புலம்பெயர்ந்த புலித் தலைவர்கள் அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு – கே.பி. உட்பட 9 பேர் கொழும்பில் பேச்சுவார்த்தை

kp.jpgஆங்கில வார இதழான ‘சண்டே ஒப்சேர்வர்’ பத்திரிகையாளர் அனந்த் பாலகிட்ணருக்கு கே. பி. என அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் வழங்கிய பிரத்தியேகப் பேட்டி

புலிகள் இயக்கத்தின் முன்னாள் சர்வதேச ஆதரவாளர்கள், போருக்குப் பின்னரான புனர்வாழ்வு, புனரமைப்புப் பணிகளில் அரசாங்கத்திற்கு ஒத்துழைக்க முன்வந்துள்ளனர். புலிகளின் முன்னாள் சர்வதேச தலைவரான குமரன் பத்மநாதன் உள்ளிட்ட ஒன்பது புலம்பெயர் தமிழ்ப் புத்தி ஜீவிகள் குழு அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றப் போவதாக அறிவித்துள்ளது.

கனடா, சுவிட்சர்லாந்து, ஜேர்மன், பிரிட்டன், பிரான்ஸ், அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் உள்ள புலி ஆதரவாளர்கள் குமரன் பத்மநாதன் ஏற்பாட்டில் கொழும்புக்கு வந்து பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவையும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி. எல். பீரிஸையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

இதன் போதே அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு உதவ அவர்கள் விருப்பம் தெரிவித்துள் ளனர். புலிகளின் ஆதரவாளர்களது இந்த மனமாற்றம் குறித்துக் கருத்துத் தெரிவித்த குமரன் பத்மநாதன் (கே. பீ.), வெளிநாடுகளில் உள்ள புலிகளின் ஆதரவாளர்கள் தற்போது யதார்த்த நிலையை நன்கு புரிந்து கொண்டுள்ளார்கள் எனக் குறிப்பிட்டார். கடந்த வருடம் மே மாதம் யுத்தம் நிறைவுக்கு வந்ததிலிருந்து நாட்டின் நிலவரத்தைப் புலம்பெயர் தமிழர்கள் நன்கு அவதானித்து வருகின்றனர். ஆரம்பத்தில் நாட்டில் அமைதியை விரும்பாத சில அமைப்புகள் எதிர்மறையான பிரசாரங்களை முன்னெடுத்து வந்தன. எனினும் கடந்த ஒரு வருட காலத்தில் புலிகளின் ஆதரவாளர்களாகவிருந்த புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் பாரிய மனமாற்றம் ஏற்பட்டுள்ளதாக பத்மநாதன் சுட்டிக்காட்டினார்.

கொழும்பில் முக்கிய பேச்சுவார்த்தை நடத்திய பத்மநாதன் தலைமையிலான குழுவினர் வடக்கில் மீள்குடியேற்றப் பகுதிகளுக்கும் நேரடியாக விஜயம் செய்து நிலைமைகளை ஆராய்ந்துள்ளனர்.

மீள்குடியேற்றத்தில் சில குறைபாடுகள் காணப்படுவதாக அவர்கள் சுட்டிக்காட்டியதாகவும், அதனை நிவர்த்திப்பதாக அரசாங்கத் தரப்பில் உறுதியளிக்கப் பட்டுள்ளதாகவும் பத்மநாதன் தெரிவித்தார்.

“புலிகள் இயக்கத்திற்காக வெளிநாடுகளில் திரட்டப்பட்ட பெருந்தொகையான நிதியை அரசாங்கத்தின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு வழங்கப் போவதாகத் தெரிவித்த குமரன் பத்மநாதன், இதனை ஒருங்கமைப்பதற்காக வெளிநாட்டில் தன்னார்வ தொண்டு நிறுவனமொன்றை ஸ்தாபிக்க இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். “வடக்கு, கிழக்கு அபிவிருத்தித் திட்டம்” எனப் பெயரிடப்படவுள்ள இந்தத் தன்னார்வ அமைப்பின் மூலம், போருக்குப் பின்னரான மனிதாபிமானப் பணிகள் குறித்து புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

வெளிநாடுகளில் புலிகளுக்குப் பல மில்லியன் டொலர் சொத்து உள்ளதாக கூறிய குமரன் பத்மநாதன், புலிகளுக்காக சேகரிக்கப்பட்ட பணத்தைக் கையாள்வோர் தற்போது அதனை நாட்டின் மனித நேயப் பணிகளுக்குப் பரிமாற்றம் செய்ய இணக்கம் தெரிவித்திருப்பதாகவும் கூறினார்.

