யாழ் மக்களின் விருப்புத் தெரிவு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!!! : த ஜெயபாலன்

Minister Douglas Devananda’s Posterதமிழீழ விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்கு முன்னர் துரோகி ஒட்டுப்படை என்றெல்லாம் அழைக்கப்பட்ட ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா யாழ். மாவட்ட தேர்தல் தொகுதியில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார். அவருக்கு கிடைத்துள்ள விருப்பு வாக்கு 28 ஆயிரத்து 585. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் யாழ். மாவட்டத்தில் ஈபிடிபி போட்டியிட்டு மூன்று ஆசனங்களை பெற்றுள்ளது. யாழ். மாவட்ட ஈபிடிபி அமைப்பாளர் சில்வேஸ்த்திரி அலென்ரீன் (உதயன்), (13128) முன்னாள் யாழ். எம்.பி. முருகேசு சத்திரகுமாரும் (8105) தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

லண்டனில் தஞ்சம் பெற்றிருந்த முருகேசு சந்திரகுமார் வன்னி யுத்த முடிவில் இலங்கைக்குத் திரும்பி இருந்தார். இம்முறை நடைபெற்ற நாடாளுமன்றத்தில் யாழ்ப்பாணத்தில் 8வது அதிகப்படியான வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றுக்குத் தெரிவு செய்யப்பட்டு உள்ளார். தேர்தலுக்கு முன்னர் அவர் தேசம்நெற்க்கு வழங்கிய விசேட செவ்வியில் ஈபிடிபி 5 ஆசனங்கள் வரை வென்றெடுக்கும் என நம்பிக்கை வெளியிட்டு இருந்தார். தற்போது 3 ஆசனங்களைப் பெற்றுள்ள ஈபிடிபி தேசியப் பட்டியல் மூலம் ஒரு ஆசனத்தைப் பெறலாம் என நம்புகின்றனர்.

யாழ்ப்பாணத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் ஐவர் தெரிவாகியுள்ளனர். மாவை சேனாதிராசா (20501), சுரேஷ் பிரேமச்சந்திரன் (16425) அப்பாத்துரை விநாயகமூர்த்தி (15311), ஆர். சரவணபவன் (14961) சிவஞானம் சிறிதரன் (10057) ஐக்கிய தேசிய கட்சியின் யாழ். மாவட்ட முதன்மை வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் மகேஸ்வரனின் துணைவியார் திருமதி விஜயகலாவும் (7160) பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

Minister Douglas Devanandaதமிழ் தேசியக் கூட்டமைப்பு யாழ் மாவட்டத்தில் கூடிய ஆசனங்களைப் பெற்ற போதும் விருப்பு வாக்குகளைப் பொறுத்தவரை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இரண்டாவதாக வந்த மாவை சேனாதிராஜாவிலும் பார்க்க 8000க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளார். இவ்வளவு தொகையான வாக்குகளைப் பெற முடிந்தமைக்கான காரணம் ஒடுக்கப்பட்ட மக்களுடைய வாக்கு வங்கி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை நோக்கி இருந்தமையே. தீவுப் பகுதிகளில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொண்ட மூன்று கூட்டங்களில் கலந்து கொண்ட போதும் அம்மக்கள் தங்கள் ஆதரவை அமைச்சருக்கு வெளிப்படுத்தி இருந்தனர். அவ்வாறான ஆதரவு ஏனைய எந்தக் கட்சி வேட்பாளருக்கும் கிடைத்திருக்கவில்லை. அதற்கு அவர் அமைச்சராக இருந்ததால் ஏற்பட்ட அணுகூலங்கள் முக்கிய காரணம்.

வேலனை, ஊர்காவற்துறை, சரவணை ஆகிய இடங்களில் கூட்டங்களில் கலந்துகொண்ட அமைச்சர் மக்களின் உடனடித் தேவைகளைக் கேட்டறிந்து சிலவற்றை அங்கேயே தீர்த்து வைத்தார். நல்ல தண்ணீர் வரவில்லை என்பதனை மறுநாளே தண்ணீர் வர ஏற்பாடு, பாடசாலைக்கான தளபாடங்களுக்கு 50000 ரூபாய்கான காசோலை, மீன்பிடி சங்கத்திற்கு 2 00 000 ரூபாய்க்கான காசோலை என்பன உடடினயாக வழங்கப்பட்டது. மேலும் அமைச்சரிடம் தங்கள் குறைகளை எழுத்தில் வைத்து பெருமளவு கடிதங்கள் ஒப்படைக்கப்பட்டது.

Minister Douglas Devananda’s Campaign Meetingகூட்டத்தின் முடிவில் கலந்து கொண்டவர்கள் வற்புறுத்தப்பட்டனரா என்று கேட்ட போது அனைவருமே தாங்கள் சுயவிருப்பில் கலந்துகொண்டதாகத் தெரிவித்தனர். பத்திரிகைகளில் அமைச்சரைப் பற்றி மோசமான செய்திகள் வரும் போது நீங்கள் எவ்வாறு அவரை ஆதரிக்கின்றீர்கள் என்று கேட்டதற்கு ”பத்திரிகைகள் என்ன எழுதுகின்றன என்பது எமக்குத் தெரியாது. ஆனால் அமைச்சர் மாதத்தில் ஒரு தடவையாவது வந்து எம்மைச் சந்திக்கின்றார். நாங்கள் ஆபத்தில் இருந்த போது எங்களுக்கு அனைத்தையும் அவர் செய்துள்ளார். அதனால் எமது வாக்கு அமைச்சருக்கே” என உறுதிபடத் தெரிவித்தனர்.

Angajan Ramanujan’s Campaignஅமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தீவுப் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு இருந்த போது வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்ட முதலாம் வேட்பாளர் அங்கஜன் ராமானுஜன் ஆதரவாளர்களும் அங்கு பிரச்சாரத்தில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அவர்களை விசாரித்ததில் அப்பகுதி வாக்காளர்கள் தங்கள் வாக்கு ‘ஐயாவுக்கு’ (அமைச்சருக்கு) எனத் தெரிவித்ததாக பிரச்சாரத்தில் ஈடுபட்டவர் அங்கஜன் ராமனுஜனின் தந்தைக்கு தெரிவித்ததைக் கேட்கக் கூடியதாக இருந்தது. அங்கஜன் ராமானுஜன் தொழிலதிபர் ஒருவருடைய மகன். அவுஸ்திரேலியாவில் கல்வி கற்றவர். யாழ்ப்பாணத்தில் மிகப் பெரும் பணச் செலவில் போட்டியிட்டவர். இருப்பினும் மக்களின் ஆதரவை அவரால் வென்றெடுக்க முடியவில்லை.

குறிப்பாக புலம்பெயர்ந்த மக்களின் ஊடகங்களின் பலத்தில் தங்கியிருந்த தமிழ் தேசியத்திற்கான முன்னணி தோல்வியைச் சந்தித்து உள்ளது. தமிழ் தேசியத்திற்கான முன்னணி மட்டுமல்ல கடந்த காலங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளால் நியமிக்கப்பட்டு பாராளுமன்றம் அனுப்பப்பட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்தவர்கள் அனைவருமே தோல்விகண்டனர்.

தாங்கள் மட்டுமே தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் என்று தம்பட்டம் அடித்து வன்னி மக்களை யுத்தச் சுழலுக்குள் கைவிட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு விருப்பு வாக்குகளைத் தக்க வைத்துக் கொள்ள முடியாமல் போனது அவர்களுக்கு ஏற்பட்ட பலத்த அடியே.

