வன்னியில் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பணிபுரிய வெளிநாட்டு தொண்டு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது – அரசாங்கம் தெரிவித்துள்ளது.

போரினால் பாதிக்கப்பட்ட வன்னி மக்களுக்கான உதவிப்பணிகளை மேற்கொள்ள வெளிநாட்டு அரசசார்பற்ற தொண்டு நிறுவனங்களை அனுமதிக்குமாறு தமிழ்தேசியக் கூட்டமைப்பு விடுத்த கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது.

சுனாமி அனர்த்தம் ஏற்பட்ட வேளையில் வன்னியில் 3000 அரசசார்பற்ற நிறுவனங்கள் இயங்கி வந்தன எனவும், அவை விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டதாக புலனாய்வுப் பிரிவினர் ஜனாதிபதிக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளனர் எனவும்  அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக மீண்டும் இந்நிறுவனங்கள் வன்னியில் பணிபுரிய அனுமதிக்கப்படமாட்டாது என அரசாங்கத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 வன்னியில் போரினால் அழிவடைந்துள்ள பொதுமக்களின் வீடுகளைக் கட்டிக்கொடுக்க அரசாங்கத்திடம் பணமில்லை என அரசாங்கம் வெளிப்படையாகவே அறிவித்துவிட்ட நிலையில் அரசசார்பற்ற வெளிநாட்டுத் தொண்டு நிறுவனங்களின் உதவி அத்தியாவசி தேவையாக இருப்பதனை பலரும் சுட்டிக்காட்டி வருகின்றனர். மீளக்குடியமரும் மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் 12 கூரைத்தடுகளினால் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கொட்டில்களில் நீண்ட நாட்களுக்கு தாக்குப்பிடிப்பது சிரமமானதாக உள்ளமையை வன்னியில் மீளக்குடியமர்நதுள்ள மக்களின் நிலையை நேரில் பார்வையிடுகின்ற பொது தெரிந்து கொள்ளக் கூடியதாகவிருக்கின்றது. தற்போது  இடைக்கிடையே பெய்து வருகின்ற மழையினால் அவதிப்படுகின்ற இம்மக்கள் எதிர்வரும் பருவமழையின் போது பெரும் அவலங்களை எதிhகொள்ள வேண்டிவரும் என்பதும் குறிப்படத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *