வெளிச்சத்திற்கு வரும் கே பி மர்மமும் – கே பி உடன் புலம்பெயர் புலிஆதரவுக் குழுவின் சந்திப்பும் : த ஜெயபாலன்

Pirabakaran VKumaran_Pathmanathanதமிழீழ விடுதலைப் புலிகளின் மிக ஆரம்பகால உறுப்பினராகவும் அவ்வியக்கத்தின் வளர்ச்சியில் மிக முக்கியமான நபராகவும் இருந்த கே பி என அறியப்பட்ட குமரன் பத்மநாதன் இலங்கை அரசாங்கத்தினால் புலிகளை அழிப்பதற்கு தயாரிக்கப்பட் புரொஜக்ற் பீக்கனின் இறுதிக் கட்டத்தை மேற்கொள்வதில் முக்கிய நபராக உள்ளார். புலிகளின் பெரும்பாலான தலைமைகள் அழிக்கப்பட்ட நிலையில் எஞ்சியுள்ளவர்களை களையெடுக்கும் முயற்சிகளுக்கு கே பி யின் பங்கு தற்போது இலங்கையில் மிக அவசியமான ஒன்றாகி உள்ளது. கே பிக்கு பொது மன்னிப்பு வழங்குவது பற்றியும் கே பி யை முதலமைச்சராக்குவது தொடர்பாகவும் இலங்கையரசு தீவரமான ஆலோசணைகளை நடாத்தி வருகின்றது.

இதன் ஒரு பகுதியாக வடக்கு கிழக்கு அபிவிருத்தியை கே பி யை வைத்து முன்னெடுப்பதன் மூலம் முள்ளை முள்ளால் எடுக்கும் கைங்கரியத்தை மேற்கொள்ளலாம் என இலங்கையரசு கருதுகின்றது. அதன் ஒரு அம்சமாக புலம்பெயர்ந்த ஒன்பது பேர்கொண்ட குழுவொன்று கே பியின் அழைப்பில் இரகசியமாக இலங்கை சென்றிருந்தது. இக்குழுவில் புலிகளின் முன்னணி அமைப்புகளான பிரித்தானிய தமிழர் பேரவை, தமிழர் சுகாதார அமைப்பு, தமிழர் புனர்வாழ்வுக்கழகம், வணங்கா மண் ஆகிய நிதிசேகரிப்பில் முன்னின்ற அமைப்புகளின் பிரதிநிதிகள் அல்லது அவ்வமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் கலந்த கொண்டுள்ளனர். ஆனால் தற்போது அவ்விஜயம் பெரும்பாலும் பரகசியமாகி விட்டுள்ளது. இக்குழுவில் சென்றவர்கள் விபரம் வருமாறு:

பிரித்தானியா: சார்ள்ஸ் அன்ரோனிதாஸ், டொக்டர் வேலாயுதம் அருட்குமார், சிறிபதி சிவனடியார், விமலதாஸ்
பிரான்ஸ்: கெங்காதரன்
சுவிஸ்லாந்து: டொக்டர் சந்திரா மோகன் ராஜ்
அவுஸ்திரேலியா: டொக்டர் ரூபமூர்த்தி
கனடா: பேரின்பநாயகம், சிவசக்தி

இவர்களில் நால்வர் லண்டனில் இருந்து சென்றுள்ளனர். இவர்களில் சார்ள்ஸ் அந்தோனிதாஸ் முன்னாள் ரெலோ முக்கிய உறுப்பினர்களில் ஒருவர். அவ்வியக்கத்தின் தலைவர் சிறிசபாரத்தினம் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட பின் அவ்வியக்கத்தின் தலைமைப் பொறுப்புக்கு போட்டியிட்டவர். பின்னர் பிரித்தானிய தமிழர் பேரவை போன்ற புலிகளின் முன்னரங்க அமைப்புகளுடன் மிக நெருக்கமாகச் செயற்பட்டவர். கே பி இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட செய்தி வெளிவந்த போது அவரை விடுவிப்பதற்காக சில முயற்சிகளையும் எடுத்தவர். இந்த விஜயத்தை முடித்துக் கொண்டு மீண்டும் பிரித்தானியா திரும்பியுள்ள இவரை இவருடைய அண்மைய விஜயம் பற்றி கருத்தறிய அவருடன் தொடர்பு கொண்ட போதும் தகவல்பெற முடியவில்லை.

இந்த விஜயத்தில் லண்டனில் இருந்து சென்ற மருத்துவர் வேலாயுதம் அருட்குமார் காரைநகரைச் சேர்ந்தவர். புலிகளின் தீவிர ஆதரவாளர். இவருடைய சகோதரர்கள் புலிகளின் உறுப்பினர்களாக இருந்தனர். இவரும் பிரித்தானியத் தமிழர் பேரவையில் அறியப்பட்ட முக்கிய உறுப்பினர். பரமேஸ்வரன் பிரித்தானிய பாராளுமன்றத்தின் முன் உண்ணாவிரதம் இருந்தபோது பரமேஸ்வரனுடைய உடல்நிலையை பரிசோதிக்க நியமிக்கப்பட்ட மருத்துவர்களில் வேலாயுதம் அருட்குமார் முக்கியமானவர்.

சிறிபதி சிவனடியார் ஊர்காவற்துறையைச் சேர்ந்தவர். ஜேர்மனியில் இருந்து லண்டனுக்கு புலம்பெயர்ந்தவர். இவரது குடும்பமே புலிகளுக்கு மிக ஆதரவானவர்கள். இவரது சகோதரி புலிகளுடன் நிதிகொடுக்கல் வாங்கல் உறவுகளை மேற்கொண்டு இருந்தவர். ஒரு தடவை புலிகள் இவரிடம் இருந்து பெற்ற நிதியை திருப்பிக் கொடுக்காததால் ஏற்பட்ட பொருளாதாரச் சுமையால் இவரும் இவரது கணவரும் தூக்கிட்டு மரணித்தனர். இருந்தும் சிறிபதி சிவனடியார் புலிகளுக்கு தொடர்ந்தும் ஆதரவு வழங்கிவந்தவர். இவர் தீபம் தொலைக்காட்சியின் பங்குதாரர் செல்வகுமாரின் மைத்துனர். தீபம் தொலைக்காட்சியிலேயே பணியாற்றி வருகின்றார். தீபம் தொலைக்காட்சிக்கான கலையகம் ஒன்றை யாழ்ப்பாணத்தில் அமைப்பது தொடர்பாக இலங்கை அரசுடன் தீபம் தொலைக்காட்சி இரகசிய சந்திப்பு ஒன்றையும் நடாத்தி இருந்தது. இச்செய்தி எழுதப்பட்டுக் கொண்டிருக்கையில் சிறிபதி சிவனடியார் இலங்கையிலேயே நிற்பதாக அறியமுடிகின்றது. அவருடன் தொடர்பு கொள்ள எடுத்த முயற்சியும் பலனளிக்கவில்லை.

ஏனையவர்கள் பற்றிய விபரங்கள் இன்னமும் முழுமையாக வரவில்லை.

இவர்களுடைய பயண ஏற்பாட்டை மேற்கொண்டதில் மார்ச் 2009ல் இலங்கை சென்ற டயஸ் பொறா டயலொக் குழுவிற்கும் சம்பந்தம் உண்டு. இக்குழுவில் சென்ற டொக்டர் நடேசன், டொக்டர் நரேந்திரன், சூரியசேகரம், குகநாதன் ஆகியோர் கே பி யை புலம்பெயர்ந்த புலி அதரவுக் குழுவினர் சந்திப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்ததில் ஈடுபட்டு இருந்தனர். கே பி யினதும் புலம்பெயர்ந்த புலி ஆதரவுக் குழுவினரதும் வடக்கு நோக்கிய பயணத்தில் டொக்டர் நடேசன், டொக்டர் நரேந்திரன், சூரியசேகரம், குகநாதன் ஆகியோரும் கலந்தகொண்டதாக தெரியவருகின்றது. ஆனால் இதனை உறுதிப்படுத்த முடியவில்லை.

‘வடக்கு கிழக்கு அபிவிருத்தித் திட்டம்’ என்ற அரசசார்பற்ற நிறுவனம் ஒன்றை நிறுவி அதனூடாக அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுப்பது பற்றி கே பி வெளிநாடுகளில் இருந்து சென்ற குழுவினருடன் கலந்துரையாடியதாக தெரியவருகின்றது. வெளிநாடுகளில் உள்ள புலிகளின் சொத்து விபரங்களை சேகரிப்பதிலும் அதனை மீண்டும் இலங்கைக்குக் கொண்டு வருவதிலும் இலங்கை அரசு மிகவும் கவனமாக உள்ளது. புலிகளுக்கு 300 மில்லியன் அமெரிக்க டொலர் வரை ஆண்டு வருமானத்தை வழங்குகின்ற 3 முதல் 5 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான சொத்துக்கள் உலகின் பல பாகங்களிலும் இருப்பதாக ஜேன்ஸ் வீக்லி என்ற புலனாய்வுச் சஞ்சிகை 2007ல் மதிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த நிதியின் சிறுபகுதி மீண்டும் ஆயுத வன்முறையை மேற்கொள்ள விரும்புபவர்களின் கைகளுக்குச் செல்லுமாயின் அவர்களால் தொடர்ச்சியான ஆயுதப் போராட்டத்தை முன்னெடுக்க முடியாவிட்டாலும் இலங்கையில் தற்போது காணப்படுகின்ற ஸ்தீரத்தன்மையை குலைக்க முடியும். இந்த நிலை ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் இலங்கை அரசு மிகக் கவனமாக உள்ளது.

மே 18 2009ல் யுத்தம் முடிவடைந்த போதும் இலங்கையில் முற்றுமுழுதாக புலிகளின் செயற்பாடுகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுவிடவில்லை என இலங்கையின் புலனாய்வுத்துறையினர் மத்தியில் இருந்து வெளிவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆங்காங்கு சிறு அசம்பாவிதங்கள் ஏற்பட்டும் உள்ளது. தப்பியோடிய புலிகளில் சிலர் இன்னமும் இலங்கையின் காட்டுப் பகுதிகளில் உள்ளதாக அத்தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை அரசு கடைப்பிடிக்கும் மிகக் கடுமையான செய்தித் தணிக்கை காரணமாக ஊடகங்கள் இவ்வாறான தகவல்களை வெளியிடுவதைத் தவிர்த்து வருகின்றன. ஆங்காங்கு இராணுவ வீரர்கள் ஒரு சிலர் காயமடைந்து அல்லது மரணமடைந்து வைத்தியசாலைக்கு கொண்டு வரும் சம்பவங்கள் இடம்பெறவே செய்கின்றன. இவை புதைக்கப்பட்ட கண்ணி வெடிகளால் நிகழ்வதாக அரச தரப்பினால் தெரிவிக்கப்பட்ட போதும் அதனை சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியாத நிலையொன்று உள்ளது. அண்மையில் ஒளிபரப்பப்பட்ட ஸ்ரீபன் சார்க்கரின் ஹாட் ரோக் நிகழ்ச்சியில் ஒளிபரப்பான ஒரு போராளியின் வாக்குமூலமும் இதனை உறுதிப்படுத்தி உள்ளது.

தடுத்து வைக்கப்பட்டு உள்ள பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட போராளிகளை விடுவிப்பதில் அரசு தயக்கம் காட்டி வருவதற்குள்ள பல காரணங்களில் முக்கிய காரணமாக இருப்பது புலிகள் மீண்டும் தங்களை ஒழுங்கமைக்க முற்படும் போது, விடுவிக்கப்படும் போராளிகள் மீண்டும் அவர்களினால் இயக்கத்திற்குச் சேர்க்கப்படும் வாய்ப்பு இருப்பதே. அதனாலேயே கைது செய்யப்பட்ட அல்லது சரணடைந்த போராளிகளை விடுவிப்பது காயப்பட்டவர்களுடன் மட்டுப்படுத்தப்பட்டு விடுகின்றது. தடுத்து வைக்கப்பட்டுள்ள போராளிகளில் முற்றுமுழுதான மனமாற்றத்தை ஏற்படுத்தவே கே பி மற்றும் வெளிநாட்டுக் குழுவினர் இந்தப் போராளிகளைச் சந்திக்கவும் உரையாடவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

புரஜக்ற் பீக்கன் இராணுவத் திட்டப்படி புலிகளின் கரையோரக் கட்டுப்பாட்டுப் பகுதிகளை 3 பிரிவுகளாகப் பிரித்து அவை ஒவ்வொன்றையும் கைப்பற்ற 12 மாதங்களை ஒதுக்கி 3 ஆண்டுகளுக்குள் புலிகளின் நிலப் பரப்பைக் கைப்பற்ற திட்டம் போட்டு அதனை வெற்றிகரமாகவும் அரசு நிறைவேற்றியது.

01 மே 2006 – 30 ஏப்ரல் 2007 திருகோணமலையின் சம்பூர் முதல் மட்டக்களப்பின் பனிச்சங்கேணி வரையான கரையோரப் பகுதி கைப்பற்றப்பட்டது.
01 மே 2007 – 30 ஏப்ரல் 2008 மன்னார் முதல் பூனேரியன் வரையான கரையோரப் பகுதி கைப்பற்றப்பட்டது.
01 மே 2008 – 30 ஏப்ரல் 2009 ஆனையிறவு முதல் கொக்குத்தொடுவாய் வரையான கரையோரப் பகுதியையும் அதனோடு இணைந்த நிலப்பகுதியையும் கைப்பற்றியது.

இதன் மூலம் புலிகளுக்கான ஆயுதங்கள் தரையிறக்கப்படும் விநியோக வழிகள் (அம்பாறை, சிலாவத்துறை, புல்மோட்டை மற்றும் பருத்தித்துறை) முற்றாகக் கட்டுப்படுத்தப்பட்டது.

01 மே 2009 – 30 ஏப்ரல் 2011 காலப் பகுதி – தற்போதைய காலப்பகுதி புலிகளை களையெடுக்கும் காலப் பகுதியாகத் திட்டமிடப்பட்டு இருந்தது. தங்களுக்கான விநியோகங்கள் இல்லாத நிலையில் வன்னி காடுகளுக்குள் உள்ள புலிகளை களையெடுக்கும் காலப் பகுதியாக இது அமைந்துள்ளது. இந்த புரொஜக்ற் பீக்கன் திட்டம் 2007ல் வெளியே கசிந்திருந்தது. இது பற்றிய விரிவான கட்டுரை ஏப்ரல் 7 2009ல் தேசம்நெற்றில் வெளியிடப்பட்டு இருந்தது. தற்போது புலிகளை களையெடுக்கின்ற இறுதி நடவடிக்கைகளில் இலங்கையரசு மிகத் தீவிரமாக உள்ளது.

இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் 2011 ஏப்ரலில் புலிகள் முற்றாக களையெடுக்கப்பட்ட பின்னரேயே நடாத்த ஆரம்பத்தில் திட்டமிடப்பட்டது. ஆனால் புலிகளுடனான யுத்தத்தால் கிடைத்த இராணுவ வெற்றி சரத்பொன்சேகாவுடன் ஏற்பட்ட முரண்பாட்டில் அடிபட்டுச் சென்றுவிடலாம் என்ற அச்சத்தாலும் அதனை எதிர்க்கட்சிகள் பயன்படுத்தலாம் என்பதாலும் ஜனாதிபதித் தேர்தல் திட்டமிடப்பட்டதற்கு ஓராண்டுக்கு முன்னதாகவே இடம்பெற்றது.

புரஜக்ற் பீக்கனின் இறுதிக்கட்டத்தில் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் புலிகளைக் களையெடுக்கின்ற நடுநிலையாக்குகின்ற முயற்சிகளுக்கு புலிகளையே அரசு பயன்படுத்த திட்டமிட்டு உள்ளது. உள்நாட்டில் புலிகள் மிகவும் பலவீனமான நிலையில் கிட்டத்தட்ட போராட்டத்தின் ஆரம்ப காலகட்டங்களில் தலைமறைவாக வாழ்ந்தது போன்ற நிலையிலேயே உள்ளனர். ஆனால் வெளிநாடுகளில் உள்ள புலிகளின் கட்டமைப்பு யுத்தத்தினால் எவ்வகையிலும் பாதிக்கப்படவில்லை. ஆனால் புலிகளின் தலைமைகள் அழிக்கப்பட்டதால் அவர்கள் மாற்றுத் தலைமையின்றி ஆளுக்காள் ஆழமான சந்தேகம் கொண்டவர்களாக உள்ளனர். இருந்தாலும் இந்த வெளிநாட்டுப் பிரிவில் ஒரு பகுதியினர் மீண்டும் இலங்கையில் ஒரு ஆயுத வன்முறையை உருவாக்கத் தீவிரமாக முயற்சிக்கின்றனர். இவர்கள் அங்கு காடுகளில் பதுங்கியுள்ள மீளிணைகின்ற புலிகளுக்கு ஒரு பின்பலத்தை பொருளாதார பலத்தை வழங்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக இலங்கை அரசு நம்புகின்றது.

அண்மைக் காலமாக ஒட்டுக்கேட்கப்படும் தொடர்பாடல்கள் புலிகளின் நடமாட்டங்களை உறுதிப்படுத்துவதாக இலங்கைப் புலனாய்வுத்துறையிடம் இருந்து செய்திகள் கசிந்துள்ளது. மே 18 முடிவில் சரணடைந்தவர்களில் புலிகளின் முக்கிய பொறுப்புகளில் இருந்தவர்களும் இருந்துள்ளனர் என்பதையும், அவர்கள் புலிகள் என அடையாளம் காணப்படுவதற்கு முன்னதாகவே பெரும்தொகைப் பணத்தைச் செலுத்தி முகாம்களில் இருந்து வெளியேறி இலங்கைக்கு வெளியே சென்றுவிட்டதையும், இலங்கை இராணுவத்தரப்பு தற்போது உத்தியோகப்பற்றற்ற முறையில் ஒத்துக்கொள்கின்றது. அவ்வாறு தப்பியவர்களில் பிற்காலங்களில் வே பிரபாகரனின் ஆலோசகராக இருந்த மு திருநாவுக்கரசும் ஒருவர். யுத்தத்தின் இறுதிநாளில் இலங்கைப் படையிடம் சரணடைந்த மு திருநாவுக்கரசு குடும்பத்தினர் முகாமை விட்டு வெளியேறி தற்போது இந்தியாவில் தங்கி உள்ளனர். இவ்வாறு தப்பித்த பலர் இந்தியா, மலேசியா, வியட்நாம், தென்னாபிரிக்கா போன்ற நாடுகளில் தலைமறைவாகி உள்ளனர். இவர்களில் யாராவது மீளிணையும் புலிகளுக்கு தலைமை கொடுத்து நெருக்கடியைத் தோற்றுவிக்கலாம் என்ற அச்சம் இலங்கை இராணுவத்தரப்பில் தற்போது வெளிப்படுகின்றது. அதனைத் தவிர்ப்பதற்கும் கையாள்வதற்கும் கே பி யின் ஆளுமையை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை அரசு ஆராய்கின்றது.