Minister Douglas Devanandaகுறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு லண்டனில் போராட்டப் பீரங்கிகளாக விழங்கிய ‘அம்பிகை சீவரத்தினம் – அங்கையற்கன்ணி’ இரட்டையர்களில் அங்கையற்கன்ணி யாழ்ப்பாணத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கான பிரச்சாரங்களில் ஈடுபட்டு இருந்தார். இவரை விடவும் கனடா, லண்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்தும் பல ஈபிடிபி ஆதரவாளர்கள் யாழ் வந்து பிரச்சாரங்களில் ஈடுபட்டு இருந்தனர்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தத கூடிய விருப்பு வாக்குகளைப் பெற்ற போதும் அவர் தமிழ் மக்களின் ஏகோபித்த பிரதிநிதியல்ல. அவர் மீதும் அவரது கட்சி மீதும் பரவலான குற்றச்சாட்டுகள் உள்ளது. அது தொடர்பாக அமைச்சரும் அவரது கட்சியும் மக்களுக்கு பதிலளிக்க வேண்டிய கேள்விகள் பல உள்ளது. முன்னர் இருந்த நிலையைவிட மக்கள் கூடிய ஆதரவை வழங்கி உள்ளனர். அதனால் அவர்கள் பொறுப்புடன் செயற்படுவது அவசியமாகின்றது. தேர்தலுக்கு முன்னர் இடம்பெற்ற சாவகச்சேரி படுகொலை தொடர்பில் ஈபிடிபி சம்பந்தப்பட்டதாக செய்தி வெளியாகி இருந்தது. அதனை போட்டி வேட்பாளர் சரவணபவனின் பத்திரிகையே வெளியிட்டு இருந்த போதும் சம்பந்தப்பட்ட சம்பவம் தொடர்பான உண்மைகள் வெளிக் கொண்டுவரப்பட வேண்டும்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

40 Comments

  • பார்த்திபன்
    பார்த்திபன்

    உண்மையில் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்குக் கிடைத்த அதிகூடிய விருப்பு வாக்குகள், அவரது உண்மையான உழைப்பிற்குக் கிடைத்த வெற்றியே. இந்த ஆதரவு எதிர் காலங்களில் தமிழ் மக்களின் தேவைகளைப் பூர்ததி செய்வதில், இன்னும் முனைப்புடன் அவரைச் செயற்பட வைக்கும் என நம்புகின்றேன். அதே போல் தன்னைச் சுற்றியுள்ளவர்கள் சிலர் கட்சிக்கு களங்கம் ஏற்படுத்த எடுக்கும் நடவடிக்கைகளையும், டக்ளஸ் தேவானந்தா தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து தவறானவர்களை வெளியேற்றினால், எதிர்காலத்தில் யாழ் மக்களின் நம்பிக்கையை இன்னும் பெற்று ஒரு சிறந்த அரசியல்வாதியாகத் திகழ்வதற்கும் அது வழிசமைக்கும்.

    Reply
  • NANTHA
    NANTHA

    டக்ளஸ் தேவானந்தா கொமரேட் கதிரவேலுவின் மகனாகவும் மாத்திரமின்றி கொமறேடாகவும் நடந்து தனது மக்கள் செல்வாக்கை நிரூபித்துள்ளார். டக்ளஸ் சேவை நாட்டுக்கு தேவை!

    Reply
  • NADARAJAH SETHURUPAN
    NADARAJAH SETHURUPAN

    அவர் இனி மீண்டும் பாக்றொட்டிலை போய் ஒதுங்காமல் மக்களுக்கு யாழில் இருந்து சேவை செய்யவெண்டும் என்பது எனது கோரிக்கை. தேர்தல் திருவிழா முடிய எல்லோரம் கொழும்புக்கு போவதை விடுத்து மக்களுடன் கூடி இருந்து சேவை செய்யவேண்டும்.

    Reply
  • Muraly
    Muraly

    அவர் தேர்தலுக்கு மாத்திரம் மக்களை சந்திக்கும் சராசரி அரசியல்வாதி அல்ல.
    எப்பவுமே மக்களுடன் நின்று மக்களின் தேவைகளை நிவர்தி செய்யும் ஒரு மக்கள் தலைவனாகவே இதுவரை வாழ்கிறார்.அவருக்கும் அவருடன் தெரிவான ஏனைய உறுப்பினர்களுககும் தொடர்ந்தும் மககள் பணி செய்ய வாழ்த்துக்கள்.

    Reply
  • pungudutivan
    pungudutivan

    தோழருக்கும் அவருடன் வெற்றிபெற்ற தோழர்களுக்கும் வாழ்த்துக்கள். உங்களின் மக்கள் பணி தொடரட்டும். தமிழ் கூட்டமைப்பினர் போல் இல்லாமல் நீங்கள் தொடர்ந்தும் உங்களால் முடிந்த அனைத்தையும் செய்யவேணும். உங்களுக்கு தீவக மக்களின் ஆதரவு எப்போதும் உண்டு.அதை யாராலும் அழிக்க முடியாது.
    அன்புடன் புங்குடுதீவான்

    Reply
  • sathees
    sathees

    ஈபிடிபி கடந்த தேர்தலில் 25 ஆயிரம் வாக்குகளையும் இந்ததடவை வாக்களிப்புவீதம் குறைவாக இருந்த நேரத்தில் 47ஆயிரம் வாக்குகளைப்பெற்றதையும் கவனத்தில் கொள்ளத்தான் வேண்டும். யாழ்.மக்கள் மத்தியில் ஈபிடிபி பலமான எதிர்க்கட்சியாகவே வரமுடியும். அதற்குரிய தகுதியை இன்னம் அது வளர்த்துக்கொள்ளவேண்டும். அதுவே இன்றைய தேவையும்.

    Reply
  • PALLI
    PALLI

    பார்த்திபன் கருத்தையே பல்லியும் வழி மொழிகிறேன், பல இன்னலுக்கு மத்தியிலும் உயிராபத்துக்கு மத்தியிலும் ஏதோ ஒரு வகையில் தமிழருகாய் அரசியல் செய்தவர் என்பது புகி சார்ந்தவர்கள் கருத்துகூட, ஆனாலும் இடைஇடையே அரசின் எடுபிடியாக செயல் பட்டத்தையும் நாம் கண்டுள்ளோம்; அது அவரது நிலையாகவோ அல்லது பாதுகாப்பாகவோ இருக்கலாம்; ஆனால் இன்று நிலை வேறு ஓர்அளவு ஆயுத பயம் அடங்கி இருந்தாலும் அது முழுமையாக முடிந்தத்தாக தெரியவில்லை, உன்மையில் இந்த தேர்தலில் தோழர் பல இடங்களை கைப்பற்ற கூடும் என நினைத்தவர்களில் பல்லியும் ஒருவன்; ஆனால் தேர்தலுக்கு சிலகாலத்துக்கு முன்பு தோழரின் அரசியல் ஒரு சடுகுடு மாதிரியே இருந்தத்து, இதில் பசிலின் தலையீடு அவரது கண்டிப்பு இருந்தத்தாக தோழரின் நண்பர்கள் சொன்னாலும் தோழரின் வீணையை வெற்றிலையாக மாற்றியது தோழரின் அரசியல் அனுபவத்தை சிறிது தடுமாற்றியது என்பது பல்லியின் தனி கருத்து, அது சரி தேர்தல் முடிந்த பின் ஏன் இந்த கதை என பலர் கேக்கலாம், தோழரின் சேவை தமிழருக்கு மட்டுமல்ல மிகுதியாய் அரசிடம் மாட்டியுள்ள புலிகளுக்கும் தேவை என்பததை பல புலி ஆதரவாளர்கள் பேச கேட்டுள்ளேன்;

