தமிழ் மக்கள் இழந்த அனைத்தையும் விரைவில் மீளப் பெற்றுக் கொடுப்போம் – யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு

president.jpgதமிழ் மக்கள் கடந்த 30 வருடகாலங்களில் இழந்த அனைத்தையும் நாம் விரைவாக மீளப்பெற்றுக்கொடுப்போமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார். யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டர ங்கில் நேற்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்குத் தலைமை வகித்து உரையாற்றிய ஜனாதிபதி;

வடக்கை வளமாக்கும் திட்டம் எம்மிடமுண்டு. பயம், சந்தேகம், அடக்குமுறையற்ற நாட்டைக் கட்டியெழுப்ப நாம் இன, மத, குல, பிரதேச பேதமின்றி இணைந்து செயற்படுவோ மெனவும் தெரிவித்தார். ஜனாதிபதி தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது,

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வாக்களித்து எனது வெற்றிக்குப் பங்களிப்புச் செய்தவர்களுக்கும், வேறு எந்தக் கட்சிக்கு வாக்களித்தாயினும் வாக்களிக்கும் உரிமையைப் பெற்று ஜனநாய கத்தை நிலை நிறுத்தியமைக்காகவும் அவர்களுக்கும் எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன். விடுதலைப் புலிகளினால் வடக்கு, கிழக்கு மக்களின் வாக்களிக்கும் உரிமை தடுக்கப்பட்டிருந்தது. அந்த ஜனநாயக உரிமையை மக்களுக்குப் பெற்றுக்கொடுப்பதே எமது முக்கிய நோக்கமாக இருந்தது. அதனைச் செயற்படுத்திய மக்களுக்கு மீண்டுமொரு முறை பாராட்டினைத் தெரிவித்துக் கொள்கின்றேன். 30 வருடகாலம் வடக்கு மக்களுக்குக் கிட்டாத அபிவிருத்தியினை மீளப் பெற்றுக்கொடுத்து மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதே எமது முக்கிய நோக்கமாகும்.

வடக்கு மக்களின் விவசாயம், ஏனைய தொழில்துறைகளை மேம்படுத்தி அவர்களின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை நாம் இப்போதே ஆரம்பித்துவிட்டோம் என்பதை நான் குறிப்பிடவிரும்புகின்றேன். தெற்கிலிருந்து வாய்க்கால்கள் மூலம் யாழ்ப்பாணத்திற்கு நீரைப்பெற்றுக்கொள் வதற்கான திட்டமொன்றை நாம் விரைவில் நடைமுறைப்படுத்தத் தீர்மா னித்துள்ளோம். மக்களுக்கு குடி நீரும் விவசாயத்திற்கான நீரும் இதன் மூலம் கிட்டுவது உறுதி.

இரணை மடுக் குளத்தினூடாக இத்திட்டம் நடைமுறைப் படுத்தப்படவுள்ளதுடன் மகாவலி கங்கை நீரை யாழ்ப்பாணத்திற்குக் கொண்டு வருவதற்கான மற்றுமொரு திட்டமும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. சகல இன, மத, குல மாகாண மக்களையும் நாம் ஒன்றாகவே பார்க்கிறோம். எம்மிடம் எவ்வித வேறுபாடும் ஒருபோதுமில்லை. சகலருக்கும் ஒரே அகப்பையிலேயே அளக்கிறோம் என்பதை தமிழ் மக்கள் மறந்துவிடக்கூடாது.

இந்நாட்டினைப் பீடித்திருந்த 30 வருட பயங்கரவாதம் இன்றில்லை. சகல மக்க ளும் பயம் சந்தேகமின்றி சுதந்திரமாகவும் நிம்மதியாகவும் வாழ வழிவகுக்கப்பட்டுள் ளது. மக்கள் வழிபாட்டுத் தலங்களுக்கும், பாடசாலை, சந்தை என சகல இடங்க ளுக்கும் அச்சமின்றி போய்வரமுடியும். எம்மிடம் தமிழ், சிங்கள இனம் மற்றும் மாகாண பேதங்கள் இல்லை.

நாம் ஒரு தாய் மக்கள். இன ரீதியான அரசி யல் நோக்கங்கள் இனியும் இருக்கக்கூடாது. நாம் எதிர்காலத்தில் கிராம சபைகள் மற்றும் மக்கள் சபைகள் மூலம் பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தவுள்ளோம். இவற்றில் உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உங்கள் பிரதிநிதிகளே உள்ளனர். அவர்கள் உங்கள் தேவைகளை நிறைவேற்றுவார்கள். வடக்கில் பல வருடகாலம் பின்னடைவு கண்டிருந்த அபிவிருத்தி இப்போது நடைமுறைப்படுத்தப்படுகிறது. கல்வி, விவசாயம், சுகாதாரம், மீன்பிடி, நீர், போக்குவரத்து வசதிகள் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளன.

