Sunday, January 23, 2022

புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் கே.பியை ஒரு துரோகியாகவே பார்க்கின்றனர். – செல்வம் அடைக்கலநாதன் M.P. (TNA)

Selvam Adaikalanathan TNA_TELOதற்போது அரசாங்கத்திடம் இருக்கும் கே.பி என்கின்ற குமரன் பத்மநாதன் அரசாங்கத்துடன் இணைந்து யுத்தத்தின் பின்னான மக்களின் புனர்வாழ்வு புனரமைப்பு பணிகளில் ஈடுபடப்போவதாகக் கூறினாலும் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் அவரை ஒரு துரோகியாகவே பார்க்கின்றனர் என்று தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளளார்.

யுத்தத்தின் பின்னரான மக்கள் பணிகளில் கே.பி பங்களிப்புச் செய்ய பலர் முன்வருவதை வரவேற்கலாம் என்றாலும், புலம்பெயர்ந்து வாழும் மக்கள் அவருக்கு உதவப் போவதில்லை எனவும் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேசப் பொறுப்பாளராக இருந்து குமரன் பத்மநாதன் புலம்பெயர்ந்த நாடுகளில் இயங்கி வந்த ஒன்பது புலி உறுப்பினர்களோடு இணைந்து பணியாற்றப்போவதாக வெளியான செய்திகள் குறித்து கேட்டபோதே செல்வம் அடைக்கலநாதன் இவ்வாறு தெரிவித்தார்.

புலம்பெயர்ந்துள்ள நாடுகளில் வாழும் தமிழ் மக்கள் கே.பி எனப்படும் குமரன் பத்மநாதனை ஒரு துரோகியாகவே பார்க்கின்றார்கள் எனவே, அவரது கருத்துக்களுக்கு இணங்கி புலம்பெயர் மக்கள் செயல்பட மாட்டார்கள் எனவும் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

Show More
Leave a Reply to thurai Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

 

6 Comments

 • babu
  babu

  புலம்பெயர்ந்து வாழும் தமிழர் செல்வத்தைத் தலைவராய் ஏற்றுக்கொண்ட மாதிரி கலர் காட்டாதையும். புலம்பெயர் புலிகளுக்குத்தான் கேபி துரோகியாகத் தெரிகிறார்.
  அதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும் புலம்பெயர் ரெலோக்காரருக்கு நீரே அவர்களின் முதல் துரோகி. அதை விளங்கிக் கொள்ளும் செல்வம்.

  எம்பி பெயருக்கு மக்களுக்கு என்ன செய்தனீர் என்று ஒருக்கா லிஸ்ட் ஒன்று போடும் பார்ப்பம்.

  சரி கனக்கா வேண்டாம் உம்மடை ஏரியாவில் அதுதான் மன்னாரில் ரெலோப்பெடியன் ஒருத்தனை போனமாதம் அடித்து எரித்து செத்தானே. அது யார் செய்ததென்று முதலில் சொல்லவும். இது சம்பந்தமாய் நீர் என்ன நடவடிக்கை எடுத்தனீர் .

  Reply
 • thurai
  thurai

  தமிழர்களிற்கு ஈழத்தில் ஏற்பட்ட அழிவுகளிற்கு காரணமாக இருந்த அனைவரும் ஈழத்தமிழினத்தின் துரோகிகளேயாகும். இதில் முதலிடம் புலத்தில் வாழும் புலியின் ஆதரவாளர்கள்.

  புலிகளையும் அவர்களின் ஆதரவாளர்களினதும் தவறுகளை சுட்டிக்காட்டிய அனைவருமே துரோகிகளாக பட்டம் சூட்டியவர்களே இந்தப்புலம் பெயர் புலியின் ஆதரவாளர்கள். இவர்கள் கே.பி யை துரோகிகள் என்று கூறுமுன் தாங்கள் இதுவரை ஆட்டு மந்தைகள் போல் புலியின் பின்னால் போனது தவறென்பதை உணர்ந்தாலே போதும்.