    அரசின் இன்றய நிலை ஒரு ஆணவ போக்கு உள்ளது; இது பல்லியின் கருத்து மட்டுமல்ல, போருக்கு உதவிய இந்தியாவின் கருத்தும் கூட, அதனால்தான் பயிற்ச்சி என்னும் போர்வையில் கடல்படை (இந்திய)கப்பல் வரவேண்டிய இடத்துக்கு வர வேண்டிய நேரத்தில் வந்துள்ளது என சிலர் சொல்லுகிறார்கள்; அதையும் புறம் தள்ள முடியாது, இதில் வரதர் யாழ்வருகை, யாழில் இந்திய மூலதனங்கள் யாழில் இந்திய தூதரகம்; இப்படி வடக்கை இந்தியாவின் ஒரு மானிலம் போல் இந்தியா தனது பாதுகாப்புக்காய் தயார்படுத்த போவதாகவும் பேச்சுக்கள் உண்டு, அதேநேரம் அரசுக்கு தேர்தலில் அமோக வெற்றி கிட்டினாலும் போர்காலத்தில் அரசுக்கு இருந்த அயல் ஆதரவுகள் மாறிவிட்டது என்பதும் மறுக்க முடியாத உன்மை; இதில் பலவிடயம் அடங்கும்; சரத்தின் கைது, ஜேவிபி உறவு முறிவு, பிக்குகள் புடுங்குபாடு, குடும்ப அரசியலிலும் சில கருத்து முரன்பாடுகள் வர வாய்ப்புகள் அதிகமாக உள்ளது; (தமிழக கருனானிதி குடும்பத்தை போல்) இப்படி பல பிரச்சனையை அரசு சமாளிக்க வேண்டும், அதனால் தமிழரை அரசு அரவனைத்தே போக வேண்டிய சூழ்னிலை இருப்பதால் முன்ன்னய தமிழ தலமைகள் போல் அகல கால் வைக்காமல் இந்த காலத்தை தோழர் தமிழருக்கு சாதகமாய் பாவிப்பார் என நம்புவோம்; அத்துடன் பார்த்திபன் சொன்னது போல் தோழர் உடனடியாக செய்ய வேண்டியது ஆயுதம் தூக்கினால் எம்மை அமைப்பில் இருந்தே தோழர் தூக்கிவிடுவார் என்னும் பயம் தோழர் அமைப்புக்கு மட்டுமல்ல அது ஒரு பாடமாக மற்றய அமைப்புக்களுக்கும் வர வேண்டும்; இதில் தோழர் உடனடி கவனம் செலுத்த வேண்டும்; விருப்பு வாக்கு போட்ட மக்களின் விருப்புக்களை தோழர் ஓர் அளவுக்காவது நிறைவேற்ற உழைப்பார் என பலர் போல் பல்லியும் எதிர்பார்க்கிறேன்,

    Reply
  • Aras
    Aras

    அதற்கு அவர் அமைச்சராக இருந்ததால் ஏற்பட்ட அணுகூலங்கள் முக்கிய காரணம்.”

    ஏன் இப்படி சேறடிக்கிறீர்கள். மண்ணெண்ணை மகேஸ்வரனும் அமைச்சராக இருந்ததாக ஞாபகம் வருகிறது. டக்ளஸ் தனது கடமையை இயன்ற வரை செய்தார். அதனால் வெற்றியடைந்தார்.எதிர்காலத்தில் மற்றவர்களும் தமது கடமைகளை செய்தால் தான் வெற்றியடைய முடியும்.

    Reply
  • Ajith
    Ajith

    Will he stop abducting and ransom seeking from innocent tamil people?
    Will he stop threatning all government servants to vote for him?
    Will he stop murdering journalists?

    Reply
  • s.divya
    s.divya

    let the thamil arasu katchi join hand in hand with the present government and do a lot to the displaced people

    Reply
  • Ajith
    Ajith

    “let the thamil arasu katchi join hand in hand with the present government and do a lot to the displaced people”

    Who made them displaced?
    Who destroyed their dwellings and livelihood?
    Who bombed hospitals?
    Who blocked them participating in this election?
    Answer:
    Bloodthirsty Sinhala racist Rajapakse government

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //….ஆயுதம் தூக்கினால் எம்மை அமைப்பில் இருந்தே தோழர் தூக்கிவிடுவார் என்னும் பயம் தோழர் அமைப்புக்கு மட்டுமல்ல அது ஒரு பாடமாக மற்றய அமைப்புக்களுக்கும் வர வேண்டும்….///

    ஆயுதம் தூக்குவதை விடுங்கள். சொந்தச் சின்னம் வீணையையே தூக்கமுடியவில்லை. நிலமை அவ்வளவு மோசம். அமைப்பில் இருந்து தனது ஆட்களை தூக்குவதற்குமுன்னர் தோழரே ‘தூக்குப்படுவார்’ என்று அவருக்கு பயம் வந்ததால்தான் வீணை தூக்குவதைவிட்டு வெற்றிலை வைத்தார் என்பதுதான் உண்மை. அதுமட்டுமல்ல அதனை ‘செயலிலும்’ காட்டினர் வெற்றிலக்காரர். அதுதான் தமது வாகனங்களைத் தாமே எரித்துவிட்டு தோழர் எரித்ததாக போடப்பட்ட நாடகம் என்கிறார்கள். அதனை தோழர் ஸ்ரீதர் தியேட்டரில் நேரடி தொலைபேசி ‘ஒலிபரப்பு’ செய்தும் அரசு கண்சிமிட்டியது இந்த ‘தூக்கல்’ முன்னறிகுறி. இதனை சிலர் யாழ்ப்பாணச்சனம் ‘கண்டுகொள்ளவில்லை’ உங்களுக்கென்ன வந்தது என்பது போன்ற பாணியில் விமர்சித்ததும் கவனத்தில் எடுக்கப்படவேண்டியது அவசியம்.

    Reply
  • pandiyan
    pandiyan

    வட கிழக்கு தமிழ் மக்கள் மீண்டும் ஒரு முறை தங்கள் தமிழ் தேசியம் மீதான காதலை வெளிப்படுத்தியுள்ளனர். அவர்கள் ஒரு போதும் மாவை சுரேஸ் சம்மந்தருக்காக வாக்குகளை அளிக்கவில்லை. அதே வேளை சிவாஜி கஜேந்திரன் போன்றோரின் தேசியத்தின் மீது நம்பிக்கையில்லாத படியால் அவர்களுக்கு வாக்களிக்கவில்லை.வட கிழக்கு மக்கள் தாம் தமது பிரதேசங்களில் அமைதியாக வாழ்வதற்கான ஒரு சில ஏற்பாடுகளை அரசுடன் செய்து கொள்ள தங்கள் சார்பாக பேச சம்மந்தர் தலைமை அணியையே தமது தலைமைத்துவமாக சுட்டிக்காட்டியுள்ளனர்.

    இங்கு எழுதும் நபர்களின் விருப்பப்படி தமிழ் மக்கள் அரசிற்கு தான் வாக்கு போட வேண்டும் எனவும் புலி ஆதரவாளர்கள் கஜேந்திரனுக்கு தான் வாக்கு போட வேண்டும் என கங்கணம் கட்டி வேலை செய்கிறார்கள். இவை இரண்டையுமே தமிழ் மக்கள் நிராகரித்து விட்டார்கள். ஜனநாயகவாதிகள் என சொல்லிக் கொள்ளும் புலி எதிர்ப்பு அரச ஆதரவாளர்களைப் பார்த்து அங்குள்ள தமிழ் மக்கள் மிகவும் வெறுப்படைந்துள்ளார்கள். ஏனெனில் புலிஆதரவு கோஸ்டி தாம் இங்கு சகல உரிமைகள் பாதுகாப்பு மற்றும் வசதிகளோடு இருந்து கொண்டு அங்குள்ள சிறுவர் சிறுமிகளை சண்டைக்கு அனுப்பி பலி கொடுத்து விட்டு அங்குள்ள மக்களின் நிலமையை புரியாமல் எழுதியும் பேசியும் வருகிறார்கள். இதன் மறுதலை அங்கு புலிகள் சொல்லுவது போல கடத்தல் கொலை கொள்ளை நடைபெறுகிறது தான் என்பதல்ல.

