கொடுத்த வாக்குறுதியை ரணில் மீறிவிட்டார்- ரணில் மனோ உறவு முறிந்தது

ranil-mano.bmpஇலங்கையின் பிரதான எதிர்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் அமைந்துள்ள கூட்டணியிலிருந்து விலகுவதாக மனோ கணேசனின் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி அறிவித்துள்ளது. மனோ கணேசனுக்கு ஐக்கிய தேசிய முன்னணி வாக்களித்தபடி தேசியப் பட்டியலில் நியமனம் வழங்கப்படாததை எதிர்த்தே இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மனோ கணேசனுக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்குமிடையிலான ஒன்பது வருடகால உறவில் விரிசல் ஏற்பட்டுவிட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

ரணில் விக்ரமசிங்க அவர்களின் தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியினர் தம்முடன் எழுத்துபூர்வகச் செய்து கொண்ட உடன்படிக்கையின்படி நடந்து கொள்ளவில்லை என ஜனநாயக மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன்  தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சிக்குளேயே இருக்கும் சில பேரினவாத நபர்களாலேயே தமது கட்சிக்கு தேசியப் பட்டியலில் இடம் கிடைக்காமல் போனது என்றும் பிரபா கணேசன் கருத்து வெளியிடுகிறார்.

நாடாளுமன்றத் தேர்தலின் போது தமது கட்சிக்கு கொழும்பு தேர்தல் மாவட்டத்தில் ஒரு இடத்தை விட்டுக் கொடுப்பதற்கு ஈடாக தேசியப் பட்டியலில் ஜனநாயக மக்கள் முன்னணிக்கு ஒரு இடம் வழங்கப்படும் என்று ரணில் விக்ரமசிங்க உறுதியளித்ததாகவும் மனோ கணேசன் கூறுகிறார்.

இது தொடர்பில் ஜனநாயக மக்கள் முன்னணியின் சிரேஷ்ட உப தலைவர் வேலணை வேணியன் விடுத்துள்ள அறிக்கையில் :- கடந்த ஒன்பது வருடங்களுக்கு மேலாக எமது தலைவரும் நாங்களும் நேற்றுவரை ஐ. தே. கட்சியின் தலைவரை நம்பியிருந்தோம். எமது தலைவருக்கு ஐ. தே. கட்சி மனிதாபிமான அடிப்படையில் தேசியப் பட்டியலில் ஒரு கூட்டுக் கட்சியின் தலைவர் என்ற வகையில் பாராளுமன்றத்தில் ஓர் இடம் கொடுத்திருக்க வேண்டும்.

இன்று அக்கட்சி தமிழ் மக்களின் காலையே வாரி விட்டது போலவே கருதுகிறோம். இன்று முதல் ஐ. தே. கட்சிக்கும் எமக்கும் இடையே இருந்த கூட்டணி முறிவடைந்துவிட்டது. ஐக்கிய தேசியக் கட்சி ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரை மட்டுமல்ல எமது கட்சி சார்ந்த பல இலட்சக் கணக்கான வாக்காளர்களான தமிழ் மக்களுக்கே துரோகம் செய்து விட்டதாகவே கருதுகிறோம்.

Show More

Your email address will not be published. Required fields are marked *

15 Comments

  • மாயா
    மாயா

    ஒரு சில தமிழருக்கு தேசிய பட்டியலில் இடமளிக்க முடியாத ஐ.தே.கட்சி, எப்படி தமிழ் மக்களுக்கு விமோசனம் ஒன்றைக் கொண்டு வரும்? ஐதேகட்சி எப்போதும் தமிழரது வாக்களை எதிர்பார்த்ததே தவிர , தமிழருக்கு எதுவும் கொண்டு வர முயன்றதில்லை. தமிழருக்கு எதிரான அனைத்து கலவரங்களும் ஐதேகட்சி காலத்திலேயே இடம் பெற்றன.

    Reply
  • தமிழ்வாதம்
    தமிழ்வாதம்

    ஒப்பந்தங்கள்,உறுதி மொழிகள் இதுவரை எத்தனை காற்றோடு கரைந்தன.
    பேரினவாதம் என்பது தனிமனித உறவு,நம்பிக்கைகளுக்கு மேற்கடந்தது என்பதை மீண்டும் பட்டுத் தெளியும் நிலையில், மனோ கணேசன்!
    நீங்களும் இன்னொரு ஒடுக்கப்பட்ட இனத்தின் பிரதிநிதிதான்.
    இன்னும் எத்தனை கறிவேப்பிலைகள்…

    Reply
  • sumi
    sumi

    மகிந்தவை நம்பினோர் கைவிடப்படார். இது ஏன் மனோவுக்கு தெரியவில்லை.

