தூய பௌத்த சிங்களவன் இனவாதத்துக்கு அப்பாற்பட்டவன். தமிழரசுக் கட்சி சார்பில் தெரிவான சிங்கள பிரதிநிதி பியசேன: – புன்னியாமீன்

jj.jpgநடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் திகாமடுலை தேர்தல் மாவட்டத்தில் தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட சிங்கள வேட்பாளரான பி.எச்.பி. பியசேன 11,130 வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்துக்குத் தெரிவானார். இம்முறை பாராளுமன்றத்துக்குத் தெரிவான தமிழரசுக் கட்சி உறுப்பினர்களுள் பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரம், தமிழரசுக் கட்சி வரலாற்றில் முதற்தடவையாக சிங்களவர் ஒருவர் தெரிவாகியிருப்பதும் இதுவே முதற்தடவையாகும்.

தென்மாகாணத்தின் மாத்தறை மாவட்டத்தைச் சேர்ந்த தெவிநுவர எனுமிடத்தை பிறப்பிடமாகக் கொண்ட பியசேன 1948ஆம் ஆண்டில் கிழக்கு மாகாணத்தில் அக்கறைப் பற்று பிரதேசத்துக்கு இடம்பெயர்ந்து அக்கறைப்பற்று பிரதேசத்தின் சின்னம்மாள் எனும் யுவதியை திருமணம் செய்துகொண்டு இப்பிரதேசத்திலே வாழ்ந்து வந்தார். இவர் 7 பிள்ளைகளின் தந்தையாவார். ஸ்ரீலங்கா பொலிஸில் சமயல் செய்பவராக தனது தொழிலை ஆரம்பித்தார். அக்கறைப்பற்று சிங்கள வித்தியாலயத்தில் தனது ஆரம்பக் கல்வியைப் பெற்ற இவர் பின்பு அக்கறைப்பற்று ஆர்.கே. மகாவித்தியாலயத்தில் தமிழ்மொழியில் தனது தாயின் விருப்பத்திற்கிணங்க கல்வி பயின்றார். தமிழரின் கலாசாரத்திற்கிணங்க வாழ வேண்டும் என்றால் தமிழ்மொழியைக் கற்க வேண்டும் என்று பியசேனவின் பெற்றோர் விரும்பியதனாலேயே இவர் தமிழ்மொழியில் கல்வி பயின்றார்.

jjj.jpg1984ஆம் ஆண்டில் அக்கறைப்பற்று நகரில் பியசேனவின் சகோதரரான சோமசிரி ஈரோஸ் அமைப்பினால் சுடப்பட்டு கொல்லப்பட்டார். இராணுவத்திற்கு தகவல் கொடுத்தார் என்ற அடிப்படையிலேயே இவர் கொலை செய்யப்பட்டார். இப்பிரதேசத்தில் இடம்பெற்ற முதல் கொலையும் இதுவேயாகும். இது தொடர்பில் பியசேன தற்போது வேதனைப்படுபவராகவே காணப்படுகின்றார்.

அக்கறைப்பற்று சிரிதம்மரத்ன சிங்கள வித்தியாலய அதிபர் பி.எச்.பி. பியதாஸ பியசேனவின் சகோதரர்களுள் ஒருவராவார். “எனது சகோதர,  சகோதரிகள் தனது பிள்ளைகளுக்கு பெயர் வைத்திருப்பது சிங்களப் பெயர்களாகும். இருப்பினும்,  எனது பிள்ளைகளுக்கு நான் தமிழ் பெயர்களையே வைத்துள்ளேன். “நான் சிறு வயதில் தமிழ் பாடசாலையில் கல்வி கற்கும்போது சிங்களவன்,  சிங்களவன் என்றே என் சக மாணவர்கள் என்னைக் கேலி செய்வார்கள். அதனால் எனது பிள்ளைகளுக்கு தமிழ் பெயரை நான் வைத்தேன்.  நாங்கள் சிங்களவர்களாக இருந்ததினால் அக்காலகட்டத்தில் அக்கறைப்பற்று பிரதேசத்தில் எமக்கு அச்சுறுத்தல்கள் காணப்பட்டன. எனது சகோதரன் கொல்லப்பட்ட காலத்தில் புலிகளின் அச்சுறுத்தல்களுக்கும் உட்பட வேண்டியேற்பட்டது.  இந்நிலையில் எனது சொந்தக் கிராமத்திற்கு மீள முடியவில்லை.  ஏனெனில், அக்காலகட்டங்களில் எனது சொந்தக் கிராமத்திலும் ஜே.வி.பி. அச்சுறுத்தல்கள் காணப்பட்டன. மிகவும் சிரமத்துடனும் பிரச்சினைகளுக்கு மத்தியிலுமே அக்காலத்தில் வாழ வேண்டிய நிலை காணப்பட்டது” என பியசேன குறிப்பிடுகின்றார்.

சிறு வயது முதலே பொலிஸில் ஏ.எஸ்.பி. ஆக வேண்டுமென்று தனக்கு கனவு இருந்ததாகவும் பிரச்சினைக் காலங்களில் பொலிஸாரின் கண் எதிரிலே கொலைகள் இடம்பெற்ற போது தனக்கு பொலிஸ் பதவி பற்றிய ஆசை விட்டுப் போய்விட்டதாகவும் கூறும் இவர் தனது சகோதர சகோதரிகளுடன் இணைந்து வியாபாரமொன்றை ஆரம்பிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.

தனது தந்தை இறக்கும்வரை தனது பிறப்பிடத்தில் வாழ்ந்த எந்த உறவுகள் பற்றியும் இவர் அறிந்திருக்கவில்லை. இவரின் தந்தையாரின் சகோதரர் பீரிஸ்அப்பு என்றொருவர் இருந்துள்ளார். தந்தையார் இறந்த பின்பு இவரையும் இவரது உறவுகளையும் சந்திக்க வேண்டுமென பியசேன தெவிநுவரைக்கு சென்றுள்ளார். இருப்பினும்,  பியசேனவால் தனது தந்தையின் எந்தவொரு உறவினரையும் தேடிக் கொள்ள முடியவில்லை. இந்நிலையில் ஒருநாள் மாத்தறையிலிருந்து சிமெந்து ஏற்றிவந்த ஒரு லொறியில் பி.எச்.பி. பீரிஸ்அப்பு மற்றும் பொடியப்பு சகோதரர்கள் என எழுதப்பட்டிருந்ததைக் கண்டு ஒரு நப்பாசையில் அந்த லொறி சாரதியுடன் உரையாடியதன் ஊடாக தனது தந்தையின் சகோதரரின் இருப்பை இவர் தேடிக் கண்டறிந்துள்ளார். அதன் பின்பு தனது தாயின் மரணத்தின்போதே தனது தந்தையின் உறவினர்கள் வந்ததாக இவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது மாத்தறையிலுள்ள தனது தந்தையின் உறவினர்களுடன் தொடர்புகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ள இவர், 1995ஆம் ஆண்டு ஆழியடிவேம்பு பிரதேச சபை உறுப்பினராக தெரிவாவதற்காக ஈ.பி.டி.பி. அமைப்பின் ஊடாக போட்டியிட முற்பட்டார். அம்முயற்சி வெற்றிகூடாமையால் சுயேட்சையாகப் போட்டியிட்ட இவர், 5800 விருப்பு வாக்குகளைப் பெற்று தெரிவானார். இருப்பினும் பிரதேச சபையின் தலைவர் பதவி இவருக்குக் கிடைக்கவில்லை. மாறாக உப தலைவர் பதவியே கிடைத்தது. விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல்கள் மத்தியிலும் போட்டியிட்டு வெற்றியீட்டிய இவர், தொடர்ந்த உயிர் அச்சுறுத்தல் காரணமாக பிரதேச சபை உறுப்பினர் பதவியிலிருந்து கேட்டு விலகிக் கொண்டார்.

