புலி ஆதரவுக்குழுவின் இலங்கை விஜயம் – ‘லண்டன் வந்த அருட்குமார் கருத்தை மாற்றிக் கொண்டார்’ – சார்ள்ஸ் தேசம்நெற்க்கு வழங்கிய பேட்டி : த ஜெயபாலன்

Arudkumar_Velayuthapillai_DrCharles_Antonythasஇலங்கை சென்று திரும்பிய புலம்பெயர் புலி ஆதரவுக்குழுவில் ஒருவரான டொக்டர் வேலாயுதபிள்ளை அருட்குமார் தமிழ்நெற் க்கு யூன் 29 2010ல் வழங்கிய நேர்காணல் தங்களுடைய விஜயம் பற்றி எதிர்மறையான கருத்துக்களை வெளியிட்டு இருந்தார். ஆனால் ‘அருட்குமார் இலங்கைப் பயணத்தின் முடிவில் அவ்வாறான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கவில்லை’ என்றும் ‘குமரன் பத்மநாதனின் (கே பி) அபிவிருத்திப் பணிகளில் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்து இருந்தார்’ என்றும் சார்ள்ஸ் அன்ரனிதாஸ் நேற்று (யூன் 29 2010) மாலை தேசம்நெற்க்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்து இருந்தார்.

அருட்குமார் தமிழ்நெற் க்கு வழங்கிய செவ்வியில் குமரன் பத்மநாதன் ஒரு துரோகி என்ற வகையிலேயே தனது கருத்தை வெளியிட்டிருந்தார். இதற்குப் பதிலளித்த சார்ள்ஸ் ‘அருட்குமார் லண்டன் வந்த பின்னரேயே இவ்வாறு தனது கருத்தை மாற்றிக்கொண்டார்’ எனத் தெரிவித்தார். ‘தமிழ் சமூகத்தில் இன்னமும் சுயாதீனமாகக் கருத்தை வெளியிடுவதற்கான சூழல் ஏற்படவில்லை என்பதனையே இச்சம்பவம் எடுத்துக் காட்டுகின்றது’ என்றும் சார்ள்ஸ் சுட்டிக்காட்டினார்.

2006ல் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் கபில ஹெந்தவிதாரண கே பி யைச் சந்தித்தாக அருட்குமார் குறிப்பிட்டடுள்ளமை பற்றி சார்ள்ஸிடம் கேட்ட போது ‘அந்த உரையாடல் இடம்பெற்ற போது அருட்குமார் அங்கிருக்கவில்லை’ என்றும் ‘விமலதாஸ் அருட்குமாருக்கு கூறிய விடயத்தையே அருட்குமார் தவறாகப் புரிந்துகொண்டார்’ எனவும் சார்ள்ஸ் தெரிவித்தார்.

‘2006ல் தாய்லாந்தில் கபில ஹத்துரசிங்க பணியில் இருந்தபோது கே பியை தேடித் திரிந்தது பற்றிய விடயமே நகைச்சுவையாகப் பரிமாறப்பட்டது’ எனவும் சார்ள்ஸ் சுட்டிக்காட்டினார்.

அருட்குமார் குறிப்பிட்டது போல் ‘சர்வதேச நாடுகளில் உள்ள புலிகளுடைய பணத்தை இலங்கைக்கு கொண்டுவருவது பற்றி எதுவும் பேசப்படவில்லை’ என்று தெரிவித்த சார்ள்ஸ் ‘இலங்கையில் தமிழ் மக்களுடைய அபிவிருத்தியை முன்னெடுக்க புலம்பெயர்ந்த தமிழர்கள் பங்களிக்க வேண்டும் என்றே  கேட்டுக்கொள்ளப்பட்டது எனச் சுட்டிக்காட்டினார்.

இலங்கை அரசாங்கம் புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள புலி ஆதரவாளர்களிடையே முரண்பாடுகளை ஏற்படுத்தி பலவீனப்படுத்துவதற்காகவே இந்த விஜயத்தை ஏற்பாடு செய்ததாக அருட்குமார் கருத்துத் தெரிவித்திருந்தார். இதற்குப் பதிலளித்த சார்ள்ஸ் ‘அவ்வாறான நோக்கம் இருந்ததாக தனக்குத் தெரியவில்லை’ என்றும் ஆனால் ‘தங்களுடைய நோக்கம் தமிழ் மக்களை மேம்படையச் செய்ய வேண்டும்’ என்றும் குறிப்பிட்டார்.

அருட்குமாரின் கருத்துக்கு மாறாக ‘நான் இலங்கையில் தமிழ் மக்களுக்கு சில பணிகளைச் செய்ய முடியும் எனக் கருதுகிறேன். அதற்காக மீண்டும் இலங்கை செல்வேன். எனது மக்களுக்கு உதவித் திட்டங்களை முன்னெடுப்பதே எனது நோக்கம். அந்த மக்கள் பொருளாதார விடுதலையைப் பெறுவதே தற்போது மிக முக்கியமானது’ எனத் தெரிவித்தார் சார்ள்ஸ்.

அவர் மேலும் குறிப்பிடுகையில் ‘இந்த விஜயம் தொடர்பாக பயணத்தை மேற்கொண்டவர்களது அறிக்கையொன்று தயாராகிக் கொண்டுள்ளது’ எனத் தெரிவித்தார் சார்ள்ஸ். அருட்குமார் மாறுபட்ட கருத்தைக் கொண்டிருக்கும் போது எவ்வாறு இந்த அறிக்கையை வெளியிட முடியும் எனக் கேட்டபோது ‘அவர் தவிர்ந்த ஏனையவர்களின் உட்பாட்டுடன் இன்னும் சில தினங்களில் அவ்வறிக்கை வெளியிடப்படும்’ என சார்ள்ஸ் தெரிவித்தார்.

