நாட்டின் மூன்றாவது அரசியல் சக்தியாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு : செல்வம் அடைக்கலநாதன்

ஏழாவது நாடாளுமன்றத்தின் மூன்றாவது அரசியல் சக்தியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவெடுத்துள்ளது. அந்த வகையில் தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் மற்றும் அரசியல் தீர்வு தொடர்பில் பேரம் பேசுவதற்கான சக்தியாகவும் மக்கள் மாற்றியமைத்து ஆணை வழங்கியுள்ளனர் என்று ரெலோவின் தலைவரும், வன்னி மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ளவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

தமிழ் மக்களுக்கான நிரந்தரமானதும் ஏற்றுக் கொள்ளக் கூடியதுமான அரசில் தீர்வு எனும் விடயத்தில் சர்வதேசத்தின் தலையீடு இன்றியமையாதது என்பதை வலியுறுத்துகின்ற அதேவேளை, இலங்கை அரசாங்கம் பொறுப்புணர்ந்து செயற்பட வேண்டியது அவசியம் என்றும் அவர் சொன்னார். கூட்டமைப்பின் எதிர்கால நோக்கு தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே செல்வம் அடைக்கலநாதன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரை, அதன் குரல் தமிழ் மக்களுக்காகவே ஒலித்துக் கொண்டிருக்கும் என்பதில் எந்த மாற்றமும் கிடையாது. இதனை ஏற்றுக் கொள்ளும் வகையிலேயே வடக்கு கிழக்கைச் சேர்ந்த தமிழ் மக்கள் வாக்களித்துள்ளனர்.

தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகள் எந்தவொரு அரசாங்கத்தினாலும் நிறைவேற்றப்படாத ஒன்றாகவே இருந்து வருகின்ற நிலையில் தொடர்ந்தும் அதே போக்கு கடைப்பிடிக்கப்படுமானால் அது நாட்டின் ஆரோக்கியமான தன்மைக்கு ஏற்றதாக அமையாது.

தற்போது வடக்கின் அடிப்படைத் தேவைகளில் முக்கியமானது இடம்பெயர்ந்த மக்களின் மறுவாழ்வுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகும். மீள்குடியேற்றம் என்பதும் அபிவிருத்தி என்பதும் உண்மைத் தன்மையானதாக அமைய வேண்டும் என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கையாக இருக்கின்றது.

அடுத்ததாக போரினால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் ஊனமுற்றவர்களின்பால் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தல், போரினால் கணவரை இழந்து தவிக்கும் விதவைகள் மற்றும் அநாதரவாக்கப்பட்டுள்ளவர்களின் நிலைமையுணர்ந்து ஏற்ற வகையிலான தீர்வுகளை எட்டுதல் மற்றும் தற்போது சிறையிலடைக்கப்பட்டுள்ள அப்பாவி இளைஞர் யுவதிகள், அரசியல் கைதிகள் ஆகியோரின் விடுதலை உள்ளிட்ட முதற் கட்டத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதில் நாம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தீர்மானித்திருக்கின்றோம்..

இதற்காக நாம் அரசாங்கத்தை வற்புறுத்தவிருக்கின்றோம். இதற்கு அடுத்த கட்டமாக இருப்பதுதான் எமது உரிமையான அரசியல் தீர்வாகும். தமிழ் மக்களின் தேவைகள் மற்றும் அது தொடர்பிலான தமது நிலைப்பாடுகளை தேர்தல்களின் மூலம் வெளிப்படுத்தி வருகின்றனர்.

தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான நிரந்தர அரசியல் தீர்வொன்று அவசியம் என்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றத்திலும் நாடாளுமன்றத்துக்கு வெளியிலும் வலியுறுத்தி வந்துள்ளது. அது மட்டுமல்லாது எமது சமூகத்தின் தேவை குறித்து சர்வதேசத்துக்கு உணர்த்தப்பட்டுள்ளது. இதனை சர்வதேசமும் உணர்ந்துள்ளது.

எனவே, தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு விடயத்தில் சர்வதேசத்தின் பங்கு முக்கியமானதாகும். வடக்கு கிழக்கு மக்களின் தீர்ப்பின் பிரகாரம் அரசாங்கத்துடன் பேரம் பேசும் சக்தியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவெடுத்துள்ளது. அதற்காகவே மக்களும் ஆணை வழங்கியுள்ளனர். அது மட்டுமல்லாது நாட்டின் மூன்றாவது அரசியல் சக்தியாகவும் நாம் இருக்கின்றோம்.

எனவே அரசாங்கம் தமிழ் மக்கள் விடயத்தில் தமது பொறுப்பினை தட்டிக் கழிக்க முடியாது.

பிளவுகளே காரணம்

அதேவேளை, கடந்த பாராளுமன்றத்தில் 22 உறுப்பினர்களைக் கொண்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இம்முறை ஆசனங்கள் குறைவடைந்துள்ளன. இதற்கு எம்மிடையே ஏற்பட்ட பிளவுகளே காரணமாக அமைத்துள்ளன. இது மட்டுமல்லாது மிரட்டல்கள், அச்சுறுத்தல்கள் காரணமாக தமிழ் வாக்காளர்களின் வாக்களிப்பு வீதமும் குறைவடைந்து விட்டது. எது எப்படி இருப்பினும் வடக்கு கிழக்கின் தமிழ்ப் பிரதிநிதித்துவம் குறைவடைந்தமைக்கு கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்றவர்களே காரணமாகி விட்டனர்.

இனிவரும் காலங்களில் தவறுகள் உணரப்பட்டு ஓரணியாக ஒரே தலைமைத்துவத்தின்கீழ் தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கப்பட வேண்டும் என்பது ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய விடயமாகும்” என்றார்.

வீரகேசரி நாளேடு 4/12/2010

Show More
Leave a Reply to chandran.raja Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

50 Comments

  • chandran.raja
    chandran.raja

    மூன்று பேர் ஓடிய ஓட்டப்பந்தயத்தில் முன்றாவதாக வந்து கடைசிப் பரிசையும் தட்டிச் சென்றுளார்கள் செல்வம் அடைக்கலநாதன் அணியிணர். எப்படிபட்ட சமத்தான பேர்வழிகள் ஓட்ட போட்டிய காணவந்த தமிழர்கள் ஐந்தில் நான்கு பங்கினர் என்பதை இந்த அடைக்கலம் அறிவாரா?

    செல்வம் அடைக்கலநாதனை மாஜி தலைவர் சிறீ சபாரத்தினத்தை வாகனத்தில் கட்டி இழுத்து சென்ற போது அந்த இயக்கத்தின் பார்வையாளர்களாக நாம் இருந்த போதும் இருபத்தி நான்கு வருடங்களின் பின்பும் எங்களுக்கு?… உங்களுக்கு உறைக்கவில்லையே! ஏன்? இன்றும் அந்தகாட்சியில் கனவுகளில் வந்து எமது நிம்மதியான நித்திரை போக்கடிக்கிறதே!. இப்படியான சம்பவங்கள் உங்களுக்கு நிகழ்வதில்லையா?. அப்படியானால் நீங்கள் இந்த உலகத்து இன்பங்களை அனுபவிக்க வந்த பாக்கியசாலிசாலி தான்.

    உங்களுக்கு ஒரு வார்த்தையை செலவழிப்பதானாலும் வீனோ. ஒரு கேள்விமட்டும் என்னிடம் பாக்கியுள்ளது. ஊனமுற்றவர்கள் அனாதைக் குழந்தைகள் விதவைகள் போன்றவர்களின் வாழ்வை மேம்படுத்துவதற்காகவும் உழைப்பதாகவும் சொல்லுகிறீர்களே! 2009 மே மாதம் 19 ம் திகதிக்கு முன்பு இது விஷயமாக எப்படி கவனம் செல்லுத்னீர்கள்? என்றாவது அதற்கான கேள்விவை எழுப்பினீர்களா?.

    செல்வம் அடைக்கலநாதன் அவர்களே! வரலாற்று விதி ரொம்ப கொடுரமானது. அது யாருக்கும் ஈவுஇரக்கம் பார்ப்பதில்லை. அது யாருக்கும் மன்னிப்பும் வழங்குவதில்லை. அது தனது அசுரத்தனத்தான வேகத்திலேயே சென்று கொண்டிருக்கும். இந்த வேகத்தை உங்களால் கணக்கிடமுடியாதது உங்களுடயதும் உங்கள் கூத்தைமைப்பினது பலயீனமே!.

    தமிழ்மக்களுக்கும் இலங்கைத்தீவுக்கும் என்றுமே துரஷ்டக்காற்று வீசிக்கொண்டிருக்க முடியாது. அவர்களுக்கும் ஒருநாள் பொழுது புலரும். விடிவு வரும். அதன் விடிவெள்ளியாக பி.என்.பி .பியசேன போன்றவர்கள் தோன்றி விட்டார்கள். முடமாக்கப்பட்ட தமிழ்இனம் திரும்ப சுயமாக எழுந்து நிற்கும். அதே நேரத்தில் நீங்களும் உங்கள்கூத்மைப்பும் முடமாக்கப்படுவதும் அல்லாமல் உங்கள் அரசியல்சமாதியை நோக்கிப் போவதும் தவிர்க்க முடியாததே.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //… உங்களுக்கு உறைக்கவில்லையே! ஏன்? இன்றும் அந்தகாட்சியில் கனவுகளில் வந்து எமது நிம்மதியான நித்திரை போக்கடிக்கிறதே!. இப்படியான சம்பவங்கள் உங்களுக்கு நிகழ்வதில்லையா?. அப்படியானால் நீங்கள் இந்த உலகத்து இன்பங்களை அனுபவிக்க வந்த பாக்கியசாலிசாலி தான்….//

    மாற்று இயக்க ‘தலைவன’ கொல்லப்பட்டதை மறக்க முடியாமல் தூக்கத்தில் துவளும் நீங்கள். ஆனால் பல்லாயிரம் மக்கள், செம்மணி புதைகுழி என நீளும் பட்டியலுக்குச் சொந்தக்காரர்களுடன் கூடிக் குலவும் தோழர்களையும் இக்கேள்வி சென்றடைந்திருக்க வேண்டும்! ஒருவனுக்காக வாழ்க்கை முழுக்க மறக்கக்கூடாது ஆனால் பல்லாயிரம் மக்களை மறந்து ‘இன ஒற்றுமை’, ‘ஜனநாயகம்’, ‘பழையனவற்றை மறத்தல்’, ‘ஒற்றுமை’ பாடவேண்டும் நாங்கள். நல்லது !

    Reply
  • மாயா
    மாயா

    // செம்மணி புதைகுழி என நீளும் பட்டியலுக்குச் சொந்தக்காரர்களுடன் கூடிக் குலவும் தோழர்களையும் இக்கேள்வி சென்றடைந்திருக்க வேண்டும்! – சாந்தன்//

    செம்மணி புதைகுழியை தோண்ட வழி செய்த சரத் பொண்சேகாவுக்கு வாக்களிக்க புலிகள் சொன்னதை எம்மால் மறக்க முடியவில்லை. உங்களால் எப்படி மறக்க முடிந்தது?

    Reply
  • thurai
    thurai

    சாந்தனிற்கு,
    பேரினவாதத்தோடு போர் தொடங்குமுன் விடுதலை பற்ரியும் போராட்டம் பற்ரியும் இளம் சமூகத்தினர் விவாத்தித்தனர். அப்போது தம்பி சுட்டு விட்டு தான் ஓடித்தப்பினால் போதும் என்ற போக்கிலேயே வாழ்ந்தார். அவர் ஓடித்தப்பி விட இராணுவம் தமிழ் மக்களை ஆரம்பத்தில் இருந்தே பழி வாங்கியது. இதுதான் முள்ளிவாய்க்கால்வரை தம்பியால் நாடத்தப்பட்ட விடுதலைப்போர்.

    தம்பிக்கு தன்னை விடவும், புலிப்படையை விடவும் தமிழரிடத்தில் தலைவரோ வேறு அமைப்புக்களோ இருப்பதை விரும்பாதநிலையில் வாழ்ந்தார். இவரை ஆதரித்தவர்கழும் இலங்கையில் தமிழர் சிங்களவ்ரால் கொல்லப்பட்ட காரணங்களில் ஒன்று. இப்படியாக அநியாயமாக புலியின் செயலால் கொல்லப்படுவார்கள் என கூறியவர்கள், புலிகழுடன் வாதிட்டவர்கள் இன்றும் சிலர் உயிருடன் இருக்கின்றார்கள். அவர்களில் நானும் ஒருவன் என்பதால் இங்கு கூறுகின்றேன்.

    தவறுகள் விடுவது மனித இயல்பு. விட்ட தவறை உணர்ந்து திருந்துபவர்களே மனிதர். திருந்தாதவர்கள் மிருகம். எனவே புலிகள் எப்போதும் புலிகள் தான் என்பதை செயலில் காட்டுகின்றார்கள். போரின் இறுதிக்கட்டத்தில் ஜிரிவி இல் உயிருக்காகத் துடிப்போரை படமெடுப்பதிலும் அதனைக்காட்டி உலகின் ஆதரவைத் தேடுவதிலும் முன்நின்ற இதயத்தில் இரக்கமற்ர புலிகளின் செயலிற்கு நிகராக, எந்தச் சிங்களவனோ, தமிழனோ, தமிழரிடம் துரோகிகளோ இல்லை சாந்தன்.

    துரை

    Reply
  • Ajith
    Ajith

    செம்மணி புதைகுழியை தோண்ட வழி செய்த சரத் பொண்சேகாவுக்கு வாக்களிக்க புலிகள் சொன்னதை எம்மால் மறக்க முடியவில்லை. உங்களால் எப்படி மறக்க முடிந்தது?