2000ஆம் ஆண்டில் நடைபெற்ற பிரதேசசபை தேர்தலில் அவருக்கு கட்சி பிரதிநிதித்துவமொன்று கிடைக்கவில்லை. 2006 பிரதேசசபை தேர்தலின்போது சிக்கல்மிகு சூழ்நிலையொன்று பிரதேசத்தில் உருவாகியிருந்தது. இச்சந்தர்ப்பத்தில் தமிழ் கூட்டணி சார்பாக இவருக்குப் போட்டியிடும் வாய்ப்புக் கிட்டியது. இத்தேர்தலில் 6800 வாக்குகளைப் பெற்ற பியசேன ஆழியடிவேம்பு பிரதேசசபைத் தலைவராக தெரிவாக்கப்பட்டார். இருப்பினும், அந்தப் பதவி ஆறு மாதங்களுக்கு மட்டுமே நீடித்தது. சிங்களவர் ஒருவரான பியசேனவுக்கு தலைவர் பதவியைக் கொடுக்க வேண்டாமென்ற பல அமைப்புகளின் நெருக்கடி காரணமாக பியசேனவின் தலைவர் பதவி பறிக்கப்பட்டது. இதற்கு விடுதலைப் புலிகளின் நெருக்கடிகள் பிரதான காரணமாயிற்று.

தலைவர் பதவியைத் துறந்தாலும் சாதாரண உறுப்பினராக இருந்து இவர் மக்களுக்கு சேவையாற்றினார். இச்சந்தர்ப்பத்தில் இடைக்கிடையே பிரதேச சபையில் தலைவர் பதவியை இவர் கோரி வேண்டுகோள் விடுத்தபோதும்கூட ஜனாதிபதித் தேர்தலையடுத்து அது பற்றி சிந்திக்கலாம் என கூட்டணித் தலைமைத்துவம் இவரிடம் கூறியுள்ளது.  இந்நிலையில் 2010 ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளர் ஜெனரல் சரத்பொன்சேக்காவின் வெற்றிக்காக கடுமையாக உழைத்ததினால் இவரின் வர்த்தக நிலையம் தீ வைத்துக் கொளுத்தப்பட்டுள்ளது.

பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் நியமனப் பத்திரம் கோரப்பட்ட நேரத்தில் பியசேனவின் பெயர் திகாமடுலை தேர்தல் மாவட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டது. இருப்பினும்,  அச்சந்தர்ப்பத்தில் அவருக்குத் தேவைப்பட்டது பாராளுமன்றத்துக்குச் செல்வதற்காகவல்ல. மீண்டும் பிரதேசசபை தலைவராகுவதே.  மார்ச் 1ம் திகதி பிரதேச சபைத் தலைமைப் பதவியைப் பெற்றுத் தருவதாக தமிழ் கூட்டணியின் தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தபோதிலும்கூட அது அவருக்குக் கிடைக்கவில்லை. தேர்தலின்போது சுவரொட்டிகள், பெனர்கள், நோட்டிஸ்கள் போன்றவற்றை தனது சொந்த செலவில் அச்சிட்டுத் தருவதாகவும்,  தனக்கு பிரதேசசபை தலைமைப்பதவியை தரும்படியும் மீண்டும் மீண்டும் இவர் கோரியுள்ளார். அதற்கு கூட்டணியினர் எந்தவித உறுதிமொழிகளையும் வழங்கவில்லை. இந்நிலையில்தான் தனது கட்சிக்கு மாத்திரமல்ல, தனது விருப்பு வாக்குகளைப் பெறுவதற்காக இவர் தீவிரமாக செயற்பட்டார்.

அச்சந்தர்ப்பத்தில் தமிழ் கூட்டணி சார்பில் ரோமியோகுமாரி, கிருஸ்ணமூர்த்தி ஆகிய வேட்பாளர்கள் இருவரும் பியசேனவுக்கு விருப்பு வாக்குகளைப் பெற்றுக் கொடுப்பதில் அதிக அக்கறைக் காட்டியுள்ளனர். அதேநேரம், சிங்களவரான பியசேனவுக்கு வாக்குகளை வழங்க வேண்டாமெனவும் அவர் வெற்றிகண்டால் அரசாங்கத்துடன் இணைந்து கொள்வாரெனவும் கடுமையான பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இப்படிப்பட்ட பின்னணியிலேயே பியசேனவின் பாராளுமன்ற தேர்தலுக்கான போட்டி அமைந்திருந்தது. தேர்தல் முடிவுகள் வெளிவந்த பின்பு பியசேனவின் வெற்றி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அம்பாறை தேர்தல் மாவட்டத்தில் ஆளும் ஐ.ம.சு. முன்னணிக்கு 4 ஆசனங்களும், ஐ.தே.முன்னணிக்கு 2 ஆசனங்களும், தமிழரசுக் கட்சிக்கு 1 ஆசனமும் மாத்திரமே கிடைத்தது. தமிழ் கட்சியொன்றில் தமிழ் பிரதேசத்தில் போட்டியிட்டு 11,130 வாக்குகளைப் பெற்று இந்த சிங்கள பிரதிநிதியால் வெற்றியடையக்கூடிய வாய்ப்பு கிட்டியது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

“எனது தந்தை இன்று இருந்திருந்தால் அவர் மிகவும் சந்தோசப்பட்டிருப்பார். எனது தந்தை இறக்கும்போது என் தந்தையின் உறவுகளைப் பற்றி எவ்விதத்திலும் நான் அறிந்திருக்கவில்லை. தந்தையின் இறப்பின் பின்பே நான் என் உறவுகளை இனங்கண்டு கொண்டேன். இன்று நான் பாராளுமன்றத்துக்குச் செல்லப் போகின்றேன்” என்று மகிழ்ச்சியுடன் குறிப்பிடுகின்றார் பியசேன.

“ஏழை மக்கள் துயரமடைகின்றனர். மந்திரிகள் அரசர்கள் போல் நடமாடுகின்றனர். நல்ல அரசு இருக்கின்றது. நல்ல அரசாங்கம் இருக்கின்றது. இருப்பினும், மக்கள் துயரமடைகின்றனர். தூய பௌத்த சிங்களவன் இனவாதத்துக்கு அப்பாற்பட்டவன். தமிழரசுக் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கபட்ட நான் இனவாதத்துக்கப்பால் நின்று மக்களுக்கு சேவை செய்வேன்” என்றும் குறிப்பிட்டிருந்தார்.

(இக்கட்டுரை ‘ரீவிர’ பத்திரிகையைத் தழுவி பியசேனவின் உதவியாளர்களுடன் பெறப்பட்ட தகவல்களையும் மையமாகக் கொண்டு எழுதப்பட்டது.)  

Show More
Leave a Reply to palli Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

 

28 Comments

 • Kulan
  Kulan

  அன்றில் இருந்து இன்று வரை இதைத்தான் சொன்னோம். யார் கேட்டார்கள். தேர்தலுக்காகவும் பாராளுமன்ற ஆசனங்களுக்காகவும் இனவெறியைத் தூண்டிவிட்டு இருபக்க அரசியல்வாதிகளும் இரத்தசகதியில் குளிர்காய்ந்தார்கள். சிங்களவன் என்றாலே எதிரி எனும் ஒரு மனநிலையையும் தமிழன் குறைந்த சாதியினன் அவனைக் கொல்வதால் உனக்கு மோட்டம் எனும் பரப்புரைகளாலும் இரு இனத்துக்கும் இடையிலுள்ள இனவெறி அதிகரித்துப் போனது. எமது பிரச்சனைகளை சிங்களமக்களிடம் கொண்டு போங்கள் என்று புலிகளிடம் எத்தனை தடவை கேட்டுப் போராடி வெளியில் வந்தோம். சிலவேளை எமக்கு நடந்த அநீதிக்காக அவர்களே எமக்காகப் போராடியிருப்பார்கள். எல்லாச் சிங்களவர்களும் இனவெறியர்கள் அல்ல. அவர்களில் சிலர் சிங்கள பெளத்த பேரினவாதத்தினால் தலைகளுவப்பட்டவர்கள்.இனியாவது இரத்தம் சிந்தாது தமிழர்களின் உரிமைகளை மீட்டெடுக்க முயற்சியுங்கள். இந்தியாவின் பாச்சா இலங்கைமேல் பலிக்காது போனால் மீண்டும் ஒரு ஆயுதக்குழுவை உருவாக்கியோ அன்றி ஏதோ ஒரு வழியிலோ இனங்களுக்குள் முறுகுநிலையை ஏற்படுத்த இந்தியா முனையலாம். இதற்குள் முஸ்லீம்கள் அவதானமாக புத்திசாதுரியத்துடன் இருப்பது முக்கியமானது.

  Reply
 • மாயா
  மாயா

  தமிழரசுக் கட்சி , தன் தலையை தூக்கிப் பார்த்துள்ளது. கண்ணாடியை கழட்டி விட்டு பார்க்கத் தொடங்கியுள்ளது. நல்ல மாற்றம். மனதால் வரவேற்க வேண்டியுள்ளது. பாராட்டுக்கள். இதை இனித் தொடருங்கள். மக்களுக்காகத்தான் அரசியலே தவிர , அரசியலுக்காக மக்கள் இல்லை என்பதை எண்ணுங்கள்.

  இனி நம் நாட்டில் இனவாதம் வேண்டாம். மகிந்த தமிழில் பேசிய போது சிலர் கத்தினார்கள். நீங்கள் என்னதான் கத்தினாலும் , நான் தொடர்ந்தும் தமிழில் பேசுவேன் என்று எழுதிப் படிக்காமல் , வீராவேசமாக மனம் திறந்து பேசிய அந்த சிங்கள மகிந்தவை பாராட்டாமல் இருக்க முடியாது. தவிரவும் இனி இந்த நாட்டில் தமிழர் – சிங்களவர் – முஸ்லீம்கள் என இல்லை. நாம் அனைவரும் ஒரு தாயின் மக்கள். அதை உணருங்கள் என மகிந்த சொன்ன போது அந்த மனிதனை வாழ்த்தாமல் இருக்க முடியவில்லை. மகிந்த உண்மையிலேயே யதார்த்தமான ஒரு தலைவன். அதை நாளைய சமுதாயம் உணரும். பெளத்த பிக்குகளுக்கும் அரசியலில் தலை காட்ட முடியாமல் பண்ணிய மாவீரன். அந்த வகையில் மகிந்த துணிச்சலானவன்.

  ஐநாவில் தமிழில் பேசிய அந்த மகிந்தவை பாராட்டாமல் இருக்க முடியாது. காரணம் தமிழன் என்று சொல்லிக் கொள்பவர்கள் , இப்படி இடங்களில் ஆங்கிலத்தில்தான் பேசுவார்கள். அதை சிலர் கிரிமினல் என கொச்சைப் படுத்துகின்றனர்.

  இதேபோல் தமிழரசுக் கட்சியின் நடைமுறை தொடரட்டும். நம் மக்கள் சீரும் சிறப்புமாக வாழட்டும். அதுவே அனைவரது கடமையாகட்டும்.

  Reply
 • paththan
  paththan

  //1984ஆம் ஆண்டில் அக்கறைப்பற்று நகரில் பியசேனவின் சகோதரரான சோமசிரி ஈரோஸ் அமைப்பினால் சுடப்பட்டு கொல்லப்பட்டார்//
  ஈரோஸ் அமைப்பினரா??

  Reply
 • Kusumpu
  Kusumpu

  மாயா நாம் மாயையில் மயங்கிவிடவும் கூடாது. மகிந்தவின் உள்நோக்கம் எதிர்காலம் எதிர்வினைகள் எப்படி அமையும் என்பதை நாம் இருந்து தான் பார்க்கவேண்டும். தமிழ்பேசுவதால் மட்டும் மகிந்த நல்லவராக ஆகிவிடமுடியாது. ஆனால் தமிழரசுக்கட்சியினதும் மகிந்தாவின் முயற்சியும் பாராட்டுக்குரியதே. இருப்பினும் தமிழருக்கான நிரந்தரமான திருப்தியான ஒரு அரசியல் தீர்வை வைக்காத வரை மகிந்தாவை நம்புவது என்பது யோசிக்கவேண்டிய ஒன்றாகும். சரியான தீர்வும் வைக்காதவரை மகிந்தாவின் செய்கை அனைத்தும் நடிப்பே. நான் மகிந்தவை விட தமிழ்சிங்கள அரசியல்வாதிகளை விட சிங்களமக்களையும் மக்கள் சக்தியையும் நம்புகிறேன். மக்கள் சக்தியானது தமிழ்மக்களின் பக்கத்திலும் சிங்கள மக்களின் பக்கத்திலும் மாறிமாறி வந்த சுரண்டல் முதலாளித்துவ அரசால் சாவுமணியடிக்கப்பட்டது என்பதுதான் உண்மை. தமிழ்மக்கள் பேரழிவைச் சந்தித்தபோதிலும் சிங்களமக்களுக்கு நாட்டில் என்ன நடக்கிறது என்பது தெரியாமலேயே இருந்தது. புலிவருகிறது புலிவருகிறது என்று பேக்காட்டிக்கொண்டிருந்தார்கள் அரசியல்வாதிகள். இனியாவது நம்பிநடவாது நம்ப நடப்போம்

  Reply
 • T Sothilingam
  T Sothilingam

  தமிழ் சிங்கள உறவுகளை வளர்க்கும் பியசேனாவுக்கும் தமிழரசுக்கட்சிக்கும் வாழ்த்துக்கள்.

