திருகோணமலை மாவட்டமும் வட கிழக்கு மாகாண அரசும் – பே பரமானந்தம்

30 வருடம் சிங்கள தமிழ் இன யுத்தத்தில் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் திருகோணமலை மாவட்டம் முதன்மையான இன அழிவை எதிர்நோக்கிய ஒரு மாவட்டமாகும். இலங்கை சுதந்திரமடைந்து 63 வருடங்கள் ஆகியும் இம்மாவட்டத்திற்கென ஒரு அரசாங்க அதிபராக தமிழர் ஒருவரை நியமிக்க முடியாத அரசியற் கட்சிகள் அல்லது தமிழ்த் தலைமைகள். பேரினவாதம் திட்டமிட்டபடி தனது பெரும்பான்மை சிங்களக் குடியேற்றத்தை ஆதரித்து தமிழரின் விகிதாசாரத்தை குறைத்து காட்டவே தமிழர் ஒருவரை அரசாங்க அதிபராக நியமிக்கவில்லை. உதாரணமாக தமிழில் கண்தளை- கிராமம் பின்னாளில் கந்தளே, மணலாறு- வெலிஓயா, குமரேசன்கடை- கோமரன்கடவெல. இப்படி மாற்றுவதற்கு சிங்கள அரசாங்க அதிபர் தேவைப்படுவதால்தான் இந்த ஏற்பாடு.

1987ம் ஆண்டு நடைமுறைக்குவந்த மாகாண அரசின் முதல் முதல்வராக தமிழர் ஒருவரை அரசாங்க அதிபராக நியமிக்க முடிந்தது. அதையும் அப்போதைய தமிழர் விடுதலைக் கூட்டணியும் புலிகளும் இலங்கை இந்திய ஒப்பந்தத்தை நிராகரித்து மாகாண அரசைக் கலைக்கும்வரை துணை போனார்கள். அதனால் அந்தச் சந்தர்ப்பமும் இல்லாது போனதுடன் தமிழர் ஒருவரை திருமலை அரசாங்க அதிபராக்க கிடைத்த சந்தர்ப்பமும் இல்லாமற் போனது.

அப்போது வடக்கு கிழக்கு 7 மாவட்டங்களும் இணைத்ததே மாவட்ட அரசு. இப்போது கிழக்கு மாகாணசபை அம்பாறை- மட்டக்களப்பு- திருகோணமலை மூன்றும் சேர்ந்து கிழக்கு மாகாணம். மற்றைய நான்கும் சேர்ந்து வடமாகாணம். இது சட்டத்தால் மட்டுமே பிரிக்கப் பட்டிருக்கிறது. ஆனால் தமிழ் மக்களின் இதயங்களில் இணைக்கப்பட்டும் பூஜிக்கப்பட்டும் உயிர் வாழ்ந்து வருகிறது.

மாவட்ட சபையைக்கூட தர மறுக்கும் பெரும்பான்மை ஆட்சியாளர்கள் மத்தியில் இலங்கை இந்திய உடன்படிக்கையே தமிழ்மக்களின் இனப் பிரச்சனைக்கு ஒரு சிறந்த தீர்வாக அமைந்தது. வடகிழக்கு எல்லைகளைப் பாதுகாக்க (ரிஎன்ஏ) தமிழ் தேசிய இராணுவம் சிவிஎவ் பிரஜைகள் பாதுகாப்புப் படை பொலிஸ். இவர்களுக்குச் சம்பளமாக மாதாந்த 4500 ரூபா. நான்கு வருடங்களின் பின் நிரந்தர நியமனம். 20000 பேர்கொண்ட தமிழ் முஸ்லிம் இளைஞர்களை உள்வாங்கிய சட்டரீதியில் சிறுபான்மை சமூகங்களைக் கொண்ட இராணுவ அமைப்பு. அதுமட்டுமல்ல அரச பதவிகளில் விகிதாசாரம் பேணப்படல் வேண்டும்.

ஓருபுறம் சிங்கள கடும் போக்காளர்கள் இந்தியஅரசு தமிழர்களுக்கு தனிநாடு ஒன்றை பெற்றுக் கொடுத்து விட்டது போன்ற எண்ணத்தை சிங்கள மக்கள் மத்தியில் பரப்பி இந்தியாவுக்கு எதிரான போக்கைக் கடைப்பிடித்தது. மறுபுறம் புலிகளும் அப்போதைய தமிழ் தலைமைகளும் வெறும் பொம்மை அரசு என்று கூறி நிராகரித்தது. அப்படியிருந்தும் இந்தியா தனது உடன்படிக்கையை நடைமுறைப்படுத்தவே இலங்கையை நிர்ப்பந்தித்தது.

இதை சாதகமாக புலிகளும் பாவித்து இந்திய தாக்குதலிலிருந்து தங்களைப் பாதுகாக்க பிரேமதாசாவுடன் கூட்டுச் சேர்ந்து இந்தியப்படைகளை இலங்கையைவிட்டு வெளியேற்றியது. பிரேமதாசாவும், ‘நானும் புலிகளும் அண்ணன் தம்பிகள் எங்களின் பிரச்சனைகளை நாங்கள் பேசித் தீர்ப்போம், முதலில் நீங்கள் வெளியேறுங்கள்’ என்று மாகாணஅரசைக் கலைத்து சகவாசம் செய்து தமிழ்தேசிய இராணுவத்திற்கு எதிராக சிறீலங்கா ஆமியுடன் இணைந்த புலிகள் ரிஎன்ஏ முற்றாக தாக்கியழித்தனர்.