இதேவேளை, அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதென்ற தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாட்டை வரவேற்பதாகக் கூறிய கே. பீ, எந்தவிதமான வேறுபாடுகளுமின்றி சமாதானத்தைக் கட்டியெழுப்புவதற்காக அனைவரும் ஒன்றுபட்டுப் பாடுபட வேண்டுமென்றும் வலியுறுத்தினார்.

Show More
Leave a Reply to DEMOCRACY Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

25 Comments

  • DEMOCRACY
    DEMOCRACY

    இலங்கைத் தமிழரது “இலங்கை நாற்றுப்பற்று” “பிரேமதாஸா காலத்திலேயே” பிரச்சிதி பெற்றது!.கலைஞரின் செம்மொழி மாநாட்டுக்கும் விடுதலைப்புலிகள்(கே.பி.) ஆதரவு தெரிவித்துள்ளார்.கவிஞர் கனிமொழியும் பசில் ராஜபக்ஷேவுக்கு நெருக்கம்!.நமக்கேனப்பா வம்பு!.”உலக தமிழினத்தின் ஒப்பற்ற ஒரே தலைவர் மகிந்த ராஜபக்ஷே வாழ்க,வாழ்க”!!.

    Reply
  • john
    john

    கருணாபுலி பிள்ளையான்புலி கேபிபுலி இவர்களுடன் வெளிநாட்டுப் புலிகளும் சேர்ந்து மகிந்த சகோதரர்களுடன் நல்லாய் கோலாட்டம் போடுகினம்

    Reply
  • மாயா
    மாயா

    //வெளிநாடுகளில் புலிகளுக்குப் பல மில்லியன் டொலர் சொத்து உள்ளதாக கூறிய குமரன் பத்மநாதன், புலிகளுக்காக சேகரிக்கப்பட்ட பணத்தைக் கையாள்வோர் தற்போது அதனை நாட்டின் மனித நேயப் பணிகளுக்குப் பரிமாற்றம் செய்ய இணக்கம் தெரிவித்திருப்பதாகவும் கூறினார்.//

    இது வரவேற்கப்பட வேண்டியது. புலத்தில் வறுகியவற்றைக் கொண்டு பகிரங்கமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ கேபீயும் , அவரது சாகாக்களும் உதவ வந்திருப்பது மகிழ முடிகிறது. இவை புலத்து புலிக் கொள்ளையருக்கு அடுத்த சாவு மணி. இனியாவது, மக்கள் விழிப்படைந்து தவறானவர்களிடம் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

    Reply
  • thurai
    thurai

    பயங்கரவாதிகளாக உலகினால் தீர்மானிக்கப்பட்ட புலிகளின் ஆதரவாளர்களை இலங்கை அரசாங்கம் வரவேற்பது பணத்திற்காகவா அல்லது தமிழர்களின் நன்மைக்காகவா?

    இலங்கை அரசுடன் ஒத்துழைக்கும் இவர்களிற்கு, புலிகளின் ஆதரவாளர்கள் துரோகிகள் பட்டம் சூட்டுவார்களா? இதுவரை அரசுடன் சேர்ந்தவர்களை படுகொலை செய்தவர்கழும் அதனை ஆதரித்தவர்கழும் உலகில் இப்போது உள்ளார்களா? இவர்களின் குரல்கள் எங்கே?

    தமிழரிடம் புலிகள் கேட்டதும் பணம், புலிகளிடம் சிங்கள அரசு எதிபார்ப்பதும் பணமென்றால் புலிக்கும் சிங்கள அரசிற்கும் என்ன வேறுபாடுண்டு.

    புலிகளை ஆதரிப்பவர்கழும், தமிழர்களிற்கு புலிகளே தலைமை, அவர்களே வழிகாட்டிகள் என் வாதிடுவோரும் தமது பதிலை தேசம் வாசகர்களிற்கு விளக்கமாக தருவார்களென்று எதிர்பார்க்கின்றேன்.