  இதுபோன்ற உண்மைகளை தொடர்ந்தும் வெளிக்கொணர எல்லோரும் முன்வரவேண்டும்.

  Reply
 • palli
  palli

  தமிழ் சிங்கள உறவுகளை வளர்க்கும் பியசேனாவுக்கும் தமிழரசுக்கட்சிக்கும் வாழ்த்துக்கள்.

  அதுக்காய் இடத்தை கொடுத்த தமிழரசுகட்ச்சிக்கும் பல்லியின் பாராட்டு, தெரிந்து செய்தீர்களோ அல்லது தெரியாமல் செய்தீர்களோ தெரியாது ஆனால் செய்ய வேண்டியத்தை செய்துள்ளமைக்கு பாராட்டுக்கள்;

  Reply
 • thurai
  thurai

  அரசியல்வாதிகள் தங்களின் சுயலாபங்களிற்காகவும், அரசியலில் தொடர்ந்தும் வாழ்க்கை நடத்துவதற்கும் சந்தர்ப்பங்களைப் பயன்படுத்துவர். இவர்களை அடையாளம் காணக்குடியவர்களாக தமிழ், சிங்கள மக்கள் அறிவுத் திறமையுள்ளவர்களாக மாறவேண்டும்.

  இனவாத அரசியலிற்கு முற்றுப்புள்ளி வைப்பது அதிகாரத்தில் இருப்போரால் முடியும். அவர்களிற்கு இனங்களின் ஒற்றுமையை விட பதவி மோகம் அதிகமானால் திரும்பவும் பயங்கரவாதச் சூழலே தோன்றும்.

  மக்களிற்குச் சேவை செய்வதற்கென வாழும் தலைவர்களால் ஒரு போதும் தீங்கு நேராது. சிங்களவர் ஒருவர் தமிழரின் பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்டு சேவை செய்வதும், தமிழர் ஒருவர் சிங்கள பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்டு சேவை செய்வதும் நல்ல அறிகுறியேயாகும்.
  துரை

  Reply
 • chandran.raja
  chandran.raja

  தமிழரசுக்கட்சி ஒரு காலத்திலும் முற்போக்கு பாத்திரத்தை வகிக்கவில்லை. இனிமேல் காலத்திலும் வகிக்கமுடியாது. தமிழ்மக்களை மடமைத்தனத்தின் அடிஆதாளபாதத்திற்கு இட்டுசென்றவர்கள் இந்த தமிழரசுக் கட்சியும் அதன் வழிவந்த வெள்ளாம்முள்ளி வாய்காலில் வெள்ளைக்கொடி பிடித்த வேலுப்பிள்ளை மகனுமே!. தமிழரசுக்கட்சி தமிழ்மக்கள் மத்தியில் என்றுமே முற்போக்கு பாத்திரம் வகித்ததும் இல்லை. இனி வகிக்கப்போறதும் இல்லை. இனி இவர்களுக்கு அரசியல் வேலை இருக்குமென்றால் பியசேனாவுக்கு குழிபறிப்பதே நோக்கமாக கொண்டு ஒழுகுவார்கள். வாசகர்களே! இதை மிகுந்த அவதானிப்புக்கு உட்படுத்துங்கள்.

  Reply
 • மாயா
  மாயா

  குசும்புவின் கருத்தில் உண்மைகள் இல்லாமல் இல்லை. எதையாவது செய்யும் போது , அதை நாமும் வரவேற்காவிட்டால் , இவர்களுக்கு செய்தாலென்ன , செய்யாமல் விட்டாலென்ன எனும் மனம் வந்து விடும். இப்போதைக்கு செய்வார் என நம்புவோம். செய்யாவிட்டால் அதைப் பற்றி பேசுவோம்.

  அண்மையில் மகிந்தவின் ஒரு நண்பரோடு பேசும் சந்தர்ப்பம் கிடைத்தது. அந்த நண்பர் சொன்னார். அழிந்து போன வன்னியை நாமாவது கட்டி எழுப்பி அந்த மக்களுக்கு வாழ்வு கொடுக்க வேண்டும் என்று அவரிடம் மகிந்த சொன்னாராம். அதுவே எதிர்கால ஒற்றுமையை உருவாக்கும் என்றாராம். சிங்களப் பகுதிகளை விட , தமிழ் பகுதிகளை முன்னேற்றவே விரும்புகிறார் என்றார். அது சரியானது என்றேன்.

  வன்னியை தமிழ் தலைமைகள் சீரழித்து விட்டன. அதை அரசாவது முன்னேற்ற வேண்டும்.

  Reply
 • NANTHA
  NANTHA

  பிய சேனாவின் தெரிவு நல்லதொரு முன்மாதிரி என்றே எனக்குப் படுகிறது. ஒரு சராசரி மனிதனான பியசேனவினால் தமிழ் சிங்கள வாக்குகளைப் பெற முடிந்திருப்பது அங்குள்ள மக்களின் மன நிலைகளைப் பிரதிபலித்துள்ளது. அவர் உண்மையிலேயே ஒரு “பிரியமான” சேனாவாகவே எனக்குத் தென்படுகிறார்!

  Reply
 • மாயா
  மாயா

  இது மனதை வருத்துகிறது
  ————————

  ‘அம்பாறையில் தொடரும் அச்ச நிலைமை’

  இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்து விட்டாலும் அம்பாறை மாவட்டத்தின் தமிழ் பகுதிகளில் இன்னமும் அச்ச சூழல் நிலவுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆலையடிவேம்பு மற்றும் திருக்கோவில் உட்பட தமிழர்கள் வாழும் சில பகுதிகளில் அச்ச சூழல் நிலவுவதாக அம்மாவட்டத்திலிருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் புதிதாக நாடாளுஅமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பொடியப்பு பியசேன தமிழோசையிடம் தெரிவித்துள்ளார்.

  ஆளும் கட்சியின் ஆதரவாளர்களால் தான் உட்பட பலர் அங்கு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதாகவும் அவர் கூறுகிறார். நள்ளிரவு நேரங்களில் வீடுகள் தாக்கப்படுகின்றன எனவும் அவர் குற்றஞ்சாட்டுகிறார். இதன் காரணமாக மக்கள் அச்சத்துடன் வாழ்வாதகவும் அவர் தெரிவிக்கிறார்.

