொடுத்தார்கள். தமிழர்கள் உள்ள பகுதிகளில் பாதைகளாவது இருக்கிறது. பெரும்பாலான சிங்களப் பகுதிகளில் பாதைகளே கிடையாது. உதாரணத்துக்கு வன்னி யுத்தத்தில் இறந்த படையினர் உடல்களைக் கூட ஆறுகளை கடந்து கொண்டு போக கழுத்தில் வைத்துக் கொண்டே சென்ற காட்சிகள் பல பத்திரிகைகளில் வந்தன. தமிழர் பகுதிகள் அப்படியல்ல.

    Reply
  • palli
    palli

    //நிலத்தை நம்பி வாழ்பவர்களுக்கே நிலம் வழங்கப்படும். //
    நந்தா இதில் மட்டும் பல்லியும் உங்களுடன் பயணிக்கிறேன்;

    Reply
  • Rohan
    Rohan

    நந்தா//படிப்பறிவில்லாத கள்ளகடத்தல் கோஷ்டிகளை தலைவா என்று வெளிநாடுகளில் கும்பிடும் ஆட்களுக்கு மருதானையும் கொழும்பும்தான் கண்ணில் தெரியும். வன்னியின் விவசாயப் பெருங்குடி மக்களின் “உயிர்நாடிகளான” குளங்கள் பற்றி தெரிய நியாயமில்லை!//

    வேலியில் கிடக்கிற தேளை எடுத்து மடியில் போட்டுக் கொள்ளக்கூடாது என்று தெரிகிறது. ஆனாலும், மருதானையும் கொழும்பும் பற்றிப் பேசியவன் என்பதால் கருத்துச் சொல்ல வேண்டியிருக்கிறது.

    1. “கள்ளகடத்தல் கோஷ்டிகளை தலைவா என்று வெளிநாடுகளில் கும்பிடும்” பட்டியலில் நான் இல்லை.
    2. வன்னி மண்ணின் மைந்தர்கள் என்பதால் ஏதோ கிராமமும் வயலும் புலமும் குளங்களும் குட்டைகளும் விவசாயமும் விளைச்சலும் தமக்கு மட்டுமே தெரியும் என்று சிலருக்கு rainfall , catchment yield, flood modelling பற்றிப் பாடமும் catchment and stream hydrology, limnology தலைப்புகளில் விரிவுரையும் optimum storage capacity, optimum fertilisation, appropriate pesticide application போன்ற விளக்கங்களையும் தர எனக்கு எனக்குத் தகுதியும் அனுபவமும் இருக்கிறது. வேண்டுமானால், இதை ஒரு சவாலாகவே எடுத்துக் கொள்ளலாம்.

    Reply
  • NANTHA
    NANTHA

    // இந்தா காணி என கையைக்காட்டி விட்டு போனால் சரியா? விவசாயி விதை நெல்லில் இருந்து தனது சமையல் பொருட்கள் வரை தலையில் சுமந்துதான் தனது இருப்பிடத்திற்கு சேர்க்க வேண்டியிருந்தது. போக்குவரத்து கடைகண்ணி ஆஸ்பத்தரி போன்ற அடிப்படை வசதிகளை இந்த அரசகள் “பிரமாதமாக” செய்து கொடுத்திருந்தன. அதனால்தான் விட்டு விட்டு ஓடிவிட்டார்கள்.//

    விவசாயத்தில் அக்கறை உள்ளவனுக்கு காடுகளை அழித்து தலையில் நெல் சுமப்பது ஒன்றும் பெரிய காரியமல்ல. உங்களுக்கு சிலவேளை எயர் கொண்டிசன் வீடுகள் இருந்தால்த்தான் விவசாயம் செய்யப் புறப்படுவீர்களோ தெரியவில்லை. தவிர விவசாயிகள் ஒவ்வொரு நாளும் சினிமா போக “போக்கு வரத்து” வசதிகளும் தேவையில்லை!

    இந்தா காணி என்று அரசு கை காட்டி விட்டுப் போகவில்லை. வட்டகச்சியிலும், வவுனிக்குளத்திலும், முத்தையன் கட்டிலும் உள்ள விவசாயிகளிடம் பேசியிருந்தால் என்ன கிடைத்தது என்பது புரிந்திருக்கும.

    மேற்சொன்ன இடங்களில் குடி ஏற்றப்பட்டவர்களுக்கு அரசு உதவி கொஞ்சமாவது கிடைத்தது. பல சிங்களக் கிராமங்களில் இன்றும் சயிக்கிளும் மாட்டு வண்டியும்தான் உள்ளன. யாழ்தேவியில் கொழும்பு போக வேண்டும் என்று எண்ணியவர்களுக்கு விவசாயிகள் எப்போதும் கிள்ளுக் கீரைகள்தான்.

    குடியேற்றத் திட்டங்கள் என்பன “உல்லாசப்” பயண தளங்கள் அல்ல.

    Reply
  • thurai
    thurai

    நதியையும் திசை திருப்பலாம், மலையையும் கொண்டுபோய் வடக்கில் வைக்கலாம். ஆனால் தமிழீழம் கேட்டுக் கூச்சல்போட்டுக் கொண்டு, புலம் பெயர்நாடுகளில் பிரசா உருமைக்கு விண்ணப்பிப்போரும், உலகத்தமிழர் பேரவை நாடுகடந்த அரசாங்கம் என கூத்தாடுபவர்களின் மனதை
    கடவுளாலும் திருப்ப முடியாது. இவர்களே ஈழத்தமிழினத்தினுள் வளர்ந்திருக்கும் களைகள்.