புலிகளும் ஐக்கிய தேசியக் கட்சியினரும் என்ன செய்தனர் என்பது மக்களுக்குத் தெரியும். ஆசியாவின் பிரபல நூலகமான யாழ் நூலகத்தை எரித்தவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியினரே. இது இந்நாட்டின் எதிர்கால சந்ததிக்குச் செய்யப்பட்ட பெருந்துரோகமாகும். இன்னும் பலர் புலிகளின் வலையில் சிக்கி செயற்படுகின்றனர்.

30 வருட துயர வாழ்க்கை இனியும் வேண்டுமா என நான் கேட்க விரும்புகிறேன். நாட்டி னதும் உங்கள் பிள்ளைகளினதும் எதிர்காலம் பற்றி சிந்தித்து புத்தியுடன் தீர்மானம் எடுப்பீர்கள் என நான் நினைக்கின்றேன். எமது முன்னணியில் தமிழ், முஸ்லிம் மக்களும் உள்ளனர். உங்கள் பிரதேசம் இன்னும் வளமாக மாறும். குறுகிய எண் ணம் வேண்டாம். ஆசியாவின் உன்னத நாடாக இலங்கையை மாற்றும் நோக்கில் நீங்களும் பங்காளர்களாகுங்கள். பயம், சந்தேகம், அடக்குமுறையற்ற நாட்டை நாம் இணைந்து கட்டியெழுப்புவோம். தவறான பொய்ப்பிரசாரங்களுக்கு துணைபோக வேண்டாம். வெற்றிலைச் சின்னம் உங்களினதும், உங்கள் பிள்ளைகளினதும் நாட்டினதும் வெற்றியாகுமெனவும் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 Comments

  • Appu hammy
    Appu hammy

    MR.D.DEVA!! மக்கள் மனதில் நீங்கள் இடம்பிடித்தீர்களோ இல்லையோ உங்கள் பிரச்சார பிரசுரங்கள் யாழ்ப்பாணத்தில் எல்லா வீட்டு மதில்களிலும் இடம்பிடித்துள்ளன. உங்கள் கட்சியின் வேட்பாளர்களின் பிரசுரங்களையே (மகிந்தரால் நேரடியாக உங்களுக்கெதிராக நிறுத்தப்பட்டோரின்) கிழித்தெறிந்துவிட்டும் அதற்கு மேலாகவும் ஒட்டுகின்றீர்களே யாரின் மனதில் இடம்பிடிக்க.

    Reply
  • Aras
    Aras

    தமிழர்கள் இழந்திருக்கிறார்கள் என்பதை மகிந்தா ஒத்துக் கொள்ளுகிறார். ஆனால் புலிப்பக்கம்தான் கையை காட்டுவார்.

    Reply
  • Appu hammy
    Appu hammy

    What a Joke? EPDP is the only Para military group operating in Jaffna. They are the reason of abductions, Killings and Kidnappings in North. Chavakacheri court ordered to arrest the EPDP member who murdered this child. and people already rejected them in past elections.

    Hey, i have seen EPDP members with Pistols and AK 47 s. Guess they use them to pick Cocon

    Reply
  • NANTHA
    NANTHA

    மக்கள் வாக்களிக்கும் உரிமையை பெற்றிருக்கிறார்கள். வாக்குகளை “பிடுங்கி” எடுக்க உள்ளூரில் மட்டுமல்ல வெளிநாடுகளில் இருந்தும் பலர் ஓடிப்போய் அட்டகாசம் செய்கிறார்கள்!

    Reply
  • sumi
    sumi

    புலிகளாலும் இராணுவத்தினராலும் இழந்த உயிர்கள் உட்படவா??

    Reply
  • Ajith
    Ajith

    மக்கள் வாக்களிக்கும் உரிமையை பெற்றிருக்கிறார்கள். வாக்குகளை “பிடுங்கி” எடுக்க உள்ளூரில் மட்டுமல்ல வெளிநாடுகளில் இருந்தும் பலர் ஓடிப்போய் அட்டகாசம் செய்கிறார்கள்!
    Nantha,
    Yes you are right. During the presidential election, there were number of bomb blasts happened to block voters voting for Fonseka and TNF by those M.R’s peoples who are in Jaffna and those who went from London.
    Rajapkse promised to give everything he denied for tamils for last 30 years but what about those rights Sinhala took from tamils over 60 years. Can he took all those sinhala colonisations from the North-East over the period. Can he remove the buddhism from its state relegion position? He said that UNP was responsible for the burning of Jaffna library. Can he tell who was responsible for the destroying the whole vanni area and murder of 100,000 tamils using cluster bombs and chemical weapons.