    போர் என்பது மிக கொடியது. போர் முடிந்துள்ளது. வரவேற்கிறோம். ஆனால் அந்த மக்கள் சொல்கிறார்கள் நாளையும் போர் வரலாம். எனவே எமக்கு அரசியல் அமைப்பின் பிரகாரம் சில ஏற்பாடுகளை செய்து தரும்படி கூறுகின்றனர். இதையே அவர்கள் வாக்களிப்பின் மூலம் கூறுகின்றனர்.

    அரசியல் அவதானிகள் தமிழ் மக்களின் உயிர் நாடியை பிடித்துப் பிடித்துப் பார்க்க தவறுகிறார்கள். உதாரணமாக எனது தத்துவ மேதையான நண்பனின் தாயாரை யாழ்ப்பாணத்திற்கு தொலை பேசியில் தொடர்பு கொள்ள நேர்ந்தது.பேச்சு வாக்கில் நீங்கள் யாருக்கு வாக்கு போடுகிறீர்கள் ? என கேட்க அவர் தனக்கு உடல்நிலை சரியில்லை போகவில்லை என பதிலளித்தார். போகாவிட்டாலும் யாருக்கு வாக்கு போடலாம் என எண்ணியிருந்தீர்கள் எனக் கேட்க அவர் சம்மந்தரின் கட்சிக்குத்தான் என பதிலளித்தார். சம்மந்தரோ திருமலையில். ஆனால் அவர்கள் உணர்வு அவ்வாறே இருக்கிறது. நீங்களோ கல்வி மான்களிடமும் அரசியல் அபிலாசை உள்ளவர்களிடமும் பேசி விட்டு சாதாரண மக்களின் நாடித் துடிப்பை காண மறுக்கிறீர்கள்.

    13+போனஸ் 2 ஆக மொத்தம் 15 எம்பிக்களை தமிழ் அரசுக் கடசி பெற்றுள்ளது. நன்றாக வேலை செய்திருந்தால் வன்னியில்-2 யாழில் -2 மட்டக்களப்பில் 1என ஆசனங்களைப் பெற்றிருக்க முடியும். எனவே அரசு தமிழ் மக்களின் பிரதி நிதிகளாக இவர்களுடன் பேசி தமிழ் மக்களின் நல்வாழ்விற்கான வழியை ஏற்படுத்த வேண்டும்.

    இறுதியாக எனக்கொரு சந்தேகம் உள்ளது. தமிழ் தேசியம் என்பது புலிக்கும் ரிஎன்ஏக்கும் பொன்முட்டையிடும் வாத்தாகும். எனவே இனப்பிரச்சனை தீர்க்கப்படாமல் விடப்பட்டால் இவர்கள் பிழைப்பை தொடர்ந்து நடத்தும் வாய்ப்புண்டு. பாவம் தமிழ் மக்கள் அவர்களுக்கு வேறு ஒரு தெரிவு இல்லை என்பதே யதார்த்தமான உண்மையாகும்.

    Reply
  • thurai
    thurai

    அஜித் இங்கு கேட்கும் கேள்விகள் நியாயமானவைதான். கப்பம் கேட்பது, பயமுறுத்துவது, கொலைசெய்வது போன்ற செயல்கள், புலிகழுடன் ஒப்பிடும்போது இந்த விடயத்தில் டக்ளஸ் ஓர் எலிதான். தமிழர்கள் பயப்படுமளவிற்கு ஒன்றுமில்லை.

    துரை

    Reply
  • மாயா
    மாயா

    டக்ளஸ் வெற்றி பெறுவார் என பொதுவாகவே தெரியும். சின்னம் முக்கியமல்ல முதலில் தான் நிலைப்பது இங்கே முக்கியம். இதுவரை காலமும் யாழ் தமிழர்கள் குறைந்த பிரச்சனைகளோடு இருக்கிறார்கள் என்றால் , அதற்கு முக்கிய காரணம் டக்ளஸ்தான். அதை யாராலும் மறுக்க முடியாது. என்னதான் செய்தாலும் தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை என்பது போல , தமிழர்கள் பழக்க தோசத்தில் தமிழ் பகுதிகளில், இனவாதத்துக்கே வாக்களித்து பழக்கப்பட்டு விட்டார்கள். தென் பகுதிகளில் UNP கட்சிக்கு. இதை மாற்ற இன்னும் காலம் எடுக்கும். காலா காலமாக தமிழரசு, காங்கிரஸ் என வாக்களித்த மக்கள் , இந்தளவாவது டக்ளஸுக்கு வாக்களித்திருப்பது மகிழ்வானது. அதிலும் வெற்றிலைச் சின்னத்துக்கு வாக்களித்திருப்பது இதமானது. மக்கள் மனங்கள் மாற்றத்தை நோக்கி நடை போடத் தொடங்கியுள்ளது. டக்ளஸ் பெற்ற வாக்குகள் , டக்ளஸுக்கும் , மகிந்தவுக்கும் விழுந்த வாக்குகள். டக்ளஸ் தோற்றிருந்தால், அது பெரும் பாதிப்பாகியிருக்கும், அல்லது கரும் புள்ளியாகியிருக்கும். இது அலையொன்றின் வீச்சாக கருதலாம்.

    புளொட், கூட்டணிக்கு ஒப்பான அணுகு முறைக்கு மாறியதால் வீழ்ச்சியடைந்ததை உணர முடிகிறது. புலிகளுக்கு எதிராக காலா காலமாக அரசியல் நடத்தி, அரசோடு இணைந்து தேர்தலில் நின்று , பிரபாகரன் (தம்பி) சரி, ஆனால் புலிகளின் நடைமுறைதான் சரியில்லை என்றதையும் , பிரபாகரனின் மரண நிகழ்வுக்கு போனதையும் , புளொட்டை ஆதரித்தவர்களும் ஏற்றுக் கொள்ளவில்லை. புலி ஆதரவாளர்களும் ஏற்றுக் கொள்ளவில்லை. அத்தோடு புலமிருந்து போவோரின் பேச்சையும், புலத்து இணைய தள தகிடு தத்தங்களையும் , புலத்து பண்டிதர்களையும் , இலங்கை வாழ் தமிழ் மக்கள் இனி கணக்கிலெடுக்கப் போவதில்லை என்பதை இத் தேர்தல் நன்கு உணர்த்தியுள்ளது.

    Reply
  • Ajith
    Ajith

    It is no matter whether it is asmall rat or big rat, crime is crime and he should be punished under law. He should be punished for the murder of an innocent student at Chavakacheri. He is a threat to tamils and peace loving people. Today Sri Lanka is ruled by criminals like Rajapakse, Douglas, Wimal Weerawanse and Karuna.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //..கப்பம் கேட்பது, பயமுறுத்துவது, கொலைசெய்வது போன்ற செயல்கள், புலிகழுடன் ஒப்பிடும்போது இந்த விடயத்தில் டக்ளஸ் ஓர் எலிதான். …//

    எந்த விடயத்தில் ‘எலி’ என்கிறீர்கள். கப்பத்திலா, கொலையிலா, அல்லது பயமுறுத்தலிலா? அப்போ ஒரு கொலை செய்தால் எலி பல கொலை செய்தால் புலியா?