    துரை

    Reply
  • Mythili
    Mythili

    எது எப்படி இருந்தாலும் யார் இந்த ஒன்பது புலம்பெயர் தமிழ்ப் புத்தி ஜீவிகள் குழு என்பது முகியம். இன்னும் பெயர் குறிப்பிடாத இந்தத் தமிழ்ப் புத்தி ஜீவிகள் யாராக இருக்க முடியும்!! இவர்களுக் கெல்லாம் எவ்வளவு தூரம் செல்வாக்கு புல்பெயர் புலிகள் மத்தியில் உண்டா என்பது கேள்விக்குறியல்லவா!! இது கோத்தாபய ராஜப்க்ஷாவின இன்னுமொரு ஏமாற்று வித்தை என்றே கருதலாம்.

    Reply
  • Nadarajah Sethurupan
    Nadarajah Sethurupan

    ஆய்வாளரும் முஸ்லீம் பெண்னை திருமணம் முடித்தவரும் புலிகளின் யோகியின் உறவினருமான சபேசன் அவுஸ்ரேலியா. சிவனடியார் எனப்படும் புலிகளின் முக்கியஸ்தர் ஜேர்மனி ஆனால் தற்போது வாழும் இடம் லண்டன் உட்பட 07 பேர்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    //பயங்கரவாதிகளாக உலகினால் தீர்மானிக்கப்பட்ட புலிகளின் ஆதரவாளர்களை இலங்கை அரசாங்கம் வரவேற்பது பணத்திற்காகவா அல்லது தமிழர்களின் நன்மைக்காகவா? – துரை //

    தற்போது இலங்கை அரசு பணத்தை மட்டுமே குறியாகக் கொண்டு செயற்பட்டு வருகின்றது. புலத்தில் மக்களை ஏமாற்றி புலிப்பினாமிகள் பிடுங்கிய பல பில்லியன் டாலர்ளை இப்போது மகிந்த அரசு ஏமாற்றிப் பறிக்கப் போகின்றது. இதில் ஒரு சதம் கூட பாதிக்கப்பட்ட தமிழ் மக்களைச் சென்றடையப் போவதில்லை. எப்படி இறுதி யுத்தத்தில் புலித்தலைமைகள் தம்மை மட்டும் காப்பாற்றலாம் என்ற நப்பாசையில் இரகசியமாக சரணடையச் சென்று இல்லாமல் போனார்களோ அதே நிலை தான் இறுதியில் கே.பி போன்றவர்களுக்கும் ஏற்படும்.

    //இந்தத் தமிழ்ப் புத்தி ஜீவிகள் யாராக இருக்க முடியும்!!- Mythili //

    இவர்களைப் புத்தி ஜீவிகள் என்று யார் சொன்னது. புலிப்பினாமிகளாகி பிழைப்பை நடத்தியவர்கள் இவர்கள்.

    Reply
  • Rohan
    Rohan

    சேதுரூபன்
    முஸ்லிம் பெண் என்று குறிப்பிட்டுச் சொல்லும் தேவை ஏன் இங்கு வந்தது?

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //…தமிழரிடம் புலிகள் கேட்டதும் பணம், புலிகளிடம் சிங்கள அரசு எதிபார்ப்பதும் பணமென்றால் புலிக்கும் சிங்கள அரசிற்கும் என்ன வேறுபாடுண்டு…புலிகளை ஆதரிப்பவர்கழும், தமிழர்களிற்கு புலிகளே தலைமை, அவர்களே வழிகாட்டிகள் என் வாதிடுவோரும் தமது பதிலை தேசம் வாசகர்களிற்கு விளக்கமாக தருவார்களென்று எதிர்பார்க்கின்றேன்..//

    ஏன் புலிஆதரவாளர்கள் சொல்ல வேண்டும்? அரச ஆதரவாளர்கள், ‘சிங்கள அரசு ஜனநாயக அரசு’ என பந்தி பந்தியாக எழுதியவர்கள் அல்லவா சொல்ல வேண்டும்? துரை புலிகளின் ஆதரவாளர்கள் சிங்கள அரசு (நீங்களும் அவ்வாறே சொல்லியிருக்கிறீர்கள்) தமிழர்விரோத அரசு என மாறாமல் சொல்லி வருகின்றனர். மாற்றுக்கருத்தோர் தான் பதில் சொல்ல வேண்டும்!