எழுபத்திரண்டு மாகாணஅரச உறுப்பினர்கள் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட சபையில் தன்னாதிக்கமும் இறைமையும் உள்ள ஈழ ஜனநாயக சோசலிசக் குடியரசு ஆக முதலமைச்சரால் பிரகடனப்படுத்தப்பட்டு இன்றுவரை ஒரு தனிநாடாகவே இருந்து வருகிறது. இதையும் இந்தியாவே முன்னின்று செய்தது. அந்த அளவுக்கு இந்தியா நட்புடன் இருந்த நேரம். காஸ்மீர் ஆந்திரா போன்ற பல உள்நாட்டுப் பிரச்சனைகள் இருந்தும் இந்தியா பகிரங்கமாக இதை அங்கீகரித்தது. இதன்முலம் தமிழர்களுக்கு கூடுதல் அதிகாரம் கொடுப்பதையே இந்தியா விரும்பியதை உணரலாம். 13வது திருத்தச் சட்டத்தினை ஏற்று முதலமைச்சராகச் சத்தியப்பிரமாணம் செய்யும் ஒரு முதலமைச்சர் அரசபணியின் நிமித்தம் வெளிநாடு ஒன்றிற்குச் செல்ல வேண்டுமாயின் ஆளுனரின் அனுமதியைப்பெற்று செல்ல வேண்டும். ஆனால் முதலமைச்சர் அண்ணாமலை வரதராஜப்பெருமாள் அடிக்கடி அரச பயணமாக இந்திய இராணுவ விமானம் மூலம் ஆளுனரின் எதுவிதமான அனுமதியும் இன்றி இந்தியா சென்று வந்தார். அந்தளவுக்கு இந்தியா வடகிழக்கை தனது மானிலங்களில் ஒன்றாகவே கையாண்டு வந்தது. ஆனால் அப்போது சிங்களப் பத்திரிகைகள் இதுபற்றி கண்டனத்தையும் செய்திருந்தது.

தந்தை எஸ்ஜேவி செல்வநாயகம் சொன்னது போல் தமிழர்களுக்கு ஒரு தீர்வு வந்தால் வடகிழக்குத் தலைநகரம் திருகோணமலை என்ற அவரது கனவை நனவாக்க உழைத்து அதை திருமலையில் நிறுவிய தவராஜா தம்பிராஜா அவரையும் புலிகள் நிலாவெளியில் வைத்து சுட்டுக் கொன்றுவிட்டனர்.

சந்திரிகா அம்மையாரின் காலத்தில் ஒருதீர்வுத் திட்டம் நீலன் திருச்செல்வம் தலைமையில் தயாரிக்கப்பட்டது. அதையும் எதிர்த்த புலிகள் அவரையும் கொலைசெய்தனர் அதை உடந்தையாய் இருந்து தயாரித்த தோழர் கேதீஸ்- லோகநாதனை கொழும்பில் வைத்துக் கொலை செய்தனர். இப்படித் தமிழ் மக்களின் தீர்வுகள் எல்லாவற்றிலேயும் இவர்கள் தங்கள் கெடுபிடியைக் காட்டி இல்லாதொழித்து விட்டனர்

இலங்கை இந்திய ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தநேரம் பெரும்பாலான சிங்களக் குடியேற்றவாசிகள் திருகோணமலைக் கோட்டை முகாமுக்குள் தஞ்சம் புகுந்து அகதியாக இருந்தனர். அவ்வளவுக்கு பெரும்பான்மையினர் அஞ்சியிருந்தனர். குடியேற்றமும் குறைந்து காணப்பட்டது.

1989ம் ஆண்டு புலிகள் 4ம் கட்டை சிங்களவர்கள் செறிந்து வாழும் பகுதியில் ஒரு கண்ணிவெடியை வைத்து விட்டனர். இச்சம்பவத்தில் மொழிபெயர்ப்பாளராக சென்றபோது இந்திய இராணுவத்தின் அதியுயர் பாதுகாப்பு அதிகாரி ஒருவரை சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றேன். political officer welcome என என்னை வரவேற்ற அவர் சொன்னார், 35 லட்சம் தமிழர்களின் அமைதிக்காக 100 கோடி இந்திய குடிமக்களின் அமைதியைக் கெடுக்க இந்தியா விரும்பாது. அது தமிழ்நாட்டை மையமாக வைத்தே அவர் அதைச் சொன்னதாக நான் இப்போது உணர்ந்தேன். தமிழர்களுக்கு சகல அந்தஸ்தும் கிடைக்க இந்தியா பாடுபடும். மூக்கு இருக்கும் வரைக்கும் சளி இருக்கும் என்பதுபோல் இந்தியா இருக்கும்வரை புலிகள் நினைப்பதுபோல் இந்தியாவைப் புறம்தள்ளி ஒரு தீர்வை அடைய முடியாது. இன்றைய புலிகளின் தோல்வியில் இருந்து அதை இன்றும் நினைவுபடுத்திப் பார்க்கின்றேன். எவ்வளவு உண்மையென்று எண்ணிப் பாருங்கள்.