    He also says that there is no terrorism now in Sri Lanka. Who was responsible for the murder of Kapil nath last week and abduction of his father for ransom seeking. Who was responsible for the attack on MTV and Sirasa Media?

    30 வருட துயர வாழ்க்கை இனியும் வேண்டுமா என நான் கேட்க விரும்புகிறேன்.
    It is a right question. We don’t want the sufferings of the past 60 year under Sinhala buddhist rule. We are capable of living happily without a sinhala rule. Why do we need a sinhala rule? What gurantee there that the burning of Jaffna library will not happen again. What gurantee that Sinhala rule put economic sanctions for tamils as they did over the time? we will not forget the days we have to wash our clothes using ashes, Palmyrah juice? What gurantee there that tamils not be slaughtered as in 1958, 1962, 1977 and 1983.

    What is the gurantee that Rajapakse is going to rule Sri Lanka for ever. If UNP or JVP become more extreme Sinhala party like Rajapkse,Sinhala people will back them and they can become the rulers of Sri Lanka. Tamils will have to face the same fate again.

    Reply
  • sumi
    sumi

    இலங்கை மக்கள் இழந்ததை பெற்றுக்கொள்ள உதவுவோமே தவிர, புலம் பெயர்ந்து அந்நாடுகளில் பிரஜாவுரிமை பெற்று நாடுகடந்த தமிழீழம் கோருபவர்கள் இழந்ததைப் பெற்றுக்கொள்ள அல்ல என்பதை புரிந்து கொள்வது அவசியம்.

    Reply
  • Ajith
    Ajith

    The people of Sri Lanka lost everything under the Rajapkase family dictatorship including freedom of speeach, freedom to write , dignity, culture, economy. Today Sri Lanka is the worst country for human right abuses, abduction and muders, genocide, war crimes, ethnic cleansing, economy, corruption. Rjapakse familiy hold two-thirds of wealth of the nation while two-third of the population live below poverty line.Sri lanka has the largest cabinet in the world. Murders and Criminals are law makers. What else to loose Sumi.
    Tamils living in foregincountries live without fear for brutal Rajpakse owned White vans.There is enough freedom to express your view without fear. Journalists and politicians are not asssasinatedlike under Rajapakse regime. It is not only tamils but also Sinhalese and muslims lost their right under Rajapakse. Today, Sri Lanka lost its soverignity to China and India. This is the reality.

    Reply
  • NANTHA
    NANTHA

    மஹிந்த ராஜபக்ச தற்போது தமிழர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை மீட்டுள்ளார். மகிந்தவின் கூட்டத்தில் விசில் அடிக்கவும் உரிமை கிடைத்துள்ளது. நம்ம தேசியத் தலைவரை கண்ணால் கண்டவர்கள் எத்தனை பேர்? எப்பொழுதாவது தேசியத் தலைவரோ அல்லது அவரது தொண்டரடிப்பொடிகளோ “பகிரங்க” கூட்டங்களுக்கு வந்து மக்களை பார்த்திருக்கிறார்களா?

    Reply
  • maya
    maya

    This massage from another side:-

    “Yes, we are Sinhala. I’m also Sinhala. So listen” President tells the Tamil people in Jaffna

    The President during his speech at the Jaffna rally on the 1st had shouted at the Tamil people saying, “Yes, we are Sinhala. I’m also Sinhala. Therefore, you Tamils listen to me. If you cannot listen without trying to be too smart, then leave.”

    The President had made this statement while making his speech in Tamil with the help of the tele-prompter during the UPFA rally at the Duraiappa Stadium. The people who had not understood his speech had started to shout in anger while the President had shouted back in this manner.

    When the Tamil people unable to comprehend what the President was trying to say in his speech had started to shout, and an angry President had said, “I will not stop. Since you shouted, I will speak more in Tamil.” One of Minister Douglas Devananda’s officials had then taken the microphone from the President and had started to calm the crowd.

    Devananda had also been present at the time the President had lost his cool in this manner.

    Before attending the rally, the President had visited the Naga Vihara and laid the foundations stone to a rest house for the sangha and visited the Nallur kovil.

    lankanewsweb.com/news/EN_2010_04_03_003.html
    Muthamizh Chennai

    – Maya

    Reply
  • மாயா
    மாயா

    வெளியில் இருந்ததால் மேலே உள்ள இணைப்பை இணைத்தேன். யாழ் வந்த மகிந்தவுக்கு எதிராக சிலர் கோஸமிடுவதையும் , இந்தக் கோஸம் தொடர்ந்தால் தான் தொடர்ந்தும் தமிழில் பேசுவேன் என தொடர்ந்து மகிந்த பேசியதும் மகிந்தவிடம் உள்ள தில். இதையே புலிகள் காலத்தில் யாழ்பாணத் தமிழன் செய்திருந்தால் என்ன நடந்திருக்கும்? சிந்தித்து பார்க்க வேண்டும்.