  தனக்கே பாதுகாப்பு இல்லாத சூழலில் உதவி தேடி வரும் மக்களுக்கு தன்னால் உதவ முடியாத நிலையில் இருப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்தெடுக்கப்பட்டுள்ள பியசேன கூறுகிறார். மக்களால் தேர்தெடுக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினருக்கே பாதுகாப்பு இல்லாத நிலையில் தங்களது பாதுகாப்பு குறித்து அங்குள்ள மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

  காவல்துறையின் பாதுகாப்பில்லாமல் தன்னால் வீட்டில் கூட இருக்க முடியாத ஒரு இறுக்கமான சூழல் உள்ளது என்றும் த.தே.கூ வின் உறுப்பினர் பொடியப்பு பியசேன தமிழோசையிடம் தெரிவித்துள்ளார். தமது பகுதியிலுள்ள மக்கள் இது தொடர்பில் காவல்துறையிடம் முறைப்பாடு செய்வதில் துளியளவும் விருப்பமில்லாமல் இருக்கிறார்கள் எனவும் அவர் தெரிவிக்கின்றார்.

  காவல்துறையிடம் முறைப்பாடு செய்யும் போது, யார் மீது புகார் செய்யப்படுகிறதோ அவரிடம் புகார் குறித்த தகவல் சென்றுவிடும் என்கிற அச்சம் காரணமாகவே மக்கள் புகார் செய்ய முன்வருவதில்லை என்றும் பியசேன கூறுகிறார். தனக்கு அளிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அதிகாரிகள், தான் வீட்டை விட்டு வெளியே செல்வது உசிதமில்லை என்றும் அவ்வாறு சென்றால் தங்களால் பாதுகாப்பு வழங்க இயலாது என்றும் தெரிவித்துள்ளதாக புதிய நாடாளுமன்ற உறுப்பினர் கூறுகிறார்.

  ஆனால் இந்தப் புகார்களில் உண்மை ஏதும் இல்லை என்று அம்பாறை பகுதி முழுவதிலும் அமைதி நிலவி வருகிறது என்றும் இலங்கையின் காவல்துறை பேச்சாளர் பிரஷாந்த ஜெயக்கொடி கூறுகிறார். அம்பாறையில் அச்ச சூழல் நிலவுகிறது என்று கூறப்படும் தகவல் முற்றிலும் பொய்யானது என்றும் தேர்தலுக்கு பிறகு அப்பகுதியிலிருந்து தமக்கு ஒரு முறைப்பாடு கூட வரவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

  புதிய நாடாளுமன்ற உறுப்பினருக்கு ஏதாவது சிக்கல் இருக்குமாயின் அவர் உள்ளூர் காவல்துறை அதிகாரிகளை அணுகி புகார் செய்யலாம் என்று கூறும் காவல்துறை பேச்சாளர், அம்பாறையில் எந்தவிதமான சட்டவிதி மீறல்களும் இல்லை என்பதை தன்னால் உறுதியாகக் கூறமுடியும் எனவும் தமிழோசையிடம் தெரிவித்தார்.
  bbc.co.uk/tamil/news/story/2010/04/100413_amparaitence.shtml

  Reply
 • BC
  BC

  தமிழரசுக்கட்சியை பாராட்டுபவர்கள் சந்திரன் கூறியதை கவனியுங்கள். தமிழரசுக் கட்சியும் அதன் வழிவந்தவர்களும் இதுவரை அப்படி தான் நடந்துள்ளார்கள். இலங்கையில் இனங்களுக்கிடையில் ஒற்றுமை ஏற்படுவது இந்தியாவுக்கும் பிடிக்காத விடயம்.

  Reply
 • Ajith
  Ajith

  Who are the tamils contested under Sinhala parties in Sinhala areas. How many tamils were elected from Sinhala areas? Why couldn’t Rajapakse asked to contest Douglas from a Sinhala areas? why couldn’t Kathirgamar contested for SLFP in Sinhala areas?
  When tamils ask for equal rights that is nationalism/racism . When Sinhalese speak nationalism they are not racism. Sinhala nationalism and Sinhala racism is acceptable but tamils arking for equal rights is racism.
  What a sicererity? Sinhalese are the majority, it is their government. 99% of the forces are sinhalese. They are the one brought Sinhala only and forced settlents in Sinhala area. Sinhala governments and forces just watched and gave proection to murderers when hundreds of tamils were murdered and their properties were destroyed.

  You may called me racists. When Nelson Mandela fought against white oppression it is racism. Who is racist here? Is it Mandela or White rulers? No one would argue that Mandela is a racist.

  None of the Sinhala leaders (even the so called Communists and socialists) are not prepared to give up racism. If there is no resistance from tamils, the whole Sri Lanka would be under Sinhala now.
  The recognition of tamils as equals should come from Sinhala. not from tamils. Tamils have no power to influence the decision making. For example Douglas served sincerely with SLFP and UNP for over 15 years. They gave him powerless ministerial posts but denied his right tocontest under his own party. Kathirgamar served under SLFP as foregin minister (to influence western nations to ban LTTE) but never made him to contest under SLFP in Sinhala areas or to give prime minister post. Rajapakse set up a All Party Conference to find a proposal to solve tamil problem. Once the war is over he has thrown those proposals into the bin. It is under his rule, North-East merger was demerged. He had the power to stop that. JVP was with him. But he kept silent. During this election, Rajapkase campagined to ban TNA? Why?

  It is not he makes speech in tamil or visit Nallur temple with bare body? I would consider him as a national leader:
  if he would have took action against Fonseka when he spoke that minorites can only live with what Sinhalese give them without asking anything (similar to Maya’s request).
  if he would have removed JVP from its alliance when JVP filed case against north-East merger.
  if he would have punished those police who put tamils in buses to send them to North-East.
  if he punished those who killed journalists including Nimalarajan and tamil MPs (Joseph Pararajasingham, Raviraj, Maheswaran)
  if he would have gone for election with theAll party propsals.
  If he would have apologised for those tamils who were killed unlawfully.

  Reply
 • thurai
  thurai

  அஜீத் கூறும் விடய்ங்கள் இங்குள்ளவர்களிற்குப் புதியதல்ல. சிங்களவ்ர்கள் தமிழர் மீது ஆதிக்கம் படிப்படியாக அதிகரிப்பதும், தமிழரின் பூர்வீக் இடங்களில் சிங்களவர் குடியேறுவதும்.

  படித்த தமிழர்கள் கொழும்பை நோக்கி அரச உத்தியோகங்களிற்காகவும், வெளிநாடுகளிற்கு கல்விக்கும் பண்த்திற்கும் போகும் போது சிங்களவர் தடுத்தார்களா?
  இப்படியாக தமிழ் பகுதிகளை விட்டு வெளியேறுவோரை யாராவது தமிழர் தடுத்தார்களா? ஆனையிறவிற்க்கப்பால் வந்தால் அன்றையதினமே திரும்பி யாழ்பாணம் போய்விடுவார்கள்.

  விடுதலை,உருமையெனப்து பல சாதி,சமயங்களை உள்ளடக்கியவ்ர்கள் தாங்கள் ஓர் இனமென்னும் உணர்ச்சி அவர்களிடம் தோன்ற வேண்டும்.
  அதன் பின்பே அந்நியர்களாக சிங்களவ்ர் தமிழர்களிற்குத் தெரிவார்கள். ஒற்றுமை முன்பு அதன் பின்பே உருமை.

