கிளிநொச்சி, முல்லையில் பெற்றோரை இழந்த சிறுவர்கள் 960!

கடந்த கால யுத்த அனர்த்தங்களால் கிளிநொச்சி, முலலைத்தீவு மாவட்டங்களில் 960 சிறுவர்கள் பெற்றோரை இழந்துள்ளதாக வட மாகாண பொது நிர்வாக பிரதிப் பிரதம செயலாளரும் கிளிநொச்சி மாவட்டத்தின் முன்னாள் அரசாங்க அதிபராக இருந்தவருமான தி.இராசநாயகம் தெரிவித்துள்ளார். முதற்கட்ட கணக்கெடுப்பில் இவ்விபரம் தெரியவந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த 960 சிறுவர்களும் தந்தை, தாய் இருவரையும் இழந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கிளிநொச்சி ஜெயந்திநகரில் அமைக்கப்பட்டுள்ள மகாதேவ ஆச்சிரம சைவச் சிறுவர் மகளிர் இல்லத்தில் தாய் தந்தையரை இழந்த 100 பெண்கள் முதற்கட்டமாக தற்போது இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர் எனபதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இதே வேளையில், முழுமையான கணக்கெடுப்பொன்று நடத்தப் பட்டால் பெற்றோரை இழந்து அநாதைகளாக்கபட்டுள்ள சிறுவர்களின் தொகை மேலும் அதிகரிக்கும் என்பது குறிப்படத்தக்கது.

Show More
Leave a Reply to BC Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

6 Comments

  • Pandiyan
    Pandiyan

    தயவு செய்து இந்த மாதிரி பொய் பிரச்சாரத்தை தொடங்க வேண்டாம். வன்னியில் பொது மக்கள் ஒருவரும் கொல்லப்படவில்லை என அரசும் ராணுவமும் கூறுகின்றது. இந்த செய்தியானது புலி பினாமிகளுக்கும் வட்டுக் கோட்டைக்கும் நாடுகடந்தவர்களுக்கும் மகிழ்ச்சியாக அமைந்து விடும். அதனால் தான் யூலை 2009 ல் தெரிய வந்த இந்த மாதிரியான விடயங்களையும் யாழ் கடத்தல் சம்பவங்களையும் லேட்டாக போடுகிறீர்கள் போலும்.
    மனித உரிமைவாதியும் ஜனநாயகவாதியுமான ஒருவர் கூறனார்.Any way. War is over. ஆனால் அதன் மறு பக்கத்தை அவர் புரிந்து கொள்ள மறுக்கிறார். நோயை தீர்க்க கூறினால் நோயாளியை தீர்த்துக் கட்டிவிட்டு பின்னர் நீங்கள் நோயைப்பற்றி கவலைப்பட வேண்டாம் என சொல்லுவது போல இது உள்ளது என எனது வைத்தியரான நண்பர் தெரிவித்தார். மேலும் அரச ஆதரவாளரான ஒரு தமிழ் அரசியல்வாதி தான் இப்போது யாழ்ப்பாணத்தில் பயமின்றி உலாவுவதாக தெரிவித்தார். அவர் பயமின்றி உலாவுவதற்காகவா ஆயிரக்கணக்கான மக்கள் அழிக்கப்பட்டார்கள்?
    இத்தனை சிறுவர்கள் அநாதைகள் ஆக உள்ளனர் என்றால் எத்தனை சிறுவர்கள் கொல்லப்பட்டனர்?
    அவை பற்றி லேக்கவுஸ் பத்தரிகையான தேனி, ஏசியன்ரிபியூன் போன்றவை என்ன எழுதுகின்றன? மேலும் உத்தியோகப்பற்றற்ற அரச பேச்சாளரான நொய்யல் (ஆஸ்திரேலியா) போன்றவர்கள் என்ன கூறுகின்றனர்? வட- கிழக்கில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட பசில் விரல் நுனியில் விபரங்களை வைத்திருக்கின்றார் என சொன்ன லண்டன் அபிவிருத்தியாளர் என்ன கூறுகின்றார்?
    பாண்டியன் தம்பிராஜா.