    சிலரால் இன்னும் ஜனநாயக வழியில் சிந்திக்கத் தெரியவில்லை. துப்பாக்கிகளால்தான் தமிழரை கட்டுப்படுத்த முடியுமென்றால், அதுவே எதிர்காலத்தில் வழியாகிவிடுமோ என நினைக்கத் தோன்றுகிறது?

    Reply
  • மாயா
    மாயா

    மின் அஞ்சல் வழி வந்த நல்லதொரு ஆக்கம்
    —————————————
    அமைதி வாழ்வா? அழிவுப் பாதையா?
    தமிழ் மக்கள் தீர்மானிக்க வேண்டும்!
    அந்தகாரத்துக்கு இட்டுச் செல்ல தமிழ்க் கூட்டமைப்பு முயற்சி
    (எம். மகாதேவன்)

    இலங்கையில் பாராளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே இருக்கின்ற தறுவாயில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரங்கள் தமிழ் மக்களை மீளவும் அதல பாதாளத்துக்குள் தள்ளி விடுமோவென அச்சம் கொள்ள வைத்துள்ளன. ‘வேதாளம் மீண்டும் முருங்கையில் ஏறியது” போலவே தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தனது அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல ஆரம்பித்துள்ளது.

    சுமார் மூன்று தசாப்தகாலமாக வடக்கு, கிழக்குத் தமிழ் மக்கள் இந்த நாட்டில் அனுபவித்த கஷ்டங்கள் எண்ணிலடங்காதவை. திரும்புமிடமெல்லாம் அழிவுகளும் அவலங்களுமாக நரகலோக வேதனையை அனுபவித்து தற்போது போர் ஓய்ந்த நிலையில் வடக்கு, கிழக்குக் தமிழ் மக்கள் அமைதிக் காற்றைச் சுவாசிக்க ஆரம்பித்துள்ளார்கள்.

    இழந்தவைகள் ஆயிரமாயிரம். இவற்றில் விலைமதிக்க முடியாத உயிர்கள் பல்லாயிரம். இத்தகையை அவல நிலையின் சூத்திரதாரிகள் தமிழ் தலைவர்களே.
    மிதவாதத் தமிழ் தலைமையும் தீவிரவாதத் தமிழ் தலைமையும் தாம் எங்கே செல்கிறோம், தமது இலக்கு என்ன, அதனை அடையவேண்டிய மார்க்கங்கள் யாவை, தமது பயணத்தில் உண்மையான நண்பர்கள் யார், பகைவர்கள் யார் என்பவைபற்றியெல்லாம் தகுந்த விதத்தில் மதிப்பிடாது ‘கண்டதே காட்சி, கொண்டதே கோலம்” என்பது போல எவ்வித தீர்க்கதரிசனமோ ராஜதந்திரமோ இல்லாது செயற்பட்டதன் காரணமாகவே அழிவுகள், அவலங்களைச் சந்தித்ததோடு எத்திசையில் செல்வதெனப் புரியாது நிற்கின்ற நிலையும் தற்போது ஏற்பட்டுள்ளது.
    மிதவாதத் தலைவர்களும், தீவிரவாதப் போக்கைத் தழுவியவர்களும் விட்ட தவறுகள் எண்ணிலடங்காதவை மட்டுமல்ல. தமிழர்களது நியாயமான உரிமைகளைப் பெறும் விடயத்தில் பாரிய பின்னடைவுகளை ஏற்படுத்தியவையாகவும் இருக்கின்றன. உதவிக்கு வந்த கரங்களையும் உதறித்தள்ளி உதாசீனம் செய்த தன்மையே தமிழ் தலைமைகளிடம் காணப்பட்டது.

    இத்தருணத்தில் அரசியல் ரீதியாக மட்டுமன்றி கடந்த முப்பது வருடகாலத்தில் ஏற்பட்ட அவலங்கள் மூலமாகவும் பெற்ற அனுபவங்களின் அடிப்படையில் ‘இனி ஒரு விதி செய்வோம்” எனப் புதிய அரசியல் அணுகுமுறைகளுக்கு வழிவிடாமல் மீளவும் ‘பழைய குருடி கதவைத்திறவடி” என்ற ரீதியில் கூட்டமைப்பு அரசியல் நடத்த முற்பட்டுள்ளமை தமிழ் மக்களது தலைவிதியை மீளவும் கேள்விக்குறியாக்கிவிட்டுள்ளது.