‘தமிழீழ விடுதலைப் புலிகளின் நிதி பற்றிய விபரங்களை அரசாங்கத்திற்கு வழங்குவது தொடர்பாக கே பி க்கு பொதுமன்னிப்பு அழிக்கப்பட்டால் நான் ஆச்சரியப்பட மாட்டேன்’ என ஊடகத்துறை அமைச்சர் ஹெகலிய ரம்புக்வல யூன் முற்பகுதியில் தெரிவித்து இருந்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் ‘கே பி வெளியிட்ட தகவல்களால் வெளிநாடுகளில் இருந்த புலிகளின் பல சொத்துக்களை அடையாளம் காணக் கூடியதாக இருந்தது’ என்றும் தெரிவித்தார். ஆயினும் அச்சொத்துக்களின் பெறுமதி பற்றியோ அல்லது அவை இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதா என்ற தகவல்களையோ அமைச்சர் வெளியிட மறுத்துள்ளார். ‘மன்னர் போன்று வாழ்ந்தவர் கே.பி. இப்போது தனது சகல சிறப்புரிமைகளையும் இழந்துவிட்டார். தனது தோழர்களுக்கு துரோகம் செய்துவிட்டார் என்று சிலர் கூறக்கூடும். ஆனால், இப்போது நாட்டுக்காக அவர் அதிகளவுக்குச் செய்கிறார் என்பதையிட்டு நாம் திருப்தியடைவது அவசியமானதாகும். அவர் அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குகிறார்’ என்றும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

2009 மார்ச் 27 – 29 ல் வெளிநாட்டுத் தமிழர்கள் குழு இலங்கை அரசின் அழைப்பில் தலைநகர் கொழும்பு சென்றது. ‘ஸ்ரீலங்கன் டயஸ்பொறா டயலொக்’ என்ற தலைப்பில் இடம்பெற்ற இச்சந்திப்பில் புலிகளின் முக்கிய தலைவரான திரு கே பத்மநாதன் உடன் இலங்கை அரசு ஒழுங்கான தொடர்பில் இருப்பதாக அப்போது அமைச்சர் பசில் ராஜபக்ச குறிப்பிட்டு இருந்தார். அமைச்சர் பசில் ராஜபக்ச கே பியை அழைக்கும் போது திரு கே பத்மநாதன் என்று கௌரவமாகவே அழைத்திருந்தமையும் அச்சந்திப்பில் கலந்துகொண்டவர்களால் சுட்டிக்காட்டப்பட்டது.

கே பி பெரும்பாலும் புலிகளின் ஆயுதக் கொள்வனவுகளில் தலைமறைவாகவே செயற்பட்டு வந்தவர். 2007 செப்ரம்பர் 10ல் கே பி பாங்கொக்கில் வைத்து கைது செய்யப்பட்டதாக பாங்கொக் போஸ்ற் செய்தி வெளியிட்டு இருந்தது. இச்செய்தி இலங்கை, இந்தியா மற்றும் புலம்பெயர்ந்த தமிழர்கள் நாழும் நாடுகளில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. ஆயினும் தாய்லாந்துப் பொலிஸார் இச்செய்தியை மறுத்து இருந்தனர். கே பி கைது செய்யப்பட்ட போதும் ஊழல் நிறைந்த தாய்லாந்துப் பொலிஸ் உயர் அதிகாரிகளால் அவர் விடுதலை செய்யப்பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. புரஜக்ற் பீக்கன் ஆரம்பிக்கப்பட்டு கிழக்கில் புலிகள் தங்கள் கட்டுப்பாட்டை இழந்திருந்த நிலையிலேயே கே பி கைது செய்யப்பட்டதான செய்தி அல்லது வதந்தி வெளிவந்தது. இச்சம்பவத்தின் உண்மைத் தன்மை என்னவென்பது இதுவரை வெளிவரவில்லை.

இச்சம்பவத்திற்கு முன்னதாகவே கே பி அவருடைய சர்வதேசப் பொறுப்பில் இருந்து ஓரங்கட்டப்பட்டு இருந்தார். பின்னர் 2008ன் பிற்பகுதியில் கே பி தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச இணைப்பாளராக நியமிக்கப்பட்டார். அதன் பின் 2009ல் பேச்சுவார்த்தைகளுக்கு புலிகளின் சிரேஸ்ட பிரதிநிதியாகவும் பிரதிநிதியாக புலிகளின் பேச்சாளராகவும் நியமிக்கப்பட்டார்.

மே 18ல் புலிகளின் தலைமை அழிக்கப்பட்ட நிலையில் கே பி தன்னையே புலிகளின் தலைவராக அறிவிக்கின்றார். அவ்வாறு ஒருவரை அறிவிப்பதற்கான அதிகாரம் கே பியைத் தவிர வேறு யாரிடமும் இருந்திருக்கவும் இல்லை. தலைவராக அறிவிக்கப்பட்ட கே பி மாறுபட்ட கருத்தடையவர்களையும் இணைத்து நாடுகடந்த அரசாங்கம் ஒன்றை அமைக்க வி உருத்திரகுமாரன் தலைமையிலான குழுவொன்றை உருவாக்கினார். அதற்காகப் பலருடனும் தொடர்புகளை ஏற்படுத்தி இருந்தார். இரகசியத் தன்மையை மிகக்கடுமையாக பின்பற்றுகின்ற அமைப்பை உருவாக்கி அதன் வளர்ச்சியில் இரண்டறக் கலந்த கே பி சாதாரணமாகவே பலருடன் தொடர்புகளை ஏற்படுத்தி வந்தார். அவரை பலரும் மலேசியா சென்றே சந்தித்து வந்தனர். அவர் தனது இருப்பு பாதுகாப்புப் பற்றி அதிகம் கவனம் கொண்டிருக்கவில்லை. தனது பாதுகாப்பை வேறுவழிகளில் உறுதிப்படுத்திக் கொண்டதாகவும் தற்போது கொள்ளமுடியும்.

அதன் பின்னர். ஓகஸ்ட் 7 2009ல் மலேசியாவில் வைத்து கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டார்.

தற்போது கே பிக்கு பொது மன்னிப்பு அழிப்பது பற்றியும் அவரை முதலமைச்சராக்குவது பற்றியும் அரசாங்கத்தரப்பில் தீவரமாக ஆலோசிக்கப்படுகின்றது. கே பி தற்போது இலங்கையில் இருந்து நாடுகடந்த தமிழீழக்குழு, வட்டுக்கோட்டைத் தீர்மானக் குழு, தமிழர் புனர்வாழ்வுக்கழகம், தமிழர் சுகாதார அமைப்பு, பிரித்தானிய தமிழர் பேரவை என புலிகளின் முன்னரங்க அமைப்புகளில் உள்ளவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி வருகின்றார்.

கே பி முழுமையாக அரசாங்கத்துடன் இணைந்து தமிழ் மக்களின் அபிவிருத்தியில் ஈடுபடுவதைத்தவிர வேறு வழியில்லை என்பதை தன்னிடம் பேசியவர்களுக்குத் தெரிவிப்பதாக தேசம்நெற் அறிகின்றது. மேலும் பாதுகாப்பு அமைச்சுச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மிகுந்த நம்பிக்கைக்குரிய மனிதர் என்றும் கொடுத்த வாக்கைக் காப்பாற்றுபவர் என்றும் அவர் தன்னைச் சந்தித்தவர்களுக்குத் தெரிவித்துள்ளார்.

கே பி யின் அழைப்பில் இலங்கை சென்றவர்கள் தொடர்பில் கே பியுடன் முரண்பட்டவர்கள் குறிப்பாக பிரித்தானிய தமிழர் பேரவை குற்றச்சாட்டுக்களை வைப்பதில் அல்லது அவர்களுக்கு வழமைபோல் துரோகிப் பட்டம் வழங்குவதில் சிக்கல்களை எதிர்நோக்குகின்றது. சென்றவர்களில் சிலர் புலிகளின் தீவிர ஆதரவாளர்கள் மட்டுமல்ல புலிகளுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றியவர்கள்.

கே பி யின் வடக்கு கிழக்கு அபிவிருத்தித் திட்டம் எவ்வளவுதூரம் வெற்றிகரமாகச் செயற்படப் போகின்றதோ இல்லையோ புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள புலிகள் நாளுக்கு நாள் அரசியல் ரீதியாகப் பலவீனமடைகின்றனர். அதேநேரம் அவர்களிடம் உள்ள சொத்துக்கள் பெரும்பாலும் ஒரு சிறுகுழுவினரினால் அனுபவிக்கப்பட்டுக் கொண்டும் உள்ளது. தற்போது புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள புலிகள் மத்தியில் கே பி யின் நிலை முக்கிய விவகாரமாகி உள்ளது. கே பி யின் நிலையை விளங்கிக்கொள்வதில் சர்ச்சைகளும் சங்கடங்களும் காணப்படுகிறது. புலிகள் எப்போதும் அரசியல் அடிப்படையில் அணிசேர்ந்தவர்கள் அல்ல. அவர்கள் எப்போதும் நபர்களின் அடிப்படையிலேயே அணி சேர்ந்தனர். அதனால் அவர்களுக்கு தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் சிக்கலைக் கையாள முடியவில்லை. தொடர்ந்தும் நபர்கள் தொடர்பான முரண்பாடுகளிலேயே காய்களை நகர்த்துகின்றனர்.

கே பி இலங்கை அரசாங்கத்துடன் முழுமையாக இணைந்து செயற்படுவது என்ற முடிவை எப்போது எடுத்தார் என்பது தற்போது மில்லியன் பவுணுக்குரிய கேள்வியாக உள்ளது. 2006 மேயில் புரஜக்ற் பீக்கன் ஆரம்பிக்கப்பட்ட போதே கே பி இலங்கை அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க ஆரம்பித்துவிட்டாரா என்ற சந்தேகங்கள் பல்வேறு தரப்பினரிடமும் உள்ளது.

புலிகளை அழிக்கின்ற புரொஜகற் பீக்கன் வீச்சுடன் இடம்பெற்றிருந்த காலப்பகுதியில் புலிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட ஆயுதங்கள் சர்வதேசக் கடற்பரப்பில் வைத்தே தாக்கி அழிக்கப்பட்டது. இதற்கு இந்தியாவின் பங்களிப்பு முக்கியமானதாக இருந்ததாக இலங்கை இராணுவம் அதற்கு நன்றியைத் தெரிவித்து இருந்தது. ஆனால் இதில் எங்களை மட்டும் சொல்லிக் குற்றமில்லை கே பி யும் முக்கியமான தகவல்களை இலங்கைக்கு வழங்கி வந்ததாக லண்டனில் உள்ள இந்திய அதிகாரி ஒருவர் தங்களைச் சந்திக்க வந்த தமிழ் பிரதிநிதிகளுக்கு சுட்டிக்காட்டி உள்ளார்.

புலிகள் முற்றுமுழுதாக இலங்கை அரச படைகளால் சுற்றிவளைக்கப்பட்டு இருந்தநிலையில் தாங்கள் ஆயுதங்களை மௌனிப்பது என்ற முடிவை எடுத்த போது அவர்களின் பிரதான வெளித்தொடர்பு கே பி உடனேயே இருந்தது. அதேசமயம் புலிகளின் உள்ளுர் தலைவர்கள் தமிழக அரசியல்வாதிகள் நோர்வேயில் எரிக்சோல் ஹெய்ம், ரைம்ஸ் பத்திரிகையாளர் போன்றவர்களுடன் தொடர்பைப் பேணி வந்தனர். இவர்களுடைய படுகொலைகள் நிகழ்வதற்கு 48 மணிநேரத்திற்குள் இவர்கள் மேற்குறிப்பிட்டவர்களுடன் தொடர்பில் இருந்துள்ளனர்.

கே பி ஏற்கனவே இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட ஆரம்பித்து இருந்தால் புலிகளின் ஆயுதக் கப்பல்கள் தாக்கி அழிக்கப்பட்டதில் இந்திய அதிகாரி குறிப்பிட்டது போல் கே பி க்கும் தொடர்பு இருந்தால் புலிகளின் தலைமையை சரணடைய வைக்கும் முயற்சியிலும் சரணடையும் பட்சத்தில் சர்வதேச பாதுகாப்புடன் அவர்கள் இலங்கைக்கு வெளியே கொண்டு செல்லப்படுவார்கள் போன்ற நம்பிக்கைகளையும் கே பி அவர்களுக்கு வழங்கி இருக்கக் கூடும். ஆனால் இவை யாவும் முழுமையான தகவல்கள் கிடைக்கும் வரை அறுதியிட்டுக் கூறிவிடக் கூடியதல்ல.

அதேவேளை எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் பேச்சுவார்த்தைகளுக்கு தங்களின் பிரதிநிதியாக கே பி புலிகளாலேயே நியமிக்கப்பட்டு இருந்தவர். ஆனாலும் புலிகள் கே பி இல் மட்டும் தங்கி இருக்கவும் இல்லை. கே பி முன்னர் புலிகளின் ஒரு பகுதியினரால் ஓரங்கட்டப்பட்டு பின்னர் மீண்டும் சர்வதேசப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டவர். கே பி மீதான சந்தேகம் புலிகளுக்கு ஏற்பட்டு இருந்தால் அப்படியான ஒருவரின் கையில் தங்கள் உயிர்களைப் பணயம் வைத்திருப்பார்களா என்பதும் கேள்விக்குரியது. பேச்சுவார்த்தைகளுக்கு கே பி புலிகளின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டதால் பேச்சுவார்தையில் ஈடுபட்டவர்களிடையே குறிப்பாக கோதபாய ராஜபக்சவுக்கும் கே பி க்கும் இடையே ஒரு உறவு ஏற்பட்டு இருக்கக் கூடும்.

யூன் 14 2009ல் தேசம்நெற்றுடன் கே பி தொடர்புகொண்டதில், 2002 பேச்சுவார்த்தைகளில் இருந்து புலிகளை வெளியேற வேண்டாம் என்று தான் வலியுறுத்தி வந்ததாகவும், தலைவர் தனது ஆலோசனையிலும் பார்க்க தமிழக அரசியல் வாதிகளிடம் இருந்து தினம் கிடைக்கும் ஆலோசணைகளையே கூடுதலாக ஏற்றுக்கொண்டதாகவும் தெரிவித்தார். கே பி பிற்காலங்களில் யுத்தத்தைத் தொடர்வதில் பெரிய நாட்டம் கொண்டிருக்கவில்லை என்பதை பெரும்பாலும் அறிய முடிகின்றது. கருணா அம்மான் புலிகளில் இருந்து வெளியேறுகின்ற முடிவை எடுத்ததற்கும், புலிகளின் தலைமை தொடர்ந்தும் யுத்தத்தை முன்னெடுப்பதே காரணம் எனத் தெரிவித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது. பேச்சுவார்த்தைகளில் புலிகளைப் பிரதிநிதித்துவம் செய்த கருணா எடுத்த அதே முடிவுக்கே கே பியும் வந்துள்ளார்.

கே பி க்கும் இலங்கை அரசுக்குமான நெருக்கமான உறவு யுத்தத்தின் பிற்பகுதியில் கே பி பேச்சுவார்த்தைகளுக்கு புலிகளின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டது முதல் ஏற்பட்டிருக்க வேண்டும். இந்திய அதிகாரி குறிப்பிட்டது போல் அதற்கு முன்பே கே பி இலங்கை அரசுடன் இணைந்து செயற்பட்டு இருந்தால் புலிகளுக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரும் துரோகத்தனமாக அது அமையும்.

புலிகள் தங்களில் இருந்து மாறுபட்ட கருத்துடையவர்கள் அனைவரையும் துரோகிகள் என்று முத்திரை குத்தி இறுதியில் தங்களுக்குள்ளேயே துரோகிகளைத் தேட நிர்ப்பந்திக்கப்பட்டு உள்ளனர்.

புலிகளை யுத்தத்தின் ஆரம்பம் முதலேயே பேச்சுவார்த்தை மூலமான உடன்பாட்டுக்குச் செல்லுமாறு வலியுறுத்தியதாக கே பி தேசம்நெற்றுக்குத் தெரிவித்து இருந்தார். இதனை கிளிநொச்சியின் வீழ்ச்சிக்கு முன்னும், பின்னரும் கூறியதாகவும் ஆனால் தமிழகத் தேர்தல் முடிவுகளில் தலைமை மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்ததாகவும் கூறியிருந்தார். அப்போது யுத்தமுனையில் இருந்து வந்த தகவல்கள் அனைத்தும் தாங்கள் தமிழீழத்தை நெருங்கிக் கொண்டிருப்பதாகவே தெரிவித்து வந்தன. மே 16 2009 இலேயே சூசை முதற்தடவையாக தாங்கள் ஆயுதங்களை மௌனிக்க வைக்கத் தயார் என்று அறிவிக்கின்றார். இப்பேச்சு புலிஆதரவு ஊடகங்களுக்கு வழங்கப்பட்டு ஒலிபரப்பப்பட்டது. புலிகள் தாங்கள் சரணடையத் தயார் என முதலும் கடைசியுமாகத் தெரிவித்தது அப்போதே.

எந்தவொரு பேச்சுவார்த்தையிலும் திறமையாகப் பேரம்பேசக் கூடியவருக்கும் இந்நிலையில் பேச்சுவார்த்தையை மேற்கொள்வது மிகக் கஸ்டம். ஓரிரு சதுர கிலோ மீற்றருக்குள் முழுமையாக இராணுவத்தால் சுற்றிவளைக்கப்பட்டு இருக்கும் தலைமையை காப்பாற்ற பேச்சுவார்த்தை நடாத்த கால அவகாசம் இல்லை. சரணைடைவதற்கான நிபந்தனைகளை விதிக்கவும் புலிகளிடம் ஒருபிடியும் இருக்கவில்லை. தங்களை சில மணிநேரத்திற்குக் கூட தற்காத்துக் கொள்ள முடியாத நிலையிலேயே சரணடைவதற்கான முடிவை அவர்கள் அறிவித்தனர். சரணடைவதற்கான ஒழுங்குகளை மேற்கொள்ளவும் அங்கு நேரம் இருந்திருக்கவில்லை. அதனால் இலங்கை அரச தரப்பில் அல்லது இராணுவம் சொல்வதையெல்லாம் நம்புவதைத் தவிர அங்கு புலிகளுக்கோ, அவர்களுக்காக பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட கே பி க்கோ வேறுவழி இருந்திருக்க முடியாது.

இலங்கை அரசு கே பி க்கு சில நம்பிக்கை சமிஙைகளை வழங்கி கே பி மூலமாக புலிகளுக்கு நம்பிக்கை கொடுத்திருக்கலாம். இதுவரை புலிகளின் தலைமை சரணடைந்ததும் அவர்கள் இலங்கை இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டனர் என்ற தகவல் மட்டுமே உறுதிப்படுத்தக் கூடியதாக உள்ளது. எவ்வாறு அது சம்பவித்தது என்பது இன்னமும் ஊகங்களுக்கே விடப்பட்டு உள்ளது.