    Reply
  • மாயா
    மாயா

    // Pandiyan on April 30, 2010 3:54 pm தயவு செய்து இந்த மாதிரி பொய் பிரச்சாரத்தை தொடங்க வேண்டாம். வன்னியில் பொது மக்கள் ஒருவரும் கொல்லப்படவில்லை என அரசும் ராணுவமும் கூறுகின்றது.//

    இது குறித்து வன்னி போரின் போது முள்ளிவாக்காலில் இருந்த ஜெனரல் ஜகத் டயஸ், தற்போது சுவிஸ் – ஜெர்மனி உதவி தூதுவராக கடைமையாற்றுகிறார். அவர் சுவிஸுக்கு கடந்த வாரம் வந்திருந்த போது அளித்த பேட்டியின் ஒரு பகுதி இதோ:-

    கேள்வி: வன்னிப் போரின்போது பொதுமக்கள் பலரும் கொல்லப்பட்டதாகவும், காயமடைந்ததாகவும் கூறப்படுகின்றது. வன்னிப் போர் நடவடிக்கையின் போது 57வது படைத்தளபதியாக நீங்கள் இருந்தீர்கள் என்ற ரீதியில் இதுகுறித்த உண்மை நிலையென்ன என்பதைக் கூற முடியுமா?

    ஜகத் டயஸ்: இந்தக் குற்றச்சாட்டினை முற்றுமுழுதாக நான் மறுக்கவில்லை. பொதுமக்கள் கொல்லப்பட்டும் உள்ளனர். காயமடைந்தும் உள்ளனர். இதற்குக் காரணம் நாமல்ல. புலிகள் தான் இதற்கு காரணமாகும். புலிகள் எம்முடன் (இலங்கை அரச படையுடன்) மோதல்களில் ஈடுபட விரும்பியிருப்பின் அவர்கள் தாம் தடுத்து வைத்திருந்த அப்பாவிப் பொதுமக்களை வெளியேறுவதற்கு அனுமதித்து விட்டு எங்களுடன் மோதல்களில் ஈடுபட்டிருக்கலாம். இவ்வாறு மோதியிருந்தால் நாம் மே 19வரை பொறுத்திருக்க வேண்டி ஏற்பட்டிராது. அதற்கு ஆறு மாதங்களுக்கு முன்னமே இந்தப் போர் நிறைவடைந்து புலிகளின் பிரச்சினையை முற்றுமுழுதாக முடிந்திருப்போம். ஏனெனில் நாம் உலகத்திலேயே பலம்வாய்ந்த இராணுவமாக தற்போது திகழ்கிறோம் என்பதை நாம் புலிகளை அழித்துக் காட்டி நிரூபித்துள்ளோம்.
    பொதுமக்கள் மீது நாம் வேண்டுமென்றோ அன்றில் திட்டமிட்டோ எந்தவொரு தாக்குதலையும் மேற்கொள்ளவில்லை. நான் ஒரு பௌத்த மதத்தைச் சேர்ந்தவன். பௌத்தமோ, இந்துவோ, இஸ்லாமோ, கிறிஸ்தவமோ தர்மத்தைத் தான் போதிக்கின்றன. நாங்கள் என்ன பாவத்தைச் செய்கின்றோமோ அது திரும்பவும் எங்களுக்கே வந்துசேரும் என்பதும் எமக்குத் தெரியும். ஆகவே நாம் திட்டமிட்டு எதையும் செய்யவில்லை. தாக்குதலின் போது இடையில் அகப்பட்டு பொதுமக்கள் கொல்லப்பட்டதும் காயமடைந்ததும் உண்மைதான். இதற்குக் காரணம் புலிகளே தவிர நாமல்ல.
    புலிகள் பொதுமக்களை வெளியேறுவதற்கு விட்டிருந்தால் பொதுமக்கள் அழிவு குறைந்திருக்கும். பொதுமக்கள் வெளியேறி வந்தபொழுது நாம் அவர்களை மனிதாபிமான ரீதியில் எவ்வாறு அனுசரித்து உபசரித்து எவ்வாறான உதவிகளைச் செய்தோம் என்பது உலகமே அறியும். இங்குள்ள புலம்பெயர் தமிழ்மக்களுக்கும் தெரியும். ஆகவே நாம் பொதுமக்களை அழிக்க வேண்டும், கொல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் எதையும் செய்யவில்லை என்பதை உறுதியாகத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.