    அண்மையில் வவுனியா சாஸ்திரி கூளாங்குளம் சித்தி விநாயகர் ஆலய முன்றலில் நடந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய தமிழ் தேசிய கூட்டமைப்புத் தலைவர் இரா. சம்பந்தன், ‘அரசியல் தீர்வைப் பலவீனப்படுத்த அரசு முயற்சி. இச்சூழ்ச்சி வலையில் தமிழ் மக்கள் சிக்கிவிடக்கூடாது. எதிர்காலச் சந்ததியினர் நிம்மதியாக வாழ அணுமதிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

    இப்பேச்சை அவதானிக்கும்போது சம்பந்தன் குறிப்பிட்டுக் கூறுகின்ற தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுதான் யாது? அதனை எவ்வகையில் அரசாங்கம் பலவீனப்படுத்த முயலுகிறது?

    எத்தகைய நிம்மதியை எதிர்காலச் சந்ததியினருக்கு சம்பந்தரும் அவரது கூட்டாளிகளும் பெற்றுக்கொடுக்கப்போகிறார்கள்? என்பவை முக்கிய கேள்விகளாக இருக்கின்றன.
    கடந்த மூன்று தசாப்தகால யுத்தத்தின் அகோரப்பிடிக்குள் சிக்குண்டு மீளவும் தம்மை சுதாகரித்துக்கொண்டு எழுந்து நிற்க முயற்சிப்பவர்களாகவே தமிழ் மக்கள் காணப்படுகின்றனர். எனவே ‘பனையால் விழுந்தவனை மாடேறிமிதிப்பது”போலவே சம்பந்தரது கருத்துக்கள் காணப்படுகின்றன. எதிர்காலச் சந்ததியினர் நிம்மதியாக வாழ வழியமைக்க வேண்டுமென்பதே சம்பந்தரின் கருத்தாக இருக்கின்றது.

    வடக்கு, கிழக்கின் இன்றைய சந்ததியினருக்கு சம்பந்தர் தமது ‘தேவாரத்தைப்” பாடவேண்டிய அவசியமில்லை. ஏனெனில் எதிர்காலத்தை நோக்கி நிற்கும் இன்றைய தமிழ்ச் சந்ததியினர் யுத்தம் – அமைதி என்பவை குறித்து நன்கறிந்தவர்களாகவே இருக்கின்றனர்.

    முப்பது வருடங்களுக்கு முன்னர் இருந்த தமிழ் சந்ததியினரது நிலை வேறு, இன்றைய சந்ததியினரது நிலைப்பாடு வேறாகும். அன்றெல்லம் தமிழ்த் தலைவர் கூறியதையே தாரகமந்திரமாக தமிழ் இளைஞர்கள் ஏற்றிருந்தார்கள். தமிழ்த் தலைவர்களைத் தமது வழிகாட்டிகளாக ஏற்றிருந்தார்கள். எனவே அவ்வாறிருந்த ஆயிரமாயிரம் தமிழ் இளைஞர்களை தமிழ் தலைவர்கள் எவ்வாறு வழிநடத்தி தற்போது எங்கே கொண்டுபோய் விட்டிருக்கின்றார்கள் என்பதை முழு உலகமும் நன்கறியும்.

    நெஞ்சிலே நேர்மைத் திறனும் தீர்க்கதரிசனமும் இல்லாது, அமைதியையும் சமாதானத்தையும் நோக்கிய ஒரு தீர்வுத்திட்டத்தை ஏற்படுத்தாது, அர்த்தமற்ற பேச்சுக்களையும், நச்சுத்தனமான உணர்வலைகளையும் ஏற்படுத்தியதன் விளைவாகவே வளமாக வாழ வேண்டிய இன்னுயிர்கள் பல இளமையிலேயே கருகிப்போயின.
    எனவே தமது தவறான பச்சோந்தித்தனமான சுயநலமான வழிகாட்டல்களினால் மரித்துப்போன ஆயிரக்கணக்கான உயிர்கள் நடமாடிய பூமியிலிருந்து பேசுகிறோம் என்பதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் முதலில் மனதில் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

    அரசியல் தீர்வு, சுயநிர்ணய உரிமைகள் என்ற ரீதியில் அர்த்தமற்றவற்றைத் தெரிவிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர், தம்மால் தவறாக வழிநடத்தப்பட்டு இவ்வுலக வாழ்வை நீத்த ஆயிரக்கணக்கானவர்கள் பற்றி இத்தருணத்திலே சிந்திக்க வேண்டியவர்களாகின்றனர்.
    அப்பல்லாயிரக்கணக்கான உயிர்களின் ஆத்மசாந்தியை மனதில் வைத்தேனும் அமைதியை நோக்கிய புதிய சிந்தனைகளை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் முன்வைக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர்.