    When Did LTTE said to Vote for Fonseka. It is not that point. Fonseka was carrying the orders of Rajpakse. Both Rajpakse and Fonseka are War criminals. Why only Fonseka is under arrest? Why not Rajapakse? Fundamentally, what you are saying is that the murder and rape of Kirusanthi by Rajapkse regime is acceptable to you because Kirusanthi is tamil. All tamils are enemies of you. Why don’t you openly accept that you all wants a Sinhala only nation.

    Reply
  • NANTHA
    NANTHA

    தமிழ் கட்சிகள் இரண்டாவது பெரிய கட்சியாக இருந்தால் கூட ஒன்றும் செய்ய முடியாது. தமிழரின் பிரச்சனை என்று மாயமான் காட்டியே ஆயிரக்கணக்கில் தமிழர்களைக் கொன்று தீர்த்து விட்டவர்கள் என்ன பிரச்சனை தீர்க்க புறப்பட்டிருக்கிறார்கள் என்பது புரியவில்லை! இலங்கையில் தமிழர்கள் இருப்பதுதான் பிரச்சனையோ?

    மாயா:
    பொன்சேகாவுக்கு வாக்குப் போடுங்கள் என்று தமிழர்களைக் கேட்டவர்கள் பொன்சேகா காலத்து செம்மணி புதை குழிகளைப் பற்றி இப்போது மூச்சு விடுவதில்லை! அதாவது “தமிழர்களின் பிணங்கள் தமிழரசியலின் உரம்” என்ற கோட்பாடு காரணம் என்று நினைக்கிறேன்! தவிர தங்கள் தலைவரையே போட்டுத்தள்ளிய புலிகளை ஏகப் பிரதிநிதிகள் என்றவர்கள் தங்கள் சந்தர்ப்பத்துக்கேற்ற விதமாக வாயை திறப்பார்கள்!

    Reply
  • மாயா
    மாயா

    //Ajith on April 13, 2010 7:58 pm
    When Did LTTE said to Vote for Fonseka. It is not that point. Fonseka was carrying the orders of Rajpakse. Both Rajpakse and Fonseka are War criminals. Why only Fonseka is under arrest? Why not Rajapakse? Fundamentally, what you are saying is that the murder and rape of Kirusanthi by Rajapkse regime is acceptable to you because Kirusanthi is tamil. All tamils are enemies of you. Why don’t you openly accept that you all wants a Sinhala only nation.//

    அஜித்தின் எழுத்துக்கள் புலிகள் , சரத் பொண்சேகாவை கடந்த அதிபர் தேர்தலில் வாக்களிக்கச் சொல்லவில்லை என்பதாக இருக்கிறது. ஆனால் பிரபாகரன் நேரடியாக சொல்லவில்லை, புலிகளது குரலாக அன்று இருந்த TNA சரத் பொண்சேகாவை ஆதரித்தது, சரத் பொண்சோகாவுக்கு விழுந்த வடக்கு – கிழக்கு வாக்குகளை பச்சை நிறமாக இலங்கை வரை படத்தில் வரைந்து இது புலிகளது ஆதரவு வாக்குகள் என வெளியான செய்திகளை பார்க்கவில்லை போலும். உங்கள் தவறுகளை நீங்களே மறப்பதில் வியக்க ஒன்றுமில்லை.
    http://i.ytimg.com/vi/tn-5EFgzWsk/0.jpg
    நாங்கள் இலங்கை வாழ் மக்களுக்கான ஒரு நாட்டைத்தான் விரும்புகிறோமே தவிர, கிடைக்காத ஈழத்தையல்ல.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //..பேரினவாதத்தோடு போர் தொடங்குமுன் விடுதலை பற்ரியும் போராட்டம் பற்ரியும் இளம் சமூகத்தினர் விவாத்தித்தனர். …//
    யார் இந்த ‘இளம்’ சமுதாயம்? யாருடன் விவாதித்தனர்? எப்போது? வெளிப்படையான விவாதமா இல்லை மறைமுகமானதா? அவ்விவாததில் பங்குபற்றிய ‘பேரினவாதம்’ யார்? டயான் ஜெயதிகா என்றொருவர் அப்போதிருந்தார் அவர் இப்போது எப்படி இருக்கிறார் எனவாவது தெரியுமா?

    //அப்போது தம்பி சுட்டு விட்டு தான் ஓடித்தப்பினால் போதும் என்ற போக்கிலேயே வாழ்ந்தார். அவர் ஓடித்தப்பி விட இராணுவம் தமிழ் மக்களை ஆரம்பத்தில் இருந்தே பழி வாங்கியது….//
    மிக மிக அருமையான மனிதாபிமான ராணுவம்!!

    Reply
  • palli;
    palli;

    சாந்தன் செம்மணி உருவாக காரணமே அந்த ஒருவன் இழப்புதானே, புரியவில்லையா?? சகோதர அழிப்புக்கு புலி புறபடாவிட்டால் செம்மணி அல்ல செம்மரிகளை கூட யாரும் எதுவும் செய்திருக்க முடியாது அல்லவா?? சந்திரா போல் எனக்கும் இன்றும் பல ரெலோ உறுப்பினர்கள் உயிருடன் ரயர் போட்டு எரித்தது என் கண்முன்னே அடிக்கடி நினைவில் வரும்; (உங்களுக்கு ரத்தினதுரையின் பனைமரம் போல்,) அதேபோல் கழக தோழர் சின்னமெண்டிஸ்சை கட்டி இழுத்ததையும் (கிட்டர்) நேரடியாகவே பார்த்தேன், அப்போது கட்டி இழுத்த பெரு மக்களுக்கு சோடா வேண்டி கொடுத்த மிருகங்களையும் கவனித்தேன்; மனதுக்குள் துடித்தேன், வேறு என்னதான் செய்ய முடியும்;

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //..சாந்தன் செம்மணி உருவாக காரணமே அந்த ஒருவன் இழப்புதானே, புரியவில்லையா?? ….//
    சொல்லுங்கள் புரிந்து கொள்கிறேன்! எது அந்த ஒருவனின் பெயர், என்ன இழப்பு?

    //…சகோதர அழிப்புக்கு புலி புறபடாவிட்டால் செம்மணி அல்ல செம்மரிகளை கூட யாரும் எதுவும் செய்திருக்க முடியாது அல்லவா?? சந்திரா போல் எனக்கும் இன்றும் பல ரெலோ உறுப்பினர்கள் உயிருடன் ரயர் போட்டு எரித்தது என் கண்முன்னே அடிக்கடி நினைவில் வரும்; ….//

    அந்த ‘புலி’யில் கழகத் தோழர்களும், பெரியவரும், ரெலோக்காரரும் ஒரு காலத்தில் இருந்தார்கள் அல்லவா? அப்போது ‘சகோதர’ அழிப்பு நடக்கவில்லையோ? ஒருவேளை அது ‘துரோகி’ அழிப்போ?
    சேர்ந்து (மத்தியகுழு) மரணதண்டனை விதித்துவிட்டு பிரிந்து சென்றவுடன் சகோதரப்படுகொலை என நொட்டீஸ் அடித்து என்னைடம் தந்தனர் (கொக்குவிலில் வைத்து) அதனை விநியோகம் செய்தது நான். பின்னர் ஆறு பேரைக்கொலை செய்து (சுழிபுரம் கேஸ்)தாட்டபோதும் கூட நம்பவில்லை, அது ஒரத்தநாடுவரை வந்து ‘புதியதோர் உலகம்’ காணும் வரை!!

    Reply
  • sumi
    sumi

    “ஊனமுற்றவர்கள், அனாதைக்குழந்தைகள், விதவைகள்” -என்பவர்கள் உருவாகியதெப்படி என்பதை சிந்தித்துப்பார்க்க மறந்து விடாதீர்கள்.நீங்களும் அப்பவி தமிழ் மக்களைக் கொன்றுள்ளீர்கள். ஊனமுற்றவர்களாக்கியுள்ளீர்கள் பெண்களையும் விதவைகளாக்கியுள்ளீர்கள். இதை உங்களால் மறுக்க முடியுமா? அல்லது நீங்கள் தண்டனையிலிருந்து நிரந்திரமாக தப்பமுடியுமா? எவ்வித உயிராபத்துமில்லாமல் இந்தியாவில் வாழ்ந்துவந்த புலியரச பாராளுமன்ற உறுப்பினராகிய தமது பிள்ளைகளை அரசபுலிப்படைகளால் உயிராபத்தென்று பொய் கூறி ஐரோப்பாவில் அடைக்கலம் பெற்றுக்கொடுத்து, இலங்கை அரசின் சலுகைகள் அனைத்தையும் மொத்தமாக அனுபவித்து, இறுதிவரை இன்னல்களை மட்டும் அனுபவித்து வரும் ரெலோ இயக்க போரளிகளின் விதவை மனைவிகளின் கண்ணீரில் பன்னீர் சுகம் பெற்று வாழும் உங்களைப்போன்றவர்கள் எப்படி தமிழ் இனத்தை வாழவைக்கப் போகின்றீர்கள்? இன்னும் எவ்வளவு காலம்தான் மக்களை…..காலம் பதில் சொல்லும். காத்திருப்போம்.

    Reply
  • thurai
    thurai

    //அப்போது தம்பி சுட்டு விட்டு தான் ஓடித்தப்பினால் போதும் என்ற போக்கிலேயே வாழ்ந்தார். அவர் ஓடித்தப்பி விட இராணுவம் தமிழ் மக்களை ஆரம்பத்தில் இருந்தே பழி வாங்கியது….//துரை
    //மிக மிக அருமையான மனிதாபிமான ராணுவம்//சாந்தன்

    சுண்ணாகம் சந்தைக்க்கு போவதற்கு யாழ் பஸ்ஸ்ரான்டில் நின்றவர்களை, கீரிமலை பஸ்சில் ஏற்றி அந்திரெட்டிக் கிரிகை செய்து காட்டியவர் தான் தம்பி பிரபாகரன்.

    இவரை நம்பியவர்களில் இன்னமும் நடந்த தவறை உணராதவ்ர்கள் பலர். தவறை உணர்ந்தும் வெட்கத்தில் விதண்டவாதம் பிடிப்போர் சிலர். அவர்களிற்கு புலிகள் என்றும் மிக மிக அருமையான் மனிதாபிமான புலிகள்தான்.

    துரை

    Reply
  • thurai
    thurai

    ஒரு இனத்தில் அட்ங்கியுள்ள சாதிகள்,சம்யங்கள், அரசியல் கட்சிகள் எல்லாம், மனிதனின் அங்கங்கள் போன்றவை. இதனை அறியாத புலியின் ஆதரவாளர்கள், தமிழரென்றால் புலிகள் மட்டுமே என்ற மூட நம்பிக்கையை தம்மிடையே வளர்த்திருந்தனர்.

    புலியில்லா விட்டால் தமிழ்ரில்லை என்பதே அவ்ர்களின் அசையாத நம்பிக்கை. இது புலத்தில் உல்லாச வாழ்வு வாழும் தமிழர்கள் சிலறிற்கு வருமானம் தேடும் மந்திரமாகவேயுள்ளது.

    புலிகழும், தமிழீழமும் ஓர் கற்பனை உலகம். இந்த கற்பனைக் கதைகளால் ஏமாற்ரப்பட்டுள்ளவர்கள் புலம்பெயர் தமிழர்களேயாகும். ஈழத்தில் தமிழர் வாழ்வதற்கும், புலம்பெயர் நாடுகளில் வாழ்வத்ற்கும் புலிகள் செய்யும்,செய்த கடமைகள் என்ன?

    தமிழர்களின் பிரச்சினையை உலகறியச்செய்துள்ளார்கள் என கூறலாம். ஏற்போம் அதற்காக தமிழர் கொடுத்த விலையென்ன? உலகில் இறுதில் தமிழர்போராட்டத்திற்கு நேர்ந்தென்ன? நடந்தது புலிகளின் பயங்கரவாதமே. இனியும் புலிகளைப் பற்ரி பேசுவோர் தமிழர்களை அழிக்கவா? அல்லது காக்கவா முயற்சிக்கின்றார்கள்.

    துரை

    Reply
  • santhanam
    santhanam

    பிரபாகரனும் பாலசிங்கமும் டெல்லியின் நிகழ்ந்சி நிரலுக்கு அமைவாகவே செயற்பட்டார்கள் ஈழத்தமிழர்களிற்கு அமைவாக அல்ல இந்தியாவிற்கு தேவையான வேலையை செய்து கொடுத்தார்கள் ஈழம் என்ற சொல்லை பிரயோகித்து.

    Reply
  • palli
    palli

    //அந்த ‘புலி’யில் கழகத் தோழர்களும், பெரியவரும், ரெலோக்காரரும் ஒரு காலத்தில் இருந்தார்கள் அல்லவா? அப்போது ‘சகோதர’ அழிப்பு நடக்கவில்லையோ?//
    அப்படி எங்கேயாவது பல்லி சொன்னேனா? அனைவரையும் சொல்லியுள்ளேன்; ஆனால் யாரும் சதிராடகூடாது நாம் மட்டுமே கூத்தாட வேண்டும் என சொன்ன ஒரே அமைப்பு புலியல்லவா?? நான் எந்த அமைப்பையும் சார்ந்தவன் அல்ல; எல்லா அமைப்பிடமும் பாகுபாடின்றி பலதடவை பரிசுகள் வாங்கியவன் சாந்தன்;

    Reply
  • thurai
    thurai

    ஆயுதமெடுத்து போராட்டம் தொடங்கிய அமைப்புகள் அனைத்திலும் தவறுகள் இருந்திருக்கின்றன. அவைகள் எல்லாம் சர்வதேசரீதியில் ஈழத்தமிழர்களின் பிரச்சினையை கொண்டுபோய் பயங்கரவாதமாக நிறுத்தவில்லை. புலிகலிற்கு மட்டுமே இந்த திறமையுள்ளது.