    //..தமிழர்கள் பயப்படுமளவிற்கு ஒன்றுமில்லை…..//
    இது யாருக்கு உபதேசம். கப்பம் கொடுத்தவனுக்கா, பயமுறுத்தல் பட்டவனுக்கா அல்லது கொலைசெய்யப்பட்டவனுக்கா? இதுவே உங்கள் குடும்பத்தில் நடந்தால் கொலை செய்தவன் ஒரு எலி எனவே மன்னித்து விடுவீர்களா? நல்ல பூசிமெளுகல்!!

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    // எந்த விடயத்தில் ‘எலி’ என்கிறீர்கள். கப்பத்திலா, கொலையிலா, அல்லது பயமுறுத்தலிலா? – சாந்தன் //

    இன்று டக்ளஸ் பற்றி உங்களாலோ அல்லது மற்றவர்களாலோ குற்றச்சாட்டுகளை வைத்து விமர்சிக்கவோ அல்லது நேரடியாக கேட்கவோ முடிகின்றது. ஆனால் புலிகள் பற்றிய குற்றச்சாட்டுகளை எவராலாவது கேட்கவோ விமர்சிக்கவோ முடிந்திருக்கின்றதா?? இதை வைத்தே டக்ளஸ் எலி தான் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //….ஆனால் புலிகள் பற்றிய குற்றச்சாட்டுகளை எவராலாவது கேட்கவோ விமர்சிக்கவோ முடிந்திருக்கின்றதா?? இதை வைத்தே டக்ளஸ் எலி தான் என்பதை புரிந்து கொள்ளுங்கள்….//

    ஓ..அப்படியா? அப்போ போர்நிறுத்த கண்காணிப்புக்குழு வாசலில் சவப்பெட்டிகளை வைத்து அழுதது அவர்கள் ‘எலிகள்’ என்பதாலா?
    கூட்டணிக்கட்சி காரன் தலையில் துவக்கு வைத்து தலைமயிரைப்பிடித்து இழுத்தான் என்று சொல்லியும் அரசு கணக்கெடுக்கவில்லலை, சொந்த சின்னத்தில் எல்லாம் நீ நிற்க முடியாது. நிற்பதாயின் எமது சின்னத்தில் நில் இல்லை விலகி செல் என சொன்னபது அண்ணன் என்னடா தம்பி எண்டடா மெட்டில் ‘வீணை என்னடா வெற்றிலை என்னடா’ என விரக்தி பாடல் பாடியபோது அவர்கள் தாம்மை ‘எலிகள்’ என உணரப்பண்ணியிருக்கிறது என்பதனாலா?

    Reply
  • NADARAJAH SETHURUPAN
    NADARAJAH SETHURUPAN

    யாழ்பாணத்தில் உள்ள 60 ஆயிரம் முப்படைகளும் ஆருக்கு வாக்கு போட்டிருப்பினம்? வெத்திலைக்கா யானைக்கா? கட்டாயம் த.தே.கூக்கு இருக்காது.

    Reply
  • thurai
    thurai

    30 ஆண்டுகளிற்கு முன்பு ஜயவர்த்தனாவும், துரையப்பாவும் தமிழர்களின் எதிரிகள் என்றனர். இன்று ராஜபசவும் டக்ளஸசும்
    என்கின்றனர்.

    துரையப்பாவில் தொடங்கி முள்ளிவாய்க்காலில் முடித்து வைத்தார் தம்பி பிரபாகரன். இப்போ டக்ளசுடன் தொடங்கி எங்கு கொண்டுபோய் முடிப்பீர்களென அஜீத்தும், சாந்தனும் சிந்தித்தால் நல்லது. அத்ற்கு முன் த்ம்பியை நம்பி கம்பி எண்ணுவோரயும், முள்ளுக்கம்பி வேலிக்குப் பின்னால் நின்றோரையும், நிற்போரையும் ஆலோசனை கேட்கவும். அவ்ர்கள் உங்களை எங்கள் தம்பி பிரபாகரன் எங்கே, எப்போ வந்து எங்களை மீட்பார் என்று கேட்டால் அத்ற்கும் நீங்கள்தான் பதில் சொல்ல வேண்டுமென்பதையும் மறக்கவேண்டாம்.

    இங்கு வந்து கருதுக்கள் எழுதுவோரிற்கு பின் பல கதைகழும் அனுபவங்கழுமுண்டு. யாவரும் விரும்புவது இலங்கையில்
    அமைதியும் தமிழர்களின் நிம்மதியான வாழ்வையுமேயாகும். இதற்கு எங்கள் கருத்துப் பரிமாறல் வாசகர்களைச் சிந்திக்கவும்
    தெளிவடையவும் வழிகாட்டுகின்றது.

    தமிழர்களிற்கு எதிரி தமிழரிடமேயுள்ள, சாதியும், சமயஙக்ழுமெயாகும். இதனோடு அண்மையில் உருவாகியுள்ள புலி ஆதரவும், புலி எதிர்ப்பும் கூடி நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது. இந்தப்பிரச்சினைகளை முத்லில் வென்றெடுத்த பின்பே தமிழர் சிங்கள அரசுடன் தமிழரின் உருமைக்காக போராடுவதற்கு தகுதியானவனாவன்.

    துரை

    Reply
  • NANTHA
    NANTHA

    இந்தக் கட்டுரையாளர் டக்ளசின் வெற்றிக்கு சொல்லும் காரணிகளில் ஒன்று “ஒடுக்கப்பட்ட தமிழரின் வாக்கு வங்கி” பற்றியது. கட்டுரையாளர் “புலி” காலத்தில் EPRLF இயக்கத்தை ” கீழ் சாதி” இயக்கம் என்று புலி கும்பல் செய்த பிரச்சாரத்தை அவிழ்த்து விடுகிறாரோ என்று ஒரு ஐயம் தோன்றுகிறது. அல்லது யாழ்ப்பாணத்து “மேல்” சாதிகளை சமாதானப்படுத்தும் முயற்சியா என்று தெரியவில்லை. எனினும் எனது கருத்தில் ஜெயபாலனும் “ஒரு ஜில் மால்” பேர்வழியாகவே தோன்றுகிறார்.

    டக்லஸ் தேவானதாவுக்கு விருப்பு வாக்குகள் அளித்தவர்கள் சம்பந்தன் கட்சிக்கும் வாக்களித்துள்ளனர் என்பதுதான் உண்மை. இதில் ஒடுக்கப்பட்டவர்கள், ஒடுக்கியவர்கள் என்ற செய்தியை உணர்வது கஷ்டமாக உள்ளது. ஆயினும் ஜெயபாலன் டக்ளசுக்கு எதிராக பரப்பிய விஷ வதந்திகளுக்கு டக்லஸ் பதில் கொடுக்க வேண்டும் என்றும் கேட்பது புலிக் கோஷ்டிகளை சந்தோஷப்படுத்தும் முயற்சியாகவே புலப்படுகிறது.

    சாவகச்சேரி மாணவன் கொலை தொடர்பாக செய்தி வெளியிட்ட “புலி” வித்யாதரன் கோஷ்டியிடம் ஆதாரம் கேட்பது பொருத்தமான காரியம். தற்போது தேடப்படும் நபர் புலிகளின் உளவுப்படை அங்கத்தவர் என்றும் வேறொரு இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. அது “வித்யாதரன்” கோஷ்டியின் நம்பகத் தன்மை பற்றியும் கேள்வி எழுப்பியுள்ளது.