இவற்றைத் தொடர்ந்து ஓகஸ்ட் 7 2009ல் மலேசியாவில் வைத்து துப்பாக்கிப் பிரயோகம் இன்றியே கே பி கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டார். இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டவர் இலங்கையின் சிறைக்கூடங்களில் தடுத்த வைக்கப்பட்டு இருக்கவில்லை. முன்னாள் ஜனாதிபதி பிரேமதாஸவினால் கட்டப்பட்ட “விசும்பாய” வில் தங்க வைக்கப்பட்டு இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. யூனியன் பிளேசில் உள்ள இந்த வாஸஸ்தலத்திலேயே அநுரா பண்டாரநாயக்காவும் வாழந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தக் கைது இலங்கை அரசாங்கத்தாலும் கே பி ஆலும் அரங்கேற்றப்பட்ட ஒரு நாடகம் என்றே தற்போது அறிய வருகின்றது. இந்தக் கைதுக்கு முன்னதாகவே கே பி க்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையே உடன்பாடு எட்டப்பட்டு இருக்க வேண்டும் என்ற சந்தேகம் வலுவடைந்துள்ளது. புலிகளின் தலைமை முற்றாக அழிக்கப்பட்ட நிலையில் கே பி யால் புலிகள் அமைப்பை நீண்ட காலத்திற்கு தலைமை தாங்க முடியாது. சர்வதேச உளவு நிறுவனங்களுக்கே வேண்டப்பட்ட கே பி, இன்று அனுபவிக்கின்ற சுதந்திரக் காற்றை பலவருடங்களாக அனுபவித்திருக்கவில்லை. மேலும் புலிகளில் ஒரு பகுதியினர் தலைமையின் அழிவுக்குத் தன்னை ஒரு காரணமாகக் காட்டுவதால் புலிகளாலும் அவருக்கு ஆபத்து ஏற்படலாம் என்ற அச்சமும் தவிர்க்க முடியாதது. அதனால் நோயாளியுமான இவர் இலங்கை அரசுடன் ஒரு உடன்பாட்டுக்குச் சென்று சரணடைவதே அவருக்கு பாதுகாப்பானதாக அமைந்திருக்கும். அந்த நாடகமே ஓகஸ்ட் 7 2007 ல் மலேசியாவில் அரங்கேறியிருக்க வாய்ப்புள்ளது.

தற்போது ஆலோசிக்கப்படுவது போல் வட மாகாண முதல்வராக கே பி நியமிக்கப்பட்டால் இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்கள் புலிகளினாலேயே நிர்வகிக்கப்படுகின்றது என்றும் கொள்ள முடியும். அங்கு எழக்கூடிய எதிர்ப்பு நடவடிக்கைகள் எதுவானாலும், காடுகளில் உள்ள புலிகள் மீளினைந்து சில தாக்குதல்களை மேற்கொண்டாலும், அதனை புலிகளை வைத்தே இலங்கை அரசினால் கையாள முடியும். இலங்கையின் எந்தக் காடுகளின் மூலைகளில் எப்படிப் பதுங்க முடியும் என்பது முதல் சர்வதேச பாதாள உலகில் எவ்வாறு ஆயுதங்களை வாங்கி எப்படிக் கொண்டுவர முடியும் என்பதுவரை அனைத்தையும் அறிந்தவர்கள், ஒரே பாசறையில் உண்டு உறங்கியவர்கள், இன்று இலங்கை அரசுடன் இணைந்துள்ளனர். இவர்களுக்கு புலிகள் எப்படிச் சிந்திப்பார்கள் என்பதும் நன்கு தெரிந்தே இருக்கும்.

இதற்குள் அண்மையில் ஒரு புலி ஆதரவாளர் ‘கே பி இலங்கை அரசாங்கத்தினுள் புகுந்து விளையாடுகிறார்” என்றும் பெருமைகொண்டார். ‘தலைவர் உள்ளுக்கு விட்டு அடித்து முடிந்துவிட்டார். இப்ப கே பி இன் ரேன்’ என்று  அவருக்கு என் கருத்தைத் தெரிவிப்பதைவிட என்ன சொல்ல முடியும்.

புலிகளின் பெயரில் மட்டுமே தமிழ் மக்களின் விடுதலை இருந்ததே அல்லாமல் அவர்களின் அரசியலிலோ செயற்பாடுகளிலோ தமிழ் மக்களின் விடுதலை பற்றிய உணர்வோ சிந்தனையோ இருக்கவில்லை. ஆனாலும் தமிழ் மக்களின் விடுதலையின் பெயரில் மிகப்பெரிய அழிவுகளும் அனர்த்தங்களும் நேர்ந்துள்ளது. பானையில் இருப்பதே அகப்பையில் வரும் என்பதற்கமைய இன்று புலிகளில் எஞ்சி நிற்பது கே பி, பிள்ளையான், கருணா….. புலம்பெயர்ந்த நாடுகளை எடுத்தால் நெடியவன், ரூட்ரவி, தனம் ….

இந்த சூழலுக்கள் தான் தாயகத்தின் தமிழ் மக்கள் வாழ வேண்டிய நிலையுள்ளது. இவர்களையோ இலங்கை அரசாங்கத்தையோ நிராகரித்து தமிழ் மக்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்க முடியாது. கடந்த மூன்று தசாப்த கால யுத்தமும் அதில் ஈடுபட்ட அனைத்து தரப்பினரும் ஏற்படுத்திய அழிவும் சாதாரணமானதல்ல. இது தமிழ் மக்களின் வாழ்வியல் முன்னேற்றத்தை தடுத்தது மட்டுமல்ல பல பத்து ஆண்டுகள் பின்நோக்கியும் தள்ளியுள்ளது. மீண்டும் அந்த மக்களை கொண்டு வந்து வளர்ச்சிப் பாதையில் விடுவது அவசியமாகின்றது. அதற்கு எதிரான அரசியல் தடைகளை உடைப்பதற்கான வழிவகைகளை ஆராயப்பட வேண்டும்.

இச்சூழலில் தமிழ் மக்களின் அபிவிருத்தி கருதிச் செயற்படுபவர்கள் தங்கள் நடவடிக்கைகள் பற்றி வெளிப்படையாக இருப்பது அவசியம். தமிழ் மக்கள் என்ற பெயரில் செய்யப்படும் எந்த விடயமும் அந்த மக்களுக்கு அறிவிக்கப்பட வேண்டும். அதனை இரகசியமாக மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை. கே பி யைச் சந்தித்தவர்கள் சந்திக்க முன்னரோ அல்லது சந்தித் பின்னரோ பின்னரோ தமது நோக்கம் பற்றி வெளியிட்டு இருக்க வேண்டும். ஆனால் அதனை அவர்கள் செய்யாதது அவர்கள் மீது பலவாறான சந்தேகங்களுக்கு இட்டுச்செல்கின்றது. இவ்வாறான மூடுமந்திர சந்திப்புக்கள் ஆரோக்கியமானதல்ல.

குறிப்பாக இக்குழுவில் பயணித்த சார்ள்ஸ் அந்தோனிதாஸ் ஜனநாயக நடைமுறை பற்றியும் வெளிப்படையான அரசியல் பற்றியும் பொது இடங்களில் கருத்து வெளியிட்டுவருபவர் இப்பயணம் குறித்து மௌனிப்பது தவறான முன்னுதாரணமாக அமையும். தமிழ் சமூகத்தில் காணப்படும் இவ்வகையான மூடுமந்திரமான அரசியல் கலாச்சாரம் முடிவுக்கு வர வேண்டும்.

Show More
Leave a Reply to thurai Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

52 Comments

  • கந்தையா
    கந்தையா

    எமது எதிரியான சிங்களவர்களடன் பேச்சு வார்த்தைக்குப் போன மற்றும் இனிவருங்காலங்களில் போகவிருக்கின்ற நபர்கள் அனைவரும் பிரித்தானிய தமிழர் பேரவை தமிழர் சுகாதார அமைப்பு தமிழர் புனர்வாழ்வுக்கழகம் வணங்கா மண் போன்றவற்றுடன் தற்போது எவ்விதத் தொடர்பும் அற்றவர்கள் என்பதை மேற்சொன்ன அமைப்புக்கள் சார்பில் நாம் தெரிவித்துக் கொள்கிறேம் (அப்பாடா ஒருமாதிரித் தப்பிட்டம்)

    Reply
  • அமிர்தகழியான்
    அமிர்தகழியான்

    வெட்கம், ரோஷம், மானம் எதுவும் இல்லாத ஒரே இனம் எம் இனம். பணம் என்றால் தமிழ் பிணமும் வாயை திறக்கும்.

    Reply
  • thurai
    thurai

    புலம்பெயர் நாடுகளில் தமிழ் மொழியின் பெயரால் தொடங்கப்பட்ட எல்லா அமைப்புகழுமே பணத்திற்காகத்தான். ஒன்று இரண்டு விதி விலக்காகலாம். 30 வருடத்தில் போதுமானவற்ரைச் சேர்த்து வைத்துள்ளவர்கள், இலங்கை அரசிடம் போகமாட்டார்கள். ஏதோ தமிழ் பற்ராளர் போல் அறிக்கைகளை விட்டபடி வாழ்வார்கள்.

    இதில் உன்னிடமா என்னிடமா கூடுதலாகவுள்ளதென்பதே இவர்களிடம் போட்டி. இரு பகுதியினருமே தமிழரின் பெயரால் நல்வாழ்வு வாழ்பவர்கள். ஒன்று மோதகம் மற்ரது கொழுக்கட்டை.

    துரை

    Reply
  • ப்பிரசன்னா
    ப்பிரசன்னா

    ஜெயபாலன், தகவல்களுக்கு நன்றி!

    ப்பிரசன்னா- 26 06 10

    Reply
  • varathan
    varathan

    போனவர்களுக்கு “லெப்ரினன் கேணல் துரோகி” என பட்டம் வழங்கப்படும்.

    Reply
  • aras
    aras

    கடந்த முப்பது வருடமாக புலிகளை நீதி, தர்மம், சமூக நலன் என்பவற்றுடன் கவனித்து வந்தவர்களுக்கு இந்த செய்தி ஒன்றும் அதிர்ச்சி அழிக்காது. இவர்கள் அன்று எதற்காக புலியுடன் கூடிக் குலாவினார்களோ அதே தேவைக்காக இன்று அரசுடன் சேர்ந்து கொண்டார்கள் அவ்வளவே.

    Reply
  • கந்தையா
    கந்தையா

    உதெல்லாம் புளிச்சுப் போன பட்டம். இனிமேலுக்கு இலங்கைத் தமிழரில் இவர் துரோகி என்ற பட்டம் பெறாதவர் என்று குறிப்பிடப்படுவதே அந்நபரை வித்தியாசப்படுத்த உதவும்.

    Reply
  • நெருப்பு
    நெருப்பு

    ஈழம் ஈழம் என்று இனத்தையே விற்று பிழைக்கும் இந்த கூட்டம் மண்மீட்பு நிதி என்று வெளிநாட்டில் திரட்டிய நிதியை உள்ளூரில் முதலீடு செய்து தமது வருவாயை தக்கவைத்து கொள்ளும் நோக்குடனேயே சிங்கள அரசுடன் பேச்சுவார்த்தை நடாத்தவென்று வெளிநாடுகளில் இருந்து கொழும்பு வந்துள்ள பினாமிகள் ஆவர்.

    மருத்துவ கலாநிதி ரூபமூர்த்தி-அவுஸ்திரேலியா
    திருமதி. சந்திரா மேகன்ராஜ்-அவுஸ்திரேலியா
    ஸ்ரீபதி சிவனடியான்- ஜேர்மனி
    பேரின்பநாயகம் (அம்பிகா நகைமாடம் அதிபர் கனடா)
    விமலதாஸ்- பிரித்தானியா
    சார்ல்ஸ்-பிரித்தானியா
    மருத்துவர் அருண்குமார்- பிரித்தானியா
    கங்காதரன்- பிரான்ஸ்
    சிவசக்தி-கனடா
    ஆகியோர் அடங்கிய ஒன்பது பேர் கொண்ட குழுவே வெளிநாடுகளில் இருந்து அரச அதிகாரிகளையும், படை அதிகாரிகளையும் சந்தித்து பேச்சு நடாத்திய வெளிநாட்டு உண்டியல் புலிகள் என்று தெரியவந்துள்ளது.

    Reply
  • Anonymous
    Anonymous

    //சிறிபதி சிவனடியார் இவர் தீபம் தொலைக்காட்சியின் உரிமையாளர் துரை பத்மநாபனின் மைத்துனர்//

    இது தவறு – இவர் தீபம் பிரதான பாட்னர் செல்வகுமாரின் மைத்துனராவர்

    Reply
  • Theevaan
    Theevaan

    வேதனைப்படும் ஒருலட்சத்திற்கு மேற்பட்ட ஐடிபி, பன்னீராயிரம் புலிகள், 850 கரும்புலிகளை காப்பாற்றுவது சாலச்சிறந்தது. பணிதொடரட்டும்

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //…வெட்கம், ரோஷம், மானம் எதுவும் இல்லாத ஒரே இனம் எம் இனம். பணம் என்றால் தமிழ் பிணமும் வாயை திறக்கும்….// அமிர்தகழியான்

    ஸ்ரீலங்கா அரசின் செய்திக் குறிப்பின்படி வெளிநாட்டில் இருக்கும் புலிகளின் பணத்தை கே.பியும் ‘புலிப்புத்தி ஜீவிகளும்’ அங்கே செலவு செய்யப்போவதாக அல்லவா இருந்தது. அவ்வாறு பார்க்கும் போது வாய்திறக்கும் ‘பிணம்’ யார்?

    Reply
  • palli
    palli

    /கடந்த முப்பது வருடமாக புலிகளை நீதி, தர்மம், சமூக நலன் என்பவற்றுடன் கவனித்து வந்தவர்களுக்கு இந்த செய்தி ஒன்றும் அதிர்ச்சி அழிக்காது. இவர்கள் அன்று எதற்காக புலியுடன் கூடிக் குலாவினார்களோ அதே தேவைக்காக இன்று அரசுடன் சேர்ந்து கொண்டார்கள் அவ்வளவே./

    இதுவே என் கருத்தும்:

    Reply
  • Rohan
    Rohan

    /கடந்த முப்பது வருடமாக புலிகளை நீதி, தர்மம், சமூக நலன் என்பவற்றுடன் கவனித்து வந்தவர்களுக்கு இந்த செய்தி ஒன்றும் அதிர்ச்சி அழிக்காது. இவர்கள் அன்று எதற்காக புலியுடன் கூடிக் குலாவினார்களோ அதே தேவைக்காக இன்று அரசுடன் சேர்ந்து கொண்டார்கள் அவ்வளவே./

    என்பது உண்மை தான். ஆனால், ஏதோ கொள்கை ரீதியாகவும் முழுத் தமிழினம் என்ற அடிப்படையிலும் இந்த ஒரு சிலர் (அப்போது கொடி பிடிக்கப் பலர் இருந்தார்கள்) கூரையில் நின்று கூவுகிறார்களே!

    அது சரி – கேபீயிடம், ‘உங்கள் சொல் கேட்டு வெள்ளைக் கொடியுடன் போன புலிகளுக்கு என்ன ஆயிற்று’ என்று கேட்கப் போகிற முதல் ஆள் யார்? ஒரு வெள்ளை இனத்தவர் தான் அதைச் செய்யத் துணிவார் என்று நான் நினைக்கிறேன்.

    Reply
  • Varathan
    Varathan

    “சர்வதேச உளவு நிறுவனங்களுக்கே வேண்டப்பட்ட கே பி, இன்று அனுபவிக்கின்ற சுதந்திரக் காற்றை பலவருடங்களாக அனுபவித்திருக்கவில்லை. மேலும் புலிகளில் ஒரு பகுதியினர் தலைமையின் அழிவுக்குத் தன்னை ஒரு காரணமாகக் காட்டுவதால் புலிகளாலும் அவருக்கு ஆபத்து ஏற்படலாம் என்ற அச்சமும் தவிர்க்க முடியாதது. அதனால் நோயாளியுமான இவர் இலங்கை அரசுடன் ஒரு உடன்பாட்டுக்குச் சென்று சரணடைவதே அவருக்கு பாதுகாப்பானதாக அமைந்திருக்கும். அந்த நாடகமே ஓகஸ்ட் 7 2007 ல் மலேசியாவில் அரங்கேறியிருக்க வாய்ப்புள்ளது”

    This arugument is not strong enough to convince the writer’s view. Still I believe he was arrested by covert operation of SL intelligence with the support of Malasian authorities. During the war time Jaffna was like a prison in terms of movement. So KP earlier was in prison like Jaffna…. now he is under the house arrest (living with some sort of facilities). So it doesn’t mean he is enjoying the freedom. However, he can do whatever he wants like other LTTE leaders to save his life.

    Reply
  • Jeyabalan T
    Jeyabalan T

    அனோனிமஸ் உங்கள் தகவலுக்கு நன்றி. கட்டுரையிலும் குறிப்பிட்ட தகவல் திருத்தம் செய்யப்பட்டு உள்ளது.

    வரதன் உங்கள் கருத்துக்களுக்கு நன்றி. சந்தர்ப்ப சாட்சியங்களை வைத்தே நாங்கள் இவ்விடயத்தை ஆராய்கின்றோம். எங்களுக்கு உள்ள தகவல்கள் மட்டுப்படுத்தப்பட்டது.

    உங்களுடைய வாதமும் ஏற்கக் கூடியதே. இதனாலேயே நிச்சயமாக இவ்வாறு தான் நடந்திருக்க வேண்டும் என்று அறுதியிட்டுக் கூறுவதைத் தவிர்த்து இருக்கின்றேன். வேறுவகையான விளக்கங்களுக்கும் இடம் வழங்கப்பட வேண்டும் என்று நினைக்கின்றேன்.முடிந்த முடிவாக நாம் எதனையும் கூறமுடியாது.

    த ஜெயபாலன்

    Reply
  • மாயா
    மாயா

    Rohan on June 26, 2010 10:56 pm //அது சரி – கேபீயிடம், ‘உங்கள் சொல் கேட்டு வெள்ளைக் கொடியுடன் போன புலிகளுக்கு என்ன ஆயிற்று’ என்று கேட்கப் போகிற முதல் ஆள் யார்? ஒரு வெள்ளை இனத்தவர் தான் அதைச் செய்யத் துணிவார் என்று நான் நினைக்கிறேன்//

    ஏன் அந்த ஆள் நீங்களாக இருக்கலாமே? எப்பவும் வெள்ளைகளையே நம்பி , வெள்ளைக் கொடியோடு வந்தவர்களுக்குத்தான் வெள்ளைக் கொடி போர்த்தினார்கள்.

    கெல உறுமய தலைவர் சோபித தேரர் , கேபீக்கு விடுதலை கொடுக்க நினைப்பது போல , ஏனைய புலி உறுப்பினர்களுக்கும் , கைதாகி சிறையிலிருக்கும் தமிழர்களுக்கும் விடுதலை கொடுக்க வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளார்.