    ஆனால் அவர்கள் பேசுவதோ அல்லது செய்வதோ வெல்லாம் விடிந்தும் விடியாத ஒரு நிலையை ஏற்படுத்துவதாகவே இருக்கின்றது. தமது நியாயமான அரசியல் தீர்வுக்காகக் குரல் கொடுக்கின்ற தமிழ் மக்களை அணுகும் விடயத்தில் தொடர்ந்தும் கிணற்றுத்தவளைகள் போல தமிழ் தேசியக் கூட்மைப்பினர் இருக்கலாகாது.

    அரசியல் தீர்வுகள், சமரசப் பேச்சுக்கள், மனிதாபிமானப் பிரச்சினைகள் என்பவற்றைப் பொறுத்தவரை எம்மைச் சூழவர இன்று உலகில் நடத்து கொண்டிருப்பவை பற்றி நாம் சிந்திக்கவேண்டும். தமது உரிமைகளுக்காகப் போராடிய மக்கள் இன்று ஆயுதங்களைக் களைந்து சமாதான வழியில் தீர்வுகளைக் கண்டுள்ளார்கள்.
    பிரித்தானியாவின் வட அயர்லாந்துப் பிரச்சினை, இந்தியாவின் பஞ்சாப் பிரச்சினை என்பவை இதற்கு நல்ல உதாரணங்களாகும்.

    வட அயர்லாந்தில், போராட்டத்தில் குதித்த ஐரிஸ் கெரில்லாக்கள் நீண்ட யுத்தங்கள் பயனளிக்கப்போவதில்லை என்பதை உணர்ந்து பிரிட்டிஷ் அரசுடன் அர்த்தபுஷ்டியான பேச்சுக்களை நடத்தி இன்று தமது உரிமைகளைப் பெற்றுள்ளார்கள். இந்தியாவிற்குப் பெரும் தலையிடியைத் தந்து கொண்டிருந்த பஞ்சாப் பிரச்சினையும் சுமுகமாகத் தீர்க்கப்பட்டுள்ளது.

    சீக்கிய தீவிரவாதிகள் ஆயுதப் போராட்டத்தில் பின்னடைவைக் கண்ட நிலையில் அரசியல் தீர்வு சாத்தியமாகி பஞ்சாப்பில் தற்போது அமைதி தவழுகிறது.
    சீக்கிய இனத்தைச் சேர்ந்த இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் இந்தியர்கள் அனைவரதும் நல்லபிமானம் பெற்ற தலைவராகவும் திகழ்கிறார்.
    தென்னாபிரிக்காவில் ஒரு தீவிரவாத இளைஞராகச் சிறைசென்ற நெல்சன்மண்டேலா, சிறையிலிருந்து விடுதலை பெற்றதும் தென்னாபிரிக்கர்கள் அனைவருமே ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு பெருந்தகையாக உருவாகியிருந்தார்.

    இந்நிலையில் உலகில் விடுதலைப் போராட்டங்கள், உரிமைப் போராட்டங்கள் என்பவை தொடர்பாக ஏற்பட்டு வரும் மாற்றங்கள் காலவோட்டத்துக்கமைவானவையாகவே இருக்கின்றன.

    பல்லின, பல மத, பன்மொழிச் சமூக அமைப்பில் எந்தவொரு இனமும் தனித்து வாழ முடியாது. இன்று உலகம் பொருளாதாரமயமானதாக இராணுவக் கெடுபிடிகளை வெறுத்து ஒதுக்கியதாக இருக்கின்றது.

    அரசியல் ரீதியாக இல்லாமல், பொருளாதார ரீதியாக எவ்வாறு உறவுகளைக் கொண்டிருக்கலாமென்பதையே உலக நாடுகள் சிந்திக்கத் தலைப்பட்டுள்ளன.
    எமது அயல் நாடான இந்தியா கூட இன்று தனது பல்லின, பன்மொழிப்பாங்கான சூழலில் அமைதியைப் பேணி, பொருளாதார வெற்றிகளை ஈட்டி வருகிறது.
    தமிழக மாநிலத்தைப் பொறுத்தவரை மறைந்த முதலமைச்சர் மூதறிஞர் சி.என். அண்ணாதுரையின் தீர்க்கதரிசனம் தமிழ் நாட்டவர்களை தலைநிமிர்ந்து தமிழர்களாகவும், அதேசமயம் இந்தியக் குடிமக்களாகவும் வாழச் செய்துள்ளது.