    கட்டுரையில் டக்ளசின் வெற்றியை ஜீரணிக்க முடியாமல் ஜெயபாலன் திண்டாடியிருப்பதும் தெரிகிறது. “இது எப்படி” நடக்கும் என்பதும் புரிகிறது. “அமைச்சராக இருந்த அனுகூலங்கள்” என்று சொல்வதை விட டக்லஸ் மக்களோடு இருந்தமை காரணம் என்றோ மக்களுக்கு ஆற்றிய சேவைகள் காரணம் என்றோ சொல்ல முடியாது ஜெயபாலன் தவித்துப் போயுள்ளார்.

    சம்பந்தனை விட்டுப் போனவர்கள் தோற்றுப் போயுள்ளதை சுட்டும் ஜெயபாலன் சம்பந்தரின் அணிக்கு ஏன் வாக்களிக்கிறீர்கள் என்று யாரையும் கேட்டதாகத் தெரியவில்லை.

    Reply
  • கிருபா
    கிருபா

    DM இல் ஒருவர்,
    “When a massive 77% of eligible voters in Jaffna have not voted, what is the mandate Douglas talking about? It is a shame to have leaders with criminality from head to toe such as Douglas represent the Jaffna Tamils.”…

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //…30 ஆண்டுகளிற்கு முன்பு ஜயவர்த்தனாவும், துரையப்பாவும் தமிழர்களின் எதிரிகள் என்றனர். இன்று ராஜபசவும் டக்ளஸசும்
    என்கின்றனர்…..//
    யாழ் பெருமாள் கோவிலடியில் ஒரு கொட்டிலுக்குள் இதே டக்ளசின் இயக்க ‘படிப்பு’ ஒன்றில் ஜயவர்த்தனாவும் எமது எதிரி துரையப்பாவும் எதிரி என அதே ‘தோழர்களின்’ வாயலேயே கேட்டேன். இதே ராஜபக்சவும் ஜெயவர்த்தனா எதிரி என சொல்லி சிங்கள மக்களும் கேட்டிருப்பார்கள்!

    //…..துரையப்பாவில் தொடங்கி முள்ளிவாய்க்காலில் முடித்து வைத்தார் தம்பி பிரபாகரன். இப்போ டக்ளசுடன் தொடங்கி எங்கு கொண்டுபோய் முடிப்பீர்களென அஜீத்தும், சாந்தனும் சிந்தித்தால் நல்லது….//
    அந்த ‘படிப்புகளின்’ போது அரசியல் கொலைகள் பற்றிய கதையும் வந்தது. அப்போது ‘தோழர்கள்’ ரஷ்ய வரலாறுகளில் இருந்து உதாரணம் காட்டி நியாயப்படுத்தியது மட்டுமல்ல்லாது தம்பி துரையப்பா கதை முடித்திராவிட்டால் தாம் அல்லது யாராவ்து இன்னொருவர் முடித்திருப்பர் எனவும் சொன்னார்கள். நீங்கள் சொன்னது மாதிரி ‘சிந்தித்து’க்கொண்டிருப்பது மட்டுமல்லாது ‘சிரித்துக் கொண்டும்’ இருக்கிறேன். நன்றி!

    //….தமிழர்களிற்கு எதிரி தமிழரிடமேயுள்ள, சாதியும், சமயஙக்ழுமெயாகும். இதனோடு அண்மையில் உருவாகியுள்ள புலி ஆதரவும், புலி எதிர்ப்பும் கூடி நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது….//
    புலி ஆதரவு, புலி எதிர்ப்பு அண்மையில் உருவாகியதல்ல. மாறாக ‘புலி எதிர்ப்பு’ என்பது பசுத்தோல் போர்த்திய ‘சாதி, மத வாதம்’ என்பதனை அண்மையில் ‘கண்டு’ சிலர் முழிபிதுங்குவதுதான் உண்மை. (உ+ம் : டக்ளசின் சாதி அரசியல், பலரின் ‘பாதிரி எதிர்ப்பு )

    //…. இந்தப்பிரச்சினைகளை முத்லில் வென்றெடுத்த பின்பே தமிழர் சிங்கள அரசுடன் தமிழரின் உருமைக்காக போராடுவதற்கு தகுதியானவனாவன்….//
    அப்போ தமிழரின் உரிமை இன்னும் கிடைக்கவில்லையா?

    Reply
  • thurai
    thurai

    //யாழ் பெருமாள் கோவிலடியில் ஒரு கொட்டிலுக்குள் இதே டக்ளசின் இயக்க ‘படிப்பு’ ஒன்றில் ஜயவர்த்தனாவும் எமது எதிரி துரையப்பாவும் எதிரி என அதே ‘தோழர்களின்’ வாயலேயே கேட்டேன். இதே ராஜபக்சவும் ஜெயவர்த்தனா எதிரி என சொல்லி சிங்கள மக்களும் கேட்டிருப்பார்கள்!//சாந்தன்

    துரோகிகள் என பிறரைச் குற்ரம் சாட்டியவர்கழும், துரோகிகள் பட்டம் சூட்டபடுகின்றார்கள். எனவே யார் மீதும் குற்ரம்சாட்டுவோர் ஒருகாலத்தில் துரோகிகள் ஆவார்.

    துரை

    Reply
  • Ajith
    Ajith

    இங்கு வந்து கருதுக்கள் எழுதுவோரிற்கு பின் பல கதைகழும் அனுபவங்கழுமுண்டு. யாவரும் விரும்புவது இலங்கையில் அமைதியும் தமிழர்களின் நிம்மதியான வாழ்வையுமேயாகும். இதற்கு எங்கள் கருத்துப் பரிமாறல் வாசகர்களைச் சிந்திக்கவும் தெளிவடையவும் வழிகாட்டுகின்றது.

    I partly agree with you. Everyone’s wants to live peacefully in this island. More than that every citizen wants justice, equal rights and safety. Sinhala leadership and Sinhala people refused to accept tamils as equal citizens of the nation. Forced Sinhala settlements in the East and Sinhala only policy and continued violence against by Sinhala since 1958 and failure to protect innocent tamils clearly shows sinhala people and its leaders are not prepared to accept tamils as equal citizens of the nation and tamils have no security under a unitary sinhala government. In 1958, did the tamils took arms against sinhalese. Then why Sinhalese murdered hundreds of innocent tamils in Colombo and shipped them to North-East. Why did they butchered tamils in 1977 and 1983. In 1981, Welikade prison was attacked and 53 political prisoners were killed with the protection by Sinhala forces. The prisoners were not LTTE. They are members of PLOTE,TELO. Why Sinhala governments did not protect those affected by from those murderers. Why no one was charged by the law and order system of the nation?It is simple to expalin. Sinhala politicians believe that they have only there to protect Sinhalese and not tamils. It is not only LTTE took up arms but all movements including EPDP took up arms. If we look at the names of these group every movement had “Eelam” with them.
    PLOTE: People Liberation Organisation of Tamil Eelam
    TELO: Tamil Eelam Liberation Organisation
    EPRLP: Eelam People Revolutionary Liberation Front
    LTTE: Liberation Tigers of Tamil Eelam
    EROS: Eelam Revolutionary Organisation for Students.

    All these groups accepted that there is no solution under unitary system. All leftist parties accepted the self-determination of tamils and North-East as their homeland for Tamils.
    All Sinhala parties including leftist parties fallen into Sinhala nationalism. Neither SLFP nor UNP are prepared to accept the tamils as equal citizens of Sri Lanka. Douglas Devanda who served under both UNP and SLFP as a minister. He served as a minister under Chandrika and Mahintha. He was trained in Palestine and branded as a terrorist by Sinhala governments.Why he took up arms against government if he wanted tamils to live peacefully under Sinhala rule.
    Is Rajapakse prepared to self-determination of tamils in their homeland now? The truth is that LTTE stood for its cause until the end. LTTE never prepared to surrender tamils fundamental rights to Sinhala nationalism. Over 30,000 of our brothers, sisters and children saccrificed their lives for believing that tamils have the right to live with equal rights. It is with the same believe all tamils including Douglas had when they took arms. There is no reason to believe now that Sinhalaese are prepared to accept tamils as equals. It is not Rajapakse or Ranil speaks in tamil or telling that no minorities in this country is going gurantee security of tamils and their fundamental rights.