    துரை

    Reply
  • chandran.raja
    chandran.raja

    இன்னுமொரு செம்மணியையும் ஒரு முள்ளவாய்கலையும் உருவாக்கவா சாந்தன் சகலவித அடாவடித்தனமான கருத்துக்களை முன்வைக்கிறார்?.
    முப்பது வருடங்கள் ஒரு மனிதனின் அரை ஆயுள்காலங்கள். இதில் சாந்தன் எதைக்கற்றுத் தேர்ந்துள்ளார்?. இங்கு வந்து கருத்துச் சொல்லுபவர்கள் பல சித்தாந்தம் கொள்கைகாளல் உருவாக்கப்பட்டவர்கள். ஏன் ஆயுதஇயக்களிலும் பங்கு கொண்டவர்கள். வரலாற்று வீச்சில் தூக்கியெறியப்பட்டு நொந்து வெதும்பி ஓர்ரளவு உருக்குலைந்து போனவர்களும் கூட.
    தமக்கு கிடைத்த அனுபவங்களைக் கொண்டு இந்த தளத்தை பயன்படுத்த முயற்ச்சி எடுப்பவர்கள். எது எப்படி இருந்தாலும் தமது மையக்கருத்தில் இமையளவும் பிசகாமல் கருத்துச் சொல்பவர்கள். மையக்கருத்துத்து இது தான் தமிழ்மக்கள் தமிழ் அல்லது தமிழ் உயிர்ஜீவன்கள். இதை எப்படி வரும்காலத்திலும் கடந்தகாலத்தைப் போல சேதமுறாமல் பாதுகாக்க முடியும் என்பதைப் பற்றி தான் விவாதம் நடத்திக் கொண்டிருக்கிறோம்.

    உலகரீதியாக ஒருயுத்தம் வந்தாலோ இயற்கைரீதியாக 2004 போல் ஒரு சுனாமி வந்தாலோ எமது இனம் என்னபாடுபடும் என்ற இதயத்துடிப்பே இந்த பின்னோட்டங்கள் கருத்துக்கள்.
    தேசம்நெற் ஆசியர்குழுவிற்கும் எனக்கும் என்னைச் சார்ந்தோருக்கும் நிறையவே கொள்கைரீதியில் வேற்றுமையும் முரண்பாடுகளும் உண்டு. ஆனால் மற்றவர்களைவிட எல்லோரும் பேசுங்கள் என்ற ஜனநாயகஉள்ள கருத்தை ஆணித்தரமாக அழுங்குபிடியாக பிடித்து வைத்திருக்கிறார்கள். அது உயர்ந்த ஜனநாயக்க தன்மையாகவே நாம் கருதுகிறோம். இல்லையேல் நாங்களும் நீங்களும் இணைவது எப்படியாகும்?. உங்கள் பாஷையில் ஒரு துப்பாக்கி ரவை போதுமே! சாந்தன்.

    உலக்கை தேய்ந்து உளிபிடியானது. கழுதை தேய்ந்து கட்டெறுப்பு ஆனது போன்றபழைய முதுமொழிகளை கற்றுத்தான் நாம் எமது இனத்தில்லிருந்து வந்தோம். கிட்டதட்ட ஈழத்தமிழ் இனமும் இப்படியாகிவிட்டது என்பதே எனது தாழ்மையான கருத்து. உளிப்பிடியாய் கட்டெறும்பாய் மாறிப் போனவர்கள் தான் சம்பந்தன் அடைக்கலநாதன் சுரேஸ் பிரேமச்சந்திரன் போன்றவர்கள். இவர்கள் எல்லாம் இலங்கையைவிட்டு வெளியுலகத்தில் ஆதாரம் தேடிவிட்டார்கள் என்பதே எனது கணிப்பு. இலங்கையில் தமது தொழில் நிமித்துமே. நீங்கள் சாந்தன் செல்வம் அடைக்கலநாதனுக்கு பரிந்துபேசுவதும் அவரில் அரசியல் தன்மை காணமுற்படுவதும் புலம்பெயர்தமிழர்கள் (பெரும்பான்மையாக) ஈழவாழ் தமிழர்களுக்கு சிந்திக்காமல் செய்த கொடுமைகளைப் போன்றதே. இனியாவது ஒரு விதிசெய்வோம். தீதும் நன்றும் பிறர்தரவரா!. எல்லாம் எம்மால் உருவாக்கப்படுவதே!. திரும்பவும் வாருங்கள் சாந்தன். மனம்திருந்தி வந்தால் வரவேற்று அமோக இருக்கும். ஈழத்தமிழருக்காக குடியுருமை பெற்ற புலம்பெயர் பிரஜைகளுக்காக அல்ல.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //…ஆனால் யாரும் சதிராடகூடாது நாம் மட்டுமே கூத்தாட வேண்டும் என சொன்ன ஒரே அமைப்பு புலியல்லவா?…//
    ஆம்..கூத்தாடிய (ஈழத்துக்காக) அமைப்பு அவர்கள் மட்டுமே. மற்றவர்கள் வெறும் சதிராடியவர்கள். உ+ம்: நோட்டீஸ், படிப்பு, பாசரை, பின்தளம் …போன்ற பம்மாத்துகள்.

    //…? நான் எந்த அமைப்பையும் சார்ந்தவன் அல்ல; எல்லா அமைப்பிடமும் பாகுபாடின்றி பலதடவை பரிசுகள் வாங்கியவன் சாந்தன்;…//
    நான் புளொட்டைச் சேர்ந்தவன். அவ்வமைப்புக்காக பல தடவை நோடீஸ் வினியோகம், சுவரொட்டி எழுத்துதல், வெளியூர் (திருகோணமலை) ஆட்களுக்கு பயிற்சிக்கு போகுமுன்னர் இரகசிய தங்குமிட வசதி ,புலிகள் பற்றியும் அவர்களின் ‘அரசியல் ஞானம்’ பற்றியும் குறை சொல்லல், உணவு (பாணும் பட்டரும்) கொடுத்து படகுக்கு போகும்வரை உதவி செய்தல்,போன்ற இனோரன்ன வேலைகள் செய்து …. பலதடவைகள் புலிகளிடம் இருந்து புளொட்டை நம்பவேண்டாம் என ஆலோசனை வழங்கப்பட்டு நம்பாமல் இறுதியில் ஒரத்த நாட்டில் ‘காலம் கடந்த ஞானம்’ வந்தவன் பல்லி!!

    Reply
  • thurai
    thurai

    //ஆம்..கூத்தாடிய (ஈழத்துக்காக) அமைப்பு அவர்கள் மட்டுமே. மற்றவர்கள் வெறும் சதிராடியவர்கள். உ+ம்: நோட்டீஸ், படிப்பு, பாசரை, பின்தளம் …போன்ற பம்மாத்துகள்.//சாந்தன்

    1)சிங்களராணுவத்தை தமிழ்ப் பகுதிகளிலிருந்து அடித்துத் துரத்தினால் ஈழம் கிடைத்துவிடும்.
    2)இவ்வாறு போர்நடக்கும் போது தமிழரின் உயிர் அழிவுகழும் சகோதரக் கொலைகழும் சாதாரண விடயம்.
    3)எங்க்ளிற்கு ஒரு நாடும் உதவத்தேவையில்லை எல்லாம் தலைவர் பார்ப்பார்.
    மேற்கூறிய விடய்ங்களை எதிர்தவர்க்ழும் தவறென சுட்டிகாட்டியவர்க்ழுமே புலிகளிற்குத் துரோகிகள்.

    புலிகள் காட்டிய தமிழீழம் வேண்டாம், தம்பியை ஆவது காட்டுங்கள் தமிழர்களிற்கு. 30 வருடமாக ஈழம் காட்டியது போல இப்போது தம்பி வருவார், வருவாரென சொல்லுங்கோ. முள்ளிவாய்க்காலில் பலி கொடுத்தது தம்பியையும் புலிகளையும் காப்பதற்கேயன்றி, புலிகளிற்கும் தமிழரின் விடுதலைக்கும் ஒரு சம்பந்தமுமில்லை. இதனை ஏற்காத தமிழன் தமிழனுமல்ல.

    துரை

    Reply
  • palli
    palli

    //வெறும் சதிராடியவர்கள். உ+ம்: நோட்டீஸ், படிப்பு, பாசரை, பின்தளம் …போன்ற பம்மாத்துகள்.//
    ஆக கெடுதல் இல்லாமல் கெடுதல் செய்தார்கள் என்பது உங்களது உத்தரவாதம்; (ஆயுதம் இல்லாமல்) ஆனால் புலியோ அது செய்து; இது செய்து, சின்னதை பெரிதாக்கி குட்டையை குளமாக்கி, ஆகாயத்தில் பட்டம் விட்டு; பலதடவை ஏச்சுவார்த்தை; கரும்புலி; வெறும்புலி, கடல் புலி, பொட்டர்புலி; உளவுபடை, குரங்குபடை; இறும்படை வியாபாரபடை , விண்வெளியிலும் படை; அதுமட்டுமா புலம் பெயர்தேசத்திலும் வட்டம், மாவட்டம், நிதி, கலை; கொலை இப்படி சொல்லி கொண்டே போகலாம்; இத்தனையை வைத்தும் இறுதியில் வீதிவரை போராடி(மக்கள்) 30வருடத்தை வீண் ஆக்கியததை விட நீங்க சொன்ன படிப்பு சாப்பாடு சங்கீதம் பரவாயில்லை என பல்லி சொன்னால் ஏற்றுகொள்வீர்களா?

    //நான் புளொட்டைச் சேர்ந்தவன்.:://
    ஆனாலும் புலியை ஆதரிப்பவன் என சொல்லுவது புரிகிறது;

    //அவ்வமைப்புக்காக பல தடவை நோடீஸ் வினியோகம், சுவரொட்டி எழுத்துதல், வெளியூர் (திருகோணமலை) ஆட்களுக்கு பயிற்சிக்கு போகுமுன்னர் இரகசிய தங்குமிட வசதி//
    இது நல்ல விடயம்தானே இதுக்காக ஏன் வெக்கபடுறியள்;

    //,புலிகள் பற்றியும் அவர்களின் ‘அரசியல் ஞானம்’ பற்றியும் குறை சொல்லல், //
    அந்த அனுபவம்தான் புலிதவிர்ந்த ஏனையோரை இப்போது துதி பாடுறியள், பளக்க தோஸம் பரவாயில்லை;

    //உணவு (பாணும் பட்டரும்) கொடுத்து படகுக்கு போகும்வரை உதவி செய்தல்,//
    மீண்டும் மனிதனேயம் பாராட்டுக்கள்.

    //பலதடவைகள் புலிகளிடம் இருந்து புளொட்டை நம்பவேண்டாம் என ஆலோசனை வழங்கப்பட்டு //
    இது நம்பமுடியவில்லை; புலிக்கு ஆலோசனை சொல்லும் பளக்கம் இருந்ததாய் நான் அறியவில்லை; ஒரே தீர்ப்பு மட்டுமே; ஆக நீங்கள் புலியின் ஆலோசனையில் கழகத்தில் இனைந்தீர்களோ என மாயா கேக்ககூடும்; அதுக்கான பதிலை ரெடி செய்யுங்கள்;

    //இறுதியில் ஒரத்த நாட்டில் ‘காலம் கடந்த ஞானம்’ //
    அதனால் இன்று வாழ்வு அதுவும் புலம்பெயர் தேசத்தில்; இதே புலிக்கு போயிருந்தால் எப்பவோ மாவீரர் என வந்திருக்கும்; ஆனால் இன்று நடக்கும் அவமானங்கள் அல்லது புலியின் அழிவு உங்களுக்கு தெரியாமல் ஈழம் கிடைக்கும், தலவர் வேண்டி கொடுப்பார் என்னும் கனவில் துயில் தூங்கி இருப்பியள். அதுக்கும் வாய்ப்பில்லாமல் மகிந்தா கல்லறைகளையும் கிளறி விட்டார், ஆகவே நீங்கள் இந்த அபாயத்தில் இருந்து காப்பாற்றிய கழகத்துக்கு ஒரு நன்றி சொல்லுங்கோ தப்பே இல்லை; சாந்தன் இது உங்களை கடுப்பு ஏற்ற எழுதவில்லை; ஆயிரகணக்கான சாந்தன்கள் மாற்று அமைப்பை சேர்ந்தவர்கள் விடுதலை என்பது தறுதலைகள் ஆக்கிரமிப்பு என தெரிந்தபின் மக்களாக வாழ்கிறார்கள், ஆனால் நீங்கள் ஏன் இன்னும் புலியை புலியை;;;;;

    Reply
  • thurai
    thurai

    //புலிகளிடம் இருந்து புளொட்டை நம்பவேண்டாம் என ஆலோசனை வழங்கப்பட்டு நம்பாமல் இறுதியில் ஒரத்த நாட்டில் ‘காலம் கடந்த ஞானம்’ வந்தவன் //சாந்தன்

    காலம் கடந்த ஞானமும், நாடுகடந்த அரசாங்கமும்.

    வன்னியில் புலிகள் செய்த அரசாங்கம்போல் தான் புலம்பெயர்நாடுகளில் சிற்ரரசர்களாக புலியின் பிரமுகர்கள் வாழ்வார்கள். இவர்களிற்கு வரிகள் தெரிவு செய்யும் புலம்பெயர் மக்களே செலுத்த வேண்டும், இவர்கள் தங்களிற்கென்று வங்கிகள், நாடாழுமன்றங்கள், அமைப்பார்கள்.

    தலைவரின் மதிவியூகம் புலத்தில் ஆரம்பிக்கின்றது. புலம்பெயர் வாழ்தமிழ் மக்களே உங்கள் பிள்ளைகளை வீதீ மறிப்பு, உண்ணாவிரதம்,தீக்குழிப்பு போன்ற தலைவரின் கட்டளைகளை நிறைவேற்ர ஆயத்தப்படுத்துங்கள்.