வடகிழக்கில் 72 மாகாணசபை உறுப்பினர்களைக் கொண்ட மக்களால் தெரிவுசெய்யப்பட்ட சபையில் தன்னாதிக்கமும் இறைமையும் உள்ள ஈழ ஜனநாயக சோசலிஷக் குடியரசு ஆக வடகிழக்கின் முதல் முதல்வர் அண்ணாமலை வரதராஜப் பெருமாள் தலைமையில் பிரகடனப்படுத்தப்பட்டு இன்றுவரை ஜனநாயக மரபுகளுக்கு அமைவாக அது பிரிக்க முடியாததொரு தனிநாடாகவே இருந்து வருகிறது. இதையும் உலகின் மிகப்பெரிய வல்லின ஜனநாயக இந்தியப் பேரரசே முன்னின்று அங்கீகரித்தது. அது ஒரு பெரிய அரசியல் ஸ்ரண்ட் அந்த அளவுக்கு இந்தியா நம்முடன் இருந்தநேரம் காஸ்மீர்- ஆந்திரம் மேற்குலகம் தமிழ்நாடு போன்ற இந்தியாவிலேயே தனிநாட்டுக் கோஷம் உள்நாட்டிலும் நெருக்கடி இருந்தும் பொருட்படுத்தாது செய்தது. இதன்மூலம் சிறுபான்மையினருக்கு கூடுதல் அதிகாரம் கிடைக்க இந்தியா செயற்பட்டதை உணரலாம்.

மதத்தால் பாக்கிஸ்தான் பிரிந்ததைப்போல் மொழியால் பங்களாதேஸ் பிரிந்ததுபோல் யேசுநாதரின் ஒரே மதத்தின் (கிறிஸ்தவ) இருவேறு (புரட்டஸ்தான்- கத்தோலிக்கம்) தத்துவப் படிப்பாளர்களால் ஐசடயனெ- ழேசவா ஐசயடயனெஇளுழரவா பிரிந்ததுபோல் இனத்தால்- திராவிடன், மொழியால்- தமிழன் கொடுத்த தாயகப்பிரதேசம் கலை கலாச்சாரம் பூர்வீகம் இவற்றை எல்லாம் கருத்தில் எடுத்தே இந்தியாவின் கொள்கை வகுப்பாளர்கள் ஈழப் பிரகடனத்தை ஆமோதித்ததை உணரலாம். உதாரணமாக 1983ம் ஆண்டு தரைவழிப் பாதையூடாக இந்தியா உணவு அனுப்ப விழைந்தபோது ஜேஆர் அரசு தடுத்து நிறுத்தியது. பின்னர் விமானமூலம் இந்தியா உணவு போட்டது. இலங்கை இறையான்மை எங்கே போனது. இதிலிருந்து இந்தியாவே ஆசியாவின் பேரரசு என்பதை உணரலாம். தமிழர்களின் அன்றைய வெற்றிக்கும் இந்தியாதான் காரணம் இன்றைய தோல்விக்கும் இந்தியாதான் காரணம்.

புலிகளின் தவறான மூட அரசியலால் உலகின் 4வது வல்லரசைத் தாக்கி வெற்றி கொண்டதாகப் பெருமைப்படும் அளவுக்கு ஒரு அறிலீலிகளான ஒரு சமூகத்தை உருவாக்கியிருக்கிறது. அவர்கள் எவ்வளவு அனுபவம் பெற்றவர்கள் எத்தனை யுத்தத்தில் பங்கெடுத்தார்கள் என்பதை எண்ண மறந்துவிட்டோம். இன்று முழுத் தமிழ்ச் சமுதாயமும் பாதிக்கப் பட்டுள்ளோம். இலங்கையில் தனக்கு ஏற்பட்ட தோல்வியில், புலிகளின் பங்களிப்பை எண்ணிய இந்தியா அன்று தொடக்கம் புலிகளுக்கு எதிரான விக்கெட்டுக்களை அடிக்கத் தொடங்கியது. இன்று முழுப் புலிகளையும் அழித்து ஆசியாவில் தன்னை எதிர்க்கும் சக்திகளுக்கு தானே ஆசியப் பேரரசு என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறது.

மாவட்ட சபையைக்கூட தரமறுக்கும் பேரினவாத அரசியலாளர்கள் மத்தியில் இலங்கை இந்திய உடன்படிக்கையே தமிழ்மக்களின் உரிமைப் போருக்கான சிறந்த தீர்வாக அமைந்தது. அதுமட்டுமல்ல அந்த ஒப்பந்தத்தை மட்டும்தான் இலங்கை வரலாற்றில் பெரும்பாலான கட்சிகள் அடங்கலாக அனைத்தும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதன் சரத்துக்கள் பற்றி கொஞ்சம் பார்ப்பது பொருத்தமானதாக இருக்கும். வடகிழக்கு இணைந்த மாகாண அரசு அந்த அரசின் எல்லைகனளை அந்த அரசின் இராணுவ பணிகளை கையாள ஒரு இராணுவக் கட்டமைப்பு ரிஎன்ஏ தமிழ் தேசிய இராணுவம் இவர்களுக்கு சம்பளமாக மாதம் 4500 ரூபாய் நான்கு வருடத்தின் பின பணி நிரந்தரம். 20 000 பேரைக் கொண்ட சிறுபான்மைத் தமிழ் முஸ்லிம் சழூகங்களைக் கொண்ட சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்ட ஒரு அரசின் இராணுவம்.