சார்ள்ஸ் அன்ரனிதாஸ் இன் முழுமையான நேர்காணல் அடுத்தவாரம் முற்பகுதியில் தேசம்நெற் இல் முழுமையாக வெளியிடப்படும்.

இலங்கை சென்ற புலி ஆதரவுக்குழுவின் சார்ள்ஸ் – அருட்குமார் இருவரும் ஒருவருக்கு ஒருவர் முரணாக கருத்து வெளியிட்டு உள்ளனர்!

 புலம்பெயர்ந்த புலி ஆதரவுக் குழுவின் இலங்கை விஜயம் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் தொடர்ந்தும் சூடான சர்ச்சைக்குரிய விவாதமாக மாறியுள்ளது. யூன் 15 முதல் யூன் 20 வரை லண்டன், பிரான்ஸ், சுவிஸ்லாந்து, கனடா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஒன்பது பேர் கொண்டகுழு கே பி என அறியப்பட்ட குமரன் பத்மநாபனின் அழைப்பில் இலங்கை சென்று திருப்பி இருந்தது. நாடு திரும்பியவர்கள் ஒரு வாரகாலமாக மௌனம் காத்தனர். தேசம்நெற், ரிபிசி ஊடகங்கள் இலங்கை சென்று திரும்பியவர்களின் பெயர்ப்பட்டியலை வெளியிட்டதும் மறுநாளே அவர்கள் தங்கள் மௌனத்தை கலைத்தனர்.

இந்த விஜயம் தொடர்பாக தேசம்நெற், ரிபிசி இல் செய்தி வெளியானதைத் தொடர்ந்து பிபிசி தமிழோசையில் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டவர்களில் ஒருவரான சார்ள்ஸ் அன்ரனிதாஸ் நேற்று (யூன் 28 2010) ஒரு நேர்காணலை வழங்கி இருந்தார். அதனைத் தொடர்ந்து பிரித்தானிய தமிழர் பேரவை, ‘டொக்டர் வேலாயுதபிள்ளை அருட்குமார் பிரித்தானிய தமிழர் பேரவையின் சார்பில் பயணம் செய்யவில்லை. அவ்விஜயம் பற்றி தாங்கள் அறிந்திருக்கவில்லை’ யென அவ்வமைப்பு செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து தமிழ்நெற் டொக்டர் வேலாயுதபிள்ளை அருட்குமாரின் நேர்காணலை இன்று (யூன் 29, 2010) வெளியிட்டது. ஆனால் இந்த நேர்காணல் இருநாட்களுக்கு முன் (யூன் 27 2010) பதிவு செய்யப்பட்டதாக தமிழ்நெற் தெரிவிக்கின்றது.

இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்ட சார்ள்ஸ் இனதும் அருட்குமாரினதும் நேர்காணல்கள் முற்றிலும் முரண்பட்ட தகவல்களை வழங்குகின்றது. இலங்கைக்குச் சென்றது யார் யாரைச் சந்தித்தது, எங்கெங்கு சென்றது என்ற தகவலைத் தவிர ஏனைய உள்ளடக்கங்களில் இருவரும் ஒன்றுக்கு ஒன்று முரண்பட்ட கருத்துக்களையும் தகவல்களையும் வெளிப்படுத்தி உள்ளனர்.

இந்த விஜயத்தினை கே பி யே ஏற்பாடு செய்ததாகவும் இந்த விஜயத்திற்கு முன்னதாகவே கே பி இங்குள்ளவர்களுடன் தொடர்புகளை மேற்கொண்டதாகவும் இந்த நேர்காணல்களில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது. சென்றவர்கள் கே பி யை முதலில் சந்தித்து பின்னர் இலங்கைப் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் கபில ஹெந்தவிதாரண, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீ எல் பீரிஸ், பாதுகாப்பு அமைச்சுச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, மற்றும் படை அதிகாரிகளையும் சந்தித்தாக இவ்விருவருமே தெரிவித்துள்ளனர்.

சார்ள்ஸ் தனது பேட்டியில், ‘‘நாங்கள் இந்த அழைப்பிற்காக கனநாளாகக் காத்திருந்தோம். நாங்கள் வன்னி முகாம்களுக்கு, போராளிகள் தடுத்து வைக்கப்பட்டு இருக்கும் முகாம்களுக்கு செல்ல விரும்புவதை இலங்கை அரசாங்கத்திடம் கேட்டிருந்தோம் பல காலமாகப் பதில் வரவிலை.’’ என்று தெரிவித்தவர், கே பி அவர்களின் ஏற்பாட்டால் இது சாத்தியமானதாகத் தெரிவித்தார். இவ்விஜயத்திற்கு முன்னதாக கே பி தன்னுடன் தொடர்பு கொள்ளவில்லை என்றும் ஆனால் மற்றையவர்களுடன் தொடர்பை ஏற்படுத்தி இருந்ததாகவும் சார்ள்ஸ் தெரிவித்து இருந்தார்.