    இத்தகைய போக்கிலேயே தமது அரசியல் நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டிய தமிழ் தேசிய கூட்டமைப்பினர், இன்று நடைமுறைச் சாத்தியமற்றவற்றையே பேசியும், செய்கையில் காட்டியும் வருகின்றனர்.

    கடுமையான யுத்தத்தைக் கண்ட வடக்கு, கிழக்குப் பிரதேசத்தை அமைதிப் பூங்காவாகக் கட்டியெழுப்பக்கூடிய சூழல்கள் தற்போது காத்திரமானவையாக இருக்கின்றன.
    இந்நிலையில் இந்த அமைதிச் சூழலை மேலும் பலப்படுத்தி செம்மைப்படுத்துவதா?
    அல்லது தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் போன்ற தீர்கதரிசனமற்றவர்களின் பேச்சைக்கேட்டு மீளவும் குழப்பமான நிலைக்குச் செல்வதா? இது பற்றி வடக்கு, கிழக்கு மக்கள் நன்கு சிந்தித்துச் சரியான தீர்மானத்தை எடுக்க வேண்டிய சந்தர்ப்பத்தையே எதிர் வரும் பொதுத்தேர்தல் தந்து நிற்கிறது.

    Reply
  • மகுடி
    மகுடி

    சரத் பொண்சேகாவுக்கு ஆதரவாக உண்ணவிரதம் இருந்த பெளத்த பிக்குகளை மகிந்த அரசு கைது செய்தது போன்ற நிகழ்வுகளை இதுவரை எவரும் செய்யவில்லை. இது நல்ல அறிகுறி, படங்களை பார்க்க: http://www.lankadeepa.lk/2010/04/05/front_news/04.html

    Reply
  • chandran.raja
    chandran.raja

    // பல்லின பலமத பன்மொழிசமூக அமைப்பில் எந்தஇனமும் தனித்து வாழமுடியாது//
    இதைத் தான் தமிழ்மக்கள் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். இரண்டாவதாக இலங்கை அரசியலில் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சம் ஏற்படுத்துகிற ஒரு அரசியல் தமிழ்இனத்திற்கோ சிங்களஇனத்திற்கோ இருக்கமுடியாது. ஆகவே இந்தியா எந்த விமர்சனத்திற்கு உட்படாது என்பது அர்த்தமல்ல.
    இதைசம்பந்தன் விளங்கிக் கொள்ளமுடியாது. இதுவும் ஒருவகை புலியே. ஆயுதம் இல்லாத புலிகள். சம்பந்தன் சேனாதிராஜா பிரேமச்சந்திரன் அடைக்கலநாதன் எங்கிருந்து வந்தார்கள். அவர்களின் தலைவர்களுக்கு என்ன நடந்தது என்பதை எண்ணிபார்கக் கூட திராணியில்லாதவர்கள். இவர்களா? தமிழ் சமூகத்தை வழிநடத்தப் போகிறார்கள்.இவர்களுக்கு தெரிந்தது சூழ்ச்சியும் சதிநடவடிக்கைகளுமே! அரசியல் அல்ல.இவர்களுக்கு தெரிந்த அரசியல் தமிழ்மக்களை சிங்களமக்களுக்கு எதிராக நிறுத்துவததே!.
    பாரிய விலைகொடுத்து தமிழ்மக்கள் பெற்ற இந்த அனுபவத்தை இந்த தேர்தலில் தமிழ்மக்கள் மறந்து விடமாட்டார்கள் என நினைக்கிறோம்.

    Reply
  • மாயா
    மாயா

    இல்லை, தமிழ் மக்கள் இனவாதம் எனும் போதையில் இன்னும் உழல்கிறார்கள். இன்னும் இவர்களது கண் திறக்க பல காலம் ஆகும். அதுவரை சிவனே எனப் பொறுத்திருப்பது நம் கடமை. அதுவரை ஏதாவது எழுதி உண்மைகளை வெளிப்படுத்தலாம். தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை என்பது போல, இருக்கும் பல பெரிசுகள் சாகும் வரை இந்த இனவாத – மதவாத நச்சு இல்லாமல் போகாது.

    இனி நாம் தமிழரோ , சிங்களவரோ, இசுலாமியோ அல்ல ஒரு தாய் மக்கள் என மகிந்த சொன்னதை ஏற்காத தமிழரது கேலி கோசம் அதைத்தான் உணர்த்துகிறது.

    Reply
  • NANTHA
    NANTHA

    தமிழர்களுக்கு கல்வியிலிருந்து ஆஸ்பத்திரி வரை அரசு கொடுக்கும். சம்பந்தன் அதுபற்றிக் கவலைப்படத் தேவையில்லை. ஆனால் சம்பந்தனின் கவலை “தன்னுடைய பரம்பரைகளுக்கு எப்படி சொத்து சேர்ப்பது என்பதாகும்.