    தமிழர்களிற்கு எதிரி தமிழரிடமேயுள்ள, சாதியும், சமயஙக்ழுமெயாகும். இதனோடு அண்மையில் உருவாகியுள்ள புலி ஆதரவும், புலி எதிர்ப்பும் கூடி நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது. இந்தப்பிரச்சினைகளை முத்லில் வென்றெடுத்த பின்பே தமிழர் சிங்கள அரசுடன் தமிழரின் உருமைக்காக போராடுவதற்கு தகுதியானவனாவன்.-துரை
    The Problems related to caste, relegion, social claess are not specific to tamils. these problems exist in all communities. This is another reason there is need for self-rule. The main problem with the tamils is the dis-unity. Every one wants to be leader and if they don’t agree with other, they will join the common enemy. What Anathasangaree achieved? What Douglas acheived? What Pilliyan ana Karuna achieved. All now work as slaves of Rajapakse unable to keep even their symbol of their own parties. You all not only helped Rajapakse to defeat LTTE but also to make tamils as permanent slaves of Sinhala buddhists and completely wipe out existence of tamils from their homeland.

    Reply
  • palli
    palli

    //யாழ்பாணத்தில் உள்ள 60 ஆயிரம் முப்படைகளும் ஆருக்கு வாக்கு போட்டிருப்பினம்? வெத்திலைக்கா யானைக்கா? கட்டாயம் த.தே.கூக்கு இருக்காது.//
    அவர்கள் தேர்தல் முடியும்வரை வடக்கை கவனமாய் பார்க்கும்படி கூட்டமைப்பிடம் பொறுப்பை கொடுத்துவிட்டு விடுப்பில் எல்லோரும் சரத்தை சுகம் கேக்க கொழும்புக்கு வந்து விட்டார்களாம்; உங்கள் கேள்விக்கு இந்த பதில் ஆறுதல் தரும் என நினைக்கிறேன்,

    Reply
  • Sabes Sugunasabesan
    Sabes Sugunasabesan

    Pillayan and Karuna have lost in the elections. TNA is holding despite losses. It is interesting Douglas Devananda gis elected as the preferred Candidate.

    This, to me tells , that the Tamil electorate is astute. ‘Douglas is useful for getting the material things done (water, jobs, roads economy, licences). Voting TNA is to say that we have not given up our greivances despite the defeat of the LTTE. (Please also note that they voted against TNA in the presedential elections as they did not see much sense in voting Sarath Fonseka). Long live the people’s practical good senses and their appropriate use of their voting power!

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //…எனவே யார் மீதும் குற்ரம்சாட்டுவோர் ஒருகாலத்தில் துரோகிகள் ஆவர்..//

    உண்மைதான் துரை. அரசியல் ‘புலி எதிர்ப்பாளர்’ சமயம் என வரும்போது ‘மதவாதிகளாக’ போனதை பார்க்கிறோமில்லையா?
    கடத்தல், கப்பம், கொலை செய்துவிட்டு மற்ரவர்களில் பழிபோட்டு வசதியாக தப்பித்தோர் இப்போது ‘பழக்கதோசத்தில்’ செய்துவிட்டு பழிபோட வழியில்லாமல் மாட்டுப்பட்டதையும் பார்த்தோமில்லையா?

    Reply
  • Appu hammy
    Appu hammy

    The most votes casted for EPDP are from Kayts, which is fully controlled by EPDP. The other parties candidates were not allowed to go there even. Douglus, people arw worrying and fearing about your members who are carrying AK 47 s and Pistols rather than HSZ

    Reply
  • sumi
    sumi

    யாழ்மாவட்டத்தில் நன்றியுள்ள தமிழர்களின் மொத்தத்தொகை 28,585 தானா??

    Reply
  • thurai
    thurai

    //உண்மைதான் துரை. அரசியல் ‘புலி எதிர்ப்பாளர்’ சமயம் என வரும்போது ‘மதவாதிகளாக’ போனதை பார்க்கிறோமில்லையா//சாந்தன்

    நான் ஒருபோதும் எந்த சாதியோ மதமோ பெரியதென்றும்,சிறியதென்றும் ஏற்கமாட்டேன். இந்த வாதங்கள் மக்களிடையே ஒற்றுமையை அழிப்பதுடன் உலக சமாதானத்திற்கும் ஆபத்தானவை. தவறுகள் விடவரின் தனிப்பட்ட விடயமே தவிர சாதியையும், சமயத்தையும்
    இனத்தையும் இழுப்ப்து புத்திசாலித்தனமான செயலல்ல.

    துரை

    Reply
  • thurai
    thurai

    அஜீத் சொல்வது நடந்த மறக்க முடியாத சம்பவங்கள். சிங்களவர் தமிழரிற்கு செய்த கொடுமைகளை மறந்து சிங்களவருடன் ஒன்றாக வாழமுடியாதென்றால், தமிழர் தமிழர்களிற்கும், முஸ்லிம்களிற்கும் செய்த கொடுமைகளையும் புலிகள் செய்த கொடுமைகளையும் யாராலும் மறக்கவும் முடியாதுதான்.

    புலிகளால் துரத்தப்பட்ட முஸ்லிம்கழும் திரும்ப யாழ் வ்ருவத்ற்கு புலிகளின் அனுமதியைக் கேட்கவில்லை. சிங்கள இராணுவமே வழிவகுத்தது. த்மிழர் மீது ஆத்திரம் கொண்ட சிங்களவ்ர் ஏன் தோட்டத் தொழிலாளர்களை நாட்டை விட்டுத் துரத்தவில்லை. ஜிரிவி யில் மட்டும்தான் தொப்புள்கொடி உறவா? இந்த மேலாதிக்கதின் நடிப்பு சிங்களவ்ர்களிற்கு நன்றாகவே தெரியும்.

    அஜீத் சொல்லும் தமிழர் தமிழினம் இலங்கையில் ஒன்றாக இல்லை. உருமை கேட்பவர்கழும், கேட்டவர்கழும் தமிழனை ஆழுவதற்கு உருமை தா என்றுதான் அன்றும், இன்றும் போராடுகின்றார்கள். தமிழர்களின் உருமைக்காகவில்லை.

    முதலில் தமிழன் தமிழனாக இலங்கையிலும், புலம்பெயர் நாடுகளிலும் வாழ்ந்து காட்ட வேண்டும். வருடத்தில் ஒருமுறை மாவீரர் தினத்திற்கு 25 ஆயிரம் பேர் கூடி உலகிற்கு நாம்தமிழர் என்று காட்டுவதை உலகம் ஏற்காது. அன்றாட வாழ்வில் எப்படி வாழ்கிறார்கள் என்பதே கவனத்திற்கு எடுக்கப்பட வேண்டும்.

    சேரன் ஆண்டான்,சோழன் ஆண்டான்,பாண்டியன் ஆண்டான் நானும் தமிழன் ஆழப்பிறந்தவன் என்பது,நான் உயர் குடியில் பிறந்தவன் நானே தமிழரில் உயர்வானவ்ன் எனக்கே தமிழரை ஆழும் உருமை உண்டென்பதற்கு சமனான விவாதமேயாகும்.