இது பற்றி கருத்துத் தெரிவித்த அருட்குமார், ‘‘என்னை வரச்சொல்லிக் கேட்ட ஆளிடம் நான் அங்கு வந்தால் பிரச்சினை இருக்காதா என்று கேட்க, அவர் சொன்னார், ‘ஸ்ரீலங்கன் கவர்மன்ற் செல்வராஜா பத்மநாதனுக்கால் தான் இதை அரேஞ் பண்ணுகிறது. அதால் உங்களுக்கு ஒரு பிரச்சினையும் வராது. உங்களை ஒரு விஐபி போலத்தான் ரீற் பண்ணுவார்கள்’ என்று சொன்னார். அப்படி ஒரு உத்தரவாதத்தைத் தந்தபடியால்தான் இந்தப் பயணத்தை மேற்கொண்டேன்.’’ என்று தெரிவித்து உள்ளனர்.

தங்கள் விஜயத்தின் போது பொதுமக்களைப் போராளிகளைச் சந்தித்தது பற்றி, ‘‘ஐடிபி காம்புகளுக்குப் போய் ஆட்களைச் சந்திக்க என்றுதான் போனது ஆனா அங்க வின்டோவால் பார்த்தமாதிரி எங்களை பிறியா சந்திக்கவிடவில்லை. எங்களைச்சுற்றி முன்னாலை பின்னாலை எல்லாம் சுற்றிக்கொண்டு நிண்டவை. ஆக்களை அங்கு என்ன நடக்குது என்று சொல்ல விடேல்லை. 16ம் திகதி கிளிநொச்சிக்குச் சென்றம். அங்கு மக்கள் ஒருத்தரையும் சந்திக்கவிடேல்லை. அடுத்தநாள் வவுனியாவில் 2007, 2008ல் இயக்கத்தில் சேர்ந்த போராளிகள் உள்ள பாடசாலைக்கு கூட்டிச் சென்றவை. அங்கையும் அவர்களுடன் தனிய கதைக்க விடாமல் அவை சுத்திக்கொண்டு நிண்டவை. பிறகு மனிக்பாமில் சோன் 4க்கு எங்களைக் கூட்டிச்செல்லக் கேட்க அவர்கள் அதை சாதுரியமாக விட்டுப்போட்டு சோன் 2க்கு கூட்டிச்சென்றார்கள். அங்க ஒராளிட்டை தம்பி எங்க இருந்து வந்தனி? என்ன படிக்கிறாய்? எந்தப் பள்ளிக்கூடம் என்று கேட்க அவருக்கு எந்தப் பள்ளிக்கூடம் என்று தெரியெல்லை. அவருக்கு கொன்ரினியூ பண்ணேலாமப் போச்சு அப்பதான் எங்களுக்கு விளங்கிச்சு அவை ஆமியின்ர ஆள் என்று.’’ அருட்குமார் தெரிவித்தார்.

இவ்விடயம் பற்றி குறிப்பிடும் சார்ள்ஸ்,”மக்களைச் சந்திக்கக் கூடிய வாய்ப்புக் கிடைத்தது. பிரிஅரேஞ்மன்ற் மீற்றிங்கிலும் செய்யப்பட்டு இருந்தது. தந்த சந்தர்ப்பத்தையும் வைத்துக் கொண்டு பொது மக்களை சந்திப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்தோம். மக்களுடைய பிரச்சினைகளை கேட்டறியக்கூடிய சான்ஸ் எங்களுக்குக் கிடைத்தது. கொடிகாமம், வரணி ஆகிய பகுதிகளுக்குச் சென்றிருந்தோம். அங்குள்ள மக்களையும் சந்திக்கக் கூடியதாய் இருந்தது. விடுதலைப் புலிப் போராளிகள் தங்கவைக்கப்பட்டிருந்த முகாம்களுக்கும் சென்று பார்க்கக் கூடியதாக இருந்து. நாங்கள் எல்லோரும் சென்றிருந்தோம். நாங்கள் ஏ எல் ஸ்ரூடன்சை மாத்திரம் தான் பார்க்கக் கூடியதாய் இருந்தது.’’

அருட்குமார் தனது பேட்டியில் சுயாதீனமாக யாருடனும் சந்திக்க முடியவில்லை என்று தெரிவித்துள்ளார். இப்பயணம் முற்றிலுமாக இலங்கை அரசின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்படும் பயணம் என்பதை முழுமையாக அறிந்து சென்றிருந்த அருட்குமார் தன்னை சுயாதீனமாக மக்களையும் போராளிகளையும் சந்திக்க அனுமதிப்பார்கள் என்ற நம்பிக்கையை எப்படிப் பெற்றார். இலங்கைப் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளருடன் மேற்கொண்ட விஜயத்தில் என்ன சுயாதீனம் காண விளைந்தார். ஆனால் சார்ள்ஸ், ‘‘தந்த சந்தர்ப்பத்தையும் வைத்துக் கொண்டு பொதுமக்களையும் சந்திப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்தோம். மக்களுடைய பிரச்சினைகளை கேட்டறியக்கூடிய சான்ஸ் எங்களுக்குக் கிடைத்தது.’’ என்று பொசிட்டிவ் ஆகவே தனது கருத்தை வெளிப்படுத்தி உள்ளார். சார்ள்ஸ் இவ்விஜயத்தை பொசிடிவ்வாகவே அணுகி உள்ளதை அவருடைய பல பதில்களில் இருந்து காணலாம்.