  தமிழர்கள் பலர் பக்கத்து வீட்டு தமிழனைவிட அடுத்த வீட்டு சிங்களவன் நல்லவன் என்று கூறும்போது எங்கிருந்து ஒற்றுமை வரப்போகின்றது.

  இன்றைய நிலமை புலிகள்,விடுதலை, தமிழீழம் இதனை விட சிங்களவனுடன் சேர்ந்து வாழ்வதே மேல் என்பதேயாகும்.

  இந்த மன்மாற்ரத்திற்கு தமிழர்கழும், புலிகழும் செய்த தவறுகளே காரண்மாகும். இந்த தவறுகளை என்னவென முத்லில் ஆராய்ந்தறிந்த பின்னரே தமிழர்,புலிகள்,விடுதலை, தமிழீழம் பற்ரிப் பேசுவது நல்லது. இப்போ இலங்கையில் பேசிய ஈழப்பேச்சு நாடுகடந்த தமிழீழப் பேச்சாகிவிட்டதே இதற்கு சாட்சியம்.

  துரை

  Reply
 • சாந்தன்
  சாந்தன்

  //..தமிழர்கள் பலர் பக்கத்து வீட்டு தமிழனைவிட அடுத்த வீட்டு சிங்களவன் நல்லவன் என்று கூறும்போது எங்கிருந்து ஒற்றுமை வரப்போகின்றது….//
  அது நீங்கள் தான் சொல்லியது!

  //…அஜீத் கூறும் விடய்ங்கள் இங்குள்ளவர்களிற்குப் புதியதல்ல. …// புதிதல்ல என்பதற்காக அது சரி என்றாகிவிடுமா?

  //…படித்த தமிழர்கள் கொழும்பை நோக்கி அரச உத்தியோகங்களிற்காகவும், வெளிநாடுகளிற்கு கல்விக்கும் பண்த்திற்கும் போகும் போது சிங்களவர் தடுத்தார்களா?…// அரச உத்தியோகத்துக்கு போவதற்கும் அரச செலவில் அரச பாதுகாப்போடு ‘குடியேற்றப்படுவதற்கும்’ முடிச்சுப் போடுகிறார்கள்

  Reply
 • thurai
  thurai

  புலியின் படைவீரனிற்கு புலியின் கட்டளைப்படி ஓர் பெண்ணைப்போய் கொன்று விட்டு வா என்றால் தவறாமல் செய்யக்கூடியவர். அப்பெண் பிள்ளைக்குப் பால் கொடுத்துக் கொண்டிருக்கின்றாளென்றோ, அல்லது அவளின் பிள்ளை தாயில்லாம்ல் போய்விடுமென்றோ, அல்லது சுடும் போது பிள்ளையும் சாகலாம் என்றோ எண்ணம் கொள்வதற்கு பக்குவமில்லாத கொடூரமிக்கவர்கள்.

  இவர்களைப் போலவே புலிப்பாணியில் கருத்துக்கழும் இங்கு சிலர் எழுத்துகின்றன்ர். இவர்களிற்கு தீர்க்கதரிசன்ம், ந்ல்லெண்ணம்,பரஸ்பர உறவு, மனிதத்தன்மை, விட்டுக்கொடுக்கும் பழக்கம் என்பதன் அருச்சுவடே தெரியாதவர்கள்.

  புலியையைப்போலவே இவர்க்ழும் புல்லைத்தின்று விட்டு கொழுப்பாக் வரும் மானை பதுங்கியிருந்து பசியாறும் குணம் கொண்டவர்கள். எனவேதான் மக்களிடமிருந்து புலிகள் விலக்கப்பட்டு காட்டில் வாழ்வதுபோல, தமிழரின் விடுதலைப்புலிகள் என்று பெயரிட்டாலும் இவர்களால் பயங்கரவாதப் புலிகள் என்னும் பெயரிலிருந்து தப்பமுடியவில்லை.

  துரை

  Reply
 • thurai
  thurai

  //அரச உத்தியோகத்துக்கு போவதற்கும் அரச செலவில் அரச பாதுகாப்போடு ‘குடியேற்றப்படுவதற்கும்’ முடிச்சுப் போடுகிறார்கள்//சாந்தன்

  புலியின் பாதுகாப்பை நம்பி வன்னியில் குடியேறியவர்களை புலிகள் தம்க்குப் பாதுகாப்பிற்காக் முள்ளிவாய்க்காலில் இராணுவத்திற்கு பலி கொடுக்கையில் எங்கு சாந்தன் இருந்தாரோ? சிங்கள பகுதிகளிலும், இராணுவக் கட்டுப்பாடிலுமிருந்த பகுதிகளில் வாழ்ந்த தமிழர்களிற்கு தம்பியின் புலியை விட பாதுகாப்பு கூடுதலாகவே இருந்ததை மறக்க வேண்டாம்.

  நிலமை இப்படியிருக்கையில் புலிகள் விடுதலைப்புலிகளா? அல்லது நாடு கட்ந்த தமிழீழம் இலங்கை அரசாங்கம் கொடுத்த பாதுகாப்பைக் இலங்கைத் தமிழர்களிற்குக் கொடுக்குமா? அல்லது சிங்களவரையும், அரசாங்கத்தையும் கோபமூட்டி இலங்கைத் தமிழர்களைத் திரும்பவும் சிங்கள இனத்திற்குப் பலி கொடுப்பார்களா? புலத்தில் உள்ள புலிகளிற்கு வருமான்ம் வரவேண்டுமானால் இலங்கையில் தமிழர் அழிக்கப்பட வேண்டும். இந்த உண்மையைக் கூறுபவரெல்லாம் ராஜபக்சவிடம் பணம் வாங்கியவர்கள், அல்லது தமிழினத்தின் துரோகிகள். இதுவே புலியின் கருத்தாளர்களின் ஒரே பதில்.

  துரை

  Reply
 • chandran.raja
  chandran.raja

  கைத்தூப்பாக்கியுடன் திரிகிற சந்திரநேரு சந்திரகாந்தன் என்பவர் இத்தேர்தலில் தான்
  தோல்வியடைந்ததை தாங்கமுடியாமல் எப்படியும் பாராளமன்ற செல்வதற்கு பியசேனவை கொலைசெய்தாவது அந்தப் பதவியை அடைவதற்கு பழைய ஆயுதக்குழுகளின் துணைகொண்டு அலைவதாக அறிகிறோம்.
  மூன்றாம் வழியாக ஒருமிரட்டல் அல்ல பலமிரட்டல்களுக்கும் அஞ்சாமல் பியசேன தான் கொண்ட கொள்கையில் உறுதியாக இருப்பதாகவும் எதற்கும் அஞ்சப்போவதில்லை என கருத்து தெரிவித்ததாக செய்திகள் வருகின்றன.