    சரி ஸ்ரீலங்கா அரசிடன் அந்த 9 பேரின் பெயர் விலாசங்களை பெற்றுத்தருவீர்களா? பதில் சொல்ல வசதியாக இருக்கும்!

    //….தற்போது இலங்கை அரசு பணத்தை மட்டுமே குறியாகக் கொண்டு செயற்பட்டு வருகின்றது….//
    எப்போதிருந்து இம்மாற்றம்? அரசு என்றால் ஜனாதிபதி உட்பட அமைச்சர் பெருமானார்கள் எல்லோரும் தானே?

    //…. புலத்தில் மக்களை ஏமாற்றி புலிப்பினாமிகள் பிடுங்கிய பல பில்லியன் டாலர்ளை இப்போது மகிந்த அரசு ஏமாற்றிப் பறிக்கப் போகின்றது….//
    ஆனாலும் அது ஒரு ‘மக்களால்’ தேர்ந்தெடுக்கப்பட்ட ‘ஜனநாயக’ அரசன்றல்லவா இங்கே கருத்தெழுதிக்குவிக்கிறார்கள்?

    Reply
  • Nadarajah Sethurupan
    Nadarajah Sethurupan

    Canada
    Prenpanayakam
    Sritharan nathan
    Antan Saparatnam

    France
    Velummylum Manoharan. Ex Directeur chez CCTamoule france. Paris Area, France.
    Kengatharan Punniyamoorthy

    Australia
    Kanapathi Sivarajah Medical aid Foundation, Australia.
    Dr.Rupamoorthi
    Dr. Nadesan is the Editor of UTHAYAM, the Tamil newspaper in Australia
    Sabesan Sanmugam from Melbourne pays tribute to Maaveerar on Thamizh Kural Radio. 2009-11-26
    Suntharmoorthy.s

    UK
    Pirinthan sithampalam
    Charls antony thas
    Amirthalingam Nimalathasan

    Middle-East
    Dr.Nadandran – Brother to Jayadevan (KP Unite)

    Germany
    Sripathi Sivanadaiyar

    India
    Satkunarajah Sithampalam

    Reply
  • indiani
    indiani

    புலிகளை ராஜபக்சே அரசு அடித்து முடித்தது சரி என்று தானே இந்த கேபிபுலி சொல்கிறார். ஏன் வெளிநாட்டிலிருந்து போனவர்கள் கேபி யிடம் கேட்கவில்லை. ஏன் இவ்வளவு மக்களையும் சாக கொடுத்தனீங்கள் 10 வருடம் முந்தியே மக்களை காவு கொடுக்காமல் அரசாங்கத்துடன் பேசியிருக்கலாமே!

    புலிகின் போராட்டம் சிறுபிள்ளை வேளாண்மை மூடர்களின் போராட்டம் – வெட்கம் தமிழினத்துக்கு.

    Reply
  • accu
    accu

    புலிகளின் ஆதரவாளர்கள் சிங்கள அரசு தமிழர்விரோத அரசு என மாறாமல் சொல்லி வருகின்றனர்.நான் புலிகள் தமிழர்விரோதப் புலிகள் என்று சொல்லிவந்தேன். சிங்கள அரசு இன்னும் தமிழ் விரோத்தத்தை முழுமையாக காட்டவில்லை ஆனால் புலிகள் தாம் தமிழர் விரோதிகளென்பதை நிரூபித்துவிட்டுப் போய்விட்டார்கள்.

    Reply
  • thurai
    thurai

    மக்களால் ஜனநாயக் முறையில் தெரிவு செய்யப்பட்ட அரசு ஜனநாயக அரசேயாகும். மக்களே அவர்களை மாற்ரியும் அமைக்க முடியும். ஆனால் புலிகள் 30 வருடமாக தமிழரை பயங்கரவாதத்தால் அடக்கியவர்கள். இன்னமும் தங்களை விட ஈழத்தமிழர்களிற்கு மட்டுமல்ல உலகத் தமிழர்களிற்கே புலிகளே வழிகாட்டிகளென்பதே அவர்களின் பிரச்சாரம். இவர்களின் இந்த பிரச்சாரமும் இலங்கையரசுடனான ஒத்துழைப்பும் எவ்வாறு பொருத்தமானது என்பதே எனது கேள்வி.