    மேலதிக விபரங்கள்:
    athirady.info/2010/04/27/69346?xsid=dffg546sdf4g5sdf456g4fg5h4d465f5g

    Reply
  • Ajith
    Ajith

    Maya,
    Thanks for your source and sincerity. King Rajapakse said none of the tamils were killed by Sinhala army. King, its ministers, its military all are buddhists. They never kill or lie unlike tamils and hindus or Chritians. Rajapakse appointed Jegath Dias as foregin envoy because he is a real buddhist. In 1958, 1977 and 1983 tamils killed hundreds of Sinhalese. Sinhala buddhists tolerated in the name of Buddha. Sinhala army never kill tamils with intention. It is true that over 100,000 tamils killed within three months. Who asked them to come here? Sinhala army gave several warnings to illegal immigrants to leave all tamils from Sinhala since 1948. It is their fault to live in this country. They are illegal immigrants “Kalla thony”. They should understand they have no right in this country. I agree with Maya that all Kallathonies should leave Sinhala Lanka.

    Reply
  • BC
    BC

    //கடந்த கால யுத்த அனர்த்தங்களால் கிளிநொச்சி முலலைத்தீவு மாவட்டங்களில் 960 சிறுவர்கள் பெற்றோரை இழந்துள்ளதாக… //
    அரசால் மவுனிக்க வைக்கப்பட் ஆயுத பூசை செய்யும் புலிகளின் ஆயுதங்கள் முன்பே மவுனித்திருந்தால் இந்த சிறுவர்கள் பெற்றோரை இழந்திருக்கமாட்டார்கள். பல பெற்றோரும் பிள்ளைகளை இழந்திருக்க மாட்டார்கள்.

    Reply
  • NANTHA
    NANTHA

    மாயாவின் கூற்றில் உண்மை உண்டு. அரசாங்கம், மக்கள் கொல்லப்படவில்லை என்று எங்கும் கூறியது கிடையாது. சில புலி ஆதரவுகள் மாத்திரமே வெளி நாடுகளில் கூறுகிறார்கள். அந்த செய்தியின்படி அந்த சிறுவர்கள் யாருடன் தற்போது தங்கியுள்ளனர் என்ற விபரத்தைக் காணவில்லை. அந்தக் கணக்கெடுப்பு எப்படி யாரால் நடாத்தப்பட்டது என்பது பற்றிய தகவல்கள் தரப்படாது உள்ளது சில கேள்விகளை எழுப்பியுள்ளது.

    வடக்கில் இப்போது பல “அநாதை” விடுதிகள் முளைத்துள்ளன. சகலதும் அரச உதவிகளைப் பெறும் ஸ்தாபனங்களே ஆகும். அதில் நடக்கும் போட்டிகளில் பல “தில்லுமுல்லுகள்” ஆரம்பித்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. அனாதைகள் ஆகாமலே அனாதைகள் ஆக்கி அரச உதவி பெற முயற்சிகள் நடப்பதாகவும் தெரியவந்துள்ளது.

    Reply
  • மாயா
    மாயா

    அஜித், முதலில் உங்களிடம் ஒரு வேண்டுகோள், தமிழருக்காக பேசும் நீங்கள் தேசத்தில் தமிழில் எழுதுங்கள். அதுவே உங்களை தமிழ் பற்றாளராகக் எமக்கு காட்டும். இல்லாவிட்டால் இங்கீலிசு தமிழராகவே எம்மால் உணர முடியும். பெரிதாக கல்வி கற்காத பலர் இணையத்தில் தமிழில் எழுதுகிறார்கள். இவ்வளவு ஆங்கில புலமையுள்ள உங்களால் தமிழில் எழுத பல வழிகள் இணையத்தில் தேடி , படித்து எழுதலாம். தமிழில் கதையுங்கள், தமிழில் எழுதுங்கள். அதன் பின்னர் தமிழீழம் குறித்து தமிழில் விவாதிக்கலாம். எனக்கு ஆங்கில அறிவு குறைவு. நானும் எதிர்காலத்தில் தேசத்தில், ஜெர்மன் மொழியில் எழுத வேண்டி வரும். என்னைப் போல் ஐரோப்பா வாழ் தமிழர்கள் , பிரெஞ், இத்தாலி , …… என பல மொழிகளில் எழுதத் தலைப்படுவார்கள்? உலக தமிழர்களும் , தாம் வாழும் நாட்டு மொழிகளில் எழுதத் தலைப்படுவார்கள்.