    சந்திரன் சொன்னது போல தங்கள் தலைவர்களைக் கொன்ற கும்பலோடு சேர்ந்தவர்கள் “தமிழர்களுக்கு” எதனை வாங்கப் போகிறார்கள், எதனைக் கொடுக்கப் போகிறார்கள்?

    தமிழ் என்று “உள்ளி” அரைப்பதில் சம்பந்தனுக்கு முதலிடம். இவர்கள் சொல்லும், எதுவுமே எந்தக் காலத்திலும் நடக்கப் போவதில்லை! இறைமை, தன்னாட்சி என்பன விஷங்களே தவிர, மருந்து அல்ல!

    Reply
  • chandran.raja
    chandran.raja

    தமிழ் அரசாங்க உத்தியோகஸ்தன் கொழும்பிற்கும் யாழ்ப்பாணத்திற்கும் தொடர்பு வைத்திருக்கிற தமிழ் வியாபாரி பற்றா குறை ஊதியத்தில் வாழ்வுநடத்தும் எமது ஆசியர்கள் எல்லைக் கிராமங்களில் இருக்கும் விவசாயிகள் நெடும் பயணத்தை மேற்கொள்ளும் வாகனசாரதிகள் இவர்கள் யாருக்குமே இனவாதமென்ற பேச்சுக்கு இடமே இல்லை.இல்லை அப்படி வரவும் முடியாது. இனவாதத்தை தூண்டிவளர்த்தவர்கள் எமது அரசியல் தமிழ் அரசியல் தலைவர்களே!

    உழைப்பாளி மக்களுக்கு இனவாதம் என்ற விஷத்தை கலந்து தமிழ்மக்களுக்கு பருகக்கொடுத்தது முதாலிளித்துவ விசுவாசிகளான மேற்தட்டு எண்ணம் கொண்ட தமிழ் வக்கீல் அரசியல்வாதிகளே! இது தான் தமிழ் அரசியல் வரலாற்றில் கிண்டக் கிண்ட வெளிப்படுவது. இதுவே மே மாதம் 19 திகதிக்கு முன்பிருந்த தமிழரின் மனநிலை.

    இன்று இனவாதம் இலங்கையில் ஏற்படுத்தவே முடியாது. அதுவும் மகிந்தராஜபக்ச ஜனாதிபதியாக இருக்கும் போது. அப்படியில்லை அதுவும் நடந்தேறும் என்று ஒருவர் பந்தையம் கட்டுபவர்ராக இருந்தால்…… அது நிச்சியம் மேற்குலக நிதிமூலதனத்தாலும் புலம்பெயர் தமிழர்ககளாலும் ஏற்படக்கூடியதே.

    Reply
  • Ajith
    Ajith

    Sinhala only- Who brought this?
    Standardisation – Who brought this?
    Buddhism is the official Relegion?-Who brought this?
    No charges against murderers and abductors of 1958 to 2010?
    99% of the forces are Sinhala? – Under which rule?
    Tamil is an official language, but still letters to tamils in Sinhala? – Under Which rule?
    Sarath Fonseka claimed that minorities have no rights in Sri Lanka – Under whose leadership he said this?
    North-East meger was demerged – Under Whose leadership?
    Who did kill 40,000 tamils in the no-fire zone? By Who and Why? Rajapakse? Fonseka? Both? Is it because they are tamils?

    This is what Rajapakse will give tamils.

    The young family man from Veala’nai in the islets of Jaffna gone missing since 30 March has been abducted for a ransom of 300,000 rupees, according to a complaint lodged with Human Rights Commission (HRC) Jaffna office by his family members Sunday.

    Reply
  • thurai
    thurai

    சிங்கள அரசாங்கம் தவறுகள் விடவில்லையென்று எந்தத்தமிழனும் மனப்பூர்வமாக ஏற்கமாட்டார்கள். ஆனால் தமிழர்களிற்கு விடுதலை பெற்ருத்தருகின்றோம் என்ற புலிகளின் செயல்களே தமிழர்களை அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கச் செய்துள்ளது.

    புலம்பெயர்நாடுகளில் கோவில் கட்டினால் புலிகள். சினிமாப்படங்கள் காட்டினால் புலிகள். விடுதலைப்போரிற்கு பணம் சேர்த்தால் புலிகள். தமிழ் பாடசாலைகள் நாடத்துவதென்றால் புலிகள். தமிழ் மன்றங்கள் என்றால் புலிகள் பழைய மாணவர் சங்கமென்றால் புலிகள். இப்படியான அடக்கு முறையிலும் பார்க்க சிங்கள அரசின் அடக்குமுறை குறைவுதான்.
    துரை

    Reply