வடமாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக கே.பி?

KP_Selvarajah_Pathmanathanநடைபெற வுள்ள வடமாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக விடுதலைப்புலிகளின் முன்னாள் ஆயுதக் கொள்வனவாளரும், சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளராகவும் விளங்கிய கே.பி எனப்படும் குமரன் பத்மநாதன் களமிறக்கப்படவுள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று தகவல் வெளியிட்டுள்ளது. ஆளும் ஐக்கிய மக்கள் முன்னணியின் வேட்பாளராக இவர் நிறுத்தப்படவுள்ளதாகவும் அப்பத்திரிகை தெரிவித்துள்ளது. இதற்காக கே.பி இற்கு பொதுமன்னிப்பு வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதே வேளை கே.பி மற்றும் புலம்பெயர்ந்த நாடுகளிலிருந்து இலங்கை வந்துள்ள 20 தமிழ் பிரதிநிதிகள் அடங்கிய குழு வடக்கிற்கு விஜயம் செய்துள்ளதாகவும், அரசாங்கம் இவர்களை சகல பாதுகாப்புகளோடு அழைத்துச் சென்றதாகவும் முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகாவின் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார். அரசின் விமானமொன்றில் பலாலி படைமுகாமிற்குச் சென்ற இக்குழுவினர் பின்னர் கிளிநொச்சிக்கு சென்றதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இத்கவலை வெளியிட்டார்.

Show More
Leave a Reply to palli Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

5 Comments

  • Rohan
    Rohan

    கள்ள வோட்டுப் போடாமல் நின்று பாருங்கள் ஐயா, மண் கவ்வுவீர்கள்!
    நிற்க முதல் இந்த வெள்ளைக் கொடிப் புலிகளுக்கு என்ன நடந்தது என்றும் சொல்லுவீர்களா?

    Reply
  • kamal
    kamal

    அவர்கள் புல்லாகிப் பூடாய் புழுவாய் மரமாகிப்……… போயிருப்பார்கள்.

    Reply
  • Kannan
    Kannan

    பத்மநாதன் அவர்களே- நாடுகடந்த தமிழீழமோ அல்லது மக்களவை தேர்தல்களோ நாம் ஏதோ செய்கிறோம் எதற்காக என்ன செய்கிறோம் என்ற தெழிவில்லாமலே எதையோ செய்கிறார்கள். புலிகளின் இறுதிப்போரில் தெருக்களில் நின்று வேலைவெட்டியின்றி கூப்பாடு போட்டவர்களிடன் இருந்த நீங்கள் உருப்படியாக எதை எதிர்பாக்க முடியும். 2 அல்லது 3தரம் பேரணி நடத்தியபோது என்ன விளைவு என்பதை ஆராய்ந்த அடுத்த நடவடிக்கைகளில் இறங்கத் திராணியற்றவர்களிடம் போராட்டம் ஜனநாயகம் எல்லாம் வெறும் மண்ணாங்கட்டிகள் தான்.
    ஜனநாயக விரோதிகளாகவுள்ள புலிகளின் பிரதிநிதியாக அமைந்திருக்கும் ரிசிசி யிடம் இருந்து எப்படி நீங்கள் ஜனநாகத்தையே கருந்துக்களையோ எதிர்பார்க்கலாம்? நாடுகடந்த தமிழீழத்து கேபியும் விலைபோய்விட்டார். இனி என்னதை எதிர்பாக்கிறீர்கள். பேசாமல் அங்குள்ள மக்கள் சுயமாகச் சிந்தித்து தம் தலைவிதியை நிர்ணகிக்க விடுங்கள். இதுவே நாம் அங்குள்ள மக்களுக்குச் செய்யும் நன்மையும் ஜனநாயக உதவியுமாகும்.

    Reply
  • கந்தையா
    கந்தையா

    கள்ளகடத்தல்காரங்கள் எல்லாம் அரசாட்ச்சி ஏறுவதா? என்னடா கள்ளர்காலம் போலக்கிடக்கு

    Reply
  • palli
    palli

    கந்தையாண்ணா கவலை படாதையுங்கோ
    ஏதோ ஒரு வழியில் இவர்கள் அரசின் சிறையில்தான்
    நம்ம அம்மான் போல்;

    Reply