அரச பதவிகளில் சிறுபான்மைச் சமூகங்களின் விகிதாசார அடிப்படையில் அனைத்துப் பதவிகளும் கடைப்பிடிக்க வேண்டும். நான்கு வருடங்களின் பின் வடகிழக்கில் கருத்தறியும் வாக்கெடுப்பை நடத்தி வடகிழக்கு இணைந்து இருப்பதா இல்லையா என்று மக்கள் கருத்துக்கு விடப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படு;ம்

ஒருபுறம் சிங்களவர்களும் சிங்கள கட்சிகளும், ஜேவிபி தமிழர்களுக்கு போதிய அதிகாரம் கொண்ட தனிநாடு ஒன்றை இந்திய அரசு பெற்றுக் கொடுத்து விட்டதாக சிங்கள மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து இந்திய எதிர்ப்பு அலையை உருவாக்கியது. மறுபுறம் புலிகளும் அப்போதைய தமிழ்த் தலைமைகளும் ஒன்றும் இல்லாத ஒரு பொம்மை அரசை தமிழ்மக்கள் மத்தியில் இந்திய அரசு திணித்து விட்டதாக தமிழர்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து அதையும் முற்றாக நிராகரித்து விட்டனர். அப்படியிருந்தும் இந்தியப் பேரரசு தனது உடன்படிக்கையை நடைமுறைப்படுத்தவே இலங்கையை நிர்ப்பந்தித்தது.

எப்படியும் மாகாண அரசைக் கலைக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு இருந்த ரணசிங்க பிரேமதாசா சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி புலிகளை பேச்சு வார்த்தைக்கு அழைத்து புலிகளும் இலங்கை இராணுவத்துடன் இணைந்து ரிஎன் ஏ இராணுவத்துக்கு எதிராக கடும் தாக்குதல்கள் தொடுத்து அதை முற்றாக அழித்தனர். மற்றைய இயக்கங்கள் இராணுவத்துடன் பேசினால் காட்டிக் கொடுப்போர், ஒட்டுப்படை, தேசத்துரோகிகள்: புலிகள் இணைந்தால் இராஜதந்திரம். அன்று புலிகள் அழித்த, தமிழ் இராணுவம் இருந்திருந்தால் 20000 தமிழ் பேசும் படையணி.

நிராயுதபாணிகளாக நிற்கும் ஒருவரை ஆயுதங்களால் தாக்குவது தர்மத்துக்கு முரணானது1990 ஆண்டு 19.06.90- யூன் மாதம் தமிழ்நாட்டில் இந்தியாவில் கோடம்பாக்கம் ….காலனியில் உள்ள ராணி அப்பாட்மென்ட்டில் வைத்து புலிகளால் சுட்டுக் கொலட்லப்பட்ட ஈபிஆர்எல்எவ் தலைவர் பத்மநாபாவும் 13 முன்னணித் தோழர்களும் கொல்லப்பட்ட சமயம் 19.06.91 திருச்சி மாவட்டம் கொட்டப்பட்டில் ஒருவருட அஞசலிக் கூட்டத்தில் நான் ஆற்றிய உரையின் ஒருபகுதியை இவர்களின் இன்றைய நிலையில் மீட்பது பொருந்தும் என நினைக்கின்றேன். இவர்களால் தாக்கியழிக்கப்பட்ட இயக்கங்கள் தலைமை கொடுத்துக் கொண்டிருக்க இவர்கள் மட்டும் அழிந்து போயினர்: பாருங்கள் இவர்களின் இன்றைய அழிவை அன்றே கட்டியம் சொன்னதுபோல் உணர்கின்றேன்.

நண்பா புலியே மானிட உயிரின் மாண்பினை மதி

இன்றேல் அழிவே உனது கதி.

ஓடமும் ஒருநாள் வண்டிலேறும் வண்எயும் ஒருநாள் ஓடடத்தில் ஏறும் இதை நீ மறந்து விடாதே.

காலமும் நாமும் இதற்குப் பதிலளிப்போம். விரிந்து பரந்த உலகில் நாம் வீழ்ந்து விட்டோம், ஆசைகளால் பிரிக்கப் பட்டோம், பாசத்தால் இறுக்கப்பட்டோம், பண்பை மறந்து விட்டோம். ஆனால் மறந்தவை மறந்தவை அல்ல. உன் இழி குணங்களால் நீயே அழிக்கப்படுவாய,; இழிகுணம் உள்ள சமூகம் அழிந்ததாக எமது வரலாறே இயம்புகிறது.

எமது இதிகாச புராணங்கள் வேத நூல்கள் மறை ஆகம சிவாகமங்கள் அனைத்தும் ஜனநாயக கருத்துச்சுதந்திர மரபுகளை அடியொற்றி, அது மறுக்கப்பட்ட போது போர்வெடித்த வரலாற்றை, படித்தும் அறிந்தும் இவ்வாறு செயல்பட்டதானது எமது இனத்துக்கு ஏற்பட்ட இழுக்கு என்பது மட்டும் எனது கணிப்பீடு.