    கேபீ கைதியாக இல்லை. ஒரு விருந்தாளியாகவே இருக்கிறார். இரவு நேரங்களில் பாதுகாப்போடு வெளியே சென்றும் வருகிறார். பலரை சந்திக்கிறார். அரசு , கேபீயை நீதி மற்றத்துக்கோ அல்லது பகிரங்க விசாரணைக்கோ கொண்டு வரவில்லை. அவர் தெரிவித்த புலிகளின் சொத்து விபரங்கள் குறித்து எந்தத் தகவலும் இதுவரை வெளியாகவில்லை. கேபீயின் கட்டுப்பாட்டில் இருந்த சொத்துக்களுக்கு என்ன ஆனது என்பதும் இதுவரை யாரும் சொல்லாத ரகசியம்? புலத்து புலிப் பினாமிகளிடம் இருக்கும் சொத்து விபரங்களும் யாருக்கும் தெரியாது. இதுவே பில்லியன் பெறுமதியான கேள்விகள்?

    எது எப்படி இருப்பினும் , புலிகளின் பணம் புலத்தில் இருக்கும் வரை இந்த நாடு கடந்த – நாடு தவழும் – நாடு மிதக்கும் அரசுகளும் , கனவு தமிழீழ அரசுகளும் வானவில் போன்று தோன்றிக் கொண்டேயிருக்கும். இவர்களது பணம் கரையும் போது அல்லது கையடக்கப்படும் போது இவை இல்லாமல் போய் விடும். அதை கேபீ செய்கிறார் என்று தெரிகிறது. முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும் என்பதை சிறீலங்கா அரசு சரியாகவே செய்திருக்கிறது. தொடர்ந்தும் செய்கிறது. தமிழன் உணர்ச்சி வசப்பட்டு , பதவி வேண்டி மட்டுமே போராட்டம் என இணைந்தான். வன்னியின் இறுதி நாட்களில்தான் பலருக்கு உண்மை புரிந்தது. புலத்தில் மிஞ்சி இருக்கும் சிலருக்கு புரிய அதிக காலம் எடுக்காது. மேலே ஒரு நண்பர் சொன்னது போல அனைத்து தமிழர்களும் துரோகிகளே.

    Reply
  • Weerakathi
    Weerakathi

    Puli Padai (LTTE) no longer an asset to Tamils but a Liability!

    • Puli Padai (LTTE – Tigers) should be dismantled completely, because they are no longer an asset to Tamils, but a liability and a new organisation should be formed, learning from the mistake of LTTE, in the event of Sri Lankan Government refusing to grant rights to Tamils.
    • Though Talaivar (Pirabaharan) and his boys made lot of blunders, Tamil people whole heartily supported them, as they were fighting and won several battle, specially Elephant Pass battle and Katunayaka Airport attack.
    • Tigers were having a de facto state and managing it in a Totalitarian Dictatorship manner and Tamil people tolerated this because Tamil people believed one day we will get Eelam and we can run a Democratic Government.
    • History will not forgive Prabaharan – said Anita Pratab – Indian Journalist. He killed innocent Tamil, Singhala & Muslims civilians, leaders of other Tamil groups and its members, prominent Tamil Leaders, inner party massacre and murders, murder of Rajive Gandhi. Thus he changed the course of Tamil freedom struggle and made it a terrorist war and Tamil struggle end in a disaster and refused to compromise despite the advice of Anton Balasingham and EROS Balakumar and did not realise that COMPROMISE IS NOT OPPORTUNISM BUT IT IS ART OF SERVIVAL.
    • Pirabaharan is puligal (Tigers) and Puligal (Tigers) is Pirabaharan and he maintained a one-man rule during the existence of Puli Padai (LTTE)
    • He made several mistakes and led us to the present position. First mistake is killing individuals. First Killing as admitted by him is that of Duraiappa. Duraiappa was a Young Mayor of Jaffna, Lawyer and defeated GG Ponnambalam at Jaffna Electorate. He was very popular among the poor people of Jaffna electorate and helped Jaffna Town people a lot. During 1970 Parliamentary Election Amirthalingam, Sivasithamparam and GG Ponnampalam lost the election. GG Ponnampalam gave up politics and abandoned Tamils and look after his wealth accumulated by him.
    • Amirthalingam and Sivasithamparam wanted to win the next election at any cost. S.J.V Selvanayagam after telling the Tamils that he is the leader who could safeguard Tamils, at the end he said, only God has to save Tamils and he could not do any thing, Tamils wasted their time with him.
    • Yogeshwaran wanted to contest Jaffna seat, but Duraiappa was a stumbling block. The Trio Amir, Siva and Yogeshwaran spread slanders about Duraiappa and branded him as Police informant and instigated Young boys to kill him, Young and immature Prabahana and Amir’s eldest son plot to kill Duraiappa and Pirabaharan carried out the murder.
    • Amirthalingam became Leader of Opposition and told Tamil people that he will get Eelam, other wise his body will come to eelam, covered by Raising Son Flag of TULF. But he ended up getting DDC- District Development Council and cheated Tamils.Jaffna Library was burned by UNP during DDC election
    • Pirabaharn and Umamaheswaran had a gunfight in Chennai and were in Madras jail. They were released on bail pending the Criminal case hearing. Pirabaharan jumped the bail and came to Jaffna and organized the Thinnaveli attack.
    • JR and UNP organized 1983 riots and Promoted Pirabaharan as Tamil leader and Indra Gandhi gave Training and Arms.
    • After the unfortunate death of Indra Gandhi, Rajiv Gandhi came to power and Pirabaharan was about to lose Vadamarachi Operation and Rajiv Gandi Saved him by intervening and send Indian Army and signed the Indo Sri Lanka agreement.
    • After the Indian Army leaving Sri Lanka with the joined action of LTTE and Premadasa, Pirabhan Killed Arirthalingam, Premadasa and Rajiv Gandhi. These are major mistakes on the one-man ruler.
    • LTTE chased out Muslims from Jaffna and Karuna and Karikalam led this Muslim eviction because some Muslim thugs and home guards attacked Tamils in Batticaloa. Karuna and LTTE killed Muslims civilians in Mosque.
    • Puli Padai (LTTE) also forcibly evicted half a million Tamils from Jaffna Peninsula and herded them into Vanni after the defeat of LTTE in Jaffna during 1995.
    • LTTE killed Premadasa and helped Chandrika to come to power and Chandrika is equally bad as Premadasa. Chandrika captured Jaffna and started war against LTTE and ended up in lousing Vanni and Elaphatpass.
    • LTTE forced thirteen EROS MPs to resign at gunpoint after 1989 election and allowed Douglus Devananda to become a minister.
    • Instead of fighting one enemy at a time, Pirabaharan fought ten enemies at a time and he only wanted money and Children of Tamils and never seek or listen their advice
    • Whether we like it or not Mahinda will be the leader for very many years and he will be the ruler of whole of Sri Lanka and he made history by killing ‘ASURAN’ Pirabaharan and he also wanted to make history by solving Tamil problems.
    • LTTE used Tamils as human shield during the 2009 Vanni War and prevented Tamils leaving war zone at gun point (Taliban did not do this in Swat Valley in 2009) and Tigers are solely responsible for the death of several innocent Tamils and several are wounded and disabled. LTTE said that they are the sole representative of Tamil and sole protectors of Tamils and now say that only god can save Tamils. Tamils have wasted 30 years with LTTE for nothing
    • It will be a good tactics for Tamils to work with Mahinda to release 300,000 Tamils and Thousands of Tiger Boys and Girls trapped because of Pirabaharan’s and Puli Padai’s – (LTTE) mistakes.
    • Tamils should join Sri Lankan Army and Police in large numbers, the Diaspora Tamils Boys and Girls should join UK, USA, Australia, Canada, NATO, Indian and European Army. WITH OUT A TAMIL ARMY, TAMILS HAVE NOTHING.
    • Educated and Diaspora Tamils and Tamils living in Sri Lanka should get involved Sri Lankan National Political Parties, sixty years of experience shows regional parties getting involved in Parliamentary Politics are of no use and detrimental to Tamils other wise Karuna, Pillaiyan and Douglus will be our Tamil Leaders. Regional Parties may get involved in Local and Provincial Politics.

    Reply
  • proffessor
    proffessor

    தமிழ் டயஸ்போரா குழுவில் உங்களின் ஆசிரியர் பீடத்தை சேர்ந்த கொன்சன்ரைனும் தானே போனவர்?

    ஜெயபாலன் பல இடங்களில் அறுத்தியிட்டு கூறமுடியாத பல தகவல்களை கட்டுரையில் காணக்கிடைக்கிறது. சில இடங்களில் வாசித்துக்கொண்டு போக சங்கதி, பதிவை வாசிப்பது போன்ற உணர்வும் ஏற்பட்டது. இறுதியில் ஒரு முடிவுக்கு வரக்கூடியதாக உள்ளது; ஊகங்களின் அடிப்படையில் தான் கட்டுரை 99வீதம் அமைந்துள்ளது.

    பாவம் கேபி….தன்னை உறுதிப்படுத்த நீண்டகாலம் செல்லும். இல்லையேல் முள்ளிவாய்க்காலில் சங்கமமான சூரியதேவனின் மர்மமாகவே அவரது எதிர்கால வாழ்க்கை முடியவும் கூடும்.

    Reply
  • BC
    BC

    //இதற்குள் அண்மையில் ஒரு புலி ஆதரவாளர் ‘கே பி இலங்கை அரசாங்கத்தினுள் புகுந்து விளையாடுகிறார்” என்றும் பெருமை கொண்டார். ‘தலைவர் உள்ளுக்கு விட்டு அடித்து முடிந்துவிட்டார். இப்ப கே பி இன் ரேன்’ என்று…. //

    இந்த இடத்தில் எனக்கு சிரித்து பிரக்கேறிவிட்டது.

    Reply
  • proffessor
    proffessor

    தப்பியவர்களில் பிற்காலங்களில் வே பிரபாகரனின் ஆலோசகராக இருந்த மு திருநாவுக்கரசும் ஒருவர். கட்டுரை குறிப்பு

    ஜெயபாலன்;
    மு.தி ஒரு போதும் பிரபாகரனின் ஆலோசகராக இருந்ததில்லை.முதி யாழ் பல்கலைக்கழகத்தில் இருந்து புலிகளின் அனுதாபியாக இருந்து வந்தவர்.மாத்தையா புலிகள் இயக்கத்தில் இருக்கும் வரைநெருக்கமாக உறவு வைத்திருந்தவர்;பரா;யோகி;பாலகுமாரன் எனப்பலர் முதியிடம் அரசியல் கலந்துரையாடல்களை நடத்துவதுண்டு; மாத்தையா பிடிபட்டதும் யாரும் இவரிடம் போவதில்லை.1996 இடம்பெயர்வுடன் வவுனியா ஒமந்தை பகுதியில் விவசாயம் செய்த இவர் அந்த காலப்பகுதியில் தனது பல்கலைக்கழக மாணவியை திருமணம் செய்தும்கொண்டவர்.இந்த காலத்தில் மனைவியின்நெருங்கிய உறவு முறையான வவுனியா கிராமசேவகர் ஒருவர் புலிகளின் பகிரங்க மரணதண்டனைக்குள்லானதில் மனைவி புலிகளை திட்டி தீர்த்துவந்தவர்;மனைவி ஒரு ஆசிரியையும் கூட. பின்னய இடம்பெயர்வுகளுடன் மல்லாவிக்கு வந்த முதியும் நிலாந்தனும் யோகபுரம் வளன் நகரில் ஒரு ஆங்கில பட்டறை( இங்கிலீஸ் ரியூசன் சென்ரர்) என்று தான் அழைத்துக்கொண்டார்கள்; வழமையான கல்வி முறையில்லாமல் எல்லோரும் வட்டமாக கூடியிருந்து படிக்கும் முறையை கையாண்டார். இந்த ஆங்கில வகுப்பில் முதி கணிசமான விடயங்களை அரசியலுடன் சம்பந்தப்படுத்தியே வகுப்பை கொண்டும் சென்றார். இந்த வகுப்பில் பல்வேறு புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்களும் காசு கொடுத்து கல்வி கற்றனர். அப்போது புலிகளுக்கு ஆங்கில அறிவின் தேவை இருந்ததால் கணிசமானோர் கல்வி கற்றதுடன் முதியிடமிருந்து இடையிடையே அரசியலையும் கற்றுக்கொண்டனர். இதில் நிலாந்தனும்; முதியும்; முதியின் மனைவியும் ஈடுபட்டனர்.

    சமாதானம் தொடங்கும் வரை மல்லாவியில் நீடித்த இந்த ஆங்கிலப்பட்டறை நடத்திய நிலாந்தன் முதிக்குள் ஏற்பட்ட முரண்பாட்டினால் இருவரும் பிரிந்துகொண்டனர். அதேவேளை ஆங்கிலபட்டறைக்கு வந்த ஒரு நடன ஆசிரியையை காதலித்த நிலாந்தன் திருமணமும் செய்துகொண்டார். நிலாந்தன் முதிக்கு எதிராக வட்டக்கச்சியில் ஒரு ஆங்கிலப்பட்டறையை நிறுவினார். இதனால் ஆத்திரம் கொண்ட முதி கிளிநொச்சியில் மஞ்சுளா பேக்கறி சந்தியில் ஒரு ஆங்கில பட்டறையை தொடங்கினார்.

    இந்த காலத்தில் தான் தனியாக செயற்படவேண்டிய சூழலில் முதி மோட்டார்சைக்கிள் ஓடவும் கற்றுக்கொண்டார் என்பது இன்னொரு விடயம்; இதை இந்த இடத்தில் சொல்லவேண்டிய தேவையுள்ளதால் இதனையும் சொல்கிறேன்; புலிகலின் அரசியல் பிரிவினர் முதியை தமது அரசியல் பிரிவினருக்கான அரசியல் வகுப்புக்களுக்கு பயன்படுத்தினர்; இவரை அவ்வாறு பயன்படுத்துவதில் ஒரு சிக்கல் இருந்தது; அதாவது வகுப்பு என்றால் இவரை ஒரு வாகனத்தில் ஏற்றி இறக்க ஒருவர் முதி மோட்டார் சைக்கிள் பழகும்வரை தேவைப்பட்டார்.

    அடுத்து சமாதானம் மெல்ல நகரத்தொடங்க ஆரம்பத்தில் நிலாந்தனும்; பின்னர் போட்டியாக முதியும் ஈழ நாதத்தில் மீண்டும் புலிகளால் எழுத வைக்கப்பட்டனர். முன்னர் யாழில் ஈழ நாதம் இயங்கிய போது ஈழ நாதத்துக்கு அழகன் பொறுப்பாக இருந்தபோது முதி; நிலாந்தன் இருவரும் எழுதிவந்தனர்; ஆனால் நிலாந்தன் ஒரு கறார் பேர்வழி தனது கட்டுரையில் கத்தரிப்பதை விரும்பாதவர் இந்த சிக்கலால் புலிகளுக்கு இசைவாக எழுதுவதில் இருந்த சிக்கலில் எழுதுவதை நிறுத்தினார்; அடுத்து முதிக்கும் அவரது நண்பரும் ஈழ நாதம் ஆசிரியருமான ஜெயராஜ்க்கும் எழுந்த முரண்பாட்டில் முதியும் எழுதுவதை நிறுத்தினார்; அதே நேரத்தில் மாத்தையாவின் கைதும் நிகழ்ந்தகாலம் முதி புலிகளால் பாவிக்காமல் விடப்பட்டார்.

    இந்த நீண்ட இடைவெளியின் பின்னர் 2003 காலத்தில் மீண்டும் முதி ; நிலாந்தன் ஆகியோர் புலிகளின் ஊடகங்களில் இடம்பிடித்தனர்; மீண்டும் யோகியும்; பாலகுமரனும்; பராவும்; என ஒரு நீண்ட புலிப்பட்டியல் இவர்களை நாடியது. இங்கு இன்னொரு மிகமுக்கிய விடயத்தையும் சமாதான தூதர்களை சந்திக்கும் புலிகளின் உயர் மட்டத்தினர் பலர் முதியிடம் ஆங்கிலம் கற்க தனியான வகுப்புகளுக்கும் சென்றனர்; இதில் நடேசன்; தமிழேந்தி கூட சென்றனர்.

    சமாதான காலத்தில் வன்னிக்கு சென்ற பாலசிங்கமும் முதியை சந்தித்துக்கொண்டார்; உண்மையில் பாலசிங்கத்துக்கு முதியின் பல கருத்துக்களுடன் உடன்பாடு இருந்ததில்லை. இவங்கள் குழப்பவாதிகள் மாக்சிசம் மண்ணாங்கட்டி என்று சொல்லி குழப்பத்தை ஏற்படுத்துபவர்கள் என்ற கண்னோட்டத்துடன் பாலா இந்த குழுவினரை பார்ப்பதுண்டு. எனினும் இவர்களின் அரசியலை பயன்படுத்தும்படி சிபார்சு செய்ததில் பாலசிங்கமும் ஒருவர்; இதனால் புலிகளின் தேசிய தொலைக்கட்சியிலும் தோன்றினர்; மூத்த அரசியல் ஆய்வாளர் ஆகினர். இதுவே பிரபாகரனின் அரசியல் ஆலோசகராக வெளிக்காட்டியது; நான் நினைக்கிறேன் பிரபாகரன் இவரை சந்தித்ததில்லை என்றே; அப்படி சந்தித்திருந்தாலும் ஒரு மரியாதையின் நிமிர்த்தமே.

    இதுதான் ஜெயபாலன் முதியின் உண்மையான வரலாறு. தேவைப்பட்டால் இந்த அடிபடைதரவுகளை வைத்து யாரிடமும் விசாரித்துப் பார்த்து எழுதுங்கள்

    Reply
  • Jeyabalan T
    Jeyabalan T

    //இவர்களுடைய பயண ஏற்பாட்டை மேற்கொண்டதில் மார்ச் 2009ல் இலங்கை சென்ற டயஸ் பொறா டயலொக் குழுவிற்கும் சம்பந்தம் உண்டு. இக்குழுவில் சென்ற டொக்டர் நடேசன், டொக்டர் நரேந்திரன், சூரியசேகரம், குகநாதன் ஆகியோர் கே பி யை புலம்பெயர்ந்த புலி அதரவுக் குழுவினர் சந்திப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்ததில் ஈடுபட்டு இருந்தனர். கே பி யினதும் புலம்பெயர்ந்த புலி ஆதரவுக் குழுவினரதும் வடக்கு நோக்கிய பயணத்தில் டொக்டர் நடேசன், டொக்டர் நரேந்திரன், சூரியசேகரம், குகநாதன் ஆகியோரும் கலந்தகொண்டதாக தெரியவருகின்றது. ஆனால் இதனை உறுதிப்படுத்த முடியவில்லை.//

    புரொபெசர் இந்தப் பந்தி கே பி யைச் சந்திக்கச் சென்ற விடயத்தையே அராய்ந்து உள்ளது. அதற்கு ஏற்பாடு செய்தவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு உள்ளேன். டயஸ்பொரா டயொலக் குழுவில் சென்ற 21 பேரில் நால்வர் கே பி யின் சந்திப்பில் ஈடுபட்டதாக தகவல் கிடைத்தது. அதில் கொண்ஸ்ரன்ரைன் ஈடுபட்டு இருக்கவில்லை. அவ்வாறு ஈடுபட்டு இருந்தால் முழுவதுமான அறிக்கையை கொன்ஸ்ரன்ரைன் வெளியிட்டு இருப்பார்.