    Reply
  • தமிழ்வாதம்
    தமிழ்வாதம்

    மகிந்தவை நம்பினோர் கைவிடப்படார் என என் மனசுக்கு தெரியவில்லை.

    டக்ளஸ் தேவானந்தா : பாரம்பரிய,சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர்

    விநாயகமூர்த்தி முரளிதரன் – மீள் குடியேற்றத்துறை பிரதி அமைச்சர்

    37 அமைச்சர்களில் ஒரு தமிழ் அமைச்சரும்,
    39 பிரதி அமைச்சர்களில் ஒரு தமிழ் பிரதி அமைச்சரும் ஆக
    இரண்டு பேருடன்…….

    Reply
  • NANTHA
    NANTHA

    ஈபிடிபியின் தலைவர் முழு அமைச்சர். இன்னொரு அங்கத்தவர் சந்திரகுமார் பாராளுமன்ற குழுக்களின் பிரதி தலைவர். விநாயகமூர்த்தி முரளிதரன் பிரதி அமைச்சர்.

    மகிந்தவை நம்பியோர் கைவிடப்படவில்லை. ஆனால் ரணிலை நம்பியோர் கைவிடப்பட்டுள்ளனர். ஆயினும் சம்பந்தர் கோஷ்டிக்கு ராஜரீக கடவுச் சீட்டுக்கள் கிடைத்துள்ளன. அவர்கள் வழமை போல “தமிழர் பிரச்சனைகள்” பற்றிப் பேச வெளிநாடுகள் போகிறார்கள் என்று காதில் பூ சுற்றி பிழைத்துக் கொள்ளலாம்!

    Reply
  • sumi
    sumi

    இது வேண்டா வாதம். அப்படியென்றால் தமிழ் மொழி பேசும் இஸ்லாமிய சகோதரர்களை இன்னமும் தாங்கள் தமிழர்களாக ஏற்றுக்கொள்ளவே இல்லையா???

    Reply
  • தமிழ்வாதம்
    தமிழ்வாதம்

    இங்கே நான் குறிப்பிட்டது,பிணக்க அரசியலிருந்து இணக்க அரசியலுக்குப் போன இரு தமிழர்களை மட்டுமே. எகிறிக் குதித்து விட்டு, போன இரு தமிழர்களைப் பற்றியதே.
    சிங்கள பவுத்த பேரினவாதம் என்ற கட்டமைப்பு ஒடுக்கப்பட்ட இனத்திற்கு எந்த உரிமையும் தரமுயலாது என்பதே என் வாதம்.
    தேசியப்பட்டியலில் இடம் கிடைக்காமல் போன பின் மனோ கணேசனுக்கு பேரினவாத ஞானம் பிறக்கிறது. இந்த ஞானம் இராமநாதனிலிருந்து தொடங்கி இன்றுள்ள எலும்புருக்கிகள் வரை தொடர்கதையாய்…. இங்கே சிலரது கேள்வி, விளக்கம் அவர்தம் அறியாமையைத்தான் வெளிப்படுத்துகிறது.

    Reply
  • PALLI
    PALLI

    தமிழ்வாதத்தின் கருத்தை என்னால் முழுமையாக மறுக்க முடியவில்லை; கருனாவை தயவு செய்து தமிழர் கணக்கில் எடுக்காதீர்கள்? எனக்கு தேசிய பட்டியல் மீதே கோபம் வருகிறது ; மக்களால் நிராகரிக்க பட்டவர்கள் எப்படி மக்கள் சேவை செய்ய முடியும்; கருனா தேர்தலில் நின்றால் 50தனி வாக்கு பெறுவதுக்கே பணம் கொடுக்க வேண்டி வரும்; ஆனால் அவர் இன்று அமைச்சர்; அதுவும் மீள் குடியேற்ற பிரதி அமைச்சராம்; என்னத்தை சொல்ல;

