நீதிமன்றத்தை அவமதித்ததான குற்றச்சாட்டு தொடர்பாக யாழ்ப்பாண மேயர் திருமதி ப.யோகேஸ்வரி, மேயரின் செயலாளரான திரு. கு.பற்குணரஜா ஆகியோரை இன்று (21.05.2010) நீதிமன்றில் முற்படுத்துமாறு யாழ்.குற்றப்புலனாய்வுப் பொலிஸாருக்கு யாழ்.நீதவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றத்தை அவமதிக்கும் விதத்தில் உள்ளுர் பத்திரிகைகளில் விளம்பரங்களைப் பிரசுரித்தமை தொடர்பாக யாழ்.குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வந்த விசாரணைகள் குறித்த அறிக்கை யாழ். நீதிமன்றத்தில் நேற்று சமர்ப்பிக்கப்பட்டது. இவ்வறிக்கையை ஆராயந்த நீதிமன்றம் யாழ். மேயரையும் அவரது செயலரையும் இன்று யாழ். நீதிமன்றத்தில் முற்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளது.
அத்துடன் குறித்த விளம்பரங்களை பிரசுரித்த, யாழ். குடாநாட்டிலிருந்து வெளிவரும் பத்திரிகைகளான ‘உதயன்’ ‘யாழ்.தினக்குரல்’ ‘வலம்புரி’ ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியர்களை பத்திரிகைகளில் வெளியான விளம்பரங்களின் மூலப்பிரதிகளுடன் நீதிமன்றில் பிரசன்னமாக இருக்கமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.