    முடிவுகளை எடுத்துக்கொண்டு கட்டுரையை வாசிக்கும் போது இவ்வாறான குழப்பங்கள் ஏற்படுவது சகஜம்.

    Reply
  • Ellalan
    Ellalan

    LTTE is no more what is required now is to be smart and talk to govt in order to help the helpless thousands. KP is the right man for this as he has gained the confidence and trust of the govt. Please all you people let him work towards this even if he get the release of 100 prisoners that is one hundred happy families that cannot be helped by Tamil Congress,Global Tamil Forum or the TGTE.

    For gods sake give him encouragement to carry out this enormous task.

    Thank you all

    Reply
  • thurai
    thurai

    கே.பியை இலங்கையின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர் என்றும் அவரின் செயல்கள் மூலம் தமிழர்கலிற்கு விமோசனம் கிடைக்குமென்று கூறுபவர்கள் யார்? புலியின் ஆதரவாளர்களா? புலி எதிர்ப்பாளர்க்ளா சந்தர்ப்பவாதிகளா?

    புலியும், புலி எதிர்ப்பும் போய் இப்போ சந்தர்ப்ப வாதிகளிடம் ஈழத்தமிழினம் சிக்கித் தவிக்கின்றது.

    துரை

    Reply
  • Nadchathiran chevinthian.
    Nadchathiran chevinthian.

    Dear Jeyapalan,
    Your analysis has the standards of a tabloid Journalism. This kind of writing may boost your short term journalistic career but in the long term it will damage ur career. You have come to urgent/eratic conclusions.
    Jeyapalan’s analysis is very much influenced by the propaganda of the Post Prabhakaran LTTE.
    1.KP’s arrest was aided by the very LTTE people who opposed KP’s Leadership.

    2.Short Thirunavukkarasu had never been considered a serious fellow by the Wanny regime.He is a bluffer. Saying Thirunavukkarasu had been Prabhakaran’s advisor is an insult to Prabhakaran’s intellect.

    3. Intelligence wallahs, Tamil groups and the officials of the present regime are very well aware of the worth of the LTTE associates they allow to go abroad for a small some of bribe. As usual Sri Lankan intelligence agencies have no long term strategies.

    3. KP has no bargaining power. KP has no control over recent developments. If KP is really playing a role the attendants should be people like Nediyavan, Regie(TRO).

    4. Present Sri Lankan regime for the sake of Propagands and to confuse/divide LTTE’s foreign missions runs many disinformation campaigns using KP.

    5. KP will never become a chief minister of the northern Province. He is internationally involved in Arms smugglings. Arrest is certain in India, America.

    Reply
  • DEMOCRACY
    DEMOCRACY

    அடபாவிகளா!, தமிழ் நாட்டின் அரசியல் முடிவை முள்ளியவாய்க்காலுக்கு முன், “தலை” நம்பியிருந்தது என்று கே.பி. சொன்னாரா?. “தலையை” பற்றி நாம் அறிந்தவரை, எந்த இலங்கைத்தமிழனும் தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களை நம்பியிருந்ததாக வரலாறு இருந்தது கிடையாது!. “தேவைகளுக்கான” உறவாக இருந்திருகிறதே தவிர, “தேவையான” உறவாக இருந்தது கிடையாது!. மேலும், “சிங்களவர்-தமிழர் என்ற இலங்கையர்களுக்கு” இடையேயான முரண்பாடுகளை “தமிழ்நாட்டு மக்கள்” என்றுமே தங்கள் “உணர்வுகளுக்குள்” உள்வாங்கியது கிடையாது!. இதில் ஒரு அடுத்தக்கட்ட நகர்வு, “வெற்றியடைந்தவர்களின்” நகர்வாகத்தான் இருக்க முடியும். ஆகையால், அதன் போக்கு “தமிழர்களின் அழிவு” என்ற முன்னுதாரணமாக (பிரஸிடெண்ட்) இருக்கும் பட்சத்தில், “தமிழர்களின் அடையாளங்கள்” அழிக்கப்படுவதாகவே அமையும்!. இத்தகைய “கன்டெக்ஸ்டில்”,கே.பி. இனால் கூறப்படுவதாக, சொல்லப்படும் இக்கூற்று ஒரு துரோகத்தனமே!.

    Reply
  • Jeyabalan T
    Jeyabalan T

    கருத்தாளர்கள் அனைவரது கருத்துக்களுக்கும் நன்றி.

    புரபெசர் உங்கள் நீண்ட பின்னூட்டத்தில் நிறைந்த தகவல்களும் உள்ளது நன்றி. புலிகளின் தலைவருக்கு யாருமே ஆலோசனை கூறமுடியாது என்ற வகையில் முதி அவருக்கு ஆலோசகராக இருந்ததில்லை என்றால் அதனை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் மு தி யை பிரபாகரன் இதுவரை சந்தித்ததில்லை சந்தித்து இருந்தாலும் ஒரு மரியாதையின் நிமித்தமே சந்தித்தார் என்பது தவறானது. முதி புலிகள் மீது விமர்சனமுடையவராக ஆரம்பத்தில் இருந்துள்ளார். இவர் மிகவும் பயந்தசுபாவம் கொண்டவர் என்பது பல்கலைக்கழகத்தில் உள்ளவர்கள் அனைவரும் அறிந்தது. ஆனால் வன்னி யுத்தத்தின் கடைசிப் பகுதியில் முதி தலைவருக்கு அருகில் இருந்துள்ளார். அவருடைய போக்கு பற்றி வெளியேயும் விசனப்பட்டுள்ளார். பிரபாகரனை மொக்கன் என்று விழித்து வைந்தும் உள்ளார். இதனை இவருடன் இருந்தவர்கள் தேசம்நெற்க்கு அறியத் தந்திருந்தனர்.

    மேலும் தேசம்நெற்க்க்கு தகவல் வழங்கும் அதேசமயம் முதி யின் உறவினர் ஒருவர் முதியை இந்தியா சென்று சந்தித்து எமக்கு தகவல்களைப் பகிர்ந்தகொண்டார். முதி சரணடைவதற்கு 6 மணிநேரங்கள் முன்வரை அவர் வே பிரபாகரனுடன் இருந்தள்ளார். அவர் அதற்கு முன்னரேயே வெளியேற விரும்பியபோதும் வெளியேற அனுமதிக்கப்படவில்லை. இறுதியில் அண்ணை உங்களை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறி அவரை வெளியேற அனுமதித்துப் பிரிந்தனர்.

    இத்தகவல்கள் முதி யிடம் இருந்து அவருக்கு நெருக்கமான ஒருவர் மூலம் தேசம்நெற்க்கு கிடைத்த தகவல். அவர் கிட்டத்தட்ட இந்தியாவில் வீட்டுச் சிறையில் இருப்பது போலவே தங்கவைக்கப்பட்டு உள்ளார். அவருடனான உரையாடல்கள் பதிவு செய்யப்படும் என்பதால் அவர் தொலைபேசியில் தொடர்புகளை மேற்கொள்ள விரும்பாததால் என்னால் அவருடன் நேரடியாகத் தொடர்பு கொள்ள முடியவில்லை. ஆனால் எனக்கு கிடைத்த தகவல் நம்பகமானது என்றே நான் இனன்னமும் கருதுகிறேன். இதனை வேறு தகவல் மூலங்கள் மூலங்கள் மூலமும் உறுதிப்படுத்தக் கூடியதாக இருந்தது.

    எல்லாளன் கே பி அரசாங்கத்துடன் இணைந்து அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பாரானால் தடுத்து வைக்கப்பட்டுள்ள போராளிகளை விடுவிப்பாரானால் நிச்சயமாக அது வரவேற்கப்பட வேண்டியதே. அதனைச் செய்யுமிடத்து அதனை ஊக்கப்படுத்துவதில் தவறில்லை. அதேசமயம் கே பி கடந்து வந்த பாதையைத் மீளாய்வு செய்வதும் அவசியம். நாம் இங்கு து}ய்மைவாதம் பேசவில்லை. கடந்தகாலம் பற்றிய சரியான பதிவும் மதிப்பீடும் மிக அவசியமானது. அதன் அடிப்படையிலேயே இக்கட்டுரை வரையப்பட்டது.

    நட்சத்திரன் செவ்விந்தியன் நீங்கள் ஒரு விடயத்தை அணுகும் போது அதன் உண்மைத் தன்மையை அறிவதை அடிப்படையாகக் கொண்டு தகவல்களைப் பெறவேண்டும். ஆனால் உங்களுக்கு உள்ள புரோ புலி அன்ரி புலி முரண்பாட்டினால் நீங்கள் உண்மைத் தன்மையை அறிவதற்கான தகவல்களைத் தவறவிடுகின்றீர்கள். நீங்கள் நபர்கள் சார்ந்தும் அமைப்புகள் சார்ந்தும் ஒரு தீர்மானத்திற்கு வந்தபின் உண்மைத் தகவல்களின் மீது அக்கறையற்றவர்களாகி விடுகின்றீர்கள்.

    நீங்கள் ரப்லொய்ட் ஜேர்னலிஸம் என்று எதனைச் சொல்கின்றீர்கள் எனத் தெரியவில்லை. வன்னிமக்களை முள்ளிவாய்க்காலுக்கு புலிகள் அழைத்துச் செல்வதற்கு ஆகோ ஓகோ என்று ஆய்வுகளும் கட்டுரைகளும் வடித்தவர்கள் மத்தியில் அதன் ஆரம்பமுதலே விளைவுகளை முன்கூட்டியே அறிவித்து அதனைத் தடுப்பதற்காக எழுதி வந்துள்ளேன். இவ்வாறு பல்வேறு சமூகப் பிரச்சினைகளையும் எழுதி வந்துள்ளேன். அது தான் ரப்லொய்ட் ஜேர்னலிசம் என்றால் அதனை தொடர்ந்தும் செய்வதில் எவ்வித தவறு இருப்பதாகத் தெரியவில்லை. மக்கள் தீர்மானங்களை மேற்கொள்ளத் தேவையான உண்மையான தகவல்களை நம்பகமான கூலங்களில் இருந்த பெற்று அம்மக்களுக்கு விளங்கிக் கொள்ளக் கூடிய மொழியில் வழங்க முயற்சிக்கின்றேன் அவ்வளவுதான். அது ரப்லொய்ட் என்றால் என்ன புரோட்சிட் என்றால் என்ன இணையம் என்றால் என்ன பிரச்சினையில்லை.

    நட்சத்திரன் செவ்விந்தியன் உங்களுடைய 1 முதல் 5 வரையான குறிப்புகள் உங்களுடைய கருத்துக்களாகவே கொள்ளக் கூடியது. இக்கருத்துக்கள் சரியானதாகவும் அமையலாம் தவறானதாகவும் அமையலாம். அதற்கு எவ்வித அடிப்படைத் தகவல்களும் உங்களிடம் இல்லை.

    1. கே பி யை புலிகள் தான் காட்டிக்கொடுத்தார்கள் என்று நீங்கள் குறிப்பிடுவது உங்களிடம் உள்ள புலியெதிர்ப்பின் வெளிப்பாடு.
    2. திருநாவுக்கரசு பற்றிய உங்களுடைய குறைமதிப்பீடு மிகத்தவறானது. புலிகள் கல்வித்தகமையுடையவர்களை மதிப்பளிப்பதில்லை என்ற அடிப்படையில் அவர்கள் திருநாவுக்கரசுவுக்கு மதிப்பளிக்காமல் விட்டிருக்கலாம். பிரபாகரனினது புத்திஜீவிதத்திலும் திருநாவுக்கரவுடைய புத்திஜீவிதம் குறைந்தது என்ற உங்கள் மதிப்பீடு ஒரு முரன்நகையே.
    3. இலங்கைப் புலனாய்வுத்துறையிலும் அதன் இராணுவ அரசியல் கட்டமைப்பிலும் ஊழல் உள்ளது என்பது உண்மையே ஆனால் புலனாய்வுத்துறைக்கு நீண்டகாலத் திட்டம் இல்லையென்ற உங்களுடைய மதிப்பீடு நீங்கள் இலங்கையைவிட்டு வரமுததல் இருந்த நிலையை வைத்து மேற்கொண்டுள்ளீர்கள் என நினைக்கிறேன்.
    4. கே பி க்கு பார்கையினிங் பவர் இல்லை என்று அறுதியிட்டு மறுக்க முடியாது. புலிகள் அமைப்பின் வரலாற்றை கே பி யைத் தவிர்த்து பார்க்க முடியாது. கே பியிடம் முன்பு இருந்த கட்டுப்பாடுகள் இப்போது இல்லை. ஆனால் புலிகளின் ஒரு பகுதியினர் மீது ஆளுமை செலுத்தும் வல்லமை கே பி யிடம் இப்பொதும் உண்டு.

    5. கே பி நிச்சயமாக முதலமைச்சராக வருவார் என நான் குறிப்பிடவில்லை. ஆனால் அதற்கான வாய்ப்புகள் நிச்சயமாக உள்ளது. இந்தியாவும் அமெரிக்காவும் கேபியைக் கேட்கலாம் ஆனால் ஆனால் பொதுமன்னிப்பு வழங்கி நாட்டுக்குள்ளேயே முதலமைச்சராக்கினால்? இந்தியாவில் பூலான் தேவி இலங்கையில் கருணா பிள்ளையான் அரசியலுக்கு வரவில்லையா? சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக சுடான் ஜனாதிபதி இன்னமும் ஆட்சியில் உள்ளார்.

    த ஜெயபாலன்.

    Reply
  • Jeyabalan T
    Jeyabalan T

    //அடபாவிகளா!இ தமிழ் நாட்டின் அரசியல் முடிவை முள்ளியவாய்க்காலுக்கு முன்இ “தலை” நம்பியிருந்தது என்று கே.பி. சொன்னாரா?. “தலையை” பற்றி நாம் அறிந்தவரைஇ எந்த இலங்கைத்தமிழனும் தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களை நம்பியிருந்ததாக வரலாறு இருந்தது கிடையாது!.// டெமோகிரசி

    டெமோகிரசி நம்பிக்கை என்பது சிலவேளைகளில் சந்தர்ப்பம் சூழ்நிலைகளையும் பொறுத்தது. புலிகள்சரணடைவதற்கு மிக நீண்ட காலம் இருந்தது. ஆனால் புலிகள் அதனைச் செய்யவில்லை. முட்டாள்தனமாக தமிழகத் தேர்தல் முடிவுகளுக்காக நம்பியிருந்தனர். பார்க்க:மே 16 2009 ல் வெளியான ‘மம்மி’யின் வரவுக்காக காத்திருக்கும் ‘தம்பி’. : த ஜெயபாலன்

    Reply
  • DEMOCRACY
    DEMOCRACY

    /முட்டாள்தனமாக தமிழகத் தேர்தல் முடிவுகளுக்காக நம்பியிருந்தனர் (புலிகள்). பார்க்க:மே 16 2009 ல் வெளியான ‘மம்மி’யின் வரவுக்காக காத்திருக்கும் ‘தம்பி’. : த ஜெயபாலன்./
    திரு.ஜெயபாலன், நீங்கள் என் பாய்ண்டுக்கு வருகிறீர்கள்!. நீங்கள் அறிய தருவது பத்திரிக்கை செய்தி (ப.நடேசன், சிவாஜிலிங்கம் வழியாக). இங்கு ஒரு முடிச்சு அவிழ்க்கப்பட வேண்டும்!. நீங்கள் ஒரு இலங்கைத்தமிழர், நான் கோடிடுவது, பிரபாகரன் உட்பட, இலங்கைத் தமிழர்கள், சிங்களவர்களின் மீது நம்பிக்கை வைக்கிற அளவுக்கு, “இந்தியர்கள் மீது (தமிழகம் உட்பட)” நம்பிக்கை வைத்தது கிடையாது என்பது உங்களுக்குத் தெரியும்!. அதுவும் “ஜெயலலிதா மீது” என்பது நகைப்பிகிடமானதே!.
    குடும்பங்களோடு படுகொலை (இந்த சாட்டிலைட் யுகத்தில்)நடந்திருக்கும் பட்சத்தில், அது பல ஆண்டு திட்டத்தின் அடிப்படையில், நீங்கள் கூறும் “ஓப்பரேஷன் பீக்கன்னில்” உள்ளடக்கப்பட்டிருக்க வேண்டும்!.

    இந்த ஜெகத் கஸ்பார்- கனிமொழி- க.அன்பழகன் – ஜெயந்தி நடராஜன் – பொட்டம்மான், வதந்திகள், பெரும்கதையாடல்கள்? என்னவென்று தெரியவில்லை??!. இதில் ஒன்று நிச்சயம் “சரணடைந்திருக்கிறார்கள்” என்பது உறுதியாகி வருகிறது.
    இதில் இந்திய உளவுத்துறை, இலங்கை அரசாங்கத்தின் பங்கு பற்றி யாருக்கும் அக்கறையில்லை!. ஆனால், தங்கள் உயிரை பாதுகாக்க தனிநபர்களின் அனுபவங்கள் மட்டுமே அவர்களின் நம்பிக்கைக்கு உரியதாக இருந்திருக்கும். அவ்வகையில்,தங்களின் மதிப்பிற்கும், நம்பிக்கைக்கும் உரிய ஒருவர் மூலம், சோனியாகாந்தியிடமிருந்து தெளிவாக பெற்ற மனிதாபிமான மன்னிப்பு அடிப்படையிலேயே நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். இத்தகைய பெரும் நகைச்சுவையை (வேதனை)கட்டியெழுப்பிய புண்ணியவான்கள் யார்??!.

    Reply
  • ஈழமுரசு
    ஈழமுரசு

    கே.பி: எதிர்ப்புரட்சியின் நடுநாயகம் – சேரமான்

    வன்னிப் போரின் இறுதிக்கட்டத்தின் பொழுது தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளியுறவுத் தொடர்பாளராக நியமிக்கப்பட்ட கே.பி என்றழைக்கப்படும் செல்வராசா பத்மநாதன், சிங்கள அரசுடன் இணைந்து இயங்கி வருவது தொடர்பான தகவல்கள் கடந்த சில மாதங்களாக அரசல்புரசலாக வெளிவந்திருந்த நிலையில், இவற்றை அதிகாரபூர்வமாக உறுதிசெய்யும் வகையில் கடந்த 20ஆம் நாளன்று சண்டே ஒப்சேவர் வார இதழில் வெளியாகிய முகப்புச் செய்து அமைந்துள்ளது.