    Reply
  • sumi
    sumi

    இருளிலிருந்து வெளிச்சத்திற்கு வருபவர்களை,தொடர்ந்தும் இருளிலிருக்கவே அடம் பிடிப்பவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. இதுவும் அறியாமைதான். இருளில் கருணா செய்த தீமைகளை கைகொட்டி ஏற்றுக்கொண்டீர்கள். ஆனான் இன்று மனம் மாறி வெளிச்சத்திற்கு வந்து கருணா செய்யும் நன்மைகளை உங்களால் ஜீரணிக்க முடியவில்லை. இதுதான் உங்கள் விவாதத்தின் நியாயம். அப்படியென்றால்,மறைந்த பிரபாகரனும் அன்று மனம் மாறி அரசுடன் இணைந்து செயல்பட்டு இன்று ஒரு பிரதி அமைச்சராகி இருந்தால் மட்டும் உங்களை போன்றவர்களின் விவாதம் நியாயமானதாக இருக்கும் அப்படித்தானே. “புனிதன்னாக பூசிக்கப்படுவதை விட, நல்ல மனிதனாக நேசிக்கப்படுவதே மேல்”- நன்மை செய்ய விரும்புவர்களை தூற்றாதீர்கள். போற்றுங்கள் ஏனெனில் மக்களுக்கு மண்ணில் தேவைகள் அதிகம் உண்டு. ஆகவே நீங்களும் விரைவில் வெளிச்சத்திற்கு வரப்பாருங்கள், இருளில் இருந்துகொண்டு வீண் விவாதம் பேசி காலத்தை வீணடிக்காதீர்கள்.

    Reply
  • BC
    BC

    தமிழ்வாதம் சொல்கிறார் மகிந்தவை நம்பினோர் கைவிடப்படார் என என் மனசுக்கு தெரியவில்லை என்று, பின்பு இரண்டு தமிழ் அமைச்சர்கள் தமிழருக்கு என்று கவலை கொள்கிறார். பின்பு அவர்களை பார்த்து துற்றுகிறார்.
    உதாரணத்துக்கு மகிந்தா 7 தமிழர்களை அமைச்சர்களா நியமித்தாலும் தமிழ்வாதத்தை பொறுத்தவரை அவர்களை துற்றுவார். Sumi கூறுவது சரியே. அளவிட முடியா உயிரிழப்பும் கோடிக்கணக்கில் சொத்திழப்புக்கும் ஆளானவர்களை இருளில் இருந்துகொண்டு வீண் விவாதம் பேசி மேலும் அழியவிடாதீர்கள். வெளிநாடுகளில் உறவினர்கள் அற்றவர்கள் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்பதையும் ஒருதடவை யோசித்து பாருங்கள்.

    Reply
  • palli
    palli

    //. இதுவும் அறியாமைதான்.// நீங்க சொன்னா சரியாகதான் இருக்கும்:

    //கருணா செய்த தீமைகளை கைகொட்டி ஏற்றுக்கொண்டீர்கள்.//
    யார் அப்படிச் சொன்னது? பாருங்கள் பல்லியின் கடந்த கால பின்னோட்டங்களை;

    //இன்று மனம் மாறி வெளிச்சத்திற்கு வந்து கருணா செய்யும் நன்மைகளை உங்களால் ஜீரணிக்க முடியவில்லை.//
    சற்று கடினத்தை பாராமல் அந்த நன்மைகளை சொல்லுங்க அவர் செய்த தீமைகளை நான் சொல்லவில்லை அவரது கடந்த கால சாரதியும் இன்றய கிழக்கு முதல்வருமான குழந்தை சொல்ல கேட்டதில்லையா?

    //பிரபாகரனும் அன்று மனம் மாறி அரசுடன் இணைந்து செயல்பட்டு இன்று ஒரு
    பிரதி அமைச்சராகி இருந்தால்//
    உங்கள் வாய்க்கு சக்கரைதான் போட வேண்டும்; எத்தனை உயிர்கள் தப்பியிருக்கும்; அந்த கொடுப்பனவுதான் தமிழருக்கு இல்லையே;

    //புனிதன்னாக பூசிக்கப்படுவதை விட,நல்ல மனிதனாக நேசிக்கப்படுவதே மேல்”-//
    ஜயோநல்ல மனிதனாக இருக்காட்டிலும் பரவாயில்லை கெட்ட சிந்தனைகள் இல்லாமல் இருந்தாலே போதுமே;

    // நன்மை செய்ய விரும்புவர்களை தூற்றாதீர்கள்.// நான் எழுதுவது கருனா பற்றி கர்ணன் பற்றியல்ல;

    //போற்றுங்கள் ஏனெனில் மக்களுக்கு மண்ணில் தேவைகள் அதிகம் உண்டு.ஆகவே//
    திருத்துங்கள் மக்களுக்கல்ல மகிந்தாவுக்கு;