குமரன் பத்மநாதன் பற்றி அருட்குமார், ‘‘நான் இங்க இருந்து வெளிக்கிட்டுப் போகேக்க செல்வராசா பத்மநாதனுக்கால ஏதாவது செய்யலாம் என்று நினைச்சுத்தான் போனது. அங்க திரு கோத்தபாய ராஜபக்ச உள்ளுக்கு வரேக்க செல்வராஜா பத்மநாதன் எழுந்து அவரை ஆரத்தழுவ முற்பட்டார். அதே எனக்கு பார்க்க ஒரு அந்தரமா இருந்திச்சு. கபில ஹெந்தவிதாரனவின்ர மாஸ்டர் மைன்ட்ல தான் இதெல்லாம் ஓடிக்கொண்டிருக்கிறது என்று தான் நான் நினைச்சன். ஆனா பிறகு இரண்டாம் அல்லது மூன்றாம் நாள் சொல்கிறார் நான் இவரை 2006ல் சந்தித்தனான் என்று. எனக்கு 2006ல் எங்கு சந்திச்சவை என்று விளங்கேல்ல. என்னோட வந்த ஆக்களும் அதைத்தான் யோசிச்சு இருக்கினம். அந்தக் கேள்வியை திரு செல்வராஜா பத்மநாதனிடம் திருப்பிக் கேட்க சந்தர்ப்பம் கிடைக்கேல்ல. அவர்கள் சொல்ல வாறது என்ன என்றால் உங்களுக்காளையோ வேறுவழியாலையே டயஸ்போராவை காலடியில் கொண்டுவருவம் இதைத்தான் அவர்கள் சொல்ல வருகிறார்கள்.’’ என்றார்.

குமரன் பத்மநாதன் பற்றிய சார்ள்ஸின் கருத்து அருட்குமாரின் கருத்தில் இருந்து முற்றாக மாறுபட்டதாக இருந்தது. ‘‘எங்கட மக்களை நாங்கள் பார்க்க விரும்புகிறம். எங்களை நீங்கள் அனுமதிக்க வேண்டும். ரிப்பியுஜி காம்புகளையும் பார்க்க வேண்டும் என்று கேட்டிருந்தம். குறிப்பாக பழைய போராளிகளைச் சந்திக்க வேண்டும் என்றும் கேட்டிருந்தம். நாங்கள் எடுத்த முயற்சிளை குமரன் பத்மநாதன் தான் நடைமுறைக்குக் கொண்டுவரக் கூடியதான சூழ்நிலையை உருவாக்கி இருந்தார். தான் எடுக்கும் முயற்சிகளுக்கு அரசாங்கத்தின் ஆதரவை நாடிநிற்கிறேன். மக்களின் ஒத்தழைப்பையும் எதிர்பார்க்கிறேன் என்று கேட்டிருந்தார். இப்படி ஒரு சூழ்நிலைக்குள் பத்மநாதன் அவர்கள் வந்தது எங்களுக்கு சந்தோசத்தையும் ஆச்சரியத்தையும் கொடுத்தது…. ஆனால் நாங்கள் கண்டது கே பி தடுத்து வைக்கப்பட்டு இருக்கிறார். அவரின் கையில் விலங்கிடப்படவில்லையே தவிர எப்போதும் நான்கு பேர் காவலுக்கு நிற்பதை நாங்கள் கண்டோம். அவர் இலங்கை அரசாங்கத்தின் ஆணைக்குக் கீழ் இருப்பதாகச் சொல்லலாம் ஆனால் அவர் இலங்கை அரசாங்கத்துடன் கோப்ரேற் பண்ணுகிறார் என்று சொல்ல முடியாது. ஏனென்றால் அவர் சில விசயங்களில் உறுதியாக இருப்பதை பார்க்கக் கூடியதாக இருந்தது.’’ என்று சார்ள்ஸ் குமரன் பத்மநாதன் பற்றிய தனது கருத்தை வெளியிட்டார். அருட்குமாரின் கருத்துக்கள் நம்பிக்கையீனத்தின் அடித்தளத்தில் இருந்து உருவாகி இருப்பதையும் சார்ள்ஸின் கருத்துக்கள் நம்பிக்கையை வெளிப்படுத்துவதாகவும் உள்ளது.

‘‘எல்ரிரிஈ இன் காசுகள் நிறைய வெளிநாடுகளில் இருக்கின்றது அந்தக் காசை நாட்டை கட்டியெழுப்ப பாவிக்க வேண்டும் என்று கேட்க அப்ப நான் கேட்டன் ரிஆர்ஓ வின் பண்டுகள வைச்சிருக்கிறீங்கள் தானே அதில ஸ்ராட் பண்ணங்கோ என்று. அதுக்கு அவர் நீங்கள முதலில் அந்தக் காசுகளைக் கொண்டுவாங்கோ அதுக்குப் பிறகிட்டு இதுகளைப் பார்ப்பம் என்றார்.’’ என நிதி பற்றிய விடயத்தில் அருட்குமார் குறிப்பிட்டிருந்தார். இவ்விடயம் பற்றி சார்ள்ஸ் குறிப்பிடும் போது, ‘‘அரசாங்கத்தின் எண்ணப்பாடுகள் என்னவாக இருந்தாலும் தமிழ் மக்கள் மடையர்கள் அல்ல கண்மூடித்தனமாக நடப்பதற்கு. நாங்களும் அதற்கேற்ப நடந்துகொள்ள வேண்டும். பணத்தை திருப்பிக் கொண்டுவரவேண்டும் என்பது பற்றிய எந்தவிதமான பேச்சுவார்த்தையும் இடம்பெறவில்லை.’’ எனத் தெரிவித்தார். 