    சண்டே ஒப்சேவர் வார இதழ் என்பது சிங்கள அரசின் ஊடக அமைப்பான லேக் ஹவுஸ் நிறுவனத்தால் வெளியிடப்படும் ஓர் அதிகாரபூர்வ இதழாகும். இந்த வகையில் கே.பி தொடர்பாக சண்டே ஒப்சேவர் வார இதழ் வெளியிட்ட செய்தியை சிங்கள அரசின் அதிகாரபூர்வ அறிவிப்பாகவே நாம் கொள்ள முடியும். இதேநேரத்தில் இது தொடர்பாக கடந்த 22ஆம் நாளன்று அறிக்கை ஒன்றை விடுத்திருக்கும் ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், கடந்த வாரம் யாழ் பலாலி, கிளிநொச்சி ஆகிய இடங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட கே.பியிற்கு, கிளிநொச்சியில் உள்ள படைத்தளம் ஒன்றில் சிறீலங்கா படையினரால் விருந்துபசாரம் அளிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

    இவற்றின் தொடர்ச்சியாக இது குறித்து 24ஆம் நாளன்று செய்தியாளர்களிடம் கருத்துரைத்திருக்கும் சிறீலங்கா ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தமது அரசாங்கத்தின் சாட்சியாகவே தற்பொழுது கே.பி திகழ்வதாகவும், இந்த வகையில் கே.பி அவர்களை குற்றவாளியாகப் பார்க்கத் தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

    கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் மலேசியாவில் வைத்து சிறீலங்கா புலனாய்வுப் பிரிவினரால் கே.பி கடத்தப்பட்டதாக அவரது குழுவினரால் செய்தி வெளியிடப்பட்ட பொழுது, அது புலம்பெயர்வாழ் தமிழீழ மக்களிடையே இருதுருவ ரீதியிலான கருத்துக்களைத் தோற்றுவித்திருந்தது. ‘கே.பி கடத்தப்படவில்லை, அவராகவே சிங்கள அரசிடம் சரணடைந்தார்’ என்று ஒருதரப்பினரும், ‘மிகவும் நுட்பமான முறையில் கே.பியை இலக்கு வைத்து சிறீலங்கா புலனாய்வுப் பிரிவினர் கடத்திச் சென்றுள்ளனர்’ என்று மறுதரப்பினரும் நேர்முரணான கருத்துக்களை வெளியிட்டிருந்தனர். இது தொடர்பாக அப்போதைய காலப்பகுதியில் கே.பியுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வந்த கனடிய தமிழ் எழுத்தாளர் டி.பி.எஸ்.ஜெயராஜ் குறிப்பிடுகையில், அமெரிக்காவின் வெளியகப் புலனாய்வு அமைப்பான சி.ஐ.ஏ அமைப்பினரால் அல்கைடா இயக்கத் தலைவர்கள் கடத்திச் செல்லப்பட்டமைக்கு நிகரான பாணியிலேயே கே.பியையும் சிறீலங்கா புலனாய்வுப் பிரிவினர் கடத்திச் சென்றிருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார்.

    இவையெல்லாம் ஊடகங்களில் வெளிவந்த செய்திகள். ஆனால் கே.பி கடத்தப்பட்டதாக அவரது குழுவினரால் அறிவிக்கப்பட்ட பின்னர் அரசல்புரசலாகக் கசிந்த பல தகவல்கள் ஊடகங்களில் வெளிவரத் தவறியிருந்தன. முதலாவதாக சிறீலங்கா புலனாய்வுப் பிரிவினரின் வழித்துணையுடன் கொழும்பில் இருந்து அடிக்கடி சிங்கப்பூருக்கு கே.பி வந்து செல்வதாக தகவல்கள் கசிந்திருந்தன. இதன் ஓர் அங்கமாக தனக்கு நெருக்கமான சட்டத்தரணி ஒருவரையும், தொலைக்காட்சி ஒன்றின் பணிப்பாளர் ஒருவரையும் கே.பி சிங்கப்பூருக்கு அழைத்து சந்தித்திருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இதன் பின்னர் அவுஸ்திரேலியா, பிரித்தானியா, பிரான்ஸ், நோர்வே, சுவிற்சர்லாந்து போன்ற நாடுகளில் உள்ள தனது நெருங்கிய சகாக்கள் சிலருடன் தொலைபேசியில் கே.பி உரையாடியதாகவும் தகவல்கள் வெளிவந்திருந்தன. இதற்கிடையே இதேகாலப்பகுதியில் தென்கிழக்காசிய நாடொன்றில் தங்கியிருந்ததாகக் கூறப்படும் தனது சகா ஒருவருடன் தொலைபேசியில் உரையாடிய கே.பி, சிறீலங்கா அரசுடன் முரண்படுவது அர்த்தமற்றது என்றும், தனது நிறுவனத்தின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்த கப்பல் ஒன்றை சிறீலங்கா அரசாங்கத்திடம் கையளிக்கப் போவதாகவும் தெரிவித்திருந்ததாக தகவல்கள் கசிந்திருந்தன. இதன் தொடர்ச்சியாக தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல் என்று கூறி, தென்கிழக்காசிய நாடொன்றில் இருந்து சிறீலங்கா கடற்படையினரால் கப்பல் ஒன்று கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டு கண்காட்சிக்கு வைக்கப்பட்டது.

    இதேவேளை மலேசியா போன்ற தென்கிழக்காசிய நாடுகளில் தங்கியிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரு தொகுதி செயற்பாட்டாளர்களும், போராளிகளும் சிறீலங்கா புலனாய்வுப் பிரிவினரால் அடையாளம் காணப்பட்டு, அந்தந்த நாடுகளின் புலனாய்வுப் பிரிவினரின் அனுசரணையுடன் கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்ட சம்பவங்களும் சத்தம் சந்தடியின்றி அரங்கேறியிருந்தன. இவ்வாறு கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்ட பலர், சுற்றுலாப் பயணிகளாக கட்டுநாயக்கா பன்னாட்டு விமான நிலையத்தை வந்தடைந்த பொழுதே கைது செய்யப்பட்டதாக சிறீலங்கா அரசு செய்தி வெளியிட்டிருந்தது. இவை ஒருபுறமிருக்க, தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் என்று சிங்கள அரசால் இனம்காணப்பட்ட புலம்பெயர்வாழ் ஈழத்தமிழ் மனிதநேய செயற்பாட்டாளர்களை இலக்குவைத்து இவ்வாண்டின் முற்பகுதியில் ஐரோப்பிய நாடுகளில் ‘புலிவேட்டை’ தொடங்கப்பட்டிருந்தது.

    வன்னிப் போரில் சிறீலங்கா படைகளின் நடவடிக்கைத் தளபதியாக விளங்கியவரும், தற்பொழுது யேர்மனியில் சிங்கள அரசின் இராசதந்திரியாக செயற்படுபவருமான மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் அவர்களின் அனுசரணையுடனேயே இந்தப் ‘புலிவேட்டை’ முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதேபோன்று, தமிழகத்தில் தங்கியிருப்பதாகக் கூறப்படும் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களைக் குறிவைத்து, தமிழக காவல்துறையின் ‘கியூ’ புலனாய்வுப் பிரிவினரால் ‘கைதுப்’ படலங்களும் அரங்கேற்றப்பட்டு வருகின்றன. இவ்வாறாக ஒருபுறம் தமிழீழ விடுதலைப் போராட்டம் உயிரூட்டம் பெறுவதைத் தடுத்து நிறுத்துவதற்கான தனது எதிர்ப்புரட்சி நடவடிக்கைகளை முழுவீச்சுடன் சிங்கள அரசு முன்னெடுத்துக் கொண்டிருக்க, மறுபுறம் ‘கே.பி சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்படுகின்றார்’, ‘தமிழீழ விடுதலைப் புலிகளால் கே.பி காட்டிக் கொடுக்கப்பட்டார்’ போன்ற உண்மைக்குப் புறம்பான செய்திகளைப் பரப்பி சிங்கள அரசின் நடவடிக்கைகள் மீதான புலம்பெயர்வாழ் தமிழீழ மக்களின் கவனத்தைத் திசைதிருப்பும் நடவடிக்கையில் வெளிநாடுகளில் இயங்கும் கே.பி குழுவினரும், அவர்களின் ஊடகங்கள் ஈடுபட்டிருந்தன.

    கடந்த ஓராண்டு காலப்பகுதியில் பல்வேறு தேர்தல் திருவிழாக்களுக்குள் புலம்பெயர்வாழ் தமிழீழ மக்கள் திசைதிருப்பி விடப்பட்டிருந்த நிலையில், இவையெல்லாவற்றையும் தமக்கு சாதகமாகக் கையாண்ட சிங்கள அரசின் வயிற்றில் புளியைக் கரைக்கும் வகையில், தமிழீழத் தனியரசுக்கு ஆணை வழங்கும் வட்டுக்கோட்டைத் தீர்மானம் மீதான வாக்கெடுப்புக்கள் அமைந்திருந்தன. இது தொடர்பாக தனது அதிருப்தியை சிங்கள அரசு பகிரங்கமாக வெளியிட்டிருந்த அதேவேளை, ‘வட்டுக்கோட்டைத் தீர்மானம் கொட்டைப்பாக்குக்கு வழிகாட்டும்’ என்ற குரூரமான தொனியில் கே.பி குழுவினரால் இயக்கப்படும் ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டதோடு, வட்டுக்கோட்டைத் தீர்மானம் மீதான வாக்கெடுப்புக்களின் முடிவுகளை சிறுமைப்படுத்தியும், இருட்டடிப்பு செய்யும் குழப்பகரமான செய்திகளையும் கே.பி குழுவினர் வெளியிட்டு வந்தனர்.

    இவ்வாறாக சிங்கள அரசின் எதிர்ப்புரட்சி மூலோபாயத்தின் (counter-insurgency strategy) நடுநாயகமாக மாற்றம் பெற்றிருந்த கே.பியின் நிகழ்ச்சித் திட்டத்தை மிகவும் கனக்கச்சிதமான முறையில் அவரது குழுவினர் அரங்கேற்றி வந்தனர். தற்பொழுது கே.பி அவர்களின் உண்மை முகம் வெளிவந்திருக்கும் நிலையில், இப்பொழுதும் அவரையும், அவரது செய்கைகளையும் நியாயப்படுத்தும் வகையில் கே.பி குழுவினர் ஈடுபட்டிருப்பது மிகவும் நகைப்புக்கிடமானது. அதாவது, ‘சிங்கள அரசின் சித்திரவதைக்கு ஆளாகிய கே.பி, சிங்கள அரசின் தாளத்திற்கு ஆடுவதை நாம் விமர்சிக்க முடியாது’ என்றும், ‘கே.பி சந்தர்ப்பக் கைதியாக விளங்குகின்றார்’ என்றும் அவரது குழுவினர் வியாக்கியானமளிக்க முற்படுவது புலம்பெயர்வாழ் தமிழீழ மக்களிடையே பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றது.

    சரி. ஒரு பேச்சுக்கு கே.பியை சந்தர்ப்பக் கைதியாகவே எடுத்துக் கொள்வோம். கே.பி மிகவும் நல்லவர் என்றும் வைத்துக் கொள்வோம். கே.பி எந்தத் தவறும் இழைக்கவில்லை, தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு அவர் எந்தத் துரோகமும் இழைக்கவில்லை என்றும்கூட எடுத்துக் கொள்வோம். அப்படியென்றால் கே.பியால் இனி தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு எவ்விதமான பாதிப்பும் ஏற்படாது என்று நாம் எடுத்துக் கொள்ள முடியுமா? இதற்கு விடைகாண்பதற்கு மீண்டும் சிங்கள அரசின் எதிர்ப்புரட்சி மூலோபாயத்தை நாம் புரட்டிப் பார்ப்பது மிகவும் பொருத்தமாக இருக்கும்.

    முற்றுமுழுதாக மரபுரீதியாக இடம்பெற்று முள்ளிவாய்க்காலுடன் முற்றுப்பெற்ற வன்னிப் போரில் சிங்களப் படைகள் வெற்றியீட்டியதை நாம் மறுக்கமுடியாது. 1996ஆம் ஆண்டு வரை ஒரு அரைமரபுப் படையாக விளங்கிய தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு, முல்லைத்தீவை மீட்டெடுத்த ஓயாத அலைகள் – 1 நிலமீட்பு நடவடிக்கையின் பின்னர் துரித கதியில் மரபுப் படையணியாகத் தோற்றம் பெற்று, ஜெயசிக்குறு படை நடவடிக்கையின் பொழுது சிங்களப் படையணிகளை திணறடித்தது. இதன் பின்னர் மரபுரீதியிலான வளர்ச்சியின் உச்சகட்டமாக வன்னிப் பெருநிலப்பரப்பை மீட்டெடுத்து, யாழ்ப்பாணத்தின் தொண்டையில் சிக்கிய முள்ளாக விளங்கிய ஆனையிறவைக் கைப்பற்றி, சிங்களப் படைகளுக்கு பெரும் சவாலாக மாற்றம்பெற்றிருந்தனர்.

    இதன் பின்னர் கட்டுநாயக்கா வான்படைத் தளம் மீதான கரும்புலி நடவடிக்கையின் ஊடாக சிங்கள அரசின் பொருண்மிய – படை வலிமையை சிதறடித்து, படைவலுச் சமநிலையின் ஊடாக அரசியல் ரீதியில் இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண்பதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் முற்பட்டமை வரலாறு. இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால், 2002ஆம் ஆண்டு போர்நிறுத்த உடன்படிக்கை ஈட்டப்படும் வரை தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், சிங்கள அரசுக்கும் இடம்பெற்ற மரபுவழி யுத்தம் என்பது முற்றுமுழுதாக நவீனயுக (modern) போர் யுக்திகளை அடிப்படையாகக் கொண்டே முன்னெடுக்கப்பட்டிருந்தது.

    இதேபோன்று ஏனைய நாடுகளில் எதிர்ப்புரட்சி நடவடிக்கைகளில் ஈடுபட்ட பல்வேறு அரசுகளும் நவீனயுக போர் யுக்திகளையே கையாண்டிருந்தன. எனினும் 2001 செப்ரம்பர் 11இற்குப் பின்னரான அமெரிக்காவின் எதிர்ப்புரட்சி நடவடிக்கைகள் பின்நவீனயுக (post-modern) போர் யுக்திகளை அடிப்படையாகக் கொண்டே முன்னெடுக்கப்பட்டிருந்தன. 2006ஆம் ஆண்டு யூலை மாதம் மாவிலாற்றில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை சிங்கள அரசு தொடங்கிய பொழுது, இவ்வாறான பின்நவீனயுக போர் யுக்திகளையே சிங்களப் படைகள் களமிறக்கியிருந்தன. இந்தப் பின்நவீனயுக போர் யுக்திகளின் முன்னோடி நடவடிக்கையாகவே 2004ஆம் ஆண்டு முதல் 2006ஆம் ஆண்டு நடுப்பகுதி வரையான காலப்பகுதியில் துணைப்படைக் குழுக்கள் ஊடாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான நிழல் யுத்தத்தை (proxy war) சிங்கள அரசு முன்னெடுத்திருந்தது.

    இவ்வாறாக சிங்கள அரசின் பின்நவீனயுக போர் யுக்திகள் வெறுமனவே களமுனையோடு மட்டும் மட்டுப்படுத்தபடவில்லை. மாறாக இந்தோனேசியாவில் இருந்து மாலைதீவு வரை தாக்குதல்களை நிகழ்த்தக்கூடிய கடல் வலிமையின் ஊடாகவே தனது யுத்த வெற்றியை சிங்கள அரசு உறுதிசெய்திருந்தது. தற்பொழுது சிங்கள அரசின் எதிர்ப்புரட்சி மூலோபாயம் என்பது முற்றுமுழுதாக புலனாய்வு நடவடிக்கைகளையும், உளவியல் நடவடிக்கைகளையும் (phsyc-ops) அடிப்படையாகக் கொண்டே அமைந்துள்ளன. தேசிய விடுதலைப் போராட்டங்களும், மார்க்சிய கிளர்ச்சிகளும் முறியடிக்கப்பட்ட மத்திய அமெரிக்க நாடுகளில் கடந்த இரண்டு தசாப்தங்களாக கையாளப்படும் எதிர்ப்புரட்சி நடவடிக்கைகளின் மூலோபாயங்களுக்கும், யுக்திகளுக்கும் ஒப்பான எதிர்ப்புரட்சி மூலோபாயத்தையே தற்பொழுது சிங்கள அரசு கையாண்டு வருகின்றது.

    இதன் ஓர் அங்கமாக, ஈழப்போரின் விளைவாக ஊதிப்பெருத்திருக்கும் காலாட் படைகளின் (infantry) எண்ணிக்கையைக் குறைத்து, எதிர்ப்புரட்சி நடவடிக்கைகளில் தேர்ச்சிபெற்ற காட்டுப்புற – நகர்ப்புற தேடியழிப்பு சிறப்புப் படையணிகளை(jungle-urban commando forces) கட்டியெழுப்பும் நடவடிக்கைகளில் சிங்கள அரசு ஈடுபட்டு வருகின்றது. மறுபுறம் தமிழீழ மக்களிடையே ஆயுதக் கிளர்ச்சி ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் தமிழீழ தாயகப் பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்களை நிறுவி, தமது காலாட்படை வீரர்களை உள்ளக பாதுகாப்புப் படையினராக (civil defence force) மாற்றியும், தமிழீழ மக்களிடையே சமூக சீர்கேடுகளை தூண்டிவிட்டு, தமிழ் துணைப்படைக் குழுக்களின் (paramilitary groups) ஆதிக்கத்தை மேலோங்க வைக்கும் நடவடிக்கைகளிலும் சிங்கள அரசு ஈடுபடுகின்றது.

    அதேநேரத்தில் எதிர்காலத்தில் நிகழக்கூடிய தமிழீழ விடுதலைப் புலிகளின் கடல்வழி வழங்கல்களை தடுத்து நிறுத்தக்கூடிய கடல்-வான்படைக் கட்டமைப்புக்களை அதிநவீன மயப்படுத்தும் நடவடிக்கைகளையும் சிங்கள அரசு முன்னெடுத்து வருகின்றது. இந்த வகையில், தமிழீழ விடுதலைப் போராட்டம் தோற்றம் பெற்ற 1970களில், விடுதலைப் போராட்டத்தின் முன்னோடிகளோடு வாழ்ந்து, 1987ஆம் ஆண்டு முதல் 2003ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக வழங்கல் நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக விளங்கிய கே.பி, சிங்கள அரசைப் பொறுத்தவரை மிகவும் பெறுமதியான சொத்தாகவே கருதப்படுகின்றார்.