    //நீங்களும் விரைவில் வெளிச்சத்திற்கு வரப்பாருங்கள்,//
    இப்போ மட்டும் என்ன பங்கரிலா இருக்கிறேன்; வெட்டையில் கிறுகுவதற்க்கு;

    //வீண் விவாதம் பேசி காலத்தை வீணடிக்காதீர்கள்.:://
    இப்படி சொல்லி புலம் பெயர் தேசத்தில் இருந்து கருனாவுக்கு உதவ போன சின்னமாஸ்ற்றர் நிலை தெரியாதோ, என்னமாய் படுத்துறியள் பல்லியை;

    Reply
  • sarujan
    sarujan

    தேசியப்பட்டியல் மூலம் பாராளமன்றம் செல்முடியாமல் போனதால் மனோவிற்கு ரணில் எதிரி. ரணில் ஐதேக வும் தமிழருக்கு செய்ததெல்லாம் துரோகம்தான். இருக்கட்டும். மனோ கணேசன் எப்ப ஒழுங்காய் நடந்திருக்கிறார். தன்னுடைய பதவியை குறிவைத்துதானே எல்லாம் செய்தார். கடைசி வரைக்கும் புலிகனளுக்காய் வக்காலத்து வாங்கியவர். சரத் ஜனாதிபதி வேட்பாளர் என்றால் ஆதரவில்லை என்றவர்- பின்னர் எப்படியெல்லாம் சரத்தோடு கூடிக்கூலாவினார். தனது சகோதரரையும் எம்பியாக்குவதற்காக வெல்க்கூடிய கொழும்பில் நிறுத்திவிட்டு தான் கண்டியில் போய்நின்று மண்கவ்வினார். இதுக்கு யார் பொறுப்பு? யுஎன்பி 46 சீற்றோட தான் நின்று மல்லாடேக்க கண்டபாட்டு கட்சி தாவக்கூடியவர்கள் பற்றி ஏன் கனக்க அலட்டிக் கொள்ளவேணும். என்னும் பெரும்பான்மை அலைக்குள் சிறுபான்மை கட்சியள் எல்லாம் அடிபட்டு கிடக்கேக்க மனோ கணேசனைப்பற்றி யுஎன்பி ஏன் கவலைப்படப் போகிறது. விலத்திப்போனால் இன்னம் லாபம்தான். அடுத்த தேர்தலில் இன்னும் இனவாதம் பிரவாகம் கொள்ளும். அப்போதுதான் அரசியலில் வெல்லமுடியும். தமிழ்மக்களுக்கு ஒரே வழி ‘மோட்டுச் சிங்களவனிட்ட’ இருந்து ஏதாவது முடிஞ்சா கற்றுக்கொண்டு திரும்பவும்….

    Reply
  • NANTHA
    NANTHA

    தமிழரும் சிங்களவரும் சமன் என்று சிங்கள நாட்டில் அரசியல் செய்த ஒரு அரசியல் கட்சிக்கும் தமிழர்கள் வாக்களித்தது கிடையாது. “தமிழரசுக் கட்சி” என்று தமிழிலும் “Federal Party” என்று ஆங்கிலத்திலும் இரண்டு அர்த்தத்தில் ஊரை எமாற்றுபவர்களுக்கே வாக்களிப்பது மாத்திரமின்றி மற்றவர்களை “துரோகிகள்”, “ஒட்டுக்குழுக்கள்” என்றும் முத்திரை குத்தி தங்கள் தமிழ் துவேஷத்தை நிலை நிறுத்தும் கும்பல்களுக்கு “தமிழ் அமைச்சர்கள்”களின் எண்ணிக்கை பற்றிப் பேச என்ன யோக்யதை உள்ளது?

    தமிழர்களின் பிணங்கள் தமிழ் அரசின் உரங்கள் என்று இப்பொழுதும் எண்ணி புலம்பும் சுய நலக் கூட்டங்களுக்கு அங்குள்ள சாதாரண தமிழர்களின் மனோ நிலையோ, தேவைகளோ முக்கியமல்ல. சிங்களவர்கள் தங்களை தோளில் தூக்கி திரிய வேண்டும் என்று எதிர் பார்க்கிறார்கள்.

    இவர்கள் அப்படி ஒரு கற்பனையை சினிமா பிடிக்கலாம். சீமான் போன்ற நாற்றம் பிடித்த புல்லர்களின் உதவிகளை நாடி ஊரை ஏமாற்றலாம். தடையே கிடையாது, ஆனால் சில்லறைதான் கிடைக்காது.