  துரை

  Reply
 • T.Sothilingam
  T.Sothilingam

  நன்றி பாபு இது விடயமாக செல்வத்துடன் நானும் தொடர்பு கொள்ள முயற்ச்சித்தேன் – இந்த இளைஞன் சிறிரெலோவிலிருந்து 2 கிழமைக்கு முன்பாகவே வெளியேறி இருந்தார் என்றும் இவர் ஒரு மனநோயாளி என்றும் இவர் போத்தில் அரைத்து சாப்பிட்டார் என்றும் இவர் சிறீரெலோவைவிட்டு வெளியேறியபடியால் அவரடைய இறப்பு சம்பந்தமாக தாம் எதுவும் சொல் முடியாது என சிறி ரெலோவினர் தெரிவித்ததாக முன்னாள் ரெலோவின் உறுப்பினர் கருத்து தெரிவித்தார். இந்த இளைஞன் தனக்கு தானே தீமூட்டிக்கொண்டான் என்றும் தெரிவிக்கப்படுகின்றது

  இதில் உள்ள முக்கியமான விடயம் இந்த தமிழ் இளைஞன் இறந்தது ஏன்? இதற்கான எந்தவித விசாரணைகளும் இல்லாமலே இந்த இளைஞனின் வாழ்க்கை அழிந்துவிட்டது. மக்களுக்காக லேலை செய்கிறோம் மக்களே எமது நோக்கு நாம்தான் மக்கள் தலைவர்கள் மக்கள் எம்மையே தெரிவு செய்தனர் என்று கூறுபவர்கள் யாரும் இது பற்றி அக்கறைப்படவில்லை என்பதே மிகமுக்கியமானது

  இன்றுவரையில் ரெலோவில் எத்தனை போராளிகள் இறந்தனர் யாரால் கொல்லப்பட்டனர் போன்ற விபரங்கள் ரெலோவினரால் வெளியிடப்படவில்லை. ரெலோ கடந்த பாராளுமன்றத்தில் 4 பாராளுமன்ற உறுப்பினர்களும் தற்போது 2 பாராளுமன்ற உறுப்பினர்களும் உள்ளனர்.

  இந்த இளைஞனின் மரணம் சம்பந்தமாக அறிவதற்கு ரெலோவின் பாராளுமன்ற உறுப்பினர் விநோகாரலிங்கத்தின் தொலைபேசிக்கு தொடர்பு கொண்டபோது அந்த தொலைபேசியில் பதில் அளித்தவரின் வார்த்ததைப் பிரயோகங்கள் மனிதர்கள் மனிதர்களுடன் பரிமாறும் பேச்சுக்கள் அல்ல

  Reply
 • kamal
  kamal

  புலம்பெயர்நாட்டில் உள்ளவர்களின் அபிப்பிராயத்தை நீங்கள் எப்படி எந்த அமைப்பு மூலமாக அளந்துள்ளீர் என தெரியப்படுத்துவீர்களா? உங்களின் புலம்பெயர் அமைப்பு கட்சி அலவலகம் ஏதும் உண்டா? அல்லது ஒரு தனிமனித கட்சிதானா? அப்போ சங்கரிக்கு பின்னால் நீங்களா?

  Reply
 • chandran.raja
  chandran.raja

  புலம் பெயர்மக்களிடையே எப்பவும் செல்வம் அடைக்கலநாதனுக்கு அலாதி பிரியம். எல்லாம் அவர்கள் தந்த வாழ்வு தானே! இந்த புலம்பெயர் தமிழர்கள் இல்லாவிட்டால் ….இடப்பெயர்வு மரணங்கள் பட்டினிசாவு அகதிமுகாம் வாழ்க்கை என்பது போன்ற வில்லங்களில் ஈடுபடாமல் தேசியத்தலைவருக்கு நிகராக தனது உடம்பையும் தேற்றி இந்தியா-திருச்சி இலங்கை-மன்னார் போன்ற இடங்களில் இரட்டைக் கால் வைத்து
  வாழ்வு நடத்தியிருக்க முடியுமா?.