திருகோணமலைத் தேர்தல் சூடுபிடித்துள்ள இன்றைய தினத்தில் களத்தில் சம்பந்தர் நின்று தமிழர்களுக்கு இதுவரை எதுவித பெயர் சொல்லிக் கதைக்கும் அளவுக்கு எதையும் செய்யவில்லை. யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலையில் திருமண உறவில் குடியேறிய பெரியபொடி சூரியமூர்த்தி தமிழர்களின் சிங்கள மயமாக்கலை மெல்ல முடியாத நிலையில் தமிழருக்கென ஒரு தமிழ் மார்க்கெட்டைக் கட்டினார். இன்றும் மக்கள் சொல்லிக் கதைக்கிறார்கள். 2002ம் ஆண்டு அந்த மார்க்கெட்டைத் திறக்க பெரும்பான்மை விடவில்லை ஆனால் அவன் கட்டினான் என்று தமிழர்கள் இன்னமும் வியப்புடன் பேசுகிறார்கள். ஏனெனில் ஒரு துணிவு மிக்க மகனாக இருந்து செய்தார்;. ஆனால் எம்பி சம்பந்தருக்குப் போட்ட வாக்குகளை அவருக்குப் போட்டடிருந்தால் கொஞ்சமேனும் முன்னேற்றம் கண்டிருக்கலாம். கடற்படைத் தளத்திற்குச் செல்லும் வழியில் இருந்த காணிகளில் தமிழர்கள் குடியேறச் செய்தார். எம்பியால் ஏன் முடியவில்லை?

புலிகளின் தற்கொலைக் குண்டுகள் வெடித்துக் கொல்லப்படும் உயிர்களின் எண்ணிக்கையிலேயே பாராளுமன்றம் செல்ல முடியும் என்ற உத்தி அல்லது திட்டம் தீட்டி அரசியல் பின்பலமோ அல்லது ஆராமையோ எதுவுமே இல்லாது எம்பி துரைரட்ணசிங்கம் புலிகள் சம்பந்தருக்கும் தனக்கும்தான் போடச் சொன்னார்கள் என்ற மாயையை சொல்லியே கடந்தமுறை எம்பி ஆனார். புலிகளின் அடுத்த வன்னி என வர்ணிக்கப்பட்ட கட்டைப்பறிச்சான் என்பது மட்டுமே இவரது அரசியல் விளம்பரம். மிகவும் அமைதியானார் ஓய்வுபெற்ற கல்விப் பணிப்பாளர்.

இம்முறையும் பல மோசடிப் பேர்வழிகளையும் தமிழ்மக்களைப் பிரதிநிதித்துவப்;படுத்த சில பண முதலைகளையும் சம்பந்தர் தமிழர்களின் மீட்பர்களாக சித்தரிக்க முற்படுகின்றார்.

திருகோணமலையில் பெரும்பாலான தமிழ்ப் பகுதிகள் மட்டும் புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதி. நகரங்களை அண்டிய பகுதி அரச கட்டுப்பாட்டுப் பகுதி. இப்படிப் பிரிக்கப்பட்டு தமிழ்ப் பகுதிகள் அனைத்தும் புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதி எனக் காரணம் காட்டி எதுவிதமான அரசபணிகளும் நடைபெறவில்லை. மற்றைய சமூகங்கள் வாழும் பகுதிகள் பெரும்பாலும் அபிவிருத்தி செய்யப்பட்டே வந்தது. ஆனால் தமிழ்ப் பகுதிகள் புறக்கணிக்கப்பட்டே வருகிறது.

யாழ்ப்பாணம் தோழர் டக்ளஸ் தேவானந்தா மட்டக்களப்பு முரளீதரன் சிவனேசதுரை சந்திரகாந்தன் முன்னின்று அபிவிருத்தி செய்வதைப்போல திருகோணமலைக்கு யார்? புணரமைப்புக்குப் பதிலாக சம்பந்தர் தலைமை திருகோணமலை தமிழர்களை புதைத்து வருகிறார்கள். இந்த தேர்தலில் இவர்களுக்கு ஒரு நல்ல பாடம் புகட்ட தமிழர்கள் அணிதிரள வேண்டும்

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 Comments

  • Aras
    Aras

    பரமானந்தம் அவர்களே நீங்கள் பேரினவாதம் பற்றி குறிப்பிடுகிறீர்கள். ஆனால் சிங்களம் வாழ வைக்கிறது தமிழ் ஆள நினைக்கிறது என்று கருதிக் கொண்டிருப்பவர்களின் கண்களை எப்படி திறப்பது? பிரபாகரன் கொல்லப்பட்ட போது மதிவதனியும் கொல்லப்பட்டார். ரோகண கொல்லப்பட்டபோது அவரின் மனைவிக்கு ஒரு தீங்கும் நேரவில்லை. எடுத்ததெற்க்கெல்லாம் புலிப்பாட்டு பாடுபவர்கள் சாதாரண மக்களின் உணர்வுகளை கேள்விகளை ஏற்க மறுக்கிறார்கள்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    //பிரபாகரன் கொல்லப்பட்ட போது மதிவதனியும் கொல்லப்பட்டார். ரோகண கொல்லப்பட்டபோது அவரின் மனைவிக்கு ஒரு தீங்கும் நேரவில்லை.- Aras //

    எதை எதனுடன் ஒப்பிடுவதென்பதற்கு ஒரு விவஸ்தை வேண்டாமோ?? பிரபாகரனும் மனைவியும் சண்டை நடைபெற்ற போது கொல்லப்பட்டார்கள். ஆனால் ரோகன சண்டையின் போது கொல்லப்படவில்லை என்பதையாவது தாங்கள் அறிவீர்களா?? பிரபாகரன் தன்னையும் தன் குடும்பத்தையும் காப்பாற்ற மக்களைக் கேடயமாக்கி பல்லாயிரம் மக்களின் பலியாக்கினார். ஆனால் ரோகண தன்னைக் காப்பாற்ற மக்களைக் பலிக்கடாக்கள் ஆக்கவில்லை. தங்களைப் போன்றவர்களுக்கு இன்னும் புலிக்காய்ச்சல் மாறவில்லை என்பது நன்றாகவே தெரிகின்றது…..