    இதனையே கோத்தபாய ராஜபக்ச, கெஹெலிய ரம்புக்வெல, ரோஹான் குணரட்ண போன்றோரால் அண்மைக் காலங்களில் வெளியிடப்பட்ட கருத்துக்கள் உறுதிசெய்கின்றன. உண்மையில், கருணா, டக்ளஸ் தேவானந்தா போன்றோரை விட தற்பொழுது சிங்கள அரசுக்கு மிகவும் பெறுமதி வாய்ந்த ஒருவராகவே கே.பி திகழ்கின்றார். தமிழீழ விடுதலைப் புலிகளின் எதிர்கால கெரில்லாத் தாக்குதல்களை தடுத்தல், மீண்டும் மரப்படையாக தமிழீழ விடுதலைப் புலிகள் வளர்ச்சியடைவதற்கான சூழலை இல்லாதொழித்தல், புலம்பெயர்வாழ் தமிழீழ மக்களிடையே நிலவக்கூடிய போர்க்குணத்தை மட்டுப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளுக்கான நடுநாயகமாகவே கே.பியை சிங்கள அரசு பொக்கிசப்படுத்திப் பயன்படுத்தி வருகின்றது.

    இதேநேரத்தில் புகலிட தேசங்களில் தமிழீழ மக்களால் முன்னெடுக்கப்படும் அரசியல் நடவடிக்கைகளை முறியடிக்கும் கருவியாகவும் கே.பியை சிங்கள அரசு கனக்கச்சிதமாகக் கையாண்டு வருகின்றது. இறுதிப் போரில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உயர்பீடத்துடன் தொடர்புகளைப் பேணிவந்த ஒருவர் என்ற வகையில், இறுதிக் கட்டத்தில் சிங்கள அரசு அரங்கேற்றிய கொடூர போர்க்குற்றங்கள், தமிழின அழித்தொழிப்பு நடவடிக்கைகள் போன்றவற்றை நன்கு அறிந்துகொண்ட ஒருவராகவே கே.பி திகழ்கின்றார். தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் அவர்களின் படுகொலை, தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் போராளிகளும், பொறுப்பாளர்களும் சிங்களப் படைகளால் சிறைப்பிடிக்கப்பட்டமை, முள்ளிவாய்க்கால் பூமியில் பல்லாயிரக்கணக்கான வன்னி மக்களுக்கு சிங்களப் படைகளால் சமாதி கட்டப்பட்டமை போன்ற பல்வேறு திடுக்கிடும் உண்மைகளை அறிந்த ஒருவராக அல்லது இவற்றுக்கு உடந்தையாக இருந்த ஒருவராகவே கே.பி திகழ்கின்றார்.

    சிங்கள அரசை பன்னாட்டு அரங்கில் போர்க்குற்றவாளியாக நிறுத்தித் தண்டிப்பதற்கும், தமிழீழ மக்கள் இனவழித்தொழிப்பிற்கு ஆளாகியமையை நிரூபிப்பதற்கும் இவரது சாட்சியம் மிகவும் முக்கியமானது. குறிப்பாக முள்ளிவாய்க்கால் போரில் ரொபேட் ஓ பிளேக், விஜய் நம்பியார், எரிக் சுல்கைம், பா.சிதம்பரம் போன்றோருடன் தொடர்புகளைப் பேணிய ஒருவராகவே கே.பி திகழ்கின்றார். இதன் மறுபக்கத்தை நாம் புரட்டிப்பார்த்தால், சிங்கள அரசின் போர்க்குற்றங்களையும், தமிழின அழித்தொழிப்பு நடவடிக்கைகளையும் மூடிமறைப்பதற்கு கே.பி ஒருவரே போதும்! அதாவது வன்னிப் போரில் போர்க்குற்றங்கள் எவற்றையும் சிங்கள அரசு இழைக்கவில்லை என்று கே.பி கூறுவதே போர்க்குற்றங்களின் நம்பகத்தன்மையைக் கேள்விக் குறியாக்கிவிடும்.

    இறுதிப் போரில் ஒரு பொதுமகனைக்கூடத் தமது படையினர் கொல்லவில்லை, ஒரு பெண்ணைக்கூட பாலியல் ரீதியாக துன்புறுத்தவில்லை, ஒரு கிராமத்தைக்கூட அழிக்கவில்லை என்று ராஜபக்ச சகோதரர்கள் தற்பொழுது வெளியிடும் கூற்றுக்களுக்கு சான்று பகர்வர்தற்கு கே.பி ஒருவரின் சாட்சியமே சிங்கள அரசுக்குப் போதும். இந்த வகையில், இதுவரை காலமும் கே.பியால் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு ஏற்பட்ட பாதிப்புக்களை விட, இனிவரும் காலத்தில் ஏற்படப் போகும் பாதிப்புக்களே மிகவும் ஆபத்தானவையாக அமையும் என்பதை மட்டும் உறுதியாகக் கூறமுடியும். இதைப்புரிந்துகொண்டு இனியாவது கே.பியின் பின்னால் நிற்கும் அவரது குழுவினர் நடந்து கொள்ள வேண்டும் என்பதே புலம்பெயர்வாழ் தமிழீழ மக்களின் எதிர்பார்ப்பாகும். உறங்கிக் கொண்டிருப்பவர்களை தட்டியெழுப்பலாம்: உறங்கிக் கொண்டிருப்பது போன்று நடிப்பவர்களை???

    – சேரமான்
    நன்றி: ஈழமுரசு

    Reply
  • Jeyabalan T
    Jeyabalan T

    //திரு.ஜெயபாலன் நீங்கள் என் பாய்ண்டுக்கு வருகிறீர்கள்!. நீங்கள் அறிய தருவது பத்திரிக்கை செய்தி (ப.நடேசன் சிவாஜிலிங்கம் வழியாக). இங்கு ஒரு முடிச்சு அவிழ்க்கப்பட வேண்டும்!. நீங்கள் ஒரு இலங்கைத்தமிழர் நான் கோடிடுவது பிரபாகரன் உட்பட, இலங்கைத் தமிழர்கள் சிங்களவர்களின் மீது நம்பிக்கை வைக்கிற அளவுக்கு “இந்தியர்கள் மீது (தமிழகம் உட்பட)” நம்பிக்கை வைத்தது கிடையாது என்பது உங்களுக்குத் தெரியும்!. அதுவும் “ஜெயலலிதா மீது” என்பது நகைப்பிகிடமானதே!.// டெமோகிரசி

    டெமோகிரசி நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல நம்பிக்கை என்பது சில வேளைகளில் சந்தர்ப்பம் சூழ்நிலைகளையும் பொறுத்தது. புலிகள் சரணடைவதற்கு மிக நீண்ட காலம் இருந்தது. ஆனால் புலிகள் அதனைச் செய்யவில்லை. அவர்கள் மேற்கு நாடுகளை நம்பி பலனில்லை என்ற நிலையில் தமிழகத்தை நம்பினர். கருணாநிதி மசியவில்லை. ஆனால் ஜெயலலிதா தேர்தலைக் குறிவைத்து அறிக்கைகளைவிட்டார். புலம்பெயர் நாடுகளில் இருந்தெல்லாம் ஜெயலலிதாவுக்கு வாழ்த்துச் செய்திகள் பறந்தது. புலிகள் சோனியாவை நம்புவதற்கு வாய்ப்பே இல்லை. கணவனைக் கொன்றதற்காக அவர் தங்களை பழிவாங்குகிறார் என்ற கருத்தே புலிகள் மத்தியில் இருந்தது. அதனால் புலிகளின் ஒரே நம்பிக்கை நட்சத்திரமாக இருந்தது ஜெயலலிதாவே.

    பார்க்க: மே 16 2009 ல் வெளியான ‘எல்ரிரிஈ இன் பிளக் சற்றடே : இந்தியா தேர்தல் முடிவு : த ஜெயபாலன்’

    Reply
  • basith
    basith

    ‘கே.பி. ஏற்பாட்டில் இலங்கை பயணம்’

    குமரன் பத்மநாதன்
    விடுதலைப் புலிகளின் தலைவர்களில் ஒருவரான குமரன் பத்மநாதனின் ஊடாக இலங்கை அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று புலம்பெயர் நாடுகளில் இருந்து விடுதலைப்புலிகளின் அனுதாபிகள் இலங்கை சென்று அரசாங்க பிரதிநிதிகளை சந்தித்து வந்ததாக அவ்வாறு சென்று வந்த குழுவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் தமிழர் சுகாதார அமைப்பைச் சேர்ந்த சார்ள்ஸ் அன்டனிதாஸ் ஒப்புக்கொண்டுள்ளார்.
    சார்ள்ஸ் அன்டனிதாஸ் செவ்வி
    இலங்கையில், கே.பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன், இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளரான கோட்டாபாய ராஜபக்ஷ, அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் உட்பட பலரை இலங்கையில் தாங்கள் சந்தித்ததாகவும் சார்ள்ஸ் பிபிசியிடம் கூறினார்.

    கே.பி. இன்னமும் இலங்கை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலேயே இருப்பதாக கூறப்படுவதை சார்ள்ஸ் ஒப்புக்கொண்டர்.

    இலங்கை அரசாங்கத்துடைய ஆணையின் கீழ் கே.பி. இருப்பதாக கூறலாம், ஆனாலும் கே.பி. அரசாங்கத்துக்கு ஒத்துழைக்கிறார் என்று கூறமுடியாது என்று சார்ள்ஸ் குறிப்பிட்டார்.

    இதற்கிடையே, புலம்பெயர் விடுதலைப்புலிகளின் அனுதாபிகள் இலங்கை வந்து சென்றதை இலங்கையின் ஊகடத்துறை அமைச்சரான கெஹலிய ரம்புக்வெல்ல உறுதி செய்துள்ளார்.

    ” அனைவரையும் அரவணைக்கும் இலங்கை அரசின் அரசியல் வழிமுறையின் ஒரு அங்கம்தான் இந்த முயற்சி என அமைச்சர் கெஹலிய தெரிவித்தார்.

    பிபிசி தமில்.கொம்மில் கே.பி பற்றிய விரிவான விடயங்களை சார்ல்ஸ் அன்ரனிதாஸின் நேர்காணலில் கேட்கலாம்.
    http://www.bbc.co.uk/tamil/

    Reply
  • Nadarajah Sethurupan
    Nadarajah Sethurupan

    Srilankan government and its media is praising Dr.Rajasingam Narendran. At the same time they are trying to make KP’s international investment as a government property. very good and it should be a appreciated one. But Dr.Rajasingam Narendran who is very friendly with Srilankan government now has a house in Station street at Wellawaththi, Colombo which has a high value now is bought by using KP money only. This house bought for keeping Suside Bombers, when will the government investigate about that?

    when KP was on international responsibility , AK 47 known as Vivekanandan is a friend of Rajasingham Jeyadevan. Later Vivekanandan and Jayadevan came to london by KP’s order and they invested the money in the temple which is named as ” eezhapatheeswarar ” .

    The income they got from this temple which is the money belongs to LTTE has again been invested in colombo.

    After that now Rajasingham Jayadevan gave this money to Rajasingam Narendran. So when will the srilankan government take eezhapatheeswarar temple and the colombo house which was bought using that money in its responsibility.

    The total value of this two properties are 50 million Srilankan rupees. Beyond this jeyadevan has got two houses in london by using this LTTE money.

    The value of that two houses are 70 million srilankan rupees. Rajasingam Narendran sister married Mr.seevarathinam who is a relation of KP. KP & Seevaratinam is from the same native place he is one of the investor for LTTE.

    He has 200 million value properties approximately. Will Rajasingam Narendran’s sister submit this to srilankan government?

    Is srilankan government tried to owe this properties in their control?

    will this be investigated by the government or not?

    If they say that the money is not belong to LTTE, then where do they get this much amount?

    Is it possible to earn this money by working 24 hours and paying tax?

    Do they paid tax in srilanka and UK for this investments.

    srilankan government should investigate this first. Instead of doing this government is trying to make a world as a fool. It is a humorous one.

    Reply
  • DEMOCRACY
    DEMOCRACY

    /அதனால் புலிகளின் ஒரே நம்பிக்கை நட்சத்திரமாக இருந்தது ஜெயலலிதாவே./—த ஜெயபாலன்.
    ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டோரை ஒட்டுமொத்தமாக கொலை செய்வதென்பது இந்திய வரலாற்றில் புதிதான ஒன்று அல்ல!.வரலாறுகளிலிருந்து தமிழர்கள் என்னவற்றை கற்றுக் கொண்டார்கள்?.
    The were a people whom the British attempted to totally demilitarize by depriving them of their traditional status in Tamil society through social, economic and penal measures.Forced disappearances was the norm and many were executed without a fair trial.The martial races theory of recruitment and the subsequent martialization of the north further erased their martial legacy and that of the Tamil South from the military ethnography of the subcontinent.Thus, towards the latter part of the 19th century, there were large, disgruntled groups with a military past in the Bengal, Bombay and Madras Presidencies. They felt that the vast field of opportunities opened by the expanding Indian army was being unfairly denied to them. This grievance was further exacerbated by views of the British military leadership which relegated them to a non-martial status as races that were not fit to bear arms; in whom fighting qualities had declined.The reaction of these groups was marked by a compulsion to emphasise the martial credentials of their cultures. Opposition to British rule which emerged among classes affected by the shift in recruitment toward the ‘martial races’ of North western India took shape into an ideology that asserted a national spirit which exalted military virtues and ideals as the cure for the ills of Indian society under the British yoke. Bal Gangadhar Tilak who emerged as a spokesman for the disfranchised military groups became the ideologue of this nationalist Indian militarism. Stephen Cohen has attempted to define Indian militarism in terms of Indian attitudes towards the British-Indian military structure and recruitment.Modern Tamil militarism – the political idea that military virtues and ideals ‘rooted in Tamil martial traditions’ is essential for national resurgence and emancipation – was enunciated at this specific conjuncture in the school of Tamil renaissance.The legacy of these strategies in the north and south of the subcontinent, embodied in the structure of the modern Indian army, is central to the emergence of modern Tamil militarism. The gains of this demartialization were consolidated by favouring and encouraging non-military castes in Tamil society.The more important of these were the Vellalas, Nadars and Adi Dravidas. The culture and values of the “peace loving” (Madras census, 1871) Vellalas who had “no other calling than the cultivation of the soil” eminently suited the aims of demartialization and suppression of the traditional military castes. In this the British were following local precedents which had been based on the principle that the best way to ensure control and security was to “have none there but cultivators”. Thus, under active British patronage the Vellala caste established its dominance, and its culture became representative and hegemonic in Tamil society.— Colonialism and Its Forms of Knowledge- by BERNARD S COHN- 1996.

    Reply
  • Jeyabalan T
    Jeyabalan T

    டெமொகிரசி புலிகள் எவ்வாறு இந்தியாவிடம் மன்றாடினர் என்பதற்கு மற்றுமொரு ஆதாரமும் உள்ளது. ஆனால் சம்பந்தப்பட்டவர்கள் தங்கள் அமைப்பின் பெயர் வெளிப்படுவதை விரும்பாததால் அதனை மேலோட்டமாக இங்கு பதிவிடுகிறேன்.

    மே 18 2009க்கு ஒரு மாதத்திற்கு முன்னதாக ஜனநாயக வழிக்குத் திரும்பிய புலிகளால் தடை செய்யப்பட்ட அமைப்பினரிடமும் புலிகள் உதவியை நாடி இருந்தனர். அவ்வமைப்பின் தலைவரிடம் தப்பிக்க உதவியை நாடினர். அதற்கு இந்தியாவின் உதவியைக் கேட்டும் இருந்தனர். அவ்வமைப்பின் தலைமையும் இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகத்துடன் தொடர்புகொண்டு இந்தியாவின் சம்மதத்தைப் பெற்றனர். அதனை புலிகளுக்கும் தெரியப்படுத்தினர். இன்னும் சில தினங்களுக்குப் பின் மீண்டும் தொடர்பு கொண்ட புலிகள் ‘அவரும்’ வர இருப்பதாகத் தெரிவித்தனர். ‘அவரும்’ என்பது பிரபாகரனையே சுட்டிக்காட்டியதாகத் தெரிவிக்கப்பட்டது. இது பற்றி அவ்வமைப்பின் தலைமை இந்தியத் தூதரகத்துடன் தொடர்பு கொண்டதில் இந்தியா பிரபாகரனையும் பொட்டம்மானையும் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது. இத்தகவலும் புலிகளுக்குத் தெரிவிக்கப்பட்டது. இந்தியா வே பிரபாகரனையும் பொட்டம்மானையும் ஏற்க மறுத்ததால் புலிகள் அத்திட்டத்தை கைவிட்டனர்.

    புலிகள் எவ்வளவு தூரம் இறங்கி இருந்தனர் என்பதற்கு இது மற்றுமொரு உதாரணம்.

    Reply
  • thurai
    thurai

    இங்கு வரும் உண்மைகளைப் பார்க்கும்போது, ஈழத்தமிழரை ஈழத்தமிழனை விட யாரும் ஏமாற்ரவில்லை என்பதே புலனாகின்றது. இதுவரை நடந்ததெல்லாம் விடுதலையின் பெயரால் ஈழத்தமிழர் தற்கொலையே செய்துள்ளனர்.

    இங்குநான் சில வருடங்களிற்கு முன் எழுதியதை நினைவுபடுத்துவது பொருத்தமாகுமெனெ என்ணுகின்றேன்.

    போராடுவதும் போரில் மடிவதும் கீழ்வர்க்கம்.
    போரை நடத்துவதும் பணம் சேர்ப்பதும் நடுத்தர வர்க்கம்.
    ஆள்வதும், ஆள நினைப்பது மேல்வர்க்கம்.

    துரை

    Reply
  • BC
    BC

    Aras இங்கே குறிப்பிட்ட மாதிரி கடந்த முப்பது வருடமாக புலிகளை அவதானித்தால் புலி எவ்வளவு கேவலமான வேலைகள் செய்யும்,எவ்வளவு கேவலமாக இறங்கியும் வரும் என்பது அதிர்ச்சி அழிக்காது. புலிகளை காப்பாற்ற முயற்சித்த அமைப்பு மக்கள் துரோகி.

    Reply
  • DEMOCRACY
    DEMOCRACY

    /இலங்கையில் நடுநிலை பத்திரிக்கை என்று தமிழில் ஒன்றும் கிடையாது.பத்திரிகைகளில் இருப்பவர்களும் துப்பாக்கி இல்லாத பிரபாகரன்கள் தான்.எத்தனை வித விதமான ஆய்வுகளை எழுதி தேசிய தலைவரை கொம்பு சீவி விட்டார்கள்.இப்போதும் என்ன “புதிய புதிய ஆய்வாளர்கள் “புறப்பட்டு முள்ளிவாய்க்கால் முடிவல்ல என்று “அற்புதமான ” ஆய்வுகளை எல்லாம் வீரகேசரியிலும் ,தினக்குரலிலும் உலக நாடுகளின் வியூகங்கள் பற்றி புலம்புகிறார்கள்.தலைவன் இருக்கிறான் மயங்காதே என்ற எம்.ஜி,ஆர் பாடல் போல ஆய்வுகளை!!! ?எழுதினார்கள்.இறுதி யுத்தத்தின் போதும் இந்திய அரசிடம் என்னென்ன விதமாக எல்லாம் கெஞ்சினார்கள் . நாங்கள் தமிழர்கள் ,இந்துக்கள் ,இந்து கோவிலை உடைக்கிறார்கள் எத்தனை வண்ணங்களில் கத்தினார்கள் இந்தியா இதையெல்லாம் காதில் போட்டதா ?
    30 வருடமாக நடந்த போராட்டம் தமிழரசு கட்சியின் வலது சாரி கொள்கை தோற்று விட்டது என்பதை தான் சொல்கிறது.இனிமேல் வேறு வழியை தான் தேட வேண்டும். திரும்ப ,திரும்ப செய்த தவறுகளையே செய்ய கூடாது./– எங்கோ ஒரு பின்னோட்டம்!.