  சில ரெலோ தோழர்கள் புலம்பெயர் நாடுகளில் பரதேசியாக அலைந்து சிலர் குடிகாரர்களாகி சிலர் நம்பிக்கையுடன் வாழ்வை தொடருபவர்களாகவும் இருக்கிறார்கள் இப்படியிருக்கையில் மனநேயஉணர்வோ அரசியல் பார்வையோ இல்லாமல் இவர் எப்படி புலம்பெயர் தமிழரைப் பற்றி கதைக்க முடியும்?. இதுவெல்லாம் நிறம்மாறுகிற ஓணான் புத்தியே! ஒட்டுமொத்த தமிழ்மக்களின் அடையாளமாக இவரையும் இவர் சார்ந்த கூட்டத்தையும் நினைப்பதே தவறு மட்டுமல்ல பஞச்சமாபாதகமும் கூட.

  கருணா பிள்ளையான் புலிககளாக இருந்தவர்கள் தான். புலிக்கொடுமைகளில் அவர்களுக்கும் சரிபங்குண்டு. அதே போல்தான் கே.பி.பத்மநாதனும்.
  இங்கு ஒரு பழமொழியுண்டு “எதுவுமே செய்யாமல் இருப்பவனால் மட்டுமே தவறு செய்யாமல் இருக்க முடியும்”. அவர்கள் மனம் திருந்தி நல்வழிக்கு வரும் போது ஏற்றுத்தான் ஆகவேண்டும். வரவேற்ப்பு கொடுத்துத் தான் தீரவேண்டும். ஆனால் இந்த செல்வம் அடைக்கலநாதனுக்கும் அவர்கூட்டத்திற்கும்?. காலம் தான் பதில் சொல்லவேண்டும்.

  Reply
 • Mohan
  Mohan

  /கொழும்பில் யுத்தக் கொண்டாட்டம் நடக்கிறது இங்கே எம்மை நாயாக நடத்துகிறார்கள் பாடசாலைப் பிள்ளைகளையும் மறித்து குப்பை ஏற்றுவிக்கிறானுகள் ஐயோ எங்கட தமிழர்ற விதி இப்பிடியாப் போச்சே என்று மனம் வெதும்பி தங்கள் நிலையை அழுகையுடன் கூறுகிறார் வவுனியா முகாம் பெண் ஒருவர்.

  சின்னப் பிள்ளையல் எல்லாம் இப்ப இரவு வரை முகாமைச் சுற்றி துப்பரவு செய்யினம். விடுதலைப் புலியல் செய்த வேலையாலை இப்ப நாங்கள் அடிமைகளாகி நாயிலும் கேவலமாகி விட்டோம். எங்கள இந்த நிலமையில கொண்டு வந்து விட்டுட்டு அவங்களும் போவிட்டாங்கள். இப்ப எம்பிமாரிட்டயும் சொல்லி பிரயோசனம் இல்லை. கூட்டமைப்பை முகாமுக்குள்ள விடுறாங்கள் இல்லை. ரிசாத் எல்லாம் வெத்திலைக்கு போடு வெத்திலைக்கு போடு என வாக்கு கேட்டாங்கள் இப்ப திரும்பிறே பாக்கிறாங்கள் இல்லை.

  கூட்டமைப்புக் காரரும் பாளிமன்டில இறுக்கி கதைக்கினம் இல்லை. சம்பந்தர் ஐயா சோந்து போனார் போல இருக்கு. அப்ப அப்பன் எங்கட பிரச்சனைகளை யார் கதைக்கிறது. நாங்கள் இப்ப யாரும் கவனிக்காத அனாதைகளாகி விட்டம். இனி எங்களுக்கு எண்டு யார் கதைப்பினம்.

  அரசாங்கம் தொண்டு நிறுவனங்களை எல்லாம் நிப்பாட்டிப் போட்டுது. பிள்ளைகயுளுக்கு பால்மா இல்லை. சில குடும்பங்கள் தங்களுக்கு கிடைக்கிற நிவாரண அரிசி பொருட்களை சின்னப்பிள்ளைகளுக்கு குடுத்துட்டு தாங்களும் குடிச்சுட்டு படுத்துடுங்கள்.

  நாங்கள் எல்லாம் வட்டு வாய்க்காலில செத்திருக்கலாம். எங்களுக்கு எல்லாம் ஏன் அப்பன் இப்பிடி நடக்குது…..//

  அடைக்கலநாதன் இவற்றை முதலில் கணக்கிலெடுங்கோ. வெளிநாட்டலுவல்களைப் பிறகு பார்க்கலாம்

  Reply