    Reply
  • Aathan
    Aathan

    படிக்க நன்றாகத்தான் இருக்கிறது. இந்த தேர்தலில் சம்பந்தரைத் தோற்கடித்து ஒரு நல்ல பாடம் புகட்ட தமிழர்கள் அணிதிரள வேண்டும் என்று விடுத்த அறைகூவல் என்னவாயிற்று?

    வட -கிழக்கு மாகாணசபையில் தனக்கு இருக்க ஒரு கதிரை இல்லை என்று சொல்லித்தானே வரதராசப்பெருமாள் தமிழீழப் பிரகடனத்தைச் செய்தார். அது இந்தியாவின் சம்மதத்தோடுதான் செய்யப்பட்டது என்றால் ஏன் இந்தியா அப்படிச் செய்தது? ஏன் மாகாணசபையை இந்தியாவால் இயங்க வைக்க முடியவில்லை.

    இந்திய இராணுவம் வட – கிழக்கில் இருந்தபோதுதான் மணலாறு சிங்களக் குடியேற்றம் முடுக்கி விடப்பட்டது. திலீபனின் 5 கோரிக்கைகளில் மணலாறு சிங்களக் குடியேற்றம் நிறுத்தப்பட வேண்டும் என்பதும் ஒன்று. சிங்களக் குடியேற்றத்தை ஏன் இந்தி்யா பார்த்துக் கொண்டிருந்தது?

    சரி. இன்று கிழக்கு மாகாணத்தில் பிள்ளையானின் நிலை என்ன? ஒரு கழிவறைத் தொழிலாளியைக் கூடத் தன்னால் நியமனம் செய்யமுடியாமல் இருக்கிறது என்று கூறுவது பரமானந்தனின் காதில் விழவில்லையா? அம்பெய்தி முயலைக் கொல்வதை விட யானைக்கு வேல் எறிந்து அது தப்பினாலும் பருவாயில்லை என்பதுதான் வீரத்துக்கு இலக்கணம். அததைத்தான் புலிகள் செய்தார்கள். நினைவிருக்கட்டும்.

    Reply
  • thalaphathy
    thalaphathy

    வடகிழக்கு மாகாணசபை இயங்கவிடாமல் பண்ணியது புலி-அன்றைய சிறீலங்கா அரசின்(யு. என். பி) கூட்டு நடவடிக்கையே. இலங்கை – இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு 23 ஆண்டுககள் கழிந்த பின்னர், இந்த ஒப்பந்தத்தை வரிக்கு வரி அலசி ஆராய்து பார்த்தால், இந்தியா இந்த ஒப்பந்தத்தை வைத்தே சகல கருமங்களையும் (புலி அழிப்பு உட்பட) இலங்கையில் இன்று நிறைவேற்றியுள்ளது. புலிகள் ஏன் இந்த ஒப்பந்ததை முதலில் ஏற்றுக்கொண்டு பின்னர் எதிர்த்தார்கள் என்பதற்கு சரியான காரணங்கள் புலிகளால் இன்றுவரை முன்வைக்கப்படவில்லை. புலிகள் இலங்கை அரசுடன் கூலிக்கு மாரடிக்கப் போய் கடைசியில் தாமும் அழிந்து, அவர்களுக்கு காவலரணாக நின்ற மக்களையும், அவர்களின் உடமைகளையும் நாசமாக்கியது தான் மிச்சம்.

    திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களைப் பொறுத்தவறையில், இந்திய அமைதிப்படை இலங்கையில் இருந்த காலத்தில் அவர்கள் திருகோணமலையிலிருந்து சிங்கள குடியேற்றவாசிகளை அங்கிருந்து துரத்த உதவினார்கள் என்பது பலருக்கு தெரிந்த கதை.

    இனி வரும் காலங்களிலும் இந்தியா, இந்த ஒப்பந்தத்தை அடிப்படையாக வைத்தே தனது வேலைத்திட்டங்களை இலங்கையில் செய்துமுடிக்கும். அந்த வகையில் ஒவ்வொரு தமிழ்குடிமகனும் இந்த இலங்கை-இந்திய ஒப்பந்தத்தைப்பறி நன்கு அறிந்துவைத்திருப்பது, பல குழப்பங்களைத் தடுக்குமென்று கருதுகிறேன்.

    Reply
  • thalaphathy
    thalaphathy

    பிரபாகரன் எமக்கு எதிரானவர் அல்லர்: இந்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்

    “தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் எதிரானவர் அல்லர். இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கூறியபடி இலங்கை-இந்திய ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டிருந்தால் இன்று இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் அவர் முடிசூடா மன்னனாக இருந்திருப்பார்.”- இவ்வாறு இந்தியாவின் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் இன்று கூறியுள்ளார்.

    ‘ஒரு நாடு முன்னேற வேண்டுமென்றால் அந்நாட்டில் கலவரமோ, வன்முறையோ இருக்கக் கூடாது. நமக்கு பிரபாகரன் எதிரானவர் அல்லர். ஆனால் அவர் சென்ற பாதைதான் எதிரானது. நான் பிரபாகரனை நன்கு அறிந்தவன்.

    அவருடன் பல மணி நேரம் பேசியிருக்கிறேன். ராஜீவ்காந்தி கூறியபடி இலங்கை-இந்திய ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டிருந்தால் இன்று இலங்கையின் இரு மாகாணங்களில் அவர் முடிசூடா மன்னனாக இருந்திருப்பார்.