  தனது இனத்தில் பற்றும்பாசமும் வைத்திருக்கிற ஒரு தமிழன் பியசேனாவையும் அவர் குடும்பத்தையும் பாதுகாப்பது தலையான கடமையாகக் கொள்ளவேண்டும். மிகுதி….. வாசகர்களிடம்.
  சிறுகுறிப்பு. சந்திரநேரு சந்திரகாந்தன் மகிந்தா ராஜபக்சாவின் நெருங்கிய நண்பன் என்றும் பியசேனாவுக்கு ஒருவகை மிரட்டலாம்.

  Reply
 • மாயா
  மாயா

  chandran.raja சொல்லும் விடயங்கள், சிங்களப் பத்திரகைகளிலும் வெளி வந்துள்ளது. இது குறித்து மேலிடத்துக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. சந்திர நேரு கூட்டத்தின் கொட்டம் விரைவில் அடங்கும் என நினைக்கிறேன். பார்க்கலாம்.

  Reply
 • சாந்தன்
  சாந்தன்

  //….புலியின் பாதுகாப்பை நம்பி வன்னியில் குடியேறியவர்களை ….// துரை,
  முதலில் நீங்கள் எழுதிய கருத்தை படித்துப்பார்க்கவும். உங்கள் கருத்து தமிழர்களின் சுயமான குடியேற்றத்தையும் அரசின் ஆதரவுடன் (பணம்/பாதுகாப்பு/வசதி) நடக்கும் திட்டமிட்ட குடியேற்றத்தையும் ஒரேகண்ணோட்டத்தில் பார்ப்பதாயிருந்தது. அது தவறென சுட்டிக்காடிய பின்னர் வசதியாக கதை மாற்றுகிறீர்கள்.

  //…இராணுவத்திற்கு பலி கொடுக்கையில் எங்கு சாந்தன் இருந்தாரோ? …//
  இதே போல ஜே.வி.பி கிளர்ச்சியின் போதும் நடந்தது. ஆனால் என்ன ஆகாயத்தில் இருந்து குண்டு போடவில்லை. இதையே நீங்கள் இறந்த சிங்கள மக்களின் உறவினர்களிடமும் சொல்வீர்கள் என நினைக்கிறேன்.

  //…..சிங்கள பகுதிகளிலும், இராணுவக் கட்டுப்பாடிலுமிருந்த பகுதிகளில் வாழ்ந்த தமிழர்களிற்கு தம்பியின் புலியை விட பாதுகாப்பு கூடுதலாகவே இருந்ததை மறக்க வேண்டாம்…//
  அதுதான் நீங்களே சொல்லி விட்டீர்களே ! ‘சிங்களப் பகுதி, ‘ராணுவக்கட்டுப்பாடு’ என. சிங்கள மக்களின் மேல் ராணுவம் குண்டுவீசாது.

  //….இலங்கை அரசாங்கம் கொடுத்த பாதுகாப்பைக் இலங்கைத் தமிழர்களிற்குக் கொடுக்குமா? அல்லது சிங்களவரையும், அரசாங்கத்தையும் கோபமூட்டி இலங்கைத் தமிழர்களைத் திரும்பவும் சிங்கள இனத்திற்குப் பலி கொடுப்பார்களா?….//
  அப்படியா, சிங்கள இன மக்கள் கோபமுற்று தமிழர்களைக் கொல்வார்களா? அவ்வளவு மோசமானவர்களா அவர்கள்? என்னை தெளிவடைய வைத்தமைக்கு நன்றி! இதைவிட யாரும் ஸ்ரீலங்கா இனவாதம் பற்றி இலகுவாக விளங்கப்படுத்த முடியாது.

  //..இவர்களிற்கு தீர்க்கதரிசன்ம், ந்ல்லெண்ணம்,பரஸ்பர உறவு, மனிதத்தன்மை, விட்டுக்கொடுக்கும் பழக்கம் என்பதன் அருச்சுவடே தெரியாதவர்கள்…..//
  சிங்கள இனமக்கள் கோபமுற்றால் தமிழரைக் கொல்வார்கள் என்ச்சொன்னதும் நீங்கள் தான். இதைச் சொல்வதும் நீங்கள் தான் துரை!

  Reply
 • சாந்தன்
  சாந்தன்

  //… சந்திரநேரு சந்திரகாந்தன் மகிந்தா ராஜபக்சாவின் நெருங்கிய நண்பன் என்றும் பியசேனாவுக்கு ஒருவகை மிரட்டலாம்….//

  ‘என்றும்’ அல்ல அவர் அம்பாறை மாவட்ட சுதந்திரக்கட்சியின் அமைப்பாளரும் அக்கட்சியில் போட்டியிட்டு படுதோல்வி அடைந்தவருமான இனியபாரதியின் வலதுகை!

  Reply
 • thurai
  thurai

  //இவர்களிற்கு தீர்க்கதரிசன்ம், ந்ல்லெண்ணம்,பரஸ்பர உறவு, மனிதத்தன்மை, விட்டுக்கொடுக்கும் பழக்கம் என்பதன் அருச்சுவடே தெரியாதவர்கள்…..//
  சிங்கள இனமக்கள் கோபமுற்றால் தமிழரைக் கொல்வார்கள் என்ச்சொன்னதும் நீங்கள் தான். இதைச் சொல்வதும் நீங்கள் தான் துரை!//சாந்தன்

  தமிழர்களைச் சிங்களவ்ர் கொல்கின்றார்கள் என உலகிற்குக் காட்டி தமிழர்களிற்கு விடுதலை வேண்டுமென் போராடும் புலிகளின் குணம், சிங்களவ்ர்களின் குணங்களிலும் கொடியதென்பதைப் புரிந்தாலே போதும்.

  துரை

  Reply
 • palli
  palli

  //கைத்தூப்பாக்கியுடன் திரிகிற சந்திரநேரு சந்திரகாந்தன்//
  குளந்தை இது நல்லதல்ல கொல்ல அல்ல கொல்ல நினைத்தாலே நீங்கள் உங்கள் அன்றய உறவுகளுடன் இனைக்க நேரிடலாம்; உடுப்பை கழட்டி றோட்டில் ஓடவிட்டு விடுவார்கள் மக்கள். அந்த பொறுப்பை மகிந்தா அரசு உங்களை போன்றோரை விரட்ட மக்களுக்கு கொடுத்து விட்டார், உதாரனத்துக்கு வடக்கே அதுவும் தீவு பகுதியில் தோழர் அமைப்பு சத்தம் போட்டு பேசினாலே அடுத்த நிமிடமே ராணுவத்திடம் புகார்கள் போய்விடுகிறதாம்; ஒருநாள் முதல்வர்போல் இப்போ எல்லாம் உடனுக்குடன் பரிகாரம்; அதுவும் போட்டு கொடுக்க நாம் தயார் நிலையில்;;;;;

  Reply
 • chandran.raja
  chandran.raja

  இன்றுவரை மகிந்தா ராஜபக்சாவுக்கும் லங்கா சுகந்திரக்கட்சிக்குமே எமது முழு ஆதரவையும் வழங்கி வருகிறோம். தொடர்ந்தும் வழங்குவோம். ஒரு ஐக்கிய இலங்கைகாக வரலாற்றை வழிநடத்தி வந்தவர் என்பதில் எமக்கு எந்த வித ஐயமும் இல்லை. அதே போல் எதுவும் மாசுபடமுடியாது என்பதிலும் பிடிவாதமும் இல்லை.
  இது நாளை சுகந்திரகட்சிக்கும் ஏற்படலாம். இந்தக் குறைகள் தவறுகள் ஏற்படாதவாறு விழிகளை மூடாதவாறு அகலவே திறந்து வைத்துள்ளோம். நீண்டகாலம் எந்தவித பயனும் இல்லாமல் பொருள் இழப்பு உயிர் பலிகளை கொடுத்து பெறப்பட்ட இந்த வெற்றிகளை அற்பபதர்களுக்காக தண்ணீரில் கரைய அனுமதிக்க மாட்டோம்.