இந்த விஜயம் என்ன நோக்கத்திற்காக மேற்கொள்ளப்பட்டு இருந்தாலும் புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள புலி ஆதரவுத்தளத்தில் இது கணிசமான பிளவை ஏற்படுத்தி உள்ளது. அருட்குமாரின் கூற்றுப்படி இந்த இலங்கை விஜயத்தை அந்த நோக்கிலேயே அரசு திட்டமிட்டு இருந்ததாகக் குற்றம்சாட்டி உள்ளார். மேலும் அருட்குமார் குமரன் பத்மநாதனை பச்சையாகத் துரோகி என்று சொல்லாமல் சுற்றிவளைத்து அதனையே தனது நேர்காணலில் வெளிப்படுத்தி உள்ளார். இலங்கை அரசாங்கம் தொடர்ந்து இனவாதத்தை நியாயப்படுத்தி வருவதாகவும் தமிழ் மக்களை அடிமைப்படுத்த முயற்சிப்பதாகவும் அருட்குமார் தனது பேட்டியில் வெளிப்படுத்தி இருந்தார். வெளிநாடுகளில் உள்ள புலிகளின் சொத்துக்களை இலங்கைக்கு கொண்டு வருவதற்கான திட்டமே கே பி இன் தமிழர் புனர்வாழ்வு மையம் – ரீஆர்சி என்கிறார் அருட்குமார்.

அருட்குமார், சார்ள்ஸ் உட்பட ஒன்பதுபேர் சென்று வந்த இவ்விடயம் அவர்கள் இலங்கை செல்வதற்கு முன்னரேயே உத்தியோகபூர்வமற்ற முறையில் உரையாடப்பட்டு வந்தது. ‘இவர்கள் செல்கிறார்கள் என்ன விடயம் எமக்கு முன்னரே தெரியும்’, என பிரிஎப் உடன் நெருக்கமாக பணியாற்றுபவர் தேசம்நெற்க்கு தெரிவித்து இருந்தார். ஆனால் பிரிஎப் இந்த விஜயம் பற்றி தங்களுக்கு முன்னர் தெரிந்திருக்கவில்லை என நேற்று (யூன் 28 2010) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்து உள்ளது.

புலிகளின் தலைவர் வே பிரபாகரன் மரணமாகிய செய்தியை ஜிரிவி ஒலி பரப்பியது. அச்செய்தி ஒலிபரப்பப்பட்ட சில மணிநேரங்களிலேயே ஜிரிவி தாக்குதலுக்கு இலக்கானது. அதனைத் தொடர்ந்து ஜிரிவி தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டது. ”தலைவர் தலைமறைவாகி பாதுகாப்பாக உள்ளார்”, என அறிவித்தது. இது பற்றி ஜிரிவி ஊடகத்தினரிடம் கேட்டபோது. ”நாங்கள் என்ன செய்ய. ரிவியை நடத்த வேண்டும் என்றால் இப்படித்தான் சொல்ல வேண்டும். உண்மை அறிய மக்கள் விரும்பாவிட்டால் என்ன செய்ய?” எனப் பதிலளித்தார். அவர் மேலும் குறிப்பீடுகையில் ‘’வந்த தொலைபேசி அழைப்புகளும் மிரட்டல்களும் போனை எடுக்கவே பயமாக இருந்தது’’ எனவும் தெரிவித்தார்.

அருட்குமாரின் கருத்துக்கள் ஆச்சரியமானதோ அல்லது புதியவையோ அல்ல. அதனை புலம்பெயர்ந்த தமிழர்கள் ஒவ்வொருவரும் அறிந்தே உள்ளனர். அருட்குமார் இலங்கை செல்வதற்கு முன்பே இக்கருத்தை அறிந்தே வைத்திருந்தார். இலங்கை அரசாங்கத்தின் கைதியாக உள்ளவருடன் சேர்ந்து சுயாதீனமாக வடக்கு கிழக்கில் அபிவிருத்தியை மேற்கொள்ளலாம் என எவ்வாறு எண்ணி இலங்கை சென்றார் என்பது ஆச்சரியமானது. இல்லையேல் தகவல் பெறுவதற்காக சென்றிருக்க முடியும்.

சென்றவர்கள் செல்லமுன் அல்லது வந்தவுடன் தங்களது நிலைப்பாடுகளை வெளியிட்டு இருக்க வேண்டும். அப்படிச் செய்யவில்லை. அருட்குமாருடைய தொலைபேசி கூட செயலிழந்த நிலையிலேயே இருந்தது. மாறாக ஊடகங்கள் தகவல் அறிந்து செய்திகளை வெளியிட்டு கேள்விகளை எழுப்பிய பின்னரே அழுத்தங்கள் காரணமாக மக்களுக்கு கதை சொல்லப் புறப்பட்டு உள்ளார். அதுவே இந்த முரண்பட்ட தகவல்களின் பின்னணி பற்றிய பல்வேறு சந்தேகங்களையும் எழுப்புகின்றது.

மக்களுக்கு இந்த விஜயத்தில் நடந்த உண்மைகளை அறிவதற்கு பூரண சுதந்திரம் உண்டு. இந்த விஜயத்தில் பங்கு கொண்ட ஏனையவர்களும் தங்கள் மௌனத்தைக் கலைப்பதன் மூலமே மக்கள் கூட்டிக் கழித்து பெருக்கி வகுத்து ஒரு முடிவுக்கு வரமுடியும். 