    துரை

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    ///….அதுக்கும் வாய்ப்பில்லாமல் மகிந்தா கல்லறைகளையும் கிளறி விட்டார்….//
    நற்பண்பு! நல்லாட்சி..மனிதநேயம். இதேபோல ஒரத்த நாட்டிலும் வேதாரணியம் கடற்கரையிலும் ’மனிதநேயவாத’ ஜநாதிபதிகள் இல்லை என நம்புவோமாக.
    //….ஆயிரகணக்கான சாந்தன்கள் மாற்று அமைப்பை சேர்ந்தவர்கள் விடுதலை என்பது தறுதலைகள் ஆக்கிரமிப்பு என தெரிந்தபின் மக்களாக வாழ்கிறார்கள், ஆனால் நீங்கள் ஏன் இன்னும் புலியை புலியை;;;;;…//
    மக்களாக வாழ்பவர்களைப்பற்றி சொல்ல ஒன்றுமில்லை. இன்னும் ‘புலிக்காய்ச்சலில்’ இருப்பவர்கள் பற்றித்தான் எனது பிரச்சினை. நீங்களே இன்னொரு களத்தில் ‘புலிமீது உள்ள கோபத்தால் கண்டு கொள்ளாமல் இருக்கிறோம்’ என ஒத்துக்கொண்டிருந்தீர்களே, இல்லையா? ஏன் அதிகம் கல்லறைகளைக் கிளறுவதைக்கூட எப்படி விமர்சிக்கிறீர்கள் பாருங்கள். உங்கள் சகோதரர்கள் என்றால் இவ்வளவு நளினம் வருமா உங்கள் வாயால். இறந்தவர்கள் ஏன் இறந்தனர் எனச் சிந்திக்காமல் நளினம் பேசுவோருக்கு (நம்மட சித்தார்த்தன் கோஷ்டி, சங்கரி கோஷ்டி) கடந்த இலக்சனில் என்ன நடந்தது தெரிந்ததே!! என்னை நீங்கள் கடுப்பேற்ற முடியாது, அதற்கான தேவையுமில்லை. ஆனால் நீங்கள் செய்வதெல்லாம் உங்களின் மனவக்கிரத்தைக் சந்தியில் கொட்டுகிறீர்கள் அவ்வளவுதான்!

    Reply
  • palli
    palli

    //ஏன் அதிகம் கல்லறைகளைக் கிளறுவதைக்கூட எப்படி விமர்சிக்கிறீர்கள் பாருங்கள். உங்கள் சகோதரர்கள் என்றால் இவ்வளவு நளினம் வருமா //
    நான் கல்லறைகளை விமர்சிக்கவில்லை, விமர்சிக்கவும் மாட்டேன், இறந்தவர்களை விமர்சிக்கும் பண்பு என்னிடம் இல்லை; இதில் நளினம் என்பது கிளறுவதுதான்; அதை யார் செய்கிறார்கள் என்பதுதான் எனது சொல்பதம்; அது உங்களை காயபடுத்தியிருந்தால் மன்னிக்கவும்; நான் என்றுமே அரசையும் விமர்சிக்க தவறியதில்லை; தவறு யார் விட்டாலும் தவறு தவறுதான்;

    //இன்னும் ‘புலிக்காய்ச்சலில்’ இருப்பவர்கள் பற்றித்தான் எனது பிரச்சினை. //
    இதை புலியின் தவறுகளையும் விமர்சித்து அவர்களையும் விமர்சிக்கலாமே, புலிக்கு பொன்னாடை மாற்றுகருத்தாளருக்கு?? ஏன் இந்த பொறுப்பற்ற தனம், உங்கள் சகோதரம் ஒன்று புலியால் கொல்லபட்டால் உங்கள் நிலை என்ன??

    // ‘புலிமீது உள்ள கோபத்தால் கண்டு கொள்ளாமல் இருக்கிறோம்’ என ஒத்துக்கொண்டிருந்தீர்களே, இல்லையா?//
    உன்மைதான் அவைகூட உங்கள் போல் புலிமட்டுமே தெய்வம் என பாடுவதால் தங்களை நியாயபடுத்துவதை மறுக்க முடயவில்லை என்பதும் என் கவலை;

    //உங்களின் மனவக்கிரத்தைக் சந்தியில் கொட்டுகிறீர்கள் அவ்வளவுதான்!//
    இது உங்கள் ஏலாமை; பரமேஸ்வரனின் கம்பேக்கர் கட்டுரையில் அவருக்கு சாதகமாக எனது பின்னோட்டங்கள் இருந்ததை சாந்தன் கவனிக்கவில்லையா, அதில் நான் பலருடன் மல்லுகட்டினேன், தேச நிர்வாகத்துடன் கூட; எனது மன அழுத்தம் அனைத்தும் தலமைகள் மீதுதான்; வழி நடத்த தவறிய தலமைமீதுதான்,

    //. இறந்தவர்கள் ஏன் இறந்தனர் எனச் சிந்திக்காமல் நளினம் பேசுவோருக்கு (நம்மட சித்தார்த்தன் கோஷ்டி, சங்கரி கோஷ்டி) கடந்த இலக்சனில் என்ன நடந்தது தெரிந்ததே!! //
    இதில்கூட புலி ஆதரவாளர்களை கைவிட்டு விட்டீர்களே, சம்பந்தர் புலியை கைவிட்டபடியால்தான் தாம் வெற்றி பெற்றதாக முனுமுனுப்பது சாந்தனுக்கு கேக்கவில்லையா??

    Reply
  • jaambavan
    jaambavan

    there are so many groups took arms aginst the southern rulers,who they are? is they for real freedom strugle? no.. who are they? how many affected by education due to educational system? mostly are jobless not because of rasial, they dont have the qualification to get a job, even prapakaran. uma maheswaran was an employed in survey department. each and every seven people did house breaking ,cattle thiefs named a group.. but a commen word they use eelam. what a shame. what they did to the people. nobody is perfect,now all people accuse LTTE, is LTTE a commen enemy to the tamils. when prapakaran killed, ltte was ditroyed. so other grops thinks now our problem is finished and we can live peacefull. is that the verdict of this groups?.. then the poor civilians must chase this unwanted devils from the community.

    Reply
  • மாயா
    மாயா

    பல்லி நினைப்பது போல, புலிகளின் ஊடுருவலாக சாந்தன் புளொட்டுக்குள் நுழைந்திருக்ககலலாம். சாந்தனின் நல்ல காலம், புளொட்டுக்குள் ஊடுருவியதால், சாந்தன் இன்னும் உயிரோடிருக்கிறார். இல்லையென்றால் நவம்பர் மாதத்தில் வெளியாகும் போட்டோவுக்கு முன்னால் விளக்கு கொழுத்தியிருப்பார்கள். இல்லாவிட்டால் , துரோகி என்று தட்டியாவது இருப்பார்கள்.

    ஏனைய இயக்கங்களில் இருந்த பலர், புலத்தில் புலியானதையும் நாம் மறக்கலாகாது. அவர்களைப் போன்றோர் இருந்ததால்தான் போராட்டம் புண்ணாக்காகியது. புலிக்கும் பெப்பே காட்டியவர்கள் இவர்கள்தான். புலத்து தலைகளின் தலைகளை தடவிப் பாருங்கள், உண்மை புரியும். தலைவருக்கு எல்லாம் தெரியும் என்று சொன்ன, அந்த தேசிய தலைவரையே ” அமெரிக்கா வரும்” என்று ஏமாற்றினார்கள் என்றால் பாருங்களேன்?

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //…பல்லி நினைப்பது போல, புலிகளின் ஊடுருவலாக சாந்தன் புளொட்டுக்குள் நுழைந்திருக்ககலலாம்….//
    நல்ல ஜோக் ! புளொட்டுக்குள் ‘ஊடுருவல்’ வேறு செய்யவேண்டுமா? ரோட்டில் நின்ற ஆட்கலை எல்லாம் படகில் இடமிருக்கு என ஏத்தி அனுப்பின இயக்கம் அது. இதுக்குள் ஏன் கஷ்டப்பட்டு ‘ஊடுருவ’ வேண்டும்?

    //……ஏனைய இயக்கங்களில் இருந்த பலர், புலத்தில் புலியானதையும் நாம் மறக்கலாகாது. அவர்களைப் போன்றோர் இருந்ததால்தான் போராட்டம் புண்ணாக்காகியது…..//
    ஏனைய இயக்க ஆட்கள் ‘தகுதியற்றவர்கள்’ அவர்களை அனைத்துச் சென்றதற்கு கொடுத்த விலை என்ன என சுட்டிக்காட்டியதற்கு நன்றி!

    Reply
  • மாயா
    மாயா

    //நல்ல ஜோக் ! புளொட்டுக்குள் ‘ஊடுருவல்’ வேறு செய்யவேண்டுமா? ரோட்டில் நின்ற ஆட்கலை எல்லாம் படகில் இடமிருக்கு என ஏத்தி அனுப்பின இயக்கம் அது. இதுக்குள் ஏன் கஷ்டப்பட்டு ‘ஊடுருவ’ வேண்டும்? //

    படகில் போனவர்கள் தப்பி விட்டார்கள். அமெரிக்காவின் படகுக்காக காத்திருந்தவர்கள் , முள்ளிவாய்க்காலி்ல் என்ன ஆனார்கள்? இதுவும் ஜோக்குதான்.

    //ஏனைய இயக்க ஆட்கள் ‘தகுதியற்றவர்கள்’ அவர்களை அனைத்துச் சென்றதற்கு கொடுத்த விலை என்ன என சுட்டிக்காட்டியதற்கு நன்றி!//

    ஏனைய இயக்கத்தவர்கள் அனைவரும் தகுதியற்றவர்கள் இல்லை. புலிகளோடு சோர்ந்து வேலை செய்த ஏனைய இயக்கத்தவர்களே தகுதியற்றவர்கள். அவர்களை வைத்துத்தானே ரேடியோ, டீவி , கோயில்கள் , காசு சேர்த்தல் , வியூகம் அமைத்தல், ராஜதந்திரம் ஆகியவற்றை புலத்து புலிகள் மட்டுமல்ல, களத்துப் புலிகளும் நடத்தினார்கள். தனக்கு புத்தியிருந்தால் ஏன் அடுத்தவன் புத்தியை நம்புவான்? களத்தில் புலிகளாக பயிற்சி பெற்று , புலிகளையே அளித்த பலரில் அரசு சார்பு ஓருவரை அண்மையில் சந்திக்க முடிந்தது. கதை கதையாக அளந்தார். புலிகளின் ஓட்டைகள் , புலத்து புண்ணாக்குகளுக்கு மட்டுமென்ன புலிகளுக்கே விளங்கியது கிளிநொச்சி பறி போன போதுதானாம்? மிஞ்சி இருப்போரையாவது நிம்மதியாக வாழ விட்டால் போதும். அதை புலத்து புலிகள் செய்தால் அதுவே புண்ணியம்.

    Reply
  • PALLI
    PALLI

    //நல்ல ஜோக் ! //மாயா /சாந்தன்;
    இரண்டுமே அதுதான்(ஜோக்) ஆனால் முன்னயது எதிர்பார்த்தது (புலி) யாருமே எதிர்பார்க்காதது (மாயா)

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //….படகில் போனவர்கள் தப்பி விட்டார்கள். …..//
    ஒரத்தநாடு, மாலைதீவுக்கெல்லாம் நடந்தா போனீர்கள்?

    Reply
  • மாயா
    மாயா

    //PALLI on April 17, 2010 1:40 pm //நல்ல ஜோக் ! //மாயா /சாந்தன்;
    இரண்டுமே அதுதான்(ஜோக்) ஆனால் முன்னயது எதிர்பார்த்தது (புலி) யாருமே எதிர்பார்க்காதது (மாயா)//

    இந்த இரண்டு ஜோக்கிலும் புளொட்டின் சாந்தன் போன்றவர்களால் புலிகளுக்கு ஆப்பு வைக்கப்பட்டது என்பதை உணர முடிந்தது என்பதில் மட்டுமல்ல, அதை ஏற்றுக் கொள்ள சாந்தனாலேயே //“ஏனைய இயக்க ஆட்கள் ‘தகுதியற்றவர்கள்’ அவர்களை அனைத்துச் சென்றதற்கு கொடுத்த விலை என்ன என சுட்டிக்காட்டியதற்கு நன்றி!- சாந்தன்//” என சாந்தனால் தன் முகத்தை தானே கண்ணாடியில் பார்க்க முடிந்ததற்கும் நன்றி.

    நீங்கள் புலியிலிருந்து புளொட்டுக்குள் ஊடுருவி இருந்தாலும், புளொட்டிலிருந்து புலிக்கு தாவியிருந்தாலும் எல்லாமே ஒன்றுதான் சாந்தன். இயக்கம் என்பது அரசியல் அல்ல. அவை கொள்கை அடிப்படையிலானது. என்னைப் போன்ற பல உண்மையான புளொட் தோழர்கள் புளொட்டை விட்டு பிரிந்தாலும், வேறு எந்த இயக்கத்துக்கும் போகாமல் தனித்து வாழ்கிறார்கள். அதற்கு காரணம் உண்மையான புளொட் சித்தாந்தம் வேறு. அதை உண்மையானவர்களால் மட்டுமே உணர முடியும். புலிகளின் நியாயமான விடயங்களை புளொட் தோழர்கள் ஆதரித்து மெளனம் காத்தார்கள். ஆனால் புளொட்டைப் போலவே புலிகளையும், ஏனைய இயக்கங்களின் தவறுகளையும் விமர்சித்தே வந்துள்ளார்கள். நான் மகிந்தவை ஆதரிப்பது கூட, அந்த மக்களுக்கு இதை விட வேறு விமோசனம் இல்லை என்பதாலும், இவரால் முடியாவிட்டால் இனி எவராலும் முடியாதென்பதாலும்தான். இதை இன்று உணராத தமிழர்கள், இலங்கை தமிழர்களுக்கு இன்னொரு முள்ளிவாய்க்காலை காட்டுபவர்களாகவே இருப்பார்கள்.