    துரை

    Reply
  • Aras
    Aras

    வெளிநாடு வந்த தமிழர் எல்லாருக்கும் வீடு நிலம் உத்தியோகம் தருகிறோம் என்றுதானே அழைத்தார்கள்? “/
    அப்படியென்றால் காணிகளில் வந்து குடியேறியவர்களும் அரசியல் அகதிகள் என்ற நினைப்பா மாயாவிற்கு?

    வன்னி யுத்தத்தில் இறந்த படையினர் உடல்களைக் கூட ஆறுகளை கடந்து கொண்டு போக கழுத்தில் வைத்துக் கொண்டே சென்ற காட்சிகள் பல பத்திரிகைகளில் வந்தன”/
    யுத்தம் என்றால் நெடுஞசாலையில் எல்லா வசதிகளுடனா நடைபெறும்? என்ன சின்னப்பிள்ளைத்தனமாக இருக்கிறதே!

    Reply
  • Aras
    Aras

    விவசாயத்தில் அக்கறை உள்ளவனுக்கு காடுகளை அழித்து தலையில் நெல் சுமப்பது ஒன்றும் பெரிய காரியமல்ல”

    வாழ்நாள் முழுதும் இப்படி வாழ்ந்து விட முடியுமா? அல்லது விவசாயி என்றால் அப்படித்தான் வாழ வேண்டும் என்கிறீர்களா?

    விவசாயிகளிடம் பேசியிருந்தால் என்ன கிடைத்தது என்பது புரிந்திருக்கும.”

    நாலு மைலுக்கப்பால் பஸ் இறக்கி விட்டுப் போகும். தள்ளாத வயதில் உடல் முழுதும் பாரம் ஏற்றியபடி பட்டப்பகலின் உச்ச நிலவின் குழுமையில் விவசாயி “உல்லாசமாய்” நடந்து போனான்.

    Reply
  • Aras
    Aras

    திருகோணமலையில் மகா விளாங்குளம் பகுதியில் 13ம் பிரிவில் நூற்றுக் கணக்கான தமிழ் விவசாயிகள் நெற்பயிர் செய்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் அவர்களை அங்கிருந்து துரிதமாக வெளியேறுமாறு பெளத்த துறவிகள் சிலர் அச்சுறுத்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    பாதிக்கப்பட்ட தமிழ் விவசாயிகள் நொச்சிக்குளம் சாந்திபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் முன்னர் தமிழ் பெயரான ‘முதலிக்குளமாக” இருந்து பின்னர் பெயர் மாற்றப்பட்ட மொரவேவ பிரதேச செயலாளரிடம் குறித்த விவசாயிகள் முறைபாடு மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

    Reply
  • NANTHA
    NANTHA

    // வாழ்நாள் முழுதும் இப்படி வாழ்ந்து விட முடியுமா? அல்லது விவசாயி என்றால் அப்படித்தான் வாழ வேண்டும் என்கிறீர்களா?//

    அது அரசாங்கத்தின் கொள்கைகள் பற்றியது. மிளகாய் இறக்குமதியை நிறுத்தியவுடன் யாழிலும் வன்னியிலும் லொறிகளும், உளவு இயந்திரங்களும் இரண்டு வருடத்தில் கொட்டில் வீடுகளுக்கு முன்னால் தோன்றின. அடுத்த இரண்டு வருடத்தில் கொட்டில் வீடுகள் கல்வீடுகளாக மாறின.

    யு என் பி அரசில் “தாரளமாக” மிளகாயும்”, வெங்காயமும் மற்றும் பொருட்களும் வந்திறங்கி உள்ளூர் உற்பத்திகள் நாசமாக்கிய வரலாறே உண்டு. போதாக் குறைக்கு பொந்தரும் வந்தாரே” என்று ஈழமும் வந்திறங்கியதுடன் “கல்வீடுகளும்”, உளவு யந்திரங்களும் வேலையில்லாக் கள்ளர்களுக்கு ஒரு இரவில் உடைமையாகிப் போயின.

    விவாசாயம் செய்பவர்களுக்கு இன்றும் வரி விதிப்பு இலங்கையில் கிடையாது. ஆனால் ஈழம் என்று புறப்பட்ட கேடிகள் விவசாயிகளிடமிருந்து நெல்லையும் தேங்காயையும் மாத்திரம் கொள்ளையிடவில்லை. அவர்களுடைய பிள்ளைகளையும் பிடித்துச் சென்று கொன்றார்கள்!

    //நாலு மைலுக்கப்பால் பஸ் இறக்கி விட்டுப் போகும். தள்ளாத வயதில் உடல் முழுதும் பாரம் ஏற்றியபடி பட்டப்பகலின் உச்ச நிலவின் குழுமையில் விவசாயி “உல்லாசமாய்” நடந்து போனான்.//

    அது எங்கே?
    ஆனால் யாழிலிருந்து கிளிநொச்சி வரை ஆடு மாடுகளைப்போல கால் நடையாக புலிகளால் ஓட்டிச் செல்லப்பட்ட மக்களில் நூற்றுக்கணக்கான “அப்புமாரும், ஆச்சிமாரும்” தெருவோரத்தில் செத்து கருமாதி காரியங்கள் இல்லாமல் புதைக்கப்பட்டது தெரியாதோ? பல வீடுகளில் இப்போது “அவர்களின்” படங்கள் உண்டு!

    திருமலை பிரச்சனைகள் நீதிமன்றம் கொண்டு செல்லப்படக் கூடியவை. சட்டத்தரணி சம்பந்தன் முயற்சி செய்யாது உள்ளது ஏன்? அதை விட்டு பத்தாம் வாய்க்கால் காரரின் கைக் குண்டு வீச்சுக்கள் பலனளிக்க மாட்டாது.

    Reply
  • bannda
    bannda

    that it’s we need LTTE back in our land than no one make a comman like above!!

    Reply