    //In 1958, 1977 and 1983 tamils killed hundreds of Sinhalese. Sinhala buddhists tolerated in the name of Buddha.//

    in the name of Buddha என்ற பெயரில் இலங்கையில் கலவரங்கள் நடக்கவில்லை. இது என்ன புதுக் கதை? தமிழ் – சிங்கள – முஸ்லீம் என கலவரங்கள்தான் நடந்தன. இஸ்லாமியர்களோடு ஆரம்பத்தில் ஏற்பட்ட கலவரங்களின் போது சிங்களவரும் , தமிழரும் சேர்ந்தே இஸ்லாமியரை தாக்கினர். தமிழருக்கு எதிரான கலவரங்களின் போது சிங்களவர்களும் , இஸ்லாமியரும் சேர்ந்தே தாக்குதல் , கொலை மற்றும் கொள்ளைகளில் ஈடுபட்டனர். இங்கே பெளத்தம் என்பது முதன்மைப்படுத்தப்படவில்லை.

    //It is true that over 100,000 tamils killed within three months. Who asked them to come here? //
    இராணுவத்தால் கொல்லப்பட்ட தமிழரை விட , புலிகளால் கொல்லப்பட்ட தமிழர்கள் அதிகம். இவை எதிர் காலத்தில் வெளிச்சத்துக்கு வரும். இப்போதே வன்னியில் வாழ்ந்த மக்களால் சிறிது சிறிதாக விபரங்கள் தெரிவிக்கப்படுகிறது. பெரிதாக ஊடகங்களில் வரவில்லை. உதாரணத்துக்கு , அண்மையில் நான் சந்தித்த ஒரு வன்னிக் குடும்பம் சொன்ன கதை:

    “எனது பள்ளிக் காலம் வன்னியில்தான். என்னோடு வகுப்பில் படித்த 35 மாணவ – மாணவிகளில் , இன்று எஞ்சியிருக்கும் 4-5 பேரைத் தவிர ஒருவரும் உயிரோடில்லை. நான் புலிகளின் ஆதரவாளராக இருந்தவள். புலத்தில் புலிப் போராட்டங்களில் முதன்யேற்றவள்.உதவியவள். நான் கடந்த வாரம் வன்னிக்கு போகும் வரை புலியாகவே இருந்தேன். என் பெற்றோர் வரச் சொன்னதால் சந்தேகத்தோடு போனேன். அங்கு போனதும் என் மனப்பயம் இல்லாமல் போனது. இராணுவம் முன் போல் இல்லை. யாருக்கும் துன்புறுத்தல் செய்யவில்லை. அதிக படையினர் தமிழ் கதைக்கிறார்கள்.

    அங்கு போன போது எனது பள்ளி தோழர்களும் , தோழிகளிலும் இன்று உயிரோடு இருப்பவர்கள், உடல் மற்றும் மன ஊனமுற்ற சிலர் மட்டுமே. ஏனையவர்கள் இறந்து போயுள்ளனர். ஒரு சிலர் தடுப்பு முகாமில் புலிகளென தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் எனச் சொன்னார்கள். கடைசி யுத்த நேரத்தில் தங்களை புலிகள் பலவந்தமாக இழுத்துச் சென்று இந்நிலைக்கு தள்ளியதாக அவர்கள் சொன்ன போது மனம் நொந்தது. அப்போதுதான் , உங்களைப் போன்றவர்கள் சொன்ன கதைகளை உண்மை என நம்பினேன். அதுவரை உங்களைப் போல தேசியத்தை எதிர்த்து பேசுபவர்களுக்கு தேத்தண்ணி கூடக் கொடுக்கக் கூடாது என நினைத்ததுண்டு. அதை சில வேளைகளில் செய்தும் உள்ளேன். உங்களைப் போன்றவர்களையே துரோகிகளாகத்தான் நினைத்தேன். எனது நண்பர்கள் , வன்னியில் சொன்ன கதைகள் , என்னை புலிகளிடம் இருந்த மதிப்பையும் , ஈடுபாடான வெறியையும் இல்லாமல் செய்துவிட்டது.