    புலிகள் சார்ந்து நின்ற உதயன் கூட இராணுவம் , தமிழர்களுக்கு உதவுகிறது என எழுதி, அங்கும் விசம் தடவியுள்ளது.

    //படையினர்தான் தாம் செய்த பாவங்களுக்கு பரிகாரம் தேடுகின்றார்களா? – பூமுகன்
    http://www.yarl.com/forum3/index.php?showtopic=71039 //
    இந்த வட்டுக் கோட்டை மற்றும் நாடு கடந்த தமிழீழ தேர்தல் ஆகியவை குறித்து பிரபாகரனின் அண்ணன் கருத்தை கீழே இணைக்கிறேன். அவரே இவற்றை ஆதரிக்காத போது சிலர் காசு பார்க்கவே இதைச் செய்கிறார்கள் என்று புரிகிறதா? இவர்களில் சாந்தன் போன்றவர்களும் அடங்கலாம்.

    //கேள்வி: வட்டுக்கோட்டைத் தீர்மானம் வாக்கெடுப்பில் உள்ளதே..

    மனோகரன்: வட்டுக்கோட்டைத் தீர்மானம் என்பது அன்றைய தமிழர் கூட்டணியினரால் எழுதப்பட்ட ஒரு காகிதத் தீர்மானம். அதனடிப்படையில் தாயகத்தில் ஒரு தேர்தலும் நடைபெற்று முடிந்துவிட்டது. ஆனால் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில் இருந்ததைவிட சிறந்த தமிழீழ அரசை பிரபாகரன் உருவாக்கி முடித்திருந்தார். கடற்படை, ஆகாயப்படை, போலீஸ்பிரிவு, வங்கித்துறை, தரைப்படை, தமிழீழ நிர்வாகம் என்று சட்டம் – நீதி- நிர்வாகம் ஆகிய மூன்றையும் உள்ளடக்கிய சட்டவாட்சியை வள்ளுவர் காட்டிய நெறியோடு வரையறை செய்து வழங்கிவிட்டார். உலகிற்கே ஒரு முன்மாதிரியான தேசத்தை உருவாக்கி சாதனையும் படைத்துவிட்டார். அதைத்தான் நீங்கள் எல்லோரும் வன்னியில் கண்கூடாக பார்த்துவிட்டீர்கள். தென்னை மரத்தில் ஏறி வட்டுவரை சென்றுவிட்ட ஒருவன் அதிலிருந்து கீழே இறங்கி என்னால் தென்னையின் வட்டுக்கொள்ள முடியுமா என்று கேட்டு வாக்கெடுப்பு வைத்தால் எப்படியிருக்கும் ? இப்படியொரு கேள்விக்கு பதில் ஒன்று தேவையா? இதற்கு பதில் கூறத்தேவையில்லை. சில கேள்விகளுக்கு மேல் வைக்கப்படும் கேள்விகளே அதற்குரிய பதில்களாக அமையும் இதுவும் அந்தவகை சார்ந்ததே.

    கேள்வி: அப்படியானால் இப்போது நாடுகடந்த தமழீழஅரசு என்ற இன்னொன்று வருகிறது.. அதுபற்றி என்ன கூறுகிறீர்கள் ?

    மனோகரன்: நமது நாட்டில் இப்போது உங்கள் வீட்டை நீங்களே போய் பார்க்க வேண்டுமானால் உங்கள் வீட்டுக்கான உறுதியைக் கொண்டு போக வேண்டும். ஆளில்லாமல் கிடக்கும் உங்கள் வீட்டை நீங்களே பார்க்க உறுதி வேண்டும்.. மறந்துவிடாதீர்கள் வாழ்வதற்கல்ல ஒரு தடவை பார்ப்பதற்கு.. உறுதி இல்லாவிட்டால் உங்களை உங்கள் வீட்டிற்கே இராணுவம் அனுமதிக்க முடியாத நிலை இருக்கிறது. பிரபாகரன் வாழ்ந்த வீட்டை சிங்கள மக்கள் பார்ப்பதால் அது இடிக்கப்படுகிறது.. அதற்கும் உறுதி வேண்டுமோ என்னவோ.. ( சிரிப்பு ) நமக்கு உரிமை எங்கே இருக்க வேண்டும் எம் தாயகத்தில்.. வெளிநாடுகளில் வாழ்வோருக்கு சட்டரீதியான வாழ்வியல் உரிமை இருக்கிறது.. ஆனால் நமது தாயகத்தில் சொந்த வீட்டுக்கே போக உரிமையற்று மக்கள் முகாமில் இருக்கிறார்கள். இப்படியான யதார்த்த நிலை இருக்கிறது.. இந்நிலையில் நாடுகடந்த அரசால் சொந்த வீடு கடந்து போவதற்காவது ஓர் உரிமையை பெற்றுத்தர முடியுமா? பிரபாகரன் வெளிநாட்டில் ஓர் அரசை அமைக்கவா போராடினார்.. நாடுகடந்த அரசுபற்றிய கேள்விக்கும் பதிலாக கேள்விகளையே வைக்க முடியும் என்பதை நீங்கள் இப்போது புரிந்திருப்பீர்கள்.. இவைகள் இரண்டும் பிரபாகரன் சொன்ன பாதைகளா என்பதை பிரபாகரன் நேசித்த மக்கள் தீர்மானிப்பார்கள். நாம் பதில் கூற வேண்டிய தேவை இல்லை – தமிழ்வின்//

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //….வேறு எந்த இயக்கத்துக்கும் போகாமல் தனித்து வாழ்கிறார்கள். அதற்கு காரணம் உண்மையான புளொட் சித்தாந்தம் வேறு…….//
    //…. …. நான் மகிந்தவை ஆதரிப்பது கூட, அந்த மக்களுக்கு இதை விட வேறு விமோசனம் இல்லை என்பதாலும், …..///

    வேறு இயக்கத்துக்கு போகமாட்டீர்கள். ஆனால் மஹிந்தாவிடம் போவீர்கள். மஹிந்தாவும் நீங்கள் சொன்னதுபோல் தனது குடும்ப ‘இயக்கத்தை’ ‘ஊடுருவி’ அழிக்கப்போகிறீர்கள் என நினைக்கப்போகிறார், கவனம்.

    //…இவரால் முடியாவிட்டால் இனி எவராலும் முடியாதென்பதாலும்தான்….//
    இப்படி ஒரு ஸ்ரேற்மன்ரை (ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும்) தந்தை செல்வாவும் விட்டார். அதை சிரமேற்கொண்டு ஆரம்பிக்கப்பட்டவைதான் இயக்கங்கள். நீங்களும் ஒரு முள்ளிவாய்க்காலுக்கு வழிகாட்டுகிறீர்கள் போல் இருக்கிறது.

    Reply
  • palli
    palli

    மாயாவின் கருத்தில் நான் உடன்படுகிறென், காரனம் புலி இருக்கும்போது வேறு அமைப்புக்கு போனவர்கள் (கொள்கை என சொல்லி) அந்த அமைப்புகள் தவறு விட்டபோது எதுவும் வேண்டாம் என மாயாபோல் போவதுதானே நியாயம்; ஆனால் சாந்தன் போன்றோர் ஓடும் குதிரைமேல் சவாரி செய்வது சரியல்ல, அதனால்தான் குதிரையும் ஓட்டியும் குப்பற விழுந்து விட்டார்கள், சாந்தன் நீங்கள் புளொட் சரியில்லை என்பது நியாயம்; ஆனால் அதனால் புலிக்கு ஆதரவு எப்படி?

    Reply
  • மாயா
    மாயா

    சாந்தன், நான் மகிந்தவை ஆதரிக்கிறேன் எனும் போது உங்களுக்கு வரும் கோபம் , ஞானம்,……எல்லாம் , அன்று பிரபாகரன் மாவீரர் உரையில் , மகிந்த யதார்த்தவாதி என்ற போதும் வரவில்லை. ரணிலுக்கு வாக்களிக்காமல் தமிழரைத் தடுத்த போதும் உங்களுக்கு வரவிலலை. எனவே நான் மகிந்தவின் நல்ல கொள்கைகளை வரவேற்கிறேனே தவிர, மகிந்த கட்சியில் இல்லை.

    நான் முள்ளிவாய்க்காலுக்கு வழி காட்டவில்லை. அங்கிருந்து மீண்டவர்களுக்கு வாழ்வு கிடைக்க வேண்டும் என நினைக்கிறேன்.

    அரசு செய்யும் உதவியில் 1 சத உதவியைக் கூட புலத்து புலிக் கொள்ளையர்கள் செய்யவில்லை. செய்யப் போவதுமில்லை. அங்கே யாரையாவது பலியாக்கி , தம் வயிற்றை வளர்க்கவே புலத்து புலிகள் முயல்கிறார்கள்.

    புலி ஆதரவாளர்கள் பலர் , இப்போது செய்திகளை படிப்பதேயில்லை. அதற்கு சொல்லும் காரணம், ஒரு நியூஸும் இல்லையாம். அப்படியென்றால் என்று கேட்டால் வரும் பதில், எவரும் சாகவில்லையாம்.

    ஒன்று சிங்களவன் சாக வேணும் , இல்லையென்றால் தமிழன் சாக வேண்டுமாம். இதை தொடர்ந்து படித்து இன்புற வேண்டும். என்ன கூத்து? இது ஒரு மன நோய். இந்த மனநோய் , மகிந்தவால் குறைக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் முற்றிலும் குணமாகும்.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //….சாந்தன் நீங்கள் புளொட் சரியில்லை என்பது நியாயம்; ஆனால் அதனால் புலிக்கு ஆதரவு எப்படி?….//

    நானும் ஏறக்குறைய 10 வருடங்கள்(1986-1995) விலகி இருந்துவிட்டு புளொட்டுடன் சேர்ந்து செய்த அரசியல் ‘பாவங்களை’ கழுவ புலிகளுக்கு ஆதரவு அளித்தேன். எனது ‘கதைகள்’ எத்தனை பேரை ஒரத்தநாடு சேர்த்திருக்கும் என எண்ணி வேதனை அடைகிறேன். இதற்காக எனக்கு பிராயச்சித்தெமே கிடையாது என்பதில் தெளிவாகவும் இருக்கிறேன்.
    நீங்கள் சொல்வது போல ‘ஓடும் குதிரை’ மேல் சவாரி செய்ய நினைத்திருந்தால் முதலில் புலியிடம் போயிருப்பேன் (எமது பகுதியில் புலிகளே பிரபல்யம்).

    Reply
  • sumi
    sumi

    நாட்டில் மூன்றாவது அரசியல் கட்சியென தம்பட்டமடிக்கும் இவர்கள், நாளை ராஜபக்செயின் ஆட்சிக்கு மூன்றில் இரண்டு பெரும் பான்மைக்கு ஒரு ஆசனம்தான் தேவை எவராவது வந்தால் பெரும் தொகைப்பணமும் சகல சலுகைகளும் தருவோம் என்று அரசு அறிவித்தால் நிலமை எப்படி இருக்கும், இதில் முந்திக்கொண்டு ஓடுபவர் யாராக இருக்கும் என்று சிறிது கற்பனை செய்துதான் பாருங்களேன். முதலில் ஓடுவது இந்த வாய்ச்சொல் வீரராகத்தான் இருக்கும். மக்களுக்கு நன்மை செய்வதற்கு மந்திரியாக வேண்டிய அவசியமில்லை. நல்ல மனிதனாக இருந்தாலே போதும். அன்னை தெரெசா என்ன அரசியல் வாதியாகவா இருந்தார்.??

    Reply
  • BC
    BC

    புலிக்கு பதிலாக புளொட் இருந்தாலும் முள்ளிவாய்க்காலை தான் காட்டியிருக்கும்.
    ஆனால் மாயாவின் கருத்துக்கள் மக்களுக்கு இழப்புகளையும் அழிவுகளையும் ஏற்படுத்துவதற்க்கு எதிரானதாக மக்கள் நல்வாழ்வை நோக்கியதாக இருந்தன. முள்ளிவாய்க்காலுக்கு எதிரான வழி.

    Reply
  • palli
    palli

    //10 வருடங்கள்(1986-1995) விலகி இருந்துவிட்டு புளொட்டுடன் சேர்ந்து செய்த அரசியல் ‘பாவங்களை’ கழுவ புலிகளுக்கு ஆதரவு அளித்தேன்//
    மாடு வெட்டுவது பாவம் என்பதால் அந்த மாடு வெட்டியவனை பாவம் தீர்க்க வெட்டுவது போல் இல்லையா உங்கள் வாதம்;

    //எனது ‘கதைகள்’ எத்தனை பேரை ஒரத்தநாடு சேர்த்திருக்கும் என எண்ணி வேதனை அடைகிறேன்.//
    மகிழ்ச்சி அடையுங்கள் அதில் பலர் இன்று எதோ ஒருநாட்டில் வாழ்வார்கள்; ஆனால் அதன் பின் நீங்கள் பாவம் கழிய கொடுத்த ஆதரவால் எத்தனை பேர் இன்று சிறு வயதிலே கல்லறையில் என்பது தெரியுமா??