    இலங்கை தமிழர் நலனுக்காக இந்தியா 3600 கோடி ரூபா நிதி உதவி அளித்துள்ளது. அங்குள்ள இடம் பெயர்ந்த தமிழர்களுக்கு 50 ஆயிரம் வீடுகள் கட்டிக்கொடுக்க 1000 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    காங்கேசன் துறைமுகத்தையும், பலாலி விமான நிலையத்தையும் திருத்திக் கொடுக்க இந்தியா முன் வந்திருக்கிறது. அங்கு இம்பெயர்ந்த இரண்டு இலட்சம் தமிழ் மக்களும் இன்னும் இரு வருட காலத்திற்குள் வீடுகளைப்பெற்று புனர்வாழ்வளிக்கப்பட்டிருப்பர் என நம்புகிறேன்”

    July 18th, 2010

    Reply
  • thalaphathy
    thalaphathy

    THE INDO-SRI LANKA ACCORD

    To establish peace and normalcy in Sri Lanka the president of the Democratic Socialist Republic of Sri Lanka, his excellency Mr. J.R. Jayawardene, and the Prime Minister of The Republic of India, His Excellency Mr. Rajiv Gandhi, having met at Colombo on July 29, 1987,

    Attaching utmost importance to nurturing, intensifying and strengthening the traditional friendship of Sri Lanka and India, and acknowledging the imperative need of resolving the ethnic problem of Sri Lanka, and the consequent violence, and for the safety, wellbeing and prosperity of people belonging to all communities of Sri Lanka,

    Have this day entered into the following agreement to fulfil this Objective.

    In this context,

    1.1 desiring to preserve the unity, sovereignty and territorial integrity of Sri Lanka,

    1.2 acknowledging that Sri Lanka is a “multi-ethnic and multi-lingual plural society” consisting, inter-alia, of Sinhalese, Tamils, Muslims (Moors) and Burgers,

    1.3 recognising that each ethnic group has a distinct cultural and linguistic identity, which has to be carefully nurtured,

    1.4 Also recognising that the northern and the eastern provinces have been areas of historical habitation of Sri Lankan Tamil speaking peoples, who have at all times hitherto lived together in this territory with other ethnic groups,

    1.5 conscious of the necessity of strengthening the forces contributing to the unity, sovereignty and territorial integrity of Sri Lanka, and preserving its character as a multi-ethnic, multi-lingual and multi- religious plural society in which all citizens can live in equality, safety and harmony, and prosper and fulfil their aspirations,

    2.RESOLVE THAT:

    2.1 Since the Government of Sri Lanka proposes to permit adjoining provinces to join to form one administrative unit and also by a referendum to separate as may be permitted to the northern and eastern provinces as outlined below:

    2.2 During the period, which shall be considered an interim period (i.e. from the date of the elections to the provincial council, as specified in para 2.8 to the date of the referendum as specified in para 2.3), the northern and eastern provinces as now constituted, will form one administrative unit, having one elected provincial council. Such a unit will have one governor, one chief minister and one board of ministers.

    2.3 There will be a referendum on or before 31st December 1988 to enable the people of the eastern province to decide whether:

    a) The eastern province should remain linked with the northern province as one administrative unit, and continue to be governed together with the northern province as specified in para 2.2 or:

    b) The eastern province should constitute a separate administrative unit having its own distinct provincial council with a separate governor, chief minister and board of ministers. The president may, at his discretion, decide to postpone such a referendum.

    2.4 All persons, who have been displaced due to ethnic violence or other reasons, will have the right to vote in such a referendum. Necessary conditions to enable them to return to areas from where they were displaced will be created.

    2.5 The referendum, when held, will be monitored by a committee headed by the chief Justice, a member appointed by the President, nominated by the government of Sri Lanka, and a member appointed by the president, nominated by the representatives of the Tamil speaking people of the eastern province.

    2.6 A simple majority will be sufficient to determine the result of the referendum.

    2.7 Meetings and other forms of propaganda, permissible within the laws of the country, will be allowed before the referendum.

    2.8 Elections to provincial councils will be held within the next three months, in any event before 31st December 1987. Indian observers will be invited for elections to the provincial council of the north and east.

    2.9 The emergency will be lifted in the eastern and northern provinces by Aug. 15, 1987. A cessation of hostilities will come into effect all over the island within 48 hours of signing of this agreement. All arms presently held by militant groups will be surrendered in accordance with an agreed procedure to authorities to be designated by the government of Sri Lanka.

    Consequent to the cessation of hostilities and the surrender of arms by militant groups, the army and other security personnel will be confined to barracks in camps as on 25 May 1987. The process of surrendering arms and the confining of security personnel moving back to barracks shall be completed within 72 hours of the cessation of hostilities coming into effect.

    2.10 The government of Sri Lanka will utilise for the purpose of law enforcement and maintenance of security in the northern and eastern provinces same organisations and mechanisms of government as are used in the rest of the country.

    2.11 The President of Sri Lanka will grant a general amnesty to political and other prisoners now held in custody under The Prevention of Terrorism Act and other emergency laws, and to combatants, as well as to those persons accused, charged and/or convicted under these laws. The Government of Sri Lanka will make special efforts to rehabilitate militant youth with a view to bringing them back into the mainstream of national life. India will co-operate in the process.

    2.12 The government of Sri Lanka will accept and abide by the above provisions and expect all others to do likewise.

    2.13 If the framework for the resolutions is accepted, the Government of Sri Lanka will implement the relevant proposals forthwith.