    புலிளோடு போக மறுத்தவர்களை , பெற்றோர் முன்னேயே புலிகள் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். புலிகளோடு போக முயன்றவர்களை தடுத்த பெற்றோரையும் புலிகள் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். புலிகளில் இணையாமல் இருக்க மணம் முடித்த , கணவனை இழுத்துச் சென்றிருக்கிறார்கள். மனைவியான என் சிநேகிதி , கர்ப்பமாக இருந்ததால் , பிரசவம் வரை காட்டுக்குள்ளேயே ஒழிந்து வாழ்ந்திருக்கிறார். பிரசவத்துக்காக வெளியே வந்த போது , குழந்தை கிடைத்த அடுத்த நாளே , பகிரங்கமாக குழந்தை பெற்றவள் என்று கூட பார்க்காமல் பச்சை மட்டையால் அடித்து தண்டித்திருக்கிறார்கள். இதைவிட புலிகளை வெறுக்க எனக்கு வேறு ஒன்றும் பெரிதான பாதிப்பை ஏற்படுத்தவில்லை. சிங்கள இராணுவம் கூட , இப்படி நடக்கவில்லை என்ற போது வெட்கமாகவே இருந்தது. எங்கள் வீடு புலிகளின் காரியாலயமாக இருந்தது. அது இன்று தரைமட்டமாகியுள்ளது. இது கூட பெரிதாக எனக்குப்படவில்லை. சொல்லவே வெட்கப்படும் பலதை என்னால் சொல்ல முடியவில்லை. புலிகளது புலனாய்வுத் துறையில் இருந்த பலர், வன்னியில் ஆட்டோ ஓட்டுகிறார்கள். அவர்களைக் கண்ட போது பேச பயமாக இருந்தது. பின்னர் அவர்கள் , இப்போது படையினரது புலனாய்வாளர்கள் என மாறியிருப்பதை அறிந்தேன். நான் திரும்பி, எனது சுவிஸ் வீட்டுக்கு வந்ததும் , முதலில் செய்தது , எமது வரவேற்பு அறையில் காலா காலமாக இருந்த , நான் நேசித்த தேசியத் தலைவரது படத்தை உடைத்து வீசியதுதான்” என்றார்.

    இதுபோல வெளியில் கதைக்காத பலர் கதைகள் ஏராளம். அவை வெளிச்சத்துக்கு வரும் போது மீதியிருக்கும் புலத்து புலிகள் , பூனைகளாவர். இல்லாமல் போவர்.

    //They are illegal immigrants “Kalla thony”. They should understand they have no right in this country. I agree with Maya that all Kallathonies should leave Sinhala Lanka.//

    கள்ளத்தோணி என்ற வார்த்தை, யாழ்பாணத்து தமிழர்களால், மலையக மற்றும் இந்தியத் தமிழர்களுக்கு வழங்கப்பட்ட பட்டம். இது தமிழ்ச் சொல். தமிழன் சொல்லி சில சிங்களவர்கள் அதைச் சொன்னதுண்டு. யாழ்பாணத்து அரசியல்வாதிகளால்தான் மலையக மக்கள் , பிரஜா உரிமை மற்றும் வாக்குரிமை இல்லாமல் ஆனார்கள். இது அனைவரும் அறிந்தது. திம்புவில் கூட , தமிழர் அமைப்புகள் மலயைக தமிழர் பற்றிப் பேசவில்லை. காந்தீயம் மட்டுமே கடந்த காலத்தில் , மலையக தமிழரை வன்னியில் வாழ வழி செய்தது. அஜித், கள்ளத்தோணியென சிங்களவன் சொன்னதாக மாற்றிச் சொல்வதிலிருந்து உங்கள் திறன் அல்லது அறியாமை புரிகிறது. சிங்களவன் தமிழனை கள்ளத் தோணியென சொன்னதில்லை, அவன் தமிழனை, தெமழு (தமிழன்) எனத்தான் சொன்னான். இப்போது அதைக் கூட தமில (டமில்ஸ்) என மாற்றி மரியாதையாக அழைக்கிறான்.

    யாழ்பாணத்தை விட , அதிக தமிழர் இலங்கையில், வாழ்வது சிங்கள பிரதேசங்களில்தான். புலத்து புலி ஆதரவாளர்கள் , புலிகள் பலமாக இருந்த காலத்திலேயே சிங்கள பிரதேசங்கிளில் குறிப்பாக கொழும்பில் தமது சொத்துகளை வாங்கினர். இவர்களுக்கே புலிகளில் சந்தேகம் ? இல்லாவிட்டால் வன்னியில் அல்லவா சொத்துகளை வாங்கியிருக்க வேண்டும்?

    Reply