    // இதற்காக எனக்கு பிராயச்சித்தெமே கிடையாது என்பதில் தெளிவாகவும் இருக்கிறேன்.//
    யார் அப்படி சொன்னது மாயாபோல் மக்களை மட்டும் பாருங்கள் மகிந்தாவையோ மன்னவர்களை விட்டு, மக்களுக்காக எழுதுங்கள்; கஸ்ற்றமாகதான் இருக்கும்; ஆனால் அதை தொடர்ந்தால் அதைவிட மகிழ்ச்சி வேறு இருக்காது,

    ://நீங்கள் சொல்வது போல ‘ஓடும் குதிரை’ மேல் சவாரி செய்ய நினைத்திருந்தால் முதலில் புலியிடம் போயிருப்பேன் (எமது பகுதியில் புலிகளே பிரபல்யம்).//
    அதுதான் எனது கேள்வியும்;?? அன்று ஏன் போகவில்லை? இன்று ஏன் போனீர்கள்; அன்று புலிகள் ஓடும் குதிரையல்ல என்பது தெளிவு; ஆனால் இன்று அதே புலிகள் ஓடும் என நினைத்தது தெளிவின்மை;

    //(எமது பகுதியில் புலிகளே பிரபல்யம்).//
    எந்த பகுதியிலும் சகோதர உத்ததுக்கு முன்பு புலிகள் பிரபல்யம் என நான் அறியவில்லை, வல்வெட்டி உடபட, 1984;1985ல் அனைத்து இடங்களிலும் புளொட் அமைப்புதான் ஓடும் குதிரையாக இருந்தது, சில இடங்களில் ரெலோ; ஏதாவது ஒரு இடத்தை
    புலி இங்கே பிரபல்யம் என சுட்டி காட்டுங்கள்;

    Reply
  • palli
    palli

    //புலிக்கு பதிலாக புளொட் இருந்தாலும் முள்ளிவாய்க்காலை தான் காட்டியிருக்கும்.//
    இதில் எனக்கு உடன்பாடு இல்லை புளொட்டின் தலமை சரியில்லைதான், ஆனால் மாயா போன்ற பல இரண்டாம்கட்ட தலைவர்கள் இருந்தார்கள்? அதில் பலரை எனக்கு தெரியும்; இன்றும் எந்த பந்தாவும் இல்லாமல் தாமுண்டு தமது வேளையுண்டு என உள்ளனர், இதில் சிலர் பாலஸ்தீனத்தில் பயிற்ச்சி பெற்வர்கள் என்பது குறிப்பிடதக்கது; மற்றது புளொட் அமைப்பை அந்த அமைப்பினர்தான் தவறு என தெரிந்ததும் அதை அழித்தனர்; வேறு யாரும் அல்ல, அவர்களே விமர்சனம் செய்தனர் இயக்கத்தை விட்டு வெளியேறினர்; ஒருகாலத்தில் சின்னமெண்டிஸ் என்பவருக்கு புலி பயமாம்; ஆனால் அப்போதும் அவருடன் யாரும் பயப்பிடாமல் தமது பிரச்சனைகளை சொல்லலாமாம்; இது இதே தேசத்தில் படித்த செய்திதான்; ஆக புலியுடன் மற்றவர்களை மதிப்பீடு செய்வது சரியாக எனக்கு படவில்லை;

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //….அரசு செய்யும் உதவியில் 1 சத உதவியைக் கூட புலத்து புலிக் கொள்ளையர்கள் செய்யவில்லை. செய்யப் போவதுமில்லை. அங்கே யாரையாவது பலியாக்கி , தம் வயிற்றை வளர்க்கவே புலத்து புலிகள் முயல்கிறார்கள்….//

    பரவாயில்லை நீங்கள் தான் அவர்களைக் ‘கொள்ளையர்கள்’ எனச் சொல்லி விட்டீர்கள். அவர்களிடம் எதிர்பார்ப்பது தவறு. ஆனால் ஜனநாயக/ மாற்றுக்கருத்து ‘கொடைவள்ளல்கள்’ ஏதாவது கொடுத்திருக்கலாமே? ஓ..அதைத்தான் ஸ்ரீலங்கா அமைச்சர் ‘ஒரு ஐந்து சதம் கூட அனுப்பவில்லை’ புலம்பெயர்ந்தவர் எனச் சொன்னாரா? அத்துடன் நீங்கள் தானே சொன்னது ‘சோம்பேறிகள் என அமெரிக்கன் சொன்னான்’ என.

    //…..புலி ஆதரவாளர்கள் பலர் , இப்போது செய்திகளை படிப்பதேயில்லை. அதற்கு சொல்லும் காரணம், ஒரு நியூஸும் இல்லையாம். அப்படியென்றால் என்று கேட்டால் வரும் பதில், எவரும் சாகவில்லையாம்…..//
    ஏன் சாவகச்சேரி கொலை வழக்கில் பிடிஆணை பிறப்பித்தது கூட வர்கள் படிக்கவில்லையே. அவர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!

    Reply
  • மாயா
    மாயா

    //பரவாயில்லை நீங்கள் தான் அவர்களைக் ‘கொள்ளையர்கள்’ எனச் சொல்லி விட்டீர்கள். அவர்களிடம் எதிர்பார்ப்பது தவறு. ஆனால் ஜனநாயக/ மாற்றுக்கருத்து ‘கொடைவள்ளல்கள்’ ஏதாவது கொடுத்திருக்கலாமே? ஓ..அதைத்தான் ஸ்ரீலங்கா அமைச்சர் ‘ஒரு ஐந்து சதம் கூட அனுப்பவில்லை’ புலம்பெயர்ந்தவர் எனச் சொன்னாரா? அத்துடன் நீங்கள் தானே சொன்னது ‘சோம்பேறிகள் என அமெரிக்கன் சொன்னான்’ என.- சாந்தன் //

    ஏனையவர்களை தடுத்தது உங்களைப் போன்ற புலி தத்துவவாதிகள்தான். இன்றும் முள்ளிவாய்காலில் இருந்து மீண்ட மக்களுக்கு அனுதாபப்படுவதும் , ஆறுதலாக இருப்பதும் , உதவுவதும் , புலிகளால் பாதிக்கப்பட்ட இயக்கங்கள் அல்லது அரசு என்பதை , நாளை உங்களிடமே அந்த மக்கள் சொல்வார்கள். முகாம்களில் இருந்த அனைத்து புலித் தரகர்களையும் காட்டிக் கொடுத்ததும் , அடி போட்டதும் அதே மக்கள்தானே தவிர வேறு எவருமில்லை. புலத்து புலிகள் , முக்கியமான தலைகலை பணம் கொடுத்து முகாம்களில் இருந்து மீட்டதே தவிர வேறு எதைச் செய்தார்கள்?

    புலிகள் ஆயுதங்கள் வாங்க என மக்களிடம் இருந்து வாங்கிய பணத்திலிருந்து , கொஞ்சத்தையாவது அந்த மக்களது மறு வாழ்வுக்காக கொடுக்கலாம். ஏனைய அமைப்புகளோ அல்லது இயக்கங்களோ புலிகளின் அராஜக ஆட்சியின் போது எவரிடமும் பணம் சேர்க்கவில்லை. ஆக் குறைந்தது ஒரு கலை நிகழ்சியையாவது செய்ய விடவில்லை. அப்படி ஏதாவது நடந்திருந்தால் அதைக் குழப்பியது அல்லது அதே தினத்தில் மற்றொரு நிகழ்ச்சியை செய்து அதை சிதைத்தது போன்றவற்றைத்தான் செய்தார்கள். இதுதான் புலிகளது ஜனாநாயகம். ஜனநாயகம் பற்றிக் கதைக்கும் எந்த அருகதையும் புலிகளுக்கு இல்லை.

    விழந்தும் மீசையில் மண்படவில்லை என வாதிக்கும் சாந்தன் ஒரு நாள் திருந்துவார் என நம்புகிறேன். அதற்காகவாவது ஏதாவது தேசத்தில் எழுதுங்கள். ஆனால் மக்கள் தொடர்ந்து ஏமாற மாட்டார்கள்.

    புலிகளுக்குள் இன்று எத்தனை குத்துப்பாடுகள்? அதனூடாக வெளியாகும் தகவல்கள் சிந்திக்க வைக்கின்றன. இதோ மின் அஞ்சலில் வந்த ஒரு பகுதி:
    ———

    // காவாலித்தனமாய் இருந்து கரும்படைக் கழுத்தறுப்புச் செய்து புனிதர் திருவடுயை களங்கப்படுத்தாதீர்.?

    யாருடைதோ எடுபிடியாக அடியாளாக இயங்கும் உன்னிடம் கருத்துச் சுதந்திரமும் செயல் வீரமும் பற்றிப் பேசுவதும் அவற்றைப் புரிய வைப்பதும் நாயின் வாலை நிமிர்த்தும் செயல்தான். எனவே அதுபற்றிப் பேசுவதில் பயனில்லை. ஏதோ தலைவரும் உருத்திரகுமாரனும் பற்றிய பல அந்தரங்க விடையங்கள் தெரிந்தவன் போல் பேசுகிறீரே?

    நீவீர் என்ன தலைவரின் அந்தரங்கச் செயலாளரா?

    அல்லது அவருக்கே எமனாக முளைத்துக் கடைசிவரை உடனிருந்து காட்டிக் கொடுத்த தமிழனத்தின் துரோகியா?

    உன் சொல்லையும் செயலையும் கவனத்தில் கொள்ளும் எவரும் அப்படித்தான் நினைப்பர். எமக்கும் அப்படித் தெரிந்தால் வியப்பில்லையே!
    வெளியிருந்து கே.பி காட்டிக்கொடுத்து இயக்கத்தை அழித்தது உன்வாதமென்றால் உள்ளிருந்தே காஸ்ரோ இயக்கத்தைக் காட்டிக்கொடுத்தா முள்ளிவாய்காலில் முழு இயக்கத்தையும் அழிக்கத் துணிந்தார் என்று நாம் திருப்பிக்கேட்டால்? மன்னிக்கவும் இது உங்களுக்கு கோவம் வரும் என்பது எங்களுக்கு தெரியும் உங்கள் மனம் எப்படித்துடிக்கும் என்பதுவும், ஆனால் நாம் அப்படிக் கேட்க மாட்டோம். காரணம் விடுதலை விடுதலைக்காக வாழ்நாள் முழுவதும் தன்னை அர்ப்பணித்து அந்தப் புனிதனின் சத்தியத்தைக் களங்கப்படுத்தாதீர். இந்தக் குற்றச்சாட்டை உங்களிடம் நேரடியாய் உருத்திரகுமாரன் உட்பட பலருக்கு எதிரான அபாண்டமான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் கரும்படை வன்மம், அனைத்துலகத் தொடர்பகத்தின் நேரடியான கட்டுப்பாட்டில் இருந்து இயங்கும் அனைத்துலக தொடர்பகத்தின் வெளியீட்டு பிரிவின் மின்னஞ்சல் முகவரியிலிருந்து தான் எல்லோருக்கும் அனுப்பப்படுகிறது இது வேதனை தருவதனால் தான் இதை இங்கு நேரடியாக குறிப்பிடுவதோடு. மாவீரர் புகழ்பாடும் அனைத்துலகத் தொடர்பகத்தின் வெளியீட்டுப்பிரிவு இத்தகைய இழிவான காரியங்களில் ஈடுபடுவது வேதனையான ஒன்றே. இதுபற்றி நாங்கள் உரியவர்களிடம் முறையிட்டோம் அவர்கள் அதற்கு கூறிய கற்பிதங்கள் விசித்திரமானவை. எங்களுக்கும் பிழையான கருத்தூட்டல்கள் வருகின்றன நாங்கள் அவற்றுக்கு மதிப்பளிப்பதுமில்லை அதை மற்றவர்களுக்கு மறு வினியோகம் செய்வதுமில்லை. //

    Reply
  • மாயா
    மாயா

    //நோர்வேயில் இலங்கை தூதரகம் தாக்குதலில், குற்றஞ்சாட்டுள்ள எட்டு பேரில் ஒருவரைத் தவிர ஏழு பேருக்காக நீதிமன்றத்தில் வாதாடுவதற்காக இதுவரையில் எவரும் முன்வரவில்லை.//

    புலத்தில் , புலிகளால் உணர்ச்சி வசப்படுத்தப்பட்டு, மதி கெட்டு போன இவர்களுக்கு உதவக் கூட புலத்து புலிகளில் எவரும் முயற்சி செய்யவில்லை. இவை ஏனைய புலி அனுதாபிகளுக்கு பாடமாக அமையட்டும். இனியாவது உங்கள் வாழ்வை கெடுத்துக் கொள்ளாதீர்கள்.

    உங்களால் முடிந்தால், வன்னியில் உங்களுக்கு தெரிந்த , எவர் வழியாவது தெரிந்த, அறிந்த , உறவுகளில் எவருக்காவது, உங்களால் முடிந்த ஏதாவது வகையில் நேரடியாக உதவுங்கள். தொடர்ந்து புலி கோஸங்களில் மயங்கி ஏமாறாதீர்கள்.