மேலதிக வாசிப்பிற்கு:

புலி ஆதரவுக்குழுவின் இலங்கை விஜயம் – ‘லண்டன் வந்த அருட்குமார் கருத்தை மாற்றிக் கொண்டார்’ – சார்ள்ஸ் தேசம்நெற்க்கு வழங்கிய பேட்டி : த ஜெயபாலன்

புலி ஆதரவுக்குழுவின் இலங்கை விஜயத்தை அடுத்து கே பி எதிர் அன்ரி கே பி பனிப்போர். : த ஜெயபாலன்

வெளிச்சத்திற்கு வரும் கே பி மர்மமும் – கே பி உடன் புலம்பெயர் புலிஆதரவுக் குழுவின் சந்திப்பும் : த ஜெயபாலன்

கே பி யின் சிபார்சில் சு.ப. தமிழ்ச் செல்வனின் சகோதரர் உட்பட முன்னாள் போராளிகள் 26 பேர் விடுதலை!

‘போர்குற்ற விசாரணைகளில் அரசாங்கத்தின் சாட்சியாக கே.பி!’ கெஹலிய ரம்புக்வெல

வடமாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக கே.பி?

 புலம்பெயர்ந்த புலித் தலைவர்கள் அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு – கே.பி. உட்பட 9 பேர் கொழும்பில் பேச்சுவார்த்தை

கே.பி.க்கு மன்னிப்பு வழங்குவதென அரசு தீர்மானித்தால் ஆச்சரியப்படமாட்டேன் அமைச்சர் கெஹலிய

Show More
Leave a Reply to palli Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

12 Comments

  • Mythili
    Mythili

    கே பியின் அழைப்பில் சென்றிருந்த டாக்டர் அருட்குமார் என்பவர் தமிழ் மக்கள் எல்லாரும் ஒரு கேணயர்களெ நினைத்து தமிழ் நெற்றுக்கு ஒரு பேட்டி அளித்திருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

    அதில் தான் இலங்கைப் புலனாய்வாளர்களை புலனாயப்போனதாக மாதிரி கதை விட்டுத் தப்பித்துக்கொள்ளப் பார்க்கிறார்.

    இப்படியான சந்தர்ப்பவாதிகள் தமிழரைப் பிரதிநிதிப்படுத்துவதும்> இவர்களை சமூக தாபனங்களில் முக்கியத்துவம் குடுக்கும் நிலை எம்மவர் மத்தியில் இருக்கும்வரை நாம் முன்னேறுவது கடினதாகவே இருக்கும்.

    Reply
  • DEMOCRACY
    DEMOCRACY

    குமரன் பத்மநாதன் தான் எடுக்கும் முயற்சிக்கு பொதுமக்களும், இலங்கை அரசங்கமும் ஆதரவுதெரிவிக்க வேண்டும் என்பதை, ஆச்சரியமான நல்ல விஷயமாகவும், இதை விலங்கிடப்படாத கைதி பத்மநாதன், கூறியதாக சார்லஸ் எவ்வாறு கூறமுடியும்?. தான் நினைத்ததை செய்யகூடியதுதான் கைதியின் அர்த்தமா?, அல்லது கைதி செய்வது சார்லஸ்ஸுக்கு உடன்பாட?. இந்த சார்லஸ் பழைய “டெலோ” மதியுரைஞர்!. இந்திய உளவு நிறுவனங்கள் மீது குற்றம் சாட்டி “இத்தகைய போக்குகளை ஆதரித்தவர்களே, இதற்கு இயல்பாக, ”உடல் மொழி ரீதியில்” ஆதரவை வெளிப்படுத்துகிறார்கள்!.”- இதைதான் செய்கிறார்!.
    அதாவது, டொக்டர் வேலயுதம் பிள்ளை அருட்குமார், அப்படி இப்படி பேட்டி கொடுத்தாலும், “கே.பி.மூலமாக”, பெருவாரியாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் “விடுதலிப்புலிகளுக்கு?” வேலை?! கொடுக்கும் வகையில், அவர்களை “மீனவர்கள்” என்ற போர்வையில், தமிழக மீனவர்களுடன் பிரச்சனைக்கு பிள்ளையார்சுழி போடுவதற்கு ஆயர்த்தம் செய்யப்படுகிறது என்பதை வெளிப்படுத்தியிருந்தார்!. அதனால்தான் புலம்பெயர்ந்த நாடுகளில், சகட்டு மேனிக்கு, “இந்திய எதிர்ப்புணர்வு”, விசிறி விடப்படுகிறது!.

    Reply
  • santhanam
    santhanam

    இந்த இரு குழுவும் மே 18ற்கு பிறகு இவர்கள் ஒரு தளத்தில் ஒற்றுமையாகவும் மறுதளத்தில் மக்கள் முன் எதிரியாகவும் காட்டிகொண்டு செயற்படுகிறார்கள் ஆனால் இவர்களது பணியாளர்களது நிலை மிககவலைக்குரியது அரசியல் நிலை இவர்களிற்கு 0 நிலையிலும் ஒருவரிற்கு ஒருவர் விசுவாசத்திலும் செயற்படுகிறார்கள்.

    Reply
  • palli
    palli

    காதலித்தவளையும் கட்டிக்கலாம்
    கட்டினவளையும் காதலிக்கலாம்
    இதில் கே பி கீழ் ரகமோ;??