    துரை

    Reply
  • hira
    hira

    இந்த குழுவில் உள்ள சாள்ஸ் அந்தோனி தாஸ் என்பவர் ரெலோவில் இருந்து ரெலோவினால் துரத்தப்படடவர். பின்னர் புலிகளின் வட்டுக்கோட்டை லெக்க்ஷன் நடத்தியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    Reply
  • proffessor
    proffessor

    சேது, நீர் உம்மையும் குழப்பி மக்களையும் உமது சொந்தநலனுக்காக குழப்பாதையும்.
    பிரான்ஸ் மனோவுக்கு பயணம் செய்ய பாஸ்போட் இல்லை. சபேசன்; சிவராஜா-(உமது சொந்தகாரன்) ஒரு இடமும் பயணிக்கவில்லை அவுஸ்ரேலியாவில் தான்நிற்கினம். கனடா இன்பம் மாஸ்ரர் கேபியின் ஆதரவாளர் மட்டுமே. கேபிக்கு முன்னரே படித்த ஆசானும் கூட. சிறிபதி சிவனடியார் புளோட் சித்தார்த்தனின் நெருங்கிய சகா.

    கேபியுடன் சேர்ந்து வேலை செய்யும் 9நபர்களும் முன்னர் சிறிலங்கா அரசின் ஏற்பாட்டில் கொழும்பு சென்ற 23 பேர் கொண்ட குழுவை சேர்ந்தவர்கள் என்று தெரியவருகின்றது.

    Reply
  • senthil
    senthil

    Hi
    Sabesan in Melburne i spoke to him and Nadesan in France so How you put this people’s Name

    Reply
  • Mythili
    Mythili

    //…இந்த குழுவில் உள்ள சாள்ஸ் அந்தோனி தாஸ் என்பவர் ரெலோவில் இருந்து ரெலோவினால் துரத்தப்படடவர்…//

    இவர் ரெலோவில் இருந்தவர் மாத்திருமன்றி ரெலோவின் பணத்தையும் சுருட்டினவர். இது பற்றியும் இவர் வாழும் வாழ்கை பற்றியும் டி பி எஸ் ஜெயராஜ தனது வெப் சைடில் விரிவாக சில ஆன்டுகலுக்கு முதல் எலுதி இருந்தது இங்கு குறிப்பிடுவது பொருத்தம்.

    இதையெல்லம் பாக்கும்போது கோத்தாபய ராஜபக்ஷ ஒரு கல்லில இரண்டு மாங்காய் விழுத்தின கதை போல இருக்கிது. ஒரு விடயத்துக்கு நல்லது இனம் கண்டு பிடிக்கக் கூடியதாகவுள்ளது.

    Reply
  • Ellalan
    Ellalan

    Sabesan and Suntharamoorthy are in Australia and havn’t travelled anywhere get your facts before write any crap.So called tigers remaining anywhere in the world are paper tigers the real tigers are now having realized the living conditions of our people in the north and east are trying to do some good for them by asking the govt to be sympathetic to us. Anything wrong with that? I don’t think so. Don’t forget its KP who nominated Mamanithar Thillai Jeyajumar as head of TCC in Australia and Inpam is a far more committed tiger and now wants change in our attitude. WAKE UP PEOPLE

    Reply
  • Dr.Rajasingham Narendran
    Dr.Rajasingham Narendran

    I was not invited for this conference and hence did not participate in it. This also applies to Dr.Noel Nadesan. The person who has listed the names of the particpants, has obviously got his facts wrong.

    I however, welcome the initiative to invite at least a section of the pro-LTTE Diaspora to Sri Lanka to see and experience the ground situation. If KP is playing a key role in this intiative, it should also be appreciated. The Tamils in Sri Lanka need reconciliation, reapproachment and recovery more than any other community.
    Having been at the heart of the LTTE and its strategic operations, KP is probably the most qualified to lead this task, as he seems to have come to terms with present realities here in Sri Lanka.

    Reply
  • param
    param

    நல்லது நடக்கட்டும். சரணடைந்து அடைபட்ட மக்கள் விடுவிக்கப்படவேண்டும்

    Reply
  • BC
    BC

    மே 18 2009 க்கு பின்பு நல்லது நடக்கிறது.புலம்பெயர்ந்த புலி ஆதரவாளர்கள் தடங்கல் செய்யாமல் இருக்க வேண்டும்.