    இந்த செய்தி உங்களுக்கும் ஒரு படிப்பினையாகலாம்:

    நோர்வேயில் இலங்கை தூதரகம் தாக்குதல்;8 தமிழர்களுக்கு எதிராக வழக்கு
    ————
    நோர்வே நாட்டிலுள்ள இலங்கைத் தூதரகத்தை கடந்த வருடம் தாக்கியமை தொடர்பில் எட்டு இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது. பிரசன்னா பற்குணம், அந்தோனி ஜோகானந்தன் தேவராஜ், கிருஷ்ணகுமார் தர்மலிங்கம், இன்பராஜா தேவராசா, சஜிந்தன் பார்வதிதாசன், விதுசன் சுரேஷ், ஜெஸ்வந் புஸ்பராஜா, கௌதம் கருணாகரன் ஆகியோருக்கு எதிராகவே வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இலங்கையில் கடந்த வருடம் இடம்பெற்ற யுத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது, நோர்வேயிலுள்ள இலங்கைத் தூதரகம் தாக்கப்பட்டிருந்தது. இவ்வாறு குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இந்த எட்டுப் பேரில் ஒருவர் நோர்வேயில் அரசியல் புகலிடம் கோரி விண்ணப்பித்துள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது. குற்றஞ்சாட்டுள்ள எட்டு பேரில் ஒருவரைத் தவிர ஏழு பேருக்காக நீதிமன்றத்தில் வாதாடுவதற்காக இதுவரையில் எவரும் முன்வரவில்லை. இதேவேளை, நோர்வேயிலுள்ள தமிழ்ச் சமூகம் இந்தத் தாக்குதலை கண்டித்திருப்பதுடன், இவர்களுக்கு ஆதரவளிப்பதிலிருந்து விலகிக் கொண்டுள்ளது. – தேனீ

    Reply
  • Naane
    Naane

    மாயா,சாந்தன்,பல்லி அந்தமாதிரி போகுது.
    80 இல் நடந்தவைக்கு இப்போது திருத்தம் செய்யமுடியாது.எல்லா இயக்கங்களுமே பெரிய அரசியல் தெளிவில்லாமல்தான் அந்த நேரம் இருந்தன அதுவும் முக்கியமாக இந்தியாவின் ஆளுமை எப்பேர்பட்டது என எவருக்கும் பெரிதாக தெரியாது.அதற்காக அவர்கள் செய்த கொலைகளை அதுவும் உட் கொலைகளை ஒருபோதும் மன்னிக்க முடியாது. ஆனால் ஓரளவிற்கு இயக்கங்கள் கொஞ்சம் தெளிவு பெறத்தொடங்கிய காலங்களில் எதிரி இலங்கையரசு என்பதை விடவும் புலிகள் என்றதாய் நிலமை போய்விட்டிருந்தது.இந்தியாவை வெட்டி ஓடுவதா? இலங்கையுடன் சண்டைபிடிப்பதா? இவை இரண்டையும் விட புலிகளிடமிருந்து தப்புவதா என்றநிலமை உருவாகியிருந்தது.புலி இதற்குள் எல்லோரிலும் கைவைத்து 86 உடன் மற்ற இயக்கங்களின் கதைமுடிந்துவிட்டது.அவர்களை எப்போதும் மன்னிக்கலாம் 3 வருடம் தான் அவர்களது உண்மையான போராட்டத்திற்கு கொடுக்கப் பட்ட காலம்.அதன் பின் உயிர் தப்பவும் புலிகளை அழிக்கவும் தான் போராட்டம் நடாத்தினார்கள்.
    ஆனால் இந்தப் புலிகள் மற்றவர்களையும் அழித்து 30 வருடங்களாக ஒருவித தெளிவான அரசியல் நோக்கும் இல்லாமல் துரையப்பாவை சுடும் போது இருந்த அதே அறிவுடன் முள்ளிவாய்க்கால் வரை பிரபாகரன் இருந்தார்.அவரை வைத்து இந்த யாழ்ப்பாணிகள் வியாபாரிகள் நடாத்தினார்களே ஒழிய வேறொன்றுமில்லை
    இவர்களை ஒரு விடுதலை இயக்கம் என்பதே உலகத்து விடுதலை இயக்கங்களுக்கு செய்யும் பெரிய துரோகம்.
    இதற்குள் சாந்தன் என்பவர் புளொட்டில் இருந்து பிராயசித்தம் தேடி புலிக்கு போனாராம்.மகிந்தாவிடம் போனவர்களை மன்னிக்கலாம் ஆனால் இவர்களை ஒரு காலமும் மன்னிக்கக் கூடாது.தமிழினத்திற்கு வந்த மொத்த சாபக்கேடு புலிகள்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    //இதற்குள் சாந்தன் என்பவர் புளொட்டில் இருந்து பிராயசித்தம் தேடி புலிக்கு போனாராம். மகிந்தாவிடம் போனவர்களை மன்னிக்கலாம் ஆனால் இவர்களை ஒரு காலமும் மன்னிக்கக் கூடாது.- Naane //

    மாற்று இயக்கங்கள் சிலதிலிருந்து சிலர் புலிக்குத் தாவினார்கள். காரணம் பிராயச்சித்தம் செய்யவல்ல. முதலாவது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள. இரண்டாவது அங்கு தான் நிறையக் கொள்ளையடிக்கலாம் என்பது தெரிந்து. இவர்கள் முழுக்க முழுக்க சுயநலம் கொண்ட சந்தர்ப்பவாதிகள்.

    Reply
  • palli
    palli

    //எதிரி இலங்கையரசு என்பதை விடவும் புலிகள் என்றதாய் நிலமை போய்விட்டிருந்தது//
    அது இப்போ ஒருபடி வளர்ச்சி அடைந்து எதிரி புலியும் அல்ல புலம் பெயர் புலிகளாய் மாறி வருகிறது;

    //புலிக்குத் தாவினார்கள். காரணம் பிராயச்சித்தம் செய்யவல்ல. முதலாவது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள.//
    உன்மைதான் ஆனால் அவர்களில் பலர் கரும்புலியாக்க பட்ட கொடுமையை யாரிடம் சொல்ல பார்த்திபன்;

    // 86 உடன் மற்ற இயக்கங்களின் கதைமுடிந்துவிட்டது.//
    என்றுதான் புலிகள் சொன்னார்கள்; ஆனால் அந்த அமைப்புகள் இன்றும் ஏதோ செயல்படுகிறது, ஆனால் புலி??
    இன்றய புலியின் தலமை யார்?? ( சீமான் என சொல்லபடாது.)

    //அரசியல் நோக்கும் இல்லாமல் துரையப்பாவை சுடும் போது இருந்த அதே அறிவுடன் முள்ளிவாய்க்கால் வரை பிரபாகரன் இருந்தார்.//
    ஆமா வாழ்ந்தார் வசதியாய் வாழ்ந்தார்; நீச்சல்குளம் ; ஆமைஇறைச்சி: மதிவதனி; சினிமா; இசை; சமையலுக்கு பெண்போராளி, சமைத்ததை பரிமாற ஆண்போராளி; காவலுக்கு கறுப்பு புலி, காசுக்கு புலத்து புலி; தேவைக்கு போர்; தேர்வுக்காய் சமாதானம்; சுகபோக வாழ்க்கையப்பா;

    //இவர்களை ஒரு விடுதலை இயக்கம் என்பதே //
    உலகம் மட்டுமல்ல தமிழ்மக்களும் ஏற்று கொள்ளவில்லை என்பது கூட்டமைப்பின் தேர்தல் வெற்றி சொல்லியது;

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //மாடு வெட்டுவது பாவம் என்பதால் அந்த மாடு வெட்டியவனை பாவம் தீர்க்க வெட்டுவது போல் இல்லையா உங்கள் வாதம்;…//
    தவறாக உவமானம் காட்டுகிறீர்கள். கொஞ்சம் மாற்றி யோசியுங்கள். மாட்டை தாங்களே வெட்டச்சொல்லி விட்டு பின்னர் நானில்லை அவன் வெட்டினான் அவனையே பாவம் சேரும் என கைகாட்டுவது போல. (மரண தண்டனை விதித்தபோது மத்திய குழுவில் இருந்து விட்டு பிரிந்து கொலை செய்து விட்டார்கள் என நோட்டீஸ் அடித்த்து)
    //..மகிழ்ச்சி அடையுங்கள் அதில் பலர் இன்று எதோ ஒருநாட்டில் வாழ்வார்கள்;….//
    நான் பேசுவது ஒரத்த நாட்டில் கொலை செய்யப்பட்டவர்களைப்பற்றி!
    மேலும் தப்பி வந்தவர்கள் சிலர் எனக்கு அருகாமையில் இருக்கின்றனர். அவர்கள் உங்கள் வார்த்தையில் ‘வாழ்கிறார்கள்’ !!! அவர்களைக்கேட்டால் வேறு அதற்கு வார்த்தை சொல்கிறார்கள்!
    //….ஆனால் அதன் பின் நீங்கள் பாவம் கழிய கொடுத்த ஆதரவால் எத்தனை பேர் இன்று சிறு வயதிலே கல்லறையில் என்பது தெரியுமா??…..//
    அந்தக்கல்லறைக்கு பெயர் இருக்கிறது. ஆனால் ஒரத்த நாட்டிலும் கடலில்லும் நான் அனுப்பியவர்களுக்கு ஒரு பதிவுகூட இல்லை பல்லி!

    /..அதுதான் எனது கேள்வியும்;?? அன்று ஏன் போகவில்லை? இன்று ஏன் போனீர்கள்; அன்று புலிகள் ஓடும் குதிரையல்ல என்பது தெளிவு; ஆனால் இன்று அதே புலிகள் ஓடும் என நினைத்தது தெளிவின்மை;….//
    புளொட்டின் ‘அறிவிஜீவித்தனம்’, ‘அரசியல் ஞானம்’ என பல இன்னோரன்ன கதைகளை நம்பினேன்! அதைத்தானே நீங்கள் ‘தெளிவு’ என சொல்லி விட்டீர்கள் நன்றி.

    //….ஏனையவர்களை தடுத்தது உங்களைப் போன்ற புலி தத்துவவாதிகள்தான்….//
    நான் சொல்வது (ஸ்ரீலங்கா அமைச்சர் சொல்வது) ’தடுக்கப்பட்ட ஏனையவர்கள்’ பற்றி அல்ல! மாயா ‘ஒரு ஐந்து சதமேனும்’ எனச் சொல்லி இருக்கிறார் அமைச்சர். ஸ்ரீலங்கா அமைச்சரை நான் நம்புவதில்லை ஆனால் நம்புபவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதே இங்கு கேள்வி!
    //…..இன்றும் முள்ளிவாய்காலில் இருந்து மீண்ட மக்களுக்கு அனுதாபப்படுவதும் , ஆறுதலாக இருப்பதும் , உதவுவதும் , புலிகளால் பாதிக்கப்பட்ட இயக்கங்கள் அல்லது அரசு என்பதை நாளை உங்களிடமே அந்த மக்கள் சொல்வார்கள்…..//
    ஏன் என்னிடம் சொல்ல வேண்டும். வன்னியில் புளொட்டுக்கு எத்தனை இடங்கள் கிடைத்தன?
    //…. ஏனைய அமைப்புகளோ அல்லது இயக்கங்களோ புலிகளின் அராஜக ஆட்சியின் போது எவரிடமும் பணம் சேர்க்கவில்லை….//
    முட்டை வரி, தேங்காய் வரி, லொறி பார்க் செய்ய 100ரூபா என புளொட் வாங்கவில்லை என்கிறீர்களா? சன் ரீவீ மீள் ஒளிபரப்பு (ஏதோ லைசென்ஸ் எடுத்துச் செய்வது போல) வவுனியாவில் ஒவ்வொரு வீட்டுக்கும் 100ரூபா வாங்கவில்லையா ரெலோ?
    அத்துடன் அவர்கள் ஏன் மக்களிடம் வாங்க வேண்டும்? இயக்க அங்கத்தினருக்கு பராமரிப்புச் செலவு ஒரு நாளுக்கு 200ரூ வீதம் ஸ்ரீலங்கா அரசிடம் புளொட் வாங்கியது எனக்கு நன்றாகத் தெரியும். அந்த 200 இல் 50 தான் அங்கத்தினருக்கு மீதி ‘கழகத்தேவைகளுக்கு’ என வவுனியா அலுவக பொறுப்பாளரே எனக்குச் சொல்லி இருக்கிறார்!
    //……ஆக் குறைந்தது ஒரு கலை நிகழ்சியையாவது செய்ய விடவில்லை…..//
    புளொட்டின் சுவிஸ் இணையத்தளம் பார்க்கவில்லைப் போலும். படங்கள் எல்லாம் போட்டிருக்கிறார்களே?
    //….. அல்லது அதே தினத்தில் மற்றொரு நிகழ்ச்சியை செய்து அதை சிதைத்தது போன்றவற்றைத்தான் செய்தார்கள். ….//
    அப்போ அதே தினத்தில் வேறொரு நிகழ்ச்சி வைத்தால் ‘மக்கள்’ உங்கள் நிகழ்ச்சிக்கு வரமாட்டார்கள் என ஒத்துக்கொள்கிறீர்கள்! நன்றி!

    /….இதுதான் புலிகளது ஜனாநாயகம். ஜனநாயகம் பற்றிக் கதைக்கும் எந்த அருகதையும் புலிகளுக்கு இல்லை./…..//
    புலிகள் ஜனநாயகம் கதைப்பதில்லையே, உங்களுக்குத் தெரியாதா. ஜனநாயக மு(க)த்திரை போட்டவர்களால் ’ஜனநாயகம்’ படும் பாடு சொல்லித்தெரிய வேண்டியதில்லை!

    //… இதோ மின் அஞ்சலில் வந்த ஒரு பகுதி..//
    எனக்கும் எவ்வளவோ மின்னஞ்சல் வருகிறது. அதில் புளொட், ரெலோ கதைகள். அதை எல்லாம் ஆதாரமில்லாமல் நான் வெளியிடுவதில்லை!

    பார்த்திபன் on April 21, 2010 4:36 am
    //இதற்குள் சாந்தன் என்பவர் புளொட்டில் இருந்து பிராயசித்தம் தேடி புலிக்கு போனாராம். Naane //
    //புலிக்குத் தாவினார்கள். காரணம் பிராயச்சித்தம் செய்யவல்ல. முதலாவது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள.//
    நானே எனக்கு பிராயச்சித்தமே இல்லை என தெளிவாக எழுதி இருக்கிறேன், கவனிக்கவில்லையா?