    Reply
  • Sampanthan
    Sampanthan

    Hello Mr. DEMOCRACY
    We would like to clarify that Mr.Charls not a member of our TELO organization now. He was in charge of London TELO branch during our late Leader Mr. Srisabaratnam times, after Mr.Selvam took over the TELO leader ship he was removed from his post. I would like to tell you Mr.Charls never hold a position as an adviser for TELO at all.
    Regards
    Sampanthan
    London Telo branch
    Our official web site -www.telo.org

    Reply
  • Dr.Arul Antony
    Dr.Arul Antony

    A Croydon GP treated two students on hunger strike over the alleged genocide taking place in Sri Lanka.

    Dr Velauthapillai Arudkumar was at the protests in Westminster, monitoring the health of the two hunger strikers from Mitcham. Dr Arudkumar performed blood tests on the two men and monitored them every couple of hours to make sure they were stable.
    Siviatharsun Sivakumarave, 21, and Subramaniyam Paramestvaran, 28, have been fasting outside the Houses of Parliament since Tuesday as part of a larger demonstration aimed at forcing the British government to step up pressure on Sri Lanka.

    This guy facilitate to waste £600 million British Taxpayers money
    Now …………….???

    Reply
  • DEMOCRACY
    DEMOCRACY

    Mr.Sampanthan,
    First of all,British Tamil Forum as “Mr.santhanam on June 29, 2010 8:57 pm” said, “SHOWING HEAD TO THE SNAKE and TAIL TO FISH”.
    Forgetting the past ,and diverting on “ECONOMIC” development, has been accepted by “srilankan Tamils”, also by Indian Tamils like me(?).
    Iam not accusing any particular persons like Mr.Charles!.
    Iam only saying this,”ஒரு “நியாய பூர்வமான அணுகுமுறைகள் போல்” “முள்ளியவாய்க்கால்கள் முகத்தில் அறையப்படுகின்றன”!. காலனித்துவ காலத்தில் இத்தகைய போக்குகளை ஆதரித்தவர்களே, இதற்கு இயல்பாக, ”உடல் மொழி ரீதியில்” ஆதரவை வெளிப்படுத்துகிறார்கள்!”.
    சென்ற 2009 ஆண்டு முள்ளிய வாய்க்காலுக்கு பிறகு, இந்திய பதுகாப்பு ஆலோசகர் திரு.எம்.கே.நாராயணன் அவர்கள், சென்னை வந்தபோது கவிஞர்.மு.க.கனிமொழியை ஆரத்தழுவியவாறு புகைப்படங்கள் பத்திரிக்கைகளில் உலா வந்ததே, பிறகு கொழும்பு சென்று திரு.ராஜபக்ஷே அவர்களை சந்தித்த படங்கள் வெளி வந்ததே, இதெல்லாம், கனிமொழி, கலூரியில் படித்தகாலத்தில், சிறீ சபாரத்தினம் கலைஞர் வீட்டுக்கு விஜயம் செய்கிற போது, டேலோ இயக்கத்தின் மீது ஏற்ப்பட்ட அனுதாபத்தினாலா?, அல்லது,கே.பி. போல் உளவு நிறுவனங்களது (அதிகாரவர்கங்களது), நிகழ்ச்சி நிரல்களில் சிக்கப்பட்டுள்ளனரா?.
    So,Whoever educated in European-American old libraries (against south Asian native PEDANTRY), based on “German created(1785),genetical(or caste based)based, COMPARATIVE STUDIES METHODOLOGIES” were liable to their body language, expressing wrong signals to the south Asian societies!. SOME PEOPLE WERE CROWNED and SOME WERE DISCRIMINATED AGAINST NATIVE PEDANTRY!.So we cannot discuss avoiding caste system,despite BTF pretending untouchablity to it!.

    Reply
  • Nadchathiran chevinthian.
    Nadchathiran chevinthian.

    Now this is not the end of the overseas LTTE. It is not even the beginning of the end of the overseas LTTE. But it is, perhaps, the end of the beginning of the overseas LTTE.

    – Nadchathiran chevinthian.(With the help of Winston Churchills speech writer)

    Reply
  • DEMOCRACY
    DEMOCRACY

    வீரபாண்டிய கட்டபொம்மன் போல் (சினிமா பார்த்து வாழும் புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு வேறு இந்திய சுதந்திர போராட்ட வீரர்களை தெரியாததால் இந்த உதாரணம்)செயல்படலாம்,ஆனால் வீரபாண்டிய கட்டபொம்மன் கிடையாது. ஆங்கிலேய அடிவருடிகள் போல் செயல்படலாம் (பிரிட்டிஷ் டமில் ஃபோரம்), ஆனால் அப்படி முகமூடி போட்டிருக்கும் சுதந்திர வீரர்கள்!- சர்ச்சில்ஸ் ஃபிரண்ட்.
    — இது தமிழ்வாணன் கதை எழுதுவதற்குதான் சரி!.

    சாதாரண மக்களுக்கு புரிகிற மாதிரி,அல்லது என்னை போல் அரைகுறை அறிவுள்ளவர்களுக்காவது புரிகிறமாதிரி (மற்றவர்களை கேட்கிறேன் உங்களுக்காவது புரிந்ததா?) ஏதாவது நடந்திருந்தால்,ஒரு ஒழுங்கிற்குள் விவாதிக்கலாம். லங்காசிறியில், ஒரு செய்தி, நியாயம் போல் உள்ளது. டி.ஆர்.பாலு அவர்கள் போன்றவர்களை வைத்தாவது ஒருங்கிணைப்பீர்களா??..