    Reply
  • Jeyabalan T
    Jeyabalan T

    நடராஜா சேதுரூபன் நீங்கள் எழுதியுள்ள பின்னூட்டத்தில் உள்ள தகவல்கள் நம்பகமானவையல்ல என்பதே எனது கணிப்பு. உங்களுக்கும் ஆர் ஜெயதேவனுக்கும் ஆழமான பகைமை உள்ளதால் எவ்வித ஆதாரங்களும் இன்றி நீங்கள் வைத்துள்ள இக்குற்றச்சாட்டுக்கள் தனிப்பட்ட காழ்புணர்வாகவே உள்ளது. இவ்வாறான பின்னூட்டங்களை நீங்கள் தவிர்ப்பது நல்லது.

    1. ஆர் ஜெயதேவன் ஒரு கணக்கியலாளர் அவருக்கு என்று சொந்த வியாபார நடவடிக்கைகளும் உண்டு. நரேந்திரன் ஒரு டொக்டர். இவர்கள் இருவரும் தனிப்பட்ட முறையில் சொத்துக்களை வாங்கும் பொருளாதா வல்லமையை உடையவர்கள்.

    2. ஈழபதிர்வரர் ஆலயம் நான் அறிந்தவரை தொழிற்கட்சியினுடைய கட்டடம். அதனை நீண்ட கால வாடகைக்குப் பெற்றுள்ளனர் என நினைக்கின்றென்.

    3. சீவரத்தினம் பற்றிய உங்களுடைய தகவல்கள் பற்றி எனக்குத் தெரிந்தவரை அவர் புலிகளின் சர்வதேச நிதி விடயங்களுக்கு பொறுப்பாக இருந்தவர். கே பி உடன் அவருக்கு தொடர்பு இருந்திருக்கலாம்.

    4. ஆர் ஜெயதேவன் புலிகளின் தீவிர ஆதரவாளராக இருந்த போதே ஈழபதீர்வரர் ஆலயம் உருவாக்கப்பட்டது என்பது உண்மை.

    5. நரேந்திரன் வீட்டில் தற்கொலைப் போராளிகள் போன்ற குற்றச்சாட்டுக்கள் எவ்வித அடிப்படையும் அற்றவை.

    6. உங்கள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை முன் வைத்ததற்காக நீதிமன்றம் சென்ற நீங்கள் அவ்வாறான குற்றச்சாட்டுகளை மற்றவர்கள் மீது மேற்கொள்வது எவ்வகையில் நியாயம்.

    சேதுரரூபன் தேசம்நெற் கருத்துக்களுக்கான களம். குற்றச்சாட்டுக்களை எழுந்தமானமாக வைப்பதைத் தவிர்க்கவும்.

    த ஜெயபாலன்.

    Reply
  • P.V.Sri rangan
    P.V.Sri rangan

    ஜெயபாலன் உங்களோடு அரசியல்-கருத்து நிலை ரீதியாக என்னிடம் பல முரண்பாடு நிலைகளுண்டு. எனினும்>எமது மக்களுக்கு உண்மைகளை வெளிப்படுத்துவதில் உமது தளம் பாரிய பங்கு வகிப்பதால் அதற்கு எனது சிரம் தாழ்த்திய நன்றி.

    இன்றைய பொழுதில் புலிவழிப் போராட்டத்தின் உண்மைகளே மிக அவசியமானது. அதை ஓரளவு-முடிந்தவரை நீங்கள் வெளிப்படுத்துவதுகண்டு எனது நன்றியைத் தெரிவிக்கிறேன். முடிந்தால் புலிகளது போராட்டங்குறித்து விஞ்ஞான பூர்வமாக வரலாறை நீங்கள் தொடரலாம்.

    Reply
  • proffessor
    proffessor

    ஜெயபாலன்;
    ஈழபதீஸ்வரர் ஆலயம் புலிகள் இயக்கத்துக்கு சொந்தமானதல்ல; இந்த ஆலயம் அமைக்க அப்போது அனைத்துலக செயலக பிரான்ஸ் அலுவலகத்துக்கு பொறுப்பாக இருந்த மனோ, கொல்லப்பட்ட நாதன் ஆகியோரின் அனுசரணை மட்டும் இருந்தது என்பதே உண்மையாகும்.

    Reply
  • Nadarajah Sethurupan
    Nadarajah Sethurupan

    ஜெயபாலன் சரி நீங்கள் சொல்வது சரி என்று வைத்துக்கொள்வோம். ஆனால் வன்னியில் இருந்து வந்த பின்னர் ஜெயதேவனும் விவேகாணந்தனும் ரிபிசியில் கதைத்தனர். அதில் தாம் புலிகளின் பணத்தில் கோவிலை உருவாக்கியதையும் ஆனால் பிணம் மீளவும் திரும்ப கொடுக்கபட்டதாகவும் விவேகாணந்தான் சொன்னார் அந்த ஒலிபதிவு என்னிடம் உள்ளது தேவை என்றால் உங்களுக்கு சீடியில் அனுப்பி வைக்கிறேன்.

    கொழும்பில் இஸ்ரேசன் வீதியில் ஜெயதேவன் வீடு வாங்கியதாகவும் அதை தமயனார் இருக்க கொடுத்திருப்பதாகவும் ஜெயதேவனுக்கு முன்னால் விவேகாணந்தன் அண்ணா தான் றேடியோவில் சொன்னார் தேவை என்றால் அதையும் நீங்கள் ஒலிபதிவில் கேட்டுப்பாக்கலாம்.

    ஜெயதேவன் கணக்காளனாக இருக்கலாம் ஆனால் அவருக்கும் எனக்கும் எந்த பகையும் இல்லை ஆனால் ஈழபதீஸ்வரர் அலயம் புலிகளின் முதலிடு என்று அவர்கள்தான் வானொலியில் சொன்னார்களே தவிர நான் போலியாக குற்றம் சாட்டவில்லை.

    Reply
  • palli
    palli

    //ஈழபதீஸ்வரர் ஆலயம் புலிகள் இயக்கத்துக்கு சொந்தமானதல்ல; //
    புலிகளுக்கு சொந்தமாய் எதுவுமே இல்லை
    எல்லாமே அபகரிக்க பட்டவைதான்;

    Reply
  • palli
    palli

    சிறிரங்கன் உங்களோடு பல்லிக்கும் புடுங்குபாடு உண்டு ஆனாலும் தேசத்தை புரிந்தமைக்காக எனது பாராட்டுக்கள்.
    நம்ம தேசத்துக்காக உங்க தேசத்தில் எழுதுங்கள்

    Reply
  • Jeyabalan T
    Jeyabalan T

    நண்பர் சிறிரங்கனுக்கு உங்களது தொடர்ச்சியான கருத்துப் பகிர்வுக்கும் ஆலோசனைக்கும் நன்றி. முரண்பாடுகள் இல்லாத உறவுகள் இல்லை. முரண்பாடுகள் அனைத்தையும் பகமை முரண்பாடுகள் ஆக்க வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் புரிந்துணர்விற்கு நன்றி. தேசம்நெற் இன் கருத்தியல் சுதந்திரத்திற்கு எப்போதும் துணை நிற்கும் பல்லிக்கும் மற்றைய நண்பர்களுக்கும் நன்றிகள்.

    புரொபெசர் ஈழபதீஸ்வரர் ஆலயம் புலிகளுக்கு சொந்தமானதா இல்லையா என்பதை என்னால் அறுதியிட்டு கூறமுடியாது. இவ்வாலயத்தின் உரிமைக்கான சர்ச்சை எழுந்த போது அதில் சம்பந்தப்பட்ட இருதரப்பினரையும் ஆர் ஜெயதேவன் – மு சிவராஜா பேட்டி கண்டு வெளியிட்டேன். ஆர் ஜெயதேவன் புலிகள் இந்த ஆலயத்திற்கு நிதிப்பங்களிப்புச் செய்யவில்லை எனத் தெரிவித்தார்.(இவருடைய பெயரிலேயே புலகளின் அலுவலகமான ஈழம் ஹவுஸ் இருந்தது குறிப்பிடத்தக்கது.) சிவராஜா தானும் தன்னைச் சார்ந்த (புலி ஆதரவாளர்கள்)வர்களுமே ஆலயத்திற்கு பெருமளவு நிதிப் பங்களிப்புச் செய்ததாகத் தெரிவித்தார்.

    ஆனால் ஆர் ஜெயதேவனும் மு சிவராஜாவும் நண்பர்களாகவும் புலி ஆதரவாளர்களாகவும் இருந்த போதே ஈழபதீஸ்வரர் ஆலயம் உருவாக்கப்பட்டது.

    Reply
  • Sampanthan
    Sampanthan

    A new war : SL backed KP vs India backed TNA -Source Daily Mirror

    In India too , there are speculations that the Sri Lankan Government . is to appoint KP as its candidate for the post of Chief Minister at the Provincial Council (PC) elections in the North . Though it is beyond comprehension that KP will enter politics , yet the Sri Lankan Government must be seeking to use him and win the North Provincial Council elections. It is reported that KP is a very popular figure among the Tamil Tigers in the camps. By meeting them he is making efforts to banish their despair and change their mindset. Hence, the government is thinking of winning over the pro Tamil Tiger sympathizers at the North elections by employing him. It is perceptible that India with a view to implementing the 13th amendment of the constitution in Sri Lanka , wishes that the Tamil National Alliance (TNA) captures power at the North Provincial Council elections. India and TNA are closely working together towards this objective. The Sri Lankan government. may be aiming at using him in its campaign and defeat the TNA , even if KP does not contest the elections. What measures and strategies the TNA is going to adopt to meet the situation is yet obscure.

    Though some are waiting in expectation for the release of KP alias Kumar Pathmanathan, it was a long time since he had been released. The fact that he was freed came to light officially when he recently toured the North East along with the leaders of the Tamil Diaspora. This tour was wholly organized by KP. He made the entire arrangement as the unofficial Chairman of the of the Tamil Rehabilitation Centre. Although he was not officially appointed as the Chairman, yet, he did act unofficially as the Chairman of the TRC. To eradicate a tree in the forest, it is another tree in the thick of the jungle that must be used, is an old adage. Like how Prabhakaran’s armed wing leader Karuna was used by the government to annihilate the armed might of Prabhakaran, the government. is now using KP who built up Prabhakaran’s International network, to destroy that same international chain – a splendid effort indeed by the government!

    KP has been the official leader of the Tamil Tiger Organization after the death of Prabhakaran. Although there was a divergence in opinion among the Tamil Diaspora over his becoming leader, following his appointment no one challenged his leadership. Likewise , after KP was arrested, no one was elected as leader. It is therefore discernible that the Sri Lankan government projecting and propelling KP as the current Tamil Tiger leader is utilizing him to destroy the Tamil Tiger Diaspora .

    It is learnt that the first move of KP after his release was the invitation extended to the Chief of the Tamil Tiger transnational Govt. leader Rudrakumaran too to participate in the tour of the North and East organized for the Tamil Tiger Diaspora leaders. But, Rudrakumaran had rejected this invitation stemming from his conviction that the Sri Lankan government is trying to use KP to destroy the Tamil Tiger Diaspora, despite the fact that there exists close and cordial relations between KP and Rudrakumaran. Initially, the Sri Lankan government exploiting the ties between KP and Rudrakumaran sought to sow the seeds of dissension between Rudrakumaran and the Tamil Tiger Diaspora hardliners. KP urged the Sri Lankan government on several occasions earlier to discuss with Rudrakumaran , with this objective in view. But, because the Sri Lankan government did not evince much interest in this direction, it did not materialize. However, after America intensified its pressure on the government to initiate discussions with Rudrakumaran, the government became apprehensive, and became reluctant to give him an official welcome.

    KP while helping the government to destroy the Tamil Tiger Diaspora is trying to portray himself as an independent individual. But, the government is aware that if he is to be used, he must be released and such release must be vindicated. It is on this account, the government is making the announcement that KP is going to be a future witness for the government in the Courts against the Tamil Tigers. By this, what the government is trying to demonstrate is that during the final phase of the war , the truth about the ‘white flag’ episode among the surviving leaders of the Tamil Tigers is known only to KP. He can therefore be made use of as a witness to lead evidence in support of the government. Some sources say, KP may come before the Truth Commission appointed by the government and lead evidence in its favour. Nevertheless, there are reports that KP is averse to engaging in such an action, for it will trigger resentment among the Tamil Diaspora, and may provoke them to cry foul that he betrayed them. Consequently, he would not be able to do whatever service he wishes to do for the Sri Lankan government he had pointed out.

    In India too, there are speculations that the Sri Lankan government is to appoint KP as its candidate for the post of Chief Minister at the Provincial Council (PC) elections in the North . Though it is beyond comprehension that KP will enter politics, yet the Sri Lankan government must be seeking to use him and win the North PC elections. It is reported that KP is a very popular figure among the Tamil Tigers in the camps. By meeting them he is making efforts to banish their despair and change their mindset. Hence, the government is thinking of winning over the pro Tamil Tiger sympathizers at the North elections by employing him.

    It is perceptible that India with a view to implementing the 13th Amendment of the constitution in Sri Lanka wishes that the Tamil National Alliance (TNA) captures power at the North Provincial Council elections. India and TNA are closely working together towards this objective. The Sri Lankan government may be aiming at using him in its campaign and defeat the TNA, even if KP does not contest the elections. What measures and strategies the TNA is going to adopt to meet the situation is yet obscure.

    In case KP takes the initiative to defeat the TNA, that will constitute more a defeat to India than the TNA. India with a view to establishing democracy in the North and East has chosen the TNA to secure a political solution for the Tamil population, because the TNA which is not linked to the Tamil Tiger armed campaign however are sympathizers of the Tamil Tigers.

    The Sri Lankan government has on the other hand chosen to defeat the TNA by using the Tamil Tiger militant leaders of the Tamil Tiger armed campaign, Karuna, KP and former Tamil militant leader Devananda.

    Who will win in this competition is unpredictable.

    Reply
  • Jeyabalan T
    Jeyabalan T

    //முன்னாள் ஜனாதிபதி ஜே ஆர் ஜெயவர்த்தன தன் விடுமுறையைக் கழிக்கும் ‘பசுஹம் பாயா’ வாஸஸ்தலத்திலேயே தங்க வைக்கப்பட்டு இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. யூனியன் பிளேசில் உள்ள இந்த வாஸஸ்தலத்திலேயே அநுரா பண்டாரநாயக்காவும் வாழந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.//

    கே.பி என அழைக்கப்படும் செல்வராசா பத்மநாதன் தற்போது இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளில் ஒருவரான பிரேமதாஸவினால் கட்டப்பட்ட “விசும்பாய” வில் அரசால் தங்கவைக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

    Reply
  • DEMOCRACY
    DEMOCRACY

    Mr.Sampanthan, I accept all the arguments you put forward, on behalf of TNA and particularly,for Selvam Adaikalanathan(TELO).
    India appeased a favourable Srilankan government rather than, a favourable Tamil leadership like TNA. It does not mean, India is anti-Tamil. LTTE, by it’s very nature (where they learned I dont know), practiced a callous attitude for their survival. As a tamil(Indian), we didn’t realized this “international quagmire” until the distruction of “vanni people”-one of the core of the Tamil society, we suddenly waken up to the reality, the next target will be, another core of the Tamil society inside Tamilnadu!. There is a programmed, “ANTI-TAMIL-HATRED” MACHINERY inside Srilanka in place, through military terms!. So we need a solidarity to counter it!. Without any political sensitivity LTTE was jubilant during IPKF period, and aligned with Premadasa. The same “Militaristic” situation is now existing with K.P.
    To defend Tamils means “a military solidarity is needed”!.

    Reply
  • aras
    aras

    நடராஜா சேதுரூபன் “ஆனால் பிணம் மீளவும் திரும்ப கொடுக்கபட்டதாகவும்” –
    யாருடைய பிணம் திரும்பக் கொடுக்கப்பட்டது? திடுக்கிடும் தகவலாக இருக்கிறது!

    Reply
  • Nadarajah Sethurupan
    Nadarajah Sethurupan

    நான் எழுதும் போது ப பி ஆகவும் ழ ல வாகவோ அல்லது ள வாகவொ வரும் அதுக்கு பல காரணம் உண்டு.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    எனக்குக் கிடைத்த நம்பகரமான தகவல் ஒன்றின்படி, கே.பியுடன் சேர்ந்து இலங்கை அரசுடன் சந்திப்பு நடத்திய 9 பேரில் சிலர், திட்டமிட்டு புலத்தில் புலிகளுக்கு முன்பு ஆதரவளித்து தற்போது இலங்கை சென்றால் தமக்கேதாவது ஆகுமோ எனப் பயப்படுவோரிடம், தம்மிடம் 1000 எயுரோ தந்தால், தாம் கடிதமொன்றைத் தருவதாகவும் அதனுடன் சென்றால் எந்தப் பிரைச்சினையும் வராதென்று கதையளந்து, தற்போது புதுவிதமான சுருட்டலை ஆரம்பித்துள்ளனராம்………

    Reply
  • பல்லி
    பல்லி

    இந்த கடிதத்துக்கு 1000 யூரோ
    ஆனால் அந்த ஒன்பதையும் சந்திக்க ஏற்பாடு செய்யவும் சில சில்லறை வியாபாரிகள் உண்டாம்

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    பல்லி,
    இப்படியொரு சுருட்டல் ஐடியாவை தொடங்கி தன்னுடன் இலங்கை அரசைச் சந்தித்த ஏனைய 8 பேருக்கும் தனது மெகா சுருட்டல் ஐடியாவை தெரிவித்தவர் தற்போது இலண்டனில் வாழும் சிவனடியான் சிறிபதி. இவர் முன்பு ஜெர்மனியில் புலிகளின் ஆதரவாளராகச் செயற்பட்டு பல சுருட்டல்களை மேற்கொண்டவர். அப்படிச் சுருடடிய பணத்திலேயே பெற்றோல் நிரப்பு நிலையங்களை ஆரம்பித்தவர். புலிகளின் அழிவின் பின், இவருக்கு இவரது உறவினர் உட்பட பலரால் பிரைச்சினை ஏற்பட, எல்லாவற்றையும் விட்டுவிட்டு பிரித்தானியா வந்து தீபம் தொலைக்காட்சியிலேயே பணியாற்றுகின்றார். ஆனாலும் பழைய சுருட்டல் குணம் மாறாமல் திரும்பவும் தொடங்கியுள்ளார்.

    Reply