    Reply
  • rohan
    rohan

    sarujan //மனோகணேசன் எப்ப ஒழுங்காய் நடந்திருக்கிறார். தன்னுடைய பதவியை குறிவைத்துதானே எல்லாம் செய்தார். கடைசிவரைக்கும் புலிகனளுக்காய் வக்காலத்து வாங்கியவர்.//

    ஒரு கட்சியில் இருந்து வென்றுவிட்டு அவனவன் ஆளும் கட்சிக்கு மாறும் போது மனோ கணேசன் ஐதேகவிலேயே தொடர்ந்து இருந்தார். உயிர் ஆபத்து வரும்போது கூட கட்சி மாறவில்லை அவர். பதவியைக் குறி வைத்து அவர் செய்வதானால் எத்தனையோ செய்திருக்கலாம். புலிக்கு ஆதரவு கூட அவர் சொந்த றிஸ்க்கில் தானே செய்தார். புலி வளர்த்து விட்டவர்கள் கூட புலியின் மார்பில் பாய்ந்த போதும் தனக்குச் சரி என்று பட்டதைச் செய்தவர் அவர். புலியின் தமிழ் ஈழத்தில் தனக்கு ஏதும் இல்லை என்று தெரியாதவரல்ல அவர். என்ன, ஈழத்தின் உப ஜனாதிபதிப் பதவியா அவருக்குக் காத்திருந்தது?

    sarujan //தனது சகோதரரையும் எம்பியாக்குவதற்காக வெல்க்கூடிய கொழும்பில் நிறுத்திவிட்டு தான் கண்டியில் போய்நின்று மண்கவ்வினார். இதுக்கு யார் பொறுப்பு? யுஎன்பி 46 சீற்றோட தான் நின்று மல்லாடேக்க கண்டபாட்டு கட்சிதாவக்கூடியவர்கள் பற்றி ஏன் கனக்க அலட்டிக்கொள்ளவேணும்.//

    உறுதியான – வெல்லத்தக்க தமிழ் ஆசனம் ஒன்றைக் கொழும்பில் பெறுவதையும் வெல்லச் சிரமமான தமிழ் ஆசனம் ஒன்றைக் கண்டியில் பெறுவதையும் ஐதேக விரும்பியது. அவ்வகையில், கண்டியில் நிற்குமாறு மனோ கணேசனை ஐதேக தான் கேட்டுக் கொண்டது. தோற்றாலும் அவருக்கு ஒரு தேசியப் பட்டியல் ஆசனம் தருவதாக ஒரு ‘கனவான் ஒப்பந்தம்’ வேறு. கனவான் ரனில் கணேசனைக் கவிழ்த்து விட்டார்.

    கொழும்பில் நின்றால் தமக்கு ஒரு ஆசனம் கிடைக்கக் கூடும் என்று கூட்டமைப்பு நினைத்தது. அப்படி நின்றால் நேரடி ஆசனம் இல்லை என்றாலும், தேசியப் பட்டியல் வாய்ப்பை சில வாக்குகள் மூலம் உறுதி செய்யலாம் என்பது அவர்கள் கணக்கு. கூட்டணி கொழும்பில் நின்றால் தாம் யாழ்ப்பாணத்தில் நிற்பேன் என்று கணேசன் தெரிவித்ததால் தான் கூட்டமைப்பு பின்வாங்கியது. யாழ்ப்பாணத்தில் நின்றிருந்தால் மனோ கணேசன் வென்றிருக்கவும் கூடும்.

    சரத்தை அவர் எதிர்த்தது சரி! மகிந்தவைத் தோற்கடிக்க இலங்கையர்களுக்கு இருந்த ஒரே ஆயுதமும் அவர் தான். இவ்வகையில், பல இலட்சம் தமிழர்கள் தேர்தலின் போது செய்த முடிவை அவர் தேர்தலுக்கு முன்னரே செய்திருந்தார். சரத்துக்கு வாக்களி என்று அவர் மேடை மேடையாய் ஏறி முழங்கியதாக நான் அறியவில்லை.

    ‘கண்டபாட்டுக்குக் கட்சி தாவக்கூடியவர்கள்’ என்று நீங்கள் யாரைச் சொல்லுகிறீர்களோ தெரியவில்லை. கணேசன் அப்படிக் கட்சி மாறவில்லை. ஆதாரம் ஏதவது வைத்திருக்கிறீர்களா? கவனம் இல்லாமல் வாயை விட்டு விட்டீர்களோ என்னவோ?

    Reply
  • asees
    asees

    good for mano.

    Reply