    //….என்றுதான் புலிகள் சொன்னார்கள்; ஆனால் அந்த அமைப்புகள் இன்றும் ஏதோ செயல்படுகிறது, …///
    புதுக்கதையாக இருக்கிறது, ஓ….இணையத்தள செயற்பாட்டைச் சொல்கிறீர்களா? அல்லது ‘சந்திப்புகள்’ பற்றிச் சொல்கிறீர்களா? அல்லதி ஸ்ரீலங்கா ‘சுற்றுப்பயணம்’ பற்றியதா?
    //…..ஆனால் புலி??
    இன்றய புலியின் தலமை யார்?? ( சீமான் என சொல்லபடாது.) …//
    அது புலிகளுக்குள்ள பிரச்சினை, அதை விட்டுத்தள்ளுங்கள். வீணையா, வெற்றிலையா, நங்கூரமா, நட்சத்திரமா… என ’தலைமை’ இன்னும் தொடர்கிறது. (அதுதான் ஜனநாயகவாதிகள் எனச் சொல்லப்படாது!!)
    //இவர்களை ஒரு விடுதலை இயக்கம் என்பதே //
    உலகம் மட்டுமல்ல தமிழ்மக்களும் ஏற்று கொள்ளவில்லை என்பது கூட்டமைப்பின் தேர்தல் வெற்றி சொல்லியது;…
    உண்மைதான்! இனியாவது சித்தார்த்தன் அவரது அக்கா இருக்கும் அமெரிகாவில் செற்றில் ஆவது நல்லது! சித்தார்த்தன் ஆவது தர்மலிங்கத்தின் மகன் என புதிய ’அடையாளம்’ சூட்டி கூட்டமைப்புக்குள் போக முயற்சிக்கலாம்! பாவம் மற்றவர்கள் கூட்டமைப்புடன் தொடர்பு அற்றவர்கள்!

    Reply
  • மாயா
    மாயா

    //முட்டை வரி, தேங்காய் வரி, லொறி பார்க் செய்ய 100ரூபா என புளொட் வாங்கவில்லை என்கிறீர்களா? சன் ரீவீ மீள் ஒளிபரப்பு (ஏதோ லைசென்ஸ் எடுத்துச் செய்வது போல) வவுனியாவில் ஒவ்வொரு வீட்டுக்கும் 100ரூபா வாங்கவில்லையா ரெலோ?
    அத்துடன் அவர்கள் ஏன் மக்களிடம் வாங்க வேண்டும்? இயக்க அங்கத்தினருக்கு பராமரிப்புச் செலவு ஒரு நாளுக்கு 200ரூ வீதம் ஸ்ரீலங்கா அரசிடம் புளொட் வாங்கியது எனக்கு நன்றாகத் தெரியும். அந்த 200 இல் 50 தான் அங்கத்தினருக்கு மீதி ‘கழகத்தேவைகளுக்கு’ என வவுனியா அலுவக பொறுப்பாளரே எனக்குச் சொல்லி இருக்கிறார்!//

    பாவம் , 100 ரூபா 200 ரூபா வாங்கியது உங்கள் கண்ணுக்கு தெரியுது. ஆனால் மாதா மாதம் 50 பிராங் (சுவிஸில்) வாங்கிது. அடுத்து வருடத்தில் 1-2 முறை 3000 ஆயிரம் பிராங் தொடங்கி , 1 லட்சம் பிராங் வரை வாங்கியது. வன்னியில் இருந்து யாராவது வெளியேற 50 ஆயிரம் முதல் வீடு நிலங்களை புலிகள் எழுதி வாங்கியது. புலத்தில் காசு கொடுக்காதவர்கள் உறவுகளை கடத்தி கப்பமாக பல லட்சம் பெற்றது. இப்படி 100 – 200 அல்ல லட்சமாக வாங்கிதை மறந்துட்டீங்களே சாந்தன்?

    //புளொட்டின் சுவிஸ் இணையத்தளம் பார்க்கவில்லைப் போலும். படங்கள் எல்லாம் போட்டிருக்கிறார்களே?//
    ஒரு நிகழ்சியே உங்கள் கண்ணைக் குத்தியிருக்கே, மாதா மாதம் இந்திய கலைஞர் நிகழ்வுகள், மாவீரர் நிகழ்வு, உதை பந்தாட்டம், விளையாட்டுப் போட்டி , நாட்டி மயில், இசைக் குயில்,…….இப்படி எத்தனையை சொல்ல? யாராவது அதைத் தடுத்தார்களா? இல்லையே?
    //….. அல்லது அதே தினத்தில் மற்றொரு நிகழ்ச்சியை செய்து அதை சிதைத்தது போன்றவற்றைத்தான் செய்தார்கள். ….//
    இவற்றை செய்தவர்களில் நீங்களும் ஒருவராக இருக்கலாம். எனவே இவை உங்களுக்கு பெரிதாக இராது. ஆனாலும் இதன் பிரதி பலனை இப்பவே புலிகள் அனுபவிக்கத் தொடங்கிட்டார்கள்.

    அப்போ அதே தினத்தில் வேறொரு நிகழ்ச்சி வைத்தால் ‘மக்கள்’ உங்கள் நிகழ்ச்சிக்கு வரமாட்டார்கள் என ஒத்துக்கொள்கிறீர்கள்! நன்றி!

    இங்கே உங்களிடம் உள்ள தமிழர் ஒற்றுமை புரிகிறதே? தன்னைத் தவிர வேறு எவருமே முன்னேறக் கூடாது எனும் ஈகோ பிடித்த கூட்டம் புலிக் கூட்டம். உங்களுக்கு அடி விழுந்தால் தமிழரென்றால் புலிகள் , புலிகளென்றால் தமிழரென்பீர்கள். நீங்கள் நிமிர்ந்தால் , உங்களைத் தவிர அடுத்தவர்கள் எல்லோரும் துரோகிகள். இருந்தாலும் செத்த எந்த ஒரு புலிப் போராளியின் ஆத்மாவும் புலிக் கூட்டத்தை மன்னிக்கவே மன்னிக்காது. அந்தளவு சாவுகளுக்கு காரணமானவர்கள் புலிகள்.

    Reply
  • palli
    palli

    //வீணையா, வெற்றிலையா, நங்கூரமா, நட்சத்திரமா… என ’தலைமை’ இன்னும் தொடர்கிறது.//
    சாந்தன் பல்லியுடன் நீங்கள் குண்டக்க மண்டக்கா வாதம் செய்யலாமா?? பல்லி இப்படியன வேலைகளுக்கு பேர் போன ஒருவர் என மார்க்ஸ்சிச விமர்சகரான குழந்தை போராளி சோபாவே சொல்லி விட்டாரே, இப்ப்டி வரிசை படுத்துங்கள்.
    தோழர் டக்கிளஸ்.
    கழக சித்தாத்தர்;
    ரெலொ அடைக்கல நாதன்(சிவாஜிலிங்கம்)
    ஈரோஸ் அளககிரி ‘( சுவிஸ் பிரபா)
    புலியில்;;;;?????
    அதை விட்டு வெத்திலைக்கு சுண்னாம்பு தடவலாமா??

    //உண்மைதான்! இனியாவது சித்தார்த்தன் அவரது அக்கா இருக்கும் அமெரிகாவில் செற்றில் ஆவது நல்லது! சித்தார்த்தன் ஆவது தர்மலிங்கத்தின் மகன் என புதிய ’அடையாளம்’ சூட்டி கூட்டமைப்புக்குள் போக முயற்சிக்கலாம்! பாவம் மற்றவர்கள் கூட்டமைப்புடன் தொடர்பு அற்றவர்கள்!//
    சாந்தனுக்கு எதுக்கு எடுத்தாலும் அவசரம்; நீங்கள் சொன்ன அனைவருடனும் கூட்டமைப்பு கூடி வேலை செய்ய தயார் என சொல்லுகிறார்கள்? ஆனால் புலி பற்றி பேசினாலே அந்த பக்கம் போக விரும்பவில்லை என்பதை விட வெறுக்கிறார்கள் என்பதே சரியானதாகும்;

    // சித்தார்த்தன் ஆவது தர்மலிங்கத்தின் மகன் என புதிய ’அடையாளம்’ //
    உன்மைதான் சித்தார்த்தன் தர்மலிங்கத்தின் வளர்ப்பு மகன் என்னும் புதிய அடையாளம் என்பதைதானே சொல்லுறியள்;

    //புளொட்டின் ‘அறிவிஜீவித்தனம்’, ‘அரசியல் ஞானம்’ என பல இன்னோரன்ன கதைகளை நம்பினேன்! //
    புளொட்டில் இல்லாத அந்த அறிவு ஜீவிதனம் புலியிடம் இருந்தத்தா? உங்களுக்கு தந்தார்களா?? அதுதான் இப்படி எம்மை திக்கு முக்காட வைக்கிறீர்களா?? இடைக்கிடை புளொட்டில் இருந்த புத்திசாலிதனமாக எழுதினாலும் அடிக்கடி புலியின் குழந்தை பிள்ளைதனம் அங்கங்கே அலை மோதுகிறது;

    // மாட்டை தாங்களே வெட்டச்சொல்லி விட்டு பின்னர் நானில்லை அவன் வெட்டினான் அவனையே பாவம் சேரும் என கைகாட்டுவது போல. (மரண தண்டனை விதித்தபோது மத்திய குழுவில் இருந்து விட்டு பிரிந்து கொலை செய்து விட்டார்கள் என நோட்டீஸ் அடித்த்து)//
    தடுமாற்றம் தெரிகிறது விடுங்கள் இதெல்லாம் பின்னோட்டத்தில் சகசம்தானே; ஆனாலும் கழக தோழர் இப்படி தடுமாறலாமா??

    //அந்தக்கல்லறைக்கு பெயர் இருக்கிறது. //
    அப்படியா?? மாத்தையாவின் கல்லறை எங்கே உள்ளது?? என சொன்னால் மாத்தையாவின் குடும்பம் வணங்க இலகுவாக இருக்குமே (பல மாத்தையாக்கள் உண்டு)

    //நான் பேசுவது ஒரத்த நாட்டில் கொலை செய்யப்பட்டவர்களைப்பற்றி!//
    அதை புலியில் இனையாமல் செய்திருந்தால் மிக நல்லாய் இருந்திருக்குமே??

    //தப்பி வந்தவர்கள் சிலர் எனக்கு அருகாமையில் இருக்கின்றனர். அவர்கள் உங்கள் வார்த்தையில் ‘வாழ்கிறார்கள்’ !!! அவர்களைக்கேட்டால் வேறு அதற்கு வார்த்தை சொல்கிறார்கள்!//
    என்னது?? இப்படியெல்லாம் புலிக்கு ஆள்சேர்ப்பது நாகரிகமல்ல;

    //ஸ்ரீலங்கா அமைச்சரை நான் நம்புவதில்லை //
    நீங்கள் யாரை நம்புவீர்கள்?? புலியில் கடல்படை அமைச்சர் சூசையையா?? அல்லது உளவு துறை அமைச்சர் பொட்டரையா??

    //ஏன் என்னிடம் சொல்ல வேண்டும். வன்னியில் புளொட்டுக்கு எத்தனை இடங்கள் கிடைத்தன?//
    சரியாக தெரியவில்லை ஆனால் புலியை விட அதிகம்; சரி புலிக்கு எத்தனை இடம்??

    //ஆதாரமில்லாமல் நான் வெளியிடுவதில்லை!//
    இந்த லொள்ளுதானே வேண்டாம் எண்கிறது;

    //புதுக்கதையாக இருக்கிறது, ஓ….இணையத்தள செயற்பாட்டைச் சொல்கிறீர்களா? அல்லது ‘சந்திப்புகள்’ பற்றிச் சொல்கிறீர்களா? அல்லதி ஸ்ரீலங்கா ‘சுற்றுப்பயணம்’ பற்றியதா?//
    இருக்கட்டுமே அதுகூட முடியாத புளியாகி விட்டார்களே உங்க பரபரப்புகள்?.

    //நானே எனக்கு பிராயச்சித்தமே இல்லை என தெளிவாக எழுதி இருக்கிறேன், //
    உன்மைதான் தம்பிக்கு சோடா கொடுத்த யாருக்கும் பிராயசித்தம் கிடைப்பது கடினமே;

    //அது புலிகளுக்குள்ள பிரச்சினை, அதை விட்டுத்தள்ளுங்கள். //
    இதை முதலே சொல்லபடாதா?? பல்லியின் தூக்கம் வீணாகி விட்டதே;;;;

    Reply
  • NANTHA
    NANTHA

    அது சரி! சம்பந்தன் கோஷ்டி ஜனாதிபதியின் அழைப்பை ஏற்க காத்திருக்கிறார்கள் என்று ஒரு தகவல். சம்பந்தரே ஜனாதிபதியின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை நிறைவேற்றி விடுவார் போல தெரிகிறதே

    Reply
  • sumi
    sumi

    சம்பந்தன் கோஷ்டி காத்திருந்தாலும் ஜனாதிபதி இவர்களை அழைக்கமாட்டார். ஏனெனில் சிலவேளை றணில் பிரிவு பிளவு பட்டு ஆழும் கட்சிக்கு ஆதரவு கொடுக்க முன்வந்தாலும் ஆச்சரியமில்லை.இந்த லட்சணத்தில் சம்பந்தன் கோஷ்டி எதற்கு??
    சுத்த வேஸ்ட்—இலவு காத்த கிளியின் கதைதான்..

    Reply
  • NANTHA
    NANTHA

    சம்பந்தன் கோஷ்டிக்கு எதிர் கட்சிதான் கதி. ஆயினும் தாங்கள்தான் “கிங் மேக்கர்ஸ்” என்று புலுடா விடுவதை இன்னமும் மனதில் வைத்திருக்கிறார்கள்.

    புலி வால்களினால் உள் நாட்டிலும் வெளிநாட்டிலும் டக்ளசுக்கு எதிராக செய்யப்பட்ட பிரச்சாரங்கள் எவ்வளவு போலியானவை என்பதை தேர்தல் முடிவுகள் உணர்த்தியுள்ளன. அந்தக் கோஷ்டிகள் இப்போது மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் அவஸ்தைபடுகிறார்கள்.

    மொத்தத்தில் இலங்கையில் என்ன நடக்கிறது என்பதைப்பற்றி எதுவும் தெரியாதவர்கள் வெளிநாடுகளில் “அரசியல் விமர்சகர்கள்” ஆகியிருப்பது தமிழ் சமூகத்தின் சாபக்கேடு.

    Reply