    2.14 The government of India will underwrite and guarantee the resolutions, and co-operate in the implementation of these proposals.

    2.15 These proposals are conditional to an acceptance of the proposals negotiated from 4.5.1986 to 19.12.1986. Residual matters not finalised during the above negotiations shall be resolved between India and Sri Lanka within a period of six weeks of signing this agreement. These proposals are also conditional to the Government of India co-operating directly with the Government of Sri Lanka in their implementation.

    2.16 These proposals are also conditional to the Government of India taking the following actions if any militant groups operating in Sri Lanka do not accept this framework of proposals for a settlement, namely,

    a) India will take all necessary steps to ensure that Indian Territory is not used for activities prejudicial to the unity, integrity and security of Sri Lanka

    b) The Indian navy/coast guard will cooperate with the Sri Lankan navy in preventing Tamil militant activities from affecting Sri Lanka.

    c) In the event that the Government of Sri Lanka requests the Government of India to afford military assistance to implement these proposals the Government of India will co-operate by giving to the Government of Sri Lanka such military assistance as and when requested.

    d) The Government of India will expedite repatriation from Sri Lanka of Indian citizens to India who are resident here, concurrently with the repatriation of Sri Lankan refugees from Tamil Nadu.

    e) The Governments of Sri Lanka and India will co-operate in ensuring the physical security and safety of all communities inhabiting the northern and eastern provinces.

    2.17 The government of Sri Lanka shall ensure free, full and fair participation of voters from all communities in the northern and eastern provinces in electoral processes envisaged in this agreement. The government of India will extend full co-operation to the government of Sri Lanka in this regard.

    2.18 The official language of Sri Lanka shall be Sinhala. Tamil and English will also be official languages.

    3. This agreement and the Annexure thereto shall come into force upon signature.

    In witness whereof, we have set our hands and seals hereunto.

    Done in Colombo, Sri Lanka, on this the twenty-ninth day of July of the year one thousand nine hundred and eighty seven, in duplicate, both texts being equally authentic.

    Junius Richard Jayawardene
    President of the Democratic of the Socialist Republic of Sri Lanka

    Rajiv Gandhi
    Prime Minister Republic of India

    ANNEXURE TO THE AGREEMENT

    1. His Excellency the President of Sri Lanka and the Prime Minister of India agree that the referendum mentioned in paragraph 2 and its sub- paragraphs of the agreement will be observed by a representative of the election Commission of India to be invited by His Excellency the President of Sri Lanka.

    2. Similarly, both heads of Government agree that the elections to the provincial council mentioned in paragraph 2.8 of the agreement will be observed and all para-military personnel will be withdrawn from the eastern and northern provinces with a view to creating conditions conducive to fair elections to the council.

    3. The President, in his discretion shall absorb such para-military forces, which came into being due to ethnic violence, into the regular security forces of Sri Lanka.

    4. The President of Sri Lanka and the Prime Minister of India agree that the Tamil militants shall surrender their arms to authorities agreed upon to be designated by the President of Sri Lanka. The surrender shall take place in the presence of one senior representative each of the Sri Lanka Red Cross and the Indian Red Cross.

    5. The President of Sri Lanka and the Prime Minister of India agree that a joint Indo-Sri Lankan observer group consisting of qualified representatives of the Government of Sri Lanka and the Government of India would monitor the cessation of hostilities from 31 July 1987.

    6. The President of Sri Lanka and the Prime Minister of India also agree that in the terms of paragraph 2.14 and paragraph 2.16(c) of the agreement, an Indian peace keeping contingent may be invited by the President of Sri Lanka to guarantee and enforce the cessation of hostilities, if so required.

    EXCHANGE OF LETTERS BETWEEN THE PRIME MINISTER OF INDIA AND THE PRESIDENT OF SRI LANKA.

    Excellency,

    1. Conscious of the friendhsip between our two countries stretching over two millenia and more, and recognizing the importance of nurturing this traditional friendship, it is imperative that both Sri Lanka and India reaffirm the decision not to allow our respective territories to be used for activities prejudicial to each other’s unity, territorial integrity and security.

    2. In this spirit, you had, in the course of our discussions agreed to meet some of India’s concerns as follows:

    1.Your Excellency and myself will reach an early understanding about the relevance and employment of foreign military and intelligence personnel with a view to ensuring that such presences will not prejudice Indo-Sri Lankan relations.
    2.Trincomalee or any other ports in Sri Lanka will not be made available for military use by any country in a manner prejudicial to India’s interests.
    3.The work of resotoring and operating the Trincomalee Oil Tank Farm will be undertaken as a joint venture between India and Sri Lanka.
    4.Sri Lanka’s agreements with foreign broadcasting organizations will be reviewed to ensure that any facilities set up by them in Sri Lanka
    3. In the same spirit India will:

    1.deport all Sri Lankan citizens who are found to be engaging in terrorist activities or advocating separatism or secessionism.
    2.provide training facilities and military supplies for Sri Lankan forces.
    4. India and Sri Lanka have agreed to set up a joint consultative mechanism to continuously review matters of common concern in the light of the objectives stated in paragraph 1 and specifically to monitor the implementation of other matters contained in this letter.

    5. Kindly confirm, Excellency, that the above correctly sets out the agreement reached between us.

    Please accept,Excellency, the assurances of my highest consideration.

    Yours sincerely,

    Rajiv Gandhi

    Reply