  பி.என்.பி பியசேன இலங்கை இனவெறியர்களின் பிரதிநிதியல்ல. மாறாக ஐக்கிய இலங்கையின் தமிழன் சிங்களவன் இல்லாத சமாதானத்தை கொண்டு வரும் தூதுவனாகவே இன்றுவரை கணிக்கிறோம். பியசேனாவையும் அவரின் மணைவி பிள்ளைக் பாதுகாப்பது ஒரு ஐக்கியஇலங்கை நேசிப்பனுக்கும் எல்லா இனமும் ஒருதாய் பிள்ளைகளே என்பதற்கும் சமனானதே!.
  இங்கு பியசேனாவுக்கு இழப்பு வரும் போது நெருக்கடிவரும் போது சமாதானத்திற்கு இழப்பு வருகிறது. ஐக்கியபட முயற்சி எடுக்கிற சுகந்திரகட்சிக்கு மகிந்த ராஜயபக்சாவுக்கு இழப்பு வருகிறது. இறுதியில் முழு இலங்கையும் முழுநச்சு வலையத்திற்குள் உள்ளீர்கப்படுகிறது. ஆகவே பி.என்.பி.பியசேனாவும் பியசேனாவின் குடும்மும் பாதுகாக்கப்படுவது அல்லாமல் உத்தரவாதமும் வழங்கப்பட வேண்டும்.இதை மதிப்புகுரிய மகிந்த ராஜபக்சா நேரடியாக தலையிட்டு இவர்களிடம் இருந்து பியசேனாவை பாதுகாத்து இனவெறிக்கு சாவுமணியடிக்க வேண்டும்.
  தமிழரசுக்கட்சி வரலாற்றை நாங்களும் புரிந்துகொண்டவர்களே! பியசேனாவை யாரும் அவர்களுடன் ஒப்பிடுவீர்களேயானால் அது உங்கள் தவறே!.

  Reply
 • inthiran
  inthiran

  “இனி இவர்களுக்கு அரசியல் வேலை இருக்குமென்றால் பியசேனாவுக்கு குழிபறிப்பதே நோக்கமாக கொண்டு ஒழுகுவார்கள்.”
  சந்திரன்ராஜா

  புலிகள் இலங்கை அரசைப் பார்த்து கடத்துகிறார்கள் கொல்கிறார்கள் சித்திரவதை செய்கிறார்கள் காணாமல் ஆக்குகிறார்கள் என சொல்வது போல் இப்போது தமிழரசுக் கடசி பற்றி நீங்களும் “கதை” விடத் தொடங்கிவிட்டீர்கள்.

  Reply
 • சாந்தன்
  சாந்தன்

  //…தமிழர்களைச் சிங்களவ்ர் கொல்கின்றார்கள் என உலகிற்குக் காட்டி தமிழர்களிற்கு விடுதலை வேண்டுமென் போராடும் புலிகளின் குணம், சிங்களவ்ர்களின் குணங்களிலும் கொடியதென்பதைப் புரிந்தாலே போதும்…..// துரை

  அப்போ யாராவது கொலை செய்தால் உலகுக்கு சொல்லக்கூடாது என்கிறீர்கள். விடுதலைக்கு போராடக்கூடாது என்கிறீர்கள்.
  அண்மையில் நீங்கள் தானே புலம்பெயர் தமிழர்கள் மேற்குலகுக்கு ஸ்ரீலங்கா அரசைப்பற்றிச் சொல்லி ‘தார்மீக’ அழுத்தம் கொடுக்க வேண்டும் எனச் சொன்னீர்கள் இல்லையா? எழுதிய மை காய்வதற்கு முன்ன்னரே இப்படி பக்கத்தைத் திருப்பிப் போடலாமா?

  Reply
 • palli
  palli

  //பிரச்சனைகளை சிங்களமக்களிடம் கொண்டு போங்கள் என்று புலிகளிடம் எத்தனை தடவை கேட்டுப் போராடி வெளியில் வந்தோம். சிலவேளை எமக்கு நடந்த அநீதிக்காக அவர்களே எமக்காகப் போராடியிருப்பார்கள். எல்லாச் சிங்களவர்களும் இனவெறியர்கள் அல்ல. அவர்களில் சிலர் சிங்கள பெளத்த பேரினவாதத்தினால் தலைகளுவப்பட்டவர்கள்.இனியாவது இரத்தம் சிந்தாது தமிழர்களின் உரிமைகளை மீட்டெடுக்க முயற்சியுங்கள். இந்தியாவின் பாச்சா இலங்கைமேல் பலிக்காது போனால் மீண்டும் ஒரு ஆயுதக்குழுவை உருவாக்கியோ அன்றி ஏதோ ஒரு வழியிலோ இனங்களுக்குள் முறுகுநிலையை ஏற்படுத்த இந்தியா முனையலாம்.//

  இதுக்கான அத்திவாரமே இந்தியாவின் யாழ் துதரகம்; யாழ் புண்ர்வாழ்வு, வரதர் வருகை, நேற்றய டெல்லி கூட்டம் (இலங்கை அரசின் போர் குற்றம் பற்றி) ஈஎன்டிஎல்எவ் வருகை இப்படி பலதை கவனிக்கலாம்; ஆனால் அதுக்கு யாரும் தயாராக இல்லை, இந்தியாவுக்கு அம்பாந்தோட்டையில் சீனா நிற்பதில் கவலை இல்லை, ஆனால் வடக்கு தமது கட்டுபாட்டில் இருக்க வேண்டும் என்பதில் இந்திய ராணுவம் மிக கவனமாக இருக்கிறது; இந்திய கடல்படை கப்பல் கூட திருகோணமலையில் வந்து நிற்ப்பதாக சொல்லுகிறார்கள்? ஆக குலன் சொன்னது போல் இலங்கயில் மீண்டும் ஒரு குழப்பத்தை இந்தியா உருவாக்க முனையும் எனதான் நானும் நினைக்கிறேன்,

  Reply
 • Aras
  Aras

  முள்ளி வாய்க்காலில் சம்பவங்கள் நடந்து முடிந்த கையோடு யார் யாருக்கு இந்தியா ஆயுதப் பயிற்சி தொடங்கியிருக்குமோ கடவுளுக்கே வெளிச்சம்.

  Reply