    யாரும் பணம் சேர்க்கலாம். யாரும் பொருள் சேர்க்கலாம். ஆனால் அது பாதிக்கப்பட்ட மக்களையோ, முட்கம்பி வேலிகளின் பின்னாலுள்ளவர்களையோ போய்ச் சேர்வதிற்கு சிறீலங்காவின் அனுசரணைப் பெறமால் போவதென்பது கடிணத்திலும் கடிணம் என்பதை நாங்கள் ஒத்துக் கொள்கிறோம். எனவே பாதிப்பின் உச்சத்தில் இருப்பவர்களின் வாழ்வை தேவையற்ற விதத்தில் புன்படுத்தாமல் அவர்களின் வாழ்வு “அடிநிலைச்” வாழ்வாகத் தானும் திரும்புவதை தடுப்பதை புலம்பெயர்ந்த நாங்கள் இப்போதைக்குத் தவிர்ப்போம்.

    இல்லையேல் யாழ்ப்பாணத்திலும் மட்டக்களப்பிலும், கிளிநொச்சியிலும், மன்னாரிலும், திருமலையிலும் தமிழர்கள் இரண்டாந்தரப் பிரஜைகளாக சிங்களவர்களின் ஆதிக்கத்தின், அதிகாரத்தின் கீழ் வாழும் நிலையை ஏற்படுத்திய பழியையும் புலம்பெயர்ந்த நாங்களே ஏற்க வேண்டி வரும்.—அங்கவீனர்களும், விதவைகளுமே தமிழீழத்தின் பெரும்பான்மையினர்! இவர்களுக்கு எங்களால் என்ன செய்ய முடியும்? :ஜீவன்
    [ புதன்கிழமை, 30 யூன் 2010, 08:04.59 AM GMT +05:30 ]

    Reply
  • santhanam
    santhanam

    அமிர்தலிங்கம் மங்கையகரசிக்கு கையில் கிறீ இரத்தம் எடுத்து பொட்டு வைத்தார்கள். ஆனால் பிரபாகரன் இரத்தம் புல்லுக்கும் உடல் மண்ணுக்கும் ஆயிரம் ஆயிரம் இளைய உயிர்களை கொடுத்து புலத்து தமிழன் அதற்கு இப்ப மண்ணால் மூட முட்டி மோதுகிறார்கள். தமிழா நீ என்ன விதி செய்தாய்.

    Reply
  • brap
    brap

    Rajapaksa Junta and LTTE – Recipe for Disaster

    The government would have us believe that the entire Tamil Diaspora is pro-LTTE. That is not the case: there are very many respected Tamil speaking Sri Lankans who have fought against all odds to preserve the sovereignty and unity of our island nation.

    It pains me, then, to see the people who stood shoulder to shoulder, during the long and hard struggle, being sidelined by the government in favour of terrorist elements that were procuring arms, providing funds and protesting across world capitals.

    There are talks that the former number two of the terror outfit and key arms purchaser for several decades, Kumaran Pathmanathan, would be UPFA candidate for post of Chief Minister of the Northern Province. Would the likes of Honourable Minister Douglas Devananda, who survived more than dozen attempts on his life, have to play second fiddle to the terror leader? Veteran politician and another long time promoter of united Sri Lanka, Mr Anandasangaree, has already made his feelings clear.

    Last week a nine member delegation of key LTTE supporters were given a luxury tour of the North East. Meanwhile, long time campaigners in the Diaspora are in the dark about what is happening in post-war Sri Lanka.

    The LTTE supporters are only speaking to the government because their former masters are dead and buried, and there is no hope in hell of them reviving another terror campaign. These are the very same people who were dancing up and down across world capitals when the humanitarian operation was in final stages; these are the people who brought terror to our beautiful island using their financial and political muscle in the West.

    Unlike them, the pro-Sri Lanka campaigners in Tamil Diaspora had to work day and night amidst most brutal intimidation from LTTE elements. They have now been left in the dark.

    It is worth remembering that the EU banned the LTTE as a terror outfit following a Human Rights Watch (HRW) report entitled Funding the Final War. Banning of the LTTE by EU starved the group of millions of dollars and that stopped new arms purchases. More than 80 brave members of the Diaspora put their lives on the line by providing this evidence to HRW. These brave men and women who were constantly harassed by pro-LTTE elements, have now kept at bay by the government. Their tormentors, however, are offered luxury guided tours across Sri Lanka.

    This sad state of affairs must be brought to an immediate end. People who worked with team Sri Lanka to end terrorism must see fruits of their labour. It is adding insult to injury when the government parades senior LTTE campaigners as leaders of development, despite the very same people being the ones who wrecked the entire island for more than 30 years.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    எனக்குக் கிடைத்த நம்பகரமான தகவல் ஒன்றின்படி, கே.பியுடன் சேர்ந்து இலங்கை அரசுடன் சந்திப்பு நடத்திய 9 பேரில் சிலர், திட்டமிட்டு புலத்தில் புலிகளுக்கு முன்பு ஆதரவளித்து தற்போது இலங்கை சென்றால் தமக்கேதாவது ஆகுமோ எனப் பயப்படுவோரிடம், தம்மிடம் 1000 எயுரோ தந்தால், தாம் கடிதமொன்றைத் தருவதாகவும் அதனுடன் சென்றால் எந்தப் பிரைச்சினையும் வராதென்று கதையளந்து, தற்போது புதுவிதமான சுருட்டலை ஆரம்பித்துள்ளனராம்………

    Reply