    Reply
  • varathan
    varathan

    மாயா பிசி இவர்களெல்லாம் இவ்வளவு அப்பாவிகளா அல்லது அரச ஆதரவாளர்களா என்பது புரியவே இல்லை. எந்த புலிப்பினாமியாவது தன்னிடம் மக்கள் கொடுத்த பணத்தை மக்களுக்கே தாரைவார்க்கவா இந்த சந்திப்புக்களை நடத்துகிறார்கள். அல்லது மகிந்தவோ ராஜபக்சவோ மக்களின் பணத்தை பிடுங்கி மக்களுக்கே பகிர்ந்தளிக்க போகின்ற புரட்சியாளர்களா? பணம்…..பணத்தின் மேல் பணம். எல்லையற்ற பணத்தின் ஆசையில் அவர்கள் மற்றவர்களின் காதில் பூ வைக்க போகின்றார்கள்.

    Reply
  • thurai
    thurai

    பணத்தோடும், பதவியோடுமே மட்டுமே புலம்பெயர் புலிகளின் சரித்திரம் எழுதப்படுகின்றது. புலம் பெயர்நாடுகளில் ஈழத் தமிழர்களின் நலனிற்காகவோ, அல்லது விடுதலைக்காகவோ யாராவது பாடுபட்டார்களா என்பதே கேள்வியாகவுள்ளது.

    பணம் கொடுத்தவர்களை விட பணம் பறித்தவர்கழும் பணம் கொடுக்காதவ்ர்களை துரோகிகளென்று பட்டம் சூட்டி தண்டனை பெற்ருக் கொடுத்தவர்கழுமே இப்போ இலங்கை அரசுடன் கைகோர்த்துள்ளனர். பெயர் வெளியில் வராமல் பல தண்டனைக்குரிய குற்ரத்தைச் செய்து புலம் பெயர்நாடுகளில் ,பணத்தை புலியின் பெயரால் சுருட்டியவ்ர்களின் புகலிடமாக இலங்கை மாறிவருகின்றது.

    துரை

    Reply
  • மாயா
    மாயா

    //பணத்தை புலியின் பெயரால் சுருட்டியவ்ர்களின் புகலிடமாக இலங்கை மாறிவருகின்றது.- துரை//

    நரகத்தில் , இறை தூதர்களுக்கு என்ன வேலை எனக் கேட்கலாம். பாவிகளை விட அதிகம் பாவம் செய்தவர்கள் , தமது அந்திம காலங்களை நரகத்துக்கும் மோட்சத்துக்கும் இடையே உள்ள உத்தரிக்கிற தலத்தில் கழிப்பார்களாம். தமது பாவங்களுக்காக தண்டனை அனுபவிப்பார்களாம். அது போல இருக்கிறது நடப்பவை எல்லாம். இந்த புலித் தூதர்கள் அடிச்சதில் கொஞ்சத்தைக் கொடுத்து நழுவ , இதை விட்டால் வேறு சந்தர்ப்பம் இல்லை என நினைக்கிறார்களோ என்னவோ? தலைவர் போன பின் அதிபர். நல்லாத்தான் இருக்கு.

    கடந்த கால கரும் புலிகள், எலிகள்,சுழிகள் எல்லாம் கவனமாக இருக்க வேண்டும். வெள்ளைக் கொடியோடு போங்கோ என அறிவுரை சொன்ன புத்திசாலிகள், தமக்கு பாதிப்பாக இருக்கப் போவோரை காட்டிக் கொடுத்து தம்மைக் காத்துக் கொள்ள என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். “இதெல்லாம் அரசியல்ல சகசமப்பா” கவண்டமணி கொமடிதான் நினைவுக்கு வருகுது. காமடியன்கள் எல்லாம் இலங்கை மக்களை நினைத்து அழுதார்கள். இதைப் பார்த்து இனி எப்படி அழுவார்களோ?

    Reply
  • rohan
    rohan

    “நல்லது நடக்கட்டும். சரணடைந்து அடைபட்ட மக்கள் விடுவிக்கப்படவேண்டும்”
    என்பது சரி தான். ஆனால் ஒரு குடும்பம் முகாமிலிருந்து வெளியே போவதென்றால் ஒருவரை உள்ளே விட்டு விட்டுத் தான் போகவேண்டும்.

    எங்கேயோ கேள்விப்பட்டது மாதிரி இல்லை?

    புலி வித்தையை அரசும் காட்டுகிறது. கேபீ ஆலோசனையோ என்னவோ!

    Reply