    துரை

    Reply
  • Aras
    Aras

    தற்போது தேடப்படும் நபர் புலிகளின் உளவுப்படை அங்கத்தவர் என்றும் வேறொரு இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.”

    இந்த சாவகச்சேரி விடயத்தில் பக்கத்து நாட்டு றோ இலங்கை அரசு தமிழ் தேசிய கூட்டமைப்பு மூன்றிற்கும் தொடர்புள்ளது. யாழ் மேஜர் யோகேஸ்வரி மீதான கொலை முயற்சியும் அவ்வாறானதே. ஒரே நோக்கம் டக்ளஸை அரசியலில் இருந்து அகற்றி விட்டு தமிழ் தேசிய கூட்டமைப்பை முன்னிறுத்துவதாகும் . இத்தகைய அரசியல் பயங்கர சுழிகளில் இருந்து தப்பிப் பிழைப்பது பெரும் சாகசச் செயலாகும். ஆனால் இவற்றை தமிழ் சமூகம் எதிர் கொள்ளக் கூடிய பலத்தில் இல்லை.

    Reply
  • Ajith
    Ajith

    புலிகளால் துரத்தப்பட்ட முஸ்லிம்கழும் திரும்ப யாழ் வ்ருவத்ற்கு புலிகளின் அனுமதியைக் கேட்கவில்லை. சிங்கள இராணுவமே வழிவகுத்தது. த்மிழர் மீது ஆத்திரம் கொண்ட சிங்களவ்ர் ஏன் தோட்டத் தொழிலாளர்களை நாட்டை விட்டுத் துரத்தவில்லை.

    You are completely denying the fact. Hundreds of upcountry tamils were killed by in 1983, and thousands of them were chased out after burning their dwellings and properties. Most of them are living in Vanni.The citizenship of million tamils were removed and sent back to India.
    Tamils have been chased out by Sinhalese since 1948 irrespective of whether they are Indian origin or Ceylon origin. Are you saying that Sinhalese were angry on tamils because of LTTE? You are justifying Sinhala attrocites against tamils because of your personal angry with few LTTE members. You are happy to give your support to Sinhala racists to completely wipe out tamils from their motherland. LTTE may be wrong in some aspects but that does not permit to say Sinhalese have the right to wipe out tamils from their motherland. I have lived with Sinhalese for several years. They are nice and friendly but they are united on one thing :”Tamils have no right in this nation and they should be wiped out from tis nation”.

    Reply
  • pandithar
    pandithar

    மக்களின் மனம் கவர்ந்த தலைவர்

    மனம் நிறைந்த தலைவர்.

    டக்ளஸ் தேவானந்தா

    ஆகவேதான் இந்த விருப்பு வாக்கு…………

    Reply
  • sathees
    sathees

    விருப்பு வாக்கை மட்டும்வைத்து ஒருவரை எடைபோட முடியாது. தேவானந்தா பல நல்லதுகளை செய்திருக்கிறார் என்பது உண்மைதான். ஆனால் அவர் கட்சியில் தனிப்பெருந்தலைவர். அதனால்தான் விருப்பு வாக்கு இப்படி. கூட்டமைப்பில் அப்படி இல்லை. விருப்பு வாக்குகள் சிதறிஇருக்கின்றன.
    விகிதாசார தேர்தல் முறை நல்ல முறையே. ஆனால் இந்த விருப்புவாக்கு முறை பலவீனமானது. கட்சிக்குள்ளேயே போட்டியையும் குரோதத்தையும் வளர்த்துவிடும். பிரான்ஸ் போன்ற நாடுகளில் இப்படி இல்லை. கட்சிப்பட்டியலில் மேலுள்ளோர் ஒழுங்கிலேயே தெரிவாவர்.

    Reply
  • Mohamed Nisthar
    Mohamed Nisthar

    Hi Ajith!

    Have you ever dreamt that Buddist monks would stand up at political campaign stage for minority candidate and address to the voters explaining why it’s important for minority people to vote for their own minority candidate? And can you see a Sinhalese contested in the Tamilarasu party and won a seat?

    The first happend in Puttalam constitunecy in Puttalam Electoral District for the first time and the second in Ampara Electoral District also for the first time in the Sri Lankan Tamil politics as far as I can remember. It’s a clear example that majority people, including President Rajapakshe, think that racism or the notion of Singhalse only Sri Lanka is not viable. The political mood in Sri Lanka is changing.

    However, I’m not in denial of past atrocities by mislead Singala majority. In the meantime I remind you of the atrocitites staged by the Tamil Tigers against the minority Moors in the name of freedom for Tamils.

    Therefore the minorities should think of pro active politics rather than conforntational one for the sake of our own survival and good future for all Sri Lankans, including Tamils and Moors. Give a chance for change.

    Reply
  • kalaignar
    kalaignar

    தமிழ் மக்களின் பிரச்சினை என்பது ஒரு தேசியப் பிரச்சினை. தமிழ் மக்களின் பிரச்சினை என்பதால் தமிழ்க் கட்சிகளுடன் கட்டாயம் பேசப்படவே வேண்டும். ஆனால், தீர்வு என்று வரும்போது அனைத்துக் கட்சிகளுடனும் பேசித்தான் தீர்வு காண வேண்டும்.

    தமிழ் மக்கள் ஆதரிக்கும் கட்சிகளுடன் என்று மட்டுமல்லாமல் தமிழ் மக்களை ஆதரிக்கும் கட்சிகளுடனும் பேசப்பட வேண்டும். அந்த வகையில் எமது கட்சியையும் சேர்த்துக் கொள்ளலாம்.

    எமது கட்சிப் பிரதிநிதிகள் தமிழ்பேசும் மக்களால் தெரிவு செய்யப்படாத பிரதிநிதிகளாக இருக்கலாம். ஆனால், தேசியப் பிரச்சினை என்று வரும்போது அனைவருடனும் பேசப்பட வேண்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான டியூ குணசேகர கேசரி வாரவெளியீட்டுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்தார்.

    தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தமிழ் மக்கள் ஆதரித்துள்ளனர் என்பதற்காக அவர்கள்தான் தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் என்று கூற முடியாது. நாங்கள் இந்த நாட்டிலுள்ள அனைத்து மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறோம்.

    இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியான நாம் இன,மத,பிரதேச வேறுபாடுகள் கடந்த நிலையிலேயே செயலாற்றுகிறோம்.

    ஆகவே, தமிழ் மக்களின் பிரச்சினை விடயத்தில் அனைத்துக் கட்சிகளுடனும் பேசியே ஆக வேண்டும். இதனையே மீண்டும் வலியுறுத்துகிறேன் என்றும் அவர் தெரிவித்துடன் புலிகளோ பிரபாகரனோ பிரச்சினைகளை உருவாக்க வில்லை.

    பிரச்சினைகள்தான் புலிகளையும் பிரபாகரனையும் உருவாக்கின. பிரச்சினை ஒன்று இருந்ததால்தான் இவ்வாறான அமைப்புகள் உருவாகின என்றும் அவர் தெரிவித்தார்.

    Reply
  • thurai
    thurai

    //பிரச்சினைகள்தான் புலிகளையும் பிரபாகரனையும் உருவாக்கின. பிரச்சினை ஒன்று இருந்ததால்தான் இவ்வாறான அமைப்புகள் உருவாகின என்றும் அவர் தெரிவித்தார்.//

    அருமையான கருத்து. பிரச்சினைகளையும், புலிகளையும் எண்ணையூற்றி வளர்த்தவர்கள், புலிகளையும் தமிழரின் பிரச்சினைகளையும் வியாபாரமாக்கிய சில புலத்த்தில் வாழ்தமிழர்களேயாகும்.

    துரை

    Reply